privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஜெயலலிதா: ஈழத்தின் வில்லி நாயகியா? கருத்துப்படம் !

ஜெயலலிதா: ஈழத்தின் வில்லி நாயகியா? கருத்துப்படம் !

-

jayalalitha-big

(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

நாடாளுமன்றத் தேர்தல் வந்ததும் ஈழத்திற்கு தனி மவுசு ! பேசுவதற்கும், நடிப்பதற்கும், உணர்ச்சிகளை அள்ளி வீசுவதற்கும் வேறு எதுவும் இல்லையென்பதால் ஓட்டுக் கட்சிகள் எடுத்திருக்கும் ஆயுதம் ஈழப்போராட்டம்.

ஈழப் போராட்டம் தொடர்பாக தமிழ்நாட்டில் உண்மையாகப் போராடும் புரட்சிகர அமைப்புகள், தமிழின இயக்கங்கள், போராடுவது போல காட்டிக் கொள்ளும் சமரச சக்திகள், துரோகிகள், எல்லாரும் உண்டு. ஆனால் ஈழத்தின் மூச்சு நெறிக்கப்படவேண்டுமென துடிக்கும் எதிரிகளே தமது கொடூரக் கைகளால் ஈழத்தை கட்டியணைக்கும் கொடுமையை என்னவென்று சொல்ல?

போரென்றால் மக்கள் கொல்லப்படத்தான் செய்வார்கள், புலிகளை ஒடுக்கவேண்டும், சீமான், திருமாவளவனைக் கைது செய்யவேண்டும், புலி ஆதரவாளரான கருணாநிதியின் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றெல்லாம் ஊளையிட்ட ஜெயலலிதா என்ற கோட்டான் ஈழத்தின் மீதான போர் நிறுத்தப் படவேண்டுமென எட்டுமணிநேரம் உண்ணாவிரதம் இருந்து உலகத்தையே வியக்க வைத்திருக்கிறதாம். இரண்டு தடவைகள் தமிழகத்தை ஆண்டு ஒட்டச்சுரண்டி பல ஆயிரம் கோடி கொள்ளையடித்த ஜெயா சசி கும்பல் தனிப்பட்ட முறையில் ஐந்து இலட்சமும், கட்சி சார்பாக ஒரு கோடியும் ஈழத்து மக்களுக்காக பிச்சையிடுகிறதாம். இந்த கலெக்ஷன் கல்லா செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக கொடுக்கப்படுமாம்.

ஏற்கனவே முல்லைத்தீவிலும், வன்னியிலும் செஞ்சிலுவைச் சங்கத்தை சிங்கள அரசு விரட்டிவிட்டது. இனி அம்மா கொடுத்தபணத்தை வைத்து செஞ்சிலுவைச் சங்கம் என்ன செய்யும்? செத்து மடியும் மக்களின் ஈமச்சடங்கு செய்வதற்குத்தான் அந்தப் பணம் பயன்படும். ஈழத்தின் கருமாதிச் செலவுக்கு புரட்சித்தலைவி ஸ்பான்சர்! அதற்கு ஜெயா டி.வி லைவ் டெலிகாஸ்ட்!

அப்புறம் இந்த உண்ணாவிரத நாடகத்தில் பேசிய புரட்சித் தலைவி இலங்கையின் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு, இறையாண்மை கெடாமல் ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும், இதைவிடுத்து திசைமாறிய ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்றெல்லாம் உளறியிருக்கிறார். இதைத்தானே ராஜபக்சேவும் பேசி இலங்கையின் இறையாண்மைக்கு எதிரான பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்குத்தான் போர் என்று ஈழத் தமிழர்களை கொன்று குவித்து அமல்படுத்தி வருகிறார். இந்திய அரசும் இந்த இறையாண்மை புனிதத்தை வைத்துத்தான் இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவுகிறது. தற்போது மருத்துவக்குழுவை அனுப்பி அடிபட்ட இலங்கை ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப் போகிறதாம். ஒரே நடவடிக்கை, ஒரே பேச்சு, ஒரே கருத்து இருவேறு பொருள்களில் பேசமுடியுமென்றால் ஈழத் தமிழர்கள் செய்த பாவம்தான் என்ன? ஒருவேளை இப்படியிருக்கலாமோ? ஈழத்தமிழ் மக்களை கொல்வது ராஜபக்சேவின் பணி, கருமாதி காரியம் செய்வது ஜெயலலிதாவின் பணி?

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய சீமான் கைது செய்யப்பட்டது போல அதே கருத்துக்ளை வைத்திருக்கும் கருணாநிதியும் கைது செய்யப்படவேண்டுமென புரட்சித் தலைவி முழங்கிய போது அருகில் இருந்த புரட்சிப் புயல் வைகோ நெளிந்தார். நல்லவேளையாக அந்தப் பட்டியலில் வைகோவைச் சேர்க்காமல் அருள்பாலித்தார் அம்மா.

ஈழத்தின் கருமாதிக்கான உண்டியலில் ஐந்து இலட்சத்தைப் போட்ட வைகோ, அம்மாவின் உண்ணாவிரதத்தை பழச்சாறு கொடுத்து முடித்துவைக்கும் பேறு கிடைத்ததற்காக நன்றியை தெரிவித்துக் கொண்டார். ஈழத்திற்கு துரோகம் செய்ததாக கருணாநிதியைத் திட்டிய வாய் கூச்சநாச்சமின்றி ஈழத்தமிழர்களின் வில்லியை மனதாரப் பாராட்டிய காட்சிக்கு இணையான ஆபாசம் இந்த உலகில் எதுவுமில்லை.

அடுத்த ஆபாசம் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன். இந்த உலகில் யாரும் செய்யமுடியாத இந்த எட்டுமணிநேர உண்ணாவிரதத்தை செய்யத் துணிந்த அம்மாவின் தியாகத்தை வாய்வலிக்கப் பாராட்டிய அவர் இந்தப் போராட்டத்தைப்பார்த்து உலகெங்கும் சிதறிக் கிடக்கும் ஈழத் தமிழ் மக்கள் தமழிகமே தம் பக்கம் அணிவகுத்து நிற்கிறது என மகிழ்ச்சியடைந்து நிம்மதி அடைந்திருக்கிறார்களாம். எல்லாம் ஈழத்தமிழன் இளிச்சவாயன் என்ற நம்பிக்கையில் தா.பாண்டியன் வைத்திருக்கும் துணிச்சல்தான்.

அம்மா அளவுக்குக்கூட ஈழத்தின் போராட்டத்திற்காக எதுவும் பேசாத இடது கம்யூனிஸ்ட் கட்சியின் என்.வரதராஜன் இலங்கையின் இறையாண்மைக்கு எந்த குந்தகமும் வராமல் வெகு ஜாக்கிரதையாக ஒரு விளங்காத அறிக்கையை விளக்கெண்ணை போல அதுவும் எழுதி வைத்துப் படித்தார். எல்லாம் அம்மாவின் தயவில் இரண்டு சீட்டுக்களைப் பெற்று வெற்றிபெறவேண்டும் என்ற அடிமைத்தனம்தான்.

அதற்கப்புறம் தலித் மக்களுக்கு புதிய தமிழகத்தின் கிருஷ்ணசாமி, குடியரசுக் கட்சியின் வை.பாலசுந்தரம், முசுலீம்களுக்கு லீக் பிரதிநிதிகள், தேவர் சங்க நாட்டாமைகள் எல்லாரும் புரட்சித் தலைவின் உற்சவ உலாவிற்கு மந்திரம் ஓதி புண்ணியம் செய்தார்கள்.

மற்றபடி உண்ணாவிரதத்திற்கு வரவில்லையென்றாலும் அம்மா இந்த அளவிற்கு இறங்கி வந்து சேப்பாக்கத்தில் குந்தியிருந்ததற்கு நன்றி தெரிவித்து உருகியவர்களில் திருமாவளவனும், பழ.நெடுமாறனும், மருத்துவர் ராமதாஸூம் அடக்கம். வில்லியை வில்லி என்று கூட சொல்லமுடியாத அந்த துரதிர்ஷடசாலிகளை உண்மையில் வழிநடத்திய விசயமென்னவென்றால் இன்னமும் நாடாளுமன்றத்திற்கான கூட்டணி சேர்க்கைகள் முற்றுப் பெறாமல் இருப்பதுதான். டெல்லியின் அதிகாரமையத்திற்கான ஆட்டத்தில் முல்லைத் தீவின் மரண ஓலம் கேட்குமா என்ன?

இதெல்லாவற்றையம் விட கொடுமையான விசயம் என்னவென்றால் அம்மாவின் உண்ணாவிரதத்தைப் பாராட்டி சுப்பிரமணிய சாமி அறிக்கை விட்டதுதான். இனி புரட்சித் தலைவியைப் பாராட்டவேண்டியதில் விடுபட்ட தலைவர் ராஜபக்சே மட்டும்தான். அவரையும் ஒரு அறிக்கை விடுமாறு இந்து ராம் கேட்டுக் கொண்டால் இந்த நாடகம் நேர்த்தியாக முடிக்கப்படும்.

 

  1. உடனடி எதிர்வினை அருமை. படம் இன்னும் கொஞ்சம் மெனெக்கெட்டிருக்கலாம். அம்மாவின் “அசைவ குணம்” எடுப்பாக வரவில்லை படத்தில். ரத்தக் காட்டேரி போல இல்லை.

    எல்லாம் அதிகாரத்திற்காக தான் என்பதை, மக்கள் புரிந்து கொண்டு, வாக்கு கேட்டு வருபவர்களை மக்கள் வெளக்குமாறாலும், செருப்பாலும் விரட்டியடிக்க வேண்டும்.

    குறிப்பு : இந்த பதிவுக்கு தமிழ் மணத்தில் வாக்களிக்கும் வசதியில் ஏதோ பிழை. உடனடியாக சரி செய்யுங்கள்.

  2. palayavattai maranthu intha ikkaddaana kaalakaddaththil vaadum emmakkalitkaaka yaar oonki kural koduththaalum avarkalin kaikalai anbudan pattik kolvom. en anbaana uravukale ithu kaalaththin kaddaayam

  3. Ammavo,Aiyavo,Yaraka irunthalum Elaththamilar
    Vidayaththila nallamudivukalai Edunkal Athuthan ellorukkum Nallathu. Eduththen kavudden Enru
    Mudivukalai Eduththu Thamilnaddaiyum Nasam
    baduththividathirkal. Inru Thamil makkalellam
    Unarvodum,Vilibpodum Irukkirarkal. Aanal?
    Arasiyalvathikalthan pathavikkum,Suddavum
    Nitkirarkal Unkal Suyanalaththukkaka Makkalai Palikkadavakkathirkal. Makkalum Yosikkavendum
    Kadsikkaka Vakku Bodathirkal, Unkal Thokuthiyil
    Nitkum Nallavarkalukku Unkal Vakkai Bodunkal.—–
    Anru Uthayamorththi Bonravarukke vakku Bodathaninkathane. Banaththai Vankunkal nallavarukku Vakkai Bodunkal.

    Mendum Sollukiren Thamilnaddayum

    Nasam Pannidathenko?………….

  4. தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகளுக்கு,

    தமிழ்த் தேசியத்தின் அழிவிலே ஆரியக் கூட்டணி தெளிவாக இருக்கிறது. அது சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சேர்ந்தும் தனித்துமாகப் பல கழுத்தறுப்புகளை செய்து வருகிறது. இதனை சரியாக அளவிடாத அல்லது தமது சுயநலப் பதவி ஆசை கொண்ட, தமிழ்த் தேசியத்தின் மீதான பற்றுறிதியற்;ற போக்குக் காரணமாக கதிரைகளுக்காகத் தமிழினம் காவு கொடுக்கப்படுகின்ற நிகழ்வு தொடர்கிறது. இந்தப் பின்னணியில் இருந்து தமிழக அரசியல்வாதிகளை, தொப்புள்கொடி உறவுகள் இனங்கண்டு தமது வாக்குச்சீட்டினூடாக உரிய தண்டனையை வழங்க முன்வரும்போது மட்டுமே இது சாத்தியமானதாக மாறும். தமிழினத்தினது ஆத்ம உணர்வை எந்த ஒரு அரசியல்வாதியும் சரியாக மதிக்கவோ, கௌரவப்படுத்தவோ முன்வரவில்லை என்பது கண்கூடு. அப்படி மதித்திருப்பின், தமிழினத்தினது ஆத்ம உணர்வை மதிக்காத கட்சிகளை விட்டு வெளியேறி அரசியலுக்கப்பால் தமிழ் இனத்தினது விடிவுக்காக சிந்திக்கத் தமிழகத்தினது அரசியல் தலைமைகள் முன்வந்திருக்கும்.தமிழினம் அழிவினுள் நிற்கும் இவ் வேளையிலும், சுயநல அரசியலுக்கப்பால் சிந்திக்க முன்வராமை என்பது, முத்துக்குமார் தொடக்கம் சிறீதர் வரையான ” ஈகப்பேரொளி “„ களின் ஈகத்தைக் கீழ்மைப்படுத்தவதாகவே அமையுமேயன்றி வேறில்லை. இவர்கள் விட்டுச் சென்ற பணியை நாம் முன்னெடுத்து தமிழ்த் தேசியத்தை மலரச் செய்ய வேண்டியது எமது வரலாற்றுக் கடமையென்பதற்கப்பால் கதிரைகள் பற்றியல்லவா சிந்திக்கிறார்கள் என்பது எத்துணை வேதனையானது. எனவே இது தொடர்பாகத் தொப்புள் கொடி உறவுகள் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். 2009ம் ஆண்டினது தேர்தலென்பது தமிழினத்தின் தன்மானத்தை தீர்மானிக்கும் தேர்தலாக மாற்ற வேண்டும்.

    இதற்காக இரண்டில் ஒரு விடயம் நடந்தாக வேண்டும்.

    1) தமிழினத்தை, தமிழ்த் தேசியத்தை காக்கும் வல்லமை கொண்ட துணிச்சலான அணியொன்று உருவாக்கப்பட்டு தேர்தலை எதிர் கொள்ள வேண்டும்.
    2) முதலாவது சாத்தியப்படாவிடில் சுயேட்சையாக தமிழுணர்வாளர்கள் நின்று சாதிக்க வேண்டும். அல்லது வாக்குகள் செல்லுபடியற்றதாக மாற்றப்பட்டு, இன அழிப்பிற்குத் துணைபோகும் சனநாயகம் நிராகரிக்கப்படவேண்டும்.

    இப்படியான வலுவான விளைவுகள் நிகழும்போது மட்டுமே தமிழகத்தினது மக்களின் உணர்வுகள் மதிக்கப்படும் நிலை வரும். இல்லையேல் தாங்களும் கோமாளிகளாவதோடு, தொப்புள் கொடி உறவுகளே உங்களையும் கோமாளிகளாக்கிவிடுவார்கள் இந்த மக்கள் நலன்சார் இலக்கற்ற அரசியல் கோமாளிகள் என்பதே உண்மையாகும்.

  5. //ஜெயலலிதா என்ற கோட்டான் ஈழத்தின் மீதான போர் நிறுத்தப் படவேண்டுமென எட்டுமணிநேரம் உண்ணாவிரதம் இருந்து உலகத்தையே வியக்க வைத்திருக்கிறதாம்//

    //ஈழத் தமிழர்கள் செய்த பாவம்தான் என்ன?//

    Vinavu! No-one could have said it better!

    இவர்கள் பதவி நாற்காலிகளைச் சுற்றி சங்கீத கதிரை விளையாடுவார்களாம்,அதற்கு ஈழத்தமிழர்களின் மரணஓலம் பாட்டா?

    ‍‍‍‍‍__________________________________________

    இந்த கேள்வி மேலே உள்ள பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது தான். வினவு, எனக்கொரு சந்தேகம். மகாத்மா காந்தி பாவித்த தட்டு முதல் அவரது பாதணிகள் வரை அமெரிக்காவில் ஏலம் போனதே, இது காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் இறையாண்மைக்கு பாதகம் விளைவிக்கவில்லையா?

  6. தேர்தல் நெருங்குகிறது. எல்லோரும் ஈழத்துக்காக ஓட்டு என்கிறார்கள். அந்த மாயையை எப்போது தகர்க்கப்போகிறீர்கள் வினவு?

  7. தனக்கு ஈழ ஆதரவு ஓட்டுகள் இல்லாமல் போனால் எவ்வளவு பெரிய பிரச்சினை ஆகும் என்று திடுமென செல்வி. ஜெயலலிதாவுக்கு நினைவு வந்ததால் ஏற்கனவே சந்தி சிரித்து வரும் மனித உரிமை பிரச்சினை ஒன்று மேலும் நாரடிக்கப் பட்டு இருக்கிறது.

    தமிழர்கள் என்ற பல கோடி மக்கள் கொண்ட ஒரு மக்கள் இனப்பிரிவிற்கு ஒரு உருப்படியான தலைவர் கூட அந்த இனத்தின் தாய்நாடான இந்தியாவிலும் அது குடியேறிய பிற நாடுகளிலும் எங்குமே இல்லை என்பதுதான் நிஜம். இத்தனைக்கும் இன உணர்வு, மானம் என புஜம் தட்டுவதில் முதல் இடம் இந்த இனத்திற்குத்தான்.

    மத்திய அரசில் தமிழர் நலன் குறித்த கொள்கைகளை எடுத்து வைக்க, நடத்திக் காட்ட ராமதாசு, திருமா, ஜெயலலிதா, கருணாநிதி, சிதம்பரம், நெடுமாறன் யாருக்குமே தகுதியும் அருகதையும் இல்லை. நாணயம், மக்கள் நலன் குறித்த தீர்க்கமான பார்வை, பலதரப் பட்ட தலைமைகளுடன் கலந்து பேசி அவர்கள் மனதைக் கரைக்கும் பேச்சுத்திறன், கல்வியறிவு, மனிதாபிமானம், உலக அரசியல் ஞானம், கொள்கைக்காக பதவியைத் துச்சமென மதிக்கும் நேர்கோட்டுப் பார்வை இவை எதுவுமே இவர்கள் யாருக்குமே கிடையாது. உண்மையில் இவை வேண்டும் என்றாலே விழுந்து புரண்டு சிரிக்குமளவுக்கு அரசியல் சாக்கடையில் ஊறியவர்கள் இவர்கள்.

    அவசரத் தேவை – நாணயமான மனிதாபிமானமுள்ள ஒரு அறிவாளி.

  8. பாராட்டுக்கள் வினவு! அருமையான கார்ட்டூன்!
    கருநாய்நிதி,சுயலலிதா,சொதம்பரம்,ரம்பதாசு,தொத்துவானி, இன்னும் இன்னும்……இருக்கக் கூடிய குட்டி குட்டி ஓட்டுப் பொறுக்கி சாக்கடையெல்லாம் அவர்கள் பாட்டுக்குப் பொறுக்கிக் கொண்டுதான் இருப்பார்கள்.
    நாமும் இவர்களை மாற்றி மாற்றி எழுதுவோம் பின்னூட்டம் போடுவோம். மக்களும் குழம்பிப் போவார்கள். யாருக்கும் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணித்தாலும்
    கடைசியில் ஏதோவொறு பண்ணாடைதான் தேர்தலில் வென்றுவருவான். அதன் பிறகு, ‘ஈழப்பிரச்சினையா?’ ‘அப்படின்னா?’ என்பான்.
    இதற்கெல்லாம் தீர்வு பெரிய அளவில் மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும். இப்போது அப்படி ஒரு புரட்சி வரும் என்று என்னால் நம்ப முடியவில்லை.
    ஏனென்றால் இங்கு மக்களில் பலரும் சுயநலப் புலிகளாகவே உள்ளனர்….. அதிலும் அரசாங்க வேலைகளிலிருப்போர்,’லைஃப் நல்லா சுபிட்சமா போயிட்டிருக்கு. போராட்டமெல்லாம் வேலையத்த காலிப் பசங்கதான் செஞ்சிட்டிருப்பாங்க’ என்பார்கள். கடலூரில் தீக்குளித்து இறந்த தமிழ்வேந்தன் இறுதி ஊர்வலத்தின் போது ஒரு அரசாங்க அடிமை மேற்படி ரீதியில் என்னிடம் பேசிக் கொண்டு வந்தது.
    எது எப்படியிருந்தாலும் நாம் ஊதுகிற சங்கை ஊதிக் கொண்டேயிருப்போம்!
    ரவி…………….

  9. ஆமா ! செய்ய்ய்யலல்ல்ல்லிதாவா இப்டி போட்ருக்கிறீங்களேனு எரிச்சல்பட்டு திருட்டுபசங்க போலி விடுதலை, சந்திப்பு (பொறுக்கி கம்யூனிஸ்டு) இவனுங்க யாரும் வர்லீயா? இதுக்கெல்லாம் வரமாட்டனுங்களே வந்தா இவனுங்க வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுமில்ல !

  10. எனக்கு என்னமோ ஜெயலலிதா காவு கேட்கும் காலி போலவும்… அதனை நிறைவேற்றும் பூசாரிகளாக வை.கோ , தா.பாண்டியன் உள்ளது போலவும் தெரிகிறது…

    மறக்க முடியுமா ஜெயலலிதாவின் சொற்களை….
    “போரில் அப்பாவி மக்கள் இறப்பது தவிர்க்க இயலாலது….”

  11. Dear Tamil People,

    Please repeat the 2004 to JAYA, she will not recognize even we didn’t give any seat. atleast MDMK,PMK,2 Fraud communist, those who stay 5 yrs with the govt & always fight agianst the govt. but they didn’t resign in the 5yrs. And joint with JAYA, now they need the seat for another 5 yrs.

    Really i request all the Tamil Citizens that, if u r not interest to vote for CONG(DMK), BJP, atleast vote for ADMK but don’t vote for PMK,MDMK,2 Fraud Commst, these all people should loose thier constituency.

    MDMK,PMK,2 fraud Commst, didn’t do anything in the 5 yrs, they will not do anything for the next 5 yrs.

    As a Public, vote for our country to grow.

  12. The worst thing of this drama is some Tamil Nationalists extending their blind faith on Amma under a false impression that if Amma takes up one decision she will adhere to it. For this they have conveniently forgotten her past steps how she crushed such agitations with iron hand. The support of Pandian and Vaiko to her is understandable as they have seat sharing political calculations. But what happens to these people to forget all about this ‘iron lady’? If there is no end to such blind beliefs I am afraid one day will come our Tamil Nationalists praising Rajapakse too. Amma’s hunger stike has ‘actually blurred’ the line separating friends and enemies. Some times it would be new mode of protest in future. I would also like to recall here the quote of a famous writer who has put it in this way -“Chaos is an order waiting to be deciphered”.

  13. வழக்குரைஞர்கள் போராட்டம்,
    மார்ச் 20 சென்னையில் வழக்குரைஞர்கள் பேரணி
    சேலத்தில் நடந்த தமிழ்நாடு & பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு, கூட்டத்தில் முடிவு

  14. தடைக்கற்கல்
    அடிப்படை உரிமை??
    இலங்கைத் தமிழர்கள் மட்டில் பெயருக்காகவோ அல்லது தனது அரசியல் அந்தஸ்தின் பொருட்டோ புலிகளுக்கும்> அல்லல்படும் தமிழ் மக்கள் மீது ஆதரவுக் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். ஈழத்தமிழர்களுக்கு ஆதரித்தால் குண்டர் சட்டம்> பொடா> தடா என பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பயன்படுத்தப்படும் என எச்சரிக்கின்றனர்.
    இன்று காலாவதியாகிவிட்ட புஸ்தலைமையில் அமைந்திருந்த அமெரிக்க ஆட்சியார்களால் புரட்டாசி 11 க்குப் பின்னர் உலகில் பலபாகங்களில் உள்ள நாடுகள் அனைத்தும் அமெரிக்க தேசத்தின் அழுத்தத்தின் காரணமாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இயற்றி வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் எல்லை கடந்த பயங்கரவாதத்தை அடக்கிக் கொள்வதற்காக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டம் தற்பொழுது பயன்படுத்தத் தொடங்கி விடப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு எவரையும் கைது செய்து விட முடியும். இச்சட்டம் எல்லா நாடுகளிலும் சாதாரண மக்கள் எதிர்க் கருத்து கொண்டிருந்தாலே போதும்> அவர்களை கைது செய்ய முடியும் என்ற நிலையில் சட்டத்தில் இடம் உள்ளது. இந்தச் சட்டம் பயங்கரவாதிகளை அடக்கவென உருவாக்கப்பட்ட சட்டம் என்கின்ற போது போராடும் இனவகைகளைப் பாதிக்கக் கூடியதாகும். இந்த வகையில் மனித உரிமை சம்பந்தப்பட்டதாகும். இதன் காரணத்தினால் இவ்வகை பயங்கரவாதச் சட்டம் என்பது ஒரு உள்நாட்டு சட்டப்பிரச்சனை எனக் கொள்ள முடியாது. இது ஒவ்வொரு முற்போக்கு சக்திகளும் எதிர்க்க வேண்டும்> அதன் மூலம் ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாகும். ஜோஜ்புஸ்தலைமையில் அமைந்திருந்த அமெரிக்க ஆட்சியார்களால் உலக ஒழுங்கு உருவாகப்பட்டது. இதன்படியே எல்லா நாடுகளும் பயங்கரவாத இவ்எதிர்ப்புச் சட்டத்தையும் மேலதிகமாக உருவாக்கிக் கொண்டனர்.

    இலங்கைப் பிரச்சனையில் பலகட்சிகளும் தத்தம் நலனை கவனத்தில் கொண்டு செயற்படுகின்றனர். இவற்றினுள் மக்கள் கலை இலக்கியக் கழகம் (தோழமை அமைப்புகள்) மாத்திரமே இலங்கை மக்களுக்கான விடிவின் அடிப்படையில் இருந்து செயற்படுகின்றனர். இவர்களின் செயற்பாட்டைப் பற்றி புலிகளின் ஆதரவாளர்கள்> புலிகள் இவர்களின் செயற்பாட்டை வெளிக் கொணர்வதில்லை. இன்றையக் காலத்தில் ம.க.இ.க மீதுதான் பிரச்சனையை தமிழக மக்களுக்கு முழுமையாக கொண்டு செல்லும் அரசியல் பார்வை இருக்கின்றது. இவர்கள் தமது சொந்த நாட்டிலே தமது உரிமைக்காக போராட வேண்டியவர்களாக இருக்கின்றனர்
    இன்று ஈழமக்களுக்கான நம்பக சக்திகளாக போராடிக் கொண்டிருப்பவர்கள் தமிழகத்தில் வாழ்பவர்கள் உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே அங்கே வாழ்கின்றனர். அகதிகளாக உள்ள மக்களுக்கு உதவி செய்யத் துடிக்கும் தமிழக மக்களுக்கு துன்பத்தை கொடுத்து வந்துள்ளன ஆட்சிக்கு வந்த கட்சிகள். தமிழக மக்களே துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு சிறையில் அகப்பட்டனர். இவ்வாறான கெடுபிடிகள் எல்லாம் பயங்கரவாதிகள் அகதிகளுடன் சேர்ந்து வந்து விடுவர் என்று காரணம் கூறப்பட்டது. இருந்த போதும் அன்று தொடக்கம் இன்றுவரை தமிழ் மக்களின் நலனுக்காக குரல் கொடுத்துக் கொண்டும்> உழைக்கும் மக்களுக்காக போராடி வரும் அமைப்புக்களை அடுத்ததாக இந்த சட்டத்தின் மூலமாக ஒடுக்க முடியும். காங்கிரஸ் கட்சியை கலைஞர் திருப்திப்படுத்தும் நோக்கோடு ஏவப்படும் பாதுகாப்பும் படையும்> சட்டங்களும் ஈழ ஆதரவுச் சக்திகள் மீது பாய்கின்றனர். உலகத் தமிழர்கள் என்று கூறிக் கொள்ளும் கலைஞர் இன்று தனது குடும்பத்தவர்களுக்கு பதவிகளை பெற்றுக் கொடுக்கவும்> குடும்ப மூலதனத்தை வளம்படுத்தும் நோக்கில் அமைந்து செயற்பாடுகளால் இன்று ஈழத்தமிழர்களிடம் செல்லாக்காசாகி விட்டார்.

    .
    ஈழத் தமிழ் மக்களுக்காக போராட வேண்டும் என்றால் அந்தப் போராட்டத்தை நடத்துவதற்குக் கூட உரிமை மறுக்கப்படுகின்றது. ஏன் திருமாவளவனுக்குக் கூட கூட்டங்களை கூட்டுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் நிலையில் இவர்களுக்காக உரிமைமறுக்கப்படுவது மற்றையவர்களை விட கடுமையானதாக இருக்கும்.

    முதலாளித்துவ ஜனநாயக சமூகம் என்பது தேர்தலில் பங்குபற்றுவது> பேசுவதற்கான> எழுதுவதற்கான சுதந்திரம் போன்றவற்றை ஏற்றுக் கொள்கின்றன. இவ்வாறான அடிப்படைச் சுதந்திரத்தை முதலாளித்துவ ஜனநாயகம் அங்கீகரிக்கின்ற போது இந்திய ஆழும் வர்க்கம் நடைமுறையில் அழுத்தங்கள் கொடுத்து உரிமைகள் மீது தடையைப் போடுகின்றனர்.

    கூட்டம் கூடுவதற்கு உருவாக்கப்படுகின்ற தடைகளை தமிழினத்தலைவர் காங்கிரஸின் நலன் கருதி மாத்திரம் இடையூறு செய்வதாக மாத்திரம் கருதிக் கொள்ள முடியாது. இவைகள் தொடர்ச்சியான தி.மு.காவில் உருவாகியுள்ள முதலாளிகளின் நலன்களும் காரணமாகின்றது. கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் சீமான் சிறையில் அடைக்கப்பட்டார். இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுஇ தேசிய பாதுகாப்பு சட்டம் என்கிற கடுமையான சட்டத்தின் கீழ் கைதாகிஇ புதுச்சேரி சிறையில் இருக்கிறார். கொளத்து}ர்மணியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இராஸ்வரத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் இறையாண்மையைக் காட்டி பேச்சுத் சுதந்திரத்தை மறுக்கின்ற நிலையில் பல கைதுகள் நடைபெற்றிருக்கின்றனர். இக்கைதுகள் மூலம் போராடும் மக்கள் மத்தியில் பயத்தைக் உண்டாக்குவதும்> இதன் மூலம் போராட்டத்தின் வீரியத்தை அடக்குவதே தமிழக> மைய ஆட்சியாளர்களின் குறிக்கோளாக இருக்கின்றது. அதிகார வர்க்கத்திற்குரிய ஆணவத்துடன் திரு தங்கபாலு கூறுகின்றார் “சென்னை: வைகோ முரண்பாடுகளுக்கு சொந்தமானவர். இந்திய இறையாண்மைக்கு எதிரானவர். இந்தியன் என்று சொல்வதற்கே வைகோ தகுதியற்றவர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.” ((http://thatstamil.oneindia.in/news/2009/03/10/tn-vaiko-is-unfit-to-be-an-indian-says-thangabalu.html) ) இங்கு மறுக்கப்படுவது முதலாளித்துவ பொருளாதார அமைப்புக் கொடுக்க வேண்டிய பேச்சுரிமை இவற்றை மறுதலிக்கப்படுகின்றது.
    இதேவேளை அரசியல் கோமாளிகளாக சுப்பிரமணிய சுவாமி> சோ போன்றவர்கள் எவ்வித கருத்துத் தெரிவித்தாலும் இவர்களின் கோமாளித்தனமாக கருத்துக்கள் அரசியல் ஆலோசனையாக அங்கீகரிக்கப்படுகின்ற வேளையில் மற்றவர்களின் பேச்சுரிமை மறுக்கப்படுகின்றது. சுதந்திர மறுப்பானது நிர்வனமயமாக்கப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. அதாவது இவர்களை எல்லாம் பேச விட்டது தவறு> சூத்திரர்கள் பேச கற்றுவிட்டால் இன்னும் பிரச்சனை உருவாகும் என்ற கருத்தானது நிறுவனமயப்படுத்தப்பட்டிருப்பதைத் தான் சுப்பிரமணியின் மீதான முட்டையடியும்> பின்னரான பொலிசாரின் மிருகத்தனமாக தாக்குதலுமாகும்.

    இவ்வாறே வங்காள விரிகுடாவில் கடல்தொழிலாளர் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டால் மீனவர்கள் என்றும்> ஜம்மு காஸ்மீரில் ஒருவர் இறந்தால் பண்டித் என்றும் கூறி பிரச்சனையில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக உணர்கின்றனர். (உரிகைள் கொடுப்பதில் எவ்வாறு சாதியம் http://mathimaran.wordpress.com/ மாறுபடுகின்றது என்பதை பார்க்க)

    இன்றைய உலகில் இருக்கின்ற அரசுகளிடம் குறைந்தபட்சம் முதலாளித்துவ ஜனநாயகத்தினைக் வழங்க முடியாத நிலையில் தான் மேற்குதேசங்கள் தவிர்ந்த அனைத்து கண்டங்களிலும் தென்படுகின்றது. முதலாளித்துவ ஜனநாயகம் வழங்கும் பேச்சு> எழுத்து> தெரிவு செய்யும் சுதந்திரம்> வாக்குரிமை என முதலாளித்துவம் சுதந்திரமாக கொடுக்கின்றது. இன்றும் குறிப்பாக கொல்ல வேண்டுமென்றால் மனிதனை மனிதன் சுரண்டுவதற்கும் உரிமை கொடுக்கின்றது.

    குறைந்த பட்ச கோரிக்கைகள்:
    குறைந்த பட்சமாக இருக்கின்ற முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் மக்களுக்கு கொடுக்கக் கூடிய உரிமையை கொடுப்பற்கு மறுக்கின்றனர். இங்கே இரண்டு விடயங்களைப் பார்க்கின்றோம்.
    1. அடிப்படைச் சுதந்திரம்
    2- முதலாளிகளுக்கிடையே தத்தம் மக்களை சுரண்டுவதற்காக சுதந்திரம்.

    ஒன்று வன்னியில் மக்கள் வாழ்வதற்கான உரிமையை இழந்தது மாத்திரம் அல்ல அம்மக்கள் தமிழர் என்ற காரணத்திற்காக நித்தமும் கொல்லப்படுகின்றனர். இந்த அடக்குமுறைக்கு எதிராக தமிழகத்தில் போராடுகின்ற தமிழக அமைப்புக்களுக்கும்> தனிநபர்களுக்கும் வாய்ப்பூட்டு போடும் நிலையில் அங்கு அடிப்படைச் சுதந்திரம் மறுக்கப்படுகின்றது. இதில் குறிப்பாக புலிகளின் ஆதரவாளர்கள் என்ற காரணத்திற்காக அடிப்படை உரிமை மறுக்கப்படுகின்றதை நிர்வனமயப்பட்ட நிலையில் ஏற்றும் கொள்ளும் நிலைதான் இந்தியக் கண்டத்தில் இருக்கின்றது.

    இந்த நிலையில் போராடுகின்றவர்கள் குறைந்தபட்சம் மக்கள் நலனில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்க வேண்டும். இதில் சுயநிர்ணய உரிமை என்பது அந்தந்த இனத்தின் வர்க்கங்களை சுரண்டுவதற்காக உரிமையை பெற்றுக் கொள்வதுதான். ஆனால் இங்கு இனம் என்ற வகையில் பாதிக்கப்படுவது சாதாரண மக்களே. இதனால் மக்களுக்கான ஜனநாயகக் கோரிக்கையாக முன்மொழியப்படுகின்றது. இதை மறுத்து நிற்கும் முதலாளித்துவ சமூக உறவிற்கு அமைய இனங்களுக்கு கொடுக்கக் கூடிய சுயநிர்ணய உரிமை இவைகளை கொடுக்க மறுப்பதுடன் தனது ஆயுதங்களினால் அடக்குகின்றது.

    இனவொடுக்குமுறையை மேற்கொள்கின்ற சிறிலங்கா அரசும்> அதன் பங்காளிகளாக தமிழ் இயக்கங்களும்> புலிகளும் மக்களின் அடிப்படை உரிமையை மறுதலித்துக் கொண்டுதான இருக்கின்றனர். இந்தக் காலகட்டத்தில் குறைந்தபட்சமாக மக்களின் ஜனநாயக உரிமையை வலியுறுத்தும் கோரிக்கைள் முன்வைப்பது அவசியமானதாகும். பாதிக்கப்படுவது அதிகார வர்க்கம் அல்ல. பாதிக்கப்படுவது பொதுமக்களே இவர்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியமானதாகும்.
    இந்த வகையிலேயே பரீஸில் நடைபெற்ற போராட்டமானது குறைந்தபட்ச கோரிக்கையை முன்வைக்கப்படவில்லை என விமர்சிக்கப்படுகின்றது. குறைந்தபட்ச ஜனநாயக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத இடத்தில் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பது முடியாத காரியமாகும்.
    குறிப்பாக சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியதான கோரிக்கைகள் கூட அங்கு வைக்கப்படவில்லை. இதனைத் தான் விமர்சின்றார் தோழர் ரயாகரன்.

    தமிழகத்திலும்> புலம்பெயர்ந்த நாடுகளிலும்> இலங்கையிலும் உழைக்கும் மக்களின் ஆதரவுடன் போராட்டம் நடத்தப் படவேண்டும். இவ்வாற நிலையில் தமிழகத்தில் உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுக்கும் சக்திகளே ஈழத்தில் இருக்கின்ற மக்களை இனத்துவ வேறுபாடுகள் இன்றியும்> சுயநிர்ணம் பெற்றும் அனைத்துவிதமான ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடுவதுடன் எமக்கு துணை நிற்கக்கூடிய சக்திகளாகும். தமிழக அரசியல் கட்சிகளில் இனத்துவ ரீதியில் குரல் கொடுக்கும் சக்திகள் இனத்துவ வரையறைக்குள் நின்று விடுகின்றனர். இவ்வாறான வேளையில் பயங்கரவாதச் சட்டத்தின் மூலம் உண்மை நட்புச் சக்திகளையும் இவ்வாறான சட்டத்தை பயன்படுத்தி பழிவாங்கி சிறையில் அடைத்துக் கொள்ளப்படுகின்றனர். எனவே ஒடுக்குமுறை சட்டங்கள் ஒவ்வொன்றையும் எதிர்ப்பது மனிதவர்க்கத்திற்கு சேவை செய்வதாகும்.

  15. நீதிமன்ற மோதல்-போலீஸ் அதிகாரிகள் மீது சிபிஐ எப்.ஐ.ஆர்.
    http://thatstamil.oneindia.in/news/2009/03/12/tn-cbi-files-fir-on-police-officers-in-hc-clash.html

    சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள், போலீஸ் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரித்து வரும் சிபிஐ, அடையாளம் தெரியாத போலீஸ் அதிகாரிகள் என்று குறிப்பிட்டு சிலர் மீது முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐஆர்.) தாக்கல் செய்துள்ளது.

    சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பிப்ரவரி 19ம் தேதி பயங்கர மோதல் மூண்டது. வக்கீல்களும், போலீஸாரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு தயார் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த நிலையில், வக்கீல்களைத் தாக்கியதாக பெயர் தெரியாத போலீஸ் அதிகாரிகள் என்று கூறி சிபிஐ தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன.

    உயர்நீதிமன்ற மோதலுக்குப் பின்னர் போலீஸ் அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

    உயர்நீதிமன்ற மோதல் தொடர்பாக அடையாளம் தெரியாத வக்கீல்கள் என்று கூறி போலீஸ் தரப்பில் சட்ட விரோதமாக கூடுதல், கலவரத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் போலீஸ் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  16. ilathamilargal poral avathivurugindranar.pachilam kulanthaigal ,periyorgal yena palar karaname illamal uyirilakirargal.Ithai thaduka thamilaga arasu thakka nadavadikai yedukavendum.Indiavil therthal varapogirathu.arasiyalvathigal jeyipatharku thevaipaduvathu vottu.vottukaga yenna nadagam venanumnalum nadika thayaraga irrukirargal.athil ondruthan jeyalalitha ammavin nadagam.kakai kutathai parunngal.Kakai inathai kappatra kakaigal yevalavu otrumaiyaga irukindrana.yen nammalum mudiyathu.nam thamilar inathai kappatra yen nammal mudiyathu.mudiyum yendru thamilaga arasu ninaithal thamilanuku nichayam vetri kittum

  17. ரதி,

    Indentation மிக அதிகமாகிவிட்டதால் இந்த் பதிலை புதிய thread மாதிரி எழுத வேண்டியதாக இருக்கிறது.

    நீங்கள் ஒரு முடிவோடுதான் எழுதுகிறீர்கள். என் எண்ணம் என்ன என்று உங்களுக்கு பல preconceived notions இருக்கின்றன. அந்த prejudice உங்களை நான் என்ன எழுதி இருக்கிறேன் என்பதை விட நான் எழுதியதில் என்ன உள்குத்து இருக்கக் கூடும் என்றே யோசிக்க வைக்கிறது. இப்படி நீங்கள் நினைக்க என்ன காரணம்?

    தமிழ் தேசியம் என்றால் என்ன என்று எனக்கு தெரியாததால் அது என்ன என்று கேட்டேன். அதற்கு ஒரு “நல்லவர்’ என்னை கன்னா பின்னா என்று திட்டினார். அவர் திட்டியது தவறு என்று நீங்கள் இது வரை சொல்லவில்லை. 🙂 ஆனால் அவரை நான் திருப்பி கிண்டல் செய்ததை என்று குதர்க்கம் என்று சொன்னீர்கள். அதே நேரத்தில் நல்ல வேளையாக தனி ஈழத்துக்காக போராடுவதை தமிழ் தேசியம் என்று சொல்கிறோம் என்றும் சொன்னீர்கள்.

    தனி ஈழத்துக்காக போராடுவதுதான் தமிழ் தேசியம் என்பதை confirm செய்யுமாறு கேட்டிருந்தேன். தமிழ் தேசியம் என்பது தனி ஈழத்தை உள்ளடக்கியது என்று சொல்லி இருந்தீர்கள். தமிழ் தேசியம் என்ற concept தனி ஈழம் என்ற concept-ஐ உள்ளடக்கியது என்று சொன்னீர்கள் போல. உள்ளடக்கியது என்ற சொல்லாட்சி எனக்கு வேறு மாதிரி புரிந்தது, அதனால் எல்லா தமிழ் பகுதிகளும் அடங்கிய நாடோ என்று தோன்றியது. சரியா தவறா என்று confirm செய்யும்படி கேட்டிருந்தேன்.

    தமிழ் தேசியம் என்பது தனி ஈழத்துக்கான போராட்டம் மட்டுமே என்று பொங்கி எழுந்திருக்கிறீர்கள். அதில் தமிழ் நாட்டையும் சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள். நன்றி. ஆனால் இந்த preconceived notions இல்லாவிட்டால் இவ்வளவு கோபம் வெளிப்பட்டிராது அல்லவா? ஏன் இந்த கோபம்?

    சரி, நானும் என்னால் முடிந்த வரை உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தெளிவுபடுத்த முயற்சி செய்கிறேன். தமிழ் தேசியம் என்பது நான் சாதாரணமாக பார்க்கும் சொற்றொடர் இல்லை. வினவின் இந்த பதிவையே எடுத்துக் கொள்ளுங்கள், அதில் தமிழ் தேசியம் என்று இல்லை. வினவு எந்த பதிவிலும் இந்த சொற்றொடரை கையாண்டிருப்பதாக எனக்கு நினைவில்லை. நீங்களும் மற்றும் சிலரும் இதை தனி ஈழத்துக்கான போராட்டம் என்று தமிழ் தெரிந்த எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது கொஞ்சம் அதிகப்படி. என்னை போன்றவர்களின் அறிவுத் திறனை, மொழித் திறனை கொஞ்சம் அதிகமாக மதிப்பிடுகிறீர்கள். (இது குதர்க்கமா, தமாஷா என்பதையும் உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்)

    // Ya, I got the impression that you are one of those people who hate Eelam Tamils and thier liberty.//
    புதிதாக காணப்படும், அவ்வளவு அதிகமாக பயன்படுத்தப்படாத சொல்லுக்கு அர்த்தம் கேட்பது உங்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய தவறாக தெரிகிறது? 🙂
    ஈழத் தமிழர்களை வெறுப்பதா? நானுமொரு தமிழன், கிமிழன் என்பதை எல்லாம் விடுங்கள். ஈழத் தமிழர்கள் படும் கஷ்டங்களை பற்றி ஓரளவாவது தெரிந்த எந்த மனிதனும் அவர்கள் பக்கத்தில்தான் நிற்பான். இங்கே பல காலமாக நான் கத்திக் கொண்டு வரும் ஒரு விஷயம் – தனிப்பட்ட மனிதர்கள் தவறு செய்கிறார்கள், குழுக்கள் இல்லை என்பது. இந்த லாஜிக்படி நான் சிங்களர்களை கூட ஒரு குழுவாக வெறுக்க முடியாது. நீங்களோ…
    தமிழர்களுக்கு ஒரு தீர்வு வராதா என்று உலகில் பல கோடி பேர் ஏங்குகிறார்கள். அதில் நானும் ஒருவன். என்னைப் பொறுத்த வரையில் தனி ஈழமா, இல்லை இலங்கை அரசுக்குள் பல காரண்டிகளுடன் சுயமாக இயங்கும் ஒரு மாநிலமா என்பது இரண்டாம் பட்சம், தீர்வு வந்தால் சரி. நீங்கள் தனி ஈழம்தான் ப்ராக்டிகலாக ஒரே தீர்வு என்று நினைக்கிறீர்கள் போல.
    ஆனால் நான் புலிகளை எதிர்க்கிறேன். புலிகள் ஆளும் தமிழ் ஈழம் என்பது தமிழர்களை நசித்துவிடும் என்றுதான் நினைக்கிறேன். பிரபாகரன் ஒரு ஃபாஸிஸ்த், பிரபாகரன் தலைமை இருக்கும் வரை புலிகள் ஃபாஸிஸ முறையில் இயங்கும் ஒரு குழுவாகத்தான் செயல்படுமென்று நினைக்கிறேன். புலிகள் இல்லாமல் எப்படி தீர்வு காண்பது என்பது எனக்கும் தெரியவில்லைதான்.

    // நான் உங்களிடம் இன்னுமொரு கேள்வி கேட்க வேண்டும். //
    நான் இரண்டு bLog எழுதுகிறேன். http://awardakodukkaranga.wordpress.com/, http://koottanchoru.wordpress.com/ வேண்டுமென்றால் அங்கே வந்து கேளுங்கள்.

    பதில் சொன்னதற்கு மிக்க நன்றி. இந்த preconceived notions-ஐ குறைத்துக் கொண்டீர்களானால் இன்னும் நன்றாக இருக்கும்.

  18. RV,
    மாற்றி யோசியுங்கள். “தேசியம்” என்பதை noun ஆக யோசிக்காமல் adjective ஆக யோசியுங்கள். அதாவது, தேசிய இனம், தேசிய கொடி, தேசியமொழி, தேசியசின்னம், etc. Whatever comes under “Nation Hood” is called “தேசியம்” என்பதுதான் என் விளக்கம். ஈழத்தமிழர்கள் ஆரம்பத்தில் கல்வியில் புறக்கணிக்கப்பட்டார்கள். அதுமட்டுமல்ல, தேசிய கல்வியில் ஈழத்தமிழர்களின் வரலாறும் புறக்கணிக்கப்ப்ட்டது.

    உதாரணமாக, தமிழ்நாட்டில் ஒரு பாடத்திட்டத்தை தீட்டும் போது, ஒரு 10 அல்லது 15 வருடங்களின் பின் தமிழ்நாட்டின் (மாநில) தேவை என்பது மட்டுமன்றி இந்தியாவின் (தேசிய)தேவை என்னவென்பதும் கருத்தில் கொள்ளப்படும் இல்லையா? அதற்கேற்றால் போல் கணணி விற்பனர்கள், பொறியியலாளர்கள், etc. என்று உருவாக்கப்படுவார்கள் இல்லையா? இதனால் நான் சொல்ல வருவது என்னவென்றால், இலங்கை நாட்டின் தேசியமொழியயை சிங்களமாக ஆக்கியதுமல்லாமல், சிங்களவர்கள் வாழும் மாகாணங்களின் தேவை என்னவென்பதை மட்டும் கருத்தில் கொண்டே சிங்கள ஆட்சியாளர்கள் (நான் சிங்கள ஆட்சியாளர்களை மட்டும் தான் குறிப்பிடுகிறேன்)கல்வித்திட்டங்களையும் மற்றும் வேலைத்திட்டங்களையும் உருவாக்கினார்கள். தமிழ் மாகாணங்கள் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டன. அதனால், தமிழர்கள் தேசிய அளவில் வேலை வாய்ப்புகளை பெறமுடியாமல் போனது.

    இவ்வாறாக, இலங்கையின் “தேசியம்” என்ற எல்லா அம்சங்களிலும் நாங்கள் புறக்கணிக்கப்ப்ட்டதால் தான், ஈழத்தமிழர்களாகிய நாம் எங்களுக்கென்று ஓர் “தமிழ்” தேசியத்தை ஈழத்தில் (ஈழத்தில் மட்டும் தான்) கட்டியெழுப்ப ஆசைப்படுகிறோம்.

    நான் மறுபடியும் “தேசியம்” பற்றி விளக்க வேண்டுமென்று இதயெல்லாம் எழுதவில்லை. என் “தேசியக்காதல்” என்னவென்று புரியவைக்க வேண்டுமென்றுத்தான் இதை எழுதுகிறேன். என்ன சிரிக்கிறீகளா? இப்படி சொல்வதன் மூலம் am I being prejudiced? Naaaa.. I don’t think so.

  19. நல்ல விளக்கத்துக்கு நன்றி!

    prejudice என் மீது இருந்தது என்று நினைக்கிறேன். அது எனக்கு எழுதும் மறுமொழிகளில் கோபமாக வெளிப்பட்டது. நான் எழுதுவதை by default, குதர்க்கம் என்று உணர்ந்திருக்கிறீர்கள். அதைத்தான் preconceived notions என்றும் prejudice என்றும் குறிப்பிட்டேன். இப்போது prejudice குறைந்துவிட்டது போலிருக்கிறது, அதற்கும் நன்றி!

  20. மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நீங்கள் ஒன்றும் தவறாக சொல்லிவிடவில்லை. ஆயிரம்தான் நான் பாசமுள்ள கணவனாக இருந்தாலும் பிள்ளை பெறும் வலி என் மனைவிக்குத்தான் தெரியும். அதைப் போலத்தான் நான் ஆயிரம் லாஜிக் பேசினாலும் வலியை அனுபவிப்பது ஈழத் தமிழர்கள்தான். எனக்கு இருப்பது வருத்தம், கவலை, கரிசனம் அவ்வளவுதான் – அது வலி இல்லையே? Prejudice குறைந்தால் சீக்கிரம் பாயிண்டுக்கு வர முடியும், அவ்வளவுதான். அதற்க்காக மட்டுமே Prejudice பற்றி குறிப்பிட்டேன்.

    தொடர்ந்து பேசுங்கள், எழுதுங்கள், கூப்பாடு போடுங்கள். உங்களை கேட்டுக் கொள்வது இது ஒன்றுதான். எதிர் கருத்துகளை கண்டு – அவை எவ்வளவு மடத்தனமாக இருந்தாலும் சரி, insensitive ஆக இருந்தாலும் சரி – ஒதுங்கி விடாதீர்கள். உங்களை போன்றவர்களின் குரல்கள் பதிவாக வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க