privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பழ.நெடுமாறன் – கககபோ!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பழ.நெடுமாறன் – கககபோ!

-

nedu_a-copy

ஐயா பழ.நெடுமாறன் புலிகள் இயக்கத்தின் ஆலோசகர். புலம் பெயர் தமிழர்கள் பலரின் மதிப்புக்கு உரியவர். ஈழத்தமிழர்க்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் எனப் போற்றப்படுபவர்.

நேற்றைய தினமணி நாளிதழில் “தோற்றது இந்தியாவின் ராஜதந்திரம்தான்’ என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார் நெடுமாறன். “இலங்கைப் போரில் புலிகள் தோற்றார்களா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை விட இந்தியாவின் ராஜதந்திரம் வெற்றி பெற்றதா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும்” என்று தொடங்குகிறது அவரது கட்டுரை.

“Loyal than the king” – ராஜ விசுவாசத்தில் மன்ன்னையே விஞ்சியவர்கள் எனப்படுவோர் எப்படி இருப்பார்கள் என்று புரிந்து கொள்ள முடியாதவர்கள் ஐயாவின் கட்டுரையைப் படித்துப் புரிந்து கொள்ளலாம்.

இந்திய அரசு ராஜபக்சேவுக்குத் துணை நின்றதற்கு எம்.கே.நாராயணன், மேனன், நம்பியார் போன்ற மலையாளிகளின் தமிழர் விரோத உணர்வுதான் காரணம் என்று நமக்குத் தெளிவு படுத்தியிருந்தார்கள் தமிழ் தேசியவாதிகள். மேற்படி மலையாளிகள் போதுமான அளவுக்கு இந்திய மேலாதிக்க உணர்வு இல்லாதவர்கள் என்பதும், நெடுமாறன் அளவுக்கு ‘நுண்மான் நுழைபுலமும் அறிவாற்றலும்’ இல்லாத கபோதிகள் என்பதும் அவரது கட்டுரையைப் படித்த பின்னர்தான் நமக்கு வெளிச்சமாகிறது.

நேற்றுவரை தொப்பூள்கொடி உறவு, தமிழ்ச் சொந்தங்கள் என்று கூறி ஈழத்தமிழரை ஆதரிக்குமாறு தமிழக மக்களிடம் கூறி வந்த ஐயா நெடுமாறனின் இரத்த நாளங்களுக்குள் கொதித்துக் கொண்டிருக்கும் இந்திய மேலாதிக்க கொலஸ்ட்ராலின் அளவை இந்தக் கட்டுரை துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.

தமிழ் உணர்வைத் தூக்கிக் கடாசிவிட்டு, சிங்கள அரசால் ஏமாற்றப்பட்டு விட்ட இந்திய மேலாதிக்கவாதியின் உணர்விலிருந்து, அதாவது பார்ப்பன தேசிய உணர்விலிருந்து அல்லது ஆரிய உணர்விலிருந்து சிந்திக்குமாறு இந்திய தேசபக்தர்களுக்கு அறைகூவல் விடுக்கிறார் நெடுமாறன். அந்தக் கட்டுரையின் சாரமான பகுதிகளை மட்டும் கீழே தருகிறோம்:

“…ஆனால் இலங்கைப் போரில் புலிகள் தோற்றார்களா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை விட இந்தியாவின் ராஜதந்திரம் வெற்றி பெற்றதா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும். 1980-களில் தொடங்கி இன்று வரை இலங்கையில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் இந்துமாக்கடலின் முக்கியக் கடல், வான் பாதைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஆதிக்கப் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது.”

“1977-ம் ஆண்டு ஜயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது இந்தியாவின் மேலாதிக்கத்தில் இருந்து விடுபட விரும்பியது. அதற்கு ஒரே வழி அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடன் உள்ள உறவுகளை வலுப்படுத்துவதேயாகும் எனத் திட்டமிட்டு செயல்பட்டது….”

“…இலங்கையில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் வளர்ந்தோங்கிய நிலையில் இந்திய அரசின் கருத்துகள் எதற்கும் சிங்கள அரசு மதிப்புக் கொடுக்கவில்லை. எனவே அதற்கு எதிராக சிங்கள அரசை மிரட்டுவதற்காக பிரதமர் ராஜீவ்காந்தி காலத்தில் அதாவது 1987-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி இந்திய ராணுவ விமானங்கள் முற்றுகைக்கு ஆளாகியிருந்த யாழ்ப்பாணத்தின் மீது பறந்து சென்று உணவுப் பொதிகளை வீசின. இதைக் கண்டு சிங்கள அரசு அச்சம் அடைந்தது. 1987-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி இந்திய இலங்கை உடன்பாட்டில் கையெழுத்து இட்டாக வேண்டிய நெருக்கடி ஜயவர்த்தனவுக்கு ஏற்பட்டது…”

“…இந்திய அரசு அவரை மிரட்டியபோது மேற்கத்திய நாடுகள் ஒன்றுகூட அவருக்கு உதவ முன்வரவில்லை. சின்னஞ்சிறிய இலங்கைக்காகத் தங்கள் பொருள்களின் விற்பனைக்கான மிகப் பெரிய சந்தை நாடான இந்தியாவுடன் முரண்பட மேற்கு நாடுகள் தயாராகவில்லை என்பதே உண்மையாகும்…”

“…இலங்கையில் சீனாவின் ஆயுதக்கிடங்கு அமைவது என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, தென் ஆசியப் பகுதிக்கே ஆபத்தானதாகும். இப்பகுதியில் உள்ள நாடுகளுக்குத் தேவைப்படும் போது உடனுக்குடன் ஆயுத உதவிகளைச் சீனா செய்யமுடியும்….”

“….இதன்மூலம் சேதுக்கால்வாயில் செல்லும் அனைத்து நாட்டு சரக்குக் கப்பல்கள் மற்றும் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஆகியவற்றை சீனா தொடர்ந்து கண்காணிக்க முடியும். 1974 ஜூலை 8-ம் தேதி இந்திரா காந்தி காலத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்திய இலங்கை உடன்பாட்டின்படி இந்தத் துரப்பணப்பணியை இந்தியாவும் இலங்கையும் கூட்டாக மேற்கொள்ளவேண்டும். ஆனால் அந்த உடன்பாட்டை மீறும் வகையில் இந்தப் பணி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது….”

“…சீனாவுடனும் அதன் கூட்டாளிகளுடனும் கூட்டு வைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே புலிகளுக்கு எதிரான ராணுவ வெற்றிகளை அடைய முடியும் என இலங்கையை உணரச் செய்வதே சீன அரசின் நோக்கம் என்பதையும் அந்த நோக்கத்தில் அது வெற்றி பெற்றுவிட்டது என்பதையும் இந்தியா உணரவே இல்லை…”

“… பாகிஸ்தானுடன் சீனா கொண்டுள்ள நெருக்கமான உறவு கூட இந்தியாவுக்கு பெரும் அபாயமாக விளங்குகிறது. அதே அளவுக்கு இப்போது உருவாகியிருக்கும் இலங்கை சீன உறவு எதிர்காலத்தில் தென்னிந்தியாவிற்குப் பெரும் சவாலாக விளங்கும் என்பதில் ஐயம் இல்லை…”

“… இலங்கையரசுக்கு சீன அரசு ராணுவ ரீதியில் உதவி வருவது எதிர்காலத்தில் வணிக நலன்களை கருதி அல்ல. இந்தியா அமெரிக்காவுடன் கொண்டுள்ள கூட்டணியின் விளைவாக இந்துமாக்கடல் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலும் தான் தனிமைப்பட்டுவிடக்கூடாது எனக் கருதுவதனாலேயேயாகும். ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியில் இப்பகுதியில் உள்ள இலங்கை, நேபாளம், வங்கதேசம், மியான்மர், மலேசியா ஆகிய நாடுகளுடன் மிக நெருக்கமான உறவை சீனா வளர்த்து வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தான், ஈரான் ஆகியவை சீனாவின் கூட்டாளிகளாகிவிட்டன…”

“…இலங்கையின் இந்தப் போக்கினை கண்ட இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதியான ரவி கவுல் என்பவர் இந்துமாக்கடலும் இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த நிலையும்என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலில் பின்வருமாறு கூறியுள்ளார். பிரிட்டன் பாதுகாப்புக்கு அயர்லாந்து எவ்வளவு முக்கியமானதோ, சீனாவின் பாதுபாப்புக்கு தைவான் எவ்வளவு இன்றையமையாததோ அதைப்போல இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை மிக முக்கியமானதாகும். இந்தியாவின் நட்பு நாடாக அல்லது நடுநிலை நாடாக இலங்கை இருக்கும் வரை இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் வசத்தில் இலங்கை சிக்குமானால் அந்த நிலைமையை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளமுடியாது. ஏனென்றால் இந்தியாவின் பாதுபாப்புக்கு அதனால் அபாயம் நேரிடும்.‘ “

“அமெரிக்காவுடன் இந்தியா செய்த கொண்ட அணுசக்தி உடன்பாட்டின் விளைவாக விரிவடையப்போகும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்க வலிமையானது எதிர்காலத்தில் தனக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்ற கலக்கம் சீனாவுக்கு உள்ளது. இந்தியாவில் ராணுவ, பொருளாதார முக்கியத்துவம் மிக்க பகுதியாக மாறிவரும் தென்னிந்தியாவின் பாதுபாப்பினை உறுதி செய்வதற்கு இலங்கை தனது முழுமையான கட்டுபாட்டிற்குள் வரவேண்டும் என்பது இந்தியாவின் அவசியத் தேவை என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளது.”

” இலங்கையில் தமிழர் பகுதிகளை சிங்கள ராணுவம் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கும், விடுதலைப் புலிகளை ஓரங்கட்டுவதற்கும், தான் அளித்த உதவியினால் எதிர்காலத்தில் இலங்கை தனது கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட ஒரு நாடாக இருக்கும் என இந்தியா கருதியது குறுகிய காலத்திலேயே பகற்கனவாய் போய்விட்டது. தனது நோக்கம் நிறைவேறியவுடன் இந்தியாவைத் தூக்கியெறிய இலங்கை தயங்கவில்லை. இந்தியாவின் தயவு இனி இலங்கைக்குத் தேவையில்லை…” இதுதான் அய்யா நெடுமாறனின் கட்டுரை சாரம்சம்.

ஒரு பெரிய நாடு, தனது சிறிய அண்டை நாட்டை ஆதிக்கம் செய்வது நியாயம். சிறிய நாடு அதற்கு அடங்கி நடப்பதுதான் தருமம். நாடுகளுக்கு இடையிலான சமத்துவம், சுதந்திரம் என்றெல்லாம் ஒரு சிறிய நாடு பேச முடியாது. பேசக்கூடாது என்பதே நெடுமாறனின் கருத்து. “ஈழத்தமிழர்களை ஆதரித்திருந்தால், இந்தியாவின் விசுவாசமிக்க அடிமைகளாக தமிழர்கள் இருந்திருப்பார்கள். இப்படி சிங்களனை நம்பிக்கெட்டாயே பாரதமே” என்று புலம்பியிருக்கிறார் நெடுமாறன்.

இலங்கை அரசு ஈழத்தமிழர்களை ஒடுக்குகிறது என்ற காரணத்தினால்தான் இலங்கையின் மீதான இந்திய மேலாதிக்கத்தை அவர் நியாயப்படுத்துகிறார் என்று யாரும் கருதிக் கொள்ளவேண்டாம். இலங்கை அரசுக்கும், அதற்கு துணைநின்ற பாகிஸ்தான் அரசுக்கும் மட்டும் இந்த நியாயத்தை நெடுமாறன் கூறவில்லை. தமிழர்களை எந்த விதத்திலும் ஒடுக்காத, நேபாளம், பூடான், வங்கதேசம் உள்ளிட்ட எல்லா தெற்காசிய நாடுகளும் இயற்கையிலேயே இந்திய மேலாதிக்கத்துக்கு அடிமையாக இருக்க கடமைப்பட்டவர்கள் என்கிறார் நெடுமாறன். யாரிடம் ஆயுதம் வாங்குவது, எந்த நாட்டு முதலாளிகளை தொழில் தொடங்க அனுமதிப்பது, எந்த நாட்டுடன் நட்புறவு கொள்வது என்று தீர்மானிக்கும் உரிமை சிறிய நாடுகளுக்கு இருக்க முடியாது என்ற மேலாதிக்க நீதியை நிலைநாட்டுவதற்கு ரவி கவுல் எனும் இந்திய கடற்படை அதிகாரியையும் மேற்கோள் காட்டுகிறார்.

மேலாதிக்கம் என்பது என்ன? அதனால் ஆதாயம் அடைபவர்கள் யார்? இந்திய மேலாதிக்கம் என்பது இந்திய மக்களுக்கோ, இந்திய அரசால் ஒடுக்கப்படும் தெற்காசிய நாடுகளின் மக்களுக்ககோ என்ன நன்மையைச் செய்யும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பிரணாப் முகர்ஜியோ சிவசங்கர் மேனனோ எப்போதுமே பதில் சொல்வதில்லை. அரூபமான இராணுவ அபாயங்களைக் காரணம் காட்டுவதன் மூலம் மேலாதிக்கத்தை அவர்கள் நியாயப்படுத்துக்கிறார்கள். அதையேதான் நெடுமாறனும் செய்கிறார்.

டாடா, பிர்லா, அம்பானி, இந்துஜா, மிட்டல் போன்ற எந்த இந்தியத் தரகு முதலாளிகளுக்காக இந்திய மக்களை இந்திய அரசு ஒடுக்குகிறதோ, அதே முதலாளிகளின் லாப வேட்டைக்கு சிறிய நாடுகளையும் உட்படுத்துவதுதான் மேலாதிக்கத்தின் நோக்கம். எளிமையாகச் சொன்னால், வங்கதேசத்தின் சணல் ஆலைகளை இந்தியத் தரகு முதலாளிகள் கைப்பற்றிக் கொண்டதும், நேபாளத்தின் மின் நிலையங்களையும், ஆற்றுநீரையும், தொழில்களையும் இந்தியா கட்டுப்படுத்துவதும்தான் மேலாதிக்கத்தின் நோக்கம். இதனைப் பாதுகாக்கும் நோக்கத்தை மறைப்பதற்குத்தான் பாதுகாப்பு அபாயம் என்ற புருடாக்கள். வாஜ்பாயியும் முஷாரப்பும் நடத்திய எக்ஸிபிஷன் மாட்ச் ஆன கார்கில் போரின் போது, இரண்டு பக்கமும் நூற்றுக்கணக்கான சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். ஆனால் குஜராத்தில் பாக் எல்லையில் இருக்கின்ற, 25,000 கோடி மதிப்பிலான அம்பானியின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது மட்டும் பாகிஸ்தான் ஒரு கல்லைக் கூட எறியவில்லை.

இராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்தது, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கா, குர்து மக்களுக்கு இன உரிமை வாங்கித்தருவதற்கா? இராக்கின் எண்ணெய் வயல்களை அமெரிக்க கம்பெனிகள் அபகரித்துக் கொள்வதற்குத்தான் அந்தப் போர் என்பது பாமரனும் அறிந்த உண்மை. சிறிய நாட்டின் மக்களுக்குச் சொந்தமான தொழில்களையும், இயற்கை வளங்களையும் பெரிய நாடு ஆக்கிரமித்துக் கொள்வதும், ஆதிக்கம் செய்வதும் நியாயம்தான் என்பதே நெடுமாறனின் வாதம். எனவேதான் இந்தியாவின் புவிசார் நலன்கள் என்றெல்லாம் சுற்றி வளைக்காமல், இந்திய மேலாதிக்கம் என்று பச்சையாகச் சொல்லியே அதனை ஆதரிக்கிறார். நெடுமாறன் முதலான தமிழ்த் தேசியவாதிகளும், தமிழக ஓட்டுக் கட்சிகளும் இந்திய மேலாதிக்கத்தை ஆதரிக்கும் மனோபாவத்தை ஈழத்தமிழ் மக்களுக்கும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். “நேபாளத்தை ஒடுக்குகிறாயா ஒடுக்கு, வங்கதேசத்தை சுரண்டுகிறாயா சுரண்டு, சிங்கள ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கு எங்களுக்கு மட்டும் உதவி செய்” என்று கேட்கும் அநீதிக்கும் அடிமைத்தனத்திற்கும் அவர்களைப் பழக்கியிருக்கிறார்கள்.

நெடுமாறன் கூறுகின்ற நியாயப்படி தனது பாதுகாப்புக்கு கியூபாவும், வெனிசூலாவும் அச்சுறுத்தலாக இருக்கின்றன என்ற அமெரிக்காவின் கவலையும், அதன் அடிப்படையில் அந்த நாடுகளில் அமெரிக்கா நடத்தும் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளும் நியாயமானவை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அயர்லாந்தை ஒடுக்கியதும் நியாயம். தற்போது நேபாளத்தில் இந்தியா நடத்தியிருக்கும் ஆட்சிக்கவிழ்ப்பும், வங்கதேசத்திலும், மாலத்தீவிலும் நடத்திய தலையீடுகளும், சிக்கிமை இணைத்துக் கொண்டதும் நியாயமே.

ஒரு சிறிய நாடு, பெரிய அண்டை நாட்டுடன் சம உரிமை கோர முடியாது. பெரிய நாடு என்பது ண்டை நாடல்ல, ண்டை நாடு என்று வலியுறுத்துகிறார் நெடுமாறன். இதே நியாயத்தைத் தான் ராஜபக்சேவும், ஜாதிய ஹெல உறுமயவும் தமிழர்களிடம் கூறுகிறார்கள். பெரிய இனத்துடன் சிறிய இனம் எப்படி சம உரிமை கோர முடியும் என்பதுதானே அவர்களது கேள்வி. அவர்கள் மட்டுமா? பெரும்பான்மை இந்துக்களுடன சிறுபான்மை முஸ்லீம்கள் எப்படி சம உரிமை கோர முடியும் என்று கேட்கிறார் மோடி. பெரும்பான்மை சாதி இந்துக்களுக்கு சிறுபான்மை தலித் எப்படி ஊராட்சித் தலைவராக வரமுடியும் என்று கூறித்தான் மேலவளவு முருகேசனை வெட்டினார்கள் தேவர் சாதி வெறியர்கள். “இந்திய மேலாதிக்கம் ஏமாந்துவிட்டதே” என்று பதறித்துடிக்கும் ஐயா நெடுமாறனின் உணர்வும், “சாதி ஆதிக்கம் சரிந்து விட்டதே” என்று குமுறும் ஆதிக்க சாதி ஆண்டையின் உணர்வும் எந்தவகையில் வேறுபட்டவை என்பதை தமிழ் உணர்வாளர்கள்தான் விளக்க வேண்டும்.

ஒருவேளை, நெடுமாறனின் ஆதரவு பெற்ற புரட்சித்தலைவி 40 தொகுதியிலும் வென்று தமிழ் ஈழத்தையும் வாங்கிக் கொடுத்திருந்தால் அதன்பின் இலங்கையில் என்ன நடக்ககக் கூடும்? ஈழத்தமிழர்கள் இந்தியாவின் அடிமைகளாகி இருப்பார்கள். சீனாவின் அடிமைகளாக சிங்களர்கள். அதன்பின் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நடக்கக் கூடிய பதிலிப்போரில், இந்திய மேலாதிக்கத்தைக் காப்பாற்றும் பொருட்டு, சீனக்கைக்கூலி சிங்கள அரசுக்கு எதிராக, ஈழத்தமிழ் அடிமைகள் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடத்தி தங்களைக் காவு கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.

வேறுவிதமாகச் சொன்னால், இன்று கருணாநிதி செய்த அதே வேலையை செய்யும் “அதிகாரம்’ பிரபாகரனுக்கு வழங்கப்பட்டிருக்கும். தமிழ் ஈழம் யாரிடம் ஆயுதம் வாங்குவது, தமிழ் ஈழத்தில் யார் ரோடு போடுவது, கடை போடுவது என்பனவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் டாடா, பிர்லா, அம்பானிக்குக் கிடைத்திருக்கும். “அத்தகைய பொன்னான வாய்ப்பை கெடுத்து விட்டாயே நாராயணா” என்று தலையிலடித்துக் கொள்கிறார் நெடுமாறன்.

முன்னர் சீனப்போரைக் காரணம் காட்டி திராவிட நாட்டை மூட்டை கட்டினார் அண்ணா. இன்று அதே சீனாவைக் காரணம் காட்டி ஈழத்தில் தனிநாடு வாங்கித்தரச் சொல்கிறார் நெடுமாறன். “திராவிடத்தால் வீழ்ந்தோம்! – திரவிட, திரமில, தமில, தமிழ – எனவே தனித் தமிழ்நாடுதான்” என்றெல்லாம் முழங்கி, 45 ஆண்டுகளுக்குப் பிறகு கடைசியாக சுற்றி வந்து சேர்ந்திருக்கும் இடம் சீரங்கம். எங்க சுத்தியும் ரெங்கனைச் சேவி! எல்லாம் பேசிவிட்டு கடைசியில் “சீன அபாயத்திலிருந்து பாரதத்தைக் காப்பாற்றும் விபீஷணாழ்வார்கள் ஈழத்தமிழர்கள்தான்” என்று பகவான் நாராயணனுக்கு அவதார ரகசியத்தைப் புரிய வைக்கிறார் நெடுமாற முனிவர்.

அமெரிக்க-இந்திய அணுசக்தி உடன்பாட்டின் விளைவாக விரிவடையப்போகும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்க வலிமை தனக்கு அச்சுறுத்தலாக மாறும் என்பதாலும், இந்து மாக்கடல் பகுதியில் தான் தனிமைப்பட்டுவிடக் கூடாது என்பதனாலும்தான் சீனா இலங்கை அரசுக்கு உதவுகிறது என்கிறார் நெடுமாறன்.

இந்து மாக்கடல் பகுதியில் அமெரிக்காவுக்கு என்ன வேலை என்ற கேள்வி மட்டும் அவருக்கு எழும்பவேயில்லை. தெற்காசியாவில் மேலாதிக்கம் செய்ய இயற்கையாகவே இந்தியா பெற்றுள்ள உரிமையை அங்கீகரிக்கும் அவருடைய ஆதிக்க சிந்தனை, உலகை மேலாதிக்கம் செய்வதற்கு இயற்கையாகவே அமெரிக்கா பெற்றுள்ள உரிமையையும் அங்கீகரிக்கத் தானே செய்யும்? புரியும்படி சொல்லவேண்டுமானால், தலித் மக்கள் மீது ஆதிக்கம் செய்வதைத் தங்களது பிறப்புரிமையாகக் கருத்தும் சாதி இந்துக்கள், பார்ப்பன மேலாண்மையை இயற்கையாகவே அங்கீகரிப்பது போலத்தான் இதுவும்.

சீனாவையும் ரசியாவையும், அந்நாடுகளின் கடல்வழிப் பாதைகளையும் உலக அளவில் முற்றுகையிட்டு வருகிறது அமெரிக்கா. அமெரிக்காவின் உலகப் போர்த்தந்திர வியூகத்தில் தெற்காசியாவின் அடியாளாக இந்தியா நியமிக்கப் பட்டிருக்கிறது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், இராணுவ ஒப்பந்தம் ஆகியவற்றின் நோக்கம் அதுதான். இதற்கு சீனா வகுத்திருக்கும் எதிர் வியூகம் இந்தியாவைச் சுற்றி வளைப்பது. சிங்கள இனவெறி அரசை ஆதரிப்பது மட்டுமல்ல,  பர்மாவின் இராணுவ ஆட்சியையும் சீனா ஆதரிக்கிறது. பிலிப்பைன்சில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மூலம் மலாக்கா நீரிணையை அமெரிக்கா கட்டுப்படுத்துவதால், அதற்கு மாற்றாக சீனாவிலிருந்து பர்மாவுக்கு 1300 கி.மீ நீள எண்ணெய் குழாயும் அமைக்கிறது. மேலை நாடுகளோ பர்மாவில் ஆங் சாங் சுயியை ஆதரிக்கின்றன.

இதுதான் ஆட்டம். அமெரிக்காவின் தற்போதைய உலக மேலாதிக்கத் திட்டம், அதற்குப் போட்டியாக சீனாவும் ரசியாவும் இணைந்து 2005 இல் உருவாக்கிய ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு, அதில் சேருமாறு ரசியாவும் சீனாவும் இந்தியாவை அழைத்த மறுகணமே நடைபெற்ற கண்டலிசா ரைஸின் டெல்லி விஜயம், அமெரிக்க இந்திய அணுசக்தி- இராணுவ ஒப்பந்தங்கள், அதன் தொடர்ச்சியாக ஜப்பானுடன் இணைந்து சீனக்கடற் பகுதியில் இந்திய கடற்படை நடத்திய கூட்டுப்பயிற்சி, தற்போது டாலர் மேலாதிக்கத்தை அசைக்க சீனாவும் ரசியாவும் மேற்கொள்ளும் முயற்சிகள்.. இவை பற்றி விரிவாக எழுதுவதற்கு இது இடமல்ல. ஆனால் சீனாவையும், இந்தியாவையும், பாகிஸ்தானையும், ரசியாவையும், கியூபாவையும், வெனிசூலாவையும் ராஜபக்சேவுக்கு ஆதரவாக அணிவகுக்கச் செய்த காரணிகளில் முக்கியமானவை இவை.

ஒரு இனப்படுகொலைக்குத் துணை நின்ற குற்றத்துக்காக  சீனாவையும் பாகிஸ்தானையும் நாம் கண்டிப்பதென்பது வேறு. இந்திய மேலாதிக்க நலனை நிலைநாட்டும் பொருட்டு சீனத்தை கண்டிப்பது என்பது வேறு. நெடுமாறனோ, இந்திய மேலாதிக்கத்தின் ராஜதந்திரம் தோற்றுவிட்டதற்காகக் கண்ணீர் விடுகிறார்.

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக நெடுமாறன் தமிழில் எழுதியிருக்கும் இந்தக் கருத்துகளை, இந்தியில் மொழிபெயர்த்தால் உடனே அதன் கீழே கையெழுத்துப் போட்டு தன்னுடைய சொந்த அறிக்கையாகவே வெளியிட்டுவிடுவார் அத்வானி. இதே கருத்துகளை அத்வானி இந்தியில் சொன்னால் அதன் பெயர் பார்ப்பன இந்து தேசியம். அதையே நெடுமாறன் தமிழில் சொல்லும்போது அதற்குப் பெயர் தமிழ்த் தேசியம்.

நெடுமாறனிடம் இயல்பாக வெளிப்படும் பாகிஸ்தான் எதிர்ப்பு உணர்வை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் ஒரு ராஜதந்திர ஆலோசகர் என்ற முறையில் சூழ்நிலையையும் அவர் புரிந்து கொள்ளவேண்டும். பாகிஸ்தான் எதிர்ப்பு தேசபக்தி சவடால்களை கொஞ்சகாலத்துக்கு நிறுத்தி வைக்குமாறும், பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்தியத் துருப்புகளை வாபஸ் பெறுமாறும் ஒபாமா மன்மோகனுக்கு உத்தரவிட்டு, இந்தியப் படையையும் வாபஸ் வாங்கியாகிவிட்டது. இதுபற்றி அத்வானி கூட சவுண்டு கிளப்பவில்லை என்பதை நெடுமாறன் கவனிக்கவேண்டும். அமெரிக்க ஆசியுடன் பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட தலிபானை ஒழிப்பதற்கான போரில் பாகிஸ்தானே இப்போது ஈடுபட்டிருக்கிறது – புலிகளை ஒழிப்பதற்கு இந்தியாவே போரில் ஈடுபட்டதைப் போல. தலிபானை முடித்த பின் சீனாவுக்கு எதிராக இந்தியாவையும் பாகிஸ்தானையும் “பாய்.. பாய்” சொல்லவைப்பது அமெரிக்காவின் திட்டம்.

“எனவே சீன எதிர்ப்பு இந்திய தேசியம்தான்” அமெரிக்காவின் இப்போதைய திட்டமாகத் தெரிகிறது. பாகிஸ்தான் எல்லையிலிருந்து ராணுவத்தை வாபஸ் வாங்கிய மன்மோகன் அரசு, படையை சீன எல்லைக்கு அனுப்பியிருக்கிறது. எனவே “இலங்கையின் மூலம் தென்னிந்தியாவுக்கு சீன அபாயம்” என்று நெடுமாறன் ஊதியிருக்கும் ‘தமிழ்ச்சங்கு’ டெல்லியின் காதில் விழுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

யார் கண்டது? “ரவிசங்கர் கொடுத்த சி.டியைப் பார்த்தேன். தமிழ் ஈழம்தான் தீர்வு” என்று ஜெயலலிதா சொல்வார் என்று யாராவது எதிர்பார்த்தார்களா என்ன? “சிவசங்கர் (மேனன் தான்) கொடுத்த சி.டியைப் பார்த்தேன். ஈழம்தான் தீர்வு” என்று நாளை மன்மோகனும் சொல்லக்கூடும். டாலர் ஆதிக்கத்துக்கு அபாயம் அதிகரிக்க அதிகரிக்க, தெற்காசியாவில் சீன அபாயமும் அதிகரிக்க வாய்ப்புண்டு. 5 வது ஈழப்போரை அமெரிக்காவின் ஆசியுடன் மீண்டும் ரா (RAW) ஸ்பான்சர் செய்வதற்கும் வாய்ப்புண்டு.

“தனி ஈழம் வாங்குவதற்காகத்தான் இந்திய மேலாதிக்கத்தை ஆதரிப்பது போல நடிக்கிறார்கள்” என்று ஐயா நெடுமாறனைப் பற்றித் தவறாகப் நினைத்துக் கொண்டிருந்த அயலுறவுத்துறை அதிகாரிகள், “இந்திய மேலாதிக்கத்தைக் காப்பாற்றும் பொருட்டுத்தான் நெடுமாறன் ஈழத்தை ஆதரித்திருக்கிறார்” என்ற உண்மையை காலம் கடந்தேனும் புரிந்து கொள்வார்களா பார்ப்போம். சம்பளத்துக்கு வேலை பார்க்கும் அதிகாரிகள் உண்மையான ராஜவிசுவாசிகளின் உணர்வை என்றைக்குப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?

என்ன செய்வது? பாகிஸ்தானை உடைத்த துர்க்காதேவி என்று வாஜ்பாயியால் புகழப்பட்டவரும், இந்திய மேலாதிக்கத்தின் அன்னையுமான இந்திராவின் உயிரைக் காப்பாற்றியதற்காகத்தான் ஐயா நெடுமாறனுக்கு “மாவீரன்” பட்டம் கிடைத்தது என்ற வரலாற்று உண்மை கூடத் தெரியாத மரமண்டைகள் டெல்லி அதிகாரவர்க்கத்தில் நிரம்பியிருக்கும்போது, உண்மையான ராஜ விசுவாசிகள் சந்தேகிக்கப் படுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

“அடிமையாக இருக்கிறேன் என்று தமிழன் ஆயிரம் முறை சொன்ன பிறகும் தமிழன் மீது நம்பிக்கை வைக்காமல், சிங்களனோடு சேர்ந்து கொண்டு தமிழினத்தைக் கருவறுத்திருக்கிறது இந்திய அரசு என்றால், அதற்குக் காரணம் ஆரியம் அன்றி வேறு என்ன?” என்று தமிழர் கண்ணோட்டம் இதழில் குமுறியிருக்கிறார் மணியரசன். நியாயம்தானே! “அடிமைச் சேவகம் செய்கிறேன்” என்று மன்றாடிய பிறகும் அந்த அடிமையின் விசுவாசத்தை மதிக்கவில்லை என்றால், அப்படிப்பட்ட ஆண்டைக்கு எதிராக விடுதலைப் போராட்டம் நடத்துவதைத் தவிர ஒரு அடிமைக்கு வேறு என்ன வழி இருக்கமுடியும்?

எனினும் மணியரசனைப் போல ஐயா நெடுமாறன் கோபப்படவில்லை. தினமணி கட்டுரையின் மூலம் டெல்லிக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ராஜவிசுவாசம் நிரம்பிய தமிழ்த் தேசியவாதிகளின் கையில் பொறுப்பை ஒப்படைப்பதன் மூலம் இந்திய தேசியத்தையும், மேலாதிக்கத்தையும் பாதுகாத்துக் கொள்வதா அல்லது தமிழ்த்தேசியவாதிகளின் ராஜவிசுவாசத்தை அலட்சியப் படுத்துவதன் மூலம் விடுதலைக்குப் போராடும் துர்ப்பாக்கிய நிலைக்கு அவர்களைத் தள்ளுவதா என்பதை டெல்லி ஆண்டைகள் முடிவு செய்தாக வேண்டும்.

எந்த நாட்டின் வரலாற்றிலும் ஆண்டை வர்க்கம் சந்தித்திருக்கவே முடியாத சவால் இது.

பின் குறிப்பு:

1. ஈழத்தின் இனப்படுகொலையை வழிகாட்டி இயக்கியது மட்டுமின்றி, இறுதி நாட்களில் புலிகள் இயக்கத் தலைவர்களை அடையாளம் கண்டு கொலை செய்வதற்கு சிங்கள இராணுவத்துடன் ரா அதிகாரிகளும் உடனிருந்தனராம். இந்திய அரசின் கொடூரம் குறித்து, நமக்கெல்லாம் தெரியாத ஏராளமான பல உண்மை விவரங்கள் ஐயா நெடுமாறனுக்குத் தெரிந்திருக்கக் கூடும். இந்திய தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்த, தேசிய கீதத்துக்கு விரைப்பாக நின்று கொண்டிருந்த பல வெவரங்கெட்ட தேசபக்தர்களுக்குக் கூட ஈழப்படுகொலைக்குப் பின்னால் ‘பக்தி’ போய்விட்டது. ஆனால் ரொம்பவும் வெவரமா ஐயாவுக்ககோ, தேச பக்தி மட்டுமல்ல, மேலாதிக்க வெறியும் ஒரு மில்லி கூட இறங்கவில்லை. குடிமகன் என்றால் இவரல்லவோ இந்தியக் குடிமகன்!

2. தினமணி கட்டுரையைப் படித்த தேசபக்தர் ஒருவர், “ஏங்க, ஐ.ஏ.எஸ் படிச்சவனைத்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரா நியமிக்கணுமா? இந்த மரமண்டை நாராயணனுக்குப் பதிலா நெடுமாறனை அந்த போஸ்ட்ல நியமிக்க கூடாதா என்ன?” என்று கேட்டார்.

எதிர்பாராத இந்தக் கேள்வியால் நான் திகைத்துப் போனேன். கலைஞர் தொலைக்காட்சியில் 23 ஆம் புலிகேசி ஓடிக்கொண்டிருந்த்து. “கககபோ” என்றார் வடிவேலு.

இதிக்கி மேலா நாஞ்சொல்றதுக்கு என்ன இருக்கி?
vote-012
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

  1. முந்தாநாள்தான் கேட்டேன் கொய்யா.பழ.நெடுமாறன பத்தி எதுவுமே வினவுல எழுதலன்னு…. god is double great … Tsri எங்கேய்யா போன…?

    • Muttalkale,

      Arasaiyal theervu kaanamal vittu vitu ippothu irupathayum ilandhuvitti nirpathu neengal alla, thamilarkal thaan….

      India ethirthaal China vandhu ungalai aakiramikum… Athuthaan inraya nilavaram….Unmay…

      • Ranil vikramasinge irundha pothu kootai vitinge.. arumaya inraiku arasiyal theervu kandu nimathiya irunthu irukalam…

        Appuram, Election boycott pannininga… ithu ellam antha kouppu edutha Rajapakse vuku help panni avan vandhu ippo ellarayum kolran….

        India ethirthaal China and pakistan kitta povan rajapakse….

        Ungalaal Tamilarkal chethaanga…. Come out of this foolishness and think for the future… I am an ardent Tamil Maniac.. But, what you have goofed up is that you have dug your own graveyard…..

        You killed Rajiv Gandhi as if you can easily threaten World and India… What you achieved is, you had India became enemy. Now you expect Sonia to bail you out…. Don’t you think you are foolish… When you take a decision, stick to it.. You know that Tamils’ future will be doomed and still continuing brainwashed…
        Do you know how many Kids were suicide bombers and what you have achieved…
        Look at Gandhi and see how he got the freedom.. Did you think he got the freedom easily.. But he got…

        what about you…. You lost people, all of your srilankans enjoying in europe and canada and sending money. How long you can sustain with this when China and paskistan is ready to fund against you just to keep India AWAY….
        You made this trap for yourself…. Now do not repent for the past… try to get India’s support and get your kids grow in their homeland…
        Be with Tamili nadu side and India side to have your future brighter…

        If you still think, you can install EELAM, you are a FOOLer.

        I am not telling because I am an Indian and Tamilian. But saying because, you have lost what you had during Ranil’s period…. You used that time to buy arms and come out of peace talk.. You irritate Norway… Now, you are reaping…

        Be optimistic and be clever… Don’t be aggresive… be prudent and steady… You will win…

        Nowadays no wars win… only wars of diplomatism win…

  2. ““தனி ஈழம் வாங்குவதற்காகத்தான் இந்திய மேலாதிக்கத்தை ஆதரிப்பது போல நடிக்கிறார்கள்” என்று ஐயா நெடுமாறனைப் பற்றித் தவறாகப் நினைத்துக் கொண்டிருந்த அயலுறவுத்துறை அதிகாரிகள், “இந்திய மேலாதிக்கத்தைக் காப்பாற்றும் பொருட்டுத்தான் நெடுமாறன் ஈழத்தை ஆதரித்திருக்கிறார்” என்ற உண்மையை காலம் கடந்தேனும் புரிந்து கொள்வார்களா பார்ப்போம்.”

    அட்டகாசம் போங்கள்.

    நான் இன்னும் இந்தியக் கொடிக்கு முழு மனதோடு சல்யூட் அடிக்கும் வெவரங்கெட்ட தேச பக்தன்தான் (உங்க மொழியில) . ஆனால் நெடுமாறன் திட்டு வாங்கும்போது நல்லாத்தான் இருக்கு.

  3. //“தனி ஈழம் வாங்குவதற்காகத்தான் இந்திய மேலாதிக்கத்தை ஆதரிப்பது போல நடிக்கிறார்கள்” என்று ஐயா நெடுமாறனைப் பற்றித் தவறாகப் நினைத்துக் கொண்டிருந்த அயலுறவுத்துறை அதிகாரிகள், “இந்திய மேலாதிக்கத்தைக் காப்பாற்றும் பொருட்டுத்தான் நெடுமாறன் ஈழத்தை ஆதரித்திருக்கிறார்” என்ற உண்மையை காலம் கடந்தேனும் புரிந்து கொள்வார்களா பார்ப்போம். சம்பளத்துக்கு வேலை பார்க்கும் அதிகாரிகள் உண்மையான ராஜவிசுவாசிகளின் உணர்வை என்றைக்குப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?//

    மிகச் சுருக்கமாக, மிகச் சரியாக

  4. ellorukkum enna pirachchanai thamilanai thalai nimira viduvathaai ennam illayaa? Punitha piravikalaana boraalikalin thiyakaththaalaum, makkaludaiya arppanippukkalaalum thamil thesiyam uruvakiyirukku athanai elutha theriyum enpathtkaaka thevai illathathai eluthy veenadikka vendaam thamilanin palveenam elloorum nallavarkalaaka kaaddikolvathil viruppam Aanaal silarthaan nalla ennankaludan seyatpadukirarkal. nanryudan anpan

  5. புலிகளின் அழிவிற்கான முக்கிய காரணங்களில் ஒன்று – கடைசிவரை இந்திய முதலாளித்துவ ஏகாதிபத்திய அரசிடம் பிச்சை கேட்டு நின்றதே ! ஆண்டன் பாலசிங்கம் சொன்னதுபோல புலிகள், மாறிவரும் உலகச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சீன ஏகாதிபத்திய அணியில் இணைந்து தங்களையும் மக்களையும் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம்.

    ஆனால், தங்களுடைய அரசியல் சூன்ய அறிவினாலும், பழநெடுமாறன் முதலிய பிழைப்புவாதிகளாலும் (ஆர்.எஸ்.எஸ். பழனிச்சாமிக்கு சாதனையாளர் விருது கொடுத்தவர் இவர் – இது பற்றிய கட்டுரை புதிய ஜனநாயக இதழில் வெளியாகியது) மூளைச் சலவைச் செய்யப்பட்டு, அநியாயமாக உயிரிழந்து இருக்கின்றார்கள் !!!

    இன்னும் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக புருடா விட்டு ஒட்டுமொத்த தமிழினத்தையே ஏமாற்றி வருகின்றார்.

    ஆண்டவா ! நீ இருப்பது உண்மையானால், பிரபாகரனுக்கு என்னதான் நடந்தது என்று தெளிவாகச் சொல் ! என கடவுளிடம் பிரார்த்தனைதான் செய்யவேண்டும் போலுள்ளது !!!

    • //ஆண்டன் பாலசிங்கம் சொன்னதுபோல புலிகள், மாறிவரும் உலகச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சீன ஏகாதிபத்திய அணியில் இணைந்து தங்களையும் மக்களையும் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம்//

      நம்பி,

      உங்களது கருத்து தவறு. சீனா மட்டுமல்ல அமெரிக்கா உட்பட எல்லா ஆதிக்க நாடுகளும் ஒரு போதும் தேசிய விடுதலைக்கு எதிரானவைதான். அல்லது தமக்கு ஆதாயம் கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் சில வரம்புகளுக்குட்பட்டு அந்த விடுதலை இயக்கங்களை ஆதரிக்கலாம். எனவே நமது அணுகுமுறை இந்த ஏகாதிபத்திய நாடுகளை எதிர்க்கும் அரசியிலில் உரம் பெற்றால்தான் நமது சொந்த விடுதலையை பெற முடியும். சில நாடுகளை லாபி வேலை செய்து நமக்கு ஆதரவாய் திருப்புவது என்பது முதலாளித்துவ அரசுகளுக்கு பொருந்தும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பொருந்தாது.

      நட்புடன்
      வினவு

  6. இந்தியாவின் அழிவில்தான் தமிழீழம் பிறக்க வழியுண்டு, அதற்கான ஆக்கபூர்வமான செயல்களில் இறங்குவோம்.

      • தமிழீழம் மட்டும் அல்ல. தமிழ் நாடு தனி நாடு அகவும்
        வழி கிடைக்கும்

      • அழிவில் என்ன தம்பி ஆக்க பூர்வம் வேண்டிக் கிடக்கிறது? கோவணத் துணி அளவு இலங்கையைப் பிரிக்கவே 30 வருடமாகப் போராடி ஒன்றும் நடக்கவில்லை. இனிமேல் இந்தியாவுடன் வாலாட்டப் போகிறீர்களா? உங்களைப் போல ரத்த வெறி பிடித்த ஒரு சிலறால்தான் தமிழினத்திற்குக் கெட்ட பேர்.

  7. தமிழ்த்தேசியவாதிகள் பேசவேண்டும். இப்படி மனம் திறந்து பேசவேண்டும். பேசினால் தான், . சிந்தனையில் இருப்பது குப்பை, விடுதலைக்கு எதிரான சிந்தனை கொண்டிருக்கிறார்கள் என அனைவரும் புரிந்து கொள்ளமுடிகிறது.
    இப்படி ராஜதந்திரமாய் சிந்திப்பதால்… இவர்களை பின் தொடர்பவர்களும்… விடுதலை போராட்டத்தை குறுக்கு வழியில் சாதிப்பதற்கான எல்லா வழிகளையும் பேசுகிறார்கள். இவர்கள் அம்பலப்பட வேண்டும். தமிழ்நாட்டில் ஈழப்போராட்டத்திற்கு ஒரு காட்பாதராக (!) நெடுமாறனை முன்னிறுத்துகிறார்கள். அவர் முதலில் அம்பலப்பட்டது மிக அருமை.

  8. அய்யா தப்பா புரிஞ்சுகிட்டீங்க,

    இந்திய ஆளும் வர்க்கங்களின் அழிவில்தான் ஈழம் மென்மேலும் வளரும் மாத்தி படிங்க

    ——————————————————————————

    வினவு அவர்களுக்கு,

    தயவு செய்து தங்களின் கட்டுரைகளை பதியும் போது எந்த நாள் என்பதனை பதிக்கவும், பிற்காலத்தில் கட்டுரைகளை படிப்போருக்கு அந்த காலத்தோடு பொருத்தி ஆராய சரியாக இருக்கும். மேலும் பிரிண்ட் எடுத்து வைக்கும் போது நாள் இருந்தால் தான் சரியாக இருக்கும்.

  9. I support the words of Brindan. But with a small correction – India should be destroyed – but when I say “india”, it denotes the current ruling class ie., the comprador capitalists & the feudal powers – not the common people – the working class people.

    Current ruling structure and the ruling class of India should be defeated & executed in front of the people and all national race in the India should be given the freedom to choose whether to be with India or go independent.

    Now is the time for all the Tamil people to realize the true face of “India”.

  10. தமிழன் பெயரை வைத்து பொறுக்கிதின்னும் இந்த தமிழ்தேசியக்கூட்டத்திற்கு கடைசி பிடிப்பு ஈழம் மட்டுமே. அதுவும் இல்லையெனில் இவர்கள் பொள்ளாச்சி மகாலிங்கத்திடம் பிச்சை எடுக்க வேண்டியதுதான்.. அதனாலேயே இவர்கள் புலிகள், ஈழத்தமிழ் மக்கள், புலம்பெயர் தமிழர்கள், தமிழக தமிழர்கள் என அனைவரையும் உசுப்பேற்றியே தனது அரசியல் ஓட்டான்டிதனத்தை மறைத்து வந்தனர். இவர்கள்தான் உண்மையிலேயே இத்தனை தமிழர்கள் இறந்து போனதற்கு காரணம். இவர்களை ஈழத்தமிழர்கள் தனிமைப்படுத்தி ஒதுக்க வேண்டும். அதுதான் தொடரும் போராட்டத்தின் சரியான திசைவழியின் முதல் படி.

  11. I think once he started speaking against the Chinese you guys got pissed off. Isnt it a bit hypocritical of you to only criticize the “India Tharagu Muthalali” but same time toeing a soft line on Chinese fascists dicatatorship. You guys know that it is mostly it is Chinese and Paki arms killed all the Tamils. But when did your organisation demonstrated agaisnt those countries. I know why one is a muslim country and the other is a so called Communist country. So you are being loyal to them even at the cost of Tamils blood. Atleast Nedumaran is pragamtic enough to acknowledge the strategic need for India to support LTTE. All you guys do is shout anti India and Anti US slogan eventhough entire world knows that Tamils are killed by the Pakis and Chinese. You have no guts to oppose them. Because those guys will hit back hard against you. But India is a soft state that lets you express your democractic rights. Shame on you Vinavu. I had some respect for you for spaking up for oppressed people. But all you guys are Chinese lapdogs that repeats his masters voice.

    • எச்சூச்மீ, நீங்க இவ்ளோ பீட்டர் உட்ரத்துக்கு மின்னாடி கொஞ்சமாச்சம் வெவரத்தோட பேசலாம்.. அதாவது வினவு, புதியஜனநாயகம், ம.க.இ.க காரங்க 25 வருசத்துக்கு மேலவே டமில் டேசியவாதிகல் மேல இந்த விமரிசனம்தான் வச்சிருக்காங்க… அப்ப எந்த பாகீஸதானும் சீனாவும் குண்டு போட்டிச்சு? உங்க கைய உட்டு ஈழம் பூட்சு அதனால நீங்க இப்ப உங்க பொயபுக்கு இந்தியாவ நக்கித்தான் ஆவனும் அதுக்கு எதுக்கு தெனமனில இம்மாம் பெரிய்ய கட்டுரை இங்க இங்கிலிபீசுல பின்னூட்டம்… டெஸ்டு டெஸ்டு…

  12. Test, Are you trying to act like an Idiot or are you really one. India along with China and Pakistan were at arms with the Lankan Govt. Infact Rajapakse declared that he has fought India’s war. And all this while these tamil nationalist were shouting mark my words shouting against India, but very carefully they did no protest or demo against the GOVT they used SONIA instead. Now that LTTE has become history they are showing their true color and wag their tails to THEIR MASTER while making idiots out of the people who rallied behind them… I am not a commie but these Tamil Nationalists SUCKS

  13. My main point is about the hypocrisy of the Vinavu group. I am not defending the Tamil Nationalists here. When anybody says anything agaist China/Pakis then Vinavu would be qucik to condemn them as fascists.While it has been well documented that Chinese and Pakis are directly responsible for thousands of Tamils death. Even then they did no protest against the Chinese or Pakis. Their involvment in the Eelam war is much more than any alleged Indian involvement. But this Vinavu people still don’t want to say anything about those countries. But they are shouting against India for all these days. If they really care about the Tamils then let them demonstrate agaisnt the Chinese fascists. Otherwise they are no diiferent from Karuna,Jaya,Ramadoss,N Ram, kumbal. Like them Vinavu also advancing their Anti India agenda over the Eelam Tamil dead bodies. Shame on you guys.

    • டெஸ்டு மணி, உன்னோட பிரச்சனை என்ன தெரியுமா, உனக்கு கம்யூனிஸ்டுங்கன்னா ஆவாது, எங்கள எதிர்த்து எழுத அன்னிக்கு முசுலீம், கிறித்துவ பேருல வந்த இப்ப தமிழ் வேஷம் போட்டிருக்க… சரி என்ன செய்ய நீ ஒரு தொடநடுங்கி 🙂

      உன்னோட கருத்து என்ன இந்தியாவுக்கு ஈழத்தமிழ் படுகொலைக்கும் சம்பந்தமே இல்லையா? ஈழப் பிரச்சனையில் வினவு இந்தியாவை எதிர்ந்த்து தவறா? அப்ப அத நேர சொல்லேன் மிஸ்டர் தொடநடுங்கி…

    • நண்பர்களே,

      ம.க.இ.க முதலான மார்க்சிய லெனினிய அமைப்புகள் 1980களிலேயே சீனாவை ஒரு அதிகாரவர்க்க முதலாளத்துவ நாடாக வரையறுத்திருக்கின்றன. அப்போது இந்த உண்மையை சொன்னதற்காக போலிக் கம்யூனிஸ்டுகள் எங்களை சி.ஐ.ஏவின் கைக்கூலிகள் என்று அவதூறு செய்தார்கள். இப்போதும் சீனாவை ஒரு கம்யூனிச நாடாக தமது அணிகளுக்கு ஃபிலிம் காட்டுவது வலது, இடது போலிக் கம்யூனிசக் கட்சிகள்தான். இந்த தவறை எங்கள்தவறாக திரிப்பது சரியல்ல. ஈழத்தில் நடந்த படுகொலைகளுக்கு சிங்கள அரசும், அதற்கு துணைநின்ற இந்திய மற்றும் சீனா இரண்டையும் நாம் கண்டிக்கிறோம். எமது வெளியீடுகளில் இது குறித்து விளக்கமாக இருக்கிறது. விரைவில் அதை வினவில் வெளியிடுவோம்.

      ஆனால் நாங்கள் சீனாவைக் கண்டிக்கவில்லை என்று சாமியாடுபவர்கள் எல்லாம் இந்தியாவின் பங்கை கண்டிக்க முன்வரவில்லை என்பதுதான் உண்மை. இதன்படி இந்தியாவின் மேலாதிக்க நலன்களுக்கு ஜே போடும் தேசபக்தர்கள் சீன எதிர்ப்பில் குளிர்காய்கிறார்கள் என்பதும் உண்மை.

      நட்புடன்
      வினவு

      • Thanks for your reply Vinavu. The gist of my argument is that China and Pakis are the main reason for the Ragapakse Govts brutal killing of the Eelam Tamils not India. China and Pakis provided them with intelligence, arms and political cover in UN. They also provided them financial supoort and now constructing a port in Srilanka for their exclusive use. Indias part on this war more of non interference when lot of Tamilians were killed. They just turn the otherway when civilians got killed. That is a wrong thing to do but Chinese were directly helping the Lankans to kill Tamils. So if you are going to fight against the oppressors you have to start with the worst oppersor that is China not India. But if anybody read your blogs in the last 6 months you hardly have any article critcal of China. But all your articles talks about the Indian oppression creating an illusion that India alone is responsible for this, But obviously China and Pakis who has more Tamilian blood on their hands. Your reply above is not convincing you are saying you exposed China in the 1980s but I am asking why you have not written anytghin in the last 6 months about the Chinese role in Lankan killing fields

        • இலங்கையில் நடந்த தமிழின அழிப்புப் போரில் இந்தியாவின் பங்கு குறைவானது என்று வாதிடுவது பூசணிக்காயை பருகைகயில் மறைக்கும் முயற்சி. இந்தியாவின் ரேடார்கள், மற்றைய ஆயுதங்கள், இந்திய அதிகாரிகள் நேரடியாக சென்று போரை வழிநடத்தியமை, சிங்கள வீரர்களுக்கு இந்தியாவில் எப்போதும் பயிற்சி கொடுப்புது, போரில் இந்திய வீரர்களே காயம்பட்ட செய்தி, கூடுதலாக வன்னி, முல்லைத் தீவு பற்றி வான்கோள் படம், உளவுத் துறை செய்திகள் என்று இந்தியாதான் இந்தப் போரை மறைமுகமாக நடத்தியது. அடுத்து இந்தியாவின் மேலாதிக்கப்போட்டியில் முரண்படும் சீனா, பாக்கிஸ்தான் நாடுகளை இலங்கை தனது போருக்காக நன்கு பயன்படுத்திக் கொண்டது. இதனால் இந்தியா ஆத்திரமுற்று இலங்கைக்கு உதவாமால் போய்விடவில்லை என்பதும் முக்கியம். மேலும் சுவிட்சர்லாந்து கொண்டு வந்த தீர்மானத்தை சீனா, பாக் மட்டுமல்ல இந்தியாவும் எதிர்த்து இலங்கைக்கு ஆதரவளித்தது. மேலும் இலங்கையில் உள்ள முதலீடுகளில் சீனா, பாக்கைவிட இந்திய முதலாளிகளின் முதலீடுகளே அதிகம். இப்படி உண்மை பட்டவர்த்தனமாக இருக்கும் போது உங்களைப் போன்று இந்தியாவின் மேலாதிக்கத்தை தேசபக்தி என்ற போரவையில் ஆதரிப்பவர்கள் சீனா, பாக் பூச்சாண்டியை வைத்து இந்தியாவின் வல்லரசு அநீதிகளை மறைப்பது வழக்கம். இந்தியாவில் இருக்கும் நாங்கள் ஈழமக்களுக்காக குரல் கொடுக்கும்போது இந்தியாவின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்துவதுதான் பிரதானமாய் இருக்கும். ஈழ விடுதலைக்கு பிரதானமான எதிரி இந்தியாதான். சீனா, பாக் எல்லாம் அப்புறம்தான்.

          வினவு

          • இந்தியாவின் ஈழ ஆதரவில்லா நிலைப்பாடில் புலிகளுக்குப் பெரும் பங்குண்டு என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா வினவு?

            80 களில் இந்தியா புலிகளுக்கு வழங்கிய ஆயுதப் பயிற்சிக்கு எதிரிகள் இலங்கையில் கால் வைத்து விடக் கூடாதென்ற பயம்தான் காரணம் என்ற கருத்து காலங்கடந்துதான் (in retrospect) முன் வைக்கப் பட்டுள்ளது. அன்று இருந்த நிலையில் தமிழர்கள் இலங்கையில் அல்லல் படுவது கண்டு தானாக பொங்கி எழுந்த இன உணர்வின் பிரதி பலிப்புதான் அந்தக் காலத்தில் நாம் கொடுத்த பணமும், ஆயுத உதவியும்.

            புலிகளுக்கும் இந்தியாவிற்கும் உறவு கசக்காமல் இருந்திருந்தால் ஈழத் தமிழர் விடுதலையில் இந்தியா தலையிடுவதற்கு எந்தத் தடையும் இருந்திருக்காது என்பது என் கருத்து.

            அறவழியில் நடக்கும் விடுதலைப் போர்களுக்கு (இந்திய விடுதலை, அமெரிக்காவில் கருப்பர் இன சம உரிமை, தென்னாப்பிரிக்க நிறவெறி அழிப்பு) வெற்றி நிச்சயம். ஈழமும் கத்தியின்றி ரத்தமின்று உருவாகும் என்று விரும்புவோம். அந்த ஈழத்தில் சாதி மத பொருளாதார வேறுபாடுகள் வாழும் நெறியினை பாதிக்காதிருக்கும் என்று நம்புவோம்.

            • வித்தகன்,

              உங்கள் கேள்விக்கான பதிலை ஏற்கனவே வினவில் எழுதியுள்ளோம். 80களில் இந்திரா காலத்தில் ஈழவிடுதலைக் குழுக்களுக்கு இந்தியா பயிற்சியும், ஆயுத உதவியும் அளிக்கக் காரணர் ஈழத்தமிழர்கள் தாக்கப்படுவது கண்டு பொங்கிய தமிழுணர்வு அல்ல. அன்று உலகம் சோவியத், அமெரிக்கா என இரு பெரும் வல்லரசுகளின் செல்வாக்கு மண்டலத்தில் பிரிந்திருந்தது. இதில் இலங்கை அமெரிக்க முகாமிலும், இந்தியா சோவியத் முகாமிலும் இருந்தன. இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளை வல்லரசு செல்வாக்கில் அடக்கி வைக்கும் முகமாக இலங்கையில் ஈழப்பிரச்சினையை முன்வைத்து தலையிடுவதற்கு இந்தியா முன்வந்தது. போராளிக் குழுக்களுக்கு உதவியதன் மூலம் இந்தியாவின் நோக்கம் அதாவது இலங்கையை பணியவைப்பது நடந்தது. இதுதான் பின்னர் ராஜீவ் காலத்தில் இந்தியப் படை ஈழத்தில் புகுந்து ஆக்கிரமிப்பு செய்யும் நிலை வரை சென்றது. எனவே இலங்கையில் இந்தியா அன்றும் இன்றும் என்றும் தலையிடுவதற்கு காரணம் அண்டை நாடுகளை தனது செல்வாக்கில் வைத்து சந்தையை தனது முதலாளிகளுக்கு திறந்து விடுவதே பிரதானம். புலிகளுக்கும் இந்தியாவுக்கும் உறவு கசப்பதும் இனிப்பதும் இந்தியாவின் இந்த அணுகுமுறையை வைத்தே தீர்மானிக்கப்படும். இங்கு இலங்கை அரசியல் ரீதீயில் பிரியாமல் ஒன்றாக இருப்பதே இந்திய முதலாளிகளுக்கு ஆதாயம் என்பதால் புலிகள் மட்டுமல்ல வேறு எந்த இயக்கம் இருந்தாலும் ஈழப்பிரச்சினைக்கு ஆதரவாக இந்தியா இருக்காது.

              அடுத்து ஈழப்போராட்டம் பின்னடைவுக்குள்ளானதை வைத்தே ஆயுதப் போராட்டம் தவறு அறவழியிலான போராட்டம் சரி என்று முடிவுக்கு வருவதும் சரியல்ல. சொல்லப் போனால் இந்த உலகில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் எல்லாம் ஆயுதப் போராட்டத்தை வைத்தே வென்றிருக்கிறது. இதைப் பற்றி வினவில் தனியாக எழுதுகிறோம்.

              நட்புடன்
              வினவு

  14. Mr. Half ticket
    I am not going to get sucked in to mud with you by calling you names. If you stop calling names we can have a civil discussion. You are right I don’t agree with the communist manifesto. But I do believe that you are the only people who are idealist in this cynical political environment in India. I really learned a lot about the oppressed class and their problems from your site and got a entirely different prospective on many different issues including Eelam. It was an eye opener for me I have to thank you guys for that. I liked your consistent stand on Eeelam of opposing the LTTE while supporting the Eelam Tamils. But you disappoint me now with this article it looks and your refusal to take the stand against the Chinese and Pakis. In my mind they are main reasons for this war than India. So that is why I wanted to point out your inconsistent stand on this issue. Regardless you guys are doing a good job eventhough I am what you might call a capitalist pig and supporter of right leaning policies.

    P.S Mr Half I am not TamilMani or what you might call Parpana Mani but I did read his blogs.

    • //I am not TamilMani or what you might call Parpana Mani but I did read his blogs.// நான் கேட்டேனா… நீயே எதுக்கு வந்து மை டாடி நாட் இன் ஹே ஸ்டாக்குன்னு பீட்டர….. உனக்கு இந்த வேஷம் நல்லால கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்!

      • //நான் கேட்டேனா… நீயே எதுக்கு வந்து மை டாடி நாட் இன் ஹே ஸ்டாக்குன்னு பீட்டர….. உனக்கு இந்த வேஷம் நல்லால கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்!//

        சூப்பரு நாக் அவுட்டு…

    • தோடா,
      என்ன கதை ரொம்ப பழசாகீதே!
      நீ என்னா வைகோ ஆளா?
      அவரு மாறியே சவுண்டு வுட்ற

  15. உங்களின் இந்த கட்டுரை முழுதும் ஒரு சரியான உலறள். உலக நடப்புகள் அறியாத அப்பாவி தமிழர்களின் மனங்களை வசியப்படுத்த முயற்சிக்கும் ஒரு மாயாஜாலம். பழ.நெடுமாறனின் பறந்த விரிந்த பார்வைகள் ஆய்வுகள் கணிப்புகள் அனைத்தும் அறிவு கூர்மை உடயவை. ஒருவர் தன் சமுதாயத்திற்கு இப்போது புதிதாக தலைக்கு வந்திருக்கும் ஆபத்தை விவரித்து பொது சனங்களை எச்சரிப்பது என்பது நாடு மற்றும் இன உணர்வுள்ள எந்த ஒரு சாதாரண குடிமகனுடைய கடமையே. இதைத்தான் செய்திருக்கிறர் பழ. நெடுமாறன்.

    உங்களை போன்றவர்களுக்கு பழ. நெடுமாறன் போன்ற ஒரு எளிய‌ தமிழர் இந்த அளவிற்கு உலக அறிவு ஆய்வுகள் செய்யும் திறன் பெற்றிருப்பதைவிட எதற்கும் உபயோகமற்ற மண்பொம்மையாக அடிமை வாழ்க்கை வாழ்பவர்களாக‌ சதா தன் இழிவாழ்க்கை நிலையை கூறி ஒப்பாரி வைக்கும் குண்ட சட்டியில் குதிரை ஓட்டும் தமிழராக இருப்பதையே விரும்புவர்கள்.

    இதை எழுதும் நான் ஒரு பார்ப்பனனும் இல்லை சாதி இந்தும் இல்லை. ஒரு சாதாரண தலித் இனத்தை சார்ந்த‌வனே. இனியும் உங்களை போன்றவர்களின் உல்டா கட்டுரைகளை படித்து இந்திய இறையாண்மையில் நம்பிக்கை உள்ள எந்த ஒரு தமிழனும் ஏமாற மாட்டான்.

    இன்னும் சொல்லப்போனால் உங்களை போன்றவர்களைத்தான் சீன பாக்கிஸ்தான் உளவு நிறுவனங்கள் இந்தியாவினுள் குழப்பம் விளைவிக்க தங்கள் உளவு கைகூலிகளாக்க தேடிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியாக கொஞ்சம் பணமாவது சம்பாதிப்பீர்.

    • ஐயா நீங்கள் சொல்வதை பார்த்தால் பழ.நெடுமாறன் இந்திய உளவுத்துறையிடம் காசு வாங்கிவிட்டு தனது தமிழ் தேசிய கொள்கைகளை கைவிட்டுவிட்டு திணமனியில் இந்திய தேசியத்தை உயர்த்திப்ப்பிடிக்கின்றாரோ என ஐயம் எழுகிறது. அப்போ அவர் நல்லவரா கெட்டவரா?? தெரியலியேப்பா 🙁

      • இந்தியாவுக்கு அதிலும் முக்கியமாக தமிழர்கள் வாழும் தென்னிந்தியாவுக்கு இப்போது புதிதாக தலைக்கு வந்திருக்கும் ஆபத்தை விவரித்து பொது சனங்களை எச்சரிப்பது என்பது நாடு மற்றும் இன உணர்வுள்ள எந்த ஒரு சாதாரண குடிமகனுடைய கடமையே. இதைத்தான் செய்திருக்கிறர் பழ. நெடுமாறன். இதற்குள் “ரா”வை வம்புக்கு இழுப்பது வீண்வேலையே.

    • Marx,

      நன்றி. நான் சொல்ல நினைத்த‌தை நீங்கள் சொல்லி இருக்கிறீரகள். வினவு வரவர இவர்களை கேட்டுத்தான் மற்றவர்கள் கருத்து சொல்லவேண்டுமோ என்று என்னைப்போன்றவர்களை நினைக்கத்தூண்டுமளவுக்கு எல்லோரையும் திட்டி தீர்க்கிறார்கள்.

      என்னைப் பொறுத்தவரை ஐயா நெடுமாறன் மிகவும் ஆழ்ந்த அரசியல் அறிவு, அனுபவம், பொறுமையுள்ள ஒருவர். அவர் சொன்னதில் ஏதும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

      வினவு போன்றவர்கள் இப்படி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் எல்லோரையும் குறைசொல்லி, திட்டிக்கொண்டிருந்தால் எங்களுக்கு (நான் ஒரு ஈழத்தமிழ்) குரல் கொடுக்க இறுதியில் யாருமே தமிழ்நாட்டில் முன்வர‌மாட்டார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது.

      • ரதி

        நீங்கள் மட்டுமல்ல பல ஈழத்தமிழர்களும் அப்பாவிகளாய் இருக்கிறீர்கள். அறிவு, அனுபவம், பொறுமையுள்ள ஐயா நெடுமாறன் தினமணியில் எழுதிய கட்டுரையில் தெளிவாக என்ன சொல்கிறார் எனில் இலங்கை விசயத்தில் சீனா வெற்றி பெற்று விட்டது, இந்தியா தோற்று விட்டது என வருத்தப்படுகிறார். இதன் படி இந்தியா இலங்கை ராஜதந்திரத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டுமெனில் என்ன செய்திருக்க வேண்டும்? அதாவது சீனா, பாக்கிஸ்தானை விட இன்னும் அதிக ஆயுதங்கள் கொடுத்திருந்தால் சிங்கள அரசு சீனாவைக் கடாசி விட்டு இந்தியாவுக்கு ஜே போட்டிருக்கும். இதைத்தான் நாம் விரும்புகிறோமா தோழியே?

        அடுத்து இன்னோரு கோணம் இருக்கிறது. அதாவது இந்தியா புலிகளுக்கு பகிரங்க ஆதரவு, ஆயுதங்கள் கொடுத்தால் சிங்கள அரசு பயந்து கொண்டு இந்தியாவை ஆதரிக்கும் என்றும் நெடுமாறன் வாதிடலாம். இது நடந்தால் என்ன நடக்கும்? சிங்கள அரசு வெளிப்படையாக சீனாவை ஆதரித்து ஆயுதங்கள் பெறும். அப்புறம் ஈழம் இந்திய ஆயுதங்களுடனும், சிங்களம், சீனா ஆயுதங்களுடனும் காலம் காலமாய் மோதிக் கொண்டிருக்க வேண்டும். அப்போதும் இந்தியாவின் ராஜதந்திரம் நெடுமாறன் நினைப்பது போல வெல்லப் போவதில்லை.

        இதிலிருந்து நாம் தெளிவடையவேண்டியது என்னவென்றால் சீனா, இந்தியா இரண்டு மேலாதிக்கங்களையும் நாம் எதிர்க்கவேண்டும். அதை விடுத்து நெடுமாறன் சொல்வது போல இந்திய மேலாதிக்கம் வென்றால் அது அண்டையில் உள்ள எல்லா சின்ன நாடுகளுக்கும் மக்களுக்கும் கெட்ட காலம்தான்.

        ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் எல்லோரையும் குறை சொல்லுவதாக நீங்கள் சொல்வது எப்படி என நீருபிக்க முடியுமா? ஈழத்தின் பெயரால் தமது சொந்த அரசியல் ஆதாயத்தை அள்ளத்துடிக்கும் அரசியல் வாதிகள் உண்மையில் ஈழத்திற்கு எதிரானவர்கள்தான். அவர்களைத்தான் வினவு அம்பலப்படுத்துகிறது.

        நட்புடன்
        வினவு

      • அப்படியா?

        அய்யாதான் முதன் முதலில் ஈழத்திலே இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள் என குரல் கொடுத்தவர், தமிழர் தேசியப்பிரச்சினையை இந்துமதப்பிரச்சினையாக மாற்றி சுகம் கண்டவர், பாசிச செயாவை ஈழத்தாயாக்கியதில் முக்கிய பங்கு அய்யாவுக்கு உண்டு.
        ரதி எனக்கொரு சந்தேகம்,
        இந்தியாதான் ஈழப்போராளிகளை கொல்வதற்கு திட்டம் வகுத்துக்கொடுத்து,தனது மேலாதிக்க நலனுக்கு போரை நடத்தியது என தெரியுமா தெரியாதா? இந்தியாவின் மேலாதிக்கத்தை எதிர்க்காத ஈழவிடுதலையை நெடுமாறன் வாங்கித்தருவார் என நம்புகிறீர்களா? இந்திய தேசிய மேலாதிக்கத்தை எதிர்க்காது உண்மையான விடுதலை சாத்தியமே இல்லை.அப்படி பூச்சாண்டி காட்டி ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்பவரை என்ன செய்ய வேண்டும்? நீங்களே சொல்லுங்கள்.

      • வினவு,

        நான் இன்னும் தொடர்ந்து உங்கள் தளத்தில் பின்னூட்டம் இடுகிறேன் என்றால், அது நீங்கள் புலிகளின் போராட்ட முறைகளை எதிர்த்தாலும், ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்புவதால் அதற்காக குரல் கொடுப்பதால் தான்.

        நான் சொல்வது, நீங்கள் எப்படி உங்கள் பார்வையில் ஒரு விடயத்தை அலசுகிறீர்களோ அதே போல் தான் ஐயா நெடுமாறன் அவர்களும் தன் பார்வையில் ஒரு விடயத்தை அலசுகிறார் என்பதுதான். நான் படித்து தெரிந்து கொண்டதிலிருந்து, ஐயா நெடுமாறன் இந்திரகாந்தி காலத்திலிருந்தே ஈழத்தமிழர் விடயத்தில் ஈடுபாடு கொண்டவர்.
        இந்திரா காந்தி எப்படி சிங்கள அரசை இந்தியாவை மீறி ஈழத்தமிழர்கள் விடயத்தில் ஒரு முடிவு எடுக்க முடியாமல் தடுத்தாரோ; எப்படி சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் தலையீட்டை தடுத்தாரோ அப்படி ஒரு நிலையை தற்கால இந்தியா கொண்டிருக்கவில்லை என்பது தான் ஐயா நெடுமாறனின் கருத்து எனபது என் புரிதல். ஆனால், இந்திரா காந்தி கூட ஈழவிடுதலை இயக்கங்களை பிராந்திய ரவுடிகளாய் உருவாக்க நினைத்தார் என்பது தான் உண்மை. அதெல்லாம் பழையகதை.

        தற்காலத்தில், நீங்கள் சொல்வது போல இந்திய மேலான்மைக்கு ஐயா பழ நெடுமாறன் துணை போகிறார் என்பதெல்லாம் உங்கள் பார்வை. ஒரு வேளை ஈழத்தமிழரை ஆதரித்தாலும் தானும் ஒரு இந்தியன் என்ற உணர்வா? அதை ஒருவேளை நீங்கள் இந்திய மேலான்மைக்கு துணை போவதாக நினைக்கிறீர்களா?

        என்னைப்பொறுத்தவரை வினவு, ஐயா நெடுமாறன், வைகோ, சீமான், மற்றும் தமிழக உறவுகள் எல்லோருமே எங்களுக்காக குரல் கொடுப்பவர்கள். எல்லோருமே தமிழ்நாட்டு உறவுகள். இதைத்தான் நாங்கள் “அப்பாவிகளாய்” இருக்கிறோம் என்று நீங்கள் நினைத்தால், அது உண்மைதான்.

        //இதைத்தான் ஈழத்தின் பெயரால் தமது சொந்த அரசியல் ஆதாயத்தை அள்ளத்துடிக்கும் அரசியல் வாதிகள் உண்மையில் ஈழத்திற்கு எதிரானவர்கள்தான். அவர்களைத்தான் வினவு அம்பலப்படுத்துகிறது//

        அப்படிப்பட்டவர்களை அம்பலப்படுத்துங்கள். அது நல்ல விடயம் தானே.

        //இன்னும் சொல்லப்போனால் உங்களை போன்றவர்களைத்தான் சீன பாக்கிஸ்தான் உளவு நிறுவனங்கள் இந்தியாவினுள் குழப்பம் விளைவிக்க தங்கள் உளவு கைகூலிகளாக்க தேடிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியாக கொஞ்சம் பணமாவது சம்பாதிப்பீர்.//

        மார்க்ஸ் சொன்ன இந்த கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை. நான் ஐயா பழ நெடுமாறன் பற்றி சொன்னதற்குத்தான் என் ஆதரவை சொன்னேன். உங்கள் மீது இப்படி ஒரு பழியை நான் சுமத்தவில்லை.

        //ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் எல்லோரையும் குறை சொல்லுவதாக நீங்கள் சொல்வது எப்படி என நீருபிக்க முடியுமா? //

        நீங்கள் யாரையாவது விமர்சிக்கும் போது அவர்க‌ள் செய்த நல்ல விடயங்களையும் சேர்த்து சொன்னால் எங்களுக்கும் (ஈழத்தமிழர்களுக்கு) ஒருவருடைய செய்கைகளை சீர்தூக்கி பார்த்து அவரை ஈழதமிழர் விடயத்தில் யாரென்று அடையாளம் காண வசதியாக இருக்கும். உங்களிடம் என‌க்குள்ள ஒரு முரண்பாடு எப்படி எல்லாவற்றிற்கும் பார்ப்பனியம் என்று பொதுவாக ஒரு சமூகத்தை ஒட்டுமொத்தமாக குறை சொலிகிறீர்களோ, அதே போல் ஐயா நெடுமாறன், சிமான் போன்றோர்களின் குறைகளை மட்டும் சொல்கிறீர்கள். ஏன் அவர்கள் ஈழத்தமிழர்களுக்காக எந்த ஒரு நல்ல விடயமுமே செய்த‌ததில்லையா? ஒருவருடைய குறைகளை மட்டுமே மற்றவர் எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தால், எப்படி அதை படிப்பவருக்கு சொல்பவர் மீது ஒரு நம்பகத்தன்மை வரும்?

        கலகம்,

        //இந்திய தேசிய மேலாதிக்கத்தை எதிர்க்காது உண்மையான விடுதலை சாத்தியமே இல்லை.//

        இது உங்களுக்கான பதில். தமிழ்நாட்டு தமிழர்கள், ஈழத்தமிழர்களுக்கு ஒரு வரம் என்றால் இந்தியா அதன் போலியான இறையாண்மை, அர‌சியல்வாதிகள், கொள்கைவகுப்பாளர்கள் எங்களுக்கு சாபங்கள். ஈழத்தமிழ்ர்கள் விடயத்தில் இந்தியா பற்றிய என் கருத்துகளை நிறையவே பதிந்திருக்கிறேன். என் கோபம் எல்லாம் எந்தவொரு இந்திய அப்பாவி பிரஜை மீதுமில்லை. அதை புரிந்து கொள்ளுங்கள்.

        நான் அடிக்கடி நினைப்பதுண்டு, இலங்கை இந்தியாவுக்கு பக்கத்தில் இல்லாமல் இருந்திருந்தால் எங்களுக்கு எப்போதோ விடுதலை கிடைத்திருக்கும். இதுதான் என் இந்தியா பற்றிய கருத்து. இதை தவிர வேறு என்ன சொலவது என்று எனக்கு தெரியவில்லை.

        நட்புடன்,

        ரதி.

    • பழ. நெடுமாறன் புலன் பெயர்ந்த புலித்தமிழர் அள்ளிக் கொடுக்கும் டாலர்களுக்காக அரசியல் நடத்தும் கோமாளி. கொடுக்கும் பணத்திற்கு கணக்கு காட்ட வேண்டாமா? அடுத்த தேசியத் தலைவர் நெடுமாறன் ஐயா தான்.

      //
      எம் தலைவன் சாகாவரம் பெற்றவன். கே.பி எல்லாம் துரோகிகள். நானும் என் தளபதி வீரப்புயல் வைகோ, சீறும் சிஙகம் சீமான். புலனாய்வு புயல் ராமதசு, அரசியல் சிறுததை திறுமாவளவு மற்றும் பலரின் ஆக்கத்தில் ஏக்கத்தில் 5ஆம் ஈளப்போர் தொடஙக்வுள்ளோம். விரைவில் உலகம் எஙகும் உஙள் அபிமான நகரஙகளில் :உண்டியலுடன் உலா:

      அன்புடன்

      றொம்ப பள நெடுமாறன்//

  16. பழ.நெடுமாறன் – நீங்க போய் இப்படி எழுதலாமா?…

    ஐயா பழ.நெடுமாறன் புலிகள் இயக்கத்தின் ஆலோசகர். புலம் பெயர் தமிழர்கள் பலரின் மதிப்புக்கு உரியவர். ஈழத்தமிழர்க்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் எனப் போற்றப்படுபவர். நேற்றைய தினமணி நாளிதழில் “தோற்றது இந்தியாவின் ராஜதந்திரம்தான்’ என்ற தலைப்பில் ஒரு …

  17. பின்னுாட்டங்களில் பல உருப்படி இல்லாத வசவுகளைத்தான் பார்க்க முடிகிறது.. நீ அவன் கைகூலி என்றால் வேறு ஒருவர் நீ இவன் கைகூலி என்கிறார்கள்… ஒரு நியாயமான அறிவு சார்ந்த வாதத்திற்கு பின்னுாட்டவாதிகள் வரவேண்டும்

  18. இந்தியாவோ, ராஜபக்சாவோ எவனோ ஒருத்தனுக்கு கைக்கூலியாக இருக்கிறது தானே புலிப் பக்தர்களின் லட்சியம். இது தெரியாதா? We want Tamileelam. Our leader Pirabakaran. Our master India.

  19. //வாஜ்பாயியும் முஷாரப்பும் நடத்திய எக்ஸிபிஷன் மாட்ச் ஆன கார்கில் போரின் போது, இரண்டு பக்கமும் நூற்றுக்கணக்கான சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். ஆனால் குஜராத்தில் பாக் எல்லையில் இருக்கின்ற, 25,000 கோடி மதிப்பிலான அம்பானியின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது மட்டும் பாகிஸ்தான் ஒரு கல்லைக் கூட எறியவில்லை.///

    too simplistic and not correct. KArgil war was a localised conflict with Pakistani irreuglars and army trying to block an important highway. No one in Pak army high command risked expanding that war into other zones, esp Gujarath or Rajasthan. hence the conflict was localised. nothing to do with Ambani’s Jamnagar refinery complex.

    other wise the main points of this article are valid enough. real free market philosohpy is always synonymous with liberal democratic principles and against any form of imperialism or domination through coercion or power. usually those methods come under fasicism, etc. and even if India is weak in military power and has no worthwhile reach in Indian ocean, it doen;t matter after the end of cold war. What matters is economic prosperity and reduction of poverty of the people. Japan is “protected” by US since 1945 and was able to spend very very little for its defence, etc. Hence it could diveret most of its resources into building its economy and is now a prosperous and second largest economy of the world. Japs have not much of a navy or “power” around their islands, doesn;t matter. those who were brought up in the colonial and cold war era still occupy important postions in many many nations of the world. and they try to play the old power games at enormous cost to the people. totally useless and unwanted. In future Indian capitalists will be automativally invited to invest within North Sri Lanka and other parts if they can bring in good technology and capital. simply because China is more “friendly” with SL will not win it better contracts. all business deals usually are based on merits of the companies, etc and profitablity and other factors. but this is little understood by the power mongers. Indian ONGC Videsh already has a huge investment in SL and will expand in future. same with many other Indian transnationals, with or without Chinese / Indian power games. and all these FD investments will certainly bring in prosperity, employment, tax revenue to SL and will trickle down to the common people in the long run. as it has been proved elsewhere, esp around Chennai after 1991. see the scene around Chennai : from Sriperubudur thru Oragadam to Chengalpetty belt. compared to 1990, that area is now a major hub of hundreds of MNCs, employing lacs of workers, paying good salary and taxes
    and the ripple effect has created millions of extra jobs and industries down stream. Chennai employment scene was never this good in the past…

  20. //வாஜ்பாயியும் முஷாரப்பும் நடத்திய எக்ஸிபிஷன் மாட்ச் ஆன கார்கில் போரின் போது, இரண்டு பக்கமும் நூற்றுக்கணக்கான சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். ஆனால் குஜராத்தில் பாக் எல்லையில் இருக்கின்ற, 25,000 கோடி மதிப்பிலான அம்பானியின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது மட்டும் பாகிஸ்தான் ஒரு கல்லைக் கூட எறியவில்லை.//

    too simplistic and wrong arguemnt. Kargil conflict was localised and Pak high command did not want to risk expanding the war to any other zone, incl Gujarath or Rajasthan. nothing to do with RIL or Ambanis, etc.

    and with or without Chinese domination, Indian MNCs will certainly get chances to invest in SL in future. ONGC aleady has a presence there. power politcs is for the old cold war era fascists and certainly not in tune with liberal democracy and free markets.

    Future MNC investments into SL will bring in prosperity, tax revenue and employment and certainly will help in reducing poverty and unemployment there, prime example is the change is the Chennai scene after 1991. 100s of manufacturing cos, MNCs have set up excellent facitlites around Oragadam, Sriperumbudur to Chengalpatty and millions of new jobs, tax revenue for govt and secodary and ancillary industries are growing.

  21. கருத்து கூறுபவர்கள் தயவுசெய்து தமிழில் பின்னூட்டமிடவும். நன்றி

  22. தமிழ் தேசியம் பேசி புரட்சிகரமானவர்களாக காட்டிக்கொள்ளும் நெடுமாறன் போன்றவர்கள் ஏகாதியபத்தியத்திற்கும் அதிகாரவர்க்கத்திற்கும் சேவை செய்பவர்கள் அல்லது அதன் கருவிகள். இவர்கள் திட்டமிட்டு வளர்த்தபட்டவர்கள் , புரட்சிகர தலைமையாக காட்டிக்கொண்டு அதன் மூலம் முற்போக்கு சிந்தனைகள் , புரட்சிகர ஆர்வம் உள்ள சக்திகளை திரட்டி அவர்களை மடைமாற்றம் செய்து அவர்களை நீர்த்து போக செய்து ஏகாதிபத்திய கை கூலிகளாக மாற்றும் வேலையை மிகவும் திறன்பட செய்து முடிக்கிறார்கள் இந்த தமிழ் தேசியம் பேசுபவர்கள்.எவ்வளவு புரட்சிகரமாக பேசினாலும் கம்யூனிசத்தை பற்றி பேசமாட்டார்கள் ஆனால் அவதூறு கிளப்புவார்கள் இந்த இடத்தில் இவர்கள் யாருடைய பங்காளிகள் என்று தெளிவாக தெரிகிறது. இரத்தின சுருக்கமாக சொன்னால் ‘இவர்கள் கம்யூனிசத்தை , மக்கள் அதிகாரத்தை ஒழித்துகட்ட துடிக்கும் அதிகாரவர்க்கத்தின் ஒரு பிரிவினர் (புல்லுருவிகள்) ‘

  23. வாங்க வலது அதியமான் !

    //too simplistic and wrong arguemnt. Kargil conflict was localised and Pak high command did not want to risk expanding the war to any other zone, incl Gujarath or Rajasthan. nothing to do with RIL or Ambanis, etc.//

    அசுரன் -கிட்ட வாங்கி கட்டிக்கிட்டப் பின்பு, ரொம்ப நாள் கழித்து இப்போதுதான் பார்க்கிறோம். அதான் கார்கில் தவிர மற்ற இடங்களின் மீது பாக். இராணுவம் தாக்கவில்லை என்று, பதிவில் சொல்லப்பட்டிருக்கிறதே ! அம்பானி வகையறாக்களைத் தாக்காதற்கு காரணத்தைச் சொல்லும் ! என்ன ‘ரிஸ்க்’ ரஸ்க் என்று சொல்லும் !

    // and with or without Chinese domination, Indian MNCs will certainly get chances to invest in SL in future. ONGC aleady has a presence there. power politcs is for the old cold war era fascists and certainly not in tune with liberal democracy and free markets. //

    பார்த்திங்களா ! கொண்டை வெளியே வந்துவிட்டது !. உங்க ஓற்றைத்துருவ லிபரல்களும், டெமாக்கரசிகளும் செய்த கொலைகள் தானே முள்ளிவாய்க்காலிலும், இப்போது வதை முகாம்களிலும் நடக்கின்றன. இப்போது சொல்லுங்கள் பாசிஸ்ட்டுகள் யார் என்று ?

    // Future MNC investments into SL will bring in prosperity, tax revenue and employment and certainly will help in reducing poverty and unemployment there, prime example is the change is the Chennai scene after 1991. 100s of manufacturing cos, MNCs have set up excellent facitlites around Oragadam, Sriperumbudur to Chengalpatty and millions of new jobs, tax revenue for govt and secodary and ancillary industries are growing.//
    //

    தமிழனைக் கொலைப்பண்ணிவிட்டு, இயற்கை கொஞ்சும் தமிழீழத்தை சுற்றுலா மூலமாக, டேக்ஸ், எம்பிளாய்மெண்ட் பண்ணப்போறான் சிங்களப் பார்ப்பான். அதுக்கு இங்கே இருந்து நீங்க ஒத்து ஊதறிங்களா ? தமிழனை சிங்கள பார்ப்பான் உயிரோடு விட்டால்தானே, அவன் வேலை வாய்ப்பு எல்லாம் பெறுவதற்கு ?

    சென்னையில், கார்ப்பரேட் செய்த சாதனைகளை நீங்கள் சொல்லி வாய் மூடுவதற்கு உள்ளேயே, லேஆப்களும், தற்கொலைகளும் ஆரம்பித்துவிட்டன. டாய்லெட் கழுபுபவர்கள் முதற்கொண்டு கம்பியூட்டர் வேலைப் பார்ப்பவர் வரை, லேஆப் செய்யப்பட்டுவிட்டார்கள். TCS, Infosys, EDS , சத்யம் எல்லா அயோக்கியர்களும் லேஆப் செய்துவிட்டார்கள், செய்கிறார்கள்.

  24. Nedumaran’s words correlate very much with Brutus in Shakespeare’s ‘Juliar Caesar’. Immediately after killing Caesar, in his funeral speech he said he had killed Caesar not because he loved Caesar less, but loved Rome more. Nedumaran is writing the 21st century version of Brutus. He wants the intervention of India not because he loves Tamil Elam less but he loves the interests of Indian ruling class more. Having said this, I must also say, there is no Antonio with us to carry forward the dreams of suffering Tamils. As expected by the enemies, we have shown our mettle only in petty fights which takes us nowhere other than letting down. Suresh Premachandran, Srilankan Tamil MP says in Jaya TV that the Lankan govt. is speeding up the process of militarisation in the entire area of Elam. Some 13,000 youths have been picked up from the camps, he points out. It is really sad that these stark realities are no more not disturbing us as the persons like above have converted the issue into a good talking point.

  25. அறிவுடைநம்பி,

    அசுரனிடன் அடி வாங்கியதாக் நீங்களே கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.
    அசுரன் கடைசியாக எம்மை பற்றி எழுதியதை படிக்கவில்லை போல..

    சும்மா பொதுப்படையாக பிதற்றுவது தான் உம்மால் முடியும் போல.

    கார்கில் போரில் பாகிஸ்தான் இந்தியவின் வேறு பகுதிகளை தாக்கியிருந்தால்,
    சரியான பதிலடி கிடைத்திருக்கும் என்ற தெரிந்ததால்தான் அது லோக்கல்
    சண்டையாக இருந்தது. அம்பானியின் ஆலை என்ன பெரிது. தாக்க நினைத்திருந்தால்
    அவர்கள் மும்பாய் மற்றும் டெல்லியை தாக்கியிருப்பார்கள். 1971 போரை பற்றி
    ஏதாவது தெரியுமா உமக்கு ?

    ///உங்க ஓற்றைத்துருவ லிபரல்களும், டெமாக்கரசிகளும் செய்த கொலைகள் தானே முள்ளிவாய்க்காலிலும், இப்போது வதை முகாம்களிலும் நடக்கின்றன. இப்போது சொல்லுங்கள் பாசிஸ்ட்டுகள் யார் என்று ? ஸ்டாலின் இப்போது இருந்து இருந்தால், இப்படி நடந்து இருக்குமா ?///

    சரியான உளரல். லிபரல் ஜனனாயகம் பற்றிய உமது அறியாமைதான் இது. லிபரல் ஜனனாயக்த்திற்க்கு
    சரியான எடுத்துக்காட்டு நெதர்லாந், டென்மார்க் அல்லது ஜப்பான் போன்ற நாடுகளின் அமைப்புதான்.
    இலங்கை அல்ல. ஃபாசிசம் பல ரூபங்களை கொண்டது. அதில் முதலாளித்துவ காலனியாதிக்கம் ஒரு
    வகைதான். கம்யூனிஸ பாணி ஒரு முக்கிய வகை. முக்கியமாக ஜோஸப் ஸ்டாலின் ஆசிய குடியரசுகள்
    மற்றும் போலந்த, உக்ரேன் போன்ற நாடுகளை நசுக்கிய வரலாறு அறியாதவர் நீர். போய் அங்கு விசாரித்துப்பாருங்கள். அந்த நாட்டினருக்கு ஸ்டாலினும் இட்லரும் ஒன்றுதான். தேசிய இனங்களை,
    ஸ்டாலின் நசுக்கியதை போல் வேறு யாரும் நசுக்கியத்தில்லை.

    பார்க்க :
    http://www.stalinsethniccleansing.com/

    இவை ஏகாதிபத்தியத்தின் சதி, பொய்கள், அவதூறுகள் என்று ஒற்றை வரியில் மறுப்பீர்கள் என்று அறிவேன்.
    “பூனை கண்னை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடாது” என்ற பழமொழி…
    உண்மைகளை யாராலும் நிரந்தரமாக மூடி மறைக்க முடியாது..

  26. /சென்னையில், கார்ப்பரேட் செய்த சாதனைகளை நீங்கள் சொல்லி வாய் மூடுவதற்கு உள்ளேயே, லேஆப்களும், தற்கொலைகளும் ஆரம்பித்துவிட்டன. டாய்லெட் கழுபுபவர்கள் முதற்கொண்டு கம்பியூட்டர் வேலைப் பார்ப்பவர் வரை, லேஆப் செய்யப்பட்டுவிட்டார்கள். TCS, Infosys, EDS , சத்யம் எல்லா அயோக்கியர்களும் லேஆப் செய்துவிட்டார்கள், செய்கிறார்கள்.
    //

    stray incidents of sucides happen all times and nothing new or is not related to economy.

    sure : lay offs are needed whenever there is recession. but millions of new jobs have been created where there was NOTHING before 1980 in Chennai. have you any idea of Chennai job scene until 1980 ? try the excellent kamal film : “Varumaiyin niram sihappu”

    and something is better than noithing. millions of new jobs will be created year by year only after liberalisation and not with state scoliasim which stagnated and socialised poverty until 1991. so what you propose : get back to the good old days of 50 % poverty and huge unempolyment of the pseudo sociialist era of 70s ?
    you are too young and ignorant of this. and this conversation in this free workpress blog will not be possible without liberalising Indian economy. ok

  27. //அசுரனிடன் அடி வாங்கியதாக் நீங்களே கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.
    அசுரன் கடைசியாக எம்மை பற்றி எழுதியதை படிக்கவில்லை போல..//

    அதியமான் ! அசுரனிடம் வாதம் செய்ய முடியாது நீங்கள் சக பதிவர்களிடம் புலம்பியதைத்தான் நான் படித்து இருக்கின்றேன். நீங்கள் கடைசியாக அசுரன் உங்களைப் பற்றி சொன்ன லிங்கைக் கொடுங்களேன் !

    //அதில் முதலாளித்துவ காலனியாதிக்கம் ஒரு
    வகைதான். கம்யூனிஸ பாணி ஒரு முக்கிய வகை. முக்கியமாக ஜோஸப் ஸ்டாலின் ஆசிய குடியரசுகள்
    மற்றும் போலந்த, உக்ரேன் போன்ற நாடுகளை நசுக்கிய வரலாறு அறியாதவர் நீர். போய் அங்கு விசாரித்துப்பாருங்கள். அந்த நாட்டினருக்கு ஸ்டாலினும் இட்லரும் ஒன்றுதான். தேசிய இனங்களை,
    ஸ்டாலின் நசுக்கியதை போல் வேறு யாரும் நசுக்கியத்தில்லை.. இவை ஏகாதிபத்தியத்தின் சதி, பொய்கள், அவதூறுகள் என்று ஒற்றை வரியில் மறுப்பீர்கள் என்று அறிவேன்..// யூதர்களுக்காக ஸ்டாலின் உருவாக்கிய தனிதேசத்தைப் பற்றி கலையகத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
    ஸ்டாலினைப் பற்றிய அவதூறுகளை பற்றி புத்தகம் புத்தகமாக, பதிவு பதிவாக புதிய ஜனநாயகம், அசுரன் முதலியவர்கள் வெளியிட்ட எழுதியதையும், வெளியிட்டதையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இதனை எல்லாம் மறுக்க நாதியில்லாமல், ஒற்றை வரியில் நீங்கள் தான், பாட்டாளிகளின் காவிய நாயகனைப் பற்றி அவதூறுகளை வாரி வாரி இறைத்து வருகிறீர்கள். திரும்ப திரும்ப சொல்லும் பொய் உணமை என்று நிரூபிக்க முயல்கீறீர்கள். ஸ்டாலின் செய்ஹ இமாலயத் தவறு, அனைவரையும் (உங்களைப் போன்றவர்கள்) கட்சியில் இணைத்ததுதான். ஸ்டாலினுக்குப் பிறகு தேசிய இனங்களின் சிறைக்கூடமாக சோவியத் மாறியதும் பின்பு சீரழிந்த்தும்….. இப்போதும் தேசிய இனங்களின் சிறைகூடமாக இந்தியா விளங்கி வருகின்றது.

    //stray incidents of sucides happen all times and nothing new or is not related to economy.

    sure : lay offs are needed whenever there is recession. but millions of new jobs have been created where there was NOTHING before 1980 in Chennai. have you any idea of Chennai job scene until 1980 ? try the excellent kamal film : “Varumaiyin niram sihappu”

    and something is better than noithing. millions of new jobs will be created year by year only after liberalisation and not with state scoliasim which stagnated and socialised poverty until 1991. so what you propose : get back to the good old days of 50 % poverty and huge unempolyment of the pseudo sociialist era of 70s ?
    you are too young and ignorant of this. and this conversation in this free workpress blog will not be possible without liberalising Indian economy. ok//

    அப்பா சாமி ! 1980 களில் வேலையில்லாத்திண்டாட்டம் இருந்ததிற்கு காரணம் உங்கள் கலப்பு (கருப்பு) மாமா நேருவின் ஒட்டாண்டித்தனம் தான். 70களில் இந்தியாவில் சோஸியலிஸ்ட் இரா புரா வஞ்சிரக் காலங்கள் எல்லாம் இல்லை. மாமா நேரு அவர்களும், இராட்சசி இந்திரா அவர்களின் கொடுங்கோல் ஓட்டுக்கட்சி ஆட்சியும் தான் 70களில் இருந்த வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு காரணம். என்ன 70களில் உள்நாட்டு முதலாளிகள் கொள்ளையடித்தார்கள். உங்கள் நவீன யுகத்தில் பன்னாட்டு முதலாளிகளும் கொள்ளை அடிக்கின்றார்கள். பொருளாதாரச் சுணக்கத்தில் வேலைப் போவது இயல்பு என பச்சையாகச் என்று சொல்கீறீர்கள். உங்கள் வேலைப் போய்விட்டால் என்ன செய்வீர்கள் ? சரி — பொருளாதாரம் உச்சத்தில் இருந்த போது சம்பாதித்த பணத்தில் அம்பானிகள் 10000 கோடியில் வீடு கட்டலாம், ஆனால் உழைத்துக் கொடுத்த அப்பாவிகள் வேலைமட்டும் போக வேண்டும். மிகச் சரியாக அம்பலப்பட்டு போகீறீர்கள். வயது குறைவு, அனுபவம் குறைவு என சப்பைக் கட்டுக் கட்டாதீர்கள்.

    அறிவுடைநம்பி.

  28. ஈழம் போன்ற சிறிய மக்கள் தொகையினரிடம் இந்தியாவை எதிர்க்க வேண்டும், அமெரிக்காவை எதிர்க்க வேண்டும், சீனாவை எதிர்க்க வேண்டும், பாகிஸ்தானை எதிர்க்க வேண்டும் என்று உரைப்பது எடுக்க முடியாத சுமையை ஒரு பலகீனனிடம் ஒப்படைப்பதற்கு சமமாகவே தோன்றுகிறது.மேலும் தமிழினப் பார்வை கொண்டோர் கடுமையாக மட்டம் தட்டப்படுவதில் சாதிக்கப்படுவது என்ன? அவர்களில் பலரும் கடுமையான சட்டங்களில் ஒடுக்கப்பட்டவர்கள். அவை அனைத்தும் இந்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்ததால் தான் என்பதை மறுக்க முடியாதே. ஆனால் அவர்களை இந்திய அரசின் இன்னொரு பிரிவு விசுவாசிகள் என்பதாக தூற்றுவது நியாயமில்லை. விமர்சிப்பதற்கு வாகாக அவர்கள் பேச்சு அமைகிறது என்பதற்காக காய்ச்சுவதாகவே தெரிகிறது. சந்தர்ப்பவாதிகளை இப்படித்தான் தோலுரிக்க வேண்டும் என்ற லெனின் அணுகுமுறையை என்னிடம் ஒருவர் சொன்னார். அன்று லெனின் பெற்றிருந்த சமூக பலத்தை, ஆதரவை இங்கு பெறாமல் இது போன்ற கடுமையான தூற்றல்கள், ஒரு கட்டத்திற்கு மேல் அந்த எழுத்துடன் பயணிப்பவர்களைச் சோர்வடையச் செய்யவே உதவும். இங்கு ஒரு கட்டுரை பிரசுரிக்கப்படுவதற்காகவே காத்திருந்து, வந்தவுடன், புல்லுரிவிகள்,அவன்,இவன் என்று விளிப்பதும் அதிகரித்துவிட்டது.

    • சுகதேவ்,

      ஈழம் போன்ற சிறிய நாடோ இந்தியா போன்ற பெரிய நாடோ எதுவாக இருந்தாலும் சர்வதேச நாடுகளின் அணிசேர்க்கை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, உலக மக்களின் ஆதரவு இன்றி விடுதலை பெற முடியாது. இதற்கு பொருத்தமான உதராணம் நேபாள். அது சின்ன நாடாக இருந்தாலும் மன்னராட்சியை தக்கவைக்க நினைத்த அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளை எதிர்த்தே மன்னராட்சியை ஒழித்தது. எனவே விடுதலைக்காக போராடும் அரசியல் இயக்கங்களின் தொலைநோக்கு பார்வையும் அரசியல் முதிர்ச்சியும் இங்கே முக்கியம். நேபாளத்தில் அது இருந்தது, இலங்கையில் அது இல்லை.

      அடுத்து ஈழத்திற்காக போராடும் தமிழினவாதிகள் எல்லாரும் இந்திய அரசு ஈழத்திற்கு ஆதரவாக தலையிடவேண்டுமென்ற கொள்கை உடையவர்கள் மட்டுமல்ல அப்படித்தான் நடந்திருக்கிறார்கள். அதுதான் ஜெயாவை நம்பி கெட்டது வரை நடந்தது. இப்படி தமிழ்நாட்டு மக்களை அணிதிரட்டி போராடாமல் ஆளும்வர்க்க அரசுகளை ‘லாபி’ வேலை செய்து ஈழத்திற்கு ஆதரவாக மாற்றிவிடலாம் என்ற அவர்களது அணுகுமுறையை அம்பலப்படுத்துவது அத்தியாவசிய கடமையாகும். இதன்றி ஈழத்திற்கு நம்மால் சரியாக போராட முடியாது. எனவே நெடுமாறன் ஏதோ கை தவறி இந்தக் கட்டுரையை எழுதிவிடவில்லை. இதய சுத்தியோடுதான் இந்தியாவின்வல்லாதிக்கம் தோற்றது குறித்த கவலையுடன் எழுதியிருக்கிறார்.

      நட்புடன்
      வினவு

      • ஈழத்தமிழர் விடுதலைக்கு உலக நாடுகளின் அணிசேர்க்கை, உலகமக்கள் ஆதரவு இவையெல்லாம் கைக்கூட வேண்டும் என்று கூறியிருக்கிறீர்கள். இது சாத்தியப்பட இறைவனைப் பிரார்த்திப்பதை தவிர வேறு வ்ழி இருக்கிறதா என்று தெரியவில்லை. ஈழம் வீழ்ந்தவுடன் பட்டாசு வெடித்து கொண்டாடிய சிங்களர்களுடனும் ஈழமக்கள் இணைய வேண்டும் என்று கோருவீர்கள் போலத் தெரிகிறது. சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் தேங்காயைச் சிதறடிப்பதை பார்த்திருக்கிறோம். அது போல தங்கள் தலையை ஈழ மக்கள் பாறையில் மோதி உடைப்பதற்கு நிகரானது இது.
        எந்தவகையிலும் ஈழம் தமிழக மக்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் நேரடியானப் பிரச்சினை அன்று. அந்தவகையில் ஈழத்தை ஒட்டி தமிழகத்தில் எழுந்த கொந்தளிப்பு அதன் சாத்தியப்பாட்டின் எல்லையைத் தொட்டது என்றே சொல்லலாம். இதனை தமிழக இளைஞர்களிடம் நெருக்கமாக கொண்டு சென்றதில் தமிழின அமைப்புகளின் பங்கு கணிசமானது என்றும் நினைக்கிறேன். இதனை நீங்கள் ஏற்றுக்கொள்வதால் குறைந்து போய்விடமாட்டீர்கள்.
        நேபாள உதாரணத்தை சொல்லியிருக்கிறீர்கள். மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டாவின் விரிவான பேட்டி ஒன்று இந்துப் பத்திரிக்கையில் ஏப்ரல் 28,29 2008ல் வெளிவந்துள்ளது. முதல் கேள்வியே இந்தியா‍‍‍‍‍, நேபாளம் உறவு குறித்தது. மாவோயிஸ்ட்கள் முயற்சிகள் பல்வற்றுக்கும் இந்தியா உதவியது என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார். இந்தியாவின் துணை இல்லாமல் நேபாளத்தை ஒரு அடி கூட முன்னேற்ற முடியாது என்று தெரிவித்துள்ளதோடு இந்தியாவின் நலன்களுக்கு நேபாளம் எதிரியல்ல என்பதை இந்தியா புரிந்து கொண்டதற்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இதற்கு என்ன பொருள் என்பதை விளக்கினால் நல்லது. இந்தியா, மன்னன் ஞானேந்திராவுக்கு ஆதரவாக செயல்பட்டு இருந்தால் நேபாள மாவோயிஸ்ட்கள் காடுகளிலே இன்னமும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
        ஒருவேளை எல்.டி.டி.ஈ இந்தியாவை தங்கள் எதிரி என்று அறிவித்து இருந்தால் என்ன நடந்திருக்கும். இலங்கை ராணுவத்துக்கு அளிக்கப்பட்ட மறைமுகமான ஆதரவுகள் நிறுத்தப்பட்டு வெளிப்படையாகவே உதவிகளை இந்தியா செய்திருக்கும். தமிழகத்தில் எழுந்த குறைந்தபட்ச எதிர்ப்புக்கும் வழி இல்லாமல் போயிருக்கும். இது தான் நீங்கள் எதிர்பார்த்ததா?
        ஈழத்துயரத்தை பேசும் யாரும் உள்ளத்தின் கொதி நிலையை அடக்கி பேச முடியாது. தாங்கள் எதிரிகள் என்று நினைக்கும் காங்கிரஸ், கருணாநிதி, ஜெயலலிதா என எல்லாரையும் கரித்துக் கொட்டுவது இயல்பே. இந்தப் பதற்றத்தின் பின்னணியிலே ஈழ ஆதரவாளர்கள் நிலையை புரிந்து கொள்ள முடியும். தமிழ் நாட்டில் மலிவான பொருள் ரப்பர் ஸ்டாம்போ என்று மலைக்கும் அளவுக்கு அவர்கள் முதுகில் ஜெ. ஆதரவு, கருணா ஆதரவு முத்திரைகள் குத்தப்படுகின்றன. சீமானின் பேச்சுக்களை உணர்ச்சிவசப்பட்ட சினிமா இயக்குனரின் உளறல் என்று மதிப்பிட்டதில் என்ன அரசியல் முதிர்ச்சியை காட்டியுள்ளீர்கள். நீங்கள் பேசும் கருத்துக்களை நடைமுறைப்படுத்தும் முயற்சிக்கு ஒரு சதவீதம் கூடஆதரவில்லாத நிலையில் வார்த்தைகளில் மட்டும் மீசை முறுக்கு ஏன்?
        இந்த ஈழப் போர் ஆரம்பிக்கப்பட்ட போது புலிகள் எதிர்ப்பு முதன்மையில்லை என்று அறிவித்தீர்கள். ஆனால் அதனை சிந்தனையிலும், எழுத்திலும் கொண்டு வர பல மனத்தடைகளை தாண்ட வேண்டும். புலிகளின் தோல்வி பலரையும் அவர்கள் கொண்டிருந்த அரசியல் பார்வைகள் மீது அதீத பற்றுறிதியை கொண்டு வந்துள்ளது. இதில் பப் புரட்சியாளர் சாருவும் ஜெயமோகனும் சர்ப்பிரைஸ் கூட்டணி அமைத்து கொண்டாடுகின்றனர். புலிகளுக்கு எதிராக ஒரு பெரிய பட்டியலை நீங்களும் வைத்துள்ளீர்கள். நேபாள மாவோயீச்ட் தலைவர் பிரசண்டா எங்கள் வெற்றி இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு பாடம் என்று தெரிவித்திருந்தார்.[பார்க்க:மேற்படி பேட்டி]. ‘நாங்கள் கற்றுக் கொள்ள ஏதுமில்லை, புலிகள் கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும்’ என்கிறீர்காள். காலம் மட்டுமே ஈழ்த்தமிர்களின் ஒரே நம்பிக்கையாக இருக்க முடியும். கோலியாத்தை வீழ்த்த தாவீதுக்கு தேவைப்பட்டது ஒரேயொரு கல். அகதி தமிழனோ புலம்பெயர் தமிழனோ யாரேனும் ஒரு ஈழச் சகோதரன் அந்தக் கல்லை கூர் தீட்டிக்கொண்டிருக்கலாம்.

        • சுகதேவ்,

          உங்களது உணர்ச்சிவசப்பட்ட விமரிசனங்களுக்கு தனி இடுகையாகவே கூடிய விரைவில் பதில் தருகிறோம். ஆனால் அதற்கு முன்னர் உங்களிடம் ஒரு கேள்வியை வைக்கிறோம். ஈழப் போராட்டத்தின் பின்னடைவிற்கு புலிகள் மற்றும் தமிழகத்திலுள்ள தமிழினவாதிகள் மீது உங்களுக்கு விமரிசனங்கள் ஏதுமில்லையா? அறியக் காத்திருக்கிறோம். மற்றபடி ஹாரிபாட்டரின் மாய உலக மாஜீக்குகளை வைத்து ஈழப்பிரச்சினைக்கு தீர்வு ஏதும் காண இயலுமா எனத் தெரியவில்லை. எனினும் விவாத்தை எழுப்பும் கேள்விகளை எழுப்பியமைக்கு நன்றி. சுகதேவின் இந்த நெடிய விமரிசனங்களுக்கு மற்ற நண்பர்கள் பதில் கூறி விவாதத்தை தொடரலாம். நன்றி

          நட்புடன்
          வினவு

  29. //புலிகளின் அழிவிற்கான முக்கிய காரணங்களில் ஒன்று – கடைசிவரை இந்திய முதலாளித்துவ ஏகாதிபத்திய அரசிடம் பிச்சை கேட்டு நின்றதே ! ஆண்டன் பாலசிங்கம் சொன்னதுபோல புலிகள், மாறிவரும் உலகச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சீன ஏகாதிபத்திய அணியில் இணைந்து தங்களையும் மக்களையும் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம்.

    ஆனால், தங்களுடைய அரசியல் சூன்ய அறிவினாலும், பழநெடுமாறன் முதலிய பிழைப்புவாதிகளாலும் (ஆர்.எஸ்.எஸ். பழனிச்சாமிக்கு சாதனையாளர் விருது கொடுத்தவர் இவர் – இது பற்றிய கட்டுரை புதிய ஜனநாயக இதழில் வெளியாகியது) மூளைச் சலவைச் செய்யப்பட்டு, அநியாயமாக உயிரிழந்து இருக்கின்றார்கள் !!!

    இன்னும் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக புருடா விட்டு ஒட்டுமொத்த தமிழினத்தையே ஏமாற்றி வருகின்றார்.

    ஆண்டவா ! நீ இருப்பது உண்மையானால், பிரபாகரனுக்கு என்னதான் நடந்தது என்று தெளிவாகச் சொல் ! என கடவுளிடம் பிரார்த்தனைதான் செய்யவேண்டும் போலுள்ளது !!!//

    nakki pizhaippadu naaikal thaan
    pooraali alla

  30. இனி அய்யா மேல தேசிய பாதுகாப்பு சட்டம் பாயாதுப்பு ,அதான் இந்திய இறையாண்மைக்கு பாதுகாவலர் ஆயிட்டாருல்ல .

  31. தோழர்களுக்கு,
    வினவு தளம் மூலமாக மட்டுமல்ல கடந்த பத்தாண்டுகளாக புதிய ஜனநாயகம் இதழ்கள் வாயிலாகவும் ஈழப்பிரச்சினையை கவனித்து வருபவன். பல கட்டுரைகளின் முத்தாய்ப்பான வரிகள் எப்போதும் என் நினைவில் இருப்பவை. எனவே அவற்றுடன் வேறுபாடு எதுவும் இல்லை. புலிகளின் வீழ்ச்சி ஈழத்தில் ஒரு மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கும் யாருக்கும் ஆதரவானது அல்ல. தமிழனவாதிகளை நம்பி புலிகள் அழிந்தனர் என்பது மிகவும் அகவயமான முடிவு. தீரானதி இதழில் அ.மார்க்ஸ், புலிகள் தமிழக அரசியலில் தலையிட்டனர் என்ற பொய்யை நிலைநாட்ட‌ ‘பிராபகரன் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்க இருந்தார்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு நிகரான ஒன்று. ஈழம் இன்று வெறும் பேசு பொருளாகவே தமிழகத்தில் மாறியிருக்கிறது. ஈழம் முழுவதும் இன்று ராணுவ மயமாகி வருகிறது. அகதி முகாமிலிருந்து 13000 இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று இலங்கை தமிழ் எம்.பி சுரேஸ் பிரேமச்சந்திரன் ஜெயா டி.வியில் சமீபத்தில் குறிப்பிட்டார். இவை எதுவும் தடித்த வார்த்தைகளுட்ன் ஈழப்பிரச்சினையைப் பார்க்கப் பழகியிருக்கும் நம்மை இனிமேல் தொந்தரவு செய்யப்போவது இல்லை என்பதே கசப்பான உண்மை. ஈழம் மட்டும் இந்தியாவின் அருகில் இல்லாமல் இருந்திருக்கக் கூடாதா என்று ஈழச் சகோதரி ரதி இங்கே ஒரு பதிவில் ஏங்கினாரே அவரைப் போன்றவர்களுக்கு ஆறுதல் கூற சம்பிராதயமான வார்த்தைகள் கூட நம்மிடம் இல்லையே ஏன்?

  32. intha nilail naam ottumayaka iruppahta nallathu. ungalin intha periya article paditha pin ungalilm santhakkeam varukriahtu vilai pooi vitterkala endu. ennaku thali suthuthu. yaarai nambuvathu? iyoo iyoo

  33. […] அவர் சீனப்பூச்சாண்டியை எழுதி இந்திய அரசை மனம் குளிர்விப்பவர். ஈழம் மலர்ந்தால் அது வலுவான இந்திய […]

  34. “விடுதலைப்புலிகள் எதிர்காலத்தில் தோற்றுப் போவதற்கு நெடுமாறனின் தொடர்பே காரணமாக இருக்கும்.” எனப் பொருள்பட ,தமிழக நண்பர் ஒருவர் 1988 இல் எனக்கு கடிதம் வரைந்திருந்தார்.அவர் எழுதிய நியாங்களை வினவு’ தொட்டுச் சென்றிருக்கிறது.

Leave a Reply to K.R.Athiyaman பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க