Skip to content

சனிக்கிழமை கவிதைகள் – 2

வாசகர் கவிதைகள் – அறிமுகம்

மரித்திருக்கும் நபியின் சகோதரத்துவம்

வார்த்தைகள்…
வார்த்தைகள்…
வார்த்தைகள்…

வார்த்தைகளின்
குவியலில்
பிதற்றலாய்,
ஆவேசக் கூச்சலாய்,
அரற்றலாய்,
செவிமடுக்க மறுக்கும்
ஊளையிடலாய்,
கண்களை இறுக்க
மூடிக் கொள்கிறது,
இறுமாப்பின் நியாயம்.

நீ தாழ்த்தப்பட்டவன்!
உனக்கு சுடுகாடு இல்லை.
நீ அஹமதியா!
உனக்கு சுடுகாடு இல்லை.
நதிகள் பிறக்குமிடம் பலவாகும்.
எல்லா நதிகளும் கலக்குமிடம்
கண்மூடித்தனமான வெறியின்
கடலாகும்.

பிணத்தை தோண்டியெடுத்து
மார்க்கத்தை நிலைநாட்டும்
புனிதத்தின் காவலர்களே,
சுடுகாடுகளை
பத்திரமாக பாதுகாத்து வையுங்கள்.
அங்கேதான்
ஏதோ ஒரு மூலையில்
தோண்டியெடுக்க வழியில்லாமல்,
நீங்கள் ஆழக்குழிதோண்டி புதைத்து விட்ட
நபியின் சகோதரத்துவம்
மரித்துக் கிடக்கிறது.

போராட்டம்

———————-

தாராளமயம்

பக்கத்து வீட்டுக்காரன்
மிக நல்லவன்!
என் குழந்தைக்கான
என்  மனைவியின்
முலைப்பாலை
மலிவு விலையில்
எங்களுக்கே விற்கிறான்.

இரங்குவோன்.

————————————-

செய்தித்தாட்கள்

அரசுகள் போடும் பிச்சை விளம்பரமும்
சிறுசுகள் நாடும் கொச்சை எழுத்துக்களும்
எங்கள் மூலதனங்கள்.

நாங்கள்
வந்தவருக்கெல்லாம் வால் பிடிப்போம்
கால் பிடிப்போம்
எங்களுக்கு விமரிசிக்கத் துணிவில்லை
வேண்டுமானால் வேண்டுகோள் விடுவோம்.

எங்கள் இலவச இணைப்புக்கள்
மக்களின் மனோதத்துவ அவலங்கள்

நடிகைகளின் அரை நிர்வாணப் படங்கள்
எங்கள் விற்பனையைக் கூட்டும்.

காமதேனுப் பசுக்கள்
எங்கள் போட்டிப் பரிசு – அறிவிப்புக்கள்
உங்கள் ஏமாளித்தனங்களின் எடுத்துக்காட்டுகள்.

நாங்கள் ஆபாசத்தை விதைக்கறோம்
நீங்கள் அறுவடை செய்கிறீர்கள்.

எங்களுக்குள் அடித்துக் கொள்வோம்
உங்கள் வயிற்றிலடித்து
ஓய்ந்த நேரங்களில்.

-ந.அப்துல் ரகுமான், ( புதிய கலாச்சாரம், நவம்பர்’ 1991 )

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

…..

தொடர்புடைய பதிவு

வினவில் இடானியாவின் கடிதத்துடன் சனிக்கிழமை வாசகர் கவிதைகள்!

Print

15 Comments

  1. நாங்கள் ஆபாசத்தை விதைக்கறோம்
    நீங்கள் அறுவடை செய்கிறீர்கள்.
    ——
    இவை போல் பலவும் மீண்டும் வரட்டும்

    Posted on 29-Aug-09 at 4:03 pm | Permalink
  2. Thee Nenjan

    Iranguvon’s poem was a nail on the forehead. Superb attack on economic colonization.
    Poraattam’s last words are powerful.

    Posted on 29-Aug-09 at 6:15 pm | Permalink
  3. முகுந்தன்

    இரங்குவோன் கவிதை மிகவும் நன்று.

    Posted on 30-Aug-09 at 12:59 pm | Permalink
  4. Navakumar

    Erankuvonin Kavithaiyai padikkum evarukkum, thaaralamayathin avalangal sattena purinthuvidum.

    Posted on 31-Aug-09 at 10:45 am | Permalink
  5. ந. அப்துல் ரஹ்மான்

    நான் சென்னை புதுக்கல்லூரியில் படிக்கும் போது எழுதி, புதிய கலாச்சாரம் இதழில் வெளியான கவிதையை வினவில் வெளியிட்டமைக்கு நன்றி! என் கவிதை வரிகளைப் பாராட்டிய டாக்டர் ருத்ரன் அவர்களுக்கும் நன்றி!

    Posted on 31-Aug-09 at 1:12 pm | Permalink
  6. நல்ல கவிதை

    Posted on 31-Aug-09 at 5:08 pm | Permalink
  7. Good poems.
    And congrats to VINAVU to introduce the new agenda that “posting the readers poems on saturday”.

    Posted on 31-Aug-09 at 7:28 pm | Permalink
  8. Rathi

    போராட்டம், இரங்குவான், அப்துல் ரஹ்மான் மூன்று பேரின் கவிதைகளும் நன்றாகவுள்ளது . இரங்குவான் நீங்கள் கவிதையும் எழுதுவீர்கள் என்று நான் இப்போதுதான் அறிந்துகொண்டேன். வாழ்த்துக்கள்.

    Posted on 01-Sep-09 at 10:40 am | Permalink
    • இரங்குவோன்

      நன்றி ரதி, நவகுமார், முகுந்தன், தீ நெஞ்சன்.
      முன்பெல்லாம் நிறைய எழுதிக்கொண்டுதானிருந்தேன் ரதி. இப்போதுதான் எதுவும் எழுதப்பிடிப்பதில்லை. ஈழத்தில் தமிழர்களின் நிலை மிகுந்த மனபாரத்தை ஏற்படுத்திவிட்டது. அந்த விரக்தியிலிருந்து மெதுவாக எழ உதவியது வினவுதளம்தான்.. மேலும் வெறும் கவலைபட்டுக்கொண்டிருப்பதால் என்ன பிரயோஜனம்? நம் பங்கிற்கு ஏதாவது செய்யத்தானேவேண்டும்?
      மேலும் இக்கவிதையின் மீதான் தாராளமயவாதிகளின், முதலாளித்துவ நண்பர்களின் எதிராடல்களை ஆவலோடு எதிர் நோக்குகிறேன்.

      Posted on 01-Sep-09 at 12:31 pm | Permalink
  9. இரங்குவோன் கவிதை தாராளமயத்தை எளிமையாக விளக்குகிறது.

    Posted on 01-Sep-09 at 12:27 pm | Permalink
  10. பூமீ

    சகி
    உன் ஆதங்கத்தை அழகாய் சாடியுள்ளாய். மிக நன்று.
    உன் எழுதுகோலுக்கு மீண்டும் மையீட உதவிய வினவுக்கு என் நன்றி.
    உன் பயனம் தொடர வாழ்த்துக்கள்.

    ஈசன்

    Posted on 01-Sep-09 at 2:41 pm | Permalink
    • இரங்குவோன்

      நன்றி சகோதரா.
      - இரங்குவோன்.

      Posted on 02-Sep-09 at 10:24 am | Permalink
  11. அர டிக்கெட்டு !

    இரங்குவோன், நல்ல கவிதை, தொடர்ந்து எழுதுங்கள்,

    Posted on 05-Sep-09 at 5:05 pm | Permalink
  12. Tharalamayam peyaril nadakkum kevalathai azhagaga kuripittullamaikku en paratukkal.

    Posted on 09-Sep-09 at 8:50 am | Permalink
  13. geetha

    nalla kavithi

    Posted on 19-Sep-09 at 5:02 pm | Permalink

One Trackback/Pingback

  1. pligg.com on 29-Aug-09 at 3:46 pm

    சனிக்கிழமை கவிதைகள் – 2…

    ௦வாசகர் கவிதைகள் – , 1) மரித்திருக்கும் நபியின் சகோதரத்துவம், 2) தாராளமயம், 3)செய்தித்தாட்கள் http://www.vinavu.com/2009/08/29/saturday-poems-2/trackback/...

Post a Comment

Your email is never published nor shared.

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!