privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விவினவு கட்டுரைக்காக 5 தொழிலாளிகள் சஸ்பெண்ட்! ஜேப்பியாரின் வெறியாட்டம்!!

வினவு கட்டுரைக்காக 5 தொழிலாளிகள் சஸ்பெண்ட்! ஜேப்பியாரின் வெறியாட்டம்!!

-

jepeyar2

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில அமைப்புச் செயலாளரும், பு.ஜ.தொ.ஓட்டுநர்கள் மற்றும் டெக்னிசியன்கள் சங்கத்தின் (சத்யபாமா கல்லூரி) செயலாளருமான தோழர் வெற்றிவேல் செழியன் சற்று முன்னர் நம்மை தொடர்பு கொண்டு இந்த செய்தியைக் கூறினார்.

ஜேப்பியார் கல்லூரியில் நிர்வாகத்தின் திமிரினால் விவேக் என்ற மாணவன் தற்கொலை செய்த சம்பவத்தை விளக்கி வினவில் ஒரு கட்டுரையை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். அதன் இணைப்பாக ஜேப்பியார் கல்லூரிகளில் எமது தொழிற்சங்கம் கட்டிய அனுபவத்தை வாசகருக்கு அறிமுகம் செய்யும் வண்ணம் புதிய கலாச்சாரத்தில் வெளிவந்த கட்டுரையையும் சேர்த்து வெளியிட்டோம். இந்த கட்டுரை தோழர் துரை சண்முகம் தொழிலாளர்களை நேர்காணல் செய்து தொகுத்த கட்டுரையாகும்.

வழக்கமாக வினவில் வரும் கட்டுரைகள் பல்வேறு இணையக்குழுமங்களில் மறு பிரசுரம் செய்யப்பட்டு விவாதிக்கப்படும். இப்படி ஒவ்வொரு கட்டுரையையும் சில ஆயிரம் பேர் பார்க்கிறார்கள். அப்படி இந்தக் கட்டுரையும் யாகூ இணையக் குழுமம் ஒன்றில் இடம் பெற்று அது ஜேப்பியார் மற்றும் அவரது அடியாள் நிர்வாகத்தரப்பினரது கவனத்திற்கு போயிருக்கிறது. கூடுதலாக அவரது ரவுடி கேலிச்சித்திரத்தையும் ஜேப்பியார் பார்த்தாரா என்பது தெரியாது.

இப்படி இணையத்தின் வலிமையான வலைப்பின்னலால் தனது பெயர் நாறடிக்கப்படுவதைக் கண்டு சினமுற்ற ஜேப்பியார் நிர்வாகம் புதிய கலாச்சாரத்திற்கு பேட்டி அளித்த ஐந்து தொழிலாளர்கள் தோழர்கள் சங்கரன், உத்திராபதி, பரமன், ஜாகிர் உசேன் (ஓட்டுநர்கள்), சார்லஸ் (கிளினர்) முதலியோரை தற்காலிக பணிநீக்கம் செய்திருக்கிறது. சுயநிதிக்கல்லூரிகளில் கல்லா நிரம்பி வழியும் நேரத்தில் ஜேப்பியார் கல்லூரிகளில் ரெய்டு, கூடவே வினவின் உபயத்தில் இலவச பிரச்சாரம் எல்லாம் சேர்ந்து ஜேப்பியாரை கள் குடித்த குரங்காக மாற்றியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கனவே இதே கல்லூரியில் தொழிற்சங்கம் கட்டினார் என்ற ‘குற்றத்திற்காக’ தோழர் வெற்றிவேல் செழியன் வேலைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அன்று தொடங்கிய போராட்டத்தின் நீண்ட வழியில் தற்போது மேலும் ஐந்து தொழிலாளிகள் பணிநீக்கம். ஆனால் இந்த திமிரான நடவடிக்கையால் அந்த தொழிலாளிகளும், தொழிற்சங்கமும் சோர்ந்து போய்விடவில்லை. இந்த வேலைநீக்கத்தால் அரண்டுபோய்விடவும் இல்லை. அவர்கள் இதை இன்னும் பரந்துபட்ட தொழிலாளிகள் மற்றும் மாணவர்களிடம் இந்த சர்வாதிகார நடவடிக்கையை எதிர்த்து பிரச்சாரம் செய்கிறார்கள். கூடவே சட்டரீதியாகவும் நடவடிக்கை மேற்கொள்கிறார்கள்.

வினவின் வீச்சு காரணமாக ஐந்து தொழிலாளிகள் தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டது முதலில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அந்த தொழிலாளிகளோ தங்கள் போராட்டத்திக்கு இந்த நடவடிக்கை மேலும் வலு சேர்க்கும் என உறுதியாக போராடுகிறார்கள். அடக்குமுறைக்கு அஞ்சாத இந்த தொழிலாளிகளின் போர்க்குணத்திற்கு வினவு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

கீழே ஜேப்பியார் நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கிய உத்திரவை இணைத்துள்ளோம்.

பெறுநர்: திரு சங்கரன் ஓட்டுநர்

பொருள்: தாங்கள் புரிந்த தீயநடத்தைக்காக இன்று முதல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறீர்கள்.

ஐயா,

தாங்கள் ஜேப்பியார் கல்லூரியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறீர்கள். தாங்கள் நிர்வாகத்தைப் பற்றியும் தலைவர் பற்றியும் அவதூறாகவும், விசமத்தனமாகவும், மாசு கற்பிக்கும் கெட்டநோக்கத்துடன் திரு. துரை சண்முகம் என்பவருக்கு பேட்டியளித்து அந்த தவறான செய்திகள் சத்தியபாமா தொழிற்சங்கம் என்ற தலைப்பில் யாகு மெயில் இந்தியா என்ற இன்டர்நெட்டில் வெளியாகியுள்ளது.

மேற்படி பேட்டியில் தாங்கள் ” என்னை ஒருத்தன் கேட்டான், நீ யூனியன்ல இருந்து என்ன சாதிச்சேன்னு? நான் கேட்டேன்,நீ இல்லாம என்ன சாதிச்ச? அவன் சொன்னான், எங்களுக்கு சோறு உண்டு, நிர்வாகம் காசு தருதுன்னான். அதுக்க நான் உனக்கு மரியாதை உண்டா? போடா நாங்கள் யூனியன் அமைச்சு போராடியதால்தான் உன்னை தன்பக்கம் இழுக்க நிர்வாகம் காசு தருது. அதுகூட நாங்கள் வாங்கித் தந்த காசுதாண்டா என்று சொன்னேன. மூஞ்சியத் திருப்பிகிட்டு பேசமுடியாம போயிட்டான்” என்ற கூறியுள்ளீர்.

மேற்படி தங்களது செயலால் நிர்வாகம், நிர்வாகத் தலைவரின் நற்பெயருக்கு பொது மக்களிடம் களங்கம் ஏற்படுத்தியதோடு அல்லாமல் சக தொழிலளாகளிடையே ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் சீர்குலைக்க வைக்கும் செயலாகும். தங்களது இந்த செயல் 1946ஆம் ஆண்டு தொழில் நிறுவனங்கள் (நிலை ஆணைகள்) சட்டம் மற்றும் மாதிரி நிலை ஆணைகள் நிதி 16(y)படி தீய நடத்தையாகும். மேற்படி தீயநடத்தை விதி 17படி தண்டனைக்குரிய செயலாகும்.

எனவே தங்கள் மீது மேற்படி தீய நடத்தைக்காக ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என்பதற்கான விளக்கத்தை இந்த அறிவிப்பு கிடைத்த மூன்று தினங்களில் சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தவறினால் இதில் தங்களுக்கு கூறிக்கொள்ள ஏதுமில்லையென கருதி மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்படி ஜேப்பியாரின் அடாவடித்தனத்தை எதிர்த்து தன்மானத்திற்காக போராடும் அந்த தொழிலாளர்களின் நடத்தை தீய நடத்தையாம். எனில் இந்த ‘தீய’ நடத்தையை தொழிலாளர்கள் முன்னிலும் அதிகமாய் வீரியமாய் செய்வார்கள். ஜேப்பியாரின் ரவுடி ஆட்சிக்கு முடிவுரை கட்டப்போகும் இந்த போராட்டத்தில் மாணவர்களும் இணைந்தால் அது தமிழகத்தில் சுயநிதிக்கல்லூரிகளின் கொட்டத்தை வீழ்த்தும் போராட்டத்தின் முன்னுரையாகவும் இருக்கும்.

  1. சத்யபாமா பல்கலைக்கழகம்: பாறையில் முளைத்த விதை – ஒரு தொழிற்சங்கம் உருவான கதை

    ஜேப்பியாரா? ஆகா உலக உத்தமர் என்று சொல்ல அவர் வீட்டிலேயே ஆள் கிடையாது. உலகறிந்த சாராய ரவுடி, முன்னாள் போலீசு ஏட்டு, முன்னாள் எம்.ஜி.ஆர். அடியாள், இன்னாள் சுயநிதிப் பொறியியல் கல்லூரி தாளாளர் சங்கத்தின் நுனியாள் (தலைவர்) என்று ஏகப்பட்ட முன்னாள், இந்நாள் பேர்வழி. சத்யபாமா, ஜேப்பியார், செயிண்ட் மேரிஸ், செயிண்ட் ஜோசப், குகீகீ, மாமல்லன் போன்ற பொறியியல் கல்லூரிகள், ஜேப்பியார் ஸ்கூல், ஜேப்பியார் பால், ஜேப்பியார் சிமெண்ட், ஜேப்பியார் கான்கிரீட், ஜேப்பியார் ஸ்ட்ராங்க் ஸ்டீல், ஜேப்பியார் ஸ்வீட், ஜேப்பியார் குடிநீர், ஜேப்பியார் டிராவல்ஸ், மாட்டுப்பண்ணை, கல்யாண மண்டபம், முட்டத்தில் உருவாகும் மீன்பிடித் துறைமுகம் இப்படி பலான, பலான நிறுவனங்கள்.

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2146:2008-07-15-20-22-14&catid=67:2008

  2. சட்ட ரீதியில் போராடவேண்டும். அதுவரை பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாற்று வேலை, உதவித்தொகை போன்ற விடயங்களை வினவு செய்யவேண்டும். அக்கவுண்டு நம்பரை போடுங்க நாங்க நிதி திரட்டி தருகிறோம்…

    • நன்றி ரவி, எங்களுக்கே தோன்றாத யோசனை. வேலையிழந்த தொழிலாளிகளுக்கு உதவுதன் மூலம் இந்த போராட்டத்தை வலுப்படுத்தலாம். இதை
      பு.ஜ.தொ.மு தோழர்களிடன் ஒப்புதல் பெற்று தனி இடுகையாகவே வெளியிடுகிறோம். ம.க.இ.க மாநில பொருளாளர் தோழர் சீனிவாசன் அவர்களது
      வங்கிக் கணக்கு விபரம் கீழே தரப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் நன்கொடை அனுப்பலாம். இந்த தொகை களத்திலிருக்கும் அந்த தொழிற்சங்க
      தோழர்களுக்கு வழங்கப்படும்.

      கீழ்கண்ட வங்கிக் கணக்கிற்கு நீங்கள் மணி டிரான்ஸ்பர் மூலமாகவோ அல்லது காசோலை/ டிராப்ட்
      மூலமாவோ அனுப்பலாம்.

      R.Srinivasan
      Account Number – 10398264513
      IFS CODE: SBIN0001683
      State Bank Of India,
      West Mambalam, Chennai.

      தபால் முகவரி:
      ம.க.இ.க, R.Srinivasan, No.16,
      Mullai Nagar Shopping Complex,
      IInd Avenue, Ashok Nagar,
      Chennai – 600 083
      ph- 044 2371 8706
      cell 99411 75876

      vinavu no. (91) 97100 82506

      நட்புடன
      வினவு

      • In fact i was also looking for this information. I started reading this for only few weeks. Though i dont really believe Communism has all the answers for today’s problems, i have lots of regards for the Communists. They and you are the one of the two folks in India (incidentally i would quote RSS as the other one) who are known for the austerity you practice and the convictions. In this time of globalisation and unipolar environment, if the trade unions do not exist, it would spell disaster for all the workers.

        I would be privileged to donate to the cause of your fight for the rights of the working community.

        Forgive me, i am yet to learn to type in Tamil.

        தேங்க்ஸ்,
        Veeramani

  3. //ஜேப்பியாரின் ரவுடி ஆட்சிக்கு முடிவுரை கட்டப்போகும் இந்த போராட்டத்தில் மாணவர்களும் இணைந்தால் அது தமிழகத்தில் சுயநிதிக்கல்லூரிகளின் கொட்டத்தை வீழ்த்தும் போராட்டத்தின் முன்னுரையாகவும் இருக்கும்.//

    உண்மை தான். போராட்டங்கள் பற்றி படர வேண்டும்.

  4. புதிய ஜனநாயகப் புரட்சி ஓங்குக ! மேற்குறிப்பிட்ட அக்கவுண்டிற்கு என்னால் முடிந்த சிறு தொகையை மின்னணு பரிமாற்றம் மூலம் அனுப்பு உள்ளேன். மற்றவர்களும் அனுப்ப வேண்டும் என்று மின்னஞ்சல் அனுப்பு உள்ளேன்.

  5. பண முதலைகள் கல்லா கட்டிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் கண்டிப்பாய் அக்கட்டுரை கல்லாவை நிரப்புவதற்கு சிரமாய் தான் இருக்கும். மாவோயிஸ்டுகளை தடை செய்து பயங்கரவாதத்தை வேர் அறுக்கப்போவதாய் சொல்லும் அரசாங்கம்தான் இந்த மாமாயிஸ்டுகளுக்கு சேவை செய்கிறது.

    அய்யயோ சிறுபான்மையினரதிட்டுறீங்கன்னு யாராவது வந்தா அப்புறம் கவுண்டமணி ஸ்டைல்லதான் ஏத்து விழும் .

    ஆமா வினவு இந்த ஜேப்பியார இவ்வளவு அழகா ஏன் வரைஞ்சீங்க, அதான் கோவன் வந்துடுச்சு

    கலகம்

  6. நான் மகஇக அமைப்பைச் சேர்ந்தவன். தோழர்கள் வலைப்பின்னலிலே இது போன்ற கட்டுரைகள் எழுதுவதினாலே என்ன பிரயோசனம் என்று நினைத்திருந்தேன். ஆனால் மேற்கண்ட 4 மறுமொழிகளை பார்த்தவுடன் என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். ஆதரவளிக்கும் தோழர்களுக்கு நன்றி.

  7. M-G-R- AATCHCHI KAALATHTHIL THOPTHTHUKUDIYILIRUNTHU KADATHTHAL PORUTKALAI ARASU VIRAIVU BUS MOOLAMAAKAVE KADATHTHAL THOZIL SEITHAVAR.CHENNAIYIL KUDIYIRUKKUM APPAVI VEETTU KUDITHTANA KAARARKALAI VIRATTI KATTA PANCHAYATTU SEITHA RAWDI.INTHA PINNANIYIL KASU SERTHTHA IVAR INDRU KALVI THANTHAIYAAM -CHCHEE MAANANGETTAVARKAL.

  8. வினவு என்னால் முடிந்த தொகையை அனுப்புகிறேன் , நம் என் ஒரு கல்லுரி ஆரம்பிக்க குடாது அனைவரும் சேர்ந்து

  9. பணி நீக்கம் செய்த முறை நியாமல்லதான். ஆனால் அந்த ஓட்டுனர்களுக்கு அதே
    சோழிங்கநல்லூர் பகுதியில் வேறு வேலைகள் சுலபமாக கிடைக்கும் என்பதே ஆறுதல்.
    தாராளமயமாக்கல் / உலகமயமாக்கல்களுக்கு பிறகு இது போன்ற வேலை வாய்ப்புகள்
    பெருகியுள்ளன !

    தொழிற்சங்கள் கூடாது என்பதல்ல. அவை நேர்மையுடன், ஆக்கபூர்வமாக செய்லபட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் கடந்த கால வரலாறு அப்படி இல்லையே. சிறி பிரச்சனைகளுக்காக, பல பெரிய நிறுவனங்கள் பல காலம் மூடப்பட்டு, நஸ்டமடைந்த வரலாறுகள். முதலாளி என்பவன் அயோக்கியன், எதிரி என்று ஒரு
    பிரச்சாரம். மிக முக்கியமாக உரிமைகளைக்காக “மட்டும்” தான் போராட்டங்கள்.
    கடமைகளை செய்ய ஒரு வலியுறுத்தலும் இல்லை. அரசின் முட்டாள்தனமான‌
    திட்டங்களால் கடும் விலைவாசி உயர்வு. அதனால் சம்பளம் அதிகரிக்க வேண்டிய கட்டாயம். விலைவாசி உயர்விற்க்கேற்ப சம்பளம் கூட்ட முடியாக நிறுவங்களில்
    பிரச்சனைகள், வேலை நிறுத்தம், தர்னாக்கள். அடிப்படை காரணம் முதலாளிகள் அல்ல,
    மத்திய அரசின் பண வீக்க்ம் உருவாக்கும் பொருளாதார கொள்கைகள் என்பதை பலரும்
    அறிவதில்லை.

    த‌மிழ‌க‌தில் தொழிற்ச‌ங்க‌ ந‌ட‌வ‌டிக்க்கைக‌ள் ப‌ற்றி ஒரு ஆய்வு :

    http://www.hindu.com/biz/2009/06/22/stories/2009062250931400.htm
    Striving for a stable industrial relations

    தென்னக ரயில்வே மசும்தார் சங்க செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகியான
    “தோழர்” கண்ணையாவின் இன்றைய சொத்து மதிப்பு சுமார் 500 கோடிகள் தேறும்.
    இரண்டு பொறியல் கல்லூரிகள் (ஜேப்பியார் போல) வைத்திருக்கிறார். பென்ஸ் காரில்
    ரயில்வே வேலைக்கு செல்கிறார். இவர் ஒரு தொழிலாளர் தோழர் ; எம்மைப் போன்றவர்கள் “எதிரிகள்” ; :)))

    வினவு தள தோழர்கள், கண்ணையா போன்ற ஊழல் தலைவர்களின் வீட்டின் முன்பு
    அமைதியான முறையில் தர்ணா செய்யாலாம். ஊழல் புரியும் அரசி அதிகாரிகள்,
    பொதுத்துறை நிர்வாகிகள் (இந்திய வங்கி கோபாலக்கிருஸ்ணன் போன்றவர்கள்),
    நேர்மையில்லாத தொழிற்சங்க தலைவர்கள் : இவர்களின் லீலைகளை தோலுரித்து,
    சாத்வீகமான காந்திய முறையில் தர்ணா செய்யலாமே ? என்ன தடை ?
    ஜேப்பியார் ம‌ற்றும் சித‌ம்ப‌ர‌ம் கோயில் விசிய‌ங்க‌ளில் காட்டும் அக்க‌ரை இது போன்ற‌
    உண்மையான‌ எதிர்க‌ளை எதிர்ப்ப‌தில் காட்டுவ‌தில்லையே..

    மேலும், மாவோயிஸ்ட் ச‌கோத‌ர்க‌ளின் வ‌ன்முறைக‌ள், கொலைக‌ளை ப‌ற்றி
    மூச்சு விட‌ மாட்டேங்கிறீங்க‌ளே ? அவ‌ர்க‌ளின் வ‌ழிமுறைக‌ள் ம‌ற்றும் வ‌ன்முறைக‌ளை
    (ச‌மீப‌த்தில் த‌டை செய்ப்ப‌ட்ட‌ன‌ர்) ப‌ற்றி என்ன‌ சொல்றீக‌ ?

    • அன்பரே,
      சம்பள உயர்வும் அதை ஒட்டிய விலைவாசி உயர்வும், முதலாளிகளாலே ஏற்படுகிறது. ஒரு முதலாளிக்கு இலாபம் அதிகரிக்க வேண்டுமானால் தான் தயாரிக்கும் பொருளின் விற்பனை மற்றும் விலையை அதிகரிக்க வேண்டும் அல்லது தனது தொழிலாளியின் உழைப்பை சுரண்டவேண்டும். மேலும் அப்பொருளை வாங்கும் சக்தியினை ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரிட்மாவது பணப்புழக்கத்தை உருவாக்க வேண்டும். எப்படி இருப்பினும் பெரும் முதலாளிகளினாலே இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

      • //சம்பள உயர்வும் அதை ஒட்டிய விலைவாசி உயர்வும், முதலாளிகளாலே ஏற்படுகிறது. ///

        wrong and a fallacy. it shows your ignorance of basic economics.
        Inflation, that is price rise due to disproportionate increase in
        money supply is common to any kind of economic system, including
        communism or socialism. All former Sov block nations experienced this.
        no one can escape from the basic laws of economics which are similar
        to basic laws of thermodynamics.

        there are millions of analysis and reports about basic reasons for
        inflation, etc.

    • உஸ் அப்பாடா,

      வாங்க மான், நல்லாயிருக்கீங்களா? அட்ரா சக்க,
      ஆரம்பிங்க நல்லாபோவுது போல இருக்கு, கோருங்க, ரொம்ப விசனப்படாதீங்க நாளைக்கு மொரட்டுவேட்டைங்களா?

      பாத்துங்க யாராவது அவரு கோவப்படறமாறி கேட்டீங்கன்னா கத அவ்வளவுதான், லின்க் கொடுதே கொன்னுடுவாறு. ஆ…………..அக்காங்

      ஏனுங் மான் நம்மூர்ல எல்லோரும் நலமா

    • களத்தில் நின்று போராடிக்கொண்டிருக்கும் தோழர்களுக்கு, அதியமான் வேறு எப்படியெல்லாம் போராடலாம் என யோசனைகள் சொல்கிறார். இவ்வளவு “ஆக்கபூர்வ” யோசனைகள் சொல்கிற அதியமான் அவரளவில் என்ன செய்வார் என்பதை சொன்னால் நன்றாக இருக்கும். ஏனென்றால்.. அவர் வைத்திருக்கும் கருத்து… களத்தில் நின்றால் தானே உரசிப்பார்க்கமுடியும். அதியமான் போராட்டத்திற்கு எங்கிருந்தாலும் வருவார் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  10. http://www.telegraphindia.com/1090625/jsp/nation/story_11155075.jsp
    Sacked techie commits suicide
    OUR SPECIAL CORRESPONDENT

    Hyderabad, June 24: A 29-year-old software engineer who was laid off four months back hanged himself last night, apparently fed up with his joblessness.

    Police said Sachin B. Khandewar, who hailed from Sholapur in Maharashtra and had been working in a city firm, hanged himself from the ceiling fan at his aunt’s house in the Kacheguda area.

    He left behind a suicide note addressed to the police saying his “unsuccessful career” had forced him to take the dire step, the police said.

    “I am bored of this meaningless and useless life. My unsuccessful career is the cause of my death. Nobody is responsible for it,” the note said.

    He had written another note, addressed to his parents and aunt, explaining the reasons for ending his life and apologising to them.

    According to Kacheguda station house officer P. Sai Reddy, Sachin could have killed himself around midnight.

    Aunt Sindhu Chandergi, 65, with whom Sachin had been staying for the past four years, had gone to her native place in Sholapur. She returned this morning, found Sachin hanging in his room, and informed the police.

    Sindhu told the police Sachin had been looking for a job since he was retrenched but could not get one.

    Last Thursday, laid-off software engineer Pradeep Kumar had committed suicide in a hotel near Kacheguda railway station hours after arriving from Bangalore, where he used to work.

  11. நண்பர் அதியமானே,
    ரஷ்யாவில் தோழர் லெனின் தொடங்கி போலிகள் ஆட்சி செய்த அந்த 40 ஆண்டுகள் வரை அங்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரவில்லை என்பதே உண்மை

  12. 1930களில் உருவான செயற்க்கை பஞ்சத்தில் இறந்த கோடிக்கணக்கான உக்ரேனிய மக்க்ளுக்கும், பிற மக்களுக்கும் இது தெரியாது. ஸ்டாலினுக்கு முன் /ஸ்டாலிக்கு பின் என்று சோவியத் வரலாற்றை இரு கூறுகளாக பிரிக்க முடியாது. போலிகள் என்பவ்ர்கள் போலிகள் அல்ல. மனித நேயம், ஜனனாயகம் மற்றும் வெளிப்படை தன்மை அதிகம் உள்ளவர்களையும் நீங்கள் போலிகள் என்று முத்திரை குத்துவீர்களே.

    ஸ்டாலின் காலத்து கொடுமைகளை உங்களை போன்றவர்கள் மட்டும் தான் இன்றும்
    மறுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதை அனுபவித்த மக்களின் சந்ததிகள் மற்றும்
    பிற ஆதாரங்கள் : இவற்றை சதி என்று கூறுவது பேதமை.

    சரி, இருக்கட்டும். வ்லைவாசி உயர்வின் அளவு வேறுபடலாம். ஆனால் அது லெனின் மற்றும் ஸ்டாலின் காலத்திலும் இருந்தது. காரணிகள் பொருளாதார விதிகளால் விளக்க முடியும். அவை எந்த ஒரு அமைப்பிற்க்கும் பொதுவானவை என்பதைத்தான் சுட்டிக்காட்டினேன்.

    • மனித நேயமும் ஜனநாயகத் தன்மை அதிகம் கொண்ட அந்த வள்ளல்கள் பின்பு ஏன் உலகின் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான கம்யூனிசத்தை ஏன் குழி தோண்டி புதைத்தனர்? அவர்கள் நல்லவர்கள் அல்ல, நல்லவர்களைப் போல் நடித்த துரோகிகள், சதிகாரர்கள்

      • askar,

        கம்யுனிச அமைப்பே அப்படித்தான். அது சர்வாதிகாரத்திற்க்கும், தனி மனித உரிமைகளை நசுக்கவும்
        வழி வகுக்கும். திரிபுவாதிகள் / போலிகள் என்போரும் சர்வாதிகாரிகளே. ஆனால் ஸ்டாலின் அளவிற்க்கு கொடுங்கோலர்கள்
        அல்ல. அதாவது ஒட்டுமொத்தமாக ஒரு இனத்தை, ஒரு பகுதி மக்களை வதை முகாம்களில் அடைப்பது,
        களையெடுத்தல் என்று கண்மூடித்தனமாக யாரை வேண்டுமானாலும் கொல்வது, சிறையில் அடைப்பது (புக்காரின், ட்ராட்ஸ்கி மற்றும் பலர்) ; இந்த அளவிற்க்கு ஸ்டாலிக்கு பிறகு வந்தவர்கள் கொடுங்கோலர்களாக இல்லை.

        மனித சுபாவம் பற்றி உங்களுக்கு புரியவில்லை. சுதந்திர தாகம், தனி மனித உரிமைகள், மற்றும் வேலை செய்ய ஒரு மனிதனை உந்தும் அடிநாதம், லாப நோக்கமும் மனித குணம் தான் : இவை பற்றி அறிந்து கொள்ள பட்டறிவும், பரந்த வாசிப்பனுபவமும் தேவை.

      • கம்யுனிச அமைப்பே அப்படித்தான். அது சர்வாதிகாரத்திற்க்கும், தனி மனித உரிமைகளை நசுக்கவும்
        வழி வகுக்கும். திரிபுவாதிகள் / போலிகள் என்போரும் சர்வாதிகாரிகளே. ஆனால் ஸ்டாலின் அளவிற்க்கு அல்ல. அதாவது ஒட்டுமொத்தமாக ஒரு இனத்தை, ஒரு பகுதி மக்களை வதை முகாம்களில் அடைப்பது,
        களையெடுத்தல் என்று கண்மூடித்தனமாக யாரை வேண்டுமானாலும் கொல்வது, சிறையில் அடைப்பது (புக்காரின், ட்ராட்ஸ்கி மற்றும் பலர்) ; இந்த அளவிற்க்கு ஸ்டாலிக்கு பிறகு வந்தவர்கள் கொடுங்கோலர்களாக இல்லை.

        மனித சுபாவம் பற்றி உங்களுக்கு புரியவில்லை. சுதந்திர தாகம், தனி மனித உரிமைகள், மற்றும் வேலை செய்ய ஒரு மனிதனை உந்தும் அடிநாதம், லாப நோக்கமும் மனித குணம் தான் : இவை பற்றி அறிந்து கொள்ள பட்டறிவும், பரந்த வாசிப்பனுபவமும் தேவை.

  13. டாக்டர் ருத்ரன் தொடர் என்ன ஆச்சு? சாமியார்கள் எல்லாம் சுறுசுறுப்பாக இருக்காங்க! ஈசா யோகா மையத்துக்கு தானத்தலைவி ஷ்ரேயா யோகா பயிற்சிக்காக வருகிறாராம். இன்னொரு தானத்தலைவியும் வருகிறார். பேர் மறந்து போச்சு! தொடரை தொடர விரும்புகிறேன். ஏம்ப்பா! மற்ற மக்களும் கொஞ்சம் இதைப்பத்தி கேட்டு எழுதுங்க!

    • //லாப நோக்கமும் மனித குணம் தான் : //

      இது மனித குணமாம்.. . எப்போ இருந்து? அதியமான் லாபம் சம்பாதித்த காலத்திலிருந்தா? போன வாரம் மகிழ்ச்சிக்காக கொலை செய்த கொலைகாரன் ஒருவனை சந்தித்தேன். அவன் சொன்னான் மகிழ்ச்சிக்காக கொலை செய்வதும் மனித குணம்தானாம். இதனை புரிந்து கொள்ள பட்டறிவு தேவையில்லையாம் (ஏனேனில் பட்டறிவு கிடைத்தவன் கொலை செய்யப்பட்டிருந்திருப்பான்), படிப்பறிவும் தேவையில்லையாம். அதியமானிடம் ஒரு அஞ்சு வருசம் பழகினால் போதுமாம்.

      போங்கய்யா… மனித குலத்தின் பரிணாம் வளர்ச்சி குறித்து படிச்சு அறிவு வளத்துக்கோங்கய்யா… அதை விட்டுப்பிட்டு பிடிச்சதெல்லாம் மனித குணம்னு சொல்லி மனுசன அசிங்கப்படுத்தாதீங்க….

      மனுசன்டா…

  14. மனுசன்டா,

    முதலில் மரியாதையாக பேச கற்றுக்கொள். லாப நோக்கம் இல்லாமல் யாரும் எந்த வேலையையும் / தொழிலையும் செய்வதில்லை, செய்ய மாட்டார்கள். சமூக தொண்டு செய்வது வேறு. (அது ஆத்ம திருப்திக்காக) ; சட்டப்படி, தர்மப்படி, பிற மக்களில் அடிப்படை உரிமைகளை நசுக்காமல், ஜனனாயக முறையில் லாபம் தேடுவது முறையான, மிக உன்னதமான செயல். ஆதி மனிதர்களில் ஒரு சிலர் இந்த லாப நோக்கில் தாம் விவசாயம், ஆயுதங்கள், பிறகு வியாபாரம் மற்றும் எந்திரங்களை உருவாக்கினார்கள். யாருக்கும் எந்த லாப நோக்கம் இல்லாமல், உந்துதல் இல்லாமல், (அல்லது சொன்ன / இடப்பட்ட வேலையை மட்டும் செய்து கொண்டிருந்தால்) இருந்திருந்தால், நாம் இன்னும் கற்காலத்திலெயே இருந்திருப்போம். ஒரு சிறு தொழிற்சாலையை நிர்வாகம் செய்து பார்த்தால் புரியும். அல்லது ஒரு கூட்டுறவு
    நிறுவனத்தில் வேலை செய்து பாரும்.

    சட்ட விரோதமாக, தனி மனித உரிமைகளை நசுக்கும் ஒரு கொலைகாரனின் செயலை இத்தோடு ஒப்பிடுவது, அறிவீனம். உமது அறியாமையை காட்டுகிறது.

    இந்தியா போன்ற நாடுகளில் நிலவும் கடும் வறுமை, ஊழல் மற்றும் வன்கொடுமைகளை கண்டால் கம்யூனிசம் தான் தீர்வு என்று தோன்றும் தான். ஆனால் வரலாறு மற்றும் பொருளாதார உண்மைகளை அறிந்து கொண்டால் உண்மை விளங்கும்.

    மேலும் பார்க்க :

    http://jim.com/econ/chap22p1.html The Function of Profits

    http://mises.org/story/2321 Profit and Loss

    உபரி மதிப்பு, சுரண்டல் மற்றும் மார்க்ஸின் அடிப்படையே தவறானது என்பதை பற்றி விரிவாக எழுத உள்ளேன்.

  15. அதியமான் அவர்களே, முதலாளித்துவம் தோன்றி சுமார் 400 ஆண்டுகள் ஆன பின்பும் சுபீட்சம் வரவில்லையே. சுமார், ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்குள்ளும் பொருளாதார நெருக்கடியால் சாவது சாதாரண நடுத்தர & உழைக்கும் மக்கள் தானே. சமீபத்திய பொருளாதார நெருக்கடியில் உங்களுடைய முதலாளித்துவ குருக்களான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் திக்கு முக்காடி போயின.

    பல நூறு ஆண்டுகளாகியும் “நலமான உலகம்” (welfare state) முதலாளித்துவத்தால் படைக்க முடியவில்லையே. காலங்காலமாக முதலாளித்துவ அறிஞர்களும் மண்டையை பிய்த்து கொண்டாலும் பொருளாதார சுழல் நெருக்கடிகளை களைய முடியவில்லையே.

    இப்படி முதலாளித்துவத்திற்கே சிக்கலை தீர்க்காத பொருளாதார முதலாளித்துவ அறிஞர்கள் மார்க்சியத்தை குறை கூறுவது, நகைப்பிற்குரியதாக இருக்கிறது.

    அமெரிக்காவிற்கு டவுசர் கிழிந்த வரலாற்றை இங்கு பார்க்கவும்.
    https://www.vinavu.com/2008/10/13/recession/ (அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது)

    பின் குறிப்பு: ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியின் போதும் நெருக்கடியில் இருந்து மீள பொருளாதார அறிஞர்கள் பாடங் கற்பது மார்க்சின் மூலதனத்தில் (Das Capital) இருந்து தான்.

  16. வேடிக்கையாக இருக்கிறது. நண்பர் திரு.அதியமானே, நீங்கள் கூறும் மிகச் சிறந்த ஜனநாயகவாதிகள் என்று கூறிக்கொள்வோர் இன்று ஏராளம். இன்று உலகம் எவ்வாறு உள்ளது என்று நீங்களே கூறுங்கள். முதலாளித்துவ சமுதாயம் உருவாகி பல நூறு ஆண்டுகள் ஆகின்றன. முதலாளித்துவம் என்பது மனிதனை மனிதன் சுரண்டுவதே. கம்யூனிசம் உருவாகி ஒரு நூற்றாண்டு தான் ஆகிறது. பல இலட்சம் மக்களை இழந்து உருவாக்கப்பட்ட மக்களுக்கான ஒரு சமுதயத்தை(கம்யூனிசம்) குழி தோண்டி புதைக்க தங்கள் கட்சியிலேயே சதிகாரர்கள் சதி செய்கின்றனர் என்றால் எப்படி இருந்திருக்கும். ஸ்டாலினின் களையெடுப்பில் சில தவறுகள் உள்ளனவே. மறுக்கவில்லை. ஆனால் நீங்கள் கூறுவதில் உண்மையில்லை. நீங்கள் முதலாளித்துவ ஊடகங்கள் கம்யூனிசத்தைப் பற்றி கூறியதை அப்படியே வாந்தி எடுக்கிறீர்கள். இந்த கேடு கெட்ட முதலாளித்துவம் எவை மனித குணாம்திசயங்கள் என்று கூறுகின்றனவோ அவற்றையே உண்மை என்கின்றீர்கள். சற்று சிந்தியுங்கள். இவையெல்லாம் யாருக்கு பலனளிக்கிறது என்று. ஒட்டு மொத்த மக்களையும் கணக்கில் கொண்டு சிந்தியுங்கள். ஏன் இன்னும் பெரும்பான்மை மக்கள் பஞசைப்பராரிகளாகவே உள்ளனர் என்று. ஆம் அவர்கள் சர்வாதிகரர்கள்தான். 90 சதவீத்ம் பேர் பஞ்சைப்பராரிகளாகவும், 10 சதவீதம் பேர் செல்வச் செழிப்புடனும் உள்ள இச்சமுதயத்தில், அந்த‌ 10% பேருக்கு அவர்கள் சர்வாதிகாரர்கள்தான். தோழர் மாவோ ஆட்சியில் சுமார் 10 வருடங்களில் சீன மக்கள் அனைவருக்கும் இருக்க இருப்பிடம்(வீடு) அமைத்து கொடுத்தார்கள். இப்போது இருக்கும் ஜனநாயகம் பிதுங்கும் அரசுகள் செய்யுமா?.

  17. தோழர்கள் சு.பா மற்றும் ஆஸ்கர்,

    //முதலாளித்துவம் தோன்றி சுமார் 400 ஆண்டுகள் ஆன பின்பும் சுபீட்சம் வரவில்லையே. ///

    இல்லை. வளர்ந்த நாடுகள் அனைத்தும் 400 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட மிக மிக‌
    சுபிட்ச்சமாக வளர்ந்து உள்ளனவே. காலனியாதிக்கம் மற்றும் ஏகாதிபத்தியம் தான் காரணம்
    என்று நீங்கள் சொல்வீர்கள். அவை முடிந்த பின்னும், காலியாதிக்கம் செய்யாத நாடுகளும்
    வளம் பெற்றுள்ளன. ப‌ல‌ மேற்கு அய்ரோப்பிய‌, ஸ்கான்டினேவிய‌ நாடுக‌ளில் உள்ள‌ன‌வே.
    ஆனால் முழுமையாக‌ இல்லைதான். ராணுவ‌த்திற்க்கு, ப‌ல‌ வெட்டி செல‌வுக‌ளுக்கும் செல‌வாகும்
    ப‌ண‌த்தை முழுவ‌துமாக‌ இத‌ற்க்கு திருப்பினால் முழு தீர்வு கிடைக்கும்.

    இரண்டாம் உலகபோரில் முற்றாக அழிந்த ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா, தைவான், சிங்கப்பூர்
    போன்ற நாடுகள் 1945இல் இருந்து கொடுமையான நிலையில் இருந்து, (காலனியாதிக்கம், ஏகாதிபத்யம் செய்யாமலேயே) மிக மிக வளர்ச்சி பெற்று, வறுமையை ஏறக்குறைய அழித்துவிட்டன.

    இந்தியாவிலும் 1991க்கு பின் வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களின் சதவீதம் வெகுவாக குறைந்து விட்டது. 80 கோடி மக்கள் ஒரு நாளைக்கு ரூ.20இல் வாழ்கிறார்கள் என்பது பெரும் பொய். ஒரு நாளைக்கு
    ஒரு டாலரில் (அதாவது சுமார் ர்ர்.47) இருப்பதே வறுமை கோட்டின் தோராய அளவு. அப்படி என்றால்
    இந்தியாவில் கொடும் வறுமையில் சுமார் 75 சதவீத மக்கள் வாழ்கிறார்களா என்ன ? 50 சததிலிருந்து,
    இன்று சுமார் 26 சதவீதமாக வறுமை குறைந்துள்ளது. அனுபத்திலும் பார்க்கலாம். 70களில் நிலைமை
    எப்படி இருந்தது என்று உங்களுக்கு தெரியா வாய்ப்பில்லை.

    வறுமையை படிப்படியாகத்தான் குறைக்க முடியும். தென் கொரியாவின் வரலாற்றை பாருங்கள். வட
    கொரியாவோடு ஒப்பீடுங்கள். அப்ப புரியும்.

    //பின் குறிப்பு: ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியின் போதும் நெருக்கடியில் இருந்து மீள பொருளாதார அறிஞர்கள் பாடங் கற்பது மார்க்சின் மூலதனத்தில் (Das Capital) இருந்து தான்.//

    இல்லை. மிக தவறு. மார்க்ஸ் கணித்த மாபெரும் வீழ்ச்சி வரவேயில்லை. உபரியை முழுவதுமாக சுரண்டி,
    பிறகு சுரண்ட எதுவுமில்லாமல், முதலாளித்துவம் முற்றாக நொறுங்கிவிடும் என்பதே டாஸ் கேபிடலின்
    கரு. ஆனால் நடந்தது நேர் எதிர்.

    பொருளாதார மந்தம் அல்லது நெருக்கடிகளுக்கு காரணம் இன்னும் சரியான, முழுமையான சுதந்திர சந்தை
    கொள்கைகளை உலகில் எந்த நாடும் அமலாக்கவில்லை எனப்தே காரணம். முக்கியமாக பணத்தை
    அள்வில்லாமல் அச்சடித்து, பண வீக்கத்தை பெருக்கியது, அமெரிக்க வங்கிகளின் விசக்கடன்களை அமெரிக்க‌
    அரசு நிறுவங்களே வாங்க ஒரு அமைப்பை பல ஆண்டுகளுக்கு முன் ஏற்படித்தியது, போன்றவை காரணிகள்.
    மிகவும் சிக்கலானவை. புரிந்து கொள்ள வாசிப்பனுபவம் மிக தேவை.

    பார்க்க :

    http://athiyaman.blogspot.com/2009/04/distortions-in-money-markets-due-to.html

    • //மார்க்ஸ் கணித்த மாபெரும் வீழ்ச்சி வரவேயில்லை. உபரியை முழுவதுமாக சுரண்டி,
      பிறகு சுரண்ட எதுவுமில்லாமல், முதலாளித்துவம் முற்றாக நொறுங்கிவிடும் என்பதே டாஸ் கேபிடலின்
      கரு//

      இணையத்தில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற வசதியை முதலாளித்துவம் ஏற்படுத்தியிருப்பதால் அதியமான் என்ற வலதுமான் இஷடம் போல கண்டதையும், கண்மூடித்தனமாகவும் எழுதுவதையும் அதற்கு உடனுக்குடன் பதில் எழுதுவதற்கு நேரமில்லாததையும் யாரிடம் சொல்லி என்ன ஆகப்போகிறது?

      மார்க்சின் தாஸ் கேப்பிடலை கரைத்து குடித்திருப்பதாக மாய்மாலம் செய்யும் நண்பர் மானே, மார்க்ஸ் தனது ஆய்வில் நிறுவும் விசயம் நீங்கள் சொல்லியிருப்பது போன்று அல்ல. சமூகமயமான உற்பத்திக்கும் தனிநபரின் சொத்துடமை சுவீகரிப்புக்கும் உள்ள முரண்பாடும், ஒரு தொழிற்சாலையின் திட்டமிட்ட உற்பத்திக்கும், ஒரு நாட்டின் அராஜக உற்பத்திக்கும் உள்ள முரண்பாடும்தான் முதலாளித்துவ சமூக்கத்தை உள்ளிருந்தே அழிக்கும் முரண்பாடுகள் என மார்க்ஸ் நிறுவியுள்ளார். இதுதான் இதுவரை முதலாளித்துவ சமூகத்திற்கு ஏற்பட்ட இனி ஏற்படப்போகும் எல்லா பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணமாகும். இந்த அழிவை கொண்டுவருவது கம்யூனிசம் அல்ல என்பதை மான் புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் சுய சிந்தனை தேவை. இணையத்தில் லிங்குகள் கொடுப்பதால் அதை பெற்றுவிட முடியாது. தனது தவிர்க்க முயலாத முரண்பாடுகளால் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளித்துவத்திற்கு கல்லறை கட்டும் வேலை மட்டும் தானாக நடந்து விடாது. அதற்கு கம்யூனிசம் வேண்டும். ஒரு வேளை இந்தக்கடமையை கம்யூனிசம் செய்யத் தவறினால் அப்போது முதலாளித்துவத்தின் முரண்பாடு முற்றி உலகப் போர் அல்லது பாசிச சர்வாதிகார அரசுகள் வரும்.

      400ஆண்டுகளுக்கு முந்தைய முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள சொத்துடைமையின் வேறுபாடு இன்று பலமடங்காக அதிகரித்திருப்பதிலிருந்து யார் முன்னேறியிருக்கிறார்கள் என்பதை தெளிவடையலாம். மற்றபடி இன்றைக்கும் முதலாளித்துவம் மக்களுக்கு வழங்கியிருக்கம் பிச்சை என்பது அதன் தயாள குணத்திலிருந்து அல்ல, மேலும் சுரண்டுவதற்காக, மேலும் போட்டியில் சந்தையைப் பிடிப்பதற்காக.

      இன்று உலகமெங்கும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம்? கட்டிய வீடுகளை, உற்பத்தியான கார்களை வாங்குவதற்கு ஆளில்லை. ஏன் வாங்க முடியவில்லை? வாங்கும் சக்தி இல்லை. ஏன் வாங்கும் சக்தியில்லை? அந்த சக்தி சொத்து சுரண்டலாய் முதலாளிகளிடம் போய் சேர்ந்திருக்கிறது. மற்றபடி இதற்கு முழுமையான சுதந்திர சந்தை இல்லை என்பது முழுப்பூசணிக்காயை கடுகில் மறைக்கும் அபத்தமாகும்.

      அதியமானின் கண்ணோட்டம் அரதப் பழசான ராஜாஜி காலத்து வாதங்களாகும். இதையெயல்லாம் தாண்டி உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. மேலை நாடுகளில் எல்லா வீதிகளிலும் முதலாளித்துவம் ஒழிக என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மக்கள் முழங்கும் காலத்தில் அதியமான் தன்னை அப்டேட் செய்து கொள்ள தேவையான லிங்குகளை பார்வையிடவேண்டும்.

      அதியமானின் பார்வையை முற்றாக திரைகிழிப்பதை நேரம் கிடைக்கும் போது செய்வோம். அதுவரை நண்பர் அதியமான் கோபம் கொள்ளாமல் தனது மேலான பார்வையை இங்கு பதிவிடுமாறு கோருகிறோம். நண்பர்கள் அசுரன், புரட்சி, லவ்வர்பாய், மா.சே, சு.பா, கலகம் அனைவரும் அதியமானுடன் விவாதிப்பதால் மார்க்சியத்தை புதிய முறையில் புரிந்துகொள்ளும் பயிற்சியாக இருக்கும் எனக் கருதி விவாதத்தை தொடரலாம்.

      நட்புடன்
      வினவு

  18. askar,

    i don;t simply vomit from “capitalistic media” ; i too have some reasoning and analytical powers to separate facts from fiction and propoganda. You are the one who swallows all info fed by propoganda machine of Comintern. esp about Mao and Stalin. pls see :

    http://nellikkani.blogspot.com/2008/06/museum-of-communism.html

    மார்க்ஸிசமும், ஸ்டாலினிஸமும்

    http://nellikkani.blogspot.com/2009/03/blog-post_19.html

    • அதியமான், மனித உரிமை மீரல், சோல்சனிட்சின், ஜெமோ, தமிழ்மணி போன்றவைகளை விட்டுத்தள்ளுங்கள்…( நீங்கள் பிறப்பதற்கு முன்னரே திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட பொய் பிரச்சாரத்தை நீங்கள் நம்புவதை தவறு என்பதை விட அறியாமை என்ன கொள்ளலாம்( ஆனால் பொருளாதார மேதைகளான நீங்களும் உங்கள் பேராசியருமாக கலந்து ஆலோசித்து பொருளாதார ரீதியாக முதலாளித்துவம் கம்யூனிசத்தைவிட எப்படி சிறந்தது என்பதை எழுதுங்களேன். … தமிழில்!

  19. போர்கள் முதலாளித்துவத்தின் உச்சமான ஏகாதிபத்திய உலகத்தில் தவிர்க்க இயலாதவை. உலகில் போர் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு முன்நிபந்தனை… முதலாளித்துவத்தை எதிர்த்தே ஆகவேண்டும். முதலாளித்துவம் ஒரு சுழற்சி முறையில் சின்ன அழிவு, பிறகு பேரழிவு என்று தான் வரும்.
    முதலாளித்துவம் வந்து நம்மை காப்பாற்றும் என தொழிலாளிகள் காத்திருக்க முடியாது. அது தினந்தோறும் மரணக்குழிக்குள் தள்ளிக்கொண்டே தான் இருக்கிறது. முதலாளித்துவத்தை புரிந்து கொள்ள…. பரந்த வாசிப்பவனும் ஒன்றும் தேவையில்லை. ஒரு தொழிலாளியாய் இருந்தால் போதும். ஒரு விவசாயியாய் இருந்தால் போதும். வாசிப்பவனுபவம் வேண்டும் என கோருகிற அதியமான்… எந்த புத்தகங்களை எல்லாம் வாசிக்கிறார். எந்த கண்ணோட்டத்தில் வாசிக்கிறார்
    என்பதும் முக்கியமானது.

  20. ஓரளவு சுபீட்சமாக இருந்தது என நீங்கள் சொன்ன நாடுகளும் எல்லாம், சமீபத்திய பொருளாதார நெருக்கடியால் பாதித்துள்ளன. ஆசியாவை பொருத்த வரையில் ஜப்பான் பற்றி நம் நாட்டில் பலருக்கும் உயர்மதிப்பு இருந்தது (என்னையும் சேர்த்து). “அது குட்டி நாடு.. உழைப்பால் முன்னேறியது.. அணுகுண்டு அழிவில் இருந்து மீண்டு வந்த நாடு.. ‘டெக்னாலஜியில் நம்பர் ஒன்’ நாடு…” என பல நல்ல அபிப்ராயங்கள் உள்ளன. நீங்கள் கூறிய படியே மேற்கூறிய எல்லா நல்ல அம்சங்களையும் கொண்ட முதலாளித்துவ நாடு தான். ஆனால் இன்றைய நிலைமை என்ன. தொழிலாளிகள் வேலை அழுத்தம் காரணமாக அகிக அளவில் தற்கொலை செய்யும் நாடும் ஜப்பான் தான். சராசரி வேலை நேரம் என்பது 15, 18 நேரமாக உள்ளது. காட்டுத்தனமாக வேலை செய்ய மட்டும் சுதந்திரம். தொழிலாளிக்கு தேவையான 8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர கேளிக்கை இல்லை.

    தொழிலாளி தற்கொலைகள் ஒரு புறம் இருக்கட்டும். ‘டெக்னாலஜியில் நம்பர் ஒன்’னாக இருந்தாலும், இந்த பொருளாதார நெருக்கடியால் நிலைமை மோசம் அடைந்துள்ளது. பெரும் நிறுவனங்கள் நட்டம் அடைந்து வருகின்றன. எல்லா துறைகளிலும் டெக்னாலஜியில் பல நாடுகள் முன்னேறி வருவதால் அதன் ‘நம்பர் ஒன்’ நிலைமை நிலையானது அல்ல.

    இந்த பொருளாதார நெருக்கடியால் முதலாளித்துவ நாடுகளிலும் பாதிக்கப்படுவது தொழிலாளி தான். நெருக்கடி நிலைமையை காரணம் காட்டி தொழிலாளி மேன்மேலும் சுரண்டப் படுகிறான். நெருக்கடியின் பாதிப்புகளை தலையில் சுமக்கிறான். அங்கு சுதந்திரம் உண்டு – அடிமையாக வேலை செய்யவும் அல்லது தற்கொலை செய்து கொள்ளவும்

  21. இந்தியாவை பொருத்த வரையில் இங்கு முதலாளித்துவம் இருந்திருந்தால் ஒரளவு பல துறைகளில் முன்னேறியிருக்கலாம். இந்தியா இன்றும் அரை காலனிய, அரை நிலபிரபுத்துவ, அரை முதலாளித்துவ நாடாக தான் உள்ளது. ஆனால் இங்கு தேசப் பற்றுள்ள தேசிய முதலாளிகள் சொற்பம். பெரும் முதலாளிகள் அனைவரும் தரகு முதலாளிகள் தான். ஆக இந்தியாவில் நிலபிரபுத்துவ & காலனிய அம்சங்கள் மற்றும் சாதி ஒடுக்குமுறைகளை ஒழித்து முதலாளித்துவ புரட்சியை ஏற்படுத்தும் சக்தியாக இந்தியாவில் தேசிய முதலாளிகள் இல்லை. நம் நாட்டை பொருத்த வரையில் அந்த கடமையும் தொழிலாளி வர்க்கத்தின் தலையில் தான் உள்ளது.

  22. தோழர் வினவு,

    நான் டாஸ் கேபிடலை கரைத்து குடித்தாக நீங்களே ஏன் அனுமானம் செய்து கொண்டு,
    வார்த்தைகளை இரைக்கிறீர்கள். (எனது சொந்த பெயர் அதியமான் தான், உங்க குழுமம் தோழர்கள் போல புனைபெயர் வைத்துக் கொள்ளவில்லை. மேலும் எனக்கு 41 வயதாகிறது. மான், கீண் என்றெல்லாம், நேரில் விவாதம் செய்ய நேர்ந்தால் யாரும் கூற துணிய மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.) மார்க்ஸிசத்தில் சாரத்தை பற்றி
    படித்திருக்கிறேன். டாஸ் கேபிடலை சிறிது படித்து பார்க்க முயன்றிருக்கிறேன். அதை
    முழுமையாக படித்தவர் வெகு சிலரே.

    ///சமூகமயமான உற்பத்திக்கும் தனிநபரின் சொத்துடமை சுவீகரிப்புக்கும் உள்ள முரண்பாடும், ஒரு தொழிற்சாலையின் திட்டமிட்ட உற்பத்திக்கும், ஒரு நாட்டின் அராஜக உற்பத்திக்கும் உள்ள முரண்பாடும்தான் முதலாளித்துவ சமூக்கத்தை உள்ளிருந்தே அழிக்கும் முரண்பாடுகள் என மார்க்ஸ் நிறுவியுள்ளார். இதுதான் இதுவரை முதலாளித்துவ சமூகத்திற்கு ஏற்பட்ட இனி ஏற்படப்போகும் எல்லா பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணமாகும். இந்த அழிவை கொண்டுவருவது கம்யூனிசம் அல்ல என்பதை மான் புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் சுய சிந்தனை தேவை. இணையத்தில் லிங்குகள் கொடுப்பதால் அதை பெற்றுவிட முடியாது.
    ///

    மொத்த உபரி மதிப்பு, காலம் செல்லச் செல்ல சுருங்கும் என்பதும் அவரின் கோணம். முதலில் உபரி மதிப்பு என்று ஒன்றும் இல்லை. அதனால் சுரண்டல் மற்றும் அழிவு இரண்டும் சாத்தியமில்லை என்பது மாற்று கோண்ம். //இந்த அழிவை கொண்டுவருவது கம்யூனிசம் அல்ல என்பதை மான் புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் சுய சிந்தனை தேவை.//// இந்த அழிவை கம்யூனிசம் தான் கொண்டு வரும் என்று நான் எங்கே சொன்னேன் தோழரே ? சரியாக படித்துப்பார்க்கவும். சுய சிந்தனை பற்றி நீங்க சொல்ல கூடாது. (வாசகர்கள் முடிவு செய்வர்). லிங்க்குகள் கொடுப்பது சில மேல் விவரங்களுக்காக. அவ்வளவுதான்.

    மார்க்ஸ் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் அனுமானித்த அழிவு எப்ப வரும் ? சில பத்தாண்டுகளில் வரலாம் என்ற அனுமானம், 150 ஆண்டுகள் ஆகியும் உருவாகவில்லையே. 1930களில் ஏற்பட்ட பெரு மந்தம், பிறகு நடந்த சுழற்ச்சிகள் அனைத்தையும் தாண்டி உலக் பொருளாதாரம் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மார்க்ஸ் சொன்ன படி, ஒவ்வொறு வீழ்ச்சியில் பிறகும், இன்னும் மோசமான் வீழ்ச்சி, மற்றும் சிறு முதலாளிகள் முற்றாக அழிந்து, பெரு முதலாளிகள் மட்டுமே வளார்வர் என்ற ஆருடம் பொய்யாகிவிட்டதே. மேலும் மார்க்ஸிச பாணி புரட்சி அரசமைத அனைத்து நாடுகளும் தான் அழிந்தன. திரிபுவாதிகள் மற்றும் போலிகளின் வேலை இது என்று சர்வ சாதாரணமாக கூறுவீர். அதெப்படி சொல்லி வைத்தார் போல் அனைத்து
    புரட்சி அரசுகளும் காலப்போக்கில் இப்படி வீழந்தது ? மனித இயற்க்கை நீங்க அனுமானிப்பது போல இல்லை. மனிதன் வேலை செய்ய உந்து சக்தி பற்றி தெரிந்து கொள்ளா வாழ்க்கை அனுபவம் மற்றும் திறந்த மனம் தேவை. மனிதர்களை எது என்று மார்க்ஸிசம் கூறுவதை வரலாறு பொய்பித்துள்ளது.

    ///அதியமானின் கண்ணோட்டம் அரதப் பழசான ராஜாஜி காலத்து வாதங்களாகும். இதையெயல்லாம் தாண்டி உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. மேலை நாடுகளில் எல்லா வீதிகளிலும் முதலாளித்துவம் ஒழிக என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மக்கள் முழங்கும் காலத்தில் அதியமான் தன்னை அப்டேட் செய்து கொள்ள தேவையான லிங்குகளை பார்வையிடவேண்டும்.
    ///

    இல்லை. உமது வாதங்கள் தான் அரத பழசு. லத்தீன் அமெரிக்க மற்றும் அனைத்து வளரும் நாடுகளும் (இந்தியா உள்பட), 1980 வரை இருந்த பொருளாதார கொள்கைகளை முற்றாக நீக்கி, சுதந்திர பொருளாதார சந்தை முறைகளை பின் பற்ற தொடங்கியது, சதியாலோ அல்லது அமெரிக்க ஏகாதிபத்திய சூழ்ச்சியாலோ அல்ல. சில பொருளாதார உண்மைகள் நிதர்சனமாக புரிந்த பின் நடந்த மாற்ற‌ம் இது. சிலியின் பொருளாதார வரலாற்றை படித்து பாருங்கள். உங்க்ளை போன்றவர்கள் மதவாதிகள் போன்ற நம்பிக்கை கொண்டவர்கள். அறிவை விட உணர்ச்சியை நம்புவர்கள். எதிரி என்று உருவகப்படுத்தி,
    அவர்களை அழித்தால், சொர்கத்தை நிருவலாம் என்ற நம்பிக்கை. மார்க்ஸிச சித்தாந்தம் விஞ்ஞான ரீதியானது. இறுதியானது என்ற எண்ணம் வேறு..

    சரி அய்யா, மார்க்ஸ் கூறிய‌ ப‌டி, இறுதி அழிவு வ‌ர‌ட்டும். பிற‌கு புர‌ட்சி செய்து, புதிய‌ அமைப்பை நிறுவி, சொர்க‌த்தை நிலை நாட்டுங்க‌ள். good luck to you all.

    • நண்பரே, ஒரு நாடு முன்னேற்றமடைகின்றது என்பது அந்நாட்டில் உள்ள அனைத்து மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதாக இருக்கவேண்டும். மக்கள் தானே நாடு, மக்கள் வளர்ச்சிக்குத்தானே திட்டங்கள். உயர்ந்த கோபுரங்களும், கையடக்க கருவிகளும், அதி விரைவு தொழில்நுட்பங்கள் மட்டுமே முன்னேற்றம் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் கூறுகின்ற அந்த மனிதனின் இயற்கை குணங்கள்(!) மனிதனுக்கு பேரழிவைத் தருகிறது என்றால் அதிலிருந்து படிப்பினை பெற்று அதை மாற்றிக்கொள்ள பக்குவப்பட வேண்டும். இப்பொழுது நிலவுகின்ற உற்பத்தி முறை(சுமர் 300 ஆண்டுகளாக) அனைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவில்லை என்பது நிதர்சன உண்மை. சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பொருளாதார வீழ்ச்சி வருவதும் அதனால் பல இலட்சம் மக்கள் பட்டினியால் சாவதும் இயற்கை என்கிறீரா? பொருளாதார வீழ்ச்சி வருவது முதலாளிகளினால், சாவது பாட்டளிகளா? இது எந்த வகையில் நியாயம். ஒவ்வொரு முறையும் பல இலட்சம் பேரை பலி கொடுத்துதான் படிப்பினை பெறுவீர்களா? ஏன் ஒரு முறை கம்யூனிசத்தை முயற்சி செய்யக்கூடாது.

      ரசியாவிலும் சீனாவிலும் வந்தது சோசலிச அரசாங்கம். சோசலிச அரசாங்கம் என்பது கம்யூனிச அரசாங்கத்தை நோக்கிப் போகின்ற முதல் படி.முதலாளித்துவத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இடைக்கட்டம். இவ்வுலகில் கம்யூனிச ஆட்சி முறைமையே இன்னும் வரவில்லை. அத்ற்குள் கம்யூனிசமே தோற்றுவிட்டது என்று எப்படி கூற முடியும்? ஐயாயிரம் ஆண்டுகளாக நிலவுகின்ற இந்த சுரண்டல் சமூக அமைப்பு முறை வெரும் 50 ஆண்டுகளிலே எப்படி மாறும்? இது என்ன சினிமாவா? இந்த சுரண்டல் சமூக அமைப்பு முறைமைக்கு எதிராக பாட்டாளிகள் தங்களது யுத்தத்தை தொடங்கியிருக்கிறார்கள். தொடக்கம் தான் ரசியாவும் சீனாவும். யுத்தத்தில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இன்னும் முடியவில்லை. சோசலிச கட்டமைப்பில் பொதுவுடைமைக் கூறுகளும், முதலளித்துவக் கூறுகளும் உள்ளடங்கியிருக்கும். இக்காலகட்டத்தில் தான் முதலாளிகள் பாட்டாளி வர்க்க ஆதவர்களாக நடித்து கட்சித் தலைமையை கைப்பற்றி பின்னடைவுக்குள்ளாக்கியிருக்கின்றனர்.

  23. வினவு மற்றும் நண்பர்களுக்கு,

    விதண்டவாதம் / உளரல்கள் / இரவல் அறிவை / இவற்றை “மூலதனமாக” கொண்டு வாதம் பண்ணும் ” மான்” க்கு முக்கியங்கொடுத்து நாம் பேசுவது நமக்கு நேர‌மும் / ச‌க்தியும் விர‌ய‌மாகும்.

    ஏனெனில் இவ‌ர் லிங்க் கொடுத்தே ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ப‌டுத்திவிடுவார். இங்கும் ம‌ற்றும் ப‌ல‌ வ‌லைப்பூக்க‌ளில் இதை ஒரு வியாதியாக‌ ப‌ர‌ப்பிக்கொண்டிருக்கிறார். தான் அறிவுஜீவி என்று காட்டிக்கொள்வ‌த‌ற்கும் ம‌ற்றும் த‌ன் வ‌லை த‌ள‌த்தை விளம்ப‌ர‌ ப‌டுத்துவ‌த்ற்கு யுத்தியாக மிக‌ முனைப்பாக‌ உள‌றிக்கொண்டிருக்கிறார். வினைவும்/ந‌ண்ப‌ர்க‌ளும் இவ‌ரோடு விவாதிப்ப‌து, உங்கோள‌ட‌ பொறுமைக்கும் / பெருந்த‌ன்மைக்கும் சான்று.

    இவ‌ருடைய‌ கோப‌க்க‌ண‌ல் மொழி பல பல பதிவுகளில் பிரசித்தம்…
    இப்போதெல்லாம், மான் வலைப்பூக்கில் துள்ளி குதித்து ஒடி வ‌ருகிறார் என்றாலே, வாரி சுருட்டிக்கொண்டு க‌ணினியை off செய்து விட்டு துண்டை காணோம், துணியை காணோம் என்று ஒடுகிறார்க‌ள்…

    வாழ்க‌ மானின் இண‌ய‌த்த‌ள‌ தொண்டு!!!!

    பின் குறிப்பு: சுய‌ சிந்த‌னை ப‌ற்றி வாச‌க‌ர்க‌ள் தான் முடிவுசெய்ய‌வேண்டும் என்று சொல்கிறார்..ஆகையால் வாச‌க‌னாக‌ என்னுட‌ய‌ இந்த‌ ம‌றுமொழி..

  24. அதியமானை மான், கீன் என்று யாரும் அழைக்காதீர்கள்,

    அதியமானை இனி முந்திரிக்கொட்டை என்றே அழைக்கலாம்
    இந்த மாதிரியாட்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன்
    எல்லாம் தெரிந்த முந்திரிக்கொட்டை போல்தான் பேசுவார்கள்.
    சைடு கேப்ல நான் கரூர் ரவுடி கத்தி எடுத்தா வெட்டாம (எத ?)வுட மாட்டேன்னு காமெடி வேற! வயதை பத்தி சங்கட படும் முந்திரிக்கொட்டை.
    உங்க(மருவாதி, மருவாதி ) ரூட்லயே வந்தாலும் மார்கஸ் , ஸ்டாலினுக்கு
    அவுங்கல என்ன வயது? பத்தி நீங்களும் விமர்சனம் பண்ணகூடாது அதான நியாயம்

  25. அதியமான் அவர்களே, நெருக்கடிக்கான காரணங்களாக நீங்கள் சொல்பவற்றை ஏற்று கொள்கிறேன்.

    >>பொருளாதார மந்தம் அல்லது நெருக்கடிகளுக்கு காரணம் இன்னும் சரியான, முழுமையான சுதந்திர சந்தை கொள்கைகளை உலகில் எந்த நாடும் அமலாக்கவில்லை எனப்தே காரணம். முக்கியமாக பணத்தை அள்வில்லாமல் அச்சடித்து, பண வீக்கத்தை பெருக்கியது, அமெரிக்க வங்கிகளின் விசக்கடன்களை அமெரிக்க‌ அரசு நிறுவங்களே வாங்க ஒரு அமைப்பை பல ஆண்டுகளுக்கு முன் ஏற்படித்தியது, போன்றவை காரணிகள்.

    >> ராணுவ‌த்திற்க்கு, ப‌ல‌ வெட்டி செல‌வுக‌ளுக்கும் செல‌வாகும் ப‌ண‌த்தை முழுவ‌துமாக‌ இத‌ற்க்கு திருப்பினால் முழு தீர்வு கிடைக்கும்.

    முதலாளித்துவ அரசுகள் ஏன் ஏகாதிபத்தியமாக மாறுகிறது. ஏன் பாசிசமாக வளர்கிறது? ஏன் பெருமுதலாளிகளை பித்தலாட்டங்கள் செய்ய அனுமதிக்கிறது.

    ஏனென்றால் அவை முதலாளிகளின் நலன்களுக்கான அரசு. அவை எப்படி பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கான நல்லரசாக மாறும்? தானாக மாறுவதற்கு “அதிசயம்” தான் நடக்க வேண்டும்.

    “முழுமையான சுதந்திர சந்தை கொள்கை” அதாவது “Perfect Competition” என்பதை எந்த முதலாளித்துவ அரசும் இது வரை அமலாக்க முடியவில்லை. பெயரளவில் தாரளமயம், உலகமயம், தனியார்மயம் என போட்டி வளர்க்கும் கலாச்சாரம், அனைவருக்கும் சுதந்திரம் என்று ஏட்டளவில் சொல்லிக்கொண்டு, பெருமுதலாளிகளின் விருப்பப்படியே முதலாளித்துவ அரசுகள் ஆடி வருகின்றன. அவர்களுக்கு தேவைப்பட்டால் தனியார்மயமாக இருக்க வேண்டும். நட்டம் வந்தால் அரசு உதவ வேண்டும், அதாவது பொதுமக்களின் வரிப்பணத்தை வாரி வழங்க வேண்டும். ஒவ்வொரு நெருக்கடிகளின் போதும் இதுதானே நிலைமை.

    ஆக முதலாளிகளால் உண்மையான ஜனநாயகத்தை கட்டியமைக்க முடியவில்லை. அவர்களால் நடத்தப்படும் ஜனநாயகத்தை நேர்மையாக, பொதுவாக நடத்த முடியவில்லை.

  26. ஒவ்வொரு நெருக்கடிகளுக்கும் வித விதமான பெயர்கள். பணமுதலைகள் மக்கள் பணத்தை சுருட்டி கொள்வதின் முடிவுரையாக வருவது “பொருளாதார நெருக்கடி”. மறுபடியும் மக்கள் பணத்தை சுருட்ட ஆரம்பிக்கும் முன்னுரையாக கூறப்படுவது “பொருளாதார வளர்ச்சி”.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க