privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஉமாசங்கர் ஐ.ஏ.எஸ்: கருணாநிதி குடும்ப ஆட்சிக்குப் பலிகடா!

உமாசங்கர் ஐ.ஏ.எஸ்: கருணாநிதி குடும்ப ஆட்சிக்குப் பலிகடா!

-

மாசங்கர் எனும் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரியை பலரும் அறிந்திருப்பார்கள். நேர்மையான அதிகாரி என்ற பெயரெடுத்த உமாசங்கர் இப்போதுதான் தனது நேர்மைக்குரிய சோதனையை தன்னந்தனியாக சந்தித்து வருகிறார்.

மாறன் சகோதரர்களுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் மதுரை தினகரன் ஊழியர் எரிப்பு பிரச்சினையை ஒட்டி விரிசல் ஏற்பட்ட போது உருவானது அரசு கேபிள் டி.வி. இதன் நிர்வாக இயக்குநராக உமா சங்கர் நியமிக்கப்பட்டார். கேபிள் வலைப் பின்னலில் மாறன்களது சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் ஏகபோகத்தை உடைப்பதுதான் இதன் நோக்கம். கலைஞர் டி.வியும் அப்படித்தான் அவதரித்தது.

இந்தப் பின்னணியில் உமாசங்கர் முழுவீச்சில் அரசு கேபிள் டி.வியை உருவாக்க முனைந்தார். பிறகு சுமங்கலி நிறுவனத்தை அரசுடமையாக்க வேண்டுமென்றும், இதற்கு எதிராக எல்லா முறைகேடுகளையும் வைத்து அரசு கேபிள் டி.வியை முடக்க நினைக்கும் மத்திய அமைச்சர் (அநேகமாக தயாநிதி மாறன்) ஒருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் பரிந்துரைத்தார்.

சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் மீது கேபிள் ஆபரேட்டர்களுக்கும், மற்ற தமிழக சேனல்களுக்கும் மிகுந்த வெறுப்புணர்வு இருக்குமளவு அவர்களது ஏகபோகம் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அதனாலேயே கேபிள் டி.வி விநியோகஸ்தர்கள் அரசு நிறுவனத்தில் சேருவதற்கு ஆர்வம் காட்டினர். இதையே முன்னர் ஜெயலலிதா உருவாக்க முனைந்த போது கூட்டணி மத்திய அரசின் தயவில் கருணாநிதி குடும்பம் முறியடித்ததும் குறிப்பிடத்தக்கது.

பிறகு மாறன் சகோதரர்களும், கருணாநிதி குடும்பத்தாரும் சேர்ந்து விட்டனர். அரசு கேபிள் டி.வி அதோகதியாய் மரணிக்க விடப்பட்டது. மாறிய கேபிள் விநியோகஸ்தர்கள் நட்டாற்றில் விடப்பட்டனர். உமாசங்கரும் மாறன்களது கடும் கோபத்திற்கு ஆளானார். பிறகு என்ன?

உமாசங்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டார் என்று தமிழக அரசால் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு ஆளானார். அவர் மீது நடவடிக்கையும், விசாரணையும் ஏவிவிடப்பட்டது. தற்போது இதற்கு எதிராக உமாசங்கர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருக்கிறார். அதில்தான் அரசு கேபிள் டி.விக்காக தான் பரிந்துரைத்த விடயங்களுக்காக பழிவாங்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.

இதற்கு பதிலளித்திருக்கும் தமிழக அரசு அவர் மீதான அந்தக் குற்றச்சாட்டிற்கு முதல் நிலை ஆதாரங்கள் உள்ளதால் விசாரணையிலிருந்து அவருக்கு விலக்களிக்க முடியாது என்று கூறியிருக்கிறது. இதன் மீது நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் என்று இப்போது தெரியவில்லை.

ஆனால் கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்காக உமாசங்கர் பலிகடாவாக்கப் பட்டிருக்கிறார் என்பதில் மட்டும் சந்தேகமில்லை. இப்போது தன் மீதான குற்றச்சாட்டை அவர் மட்டுமே எதிர்கொண்டுவருகிறார். சக அதிகாரி இப்படி பலிகடாவாக்கப்பட்டது குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் வாயைத் திறக்கவில்லை. பத்திரிகைகளில் தங்கம், ஜென்டில்மென் என்று கவர் ஸ்டோரி வருவதற்கு ஆசைப்படும் அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எவரும் இவை போன்ற உண்மையான அதிகார-அரசியல் ஆதிக்கம் மிரட்டல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை.

உமாசங்கருக்கு நடந்தது நாளை நமக்கும் நடக்கும் என்பதே அவர்களது நிலையாக இருக்கும். இது உண்மையென்றால் கருணாநிதியின் குடும்ப ஆட்சியையும், ஊழல் முறைகேடுகளையும் யாரும் கனவில் கூட எதிர்க்க முடியாது என்ற சூழல் வரும். ஊடகங்களும் கருணாநிதி ஜால்ராவாக மாறிவிட்ட நிலையில் இத்தகைய அதிகாரிகள் தமது அதிகாரி-வர்க்க மேட்டிமைத்தனத்தை உதறிவிட்டு மக்கள் அரங்கில் நின்று கொண்டு போராடவேண்டும். இன்னும் வெளிவராத உண்மைகளை அம்பலப்படுத்த வேண்டும். கருணாநிதியின் காட்டுதர்பாரை மக்கள் ஆதரவுடன் வீழ்த்துவதற்கு இத்தகைய முன்முயற்சிகள் வேண்டும்.

உமாசங்கர் முன்வருவாரா?

__________________________________________________________

 

  1. […] This post was mentioned on Twitter by வினவு, ஏழர. ஏழர said: தி.மு.க. குடும்ப அரசியலில் சிக்கிய ஒரு ''பிழைக்கதெரியாத'' அதிகாரி – உமாசங்கர் IAS – http://bit.ly/bYjz53 […]

  2. Mr Umasankar has decleared himself as Hindu and got the posting under dalit catagery where as all his family members are christians. Please practice before someone preach

    • ஒரு தலித் கிறிஸ்டியன் ஆகா மாறிவிட்டால் அவன் தலித் இல்லை என்று ஆகி விடுமா இல்லை அவன் மதம் மாறிவிட்டன என்று உயர்சாதியினர் பெண் கொடுதுவிடுவார்களா?எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்களின் வர்க்க பார்வை மாறும்வரை எவ்வளவு உயர்த இடத்தில் இருந்தாலும் தலித் மற்றவர்களின் பார்வையில் அவன் தாழ்தப்பட்டவகவே கருதப்படுவான்.

    • சம்பந்தமில்லாத அர்த்தமில்லாத புலம்பல் இது. சாதி வெறி ஒரு மனிதனின் நேர்மையைப் பாராட்டவிடாமல் கண்ணை மறைத்தால், நீ மனிதனாக இருந்து என்ன பயன்?

  3. உண்மையிலையே உமாசங்கர் ஒரு நேர்மையான அதிகாரி. சில வருடங்களுக்கு முன் திருவாரூரில் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தபோது மிகவும் நேர்மையாகவும் மக்களின் காவலனாகவும் பல நல்ல காரியங்களை செய்தார். அதுசரி நேர்மையாக இருந்தால்தான் இந்தநாட்டில் வாழ்வதே கடினம் ஆயிற்றே!!!!!!!!!!

    • நானும் அந்த மாவட்டத்தைச்சேர்ந்தவன் என்றமுறையில்…

      உமாசங்கர் நேர்மையானவர் மற்ற அதிகாரிகளுக்கு ஒரு முன் உதாரணம்.

  4. யோக்கியன் வர்றாரு சொம்பை உள்ள வைங்கப்பா. தன்னுடைய மாமனார் ஆந்திராவில் தலைமைச் செயலாளர் அப்படீன்னு பீலா விட்டு ஆரம்பக் காலத்தில் கீழத் தஞ்சை மாவட்டத்தில் இவர் அடித்த கொட்டம் அங்குள்ள ஒவ்வொரு அரசு அலுவலகமும் கூறும்.

    இலவச கம்ப்யூட்டர் வழங்கும் திட்டத்தில் அன்னாரது கைவண்ணத்தையும் சி.பி.ஐ. கொண்டு ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

    • எலே, என்னல புழுகுத.
      எப்பா உலகமகா யோக்கியன் வாராரு, comments-ஐ diable பண்ணுங்கப்பா

  5. makkale oozhal vaathikal thaan.oru 500 ruba kedaicha pothum vanngittu vote pottu quarter adichuttu kuppura kidakkum oru koottaththai nambi eppadi kalam
    iranguvathu ? ithil makkal pakkam ninru poraadinaal uma kathi atho kathi thaan

  6. உமாசங்கர் போன்ற தைரியசாலிகள் இது போன்ற அரசியல் நாய்களிடம் கடிபடாமல் இருக்க மக்கள் ஆதரவு மிகவும் முக்கியம்.

    • மக்களா, அவங்களுக்கு சொரண செத்து ரொம்ப நாளாச்சு சார்! எப்படா தேர்தல் வரும், மரியாதய அடுகு வச்சு 500 ரூவா வாங்கலாமேண்ணு காத்துக்கிட்டு இருக்காங்கப்பா சனங்க

  7. பெரிய இடத்துல அடிச்சுப்பாங்க, பொறவு ஒண்ணா சேந்துப்பாய்ங்க… இதப் புரிஞ்சு இவரு அரசு கேபிள் டீவி விஷயத்துல சூதனமா நடந்திருந்தா இந்தப் பிரச்சனை வந்திருக்குமா 🙁

  8. 1. திருவாரூர் மாவட்ட ஆட்சியாளராக இருக்கும் போது மாவட்ட நிர்வாகப் பணிகளில் கணினி மயமாக்கம் ஆரம்பித்து இந்தியாவிலேயே (ஏன், உலகிலேயே) அரசுப் பணிகளில் கணினி பயன்படுத்தலுக்கு முன்னோடியாக திருவாரூர் மாவட்டத்தை மாற்றினார்.

    இது நடந்தது முந்தைய 1990களின் இறுதியில் முந்தைய திமுக ஆட்சியின் போது.

    2. ஆட்சி மாறி அதிமுக பதவிக்கு வந்த போது இலாகா இல்லாத அதிகாரியாக மாற்றப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார்.

    3. மீண்டும் ஆட்சி மாறிய பிறகு, எல்காட் நிறுவனத்தின் செயலராக இருந்த போது பள்ளிகளுக்கு கணினிகளை திறவூற்று மென்பொருட்களுடன் வினியோகித்தார். தமிழ்நாட்டில் திறவூற்று மென்பொருட்களை பரவலாக்க பல முயற்சிகளை எடுத்தார்.

    குறைந்த விலையில் மடிக்கணினிகளை மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்யும் திட்டத்தை செயல்படுத்தினார்.

    4. ஏதோ அரசியலினால் அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டு அரசு கேபிள் திட்டத்துக்கு நியமிக்கப்பட்டார்.

    அந்தத் திட்டத்தையும் சிறப்பாக செய்து முடித்திருப்பார், இந்த குடும்ப அரசியல் காய் நகர்த்தல்களில் மாட்டிக் கொண்டு மீண்டும் ஒரு திறமையான அதிகாரி, செய்து காட்டும் முனைப்புடைய அதிகாரி, சமூக பொறுப்புணர்வு கொண்ட அதிகாரி பணி முடக்கப்பட்டிருக்கிறார்.

    தமிழ்நாட்டின் சாபக் கேடு இது.

    மா சிவகுமார்

    • //இது நடந்தது முந்தைய 1990களின் இறுதியில் முந்தைய திமுக ஆட்சியின் போது.//

      Varudam thavaru. 2000 enpathu sariyanathu

      • வினவின் தலைப்போடு ஒத்து போகிறேன்.
        மற்ற யாஸ் அதிகாரிகளோடு ஒத்து பார்க்கும் பொழுது உமாசங்கர் பெட்டராக தெரியலாம்.

        //
        திருவாரூர் மாவட்ட ஆட்சியாளராக இருக்கும் போது மாவட்ட நிர்வாகப் பணிகளில் கணினி மயமாக்கம் ஆரம்பித்து இந்தியாவிலேயே (ஏன், உலகிலேயே) அரசுப் பணிகளில் கணினி பயன்படுத்தலுக்கு முன்னோடியாக திருவாரூர் மாவட்டத்தை மாற்றினார்.
        //??
        IBM கணினி தான் வாங்குவேன் என்று அடம் பிடித்து வாங்கினாரே தோழர். அப்பொழுது வந்த கமிசனை என்ன செய்தாரம்.
        திருவாரூரில் அவர் ஒரு சாப்ட்வர் டீம் உருவகினரே (அரசு செலவில்) அதனை என்ன செய்தார் என்று தெரியுமா தோழர்.

        • abc,

          வருடத்தைத் திருத்தியமைக்கு நன்றி.

          சொல்லுங்க,
          ஐபிஎம் கணினி வாங்கி கமிஷன் என்ன செய்தார்?
          அவர் உருவாக்கிய மென்பொருள் குழு என்ன ஆனது?

          அதற்கு உமாசங்கரிடம் பதில் கேட்போம்.

          அன்புடன்,
          மா சிவகுமார்

        • பெயர் வெளியில் தெரிய விரும்பாத ஒரு நண்பர் தனி மடலில் தெரிவித்த கருத்துக்கள்

          ==============
          //
          IBM கணினி தான் வாங்குவேன் என்று அடம் பிடித்து வாங்கினாரே தோழர். அப்பொழுது வந்த கமிசனை என்ன செய்தாரம்.//

          முதலில் ஐபிஎம் மெயின் பிரேன் வாங்கியது தொடர்பாக
          உமாசங்கர் ஒன்றல்ல, இரண்டு ஐ.பி.எம் கணினிகள் வாங்கினார். இரண்டும் மெயின் பிரேம். ஒன்று சென்னையிலுள்ள டேட்டா செண்டரிலும், மற்றொன்று மதுரையிலுள்ள டேட்டா செண்டரிலும் உள்ளன
          சில applicationகள் சென்னை கணினியிலிருந்து செயல்படும். அவற்றிற்கு automatic backup மதுரை மெயின்பிரேம்.
          சில applicationகள் மதுரை டேட்டாசென்ண்டரிலிருந்து செயல்படும். அவற்றிற்கு automatic backup சென்னை மெயின்பிரேம்

          மிக அற்புதமான திட்டம்

          திற மூல மென்பொருட்களில் உள்ள applicationகளை எல்லாம் இங்கு மாற்றுவது தான் திட்டம். தற்சமயம் ஒவ்வொன்றாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இரு கணினிகளும் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. http://www.tn.gov.in/policynotes/pdf/information_technology.pdf பக்கம் 22 முதல் 34 வரை (பிடிஎப் கோப்பின் பக்கம் 15-20) TNSWAN மூலம் அரசு அலுவலகங்கள் இணைக்கப்படும் போது இதன் முழு வீச்சும் தெரியும்

          இது வரை ஒவ்வொரு திட்டத்திற்கும் 8 முதல் வழங்கிகள் வாங்கிக்கொண்டிருந்தார்கள் (application server, database server, backup, report etc என்று பல உண்டு). இனி அவை எதுவும் தேவைப்படாது. தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் இதிலிருந்து செயல்படுத்தலாம் . மேலும் அவை TNSWAN hubல் இருப்பதால் intranet ஆக கூட பயன்படுத்திக்கொள்ளலாம். வேகம் அதிகம். பொதுவெளியில் தகவல் செல்லாததால் பாதுகாப்பு அதிகம். இது போல் பல சாதகங்கள் உள்ளன

          அடுத்ததாக கமிஷன்

          சில காலங்களுக்கு முன்னாள் கோவை அண்ணா பல்கலைகழக துனை வேந்தர்மேல் லஞ்சப்புகார் வந்ததே நினைவிருக்கிறதா ?? காரணம் உமாசங்கர் இரண்டு ஐ.பி.எம் கணினிகள் வாங்கிய அதே பணத்தில் அங்கு ஒரு கணினி வாங்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது தான்

          கோவை பல்கலை கழகம் ஒரு கணினி வாங்கும் அதே பணத்தில் ஒருவர் இரண்டு கணினிகள் வாங்கும் போது கமிஷன் என்று கூறுவது எரிச்சலை ஏற்படுத்துகிறது

          மைக்ரோசாப்ட், ஓரக்கள் என்று அவர் நினைத்திருந்தால் எவ்வளவு கமிஷன்களை பெற்றிருக்க முடியும். அங்கு எல்லாம் வாங்காத கமிஷனை ஐபிஎம் ல் வாங்கினாரா

          அது சரி

          வெளியில் விற்கும் விலையில் பாதி விலைக்கு மடிக்கணினி தந்தாரே. அது கூட் கமிஷன் தானா… கடுப்பாக வருகிறது சிவக்குமார்…
          ====================
          மா சிவகுமார்

  9. Umasankar before he is behave as a dmk party man .so this their own party politics. Dont fell as a honest officer revenged by karunas famliy.He is also conferred IAS.Namma katchi kara payya

  10. ஊடகங்களும் கருணாநிதி ஜால்ராவாக மாறிவிட்ட நிலையில் இத்தகைய அதிகாரிகள் தமது அதிகாரி-வர்க்க மேட்டிமைத்தனத்தை உதறிவிட்டு மக்கள் அரங்கில் நின்று கொண்டு போராடவேண்டும். இன்னும் வெளிவராத உண்மைகளை அம்பலப்படுத்த வேண்டும்.

    அற்புதமான கருத்து…

    பொது வெளியில் தமக்கான நியாயங்களையும், உண்மைகளையும் அவர் முன்வைக்கட்டும்…

  11. உமா சங்கர் உண்மையில் நேர்மையான அதிகாரி மயிலாடுதுறையில் சப் கலக்டர் ராக
    இருந்த பொழுது தன்னுடைய நேர்மையான நடவடிக்கையால் எங்கள் பகுதி மக்களின்
    மனதில் இடம்பிடித்தவர்.
    அவர் மற்ற இடங்களுக்கு மாற்றல் ஆகி போனோலும் அவர் எங்கே இருக்கிறார் என்று
    செய்தி தாள்களை பார்த்து கொள்வோம்

    இதனை படிக்கும் பொழுது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.
    இது போல நல்ல
    அதிகாரிகளை ஊக்க படுத்தாமல் இந்த அரசியல் பன்னிகள் கேவலத்தான் படுத்துகின்றன.

    முஹம்மது ஹிஷாம்

  12. ஐயா
    அனைத்து ஊடகங்களும் ஜால்ராவாக மாறிவிட்ட நிலையில் நீங்கள் மட்டுமே உண்மையை எழுதி வருகிறீர்கள்.
    கருணாநிதியை எதிர்ப்பவர்கள் எவருமில்லை என்ற சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்கள். தமிழகம் என்ன கதியாகும் எனத்தெரியவில்லை.

  13. தமிழக மீனவர்களுக்காக சிறை சென்ற சீமானுக்காக எந்த மீனவனாவது போராட்டம் நடத்தினானா?
    நாளைக்கே குவாட்டரும் ஒரு கலர் டிவியும் கொடுத்தால், இதே கருணாநிதியை மீண்டும் முதல்வராக்கி அழகு பார்ப்பார்கள்.
    வேண்டுமானால் , அந்த இறந்த மீனவன் குடும்பம் மட்டும் இவருக்கு ஒட்டுப்போடாது. பக்கத்துக்கு வீட்டில் தானே பிரச்சனை , நமக்கு ஒன்றும் இல்லையே என்கிற எண்ணம்தான் இப்போது தமிழகத்தில் ஓங்கி உள்ளது.

  14. மாணவர்களுக்காக மடிக்கணினிகளை கொள்முதல் செய்யும் சமயத்தில் ஒருமுறை எல்காட் அலுவலகம் சென்றிருந்தேன். Dell, Acer, IBM போன்ற பல்வேறு நிறுவனங்களில் இருந்து Sales Executives வந்திருந்தார்கள்.

    ஒவ்வொருவரையும் தங்கள் நிறுவன லேப்டாப்பின் மேல் ஏறி நடக்கச் சொல்லி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். இவர் கேட்கும் features அவர்களின் எந்த மாடலிலும் இருக்காது. இருந்தாலும் அதிகமாக கொள்முதல் செய்ய இருப்பதால், இதையெல்லாம் சேருங்களேன் என்பார். அலறுவார்கள்! ஆனால், விட மாட்டார். தனது பணியையும், அதன் வலிமையையும் அந்தளவுக்கு நேசிப்பவர்.

    பொது மக்களின் பணம் ஒரு பைசாக் கூட விரயம் ஆகி விடக்கூடாது என்று அவர் எடுத்துக்கொண்ட அக்கறை, காய்கறிக் கடையில் அக்கறையுடன் நல்ல காய்கறிகளை தேர்ந்தெடுத்து அதை பேரம் பேசி வாங்கும் நமது வீட்டு தாய்மார்கள் நடந்து கொள்வதைவிடத் தீவிரமானது.

    இப்பொழுது நான் கலந்துகொண்ட செம்மொழி மாநாட்டிலும் எல்காட்டின் பங்கு மிக முக்கியமாக பேசப்பட்டது.

    அப்போது எல்காட்டைச் சேர்ந்த அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்கள் உமாசங்கரைத் தான் இன்னும் தனது ஆதர்ச வழிகாட்டியாகக் கருதுவதாக தெரிவித்தார்கள். ஆனால், அவர்தான் இதுவரை இவர்களை அதிகமாக வேலை வாங்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரியுமாம். அப்படியிருந்தும் அவர்தான் இவர்களுக்கு ஹீரோ.

    ஆட்சிகள் மாறும். காட்சிகளும் மாறும். எதற்கும் பங்கம் வராது.

    We will wait for Umashankar’s turn soon.

  15. இப்படி நேர்மையானவராக பரவலாக அறியப்பட்ட உமாசங்கர், எல்காட்டில் சேர்மேனாக வேலைப் பார்த்த போது, தன்னுடைய மனைவி பெயரில் ஒரு சாப்ட்வேர் கம்பெனி தொடங்கி, எல்காட் நிறுவனத்தின் மூலம், அந்த நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.

    கருணாநிதி அரசிடம், அரசு விருப்புரிமை கோட்டாவில், திருவான்மியூரில் ஒரு வீட்டு மனை பெற்றுள்ளார்.

    இவர் நேர்மையானவராக இருந்திருந்தால், இவரை பணியிட மாற்றம் செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்திருக்க இயலாது. இவர் கை சுத்தமாக இல்லாததால் தான், இத்தனை சிக்கல்களை இன்று சந்தித்து வருகிறார்.

    தன்னுடைய சம்பளத்தில் நேர்மையாக, தான் வாங்கிய சொத்துக்களை நாமக்கல் ஆட்சியர், சகாயம் போல வெளிப்படையாக உமாசங்கர் போடுவாரா ? போட மாட்டார். ஏனென்றால், இவர் மீதுள்ள குற்றச் சாட்டுகளில் உண்மை இருக்கிறது. இவரிடம் குற்றம் குறைகள் ஏதும் இல்லையென்றால் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை சந்திக்க வேண்டியதுதானே ? எதற்காக அதற்கு தடையாணை வேண்டி, உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார் ?

    இவர் மீது, துறை நடவடிக்கை பாய்ந்த பிறகுதான், தலித் என்று தன்னை அடையாளப் படுத்திக் கொண்டு, தலித் கூட்டம் ஒன்றில் பேசினார் என்பது குறிப்பிடத் தக்கது. தன் மீது, துறை நடவடிக்கை பாய்ந்ததும், சிலுவையில் அறையப் பட்ட ஏசுநாதராக ஆக முயற்சிக்கிறார் என்பதுதான் உண்மை.

    பரவலாக அறியப் படுவது போல, 8 ஆண்டுகளுக்கு முன் இருந்த உமாசங்கர் இல்லை இவர். அதிகார வர்க்கத்தின் மாயச்சுழலுள், இவர் சிக்கிக் கொண்டார் என்பதே உண்மை.

    விசாரிக்காமல், வினவு இப்படி விசாரிக்காமல் பதிவு எழுதியது வருத்தமாக இருக்கிறது. மற்ற சமூகத்தினர் அனைவரையும் விட, தலித்துகள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதே சவுக்கின் கருத்து. ஏனெனில், தலித்துகள் இன்றும் இந்த சமூகத்தில் கண்ணாடிக் கூண்டினுள்ளேதான் இருக்கிறார்கள். இவர்கள் மீது கல்லெறிய மொத்த சமூகமும் தயாராக இருக்கையில், தலித்துகள், எவ்வித குற்றச் சாட்டுகளுக்கும் இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும்.

    இவர் தன்னுடைய மனைவி பெயரில் சாப்ட்வேர் கம்பெனி தொடங்கி அதிகார துஷ்பிரயோகம் செய்து சம்பாதிக்க நினைப்பது போலத்தான், கருணாநிதி, பெரிய அளவில் செய்கிறார்.

    • தோழர் மா. சிவகுமாருக்கு,

      சவுக்கு என்றா பெயரில் எழுதியது நான் இல்லை. அதன் முதல் பதில் உள்ள ஒரு விசயதொடு ஒத்து போகிறேன். கீழே நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அதில் இருக்கின்றது. ஆனால் அவர் ஆரம்பித்தது அதிமுக ஆட்சிநடக்கும் பொது… அவருடைய கணினி டிம் அப்படியீ அந்த்த அழுவலகத்தில் சேர்ந்தது என்று கேள்விபட்டேன்.

      //abc,
      வருடத்தைத் திருத்தியமைக்கு நன்றி.
      சொல்லுங்க,
      ஐபிஎம் கணினி வாங்கி கமிஷன் என்ன செய்தார்?
      அவர் உருவாக்கிய மென்பொருள் குழு என்ன ஆனது?
      அதற்கு உமாசங்கரிடம் பதில் கேட்போம்.
      அன்புடன்,
      மா சிவகுமார் //

      //இப்படி நேர்மையானவராக பரவலாக அறியப்பட்ட உமாசங்கர், எல்காட்டில் சேர்மேனாக வேலைப் பார்த்த போது, தன்னுடைய மனைவி பெயரில் ஒரு சாப்ட்வேர் கம்பெனி தொடங்கி, எல்காட் நிறுவனத்தின் மூலம், அந்த நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.//

      • abc, சவுக்கு,

        நான் என்னளவில் உமாசங்கர் பற்றி அறிந்ததை சொல்கிறேன். அவர் தவறு செய்திருந்தால் அதன் பலன்களை அவர் அனுபவிக்க வேண்டும். ஆனால், நான் பார்த்தது வரை அவர் சமூக விழிப்புணர்வுடன் கூடிய அரசு அலுவலர்.

        A.

        2001ம் ஆண்டின் இறுதியில் நான் மென்பொருள் தொழில் தொடங்குவதற்காக பலரை சந்தித்து வந்தேன். ஒரு நண்பரின் தொடர்பில் திரு உமாசங்கரை நந்தனத்தில் இயங்கி வந்த ஒரு மென்பொருள் அலுவலகத்தில் சந்தித்தேன்.

        1. அப்போது அவர் அரசு நிர்வாகத்தில் பொறுப்பு எதுவும் கொடுக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்தார். நாங்கள் கொண்டு போயிருந்த லினக்சு முதலான விபரங்களை ஆர்வமாகப் பார்த்தார்.

        2. திருவாரூரில் கணினி மயமாக்கலுக்காக தான் செயல்பட்டதை குறிப்பிட்டார். மென்பொருள் உருவாக்கத்துக்காக தனியாக ஒரு குழு உருவாக்கி அதனுடன் பல மணி நேரம் செலவழித்ததைச் சொன்னார்.

        3. தமிழக நிர்வாகப் பணியிலிருந்து மாற்றம் பெற்று மத்திய சேவைக்குப் போவது கூட ஒரு வழியாக இருந்தாலும், முடிந்த வரை தமிழ்நாட்டிலேயே போராடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்திருப்பதாகச் சொன்னார்.

        4. பிஎஸ்என்எல்லின் WLL சேவை மூலம் குறைவான கட்டணத்தில் செல்பேசி சேவைகளைப் பயன்படுத்தலாம் என்று தன் கையில் வைத்திருந்த ஒரு கருவியைக் காட்டினார்.

        B.
        அவர் எல்காட் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்த போது மைக்ரோசாப்டின் ஏகபோகத்தை உடைத்து எல்காட் அலுவலகத்திலும் மற்ற அரசு துறைகளிலும் திறவூற்று மென்பொருட்களை பயன்படுத்த கொள்கை முடிவை செயல்படுத்தினார்.

        1. அது தொடர்பான ஒரு காணோளி
        http://www.youtube.com/watch?v=3_g72GcaIdc

        இதற்கான பின்னூட்டங்களில் உமாசங்கர் பதில் கூட அளித்திருக்கிறார்.

        2. சென்னை லினக்சு பயனர் குழுவின் தன்னார்வலர்களை அழைத்து தமிழகம் எங்கும் அரசு அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து திட்டங்கள் தீட்டினார்.

        3. தமிழக பள்ளிகளுக்கு கணினி வினியோகிக்கும் போது இலவசமாக கிடைக்கும் திறவூற்று மென்பொருட்களை பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு சேமித்தார்.

        4. மடிக்கணினி நிறுவனங்களுடன் பேசி, தமிழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை சந்தை விலையை விட பாதி விலையில் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

        5. என்னுடைய நண்பர் ஒருவரின் (அரசுத் துறையில் பொறுப்பான பதவியில் இருப்பவர்), உமாசங்கரின் முனைப்பான நடவடிக்கைகளால் அரசு துறைகளில் கணினி பயன்பாட்டில் ஆக்கபூர்வமான விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

        அன்புடன்,
        மா சிவகுமார்

        • உங்களை போன்று நானும் ஒரு சில முறை அவரிடம் பேசி இருக்கிறேன். தான் ஒரு ஐ ஏ எஸ் என்ற எண்ணமே இல்லாத அளவுக்கு பேசுவார். தோழர் அவருடைய நிர்வாக திறமையை நான் எங்குமே குறை சொன்னது இல்லையி… சிறந்த நிர்வாகி என்பது வேறு இங்கு சொன்ன விஷயம் வேறு.
          நான் என்னுடைய முதல் பதிவிலே “வினவின் தலைப்போடு ஒத்து போகிறேன் என்று சொல்லிவிட்டேன்”. தலைப்போடு மட்டுமே.

    • தலித்துகள் மட்டும் நேர்மையாக நடந்துகொள்ளவேன்டும் என்று சொல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது .

      • தலித் மட்டும்தான் சிரட்டையில் டீ காப்பி குடிக்கணும்னு சொன்னபய ஊர்தான இது!

  16. abc,

    தமிழ்நாடு போகும் போக்கைப் பார்த்தால் (அரசு கேபிள் டிவி, பொறியியல் கல்லூரி சேர்க்கை, போலி மதிப்பெண் சான்றிதழ்கள், தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுத்தல், தகவல் தொடர்புத் துறை ஊழல், திரைப்படத் துறை, தொலைக்காட்சித் துறை ஏகபோகம்), அப்படியே பக்கத்து மாநிலத்தில் இரும்பு தாது மாஃபியாக்கள், குஜராத்தில் ரிலையன்சு மாஃபியா.

    சீனாவில் நடந்தது போல, மக்கள் கொதித்து எழுந்து பதர்களை ஒழித்தால்தான் விடிவு காலம் வரும் என்று தோன்றுகிறது 🙁

  17. இவர் உண்மையிலேயே ஊழல் செய்தாலும் அது ராசா அளவிற்கு இருக்க வாய்ப்பில்லை ஆகையால் இவரது திறமைக்காக மன்னிக்கலாம்

  18. அரசு அதிகாரிகள் பழி வாங்கப்படுவதை எத்தனை முறை பார்த்திருக்கின்றோம்.

    எவ்வளவுதான் பட்டாலும் நம் தமிழன் திருந்தவே மாட்டான்.

    நடிகர்கள் பின்னே போனான். நடிகைகள் பின்னே போனான்.

    பப்ளிக்காக பணம் வாங்கி ஓட்டுப் போடப் பழகிக்கொண்டான்.

    வினவு உங்களைப்போல விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவர்கள், பதிவுகள் இன்னும் அதிகம் வர வேண்டும்.

    மேல்த்தட்டை நம்மால் மாற்ற முடியாது.

    நடுத்தரம் என்றும் மாறவே மாறாது.

    அடித்தட்டு மனிதர்கள் மாற வேண்டும்.

    இவர்கள்தான் இங்கு பெரும்பான்மையாக இருப்பவர்கள்.

    இவர்களிடம் இருந்து தொடங்குங்கள்.

    முதலில் எந்தப் பொருள் வாங்கினாலும் பில் இல்லாமல் வாங்க மாட்டோம் என்று முயற்சிப்போம்.

    லஞ்சம் கொடுப்பதையும் கூடவே வாங்குவதையும் தவிர்ப்போம்.

    நேர்மையான முறையில் ஓட்டளிப்போம்…

    (இதெல்லாம் ஏற்கனவே சங்கரு, முதல்வன், அந்நியன் படத்துல சொல்லிட்டாறுங்காண்ணு… அடங்கொய்யால…பின்னால இருந்து யாருயா கூவுறது???? )

    ம்…ம்…. நம்ம சனங்களத் திருத்த இனி ஒரு புது அவதாரம்தான் வரணும்… என்னத்தச் சொல்ல …

  19. Tamil Nadu Government especially DMK party leader Mr.Karunanidhi has imposed false case on Mr.Umasankar who is genuine in his service. Mr.Umasankar has scapegoated for the feudal of Mr.Karunanidhi and Maran’s family. Mr.Raja, Central Minister has dis scam about 5000 crores and given to Mr.Karunanidhi’s family. Hence Mr.Karunanidhi likes only Mr.Raja not Mr.Umasankar. Mr.Karunanidhi always do corruptions and personally dislike a particular community Devendrakula Velalar in Tamil Nadu which is belongs to Mr.Umasankar. People should aware about the corruption lead government under Mr.Karunanidhi and his party should defeat in the next election.

    • Vanthuttanu sollu..
      Thirumba vanthuttanu.. Sollu..
      Umasangar collecter thirumba vanthuttarnu.. Solluu..
      Eppdi ponaro athavida PAYANGARAM ah vanthuttarnu solluu….
      U.UMASANGAR – II
      IAS
      coming soon………..

Leave a Reply to ezhil பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க