privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்நோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி!

நோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி!

-

nokia-kills

காஞ்சிபுரம் அருகே உள்ள கலவை எனும் ஊரைச் சேர்ந்தவர் அம்பிகா. வயது 23 இருக்கலாம். பெற்றோருக்கு மூத்த பிள்ளை, ஒரு தம்பியும், தங்கையும் இருக்கிறார்கள். வரும் ஜனவரி 8 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. சுங்குவார் சத்திரத்தில் இருக்கும் நோக்கியா ஆலையில் கடந்த முன்று வருடங்களாக அம்பிகா வேலை செய்கிறார். நேற்று இரவு அவர்,ஆலையில் கொடுரமாக இறந்து போயிருக்கிறார். எனினும் இதை விபத்து என்று சொல்வார்கள். நாங்கள் இதை கொலை என்கிறோம்.

இந்தியா, சீனா இரண்டு நாடுகளில் இருக்கும் எல்லா நோக்கியா ஆலைகளும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 100 மில்லியன் செல்போன்களை உற்பத்தி செய்து முடிப்பதற்கு வேலை செய்து வருகின்றன. இந்த இலக்கை அடைவதற்கு தொழிலாளிகள் இரக்கமின்றி ஒரு எந்திரம் போல வேலை செய்ய வேண்டும். செய்கிறார்கள்.

சென்னை நோக்கியா ஆலையில் ஏ,பி,சி எனும் மூன்று ஷிப்ட்டுகளிலும் தலா ஒன்று முதல் இரண்டு இலட்சம் செல்பேசிகளை உற்பத்தி செய்கிறார்கள். இந்த இலக்கை அடைவதற்கு அங்காடி தெரு திரைப்படத்தில் வரும் கொடூரமான சூபர்வைசர் அண்ணாச்சியை விட கொடூரமான மேலாள நிர்வாகிகள் அங்கு இருக்கின்றனர்.

நேற்று இரவு (31.10.2010) பி ஷிப்ட்டில் தொழிலாளி அம்பிகா வேலை செய்கிறார். அவரது யூனிட்டின் பெயர் “இன்ஜின் ஆபரேஷன் ஃபைனல் அசம்பிளி” என்று சொல்கிறார்கள். இங்கு “ரவுட்டர் கட்டிங் மிஷின்” எனும் இயந்திரம் மொத்தமாக வரும் செல்போன்களுக்குரிய மதர்போர்டுகளை தனித்தனித் துண்டுகளாக்கி பிரிக்கும். வேலையின் போது சில பீஸ் போர்டுகள் எந்திரத்தில் விழுந்தால் தொழிலாளிகள் அதை கைவிட்டு எடுப்பார்கள். அவர்கள் கை நுழைந்த உடனேயே அந்த எந்திரத்தில் உள்ள ஆட்டோமேடிக் சென்சார் இயந்திரம் இயங்கி அறுப்பதை நிறுத்தி வைக்கும்.

ஆனால் இந்த ஆட்டோமேடிக் சென்சார் இயந்திரம் வேலை செய்தால் அதனால் பத்து, பதினைந்து நிமிடம் உற்பத்தி தாமதாமாகிவிடும் என்பதால் இதை மூடியே வைத்திருப்பார்கள். அதாவது தொழிலாளி தன் உயிரை பணயம் வைத்து சில விநாடிகளுக்கும் விழுந்துவிட்ட ஃபோர்டுகளை எடுக்க வேண்டும். இது பச்சையான படுகொலை இல்லையா?

எந்திரத்தில் சில ஃபோர்டுகள் விழுந்துவிட்டால் அதை அப்படியே விட்டுவிட முடியாது. ஏனெனில் அறுக்கப்படும் எல்லா போர்டுகளுக்கும் தொழிலாளிகள் சரியான கணக்கு கொடுக்க வேண்டும். இந்நிலையில் நேற்று மாலை சுமார் ஏழுமணிக்கு அப்படி விழுந்துவிட்ட ஃபோர்டை எடுப்பதற்கு அம்பிகா முயன்றிருக்கிறார். எனினும் அப்போது அந்த எந்திரத்தின் சென்சார் வேலை செய்யும் என்று அவர் நினைத்திருக்கிறார். ஆனால் அதன் செயல்பாடு நிறுத்தப் பட்டிருப்பது அவருக்கு தெரியவில்லை. அதன்படி அம்பிகா கழுத்தின் பின்புறமாக அந்த எந்திரம் அறுக்கத் தொடங்கியிருக்கிறது.

கழுத்து அறுபட அறுபட இரத்தம் ஏராளமாக வழிய ஆரம்பித்திருக்கிறது. ஒரு கம்பி கழுத்தில் ஆழமாக சென்றுவிட்டதால் இரத்தம் உடலுக்குள்ளேயே ஏராளமாக கசிய ஆரம்பித்திருக்கிறது. இதன் காரணமாக அவருக்கு நான்கைந்து முறை மாரடைப்பு வந்திருக்கிறது. ஆனால் வெளியே யாருக்கும் இது தெரியவில்லை. சில பெண் தொழிலாளிகள் இதைப் பார்த்துவிட்டு மயக்கம் போட்டு விழுந்துவிட்டனர். சில ஆண் தொழிலாளிகள் உடனே எந்திரத்தை உடைத்து அம்பிகாவை காப்பாற்ற முயன்றிருக்கின்றனர்.

ஆனால் அங்கிருந்த சூபர்வைசர் வெற்றி தேவராஜ் மேலிடத்தில் பேசிவிட்டு மிஷனை உடைப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை. மேலும் அந்த எந்திரம் இரண்டு கோடி ரூபாய் விலை உள்ளது என்றும் அதை பொறுமையாக டூல்சை கொண்டு படிப்படியாக கழட்டலாம் என்று அவர் சொல்லிவிட்டு எந்திரத்தை உடைக்காமல் இருப்பதற்கு பாதுகாப்பாக செக்யூரிட்டிகளை நிறுத்தியிருக்கிறார். டூல்சை கொண்டு கழட்டலாம் என்றால் அங்கே டூல்ஸ் பாக்சும் இல்லை.

இதற்குள் 10 நிமிடங்கள் கழிந்துவிட்டன. ஏராளமான இரத்தம் வழிந்துவிட்டது. கழுத்தை அறுத்த அந்த எந்திரத்தில் இருந்து அம்பிகா மீட்கப்படவில்லை. இறுதியில் வேறுவழியின்றி தொழிலாளிகள் நிர்வாகத்துடன் சண்டை போட்டு எந்திரத்தின் கட்டரை உடைத்து அம்பிகாவை மீட்கின்றனர். இப்போது மொத்தம் 20 அல்லது 25 நிமிடங்கள் முடிந்துவிட்டன்.

ஆலையிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் இருக்கும் ஜெயா மருத்துவமனைக்கு அம்பிகா கொண்டு செல்லப்படுகிறார். அதற்குள் அவர் உயிர் பிரிகிறது. பின்னர் அவரை கே.எம்.சி, அப்பல்லோ என்று மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்கிறார்கள். தொழிலாளிகளின் கூற்றுப்படி அம்பிகா அதற்கு முன்னரே இறந்து போயிருக்கிறார்.

ஆலைக்குள் வரும் தொழிலாளிகள் எவரும் தமது செல்பேசிகளை பணியிடத்தில் கொண்டு செல்ல முடியாது என்பதால் அம்பிகாவின் மரணம் அவர்களுக்கு உடனேயே தெரியவில்லை. “அசம்பிள் டூ ஆர்டர் செக்ஷன்” எனும் பிரிவின் சூபர்வைசர் ஜே.புருஷோத்தமன் அம்பிகாவின் மரணத்தை மறைத்து தொழிலாளர்களை தொடர்ந்து பணியாற்ற பணித்திருக்கிறான். அம்பிகாவுக்கு ஒன்றுமில்லை, இரத்தம் ஏற்றுகிறார்கள், எல்லாரும் வேலையை தொடருங்கள் என்றும் கூறியிருக்கிறான். இவன் மீது பாலியல் புகார் உள்ளிட்டு 12 புகார்கள் இருக்கின்றன என்றாலும் நிர்வாகம் இவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் அவனது மேலாண்மையில் உற்பத்தி இலக்கு நிறைவேறுகிறது என்பதே.

பின்னர் மருத்துவமனையின் நர்ஸ் வழியாக அம்பிகாவின் மரணச் செய்தி தொழிலாளிகளுக்கு கிடைக்கிறது. அதன் பின்னர் இரவு 12 மணிக்குத்தான் உற்பத்தியை நிறுத்துகிறார்கள். அதுவும் கூட தொழிலாளிகளின் கோபத்தால் நடந்ததே அன்றி நிர்வாகத்தால் அல்ல. அம்பிகாவின் மரணம் இரகசிய செய்தியாக கசிந்த பிறகே நிர்வாகம் அதை ஒப்புக் கொண்டிருக்கிறது. எப்படியும் உற்பத்தியை நிறுத்தக்கூடாது என்பதுதான் அவர்களது விருப்பம்.

மருத்துவமனையில் அம்பிகாவின் பெற்றோர் கதறி அழுதவாறு இருக்கின்றனர். எந்திரத்தை உடனே உடைத்திருந்தால் தங்களது மகளை காப்பாற்றியிருக்கலாமே என்று அவர்கள் குமுறுகிறார்கள். அந்த எந்திரத்தின் மதிப்பான இரண்டு கோடியை தந்துவிட்டால் தங்களது மகளின் உயிர் திரும்ப கிடைக்குமா என்றும் அவர்கள் ஆவேசப்படுகிறார்கள்.

ஏற்கனவே சிலமாதங்களுக்கு முன்னர் நோக்கியாவில் தொழிற்சங்கத்தின் மூலம் நிர்வாகத்தின் சுரண்டலை எதிர்த்து போராட்டம் நடந்திருக்கிறது. அதையெல்லாம் ஈவிரக்கமின்றி ஒடுக்கிய நிர்வாகம் 100 மில்லியன் இலக்கு வெறிக்காக கொடுரமான வேலை முறையை கையாண்டிருக்கிறது.

கட்டிங் மிஷினுக்குள் விழுந்துவிடும் ஃபோர்டுகளை எடுக்க வேண்டியதில்லை என்று தொழிலாளிகளுக்கு அறிவித்திருந்தால் அம்பிகா கொல்லப்பட்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் 100 மில்லியன் இலக்கை அடையமுடியாமல் போயிருக்குமே?

எந்திரத்தை உடனே உடைத்திருந்தால் அம்பிகாவை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் இரண்டு கோடி நட்டமாயிருக்குமே, அதற்கு என்ன செய்ய முடியும்? கட்டிங் இயந்திரத்தின் சென்சார் போர்டை எப்போதும் இயக்கத்தில் வைத்திருந்தால் அம்பிகா இறந்திருக்க மாட்டார். ஆனால் நிறுத்தப்படும் ஒவ்வொருமுறையும் உற்பத்தி தடங்கலுக்குள்ளாயிருக்குமே, அதற்கு என்ன செய்வது?

100 மில்லியன் இலக்கை அடைய வேண்டுமென்றால் இத்தகைய அபாயகரமான சூழ்நிலையில்தான் நோக்கியா தொழிலாளிகள் வேலை செய்ய வேண்டும். அப்படித்தான் அவர்கள் வேலை செய்கிறார்கள். அப்படி வேலை செய்ததினால்தான் இன்று அம்பிகா கொல்லப்பட்டிருக்கிறார்.

சென்ற மாதம்தான் நோக்கியா ஆலைக்கு 6 எஸ் (6S) எனும் சிறந்த பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஆலை என்ற விருது கொடுக்கப்பட்டாதம். அந்த பாதுகாப்பு இலட்சணத்திற்கு ரத்த சாட்சியம்தான் அம்பிகா.

கட்டிங் இயந்திரத்தின் சென்சார் ஃபோர்டு இயங்குவதற்கு தடை போட்டு, அதையும் தொழிலாளிக்கு அறிவிக்காமல், அறிவித்தாலும் அபயாத்தோடு கையை விட்டு விழும் போர்டுகளை எடுப்பது என்று பின்னர் இயந்திரத்தை உடைக்க கூடாது என்று தடை போட்டு, இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அம்பிகா கொடுரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்.

சன் டி.வியில் ஒரு ஒற்றை வரி செய்தியோடு இந்த படுகொலை முடிந்து விட்டது. நோக்கியா ஆலைக்கு சென்ற வினவு செய்தியாளர்களைத் தவிர அங்கு எந்த ஊடக நபர்களும் இல்லை. எல்லா ஊடகங்களிலும் நோக்கியா விளம்பரம் கல்லா கட்டுகிறது என்ற உண்மை காரணமாக அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தொழிலாளிகளிடையே பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக போலீசு பெருமளவில் அங்கே குவிக்கப்பட்டிருக்கிறது.

அம்பிகாவின் கொலை செய்யப்பட்டதை சாதாரண விபத்தாக மாற்றுவதற்கு தி.மு.க பிரமுகர்கள் முயல்கிறார்கள். போராட தொழிற்சங்க தலைமை இல்லாத காரணத்தால் தொழிலாளிகள் என்ன செய்வதென்று திகைத்திருக்கிறார்கள். அம்பிகாவின் உடல் அப்பல்லோவின் சவக்கிடங்கில் இருக்கிறது.

அடுத்த மாதம் பின்லாந்தில் ஒரு வெற்றிவிழா நடக்கும். அது நோக்கியாவின் 100 மில்லியன் இலக்கை அடைந்த சாதனைக்கான கேளிக்கை விழா. நோக்கியா முதலாளிகளும், அதிகாரிகளும் சீமைச்சாரயத்தை பருகியவாறு தமது வெற்றியை சிலாகிப்பார்கள்.

அவர்கள் பருகுவது சாராயமல்ல, அம்பிகாவைப் போன்ற தொழிலாளிகளின் இரத்தம் என்பதை நாங்கள் குறித்து வைத்திருக்கிறோம். பழி தீர்ப்போம்.

___________________________________________________________________________________________

–          வினவு செய்தியாளர்கள், நோக்கியா ஆலை மற்றும் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து…..
___________________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. BREAKING NEWS: நோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி!…

    சுங்குவார் சத்திரம் நோக்கியா ஆலையில் தொழிலாளி அம்பிகா நேற்று இரவு கொடுரமாக இறந்து போயிருக்கிறார். இதை விபத்து என்று சொல்வார்கள். நாங்கள் இதை கொலை என்கிறோம்….

  2. நோக்கியா செல்பேசிகளின் மதர்ஃபோர்டு பேனலின் மதிப்பு 500 அல்லது 600 ரூபாய் இருக்கும் என்கிறார்கள் தொழிலாளிகள். அதை உருவாக்குவதும் அசுர வேகத்தில் செய்ய வேண்டும். நோக்கியாவின் அந்த 500 ரூபாய் மதிப்பை காப்பாற்றுவதற்குத்தான் அம்பிகா கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

    • ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதை மேலதிகரிடம் சொல்ல வேண்டும்.அல்லது பாதுகாப்பு விதிமுறையை கடைபிடித்து வேலை செய்திருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல்…….

      • முதல்ல அந்த மேலதிகாரிங்க யோக்கியதைய தெரிஞ்சுக்க கட்டுரைய நல்லா படிங்க. அப்புறம் பார்ப்போம் நீங்க யாரோட நலம் விரும்பி என்று?

  3. முதலாளித்துவ லாப வெறி எவ்வளவு பெரிய மனிதப் படுகொலையையும் செய்யும் என்பதற்கு தொழிலாளி அம்பிகா மீது நோக்கியாவின் பச்சைப் படுகொலை மீண்டும் ஒரு சாட்சியம்.
    ஆட்டோமேடிக் சென்சார் மெசினைக் கொண்ட ஆலை என்பதற்காக 6எஸ் எனும் சிறந்த பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஆலை என்ற சான்றிதழ் கொடுத்த அரசு, இந்த ஆட்டோமேடிக் சென்சாரை செயலிழக்கச் செய்து ஒரு படுகொலையை செய்ததற்காக “லாப வெறிக்காக படுகொலைகளும் செய்யும் ஆலை” என்று அரசு இவ்வாலைக்கு சான்றிதழ் கொடுக்குமா? நாம் கொடுப்போம். தக்க தருணத்தில் பழியும் தீர்ப்போம். முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்க இந்நேரத்தில் சபதமேற்போம்!

  4. இது பச்சைப் படுகொலை. சொரணையும் சுயமரியாதையும் உள்ள யாரும் இதைக் கண்டிக்க வேண்டும். ஊடகங்களின்
    துரோகத்தனம் அம்பலப்படுத்தப் பட வேண்டும். இந்த உயிர்களின் மேல் தான் சல்லிசு விலை செல்போன்கள் சாத்தியமாகி
    இருக்கிறது என்பதை பதிவை வாசிக்கும் ஐ.டி துறை துரைமார்கள் உணர வேண்டும். நம் சட்டைப் பைகளில் உறுத்திக்
    கொண்டிருக்கும் லேட்டஸ்ட் மாடல் போன்களில் எத்தனை ஆவிகள் துடிக்கிறது என்பதை உணர வேண்டும். இதை எதிர்த்து குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

  5. ///அவர்கள் பருகுவது சாராயமல்ல, அம்பிகாவைப் போன்ற தொழிலாளிகளின் இரத்தம் என்பதை நாங்கள் குறித்து வைத்திருக்கிறோம். பழி தீர்ப்போம்.///
    kandipaga pali theerthe aaga vendum

  6. Very Sad News. Will Nokia do this in Europe ?. Every one from Union Carbide to Nokia thinks Indian Lives are very cheap compared to their equipments. Will they do this in their own counties ?

  7. கேவலம் 500 ரூபாய் மதிப்புக் கொண்ட ஒரு பொருளை காப்பாற்றுவதற்காக ஒரு தொழிலாளியின் உயிரைக் காவு கேட்கிறது லாப வெறி. இந்த லாபவெறிக்கு அரணாக இருக்கும் அரசு எந்திரம் இன்னமும் நீடிக்கலாமா?

  8. Now all the blames going to ROBO –

    //அப்போது எதிர்பாராத விதமாக ரோபோ ஒன்று இளம் பெண் அம்பிகாவை தாக்கியது//

    News:
    ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூரில் உள்ள் தனியார் செல்போன் தொழிற்சாலையில் ரோபோ தாக்கி இளம்பெண் பலியானார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த டி. புதூரைச் சேர்ந்தவர் அம்பிகா (22). இவர் ஸ்ரீபெரும்புதூர் தனியார் செல்போன் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். நேற்று தொழிற்சா‌லையில் உள்ள ரோபோ பிரிவில் வேலை செய்து கொண்டிருந்தார், அப்போது எதிர்பாராத விதமாக ரோபோ ஒன்று இளம் பெண் அம்பிகாவை தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=118116

    • தினமலத்தின் செய்தியை பாருங்கள்…

      எவ்வளவு அயோக்கியதனம்.

      எப்படிப்பா ரோபோ தானாக வந்து தாக்கும்?

      மக்கள் எல்லாம் சங்கர் பட ரோபோ என நினைத்து கொள்வார்கள். அது ஒரு இயந்திரம் அந்த இயந்திரத்தை நிறுத்தாமல் கொலை செய்திருக்கிறார்கள்…

      இந்த கொலையை தினமலம் எதிர்பாராத விதமாக ரோபோ தாக்கியதாக எழுதி இருக்கிறது.

      அந்த வெட்டும் இயந்திரத்தில் பொறுக்கி தினமலம் ரமேசை விட்டு பார்த்து ரோபோ எப்படி வெட்டிகிறது என சொல்ல… சொல்ல வேண்டும்.

      மலம் தின்னும் பொறுக்கிகள்… முதலாளிகளின் பணத்திற்கு கொலையை மறைக்கும் இழி பிண்டங்கள்…

    • what the f*ck???? சுவர்க்கம் நரகம் என்றெல்லாம் இருப்பதை இப்போது நம்புகிறேன். இதென்ன சினிமாக் கதையா ரோபோ தாக்க?

    • Nokia அலைபேசியை தூக்கி ஏற்ந்தால் எல்லாம் சரியாகிவிடுமா..இது போல் Sony ericcson, Samsungஇல் நட்ந்தால் அதையும் தூக்கிஎறிந்துவிட்டு அப்புறம் என்ன செய்வீர்கள்?.

      இதற்க்கு தீர்வு,

      – இறந்த பெண்ணின் குடும்பத்திற்க்கு சரியான நஷ்டயீடு வாங்கி தருதல்
      – நோக்கியாவின் தொழிற்சாலை பாதுகாப்பு குறித்து நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்தல், குறைபாடு இருப்பின், Nokia முழுபொறுப்பேற்றுக்கொண்டு அதற்க்கு தீர்வு வழங்க அரசாங்கம் உத்தர்விட வேண்டும்
      – இந்த செயலுக்கு பொறுப்பான்வர்கள் தண்டிக்கப்படவேண்டும்

      • வெப்தமிழன்,
        இந்த செயலுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறீர்கள். உங்கள் விருப்பம் நியாயமானதுதான். இதை அரசாங்கம் செய்யும் என்று நம்புகிறீர்களா? இந்த அரசாங்கதின் மீது நம்பிக்கையின்மையின் வெளிப்பாடுதான் நண்பர் ராஜா நோக்கியா அலைபேசியை தூக்கிக் கெடாசினார். தன்னுடைய நியாயமான கோபத்தை பதிவு செய்வதில் என்ன தவறு உள்ளது?

  9. பச்சை படுகொலை. பல் இளித்து பல நாடுகளுக்கும் போய் பன்னாட்டு நிறுவனங்களை அழைத்து வந்து…தமிழ்நாடு நம். 1 என பெருமையாய் அறிவிக்கிறார்கள் அப்பனும், பிள்ளையும். எல்லா ஓட்டுக்கட்சிகளும் இதற்கு ஒத்து ஊதுகிறார்கள்.

    இந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிறப்பு பொருளாதாரம் என்ற பெயரில் உருவாக்கி ஏகப்பட்ட சலுகைகளை அள்ளித் தருகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களால் நாட்டுக்கும் லாபமும் இல்லை. வரி வருவாய் தான் குறைகிறது.

    இயக்கம் வலுப்பட வேண்டும். அப்பொழுது தான் நமக்கான நீதி கிடைக்கும்.

  10. அநியாயமாக மாண்டு போன, நோக்கியா தொழிலாளி அம்பிகாவின் பெற்றோருக்கு, ஆழ்ந்த அனுதாபங்கள்!

    இதே போன்ற, கொடுமையான துக்க நிகழ்வான, பிஞ்சுகளின் கொலையால், கொங்கு மண்டலமே அதிர்ந்துபோய் உள்ளது! அதைப் பற்றி, வினவின் பார்வையை எதிர்பார்க்கிறேன்!
    (sorry to raise, this issue here!)

  11. சிறப்பு பொருளாதார மண்டலத்தின் மக்கள் நல விளைவுகள் வெளியே வந்துகொண்டே இருக்கிறது. தங்களின் சக ஊழியர் நிர்வாகத்தின் அராஜகப்போக்கினால் கொல்லப்பட்ட பின்னும் வழக்கம்போல பணிக்குச்செல்லும் தொழிலாளர்கள் இருக்கும்போது நாங்கள் படிக்கும் இந்தப்பதிவு எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறீர்கள்?

  12. தொழில்சாலை ஆய்வாளர் என்ன செய்துகொண்டிருக்கிறார் .அவருக்கு தேவையானது வந்துவிடுவதால் எவ உசிரு போனா எனக்கென்னணு இருந்திருப்பார் .ஆலை நிர்வாகம் கொடுக்கிற ரிப்போர்ட் அப்புடியே வாங்கி தான் ஆய்வு செய்தது போல் பைல் பண்ணி கொள்ளுவதால்தான் இந்தமாதிரி நோக்கியா ,ஸ்டெர்லைட் ,யூனியன் கார்பைடு போன்ற ஆலைகள் இன்னமும் தங்களது தொழிலை கால் பரப்பி வருகின்றன.

  13. தொழில் சாலை ஒன்றில் விபத்து எற்பட்டு மரணம் சம்பவித்தால் அந்த ஆலையின் occupier மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்?

  14. //இந்த உயிர்களின் மேல் தான் சல்லிசு விலை செல்போன்கள் சாத்தியமாகி
    இருக்கிறது என்பதை பதிவை வாசிக்கும் ஐ.டி துறை துரைமார்கள் உணர வேண்டும்.//

    ஐ.டி துறை துரைமார்கள்?? avangala yen intha matter la ilukureenga boss?

    yethavathu sambantham irukka?
    iruntha sollunga , therinjukiraen..

  15. தொழில்சாலை ஆய்வாளர் என்ன செய்துகொண்டிருக்கிறார் .அவருக்கு தேவையானது வந்துவிடுவதால் எவ உசிரு போனா எனக்கென்னணு இருந்திருப்பார் .

  16. ///மேலிடத்தில் பேசிவிட்டு மிஷனை உடைப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை./////

    ///எப்படியும் உற்பத்தியை நிறுத்தக்கூடாது என்பதுதான் அவர்களது விருப்பம்.///

    தொழிலாளி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது, உயிரின் மதிப்பை விட இயந்திரத்தின் மதிப்பை பற்றியும், உயிரே போன பின்னும் உற்பத்தியை பற்றியும் மட்டுமே யோசிக்கும் இத்தகைய நிறுவனங்கள் தான் நமக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி நம்மை காப்பாற்றுவதையே குறிக்கோளாக கொண்டு இங்கு வந்துள்ளன! நம்புங்கள்…

    ‘இந்நிறுவனங்கள் இங்கு வருவதால் நமக்கு வேலை கிடைக்கிறது, அவனுக்கு லாபம் கிடைக்கிறது. இரண்டும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது…
    உற்பத்தி குறைந்தால், லாபம் குறையும். அதனால் கூலி குறையும், வேலை வாய்ப்பும் குறையும்! எந்த உரிமையும், பாதுகாப்பு வசதியும் இல்லாமல் அடி மட்ட கூலிக்கு கொத்தடிமைகள் போல தான் வேலை செய்கிறார்கள் என்றாலும் வேலை கிடைக்கிறதல்லவா? நமக்கு குறைந்த விலையில் மொபைல் கிடைக்கிறதல்லவா?’ என்பது போன்ற பாசிச கருத்துக்களையே ஊடகங்களும் இன்ன பிறவும் பரப்புகின்றன.
    இன்றய முதலாளித்துவ பயங்கரவாதத்தில் ஊடகங்களுக்கும் கணிசமான பங்கிருக்கிறது! இன்ன பிறரின் அக்கறையின்மைக்கும் , அலட்சியத்திற்கும் பங்கிருக்கிறது…

    ///நாங்கள் குறித்து வைத்திருக்கிறோம். பழி தீர்ப்போம்.////

    அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

  17. உழைக்கும் வர்க்கத்தின் எதிரிகளின் தலைகள் வீதிகளில் வீசியெறியும் காலம் வெகுதொலைவில் இல்லை !

  18. பச்சை படுகொலை, மிக வண்மையாக கண்டிக்கிறேன்!!!
    ஒரு தொழிலாளி ரத்தம் வடிய வடிய துடித்து கொண்டு இருப்பதை பார்த்து பதறி அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் 2 கோடி ரூபாய் இயந்திரம் முக்கியம் என அதை உடைக்காமல் பாதுகாத்த அந்த மனோநிலை மிக வன்மம் ஆனது, வக்கிரமானது மிக மிக கொடூரமானது, ஆனால் இந்த மனநிலை நம்மில் பலரிடமும் சிறியதாகவோ பெரியதாகவோ விதைக்கப்பட்டுயிருக்கிறது இந்த நாசகரமான முதலாளித்துவத்தாலும், உலகமயமாக்கலாலும்…அதனால் தான் என்னவோ எது நடந்தாலும் ஒரு செய்தியாக கடந்து போகிறோம் அது நமக்கு நடக்காதவரை…இந்த கண்டனங்களோடு, இந்த கோழை மனப்பான்மையையும், சமரச போக்கையும் சேர்த்தே நாம் சுயவிமர்சனம் செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்….
    இழந்த அம்பிகாவிற்காக மட்டுமல்ல இனி இது போல் இன்னோர் உயிர் இழக்க கூடாது என்பதற்க்காகவும் நாம் போராடியே ஆகவேண்டும்…

  19. படித்தவுடன் ரத்தம் கொதிக்கிறது!
    புதரை சீவித்தள்ளுவதைப் போல சீவித்தள்ளிவிடவேண்டும் என்கிற ஆத்திரமே மேலோங்கினாலும் அறிவு ஆசுவாசப் படுத்துகிறது! பொறு நிச்சயம் பழிவாங்கமுடியும், நாம் நக்ஸ்சல்பாரிகள் என்ற கருத்து இன்னும் அழுத்தமாக எதிரொலிக்கிறது! மக்களிடம் செல் என்கிற புரட்சிகர அரசியல் இனிவரும்காலங்களில் அம்பிகாக்கள் கொல்லப்படுவதை நம்மால் மட்டுமே தடுத்தி நிறுத்தி போராடமுடியும் என்று அழுத்தம் திருத்தமாக நமக்கு வழிகாட்டுகிறது. ஆம்! நாம் மக்களிடம் செல்வோம் தோழர்களே!
    அதியமான் போன்ற அரைவேக்காட்டு அய்யோக்கிய உலகமய தாசர்கள் மௌனம் கலைக்கவேண்டும் என்று வலியுறுத்துவோம்.

  20. வாழ்வின் தலைவாசலில் நின்று கொண்டிருக்கும் போது விபத்தில் உயிரிழந்த அம்பிகாவின் சுற்றத்துக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    கொலை, படுகொலை, பழிக்குப்பழி என்று இங்கே பலர் குமுறுவதன் காரணம் புரிகிறது. ஆனால் ஏதாவது விபத்து நடந்த பிறகு எழும் இந்த ஆவேசமெல்லாம் சில நாட்களில் வடிந்து பழைய குருடி கதவை திறடி என்றாகி விடுவதைத்தான் காண்கிறோம்.

    இந்தியாவின் உளுத்துப் போன தொழிற்சாலை சட்டத்தின் விதி 7B படியே பார்த்தாலும் பாதுகாப்பை பராமரிப்பது உரிமையாளரின் கடமை. சேஃப்டி சென்சார்களை செயலிழக்க செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க போரடவேண்டும்.

    7B. General duties of manufacturers, etc., as regards articles and substances for use in factories. –
    (1) Every person who designs, manufactures, imports or supplies any article for use in any factory, shall-
    (a) Ensure, so far as is reasonably practicable, that the article is so designed and constructed as to be safe and without risks to the health of the workers when properly used;
    (b) Carry out or arrange for the carrying out of such tests and examination as may be considered necessary for the effective implementation of the provisions of clause (a);

    பாதுகாப்பை புறக்கணித்து அதிக உற்பத்தி என்பதை முதலாளிகளே ஒப்புக் கொள்ளமல் செய்வது விழிப்புடன் இருக்கும் தொழிலாளர்கள் கையில்தான் உள்ளது.

  21. //சென்ற மாதம்தான் நோக்கியா ஆலைக்கு 6 எஸ் (6S) எனும் சிறந்த பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஆலை என்ற விருது கொடுக்கப்பட்டாதம். அந்த பாதுகாப்பு இலட்சணத்திற்கு ரத்த சாட்சியம்தான் அம்பிகா.//

    நோக்கியாவின் கூட்டாண்மை பொறுப்பு பற்றிய வலைத்தள விவரம்

    http://www.nokia.com/corporate-responsibility/employees/labor-practices/factory-labor-conditions/nokia-standards-for-factory-labour-conditions

    8.) Occupational Health and Safety
    OHS provides employees with safe working environment and promote employee health.

    Employer must provide information and training to all employees about occupational health and safety issues already at induction and repeat it regularly. First aid and other emergency training must be offered and promoted to ensure adequate amount of trained personnel. Occupational health services must be available to all employees regarding work related health issues, as well as programs promoting health and well-being. Occupational standard operating procedures must be in place and available to all employees. Health hazards must be prevented by systematic identification, assessment, control and documentation. Contingency plans must be in place, and fire and evacuation drills must be performed.

    இந்த விபத்துக்கு காரணம் பயிற்சியின்மையா, ப்ரொஸீஜர்கள் இன்மையா, அல்லது நீண்ட நேர வேலைப்பளுவால் ஏற்பட்ட களைப்பா, என்பதெல்லாம் நேர்மையாக நடுநிலைமையோடு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உண்மை வெளிவர தொழிலாளர்கள் போராட வேண்டும். ஈடுசெய்ய முடியாத உயிர் இழப்பு என்றாலும், அம்பிகாவின் குடும்பத்தினர் தற்பொழுது உள்ள மனநிலையில் இடைத்தரகர்கள் யாரும் புகுந்து நஷ்ட ஈட்டில் விளையாடிவிடாமல் விழிப்பாக இருக்கவேண்டும்.

  22. என்ன நடந்தால் என்ன? அடுத்த வருஷம் தேர்தல் வருது. 1 ஓட்டுக்கு எவ்வளவு பணம் வாங்கலாம்? யார் என்னலாம் இலவசமா குடுப்பாங்க? குவார்ட்டரும், கோழி பிரியாணியும் யார் தருவாங்க? போய் பொழப்ப பாருப்பா. போய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்க. 1 உயிர் இருந்தால் என்ன? செத்தால் என்ன? 1 நாள் அழுவாங்க? அப்புறம் அடுத்த வருஷம் முதலாம் நினைவு நாள். ஆனா நமக்கு இலவசமா எதாச்சும் கிடைக்குதா? எல்லாத்தையும் வாங்கிட்டு ஒட்டு போடத்தான் போறோம். யார் ஆட்சி செய்தால் என்ன?

    – வாக்காள பெருமக்கள்.

  23. hello ram kameshwaran if something like that happens to some one in your family will you go for a detailed NADUNILAMAI research like this? அந்த இயந்திரத்தில் நோக்கியா முதலாளி செத்திருந்தால் உலக நாடுகள் அனைத்திலும் தலைப்பு செய்தி அதுவாக தானே இருக்கும்?

  24. இவர்களை இப்படியே விட்டால் இன்னும் பல உயிர்களை நாம் இழக்க வேண்டிருக்கும். இந்த மாதிரி முதலாளிகளை ஊக்குவிக்கும் அரசுக்கு தக்க பாடம் கற்பிக்கவேண்டும்.

    வினவு, நீங்கள் வினவிவிட்டீர்கள், வினை செய்யுங்கள்.
    உடன் இருப்போம்

  25. நேத்து டிவியில இந்த செய்தியை பார்த்த போது என்னால தாங்க முடியல. ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சு. ஒரு உயிரவிட ரெண்டுகோடி ரூபாய் பெரிதாய் இருக்கு.

  26. இதுவே ஒரு பார்பனன் இறந்து இருந்தால் தினமலர் இப்படி எழுதி இருக்க மாட்டான்.
    இந்த செயல் வன்மையாக கண்டிக்க தக்கது, இதில் அம்பிகாவை வெளிய எடுக்க தாமதம் செய்த அதிகாரி கண்டிப்பாக தண்டிக்க பட வேண்டும் அரசோ, நீதி மன்றமோ இவர்களை கண்டிப்பாக தண்டிக்காது, அப்படியே தண்டிடாலும் ஒரு வருடம் ஜெயில் மற்றும் 25000 ரூபாய் அபராதம் கட்ட சொல்லும், இதற்கும் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும், உடனடியாக நாம் ஏதாவது செய்ய வேண்டும்.

  27. endha uyirum vilai madhippu attradhu. idhil jaathi yai kalandhu vittadhu andha mudhalaigalai vida kevalamanadhu .. yen appa oru muslim, kristhava mudalali yenna ayogiya thanam vendumanalum seiialama? Ella prachanai kural kodupathu manidha thanmai. Adhanal thanakku labam yerpadum ena ninaipadhu nokia samamana kevala sindhai

  28. //வேலையின் போது சில பீஸ் போர்டுகள் எந்திரத்தில் விழுந்தால் தொழிலாளிகள் அதை கைவிட்டு எடுப்பார்கள். அவர்கள் கை நுழைந்த உடனேயே அந்த எந்திரத்தில் உள்ள ஆட்டோமேடிக் சென்சார் இயந்திரம் இயங்கி அறுப்பதை நிறுத்தி வைக்கும்.//

    //எனினும் அப்போது அந்த எந்திரத்தின் சென்சார் வேலை செய்யும் என்று அவர் நினைத்திருக்கிறார். ஆனால் அதன் செயல்பாடு நிறுத்தப் பட்டிருப்பது அவருக்கு தெரியவில்லை. அதன்படி அம்பிகா கழுத்தின் பின்புறமாக அந்த எந்திரம் அறுக்கத் தொடங்கியிருக்கிறது.//

    பீஸ் போர்டுகளை கை விட்டு எடுக்க வேண்டும் என்ற நிலையில், எப்படி அது அம்பிகாவின் கழுத்தில் அறுக்கத் தொடங்கியது.? அவை நடந்த நேரங்கள் உட்பட துல்லியமாக கூறி இருக்கிறீர்கள் ஆனால் அது எப்படி கழுத்து பகுதிக்கு சென்றது என்பதற்கான காரணத்தை குறிப்பிடவில்லை.

    சற்று விளக்கம் பொருந்தாமல் உள்ளது, கீழ் உள்ள தளத்தில் பார்த்தால் அதிக விளக்கம் கிடைக்கும் என நினைகிறேன்.

    http://timesofindia.indiatimes.com/city/chennai/Woman-killed-in-accident-at-Nokia-plant-/articleshow/6855719.cms

    இதற்கு நோக்கியா நிறுவனம் தொழிலாளர்களின் பாதுகாப்பை அவர்களுக்கு புரிய வைக்காதது தான் காரணம். உலக தரம் வாய்ந்த நிறுவனங்களில் இது போன்ற விபத்துகள் நடப்பது வருந்த தக்கது.

    எனினும் இது கொலை அல்ல அந்த பெண்ணின் அலட்சியத்தால் நடந்த விபத்து.

    • டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியிலும் எப்படி திடீரென்று தலை அறுபடத் தொடங்கியது என்ற விசயம் தெளிவாக சொல்லப்படவில்லை. ஆனால் கார்பன் கூட்டாளி அதனை சரி என்று எப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை.

      மேலும், ஒரு இயந்திரம் எப்படி இயக்கப்பட வேண்டும் என்று பயிற்சி அளிப்பது நிறுவனத்தின் பொறுப்பு தொழிலாளியின் பொறுப்பல்ல. கார்பன் கூட்டாளியோ தொழிலாளியின் பொறுப்பு என்கிறார்.

    • ////இது கொலை அல்ல அந்த பெண்ணின் அலட்சியத்தால் நடந்த விபத்து./////

      என்ன டா இன்னும் யாருமே, நடந்தது விபத்து தான், விபத்துக்கு தொழிலாளியின் கவனக்குறைவே காரணம் என்று வக்கிரமாக சொல்லவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்!

      ////பீஸ் போர்டுகளை கை விட்டு எடுக்க வேண்டும் என்ற நிலையில், எப்படி அது அம்பிகாவின் கழுத்தில் அறுக்கத் தொடங்கியது.?////

      அந்த பெண் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்றே இயந்திரத்தில் தலையை விட்டார் என்று சொல்லாமல் விட்டீர்கள்….

      சென்சார் வேலை செய்யவில்லை என்பது இயந்திர குறைபாடல்ல, சென்சார் இயக்கத்தை நிர்வாகம் தற்காலிகமாக (நிரந்தரமாக கூட இருக்கலாம்) நிறுத்தி வைத்திருந்திருக்கிறது!

      கை விட்டு எடுக்க வேண்டும் என்னும் போது சென்சார் இயக்கத்தை நிறுத்தி வைத்திருப்பதே அயோக்கிய தனம் இல்லையா?

      கழுத்தில் வெட்டுப்படாமல், கையில் வெட்டு பட்டு ஊனமாகியிருந்தால்? அபோதும் நீங்கள் தொழிலாளி இயந்திரத்திற்க்குள் கையை விட்டதை தான் குற்றம் சொல்வீர்கள்.

      கையை விட வேண்டிய சூழ்நிலையை/தேவையை (உற்பத்தி இலக்கு) வைத்திருக்கும், கையை உள்ளே விட்டாலும் சென்சார் இயங்கி இயந்திரத்தை நிறுத்துவதை செயலின்மையில் வைத்திருப்பதை பற்றி வாய் திறக்கமாட்டீர்களா?

      வக்கிர மற்றும் பாசிச புத்தியுடையோர் தங்கள் கருத்தை தெரிவிக்க வெட்கப்படுவதில்லையே…
      வெட்கம் மட்டுமல்ல அரண்டு பயப்படும் காலமும் விரைவில் வரும்.

      • //கையை விட வேண்டிய சூழ்நிலையை/தேவையை (உற்பத்தி இலக்கு) வைத்திருக்கும், கையை உள்ளே விட்டாலும் சென்சார் இயங்கி இயந்திரத்தை நிறுத்துவதை செயலின்மையில் வைத்திருப்பதை பற்றி வாய் திறக்கமாட்டீர்களா?//

        தங்களுக்கென்று தனித்துவம் கொண்ட நிறுவனங்களும் அதன் தொழிற்சாலைகளும் பாதுக்காப்பிற்கென்று தனி துறையை வைத்து தொழிலார்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துகின்றன. இது தொழிலாளர்களின் நலன் கருதி என்று அல்ல அந்த நிறுவங்களின் பெயர் கேட்டு விட கூடாதென்பதற்காக, அதுவும் நோக்கியா போன்ற நிறுவனங்கள் தங்களுகேன்று ஒரு பாதுகாப்பு முறையை கொண்டிருக்கும், இது வினவு போன்ற கட்டிடத்தில் கதை எழுதுபவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் பெரிய நிறுவங்களில் வேலை செய்பவர்கள் நன்றாக தெரிந்து வைத்திருப்பார்.

        உற்பத்தி, இலக்கு அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட திறமை, அதற்காக யாரும் இயந்திரத்தில் கையை விடுங்கள் என்று எந்த நிறுவனமும் கூறுவது இல்லை, அப்பெண்ணிற்கு சரியான பாதிகாப்பை பற்றிய விளக்கத்தை கற்று தரவில்லை என்று அதன் மேலதிகாரி மீது வேண்டுமானால் ஆவேச படலாம், அந்நிறுவனத்திடம் ஆவேச படுவதில் எந்த பயனும் இல்லை.

        • வினவில் வெளிவந்திருப்பதாலும், பலர் ஆவேசமாக எழுதியிருப்பதாலும் இக்கட்டுரை ஒருதலைபட்சமாக இருக்கும் என்ற முடிவுக்கு -நீங்கள் வந்திருப்பது போல் தோன்றுகிறது.

          பாரத் சிந்தன் என்ற கூகிள் குரூப்பில் வெளியான கட்டுரையை வாசித்து பாருங்கள்.
          http://groups.google.ca/group/bharat-chintan/browse_thread/thread/bebf81b87fccdc06?hl=en#

          உண்மை இன்னும் தெளிவாக விளங்கும்.
          This was a totally avoidable loss of life.

        • //அதன் மேலதிகாரி மீது வேண்டுமானால் ஆவேச படலாம், அந்நிறுவனத்திடம் ஆவேச படுவதில் எந்த பயனும் இல்லை.//

          கட்டிடத்திற்கு வெளியே கதை எழுதும் மிஸ்டர் கார்பன் அவர்கள் இதோ இப்போது வரை யார் மீதும் ஆவேசப் படவில்லை. முதலில் தொழிலாளர் தவறு என்றார், இப்போது மேலதிகாரி என்கிறார். இன்னும் கொஞ்சம் கேள்விகளைக் கேட்டால் நிறுவனத்தின் தவறு, உலகமயத்தை குறை சொல்லாதீர்கள் என்றும் சொல்லுவார்.

        • ஆத்திரத்தில் மதி இழக்க மாட்டிர்கள் என நினைக்கிறேன். தமிழகத்தில் தினம் தோறும் நூற்று கணக்கான விபத்துக்கள் நடக்கின்றன, வாகன விபத்துக்கள் உட்பட, இதற்கு யாரோ ஒருவரின் அலட்சியம் தான் காரணமே, அந்த தவறிர்காக வாகன ஓட்டுனரை தண்டிக்கலமே தவிர அதன் உரிமையாளரை அல்ல, அதற்காக அந்த நிறுவனத்தின் வாகனங்கள் எங்கும் ஊட கூடாது என்று புரட்சி செய்வது, அதை சேத படுத்துதல் போன்ற வேலைகளை செய்வது ஒரு நாகரீகமான சமுதாயத்திற்கு அழகல்ல.

          இதே எதோ ஒரு வாகன விபத்தில் அந்த பெண் இறந்திருந்தால் அதற்காக தரப்படும் சிறு இழப்பீட்டை தந்தாலும் அதை பற்றி கேட்க எந்த ஒரு நாதியும் இருக்காது. இதில் ஒரு பெரிய நிறுவனம் சிக்கயுள்ளது என்றதும் அந்த விபத்திற்கான இழப்பீட்டை தர அவகாசம் கேட்டும் அதை பற்றி கருத்து சொல்ல வந்து விட்டீர்.

          நான் அம்பிகா இறப்பை அலட்சிய படுத்த வில்லை, அது யாருடைய தவறு என்பது கண்டு பிடிக்க விசாரணை நடத்த பட வேண்டும், அந்த விபத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்க பட வேண்டும், அம்பிகாவின் குடும்பத்தினர்க்கு உரிய இழப்பீடி தரப்பட வேண்டும், இன்னும் அந்த நிறுவனத்தின் அறிவிப்பு வராத நிலையில் இது போன்ற அறிவுக்கு ஒவ்வாத வாதங்களை வைத்து படிப்பவர்களை முட்டாள் ஆக்கும் வினவு போன்றவர்களை என்ன சொல்வது.

          உதாரணமாக: “நோக்கியா 100 மில்லியன் வெறிக்கு” இதற்கு பெயர் வெறி அல்ல, இலக்கு. இது போன்ற ஆவேச வார்த்தைகளை கூறுவதன் மூலம் நம் நாட்டிற்கு நாமே முட்டு கட்டையாக இருக்கிறோம்.

          இங்கு அதிகரிக்கும் தொழிற் வளர்ச்சிக்கு உருதுணையாக இருப்போம், நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி வகுப்போம்.

        • மிஸ்டர் அனானி..
          அம்பிகாவின் கழுத்து அறுபட்டுக்கொண்டிருக்கும்போது இயந்திரத்தை உடைக்க மறுத்த மிருகத்தனத்தையும் ‘யாரோ ஒருவரின் அலட்சியம்’ என்றுதான் கூறுவீரோ…..ஏதோ ஆத்திரம்,மதி இழப்பு என்றெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறீர்.இதற்கு ஆத்திரப்படதவனை ‘மனிதன்’ என்ற வகையறாவுக்குள் சேர்க்க முடியாது.உம்மை போன்றவர்கள் இருக்கும் வரை முதலாளித்துவ சனியனும் தன் வேலையை காட்டிக்கொண்டு தான் இருக்கும்.

    • போக்குவரத்து விதிமுறைகளை சரியாகத் தெரிந்திருக்கும் ஒரு ஓட்டுனரை பிரேக் இல்லாத வாகனத்தை கொடுத்து (அவருக்கே தெரியாமல்) ஓட்டச் சொல்வதால் ஏற்படும் உயிர் இழப்பு விபத்தா? கொலையா?

  29. தினத்தந்தியில்
    ======
    ரோபோ எந்திரத்தில் சிக்கி பெண் ஊழியல் பலி

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் தயாரிக்கும் கம்பெனியில் ‘ரோபோ’ எந்திரத்தில் சிக்க பெண் ஊழியர் பலியானார்.
    —-
    —-
    கடந்த 3 வருடங்களாக ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு ஷிப்டுக்கு சென்று பணியில் ஈடுபட்டார்.

    அப்போது செல்போன் பாகம் கீழே விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. அதை எடுத்து மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்காக அம்பிகா முயன்ற போது அருகில் இருந்த ரோபோ எந்திரம் அவர் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் கழுத்து எலும்பு மற்றும் முதுகு எலும்புகள் முறிந்து அம்பிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்ததும் கம்பெனியில் மற்ற ஊழியர்கள் விரைந்து வந்து எந்திரத்தை நிறுத்தி அம்பிகாவை மீட்டனர். பின்னர் அவரது உடலை பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ===========

    மேலே இருக்கும் இரண்டு பத்திகளில் சொல்லப்படுவது வினவு அறிக்கையில் இருப்பதற்க நேர் மாறாக இருக்கிறது. நிறுவன நிர்வாகம் பிரச்சனையை தவிர்ப்பதாக கதையை மாற்றி வெளியிட்டிருக்கிறதா?

  30. Deepest Sympathies for Ambika. However the co workers who were in nearby areas should have pressed the EMERGENCY STOP button or should have disconnected the MAINS supply to the machine.And Ambika must be alive with minor injuries. WHY THE CO WORKERS HESITATED TO SAVE A PERSON WHO IS STRUCK UP AT MACHINE.

    THEY SHOULD HAVE OVER POWERED THE SUPERVISOR ….

    ALSO IT IS SAID IN NEWSPAPER THAT THE MACHINE WAS KEPT BY HER IN SERVICE MODE(WHERE SAFETY CUTOFF MECHANISM DO NOT WORK)…

    • \\co workers who were in nearby areas should have pressed the EMERGENCY STOP button or should have disconnected the MAINS supply to the machine.And Ambika must be alive with minor injuries. WHY THE CO WORKERS HESITATED TO SAVE A PERSON WHO IS STRUCK UP AT MACHINE.
      THEY SHOULD HAVE OVER POWERED THE SUPERVISOR//

      அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் கொலை,கொள்ளை என எது நடந்தாலும் எட்டிக்கூட பார்க்க மறுக்கும் நடுத்தர வர்க்கத்தின் கோழைத்தனமும் தன்னலமும் தொழிலாளி வர்க்கத்திடமும் இருக்கும் என எதிர்பார்க்க வேண்டாம்.கட்டுரையிலேயே உங்கள் கேள்விக்கு பதில் உள்ளது.

      \\தொழிலாளிகள் நிர்வாகத்துடன் சண்டை போட்டு எந்திரத்தின் கட்டரை உடைத்து அம்பிகாவை மீட்கின்றனர்.//

      \\ALSO IT IS SAID IN NEWSPAPER THAT THE MACHINE WAS KEPT BY HER IN SERVICE MODE(WHERE SAFETY CUTOFF MECHANISM DO NOT WORK)//

      கொலையுண்டவர் மீதே கொலைக்குற்றம் சாட்டுகிறீர்கள்.
      ஏற்கனவே 34 -ஆம் பின்னூட்டத்திற்க்கான சேரிக்காரனின் பதிலே இங்கும் பொருந்துகிறது.

  31. நிச்சயமாக இதற்கு காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

    ஆனால் அது நடக்காமல் இருக்க தேவையான வேலைகளை நோக்கியா நிறுவனம் இந்நேரம் செய்து முடித்திருக்கும். அரசும், அரசு அதிகாரிகளும் பணபலம் மிக்க ஆட்களின் அடியாட்களாக இருக்கும்வரை இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை.

    மக்களுக்கு உண்மையான விவரங்களே கிடைப்பதில்லை எனும்போது, மக்களை குற்றம் சொல்லியும் பலனில்லை.

    இதற்கு தீர்வுதான் என்ன?

    • பரந்துபட்டமக்கள் வர்க்கமாய் கிளர்ந்தெழுவது, குறைந்தபட்சம் அந்நிறுவனத் தொழிலாளர்களோடு மற்ற அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியத்தை நாம் உணர்ந்து கொண்டு மற்றவர்களுக்கும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

  32. அம்பிகாவின் கதறல் கேட்கிறது. கொதிப்பாக இருக்கிறது. உயிரையும், உழைப்பையும் ஒரு பொருட்டாக நினைக்காத கில்லட்டின்களை இந்த நிலமெங்கும் நிறுவிக்கொண்டு இருக்கிறார்கள். கோடிக்கால் பூதமாகவும், கோபத்தின் ரூபமாகவும் ஒருநாள் தொழிலாளிவர்க்கம் நிச்சயம் எழும். பழி தீர்க்கும்.

  33. அம்பிகாவுக்கு அஞ்சலிகள் 🙁

    இந்திய உயிர்கள் எவ்வளவு இளக்காரம் என்பதற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு. தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  34. \\இந்த ஆட்டோமேடிக் சென்சார் இயந்திரம் வேலை செய்தால் அதனால் பத்து, பதினைந்து நிமிடம் உற்பத்தி தாமதாமாகிவிடும் என்பதால் இதை மூடியே வைத்திருப்பார்கள். அதாவது தொழிலாளி தன் உயிரை பணயம் வைத்து சில விநாடிகளுக்கும் விழுந்துவிட்ட ஃபோர்டுகளை எடுக்க வேண்டும். இது பச்சையான படுகொலை இல்லையா//

    ஐயத்திற்கு இடமே இல்லை.நிச்சயமாக இது கொலைதான்.

    அம்பிகாவின் சாவுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும்,உரிய இழப்பீடு அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டும்,என்கிறார்கள். என்ன தண்டனை கொடுத்துவிடுவார்கள்.உச்சபட்சமாக கொலைகுற்றமாகாத,கவனக்குறைவால் இறப்பு ஏற்படுத்துதல் (culpable homicide ) என்ற குற்றம் சாட்டி இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுப்பார்கள்.ஓரிரு இலக்கங்களை இழப்பீடாக தருவார்கள்.இதுதான் ஒரு ஐநூறு உருவாக்களை மீட்க போய் கழுத்து அறுபட்டு துடிக்க துடிக்க கொல்லப்பட்ட அம்பிகாவின் கொலைக்கு கிடைக்கும் நீதியா.மக்கள் நீதுமன்றங்களில் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் மக்கள் முன்னிலையில் மக்களால் தண்டிக்கப்பட வேண்டும்.

    நோக்கியா நிறுவனத்தை பொறுப்பாக்க முடியாது,கையை விட்டு எடு என எந்த நிறுவனமும் சொல்லாது இப்படியெல்லாம் மனசாட்சியின்றி கருத்துரைப்போரை கண்டு ஆச்சரியமாக இருக்கிறது.
    கையை விட்டு எடுக்க வேண்டி இருந்ததால்தான் ஒரு இளம் பெண்,வாழ்வின் தலைவாசலில் நின்று கொண்டிருந்த பெண்,அவளது குடும்பத்தின் உணவுக்கான ஒரே ஆதாரமாக இருந்த பெண் துள்ள துடிக்க கொல்லப்பட்டிருக்கிறாள்.

  35. அந்த சென்சார் மறைக்கபட்டிருந்தது அன்றோ அப்போதோ நடந்த ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை. அங்கு இருந்த சில தொழிலாளர்களுக்கு தெரிந்திருந்தும் ஏன் சும்மா இருந்தார்கள்?
    இது போன்று இன்னும் எதனை விதி மீறல்கள்? யார் அதை முன்னின்று நடத்தி சரி செய்வது? இன்னோர் உயிர் போனால், அந்த பழி நாம் எல்லார் மீதும் தான்.

  36. அய்யா அருன் அவர்களே அந்த சென்சார் தொழிலாளர்களால் சரிசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்கிறீர்கள். அதற்கு முன் அம்பிகா கழுத்தை மெசின் அறுக்க தொடங்கிய உடனே மெசினை உடைத்து தொழிலாளர்கள் அம்பிகாவை காப்பாற்ற முற்படும்போது நோக்கியா அதிகாரிகள் (மெசினை காப்பாற்ற) தடுத்துள்ளார்களே அதை பற்றி முதலில் பேசுங்கள். கிரிமினல் புத்தியெல்லாம் தொழிலாளர்களுக்கு இல்லை. அது முதலாளிங்க கூடப் பிறந்தது. ஏன்னா லாபத்தையும் அவர்களையும் பிரிக்க முடியாது.

  37. //தங்களுக்கென்று தனித்துவம் கொண்ட நிறுவனங்களும் அதன் தொழிற்சாலைகளும் பாதுக்காப்பிற்கென்று தனி துறையை வைத்து தொழிலார்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துகின்றன. இது தொழிலாளர்களின் நலன் கருதி என்று அல்ல அந்த நிறுவங்களின் பெயர் கேட்டு விட கூடாதென்பதற்காக, அதுவும் நோக்கியா போன்ற நிறுவனங்கள் தங்களுகேன்று ஒரு பாதுகாப்பு முறையை கொண்டிருக்கும், இது வினவு போன்ற கட்டிடத்தில் கதை எழுதுபவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் பெரிய நிறுவங்களில் வேலை செய்பவர்கள் நன்றாக தெரிந்து வைத்திருப்பார்.
    உற்பத்தி, இலக்கு அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட திறமை, அதற்காக யாரும் இயந்திரத்தில் கையை விடுங்கள் என்று எந்த நிறுவனமும் கூறுவது இல்லை, அப்பெண்ணிற்கு சரியான பாதிகாப்பை பற்றிய விளக்கத்தை கற்று தரவில்லை என்று அதன் மேலதிகாரி மீது வேண்டுமானால் ஆவேச படலாம், அந்நிறுவனத்திடம் ஆவேச படுவதில் எந்த பயனும் இல்லை./

    கார்பன் கூட்டாளி கூறுவதாவது

    அந்த மெஷினெ இன்டெலிஜென்டாக(கடவுளால் ந்ம்ம பூமியும் மனிதர்களும் மாதிரி) வடிவமைக்கப் பட்டு இருப்பதால் அதில் தவ‌று நடக்க வாய்ப்பு இல்லை

    அவர்கள் பாதுகாப்பிற்காக எல்லாம் செய்தும் இந்த விபத்து நடந்துவிட்டது.

    நோக்கியா நிறுவனம் கடவுள் மாதிரி.ஆகவே குறை சொல்லாதீர்.நிறுவனத்தின் பெயர் ஒரு ஏழை பெண்ணின் உயிரைவிட மேலானது.

    கண்முன்னால் இருக்கும் மனிதனுக்கு(மனுஷி) ஒரு அனுதாபம் காட்ட முடியலே கண்ணுக்கு தெரியாத கடவுளை பற்றி ஆயிரம் கதை விடும் ஆள்தான் இவர். மனிதனைன் கூட்டாளியாக இருக்க மறுக்கும் இப்படியும் சிலர்.
    ====================================================================

    ஒரு விஷயம் நடக்க வாய்ப்பு இருந்தால் அது கண்டிப்பாக நடக்கும் என்பது விதி. விபத்து நடக்கும் வாய்ப்பு இருப்பதால்தான் விபத்து நடந்தது. ஆகவே நிர்வாகமே பொறுப்பு.

    இதுவே ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளில் நடந்து இருந்தால் கோடிகளில் நஷ்ட ஈடு தரவேண்டி இருக்கும்.

    இந்தியர்கள்தானே,ஆனானப் பட்ட போபால் விஷவாயு வழக்கிலேயே ஒன்னும் நடக்கலே. வினவு தோழர்கள் இதனை வெளியிடவில்லை என்றால் விஷ்யம் வெளிவந்தே இருக்காது.

    அம்பிகாவின் குடும்பத்திற்கு நியாம் கிடைக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

  38. //நான் அம்பிகா இறப்பை அலட்சிய படுத்த வில்லை, அது யாருடைய தவறு என்பது கண்டு பிடிக்க விசாரணை நடத்த பட வேண்டும், அந்த விபத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்க பட வேண்டும், அம்பிகாவின் குடும்பத்தினர்க்கு உரிய இழப்பீடி தரப்பட வேண்டும், இன்னும் அந்த நிறுவனத்தின் அறிவிப்பு வராத நிலையில் இது போன்ற அறிவுக்கு ஒவ்வாத வாதங்களை வைத்து படிப்பவர்களை முட்டாள் ஆக்கும் வினவு போன்றவர்களை என்ன சொல்வது.//

    விசாரணை நடத்தப் பட வேண்டும் யாரால்?.இந்த செய்தியை வெளியிடுவதிலேயே ஊடகத்துறையும், காவல் துறையும் போட்டி போட்டுக் கொண்டு நிறுவனத்தின் விசுவாசிகளாக செயல் பட்டார்கள். இப்ப‌டி சூழ்நிலையில் விசாரணை நியாகமாக நடக்கும் என்று நம்ப வேண்டும்.

    விபத்திற்கு காரணமானவர்கள் என்றால் யார்?. விபத்து நடக்கும் வாய்ப்பு உள்ள இயந்திரத்தை வைத்து வேலை வாங்கிய நிர்வாகமா?. அல்லது ஏதாவது இன்னொரு தொழிலாளியா?

    நிறுவனம் அறிக்கை விடவில்லை என்றால் எப்போது வெளியிடுவார்கள்.இப்பிரச்சினை பற்றி அனைவரும் மறந்த பின்னரா?

    இவர் செய்வது அறிவுக்கு பொருந்தும் வாதமா?. நானோ என் வீட்டை சேர்ந்தவர்களோ பாதிக்க படவில்லை.பிறருக்குதானே, அதனால் என் அறிவுக்கு ஒவ்வும் வாதத்தையே வைப்பேன்.

    அந்த இயந்திரத்தின் பெயரோ புகைப்படமோ கூட எந்த ஊடகத்திலுமே வரவில்லை. அந்த இயந்திரத்தை மற்ற நோக்கியா உற்பத்திக் கூடங்களில்(இந்தியா மற்றும் பிற நாடுகளில்) பயன்படுத்துகிறார்களா?. வேஏறு நாட்டில் உள்ளனோக்கியா தொழிலாளர்களுக்கு என்ன விபத்து காப்பீடு செய்யப் பட்டு உள்ளது?.

    ஒரு விவரமுமே த்ரியவில்லை . நிர்பவாகம் கட்டப் பஞ்சாயத்து செய்து முடிக்க பார்க்கும் என்றே தோன்றுகிறது.

  39. திருவாளர் anonymous அவர்களே,
    “நோக்கியா 100 மில்லியன் வெறி” என்ற வினவுத் தோழர்களின் பொருத்தமான சொல்லாடலை ‘நோக்கியா 100 மில்லியன் இலக்கு’ என்று சொல்ல வேண்டும் என்கிறீர்கள். இதற்கு நீங்களே பதில் கூறுங்கள். மனிதத் தேவைக்காக உற்பத்தியில் ஈடுபடுவது இலக்கா? அல்லது நுகர்வுக்காக (தேவைக்கு அப்பால்) உற்பத்தியில் ஈடுபடுத்துவது இலக்கா? முன்னது இலக்கு. பின்னது வெறி. மிகத் தெளிவாக தோழர்கள் வரைய்றுத்து சொல்லியுள்ளார்கள். நீங்கள் கொஞ்சம மதியிழக்காமல் யோசியுங்கள்.
    அடுத்து, அப்பெண்ணுக்கு இழப்பீடு தருவது குறித்து அந்நிறுவனம் இன்னும் அறிவிப்பு தராத நிலையில் வினவு ஏன் படிப்பவர்களை முட்டாள் ஆக்குகிறது என்று கேட்டுள்ளீர்கள்.
    அம்பிகா விவகாரத்தில் முதன்மையானது இழப்பீடா? நீதியா? இது ஒரு அம்பிகாவின் பிரச்சினை மட்டுமல்ல; பல ஆயிரம் அம்பிகாக்களின் பிரச்சினை. ரோட்டில் நடப்பவரின் மேல் காரை இடித்துவிட்டு பணக்கட்டை தூக்கியெறிந்துவிட்டு திமிராகப் போகும் மேட்டுக்குடித் தனத்தை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பாருங்கள் பிரச்சினையின் மையம் புரியும்.

  40. //மனிதத் தேவைக்காக உற்பத்தியில் ஈடுபடுவது இலக்கா? அல்லது நுகர்வுக்காக (தேவைக்கு அப்பால்) உற்பத்தியில் ஈடுபடுத்துவது இலக்கா? முன்னது இலக்கு. பின்னது வெறி. மிகத் தெளிவாக தோழர்கள் வரைய்றுத்து சொல்லியுள்ளார்கள்.//

    மனித தேவை இல்லையெனில் எதற்கு உற்பத்தி, தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்பவர் எப்படி அவசர கதியில் செய்வர், தேவையோ தேவை இல்லையோ அது அவர்கள் இலக்கு.

    //அம்பிகா விவகாரத்தில் முதன்மையானது இழப்பீடா? நீதியா? இது ஒரு அம்பிகாவின் பிரச்சினை மட்டுமல்ல; பல ஆயிரம் அம்பிகாக்களின் பிரச்சினை. //

    எதுவும் கொலை என்கிற பட்சத்தில் தேவை நீதி, இங்கு நடந்தது விபத்து அதற்கு தேவை சரியான இழப்பீடு, மேலும் இது பல ஆயிரம் அம்பிகாவின் பிரச்னை இல்லை, ஒருவரின் பிரச்னை.

    //ரோட்டில் நடப்பவரின் மேல் காரை இடித்துவிட்டு பணக்கட்டை தூக்கியெறிந்துவிட்டு திமிராகப் போகும் மேட்டுக்குடித் தனத்தை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பாருங்கள் பிரச்சினையின் மையம் புரியும்.//

    காரில் இடிப்பவன் எல்லாம் கொலைகாரனும் அல்ல, நடந்து செல்பவன் அனைவரும் கீழ் தட்டு மக்களும் அல்ல, விபத்து எது கொலை என்பதை குழப்பி கொள்வதாலேயே உங்களை போன்றவர்களுக்கு இந்த பிரச்னை.

    இப்படி மக்களை உசிப்பி விட்டு நாட்டை ரணகளம் ஆக்குவதை விட்டுவிட்டு, வளர்ச்சி பாதையில் செல்வதற்கு என்ன வழி என்று யோசியுங்கள்.

    • நண்பர் anonymous அவர்களே,
      உங்களின் பதிலில் குதர்க்கமே வெளிப்படுகிறது. அதாவது “மனிதத் தேவை இல்லையெனில் எதற்கு உற்பத்தி? தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்பவர் எப்படி அவசரகதியில் செய்வர். தேவையோ தேவையில்லையோ அது அவர்கள் இலக்கு” என்கிறீர்கள்.
      இங்கு மனித்தத் தேவை என்று நான் குறிப்பிடுவது, சக மனிதர்களின் தேவையிலிருந்துதான் என் தேவை அடங்கியுள்ளது என்ற சிந்தனையிலிருந்து ஈடுபடும் இயற்கையான ச்மூக உற்பத்தியைக் குறிப்பிடுகிறேன்.
      இப்ப நாட்டுல ஜனங்களுக்கு அலைபேசிக் கருவிகள இல்லாம அள்ளல்பட்டுக் கொண்டிருக்கிற மாதிரியும், அந்த கஷ்டத்த துடைக்கிறதுக்குதான் நோக்கியா 100 மில்லியன ‘இலக்கு’ வைத்து உற்பத்தி போடுகிறதா? இங்க பாருங்க அனோனிமஸ் சார், தேவையில்லாததுக்கெல்லாம் ஒரு அவசியத்தை தேடுறீங்க பாருங்க் அதுக்குப் பேருதான் வெறித்தன்ம்.
      அடுத்து இது கொலையால்; விபத்து என்கிறீர்கள். மனிதத் தன்மையற்றவர்களின் பர்ர்வையில் இது விபத்து. மனிதத்தன்மையுள்ளோருக்கு இது கொலை. உங்கள் வாதம் சரியென்றால் கேமராவில் பதிவாகியுள்ள அக்கொடுமையை வெளியிடச் சொல்லுங்கள்.
      மேட்டுக்குடித் திமிர்த்தனத்துக்குத்தான் அந்த கார் உதாரணத்தை சொன்னேனே தவிர வெறும் வார்த்தைகளைப் பிடித்து தொங்க வேண்டாம்.
      உங்களுக்கு நோக்கியாதான் நாடு. நோக்கியா வள்ர்ச்சிப் பாதையில் செல்வதற்கு நாங்கள் ஏன் தொழிலாளி அம்பிகாவை இழக்க வேண்டும்?

Leave a Reply to Pravin பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க