privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் - தோழர் மருதையன்

பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்

-

உங்களின் கவனத்திற்கு: 26.12.2010 அன்று சென்னையில் நடந்த கீழைக்காற்றின் நூல் அறிமுக விழாவில் தோழர் மருதையன் பேசிய உரையை இங்கு வெளியிடுகிறோம். சுமார் 6000 வார்த்தைகள் கொண்ட இந்த நெடிய கட்டுரை வாசிப்பு குறித்த முக்கியமான பிரச்சினைகளை சமூக நோக்கத்துடன் விரிந்தும், ஆழமாகவும், ஆராய்கிறது. வழக்கமான இணைய வாசிப்பு பாணியில் அல்லாமல் சற்று தங்கி நின்று நிதானித்து படியுங்கள். அதென்ன இணைய வாசிப்பு என்ற கேள்வி இருந்தால் அதற்கான விடைதான் இந்த கட்டுரை

தோழமையுடன்
வினவு

__________________________________________________________________________________

காலத்தின் கசப்பை முறியடித்த கீழைக்காற்றின் வரலாறு!

தோழர்களே, இந்த நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புரை என்றெல்லாம் போடுவதில்லை. பொதுவாக நூலை வெளியிட்டுப் பேசுவார்கள். இங்கு சிறப்புரை என்று போட்டிருக்கிறார்கள். இது எனக்கு வாய்த்த சிறப்பு ஒரு சுமை. மற்றவர்களைப் போல் இயல்பாக ஒரு கருத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையிலே பேச இயலாமல் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஈடு கொடுக்க வேண்டியச் சூழலில் இந்த மேடையில் நிற்கும் நிலை. அது பற்றிக் கவலைப்படவில்லை. இந்தக் கூட்டம், வழமையான கூட்டங்களைப் போல் இல்லாமல் மாலை நேரத்தில் ஒரு நான்கைந்து பேர் அருகருகே அமர்ந்து கலந்துரையாடுதுவது போன்றச் சூழலையும் மனநிலையையும் ஏற்படுத்துவதால் அந்த வகையிலேயே இங்கே பேசுவது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.

கீழைக்காற்று வெளியீட்டகம் பற்றி தோழர் துரை.சண்முகம் தன் தலைமை உரையில் சுருக்கமாகச் சொன்னார். கீழைக்காற்று வெளியீட்டகம் தொடங்கிய காலம் என்பது மிக முக்கியமானது. ரஷ்யாவிலே, கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலே போலி சோசியலிசத்தின் வீழ்ச்சி – “கம்யூனிசம் இறுதியாகத் தோற்று விட்டது, முதலாளித்துவம் வென்று விட்டது, இது தான் நாகரீகத்தின் முடிவு, சித்தாந்தங்களின் முடிவு” என்றெல்லாம் மேற்கத்திய அறிவுத்துறையினர் பேசிக்கொண்டிருந்த காலம்.

இங்கே தமிழகத்தை பொறுத்த வரையிலே உங்களுக்குத் தெரியும் NCBH  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என்பது ஒரு இடதுசாரி அரசியல், கம்யூனிஸ்ட் அரசியல் முற்போக்கான விஷயங்கள் ஆகியவற்றை எல்லாம் தெரிந்து கொள்வதற்கு, 70களில் 80களில் இளைஞர்களுக்கு வாய்த்த ஒரு வரப் பிரசாதமாக இருந்தது. 10காசு 15காசு 25காசு 50காசுக்கெல்லாம் புத்தகங்கள் கிடைக்கும். அதன் பொருள் எல்லாக் கடைகளிலும் அந்த விலைக்குப் புத்தகங்கள் கிடைக்கும் என்பதல்ல. ரஷ்யாவிலே மலிவு விலைக்கு அச்சிடப்பட்டு இங்கே விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

அதை எண்ணிறந்த இளைஞர்கள், ஒரு வகையிலே சொன்னால் “நாலணாவிற்கு ஒரு புக் கிடைக்குது அது என்ன என்றுதான் வாங்கிப் பார்ப்போமே” என்றும், “யாரு நாலணாவிற்கு புக் விற்கிறார்கள்? 15காசு 20காசுக்கு யார் புக் விற்கிறார்கள்?” என்றும் வாங்கினார்கள். அரசியல் நூல்கள், குழந்தைகளுக்கான நூல்கள், கதைகள், அறிவியல் நூல்கள் இப்படிப் பல நேர்மறையான, சிந்தனையைத் தூண்டக்கூடிய நூல்கள் அப்போது தமிழகமெங்கும் பல இடங்களில் விற்பனைக்கிருந்தன. அதை நான் இத்தகைய முற்போக்கு நூல்களைப் படிக்கத் துவங்கிய காலம் என்று சொல்லலாம்.

தனிப்பட்ட முறையிலே அனுபவப் பகிர்தலாக – 70களின் இறுதியில் அல்லது 80பதுகளின் துவக்கத்திலே வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். கடன் ஏற்பாடு செய்து கொண்டு ஒரு 150-200ரூ எடுத்துக் கொண்டு NCBH சென்றால் ஒரு சைக்கிள் கேரியரில் இருபுறமும் நிறையக்  கட்டிக் கொண்டுவரும் அளவிற்கு புத்தகம் வாங்கலாம். அப்படிப் புத்தகங்களைப் வாங்கிக் கொண்டு வந்து லெனின், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் நூல்கள், அறிவியல் நூல்கள் ஆகியவற்றை அது என்ன ஏன் என்று தெரியாமல் எல்லாவற்றையும் படிப்பது.

அப்படி நான் மட்டுமல்ல, பரவலாக இடது சாரி இயக்கம், பெரியார் இயக்கங்களைச் சேர்ந்த பல இளைஞர்கள் என்னைப் போல NCBHஐ நூல்கள் வாங்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருந்த காலம் அது. ஆனால் இந்த ரஷ்ய, கிழக்கு ஐரோப்பியத் தோல்விகளையும் பின்னடைவுகளையும் ஒட்டி, இங்கேயும் ஏற்பட்ட இடது சாரி இயக்கங்களின் பின்னடைவு, சீரழிவு ஆகியவற்றையும் சேர்த்து அவர்கள் கடையைக் கட்ட ஆரம்பித்து விட்டனர்.

NCBH-ல் இனி இடதுசாரிப் புத்தகங்கள் கிடைக்காது என்றானது. சோவியத் ரஷ்யா இந்த நூல்களை வெளியிடுவதையும் நிறுத்திக் கொண்டது. சீனத்தில் இருந்து நூல்கள் அதிகமாக வராது, மிகக் குறைவாகத்தான் வரும். அதற்கு நிறைய மிரட்டல்கள் உருட்டல்கள் உண்டு.

அந்த காலம் பற்றி உங்களுக்குத் தெரியும் – தர்மபுரி வட ஆற்காட்டிலே கடுமையான போலி மோதல்கள் கொலைகள் நடந்த எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலம். அப்போது புத்தகங்கள் வாங்க வேண்டுமென்றால் கிளம்பி சென்னைக்கு வருவோம். தஞ்சையிலே NCBH கடையிலே வாங்குவோம். சென்னையிலே NCBH, சென்னை புக் ஹவுஸ், க்ரியா போன்ற கடைகளில் தேடித் தேடி புத்தகங்கள் வாங்கிக் கொண்டு போவோம்.

நான் சொன்ன, உலகம் தழுவிய அளவிலே ஏற்பட்ட மாற்றங்களை ஒட்டி, “இடது சாரி கருத்துக்களுக்குப் பின்னடைவு, இதை இனி யாரும் வாசிக்க மாட்டார்கள், இதெல்லாம் எடுபடாது” என்ற பிரச்சாரம் உலகம் தழுவிய அளவிலே நடத்தப்பட்ட போது, அதற்கு எதிரான போராட்டத்தின் ஒரு அங்கமாக தோழர்கள் கீழைக்காற்று என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். மார்க்சிய லெனினியக் கருத்துக்களையோ, அல்லது பெரியார் அம்பேத்காரின் சாதி மறுப்புக் கருத்துக்களையோ, ஜனநாயக பூர்வமாக இந்தச் சமூகத்தில் பார்க்கின்ற கருத்துக்களையோ படிக்கக் கூடிய வாசகர்களுக்கு ஒரே இடத்தில் எல்லா நூல்களும் கிடைக்கப் பெற வேண்டும்.

இந்தக் கருத்துக்கள் எல்லாம் மக்களிடம் போனால் தானே இயக்கத்தைக் கட்டமைக்க முடியும். இந்தக் கருத்துக்களை எல்லாம் கொண்டு செல்வதற்கு யாரும் இல்லை. தோழர் சொன்னதைப் போல வணிகர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் எவ்வளவு முற்போக்கு உள்ளம் கொண்டவர்களாக இருந்தாலும் தொழில் ரீதியாக அவர்களால் நட்டமில்லாமல் நடத்த முடியாது. லாபம் கிடைக்காதென்றால் இதிலெல்லாம் இறங்க முடியாது. நட்டம் வந்தாலும் இழப்பு வந்தாலும் இப்படி ஒரு நிறுவனத்தை நடத்த வேண்டும் என்று யார் சிந்திக்க முடியுமென்றால் யாருக்கு சமூக மாற்றத்தில் அக்கறை இருக்கிறதோ, யார் தங்களுடைய சொந்த வாழ்க்கையை இழப்பதற்கு தயாராக இருக்கிறார்களோ, அந்த மாதிரி தோழர்கள் தான் இந்த மாதிரி நிறுவனத்தை நடத்த வேண்டும். இது தேவை. இப்படி ஒரு கருத்துத் தளத்தை உருவாக்கினால் தான் பல இளைஞர்களை எதிர்காலத்தில் ஈர்க்க முடியும் என்பதையெல்லாம் மனதில் கொண்டு துவக்கப் பட்டது கீழைக்காற்று.

தோழர் தமிழேந்தி சொன்னது போல ஆரம்ப காலத்தில் அது ஒரு வாங்கி விற்கும் கடையாகத்தான் இருந்தது. சொந்தப் பதிப்புகள் மிக மிகக் குறைவு. அது என்.சி.பி.ஹெச்  புத்தகங்களாக இருக்கட்டும் அல்லது வேறு கடைகளின் புத்தகங்களாக இருக்கட்டும்; தோழர் துரை. சண்முகம் தேடித் தேடி தேனீ போலச் சேகரித்து வந்து இங்கே வைப்பார். இங்கே வருபவர்களுக்கு சாத்தியமான அளவுக்கு எல்லா நூல்களுமே இங்கே கிடைக்க வேண்டும் என்று அந்த நூல்களைக் கொண்டு வந்து சேமித்து வைத்து, இன்றைக்கு முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி என்று கீழைக்கற்றைப் பற்றி போட்டிருக்கிறார்களே, அந்த முகவரி கடும் உழைப்பினால் நம்மிடையே உருவாக்கப் பட்டது.

இன்று உண்மையிலேயே முற்போக்கு நூல்களுக்கான ஒரு முகவரியாக இருக்கிறது. கீழைக்காற்று அப்படி நிலை நிறுத்தப்பட்டப் பிறகுதான் அதைச் சார்ந்த அரசியல் இயக்கங்கள் ம.க.இ.க. போன்ற அமைப்புகள் களத்திலே செயல்படத் தொடங்கிய பிறகுதான் இதெல்லாம் முடிந்துவிட்டது என்று கருதிய வலது இடது கம்யூனிஸ்டுகளுக்கும் கூட “பரவாயில்லையே, இன்னும் இதற்கு எதிர்காலம் இருக்கிறதே” என்ற நம்பிக்கை வந்தது. தங்கள் புத்தகங்கள் இந்தக் கடையில் விற்கிறதே, ஏன் தங்கள் கடையில் விற்பதில்லை என்று வியந்தனர். இதெல்லாம் நேரில் தெரிந்த விஷயங்கள்.

ஏனென்றால் அந்தப் புத்தகத்தைப் படித்து யார் பயன்படுத்த முடியுமோ அவர்கள் இந்தக் கடைக்கு வருகிறார்கள்; அவர்களின் கடைக்கு போவதில்லை. இது யதார்த்தம்; தற்புகழ்ச்சியல்ல. இப்படி உருவாக்கப்பட்டது ஒரு ஜனநாயஜ பூர்வமான அரங்கமாக இருக்கிறது. நீங்கள் அங்கே விற்கும் புத்தகங்களைப் பார்த்திருக்கலாம். கீழைக்காற்று துரை.சண்முகம் ம.க.இ.க. தோழர் என்பதால் இந்தச் சார்புடைய வெளியீடுகள் மட்டும் கிடைக்கும் என்பதில்லாமல், மற்ற நூல்களும், ம.க.இ.க.வை விமர்சனம் செய்கின்ற மிகக் கடுமையாகத் தாக்குகின்ற நூல்களும் பத்திரிக்கைகளும் எல்லாக் கருத்துக்களுக்குமான இடமாக இங்கே விற்கப்படுகின்றன. எல்லோரும் அப்படிச் செய்வதில்லை. NCBH உள்ளிட்டு பல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்ந்த கடைகள் அவர்களை விமர்சித்து வரும் நூல்களையோ, பத்திரிக்கைகளையோ வைத்திருப்பதில்லை. “நூறு பூக்கள் மலரட்டும்” என்று மாவோ சொன்னாரே அதன் இலக்கணமாக கீழைக்காற்று வெளியீட்டகம் நடத்தி வருகிறது.

அது இன்றைக்கு இப்படி ஒரு நூல் வெளியீட்டு விழாவை இங்கே சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்துகிறது. தோழர் துரை.சண்முகம் “இதுதான் கீழைக்காற்றின் முதல் புத்தக வெளியீட்டு விழா” என்று சொன்னதும் கொஞ்சம் துணுக்குற்றது போல் இருந்தது. இத்தனை நாள் இதை இப்படி நாம் யோசிக்கவில்லையே என்று கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது. அதைப் பற்றிப் பரவாயில்லை. ஆனால், இத்தனை காலம் உழைத்த உழைப்பிற்கு இதை இன்னும் கொஞ்சம் முன்னாலேயே செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

கீழைக்காற்று நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களின் உழைப்பு என்பது மிகவும் கடுமையானது. அவர் சொன்னது போல சும்மா கடையில் அமர்ந்திருப்பது அல்ல. தமிழகம் முழுவதும் எங்கெல்லாம் கூட்டங்கள் நடக்கின்றனவோ, என்ன அரசியல் கூட்டமாக இருந்தாலும், பெரியார் இயக்கம், அம்பேத்கார் இயக்கம், சி‌பி‌ஐ, சி‌பி‌எம் எந்தக் கூட்டமாக இருந்தாலும் அங்கே போய் கடை போடுவது. அங்கே பல பிரச்சனைகள் வரும். இது ம.க.இ.க சார்பு இயக்கம் என்று அடையாளம் கண்டுகொண்டு “எங்களை விமர்சிக்கும் நீ இங்கே கடை போடக் கூடாது” என்பார்கள். இல்லை, இது பொதுவான கடை என்றால் நம்ப மாட்டார்கள்.

ஒன்றிரண்டு தோழர்கள் இது போன்ற இடங்களில் அமர்ந்து கொண்டு அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லி எதிர்கொண்டு போராடி இதை நிலை நாட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த நிறுவனத்திற்கு கொஞ்சம் முன்னாலேயே இப்படி ஒரு வெளியீட்டு விழாவை நடத்தும் யோசனை சொல்லத் தவறியிருக்கிறோம் என்று நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது. எனினும் தாமதித்தேனும் மிகச் சிறப்பாக நடக்கின்ற இந்த நிகழ்ச்சி மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஓவியர் மருதுவின் ஓவியத்தை இரசிப்பதற்கு வரலாறு படித்திருக்க வேண்டும்!

ஒரு தலைப்பு கொடுத்திருக்கிறார்கள். “படித்து முடித்த பின்” என்று. ஓவியர் மருது அவர்கள் பேசும் போது விடுதலைப் போரின் வீர மரபுக்காக புதிய கலாச்சாரம் இதழிலே வெளி வந்துள்ள ஓவியங்கள், அவரதைப் பற்றிச் சிந்தித்த முறை இதெல்லாம் பற்றி விளக்கிச் சொன்னார். அதிலிருந்து இரண்டு ஓவியங்களை எடுத்துக் கொள்வோம். பெரிய மருது அமர்ந்திருக்கிறார் பக்கத்தில் சின்ன மருது நிற்கிறார். நீங்கள் பார்த்திருக்கக் கூடும். சின்ன மருது நிற்கின்ற ஒரு தோற்றம் அண்ணனுக்குப் பணிந்து கையைக் கட்டிக்கொண்டு சற்று தலை குனிந்து கண்களை மேலே ஏற்றி இது சின்ன மருதுவினுடைய பாத்திரம். சின்ன மருதுவின் ஓவியத்தை குதிரை மேல் வரும் போலப் போடலாம். பொதுவாக வீரனென்றால் எப்படிப் போட வேண்டுமென்ற இலக்கணங்கள், சினிமாத்தனமான இலக்கணங்கள் இருக்கின்றன. அந்த இலக்கணப்படி போடலாம்.

ஆனால் அந்தக் கோடுகளின், ஓவியத்தின் வலிமை என்னவென்றால் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த அந்த வீரனின் வரலாற்றை, அந்த தனி மனிதனின் ஆளுமையை, அந்தக் கோடுகள் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகின்றன. அதற்கு சின்ன மருதுவின் எழுத்தைப் படித்திருக்க வேண்டும். அந்தக் கோடுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் சின்ன மருதுவின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும். இவன் இப்படித்தான் இருந்திருக்க முடியும். இதுதான் இந்தப் பாத்திரத்தின் சாரம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக கேலிச்சித்திரக்காரர்கள் அரசியல்வாதிகளை கேலிச் சித்திரம் போடும் போது அவர்கள் வழுக்கைத் தலை என்றால் தலையைப் பெரிதாகப் போடுவார்கள். மன்மோகன் சிங் என்றால் முண்டாசைப் பெரிதாகப் போடுவார்கள். மூக்கு நீளம் என்றால் மூக்கைப் பெரிதாகப் போடுவார்கள். அந்த மனிதருடைய உடற்கூறில் எது துருத்திக் கொண்டு இருக்கிறதோ, முக்கியமானதோ அதற்கு மிகை முக்கியத்துவம் கொடுத்து வரைவதென்று கேலிச் சித்திரக்காரர்கள் ஒரு இலக்கணம் சொல்லுவார்கள். அது வேறு. அது பொருளற்றது. இது அந்த மனிதனுடைய வரலாற்றுப் பாத்திரத்தை, வாழ்க்கையை அவன் வாழ்ந்த காலத்தை அந்தக் களத்தில் வைத்து விளக்குவது.

அதே போல கட்டபொம்மனின் ஓவியம். கட்டபொம்மன் என்றால் சினிமாக் கட்டபொம்மன் தெரியும். நான் கூட அதை ஒரு மிகை நடிப்பென்று நினைத்ததுண்டு. சிவாஜியின் நடிப்பில் மிகை நடிப்பு உண்டுதான். ஆனால் தூக்குமேடைக்கு செல்லும் காட்சியில் – பானர்மேன் எழுதிய அந்தக் குறிப்புகளிலேயே இது உண்டு, அந்தப் படத்திலேயும் தூக்கு மேடை வசனமாகவும் வரும் – “நான் அங்கேயே போரிட்டு மடிந்திருக்க வேண்டும். இவ்வாறு ஒளிந்ததற்கு எனக்கு இந்த நிலை தேவைதான்” என்று கட்டபொம்மன் சொல்வதாக. மருது வரைந்திருக்கும் ஓவியத்தில் அது இருக்கிறது.

அதாவது ஒரு இகழ்ச்சியும் வெறுப்பும் தான் மீதே உள்ள கடுங்கோபமும் கொண்ட நிலையிலே நிற்கின்ற கட்டபொம்மன். ஒரு அவமானம் அது. போரிட்டு மடியாமல் தூக்கிலே சாக வேண்டி இருக்கிறதே என்ற இழிவு. தலைக்குனிவு. அந்தத் தலைக்குனிவிற்கு ஆட்படுகின்ற ஒரு சுயமரியாதை உள்ள மனிதன் அந்த இடத்திலே எப்படி நடந்து கொள்வானோ அப்படி இருக்கிறது அந்த ஓவியம் – அவன் தூக்குக் கயிற்றை முத்தமிடுகிறேன், சிரிக்கிறேன் என்றெல்லாம் இருக்க முடியாது.

இந்த ஓவியத்திற்கு என்ன முக்கியத்துவம் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? நன்றாக வரைந்திருக்கிறார் என்று எதை வைத்து சொல்வது? பெரியாரை நன்றாக வரைந்திருக்கிறார் அல்லது பகத்சிங்கை நன்றாக வரைந்திருக்கிறார் என்று சொல்கிறோம். நன்றாக வரைதல் என்றால் என்ன? ஓவியம் சிறப்பாக இருக்கிறது, பொருத்தமாக இருக்கிறது, அழகியல் நேர்த்தியுடன் இருக்கிறது என்று சொல்ல வேண்டுமென்றால் எதைப்பற்றி நீங்கள் கருத்து சொல்கிறீர்களோ, அந்த மனிதனைப் பற்றி, அந்த வரலாற்றைப் பற்றி, உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் படித்திருக்க வேண்டும். அதைப் பற்றி புரிதல் இருக்க வேண்டும்.

படிப்பது என்றால் சும்மா படிப்பது என்று அல்ல. ஒரு ரசனை வேண்டுமென்றால் அதற்கு பின்புலத்திலே அறிவு வேண்டும். மார்க்ஸ் ஒரு இடத்தில் அழகாக எழுதுவார். “The most profound music is merely a sound to unmusical ears.”-   “மிகச் சிறந்த இசையாகவே இருந்தாலும் இசைக்காதுகள் இல்லையென்றால் அவர்களுக்கு அது வெறும் ஒலி தான்”. இசையை ரசிக்கக்கூடிய காதாக இல்லையென்றால் அது வெறும் சத்தம்தான். இசையை எப்படி ரசிப்பது? அதை ஒரு பயிற்சியின் மூலம் தான், உழைப்பின் மூலம் தான், படிப்பதன் மூலம் தான் பெற முடியும். படித்து முடித்த பின் என்ற தலைப்பை விட இன்றையச் சூழலை வைத்துப் பார்க்கும் போது, “பார்த்து முடித்தப் பின்” என்று தலைப்பு வைத்திருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.

நடுத்தர வர்க்கத்தின் காரியவாத படிப்பும், காலியாகும் ஆளுமையும்!

ஏனென்றால் “படித்து முடித்தப் பின்” என்றால் – சில நாட்களில் புத்தகக் கண்காட்சி நடக்கப் போகிறது அந்தக் கடைகளைப் போய் பாருங்கள். எங்கே கூட்டம் அலை மோதுகிறதென்று. நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் பிள்ளைகளை அழைத்து வருகிறார்கள். அந்தப் பிள்ளையை ஆய கலைகள் அறுபத்து நான்கிலேயும் அதற்குள்ளே தயார் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்போது ஆய கலைகள் புதிதாக வேறு அறுபத்து நான்கு உள்ளன. பழையவை அல்ல. கம்ப்யூட்டர், இங்கிலீஷ், ஃபிரெஞ்சு மொழி என்று பல கற்றுக் கொள்ளவேண்டும் இதுக்கான ஒலித்தகடுகள், வீடியோக்கள் இதையெல்லாம் வாங்கி எதற்கு தயார் செய்கிறார்கள்?

பிள்ளையை விளையாட விடாமல் “படி படி” என்று கொல்கிறார்கள். இதையெல்லாம் பல நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் பார்க்கிறோம். நாமும் இங்கே படிக்க வேண்டுமென்று வலியுறுத்திப் பேசிக் கொண்டிருக்கிறோம். பின் என்ன பிரச்சனை? எதற்குப் படிக்கச் சொல்கிறார்கள் என்றால் படித்து முடித்த பின் வேலை. படித்து முடிக்கவே வேண்டாம். காம்பஸ் இன்டர்வியூவில் வேலை. முன்னாலேயே வேலை கிடைக்க வேண்டும். வேலைக்குப் போவதற்காக, நல்ல வேலைக்குப் போவதற்காக,  அமெரிக்கா போவதற்காக, பொருளீட்டுவதை உத்திரவாதம் செய்து கொள்வதற்காக, ஒரு வாழ்க்கை தகுதியைப் பேணிக் கொள்வதற்காகப் படி படி என்று சொல்கிறார்கள்.

படிப்பு என்பதைப் பற்றிய பார்வை பெற்றோர்களிடம் இப்படி இருக்கிறது. இது படிப்பு அல்ல. இதை நான் நிராகரிப்பதற்காகச் சொல்லவில்லை. இப்போது இந்தக் காய்ச்சல் என்பது பத்தாம் வகுப்பிலிருந்தே தொடங்குகிறது. இது முன்னர் கிடையாது. பிள்ளைக்குப் பத்தாவது பரீட்சை என்றால் பெற்றோர் எங்கும் போவதில்லை. தாயும் சரி தந்தையும் சரி கூடவே இருந்து சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஏனென்றால் போட்டி மிகுந்த உலகம். இதில் மதிப்பெண் வாங்கி வந்தால் தான் உண்டு. அரசுக் கல்லூரிகளில் ஒரு சீட்  கிடைக்க இவ்வளவு மார்க் வாங்க வேண்டும். இல்லையென்றால் சுயநிதிக் கல்லூரிகளுக்குச் சென்று பணம் கட்ட முடியாது. அரசுக் கல்லூரிகளில் வாங்க 98 மதிப்பெண் வேண்டுமென்றால் 97.5 வாங்கினாலும் போயிற்று, சீட் கிடைக்காது. அப்படி விரல் நுனியில் பையனை நெருக்கிக் கொண்டு செல்கிறார்கள்.

மரு.ருத்ரன் சொல்லுவார் இதனாலேயே பிள்ளைகள் மனநோய்களுக்கு, மன அழுத்தங்களுக்கு, பதட்டங்களுக்கு சிறிய வயதிலேயே ஆட்படுகிறார்கள் என்று. அப்படித் தள்ளுகிறார்கள் பெற்றோர்கள். ஏன்? பிள்ளைகள் நலத்தின் பொருட்டுத்தான் செய்கிறார்கள். பிள்ளைகள் நலமாக இருக்க வேண்டும் என்று தான் செய்கிறார்கள். அப்படி படித்து முடித்து செய்கின்ற பணி என்னவென்றால் ஒரு முதலாளியினுடைய தொழிற்சாலை இயந்திரத்தின் போல்ட் நட்டாகவோ, அல்லது ஒரு வர்த்தக இயந்திரத்தின் உப உறுப்பாகவோ அல்லது ஒரு விளம்பர இயந்திரத்தின் பகுதியாகவோ வேலை செய்யப் படிக்கிறார்கள். அங்கே ஆக்கபூர்வமானது எதுவும் இல்லை. அவன் சொல்வதைச் செய்வதற்கு முன்னாலேயே தயார் செய்து கொண்டு போகிறோம்.

இயந்திரத்தை முதலாளி கைக்காசு போட்டு வாங்குகிறான். ஆனால் இயந்திரத்தின் உப உறுப்புகளாகச் செல்லக் கூடியவர்கள் அது ஐ‌டி துறை ஊழியர்களாக இருக்கட்டும் வேறு யாருமாக இருக்கட்டும் எல்லாருமே தங்கள் சொந்தச் செலவில் தங்களைத் தயாரித்துக் கொண்டு போகிறார்கள். ஒரு மூன்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கிற்கு செல்வாக்கில்லை. எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் படிக்க வேண்டும். அல்லது இன்ஜினியரிங் படிப்பு வேண்டாம் மல்டிமீடியா படித்தால் அதிக சம்பளம் வாங்கலாம். இன்ஸ்டிட்யூட்டில் ஒரு வருடம் படித்தால் நல்ல சம்பளம்.

இந்தச் சந்தையிலே மலிவு விலையிலே இந்த உப உறுப்புகளை வாங்குவதற்காக இதை மட்டும் படித்தால் போதும் என்ற மனநிலையை முதலாளித்துவம் பயிற்றுவிக்கிறது. அந்த முதலாளித்துவத்தின் சாட்டைக் குச்சிக்கு ஆடும் விலங்குகளைப் போலப் புத்தகக் கண்காட்சியில் கூட்டம் சேர்கிறது. இதை விட்டால் பக்தி நூல்கள், அதற்குப் பின்னர் நிறைய குருமார்கள் இருக்கவே இருக்கிறார்கள். வாழ்க்கையில் பதட்டத்தைத் தணிக்க என்று அவர்களுடைய நூல்கள். முதலில் நுழைந்தவுடன் பதட்டத்தை எவ்வாறு உருவாக்கிக் கொள்வது பின்னர் கொஞ்சம் தள்ளிப் போய் பதட்டத்தை எப்படித் தணிப்பது இப்படி நூல்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்து விடுகிறார்கள். இப்படித்தான் இன்றைய கல்வி என்பது இருக்கிறது. இந்தக் கல்வி மூலம் ஓவியர் மருதுவின் ஓவியத்தை – 5000, 10000, 20000க்குக் கூடப் புத்தகங்கள் வாங்கிப் படித்தாலும் – ரசிக்க முடியுமா? சாத்தியமில்லை. அவர்களுக்கு இது தெரியாது.

நாட்டுப்பற்றும், துரோகமும் வரலாற்றறிவு இன்றி புரியாது!

மருது, கட்டபொம்மன் போன்றவர்கள் இந்த மண்ணிலே வாழ்ந்தார்கள் என்பது நம்முடைய பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கும் கல்லூரியிலே படித்து வந்திருக்கிற இளைஞர்களுக்கும் தெரியாது. யாரும் படித்ததில்லை. சொல்லப் போனால் புதிய கலாச்சாரம் இந்த சிறப்பிதழைக் கொண்டு வருவதற்கு முன்னால் எனக்கும் கூட இவ்வளவு விவரங்கள் தெரியாது. இந்த மண்ணினுடைய பெருமை மிக்க வரலாறு என்பது, இந்த மண்ணினுடைய மிகச் சிறந்த மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கை – தயவு செய்து இந்த நூலில் நீங்கள் திப்பு சுல்தானுடைய வரலாற்றையோ, சின்ன மருதுவினுடைய பிரகடனத்தையோ, ஊமைத்துரையின் போராட்டத்தையோ படித்துப் பார்த்தால் கண்ணீர் வரும். 200 ஆண்டுகளுக்கு முன்னாள் இப்படிப் பட்ட மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்களா என்று எண்ணிப் பார்க்க முடியாது.

ஆனால் இது தெரியாமல் நுனி நாக்கு ஆங்கிலம் பேசிக்கொண்டு ஒரு தக்கை மனிதர்கள்  கூட்டம் உருவாக்கப்படுகிறது. ‌இந்தத் தக்கை மனிதர்களுக்கு இதை எப்படி ரசிக்க முடியும்? சமீபத்தில் ஒரு தோழர் சொன்னார். அதுவும் இப்போது புதிய தகவல். இந்தப் பத்திரிக்கை கொண்டு வரும் போது எனக்குத் தெரியாது. இந்தியாவில் மன்னர் மானியம் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் ஒழிக்கப் பட்டது. ஆனால் ஆற்காட்டு நவாபிற்கு மட்டும் மானியம் ஒழிக்கப் படவில்லையாம். அவர்கள் வெப் சைட்டில் போட்டிருக்கிறார்கள். ஆற்காடு நவாபிற்கு மட்டும் மன்னர் மானியத்தில் இருந்து விலக்கு தரப்பட்டிருக்கிறது. ராயப்பேட்டையில் ஒரு பெரிய அரண்மனை இருக்கிறது. அமீர் மஹால் என்று பெயர். அதில் 600 பணியாளர்களுக்கு அரசாங்கம் பணம் கொடுக்கிறது. மத்திய பராமரிப்புத் துறை CPWD அதைப் பராமரிக்கிறது. மாநில அரசிலுள்ள அமைச்சர்களுக்குள்ள எல்லா உரிமைகளும் அந்தஸ்தும் ஆற்காடு இளவரசருக்கு உண்டு சுழல் விளக்கு உட்பட. பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொள்ளும் அரசியல் கட்சிகள் அவரை அழைக்க வேண்டும். ப்ரோடோகாலில் அதற்கிடம் உண்டு.

யார் இந்த ஆற்காட்டு நவாப்? திப்பு சுல்தான் முதல் மருது, கட்டபொம்மன் என்று தென்னிந்தியாவின் விடுதலை வீரர்கள் அத்தனை பேரையும் நசுக்குவதற்கு துணை நின்ற துரோகி. துரோகத்தின் வரலாறு தான் ஆற்காட்டு நவாபின் வரலாறு. அந்தத் துரோகத்திற்கு வெள்ளையர் கொடுத்த சிறப்புப் பரிசு அது. 1870-இல் வட இந்தியச் சுதந்திரப் போராட்டம் முடிந்த பிறகு வெள்ளைக்காரன் ஆற்காட்டு “நவாப்” என்றெல்லாம் டெல்லி பாதுஷா கொடுக்கும் பட்டத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்று அதை எடுத்துவிட்டு மேற்கத்திய மரபில் Prince Of Arcot ஆற்காட்டு இளவரசர் என்று பேரை மாற்றச் செய்தான். அதே போல விஜயரகுநாதத் தொண்டைமான் என்று பலர் இருக்கிறார்கள்.

ஆனால் இந்த ஒரு விவரம் நம் கண் முன்னாலேயே இருக்கிறது. இப்போது அந்த ஆற்காடு இளவரசனுடைய வாரிசை ஏதும் செய்வதல்ல நமது நோக்கம். ஆனால் ஒருபக்கம் இப்படி ஒரு இளவரசர் அந்தஸ்து கொடுக்கிறார்கள். இன்னொரு பக்கம் மருதுவிற்கு விழா எடுக்கிறோம் என்கிறார்கள். அந்தப் பக்கம் கட்டபொம்மனுக்கு விழா எடுக்கிறோம் என்கிறார்கள். ஒருவேளை அந்த விழாக்களிலும் முதல் வரிசையில் ஆற்காட்டு நவாப் உட்கார்ந்திருப்பார். இது என்ன கேலிக் கூத்து? இந்த கேலிக்கூத்துப் பற்றி நமக்குத் தெரியாது. இப்படி இந்த மண்ணினுடைய வரலாறு கூடத் தெரியாமல், படிக்க விரும்பாமல் சரியாகச் சொன்னால் படிக்க முடியாமல் இருக்கக் கூடிய ஒரு தலைமுறை வளர்ந்து கொண்டு இருக்கிறது.

தொலைக்காட்சி உருவாக்கும் ஊனமுற்ற டிஜிட்டல் மூளை!

அதனால் தான் முன்பொருமுறை “படித்து முடித்தப் பின்” என்றில்லாமல் “பார்த்து முடித்தப் பின்” என்று தலைப்பை வைத்திருக்கலாம் என்று சொன்னேன். ஏனெனில் தொலைக்காட்சியின் ஆதிக்கம் அந்த அளவுக்கு இருக்கிறது. இது கீழைக்காற்றுக்கும் ம.க.இ.க. என்ற அமைப்பிற்கும் மட்டும் பிரச்சனை அல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனை. படிக்க முடியாது என்ற சூழலை நோக்கி இளைய தலைமுறை உருவாக்கப்படுகிறது. இதில் நகர்ப்புறம், நாட்டுப்புறம் என்ற வித்தியாசமெல்லாம் இல்லை. கலைஞர் டிவி கிராமத்திலும்தான் தெரிகிறது.

அமர்ந்து படிக்க முடியாது என்றால் வேறு என்ன செய்ய முடியும்? தொலைக்காட்சி பார்க்கலாம். அதில் ஒரு நொடிக்கொரு முறை மாறுகின்ற ஃபிரேம், காட்சிகள் மாறி மாறிப் போகின்றன. அது மாறுவது போதாது என்று ரிமோட்டில் வேறு மாற்றி மாற்றிப் பார்க்கின்றனர். இன்னும் வேகமாகப் பார்க்க வேண்டுமாம். பல சேனல்கள் மாற்றுகிறார்கள். இப்படித்தான் பாட்டுக் கேட்கிறார்கள், நியூஸ் பார்க்கிறார்கள், வேறு நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள். தொலைக்காட்சியில் என்ன வருகிறது என்பதற்கெல்லாம் நான் இப்போது போகவில்லை. இது பார்க்கும் முறை மட்டுமே.

மனிதர்கள் என்றாலும் இது ஒரு பௌதீக உடல். நடப்பதென்றால் அதில ஒரு தாள லயம் (ரிதம்) இருக்கும். இப்படித்தான் நடக்க முடியும்; ஓடுவதென்றால் இப்படித்தான் இருக்க முடியும். அது போல சிந்திப்பதென்றால் அதற்கென்று ஒரு வழிமுறை (பிராசஸ்) இருக்கிறது. இப்படித் தொலைக்காட்சி பார்த்து என்ன சிந்திக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. யோசித்துப் பாருங்கள், அப்போது மூளைக்குள் என்ன நடக்கிறது என்று.

நீங்கள் சன் டிவியிலிருந்து CNN IBN, NDTV, TIMES NOW  என்று எந்த டிவியானாலும் பாருங்கள். சீரியசாக நியூஸ் பார்ப்பவர்களுக்கே சொல்கிறேன். அவர்கள் ஒரு செய்தியைச் சொல்லும் முறையைப் பாருங்கள். காட்சிகள் எப்படி மாறுகின்றன? TIMES NOWவில் ஒரு செய்தி காண்பிக்கிறார்கள் இதோ ஸ்பெக்ட்ரம் ராஜா என்று ஒரு வட்டம் போடுகிறார்கள், ஜும் செய்து பெரிதாக்கிக் காட்டுகிறார்கள் பின்னால் ஒரு இசை வருகிறது- பயங்கரமான திகில் இசை, பின்னர் அதை விவரிக்கிறார்கள்.. இப்படிப் போகிறது. ஒவ்வொரு சானலிலும் வெவ்வேறு விதமாகப் பார்த்தாலும் இப்படித்தான் காட்டுகிறார்கள்.

இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் சுமார் ஒரு மாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு மாதமாக எல்லாத் தொலைக்காட்சிகளிலும் ஸ்பெக்ட்ரம் செய்திகளைப் பார்க்கின்றவர் உங்களிலேயே பல பேர் இருக்கலாம். அதிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்? ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி தொலைக்காட்சி பார்த்தவர்களுக்கு என்ன தெரியும்? 176000 கோடி ரூபாய் ஊழல். யார் செய்தது? ராஜா. அது கருணாநிதி குடும்பத்திற்குப் போயிருக்கும். சரி அப்புறம் அதற்கு மேல்? அப்பறம் ஏதோ டாடாவோட ஃபோன்ல பேசியிருக்கார்கள் என்று தெரியும். இது தான் CNN IBN  பார்க்கிறவனுக்கும் தெரியும், TIMES NOW பார்க்கிறவனுக்கும் தெரியும். இது தான் கிராமத்தில் தினத்தந்தி படிப்பவனுக்கும் தெரியும். உனக்கென்ன வேறு பிரத்யேக அறிவு இருக்கிறது இப்போது?

வேகமாக மாறக்கூடிய ஃபிரேமில் சொல்லக் கூடிய ஒரு வரி, அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தேர்ந்தெடுத்து சொல்லக்கூடிய ஒரு வரி ராஜா ராஜா ராஜா. ஸ்பெக்ட்ரம் டாடா என்று சொல்லவேண்டும். ஏன் ராஜா என்கிறார்கள்? ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கியமாக ஆதாயம் அடைந்தது யார்?  ஆதாயம் அடைந்தது டாடா, அனில் அம்பானி, மிட்டல் – அவர்களல்லவா குற்றவாளிகள்? இதைப் பத்திரிக்கை படித்தாலே தெரிந்து கொள்வது கடினம். தொலைக்காட்சியில் இப்படித் திரும்பத் திரும்பக் காட்டி, அந்தக் காலத்தில் நம் பாட்டன்மார்கள் எம்‌ஜி‌ஆர் என்றால் ஹீரோ நம்பியார் என்றால் வில்லன் என்று நினைத்திருந்தார்களே அந்த அறிவு தான் இருக்கிறது.

படிக்காதவனுக்கும் ரேகை உருட்டுபவனுக்கு இருக்கும் அறிவுதான் இருக்கிறது. தொலைக்காட்சியில் மாறுகின்ற ஃபிரேமை ஒட்டிச் சொல்லப்படுகின்ற காட்சிகளில் உள்ள ஒன்றிரண்டு வரிகள், அதற்குப்பின் ஒரு தொலைக்காட்சி நிருபர் அந்தக் களத்திலே நின்று கொண்டு மூச்சு விடாமல் பேசுவார். ஒரு வார்த்தை புரியாது. லொட லொடவென்று தகர டப்பாவில் கோலிக்குண்டு உருட்டுவது போல பேசுகிறார்கள். அது எதற்கு என்று தெரியவில்லை. ஏதோ பரபரப்பா சொல்கிறார்களாம். அதில் ஒரு பரபரப்புச் செய்தியும் இருக்காது. இதைத் தான் எல்லாரும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதில் விஷயமில்லை என்பது ஒரு புறம். ஆனால் இதன் காரணமாக அதன் மூளையின் ஆற்றல் அழிகிறது.

உடலுழைப்பு மட்டுமல்ல மூளை உழைப்பும் குறைவதால் வரும் விளைவுகள்!

நான் மரு.ருத்ரனிடம் இருந்து ஒரு புத்தகம் வாங்கிப் படித்தேன். ID என்ற புத்தகம் சூசன் கிரீன்ஃபீல்ட் என்ற நியூரோ சைக்காலஜிஸ்ட் எழுதியது. அந்த நூல் இதைத்தான் முக்கியமாகக் கையாள்கிறது. 21-ம் நூற்றாண்டு, அதற்குப் பிறகு இளைஞர்கள், படிக்கும் முறை எல்லாம் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பேசுகிறது. அது ஒரு மிகப் பெரிய மூளை ஊனத்திற்கு இந்தச் சமூகம் ஆட்படப் போகிறது என்று சொல்கிறது. இதை எப்படிப் புரியவைப்பது?

நாம் நம் பெற்றோர் தலைமுறையை விடக் குறைவாக நடக்கிறோம். அவர்களை விடக் குறைவாக உழைக்கிறோம். நம்முடைய வாழ்க்கை முறை மாறி விட்டது. சுற்றுச்சூழல் மாறிவிட்டது. இதன் காரணமாக பல பிரச்சனைகள் உடலில் ஏற்படுகின்றன. டாக்டர்கள் வாக்கிங் போக உடற்பயிற்சி செய்யச் சொல்கிறார்கள். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என்று பல பிரச்சனைகள். இதற்கெல்லாம் 40-50 வகைப்பட்ட மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொன்றையும் குறிப்பாக ஆராய்ந்து சொல்கிறார்கள். இப்படி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில் கருத்தியல் ரீதியாக ஒரு தாக்குதல் மூளைக்கு வருகிறதே இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாதென்றா நினைக்கிறீர்கள்?

நான் சிந்தனையில் ஏற்படும் மாற்றத்தைச் சொல்லவில்லை. மூளை என்ற பருப்பொருளே காலப் போக்கில் செயலிழந்து போகிறது. உதாரணமாக, இந்தக் கையைப் பயன்படுத்தி நான் கடுமையாக உழைக்கும் பட்சத்தில் இந்தக் கைகள் வலிமையாக இருக்கும். நான் குமாஸ்தாவாக எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன், உழைப்பில் ஈடுபடவில்லை என்றால் இந்தக் கை இப்படித்தான் இருக்கும். உடல் அங்கமான மூளையைப் பயன்படுத்தி இந்தத் தொலைக்காட்சி ஃபிரேம் மாறுவதை பார்க்கும் போது என்ன செய்கிறார்கள்? இளைஞர்கள் சிந்திப்பதில்லை என்பதல்ல அவர்கள் சிந்திக்கும் திறனையே இழந்து வருகிறார்கள். அவர்களால் சிந்திக்க முடியாது.

அவர்கள் முற்போக்காக புரட்சி செய்யவேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை; தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி சற்று நேரம் அமர்ந்து விலகிச் செல்லாமல் ஒரு பொருள் குறித்து ஆழமாக உரையாட முடியுமா? இன்றைய இளைஞர்களிடம் முயற்சி செய்து பாருங்கள். ஒரு குறிப்பிட்டப் பொருளைக் குறித்து எழுதிக் கொடுக்க முடியுமா? கேட்டுப் பாருங்கள். இல்லை, நம்மாலேயே விருப்பமான ஒரு விஷயம் குறித்து முடிகிறதா என்று யோசித்துப் பாருங்கள். முடியவில்லை என்றால், ஏன் முடியவில்லை? படித்திருக்கிறோம், எழுத்தறிவு இருக்கிறது, ஏன் முடியவில்லை?

அதற்கு இரண்டு காரணம் இருக்கிறது. ஒன்று சரக்கில்லை. ஸ்பெக்ட்ரம் பற்றி இரண்டு பக்கம் எழுதிக் கொடுக்கச் சொன்னால் எத்தனை பேர் எழுதித் தர முடியும்? இரண்டாவது அப்படி முனைந்து சிந்திக்கும் ஆற்றலை இழந்து விட்டோம். கிருபானந்த வாரியார் வந்து உட்கார்ந்தால் அப்படியே சிஸ்டத்திலிருந்து வருவது போல வடமொழி சுலோகங்கள், இலக்கியம் எல்லாம் வந்து கொண்டே இருக்கும். அவ்வளவும் மனப்பாடம். அப்படி ஒரு நினைவாற்றல். அது பழைய கல்வி முறையின் அங்கமாக இருந்தது.

அச்சுக் கலை வந்த பிறகு அப்படி மனப்பாடம் செய்து கொள்ள வேண்டிய தேவை போய்விட்டது. இப்போது கணினி வந்து விட்டது. வாய்ப்பாடு தேவை இல்லை கால்குலேட்டர் இருக்கிறது. தேவையான விஷயங்களை கணினி மூலம் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதை நினைவில் சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மாற்று நிலை என்ன செய்கிறது? அந்த ஆற்றல்களை நம்மிடமிருந்து மெல்ல மெல்ல வெளியே கொண்டு வருகிறது. முன்பு கிராமத்தில் சாமான் வாங்கினால் “நாலு பத்து நாப்பது என்று சொல்ல வேண்டியது தானே அதற்கெதற்கு கால்குலேட்டர்” என்று கிண்டல் செய்வார்கள். “இது கூடத் தெரியவில்லையா” என்று கேலி செய்வார்கள். இந்த ஆற்றல்களை இழப்பது போல நாம் சிந்திக்கும் திறனையும் இழக்கிறோம்.

இதைச்‌ சொல்லும்போது நவீன மாற்றங்களை எதிர்த்து நான் பேசுவதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. நவீன மாற்றங்கள் வாழ்க்கையைக் கெடுத்து விட்டது என்று பழமைவாதியைப் போலப் பேசுகிறேன் என்று இருந்து விடக்கூடாது. அப்படி அல்ல. ஆனால், இந்த நவீன மாற்றங்கள் கேடான முறையில் மட்டும் திட்டமிட்டு நம் மீது ஒரு ஆயுதம் போலப் பிரயோகிக்கப் படுகின்றன.

காட்சி பார்த்து கருத்து வராது, குழந்தைகளான பெரியவர்கள்!

இப்படி வளர்க்கப்படுபவர்களால் கருத்தியல் (concept) ரீதியாகச் சிந்திக்க முடியாது. 2-3 வயதுக் குழந்தைகளால் எப்படி கருத்தியல் ரீதியில் சிந்தித்துப் பேச முடியாதோ அது போல் ஆகிறார்கள். குழந்தைகளால் “எனக்கு கஷ்டமாக இருக்கிறது” என்று சொல்ல முடியாது. அவர்களால் படிமங்களால் தான் சொல்ல முடியும். சுடும் என்றோ, வலிக்கிறது என்றோ சொல்லத் தெரியாத குழந்தை காலப்போக்கில் கருத்தியல் ரீதியாகக் கற்றுக்கொள்கிறது. அதற்கு முன் அந்த அனுபவத்தைத் தான் அந்தக் குழந்தை பேசுகிறது. ஏனென்றால் அதன் அறிவு காட்சிப் படிமங்களில் இருக்கிறது, அனுபவத்தில் இருக்கிறது. கருத்தியல் ரீதியான ஆற்றலே அந்தக் குழந்தையிடம் இல்லை. பின்தான் கொஞ்சம் கொஞ்சமாய் கற்றுக் கொள்கிறது. அந்தக் குழந்தையைப் போல இந்தத் தொலைக்காட்சிப் படிமங்களைப் பார்த்துப் பார்த்து கருத்தியல் ரீதியாகச் சிந்திக்கும் ஆற்றல் போய்க்கொண்டு இருக்கிறது.

ஜனநாயகம் என்றால் என்ன? கௌரவம் என்றால் என்ன? நீதி என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கு நுனிநாக்கு ஆங்கிலம் பேசுபவர்களால் பதில் சொல்ல முடிவதில்லை. அது எதுவும் தொலைக்காட்சியில் பேசப் படுவதில்லை. எதுவும் நின்று விவாதிக்கப் படுவதில்லை. ஏன் இவ்வாறு என்பது முக்கியமான கேள்வி. இவ்வாறு சிந்திக்கும் திறனற்ற, சிந்திக்கும் தேவை அற்ற உழைக்கும் மிருகங்களை உருவாக்குவதற்குத் தான் உலக முதலாளித்துவம் செயல்படுகிறது.

உழைக்கும் மிருகங்கள் என்று சொல்லும் போது உடல் உழைப்பு மட்டுமல்ல மூளை உழைப்பையும் சேர்த்தே சொல்லுகிறேன். மூளை உழைப்பிலும் அவனுக்குத் தேவையானப் பணியை செய்ய முடிந்த இயந்திரத்தின் உப உறுப்புகள் மட்டும்தான் தேவை. அவன் உட்கார்ந்து கருத்தியல் ரீதியாகச் சிந்திக்கத் துவங்கினால் அது பிரச்சினை.

பல புதிய விஷயங்கள் மொழி வழக்கில் வந்திருக்கின்றன. நடிகைகள், தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் இவர்கள் பேசுவதைப் பார்த்தீர்களேயானால் சில ஆங்கில வார்த்தைகள் புலப்படும். நாம் சந்தோஷமாக இருந்தோம், ஜாலியாக இருந்தோம் என்று சொல்வதை இவர்கள் We had fun என்று சொல்லுவார்கள். இது மேற்கத்திய மொழி.  இந்த மொழியில் என்ன பொருள் வருகிறதென்றால் அந்தக் கண நேர மகிழ்ச்சி என்பதுதான்.

மாடு போல ஒரு வாரம் முழுக்க வேலை செய்துவிட்டு சாயங்காலம் தண்ணி அடித்து விட்டு டான்ஸ் ஆடும் மகிழ்ச்சி அல்லது வேறு ஒரு நிகழ்ச்சி போன்றது. மகிழ்ச்சி என்பதன் முழுமையான பொருள்- அது ஒவ்வொருவருக்கும் வேறாகவே இருக்கட்டும், சுற்றுலா செல்லுவது மகிழ்ச்சியா? கோவிலுக்குப் போவது மகிழ்ச்சியா? அப்படியே இருக்கட்டும். ஆனால் இவர்கள் மகிழ்ச்சி ஒரு முழுமையான பொருளில் இருக்கிறதா?

உண்மையான மகிழ்ச்சியை பாப்கார்ன் தலைமுறை அறியாது!

உண்மையில் மகிழ்ச்சி என்பதைப் பார்க்காத ஒரு பாப்கார்ன் தலைமுறை உருவாக்கப் படுகிறது. மகிழ்ச்சியின் முழுமையைப் பற்றி ஒருவன் சிந்திக்கத் தொடங்கும் போதுதான் ஒரு நிலப்பிரபுத்துவ சிந்தனையிலிருப்பவன் கூட கம்யூனிஸ்ட்டாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பிற்போக்குவாதியாக வறட்டு கௌரவம் பார்ப்பவனாக இருக்கட்டும். அவன் அந்த விழுமியங்களைப் பற்றி வாழக் கூடியவனாக இருக்கிறான். அப்படி இருக்கக் கூடியவனோடு மோதி, சாதி, வறட்டு கௌரவம் போன்ற விஷயங்களில் போராடி இதற்கு மாற்ற முடியும்.

ஆனால் இந்த பாப்கார்ன் தலைமுறை, விழுமியங்கள் இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கும் திறன் இல்லாத நொறுக்குத் தீனித் தலைமுறையாக வளர்க்கப் படுகிறது. அதனால் தான் இவர்களால் ஒரு புத்தகத்தைப் படிக்க முடியவில்லை. சிலர் “புதிய கலாச்சாரம்” பத்திரிகை ரொம்ப சீரியசாக இருக்கிறது, லைட்டாக இல்லை என்று சொல்லுவார்கள். லைட்டாக என்றால் அதைப் பார்த்த உடனேயே புரிந்துவிட வேண்டும். ஒரு புத்தகத்தில் பக்கம் நிறைய எழுத்து இருந்தாலே பலருக்கு பிரச்சனையாக இருக்கிறது.

நான் இணையத்தில் ஒரு வலைப்பூ பார்த்தேன் 11 seconds blog என்று பெயர். 11செகண்டில் அதில் இருப்பதைப் படிக்க முடியுமென்றால் எத்தனை வரி இருக்க முடியும்? ட்விட்டர், SMS என்று பரிமாறிக் கொள்ளலாம். இவையெல்லாம் வடிவம் என்று நினைக்கிறோம். இல்லை. இணையத்தில் படிக்கக் கூடியவர்களுக்கோ புத்தகமாகப் படிக்கக் கூடியவர்களுக்கோ அந்த நாலு வரிக்கு மேல் கண் நிற்க மாட்டேன் என்கிறது. அந்த ஆற்றலை இழந்து வருகிறோம். பாரிய விஷயம் இது!

அதே நேரம் 10வதிலிருந்து தொடங்கி இன்ஜினியரிங் வரை உயிரைக் கொடுத்து படிக்கிறார்கள். தொழிலுக்காக, வாழ்க்கைக்காக, வருவாய்க்காக என்று 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் படிக்கிறார்கள். ஆனால் அதற்கப்பாற்பட்ட சமூகம் குறித்த இலக்கியம், அது என்னவாவது இருக்கட்டும்- வைரமுத்து கவிதைகள் கூடப் படிப்பதில்லை. வைரமுத்து 6000 பாட்டு எழுதியிருக்காராம் அதில் 1000த்தைப்  புத்தகங்களாகப் போட்டிருக்கிறாராம். இன்று ஹிந்து பத்திரிக்கையில் ஒரு பெண் எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரை இப்படித் துவங்குகிறது: போன தலைமுறையைச் சேர்ந்த Tamil speaking youth காதலிப்பதென்றால் வைரமுத்து இல்லாமல் காதலித்து இருக்க முடியாது. எதற்கு Tamil speaking youth என்று எழுதவேண்டும். Tamil youth என்று எழுதினால் போதாதா? தமிழ் பேசும் இளைஞர்கள் என்று ஏன் எழுத வேண்டும்? தமிழ் இளைஞர்கள் என்று எழுதினால் போதாதா? அதற்கு ஹிந்துவிற்கு பிரச்சினை இருக்கக்கூடும்.

பிறகு யோசித்துப் பார்த்தால் சரி என்றே தோன்றுகிறது. தமிழ் இளைஞர்களில் தமிழ் பேசும் இளைஞர்கள் எத்தனை பேர்? வைரமுத்து கவிதையைப் படிப்பவனோ ரசிப்பவனோ எத்தனை பேர்? தமிழ் இளைஞர்களில் தமிழ் பேசும் இளைஞர்கள் குறைவாகிக் கொண்டே வருகிறார்கள். இப்படி சிந்திக்கும் திறனை இழந்தவர்கள் ஆகி வருகின்றோம்.

இடையே புத்தகக் கண்காட்சி முன்னிட்டு நடக்கும் பல புத்தக வெளியீட்டு விழாக்களில் பலர் பேசக் கூடும். தினமணி வைத்தியநாதன் உள்ளிட்டு “நாம் பழையவற்றைப் படிக்க வேண்டும், பாரதியார் படிக்கவேண்டும், கம்பராமாயணம் படிக்க வேண்டும், நம்முடைய இலக்கியச் செல்வங்களைப் படிக்கவேண்டும், மரபைப் படிக்க வேண்டும்” என்றெல்லாம் நிறைய உபதேசங்கள் கொடுக்கப்படும். அது அல்ல நான் சொல்வது. பொதுவாகப் படிப்பது இதற்கு தீர்வு அல்ல. அல்லது இது வெறும் தொழில் நுட்பத்தின் தாக்குதல் அல்ல. அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலாளித்துவம் உருவாக்கும் சிந்தனையற்ற விலங்குகளாய் நாம்!

இது முதலாளித்துவத்தின் தாக்குதல். அதைப் புரிந்து கொள்வதற்கு அதனை முறியடிப்பதற்கு அதிலிருந்து விலகி நின்று தற்காத்துக் கொள்வதற்கு ஆற்றல் தருபவற்றைப் படிக்க வேண்டும். படிக்காதவரையிலே இதிலிருந்து விடுபட முடியாது. புரட்சி செய்வதற்காக நான் படிக்கச் சொல்லவில்லை. புரட்சி என்று தனியாக ஒன்றுமில்லை. நாம் அறியாமையினால் இப்படி மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பிள்ளைகள் ஏன் எப்படி மாறுகின்றனர் என்று பெற்றோருக்குத் தெரியவில்லை.

இளைஞர்கள் மனநல மருத்துவம் நாடி வருவது அதிகரித்துக் கொண்டு வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் மன அழுத்தத்திற்கான மருந்துகளை நம்மூரில் சாரிடான், ஆஸ்பிரின் வாங்குவது போல அங்கே விற்பனைக்கு அனுமதித்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு இருக்கிறது அந்தப் பிரச்சனை. ஏன், எதனால் இது? இங்கும் அது அதிகரித்து வருகிறது. 40000-50000ரூ சம்பளம் கொடுக்கக்கூடிய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒரு யோகா டீச்சர். எல்லோரும் பிராணாயாமம் செய்கிறார்கள். வேலை நடக்க ஊழியன் உயிரோடிருக்க கம்பெனி செலவில் இது நடத்தப்படுகிறது. கம்பனி செலவில் அவனைப் பேண வேண்டியிருக்கிறது. காலையில் அடித்து ரிப்பேர் செய்துவிட்டு மாலையில் இது. எதற்காக இது நடக்கிறது? இது முதலாளித்துவத்தின் தாக்குதல் என்று புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே ஏதாவது ஒன்றைப் படியுங்கள் என்று பேசுவதற்கு அல்ல இங்கே வந்தது.

நோக்கமற்ற இன்பவாதப் படிப்பினால் பலனில்லை!

அந்தக் காலத்தில் கண்டதை வாங்கிப் படித்துக் கொண்டிருப்பேன். ஒரு சமயம் ஒரு தோழருடன் ஒரு நூல் பற்றி விவாதிக்க வேண்டி இருந்தது. அதைப் படிக்காமல் ஏதோ Sunday அல்லது India Today  வைத்துப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர் நான் இன்ப நாட்டத்திற்காகவே படிப்பதாகக் கூறினார். அப்போது எனக்குப் புரியவில்லை. நாம் சீரியசாகத் தானே படிக்கிறோம். இதிலென்ன pleasure என்று நினைத்தேன். உங்கள் தனிப்பட்ட இன்பத்திற்காக நீங்கள் படிக்கிறீர்கள் என்று அவர் சொன்னார். அது உண்மை. அது ஒரு இலக்கற்ற படிப்பு. அப்படிப் படிப்பதிலேயே ரசனை கொண்ட ஒரு இலக்கியவாதக் கூட்டம் இருக்கிறது.

அவர்கள் தான் இந்தக் கூட்டங்களை எல்லாம் நடத்துவது. சங்கீத சீசனில் ம்யூசிக் அகாடமிக்கு கச்சேரி கேட்க வருகிறார்கள் இல்லையா அது போல ஜெயமோகன் புத்தகம் போட்டால் ஒரு கோஷ்டி வரும். கூட்டம் கூட்டி, அவர் இலக்கியத்தைப் பற்றி விதந்து பேசுவார், அதை ததாரினானாவிற்கு தலையாட்டுவது போல தலையாட்டி ரசிப்பதில் ஒரு சுவை. அப்பறம் படிக்கும் பழக்கமே குறைந்து போய்விட்டது, நம் கலாச்சாரம் என்னவாகும் என்று தெரியவில்லை, புத்தகங்கள் கேரளாவில் நிறைய விற்கிறது, இங்கே விற்க மாட்டேன் என்கிறது, இலக்கியம் அங்கே வளர்கிறது இங்கே வளரவில்லை இந்த மாதிரி கவலைகளைப் பகிர்ந்து கொண்டு கிளம்பிப் போய் விடுவார்கள். இவர்கள் இளைஞர்களாக இருந்தாலும் சிந்தனதையில் கிழடு தட்டிப் போனவர்கள்.

அந்தப் படிப்பு அல்ல நான் சொல்வது. நான் pleasureக்காக ரசிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. இன்பத்தை நுகர்வது என்பது மனிதனுடைய பண்புகளில் ஒன்று. ஆனால் இன்ப நாட்டத்தின் பின் ஓடுவது. அதற்காகப் படிப்பது. அது சொறிந்து விடுவது போல் உள்ளது, இன்பமாக இருக்கிறது என்பதற்காகப் படிப்பது என்பது பொருளற்றது. முக்கியமாக நோக்கமற்றது. நோக்கமில்லாமல் படிக்கின்ற எதுவும் மூளையில் தங்காது.

மூளை எதை வைத்துக் கொள்கிறது? எது நடைமுறைக்குத் தேவையோ அதை வைத்துக் கொள்கிறது. நடைமுறை என்றால் வேலை என்று மட்டும் சொல்லவில்லை. நாளை நீங்கள் பேச வேண்டுமென்று படித்தால், படிப்பதை வைத்துக் கொண்டு நாளை எழுத வேண்டுமென்றால், படிப்பதை வைத்துக் கொண்டு ஒருவருடைய பிரச்சினைக்குத் தீர்வு சொல்லப் போகிறீர்கள் என்றால், நீங்கள் படிப்பது ஒரு தத்துவஞானமோ, இலக்கியமோ, அழகியல் குறித்த கட்டுரையோ, ஓவியமோ, அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் படிப்பதாக இருந்தால் அது மனதில் நிற்கும்.

கற்றுக் கொள்ள வேண்டுமென்று படிப்பது என்ன? சும்மா படிப்பது என்ன? என்பதற்கு ஒரு இடைவெளி இருக்கிறது. சிலர் புதிய கலாச்சாரம் பத்திரிகையோ சில நூல்கள் கட்டுரைகளோ புரிய மாட்டேன் என்கிறது, ரொம்ப தலைக்கு மேலே போகிறது என்கிறார்கள். அது தடுக்க முடியாது. நாம் ஒரு குறிப்பிட்ட உயரம் தான் இருக்கிறோம். உயரம் என்றால், அறிவு வளர்ச்சி, நம்முடைய ஆற்றல் என்பதில். நாம் முதல் வகுப்பு படிக்கும் போது ஐந்தாம் வகுப்புப் பாடம் நம் தலைக்கு மேல் தான் இருக்கும். ஐந்தாம் வகுப்பில் பத்தாம் வகுப்புப் பாடம் நம் தலைக்கு மேல் தான் இருக்கும். அப்போது என்ன செய்ய வேண்டும்? எழுத்தாளரே என் தலை மட்டத்திற்கு எழுதவும் என்று சொல்வதா? அல்லது நம் தலையை எழுத்தை நோக்கி உயர்த்திக் கொள்வதா? நம்முடைய தலையைத்தான் எழுத்து நோக்கி வளர்த்துக் கொள்ள வேண்டும். அதில் எழுத்தாளனின் திமிர், அகங்காரம் அதைப் பற்றி நான் பேசவில்லை.

மார்க்ஸ் நூலையோ லெனின் நூலையோ, அப்படி ஆய்வு பூர்வமாக அறிவியல் பூர்வமாக எழுதுகின்ற நூல்கள் அல்லது ஆழ்ந்து உணர்ந்து எழுதப்படக் கூடிய இலக்கியங்கள் கவிதைகள் இவையெல்லாம் SUN TV, TIMES NOW மாதிரி பார்க்க முடியாது. படிக்க வேண்டும். இன்னொரு முறை படிக்க வேண்டும். பிறகு அதில் தங்கி நின்று சிந்திக்க வேண்டும். புரியவில்லை என்றால் கேட்க வேண்டும். படித்தவர்களோடு விவாதிக்க வேண்டும். புரியாத இடத்தைக் குறித்து வைத்துக் கொண்டு சிந்திக்க வேண்டும். இதையெல்லாம் யார் செய்வார்கள்?

யாருக்குக் கற்றுக் கொள்ளவேண்டுமென்ற ஆர்வம் இருக்கிறதோ, யாருக்கு ஆய்வு நோக்கம் இருக்கிறதோ அவர்கள் தான் இதைச் செய்ய முடியும். படித்த உடனேயே புரியவேண்டும் என்றால் தினத்தந்தி கூடப் புரியாது. படித்த உடன், பார்த்த உடன் – இந்த உரையின் ஆரம்பத்தில் சொன்ன போது- சின்ன மருது என்றால் வீரர் அது மட்டும் தான் எனக்குத் தெரியும் வேறு எதும் தெரியாதென்றால் – என்ன இப்படி கைகட்டி நிற்கிறார் வீரர்? வீரர் என்றால் இப்படி நெஞ்சை நிமிர்த்தி அல்லவா இருக்க வேண்டும் என்று கேட்கலாம். அவ்வளவுதானே தெரியும். கற்றுக் கொள்வது என்றால் அதில் ஒரு துன்பம் இருக்கிறது. Pleasure ஆக இருக்க முடியாது. பயிற்சியாக இருக்க வேண்டும். அந்தத் துன்பத்தை ஏற்பதற்கும் அனுபவிப்பதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். அது எதைக் கற்பதிலும் இருக்கிறது.

ஒரு எழுத்தாளர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் என்றால் ஒரு ஆறு பக்கம் எழுதுவதற்கு அவர் சில நாட்கள் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும், இல்லையா? அந்தக் கட்டுரையைப் பற்றி சிந்திப்பதற்க்கும் அதைப் பற்றி ஆராய்வதற்க்கும் அதற்கு ஒரு வடிவம் கொடுத்து எழுதுவதற்கும் சில நாட்கள் ஆகியிருக்கும். ஒரு பக்கத்திற்கு 5நிமிடம் மேனிக்கு 5பக்கங்களுக்கு 25நிமிடம் அதற்குள் அதை அந்த எழுத்தாளன் என்ன புரிதலுடன் என்ன உணர்வுடன் எழுதியிருக்கிறானோ அதை இந்த 25 நிமிடத்திலே உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் நான் அந்த எழுத்தாளனின் தகுதிக்கோ அல்லது அதைவிட மேம்பட்ட தகுதியிலோ இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அதற்குள்ளே இறங்கி சிந்தித்து படிக்க வேண்டும். அந்த அனுபவம், அந்த ஆய்வு, நீங்கள் அதற்குள்ளே சென்று வர வேண்டும். அப்போதுதான் அதன் முழுப் பரிமாணம் தெரியும்.

மார்க்ஸின் பல நூல்களை பல எழுத்துகளை நான் 80களிருந்து ஒரு முப்பது நாப்பது முறையெல்லாம் படித்த நூல்கள் இருக்கின்றன. நான் 80களில் படிக்குப் போது எனக்குப் புரிந்ததற்கும் இன்று நான் படிக்கும் போது புரிவதற்கும் பாரிய இடைவெளி இருக்கிறது. அதே எழுத்து தான், ஒரு கமா முற்றுப் புள்ளி கூட மாறவில்லை. ஏன் இந்த வேறுபாடுகள் பின்னர்? ஏனென்றால் இந்த இடைப்பட்ட காலத்தில் என்னுடைய அரசியல் அறிவு, சமூக அறிவு, அல்லது பொது அறிவு, 20 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட மேம்பட்டிருக்கிறது. அப்போது ஒரு வாக்கியத்தின் நுட்பத்தை, அழகை, nuance  என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும்  அழ்காகச் சொல்லிச் செல்லும் நெகிழ்வுத் தன்மையைப் புரிந்து கொள்வதற்கு ஒரு ஆற்றல் தேவைப்படுகிறது. இதை முதலில் ஒத்துக் கொள்ளவேண்டும்.

படிப்பு உழைப்பாக மாறும்போது சமூகம் அடிமைத்தளையிலிருந்தும் விடுபடும்!

இதைப் புரிந்து கொண்டுதான் படிக்க இறங்க வேண்டும். அப்போது படிப்பு என்பது ஒரு உழைப்பாக, முயற்சியாக இருக்கும். சும்மா அப்படிப் புரட்டிப் போட்டுப் போகும் வகையில் இருக்காது. புரட்டிப் போடுவது என்பது சில பேருக்கு பழக்கமாகக் கூட இருக்கிறது. ஊன்றி நின்று படிக்க முடியாது, ஊன்றி நின்று கவனிக்க முடியாது. எதுவாக இருந்தாலும் இந்த அளவுக்குள் சொல், இந்த நேரத்திற்குள் சொல் என்று கேட்கின்ற ஒரு பண்பாட்டிற்குள் நாம் இருக்கிறோம். அதற்குள் எதையும் செய்ய முடியாது. அப்படி நாம் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இது இளைஞர்களுக்கு மட்டுமல்ல. நமக்கும் பொருந்தும்.

நாம் தொலைக்காட்சி செய்தியைத் திரும்பத் திரும்ப பார்க்கிறோம். ஆனால் அதைப் பற்றி எவ்வளவு விமர்சனக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். பல போராட்டங்கள் நடைபெறும் போது தொலைக்காட்சி நிருபர்கள் வருவார்கள். ஏன் போராட்டம் நடத்துகிறீர்கள்? என்ன பிரச்சினை? என்று கேட்பார்கள். அதை என்ன என்று சொல்லுவோம். அதைக் கேட்டுக் கொள்வார்கள். பிறகு டிவி ஆன் செய்கிறோம் சார் நீங்கள் சொன்னதை ஒரு இரண்டு நிமிடத்தில் சொல்லுங்கள் என்பார்கள். இரண்டு நிமிடத்தில் சொல்ல முடியாது இருபது நிமிடம் ஆகும் என்று சொல்ல முடியாது. ஆனால் அதோடு நிறுத்தினால் பரவாயில்லை.

நான் முதலில் ஒரு 20 நிமிடம், இந்த மாதிரி நடந்தது, இந்த இயக்கம், இதற்காக போராடுகிறோம் என்று அவரிடம் விளக்கியதைக் கேட்டிருக்கிறார் அல்லவா? உடனே இதிலிருந்து எது செய்தி என்று நிருபர்கள் முடிவு செய்கிறார்கள். நான் 2 நிமிடத்தில் சொல்ல வேண்டுமா என்றவுடன் இதுதான் பிரச்சினை, இந்த ஊர்களிலிருந்து வந்திருக்கிறார்கள், இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள், இந்த இயக்கம், இவங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சொல்லிவிடுங்கள் கரெக்டாக இருக்கும் என்பார்கள். உங்களுக்கு எத்தனை நிமிடத்தில் வேண்டும் என்று சொல்லுங்கள் அதற்குள் என்ன சொல்ல வேண்டுமென்பதை நீங்கள் சொல்லிக் கொடுக்காதீர்கள் என்று சொல்லும் நிலையில் இருந்திருக்கிறேன். இது அவர்களுக்கு உரைப்பதே இல்லை. அதற்கு இரண்டு காரணம். முதலில் இது ஒரு சீரியஸான பிரச்சினை என்றே அவர்களுக்குப் புரிவதில்லை.

இரண்டாவது எல்லாரும் தொலைக்காட்சிக்கு அலைபவர்களாக இருக்கும் உலகத்தில் அவர்கள் ஒரு மேலாண்மை செலுத்தும் நிலையில் – ஆங்கிலச் சானல்களில் பேட்டி எடுப்பவர்களைப் பாருங்கள் – எல்லாரையும் அதிகாரம் செய்யும் ஒரு தோரணையும் மிகப் பெரிய இடத்தில் உட்கார்ந்திருப்பது போலும் இருக்கிறார்கள். அப்படி எல்லாரும் அலைபவர்கள் போலக் கருதுவதால் ஒருவனிடம் இதைப் போலச் சொல் என்பது எவ்வளவு அநாகரீகமானது கேவலமானது என்று கூட உறைக்காத மனிதர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு என்ன வேண்டும், எப்படி இருக்க வேண்டும் நியூஸ் என்று அவர்கள் முதலாளிகள் இயக்குநர்கள் சொல்லி விடுகிறார்கள்.

என் முகம் தெரிவது தான் எனக்கு முக்கியம் என்றால் அவர்கள் சொல்லச் சொல்லுவது போலச் சொல்லி விடலாம். இல்லை, செய்திதான் முக்கியம் என்றால் அதற்குத் தகுந்தாற்போலச் சொல்ல வேண்டும். எதற்கு சொல்கிறேனென்றால் இது இளைஞர்களுடைய பிரச்சினை மட்டுமல்ல. நமக்குள்ள பிரச்சனை. அதை எவ்வளவு விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்க்க மறக்கிறோம், அப்படிப் பழக்கப்படுத்தப் படுகிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வர வேண்டியிருக்கிறது நம்மையும் நம் எதிர்காலத் தலைமுறையையும் தற்காத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

கம்யூனிஸ்ட்டுகள் மனித குல நாகரீகத்தின் முழுமையையும் கற்கவேண்டும்!

ஒரு கம்யூனிஸ்ட் என்றால் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் நூலை மட்டும் படித்திருக்கிறேன் லெனின் படித்திருக்கிறேன் என்பது மட்டும் அல்ல. கம்யூனிஸ்ட் என்பது மனித நாகரீகத்தின் பிரதிநிதி. மனித நாகரீகத்தின் ஆகச் சிறந்த சாதனைகளனைத்தையும் தேடிப் பாதுகாப்பதையும் அதை முன்னெடுத்துச் செல்வதையும் நம்முடையக் கடமையாகக் கொள்ள வேண்டும். நம் மனித நாகரீகம் கண்ட கலைகள் இலக்கியங்கள் அரசியல் ஆய்வு பொருளாதாரம் எல்லாமே ஒரு கம்யூனிஸ்ட்டிற்கு தெரிந்திருக்க வேண்டும். எல்லாம் தெரிந்திருக்க முடியுமா? கஷ்டம்தான் முடியாது. ஆனால் அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற பணிவு நமக்கு வேண்டும்.

இந்தியாவில் நாம் தான் முதல் பொருள்முதல்வாதிகளா? நமக்கு முன்னாள் 2500-3000 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க நாட்டிற்கு இணையான அற்புதமான பொருள்முதல்வாதிகள் இந்த மண்ணிலே இருந்திருக்கிறார்கள் – சார்வாகர்கள், லோகாயதர்கள் பின்னால் பௌத்தர்கள். அதையெல்லாம் என்ன செய்வது? 2500-3000 ஆண்டுகளுக்கு முன் அறிவியல் வளராத காலத்தில் கடவுளைப் பற்றி கேள்வி எழுப்பியவனை, ஆன்மா என்று தனியாக இல்லை என்று பேசியவனைப் பற்றி நமக்குத் தெரியவில்லை என்று சொன்னால் நாம் அந்த மரபை எப்படி வரித்துக் கொள்ள முடியும்? அதற்குப் பின்னாலே ஆயிரம் பேர் வந்திருக்கிறார்கள்.

இவ்வாறு வரலாற்றிலே நேர்மறையான சாதனையாளர்கள் எல்லோரும், யாரெல்லாம் மனித குலத்தின் மீது காதல் கொண்டு சிந்தித்தார்களோ, உழைத்தார்களோ அவர்களெல்லாம் ஆளும் வர்க்கங்களாலே நசுக்கப் பட்டிருக்கிறார்கள். அல்லது இருட்டடிப்பு செய்யப் பட்டு இருக்கிறார்கள். அவர்களைத் தேடி எடுத்துப் படிக்க வேண்டியது, சமூகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டியது நம்முடைய பொறுப்பு. இன்றையத் தேவைக்காக எழுதுவது பேசுவது என்ற அளவிற்கு இணையான அளவிற்கு நம் மரபையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது நம்முடைய கடமை.

அது முதலாளித்துவ எழுத்தாளர்களாகக் கூட இருக்கலாம். முதலாளித்துவம் தான் நம் எதிரி. முதலாளித்துவ சிந்தனை எனபது மனித குல வரலாற்றின் ஒரு கட்டத்தில் தோன்றிய ஒரு விஷயம். அதை இல்லை என்று நாம் நிராகரித்து விட முடியாது. மறுத்துவிட முடியாது. அற்புதமான எழுத்தாளர்கள் அதில் இருந்திருக்கலாம். அதை எல்லாம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏன் அவசியம் இருக்கிறது? இது “பொதுவாக எல்லாம் படிக்க வேண்டும், எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்” என்ற நன்னெறி போதனை அல்ல. இது நடைமுறைக்கானது. உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்காக முன்னேற்றத்திற்காக நாம் பாடுபடுகிறோம் போராடுகிறோம் என்று சொன்னால் அதற்குரிய தகுதியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கோஷம் போடுவது, சண்டை போடத் தயாராக இருப்பது, உயிரைக் கொடுக்கத் தயாராக இருப்பது இவை மட்டுமே புரட்சியை சாதித்து விடுவதில்லை. எதிரிகள் அறிவாற்றல் மிக்கவர்கள். இந்த சமூகம் முழுவதையும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் என்றால் உங்கள் வீட்டு வாசலிலோ அல்லது எங்கள் வீட்டு வாசலிலோ ஒன்றும் போலீஸ் நிற்கவில்லையே?. பெரும்பான்மையான மக்கள் கருத்தியல் ரீதியான ஒரு ஆளுமைக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்தச் சமூகம் தான் நியாயமானது இந்தச் சமூகம்தான் சாத்தியமானது என்று மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அநீதிக்கு உட்படுத்தப்படும் மக்கள் கூட இந்த அநீதி தவிர்க்கப்பட முடியாதது என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி கருத்து ரீதியாக ஏற்றுக் கொண்டிருப்பதால்தான் அடங்கி இருக்கிறார்கள். அதற்குப் பிறகு அடங்காமல் போனால் தான் துப்பாக்கி முனை.

கருத்தியல் ரீதியான செல்வாக்கிற்கு, அடக்குமுறைக்கு ஆட்பட்டு நாம் அடக்கப்பட்டு இருக்கிறோம். அந்தக் கருத்தியல் ரீதியிலான அடக்கு முறை எல்லாக் கோணங்களிலிருந்து நம் மீது வருகிறது. திரைப்படம், தொலைக்காட்சி, நூல்கள், கட்டுரைகள் அல்லது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் ஆலோசகர்கள், பக்தி, மதம் எல்லாத் திசைகளிலிருந்தும் மக்களைச் சுற்றி அது மொய்க்கிறது. அதற்குள் மக்கள் ஆழ்த்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை வெளியே கொண்டுவர வேண்டுமென்றால் அவர்களை கருத்து ரீதியாக எதிர்த்து முறியடிக்கின்ற ஆற்றல் நமக்கு வர வேண்டும். அந்த ஆற்றல் வேண்டுமென்றால் கற்க வேண்டும்.

நம்முடைய இலக்கியத்தை நம்முடைய நூல்களை மட்டுமல்ல, எதிரியின் இலக்கியத்தை எதிரியின் நூல்களையும் கூடப் படிக்க வேண்டும். இல்லாத வரையில் போராட முடியாது. புரட்சி முடிந்தவுடன் லெனின் சொல்வார்: “மிக விரைவாக பாட்டாளி வர்க்க அறிவுஜீவிகளை (Proletarian Intellectuals) நாம் உருவாக்க வேண்டும்”.  பாட்டாளி வர்க்கத்தில் அறிவுஜீவிகள் கிடையாது. புரட்சி நடக்கும் பொது ரஷ்யாவில் எழுத்தறிவே 10சதவீதத்திற்கும் கீழே. எதற்காக பாட்டாளி வர்க்க அறிவுஜீவிகள் வேண்டும்? இல்லையென்றால் முதலாளித்துவ அரசியல்வாதிகளிடம் முதலாளித்துவ தொழில்நுட்ப வல்லுனர்களிடம் அல்லது ஜார் ஆட்சியின் ராணுவ அதிகாரிகளிடம் சரணடைய வேண்டி இருக்கும்.

படிக்காத வரை அடிமைத்தனம், படிக்கும் போது விடுதலை!

ஆளும் வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தைப் பார்த்து சொல்வது என்ன? ஏன் திராவிட இயக்கத்தை, தலித் இயக்கங்களை, தாழ்த்தப்பட்டவர்களைப் பிற்படுத்தப்பட்டவர்களைப் பற்றி உயர்சாதிக்காரர்கள் என்று சொல்லக்கூடிய பார்ப்பன ஆதிக்க சக்திகள் சொல்வது என்ன? நீயெல்லாம் நாடாள்வாயா? உனக்கெல்லாம் விவரம் தெரியுமா? உன்னால் முடியுமா? என்று ஏளனச் சிரிப்பு சிரித்தார்கள். பிறகு படிக்கிறோம், மாற்றங்கள் வருகிறது. அது தானே வரலாறு. ஆளும் வர்க்கம் என்ன கருதுகிறது என்றால் இதை நிறுத்த இவர்களால் முடியாது என்று கருதுகிறது. ஒரு ஏளனப் பார்வை பார்க்கிறது. அது உண்மைதான். அது பொய் அல்ல. நாங்கள் தான் எங்கள் ரத்தம் வியர்வையால் உலகத்தைப் படைத்தோம் உண்மை. எல்லாவற்றையும் நாங்கள் தான் உருவாக்கினோம் உண்மை. அதெல்லாம் உண்மைதான். அதனால் நாங்கள் ஆளும் உரிமை படைத்தவ்ர்கள். உண்மை. ஆளும் ஆற்றல் இருக்கிறதா? நிர்வாகம் செய்யும் ஆற்றல் இருக்கிறதா? அவன் நம்மை அடக்கி வைத்திருப்பது போல அவனை அடக்கி வைக்கும் ஆற்றல் நமக்கு இருக்கிறதா?

அந்த ஆற்றலை எப்படி அடைவது? ஆயுதம் மூலமாகவா? அதற்கு கற்க வேண்டும். வேறு குறுக்கு வழி கிடையாது. அதனாலேயே லெனின் Proletarian Intellectuals உருவாக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார். அதனால் தான் போலிப்பகட்டு, போலி அறிவு, மேதாவித்தனம் ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாளி வர்க்க இயக்கத்திலேயே சாதாரண தொழிலாளிகளாய் இருப்பவர்கள் கூட அதை வெளிப்படுத்தும் போது மார்க்ஸ் அதை கடுமையாகச் சாடுகிறார். அதனால் பலர் வருத்தப்பட்டதுண்டு.

இந்தப் படித்த அறிவு ஜீவிகளுக்கு கொழுப்பு அதிகமாக இருக்கும். சோசலிசம் பேசிக் கொண்டிருந்த சாதாரண ப்ரூதோன் போன்ற மனிதர்கள். அறிவியல் பூர்வமற்ற எதையும் அவர் மென்மையாகப் பார்க்கத் தயாராக இல்லை. ஏங்கெல்ஸ் ஒரு இடத்தில் எழுதுவார் “இந்த சமூக அறிவியல் கல்வி என்பது ஒரு செங்குத்தான வழுக்குப் பாதையில் ஏறுவதற்கு ஒப்பாகும். இதற்குத் தயாராக இல்லாதவர்கள் விலகி விடுங்கள்”. இது விளையாட்டாகச் சொல்லப்பட்டது அல்ல. அத்தகைய உழைப்பு அதற்குத் தேவை. அப்படி உழைப்பு இருந்தால் தான் நாம் எந்த வர்க்கத்திற்கு சேவை செய்ய வேண்டும், எந்த வர்க்கத்தை விடுவிக்க வேண்டும் என்று நாம் கருதுகிறோமோ அந்த வர்க்கத்திற்கு தலைமை தாங்கவோ வழிகாட்டவோ விடுவிக்கவோ முடியும்.

படித்தவர்கள், அறிவுஜீவிகள், ஆற்றல் உள்ளவர்கள் என்பவர்கள் எல்லாம் எதிரிகளின் கையில் இருக்கிறார்கள். நல்ல உடல் பலம் உள்ளவர்கள் எல்லோரையும் அளந்து அளந்து பார்த்து ராணுவத்திலும் போலீசிலும் சேர்த்து வைத்திருக்கிறார்கள். படித்தவர்களை எல்லாம் IAS,  IPS என்று உயர் நிர்வாகப் பதவியில் வைத்திருக்கிறார்கள். ஆற்றல் மிக்க வழக்குரைஞர்கள் கணக்குத் தணிக்கையாளர்கள் எல்லாம் டாடா பிர்லா அம்பானி மிட்டல்களுக்காக வேலை செய்கிறார்கள். இப்போது இந்த ஸ்பெக்ட்ரம் விவாதங்களைப் பாருங்களேன். வாதிடுபவர்களெல்லாம் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள் தான். பிரச்சனை பெரிதாக ஆக ஆக பெரிய கைகள் வந்து ஆஜராகின்றானர். டாடாவிற்கு ஹரீஷ் சால்வே வருகிறார். இன்னொருத்தருக்கு அதே போல் இன்னொருவர். இந்த வக்கீல்கள் எப்படிப் பட்டவர்கள்? ஒரு முறை சுப்ரீம் கோர்ட்டில் எழுந்து விட்டு உட்கார்ந்தால் 10லட்சம் ரூபாயை கட்டணமாக பெறுபவர்கள். வழக்கு நடக்கிறதா இல்லையா, பேசுகிறாரா இல்லையா என்பதல்ல விஷயம். Appearance Fees – ரஜினிகாந்த் கால்ஷீட் போல. படப்பிடிப்பு நடக்கிறதா இல்லையா என்பதெல்லாம் கணக்கில்லை. அந்த வழக்கறிஞர் எல்லாரும் என்ன செய்கிறார்கள்? மிக நேர்த்தியான மொழியில் ஊழலை நியாயப்படுத்தி வாதாடுகிறார்கள். மோசடியை நியாயப்படுத்தி வாதாடுகிறார்கள். அல்லது இங்கே இருக்கும் சோ போன்ற ஆட்கள் மிகத் திறமையாக வாதாடுகிறார்கள். அவனைத் பார்ப்பனத் திமிர் பிடித்தவன் பார்ப்பன பாசிசத்தின் கைக்கூலி என்றெல்லாம் மட்டும் சொன்னால் போதாது.  அவனை அறிவுரீதியாக ஏளனம் செய்து தூக்கி எரிகின்ற ஆற்றல் அவனை பற்றிய  பிரமைகளை வைத்திருக்கின்ற நம் மக்களுக்கு அவனொரு அற்பப்பதர் என்று காட்டக்கூடிய ஆற்றல் அது நமக்கு வேண்டும்.

அந்த ஆற்றல் வேண்டுமென்றால் உழைக்க வேண்டும். படிப்பதென்பது நமக்கு ஒரு உழைப்பு. அந்த உழைப்பில் தான் நாம் இன்பம் காண முடியும். உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம் என்று கேட்டாற்போல, கற்பதில் கூட துன்பத்தில் தான் இன்பம் இருக்கிறது. அந்தத் துன்பத்தை அனுபவிக்கத் தயாராக இல்லாதவர்களுக்கு எந்த இன்பமும் இல்லை. ஆராய்ந்து ஆராய்ந்து சிந்தித்து சிந்தித்து ஒரு கதவு திறக்கிறதே கேள்விக்கு அங்கு தான் மகிழ்ச்சி இருக்கிறது. அப்படியே மொட்டை அமிழ்த்தி உடனே பதில் வந்து விட்டால் அதில் மகிழ்ச்சி கிடையாது.

பாட்டாளி வர்க்க இயக்கமென்பது உலகளவில் இப்படி சாதாரண உழைக்கும் மக்கள், சீனப் புரட்சியிலே சாதாரண விவசாயப் பெண்கள் எல்லாம் பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஆகி இருக்கிறார்கள். அதற்குரிய தகுதியோடு அவர்கள் சென்றிருக்கிறார்கள். இன்று எதிரிகள் எல்லா அறிவுத் துறையினரையும் கையில் வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனிலும் மேலாக முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மனிதாபிமானமும் அற உணர்ச்சியும் நேர்மையும் இல்லாமல் இப்போது அறிவுஜீவிகள் தங்களை விற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்.

நாமும் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காக நம்மை அறிவுபூர்வமாக ஆயுதபாணியாக ஆக்கிக் கொள்ளத் தேவையாக இருக்கிறது.

ஸ்டாலின் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் கொடுங்கோலன், சர்வாதிகாரி, கொலைகாரர் என்று நிறைய எழுதித் தள்ளி இருக்கிறார்கள். இன்னொரு பாதி அவரை முட்டாள் என்று சித்தரித்து வைத்திருக்கிறார்கள்.  மார்க்ஸ் அறிவுஜீவி. ஏங்கெல்ஸ் அறிவுஜீவி, லெனின் கூட அறிவுஜீவி, ஸ்டாலின் ஒரு முட்டாள். சர்வாதிகாரி என்ற பிம்பம் முதலாளித்துவ அறிவுஜீவிகள் மத்தியில் பரப்பப்பட்டு இருக்கிறது. ஏனெனில் அவர் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்தவர், அதிலிருந்து படித்து வந்தவர். அவரை இழிவு படுத்தும் ஆயுதமாக இதனைப் பயன் படுத்துகிறார்கள்.

இதைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னால் FRONTLINE  ஆங்கில நாளேட்டில் AG நூரானி என்ற வழக்கறிஞர்/எழுத்தாளர் ஸ்டாலின் பற்றிய ஒரு நூல் பற்றி எழுதியிருந்தார். அதை எழுதும் போது வேற சில முக்கியமான எழுத்தாளர்களை மேற்கோள் காட்டிச் சொல்கிறார். “ஸ்டாலினுடைய தனி நூலகத்தில் 25000 நூல்கள் இருந்தன. அவருடைய சமகாலத்தில் வாழ்ந்த ரூஸ்வெல்ட் சர்ச்சில் போன்ற அனைவரையும் விட அரசியல், பொருளாதாரம் மற்றும் உலக வரலாற்று ஞானம் மிக மேம்பட்டதாக இருந்தது” என்று கம்யூனிச எதிர்ப்பாளர்கள் சொல்வதை இவர் மேற்கோள் காட்டுகிறார்.  அது என்ன விஷயம் என்றால் அவரும் செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன்தான். ஒரு நாட்டினுடைய தலைமைப் பொறுப்பை ஏற்கும் போது, ஒரு கட்சியினுடைய தலைமைப் பொறுப்பை ஏற்கும் போது அந்தப் பொறுப்பிற்குத் தகுதியானவனாக தன்னை வளர்த்துக் கொள்வது அவரது விருப்பு வெறுப்பு சார்ந்தது அல்ல. அது ஒரு தார்மீகக் கடமை.

அவர் 20000 புத்தகங்கள் வைத்திருந்தாரா, 10000 புத்தகங்கள் வைத்திருந்தாரா என்பதல்ல பிரச்சனை. ஆனால், மிகச் சாதாரண வர்க்கத்திலிருந்து ஒரு மனிதர் மேற்கத்திய நாடுகளில் பிரபு குலப் பின்னணியில் வந்த கல்வி பயின்ற ஜனாதிபதிகள், பிரதமர்கள், ராஜ தந்திரிகளோடு இணையாகப் பேச வேண்டுமானால் அதற்குரிய அறிவு வேண்டும்.. எல்லாத் துறைகளிலும் அறிவு வேண்டும். இல்லை என்றால் வெறும் கொள்கைப் பற்று, நேர்மை, தியாகம், அர்ப்பணிப்பு என்ற பேச்சால் பயன் இல்லை. அறிவிற்கு அது மாற்றீடாகாது. அதை வைத்து இதைச் சரிக்கட்ட முடியாது. நம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாது.

உழைப்பது என்றாலும் ஒரு சமூகம் எந்தத் துறையில் நம்முடைய உழைப்பைக் கோருகிறதோ அந்தத் துறையில் உழைக்கத் தயாராக வேண்டும். கருத்தியல் ரீதியாக இப்படி ஒரு தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் – நான் கம்யூனிஸ்டுகளை மட்டும் சொல்லவில்லை – பெரியார் இயக்கத்தில் இருக்கிறார்கள்; அம்பேத்கார் மீது பற்று கொண்டவர்கள் இருக்கிறார்கள். எல்லாருக்கும் வேலை இருக்கிறது. பார்ப்பன பாசிசம் என்பது ஓய்ந்து போனது அல்ல. அது மீண்டும் மீண்டும் பல வடிவங்களில் தலை எடுக்கக் கூடியது. அவற்றையெல்லாம் எதிர்த்து போராட வேண்டும் என்று சொன்னால் அதற்கு ஆற்றல் உள்ளவர்கள் தேவை.

எனக்குத் தெரிந்து இந்தத் திருவண்ணாமலை தீபம் கொஞ்ச நாள் முன்பு இல்லாமல் இருந்தது. இப்ப எந்த டீக்கடையில் நின்றாலும் திருவண்ணாமலை தீபத்திற்குப் போகிறேன் என்று பேசிக்கொள்கிறார்கள். எந்தக் கோயிலில் என்ன திருவிழா என்றாலும் கூட்டம் கூடுகிறது. இது பெரியார் பிறந்த மண்ணா? அவர் அவ்வளவு எழுதி இருக்கிறாரே. அவ்வளவு பேசி இருக்கிறாரே அதில் ஒரு 2 சதவீதம் ஒவ்வொருத்தரும் செய்தால் எவ்வளவு பயனடையலாம்? அதை ஏன் செய்ய முடியவில்லை என்று இந்த இடது சாரி முற்போக்கு எண்ணம் கொண்ட நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

நூல்கள் படிப்பதென்பதை நம்முடைய விருப்பம் அல்லது விருப்பமின்மை என்ற வரையரையைத் தாண்டி அதை நம்முடைய கடமையாகக் கொள்ள வேண்டும். முதலாளித்துவம் தொடுத்த தாக்குதல், மனிதர்களை உழைக்கும் இயந்திரங்களாக உண்ணும் இயந்திரங்களாக, நுகரும் இயந்திரங்களாக மாற்றுவதற்கான தாக்குதல். நம் அறிவை செயலிழக்கச் செய்வதற்கான தாக்குதல். அந்தத் தாக்குதலில் நம்முடைய சிந்தனையும், மூளையும் ஊனமுற்றுப் போவதற்கு தெரிந்தே அனுமதிக்கக் கூடாது.

நம்மையும் நம்முடைய வருங்காலத் தலைமுறையையும் அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு படிக்க வேண்டும் விவாதிக்க வேண்டும் பல்துறை அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் அப்படிப் படிப்பதெல்லாம் ஒரு நோக்கத்திற்காக இருக்க வேண்டும் நடைமுறைக்காக இருக்க வேண்டும் அந்த நடைமுறை சமூக மாற்றத்திற்கு புரட்சிக்காகப் போராடுகின்ற நடைமுறைதான். அந்த நடைமுறைக்காக கற்கவேண்டும் என்று கூறி இந்த வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.

_______________________________

– உரை: தோழர் மருதையன்
– எழுத்தாக்கம்: உமா
_______________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்…

    தியாகம் மட்டுமே புரட்சியை சாதித்து விடுவதில்லை. எதிரிகள் அறிவாற்றல் மிக்கவர்கள். அவர்களை கருத்து ரீதியாக எதிர்த்து முறியடிக்கின்ற ஆற்றல் நமக்கு வர வேண்டும். அதற்கு கற்க வேண்டும்….

  2. அண்ணே வினவு காணொளியாக இருந்தால் வெளியிடவும்

    இதையும் படிக்கிறேன் நுனிப்புல் மேயாமல் ஆழமாக வசித்து விட்டு மறுமொழி இடுகிறேன்

    காணொளிக்கி கொஞ்சம் ட்ரை பன்னுகப்பு

    • வினவின் மதிப்பிற்குரிய பார்வையாளர்களுக்கு
      கீழைக்காற்றின் மட்டற்ற மகிழ்ச்சியும்.. நன்றிகளும்

      கீழைக்காற்றின் நூல் வெளியீட்டு விழா நிச்சயம் ஒரு பயனுள்ள நிகழ்ச்சியாக தங்களுக்கு அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். மேலும் எங்கள் அழைப்பினை ஏற்று அன்றைய விழாவிற்கு வந்து ஒத்துழைப்பு நல்கிய உங்கள் அத்தனை பேருக்கும் தொடரும் நன்றிகள்..

      புத்தகங்களை வெளியிடுவது என்பதுடன் புதிய வாசகத்தளத்தை உருவாக்குவது என்ற எங்களின் இலட்சியத்தில் என்றென்றும் உங்களின் பங்கேற்பு தேவை. அந்த வகையில் அமைக்கப்பட்ட அன்றைய நிகழ்ச்சியில் தங்களின் வருகை எங்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டியது. விழா தொடர்பான தங்களுடைய பின்னூட்டங்களையும் கவனத்தில் கொண்டு தோழர் மருதையன் அவர்களின் உரை மற்றும் நிகழ்ச்சியின் மொத்தத் தொகுப்பும் ஒலிவட்டாக வெளிவரவுள்ளது. சனவரி 4-ல் தொடங்கும் சென்னைப் புத்தகக் காட்சி கீழைக்காற்று அரங்கில் தங்கள் கைகளுக்கு கிடைக்கும்.

      மகிழ்ந்தும் எங்களை ஊக்கப்படுத்தியும் எழுப்பிய கரவொலிகளுக்கு இடையே அம்மிக் குழவியால் சிலர் அடிவயிற்றில் இடித்துக் கொள்ளும் ஓசையும் கேட்டது. புரையேறி நிற்பவரை தலையில் தட்டி சகஜநிலைக்கு கொண்டு வர முடியும். மூளையே புரையோடிப் போனவர்களுக்கு தேவை ஆதரவும், சிகிச்சையும். அந்த வகையில் கீழைக்காற்றின் வெளியீடு, விலை, விற்பனை நிலவரங்கள் பற்றி தவறான கருத்து பரப்புகின்ற நண்பர்களையும் எரிச்சலாகப் பார்க்காமல் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் எமது விற்பனை நிலையத்திற்கு வந்து சரியான விவரங்களைப் பெற்றுக் கொள்ள அன்போடு அழைக்கிறோம்.

      மூடிக் கிடக்கும் அறிவுச் சாளரங்களை தேடித்திறக்கும் கீழைக்காற்று யாருக்கும் உரிய முறையில் விவாதித்து உதவி செய்யவும் காத்திருக்கிறது. தொடரும் எமது பயணத்தில் தொடர்ந்து தங்கள் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம்.. நன்றி.

      கீழைக்காற்றுக்காக,
      தோழமை அன்புடன்..
      துரை.சண்முகம்.

      • இந்த உரை இத்தருனதிற்கு மிக மிக அவசியமானதாக ஒன்றாக கருதுகிறேன். எ

        என் மனமார்ந்த நன்றி…

        //இந்த நவீன மாற்றங்கள் கேடான முறையில் மட்டும் திட்டமிட்டு நம் மீது ஒரு ஆயுதம் போலப் பிரயோகிக்கப் படுகின்றன.//

        அச்சுக் கலை மற்றும் கணினி வந்தது சரியல்ல என்கிறீர்களா?

        • brain’s burden is reduced after the invention of printing .we don’t need to memorize similarly after the invention of computers we don’t need do stereo type calculations

          what happened to our thinking part of brain (both logical thinking/lateral thinking and creativity)

          still science is not nearer to nature

          for example “according to aerodynamic law a honey bee can’t fly because weight to wing span(lenth) ratio is very high” but what is happening really this shows that Aerodynamics law works only within a specific range.

          but where we are heading to ????

  3. அண்ணே வினவு காணொளியாக இருந்தால் வெளியிடவும்
    இதையும் படிக்கிறேன் நுனிப்புல் மேயாமல் ஆழமாக வசித்து விட்டு மறுமொழி இடுகிறேன்
    காணொளிக்கி கொஞ்சம் ட்ரை பன்னுங்கப்பு

  4. கீழைக்காற்றின் முதல் வெளியீட்டு விழா இது என்பது ஆச்சரியமே. என்றாலும் இது ஒரு முக்கியமான நிகழ்வு. இந்தத் தலைமுறையின் இழந்துகொண்டிருக்கும் ஆழ்ந்த வாசிப்பு மற்றும் சமூக நுண்ணோக்கு அறிவு பற்றிய மிகச் சிறந்த உரை இது. நன்றி.

  5. திரு. மருதையனின் அறிவு வியக்கத்தக்கதாக உள்ளது. நிறைய விடயங்கள் பேசியிருக்கிறார். பரந்த வாசிப்பு அனுபவம் உள்ளவராக இருக்கிறார்!

  6. ஒவ்வொரு தலைப்பு போல் உருவாக்கி உணர்வுகளை மீட்டெடுக்கும் உங்கள் கட்டுரை கொடுத்த தாக்கம் மகத்தானது. புரட்சிகள் வர வேண்டும் என்பதை விட ஒவ்வொரு தனி மனித சிந்தனைகளிலும் தான் கொண்ட கொள்கையில் மாறுதல்கள் வர வேண்டும் என்ற இலக்குக்கு இது போன்ற கட்டுரைகள் ஏதோவொரு வகையில் உதவக்கூடும்.

  7. அற்புதமான உரை. மீண்டும் ஒன்றிரண்டு முறை படிக்க வேண்டும். நான் ஒரு முறை மட்டும் தோழர் மருதையன் அவர்களின் உரை நேரில் கேட்டிருக்கிறேன். இந்த முறை எனது தோழர் (ஓய்வு பெற்றவர்) ஒருவரை இந்த விழாவிற்கு அனுப்பியிருந்தேன். அவர் நான் பணித்த புத்தகம் வாங்கி விட்டு சில நிமிடங்கள் இருந்துவிட்டு வந்துவிடலாம் என எண்ணி வந்தவர் தோழர்களின் பேச்சுக்களால் ஈா்க்கப்பட்டு நிகழ்ச்சி முடியும் வரை இருந்து வந்து அன்றிரவே தொலைபேசியில் தொடர்பு கொண்டு தோழரின் சிறப்புரையைப் பற்றி வெகுநேரம் பேசினார். இந்த உரை பு.ஜ அல்லது பு.க வில் அப்படியே வரவேண்டும்.

  8. […] This post was mentioned on Twitter by dr.rudhran. dr.rudhran said: RT @ezharai: பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்: http://t.co/Rbo2lbE […]

  9. மிகச் சிறப்பான உரை. உரையை வாசித்தவர்கள் தங்கள் நட்பு வட்டத்திலும், குடும்ப உறுப்பினர்களிடமும் இதை அறிமுகம் செய்ய வேண்டும்.

    உரையை வாசிக்கும் போது இடையிடையே ‘இது ஒலி வடிவில் ஏற்ற இறக்கங்களோடும், அழுத்தங்களோடும் – அந்த பேச்சு பாவனையோடு – கேட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்’ என்று தோன்றியது. அதற்கான வாய்ப்பு இருந்தால் கட்டாயம் அந்த ஒலிப் பதிவை வலையேற்றுமாறு கோருகிறேன்.

  10. நானும் அந்த உரையை கேட்டேன் , அற்புதமான உரை .எதை படிக்க வேண்டும் , எப்படி படிக்க வேண்டும்
    போன்ற அரசியல் பார்வை இருந்தது . வினவு இதை புத்தக காட்சியில் ஒரு சிறு வெளியீடாக இருந்தால்
    வினவு படிக்காதவர்களுக்கும் , உரையை கேட்க்காதவர்களுக்கும் உபயோகமாய் இருக்கும் .

  11. வினவு தோழர்களுக்கு,

    இந்த உரையை அப்படியே சிறு வெளியீடாக கொண்டு வந்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தயவு செய்து இந்த யோசனையை பரிசீலித்துப் பார்க்கவும்.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

  12. சமூகம் மீதான அக்கறையை சரியான திசையில் முன்னெடுத்த அருமையான உரையின் பகிர்வு. கீழைக்காற்றின் முதல் வெளியீடு என்பது ஆச்சரியமளிக்கிறது. தோழர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகுக..

  13. உரை எளிமையாக விவரிக்கப்படாததால் முழுவதும் படிக்க முடிய வில்லை.சலிப்பை ஏற்படுத்துகிறது.
    //நூல்கள் படிப்பதென்பதை நம்முடைய விருப்பம் அல்லது விருப்பமின்மை என்ற வரையரையைத் தாண்டி அதை நம்முடைய கடமையாகக் கொள்ள வேண்டும்.

    முதலாளித்துவம் தொடுத்த தாக்குதல், மனிதர்களை உழைக்கும் இயந்திரங்களாக உண்ணும் இயந்திரங்களாக, நுகரும் இயந்திரங்களாக மாற்றுவதற்கான தாக்குதல். நம் அறிவை செயலிழக்கச் செய்வதற்கான தாக்குதல். அந்தத் தாக்குதலில் நம்முடைய சிந்தனையும், மூளையும் ஊனமுற்றுப் போவதற்கு தெரிந்தே அனுமதிக்கக் கூடாது.//

    1 நூல்கள் படிப்பதை வழக்கமாக்கிகொள்ளவேண்டும்.
    2 நம்மை உண்ணும்,நுகரும் இயந்திரங்களாக மாற்ற முதலாளித்துவம் தொடுத்த தாக்குதலில் நம் மூளையும,சிந்தனையும் ஊனமுருவதற்கு அனுமதிக்கக்கூடாது.
    பேச்சும் எழுத்தும் எளிமையாக இருந்தால்தான் படிப்பார்கள் கேட்பார்கள்.

  14. //ஆனால் இந்த பாப்கார்ன் தலைமுறை, விழுமியங்கள் இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கும் திறன் இல்லாத நொறுக்குத் தீனித் தலைமுறையாக வளர்க்கப் படுகிறது. அதனால் தான் இவர்களால் ஒரு புத்தகத்தைப் படிக்க முடியவில்லை.///

    இல்லை. gross generalisations. இன்று விற்பனையாகம் நூல்களின் வகைகள் மற்றும் எண்ணிக்கைகள் இதை மறுக்கிறது. இணையத்தில் எழுதப்படும், விவாதிக்க்ப்படும் விசியங்கள் இதை மறுக்கிறது. அனைத்துவகை சிந்தனைகளும், எண்ணங்களும் தாரளமாக, வெளிபடையாக இன்று விவாதிக்க்படுகிறது. வினவு தளத்தை படிப்பவர்களின் எண்ணிகையே இதற்க்கு சாட்சி.

    மேலும் இளைஞர்கள் பலரும் சமூக, அரசியல் பிரஞ்சை உள்ளவர்களாகவே உள்ளனர். 70கள் இருந்த சதவீதத்தை விட இன்று குறைந்து விட்டதாக தெரியவில்லையே. அன்று கடும் வேலையில்லா திண்டாட்டம். அரசு வேலை மட்டும் தான் ’நல்ல’ வேலை. இன்று பிழைக்க அத்தனை கடும் போராட்டம் இல்லை. படிக்க நல்ல நூல்கள் வெகு தாரளமாக கிடைக்கின்றன. தலித் இலக்கியம் மற்றும் அரசியல், அரவாணிகள், பெண்களின் உரிமைகள் பற்றிய நூல்கள் மற்றும் இயக்கங்கள் பெருகியுள்ளதை சொல்லலாம்.

    இன்றைய இந்திய கல்வி முறை சரியில்லை என்பது சரிதான். ஆனால் முதலாளித்துவம் தான் காரணி என்பது சரியல்ல. அமெரிக்க, அய்ரோப்பிய பள்ளி கல்வி முறை (அங்கு பெரும்பாலோனோர் அரசு பள்ளிகளில் தான் படிக்கின்றனர்), சிறப்பாக, எளிதாக, இன்பமாக உள்ளது. இங்கு போல் மனப்பாடம் செய்யும் முறை, கடும் சுமைகள் இல்லை.
    there is real joy in schooling there. அதுதான் கல்வி. இங்கு இருப்பது அல்ல.

  15. //அவர் 20000 புத்தகங்கள் வைத்திருந்தாரா, 10000 புத்தகங்கள் வைத்திருந்தாரா என்பதல்ல பிரச்சனை. ஆனால், மிகச் சாதாரண வர்க்கத்திலிருந்து ஒரு மனிதர் மேற்கத்திய நாடுகளில் பிரபு குலப் பின்னணியில் வந்த கல்வி பயின்ற ஜனாதிபதிகள், பிரதமர்கள், ராஜ தந்திரிகளோடு இணையாகப் பேச வேண்டுமானால் அதற்குரிய அறிவு வேண்டும்.///

    சரி. ஸ்டாலினின் அறிவுதிறன், ஆற்றலை குறைத்து மதிப்பிடவில்லை. அவரின் பிறப்பை பற்றியும் விமர்சிக்க எதுவும் இல்லை. கூடவும் கூடாது. இதெல்லாம் பிரச்சனை இல்லை. ஸ்டாலின் பல கோடி அப்பாவி மக்களை திட்டமிட்டு கொல்லப்பட காரணியாக இருந்தார அல்லது இவை வெறும் பொய்களா என்பதுதான் பிரச்சனை. இன்றைய ரஸ்ஸிய மற்றும் கிழக்கு அய்ரோப்பிய மக்கள் தான் எது உண்மை என்று சொல்ல முடியும். அவர்களின் வரலாற்றை அத்தனை சுலபமாக ’முதலாளித்துவ ஏகாதிப்பத்திய ஊடகங்கள்’ திரிக்க முடியாது. முக்கியமாக அந்நாடுகளில் முடியாது. அந்நாடுகளில் சமீப காலங்களில் திறக்கப்பட்ட தேசிய ஆவணங்கள் எல்லாம் பொய்களா ?
    எவை அவதூறுகள் என்று அறிவுலகம் இன்று சொல்கிறது ? Denial of history என்பது யார் செய்வது ? மார்கிச்யத்தை இன்றும் நம்புகிறவர்களில் பெரும்பாலானோர் வினவு குழுவை போல் ஸ்டாலினில் கொடுஞ்செயல்களை மறுக்க வில்லை. அவர்கள் எல்லோரும் மூடர்களா என்ன ?

  16. கிட்டத்தட்ட 1.30 மணி நேர உரையை இரண்டு நாள்களில் எழுதி தொகுத்து கொடுத்த உமா அவர்களுக்கும், வெளியிட்ட வினவிற்கும் என் நன்றிகள். உரை குறித்த என கருத்தை மீண்டும் வந்து சொல்கிறேன்.

  17. உறக்கத்தில் இருந்து சிலிர்த்து எழுந்த உணர்வு. ஒலி வடிவில் வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  18. // இவர்கள் இளைஞர்களாக இருந்தாலும் சிந்தனதையில் கிழடு தட்டிப் போனவர்கள்//

    அப்படியா ? தோழர் சொன்னால் இது உண்மையாகிவிடுமா என்ன ? மிக சுலபமாக இதை உங்களை நோக்கி திருப்பி சொல்லவும் முடியும். இதெல்லாம் மேலோட்டமான வெற்று வார்த்தைகள்.

    ///அது ஒரு இலக்கற்ற படிப்பு. அப்படிப் படிப்பதிலேயே ரசனை கொண்ட ஒரு இலக்கியவாதக் கூட்டம் இருக்கிறது.

    அவர்கள் தான் இந்தக் கூட்டங்களை எல்லாம் நடத்துவது. சங்கீத சீசனில் ம்யூசிக் அகாடமிக்கு கச்சேரி கேட்க வருகிறார்கள் இல்லையா அது போல///

    இதெல்லாம் அடிப்படை உரிமைகள். இவை கூடாது அல்லது தவறு சொல்ல யாருக்கும் சர்வாதிகாரம் அளிக்க முடியாது. கூடாது. இலக்கற்ற படிப்பு என்றால் என்ன ? அல்லது அது முட்டாளதனம் அல்லது பிற்போக்குதனமா ?

    • நாங்கள் எதை படிக்க வேண்டும் அல்லது கூடாது என்பதை நாங்கள் தாம் முடிவு செய்வோம். கம்யூனிஸ்டுகள் அல்ல. அது சர்வாதிகாரம் மற்றும் ஃபாசிசம். அதிகாரத்தை கைபற்றினால் என்ன செய்வீர்கள் என்பதையும் வெளிபடையாக அறிவிப்பதுதான் நேர்மை. அதை பற்றி ஒரு பதிவு எழுதுங்களேன். மேடையில் பேசுங்களேன்.

      • இப்போது அதிகாரத்திலிருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி, இன்றைய அதிகார வர்க்கம் எப்படி கருத்தை திணிக்கிறது, பாசிசமாக, சர்வாதிகாரமாக இருக்கிறது என்பதை எல்லாம் ஆழமாக பேசுகிறது கட்டுரை..
        அதை பற்றி கருத்து சொல்ல வக்கில்லை… மறுத்து பேச வக்கில்லை…

        அது தான் சுதந்திரம் என்றும், கம்யூனிஸ்டுகள் சர்வாதிகாரிகள் என்றும் திரும்ப திரும்ப கூவுகிறீர்களே??

        கழிசடை சினிமா உலகில் இருப்பவர்கள் கூட ஒத்துக்கொள்ளும் ஒரு விடயம், நாம் எதை பார்க்க வேண்டும் என்பதை முதலாளிகள் தான் தீர்மானிக்கிறார்கள் என்பதை, இந்த அறிவுஜீவி மறுக்கிறார். அது தான் சுதந்திரம் என்று கூறுகிறார்…

        //ஜனநாயகம் என்றால் என்ன? கௌரவம் என்றால் என்ன? நீதி என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கு நுனிநாக்கு ஆங்கிலம் பேசுபவர்களால் பதில் சொல்ல முடிவதில்லை.///

        உரையில், தோழர் மருதையன் சொன்னது போல இவர்களுக்கு சுதந்திரம் என்றால் என்ன என்று கூட தெரியாது போல இருக்கிறதே?

        எளிய உழைக்கும் மக்களின் கலை இலக்கிய வடிவங்கள் எந்த சோசலிச நாட்டில்லாவது புறக்கணிக்கப்பட்டதை நீங்கள் காட்ட முடியுமா? எளிய மக்களின் கலைவடிவம் சோசலிச உள்ளடக்கத்தால் மேலும் உயர்த்தப்பட்டிருக்கும்…

        ஆனால், இன்றைய முதாலாளித்துவ ஆட்சியில் பல இடங்களில் எளிய மக்களின் கலை இலக்கிய வடிவங்கள், திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன, திருடப்படுகின்றன, நுகர்வு கலாச்சாரத்தால் சீரழிக்கப்படுகின்றன…

        இதை தான் இந்த அறிவுஜீவி சுதந்திரம் என்கிறார்…

        இந்த உரை/கட்டுரை உங்களுக்கானதும் தான்… மறுப்பு சொல்ல வேண்டும் என்பதற்காக புல் மேய்ந்துள்ளீர்கள்.. சிறிது ஆழமாக படியுங்கள்…

        அல்லது இப்படியே ஒரு நாளைக்கு மூனு தடவை ஸ்டாலின், சர்வாதிகாரி என்று புலம்பிக்கொண்டு இருங்கள்…

        • //இப்போது அதிகாரத்திலிருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி, இன்றைய அதிகார வர்க்கம் எப்படி கருத்தை திணிக்கிறது, பாசிசமாக, சர்வாதிகாரமாக இருக்கிறது என்பதை எல்லாம் ஆழமாக பேசுகிறது கட்டுரை..///

          என்ன பெரிய கருத்தை திணிக்கிறது ? என்ன ஃபாசிசம் அல்லது சர்வாதிகாரம் இங்கே ? கீழை காற்று பதிப்பதம் சுதந்திரமாக தானே இயங்குகிறது. சென்னை புத்தக சந்தையில் கடை போட தடை ஏதும் இல்லையே ! மேலும் இந்த இணையத்தில் எழுத, பிற சிறு மற்றும் இதர பத்திரிக்கைகளில் எழுத, நடத்த, பதிப்பிக்க, விற்க்க, விளம்பரம் செய்ய எந்த தடையும் இல்லையே. இதே அளவு சுதந்திரம் நீங்க அதிகாரத்தை கைபற்றிய பின் தருவீர்களா என்பதுதான் விவாதம். கண்டிப்பாக அனுமதிக்க மாட்டீர்கள் என்பது தான்
          வெளிப்படை. அப்ப எது பாசிசம் ? யார் பாசிஸ்டுகள் ?

          ////உரையில், தோழர் மருதையன் சொன்னது போல இவர்களுக்கு சுதந்திரம் என்றால் என்ன என்று கூட தெரியாது போல இருக்கிறதே////

          அப்படீனு நீங்களே சொல்லிக்கிட்டு திரிங்க. சுதந்திரம் என்றால் என்னவென்று எங்களுக்கும் தெரியும்.

          ///எளிய உழைக்கும் மக்களின் கலை இலக்கிய வடிவங்கள் எந்த சோசலிச நாட்டில்லாவது புறக்கணிக்கப்பட்டதை நீங்கள் காட்ட முடியுமா? எளிய மக்களின் கலைவடிவம் சோசலிச உள்ளடக்கத்தால் மேலும் உயர்த்தப்பட்டிருக்கும்////

          சரி, ஒத்துகிறேன். ஆனால் இவ்வகைகளில் சேராத இதர கலைவடிவங்கள் மற்றும் படைப்புகள் என்ன ஆகின அங்கு ? அவற்றை படைத்தவர்கள் என்ன ஆனார்கள் ? மேலும் இந்த வரைமுறைகளில் இல்லாதவை என்று எப்படி முடிவு செய்யப்பட்டது ? ஒரு கமிட்டியா அல்லது பொது வாக்கெடுப்பு முறையிலா ?

          எதிர்காலத்தில் இங்கு உங்க ஆட்சி உருவானால், கர்னாடக இசை, ’மேட்டுக்குடி’ கலைகள், உயிர்மை போன்ற பதிப்பங்கள், பத்திர்க்கைகள், படைப்பாளிகள் : இவற்றை என்ன செய்வதாக உத்தேசம் ? தடை செய்வீர்களா ? அப்படி என்றால் அதை இன்றே வெளிப்படையாக அறியுங்கள் என்று தான் கேட்கிறேன்.

        • ///கழிசடை சினிமா உலகில் இருப்பவர்கள் கூட ஒத்துக்கொள்ளும் ஒரு விடயம், நாம் எதை பார்க்க வேண்டும் என்பதை முதலாளிகள் தான் தீர்மானிக்கிறார்கள் என்பதை, இந்த அறிவுஜீவி மறுக்கிறா///

          அப்ப அங்காடி தெரு போன்ற படங்கள் எப்படி உருவாகின ? சத்யஜித் ரே, ஷியாம் பெனகல், அபர்னா சென், அடூர் கோபாலகிருஸ்ணன் போன்றவர்களின் படைப்புகள் வெளிவரவில்லையா ? அல்லது பல நூறு குறும்படங்கள், ஆவணப்படங்கள் வரலையா ?

          உங்க ஆட்சியில் என்ன அளவு சுதந்திரம் அளிப்பீரகள் என்பதை முதலில் சொல்லிவிட்டு பிறகு இங்கு டைலாக் உடுங்க.

      • ////அதிகாரத்தை கைபற்றினால் என்ன செய்வீர்கள் என்பதையும் வெளிபடையாக அறிவிப்பதுதான் நேர்மை////

        இபோது இருக்கும் முதலாளித்துவ அமைப்பில் இருக்கும் கருத்து சர்வாதிகாரத்தை பேசுகிறது உரை. அதை மறுப்பதாக இருந்தால், ஆதாரத்துடன் மறுக்க வேண்டும். அது தான் நேர்மை!

        ஆதாரத்துடன் மறுத்து விட்டு பின்னர் நீ ஒழுங்கா என்ற கேல்விக்கு சொல்லாம்… ஆனால், அதை விடுத்து, இது தான் கருத்து சுதந்திரம், உங்கள் ஆட்சியில் என்ன செய்வீர்கள் என்று விவாதித்தால்?? இது தான் விவாத நேர்மையோ??

        மருதையன் சரியாக தான் சொன்னார்!
        விவாதம் என்றால் என்ன? நேர்மை என்றால் என்ன? என்று கூட தெரியவில்லை… 🙂

        • ///சரி, ஒத்துகிறேன். ஆனால் இவ்வகைகளில் சேராத இதர கலைவடிவங்கள் மற்றும் படைப்புகள் என்ன ஆகின அங்கு ?///

          யப்பா.. இதையாவது ஒத்துகிட்டீங்களே???

          இப்ப இவர் என்ன சொல்ல வர்ரார்ன்னா… மக்களுடைய கலை, இலக்கியம் பாதுகாக்கப்பட்டது பற்றி எல்லம் அவருக்கு அக்கறை இல்லை..
          மக்களுக்கு தேவையில்லாத படைப்புகள், மனித குல, சமூக வளர்ச்சிக்கு விரோதமான படைப்புகள் பற்றி தான் இவருக்கு கவலை…

          கிழிச்சு தொங்க விடப்பட்ட இந்த பழைய சரக்கை இன்னும் வேதாளம் மாதிரி எத்தனி வருசத்துக்கு புடிச்சு தொங்குவீங்க?

          ///என்ன பெரிய கருத்தை திணிக்கிறது ? என்ன ஃபாசிசம் அல்லது சர்வாதிகாரம் இங்கே ? கீழை காற்று பதிப்பதம் சுதந்திரமாக தானே இயங்குகிறது.///

          சொன்னதையே சொல்லிகிட்டு உங்களுக்கு புரியிர மாதிரி எப்புடி பேசுறது? நான் திரும்ப திரும்ப கேட்குறது, கட்டுரையை படிச்சீங்களா படிக்கலியா? உங்கள மாதிரி அறிவுஜீவிகளுக்கு இந்த கட்டுரையை கூட வரிக்கு வரி பொழிப்புரை செஞ்சா தான் புரியுமா என்ன??

          ///இயந்திரத்தை முதலாளி கைக்காசு போட்டு வாங்குகிறான். ஆனால் இயந்திரத்தின் உப உறுப்புகளாகச் செல்லக் கூடியவர்கள் அது ஐ‌டி துறை ஊழியர்களாக இருக்கட்டும் வேறு யாருமாக இருக்கட்டும் எல்லாருமே தங்கள் சொந்தச் செலவில் தங்களைத் தயாரித்துக் கொண்டு போகிறார்கள்.///

          ///இந்தச் சந்தையிலே மலிவு விலையிலே இந்த உப உறுப்புகளை வாங்குவதற்காக இதை மட்டும் படித்தால் போதும் என்ற மனநிலையை முதலாளித்துவம் பயிற்றுவிக்கிறது.///

          ///தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி சற்று நேரம் அமர்ந்து விலகிச் செல்லாமல் ஒரு பொருள் குறித்து ஆழமாக உரையாட முடியுமா? இன்றைய இளைஞர்களிடம் முயற்சி செய்து பாருங்கள். ஒரு குறிப்பிட்டப் பொருளைக் குறித்து எழுதிக் கொடுக்க முடியுமா? கேட்டுப் பாருங்கள்.///

          ///எதிரிகள் அறிவாற்றல் மிக்கவர்கள். இந்த சமூகம் முழுவதையும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் என்றால் உங்கள் வீட்டு வாசலிலோ அல்லது எங்கள் வீட்டு வாசலிலோ ஒன்றும் போலீஸ் நிற்கவில்லையே?. பெரும்பான்மையான மக்கள் கருத்தியல் ரீதியான ஒரு ஆளுமைக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்தச் சமூகம் தான் நியாயமானது இந்தச் சமூகம்தான் சாத்தியமானது என்று மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அநீதிக்கு உட்படுத்தப்படும் மக்கள் கூட இந்த அநீதி தவிர்க்கப்பட முடியாதது என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.////

          இதுக்கு மேல நான் எடுத்துப்போட்டா, முழு கட்டுரையையும் எடுத்துப்போட வேண்டியிருக்கும்.

          ஆக மொத்தம் இந்த கட்டுரையை நீங்கள் படிக்கவே இல்லை, சும்மா இப்படியும் அப்படியுமா உங்க ஒலக மகா முளையால் புரட்டிவிட்டு, கம்யூனிச எதிர்ப்பு என்பதை மட்டும் பிடித்து தொங்குகிறீர்கள்..

          கம்யூனிஸ்டுகள் எதை சொன்னாலும், அதை கம்யூனிச எதிர்ப்பு என்ற ஒற்றை பார்வையில் பார்த்து, மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு இருந்தால், என்ன செய்வது?
          வேதாளங்கள் வெட்டி வீழ்த்த பட தானே வேண்டும்.. 🙂

        • //மக்களுக்கு தேவையில்லாத படைப்புகள், மனித குல, சமூக வளர்ச்சிக்கு விரோதமான படைப்புகள் பற்றி தான் இவருக்கு கவலை…

          கிழிச்சு தொங்க விடப்பட்ட இந்த பழைய சரக்கை இன்னும் வேதாளம் மாதிரி
          ///

          WHO DETERMINES WHAT ARE UNWANTED ARTS AND CREATIONS ? CERTAINLY NOT FASCISTS LIKE YOU.
          WHY DON’T BOLDLY DECLARE THAT YOU WILL BAN ALL FORMS OF ARTS AND BOOKS THAT DOESN’T SUBSCRIBE TO YOUR IDEALOGY. DO YOU HAVE THE GUTS TO NAME THE LIST ? HERE AND NOW ? TODAY ? YOU ARE ALL CHEATS
          AND LIARS WHO MISLEAD THE READERS ABOUT FREEDOM AND FASCISM.

        • Why are you swearing at people when you cannot meet arguments with arguments?
          You call people FASCISTS, CHEATS and LIARS WHO MISLEAD THE READERS ABOUT FREEDOM AND FASCISM because they uphold views that you dislike. Can you prove any of your charges?

          To I use your own phrase, “WHO DETERMINES WHAT ARE UNWANTED ARTS AND CREATIONS? CERTAINLY NOT FASCISTS LIKE YOU”–
          Do you want it to be only FASCISTS LIKE YOU?

          Liberalism in all its forms has proven itself to be a wolf in sheep’s clothing. Its smooth talk ceases when it gets cornered on real issues.

        • ////மக்களுக்கு தேவையில்லாத படைப்புகள், மனித குல, சமூக வளர்ச்சிக்கு விரோதமான படைப்புகள் பற்றி தான் இவருக்கு கவலை///

          Corporal Zero,

          I called the people who label and ban anything they deem unfit for people as fascists. And the proof is as above. Ok. We, the liberals and libertarians are for full and complete freedom in all spheres of life. esp right to life and expression. those who try to suppress these rights are usually called fascists. ok.

          and will these people allow Uyirmmai and other publishers to continue if and when they capture power ? Or will they ban them and thousands of others ? will this free internet and Thamizmanam be allowed to function like this or will it too be ‘controlled’ and regulated ? Try to answer these basic questions first. then we shall argue about fascists and liberals.

        • “I called the people who label and ban anything they deem unfit for people as fascists.” — Libertarian.
          By this definition the Censor Board must comprise fascists and fascists alone. Even caring parents will adequately qualify.

          You are fantasising about Uyirmai and other such magazines being banned. Even as a public mood that favours a mass revolution gathers momentum, journals like Uyirmai are likely cease publication, as they may not have the kind of readership and sponsorship that they have now.

          I do not find in Uyirmai anything exciting or of value to me as a reader of serious works of literature. From Kalacchuvadu onwards it has been pompous pretence from those quarters that passed for serious writing.

          Most of the “free” literature that you refer to are not free but backed by big business. I trust that you would know enough not to demand evidence from me.

  19. /// “நூறு பூக்கள் மலரட்டும்” என்று மாவோ சொன்னாரே ///

    ஆம் சொன்னார். ஆனால் செயலில் என்ன செய்தார் ? நேர் எதிராக நசுக்கினார்.

    http://en.wikipedia.org/wiki/Hundred_Flowers_Campaign

    ’எதிர்களை’ தற்காலிகமாக சுதந்திரம் அளித்து வெளிபடையாக இயங்க வைத்து, அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு, பின்பு பூண்டோடு ஒழிக்க அவர் செய்த தந்திரம் இது.
    இதை பற்றி விவாதிக்கலாமா ?

    • எந்த பேர்ல வந்தாலும்.. இந்த விக்கிபீடியா லிங்க் கொடுக்குறத மட்டும் விடாதீங்க தல!!!
      அப்படி போடுங்க தல! இவங்கள இப்படி தான் போட்டு தாக்கனும்!
      🙂

  20. கல்வி, வாசிப்பு, வாழ்க்கை, எழுத்து, என்று மிகச் சிறப்பான உரை தோழருடையது. அதிலும் மருதுவின் ஓவியங்களை புரிந்து கொள்வது தொடர்பாக அவர் விளக்கிய விதமும், மூளை ஊனம் தொடர்பாக அவர் சொன்ன விளக்கங்களும் மிகவும் புதியவை. இதை சிறு பிரசுரமாகக் கொண்டு வர வேண்டும்.

  21. தோழர் மருதையனின் உரை தற்காலத்தின் எதார்த்தங்களை நன்றாக எடுத்துரைத்து சிந்திக்க தூண்டுகிறது.

  22. அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய கருத்துகள் அடங்கிய உரை. இதை சிறுபுத்தகமாக வெளியிட்டால் பலரும் பயனடைவர்.

    • நண்பர் அதிஷா,

      தோழர் மருதையன் மற்றும் வினவு தோழர்கள் உங்க பதிவுகளை பற்றி என்ன ‘கருதுகிறார்கள்’ என்பதையும் அறிந்து கொண்டு இங்கு சொல்லுங்களேன் !!! :)))))

  23. அதியமான் அண்ணாத்தே ஜெயமோகன சாமி சன்னிதானத்துல போட்ட வரி என்னன்னா,
    _____________________________________
    அன்புள்ள ஜெ,
    வினவு பற்றிய தங்கள் பதிவை படித்தேன். பல காலமாக
    வினவு தளத்தில் வாதாடி, இனி அது வீண் வேலை என்று
    உணர்ந்து கொண்டேன்.

    ____________________________________
    ஆனா இன்னக்கு வினவுல வந்து விவாதிக்கிறதுதான் பயனுள்ள வேலைன்னு ஞானோதயம் வந்துருக்குறதுக்கு வாழ்த்துக்கள்!

    அப்புறம் ஜெயமோகன் சன்னிதானத்துல அந்த மேதையோட தரத்துக்கு பின்னூட்டங் வரலேங்குறதனால வாசகர் கருத்துங்குற ஜனநாயகத்தையே தூக்கிட்டாறு, அது பாசிசமில்லையாம்,

    வினவுலதான் அல்லாரும் வினவையும், ஸ்டாலினையும் திட்டறதுக்கு முழு சுதந்திரம் கொடுத்துருக்காங்க, இந்த ஜனநாயம் நம்ம அதியமான் கண்ணுக்கு பாசிசமா தெரியுதாம்.

    முதல்ல நல்ல கண் டாக்டர பாருங்கண்ணே!

    • என்னங்க ரியல் என்கவுண்டர்,

      உங்க பின்னூட்டத்துக்கு பதில் சொல்லாம, ஜெர்க் அடிச்சு, செந்தில் அவருக்கு பதில் சொல்ல போயிட்டார் அதியமான் என்கிற லிபரிட்டரியன். வினவுல விவாதிக்கிறதுன்னு வீண்-னு சொன்னவர், இப்ப வந்திருக்கிறார்னா வினவை தொடர்ச்சியாக படிப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கிட்டே வருது. வினவுகிட்ட இருந்து….அவங்களை காப்பாத்தாராம்….!:}

  24. The only person erased from the history is Stalin. After the Russion archieves are open to the public the so called intellectuals are keeping quit. Why they have not thrown out the facts of the butchering of the deeds of Stalin? What prevents them to reveal the facts? because what they have told so far is not the fact. Whether they are fools or greats their minds are currepted by the falls history about Stalin by the capitalist intelectuals.

      • /// Stalin-Era Research and Archives Project ///

        ஓ இதுக்குன்னு தனி புராஜெக்டே ஆரம்பிச்சிருக்காங்களா???

        நீங்க, இன்னும் அசுரன் விக்கிலீக்ஸ் பத்தி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லலியே?

        உங்க விவாத நேர்மை எனக்கு புடிச்சிருக்கு!
        உங்களுடைய வடிவேலு பாணியிலான “சரி. ஒத்துக்கிறேன்” டயலாக்கும் பிடிச்சிருக்கு.. பாஸ்.
        நீங்க நெம்ப நல்லவரு பாஸ்..

  25. ///என்ன பெரிய கருத்தை திணிக்கிறது ? என்ன ஃபாசிசம் அல்லது சர்வாதிகாரம் இங்கே ? கீழை காற்று பதிப்பதம் சுதந்திரமாக தானே இயங்குகிறது.////

    விவசாயிகள் கொத்து கொத்தாக தற்கொலை செய்து கொண்ட போது, அதைப்பற்றி ஒரு வரி செய்திகூட போடாமல், அமிதாப்பச்சன் கக்கா போனதையும், சில்பா செட்டி பிரச்சனை பற்றியும் இருபத்தி நான்கு மணி நேரமும் திரும்ப திரும்ப ஒளி பரப்பினார்களே….

    அது சுதந்திரமா? ஆம் அது அவர்களின் சுதந்திரம் என்றால், அதை தான் நாங்கள் எங்கள் மீது திணிக்கப்படும் கருத்து பாசிசம், சர்வாதிகாரம் என்கிறோம்.

    நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சிந்தியுங்கள், அது உங்கள் சுதந்திரம்.. ஆனால் நாங்கள் இப்படி மட்டுமே சிந்திக்கவேண்டும் என்று திட்டமிட்டு செய்தி வெளியிட்டால், கருத்து பரப்பினால் அது சர்வாதிகாரமே!

    இப்போது நடைமுறையில் இருக்கும் சர்வாதிகாரத்தை பற்றி பேசமாட்டாராம்… நாம் மட்டும் வருங்காலத்தில் பாட்டாளி வர்க்க ஆட்சி வந்தால் என்ன நடக்கும் என்று இவரின் ஆருடத்திற்கொல்லாம் பதில் சொல்லவேண்டுமாம்…
    இவர் ஒரு ஜோசியக்காரர் என்று அடிக்கடி நிறுபிக்கிறார் 🙂

    • //நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சிந்தியுங்கள், அது உங்கள் சுதந்திரம்.. ஆனால் நாங்கள் இப்படி மட்டுமே சிந்திக்கவேண்டும் என்று திட்டமிட்டு செய்தி வெளியிட்டால், கருத்து பரப்பினால் அது சர்வாதிகாரமே!

      ////

      P.Sainath is employed by The Hindu as its rural affairs editor and all his articles are published and re-published many times. TV channels do not give the same coverage as print media but that doesn’t mean there is no news reports in TVs about farmers or farm crisis.

      All this is not the point here. The solution that you provide the ills and wrongs in the present system : what actually does it contain ? Will it provide better and more free information and allow more freedom of expression ?
      try to answer this vital question here instead of side tracking…

      • 1. hope u knew about “nero’s guests”

        2. we kept asking whose freedom of expression do you advocate. we accuse you you advocate freedom of expression to oppressors of present (ill & wrong) system.

        3. moreover we accuse, you do not even know the meaning of freedom of expression!

        🙂

  26. This article is very highly intellectual and very innovative think. It is very useful of my life. thanks to marudian

    that is one sample
    அந்த ஆற்றலை எப்படி அடைவது? ஆயுதம் மூலமாகவா? அதற்கு கற்க வேண்டும். வேறு குறுக்கு வழி கிடையாது. அதனாலேயே லெனின் Proletarian Intellectuals உருவாக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார். அதனால் தான் போலிப்பகட்டு, போலி அறிவு, மேதாவித்தனம் ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாளி வர்க்க இயக்கத்திலேயே சாதாரண தொழிலாளிகளாய் இருப்பவர்கள் கூட அதை வெளிப்படுத்தும் போது மார்க்ஸ் அதை கடுமையாகச் சாடுகிறார். அதனால் பலர் வருத்தப்பட்டதுண்டு
    by
    c.thambu
    vallanadu
    Thoothukudi dist

  27. சிலவற்றை படித்தாலே போதும். ஆனால் சிலவற்றை படித்தால் மட்டும் போதாது. அது உறைக்க வேண்டும். உறைக்க வேண்டுமானால் காதுகளுக்குள் புகுந்து பிறகே மூளைக்குச் செல்லவேண்டும். ‘பொட்டில் அறைந்தாற் போல’ என்று சொல்வதன் பொருள் இதுதான். இந்த வாய்ப்பை இழந்தவர்கள், இனி வரும் வாய்ப்புகளையாவது பயன்படுத்திக்கொள்வார்கள் என நம்புகிறேன். உடற் சோர்வினூடே இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதனால் இதைச் சொல்கிறேன்.

  28. ///எதிர்காலத்தில் இங்கு உங்க ஆட்சி உருவானால், கர்னாடக இசை, ’மேட்டுக்குடி’ கலைகள்,////

    நிகழ்காலத்தில் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் கலைகளுக்கு என்ன கதி நேர்ந்திருக்கிறது என்பதை பற்றி கவலைப்படாத மனம், எதிர்காலத்தில் சிறுபான்மை ’மேட்டுக்குடி’ கலைகளின் கதி என்னவாகும் என்று பதறுவது புரிகிறது!

    • அவர் எப்பொழுதுமே அப்படித்தானே. சைபீரிய பனியை தரிசித்த மெக்கார்த்திகளுக்காக உருகும் அவர் மனம், ஜார் மன்னன் தொழிலாளர்களை சைபீரியப் பிரதேசத்தில் சிறை வைத்ததைப் பற்றி நினப்பது கூட இல்லை.
      இந்த மாதிரி ஆளுங்கள பத்தி புரிஞ்சிக்கவே முடியல, தொழிலாளர்கள் ஒழுங்கா வேலை செய்வதில்லை அவங்களாலதான் தொழில்ல நட்டம் வருதுன்னு புலம்புறாங்க, அதுனாலதான் நாடே முன்னேற முடியல்லைன்னும் கூட சொல்றாங்க. ஆனால் ரஷ்யாவுல வேலை செய்யுங்கடான்னு வேலை கொடுத்தா வேலைய செய்யாம அரசுக்கு எதிரா சதி வேலையில ஈடுபட்ட சோம்பேறி மிட்டா நாய்ங்கள சைபீயாவுக்கு அனுப்பி வேலை செய்ய வச்சா மட்டும் ஏன் பதறுறாங்க? இங்க வேலை செய்யலைன்னு புலம்புறாங்க, அங்க வேலை செய்ய வச்சதுக்கு புலம்புறாங்களே ஏன்? தெளியவே மாட்டாங்களா!

    • ///நிகழ்காலத்தில் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் கலைகளுக்கு என்ன கதி நேர்ந்திருக்கிறது என்பதை பற்றி கவலைப்படாத மனம், எதிர்காலத்தில் ///

      That is your wrong assumption. and what or who is responsible for the decay of folk arts ? but programs like Chennai Sangamam (for all its corruption), Tamil ISai Manram, etc do try to preserve folk arts.

      There is no conspiracy by any ‘imperialists’ in suppressing folk arts. Lack of patronage (which exisited under feudalism) and development of electronic media which provides entertainement at home are some of the reasons
      for this state.

      All this is again immaterial to the central issue (which you dodging) : how much ‘freedom’ will be allowed in your regimes for arts and science ? Ma.Sivakumar’s comment in a related post about Uyirmmai is very correct. ??

  29. //அதனால் தான் இவர்களால் ஒரு புத்தகத்தைப் படிக்க முடியவில்லை. சிலர் “புதிய கலாச்சாரம்” பத்திரிகை ரொம்ப சீரியசாக இருக்கிறது, லைட்டாக இல்லை என்று சொல்லுவார்கள். லைட்டாக என்றால் அதைப் பார்த்த உடனேயே புரிந்துவிட வேண்டும். ஒரு புத்தகத்தில் பக்கம் நிறைய எழுத்து இருந்தாலே பலருக்கு பிரச்சனையாக இருக்கிறது.//
    (இங்கு சிறிது ‘எடிட்’ செய்துவிட்டீர்களென்று நினக்கிறேன். “ஏன் இவ்வளவு நீளமாக எழுத வேண்டும்? அப்படியென்றால் இவ்வளவு எழுதலாமா; இவ்வளவு குறைத்துக் கொள்ளலாமா, அல்லது இவ்வளவு?” என்றும் கூடப் பேசினார் என்பது என் நினைவு. நினைவு தவறாகவும் இருக்கலாம்).

    வினவு,
    தோழர் மருதையனின் இந்தக் கூற்றில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை.
    புஜ – புக எழுத்துக்கள் – அல்லது பொதுவான மார்க்சியச் சிந்தனைப் புத்தகங்கள் – அப்பழுக்கற்ற உண்மைகளின் உறைகல் என்றாலும் அதன் எழுதுமுறை ஒரு பாமரனின் மூளைக்குள் பதிந்துவிட வாய்ப்பே இல்லை. அந்த எழுத்துக்களில், ஒரு பாமரனின் மதிப்பீடு இவ்வாறாகத்தானிருக்கும் : ‘விஷயமுள்ள புத்தகம் எதையோ சொல்லவருகிறது; எனக்குத்தான் புரியவில்லை’.

    உதாரணம் : சமூக அரசியல் ஆரம்ப நூல் வரிசை : தத்துவ ஞானம் என்றால் என்ன? – நியூ சென்சுரி வெளியீடு. மூன்று வருடமாகப் படித்து வருகிறேன். தத்துவ ஞானம் போதிக்கும் இந்த (ஆரம்ப நூல் வரிசை…!) புத்தகம் எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் என்பது கேள்விக்குறியே.

    எழுத்தில் உண்மைதானிருக்கவேண்டுமேயொழிய, மேதாவித்தனம் இருக்கக் கூடாது.
    பலருக்கு உங்கள் எழுதுமுறை குழப்புகிறதென்றால் அதை எழுதுவதில் என்ன அர்தமிருக்கிறது? மாறவேண்டியதும் வாசகர்களல்ல – நீங்கள்தான்.

    ஜனரஞ்சகப் பத்திரிகைகள் வாசகனை முட்டாளாக்குவதில் முந்திக் கொண்டதென்றாலும், அவனை எப்படியும் அறிவியல் பக்கம் திருப்பி விடவேண்டும் என்ற அடிப்படையில் ‘எழுது முறையை’ மாற்றியே தீரவேண்டும்.

    ‘காம்பஸ் இன்டெர்வியூவுக்கு’ வந்த, சிறந்த மதிப்பெண் எடுத்த (நமது) எஞ்சினீயர் மாணவனிடம் “வேகமாகச் செல்லும் மிதிவண்டி, திருப்பத்தில் திரும்பும்போது, ஏன் சாய்ந்து செல்கிறது?” என்ற கேள்விக்கு பதில் சொல்லத்தெரியவில்லை’ என்றும் கூட ஒரு பேராசிரியர் சொன்னதாகப் படித்திருக்கிறேன். இந்த படிப்பு புரிந்துகொள்ளப்படுவதில்லை என்றாகிவிட்டது.

    மேற்கூரிய அனைத்தும் நம் தமிழ் எழுத்துக்கள் அல்லது தமிழ் மொழிக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட புத்தகங்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற மொழியாக்கங்களைப் பற்றி எனக்கு கருத்துக் கூற அருகதையில்லை. அவைகளின் நிலவரங்களும் தெரியாது.

    • நண்பரே! ஒரு நான்கு மாதங்களுக்கு முன்னால் “படைப்புரிமை இழந்த பழைய கடவுளும், காப்புரிமை பெரும் புதிய கடவுளரும்” என்ற கட்டுரை புக வில் வெளியானது. மிக சிக்கலான அறிவியல் செய்திகள் அதில் இருந்தன, மேலும் காப்புரிமை, சட்ட நடைமுறைகள், அரசியல் தத்துவங்களெல்லாம் அதில் இருந்தன. ஆனால், நடை மிக எளிதாக விளங்கும் படியும், அதாவுது, அவளவு சிக்கலான செய்தியை இதற்கு மேல எளிமை படுத்தி கூற முடியாது என்ற வகையில் இருந்தது. இந்த உதாரணத்தை போல பல. உண்மையில் இந்த நடை தவிர்க்க முடியாதது என கருதுகிறேன். உங்களின் தொடர் உழைப்பினால் உங்கள் புரிதல் சாத்தியமாகும்போது, மற்றவர்களும் இந்த உழைப்பை தர வேண்டும் இல்லையா? நான் கூற விரும்புவது, எழுத்துக்கள் எளிமை படுத்த படும் அதே வேலையில், நாமும் தொடர் முயற்ச்சி[உங்களை போல்] செய்ய வேண்டும்.

      • என்னைப் பொறுத்தவரை ‘எழுதுமுறை’ என்பதில் மாற்றம் தேவையென்பது ‘மார்க்சிய அடிப்படைக் கல்வியின் மொழியாக்கம்’ மட்டுமே. ஏனெனில் மார்க்சியம் எனும் விஞஞானத்தில் புதிதாய் எழுதிட ஏதுமில்லை. நமக்கு மொழி மாற்றம்தான் தேவை. அதுவும் அப்பழுக்கற்ற, எளிதலுடன் புரிதல் கூடிய வார்தைகளுடன், ஒரு பேராசிரியர்த்தனமின்றி, ஒரு சக தொழிலாளி புரிந்துகொள்ளும் அளவில்தான், மொழிமாற்றம் இருக்க வேண்டும். இதில் தான் மார்க்சின் அடிப்படைக் கல்வி அடங்கி இருக்கிறது. எனக்கு இன்றளவிலும்கூட, யதேச்சதிகாரம், பூர்ஷ்வா, பாசிசம் போன்ற மொழிபெயர்ப்புச் சாயல் கொண்டவார்தைகள் எரிச்சலூட்டுகின்றன.

        மார்க்சியம் ஒரு பாமரனின் சிந்தனைகளில் பதிந்துவிட வேண்டுமென்றால், குருட்டாம் போக்கான மொழிமாற்றம் கைவிடப்படவேண்டும்.

        சன் டிவி சீரியல்களுக்கு முன்னர் டிடியில் வந்த ஹிந்தி மொழி மாற்ற சீரியல் போலிருக்கிறது அனைத்து மார்க்சியப் புத்தகங்களும். தினந்தோறும் நடக்கும் பிரச்சினைகள், அரசியல் கேடித்தனங்கள் ஆகியவற்றுக்காக போராடுவது மட்டும் போரட்டமாகிவிட முடியுமா? அடிப்படையில் ஒரு பாமரனின் சிந்தனையில் இந்த நியாயமான மார்க்சியக் கோட்பாடுகள் பதிந்தாலொழிய, ஒன்று, அவன் உண்மையைப் புரிந்து கொள்ளமாட்டான் அல்லது, முட்டாளாகவே இருப்பான். குறுகிய வட்டதிலிருக்கும் மார்க்சியத்தை எளிமைப்படுத்தி உதாரணங்களுடன் விளக்குவதன் மூலம்தான் பாமரர்கள் சிந்திக்க முற்படுவார்கள். இதுவும் கூட ஒரு போராட்ட முறைதான். என்னைப் பொருத்தவரை அனைத்திலும் சிறந்தது இதுதான்!

        என்னைப் பொருத்தவரை உங்கள் புத்தகங்கள் மார்க்சியத்தைப் போதிப்பதில் பிந்தங்கியிருக்கின்றன என்பதில் நியாயமிருக்கிறது.

        இந்த அடிப்படையில் மார்க்சியப் புத்தகங்கள் மாற்றப்படாமலிருந்தால் இம்மாபெரும் தத்துவங்கள் ஏட்டுச்சுரைக்காயாக மட்டும்
        மாறிவிட வாய்ப்புண்டு. சிந்திக்கவும்!

    • தோழர்களின் வாசகங்கள், பைபிளின் தமிழாக்கம், கர்னாடக சங்கீதம் இவையெல்லாம் வெகுஜன விரட்டு கலைகள்!

  30. மருதையனின் உரை மிகச்சரியானதாகவும் மிகசிறப்பானதாகவும் இருக்கிறது. அவர் முற்றிலும் வெளியீட்டு விழாவுக்கு தொடர்பான புத்தகம்,வாசிப்பு என்று பேசியிருக்கிறார்.மேலும் அவர் வினவின் விழா பற்றிய கட்டுரையைப் போல் குறை கூறுவதாக தொடங்காமல் முழுக்க மையப் பொருளில் தங்கியுள்ளார். வினவு நீங்கள் உங்கள் பொதுசெயலாளரிடம் பயிற்சி எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது…

  31. Our enemy very intelectual than us. For find our enemy, we need good analytical knowledge. In the name of democracy most of writers, media and politicians are do lot of things for carporate benefit rather than poor. So this article an eye opener for us.

  32. தொலைக்காட்சி பார்ப்பது வீண் படிப்பது மட்டுமே சரியென்று ஒதுக்கிவிட முடியாது. தொலைக்காட்சிகளிலும் பல உபயோகமான நிகழ்ச்சிகளைத் தருபவை இருக்கத்தான் செய்கின்றன.

    கம்யூனிசம்/புரட்சி சம்பந்தப்பட்ட புத்தகங்களை படிப்பது மட்டுமே சரியான வாசிப்பு என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. முதலாளித்துவம் மற்றும் கம்யூனிசம் இரண்டையும் படித்து இரண்டில் எது சரியெனப் படுகிறதோ அதை தேர்ந்தெடுக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.

    ஒருத்தருக்கு முதலாளித்துவனம்தான் சரியெனப் படுகிறதென வைத்துக்கொள்வோம். அவர்களை அது சம்பந்தமாக புத்தகங்கள் படிப்பது தவறு என நாம் எப்படி கூற முடியும்?

    • //கம்யூனிசம்/புரட்சி சம்பந்தப்பட்ட புத்தகங்களை படிப்பது மட்டுமே சரியான வாசிப்பு என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.//

      கம்மியூநிசம் மட்டும் தான் படிக்க வேண்டும் என்று இங்கே யாருங்க சொன்னாங்க? இப்படி அரைகுறையாகப் படித்து விட்டு புரிந்துகொள்ள முயற்சிப்பதைத்தான் தோழர் சாடுகிறார். கட்டுரையில் இருந்து சில வாக்கியங்கள் கீழே உள்ளன.

      “நம்முடைய இலக்கியத்தை நம்முடைய நூல்களை மட்டுமல்ல, எதிரியின் இலக்கியத்தை எதிரியின் நூல்களையும் கூடப் படிக்க வேண்டும். இல்லாத வரையில் போராட முடியாது.”

      “அது முதலாளித்துவ எழுத்தாளர்களாகக் கூட இருக்கலாம். முதலாளித்துவம் தான் நம் எதிரி. முதலாளித்துவ சிந்தனை எனபது மனித குல வரலாற்றின் ஒரு கட்டத்தில் தோன்றிய ஒரு விஷயம். அதை இல்லை என்று நாம் நிராகரித்து விட முடியாது. மறுத்துவிட முடியாது. அற்புதமான எழுத்தாளர்கள் அதில் இருந்திருக்கலாம். அதை எல்லாம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏன் அவசியம் இருக்கிறது? இது “பொதுவாக எல்லாம் படிக்க வேண்டும், எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்” என்ற நன்னெறி போதனை அல்ல. இது நடைமுறைக்கானது. உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்காக முன்னேற்றத்திற்காக நாம் பாடுபடுகிறோம் போராடுகிறோம் என்று சொன்னால் அதற்குரிய தகுதியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.”

  33. மருத்துவர் ருத்திரன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் :

    உங்கள் அபிமான எழுத்தாளரான ல.ச.ரா அவர்களில் படைப்புகளை பற்றி (முக்கியமாக அவரின் ‘அபிதா’ பற்றி) வினவு குழுவினர் ஒரு ‘literary criticism’ (அதாவது அவர்கள் பாணியில் ஒரு இலக்கிய விமர்சனம்) செய்து, அவற்றையும் சில பதிவுகளாகவும், பிறகு ஒரு சிறு நூலாக வெளியிட ஏற்பாடு செய்யும் படி வேண்டுகிறேன். அப்படி வெளியிடப்பட்டால், பல பிரதிகளை மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொள்வேன்.

    ல.ச.ரா ஒரு பூஸ்வா எழுத்தாளரா அல்லது பாட்டாளி வர்க எழுத்தாளரா என்றும் வினவு குழுவினரிடம் கேட்டு சொல்லுங்களேன். முக்கியமாக, இந்தியாவில் எதிர்காலத்தில் வினவு குழுவின் தலைமையில் செம்புரட்சி நடந்தால், பிறகு ல.ச.ராவின் படைப்புகள் தடை செய்யப்படுமா அல்லது இன்று போல தாரளமாக அனுமதிக்கப்படுமா என்றும் கேட்டு சொல்லுங்களேன்.

  34. Libertarian அவர்களின் வயிற்றெரிச்சலை உணர முடிகிறது.பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதியால் இவ்வளவு சி்றப்பான உரை நிகழ்த்த முடிந்துள்ளதே என்பதே அது.அது மட்டுமல்ல எழுத்தாள அறீவுஜீவிகளாக தங்களைக் கருதிக் கொள்ளும் பலரின் அற்ப்பத்தனங்களை தமிழகத்தில் ம.க.இ.க. சந்தியில் இழுத்து நிறுத்தியிருக்கிறது.இப்பின்னூட்டம் இடும் போது இரவு மணி 12.50 ரோட்டில் HAPPY NEW YEAR சத்தம் அலறுகி்றது.இளைஞர்கள் பைக்குகளில் பற்க்கிறார்கள்.ஆனால் இக்கொண்டாட்டங்களைப் புறம் தள்ளி என்னைப் போல் பின்னூட்டம் இடும் இளைஞர்களை ம.க.இ.க.உருவாக்கியது பேச்சினும் கடின சாதனை .தலைகீழாய் நின்றாலும் Libertarian வகையறாவால் செய்ய முடியாதது அது.என்ன செய்ய? வயிற்றெரிச்சல்தான் பட முடியும்.படுங்க…..2011லும் வயிற்றெரிச்சல் கூடத்தான் செய்யும்.கம்யுனிசத்தின் வளர்ச்சி தவிர்க்க இயலாதது.

  35. தோழரின் உரையை காதொளியில் கேற்கும்போது இருக்கும் அனுபவமே ஒரு புரச்சிகரமான அனுபவம். வெளியிடுவதற்கு நன்றி. நம் ஆய்வு மாணவர்களும் ஆசிரியர்களும் நிச்சயம் இதை படிக்க வேண்டும். சமூக அரசியல் முற்போக்கு இயக்கங்களில் இணைந்டிருப்போருக்கு இது ஒரு அடிப்படை பாடம். உரை பல முனைகளில் நமது அறிவு நிலையை கேள்விக்குள்ளாக்கி, இது வரை நீ என்ன செய்தாய் என கேர்க்கிறது, செயல்பட வழிகாட்டுகிறது. உண்மையாகவே, எனக்கு உறக்கம் கூட வரவில்லை மாணவனாக இருந்தும் கருத்தியல் ரீதியான தெளிதளுக்கு தொடர் உழைப்பு இடவில்லை என்ற அவமானத்தால். இன்னும் எப்படி சொல்வது என் மன உணர்வை என்று கூட தெரியவில்லை. இது ஒரு பாதுகாக்க படவேண்டிய பல முறை படித்து நம்மை சரி பார்த்து கொள்ள வேண்டிய ஆவணம். அச்சில் ஏற்றிய தோழர்களுக்கு நன்றி.

  36. மூளை ஊனம் குறித்த தகவல் முக்கியமானது, எனினும் அந்த கலாசாரப் பிரச்சினை குறித்து, உரை, ஆழமாக உள்ளே செல்லவில்லை என்றே எண்ணுகிறேன். தினத்தந்தி செய்திக்கும் டைம்ஸ் நவ செய்திக்கும் வித்தியாசம் உள்ளது. டைம்ஸ் நவ்வின் ஊடக அதர்மத்தை கண்டிக்கலாமே தவிர, அதன் விவாத மேடை மிக சிறப்பு.

  37. இது நூல்களைப்பற்றிய அதன் வாசிப்பனுபவத்தைப் பற்றிய எதை வாசிக்கவேண்டும் எப்படி வாசிக்கவேண்டும் என்பதைப் பற்றிய மையப்புள்ளியில் சுழலும் பேச்சாகத்தான் மருதய்யனின் இந்தப் பேச்சைக் கருதுகிறேன்.அவர் சார்ந்துள்ள இயக்கம், அவருக்குத் தாக்கம் ஏற்படுத்திய தலைவர்கள் ,அவர்களது நூல்கள் இவையெல்லாமே அவர் எடுத்துவைக்கும் வாதங்களுக்கு அவரின் வாசிப்பனுபவத்திலிருந்தும் அவர் உயர்வாகக் கருதும் மனிதர்களிடத்திலிருந்துமே சான்றுகளைத் தந்து செல்கிறார் என்ற கோணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.நல்லதொரு பேச்சாளரின் இயல்பு இதுவே. இன்றைய இளைஞர் சமுதாயம் எதைப்படிக்கிறது, அவர்கள் படிக்கும் படிப்பு அவர்களை என்னவாக மாற்றியிருக்கிறது என்பது பற்றியெல்லாம் மிக நுட்பமாகவும் ஆணித்தரமாகவும் பேசியிருக்கிறார் மருதய்யன். எனக்கு அவர் சார்ந்துள்ள இயக்கம் பற்றி கருத்து மாறுபாடுகள் இருக்கலாம்.இங்கே அதுவல்ல பிரச்சினை.ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசப்பட்ட மிகச்சிறந்த உரைகளில் இதுவும் ஒன்று என்பதாக மட்டுமே இதனை நான் புரிந்துகொள்கிறேன். வாழ்த்துக்கள் மருதய்யன்.

  38. நாடு கெட்டு குட்டிச்சுவராகிறது. பிள்ளைகள் டியூஷன் படிக்கின்றன. கம்ப்யூட்டர் வேலைக்கு போய் சம்பாதிக்கின்றன. சாயங்காலம் கிளப்புக்கு போனால் ஒரு எஸ் எம் எஸ் கூட பெற்றோருக்கு அனுப்புவதில்லை. எல்லாம் தினமலர்லே டாக்டர் ஷாலினி புட்டுப்புட்டு வச்சிருக்காங்க. இதையெல்லாம் தீர்க்க புரட்சி வந்து சூத்தாம்பட்டையிலே போட்டால்தான் தெரியும்…

    ‘தீப்பெட்டி பொட்டி ஒட்டி
    பொழைச்சு கெடந்ததெல்லாம் அப்போ –

    நாம கம்யூட்டர் பொட்டிதட்டி
    பாழாப்போறதெல்லாம் இப்ப -எப்ப?’

    என்று அவர் பாடும்போது கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.

    ஆனால் பெரிசுக்கே பெரிதாக ஏதும் வாசிப்பு இல்லை என்றுதான் தெரிகிறது. மேலும் சமூகத்தின் வளர்சிதை மாற்றம் பற்றி மார்க்ஸியம் முரணியக்க இயங்கியல் நோக்கில் சொன்னவற்றை எல்லாம் சொல்லப்போனால் வசவு தோழர்கள் பின்பக்க மணலை தட்டிக்கொண்டு எழுந்து சென்று விடுவார்கள். ஆகவே பொதுவாக மனசுக்குப்பட்டதைச் சொல்கிறது

    சமீப காலமாக பெரிசு சிற்றிதழ்களைக்கூட வாசிப்பதில்லை என்றும் தெரிகிறது. இலக்கியம் என்றால் ராணிமுத்து வாசிப்பு என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். என்னைப்பற்றியும் நாலு வார்த்தை சொல்லியிருக்கிறார். வரலாற்றில் இடமிருக்கிறது என இறும்பூது எய்தினேன். ஆனால் பெரிசிடம் என்னைப்பற்றி சொன்னவர்கள் நான் பேசுவதை தப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். பெரியவர்களை இப்படியா குழப்புவது? என்ன இருந்தாலும் புரட்சி நியாயம் என்று ஒன்று இருக்கத்தானே செய்கிறது?

    மகஇக என்ற மாபெரும் மக்கள் அமைப்பு எளியேனைப்பற்றி ஒரு நூல் வெளியிட்டு கௌரவித்திருக்கிறது. அதை வாங்கி வாசித்து என்னைப்பற்றி தெரிந்துகொண்டு என்னிடம் சொல்லவேண்டும் என நண்பர்களிடம் கோருகிறேன்

    பட்டையை கிளப்பும் ஜெயமோகன் http://www.jeyamohan.in/?p=11241

    • யாருய்யா அந்த எழுத்தாளர்! கிண்டலும் நக்கலும் தாண்டவமாடுது! இவரப்போயி சீரியஸான எழுத்தாளர் அப்படின்னுல்லாம் சொல்லி கிச்சு கிச்சு மூட்டாதீங்க!

      • ஜெயமோகனின் வலைப்பூவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. எனக்கு வெகு நாட்களாக ஒரு கேள்வி உண்டு. எதற்காக மார்க்ஸ் போன்ற சிறந்த சிந்தனைவாதி, இந்தியாவைப் பற்றியும் இந்தியர்களைப்பற்றியும் கேவலமாக சொல்லியிருக்கிறார் என்பதே அது. ஜெயமோகனின் வலைப்பூவில் அதற்கான விடை கிடைத்தது!

    • கேவலமா மார்க்ஸ் என்ன சென்னாரு?
      ஜெயமோகனைப் படிச்சி மார்க்ஸை சரியா புரிங்சுக்க பாக்கறதை விட புத்திசாலித்தனமான காரியம் ஏராளமா இருக்கே.

      • தோழரே, முன் முடிவுகளோடு யாரையும் படிக்க வேண்டிய அவசியம் தேவையில்லையே! அதே போல், உங்களுக்கு பிடிக்காத கருத்தை சொல்பவரை முற்றாக நிராகரிப்பதும் பண்பட்ட மனநிலை அல்ல.
        25 ஜுன் 1853-ல் ப்ரசுரிக்கப்பட்ட மார்க்ஸின் கடிதம் ஒன்று போதும், அவர் இந்தியர்களைப்பற்றியும் இந்தியாவைப் பற்றியும் எவ்வளவு கேவலமாகச்சொல்லியிருக்கிறார் என்று அறிய.
        வரலற்றை சாதாரனமாகப்படித்தவர்களுக்கே தெரியும், இந்திய கிராமங்கள் எப்படி தன்னிறைவு பெற்ற, கலை பண்பாட்டு பாய்ச்சல் நிகழ்த்திய, மையங்களாகத் திகழ்ந்தன என்பது. சாதிக் கொடுமை இருந்தது உண்மையே. ஆனால், 300 ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு வளர்ச்சி பெற்ற, பண்பாடு மிக்க கிராமங்கள் வேறு எந்த நாட்டிலாவது உண்டா என்று சொல்லுங்களேன்!

        ஒரு சில வாக்கியங்கள் உங்கள் பார்வைக்கு.
        These idyllic village-communities, inoffensive though they may
        appear, had always been the solid foundation of Oriental
        despotism, that they restrained the human mind within the
        smallest possible compass

        We must not forget the barbarian egotism which, concentrating
        on some miserable patch of land, had quietly witnessed the ruin
        of empires, the perpetration of unspeakable cruelties, the
        massacre of the population of large towns, with no other
        consideration bestowed upon them than on natural events, itself
        the helpless prey of any aggressor who deigned to notice it at all.

        “Undignified, stagnatory, and
        vegetative life”

        இவை எல்லாமே வெறுமனே கூகிள் தேடலில் சாதாரணமாகக் கிடைப்பவை.

        ஐரோப்பிய மன்னர்கள் 1000 வருடங்களில் பக்கத்து நாடுகளோடு சண்டையிட்டு உருவாக்க நினைத்த சாம்ராஜ்யங்கள், லட்சக்கணக்காண மக்களின் ரத்ததின் மேல் நடத்தப்பட்டன. ஆனால், அதைவிட பல மடங்கு பெரிய, அதிகமான குழுக்கள் சேர்ந்த்து மிகப்பெரிய சாம்ரஜ்யங்களை, ரத்தமின்றி உருவாக்கிய மண் நம்முடையது.

        அதனால் தான் சொல்கிறேன், மார்க்ஸ் போன்ற சிந்தனை வாதிகள் கூட அடி சறுக்கியிருக்கிறார்கள்.

      • எட்டர் வாடத்தியாரே சும்மா திட்டறீங்களெ ஒழிய கேல்விக்கிப் பதிலையே காணோமே!
        தப்பா சொல்லிட்டா யோக்கியமா ஒத்துக்கலாம். யோக்கியமா பேச முடியலேன்னா திட்டலாம்.

        திட்டறிங்க. என்ன பண்றது! திட்டிடுப் போங்க.

        • தமாசு, தமாசு! அண்ணாத்தே, திட்டினது நான் அல்ல! அதெல்லாம் மார்க்ஸ் இந்தியர்களைப் பற்றி சொன்னது!

        • ஒத்துக்கறேன்.
          நீங்க நல்லாவே தமாசு பண்ணறீங்க.
          இந்திய துணை கண்டத்துலே ரத்தமில்லாமே உருவான அம்மாம் பெரிய சாம்ராஜ்யம் எதுன்னு தயவுசெஞ்சு தமாசு பண்ணுவீங்களா?

  39. அடப்பாவிகளா, இன்னுமா இங்கு புரட்சி வரும்னு ஒரு கூட்டம் நம்பிட்டுஇருக்கு? புரட்சி வந்து உருப்பட்ட ஒரு நாட்ட காட்டுங்க பாப்போம்? எப்பொ புரட்சி வந்து பதவிய புடிச்சாலும், உடனடியா கை வைக்கிரது பத்திரிக்கை சுதந்திரம்தான். அதுக்கப்புரம் அவிங்க சொல்ரதுதான் நியுஸ்!
    இப்பொ நம்ம நாட்டில நடக்குரது எல்லாம் நல்லது என்று சொல்லமுடியாது. ஆனால், இந்த புரட்சி வேண்டும் அப்படின்னு சொல்ரவங்க கைல கொஞ்சம் அதிகாரத்த குடுத்து பாருங்களேன், அப்பறம் தெரியும் ‘குரங்கு கைல பூமாலை’ ணா என்னவென்று!சும்மா இவரு கைல மைக்க குடுத்ததுக்கே, நான் சொல்ரத மட்டும் நீ படினு திமிரா பேச ஆரம்பிசுட்டாரு!இந்த மாதிரி ஆட்களத்தான் மார்க்ஸ் ‘சர்வாதிகார வெறி கொண்ட போலி கம்யூனிஸ்ட்’ என்கிறார்.
    உங்கள மாதிரி ஆட்களுக்கு ஏழைகள் தேவை! அப்போதான் அவன் தலைல மிளகாய் அரைத்து பிழைப்பை ஓட்டிக்கலாம். தோழரோட பேச்சப் பார்த்தா அவரே ஒன்னும் படிச்ச மாதிரி தெரியலயே!
    வருஷத்துக்கு லட்ச கணக்கில படிச்சிட்டு வெளில வர்ரவனுக்கு உங்க புரட்சி சோறு போடாது! குறைந்த பட்சம் அவன் கைல இருக்க சோத்த தட்டி விடாதீங்க!

    • இப்போ ஜனங்களுக்கு யார் சொல்லறது நியூஸா இருக்கு?
      யார் சொல்லறது நியூஸா இருக்கணுங்கறீங்க?

      மார்க்ஸ் யாரப் பத்தி ‘சர்வாதிகார வெறி கொண்ட போலி கம்யூனிஸ்ட்’ ன்னு சொன்னாருன்னு கொஞ்சம் வெவரமா செல்லறீங்களா!
      இப்போ நீங்க சொல்லறது நமக்கு நியூஸா இருக்கு– அதான் கேக்கறேன்.

      • அதுவா, ரொம்ப சிம்பிள். தான் சொல்லுவதுதான் சரி, தனக்கு மட்டும்தான் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியும், தான் சொல்லுவதை ஏற்றுக்கொள்ளதவர்கள் எல்லாரும் ஃபாசிஸ்டுகள், என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருப்பவர் சர்வாதிகார மனப்போக்கு கொண்டவர். அதை 2 வரியில் சொல்லாமல் 10 பக்கத்திற்கு நீட்டி முழக்கி கம்யூனிச போர்வையில் சொல்பவர் போலி கம்யூனிஸ்ட்!

    • நீங்க ஏதோ சொன்னீங்க. அதெப்பத்தி நாங் கேட்ட கேள்விங்க:
      இப்போ ஜனங்களுக்கு யார் சொல்லறது நியூஸா இருக்கு?
      யார் சொல்லறது நியூஸா இருக்கணுங்கறீங்க?
      மார்க்ஸ் யாரப் பத்தி ‘சர்வாதிகார வெறி கொண்ட போலி கம்யூனிஸ்ட்’ ன்னு சொன்னாரு?

      சிம்பிளா பதில் சொன்னாப் போதுமா? கேட்டதுக்கு பதில் சொல்ல வாணாமா?
      வேறேதுக்கோ பதில் சொல்லறீங்களே!

      • மார்க்ஸ் சொன்ன ‘சமுதாயம் பரிணாம வளர்ச்சி பெறும்’ என்பதையெல்லாம் மறந்து ‘சில மனிதர்கள், தான் சரியென்று நினைப்பதை மற்றவர் மேல் வன்முறையாகத் திணிப்பது’ என்பதாக கம்யூனிசம் ‘பரிணாம வளர்ச்சி’ பெற்றாகிவிட்டது. அதனால், மற்றவர்களின் பேச்சு சுதந்திரத்தில் கையையொ, கத்தியையோ வைப்பதே கம்யூனிச தேவையாகி விட்டது.
        இதற்கப்புறமும், நியுஸ் இப்பொ யார் குடுக்குறா? கம்யூனிசம் வந்தா யார் குடுப்பா அப்படின்னு புரியலைன்னா, நம்ம மருதையன் சொன்னபடி கொஞ்சம் படிச்சிட்டு வாங்க தோழரே, பெறவு விவாதிக்கலாம்!

  40. மார்க்ஸ் கேனத்தனமாக கண்ட இந்தியா : http://www.jeyamohan.in/?p=8705 வசவு தோளர்கலே , அவசியம் படியுங்கள்,

    //எவ்வளவு கீழே? மார்க்ஸ் ஆசிய உற்பத்திமுறை [Asiatic mode of production (AMP)] என ஒன்றைப்பற்றி பேசியிருக்கிறார். இதைப்பற்றி விரிவான விவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பெரும்பாலும் ஆங்கில ஏகாதிபத்தியத்தினரின் குறிப்புகளை அப்படியே நம்பி மார்க்ஸ் இந்தியச்சூழலைப்பற்றிய முடிவுகளுக்கு வந்தார். அதன்படி அவரது கருத்தில் இந்தியாவில் நிலப்பிரபுத்துவமே கூட வரவில்லை. இந்தியா இருந்தது அதற்கும் பிற்பட்ட நிலையில்! இந்திய மக்களில் மிகப்பெரும்பகுதியினர் பழங்குடிகளாகவே இருந்தனர் என்கிறார் மார்க்ஸ்.

    அப்படியானால் எப்படி இந்தியாவில் அரசுகளும் மதங்களும், சிந்தனைகளும், கலைகளும் உருவாயின? அதை விளக்கவெ அவர் ஆசிய உற்பத்தி முறை என்ற கருதுகோளை உருவாக்கினார். அதன்படி பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வரும்போது இங்கே இருந்தவை விவசாயம், மேய்ச்சல் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்த மக்கள் வாழ்ந்த கிராமங்கள். இங்கே மிகச்சிறிய அளவில் தேவைக்கு ஏற்ப மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. கிராமங்கள் வணிகத்தாலும் அரசியல் தொடர்புகளாலும் பிணைக்கப்படவில்லை. ஆகவே அவை தனித்தீவுகள் போல பற்பல நூற்றாண்டுகளாக வளர்ச்சியில்லாமல் உறைந்து கிடந்தன்.

    இந்த கிராமங்களை சிறிய படைகள் வழியாக கொள்ளையடித்து நிதியை சேர்த்துக்கொள்ளும் சிறிய அதிகாரக்குழுக்கள் இருந்தன. இவர்கள் சிறு நகரங்களை உருவாக்கிக்கொண்டார்கள். இந்நகரங்களிலேயே மதங்களும் கலைகளும் இலக்கியங்களும் உருவாயின. இப்படி தேங்கி கிடந்த இந்தியாவில்தான் பிரிட்டிஷ் ஆட்சி வந்தது. அவர்கள் இந்திய கிராமங்களை வணிகம் மூலமும் ஆட்சி மூலமும் இணைத்தார்கள். அவர்கள் இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்தை கொண்டுவந்தார்கள். ஆகவே அவர்கள் இந்தியாவை முன்னேற்றிய சக்திகள்! – இதுதான் மார்க்ஸ் சொன்னது.

    உங்களுக்கு கொஞ்சமாவது தமிழக வரலாறு தெரிந்திருந்தால் ’இது என்ன பேத்தல்!’ என்று கூவிவிடுவீர்கள். இங்கே இருந்த மாபெரும் ஏரிகளையும் பாசனநிர்வாகத்தையும் பற்றி அடிப்படை அறிவுகூட இல்லாத ஒருவரால் எழுதப்பட்டது என்பீர்கள். ஆனால் இந்த ஆசிய உற்பத்தி முறை என்ற கருத்து மார்க்ஸ் சொன்னது என்பதனாலேயே முடிவான ஒன்றாக எடுத்துக்கொள்ளப்பட்டு ஐம்பதாண்டுக்காலம் இந்திய வரலாறும் இந்தியப்பண்பாடும் அதன் அடிப்படையில் நம் மார்க்ஸியர்களால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

    இன்று நூற்றுக்கணக்கான ஆய்வுகள் வந்துவிட்டன. பழைய இந்திய பொருளியல் அமைப்பு பற்றியும் , நிதி நிர்வாகம் பற்றியும் நீங்கள் வாசிகக் ஆரம்பித்தால் மலைமலையாக இருக்கின்றன நூல்கள். இங்கிருந்த கிராமப்பொருளியல் அமைப்பு பல்வேறு படையெடுப்புகளைச் சந்தித்தும்கூட சிதையாமல் இருந்தது என்பது வரலாறு. அவற்றில் பஞ்சம்தாங்கும் சமூகஅமைப்புகள் இருந்தன. பிரிட்டிஷாரின் ஒருங்கிணைந்த தொடர்ச்சியான சுரண்டல் மூலமே கிராமப்பொருளியல் அழிந்தது. பெரும் பஞ்சங்கள் வந்தன. அந்தப் பஞ்சங்களைப் பயன்படுத்தி இந்திய மக்களை அடிமைகளாக உலகமெங்கும் கொண்டுசென்று தோட்டத்தொழிலை உருவாக்கினர் பிரிட்டிஷார்.

    இங்கிருந்தது மேலை நிலப்பிரபுத்துவம் அல்ல. அந்த நிலப்பிரபுத்துவம் என்பது விவசாயிகளை முழுமையாக அடிமைகளாக வைத்திருந்து நிலப்பிரபுக்கள் மொத்த உபரியையும் சுரண்டி கொழுத்த அமைப்பு. இங்கிருந்தது சுதந்திர விவசாயிகளினாலான கிராம சமூகங்களின் கூட்டமைப்பு. இன்றும்கூட அந்த அமைப்புகள் நீடிக்கின்றன -சினிமாவில்கூட கேட்கிறோமே பதினெட்டுபட்டி என்று.

    அது ஐரோப்பிய நிலப்பிரபுத்துவத்தை விட பல மடங்கு பண்பட்டது. சீரான உபரிசேமிப்பு முறை கொண்டது. ஆகவே மேலான பண்பாட்டை உருவாக்கி நிலைநிறுத்தியது. நாமே கண்கூடாக பார்க்கக் கூடிய விஷயம், ஒரு சராசரி இந்தியக் கிராமம் என்பது வெறும் அடிமைகளின் தேங்கிப்போன முகாம் அல்ல. அதில் கல்விக்கு, கலைகளுக்கு, மதத்துக்கு, பொதுக்கொண்டாட்டங்களுக்கு எல்லாம் இடமிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கிராம அமைப்பு நொறுங்கும் வரை இலக்கியம், கலைகள், மருத்துவம், கைத்தொழில்கள், கோயில்சடங்குகள் அனைத்தையுமே கிராமசமூகம் மிக வெற்றிகரமாகப் பேணி வந்தது. இன்று பல்லாயிரம் ஆவணங்கள் மூலம் இதெல்லாம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    ஆக, மார்க்ஸ் கண்ட இந்தியா அவர் கற்பனைசெய்துகொண்ட ஒன்று. அவரது சொந்த சமூகப்பரிணாமவியலின்படி அவரும் அவரது சமூகமும் வளர்ந்து பரிணாமத்தின் உச்சியில் நின்றார்கள். மேலே செல்ல முயன்றுகொண்டிருந்தார்கள். கீழே குனிந்து நம்மை பார்த்தார் மார்க்ஸ். அவரது காலகட்டத்தில் கணிசமான ஐரோப்பிய சிந்தனையாளர்களிடம் இந்த ஐரோப்பியமைய நோக்கு இருந்தது. இப்போதும்கூட ஏராளமான சிந்தனையாளர்களிடம் அது இருக்கிறது. ஐரோப்பாவே உலகை வழிநடத்தும் என்ற எண்ணம்.

    என்ன சிக்கல் என்றால் நாம் அதை அப்படியே நம்பி நம் விசுவாசத்தைக் கொடுப்பதே. சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் இங்கே மார்க்ஸ் மேற்கோள்தான் காட்டப்ப்பட்டிருக்கிறார்– ஆராயப்படவில்லை. விதிவிலக்காக மிகமிகச் சிலரையே நம்மால் சுட்டிக்காட்ட முடியும். ஓர் இஸ்லாமியர் குரானையும் கிறித்தவர் பைபிளையும் கொள்வது போலவே நம் மார்க்ஸியர் மூலதனத்தை கொள்கிறார்கள். சராசரி மார்க்ஸியர்க்ளுக்கும் வகாபிகளுக்கும் நம்பிக்கையைப் பொறுத்தவரை பெரிய வேறுபாடேதும் நம்மால் பார்க்கமுடிவதில்லை. //

  41. அந்த காலத்தில் ஜெயமோகன் தாத்தாவுக்கு மீசை இருந்தது..

    ஜெமோ ஆத்திரம் அடைவதற்கான அடிப்படை எதைப் படிக்கவேண்டும், ஏன் படிக்க வேண்டும், எதற்காகப் படிக்க வேண்டும் என்று தோழர் கூறியதிலிருக்கிறது அவருடைய பிரச்சனை. அதாவது எதார்த்த உலகில் இருந்து துண்டித்துக் கொண்டு, மக்களுக்கோ, சமூகத்திற்கோ சிறிதும் பயனளிக்காத குப்பைகளை, தனிமனித அற்ப விசயங்களை இலக்கியம் என்கிற பெயரில் எழுதிக் குவிப்பதை நாம் விமர்சிப்பதும், மற்றவர்களுக்கும் அவ்வாறு விமர்சிக்க கற்றுக்கொடுப்பதும், அதற்காக வாசிக்க வலியுறுத்துவதிலும் தான் இந்த ஆத்திரமும் காழ்ப்பும் அடங்கியிருக்கிறது. மொத்தத்தில் இப்படிப்பட்ட தத்துவ-இலக்கிய மேட்டிமைத்தனத்திலிருந்து உதயமாகும் காழ்ப்புணர்சி அறிவிழக்கச் செய்துவிடும் என்பதற்கு அவரது தரங்கெட்ட வசவுகளே சான்று.

    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12471&Itemid=263

  42. எட்டர் சாரு
    ‘கேவலமா’ மார்க்ஸ் ஒண்ணுமே சொல்லல்லியே. அவரு அப்ப புரிஞ்சிக்கிட விதமா சொன்னாரு.
    தேக்கம் (stagnation, vegetation)எங்கறதும் Oriental Despotism எங்கறதும் கேவலப் படுத்த்றதில்லே.
    அப்பறமா திருத்திக்கிட்டாரு. தப்பா சொல்லறதும் கேவலமா சொல்லறதும் வேறேன்னு ஒங்களுக்குப் புரியணுமே!

    ஜெயமோகனைப் படிச்சி மார்க்ஸை சரியா புரிங்சுக்க பாக்கறதை விட புத்திசாலித்தனமான காரியம் ஏராளமா இருக்கேன்னு சொல்லக் காரணமே அவரோட ஒளறலைப் படிச்சது தான்.

    • அண்ணே, தப்பா சொல்றதுக்கும் கேவலமா சொல்றதுக்கும் உள்ள வித்தியாசம் என்னங்கிற வார்த்தை விளையாட்டெல்லாம் எங்களுக்குத்தேவையில்லை. நீங்கள் செயமோகனைப் பத்தி சொல்வது தப்பாகவும், கேவலமாகவும் உள்ளது! நான் செயமோகனைப் படித்ததே, இந்த் தளத்தில் இருந்த சுட்டியிலிருந்து தான். அ
      வர் அற்பமானவராகவும் இருக்கலாம், பெரிய சிந்தனைவாதியாகவும் இருக்கலாம்- எனக்குத் தேவையானது, நேர்மையான வரலற்றுப் பிழையற்ற கருத்துக்கள் கிடைக்கிறதா என்பதே!

      நீங்கள் சொல்லியிருப்பது போல் மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி தவறான் கருத்தைக் கொண்டிருந்தார் என்றுதான் செயமோகன் அண்ணச்சியும் சொல்லியிருப்பதாக நியாபகம். அவர் சொல்வது உளறல் என்று வைத்துக்கொண்டால், அப்பொ நீங்கள் சொல்வது?

    • கேவலமாச் சொல்லறுதுக்கு பொதுவா ஒரு தப்பான நோக்கம் இருக்கும்.
      தப்பான நோக்கம் இல்லாமலே கூட, ஒரு வெசயத்தே யாருமே தப்பா சொல்லலாம்.

      தப்பா சொல்லறது கேவலமா சொல்லறதாகாதுங்கறதுக்கு ஒரு சின்ன உதாரணம்.
      நீங்க நேர்மையானவர்னு் நான் சொல்லறது தப்பா இருந்தாலும், அது உங்களே கேவலமா சொல்லறதாகி விடாது இல்லியா.

      ஒங்க அண்ணாச்சி ஸ்டோரிலே பாதியத் தான் (அதுவும் தப்பான நோக்கம் காட்டி) சொன்னாரு.
      அதுலியே அவரோட யோக்கியம் புரியலியா?

      • அண்ணச்சி, எந்த பாதியை சொல்லியிருக்கிறார்? சொல்லாமல் விட்ட பாதி எது? அவரோட தப்பான நோக்கம் என்ன?

      • நைனா,
        ஒங்க அண்ணச்சியோட தப்பான நோக்கங்களப பத்தி இன்னும் நான் ஒண்ணுமே சொல்லல்லியே.
        இந்துத்துவத்தோட க்ளீனான நோக்கம்லியா அவருக்கு.

        மார்க்ஸு கேவலமா சொன்னாருன்னு மார்க்ஸுக்கு நோக்கம் காமிச்சு அவுரு அழுதிருந்தாரே. அதெத் தாஞ் சொன்னேன்.

        மார்க்ஸு மொதல்லே இந்தியாவப் பத்தி கெடச்ச தகவலெ வெளங்கின வெதமா சொன்னாரு.
        அப்பறம் “Asiatic modes of production” பத்தி ரொம்ப எழுதியிருந்தாரு.
        அதெல்லாம் ஒங்க அண்ணச்சி கண்ணுலெ படுமா? பட்டாலுந்தான் சொல்லுவாரா?
        அதெத் தான் சொன்னேன்.

        கொஞ்சம் அக்கறெயா வெஜாரிச்சுப் பாத்திங்கண்ண ரொம்பப் பேரு நெதானமா அறிவோட யோக்கியமா எழுதி இருக்காங்க.
        படிச்சுப் பாருங்க ஒண்ணும் கெட்டுப் போயிடாது.
        .
        ஒதாரணமா,
        Aijaz Ahmad: In Theory: Classes, Nations, Literatures.
        Verso. 1992.
        நேரம் பத்தல்லேன்னா, அஞ்சாவது அத்தியாயத்தே மட்டும் பாருங்க.

        அய்ஜாஸு முஸ்லிம்ன்னுட்டு பாக்காமே விடாதீங்க.

        • உங்களுக்கு ஜெயமோகனைப் பிடித்தால் எனக்கென்ன, பிடிக்கவிட்டால் எனெக்கென்ன? அவரைப் பிடிக்கிதா இல்லையா என்று நானே அவரின் மற்ற படைப்புக்களைப் படித்துதான் முடிவுசெய்ய வேண்டும்.
          இங்கே நாம் மார்க்ஸைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம், அதைப்பற்றியே பேசுவோமே! மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி மிகத்தவறான ஆதாரமற்ற கருத்துக்களை மனம் போன போக்கில் சொல்லியிருக்கிறார். அதைபற்றி விவாதிக்கும் போது, எதற்கு தனி மனித வழிபாடு? எதற்காக அவரைக் கடவுளாக்குகிறீர்கள்? உங்களுக்கும் குஷ்புவுக்கு கோயில் கட்டியவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
          மார்க்ஸ் இந்தியாவைப் பற்றியும் இந்தியர்களைப் பற்றியும் மிகவும் தரக்குறைவாக சொல்லியிருப்பது, ஊர் உலகத்திற்கே தெரியும்! இதைப்பற்றி யார் எழுதினாலும், வரலாற்றுப் பிழையின்றி, தனிப்பட்ட காழ்ப்பின்றி எழுதினால் எல்லாருக்கும் நல்லதே! அதை விட்டுவிட்டு, ஒருவர் இந்து, அதனால், அவரைப் படிக்கமாட்டேன், இன்னொருவர் முஸ்லிம், அதனால் அவரைப் படிப்பேன், என்று சொல்வதெல்லாம்- சின்னபிள்ளதனமால்ல இருக்கு!

          • அய்யா ஆர்.எஸ்.எஸ் அம்பிகளா,

            விவரம் தெரிந்தவர்கள் அமைதியாக இருப்பதினாலேயே உங்களைப் போன்ற குருவி மண்டைகளின் கூச்சல் கொஞ்சமும் சகிக்க முடியாமல் உள்ளது. ஒருவன் புத்திசாலியா, அறிவாளியா என்பதை அவனே முடிவு செய்து கொண்டால் அவன்தான் முட்டாள் என்பதை தங்களது மேலான கவனத்திதற்கு கொண்டுவருகிறோம்.

            உங்க குருஜி எழுதிய அபத்தைத்தை படித்தோம். மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி கூறியதாக அதன் சாரமாக ஜெயமோகன் ஜி எழதியிருப்பது முதலில் உண்மையல்ல. ஜெயமோகன்ஜி எழுதியிருப்பது அவரது முட்டாள்தனமான புரிதல்தான். அவரது விருப்பத்திற்கேற்ப மார்க்சை திரித்தலும், புரட்டலும் செய்திருக்கிறார்.

            இந்தியாவில் நிலவிய நிலவுடைமை முறை என்று மார்க்ஸ் குறிப்பிடும் “ஆசிய சொத்துடமை முறை” என்றால் என்ன, அதற்கும் ஐரோப்பிய நிலப்பிரபுத்தவத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன, இங்கு நிலத்தில் தனியுடமை இல்லாமல் சாதிரீதியான குழுக்களும், ஆளும் வர்க்கமும் அதன் வருவாயை பங்கிட்டுக் கொண்டது எப்படி, விஷ்ணுவுக்கும், அவனது பிரதிநிதியான மன்னனுக்கும் சொந்தமான நிலத்தில் பாசன முறை என்பது அரசனே செய்ததால் ஏற்பட்ட தேக்கம் என்ன, இந்த உற்பத்தி முறைக்கும் இதற்கு பொருத்தமாக சாதி, வருண அமைப்பு எப்படி இறுகி நிலைபெற்றது. கிராமங்களிலேயே பிறந்து தொழில், வாழ்க்கை, மணம், மதம் அத்தனையும் சாதி ரீதியாக முடிவு செய்யப்பட்டு அங்கேயே மரித்துப் போன இந்த வாழ்க்கை பன்னெடுங்காலம் எப்படி இந்தியாவை தேக்க நிலையில் வைத்திருந்த்து, ஆங்கிலேயர் இங்கே நிலைபெற்றதும் இந்த முறை எப்படி ஒழிந்து நிலத்தில் தனியுடமை வந்தது, இப்படி முக்கியமான விசயங்கள் குறித்து உங்களுக்கோ, உங்கள் ஜிக்கோ அடிப்படையான அறிவு கூட இல்லை.

            எனவே உங்க ஜியின் உளறலை பிட்டு பிட்டு வைப்பதற்கு ரொம்பவும் மெனக்கெட வேண்டியதில்லை. கூடிய விரைவில் அது குறித்து எழுதுகிறோம். அது வரை உங்கள முட்டாள் குருகுலத்தில் நீங்கள் அறிவாளிகளா வலம் வருவது குறித்து ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

        • மார்க்ஸ் Asiatic modes of production பற்றி சொல்லியிருப்பதை, நான் நேரடி ஆங்கில மொழிபெயற்பிலேயே படித்துள்ளேன்! இந்திய, சீன கிராமங்களைப் பற்றி மேலோட்டமாகத் தெரிந்தவர்கள் கூட வாய் விட்டு சிரிப்பார்கள்!

          ஆச்சர்யம் என்னவென்றால், ஜெயமோகனும் இதைப்பற்றி சரியாகவே எழுதி உள்ளார். இதற்குப்பிறகும் மார்க்ஸ் எழுதியதுதான் சரி, இந்திய கிராமங்கள் மற்றவர்களை கொள்ளையடித்து வாழ்ந்ததால் தான் வளமாக இருந்தன, என்பதை நம்பி ஏமார, நீங்கள் தயாராக இருக்கலாம். மன்னிக்கவும், நாங்கள் தயாராக இல்லை!

          • என்னது இந்திய கிராமத்தை பத்தி உங்களுக்கு தெரியுமா, ஏங்க இப்படி காமடி பண்றீங்க? ஒருவேளை பாரதிராஜா படத்தை பாத்துட்டு தெரியும்னு சொல்றீங்களா? இல்லை இணையத்தில தேடிப்பாத்து படிச்சுட்டு தெரியும்னு சொல்றீங்களா?

            கிராமமும் தெரியாது, காரல் மார்க்ஸ் சொன்னதும் புரியாதுங்கறதை கொஞ்சம் பெரிய மனது பண்ணி புரிஞ்சுக்கங்களேன்!

      • நேரடியாக விவாததுக்கு வந்ததற்கு நன்றி. முதலில் நான் பிறப்பிலோ, வளர்ப்பிலோ இந்து அல்லன். ஜெயமோகனைப் படித்ததும் இங்கிருக்கும் சுட்டியிலிருந்துதான். எனவே, என்னைப்பற்றி நீங்கள் கொண்டிருக்கும் முன் முடிவுகள் தவறு.

        1. நீங்கள் வலுவாகச் சொல்லும்படி இந்தியா ஒரு வளர்ச்சியற்ற தேங்கிய குட்டையாகவே இருந்தது என்று வைத்துக்கொண்டால், வரலாற்று உண்மைகளை என்ன செய்வது?
        உலகப்புகழ் பெற்ற ஆங்கஸ் மாடிசன், அவரது The World Economy: A Millennial Perspective நூலில், இந்தியாவைப் பற்றி சொல்லியிருப்பது உங்கள் பார்வைக்கு.
        கி.பி 1-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 11-ம் நூற்றாண்டு வரையில் உலகத்தின் மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தது இந்தியா. (அப்பொழுது இந்தியா ஒரு பகுதியே, நாடு இல்லை).
        ராஜராஜ சோழன் காலத்தில் கூட உலகத்தின் மொத்த உற்பத்தியில் 28% இந்தியாவின் பங்கு! (1000-ம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழன் கட்டிய தஞ்சைக் கோயிலே உலகத்தின் புர்ஜ் கலீஃபா!)
        ஆங்கிலேயர்கள், இந்தியாவில் வலுவாகக் காலூன்றுவதற்கு முன்பு (18-ம் நூற்றாண்டு), இந்தியா மீண்டும் உலகத்தின் முதன்மையான மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தது என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று.

        இதற்கெல்லாம், என்ன சொல்லப்போகிறீர்கள்? மாடிசன் ஒரு கிறித்தவர், அவருக்கு மீசையில்லை அதனால் அவர் சொல்லியிருப்பது தவறு என்று, வழக்கமான பாணியில் எதாவது சொல்வீர்களோ?

        2. ஆமா, இந்திய கிராமத்தைப் பற்றி தெரியும் என்று சொன்னால் எதற்கு இவ்வளவு அதிர்ச்சி? நான் கிராமத்தில், வசித்திருக்கிறேன், படித்திருக்கிறேன், ஆராய்ச்சி செய்பவர்களுடன் விவாத்தித்திருக்கிறேன். நீங்கள் எப்படி? கால இயந்திரத்தின் மீதேறி, அந்தக் காலத்திற்கே சென்று பார்ப்பீரோ?
        பார்ப்பது, படிப்பது, புரிவது, விவாதிப்பது, உணர்வது- இவையல்லாமல், நீங்கள் எப்படி இந்திய கிராமங்களைப் புரிந்துகொள்வீர்கள் என்று கொஞ்சம் விளக்கினால் நல்லது.

        மற்றபடி, உலகமே குருவி மண்டை, நாந்தான் பித்திசாலி என்று நினைத்துக்கொண்டிருந்தால், இதைப்படிப்பவர்களுக்குத் தெரியும் யாருக்கு குருவி மண்டை என்று!

  43. Corporal Zero , நாங்க பொழிப்புரை எல்லாம் கேக்கலை , மார்க்ஸ் எனும் உங்க கடவுள் அல்லது தேவதூதன் ஏன்யா தப்பா சொன்னாருன்னுதான் கேக்கறோம் .

    ஜெயமோகன் ராஜராஜசோழன் ( http://www.jeyamohan.in/?p=8711 ) கட்டுரையில் சொன்னது போல – 1000 வருடம் முன்பு எந்த நாட்டுல இவ்வளவு முன்னேறிய அரசு இருந்தது ?

    • ஆமிசன்,
      நா பதில் சொல்லறப்படியா நீங்க எங்கிட்டே ஒண்ணுமே கேக்கல்லியே.
      அப்பறம் எதுக்கு சாரு காம்ப்ளைன்ட் பண்ணறிங்க?

      எட்டர் சாரு என்னமோ கேட்டாரு. சொன்னேன்.
      அப்பறம் ஆளையே காணம்.

      நா ஒரு பொழிப்புரையும் தரல்லியே.
      மார்க்ஸு என்ன சொன்னாருன்னு வெவரமா தெரிஞ்சுக்கணும்னா பிரயோஜனமா ஒரு ரெபரன்ஸு குடுத்தேன் அம்புட்டுந்தா.

      1000 வருசம் முந்தி எந்த நாட்டுலே எந்த மாதிரி அரசுன்னு ஒங்க வாத்தியாரு கிட்டயே கேட்டு சொல்லுங்களேன்!
      அப்ப எங்க எது இருந்துச்சுன்னு தெரிஞ்சா சொல்லறேன்.

    • ஆமிசன் சார்,
      1000 வருசம் முந்தி எந்த நாட்டுலேன்னு ஒங்க வாத்தியாரு எத சொன்னாருன்னு இப்பத் தா ஞாபகம் வந்திரிச்சு.

      அண்ணாச்சி அவரோட விஷ்ணுபுரத்த இல்லியா சொல்லியிருக்காரு. அந்த மாதிரி ஒரு நாட்டே, ஒரு அரசே, 100,000 வருசம் முந்தின்னாலும் 100,000 பிந்தின்னாலும் யாராலுமே காட்ட முடியுமா?

      தோல்வியெ ஒத்துக்கறேன் சாமி. ஆள வுடுங்க!

    • தயவு செஞ்சி நீங்க சொல்லர எணைப்பே யாரு என்ன கருமாதிக்காவப் பாக்கோணுமுன்னாவது சொல்லித் தொலையுங்களேன்!

    • சீக்கு பிடிச்ச கோழிக்கு பேதி போனா எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்குறதுக்கு அந்த இணைப்ப பாக்கணும் போல.

  44. திரு. ஆர்.வி. என்பவருக்கு பதிலளித்த திருவாளர். ஜெ. நிலப்பிரபுவத்துவ சமூகத்தை விடவும் முதலாளித்துவ சமூகத்தை பிற்போக்கானது என்று தோழர். மருதையன் தனது பேச்சில் கூறியிருப்பது போன்ற ஒரு உருவகத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார். அவரின் அக்கட்டுரையைப் படித்தபொழுது மிகவும் பரிதாபகரமாக இருந்தது. வினவு கூறியிருப்பது போலவே திரு. ஜெமோ. இப்பதிவை ஒரு இணைய வாசிப்பாக மேய்ந்திருப்பார் போலும். இதிலிருந்து அவர் என்ன புரிந்துகொண்டார், இதற்கு லிபடேரியன்! அளித்துள்ள லிங்கில் அவர் என்ன எதிர்வினையாற்றியிருக்கிறார் என்பது அவருக்கும் அவர் சார்ந்த லிபடேரியனுக்குமே வெளிச்சம்.

  45. டியூஷன் கூடாது, ஆங்கில மீடியம் கூடாது, கம்ப்யூட்டர் படிப்பு கூடாது…சரி, ஒரு இளைஞன் புரட்சி என்று உங்கள் பின்னால் வந்தால் என்ன ஆகும்?

    போலீஸ் எஃப்.ஐ.ஆர். போட்டால் அரசு வேலையும் கிடைக்காது, தனியார் வேலையும் கிடைக்காது. ஓட்டுக் கட்சின்னாலும் ஏதாவது கான்ட்ராக்ட் எடுத்துப் பொழைச்சுக்குவான். உங்கிட்ட அதுவும் இல்ல. நிஜ மாவோயிஸ்டுன்னா, முதலாலிகளிடம் மாமூல் வாங்குவான். இங்க அதுக்கும் வழியில்ல.

    நீங்க உண்டியல் குலுக்கி அதில தர்ற பணத்த வச்சி அவன் எப்படிய்யா வாழ்க்கையை ஓட்டுவான்? பிள்ளைய கார்ப்பரேஷன் பள்ளியில சேர்த்து, சத்துணவு கியூவில நிக்க அனுப்பனுமா? இப்ப உங்க ஆளுக என்ன பன்றான்? பார்ட்-டைம் புரட்சிக்காரர்களா? நல்ல ஜோக்!

  46. நன்று தோழர்களே!, இது போன்ற உரைகளுக்கு அதன் ஆடியோ பதிவினை கேட்க தரலாம். ஆன்லைன்இல் கேட்கும் வசதியுடன் இருந்தால் எளிமையாக இருக்கும்.

Leave a Reply to Ravikumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க