privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாபதிவர்களை அழவைத்த 'தல'யின் மட்டன் பிரியாணி 'மனிதாபிமானம்!'

பதிவர்களை அழவைத்த ‘தல’யின் மட்டன் பிரியாணி ‘மனிதாபிமானம்!’

-

தொலைக்காட்சித் தொடர்களை விடாது பார்த்து தமிழகத்துப் பெண்கள் அழுவாச்சிகளாக மாறிவிட்டார்கள் என்பதாய் சலித்துக் கொள்வார்கள் நமது ‘அறிஞர்’ பெருமக்கள். அவர்களில் நமது பதிவுலகப் பிரபலங்களும் அடக்கம். ‘பா’ வரிசைப்படங்கள் காலத்திலிருந்து சன் டிவியின் பிரைம் டைம் சித்தி வரை இந்த அழுகை சென்டிமெண்ட் வசூலை அள்ளுகிறது என்றும் அவர்கள் ‘ஆய்வு’ செய்வது வழக்கம். இதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் உண்மையை பேசுபவர்கள் அந்த உண்மைக்கு பொருத்தமாக இருக்கிறார்களா என்பது நம் எளிய கேள்வி.

அதை கூகிள் பஸ்ஸில் போட்ட ஒரு பதிவு மூலம் உரைத்துப் பார்க்கும் வசதியை கிழக்கு பதிப்பகம் அதிபர் பத்ரி நமக்கு இலவசமாகவே வழங்கியிருக்கிறார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குப் போன பத்ரிக்கு ஒரு மேக்கப்மேன் அலங்காரம் செய்கிறார். அவரிடம் உரையாடுகிறார் பத்ரி. நிரந்தரமில்லாத வருமானத்தையும் வாழ்க்கையையும் கொண்ட சினிமா உலகை விட்டு விலகி வந்தவர் அந்த முகப்பூச்சுக் கலைஞர். ரஜினி, கமல், விக்ரம், அஜித் என பல பிரபலங்களிடம் வேலை பார்த்திருக்கிறார். அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது குறிப்பாக அஜித்தை மட்டும் மனதாரப் பாராட்டுகிறார். என்ன காரணம்?

பின்னி மில் ஆலையில் ஷூட்டிங் நடக்கும் போது தூசி படிந்த தொழிலாளியிடம் சுத்தமான தனது கையால் கை குலுக்கியது, புரடக்ஷன் சாப்பாடு சரியில்லை எனத் தெரிந்து தொழிலாளர்களுக்கு தானே வீட்டிலிருந்து பொருட்கள் கொண்டு வந்து தன் கைப்பட மட்டன் பிரியாணி செய்து போட்டது (அரிசி ஒரு கிலோ ரூ. 190), அதையும் புரடக்ஷன் ஆட்கள் லவட்டிக்கொள்வதை கேள்விப்பட்டு, அடுத்த நாள் முதல் அனைவரும் ஒரு சேர அமர்ந்து சாப்பிட ஏற்பாடு செய்தது, ஷூட்டிங் முடியும் வரை அஜித்தே எல்லா நாட்களுக்கும் மட்டன் பிரியாணி செய்து போட்டது, பின்னர் ஹைதராபாத் செல்லும் போது சமையலுக்கு வசதி இல்லை என்பதால் ஒரு பிரபல ஓட்டலிலிருந்து பிரியாணி ஏற்பாடு செய்து தினமும் அளித்தது, தீபாவளி, பொங்கலுக்கு கால் பவுனில் மோதிரம் போட்டது, 3000 ரூபாய்க்கு பட்டாசு, ரொக்கமாக ரூ.500 என எல்லா தொழிலாளிகளுக்கும் கொடுத்தது, உடல் சுகவீனம் என்றால் தேவைக்கேற்ப உதவி செய்வது, எல்லா தொழிலாளிகளையும் அண்ணே என்று மரியாதையுடன் விளிப்பது……….

மனிதனை மதிப்பதில் மற்ற நடிகர்கள் மோசமில்லை என்றாலும் அஜித் போல இல்லை என்று அந்த முகப்பூச்சுக் கலைஞர் பாராட்டுப் பத்திரம் தருகிறார். இவையனைத்தும் விளம்பரமின்றி தற்செயலாக நடந்திருப்பதாக வேறு தெரிகிறது என்கிறார்கள் சிலர்.

போதாதா? நமது பதிவுலக பெருமக்கள் அதிலும் மனிதாபிமானத்தை வறண்ட பாலையில் இருக்கும் சோலையாக வழிபடுபவர்கள் தாங்களும் சளைத்தவர்களில்லை என்று தலயை போற்றும் வழிபாட்டில் உண்டு இல்லை என்று பின்னி எடுத்து விட்டார்கள்.

பத்ரியின் இந்த பதிவை 42 பதிவர்கள் லைக்கியிருக்க, 21 பதிவர்கள் பகிர்ந்து பாராட்டியிருக்கிறார்கள். பத்ரியின் வலைப்பதிவிலும் தனது உணர்ச்சிகளை பதிவு செய்திருக்கின்றனர். கருவளையத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் அந்த மூகப்பூச்சுக் கலைஞர் ஈடுபடும் போது பேசிய உரையாடல் இந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்று ”தோற்கடிக்க முடியாதவன்” என இப்பதிவுக்கு பெயரிட்ட பத்ரிக்கு தெரியாமல் இருந்திருக்காது. ஆனாலும் இதற்காகவே தன்னை சினிமா ப்ரியன், தலயின் ரசிகன் என்று அஜித்தின் இரசிகர்கள் நம்புவது உண்மையில்லையென சற்று வெட்கத்துடன் என்றாலும் வெளிப்படையாகவே மறுக்கிறார் பத்ரி. என்ன இருந்தாலும் இரசிகர்கள் எனப்படுவோர் பெஞ்ச் டிக்கெட் வர்க்கம்தானே? ஒரு சினிமா நடிகனின் இரசிகன் என்ற அடையாளத்தை நமது அறிஞர் பெருமக்கள் மலிவாகவே கருதுவதை தவறு என்று சொல்ல முடியாதில்லையா?

திரையில் காட்டும் வித்தைகளை வைத்து ஒரு நடிகனை ஒரு இரசிகன் வழிபடுகிறான் என்றால் திரைக்கு வெளியே அந்த நடிகனின் நல்லனவற்றை வியந்தோதும் திருப்பணியை இதே அறிஞர் பெருமக்கள்தான் செய்கிறார்கள் என்றால் அது முரணில்லையா? வெளிப்படையான இரசிகர்களை விட மர்மத்தோடு மறைந்திருந்து பார்த்து இரசித்து அதை மனிதாபிமான காக்டெயிலில் கலந்து பொது வெளியில் முன்வைக்கும் போது இவர்களும் இரசிகர்கள் என்று அழைத்தால் என்ன குடிமுழுகிப் போகும்?

அஜித் வெறுமனே பிரியாணி போட்டார் என்றால் பத்ரி அதை புறந்தள்ளியிருப்பார். ஆனால் வீட்டிலிருந்தே பொருட்களை கொண்டு வந்து தன் கைப்படவே சமைத்து, படப்பிடிப்பு நாட்கள் முழுவதற்கும் பிரியாணி போட்டார் என்பதில்தான் பத்ரி அடித்து செல்லப்பட்ட இரகசியம் புதைந்திருக்கிறது.

தமிழக ‘அறிவுலகமே’ வியந்து போற்றும் ஒரு பதிப்பகத்தை நடத்தும் ஒரு அறிஞரே தலயின் மனிதாபிமான வெள்ளத்தில் முக்குளிக்கும் போது மற்ற பதிவர்கள் எம்மாத்திரம்? அவர்களெல்லாம் பதிவர்கள், பத்திரிகையாளர்கள், பிறகு எழுத்தாளர்கள், இறுதியில் சினிமா என்று நீண்ட ஏணிப்படியில் இன்பமான இம்சையூட்டும் கனவுடன் ஏறிக் கொண்டிருப்பவர்கள். தலயைப் போல ஒரு வள்ளலை சந்தித்தால் அவர்களும் மூச்சுவாங்கும் ஏணியை தாண்டி முடித்து மாடி வீட்டில் செட்டிலாகிவிடலாம் அல்லவா?

mutton_biryani 700 pix

எது மனிதாபிமானம்? தொழிலாளர்களுக்கு செய்ய வேண்டிய உதவி எது? தான தருமத்துக்கு அளவு கோல் என்ன?

இதற்கு நாம் மெனக்கெட வேண்டிய அவசியமில்லை. பத்ரியின் பதிவிலேயே பதில் இருக்கிறது. அந்த முகப்பூச்சுக் கலைஞர் சினிமாவை தலைமுழுகி தொலைகாட்சி வேலைக்கு ஏன் வந்தார்?

“சினிமால ஹீரோ, கேமராமேன், டைரெக்டர் இப்படி கொஞ்சம் பேருக்கு மட்டும்தான் சார் பணம். மத்தவங்களுக்கு, தினசரி பேட்டா இல்லாட்டி வாழ்க்கை ஓடாது சார். அதுவும் பேட்டாகூடக் கட்டாயமாக் கிடைக்கும்னு சொல்லமுடியாது. குடும்பம்னு வந்தாச்சு சார், இனிமேயும் சினிமால லோல்பட முடியாதுன்னு விட்டுட்டேன்.”

இந்த வரிகளை கட்டுடைத்தோ, உற்றுப் பார்த்தோ, உட்கார்ந்து யோசித்தாலோ இல்லை போகிற போக்கில் பார்த்தால் கூட மேற்கண்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

ஆனால் இந்த வரிகளை பத்ரியும் சரி, பத்ரி போட்ட பதிவால் மனிதாபிமான ஆட்டம் போட்டவர்களுக்கும் சரி ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. புறங்கையால் தள்ளிவிட்டு நேரே பிரியாணி மேட்டருக்கு போய்விட்டார்கள்.

முப்பது வருடங்கள் சினிமா உலகில் கை வலிக்க மேக்கப் போட்ட அந்த கலைஞனுக்கு அல்லது தொழிலாளிக்கு நிர்ணயிக்கப்பட்ட தினசரி பேட்டா கூட உத்திரவாதமில்லை. இவ்வளவிற்கும் அவர் பிரபலமான அனைத்து தமிழ் ஹீரோக்களுக்கும் வேலை செய்திருக்கிறார். இறுதியில் இங்கே நீடித்தால் குடும்பத்தை பராமரிக்க முடியாது என்று தொலைக்காட்சிக்கு மாறிவிட்டார். எனில் அவர் இத்தனை வருடங்கள் ஆற்றிய பணிக்கு என்ன பயன்? என்னதான் பலன்?

இதை ஒரு ஹீரோவாவது ஒரு பேச்சுக்காகவாவது கண்டித்திருப்பார்களா? அல்லது ஒரு அறிக்கைதான் விட்டிருப்பார்களா?

சிநேகா, பிரசன்னா காதல் திருமணமாக நடக்கப் போகிறது என்பதை தினமணியின் வைத்தி மாமா முதல், தினமலரின் அந்துமணி மாமா வரை தலைப்புச் செய்திகளில் கொண்டாடுவதை கண்டிருப்பீர்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமது ஊதியம் அதாவது தினசரி பேட்டா உயர்த்தப்படாத நிலையில் போராடப் போவதாக பெப்சி அதாவது தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் அறிவித்திருந்ததை எத்தனை பேர் அறிவீர்கள்?

கோடி கோடியாக சுருட்டும் எந்த ஹீரோவாவது தங்களது கெட்டுப் போகும் உடலை, திரையில் பிரிஜ்ஜில் வைத்த ஃபிரஷ்ஷான தக்காளி போல காட்டுவதற்கு, தங்களது உடலை வதைக்கும் லைட்மேனுக்கோ, சண்டை நடிகர்களுக்கோ, துணை நடிகர்களுக்கோ, முகப்பூச்சு கலைஞர்களுக்கோ குரல் கொடுத்தார்களா? தொழிலாளர்களின் சம்பளத்தை நியாயமாக உயர்த்தாமல் நான் நடிக்கமாட்டேன் என்று தலயோ, தளபதியோ, உலக நாயகனோ, சூப்பரோ பேசினார்களா? இல்லை அவர்கள் ஏன் பேசவில்லை என்று பதிவுலகம்தான் துள்ளிக் குதித்ததா? சினிமாத் தொழிலாளர்களின் துயரத்தை நேரில் அறிந்த அண்ணன் உண்மைத்தமிழன் கூட, புவனேஸ்வரியின் ஒரு கோடி ரூபாய் வராக் கடன் குறித்து கவலைப்படுபவர், தொழிலாளிகளுக்காக ஒரு நீண்ட பதிவு வேண்டாம், ஒரு  குறும்பதிவு கூட போடவில்லையே?

அடுத்த நாள் மலமாக சிதறப்போகும் ஒரு மட்டன் பிரியாணிக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா? கூச்சமாக இல்லை? ஷூட்டிங்கில் தல போட்ட பிரியாணியை முழுங்கி விட்டு வீட்டில் தனது குடும்பத்தினர் கஞ்சி குடிப்பதற்கு பேட்டா வந்தால்தான் முடியும் என்ற நிலையில் எந்த தொழிலாளி அந்த மணமணக்கும் பிரியாணியை மகிழ்ச்சியுடன் முழுங்க முடியும்?

களை பறிக்கும் பெண் விவசாயத் தொழிலாளிக்கோ, இல்லை நாற்று நடும் ஆண் தொழிலாளிக்கோ அன்றாடக் கூலியை ஒரு சிறுவிவசாயி அன்றே கொடுத்து விடுகிறார். அவரும் அவருக்கு முடிந்தபடி தேநீர், வடை, சாப்பாடு என்று தொழிலாளிகளுக்கு அளிக்கிறார். ஆனால் ஒரு சிறு விவசாயிக்கு இருக்கும் நேர்மை கூட கோடிகளில் புரளும் இந்த சினிமா கயவாளிகளுக்கு இல்லையே?

அன்றாடம் உழைத்தாலும் அதற்கென்ற கூலி வராது என்ற நிலைதானே அந்த முகப்பூச்சுக் கலைஞரை, சினிமா உலகை விட்டே வெளியேறச் செய்திருக்கிறது. அந்த சினிமா உலகில் சில கோடிகளை சம்பளமாக வாங்கும் அஜித் இல்லையா? அவரும் அதற்கு காரணமில்லையா? கேட்டால் அதற்கு அவர் என்ன செய்வார், அதெல்லாம் தயாரிப்பாளரது பிரச்சினை என்று நமது புத்திசாலி பதிவர்கள் கேட்பார்கள். அதையும் பார்த்து விடுவோம்.

“ஒரு திரைப்படத்தின் தயாரிப்புச் செலவில் கதாநாயகன், நாயகி மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் சம்பளம் சுமார் 30 சதவீதம்; இயக்குநருக்கு 10 சதவீதம்; தயாரிப்பு செலவு 50 சதவீதம்; தொழிலாளிகளின் அனைவரின் சம்பளம் 10 சதவீதம் – இதுதான் உத்தேசமாக தமிழ் சினிமா ஒன்றின் தயாரிப்புச் செலவு என்று கூறப்படுகிறது.”

“கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நட்சத்திரங்களும், நட்சத்திர இயக்குநர்களும் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளத் தயாராக இல்லை; கங்காருவை முத்தமிடுவதற்காக ஆஸ்திரேலேயாவிற்கும், ரங்க ராட்டினம் சுற்றுவதற்காக அமெரிக்காவுக்கும் ‘அவுட்டோர்’ சென்று காசை அழிப்பதை நிறுத்த இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தயாராக இல்லை.”

இருந்தாலும் தயாரிப்புச் செலவை குறைக்க வேண்டும், வெட்டியாக செலவழித்த பணத்திற்கு இலாபம் பார்க்க வேண்டும். என்ன செய்கிறார்கள்? இலாபத்திற்கு இரசிகர்கள் தலையில் கை வைக்கிறார்கள். ரிலீசாகும் புதிய படத்தின் டிக்கெட்டிற்கு என்ன விலை வேண்டுமானாலும் வைக்கலாம் என்று அரசு என்றோ அறிவித்து விட்டது. இதற்கு மேலும் முதல் ஒரு வாரத்திற்கு திரையரங்க உரிமையாளர்களே பிளாக்கில் ஆள் வைத்து 500, 1000 என்று விற்பனை செய்கிறார்கள். இதன்படிதான் மங்காத்தாவோ, ஏழாம் அறிவோ, எந்திரனோ முதல் பத்து நாட்களில் கணிசமாக இலாபத்தை எடுத்து விடுகின்றது.

ஒரு வேளை எனது படம் அரசு நிர்ணயித்த கட்டணத்தில்தான் ஓட வேண்டும் என்று அஜித் அறிவித்து அமல்படுத்தினார் என்றால் மங்காத்தா தமிழகம் முழுவதும் உள்ள எல்லா திரையரங்குகளிலும் நூறுநாட்கள் ஓடினாலும் போட்ட காசை எடுக்க முடியாது. அதன்படி தலயின் வருமானம் என்பது இரசிகர்களை பிக்பாக்கட் அடித்து சம்பாதித்ததுதான். அது ஒரு இரத்தப் பணம். அந்தப் பணத்தில்தான் அவர் தனது படங்களில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு பிரியாணி செய்து போடுகிறார். இந்த பிரியாணி அவரே கைப்பட செய்திருந்தாலும் அதன் செலவு என்னவோ அவர் வழிப்பறி செய்ததுதான்.

இனி தயாரிப்புச் செலவை குறைக்க வேண்டுமென்றால் இந்தக் கயவாளிகள் தொழிலாளிகளின் தலையில் கை வைக்கிறார்கள். இன்று தமிழ் சினிமாவில் வேலை செய்யும் தொழிலாளிக்கு ஒரு கொத்தனார் அல்லது பெயிண்டரின் சம்பளம் கூடக் கிடையாது. அப்படியே ஒரு சினிமாவிற்கு வேலை செய்யச் சென்றாலும் அந்த பேட்டா கிடைக்கும் என்ற நிச்சயம் கிடையாது. ஆக திரைப்படத் தயாரிப்பின் பத்து சதவீதம்தான் தொழிலாளிகளுக்குச் செல்கிறது என்றாலும் அதைக்கூட தருவதற்கு இந்த முதலைகளுக்கு மனமில்லை. ஆனால் இந்த முதலைகளுக்காக கண்ணீர் வடிப்பதற்கு பதிவுலகில் பஞ்சமில்லை.

எனில் நமது மனிதாபிமானம் எதன்பால் இருக்க வேண்டும்? பேட்டா  கூலி குறித்தா, மட்டன் பிரியாணி குறித்தா?

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் வள்ளல் கதைகள் குறித்து எம்.ஜி.ஆர் தொட்டு விஜயகாந்த் வரை ஏராளமுண்டு. ராமாவரம் தோட்டத்தில் புரட்சித் தலைவர் போடாத விருந்தா, சாப்பிடாத ஆட்களா? விஜயகாந்த் கொடுக்காத அயர்னிங் மிஷினா, மூன்று சக்கர வண்டியா? இல்லை அகரம் பவுண்டேஷனுக்கு அழைத்தால் ஸ்விட்சுடு ஆஃப் (ஆதாரம் அண்ணன் உண்மைத் தமிழன்) என்று வந்தாலும் சூர்யாவின் வள்ளல்தனத்தை வியக்காத பதிவர்களா? எழுதாத பத்திரிகையாளர்களா? யாரிடம் கதை விடுகிறீர்கள்?

கோடிகளில் புரளும் நட்சத்திரங்கள் சில ஆயிரங்களை விட்டெறிவதை, அவர்களது கைகளுக்குத் தெரியாத தருமம், விளம்பர நோக்கமற்ற உதவி என்று ஆயிரத்தெட்டு முறை இந்தக்கதைகளை கேட்டிருந்தாலும், இன்று ஏதோ அஜித் மட்டும் விளம்பரமில்லாமல் பிரியாணி செய்து போடுகிறார் என்று குதூகலிக்கிறார்களே? ஒரு மொக்கை மனிதாபிமானத்தை பாராட்டும் கருத்து கூட அப்படியே அட்சரம் மாறாமல் அதே தரமான மொக்கையுடன் இருப்பதை என்னவென்று சொல்ல?

சினிமாவில் சம்பாதிப்பது என்பது ஒரு சூதாட்டத்தில் ஜாக்பாட் அடிப்பதற்கு ஒப்பானது. அதில் இழந்தவர்கள் இருப்பது போல சுருட்டியவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்தைப் பொறுத்து இந்தச் சுருட்டலை தயாரிப்பாளர்களோ இல்லை அவர்களால் திட்டமிட்டு உருவாக்கப்படும் நட்சத்திரங்களோ, விநியோகஸ்தர்களோ, திரையரங்க உரிமையாளர்களோ, பைனான்சு கொடுக்கும் சேட்டுக்களோ அள்ளிக் கொள்கிறார்கள். அள்ளிய கோடிகளில் சில ஆயிரங்களை கிள்ளி எறிவதுதான் இந்த விளம்பரமற்ற வள்ளல் குணத்திற்கு சான்றாக வியந்தோதப்படுகிறது.

இதன் மறுபக்க நாணயமாகத்தான் சினிமா தொழிலாளர்கள் வர்க்க உணர்வற்ற அடிமைகளாக காலம் தள்ளுகிறார்கள். முதலில் அவர்களை தொழிலாளர்கள் என்று வழமையான பொருளில் அழைக்க முடியாது. அது ஒரு உதிரியான வேலை, உத்திரவாதமற்ற ஊதியம், கம்பெனிகளைப் பொறுத்து நல்ல சாப்பாடு இல்லையென்றால் மோசமான சாப்பாடு, என்று உதிரிப்பாட்டாளி வர்க்கத்திற்குரிய நிலைமைகளே அவர்களின் பணிச்சூழலில் நிலவுகின்றன. அவர்களை ஒரு தொழிலாளி வர்க்கம் என்ற முறையில் அணிதிரட்டுவதும், உணரவைப்பதும், அமைப்பாக்குவதும் சிரமம்.

1950களுக்கு பிறகு ஒளிப்பதிவாளர் நிமாய் கோஷ், இசையமைப்பாளர் எம்.பி சீனிவாசன் போன்ற தலைவர்கள் அவர்களை அமைப்பாக்கி போராடினார்கள். அப்போது அவர்களை ஒழிப்பதற்கு ஏவி.எம் முதலான முதலாளிகள் துடித்ததும் வரலாறு. அந்த வகையில் குறைந்த பட்ச உரிமைகளையாவது பெற்றுத்தரும் அமைப்பாகத்தான் பெப்சி உருவெடுத்தது. அதுவும் இப்போது அம்மா, அய்யா ஆட்களின் தயவில் ஏதாவது கிடைக்காதா என்ற அவல நிலையில் காலம் தள்ளுகிறது.

1997-ஆம் ஆண்டு அவர்களது ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற பிரச்சினை வந்த போது பெப்சி தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தார்கள். முதலாளி, தொழிலாளி பிரச்சினையை படைப்பாளிகள் என்ற போர்வைக்குள் நின்று கொண்டு திசைதிருப்பும் வேலையை முதலாளிகளான பாலச்சந்தர், பாரதிராஜா போன்றோர் செய்தனர். அப்போது ம.க.இ.க சார்பாக இதில் தலையிட்டு படைப்பாளி முகமூடியில் இருக்கும் முதலாளிகளை தோலுரித்து தீவிர பிரச்சாரம் செய்தோம். பெப்சி தலைவர்களை சந்தித்து ஆதரவை தெரிவித்தோம். அவர்களும் உண்மையான சினிமா உலகையும், அதில் அல்லல்படும் தொழிலாளர்களின் கதைகளையும் விரிவாக எடுத்துச் சொன்னார்கள்.

அதே ஆண்டு ஆகஸ்டு 6-ம் தேதி சென்னை கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் எதிரே தொழிலாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக கோடம்பாக்கம், வடபழனி பகுதிகளில் உள்ள சினிமா தொழிலாளர் குடியிருப்புகளில் விரிவான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அந்தக் கூட்டத்திற்கு கிட்டத்தட்ட 5000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வந்தனர். கூட்டத்தில் தோழர்கள் பேசும் போதும், கலைக்குழுத் தோழர்கள் பாடும் போதும் விசில் சத்தம் அலை அலையாய் வந்தது இப்போதும் நினைவில் நிற்கிறது.

படைப்பாளிகளான முதலாளிகளின் யோக்கியதையை தோலுரித்து ரூ.2 விலையில் ஒரு சிறு வெளியீடு கொண்டு வந்து கிட்டத்தட்ட 10,000 பிரதிகள் தொழிலாளிகளிடம் விற்பனை செய்யப்பட்டன (வினவிலும் விரைவில் வெளியிடுகிறோம்). கூட்டம் முடிந்ததும் துணை நடிகைகள், ஏனைய தொழிலாளர்கள், பெப்சி நிர்வாகிகள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்ததும் நினைவுக்கு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக அவர்களே நடத்திய கூட்டங்களிலெல்லாம் எமது கருத்துக்கள் அவர்களது கருத்துக்களாக உணர்ந்து பேசப்பட்டன.

எனினும் இதற்கு மேல் இந்தத் தொழிலாளர்களை அமைப்பாக்குவதும், போராடவைப்பதும் சாத்தியமில்லை. ஏற்கனவே குறிப்பிட்டபடி நிலையில்லாத சூழலில் காலம் தள்ளும் அவர்களை ஒரு தொழிற்சாலை தொழிலாளி போல உணரவைப்பது கடினமான ஒன்று.

இந்தப் பின்னணியில்தான்  தமக்கு பேட்டா வழங்காத சூழலை எதிர்த்து பேச முடியாத அந்த தொழிலாளி தனக்கு மட்டன் பிரியாணி போட்ட தலயின் மனிதாபிமானத்தை பாராட்டுவதை கணக்கில் கொள்ளவேண்டும். இது போராட இயலாத ஒரு அடிமையின் அவல நிலை.

வர்க்கம் என்ற முறையில் அணிதிரண்டு சினிமா முதலாளிகளை எதிர்கொள்வதற்கு நிமாய்கோஷ், சீனிவாசன் போன்ற தலைவர்கள் இன்று இல்லை. இருப்பவர்களெல்லாம் அ.தி.மு.க, தி.மு.கவின் பினாமிகளாகவும், குறிப்பிட்ட அளவு முதலாளிகளாகவும் இருக்கிறார்கள். இது போக அரசிடம் வீடுகட்ட இடம் வாங்குவது, இதர சலுகைகள் வாங்குவது என்பதாகத்தான் அவர்களது சிந்தனை இருக்கிறது. நம்மைச் சுரண்டும் முதலாளிகளிடம் போராடிப் பெறுவது தமது உரிமை என்ற சிந்தனை அங்கே இல்லை.

இதனால் இவர்களை கைவிட வேண்டுமென்று பொருளில்லை. ஆனால் அவர்களாகவே இந்தச் சுரண்டலை உணராத வரை, நாம் வெளியிலிருந்து என்னதான் உதவி செய்தாலும் அதனால் பெரிய பலனில்லை. அதே நேரம் திட்டவட்டமான பணிச்சூழல், ஊதியம், என்ற நிலைமை வரும்போது அங்கே நிச்சயம் உணர்வு பெற்ற தொழிலாளிகளும், தொழிலாளிகளின் தலைவர்களும் உருவாவார்கள்.

ஏவி.ஏம் கம்பெனியில் சைவச்சாப்பாடு நன்றாக இருக்கும், கவிதாலாயா கம்பெனியில் பால்பாயாசம் சுவையாக இருக்கும், படப்படிப்பு முடிந்த பிறகு ரஜினி எல்லோருக்கும் சட்டை எடுத்துக் கொடுத்தார், கமலஹாசன் பேன்ட் வாங்கிக் கொடுத்தார், அஜித் பீஸ் உள்ள மட்டன் பிரியாணி போட்டார் என்று தொழிலாளிகள் பேசுவது ஏனென்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் சினிமா உலகில் தொழிலாளிகள் உணர்வற்று அடிமைகளாக இருப்பதற்கு இத்தகைய சினிமாக் கம்பெனி கலாச்சாரங்கள் காரணமென்பதையும் நாம் அறியவேண்டும். பிரியாணியைத் தூக்கி எறிந்து பேட்டாவிற்காக போராடும் நிலை வரும்போது அவர்களது இந்த சீரழிவு கலாச்சாரம் அழியும்.

ஆனால் தொழிலாளிகள் கூட என்றாவது ஒரு நாள் திருந்துவார்கள். ஆனானப்பட்ட நுகர்வு கலாச்சாரத்தில் மூழ்கிக் குளித்த அமெரிக்க மக்களே திருந்தவில்லையா என்ன? அதே நேரம் பத்ரியோ இல்லை பதிவர்களோ இந்த மட்டன் பிரியாணி மனிதாபிமானத்திலிருந்து திருந்துவார்கள் என்பதற்கு உத்திரவாதம் இருக்கிறதா? தெரியவில்லை!

பத்ரிக்கு முக அலங்காரம் செய்த அந்த தொழிலாளி சினிமா உலகை விட்டு துரத்தப்பட்ட நிகழ்வு எதுவும் நமது பதிவர்களுக்கு துயரமாக தெரியவில்லை. ஆனால் அந்தத் துயரத்திற்கு காரணமான உலகைச் சேர்ந்த ஒரு நடிகன் பிரியாணி போட்டது மட்டும் மாபெரும் மனிதாபிமானமாகத் தெரிகிறது என்றால் “நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்?”. (தத்துவ உபயம்: தமிழ்ப் பதிவர்கள்).

  1. இந்த கொடுமைய எங்க போய் சொல்ல?இவர் ஒட்டு போட க்யூவில் நிற்பதாக ஒரு போட்டோவை எடுத்து வைத்துக்கொண்டு செய்யும் இம்சைக்கு அளவில்லை!இவர்தான் மாமனைதனாம்(நாமெல்லாம் மாமா மனிதனோ?).இவர் ஏன் உள்ளாட்சி தேர்தலுக்கு ஒட்டு போட க்யூவில் நிற்கவில்லை?யாரவது கேட்டனரா?ஒட்டு போடுவது தனி மனித விஷயம் என்றாலும் இவர் அதை தனது பப்ளிசிட்டிக்கு பயன்படுத்தி கொண்டது கொடுமை!இவரையும் நம்பி தமிழக மக்கள் பின்னால் ஓடுவது இன்னொரு ரஜினி ரசிகன் கதையாகிவிடுமோ என்ற ஐயம உண்டாகிறது!ஓவர் பிள்டப்பே இவர் தாரக மந்திரம்!சிம்பிள் மனிதன் போன்ற வார்த்தைகளை வைத்து ஜாலம் செய்வார்!மக்களை ஓட்ட மொட்டை அடிப்பார் தனது பேணக் பெலன்சை உயர்த்துவார்!முட்டாள் சனம!

    • அவர் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடவில்லை என்று நேரில் சென்று பர்ர்த்தீரா? அவர் தான் தன்னை படம் எடுத்து விளம்பரப்படுத்திக் கொண்டார் என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது? ஒரு மனிதன் எதை செய்தாலும் குற்றம் சொல்லும் உங்களைப் போன்றோர் சொல்லும் கருத்து தான் மிகவும் கீழ்த்தரமானது

  2. வினவு அஜித்தே நினைத்து பார்த்து இருக்க மாட்டார்.. நாம போட்ட பிரியாணி வினவு பதிவு வரைக்கு வரும் என்று 🙂

    கவுண்டமணி ஒரு படத்துல சொல்லுவாரு.. ஏன்டா அழுவுறே ன்னு கேட்டதுக்கு எனக்கு இந்த நிலைமையான்னு.. அது மாதிரி அஜித்!.. ஒரு பிரியாணி போட்டதுக்கு என்னை கொத்துக்கறி ஆக்கிட்டீங்களேயான்னு புலம்பி இருப்பாரு 😀

  3. முழுக்க படிக்கலை இன்னும்.. படிச்சவரைக்கும் பிடிச்சிருக்கு.. நல்ல கட்டுரை..

    //ஆனால் ஒரு சிறு விவசாயிக்கு இருக்கும் நேர்மை கூட //

    இதில் ”கூட” என்ற வார்த்தையை நீக்கலாமே? சிறு விவசாயி எப்போதும் நேர்மையானவன் தான். கூட என்று சொல்லும் அளவுக்கு அவ்வப்போது நேர்மையாளனாக மாறுபவன் இல்லை.

  4. “களை பறிக்கும் பெண் விவசாயத் தொழிலாளிக்கோ, இல்லை நாற்று நடும் ஆண் தொழிலாளிக்கோ அன்றாடக் கூலியை ஒரு சிறுவிவசாயி அன்றே கொடுத்து விடுகிறார். அவரும் அவருக்கு முடிந்தபடி தேநீர், வடை, சாப்பாடு என்று தொழிலாளிகளுக்கு அளிக்கிறார். ஆனால் ஒரு சிறு விவசாயிக்கு இருக்கும் நேர்மை கூட கோடிகளில் புரளும் இந்த சினிமா கயவாளிகளுக்கு இல்லையே?”

    Superb lines… And thanks to Sanjai Gandhi to make a note of the irrelevant line

  5. நீண்ட கட்டுரை எனினும் சலிப்பின்றி செல்கிறது. ஒவ்வொரு வரியிலும் சொல்ல வருவதை ஆணித்தரமாக வைக்கும் பிரயத்தனம் தெரிகிறது. நல்ல கட்டுரை.

  6. ஆண்டைங்க தீவாளி தீவாளிக்கு துணி எடுத்துக் குடுப்பாய்ங்க.
    அரசியல்வாதிங்க எலக்ஷனப்போ துண்டு போட்டு, கால்ல கூட விழுந்து கும்பிடுவாய்ங்க.
    கவருமெண்ட்டு கூட இலவசங்கள கேக்காமத்தானேய்யா கொடுக்குது?
    ஏன், சொதந்தரம் அன்னிக்கி முட்டாயி குடுக்கறாங்களே?
    ரஜினி கூட போனாப்போகுதுன்னு எப்பவாவது காவிரிக்காக கூவுராறா இல்லையா?
    சூரியா பலகை பலப்பம் குடுக்குறாரு…
    கூலி கம்மியாக் குடுத்தாலும், கம்பெனிங்க ஆய்தாபூஜைக்கி சுவிட்டு குடுக்குதுல்லே?
    ‘தலை’ய மட்டும் இந்த உருட்டு உருட்றீங்க?

  7. வினவு அண்ணே, ஃபெஃப்ஸி க்காக கமல் போராடி இருக்கிரார், காதலா காதலா படம் எடுக்கும் சமயத்தில். ஒட்டுமொத்த திரையுலகும் அவர்களின் சம்பளா உயர்வுக்கு எதிராக இருக்க, இவர் மட்டும் ஃபெஃப்சிக்கு ஆதரவாக இருந்தார். உங்களுக்கு யாரையாவது தெரிந்திருந்தால் கேட்டுப்பாருங்கள். அப்படி ஆதரித்ததால் படத்தை எடுக்கமுடியாமல் கஷ்டமும் பட்டார். பின்னர் ஒருவசியாக ஸ்ட்ரைக் முடிந்தது.

  8. அடுத்த நாள் மலமாக சிதறப்போகும் ஒரு மட்டன் பிரியாணிக்கு இத்தனை ஆர்ப்பாட்டன்னா?
    தமிழினத்தலைவரு டி.வி.ரூ1க்குஅரிசீபோட்டதுக்கு, அப்புறம்,ஆத்தா ரங்கநாயகி.மிகஸி.கிரைண்டர்,காற்றாடி.அரிசீ கொடுத்ததுக்கு அவரவர் ரசிகமகாமணிகள் எவ்வளவு துாக்கு துாக்கலாம். ஆர்ப்பாட்டம் பண்ணலாம்.

  9. enga…avaru [ajith]seiratha satham illama panraru…nenga enga ippdi kooovaringa….ungaluku pidikala…badrikku pidichiruku…eluthuraru…ajith helping tendency kondavar enbatharku niraya proof undu…urupadia ethachum eluthunga…

  10. சினிமா தொழிலாளர்களை விட மோசமான நிலையில் பல இதர பிரிவினர் உள்ளனர். உதாரணமாக ஓட்டல் பணியாளர்களை விட சினிமாவில் கேட்டரிங் துறையில் பணி புரியும் பரிமாறுபவர்கள் மிக அதிகம் சம்பளம் பெறுகின்றனர். அதனால் தான் சினிமா தொழிலாளர்கள் சங்கத்தில் சேர பல லச்சங்கள் அளிக்க பலரும் போட்டி போடுகின்றனர். ஆனால் 15 வருடங்களுக்கு முன்பு போல் இன்று வாய்புகள் குறைவு. திருட்டு டிவிடி போன்ற பல காரணிகளால, சினிமா தொழில் முன்பு போல் இல்லை. எனவே வேலை வாய்ப்புகள் குறைவாகிவிட்டன.

    ஆனால் ஒரு காலத்தில் ஒப்பனை தொழிலாளர்கள் நன்கு சம்பாதித்த காலமும் இருந்தது. இயக்குனர் பி.வாசுவின் தந்தை 50களில், 60களில் எம்.ஜி.ஆர் முதல் பலருக்கும் ஒப்பனை கலைஞர். அதில் சமபாத்தே பெரும் செல்வந்தர் ஆனார். படங்களை தயாரித்தார்.

    இதையெல்லாம் கணக்கில் எடுக்காமல் பேசினால் எப்படி ? அஜித்தின் மனிதாபிமானமே அப்ப கூடாதா என்ன ? என்ன செய்தாலும் அதை ‘மாறுபட்டே’ பார்க்கும் பார்வை தான் உங்களுக்கு. :))

    சங்கத்தில் உறுப்பினர் அல்லாத ஏழை தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை ஃபெஃப்சி தொழிலாளர்கள் நசுக்கும் முறை இன்றும் உள்ளது. சக தொழிலாளர்களின் மீது மனிதாபிமானம் இல்லாத சுயனலவாதிகள் என்று விதாண்டாவாதமாக பேச முயன்றால் எப்படி இருக்கும் ? அதே போல் தான் உள்ளது உங்கள் ‘பார்வை’ !

    • //அஜித்தின் மனிதாபிமானமே அப்ப கூடாதா என்ன ? //

      என்னா சாரே! ஒருத்தனுக்கு பிரியானி வாங்கி குடுக்குறது தான் மனிதாபிமானம் அப்புடிங்கற உங்க கொள்கைக்கு என்ன சொல்லுறது? பிரியானி வாங்கிக் குடுத்த அந்த ஆளு, அந்த பணியாளர்களுக்கு கஷ்டமறிந்து பணிநிரந்தரம், வருமானம் போன்றவற்றிற்காக போராடியிருந்தா பாராட்டலாம். அத விட்டுட்டு பிரியானிய பிச்சை மாதிரி போட்டது பெரிய மனிதாபிமானமா????????

      • யெல்லாத்க்துலயும் குத்த்ம் கண்டுபுடிக்கிறதையே வேலையா இருக்காதீங்க. யாருக்காவது பிரச்சனைன்னா அத பார்த்து பரிதாபப்படுறட்தே ஒரு மனிதாபிமாணம் தான்.நல்ல விசயத்தை பாராட்டுங்கன்னு உங்ககிட்ட கேக்கல…. அதை விமர்சனம் பண்றேன்னு சொல்லி மனசை புண்படுத்தாதீங்க… இப்படி தெருவ இறங்கி போராடுரது தான் மனிதாபிமானம்னு, சொல்லி புதுப் புது வரையரையெல்லாம் கொடுக்காதீங்க…. யார் யாரால எதை செய்ய முடியுமோ அதைத் தான் செய்ய முடியும்…..

    • ”என்ன செய்தாலும் அதை ‘மாறுபட்டே’ பார்க்கும் பார்வை தான் உங்களுக்கு. ”

      அடடே சுய விமர்சனமா.. பரவாயில்லையே…..

    • //சங்கத்தில் உறுப்பினர் அல்லாத ஏழை தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை ஃபெஃப்சி தொழிலாளர்கள் நசுக்கும் முறை இன்றும் உள்ளது. சக தொழிலாளர்களின் மீது மனிதாபிமானம் இல்லாத சுயனலவாதிகள் என்று விதாண்டாவாதமாக பேச முயன்றால் எப்படி இருக்கும் ? அதே போல் தான் உள்ளது உங்கள் ‘பார்வை’ !

      // நான் தினமலம் கட்டுரையிலேயே சொல்லல? ஆனைக்கு அர்ரம்னா, குதிரைக்கு குர்ரம்னு பேசுற அறிவாளி இவர்தான். அந்நியன் படத்துல அஞ்சு ருவா ஆட்டயப் போட்டா குத்தமானு கேட்டு அதை ஆ.ராசாவின் லட்சம் கோடியுடன் ஒப்பிடுவது, பார்க்குல கேட்டு போடாம போன வாட்ச்மேனின் குற்றத்தை குஜராத்தில் வயிறு கிழித்து முஸ்லீம் கர்ப்பினியை கொன்ற இந்துவெறியர்களுடன் ஒப்பிடுவது இப்படி இவரோட மாற்றுச் சிந்தனன அளவில்லாமல் பரந்துவிரிஞ்சி போகும். என்ன புரிஞ்சிக்கத்தான் நமக்கு அறிவு பத்தல. என்ன இருந்தாலும் அண்ணன் அண்ணந்தான்

  11. தாங்கள் அள்ளியதில் கொஞ்சம் கிள்ளிப் போடுவதைத்தான் தர்மம், மனிதாபிமானம் என பெயர் சூட்டி தங்களை வள்ளல்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். இது சுரண்டலை மறைக்கும் ஒரு உபாயமேயன்றி வேறல்ல.

    சிறந்த பதிவு. வினவுக்கு வாழ்த்துகள்!

    • அவர் ஒன்னும் ஆ.ராசா, மாதிரி எவனோ ஒருத்தனோட பணத்தை அள்ளி, எல்லாருக்கும் பிரியாணி, போடல. தான் சம்பாதிச்ச பணத்தை செலவு பண்ணித் தான் பிரியாணி போட்டார். என்ன அவர் சுரண்டிட்டார், அதை மறைக்கிறதுக்கு. அவரு கிட்ட என்ன குரை கண்டீங்க, இருந்தா அதை நானும் தெரிஞுக்கரேன்….ஒவ்வொரு விசயத்துலயும் ஏதாவது ஒரு குறை கண்டுபிடிக்கதீங்க…

  12. நடிப்புச் சுதேசிகள் என்று பாரதி சாடியது போன்று நம்முள் (பதிவர்கள்) ஒழிந்திருக்கும் போலி சமூக நல ஆர்வங்களை தோலுரித்துக் காட்டியிருக்கும் கட்டுரை.

    இதே போன்று, ‘பிளாஸ்டிக் பைகளினால் ஏற்படும் சுற்றுச் சூழல் கேட்டை எதிர்ப்பதன் மூலமும், லாரி டிரைவர்களை கண்டிப்பதன் மூலமும், போக்குவரத்து காவலர் லஞ்சம் வாங்குவதை சாடுவதன் மூலமும் நமது சமூக கடமையை ஆற்றி விட்டோம்’ என்று திருப்தி அடைந்து கொள்வதோடு நின்று விடாமல் ஆழமாக சிந்தித்து உண்மையான சமூகப் பொறுப்பை உணர்ந்து செயல்படத் தூண்டும் கட்டுரை.

    நன்றி.

    //அஜித்தின் மனிதாபிமானமே அப்ப கூடாதா என்ன ? என்ன செய்தாலும் அதை ‘மாறுபட்டே’ பார்க்கும் பார்வை தான் உங்களுக்கு.//

    எங்க வாடிக்கையாளர் ஒருவர் வெவ்வேறு சந்தரப்பங்களில் சொன்னது:

    “சப்ளையருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை முடிந்த மட்டும் இழுத்தடிப்பேன். அவருக்கு பண நெருக்கடி முட்டி, பணத்தேவையின் விளிம்பில் இருக்கும் போது வரவழைத்து பேசுவேன். அவர் கொடுத்த பொருளின் தரம் அளவு பற்றி நீண்ட வாதம் புரிந்து, முடிந்த அளவு குறைத்துக் கொடுப்பேன். அன்றைக்கு அவருக்கு இருக்கும் நெருக்கடியில் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு போய் விடுவார்”

    “என்னிடம் வேலை செய்பவர்களுக்கு சம்பளத்தை குறைத்துதான் நிர்ணயிப்பேன். ஆனால், அவர்களுக்கு ஏதாவது நெருக்கடி தேவை (சில ஆண்டுகளுக்கு ஒரு முறை) வரும் போது உடனடியாக பையிலிருந்து காசு எடுத்துக் கொடுத்து விடுவேன். அவர்களும் விசுவாசமாக இருப்பார்கள்”

    இப்படி நிறைய பணம் சம்பாதிப்பவர் அவர். மேலே சொன்னபடி தனது மனிதாபிமானத்தையும் திருப்பதிக்கு ஆண்டு தோறும் பல லட்சங்கள் காணிக்கை செலுத்தி தெய்வ பக்தியையும் நிலைநாட்டிக் கொண்டிருப்பவர்.

    உரிய சம்பளத்தை ஊதியர்களுக்கும், சரியான பணத்தை சப்ளையர்களுக்கும் கொடுத்து விட்டால், தருமத்துக்கு இவரிடம் அவர்கள் வந்து நிற்கவும் மாட்டார்கள். அப்படி தர்மம் செய்வதற்கு இவரிடம் பெரும் செல்வம் சேரவும் செய்யாது.

    அப்படி ஊரை அடித்து உலையில் போட்டு விட்டு, சில்லறை காசுகளை ‘மனிதாபிமானம்’ என்று சிதற விடுவதை மாறுபட்டுப் பார்க்க கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும்.

  13. //அப்படி ஊரை அடித்து உலையில் போட்டு விட்டு, சில்லறை காசுகளை ‘மனிதாபிமானம்’ என்று சிதற விடுவதை மாறுபட்டுப் பார்க்க கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும்.

    // இதுக்கு அதியமானோட பதில் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன் கொஞ்சம் பேதி ஸாரி பீதியாகியது

  14. //பிரியானி வாங்கிக் குடுத்த அந்த ஆளு, அந்த பணியாளர்களுக்கு கஷ்டமறிந்து பணிநிரந்தரம், வருமானம் போன்றவற்றிற்காக போராடியிருந்தா பாராட்டலாம்.///

    அஜித்தின் வேலையே ’நிரந்தரம்’ அல்ல. மேலும் சொந்த படம் எடுத்து, திவாலகவும் நிறைய வாய்ப்பு உள்ளது. சினிமா தொழிலில் அம்சங்கள் இவை. உலகெங்கிலும் தான்.

    எதோ இதுவாது செய்கிறாரே என்று பார்க்காமல், என்ன செய்தாலும் நொள்ளை சொல்வது ஒரு வகை மனநோய். பல இதர கதாநாயகர்கள் இது கூட செய்வதில்லை. எதையும் கண்டு கொள்வதில்லை. அவர்களை பற்றி ஒன்னும் சொல்ல மாட்டீக. யாராவது ஏதாவது கடுகளாவாவது முயன்றால் உடனே போட்டு தாக்குவது…

    நண்பர் மாசி : உங்க மனிதனேயத்தை பாராட்டுகிறேன். (நானும் இந்த விசியத்தில் உங்கள் மாதிரி தான் என்று உங்களுக்கே தெரியும்). ஆனால் wages and prices in a market economy are always determined by costs, supply Vs demand mismatches, and rate of increase in money supply ; all these are beyond any individual’s humaneness. these external factors can be modified to really help the workers only thru rational and real free market policies. and only thru that can more and more better paying jobs be created, price rice kept in check, poverty conquered. that is the economic history of the world. vague socialistic views and polices in India in the past had actually created misery and poverty more acute for many decades. and you are still wallowing in the overhangs of the this invalid ‘socialistic’ rhetoric..

    • //wages and prices in a market economy // ப்ரி மார்கெட் எக்கானமி அமைச்சரே. ப்ரியை விட்டுவிட்டீர்களே மங்குனி அமைச்சரே

      • வேண்டும் என்று தான் அந்த சொல்லை விட்டேன். இங்கு இன்னும் நிஜமான free market உருவாகவில்லை. ஏகப்பட்ட distortions (thru govt intervention and fiscal polices) இன்னும் தொடர்கின்றன.

        • பெரிய எழுத்தாளரா,நீங்க. தெரியாம ஒரு தப்பு வந்துடுச்சுன்னா சரி திருத்திக்கரேன்னு சொல்லுங்க. “கெளண்ட்டர்” கொடுக்கருதுக்காக, எதையெதையோ பேசாதீங்க. பேசுரது ரொம்ப சுலபம், அதை செய்ஞ்சு காட்டுரதுதான் கஷ்ட்டம். இந்த தலைப்புக்கே இட்கு பொருந்தும்.

    • //அஜித்தின் வேலையே ’நிரந்தரம்’ அல்ல. மேலும் சொந்த படம் எடுத்து, திவாலகவும் நிறைய வாய்ப்பு உள்ளது. சினிமா தொழிலில் அம்சங்கள் இவை. உலகெங்கிலும் தான்.

      // அஜித்து வேல மட்டுமா? உலக முதலாளித்துவமே நிரந்தரமில்லாம இருக்கும் போது அல்லாருக்கும் சோறூ போடுன்னு சொல்வது சரியா? அப்படி கேட்பது மனநோய்(மனிதநேயம் என்றூ வாசிக்காதீர்கள்) ஆகாதா?

      அஜித்துக்கு மட்டுமா வேலை நிரந்திமில்லை? மட்ட(சாராயம்)க் கம்ப்னி நடத்தி விமான சேவை நிறுவனத்தை மட்டயாக்கியுள்ள சாராய மல்லையா, அகில உலக சூதாட்டப் புலிகளாய் (ப்ரி மார்க்கெட் விதி இங்கு அப்ளை ஆகுமா?) பொறூக்கித் தின்னும் கஸ்ட ஜீவிகளான வாரன் பபட் வர்க்கங்கள் இவர்களெல்லாம் இந்த நிமிசம் வேலை போய்விட்டது என்றாலோ, அல்லது அவர்களின் தவறான முதலீடு நஸ்டம் ஆனாலோ சோத்துக்கு சிங்கி அடிக்கும் (வங்கிகளிடம் ஆட்டயப் போடுவோம் இருந்தாலும்) நிலையை எண்ணிப் பாராமல் கருணையின்றி பேசுகிறீர்களே?

      கோடி கோடியாய் சம்பாதித்து கொழுத்து போய் கிடக்கும் கும்பலுக்கு வாஞ்சையுடன் பரிததபம் பேசும் அதியமானின் மனிதாபிமானம் யாரை நோக்கி உள்ளது? மனிதாபிமானத்துக்கு வர்க்கம் உண்டென்பதற்கு அதியமான் ஒரு உதாரணம்

      • //கோடி கோடியாய் சம்பாதித்து கொழுத்து போய் கிடக்கும் கும்பலுக்கு வாஞ்சையுடன் பரிததபம் பேசும் அதியமானின் மனிதாபிமானம் யாரை நோக்கி உள்ளது?///

        மேலும் உளரல். அவர்கள் மீது ‘பரிதாபம்’ கொண்டு எல்லாம் பேசவில்லை. மேலும் திவாலாகும் தொழிலதிபகளுக்கு (மல்லையா போன்றவர்களுக்கு) அரசு, வரி பணத்தில் இருந்து உதவே கூடாது என்பது தான் சுதந்திர சந்தை பொருளாதார கொள்கை. தொழிலாளர்களுக்கு மிக அதிக நன்மை பயக்கும் அமைப்பு எதுவோ அதை தான் நாங்கள் முன்மொழிகிறோம். with proof from world economic history..

        அஜித் இருக்கட்டும். எத்தனையோ இதர சிறு கதாநாயகர்கள், சில படங்களோடு காணமல் போய், பின்னாட்களில் பெரும் துன்பம் அடைவது சகஜம். இது சினிமா உலகின் அமைப்பு. அதை அறிந்தே அத்தொழிலுக்கு அவர்கள் வருகிறார்கள். சும்மா புனைபெயரில் இஸ்டத்துக்கு பேச வேண்டாம். பதிலுக்கு உம்மோடு மல்லுக்கட்ட விருப்பமில்லை.

        கதாநாயர்கள், நாயகிகள், கேமிராமேன்கள், இயக்குனர்கள், கதாசிரியர்கள், தயாரிப்பாளர்கள், டிஸ்ட்ரிபூட்டர்கள் என தொழிலாளர்கள் அல்லது அனைவருக்கும் எதுவும் இந்த துறையில் நிரந்தரம் இல்லை. எனவே சும்மா ஓட்ட வேண்டாம்.

    • // vague socialistic views and polices in India in the past had actually created misery and poverty more acute for many decades. and you are still wallowing in the overhangs of the this invalid ‘socialistic’ rhetoric..

      // கண்ணு முன்னாடி கவுந்து கிடக்குற உலக முதலாளீத்துவத்த இங்க யாராச்சும் அதியமானுக்கு சுட்டிக் காடுங்கள். உடனே அவர் சொல்லுவார் அவை உண்மை முதலாளீத்துவம் இல்லைனு. அப்புறம் ரெண்டு மூனு நாடுகள உண்மை முதா நாடுன்னு சொல்லி நமக்கு கொடுப்பார். அங்குள்ளா அயோக்கித்தனங்களை அம்பலப்படுத்தினால் இன்னொரு ரெண்டு நாடு கொடுப்பார். உன்னும் முடியவில்லை என்றால் ஒரெ ரெண்டு வாரம் லீவி போட்டுவிட்டு சிந்திக்க சென்று விடுவார்.

      முதலாளித்துவம் வந்து ஆச்சு சில நூற்றாண்டுகள், இன்னும் உண்மை முதாவே எங்க இருக்குன்னு அதியமானுக்கு தெரியல (இல்லாத கடவுளையும், ஜோசியத்தில் இல்லாத அறிவியலையும் இன்றூ வரை இவர் தேடிக் கொண்டிருபப்வர்தானே). இந்த யோக்யதையில சோசலிசத்தை பத்தி கதை அடிக்கிறத மட்டும் இந்த நேர்மையாளார் நிப்பாட்டிய பாடில்லை. அது சரி உலக ஜீவராசிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இயல்பு. இந்த மானுக்கு இப்படி ஒரு இயல்பு

      • // உடனே அவர் சொல்லுவார் அவை உண்மை முதலாளீத்துவம் இல்லைனு. அப்புறம் ரெண்டு மூனு நாடுகள உண்மை முதா நாடுன்னு சொல்லி நமக்கு கொடுப்பார். ///

        ரொம்ப புத்திசாலித்தனமாக பேசறாதா நினைப்பா ? சோவியத் யூனியன் வீழ்ச்சை காட்டி கம்யூனிசம் தோற்றுவிட்டது என்று யாராவது சொன்னால், உடனே தூய கம்யூனிசம் உலகில் எங்கு உருவாகவே இல்லை. சோவியத் யூனியன் சமூக ஏகாதிபத்தியமாக திரிந்துவிட்டது என்று நீங்க மட்டும் பேசுவீக. ஆதே பாணியில் தூய சந்தை பொருளாதாரம் இன்னும் எங்கும் வரவேயில்லை என்று நான் பேசினால் குதர்க்கம் பேசுவீக. நல்ல கதை. 200 வருடங்களுக்கு முன்பு உருவானது crude form of capitalism with no liberal democratic basis. மார்கஸ் அதை தான் கண்டு தனது கோட்பாடுகளை உருவாக்கினார். இரண்டாம் உலகப்போருக்கு பின் தான் ஓரளாவு சரியான பாணி சந்தை பொருளாதாரம் (ஓரளவுக்கு தான்) உருவானது. லிபரல் ஜனனாயகமும் பரவியது. அதுவரை ஏகாதிபத்திய காலனியாதிக்கம் மிக அதிகம் இருந்தது.

        //அங்குள்ளா அயோக்கித்தனங்களை அம்பலப்படுத்தினால் இன்னொரு ரெண்டு நாடு கொடுப்பார். ////

        சும்மா உளர வேண்டாம். no nation or system is 100 % perfect. குறைபாடுகளே இல்லாத அமைப்பு சாத்தியமே இல்லை. நீங்க மாற்றாக வைக்கும் அமைப்பு பற்றி பேசத் தயாரா ? நடை முறையில் அது என்னவாக இருந்தது என்பதை பற்றி பேசவே தயாராகவர்கள் நீங்க.

        capitalism (or whatever that goes under this name) is imperfect, yes. but so far man has not invented a better alternative.

    • என்னா அண்ணே! அவங்கள பிச்சைக் காரர்களா ஆக்குறத சரின்னு பெசுறீங்க. அஜீத்துக்கு வேலை போறதும் லைட் மேனுக்கு வேலை போறதும் ஒன்னா? கீழ்நிலையில் உள்ள இவங்க தான் சினிமா தொழிலாளர்கள். அஜீத் ஒன்னும் தொழிலாளி கிடையாது. அஜீத்துக்கு மார்க்கெட் அவுட்டுன்னா சோத்துக்கு ஒன்னும் பஞ்சம் இல்ல. ஆனா இவங்களுக்கு? உங்களுக்கு எப்புடிண்ணே இதெல்லாம் புரியும்?

      கிங் ஃபிஷர் நஷ்டமானா கவர்மெண்ட் மக்கள் காச எடுத்து குடுக்குனும்னுநெனக்கிற வர்க்கம் தான நீங்க.

    • இதைத் தான் நானும் சொல்லனும்னு நினைச்சேன். தனக்கு போகத் தான் தாணம் தர்மம். அது போல, தன்னுடைய பிழைப்பை முதலில் பார்த்துட்டு அப்பறம் அடுத்தவன் என்ன பண்றான்னு பார்க்கனும். பசியாரிய ஒருவனால் தான் அடுத்தவர் பசியார உதவ முடியும். பக்கத்துல இருக்கிறவன் பசிய முதல்ல போக்குங்க அப்புறமா நான் பசியாரிக்கிரேன்னு யாராலயும் சொல்ல முடியாது, எனக்குத் தெரிஞ்சு அப்படி ஒருத்தன் இன்னும் பொரக்கலை.

  15. மேலே உள்ள கமென்ட்டுகளில் விஜய் என்பவர் குறிப்பிட்ட சம்பவத்தில் பெப்சி சங்கத்துக்குத்தான் அஜித்தும் ஆதரவு கொடுத்தார். கமல் அப்ப மருதநாயகம் தயாரிக்கும் முயற்சியில் இருந்ததால பெரிய அளவு தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள்னுதான் பெப்சிய ஆதரிக்கறார்னு கூட ஒரு பேச்சு இருந்தது. ஆனா அஜித்துக்கு அது போன்ற தேவைகள் எதுவும் இல்லை. ஆனாலும் அவரால் முடிந்த வரை தொழிலாளர்களுக்கு ஆதரவாகவே இருந்து வருகிறார். கூலிய உயர்த்தணும்னா சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள்/தொழிலாளர்கள்தான் போராடணும். நடிகர்கள் அதுக்கு ஆதரவு வேணும்னா தரலாமே ஒழிய அவர் போய் எல்லா தப்பையும் தட்டிக் கேக்கணும்னு சொல்றது முட்டாள்தனமா இருக்கு. எல்லாரையும் குத்தம் சொல்றத தவிர வேற எதையும் பேச உங்களால் முடியாதுன்னு இன்னொரு முறை நிரூபித்திருக்கும் கட்டுரை. கொஞ்ச நாள் முன்னாடி ஷ்ரேயா கோஷலை ஆஹா ஒஹோன்னு புகழ்ந்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தீங்களே – அவங்க எத்தனை தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வாங்கி கொடுத்திருக்காங்கன்னு தகவல் தந்தால் தன்யனாவேன். கொஞ்சம் அழகான பொண்ணா இருந்தால் உங்க சப்போர்ட் கிடைச்சுரும் மத்தவங்கன்னா ‘குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும்’ கூட்டமா இருந்துருவீங்க இல்லயா?

    • என்ன அண்ணே, ஷ்ரேயா கோஷல் பத்தின என்னோட கேள்விக்கு பதிலே காணோம்? எத்தனை தொழிலாளர்களுக்கு அந்த அம்மணி போராடி கூலி உயர்வு வாங்கி கொடுத்திருக்காங்கன்னு இன்னும் கணக்கெடுத்து முடியலையா? இப்பத்தான் அவங்க மாடலாவும் ஆகிட்டாங்க… அவங்களோட மேக்கப், டச்சப் ஆட்களுக்காவது சம்பளம் ஒழுங்கா பட்டுவாடா ஆகுதான்னு கேட்டு சொல்லுங்க…. நாங்களும் அந்த புரட்சி தேவதையின் சாகசத்தை கேட்டு உய்யரோம். :)))))

      • சந்த்ரு,
        24.1 படிச்சுக்கோங்க. சாகசமெல்லாம் அவங்க பண்ண வேணாம். நீங்க உய்யவும் வேணாம் 🙂 அவங்க ஏழ்மை நிலையைப் பயன்படுத்தி மனிதாபம்ங்கிற போர்வையில நீங்க மகாத்மா ஆவறதுக்கு முயற்சிக்க வேணாம். அவ்ளோதான்!

  16. மட்டன் பிரியாணி வாங்கி கொடுத்தா மனிதாபிமானம்.க்யூவில் நின்னு ஒட்டு போட்டா மாமனிதன்.எங்க போகுது நம்ம சமுதாயம்?சினிமா காரண பின்னாடி போய்தான் தமிழ்நாடு சீரழிஞ்சு கிடக்கு!15 கோடி ஒரு படத்துக்கு வாங்கும் அஜித் அதில் எவ்வளவு கருப்பு எவ்வளவு வெள்ளையா வான்குரார்னு சொல்வாரா?இது வரை எவ்வளவு வருமானத்துக்கு எவ்வளவு வரி கட்டியுல்லார்னு சொல்வாரா?இப்படிப்பட்ட ஒரு மனிதருக்குதான் பாலபிஷேகம் பீர் அபிஷேகம் போன்ற அபத்தங்கள்!இளைஞர்களுக்கு அறிவே இல்லையா?

  17. First of all, I want to clarify one thing to you, I AM NOT AJITHS FAN. Ajith did some thing to the coworkers but others didn’t. Because of this he got this appreciation, that means its better to do nothing to anyone. Next salary, no famous actors got this much of salary from their first film itself, they fighting hard to get this salary. Secondly, Actorsa not blamable for ticket prices, it is a collective effort from people to government.

    Finally , its look like a personal attack. You people no need to give much important for this . there are lots of problems to common people in this country.Its your duty to give priority to those problem please don’t write this kind of things for your publicity.

  18. அஜித் தன் படத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு நல்ல உணவளிக்கவேண்டும் என் எண்ணி அவ்வாறு செய்துள்ளார். அவரை நீங்கள் பாராட்டவேண்டாம். ஆனால் பரிகசிக்காமல் இருக்கலாமே..

    நடிகர்கள் சம்பளம் எல்லாம் ‘பிளட் மனி’ – ரத்தப்பணம் என்கிறீர்கள். ஆனால் அந்த தொகையை அவர்கள் எளிதாகப் பெருவதில்லையே. தனக்கு மார்க்கெட் உள்ளவரை தான் சம்பாதிக்க முடியும் என அவர்களுக்கு தெரியும். அதனால் தான் அதிக சம்பளம் பெருகிறார்கள். மக்கள் மனதில் குறுகிய காலத்தில் இடம்பெற்ற மாதவன் கூட இப்போது காணாமல் போய்விட்டார். அப்படியே அவர்கள் பெறுவது அநியாய சம்பளம் என்றால் தயாரிப்பாளர் ஏன் அதற்கு ஒத்துக்கொள்கிறார்? குறைந்த சம்பளத்துக்கு புதுமுகத்தைப் போட வேண்டியதானே.. அதிக சம்பளம் பெரும் நடிகரால் அதிக லாபம் என கணக்கு போட்டு தானே அவர்களை ஒப்பந்தம் செய்கின்றனர். இதில் நடிகரின் தவறு என்ன?

    லியனார்டோ டாவின்சியிடம் ஒருவர் ஆட்டோகிராப் கேட்டாராம். ஒரு காகிதததில் தன் கையெழுத்தைப் போட்டுவிட்டு இதன் விலை நாற்பது வெள்ளிகள் என்றாராம். அதிர்ந்து போன அந்த நபர் இந்த கையெழுத்து நீங்கள் போட தேவைப்பட்டது சிறு காகிதம், சொற்ப அளவு பேனா மை. இதற்க்கு இவ்வளவு பணமா என்றாராம். அதற்கு டாவின்சியின் பதில் – இந்த பணம் இந்த கையெழுத்துக்கல்ல. என் இத்தனை வருட உழைப்புக்கு என்றாராம். ஒரு நடிகர் தியேட்டருக்கு மக்களை வரவழைக்க முடியுமென்கிற வரை தான் மவுசு, சம்பளம் எல்லாம். அதற்கு பிறகு நாய் கூட சீண்டாது.

    • பாலு,
      அஜித்தின் மனிதாபிமானம் நல்ல விஷயம்தான்! ஆனால் அது ரொம்ப மொக்கையா இருக்குங்கிறதுதான் விஷயம்! பல கோடி சம்பளம் வாங்குற அஜீத் மட்டன் பிரியாணி போடுறது பெரிய விஷயம் இல்லை. களை பறிக்கும் தொழிலாளிகளுக்கு சிறு விவசாயி கொடுக்கும் டீ காப்பி வடைதான் அவர்கள் அளவில் மிகப் பெரிய விஷயம்.

      மேலும், அஜீத் உழைப்பால் உயர்ந்தார் என்று கூறுவதை விட அவரது பிம்பம் பல தரப்புகளில் பல மட்டங்களில் பலமாகக் கட்டமைக்கப்படுகிறது என்பதுதான் உண்மை. இதுபோல பிம்பங்கள் எல்லாம் திரைத் தொழிலாளிக்கோ, வேறு தொழிலாளிகளுக்கோ கிடையாது. அவ்வளவு ஏன்.. எல்லா சக ‘ஹீரோ’க்களுக்கும் கிடைத்துவிடுவதில்லை.

      அப்பேர்ப்பட்ட தனிப்பெரும் மனிதன் தன் சக தொழிலாளிக்கு பிரியாணி போடுவதோடு நின்றுவிடுகிறார். மாறாக, அவரது தினக்கூலிக்கு ஒரு உத்தரவாதம் கிடைக்கும்வகையில் போராட நினைப்பதில்லை. அஜீத் என்றில்லை.. இன்று ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் அனைத்தும் அதையேதான் செய்கின்றன. மக்களுக்கென்று சில பல சப்பையான திட்டங்களை துண்டு பீஸ் பிரியாணிகளைப் போல் விட்டெறிந்து விட்டு, கொள்ளை லாபங்களை அள்ளுவது மட்டுமே குறிக்கோள்.

      ஆக, அஜீத் தன்னளவில், தன் திருப்திக்கு, தன்னிடம் குற்ற உணர்வு வந்து விடக்கூடாது என்பதற்காக செய்த ஒரு சிறு’சேவை’க்கு மகாத்மா சாயம் பூச பத்ரி போன்ற ‘பிரபலங்களும்’, பதிவர்களும் முயலுகின்றனர் என்பதே வினவின் குற்றச்சாட்டு. தங்கள் மனிதாபிமானத்தை ஒரு ஏழைத்தொழிலாளியை பகடையாக வைத்து வெளிக்காட்டுகின்றனரே என்பதே வினவின் கோபம்.

      எது எப்படியோ அஜீத்துக்கும், பத்ரிக்கும் பிற பதிவர்களுக்கும் செலவின்றி விளம்பரம் செய்து கொடுத்திருக்கிறது வினவு :-). Die hard அஜீத் ஃபேன்களுக்கு தாங்களே அந்த பிரியாணியை சுவைத்து உண்டதைப் போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கும். 🙂

  19. மேலே சில பின்னூட்டங்களில் கண்டது – ஏழை என்றால் நல்லவனாம்.பணக்காரன் கெட்டவனாம். சகிக்க முடியாத அபத்தம். எல்லா வர்க்கத்திலும் நல்லவனும் உண்டு கெட்டவனும் உண்டு.. தியேட்டரில் பொய்யான கட்டணத்தை அச்சடிக்கும் உரிமையாளனும் அயோக்கியன் தான். அதை பிளாக்கில் விற்கும் குடிசைவாசியும் அயோக்கியன் தான்.. பணத்தை சுருட்டிய பைனான்ஸ் கம்பெனி முதலாளியும் அயோக்கியன் தான். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பிக்பாக்கெட் அடிக்கும் கீழ்த்தட்டுக்காரனும் அயோக்கியன் தான்.

    • சூப்பர் பாலு. ஆனா ஒரு விசயம் இப்பத்தான் புரியுது. கம்யூனிசம் அப்டீங்கறது கஷ்ட்டப்படும் மக்களைப் பத்தியும், அவங்கலோட கஷ்ட்டங்களையும் சொல்ரதுன்னு நினைச்சேன். இப்போ புரியுது, கம்யூனிசங்கறது பணக்காரனை மட்டம் தட்டுரதுரதுன்னு.

  20. பிரியாணியை சாப்பிட்டவன் அதை பாராட்டுகிறான். யாரோ ஒருவன் அதை இம்சிக்கிறான்.

Leave a Reply to வலிபோக்கன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க