privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்மாருதி தொழிலாளர் போராட்டம் – பு.ஜ.தொ.மு கருத்தரங்கம் – வாருங்கள்!

மாருதி தொழிலாளர் போராட்டம் – பு.ஜ.தொ.மு கருத்தரங்கம் – வாருங்கள்!

-

மாருதி கார் தொழிலாளர்களிடம் பணிந்தது நிர்வாகம் !           அனுபவம் பெறுவோம் முதலாளித்துவத்திற்கு சவக்குழி வெட்டுவோம் !

அன்பார்ந்த தோழர்களே !

ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி ஆலையின் தொழிலாளர்கள் கடந்த ஜூலை மாதம் முதல் போராடி நிர்வாகத்தை பணிய வைத்துள்ளனர். துவக்கத்தில் சங்கம் அமைத்தற்காக வேலை பறிப்பு – அடக்குமுறைக்கு ஆளான முன்னணியாளர்களுக்கு ஆதரவாக வெடித்தது போராட்டம். முதலில் பணிந்து போவதாக நடித்தது நிர்வாகம். பின்னர் கொத்தடிமை பத்திரம் ஒன்றில் கையெழுத்து போட்டால் தான் வேலை என்றது. அதற்கு பின்னர் 1200 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை என்று அடிமடியிலேயே கை வைத்தது.

சங்கம் வைத்ததால் தானே பிரச்சினை என்று சங்கத்தை கலைத்திருக்கலாம், முன்னணியாளர்களுக்கு தானே வேலை போனது, நாம் தப்பித்து விடலாம் என்று மற்றவர்கள் பதுங்கியிருக்கலாம், நிபந்தனை பத்திரத்தில் கையெழுத்து போட்டால் குடி முழுகிவிடாது என்று அலட்சியமாக கையெழுத்து போட்டிருக்கலாம், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குத்தானே வேலை போய் விட்டது என்று நிரந்தரத் தொழிலாளர்கள் கரையேறியிருக்கலாம். ஆனால், இதையெல்லாம் அவர்கள் செய்யவில்லை. அப்படி செய்வது இழிவு என்று கருதினார்கள். மாறாக சங்கம் அமைப்பது எனது பிறப்புரிமை என்று சங்கநாதம் செய்தார்கள். நிரத்தரத்தொழிலாளி – ஒப்பந்தத் தொழிலாளி என்பதெல்லாம் முதலாளி ஏற்படுத்திய பிரிவினை ! நாங்கள் எல்லோரும் தொழிலாளர்கள் தான் என்று கைகோர்த்து நின்றார்கள். அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து வேலை நிறுத்தப்போராட்டத்தைத் தொடங்கினர்.

மனேசார் என்கிற தொழிற்பேட்டையில் உள்ள உற்பத்தி பிரிவில் தொடங்கிய இந்த போராட்டம், மாருதி நிர்வாகத்தின் ஏனைய இரண்டு ஆலைகளுக்கும் பரவியது. ஆலைகள், தொழிற்பேட்டைகள், சங்கங்கள் என்ற பேதத்தையெல்லாம் கடந்து வீறு நடைபோட்டது போராட்டம் ! ஏறக்குரைய வடமாநில ஆட்டோ மொபைல் துறையே ஸ்தம்பித்து போனது. பல்லாயிரம் கோடி இழப்பை சந்தித்தது முதலாளி வர்க்கம் ! தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை கண்டு குலைநடுங்கி போனது, கார்ப்பரேட் களவானி கும்பல் ! முதலாளிகளுக்கு பாதபூசை செய்வதே வேலையாகக் கிடந்த அரியானா மாநில அரசு, காட்டுத்தீயாக பரவிய தொழிலாளர்கள் போராட்டங்களால் பொசுங்கிப் போனது. முன்னணியாளர்கள், ஒப்பந்தத்தொழிலாளர்கள் உட்பட அனைவரும் இழந்த வேலையை மீண்டும் பெற்றார்கள்.

முதலாளிகளையும் அரசு அடியாட்களையும் பணிய வைத்த மாருதி தொழிலாளர்களின் போராட்டம் பத்தோடு பதினொன்றாவது ரகமல்ல. கடந்த பத்தாண்டில் இந்திய தொழிலாளர் வர்க்கம் பெற்றிருக்கின்ற அபூர்வமான வெற்றிகளில் ஒன்று. தொழிலாளி வர்க்கம் எப்படி போராட வேண்டும் என்று கற்றுத் தந்த போராட்டம். இந்த போராட்ட அணுபவங்களை நாம் தெரிந்து கொண்டு முன்னேறுவோம்.

மாருதி போராட்டம் உச்சக்கட்டத்தில் நடந்து வந்த அதே காலகட்டத்தில் முதலாளித்துவ லாபவெறியை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. முதலாளித்துவத்தின் சொர்க்க பூமி என்று சொல்லப்பட்ட அமெரிக்காவில் அதன் கருவறையான வால்ஸ்ட்ரீட் என்ற பகுதியில் லட்சக்கணக்கான அமெரிக்க இளைஞர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். இதுவரை அவர்கள் ஆதரித்த முதலாளித்துவம் அவர்களது வீட்டையும் வேலையையும் பறித்து சோற்றுக்கு கையேந்த வைத்துள்ளது. “முதலாளித்துவம் ஒழிக” என்று உலகம் முழுவதும் பல நூறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

முதலாளித்துவம் கொடூரமானது, இழிவானது. மனித குலத்துக்கே விரோதமானது. அந்த கொடூரனை வீழ்த்தக்கூடிய சக்தி தொழிலாளர் வர்க்கத்திடம் தான் உள்ளது. மாருதி சுசுகி போன்ற பல நூறு போராட்டங்களில் நாம் வெற்றி பெறும் போது தான் முதலாளித்துவத்துக்கு எதிரான நமது எழுச்சி பல லட்சம் தொழிலாளர்களை ஒன்று சேர்க்கும், நம்பிக்கையை உருவாக்கும். போராட்டங்களை வெல்வதற்கு முன்பாக, முந்தைய போராட்டங்களிலிருந்து கற்றுக்கொள்வது அவசியமானதாகும். எனவே, மாருதி தொழிலாளார்களின் வெற்றியிலிருந்து கற்போம். முதலாளித்துவத்துக்கு சவக்குழி தோண்ட பிறந்தது தான் தொழிலாளி வர்க்கம் என்கிற நமது கடமையை நிறைவேற்றுவோம்.

கருத்தரங்கம்

நாள் : 20.11.2011

இடம் : ஞாயிறு காலை 10.00 மணி

சீனிவாசா திருமண மண்டபம்
கல்லறை பேருந்து நிலையம் அருகில்
பூந்தமல்லி, சென்னை.
*************************************

நிகழ்ச்சி நிரல்

தலைமை:

தோழர் சி.வெற்றிவேல் செழியன்
அமைப்புச் செயலாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு.

சிறப்புரை:
மாருதி தொழிலாளர்களின் வெற்றி;
அனுபவம் கற்போம் !

தோழர் பா.விஜயகுமார்
பொருளாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு.

வால்ஸ்ட்ரீட் முற்றுகை;
திணறும் முதலாளித்துவத் தலைமை பீடம் !

தோழர் சுப.தங்கராசு
பொதுச் செயலாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு.

நன்றிரை:

தோழர் இரா.ஜெயராமன்
இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு.
**************************************

தொடர்புக்கு :

தோழர் அ.முகுந்தன், 110, 2ம் தளம்
மாநகராட்சி வணிக வளாகம்,  63, என்.எஸ்.கே சாலை
கோடம்பாக்கம், சென்னை – 24.

தொ.பே:  94448 34519

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி – தமிழ்நாடு.

___________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. ஒரு புறம் இளைய தலைமுறை தொழிலாளர்களிடம் (அமைப்பு சார்ந்த பிரிவுகளில்) தன்னுடைய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு ஆளும் கட்சி சார்ந்த தொழிலாளர்களுக்கு பணத்தை வெட்டி காரியம் சாதித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம் மேலோங்கியிருப்பது,

    மறுபுறம் சிஐடியு, ஏஐடியுசி போன்ற தொழிற்சங்கங்கள் சம்பிரதாய போராட்டங்களை நடத்துவதும், அது அடுத்தநாள் செய்தித்தாளில் படத்துடன் செய்தியாக வந்தாலே போது மென்ற வகையிலான நடவடிக்கைகள்,

    இப்படிப்பட்ட சூழலில் போராட்டமின்றி வாழ்க்கையில்லை, ஒன்றுபட்ட போராட்டம் மற்றும் துறை கடந்த தொழிலாளர் ஒற்றுமை ஆகியவற்றின் தேவையை அறிந்து கொள்ள இது போன்ற கருத்தரங்குகள் அவசியம்.

    வெல்லட்டும் கருத்தரங்கின் நோக்கம்

    தோழமையுள்ள
    சித்ரகுப்தன்

  2. குர்கானிலிருந்து தெறித்த உற்சாகம் சுங்குவார்சத்திரம்வரை வந்து விழும். கூட்டத்தின் கரகோஷத்தில் திருமணமண்டபம் அதிர்ந்ததை நான் அமர்ந்திருந்து பார்த்தேன்!

  3. சுசுகி தொழிலாளர்களின் எதிர்மறையான போராட்ட அனுபவம் உணர்த்தும் பாடம் தொழிலாளர்கள் ஓர் அமைப்பாய் அதுவும் புரட்சிகர அமைப்பாய் ஒன்று சேர்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. வால்ஸ்ட்ரீட் முற்றுகைப் போராட்டம் கற்றுத் தரும் பாடம் ஒரு பொதுவுடமை சமூகத்தின் அவசியத்தைக் கோருகிறது. ‘நான் உலகம், நானே உலகம்’ என்ற பாடலும், ‘மலைகளையேப் பிளந்திட்டோம்’ என்ற பாடலும் நம்பிக்கையற்று வாடும் தொழிலாளி வர்க்கத்தை தட்டி எழுப்பி அரங்கத்தையே அதிர வைத்தது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க