privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்முல்லைப் பெரியாறு: காங் - பா.ஜ.க - சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்!

முல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்!

-

முல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்! -

முல்லைப் பெரியாறு அணை பலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறதென உச்சநீதிமன்றம் உட்பட பல நிபுணர் குழுக்களும் ஆய்வு செய்து அவ்வப்போது அறிவித்தாலும், கேரளாவில் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் கிளப்பும் பீதி ஓய்ந்தபாடில்லை. தற்போது அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைத்தும், பின்னர் கூடிய விரைவில் அதை இடித்து புதிய அணை கட்ட வேண்டுமெனவும் அவர்கள் கேரளாவில் சூடு பறக்க பேசியும், ஆர்ப்பாட்டம் செய்தும் வருகிறார்கள். கேரள ஊடகங்களும் அதையே செய்து வருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்த வரை அனைத்து அரசியல் கட்சிகளும் கேரள அரசு, அரசியல் கட்சிகளின் நிலையை எதிர்த்து வருகின்றன. இதில் துரோகம் செய்த திராவிடக் கட்சிகளும், அகில இந்தியக் கட்சிகளும் அடக்கம். இதைக் கண்டு கொள்ளாத தமிழின ஆர்வலர்களோ ஒரு படி மேலே போய் கேரள சமாஜம், கேரள பேருந்துகளை எதிர்த்து வருகின்றனர். முல்லைப் பெரியாறு விசயத்தில் தமிழகத்தின் பக்கம்தான் நியாயம் உள்ளது என்பதை ஒத்துக் கொள்பவர்கள் இதில் குறிப்பாக எதிர்க்க வேண்டிய சக்திகள் எது என்பதில் குழப்பத்தோடு இருக்கிறார்கள்.

இதில் நாம் கேரள மக்களை பகைத்துக் கொள்வதிலோ, அவர்களை எதிர்ப்பதிலோ பலனில்லை. அது இரு மாநில மக்களின் இனவெறிச் சண்டையாகத்தான் போய் முடியும். ஒரு வேளை கேரள மக்கள் அனைவரும் கேரள அரசியல்வாதிகளின் பொய்ப்பிரச்சாரத்தில் சிக்குண்டிருந்தாலும் நாம் அவர்களை மீட்டெடுப்பதற்கு குறிப்பான எதிரிகளை தனிமைப்படுத்தி தாக்குவது அவசியம். அந்தக் குறிப்பான எதிரிகள் யார்?

அவர்கள்தான் இந்தக்கட்டுரை தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் மும்மூர்த்திகள். ஆம். கேரளாவில் இந்த மூன்று கட்சிகளும்தான் மக்களிடையே பீதியூட்டி அதை அரசியல் ஆதாயம் பெறுவதற்கு போட்டி போட்டுக் கொண்டு செய்து வருகின்றன.

சமீப நாட்களாக கேரள இளைஞர் காங்கிரசு குண்டர்கள் முல்லைப்பெரியாறு அணையின் தேக்கடி மதகில் நின்று கொண்டு அதை இடிப்போமெனவும், பா.ஜ.க குண்டர்கள் அணைக்கு அருகில் உள்ள பேபி டேமில் அத்துமீறி நுழைந்து இடிப்போமெனவும் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். போலீக் கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த வரை அச்சுதானந்தன் தலைமையில் புதிய அணை கட்டுமாறு உண்ணாவிரதம் நடத்துகிறார்கள். இதை போக மக்கள் போராட்டம் என்ற பெயரில் இக்கட்சிகளே பின்னணியில் இருந்து இயக்குகின்றன.

கேரள மாநில நீர் வளத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் இதற்காக தில்லி பிர்லா இல்லத்தில் ஒருநாள் உண்ணாவிரம் இருக்கிறார். ஆக முல்லைப்பெரியாறு அணை ‘இடிந்து’ போனால் யார் காப்பாற்றப் போகிறார்கள் என்பதில் அங்கு ‘கொலவெறி’ போட்டியே நடக்கிறது.

இந்திய ஒற்றுமை பேசும் இந்த மூன்று கட்சிகளும் ஒற்றுமையாக ஊளையிடுவதின் பலனாக கேரள மக்களும் இந்த அவதூறு பிரச்சாரத்தில் பலியாகியிருக்கின்றனர். உண்மையில் முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறதா என்று எப்படி சோதித்தறிவது? அது பலமாக இருப்பதாக உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழுவே உத்தரவாதமளித்தாலும் இவர்கள் ஏற்பதாக இல்லை. அதைக் கண்டிக்க வக்கற்ற மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் மீண்டும் மீண்டும் நிபுணர் குழு, பேச்சு வார்த்தை என்று இழுத்தடிக்கிறார்கள்.

ஒரு கட்டிடம் அல்லது அணை பலமாக இருக்கிறதா என்பதை அறிவியல் ரீதியாக சோதனை செய்து ஒரு முடிவைத்தான் தர முடியும். அறிவியலுக்கு கேரளா, தமிழ்நாடு என்று பிரிவினையும், உணர்ச்சியும் இருக்க முடியுமா என்ன? மேலும் தமிழக பொறியாளர்கள் தயாரித்திருக்கும் வீடியோவில் முல்லைப் பெரியாறு அணை முற்றிலும் இடியாது, கற்பனையாக இடிந்து போவதாக வைத்துக் கொண்டாலும் அந்த அணையின் முழுநீரும் மதகு வழியாக இடுக்கி அணைக்குத்தான் வருமே அன்றி மூன்று மாவட்ட மக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாது என்று அறிவியல் ரீதியாக நிரூபித்திருக்கிறார்கள்.

மேலும் 152 அடி வரை தண்ணீரைத் தேக்கி அழுத்தமானி கருவி கொண்டு அளந்தால் அது பாதுகாப்பான அழுத்தத்தில் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முடியும். இதன்றி அணையின் பாதுகாப்பை எப்படி நிரூபிப்பது?

உண்மை இவ்வாறிருக்க பொய்யை ஆரவாரத்துடன் இந்த மூன்று கட்சிகளும்தான் போட்டி போட்டுக் கொண்டு பேசுகிறார்கள் என்பதிலிருந்து இவர்களின் குற்றத்தை புரிந்து கொள்ள முடியும். இவர்களின் நோக்கம் தாங்கள்தான் கேரள மக்களின் நலனை காப்பாற்றும் ஹீரோக்கள் என்று காட்டுவதுதான். அதற்காக தமிழக விவசாயிகள் நலனை கொல்வதற்கு இந்தக் கயவர்கள் துணிந்து விட்டார்கள்.

ஹீரோயிசம்தான் பிரச்சினை என்றால் அரபிக் கடலோரம் இருக்கும் கேரளமாநிலத்தை சுனாமி வந்தால் கடல் முழுவதும் முழுங்கிவிடும் என்று வீடியோ கிராபிக்ஸ் மூலம் தயாரித்து பிரச்சாரம் செய்யலாமே? அரபிக் கடலை வில்லனாக்கினால் அதனால் யாருக்கும் பிரச்சினை இல்லையே? இப்படி தேவையின்றி தமிழக விவசாயிகளின் வாழ்வோடு ஏன் விளையாட வேண்டும்?

இப்படி இல்லாத பிரச்சினையை கிளப்பியிருப்பதோடு, அந்த இல்லாத பிரச்சினையை தீர்ப்பதற்கு தடையாக இருப்பதோடு, அந்த தடை மூலம் இரு மாநில மக்களிடம் முரண்பாட்டை முற்றவைக்கவும் செய்கிறார்கள். அந்த வகையில் இவர்களது கிரைம் ரேட் தொடர்ந்து எகிறிக் கொண்டே இருக்கிறது.

இந்த மும்மூர்த்திகள் தமிழகத்திலும் இருக்கிறார்கள். தொட்டெதுக்கெல்லாம் இந்திய ஒற்றுமை, தேசப்பற்று, பாரதப் பண்பாடு, பயங்கரவாதம், என்று இவர்கள்தான் கூப்பாடு போடுவார்கள். தமிழக இளைஞர் காங்கிரசு தலைவர் யுவராஜும், பா.ஜ.க தலைவர் பொன் இராதாகிருஷ்ணனும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள். தற்போது இந்த உரிமையை தட்டிப்பறித்தது யார்? பாக்கிஸ்தானா, இல்லை ஐ.எஸ்.ஐயா, இல்லை வங்கதேச அகதிகளா அல்லது சீனத்து சதியா?

இவர்களது கேரள பங்காளிகள்தானே அந்த உரிமையை தட்டிப் பறித்திருக்கிறார்கள். கண்டிப்பதாக இருந்தாலும், தண்டிப்பதாக இருந்தாலும் அவர்களைத்தானே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்க வேண்டும்? அதை விடுத்து இவர்கள் யாரிடமிருந்து உரிமையை வாங்கித் தரப்போகிறார்கள்? சூடு, சொரணை, உண்மை, நியாயம் இருந்தால் தத்தமது அகில இந்தியக் கட்சிகளின் அமைப்பிலிருந்து விலகிக் கொள்வதாக மிரட்டியிருக்கலாம். இல்லை டெல்லி தலைமை அலுவலகத்தை முற்றுகை இட்டு கேரள கட்சி அமைப்புகளை கலைக்குமாறு கோரியிருக்கலாம். அதையெல்லாம் செய்யத் துப்பில்லாத ஜென்மங்கள் இங்கே தமிழனுக்காக அழுகிறது என்றால் யாரை ஏய்க்கிறார்கள?

ஆக இந்த இந்திய தேச ஒற்றுமை பேசும் கட்சிகளின் நோக்கம் அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மாநில மக்களின் சென்டிமெண்டுக்கு ஜால்ரா போட்டு அதிகாரத்தை கைப்பற்றுவதே. இதை காவிரிப் பிரச்சினையின் போது கார்நாடகாவிலும் பார்த்திருக்கிறோம். இப்போது கேரளாவில் பார்க்கிறோம். மேலும் தமிழக காங், பா.ஜ.க கும்பல் இரண்டுமே தமது கேரள பிரிவையோ, அரசையோ இதுவரை கண்டிக்கவில்லை. அவர்களுக்கு பாரத ஒற்றுமை குறித்த டியூஷனும் எடுக்க வில்லை. அந்த வகையில் கேரளாவில் சண்டித்தனம் செய்யும் காங், பா.ஜ.க பெருச்சாளிகளுக்கு தீனி போட்டு அடை காப்பது தமிழக பெருச்சாளிகள்தான். இந்த பெருச்சாளிகளை அடித்து விரட்டினால் கேரள பெருச்சாளிகளின் கொழுப்பு பறிக்கப்படும்.

அந்த வகையில் தமிழன ஆர்வலர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் சத்தியமூர்த்தி பவன், கமலாலயம் இரண்டையும் முற்றுகை இட்டு அவர்களை தமிழகத்தில் இருந்து வெளியேறுமாறு செய்ய வேண்டும். அந்தக் கட்சிகளின் தலைவர்கள் வீட்டை விட்டு வெளியேறாதவாறு சிறையில் அடைக்க வேண்டும். காங்கிரசு, பா.ஜ.க கொடிகளோ, கிளை அலுவலகங்களோ இல்லாதவாறு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அது இந்தக் கட்சிகளின் டெல்லித் தலைமைக்கு ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டு அது கேரளா வரை எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்லும்.

இதை விடுத்து அப்பாவி மலையாள மக்களை எதிர்ப்பதில் என்ன பயன்? அவர்களா தினந்தோறும் அறிக்கை விட்டோ இல்லை அணைக்கு சென்றோ ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்? அப்படி மக்களே நடத்தினாலும் அதன் பின்னணி இவர்கள்தானே? ஆனால் தமிழகத்தில் இரு கட்சிகளுக்கும் செல்வாக்கு துளியுமில்லாத நிலையில் அகில இந்திய தலைமை செல்வாக்கு உள்ள கேரளாவின் பக்கம்தான் சாயுமென்பது தமிழகப் பெருச்சாளிகளுக்கு தெரியாதா என்ன?

இதில் தமிழக போலிக் கம்யூனிஸ்டுகளின் நிலை மிகவும் சந்தர்ப்பவாதமானது. இவர்கள் ஒரு பேச்சுக்கு கூட முல்லைப் பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் உரிமை பற்றி பேசமாட்டார்கள்.

இந்தியாவில் அரசியல்ரீதியாக காலாவதியாகி வரும் போலிக் கம்யூனிஸ்டுகளின் பரிதாபத்திற்குரிய தமிழக இணைய அவதாரமான மாற்று இணைய தளம் இந்தப் பிரச்சினை குறித்து, ” முல்லைப் பெரியாறு: பகைமை வேண்டாம்!” என்று ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

அதில்,

“முல்லைப் பெரியாறு அணை விஷயத்தை முன்னிறுத்தி தமிழக, கேரளா மாநிலங்கள் இருதரப்பிலிருந்தும் அறிக்கைகளும், போராட்டங்களுமாய் இருக்கின்றன. தத்தம் நிலைபாட்டிலிருந்தே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்து வருகின்றன. ஒரு சுமூகமான தீர்வை எட்டுகிற பார்வையில்லாமல்  ஆத்திரத்தைத் தூண்டுவிதமாக  ஒருவரையொருவர் குற்றம் சுமத்துவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். இது இரு மாநில உறவுகளையும், மாநில மக்களிடையே இருக்கும் இணக்கத்தையும் கெடுக்கவே செய்யும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்பதாக பலரும் பேசிக்கொண்டு இருப்பதாலேயே, சற்று நிதானமாக இவ்விஷயத்தை அணுக வேண்டியதிருக்கிறது.” என்று குறிப்பிடுகிறது. (அழுத்தம் எம்முடையது)

மேலும், இதில் மார்க்சிஸ்டு கட்சி இரு கோட்பாடுகளின் அடிப்படையில் வழிகாட்டுகிறதாம். ஒன்று தமிழகத்திற்கு தொடர்ந்து நீர் வரவேண்டுமாம், இரண்டு கேரள மக்களின் அச்சத்தை போக்க வேண்டுமாம், அதன்படி உச்சநீதிமன்றம் அளிக்கப் போகும் தீர்ப்பின்படி இரு மாநில அரசுகளும் பகைமை இன்றி பேசித் தீர்க்க வேண்டுமாம்.

அட, வெளக்கெண்ணெய் வெண்ணைகளா! இதில் இருமாநிலமும் பகைமையுடன் ஈடுபடுகின்றன என்பதில் இருந்தே உங்களது வண்டவாளம் பல்லிளிக்கிறதே! முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகம் எப்போது, என்ன தவறிழைத்திருக்கிறது அல்லது சண்டை போட்டிருக்கிறது? அணை பாதுகாப்பாக இல்லை என்று ஒரு புரளி கிளம்பியதும், தமிழக அரசு பல கோடி ரூபாய் செலவழித்து அணையை பலப்படுத்தியிருக்கிறது. பின்னர் உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு அணை பலமாக இருக்கிறது என்று தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ள அனுமதி அளித்திருக்கிறது. இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்?

ஆனால் உச்சநீதிமன்ற உத்திரவை மதிக்காமல் 136 அடிதான் வைத்திருக்க வேண்டுமென்றும், தற்போது 120 அடிதான் முடியும், பிறகு அணையை இடித்து புதிய அணை கட்ட வேண்டும் என்று யார் கோரியது?

எல்லாம் உங்கள் அச்சுதானந்தன் ஆட்சியில்தானே புழுதி கிளப்பி பிரச்சாரம் செய்யப்பட்டது?

அதன்படி பகைமையை கிளப்பிவிட்டதே உங்களது தோழர்கள்தானே? இதில் ஏன் இரு மாநிலம் என்று குற்றமிழைத்தவனையும், குற்றமிழைக்கப்பட்டவனையும் ஒரே தராசில் நிறுத்துகிறீர்கள்? இதுதான் நீங்கள் பின்பற்றி வரும் மார்க்சியமா இல்லை சந்தர்ப்பவாதமா? இவ்வளவு செய்த பிறகும் தமிழகம் சும்மா இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?

இனவெறியை கிளப்பும் கேரள கம்யூனிஸ்டுக் கட்சிகளை கண்டிப்பதற்கு வக்கற்ற நீங்கள் அதை மடை மாற்றி இருமாநில மக்களும், கட்சிகளும் சுமூகமாக பேச வெண்டும் என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லை? சோற்றில் உப்புப் போட்டு சாப்பிடுகிறீர்களா, இல்லை சந்தர்ப்பவாதத்தையே ஃபுல் மீல்சாக முழுங்குகிறீர்களா?

தமிழகத்தில் இருக்கும் காங்கிரசு, பா.ஜ.க கும்பல்களாவது தமிழக மக்களின் நலனை விட்டுத்தரமுடியாது என்று நாடகமாடவாவது செய்கின்றன. அந்த ‘தரம்’ கூட இல்லாத வெத்து வேட்டாக போயிருக்கும் உங்கள் முட்டாள்தனத்தை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்த்தாவது புரிந்து  கொள்வீர்களா?

உங்கள் நோக்கம் புதிய அணை கட்டும் கோரிக்கைக்கு தமிழகத்தை தயார்படுத்துவதுதான். அப்படி அந்த அணை கட்டும்பட்சத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் இல்லை, காற்று கூட வராது என்பதை பொறியாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அப்படி தமிழகத்திற்கு நீர் வராத பட்சத்தில் நீங்களும் தமிழகத்திலிருந்து காலி செய்து விட்டு உங்கள் கேரள தோழர்களோடு சேர்ந்து கொள்ளுங்கள்.

ஒரு கம்யூனிஸ்டுக் கட்சி இனவெறியுடன் செயல்படக்கூடாது என்பது சரிதான். மேலும் இங்கே எழுந்திருப்பது இன முரண்பாடு அல்ல. இது கேரள ஓட்டுப்பொறுக்கிகளின் அவதூறுப்பிரச்சாரம். அதை முறியடிப்பதுதான் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் வேலையாக இருக்க முடியுமே அன்றி, அந்த அவதூறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டுவது அல்லை. அந்த வகையில் தமிழக போலிக் கம்யூனிஸ்டுகள்தான் கேரள கட்சிகளின் ஊளையை ஆதரித்து இருமாநில மக்களிடையே முரண்பாட்டை வளர்ப்பதற்கு உதவி புரிகிறார்கள்.

இந்த இலட்சணத்தில் பகைமை வேண்டாம், சுமூகமாக பேசுவோம், நீதிமன்றத்தை மதிப்போம் என்ற உபதேசம் யாருக்கு பயன்படும்?

ஒருவேளை கேரள மக்கள் அவர்களது ஓட்டுப் பொறுக்கிகளின் பொய்ப் பிரச்ச்சாரத்திற்கு பலியாகி இருந்தாலும் அங்கே இருக்கும் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தன் நியாயத்தை சொல்லித்தான் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதனால் அங்கே அவர்களது செல்வாக்கு குறையுமென்றாலும் நீண்ட கால நோக்கில் அது மாறும்.

புரட்சி கூட தனிப்பட்ட நலன்களை விடுத்து ஒட்டு மொத்த நாட்டின் நலனை வைத்துத்தானே நடக்க முடியும்?அப்போது அதற்கு ஆதரவாக வரும் மக்கள் முல்லைபெரியாறு விசயத்தில் தமிழகத்தின் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்வார்கள். அது வேறு இது வேறு அல்ல.

ஆனால் புரட்சி நடத்துவதை என்றோ தூக்கி எறிந்திருக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் இன்றைய நோக்கம் சில பல எம்.எல்.ஏ, எம்.பி சீட்டுக்கள் கிடைத்து அணிகளுக்கு மாலை நேரத்து மயக்கத்தை காட்டுவதுதான்.

அதிலும் அவர்கள் ஏற்கனவே கேரளாவில் ஆட்சியில் இருந்திருப்பதாலும், அங்கேதான் ஒரளவுக்கு செல்வாக்கு இருப்பதாலும் அதை தக்க வைத்துக் கொள்வதற்கு முல்லைப் பெரியாறு விசயத்தில் இப்படி போட்டி போட்டுக் கொண்டு பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள்.

இங்கே அம்மா தயவில் ஒரு சில எம்.எல்.ஏக்களை பெற்றிருப்பதைத் தாண்டி வேறு ஒன்றும் பிடுங்க முடியாது. ஆனால் அகில இந்திய அளவில் வங்கத்தைப் பார், கேரளாவைப்பார் என்று அணிகளிடம் பீலா விடுவது முக்கியம். அதிலும் வங்கம் பஞ்சராகியும், கேரளம் பிரேக் டவுணாகியும் இருக்கும் நிலையில் அப்படி ஒரு பிரேக் டவுன் வண்டியாவது இருக்கிறதே என்று சீன் காட்ட வேண்டிய துர்பாக்கிய நிலைமையிலிருந்துதான் போலிகளின் முல்லைப்பெரியாறு சந்தர்ப்பவாதம் பொங்கி வழிகிறது.

அந்த வகையில் முல்லைப்பெரியாறு விசயத்தில் துரோகம் புரிந்திருக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளையும் நாம் குறிவைத்து எதிர்க்க வேண்டும்.

கேரள மக்களிடையே இந்த மூன்று கட்சிகளும்தான் பீதியை கிளப்பி விட்டு தமிழத்தின் உரிமையை மறுக்கிறார்கள். அவர்களுக்கு இங்கே பாடம் புகட்ட வேண்டியது மிகவும் அவசியம். இதுதான் நமது குறிப்பான போராட்ட இலக்காக இருக்க வேண்டும்.

ஆனால் இந்த மூன்று கட்சிகளையும் தமிழின ஆர்வலர்கள் பல்வேறு சந்தர்ப்பத்தில் ஆதரித்திருக்கிறார்கள். ஈழப் பிரச்சினைக்காக பா.ஜ.க இல கணேசனை மேடையேற்றியவர் பழ நெடுமாறன். அதற்காக பால்தாக்கரேவிற்கு பல்லக்கும் தூக்கியிருக்கிறார். மன்மோகன் சிங், வாஜ்பாயி இருவரையும் முதுகில் சுமந்தவர் வைகோ. போலிக்கம்யூனிஸ்டுகளை இங்கே யாரும் சீந்துவாரில்லை என்றாலும் இவர்களும் சில சமயம் தமிழின ஆர்வலர்களுக்கு இனிப்பான நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில்தான் மும்மூர்த்திகளின் சந்தர்ப்பவாதம் இங்கே கண்டிக்கப்படாமல் வேடிக்கை பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் பாராமுகமும் இங்கே போராட்டம் என்ற அளவில் கூட கண்டிக்கப்படவில்லை.

சுருங்கக் கூறின் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் நமது உடனடிக் கவனம் இந்த மும்மூர்த்திகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவதின் மீதே இருக்க வேண்டும். இவர்களுக்கு கொடுக்கிற அடி கேரளாவில் நிச்சயம் எதிரொலிக்கும்.

_________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. முல்லை பெரியாரு அணையை உடைத்து… தமிழ் நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட கொடுக்காமல் கேரளா ஏமாற்றும் திட்டத்தை… அதனால் பாதிக்கப்பட போகும் தேனி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டத்தினர்… இது யாருக்கான பிரச்சனை என்று இருக்கிறார்கள்… இதே நேரம் சாதி பிரச்சனை என்றால் மட்டும் ஒடுக்கபட்ட மக்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களை ஆடும் பெரும்பான்மையாக இருக்கும் கள்ளர், மறவர், சேர்வை சாதிகாரர்கள்… அவர்களின் வாழ்வாதார பிரச்சனை பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது… இவர்கள் சொந்தமாக சிந்திக்க முடியாத… அறிவை அடகு வைத்தவர்களோ என கேட்க வேண்டி இருக்கிறது… இதே நேரம் கேரளாவில் 5 மாவட்டங்களில் சிபிஎம், பாஜக, காங்கிரசின் பொய் பிரச்சாரத்திற்கு ஏற்ப மக்கள் போராடி வருகின்றனர்… இங்கே ஜெ கட்சி, காங்கிரசு, பாஜக என சாதி மதவெறி கட்சிகளில் இருப்பவர்களும் போலிகளான திமுக, சிபிஎம், சிபிஐ போன்றவர்களும் மக்களை பற்றிய அக்கறையில்லாமல் கல்லா கட்டுவதில் மட்டுமே கவனமாக இருக்கின்றனர்…

    • சொல்லாதே யாரும் கெட்டால் எல்லோரும் தாங்க மாட்டார்”.. என்று சிலரும் ” உண்மையை சொல்பவன் சதிகாரன் இது உலகத்தின் / இந்தியாவின் ஆள்பவன் அதிகாரம்” என்று சிலரும்.. அறிக்கைகள் மட்டும் பயன் தருமா?

      ஊரு ரெண்டு/ எட்டு பட்டால் கூத்தாடிக்கு/கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் தானே?. யார் சொன்னது நமக்கு ஆறு/ ஏழு அறிவு என்று?

      என்ன செய்ய வேண்டும்?

      எரிவதை பிடுங்குங்கள்- கொதிப்பது தானாக நின்றுவிடும்…. ஹி…ஹி…ஹி……….

      “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா… தமிழா வருவதை எதிர்கொள்ளடா!”

      “ஆடுவோமே பள்ளு பாடுவோமே! ஆனந்த சுதந்திரம்அடைந்துவிட்டோம் என்று”- கேரளம்.

  2. முல்லைப் பெரியாறில் எடுக்க வேண்டிய நடவடிக்கை: பிரதமருக்கு வைகோ கடிதம்
    இது செவிடர் காதில் ஊதிய சங்கு.நமது பக்கம் ஞாயம் இருக்கிறது. காவிரி பிரச்சினை என்ன ஆனது?

    உச்சநீதிமன்றத்தில் சீக்கிரம் நீதி கிடைக்க வழி இருக்கிறதா என்று சாமியிடம் தமிழ் நாட்டிற்காக ஆலோசனை கேளுங்கள்.

    அகில இந்திய விஷயங்களில் தீவிரம் காட்டுபவர் தமிழ் / தமிழர்/தமிழ் நாடு சம்பந்தமான சிறிய விவகாரங்களில் தலையிடுவாரோ/ திருவாய் மலருவாரோ என்னவோ?

  3. தமிழக பொறீயாலர்கள் தயாரித்த ஆவன படத்தை எல்லா இடத்தில்ழும் காட்ட வேன்டும்…

  4. சரியான நேரத்தில் தேவையான கட்டுரை.

    எதிரியை சரியாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்!
    கேரள மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையே விரோதத்தைத் தூண்டி குளிர் காய நினைக்கும் ‘தேசிய’ கட்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்!
    அந்த ‘தேசியக்’ கட்சிகளை பகைத்துக் கொள்ள விரும்பாத ‘தமிழ்’ கட்சிகளை கேள்வி கேட்க வேண்டும்!

    ஆணித்தரமான கருத்துக்கள்.

  5. தமிழக பொறியியலாளர்களின் ஆவண படத்தை மலையாளத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டால் நல்லது. ம.க.இ.க. ஏன் அந்த முயற்சியில் இறங்க கூடாது? தமிழர் பார்ப்பதனை விட மலையாளிகள் பார்ப்பது நன்மை பயக்கும்.

  6. “இந்த மும்மூர்த்திகள் தமிழகத்திலும் இருக்கிறார்கள். தொட்டெதுக்கெல்லாம் இந்திய ஒற்றுமை, தேசப்பற்று, பாரதப் பண்பாடு, பயங்கரவாதம், என்று இவர்கள்தான் கூப்பாடு போடுவார்கள். தமிழக இளைஞர் காங்கிரசு தலைவர் யுவராஜும், பா.ஜ.க தலைவர் பொன் இராதாகிருஷ்ணனும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள். தற்போது இந்த உரிமையை தட்டிப்பறித்தது யார்? பாக்கிஸ்தானா, இல்லை ஐ.எஸ்.ஐயா, இல்லை வங்கதேச அகதிகளா அல்லது சீனத்து சதியா?”

    கண்களை மூடி, காதுகளை அடைத்து,வாயைப் பொத்திக்கொண்டவர்களுக்கு எதுவும் தெரியாது,கேட்காது. பிறகெப்படி பேசுவார்கள்?

  7. முல்லைப் பெரியாறு விசயத்தில் தீராத அடர் மௌனத்தில் ஆழ்ந்திருக்கிறார் மாதவராஜ். சாத்தூருக்கு முல்லை பெரியாறு தண்ணீர் வருவதில்லை என்று நினைத்திருப்பாரோ என்னவோ. அவரே வாய் திறவாத பட்சத்தில் தீராத பக்கங்களாய் யூகங்களைத்தான் பேச வேண்டியிருக்கிறது.

  8. தமிழக பெருச்சாளிகளை அடித்து விரட்டினால் கேரள பெருச்சாளிகளின் கொழுப்பு பறிக்கப்படும்.

    அந்த வகையில் தமிழன ஆர்வலர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் சத்தியமூர்த்தி பவன், கமலாலயம் இரண்டையும் முற்றுகை இட்டு அவர்களை தமிழகத்தில் இருந்து வெளியேறுமாறு செய்ய வேண்டும். அந்தக் கட்சிகளின் தலைவர்கள் வீட்டை விட்டு வெளியேறாதவாறு சிறையில் அடைக்க வேண்டும். காங்கிரசு, பா.ஜ.க கொடிகளோ, கிளை அலுவலகங்களோ இல்லாதவாறு செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அது இந்தக் கட்சிகளின் டெல்லித் தலைமைக்கு ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டு அது கேரளா வரை எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்லும்.

  9. பெரியார் அணை தாவா தீர்ப்பதன் தார்மீகக் கடமை தமிழக,கேரள மற்றும் அகில இந்திய கம்யூனிஸ்ட் தலைமைக்குழுவைச் சார்ந்தது!என்னதான் கொள்கை ஈர்த்து செஞ்சட்டை அணிந்தாலும் பிராந்திய உணர்வு,கொள்கையைக் கொலை செய்துவிடுகிறது!

    அங்கபார்,அமெரிக்காவைபார் எனும் காரத் இங்கபார், இவ்விடபார்!

    கதர்,காவிச் சட்டைகளைப் போல செஞ்சட்டையும் சந்தர்ப்பவாதிகள் அணிவது தானோ?

    • பிரகாஷ் காரத்தை பொது செயலாளராகக் கொண்ட சி.பி.எம்.தானே அறிக்கை வெளியிட்டுள்ளது.

  10. வணக்கம் வினவு,
    சரி உங்கள் கூற்று படி பார்த்தால் தமிழர்களையும்,தமிழக வாகனங்களையும் முதலில் தாக்கி அடித்து நொறுக்கி ஆரம்புத்து வைத்தது அவர்கள் தானே?இதற்கு தமிழர்களின் எதிர் வினை என்னவாக இருக்க வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள்???

    • தமிழர்களின் எதிர்வினை என்னவாக இருக்க வேண்டும் என்று தியாகு எதிர்பார்க்கிறார் ?

  11. தமிழர்களின் எதிர்வினை

    கேரள வாகனங்களையும் கேரள மக்களையும் தாக்கி அடித்து நொறுக்கி ஆரம்புத்து வைக்க
    வேண்டும்

  12. this comments from மாற்று web

    யாரையாவது வம்புக்கிழுத்து, வாய்க்கு வந்தபடி பேசி திருப்தி கொள்ளும் இந்த வினவுக்கு ஒரு கேள்வியை இப்போது வைக்கிறோம். இவ்வளவு தூரம் வந்துவிட்ட இந்த முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு, சி.பி.எம் அரசியல் தலைமைக்குழு நிலைபாட்டை நிராகரித்துவிட்டு, இப்போது ஒரு சுமூகமானத் தீர்வை சொல்லுங்களேன் ஐயா, பார்ப்போம். உங்கள் சர்வதேச பாட்டாளி வர்க்க புரட்சிகர சிந்தனையையெல்லாம் கொஞ்சம் அவிழ்த்து விடுங்கள், கேட்போம்.////
    இப்படியெல்லாம் அவிங்க கிட்ட கேட்க்கப்படாது சார்.. அவங்க சர்வதேச புர்ர்ர்ரட்சியாளர்கள். வினையாக வினவுவதுதான் அவர்கள் வேலை.

    pls comment on this

  13. ////யாரையாவது வம்புக்கிழுத்து, வாய்க்கு வந்தபடி பேசி திருப்தி கொள்ளும் இந்த வினவுக்கு ஒரு கேள்வியை இப்போது வைக்கிறோம். இவ்வளவு தூரம் வந்துவிட்ட இந்த முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு, சி.பி.எம் அரசியல் தலைமைக்குழு நிலைபாட்டை நிராகரித்துவிட்டு, இப்போது ஒரு சுமூகமானத் தீர்வை சொல்லுங்களேன் ஐயா, பார்ப்போம். உங்கள் சர்வதேச பாட்டாளி வர்க்க புரட்சிகர சிந்தனையையெல்லாம் கொஞ்சம் அவிழ்த்து விடுங்கள், கேட்போம்.////
    //

    இந்தப் பதிவிலேயே பதில் இருக்கு. எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கிவிடும். தேசியக் கட்சிகள் வோட்டு பொறுக்க நடத்தும் நாடகங்களை அம்பலப்படுத்தும் வகையில் ஆர் எஸ் எஸ்-பாஜக, சிபிஎம், காங்கிரசு கட்சிகளை நொறுக்கி எடுத்தால் அங்கு அவர்களின் மேல் வாயும், கீழ் வாயும் மூடிக் கொள்ளும். பொய் பிரச்சாரம் நின்று போகும்.

    ///

    அம்மாவா, அய்யாவா என்று தமிழகத்திலும், மம்தாவா, காங்கிரசா என்று மத்தியிலும் குரங்குவித்தை காட்டும் சிபிஎம்ன் சர்வதேச பாட்டாளி வர்க்க நிலைப்பாடுடன் மேற்படி வினவு தீர்வை ஒப்பிட்டு புரிந்து கொள்ளவும்.

  14. http://www.maattru.com/2011/12/blog-post_8581.html

    வினவை விமர்சிக்கிறேன் என்று குடிகார பொறுக்கிப் போல சலம்பித் தள்ளி சக பதிவர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டுள்ளது ஏ’மாற்று’ வலைப்பூ. சொந்த செலவில் சூனியம் என்று பதிவுலகில் சொல்வார்கள் அது இதுதான்.

  15. //இவ்வளவு தூரம் வந்துவிட்ட இந்த முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு, சி.பி.எம் அரசியல் தலைமைக்குழு நிலைபாட்டை நிராகரித்துவிட்டு, இப்போது ஒரு சுமூகமானத் தீர்வை சொல்லுங்களேன் ஐயா, பார்ப்போம். // தீர்வு பற்றி கேரள அட்வகேட் சொலிசிட்டரே சொல்லிவிட்டார். காமலை கண்ணனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள் என்பது போல சுயமரியாதையை கட்சிக்கு காவு கொடுத்துவிட்டு வட்ட செயலாளர் வண்டு முருகன்களாக வலம் வரும் சிபிஎம் கழுதைகள் கேள்வி கேட்கிறார்கள். நல்ல மார்க்சிய பேப்பராக தின்று செறித்தால் கூட சிறிது மூளை வேலை செய்யும் வாய்ப்புள்ளதை அவர்கள் பரிசீலிக்கலாம்.

  16. ///ஆனால் புரட்சி நடத்துவதை என்றோ தூக்கி எறிந்திருக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் இன்றைய நோக்கம் சில பல எம்.எல்.ஏ, எம்.பி சீட்டுக்கள் கிடைத்து அணிகளுக்கு மாலை நேரத்து மயக்கத்தை காட்டுவதுதான்.அதிலும் அவர்கள் ஏற்கனவே கேரளாவில் ஆட்சியில் இருந்திருப்பதாலும், அங்கேதான் ஒரளவுக்கு செல்வாக்கு இருப்பதாலும் அதை தக்க வைத்துக் கொள்வதற்கு முல்லைப் பெரியாறு விசயத்தில் இப்படி போட்டி போட்டுக் கொண்டு பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள்.இங்கே அம்மா தயவில் ஒரு சில எம்.எல்.ஏக்களை பெற்றிருப்பதைத் தாண்டி வேறு ஒன்றும் பிடுங்க முடியாது. ஆனால் அகில இந்திய அளவில் வங்கத்தைப் பார், கேரளாவைப்பார் என்று அணிகளிடம் பீலா விடுவது முக்கியம்.///

    ஆஹா…. சபாஷ்… பிரமாதம்… என்ன அருமையான வாதம்… ஆனா என்ன பண்ணுறது… என்.டி.சி. மில்லுல புடுங்குனதையே பெருமையா பேசுன நீங்களா இரண்டு மாநிலத்துல செல்வாக்கு இருக்குறத கிண்டல் பண்ணுறதுன்னு நினைப்பு வந்து தொலைக்குதே…

    புதுசா ஒரு அணியை உருவாக்க முயற்சி வேற பண்ணிருக்கீங்க. இது என்ன திடீர் புரட்சி… நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைப் பார்த்து ஓட்டுப் பொறுக்கிகள் என்று சொல்லிட்டு “நாங்க 477 ஓட்டு வாங்கிட்டோம்ல” என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டீர்கள். அடுத்த கட்டத்தை நோக்கி நகருவதுதான் மூன்று கட்சிகளை மட்டும் குறி வைப்பதன் நோக்கமா…??

    • தொழிற்சங்க ஜனநாயகத்திற்கும் ஜனநாயகம் என்கிற பெயரில் பொறுக்கித்தின்பதற்கும் உள்ள வேறுபாடு கூட தெரியாத அளவிற்கு சி.பி.எம் கட்சி கணேசனை இப்படி வெட்டியாக வளர்த்து வைத்திருப்பது வேதனைக்குறியது. இந்த லட்சணத்தில் இவர் தீக்கதிரில் வேலை செய்கிறாராம் !

      சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களுடைய கேரள காம்ரேடுகள் தமிழ் மக்களுக்கு எதிராக இனவெறி கக்கி வருகிறார்களே அதைப் பற்றி தான் நாம் இங்கே பேச வேண்டும். அது பற்றி உங்களுடைய கருத்து என்ன ? உங்களுடைய கருத்து என்றால் உங்கள் கட்சி கருத்து அல்ல, உங்கள் ’சொந்த கருத்து’ என்ன என்று கேட்கிறேன்.

      • நேற்று அச்சுதானந்தன் பேசியதையும், ராமகிருஷ்ணன் பேசியதையும் இன்று பேப்பரில் படித்தேன். இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக உள்ளன. தத்தமது மாநிலங்களுக்காக அவர்கள் குரல் கொடுக்கின்றனர், இதில் என்ன தவறு என்று சொன்னால் அதற்கு அவர்கள் தேசிய கட்சியாக இருக்கத் தேவையில்லை. தனித் தனி மாநில கட்சிகளாக இருந்துவிடலாமே என்ற பதில்தான் சரியானதாக இருக்க முடியும்.

        • ஒரு பிரச்சனையில் வேறுபாடு என்றால் மாநில கட்சிகளாக மாறி விட வேண்டும். என்ன ஒரு அருமையான விளக்கம்…! அதனால்தான் ம.க.இ.க. இதுவரையில் திட்டமே எழுதாம உக்காந்துருக்கா..??

          • ரிஷி எழுதியது ம.க.இ.க கருத்து என்பது தவறு. ம.க.இ.க வின் நிலைப்பாடு கீழ் உள்ள சுட்டியில்

            முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! சி.பி.எம். இன் பித்தலாட்டம்!
            https://www.vinavu.com/2009/12/24/mullai-periyar-dmk-cpim/

  17. சில தமிழர்களுக்கு சாமியாக இருந்தாலும்/ ஆசாமியாக இருந்தாலும் அண்டை மாநிலம் தான் பிடிக்கிறது.. என்ன செய்வது பகுத்தறிவில்லாத மனிதர்கள்களுடன் நாம் வாழ்ந்து கொண்டு தானே உள்ளோம்.அவர்கள் மட்டுமா நம் பகுத்தறிவு தமிழர்கள் நடத்தும் பல தொலைக்காட்சிகளும் அப்படிதானே இருக்கின்றன.
    நிலைமை மாற வேண்டிக்கொள்வோம் நம்ம ஊர் பச்சவழியம்மன் கோயில் ஐயனாரப்பனை!

  18. அது ஒரு அரசியல் களமாகத்தான் இருந்தது. அதுவும் தி.மு.க.வுக்கு ஆதரவாக மில் வாசலில் வந்து நில மோசடி ஆனந்தன் வந்து நின்றபோது, “தோழர்கள்” போய் வழிந்த கண்கொள்ளாக் காட்சியை நேரில் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தே. எங்களுக்காவது பல விஷயங்களில் ஒத்துப் போகும் காம்ரேடுகள் கேரளாவில் இருக்கிறார்கள். கம்யுனிஸ்டுகள் என்று சொல்லி கொள்ளும் ம.க.இ.க.வுக்கு அண்டை மாநிலத்தில் ஆட்களைத் திரட்டும் வலு இல்லாமல் ஏன் போய்விட்டது…?? நீங்கள் முயற்சி செய்திருந்தால் இந்த பிரச்சனையே தீர்ந்திருக்குமே…!! அதை விட்டுவிட்டு தி.மு.க., அ.தி.மு.க. பின்னால் ஏன் போய் ஒளிந்து கொள்ள வேண்டும்..??

    • நாலு எம்.எல்.ஏ சீட்டுக்காக ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி கருணாநிதி காலடியிலும், ஜெயலலிதா காலடியிலும் விழுந்து கிடக்கும் நீங்கள் புரட்சிகர அமைப்புகளைப் பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர்கள். உங்களுடைய புளுகுனி கதைகளை உங்களைப்போலவே போலிக்கம்யூனிஸ்ட் கட்சியில் சொரணையற்று கிடக்கும் மொன்னைகளிடம் பேசி மகிழ்ந்து கொள்ளுங்கள்.

  19. கேரளாவில் தமிழர்களுக்கெதிரான இனவெறியை தூண்டி விட்டு விளையாடி வரும் சி.பி.எம் மை பற்றி ‘உங்களுடைய கருத்து’ என்ன ? உங்களுடைய தமிழ் மாநில தலைமையின் கருத்து என்ன, அகில இந்திய தலைமையின் கருத்து என்ன என்பதை தெரிவிக்கும் துனிவு உண்டா உங்களுக்கு ?

  20. இனவெறியர்களான கேரள தோழர்களோ வெறியை கக்குகிறார்கள், மொன்னைகளான தமிழக தோழர்களோ நமத்துப்போக வைக்கிறார்கள். அத்தகைய சி.பி.எம் ’தோழர்’ ஒருவர் எழுதியது.

    முல்லைப் பெரியார் – கூடங்குளம் முரண்பாடுகள்.
    http://ramaniecuvellore.blogspot.com/2011/12/blog-post_07.html

    • ராமனைப் படித்தேன். அவருக்கு இந்தப் பின்னூட்டத்தையும் அனுப்பியுள்ளேன்.

      “உலகின் தலை சிறந்த அத்துறை சார்ந்த வல்லுனர்கள்
      பரிசீலித்து சொல்லட்டும். அம்முடிவை அனைவரும்
      ஏற்றுக் கொள்வோம்”. இது ராமனின் கருத்து.

      நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? வர்க்க சமுதாயத்தில் அதுவும் கொலை வெறிகொண்ட முதலாளித்துவ சமுதாயத்தில் துறை சார்ந்த வல்லுனர்கள் அவர்களுடைய கருத்துக்களை சொல்ல முடியுமா? அப்படி ஒருவர் சொல்வாரேயானால் அவர் பொதுவுடமைவாதியாக இருக்க வேண்டும். அப்படி ஒருவர் எங்கே இருக்கிறார்? அடையாளம் காட்டமுடியுமா?

      அது சரி! எதற்கு நிபுணர்கள் கருத்தை நம்பியிருக்கிறீர்கள்? Nuclear Fission பற்றி கொஞ்சம் படியுங்களேன். நீங்களே முடிவுக்கு வரமுடியும்.

      கூடங்குளம்: ‘மம்மி’ நாயகன் வருவானா?http://hooraan.blogspot.com/2011/11/blog-post_21.html இதையும் படியுங்கள். சொஞ்சம் புரியும். மேலும் விரிவாகத் தேவை எனில் அணு அறிவியலைப் படியுங்கள்.

      மக்களின் அச்சம் என்ற ஒரே அச்சாணியில் கூடங்குளத்தையும் முல்லைப் பெரியாரையும் இணைத்திருப்பது அறிவுக்குப் பொருந்தாது.

      “பிரச்சனை” “இனம்” என்றெல்லாம் பூடகமாகப் பேச வேண்டாமே. வெளிப்படையாக, விரிவாகப் பேசுங்கள். விளங்கட்டும். விரிவாகப் பேசினால் மக்களே முடிவெடுப்பார்கள்.

      இதெல்லாம் உங்களுக்குத் சுத்தமாகத் தெரியாது என சொல்ல முடியாது. நீங்கள் நம்பும் அரசியல் தலைமையோடுதானே ஒத்துப் போக முடியும்! உங்களின் நிலை பரிதாபத்துக்குரியதுதான்.

      • “வர்க்க சமுதாயத்தில் அதுவும் கொலை வெறிகொண்ட முதலாளித்துவ சமுதாயத்தில் துறை சார்ந்த வல்லுனர்கள் அவர்களுடைய கருத்துக்களை சொல்ல முடியுமா?”

        அணை பாதுகாப்பானது என்றுதான் நானும் நம்புகிறேன். ஆனால் அது வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல. அணுசக்தி பாதுகாப்பு துறையில் 25 ஆண்டுகள் நான் பெற்ற அனுபவமும், பல்வேறு துறையைச் சேர்ந்த சக விஞ்ஞானிகள் பரிசோதனை செய்து தெரிவித்திருக்கும் முடிவுகளின் அடிப்படையில் நம்புகிறேன்.

        அணை பாதுகாப்பானது என்பதை உறுதி செய்ய நீர்மூழ்கி காமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள், NDT சிதைவுறுத்தா சோதனைகள், தகைவுச் சோதனைகள் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக ஹிந்து வெளியிட்டிருக்கும் செய்தி.

        The tests and studies undertaken are: scanning the upstream face of the dam using a remote-operated vehicle and digital camera by the Central Soil and Materials Research Station (CSMRS), Delhi; a non-destructive test by the Central Water and Power Research Station (CWPRS), Pune; a cable anchor stress test; a study by the Geological Survey of India; a bathymetric survey by the CWPRS; material testing by the CSMRS and the CWPRS; a seepage study by the Bhabha Atomic Research Centre (BARC); a flood study by the Central Water Commission (CWC); taking cores and testing them by the CWPRS/CSMRS; in situ tests by the CWPRS; a stability check by the CWPRS and checking of measuring instruments used in the dam. (http://www.thehindu.com/news/national/article2687231.ece?homepage=true)

        இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம், அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய அணுசக்திதான் உதவுகிறது. ஆம் Isotope Tracer சோதனை மூலமாகத்தான் நீரடி கசிவுகளை உறுதி செய்ய முடியும்.பாபா அணு ஆய்வு மையம் தான் இந்த சோதனைகளை செய்தது.

        அறிவியலுக்கு அரசியல் தெரியாது. தனியுடமைவாதியோ, பொதுவுடமைவாதியோ, நிபுனர்களின் அறிவியல் முடிவு ஒன்றாகத்தான் இருக்க முடியும். யார் எடை போட்டாலும் தராசு 1 கிலோவை 1 கிலோ என்றுதான் காட்டும். அதுதான் அறிவியல்.

        Nuclear Fission நிறைய படித்து போரடித்து விட்டது.இருந்தாலும் உம்முடைய “மம்மி நாயகன் வருவானா” வையும் படித்தேன். அணுக் கழிவுகளில் ஆபத்தான விஷயம் நியூட்ரான்கள் அல்ல. காமா (gamma) எனப்படும் கதிர் வீச்சு.

        தமிழில் அணுசக்தியைப் பற்றி விவரமாக, விவரம் தெரிந்த ஜெயபரதன் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். நீங்கள் படித்து விட்டு சொல்லுங்கள்.

        http://jayabarathan.wordpress.com/2011/04/03/atomic-energy-in-tamil/

        “மக்களின் அச்சம் என்ற ஒரே அச்சாணியில் கூடங்குளத்தையும் முல்லைப் பெரியாறையும் இணைத்திருப்பது அறிவுக்குப் பொருந்தாது”

        இதற்கு முன் அணைகள் உடைந்ததே இல்லையா, அதனால் மக்கள் செத்ததே இல்லையா? அணு உலையில் விபத்து நேரும், கதிர் வீச்சு பரவும் என்ற தமிழக மக்களின் அச்சம் எவ்வளவு உண்மையோ அதே அளவு அணை பலவீனமானது, உடைந்து விடக்கூடியது என்ற கேரள மக்களின் அச்சமும் உண்மையானது. அந்த அச்சத்தை போக்க அறிவியல் பூர்வமாக அளிக்கப்படும் இந்த விளக்கப்படத்தை எவ்வளவு நம்புகிறீர்களோ, அதே அளவு கூடங்குளம் பற்றி நிபுனர்கள் அளிக்கும் விளக்கங்களை நம்புங்கள் என்றுதான் சொல்லுகிறேன்.

        கண்ணை மூடிக்கொண்டு நம்பச் சொல்லவில்லை, அதிகாரிகளையும், அணு விஞ்ஞானிகளையும் கேள்வி கேளுங்கள்.

        “நீங்கள் நம்பும் அரசியல் தலைமையோடுதானே ஒத்துப் போக முடியும்!”

        எந்த அரசியல் தலைமையையும் நான் நம்புவது இல்லை.

        • நிலநடுக்கம் ஏற்பட்டால் அதன் வீரியத்தைப் பொறுத்து அணு உலையோ அல்லது அணையோ உடையலாம் அல்லது அவற்றில் சேதங்கள் ஏற்படலாம் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால், அணை உடைந்தால் அதனால் வெளியேறு நீரை மக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடியும். முல்லைப் பெரியாறு அணை அவ்விதம் இருப்பதாகத்தான் நிபுணர்களும் கூறியிருக்கிறார்கள். ஆனால் அணு உலை சேதமடைந்தால் பாதிப்பு ஏற்படாமல் எப்படி பாதுகப்பு ஏற்பாடுகள் செய்ய முடியும். காற்றை வழிமாறச் செய்வீர்களா? மேலும், நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படும் என்பது அது புதிய அணைக்கும் பொதுவானதுதானே? எனக்கென்னவோ கூடங்குளத்தை வைத்து முல்லைப்பெரியார் அணைப் பிரச்சினையை மத்திய அரசுதான் தூண்டிவிடுகிறது என கருதுகிறேன்.

        • //“மக்களின் அச்சம் என்ற ஒரே அச்சாணியில் கூடங்குளத்தையும் முல்லைப் பெரியாறையும் இணைத்திருப்பது அறிவுக்குப் பொருந்தாது”

          இதற்கு முன் அணைகள் உடைந்ததே இல்லையா, அதனால் மக்கள் செத்ததே இல்லையா? அணு உலையில் விபத்து நேரும், கதிர் வீச்சு பரவும் என்ற தமிழக மக்களின் அச்சம் எவ்வளவு உண்மையோ அதே அளவு அணை பலவீனமானது, உடைந்து விடக்கூடியது என்ற கேரள மக்களின் அச்சமும் உண்மையானது. அந்த அச்சத்தை போக்க அறிவியல் பூர்வமாக அளிக்கப்படும் இந்த விளக்கப்படத்தை எவ்வளவு நம்புகிறீர்களோ, அதே அளவு கூடங்குளம் பற்றி நிபுனர்கள் அளிக்கும் விளக்கங்களை நம்புங்கள் என்றுதான் சொல்லுகிறேன்.

          // அணு உலையை எதிர்ப்பதில் வினவின் அரசியல் எனன்வென்று எதற்கும் ஒருமுறை ராமன் படித்துவிடுவது நல்லது. அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் ஊறுகாயாக அல்லக்கை இந்தியா அடிபடுவதற்கு மக்கள் விலை கொடுக்கக் கூடாது என்பதே அணு உலை எதிர்ப்பின் அரசியல். அதாவது நாடு அடிமையாகிவிடக்கூடாது என்பதே ஆகும்.

  21. ராமன் என்ற சி.பி.எம் தோழரின் பதிவுக்கு நீங்கள் எழுதிய பின்னூட்டத்தை,(http://ramaniecuvellore.blogspot.com/2011/12/blog-post_07.html)
    டிசம்பர் 1 தேதியிட்ட வினவு கட்டுரையான, “முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும் – வீடியோ” விற்கு நானெழுதியதற்கு என்று தவறாக நினைத்து விட்டேன்.(https://www.vinavu.com/2011/12/01/mullai-periyar-video/)

    ஆனாலும் நான் எழுதிய கருத்துகளில் மாற்றம் எதுவும் இல்லை.

    • அணு உலைகள் பாதுகாப்பானதாகவே இருக்கட்டும் ராம் காமேஸ்வரன், அவற்றை ரஷ்யா, அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய என்ன காரணம் ?

  22. பேச்சுவார்த்தையில் தமிழகம் பங்கேற்க மார்க்சிஸ்ட் கோரிக்கை

    http://dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=518586&SectionID=129&MainSectionId=129&SEO=&Title=%u0baa%u0bc7%u0b9a%u0bcd%u0b9a%u0bc1%u0bb5%u0

    “பொருத்தது போதும் பொங்கியெழு மனோகரா வசனம் போன்ற தீர்மானத்தை நாங்கள் தேசியக்கட்சிகளிடம் நாங்கள் இனி எதிர்பார்ககூடாது.” இங்கு பரதமும், கேரளாவில் கதகலியும்,ஆந்திராவில் குச்சிபிடியும், ஊருக்கு தகுந்தாற்போல் ஆடுவீர்கள் என்பதை
    புரிந்துகொண்டோம். தர்மத்திற்கு துணை போகாவிடினும் குழப்பாமல் இருந்தால் நல்லது.

  23. “…நிபுனர்களின் அறிவியல் முடிவு ஒன்றாகத்தான் இருக்க முடியும். யார் எடை போட்டாலும் தராசு 1 கிலோவை 1 கிலோ என்றுதான் காட்டும். அதுதான் அறிவியல்.”

    இதில் எனக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அறிவியல் முடிவுகளை வெளியிடுவதில்தான் பிரச்சனையே. பல்வேறு ஆய்வுகளை அறிஞர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.சரியான முடிவுகளையும் எடுக்கத்தான் செய்கின்றனர். ஆனால் இத்தகைய முடிவுகளால் அரசுக்கு இடர்பாடு வரும் என்றால் உண்மை வெளிவராது. இதுதானே வரலாறு.

    அணு அறிவியலை பயன்படுத்தக் கூடாது என நான் வாதாட வரவில்லை. மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளுக்கு அணு அறிவியலை பயன்படுத்துவதில் தவறேதுமில்லை.

    ”அணுக் கழிவுகளில் ஆபத்தான விஷயம் நியூட்ரான்கள் அல்ல. காமா (gamma) எனப்படும் கதிர் வீச்சு.”

    காமா கதிர்வீச்சு என்பது அணுவின் விளைவுதானே. நியூட்ரான்கள் இல்லாமல் கதிர்வீச்சு ஏது? அணுவின் நுணுக்க அறிவியல் எதுவாக இருப்பினும் விளைவு ஒன்றுதானே. விளைவு பற்றிதான் நாம் கவலைப் படுகிறோம்.

    கூடங்குளத்தின் அச்சமும் முல்லைப் பெரியாரின் அச்சமும் சாராம்சத்தில் வேறு வேறானவை. அவைகளை “மக்களின் அச்சம்” என்ற ஒன்றால் பிணைப்பது பிரச்சனையை திசைதிருப்புவது போலாகிவிடும்.

  24. “மலையாளிகளே! புதிய அணை கட்டி மாநிலங்களுக்கிடையே பகையையும் ஏற்படுத்துங்கள். முடிவு -நல்லவர்களுக்கு நன்மையாகவும், தீயவர்களுக்கு தீமையுமாகவே முடியும். இது நான்குமறைத் தீர்ப்பு.” வாய்ப்பிற்கு நன்றி.

  25. “முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் உடனடியாக மத்திய அரசு தலையிடக் கோரி அண்ணா அறிவாலயத்திலேயே உண்ணாவிரதம் நடத்த தி.மு.க. தலைமை முடிவு”

    சரியான முடிவு. ஏனெனில் அங்கு தானே அண்டை மாநில மக்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கிறது. தமிழர்கள் நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தினமும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம். அங்கிருந்து அவர்கள் தலைநகரத்தில் வசிக்கும் சம்பந்தபட்டவர்களுக்கு ஹாட் லைனில் தொடர்புகொண்டு ஆவன செய்யமுடியும். முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.

  26. “தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் டிசம்பர் 12-ம் தேதி உண்ணாவிரதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.” – தி. மு. க.

    அண்டை மாநிலத்தின் ஆக்கிரமிப்பை குறைக்க நடவடிக்கை எடுங்கள்.எரிவதை பிடுங்கினால் கொதிப்பது நின்று விடும் என்பது தங்களுக்கு தெரியாதது அல்ல. முடிந்தால் DMK என்பதை TMK ஆக பெயர் மாற்றம் செய்யுங்கள். அப்போதாவது மலையாள/ஆந்திர/ கன்னட மக்களுக்கு வரும் மொழியுணர்வு தமிழ் மக்களுக்கு வருகின்றதா என்று பார்ப்போம். காவிரி தண்ணீருக்கான உண்ணாவிரதத்தால் எந்த பயனும் கிடைத்ததாக தெரியவில்லை. அது போன்று பொன்னாடைகளை தவிர்த்து புத்தகங்கள் வழங்குமாறு தொண்டர்கள்/ அன்பர்களுக்கு அன்புக் கட்டளையிடுங்கள்.. லைப்ரரிக்கு பரிசளிக்க பயன்படும்.வாழ்க தமிழகம்! வாய்ப்புக்கு நன்றி.

  27. “கேரள அரசுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் இன்று மட்டும் மலையாளப் பத்திரிகை விநியோகத்தை நிறுத்தியதாக பத்திரிகை விநியோகஸ்தர்கள்தெரிவித்துள்ளனர்.”

    நாட்டிலும், வெளியிலும் வசிக்கும் மலையாள சகோதரர்கள் இதற்கு என்ன சொல்கிறார்கள்?தென்னிந்தியரின் முன்னேற்றத்தை யாரோ கண்ணு போட்டதால் வந்த வினை என்று சொல்வதா? அல்லது யானைகள் கொழுத்தால் தன் தலையில் தானே மன்னைவாரிபோட்டுக்கொள்கின்றன என்று சொல்வதா?

    பெரும்பாலான மலையாளிகள் தமிழ் நாட்டில் இன்ஜினியரிங் / டிப்ளொமா படிப்பு படித்து, பின் இங்கிருந்து பாஸ்போர்ட் எடுத்தே வளைகுடா நாடுகளுக்கு செல்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. பேராசை பெருநஷ்டம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

  28. தமிழக – கேரள மக்களிடையே நிலவும் சகோதர உறவுக்கு தீங்கு விளைவிக்கும் போராட்டங்களில் ஈடுபடும் காங்கிரஸ் – பாஜக கட்சியினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

    டிசம்பர் 7ந்தேதி கட்சியின் கேரள மாநிலச் செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    கேரள – தமிழ்நாடு மக்களிடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வருகிற சகோதர உறவுக்கு எவ்விதத்திலும் தீங்கு விளைவித்துவிடக்கூடாது. இரு மாநில அரசுகளும் மத்திய அரசும் பயனுள்ள வகையில் தலையிட்டு, முல்லைப் பெரியாறு பிரச்சனைக்குக் கூடிய விரைவில் தீர்வு காண வேண்டும்.

    இந்தப் பிரச்சனையைப் பயன்படுத்தி, சில அரசியல் இயக்கங்களின் பிரதேச ஊழியர்களும் வன்முறைச் சக்திகளும் தவறான முறையில் செயல்பட்டு, நிலைமையை மோசமாக்குவது துரதிருஷ்டமாகும்.எல்லையில் இளைஞர் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சியினர் தவறான போராட்ட முறைகளைக் கையாள்வதானது தமிழ்நாட்டில் வாழும் மலையாளிகளுக்கு எதிராக வன்முறைச் சக்திகள் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடுவதற் கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

    தமிழ்நாட்டுக்கான தண்ணீருக்கு நஷ்டம் ஏற்படுத்த குமுளியில் ஷட்டரைத் தகர்ப்பது என்ற வக்கிரமான போராட்டத்தையே இளைஞர் காங்கிரஸ்காரர்கள் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து, மலையாளிகளின் வாகனங்களைத் தடுப்பது, அவர்களின் கடைகளை எரிப்பது, மலையாளத் தம்பதிகளைத் தாக்குவது முதலான – முற்றிலும் கண்டிக்கத்தக் கதும் எதிர்க்கத்தக்கதுமான சம்பவங்கள் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் நிகழ்ந்தன.
    அடுத்த மாநிலத்தவரின் நடமாடும் சுதந்திரத்தையோ, இயல்பான வாழ்க்கை யையோ தடுக்கிற எந்த முயற்சியும் தாக்கு தலும் தமிழ்நாட்டிலோ, கேரளத்திலோ நிகழ்வதைக் கடுமையாக ஒடுக்க வேண்டும். இத்தகைய வன்முறைச் சக்திகளைத் தனிமைப்படுத்த அரசுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

    அமைதியான வாழ்க்கைக்கு பங்கம் விளைவிப்பவர்களைத் தடுத்திட இரு மாநிலங்களிலும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளும் இடதுசாரி ஊழியர்களும் ஜனநாயக சக்தி களும் களம் இறங்க வேண்டும். சபரிமலைக்குச் செல்கிற அடுத்த மாநி லங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டோர்க்கு அனைத்துவிதப் பாதுகாப்பும் வழங்குவதற்கு அரசு மட்டுமல்லாமல் கட்சி ஊழியர்களும் களமிறங்க வேண்டும்.

    நெருக்கமான பக்கத்து மாநிலத்தவர்களாக வாழ்கிற கேரளத்தையும் தமிழ் நாட்டையும் சேர்ந்த மக்கள் இந்த இரு மாநிலங்களிலும் பணி செய்து வாழ்ந்து வருகிறார்கள். இரு மாநில மக்களும் பரஸ்பரம் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது உண்டு. இந்த வாழ்க்கை முறையைச் சீர்குலைக்க வரும் எதையும் இரு மாநிலங்களையும் சேர்ந்த அறிவார்ந்த மக்கள் அனுமதிக்கக்கூடாது.

    “கேரளத்துக்குப் பாதுகாப்பு; தமிழ் நாட்டுக்குத் தண்ணீர்” என்பதே முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளம் எழுப்புகிற பொது முழக்கம். விவேகமற்ற போராட்டமும் வன்முறைகளும் இந்த முழக்கத்தை நடைமுறைப்படுத்து வதற்கான முயற்சிக்குப் பலத்த அடியாகி விடும். இவற்றை அடக்கவும், அமைதி காக்கவும், தமிழர் – மலையாளி என்கிற பேதமின்றி அனைவரும் ஒன்றுசேர வேண்டும்.

    • //கேரள – தமிழ்நாடு மக்களிடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வருகிற சகோதர உறவுக்கு எவ்விதத்திலும் தீங்கு விளைவித்துவிடக்கூடாது.//

      சகோதர உறவு சகோதர உறவு என்று உச்சரிக்கும்படி அப்படி எதில் தமிழனும், மலையாளியும் சகோதர உறவோடு இருந்தார்கள், இருக்கிறார்கள் என்று உண்மையாகவே தெரிந்துக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் கேட்கிறேன். சொல்ல முடியுமா?

      என்னுடைய அனுபவத்தை வைத்து சொல்கிறேன். ஒரு வட இந்தியனை தமிழன் ஒருவன் எந்த விதத்தில் பார்க்கிறானோ அப்படி தான் தமிழனை மலையாளியும், கன்னடனும், தெலுங்கனும் பார்க்கிறான். சம்ஸ்கிருத (ஹிந்தி) மொழியை எப்படி தமிழன் வெறுக்கிறானோ அப்படி தான் அவர்கள் தமிழை வெறுக்கிறார்கள். அடிப்படையிலயே அவர்கள் தமிழர்களிடம் அப்படி தான் இருக்கிறார்கள்.

      இதில், தமிழருக்கும் – மலையாளிக்கும் சகோதர உறவு இருக்கிறது என்று சொல்லுவது, தமிழனும் – ஹிந்திகாரனும் சகோதர உறவோடு வாழ்கிறான் என்று காமெடி செய்வது போல் உள்ளது.

  29. ” தமிழருக்கும் – மலையாளிக்கும் சகோதர உறவு இருக்கிறது என்று சொல்லுவது, தமிழனும் – ஹிந்திகாரனும் சகோதர உறவோடு வாழ்கிறான் என்று காமெடி செய்வது போல் உள்ளது.”-பாசிஸ்ட்.

    தாங்கள் சொல்வது மிகவும்சரி. நாம் பிறரை நல்லபடியாக தான் பார்க்கிறோம். இல்லாவிடில் 234 எம்.எல்.ஏ. களில் 20% அண்டைமாநில மொழியை பேசுபவர்கள் சென்ற முறை பதவி வகித்திருக்க முடியுமா? தென்னிந்தியாவில் நம்மால் இப்படி வர முடியுமா? ஆண்ட பரம்பரை இடத்தை எப்படி இழந்தோம்? பட்டும் நமக்கு சொரணை வரவில்லை. தமிழகத்தில் முக்கியமான பதவிகள்/ வியாபாரம் /சினிமா/டியாக்களில் அண்டை மாநில மொழி மக்களின் ஆக்கிரமிப்பு தானே அதிகமாக இருக்கிறது. “காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு “- நம் வீட்டுக்குழந்தையை விட பக்கத்துக்கு குழந்தை அழகாக இருந்தால், பக்கத்து வீட்டு குழந்தையையா கொஞ்சுகிறோம்? பல தமிழர்களுக்கு சாமியாக இருந்தாலும்/ ஆசாமியாக இருந்தாலும் அண்டை மாநிலம் தான் பிடிக்கிறது.. என்ன செய்வது பகுத்தறிவில்லாத மனிதர்களுடன் நாம் வாழ்ந்து கொண்டு தானே உள்ளோம்.அவர்கள் மட்டுமா நம் பகுத்தறிவு தமிழர்கள் நடத்தும் பல தொலைக்காட்சிகளும் அப்படிதானே இருக்கின்றன.

Leave a Reply to balakrishnan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க