privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காபாகிஸ்தானின் சமூக அக்கறை கொண்ட கொலவெறி பாடல் - வீடியோ !

பாகிஸ்தானின் சமூக அக்கறை கொண்ட கொலவெறி பாடல் – வீடியோ !

-

‘எங்க அம்மா உருளைக்கிழங்கு-முட்டை கறி செஞ்சிருந்தாங்க, எனக்கு உருளைக் கிழங்கு முட்டை கறி பிடிக்காது. சாப்பிடாமல் என் பிரெண்ட் அலி வீட்டுக்குப் போனேன். “ஏ ஹே, ஏ ஹே, எங்க அம்மா செஞ்சா உருளைக்கிழங்கு-முட்டே, ஏ ஹே, ஏ ஹே எனக்குப் பிடிக்காது உருளைக்கிழங்கு-முட்டே” என்று முணுமுணுத்துக் கொண்டே இருந்ததைக் கேட்ட அலி, அதை ஒரு பாடலாக எடுக்கலாம் என்று சொன்னான், அப்படிப் பிறந்ததுதான் இந்த பாட்டு’

பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த தன்யால் மாலிக் என்ற பொருளாதாரத் துறை ஊழியர் எழுதிய பாடல் வரிகளை, உள்ளூர் தொலைக்காட்சியில் வேலை செய்யும் அலி அப்தாப் பாட, 15 வயது ஹம்சா மாலிக் கிடார் இசைக்க உருவான ‘மேரி மா நே பகாயி ஆலூ அண்டே’ என்ற பாடல் பாகிஸ்தானைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. ‘மானங்கெட்ட படை’ என்று பெயர் சூட்டிக் கொண்ட இவர்கள் பாகிஸ்தான் சமூகத்தின் மானத்தைக் காப்பாற்ற கொடி பிடிப்பதாக சொல்லிக் கொண்டிருக்கும் படைகளுக்கு மத்தியில் மானமின்மையைத் தூக்கிப் பிடிக்க யாராவது வேண்டுமே என்று ‘மானங்கெட்ட படை’ இசைக் குழுவை உருவாக்கியதாக சொல்கிறார்கள்.

நாளிதழ்களில் முதல் பக்க செய்திகள் வெளியிடவும், தொலைக்காட்சிகளில் பேச வைக்கவும், சோனி மியூசிக் நிறுவனம் போன்றவைகள் பிண்ணனியில் இல்லாமலேயே, இந்த வீடியோ உலகெங்கிலும் உள்ள பாகிஸ்தானிய அரசியலை புரிந்து கொண்டவர்களிடையேயும் புகழடைந்திருக்கிறது. 2 மாதங்களுக்குள் யூடியூப் தளத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான தடவை பார்க்கப்பட்டிருக்கிறது.

பெரிய இடத்துப் பையன்கள் போல பள்ளிச் சீருடை அணிந்த மூன்று இளைஞர்கள், தமக்குப் பிடிக்காத சாப்பாட்டு டப்பாக்களை பழித்து பாடுவதாக வீடியோ. ‘பாகிஸ்தானின் அரசியல், மத, நீதி  தலைவர்கள் சமைத்துப் போடும் உணவு தங்களுக்கு போரடித்துப் போய் விட்டது, புதிதாக ஏதாவது வேண்டும்’ என்று பாகிஸ்தானின் புனித பசுக்களை இரக்கமில்லாமல் தாக்கி எழுதப்பட்ட பாடல் வரிகள். பாடல் வரிகளுக்கு பஞ்ச் சேர்க்க இடையிடையே அரசியல் முழக்கங்கள் எழுதப்பட்ட அட்டைகள்.

பஞ்சாப் கவர்னராக இருந்த முற்போக்கு அரசியல்வாதி சல்மான் தசீரைக் கொன்ற கொலையாளி மும்தாஜ் கத்ரியையும், மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப்பையும் ஹீரோக்களாக கொண்டாடும் பாகிஸ்தான் சமூகம் 1979-ல் இயற்பியல் நோபல் பரிசு வென்ற அப்துஸ் சலாமை மறந்து விட்டதை நையாண்டி செய்கிறார்கள் இந்த மாணவர்கள்.

நவாப் ஷரீப் பை பை – பாபா கயானி நோ லைக் யூ (இராணுவத் தளபதிக்குப் பிடிக்காத அரசியல்வாதிக்கு பை பை தான்)

தெஹ்ரீக்-இ-இன்சாப்- ஒப்பனை போட்ட ஜமாத்-எ-இஸ்லாமி (இம்ரான் கானின் புதிய அரசியல் கட்சி, ஜமாத்-எ-இஸ்லாமியின் முகமூடிதான்)

உனது பணம் + எனது பாக்கெட் = நாம் இன்னும் விரோதிகள்தான் (அமெரிக்க பணம் + பாகிஸ்தான் பாக்கெட்)

முல்லா + மிலிட்டரி = ஜியா உல் ஹக் (மதமும் ராணுவமும் சேர்ந்துதான் ஆட்சியாளர்களை உருவாக்குகின்றன)

என்று இந்நாளைய முன்னாளைய பாகிஸ்தானிய அமைப்பின் தலைவர்களை வாருகின்றன பாடல் வரிகளுக்கிடையே அவர்கள் உயர்த்திப் பிடிக்கும் அட்டைகள்.

‘இந்த பாடல் பலமாக அடிக்கும், வலிக்கும் படி அடிக்கும் என்று எங்களுக்குத் தெரியும். வீடியோவை வெளியிடுவதற்கு 1 மணி நேரம் முன்பு வரை என்ன விளைவுகள் ஏற்படும், எதிர்பார்ப்புகள், இத்தகைய ரிஸ்க் தேவைதானா என்று விவாதித்துக் கொண்டிருந்தோம்’.

மத, அரசியல் அமைப்புகளை விமர்சனம் செய்யும் யாரையும் யூதர்களின் சதி என்று சொல்லியோ, அல்லது ஒரு துப்பாக்கிக் குண்டின் மூலமோ வேலையை முடித்து விடும் பாகிஸ்தானிய கலாச்சாரத்துக்கு இடியாக ‘இது ஒரு யூதர்களின் சதி’ என்றும் ‘எங்கள் தலைக்குள் துப்பாக்கிக் குண்டு பாய வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால் இதை லைக் செய்யுங்கள்’ என்றும் காட்டுகிறார்கள்.

இசுலாமியக் கோட்டைக்குள்ளிருந்து கொண்டே அதே கேலி செய்யும் தைரியம் பாரட்டத்தக்கது. இவர்கள் முற்றுமுழுதான மாற்று அரசியல் பார்வை கொண்ட இளைஞர்கள் இல்லை என்றாலும் பாகிஸ்தானில் மதவாதத்தின் எச்சம்படாமல் ஜனநாயக உணர்வு கொண்டோரும் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இந்தப்பாட்டிற்காக தங்களது தலையில் குண்டு பாயும் என்ற யதார்த்தத்தைக் கூட கேலி செய்யும் இந்த இளைஞர்களது நெஞ்சுரம் போற்றத்தக்கது. பாடலை முடிந்த அளவு மொழிபெயர்த்திருக்கிறோம். யூடியூபில் ஆங்கில வரிகளுடன் நீங்கள் இதை ரசிக்கலாம். பிடித்திருந்தால் நண்பர்களிடமும் பரப்பலாம்.

பாடல் வரிகள்:

எங்க அம்மா செஞ்சா உருளைக்கிழங்கு முட்டை கறி
எனக்கு இஷ்டம் இல்ல உருளைக்கிழங்கு முட்டை கறி
எனக்கு சாப்பிட இஷ்டம் ரொட்டியோடு சிக்கன்
பருப்பு விலையை விட விலை குறைஞ்சது சிக்கன்

சொட்டைங்க தொங்குறாங்க பட்டங்களைப் பிடித்து
தலைமை நீதிபதிதான் வெளிச்சம் – கான் போட்ட இருட்டுக்கு
பதவி நீட்டித்தலுக்கான களேபரம்
தலைமை நீதிபதி ஆனாரு கம்முன்னு

கத்ரிக்கு ராஜா போல உபச்சாரம்
கசாப்புக்கு ஹீரோ போல பிரச்சாரம்
முல்லா முக்காடு போட்டு எஸ்கேப்பு
மறந்து போன கதை அப்துஸ் சலாம்

சர்க்கரை கறுப்பு சந்தையில் விற்பனை
அரசியல் கிளிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்
பிளாக்வாட்டர் ஏன் டென்சன்
தாக்குதல்கள் உள்ளே இருந்தே நடக்குது

மாவை எவ்வளவு விரிச்சாலும் சட்டி சின்னதாத்தான் இருக்கு
கொள்ளையனுங்க பார்த்துப் பார்த்து கொல்றான்
போலீசுக்கு யாரு வைப்பாங்க ஆப்பு

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. கம்யுனிஸ வினவே,
    ஏதோ சில இளைஞர்கள் ஒரு பாட்டு போட்டால் பாகிஸ்தானில் கம்யுனிஷ புரட்சி வந்து விடும் என்னும் உன் கனவு பலிக்காது.அந்த அப்துஸ் சலாம் ஒரு அஹமதியா முஸ்லிம் .அவன் எந்த பரிசு வாங்கினாலும் செல்வது நரகமே.
    கம்யுனிஷம் சீனாவிலேயே வீழ்ந்து விட்டதை சுவன்ப்பிரியன் பதிவில் படித்தாவது தெரிந்து கொள்.சீனா இஸ்லாமிய நாடு 10 ஆண்டுகளில் ஆகிவிடும். குரான் ஹதிது அடிப்படையிலான ஆட்சி உலக முழுதும் வருவது உறுதி.மறுமை நாளுக்கு அஞ்சி இஸ்லாமை ஏற்றுக் கொள்

    • //கம்யுனிஷம் சீனாவிலேயே வீழ்ந்து விட்டதை சுவன்ப்பிரியன் பதிவில் படித்தாவது தெரிந்து கொள்.சீனா இஸ்லாமிய நாடு 10 ஆண்டுகளில் ஆகிவிடும். குரான் ஹதிது அடிப்படையிலான ஆட்சி உலக முழுதும் வருவது உறுதி.மறுமை நாளுக்கு அஞ்சி இஸ்லாமை ஏற்றுக் கொள்//

      அம்பி ராம் சுவனப்பிரியனுக்கு ஒரு மண்ணும் தெரியவில்லை
      Rss தலைவர் சுதர்சன் ஒரு புத்த்கம் எழுதியிருக்கார் மரணப்படுகுழியில் கம்யூனிசம்
      அடுக்கடுக்கான ஆதாரங்கள் இறுதியில் மனுதர்மம் வேல்லும் என்று ஆருடம் வேறு

      ஆகண்ட பாரத திட்டத்தில் நோபளமும் சீனாவும் உண்டாம் இந்து மதத்தை ஏற்றுக் கொள் அதைவிட சிறப்பு என்ன சொல்றீங்கே அம்பி

      • பாகிஸ்தானில் கடவுள் இல்லைன்னு வாய் தொரந்தாலே மத துவேச சட்டப்படி ஆளை தீர்த்துகட்டிவிவுவர்!அப்புறம் எப்படி கம்யூனிசம் வளரும்?கம்யூனிஸ்டாக உள்ளே வரும்போது மதத்தை பின்பற்றுபவராக இருக்கலாம்!ஆனால் இயக்த்தில் இணைந்த பின்னும் அவர் தனது மதத்தை விடவில்லை எனில் அவர் கம்யூன்சிட் இல்லைன்னு லெனின் சொன்னதா நியாபகம்!

    • I accepted, he was in the HELL. Fortunately Abdus salam was not living in any Sharia destroyed country during his historical Result.He already left the Hell,because he is the Hero of science,not the idiotic decible of cruel philosaphy.Instead of Linving under Shariah Law suiside is TRILLION times better brother

  2. வினவு அவர்களே நீங்கள் என்ன சொல்ல வருகீறிர்கள்! உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் நல்லாட்சி நடை பெறுவது போலவும். இஸ்லாமிய (?) நாடான பாகிஸ்தானில் மட்டும் அடிமை ஆட்சி நடக்கின்ற மாதிரி சொல்கிறீர்கள். அந்த பையன் படினதுக்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம். அவன் இன்றைய உரிமைகளை கேட்டு பாடுகிறான். எப்படி நீங்கள் தெருவுக்கு தெரு படுகிறீர்களோ அதையே தான் அவன் யூடுபில் பாடுகிறான். உச்சந்தலைக்கும் உள்ளங்காலுக்கும் முடித்து போட வேண்டாம். உங்கள் இரண்டு பேருக்குமே தேவை ஆட்சி, பணம் அவ்வளவு தான்.
    எனக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை. உலகத்தில் உள்ள மத சம்பந்தபட்ட எந்த அரசியலும் சரி இல்லை என்று சொல்கிறீர்கள். சரி எது சரியான ஆட்சி. கம்னியுஸ்ட் ஆட்சி தான் சரியான ஆட்சி என்றால் அதனுடைய சட்ட திட்டங்களை சொல்லவும். அந்த ஆட்சி-இனால் இப்போது எந்த நாடு நல்ல சுபிட்சமாஹா இருக்கு என்று சொல்லி விட்டு பிறகு மற்றவர்களை குறை சொல்லவும். (குறிப்பு : பாகிஸ்தானில் உள்ளது இஸ்லாம் (மத) சம்பந்தமான ஆட்சி கிடையாது)

    • // (குறிப்பு : பாகிஸ்தானில் உள்ளது இஸ்லாம் (மத) சம்பந்தமான ஆட்சி கிடையாது) //

      என்னது பாகிஸ்தானுல ஆர்.எஸ்.எஸ் ஆட்சியா? அடி ஆத்தி இந்த சேதி இத்தினி நாளா நமக்கு தெரியலயே மைதீன் பாய்!

      • //என்னது பாகிஸ்தானுல ஆர்.எஸ்.எஸ் ஆட்சியா?//
        முட்டாள் தனமான பதில்.. அர்த்தம் அது அல்ல.. இஸ்லாம் காட்டிய வழிமுறை படி அல்ல என்பது தான் ..

        • பாகிஸ்தானுல இருக்குறது இசுலாமிய ஆட்சி இல்லேன்னு தமிழ்நாட்டுல இருக்கிற மைதீன் பாய் சொன்னாருன்னா அவருதான் உலக இசுலாமிய ஆட்சிக்கு அத்தாரிட்டின்னு ஆகாதா? நீங்க சொல்றதை பாகிஸ்தான் மக்கள் ஏத்துக்கிட்டாங்களா? அங்க நடக்குறது இசுலாமிய ஆட்சி இல்லேன்னு அவங்க உங்ககிட்ட சொன்னாங்களா? பாகிஸ்தான் எங்க இருக்குது, அதன் பிரச்சினை என்னண்ணு தெரியுமா?

      • //என்னது பாகிஸ்தானுல ஆர்.எஸ்.எஸ் ஆட்சியா? அடி ஆத்தி இந்த சேதி இத்தினி நாளா நமக்கு தெரியலயே மைதீன் பாய்!//

        இத கேட்டிகளா? சைனாவிலும் க்யூபாவிலும் Rss ஆட்சியாம் அட கொக்க மக்கா

  3. அண்ணே, ஹைதர் அலி,

    சவுதியில இருந்து கொஞ்சம் வினவுக்கு வந்து இந்த பாட்டைக் கேளுங்கண்ணே, நம்ம இசுலாமிய சகோதரர்கள் அமெரிக்காவையும், முல்லாக்களையும் ரவுண்டு கட்டுறதை பாத்து உடல் உண்மையிலேயே சிலிர்க்குதுண்ணே! சீனாக்காரன் இசுலாமை தழுவதறாத ஒரு வீடியோவை பாத்து ஃபுல்லரிக்கிறது உண்மைன்னா நம்ம இசுலாமிய கோட்டைக்குள்ளேயிருந்து இப்புடி ஒரு பாட்டு வந்தா என்னண்ணே செய்யுறது?

    • //இசுலாமிய கோட்டைக்குள்ளேயிருந்து இப்புடி ஒரு பாட்டு வந்தா என்னண்ணே செய்யுறது//
      என்னமோ இஸ்லாம் தான் இந்த வாலிபர்களை கட்டி போடுவது மாதிரியும், இங்க அத சொன்னா இஸ்லாத்தின் பேரினால் கொன்னு போடுவேன் என்பது மாதிரியும் இருக்கு இந்த வரிகள். எப்படி இந்தியாவில் அல்லது மற்ற நாடுகளில் ஒரு தரிகெட்ட அரசியல் வாதியை கேள்வி கேட்டால் அல்லது அவனை எதிர்த்தால் என்ன நடக்குமோ.., அதற்கு பயந்து தான் அந்த வாலிபன் பாடுரானே தவிர இஸ்லாம் எங்களுக்கு எல்லா விதத்திலும் எங்களை கட்டி போட்டு விட்டது. அதனால் தான் நாங்கள் முன்னேறவில்லை என்பது அல்ல.

      • // இந்தியாவில் அல்லது மற்ற நாடுகளில் ஒரு தரிகெட்ட அரசியல் வாதியை கேள்வி கேட்டால் அல்லது அவனை எதிர்த்தால் என்ன நடக்குமோ.., அதற்கு பயந்து தான் அந்த வாலிபன் பாடுரானே தவிர //

        மைதீன் பாய் கரீக்டுண்ணே, பாகிஸ்தானுல ஆட்சி செய்யுற அரசியல்வியாதிங்க இசுலாமிய மதவாதிங்குறதன்னால, பாட்டுல முல்லாக்களை கிண்டல் செய்து வரி வருது, நல்லாப் பாருங்கண்ணே!

    • அட யாரு இவுகே நம்ம என்கவுண்டரா எப்பூடி இருக்கீகே? நல்லா இருக்கீகளா? உம்மா நல்லா இருக்கீறாகளா? 2 மணி அவுது பசியாறிட்டீகளா

      //சவுதியில இருந்து கொஞ்சம் வினவுக்கு வந்து இந்த பாட்டைக் கேளுங்கண்ணே,//

      அட அதிசயம் இங்கே பாருங்கே மிட்டாய் கட

      அண்ணே சவுதியில் இருந்தாலும் மாற்று கருத்த தெரிந்துக் கொள்ள வேனுமுன்னு பொழுதன்னைக்கும் வினவுலே தான் கேடக்கோம்

      அப்புறம் வினவே சவூதியில் தடை பண்ண வேண்டும் என்று சில நண்பர்கள் சொன்னாங்கே பெரும பேசுறேன்னு நினைக்காதீங்கே நம்மளுக்கு இங்கு நண்பர்கள் அதிகம்
      அவிய்ககிட்டே மாற்றுகருத்துக்களை தெரிந்து கொள்ள வேண்டும் இதுலாம் தவறுன்னு சொல்லி வைத்திருக்கிறேன்.

      //இசுலாமிய கோட்டைக்குள்ளேயிருந்து இப்புடி ஒரு பாட்டு வந்தா என்னண்ணே செய்யுறது?//

      இஸ்லாமிய கோட்டை ஒங்களுக்கு நல்லா காமடி வருதுண்ணே

  4. புரியவில்லையா வினவு!

    //கத்ரிக்கு ராஜா போல உபச்சாரம்
    கசாப்புக்கு ஹீரோ போல பிரச்சாரம்//

    அந்த இளைஞர்களின் பாடல் வரிகள் அனைத்தும் பாகிஸ்தானின் ஆட்சியாளர்களை நோக்கியே பாடப்பட்டுள்ளது. அஜ்மல் கசாபை ஹீரோவாக்கினால் அதுதான் இஸ்லாத்துக்கு மாற்றம். அரசியல் வாதிகளும் ராணுவமும் மக்களின் பணத்தை ஏப்பம் விடுவதை (நம் நாட்டைப் போல்) சற்று ஹாஸ்யமாக பாடியுள்ளனர்.

    //இசுலாமியக் கோட்டைக்குள்ளிருந்து கொண்டே அதே கேலி செய்யும் தைரியம் பாரட்டத்தக்கது.//

    இந்த குசும்புதானே வேணாங்கறது. இங்கே இந்த பாடல் வரிகளில் ஏதாவது ஒரு இடத்திலாவது குர்ஆனின் கட்டளைகளையோ முகமது நபியின் போதனைகளையோ கிண்டலடித்து பாடப்பட்டதாக காட்ட முடியுமா?

    நெஞ்சறிந்து பொய் சொல்ல வேண்டாம் வினவு!

    • அண்ணே,

      உலகம் முழுக்க குர்ஆன், நபி போதனையை பரப்புற வேலயை அதிகாரப்பூர்வமா செய்யுறது முல்லாக்கள்ணே, அதுனாலதான் பாட்டுல பாகிஸ்தானுல இருக்குற முல்லாக்கள் நாட்டை எப்படி கெடுத்துருக்காங்கண்ணு வருதுண்ணே!

      இல்லேன்னா முல்லான்னா என்னண்ணே அர்த்தம்?

    • இந்தப் பாட்டு தயாரிக்க சியோனிஸ்ட்டுங்க பணம் கொடுத்ததாக மதவாதிகள் பிரச்சாரம் செய்வாங்கிறதை கிண்டல் பண்ணி ஒரு அட்டை வருதுண்ணே, அடுத்து இந்த வீடியோவை வெளியிட்டா கொலை மிரட்டல் மதவாதிங்கிட்ட இருந்து வரும்ணு அந்த பசங்க பயப்பட்டதா செய்தி இருக்குண்ணே, இதுக்கெல்லாம் என்னண்ணே அர்த்தம்?

    • சுவனப்பிரியன் அண்ணே

      பாகிஸ்தான் தொழிலதிபர்கள் சிலர் மோடியை பாகிஸ்தான் வருமாறு அழைத்திருக்கின்றனர். குஜராத் ‘முன்னேற்றத்தின்’ மந்திரத்தை பாகிஸ்தானிலும் ஓதுவதற்கு . மோடி பாகிஸ்தானுக்கு போனாலும் போவான் . அப்படிப் போனா உங்க பதிவுக்கு தலைப்பு ரெடி. “குஜராத்தில் வீழ்ந்தது இந்துத்வா”.

      ஹைதர் அலி அண்ணே –

      ரொம்ப புல்லரிக்கும். ஆடு மாடுகளை பக்கத்துல உட்டுராதீங்க.

      • //பாகிஸ்தான் தொழிலதிபர்கள் சிலர் மோடியை பாகிஸ்தான் வருமாறு அழைத்திருக்கின்றனர். ////
        பாகிஸ்தான் தொழிலதிபர்கள் பரமேசுவிடம் சொல்லி அழைத்தார்களா? மீடியாக்களை கையில் வைத்துக் கொண்டு தனக்கு சாதகமான செய்திகளைகாசுகளை அள்ளி வீசி வெளியிட்டு கொள்ளும் மோடி, ஆட்சிக்கு வரும் முன்பு குஜரராத் தொழில் துறையில் முன்னிலை வகித்து வந்தது. அப்போது இந்தியாவில் என்ன நிலையில் குஜராத் நிலை இருந்ததோ அதே போன்றே இப்போதும் உள்ளது.இன்னும் சில நாட்கள் போனால் சீனாவில் ,ஜப்பானில் உள்ள தொழில் அதிபர்கள் மோடி வந்தால் ஆயிற்று என்று இல்லையெனில் குஜராத்தை விட்டே போக மாட்டோம் என்று அடம்பிடிப்பதாக கதை விடுவீர்கள்.

        • இப்ராஹீம் அண்ணே..
          நீங்க சொல்றது நூறு சதம் சரி. மோடி ஒரு கேடி என்பதில் எனக்கு வேற கருத்தே கெடயாது.

          யாரோ சில சீனர்கள் இஸ்லாமியரா மாறின சம்பவத்த வச்சு சீனத்துல கம்யூனிசம் (அப்படி ஒன்று அங்கு முழுமையாய் இருந்தால்) வீழ்ந்துடுச்சுன்னு சொன்னா மோடியை கராச்சிக்கு கூப்டதால பாகிஸ்தான்ல இஸ்லாம் வீழ்ந்துடுச்சுன்னு இன்னொரு ‘அவலப்பிரியன்’ சொல்லலாம் இல்லையா?
          அதைத்தான் சொல்ல வந்தேன். உணர்ச்சிவசப் படாதீங்க அண்ணே.

          Pakistan business team invites Modi to Karachi:
          http://www.thehindu.com/news/national/article2702024.ece

      • வயிற்றெரிச்சால்
        வீட்டுக்கு வாங்கே மாட்டு பிரியாணி ரெடி
        சுவனப்பிரியன் பதிவு மகிழ்ச்சிக்காக

        • பிரியாணி பிடிக்காதுண்ணே. பீப் ஃபிரை இருக்கா சொல்லுங்க.

          மோடி இஸ்லாமை தழுவியதை பீப் சாப்டு கொண்டாடிருவோம்.

  5. உலகின் ஒரே ஒரு இஸ்லாமிய நாடு சவுதி மட்டுமே.1400+ வருடங்களில் இவ்வளவுதான் அல்லாவினாலும்,முகம்மதுவினாலும் முடிந்தது.ஆகவே சவுதியில் வந்து பாடி பாருங்க.பாட்டே இஸ்லாமில் ஹராம்.அதில் புரட்சிப் பாட்டு பாடினால் இம்மாதிரி எவனாவது பாடினா தலை இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

    • தலைவரே RAM ஏன்கிற ADAM
      மெயில் ஐடியை மாற்றி கொடு ஒரே பொம்மையாக வந்து தொலையுது
      அடுத்த முறை சரியாக ட்ரை பன்னு

  6. கல்கத்தாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 80 பேருக்கு மேல் மரணம். இதற்கு ஏன் முஸ்லீம் தீவிரவாதிகள் காரணமாக இருக்க கூடாது. நமது நடுநிலை பத்திரிக்கைகள் இன்னும் அந்த வாய்ப்பை சரிவர பயன்படுத்தவில்லை என நினைக்கிறேன்.

  7. பாகிஸ்தானில் கடவுள் இல்லைன்னு வாய் தொரந்தாலே மத துவேச சட்டப்படி ஆளை தீர்த்துகட்டிவிவுவர்!அப்புறம் எப்படி கம்யூனிசம் வளரும்?கம்யூனிஸ்டாக உள்ளே வரும்போது மதத்தை பின்பற்றுபவராக இருக்கலாம்!ஆனால் இயக்த்தில் இணைந்த பின்னும் அவர் தனது மதத்தை விடவில்லை எனில் அவர் கம்யூன்சிட் இல்லைன்னு லெனின் சொன்னதா நியாபகம்!பின்ன எப்படி கம்யூன்சம் அங்கே வரும்?

Leave a Reply to போலி என்கவுண்டர் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க