privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்மோடிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு!

மோடிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு!

-

மோடிக்கு எதிரான வழக்கு : உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு !குஜராத் மாநிலத்தில் 2002-ஆம் ஆண்டு இந்து மதவெறிக் கும்பல் கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலையின்பொழுது கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரியும், இவ்வினப்படுகொலைகளுக்கு நீதி வேண்டிப் போராடி வரும் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பும் இணைந்து, “இவ்வினப்படுகொலை தொடர்பான வழக்கில் மோடியையும் மற்றும் அவரது சக அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேரையும் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும்; இவ்வழக்கை மையப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்’’ எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த நான்காண்டுகளாக இம்மனு மீதான விசாரணையை நடத்தி வந்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு மன்றம், “இது நாள்வரை தமது கண்காணிப்பின் கீழ் நடந்துவந்த விசாரணை முடிவுகளின் அடிப்படையில் ஜாகியா ஜாஃப்ரியின் புகார் மீதான இறுதி முடிவை விசாரணை நீதிமன்றம் எடுக்க வேண்டும்; சிறப்புப் புலனாய்வுக் குழு தனது இறுதி அறிக்கையையும், இவ்வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விசாரணை நீதிமன்றத்திடம் அளிக்க வேண்டும்; இனி, இந்த வழக்கைத் தாம் கண்காணிக்கப் போவதில்லை’ எனத் தீர்ப்பளித்து, இவ்வழக்கைத் தொடங்கிய இடத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டது.  இத்தீர்ப்பின் சாதக  பாதக அம்சங்களுக்குள் புகுவதற்கு முன், ஜாகியா ஜாஃப்ரியின் புகார் மனுவின் பின்னணியையும், அவர் எந்த நிலையில் நீதி வேண்டி உச்ச நீதிமன்றத்தை அணுகினார் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது.

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இனப்படுகொலைகளுள் ஒன்று, குஜராத் படுகொலை.  இந்து மதவெறிக் கும்பல் இப்படுகொலைகளை எவ்வளவு கொடூரமாகவும், வக்கிரமாகவும் நடத்தியது என்பதற்கு, குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு முக்கியமான  சாட்சியமாக உள்ளது.  இந்து மதவெறிக் கும்பல் இக்குடியிருப்பைச் சுற்றி வளைத்துத் தாக்கியபொழுது, அங்கு வசித்து வந்த இஹ்ஸான் ஜாஃப்ரி, அக்காலனியில் வசித்து வரும் முசுலீம்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறும், தங்களது உயிர்களைக் காக்குமாறும் மோடியையும், உயர் போலீசு அதிகாரிகளையும் திரும்பத்திரும்ப, பலமுறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கெஞ்சியிருக்கிறார்.  அதற்கு எந்தப் பலனும் கிட்டவில்லை.  இஹ்ஸான் ஜாஃப்ரியைத் தெருவுக்கு இழுத்துவந்து, அங்கஅங்கமாக வெட்டி, உயிரோடு நெருப்பில் வீசியெறிந்து கொன்றது, இந்து மதவெறிக் கும்பல்.  ஜாஃப்ரி மட்டுமின்றி, அக்காலனியில் வசித்து வந்த மேலும் 69 முசுலீம்களும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.  இந்த குல்பர்க் சொசைட்டி படுகொலை முதலமைச்சர் மோடிக்கும், உயர் போலீசு அதிகாரிகளுக்கும் தெரிந்தே, அவர்களின் ஆசியோடுதான் நடந்தது என்பது அப்பொழுதே அம்பலமான உண்மையாகும்.

இப்படுகொலை தொடர்பான ஆதாரங்களைத் திரட்டிய ஜாகியா ஜாஃப்ரி, இவ்வழக்கில் மோடியையும் அவரது சக அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேரையும் குற்றவாளிகளாகச் சேர்க்கக் கோரி, குஜராத் மாநில போலீசு தலைமை இயக்குநரிடம் அளித்த மனு நிராகரிக்கப்பட்டது.  பின்னர், ஜாகியா தனது கோரிக்கையை விசாரிக்கக் கோரி குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  அவரது மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு ஜாகியாவுக்கு அறிவுறுத்தியது. இத்தீர்ப்பை எதிர்த்து கடந்த 2008 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனுவொன்றை, நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்புடன் இணைந்து தாக்கல் செய்தார், ஜாகியா.

மோடிக்கு எதிரான வழக்கு : உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு !இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உச்ச நீதிமன்றம், ஜாகியாவின் குற்றச்சாட்டுகள் பற்றிய புலன்விசாரணையை சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைத்தது.  நரேந்திர மோடி உள்ளிட்டுப் பலரையும் விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, நரேந்திர மோடிக்கு எதிரான சாட்சியங்கள் வலுவாக இல்லாததால், அவரைக் குற்றவாளியாகச் சேர்க்க முடியாது என உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்தது.  இந்த அறிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றபோதும், தெகல்கா வார இதழ் இதனை வெளியிட்டுச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முடிவுகளை அம்பலப்படுத்தியது. ( பார்க்க: புதிய ஜனநாயகம், மார்ச் 2011)

இதையே மறைமுகமாக உச்ச நீதிமன்றமும் ஒப்புக் கொண்டது. சிறப்புப் புலனாய்வுக் குழு தனது விசாரணையில் கண்டறிந்துள்ள  உண்மைகளும், அந்த உண்மைகளிலிருந்து அது வந்தடைந்துள்ள முடிவும் ஒன்றுக்கொன்று பொருந்துவதாக இல்லை என விசாரணையின்பொழுது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.   இதனிடையே, இவ்வழக்கின் அமிகஸ் கியூரியாக (நீதிமன்ற நண்பன்) ராஜு ராமச்சந்திரன் என்ற வழக்குரைஞரை நியமித்த உச்ச நீதிமன்றம், சிறப்புப் புலனாய்வுக் குழு அளித்த இரு அறிக்கைகளை ஆய்வு செய்து, தனது கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அவரைப் பணித்தது.  அவர் அளித்த அறிக்கை சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மோசடியை அம்பலப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.  இதனால், அமிகஸ் கியூரி  நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையைக் கருத்திற்கொண்டு, புதிய அறிக்கை அளிக்குமாறு சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம்.

சிறப்புப் புலனாய்வுக் குழு இவ்வழக்கு தொடர்பான  விசாரணைகளை முடித்து மூன்றாவது அறிக்கையை உச்ச நீதிமன்றத்திடம் அளித்தது. மீண்டும் அவ்வறிக்கைகளை ஆய்வு செய்யுமாறு அமிகஸ் கியூரி ராஜு ராமச்சந்திரனிடம் கூறியது உச்ச நீதிமன்றம். அதுமட்டுமின்றி, நேரடியாக குஜராத்திற்குச் சென்று சாட்சிகளிடமும் விசாரணை நடத்தித் தனக்கு அறிக்கை அளிக்குமாறும் ராஜு ராமச்சந்திரனைக் கேட்டுக் கொண்டது.  இதன் அடிப்படையில் குஜராத்துக்கு நேரில் சென்ற அமிகஸ் கியூரி, சாட்சிகளிடம் நடத்திய விசாரணையை, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நடந்த இரண்டாவது விசாரணை என்றுதான் சொல்ல வேண்டும்.  இவ்வழக்கு தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையை உச்ச நீதிமன்றம் முழுமையாக நம்பவில்லை என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது.

இப்படிபட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் தன்னிடமுள்ள இரண்டு அறிக்கைகளின் தகுதியின் அடிப்படையில் இவ்வழக்கில் ஒரு முடிவை அறிவித்திருக்க முடியும்.  தற்பொழுது கிடைத்துள்ள சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில், ஜாகியா கோரியபடி மோடியைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியிருக்க முடியும்.  ஆனால், உச்ச நீதிமன்றமோ வழக்கை விசாரணை நீதிமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டது.  முடிவு சொல்ல வேண்டிய தருணத்தில் சட்டத்தைக் காட்டி தந்திரமாக நழுவிவிட்டது.  “வழக்கின் விசாரணை முடிந்துவிட்ட நிலையில் சட்டப்படி உச்ச நீதிமன்றம் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது.  வாதி, பிரதிவாதி இருவரின் சட்ட உரிமைகளையும் காக்கும் வகையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக” சட்ட வல்லுநர்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வியாக்கியானம் சொல்கிறார்கள்.

உச்ச நீதிமன்றம் இந்து மதவெறி பயங்கரவாதக் குற்றங்களை மென்மையாக அணுகுவதை மூடிமறைப்பதற்கே இந்த நியாயவாதமெல்லாம் பயன்படுகிறது.  தற்பொழுது உச்ச நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் நடந்து வரும் அலைக்கற்றை விசாரணை தொடர்பாக நீதிபதிகள் வெளியிடும் கருத்துக்களை இந்த வழக்கின் தீர்ப்போடு ஒப்பிட்டால், உச்ச நீதிமன்றத்தின் காவித்தனம் அப்பட்டமாகத் தெரியும்.

அலைக்கற்றை ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு மீது நடந்துவரும் விசாரணையில் மைய அரசின் வழக்குரைஞர் பி.பி. ராவ், “விசாரணை முடிந்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின், உச்ச நீதிமன்றம் வழக்கை கண்காணிப்பது முடிவுக்கு வந்துவிடும்.  எனவே, நீதிபதிகள் இந்த இலட்சுமணன் கோட்டைத் தாண்டக் கூடாது” என வாதிட்டு, இதற்கு ஆதரவாக ஜாகியா ஜாஃப்ரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் மேற்கூறிய தீர்ப்பையும் எடுத்துக் காட்டினார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி கங்குலி, “இலட்சுமணன் கோடு புனிதமானதல்ல.  சீதை, இலட்சுமணன் கோட்டைத் தாண்டியிருக்காவிட்டால், இராவணனைக் கொன்றிருக்க முடியாது.  ஒரு வழக்கைக் கண்காணிப்பதற்கோ அல்லது அவ்வழக்கை மேலும் விசாரிக்க வேண்டும் எனக் கோருவதற்கோ உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரத்திற்கு முற்றாகத் தடை போட முடியாது.  ஊழல் என்ற நோய் எங்கும் பரவியிருப்பதால், மரபைப் புதுப்பிக்க வேண்டும்” எனக் கூறினார்.

ஊழலைவிட, இந்து மதவெறி பயங்கரவாதம் கொடிய ஆட்கொல்லி நோய் என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் புரிந்து கொள்வதற்கு இன்னும் எத்தனை முசுலீம்களின் உயிர்கள் பலியாக வேண்டும்? அலைக்கற்றை ஊழல் வழக்கில், நீதியை நிலைநாட்டுவதுதான் முக்கியம் என்றும், அதன் பொருட்டு மரபுகள், நெறிமுறைகள் என்ற ‘லட்சுமணன் கோட்டை’ தாண்டலாம் என்றும் வியாக்கியானம் அளிக்கும் உச்சநீதிமன்றம், குல்பர்க் சொசைட்டி வழக்கில், சிறப்புப் புலனாய்வுக் குழு மோடிக்கு சாதகமாக நடந்து கொள்கிறது என்று பச்சையாகத் தெரிந்தபோதும், சட்டத்தையும் நெறிமுறையையும் பின்பற்றுவதாக பம்மாத்து செய்து நீதியைப் பலியிடுகிறது.

பாபர் மசூதி வழக்கில், “இந்து என்பது மதமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை” என ஆர்.எஸ்.எஸ்.இன் கொள்கையையே தீர்ப்பாக அளித்ததில் தொடங்கி, தற்போது மோடி தப்புவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் இந்தத் தீர்ப்பு வரையில், உச்ச நீதிமன்றத்தின் இந்து மதவெறிப் பாசத்துக்கு பல உதாரணங்களைக் காட்ட முடியும்.  இந்து மதவெறிப் படுகொலைகளால் பாதிக்கப்படும் முசுலீம்களை நம்பவைத்து கழுத்தறுப்பதன் மூலம், அவர்களைப் பயங்கரவாதத்தின் பக்கம் தள்ளி விடுகிறது நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம் மோடியை நிரபராதி என்றும் கூறிவிடவில்லையே எனச் சட்ட வல்லுநர்கள் இத்தீர்ப்பின் ‘மேதமை’யை எடுத்துக் காட்டுகிறார்கள்.  கேள்வியைப் புரட்டிப் போட்டால்தான் இத்தீர்ப்பின் ஆபத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

மோடியின் அதிகாரத்தின் கீழுள்ள ஒரு கீழமை நீதிமன்றம் மோடியைக் குற்றவாளியாக அறிவிக்கும் என நம்புவதற்கு ஏதாவது இடமுண்டா?  குஜராத் கலவர வழக்குகளில் ஒன்றான பெஸ்ட் பேக்கரி வழக்கு மும்பய் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றத்தால் மாற்றப்பட்ட பிறகுதான், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர்.  இவ்வினப்படுகொலை தொடர்பான ஒன்பது முக்கியமான வழக்குகளில் புலன் விசாரணையே ஒழுங்காக நடைபெறாததால், அவ்வழக்குகளின் விசாரணையை உச்ச நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைத்திருக்கிறது.  குஜராத் போலீசும் அம்மாநில நீதிமன்றங்களும் சேர்ந்து ஊத்தி மூடிவிட்ட 1,958 கலவர வழக்குகளை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், 117 வழக்குகளில் மட்டும்தான் குஜராத் அரசு விசாரணையை நடந்துவருகிறது.  இவை அனைத்திற்கும் மேலாக, குல்பர்க் சொசைட்டி வழக்கு நடந்துவரும் விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி, குற்றவாளிகளை மென்மையாக அணுகி வருகிறார் என இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.கே. ஷா வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியுள்ளார்.  இத்தனைக்குப் பிறகும் மோடிக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் பொறுப்பை அதே விசாரணை நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதும் ஜாகியா ஜாஃப்ரியின் மனுவைத் தள்ளுபடி செய்வதும் ஏறத்தாழ ஒன்றுதான்.

மோடிக்கு எதிரான வழக்கு : உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு !அலைக்கற்றை வழக்கிலும், கருப்புப் பண வழக்கிலும் சி.பி.ஐ. விசாரணை குறித்து ‘துருவித் துருவி’ விசாரிக்கும் உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ராகவன் தலைமையில் இயங்கிவரும் சிறப்புப் புலனாய்வுக் குழு மோடிக்குச் சார்பாக நடந்து வருகிறது என்பது அம்பலப்பட்டுப் போன பிறகும், ராகவன் மீது மென்மையாகக் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. தனது முதல் அறிக்கையில் மோடியை நிரபராதி என்று சொல்லியிருக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு, தனது இறுதி அறிக்கையை விருப்பம் போலத் தயாரித்து, அதனை விசாரணை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கலாம் என்ற சுதந்திரத்தை நீதிபதிகள் வழங்கியிருக்கிறார்கள்.  மோடிக்கு எதிரானதாக இருக்கக்கூடும் எனப் பரவலாகக் கருதப்படும் அமிகஸ் கியூரி ராஜு ராமச்சந்திரனின் விசாரணை அறிக்கை, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படியும், சட்டத்தின்படியும் ஒரு காகிதக் கட்டு என்பதற்கு மேல் எந்த மதிப்பையும் விசாரணை நீதிமன்றத்தில் பெறப் போவதில்லை.

இனி என்ன? சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை மோடியைக் குற்றவாளியாக அறிவிக்காவிட்டால், ஜாகியா ஜாஃப்ரி அதனை எதிர்த்து விசாரணை நீதிமன்றத்திலேயே வாதிடலாம்.  விசாரணை நீதிமன்றம் இவ்வழக்கிலிருந்து மோடியை விடுவித்துவிட்டால், ஜாகியா ஜாஃப்ரி அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்திற்கும், பின்னர் உச்ச நீதிமன்றத்திற்கும் போகலாம். இதெல்லாம் இத்தீர்ப்பிலேயே தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறதாம்.  ஜாகியா ஜாஃப்ரி நீதி வேண்டி உச்ச நீதிமன்றத்தை அணுகினார்; நீதிமன்றமோ, மோடி உயிரோடு இருக்கும் வரை வழக்கு முடியாமலிருப்பதற்கான வழியைத் திறந்துவிட்டிருக்கிறது. குஜராத்திலேயே ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்பட்டிருக்க வேண்டிய ரத்தக்காட்டேரியிடம், தேசிய அரசியலில் கால் வைப்பதற்கான ஆசையையும் கிளறிவிட்டிருக்கிறது.

யூதர்களைக் கொன்ற இட்லரைப் போல, போஸ்னியா முசுலீம்களைக் கொன்ற மிலோசேவிக் போல இனப்படுகொலை குற்றவாளியாக இந்திய மக்கள் முன் நிறுத்தப்பட வேண்டிய மோடி, வளர்ச்சியின் நாயகனாக, எதிர்காலப் பிரதம மந்திரி வேட்பாளராக ஊடகங்களால் மக்கள் முன் நிறுத்தப்படுகிறார்.ஜெயா திருந்திவிட்டாரெனப் புளுகி வரும் பார்ப்பன பத்திரிகைகள் அனைத்தும் மோடியும் திருந்திவிட்டதாகப் பிரச்சாரம் செய்கின்றன.

‘‘கோத்ரா கலவரத்தில் நேர்ந்த தவறுகளுக்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்கும் விதத்திலா முதல்வர் மோடி உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்” எனத் தலையங்கம் தீட்டுகிறது, தினமணி.  (20.09.2011)

ஒரு ரயில் விபத்து நடந்தாலே சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலகுவதைத் தார்மீகப் பொறுப்பாகச் சுட்டிக் காட்டும் இப்பத்திரிகைகள், இனப்படுகொலையின் தளபதியாகச் செயல்பட்ட மோடிக்கோ வேறொரு அளவுகோலை முன்வைக்கின்றன.  “குஜராத் மாநிலம் கடந்த பத்து ஆண்டுகளில் பல துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும், வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதையும் அந்த மாநிலத்துக்குச் சென்று திரும்பும் அனைத்துத் தரப்பினரும் உறுதிப்படுத்துகிறார்கள். . .  ஊழலில்லா நிர்வாகத்தைத் தருகிறார் என்பதாலும்தான் கோத்ரா கலவர நினைவுகளைப் புறந்தள்ளிவிட்டு, அனைத்துத் தரப்பினராலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பாராட்டப்படுகிறார்” என எழுதி மோடியின் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களைக் குழிதோண்டிப் புதைத்துவிட முயலுகிறது, தினமணி. (20.09.11)  இந்து மதவெறி அரசியலைப் பேசி ஓட்டுப் பொறுக்க முடியாதென்பதால், ‘வளர்ச்சி’ அரசியலைப் பேசி மோடிக்கு மகுடம் சூட்டப் பார்க்கிறது, பார்ப்பனக் கும்பல்.

“மதச்சார்பின்மையைப் பற்றிப் பேச நரேந்திர மோடிக்கு அருகதை உண்டா?” என வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, “கடந்த காலத் தவறுகளிலிருந்து மோடி பாடம் கற்கக்கூடாதா?  பிராயச்சித்தம் தேடுவதற்கு எல்லா மனிதர்களுக்கும் உரிமை உண்டு.  ஆனால், அவர் திருந்திவிடக் கூடாது என்று சிலர் நினைப்பது ஏன் என்று புரியவில்லை” என மோடிக்காக வரிந்துகட்டிக் கொண்டு எழுதுகிறது, ஜூனியர் விகடன்.  (28.9.11, பக்.15)

பொதுமக்களுக்கு எதிரான எந்தவொரு கலவரமும் அரசின் ஒத்துழைப்பின்றி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்துவிட முடியாது என்பது உலகமே அறிந்த உண்மை. குஜராத்தில் முசுலீம்களுக்கு எதிரான இந்து மதவெறியாட்டமோ ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்தது. இந்த ஒரு சாட்சியமே, 2002 குஜராத் இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியவர் மோடி என்பதை நிரூபித்து விடுகிறது.

அந்தக் குற்றத்தை மோடி ஒப்புக்கொண்டதில்லை என்பது மட்டுமல்ல, அதைத் தவறு என்று கனவிலும் கருதவில்லை. மாறாக, கொலைகாரர்களைச் சட்டபூர்வமாகத் தண்டிக்க முயன்றவர்களை வேட்டையாடினார். சாட்சிகளை மிரட்டி குற்றவாளிகள் அனைவருக்கும் விடுதலை வாங்கித் தந்தார். மோடியை எதிர்த்த அவரது அமைச்சர் ஹரேன் பாண்டியா கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முசுலீம் தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டுவிட்டதால், அந்தக் கொலையை யார் செய்தது, அந்தக் கொலை எப்படி நடந்தது என்பது சி.பி.ஐ. ஆலும் ‘கண்டுபிடிக்க’ முடியாத மர்மமாக உள்ளது.  கலவரத்தில் மோடியின் பாத்திரத்தை அம்பலப்படுத்திவரும் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் வேலைநீக்கம் செய்யப்பட்டு சிறை வைக்கப்படுகிறார். நம் கண் முன்னால் நடக்கும் உண்மை இதுதான்.

மோடி திருந்திவிட்டதாக ஒப்புக் கொள்ளவேண்டும். ஒப்புக் கொள்ளாதவன் குற்றவாளி என்று ஜூனியர் விகடனும் தினமணியும் இரட்டை நாயனம் வாசிக்கின்றனர். தமிழகத்தில் இருக்கும்போதே இந்தப் போடு போடும் இந்த உத்தமர்கள், ஒருவேளை குஜராத்தில் இருந்திருந்தால் சஞ்சீவ் பட்டையும் ஜாகியா ஜாப்ரியையும் கத்தியால் குத்திக் கொன்று விட்டு, ‘மாடு முட்டிச் சாவு’ என்று செய்தி போடவும் தயங்க மாட்டார்கள்.

குஜராத் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறதாம். கலவர நினைவுகளை புறந்தள்ளிவிட்டு அனைவரும் பாராட்டுகிறார்களாம். அது யாருக்கான வளர்ச்சி என்பது ஒருபுறமிருக்கட்டும். உங்கள் வீட்டிற்குள் ஒருகாலிகள் கும்பல் நுழைந்து, பெண்களை நிர்வாணப்படுத்தி, வன்புணர்ச்சி செய்து, ஆண்களைக் கொன்றுவிட்டு எல்லாம் முடிந்த பின், “நாங்களே குடும்பத் தலைவராக இருந்து உங்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கிறோம்” என்று கூறினால், பதிலுக்கு நீங்கள் காறித் துப்புவீர்களா, செருப்பால் அடிப்பீர்களா என்று தெரியவில்லை.

மோடிக்கு எதிரான வழக்கு : உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு !ஜூனியர் விகடன் கழுகார் என்ன சொல்கிறார் என்றால், அவரும் அவரது குடும்பத்தினரும் அப்படி அநாகரிகமாக நடந்து கொள்ள மாட்டார்களாம். அந்தக் காலிகளின் பிராயச்சித்தத்தை அங்கீகரித்து, அவர்களைக் குடும்பத் தலைவர்களாக ஏற்றுக் கதவைத் திறந்துவிடுவார்களாம். தினமணி குடும்பத்தினரோ, பழைய கலவர நினைவுளை மறந்து விட்டு, இனிய கனவுகளோடு புதிய குடும்பத் தலைவரைத் தழுவி வரவேற்பார்களாம். இவ்வளவு பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் ஆ.ராசா விசயத்தில் மட்டும் ஏன் குறுகிய மனோபாவம் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை.

குற்றம் என்று எடுத்துக் கொண்டாலும், கொலை, தீவைப்பு, வன்புணர்ச்சி போன்ற குற்றங்களை ஆ.ராசா தலைமை தாங்கி நடத்தவில்லையே. புறங்கையை நக்கியிருக்கிறார். எவ்வளவு நக்கினார் என்பதை சி.பி.ஐ. இனிமேல்தான் கண்டு பிடிக்க வேண்டும். மோடி விசயம் அப்படியில்லை. எத்தனை பிணங்கள் விழுந்திருக்கின்றன என்று உலகத்துக்கே தெரியும்.

‘வளர்ச்சி’ என்று எடுத்துக் கொண்டால், மோடியின் குஜராத் அடைந்திருக்கும் வளர்ச்சியைக் காட்டிலும், ராசாவின் காலத்தில் மொபைல் போன்கள் அடைந்த வளர்ச்சி அதிகமில்லையா? மோடி பிரதமராகலாம். ராசாவுக்கு திகாரா? அல்லது ஆ.ராசாவும், நேரு உள்விளையாட்டு அரங்கை மூணு நாட்களுக்கு வாடகைக்கு எடுத்து, ஒரு ‘சூப்பர் டீலக்ஸ் உண்ணாவிரதம்’ நடத்திவிட்டால், அதனை பிராயச்சித்தமாகக் கருதி விடுவிக்கப்படுவாரா?

___________________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2011

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. Before setting the godhra rail on fire the muslim terrorists should have thought about the consequences. They are a minority group in India and no majority lot will tolerate the minorities menance. Hindus in India have been tolerating these stupid muslims (those who create problem in the name of their religion) for the past 200 years. We have given them enough time to change, but they haven’t. They are going from worse to bad and now they’re moving towards UGLY. MUSLIM is the last found religion in the world and after that no new religion emerged. If they behave like this, muslim will be first religion to be wiped out of this universe.
    They should learn from Christian minorites and Sikhs on how to behave in India. OR they should learn from Other Hindus spead all across their world, including Pakistan and china, Do they create any problem to the country they live in? For every action there will be equal and opposite reaction and that’s what happened in Gujarat. JAI HIND.

    • 200 வருசமா முஸ்லீம் தொல்ல பண்ணுறது இருக்கட்டும் .. நீ 2000 வருசமா எங்களை தொல்ல பண்ணிட்டு இருக்கியே அதுக்கு பதில் சொல்லு …

      கோவிலுக்குள்ள நாங்க நுழையக் கூடாது. இவுக போனாகனா நாங்க பம்மிட்டு போகனுமாம். என்ன என்ன ஆட்டமெல்லாம் ஆடுனீங்க டா … உங்களை இந்த நாட்டை விட்டு முதல்ல வெளியேத்திட்டு அப்புறம் முஸ்லீம்களைப் பாப்போம்..

      இஸ்லாமிய பயங்கரவாதத்தை தூண்டி விட்டது யார் ?.. பாபர் மசூதி இடிப்பு மூலமாக அதனை செய்தது ஆர்.எஸ்.எஸ். பீ.ஜே.பி கும்பல் தானே ?.. அமைதியாய் இருந்த நாட்டில் பதவி வெறி பிடித்து மக்களை பிரித்தாடும் அயோக்கியகளை வேரறுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

      விரைவில் காவியின் மேல் சிவப்பு படரும். உன் ஆட்டம் எல்லாம் மண்ணோடு மண்ணாகப் போகும்.

      • ஆமாம்மா பாபர் மசூதி இடிப்புத்தான் இவனுகளைத்தூண்டி விட்டது…பக்கிஸ்த்தான்ல சன்னி ஸியான்னு அடிச்சுகிட்டு சாகுரது யாரு? சதாம் காடாபீன்னு மோசமான சர்வாதிக்காரம் பண்ணீ கடைசீல அமேரிக்காக்காரங்கிட்ட கெஞ்சி கூத்தாடி உயிரவிட்டது யாரு?

        வாழும் இடம் எல்லாம் தீவிரவாத்தை விதைத்ததன் பலன் தான் இஸ்லாமையர் இன்று அனுபவிப்பது எல்லாம்

  2. இந்தியன் தாத்தா சொல்றார்.. குஜராத் கலவரத்துக்கு நியூட்டனின் மூன்றாம் விதி தான் காரணமாம்.. முஸ்லீம் மைனாரிட்டி ஒழுங்கா மரியாதையா இல்லாட்டி பொளந்துருவாராம் (தெரு ரவுடி மிரட்டுர தொனி தெரியுதா).. சொல்ற விதத்துலேயே தெரியல யாரு உண்மையான ரவுடின்னுட்டு…
    கோத்ரா ரயிலில் நடந்தது இந்து-முஸ்லீம்களுக்கிடையே அடிதடி, கைகலப்பு.. அதற்குப்பின் பெட்டிக்கு தீவைத்தது யார் என்று சிபிஐ முதல் கிபிஐ வரை மண்டையைப் பிய்த்துக் கொண்டு பின்பு உள்ளிருந்து யாரோ ஊற்றியிருந்தாலொழிய இவ்வளவு பெட்ரோல் எரிபொருள் உள்ளே எரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கண்டுபிடிக்க.. (டவுட்டுன்னா கதவு சன்னல் எல்லாம் மூடுன ரயி்ல் பெட்டிக்குள்ள ஒரு வாட்டர் பாட்டிலை வெளிய கீழே நின்னுட்டு உள்ள பொட்டிக்குள்ள விழுற மாதிரி எறிஞ்சு பாரேன்) உடனே அவசர அவசரமாக ரயில் பொட்டியை, எவிடென்ஸை டிஸ்போஸ் செய்தது மோடி அரசு.. பின்னர் நீதிபதிகளைக் கவனித்ததில் இன்று நீதிமன்றம் டுபாக்கூர் தீர்ப்பு சொல்கிறது.. பாப்ரி மஜித் வழக்கும் இதைப் போலத்தான்..
    போங்கப்பா போய் பொழப்பைப் பாருங்க.. உங்க வாழ்க்கைய, பொருளாதாரத்தை சீரழிச்சுட்டு,கார்ப்பரேட் கையில் குடுத்துட்டு.. உன் வாழ்க்கையின் துன்பத்துக்கெல்லாம் காரணம் முஸ்லீம் தான்னு உனக்கு தண்ணி காட்டுரான் பாரு மோடி.. அவன் தான்யா உண்மையிலேயே சரியான மோடிமஸ்தான்.
    போ.. அவன் பின்னாடியே போ.. நிச்சயம் உனக்கு மோட்சம் தான்..

  3. கடந்த, 1998ல் லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக கோவை வந்த, அத்வானி யை கொலை செய்யும் முயற்சியில் ஒரு கோழை கூட்டம் முயன்றது; தெய்வாதீனமாக உயிர் தப்பினார். பயங்கரவாதிகள், தம் செயல்களுக்கு, மும்பை யை ஆடுகளமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். பயங்கரவாத செயல்களுக்கு பலியானவர்கள் மும்பை வாசிகள் பலர்.தற்சமயம், மதுரைக்கு ரதயாத்திரை வந்த அத்வானியை கொல்ல சதிதிட்டம் தீட்டப்பட்டு, அது ஒரு சில வழிப்போக்கர்களால் தவிர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்கு பின்னால் இருந்து இயங்கும் கூடாரம் ஒழிக்கப்பட வேண்டும்.மும்பை வெடிகுண்டு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி கசாப்பிற்கு, இன்றும் அரசு ராஜமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. பல உயிர்கள், பயங்கரவாதிகளால் படு பயங்கரமாக பறிக்கப்படும் போது, உயிரிழந்தவர்களுக்கு பணம் பட்டுவாடா என்ற கொள்கைகளை அரசு தவிர்த்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் கையாலாகாதவர்களை, நடு ரோட்டில் வைத்து, சுட்டு தள்ளவேண்டும்.பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தேச துரோகியா அல்லது அன்னிய சதிகாரனா?சட்டங்களை இயற்றினால் மட்டும் போதாது; சட்டம் தன் கடமையை செய்ய அரசியல் குறுக்கீடு கூடாது.வெடிகுண்டு வைக்கப்பட்ட பாதையில், வழிப்போக்கர் செல்லாமல் இருந்திருந்தால், அவர்களுக்கு வெடிகுண்டு ஒயர் கண்ணில் படாமல் இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும் என்பதை யோசிக்கும் போதே, நெஞ்சு நடுங்குகிறது.உதவியவர்களுக்கு பரிசும், பாராட்டும் தெரிவித்துள்ளது, பாராட்டுக்குரியது.

    • //////////////பல உயிர்கள், பயங்கரவாதிகளால் படு பயங்கரமாக பறிக்கப்படும் போது, உயிரிழந்தவர்களுக்கு பணம் பட்டுவாடா என்ற கொள்கைகளை அரசு தவிர்த்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் கையாலாகாதவர்களை, நடு ரோட்டில் வைத்து, சுட்டு தள்ளவேண்டும்.////

      மிகச் சரியாகச் சொன்னீர்கள்… உடனடியாக ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார்,வி.எச்.பி,பீ.ஜே.பி காலிகளை எல்லாம் பிடித்து இழுத்து வாருங்கள் .. நடு ரோட்டில் நிற்க வைத்து பிளந்து கட்டுவோம் …

      /////பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தேச துரோகியா அல்லது அன்னிய சதிகாரனா?/////////////////

      தெரியாதா உங்களுக்கு ?.. அத்வானி பாகிஸ்தானில் பிறந்த சதிகாரன் தான். தேச துரோகி தான் . பாபர் மசூதி இடிப்பு என்ற பெயரில் அமைதியாய் கிடந்த இந்த தேசத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்த முதல் குற்றவாளி. போய் சிறிது வரலாற்றைப் படித்து விட்டு வரவும்.

      • \\பாபர் மசூதி இடிப்பு என்ற பெயரில் அமைதியாய் கிடந்த இந்த தேசத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்த முதல் குற்றவாளி\\

        பாபர் மசூதி இடிப்புக்கும், இன்ன பிற இஸ்லாமியர் மீதான தாக்குதல்களுக்கும் அத்வானி, மோடி போன்ற பார்ப்பனர்களே காரணமெனில், அவர்களை மட்டும் தானே தண்டிக்க வேண்டும்… குண்டு வைக்கும்போது என்னமோ பாப்பன் மட்டுமே சாகிறான் என்று கூறுவீர்கள் போல… அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு பார்ப்பனர்கள் சாவார்களா… மீதி அனைவரும் என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்… ஏதோ ஒரு சிலர் பாபர் மசூதியை தாக்கியதால் அதற்கு பழி வாங்க தொடர்ந்து குண்டு வைத்து பாபர் மசூதிக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத அப்பாவி உயிர்களை பறிப்பது என்ன நியாயம்? நீங்கள் கூறுவது போல ஒட்டு மொத்த தவறும் பார்ப்பனர்கள் மீதுதான் என்றல் தீவிரவாதிகளின் இலக்கு பார்ப்பனர்களாக தானே இருக்க வேண்டும்? ஏன் அப்பாவி இந்து, இஸ்லாம், கிறித்தவ, சீக்கிய, பௌத்த இனத்தவர் கொல்லப்படுகிறார்கள்?

        ஒரு சில இந்தியரின் தவறுக்கு ஒட்டு மொத்த இந்தியர்களையே விரோதிகளாக கருதி குண்டு வைத்து கொன்றால், ஒரு சில தீவிரவாதிகளின் இச்செயலுக்காக அவர் சார்ந்த ஒட்டு மொத்த இனத்தை தீவிரவாதிகள் என்று சொல்வது தான் நடக்கிறது…

        • // பாபர் மசூதி இடிப்புக்கும், இன்ன பிற இஸ்லாமியர் மீதான தாக்குதல்களுக்கும் அத்வானி, மோடி போன்ற பார்ப்பனர்களே காரணமெனில், அவர்களை மட்டும் தானே தண்டிக்க வேண்டும்… குண்டு வைக்கும்போது என்னமோ பாப்பன் மட்டுமே சாகிறான் என்று கூறுவீர்கள் போல… அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு பார்ப்பனர்கள் சாவார்களா… மீதி அனைவரும் என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்…//

          அடப் பாவிகளா! பிராமணாள வேணுமின்னா குண்டு வச்சுக் கொன்னுக்கலாம்ன்னு லைசன்சு குடுக்கறாரே இந்த மனுஷன். மோடியோட சேர்ந்தாலும் எதுத்தாலும் பாடியாயிடுவோம் போல இருக்கே. பேசாம குரான் 4ம் வேதம்னு ஒரு ஆல் இண்டியா அறிக்கை விட்டுட்டு இந்து-முஸ்லீம் பாய் பாய்ன்னு எஸ்கேப் ஆயிட வேண்டியதுதான்.

          • \\பிராமணாள வேணுமின்னா குண்டு வச்சுக் கொன்னுக்கலாம்ன்னு லைசன்சு குடுக்கறாரே இந்த மனுஷன்\\

            அது எனது கருத்து அல்ல… அவ்வாறு நான் கூறவில்லை… ஆயினும் எமது கருத்தில் அவ்வகை புரிதலை கொடுக்கும் வாக்கியங்கள் இருக்குமாயின் அதற்காக வருந்துகிறேன்…

            இந்தியாவுக்கு எதிரான இஸ்லாமிய தீவிரவாதத்தை ஆதரிக்க எந்த ஒரு முகாந்திரமும் இல்லாதபோது, ஒரு சில கம்யுனிச விஷ பிரச்சார போராளி குழுக்கள் இஸ்லாமிய தீவிரவாதத்தை பார்ப்பனிய எதிர்ப்பு என்ற வட்டத்துக்குள் கொண்டு வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.. ஆனால் அது கயமை. இஸ்லாமிய தீவிரவாதம் எனபது உலகெங்கும் உள்ளது…. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் அது கிறித்தவத்துக்கு எதிராகவும், சீன போன்ற நாடுகளில் கம்யுனிசத்துக்கு எதிராகவும், இந்தியாவில் ஒட்டு மொத்த இந்தியருக்கு எதிராக உள்ளது… பாக்கில் உள்ள தீவிரவாத குழுக்கள் புதுமை வாதி இஸ்லாமியருக்கு எதிராக இயங்குகின்றன … எனவேதான் தீவிரவாதத்துக்கு இங்கு உள்ள ஒரு பார்ப்பானே கரணம் என்று சொல்லும் தவறான கருத்தை சுட்டும் வகையில் தான் கூறியிருக்கிறேன்… மற்றபடி பார்ப்பனர்கள் மீதோ அல்லது வேறு எந்த தனிப்பட்ட சமுதயாத்தின் மீதோ எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது… யாராயினும் ஆவார்கள் குண்டு வெடிப்பில் பலியாவதை வன்மையாக கண்டிப்பவன்…

        • நல்லா சொன்னீங்க, அப்படியே சாதி,மதம் பார்க்காமல் ஒட்டு மொத்தமாக கொல்கிற இந்த முதலாளி வகையறாக்களையும் தீவிரவாதிகள் என்று சொல்லீட்டீங்கனா பரவாயில்லை.

  4. “‘வளர்ச்சி’ என்று எடுத்துக் கொண்டால், மோடியின் குஜராத் அடைந்திருக்கும் வளர்ச்சியைக் காட்டிலும், ராசாவின் காலத்தில் மொபைல் போன்கள் அடைந்த வளர்ச்சி அதிகமில்லையா? ” Well said….

  5. ராசா காலத்தில் மொபில் போன் கம்பனி காரந்தான் சம்பாதிதான் karunanidhi kudumbam valardhathu . ana gujarath la makkal nalla valrangaiya oru mura poi parthutu vandhu eluthungaiya Yar enna sonnalum NEXT PM AVAR THAN sooriyana parthu…………… ………. ……

  6. பையா சொன்னது:
    //பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தேச துரோகியா அல்லது அன்னிய சதிகாரனா?//

    சொந்த ஆபீசுக்கே குண்டு வைத்து பரபரப்பை உண்டு பண்ணியதில் பெயர் போன கூட்டமய்யா ஆர்எஸ்எஸ். ஜெயிலில் இருக்கும் சங்பரிவார் அம்மிணியைக் கேளுங்க.
    மதவெறியூட்டும் படிப் பேசி, ரத யாத்திரை சென்று, பாபர் மசூதியை இடிக்க வைத்து.. அத்வானி ரொம்ப உத்தமமானவர்தான் ஐயா.. அவர் மாதிரி தமிழ்நாட்டில் ஒருவர்..ஏன் இவர் ஒருத்தரே போதும் நாடு ரணகளமாக..
    இவர் யாத்திரை போனாலே முஸ்லீம்களுக்கு நித்திரை போய்விடும். பம்பாய்க் கலவரத்தைத் தூண்டி ஆயிரக்கணக்கானோர் சாகக் காரணமான இவருக்கெல்லாம் என்ன தண்டனை? குண்டு வைத்த தீவிரவாதிகளைப் பிடியுங்கள்.. தண்டியுங்கள்..முஸ்லீம்காரன் தீவிரவாதியா இருந்து வைத்தாலும், இந்துக்காரன் தீவிரவாதியா இருந்து வெச்சாலும்..
    அதை விடுத்து ஒட்டு மொத்த முஸ்லீம் இனத்துக்கே மிரட்டல் பாணியில் விஜய்காந்த் ஸ்டைலில் ‘தாய்நாட்டு’ வஜனம் பேசாதீங்கப்பா..ரொம்ப புல்லரிக்குது உங்க தேச(மிரட்டல்) பக்தியப் பாத்தா.. யார்னாலும் நடு ரோட்டுல நிக்க வச்சு சுடுவாங்களாம்…

    • \\பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் கையாலாகாதவர்களை, நடு ரோட்டில் வைத்து, சுட்டு தள்ளவேண்டும்\\
      அய்யா மதுரை வீரரே… இந்த வரி ஏன் உங்களை சுடுகிறது? பயங்கர வாத செயல்களில் ஈடுபடும் அந்த கையாலாகாதவர்களை அல்லவே அது சுடவேண்டும்? இது பொதுவான வரி.. இதை ஏன் ஒட்டு மொத்த முஸ்லிம் இனத்தை நோக்கி கூறப்பட்டது என அங்கலாய்க்கிறீர் ?

      • **************\\பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் கையாலாகாதவர்களை, நடு ரோட்டில் வைத்து, சுட்டு தள்ளவேண்டும்\\
        அய்யா மதுரை வீரரே… இந்த வரி ஏன் உங்களை சுடுகிறது? பயங்கர வாத செயல்களில் ஈடுபடும் அந்த கையாலாகாதவர்களை அல்லவே அது சுடவேண்டும்? இது பொதுவான வரி*************

        கோபம் வரத்தான செய்யும், அய்யாவே அந்தக்கையாலாகாதவர் தான், இவர்நடுனிலை வாதி என்றுநிருபிக்கத்தான், இந்த போலீ இந்துப்பெயர்…

  7. உயிரோட இருக்கிறதுலே முஸ்லீம்களுக்கு உபகாரம் இல்லைன்னு தெரியும் . ஆனா செத்தா காவிக்கூட்டத்துக்குதான் லாபம்னு நினைச்சு அவுகளே கொல்லாம இருந்தா சரி . அதுசரி அத்வானியை கொல்ல கோழைகள் முயன்றார்கள்னா காந்தின்னு ஒரு கிழவனைக் கொன்ன ஆர் எஸ் எஸ்க்காரன்னும் , பொண்ணுங்களை வன்புணர்ச்சி செய்த குஜராத் காவிக்கும்ப்லையும் என்னான்னு சொல்றது ??? பேடிகள்னா??? பொட்டைகள்னா?

  8. for everyone’s kind information except the 93 bombay bomb blast and coimbatore bomb blast.. none of the other blasts were proved till now… one by one the RSS & Co hand is coming out like the Malegaon, Ajmeer blast everything… As Katju mentioned in the interview.. immediately after the blast an email or SMS is shown to be from a muslim group but why didn’t the government or police or CBI or any investigation agency for that matter, have not found that group and proved them in court and kill them…. please think before you blame someone…

  9. இங்கு எவ்வளவு பேர் கோத்ராவில் கோழைத்தீவிரவாதிகளால் எரிக்கப்பட்டு இறந்த இறந்த அப்பாவி இந்துக்களுக்கு நியாயம் வேண்டும் என கவலைப் படுகிறார்கள? நவகாளியில் படுகொலை செய்யப்பட்ட இந்துக்களைப் பற்றியோ, டெல்லியில் கொல்லப்பட்ட சீக்கியர்களைப் பற்றியோ, சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பட்ட காஷ்மீர் பண்டிட்டுகள் பற்றியோ எழுதுகிறார்களா? மாட்டார்கள் ஏனெனில் அவர்கள் கேடுகெட்ட மெஜாரிட்டி இனத்தவர்களாயிற்றே ! ஒட்டு வங்கி கிடையாதே!

      • //ஒட்டு வங்கி கிடையாதே!//

        அவங்களாம் ஓட்டு போடுறதே இல்லியா!

        ஓட்டு போடுறோம், ஆனால் எவன் நம்ம மதத்தச்சார்ந்தவன், எவன் வந்தா நாம நல்லாத் தீவிரவாதம் செய்யலாம் என்று பார்த்து ஓட்டுப்போடுவது இல்லை…அப்படி செய்திருந்தால் இந்தியாவில் பாரதீயஜனதா மட்டுமே ஜெயித்திருக்கும், மொடியின் கால்களில் தீவிரவாதிகள் தடம் தெரியாதுநசுங்கிப்போயிருப்பார்கள்…

        அந்த நாள் வெகு தூரமில்லை…

  10. //ஆனால் எவன் நம்ம மதத்தச்சார்ந்தவன்,//

    இந்தியாவில் 99% MLA, MP கள் இந்துக்கள்தான். நீங்கள் சொல்றத வச்சி பாத்தா ரொம்ப கரெக்ட். RSS என்ற தீவிரவாத கும்பல் குண்டு வக்கிறதுக்கு தோதாத்தான் நீங்கள்லாம் (மெஜாரிட்டிகள்) இந்த மாதிரி தேர்ந்தெடுக்கிறீங்க போலருக்கு.

    //இங்கு எவ்வளவு பேர் கோத்ராவில் கோழைத்தீவிரவாதிகளால் எரிக்கப்பட்டு இறந்த//

    ரயில எரிச்சதே இந்த RSS கும்பல்தான். செய்ய்ற வேலைய ஒழுங்காகூட உங்களுக்கு செய்ய தெரியல. அப்பப்ப மாட்டிக்கிறீங்க. இதுல நீலிக்கண்ணீர் வேற வடிக்கிறீங்க. தீவிரவாதிங்க கோழைன்னு சொல்லுறீயே, குஜராத்ல 4000 பேர் கொல்லப்பட்டபோது மோடி கையில சூலத்தோடயா அலைஞ்சிக்கிட்டு இருந்தாரு. சட்டத்தை தன் கையில் வைத்துக்கொண்டு நிராயுதபாணியான மக்களை கொன்ற கோழை,பிணங்களின் மேல் ஆட்சி செய்யும் பாசிஸ்ட்.

  11. *\\பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் கையாலாகாதவர்களை, நடு ரோட்டில் வைத்து, சுட்டு தள்ளவேண்டும்\\

    இதற்கு முதலில் நரேந்திர மோடியை தூக்கில் போடவேண்டும். மனிதன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.

    • \\பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் கையாலாகாதவர்களை, நடு ரோட்டில் வைத்து, சுட்டு தள்ளவேண்டும்
      இதற்கு முதலில் நரேந்திர மோடியை தூக்கில் போடவேண்டும். மனிதன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.\\

      மோடி ஒரு ஆளுமை பண்பு நிறைந்த ஆட்சியாளர்… நமது மொழியில் ஒரு சர்வாதிகாரி.. பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவதாக கூறிக்கொண்டு சாமானிய மக்களை பெரும் வதை செய்துள்ளதாகவே தெரிகிறது… தன் மாநிலத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் நிர்வாகத் திறன் எந்த இந்திய முதலமைச்சரிடம் இல்லாத ஒரு திறமை.. ஆனால் கட்டுரையின் முதல் வரிகளை படிக்கும்போது மோடியின் செயலில் உள்ள குற்றத்தின் அளவு நன்கு புரிகிறது… குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த அனைத்து குடிமக்களும் பயங்கரவாதிகள் என்ற குறுகிய கண்ணோட்டம் அவருக்கு இருக்கிறது அல்லது இருந்திருக்கிறது… இதுவும் ஒரு வகை பயங்கரவாதம் தான்… இதன் மூலம் அவரும் ஒரு பயங்கர வாத செயலில் ஈடுபடும் நபர் என்ற அளவில் கொள்ளலாம்… ஆனால் கையாலாகதவர் என்ற பதம் அவரின் நிர்வாகத்திறனை கருதினால் அவருக்கு பொருந்தாது…

      ஆகவே பயங்கரவாத செயலில் ஈடுபடும் நபர்களை எப்படி தண்டிக்க நினைக்கிறீர்களோ அப்படியே இந்த முதலமைச்சரையும் தண்டிக்கலாம் எனபது எனது கருத்து…

      • இந்த ஒன்னுமில்லாத வெறும்பாயலுக இத்தனனாளா எவ்வளவு மக்களை தீவிரவாதத்தினால் அழித்திருப்பர்…என்னிலடஙா மக்க்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க