privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்சௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் அல்லாவின் தேசம்!

சௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் அல்லாவின் தேசம்!

-

மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் (கேகேஐஏ-KKIA)” சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திற்கு வெளியே 40 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்த விமான நிலையம் தான் பரப்பளவில் உலகின் மிகப் பெரிய விமான நிலையம். இங்கு வெகுசில நிர்வாக வேலைகளைத் தவிர ஏனைய அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் துப்புறவு, பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட விமான நிலையத்தின் பெரும்பாலான பணிகளை ‘சௌதி ஓஜர்’ எனும் தனியார் நிறுவனம் செய்து வருகிறது. இது தவிர அஃப்ராஸ், பின்லாதின், சௌதி கேட்டரிங் போன்ற நிறுவனங்களும் சிற்சில பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகின்றன.

சௌதி ஓஜர் நிறுவனம் சௌதி, லெபனான் நாடுகளை ஆளும் கும்பலின் கூட்டு நிறுவனமாகும். அதாவது லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபிக் பஹா எல்தின் ஹரிரி உருவாக்கிய இந்நிறுவனத்தில்சௌதியின் முன்னாள் மன்னர் அப்துல் அஜீஸின் குடும்பமும் முக்கியமான பங்குதாரராக கருதப்படுகிறது. இது சௌதியின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சௌதி ஓஜர் நிறுவனமே கேகேஐஏ வில் பெரிய ஒப்பந்ததாரராக நீடித்து வருகிறது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்துவரும் கேகேஐஏ சௌதி ஓஜரில் பெரும்பாலானோர் வங்கதேசத்தினர் (பங்களா தேஷ்). இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களும் குறைந்த அளவில் வேலை செய்து வருகிறார்கள். விமானநிலையம், ஊழியர்களுக்கான விடுதி என இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும் இதில் விமான நிலைய பராமரிப்பு பணிகளை ஓராளவு செய்து வந்தாலும், விடுதியின் பராமரிப்பு பணிகளை தொடர்ந்து புறக்கணித்து வந்திருக்கும் போதிலும் சௌதி ஓஜர் விமான நிலையத்தின் மீப்பெரும் ஒப்பந்த நிறுவனமாக தொடர்ந்து நீடித்து இருப்பதற்கு அது ஆளும் கும்பலைச் சார்ந்த நிறுவனம் என்பதைத் தவிர வேறொன்றும் காரணமில்லை.

இந்தியாவிலோ அல்லது உலகின் வேறு நாடுகளிலோ இரண்டு வகை தொழிலாளர்கள் இருப்பார்கள், நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள். ஆனால் சௌதியைப் பொருத்தவரை அனைவருமே ஒப்பந்தத் தொழிலளர்கள் தாம். நிரந்தரத் தொழிலாளர்கள் என்று யாரும் கிடையாது. சங்கமாக கூடும் உரிமையையோ, தங்களுடைய பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் நடைமுறையையோ சௌதியில் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ, வேறு சலுகைகளோ நிறுவனத்தின், உயரதிகாரிகளின் விருப்பத்தைப் பொருத்தது. உரிமையாக யாரும் கோர முடியாது. இதனால் கேள்வி முறையின்றி நிர்வாகத்திற்கு அடிபணிபவர்களும், கருங்காலிகளுமே இதுபோன்ற சலுகைகளையும் பதவி உயர்வையும் பெறுவது சௌதியில் சாதாரணம்.

இந்த அடிப்படையில் கடைநிலை ஊழியர்களிலிருந்தே கருங்காலிகளைத் தேர்ந்தெடுத்து ஃபோர்மேன்களாகவும், சூபர்வைசர்களாகவும் இன்னும் சில கங்காணி பதவிகளில் அமரவைத்து (சில ஆண்டுகளுக்கு முன் கடைநிலை ஊழியராக வந்த ஒருவர்தான் இன்று மருத்துவ அதிகாரி. ஊழியர்களை பரிசோதித்து இவர் அங்கீகரித்தால் மட்டுமே உடல்நலக் குறைவுக்கு மருத்துவமனைக்கு செல்ல முடியும்) உபரிநேர வேலைச் சுரண்டல், விடுதிகளில் அடிப்படை உரிமைகளைக் கூட செய்து தராமல் தொழிலாளர்களை ஏய்த்து வருகிறார்கள். இன்று சௌதி ஓஜர் நிறுவனம் இந்த கங்காணிகளுக்கும் சேர்த்தே ஆப்பு வைத்திருக்கிறது.

தற்போது இந்நிறுவனம் முனைய(டெர்மினல்) துப்புறவு பணியாளர்களை மட்டும் லிபனெட் எனும் நிறுவனத்திற்கு உள் ஒப்பந்தம் மூலம் மாற்றியிருக்கிறது. தொழிலாளர்களிடம் முறைப்படி அறிவிக்கவோ, தொழிலாளர்களுக்கான புதிய ஒப்பந்தங்களோ எதுவுமின்றி, சௌதி ஓஜரில் பணிபுரிந்தவர்கள் அப்படியே புதிய நிறுவனத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். தினசரி வேலை செய்யும் ஊழியர்கள் நேற்று சௌதி ஓஜர் நிறுவனத்திற்காக செய்தவர்கள் இன்று புதிய நிறுவனத்திற்காக செய்கிறார்கள். ஐநூறு ரியால் அடிப்படை சம்பளத்தில் வேலை செய்தவர்கள் புதிய நிறுவனத்தில் நூறு ரியால் மட்டும் அதிகம் தருவதாக வாய் மொழியாக கூறியிருக்கிறார்கள்.

பகரமாக எட்டுமணி நேரத்திற்கு பதிலாக 12 மணிநேரம் கட்டாயமாக வேலை செய்ய வேண்டும். அது உபரி நேர வேலையாகவும் கணக்கிடப்படாது. அதாவது நான்கு மணி நேரம் அதிகமாக வேலை வாங்கிவிட்டு 100 ரியால் மட்டும் அதிகமாக கொடுக்கப் போகிறார்கள். இந்த 12 மணி நேரத்தில் தேனீர் குடிப்பதற்குக் கூட இடைவெளி எடுக்கக் கூடாது, உணவு இடைவேளை (வேலை நேரமாக கணக்கிடப்படுவதில்லை என்ற போதிலும்) ஒரு மணிநேரத்திலிருந்து அரை மணியாக குறைப்பு, அதுவும் அறைக்குச் சென்று சாப்பிடாமல் வேலை செய்யும் இடத்திற்கே கொண்டு வந்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஒதுக்கப்பட்ட இடத்தில் அசுத்தம் ஏதும் கண்டுபிடிக்கப் பட்டால் தொடர்புடைய பணியாளரிடம் எந்த விசாரணையும் செய்யாமல் அறைக்கு அனுப்பிவிட்டு அன்றைய தினத்தை பணிக்கு வராத நாளாக கணக்கிடுவது உள்ளிட்ட பல அடக்குமுறை விதிகளை ஏற்படுத்தி தொழிலாளர்களை வதைக்கிறது.

மட்டுமல்லாது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விடுப்பில் ஊர் சென்று வரலாம் என்பதை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று மாற்றியிருக்கிறது. அதுவும் ஒருவழி விமான பயணச்சீட்டு மட்டுமே லிபனெட் கொடுக்கும் இன்னொரு வழி பயணச்சீட்டை ஊழியர் தன்னுடைய சொந்த செலவிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அக்கிரமாக அறிவித்து வருகிறது. இவைகளை எதிர்த்து முணுமுணுத்த ஒரு தொழிலாளியை தனியறைக்கு இழுத்துச் சென்று அடித்து உதைத்து அனுப்பியிருக்கிறார்கள்.

மறுபுறம் சௌதி ஓஜர் நிறுவனமோ புதிய நிறுவனத்தின் அடக்குமுறை பிடிக்காமல் ”நாங்கள் சௌதி ஓஜரிலேயே இருக்கிறோம் வேறு பகுதிகளில் வேலை கொடுங்கள்” என்று வருபவர்களை எந்த வாய்ப்புக்கும் இடமில்லாமல் சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்பி வைக்கிறது. மட்டுமல்லாமல் படிப்படியாக எல்லா பகுதிகளையும் புதிய நிறுவனத்திற்கு மாற்றப் போவதாகவும் அறிவித்திருக்கிறது. புதிய நிறுவனத்தின் அடக்குமுறை தாங்காமல் திரும்பி வருபவர்களுக்கு சாப்பாட்டு டோக்கன்களை கூட கொடுக்காமல் பட்டினி போடுகிறது. சௌதி ஓஜரிலேயே வேலை தாருங்கள் என்று திரும்பி வந்தவர்களை இருபது நாட்களுக்கும் மேலாக வேலை கொடுக்காமல் வைத்திருந்து கடந்த வாரத்தில் நூற்றுக்கும் அதிகமானோரை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பிவிட்டது. அதிகாரிகளுக்கு வேண்டிய சிலரை மட்டும் தண்டனை மாறுதலாக ஜித்தாவுக்கு அனுப்பிவைத்திருக்கிறது.

இந்த அநீதிகளுக்கு எதிராக ஆங்காங்கே கிளம்பிய முணுமுணுப்புகள் திரளத் தொடங்கிய வேளையில், நாட்டுக்கு திருப்பி அனுப்பிய நிகழ்வு தொழிலாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி விட்டது. மிகுந்த சிரமங்களுக்கு இடையே தொழிலாளர்களிடையே ஏற்படுத்தப்பட்ட போராட்ட உணர்வு சிதறடிக்கப் பட்டிருக்கிறது, மட்டுமல்லாது போராட்ட முயற்சிகளும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. கொஞ்சம் வைராக்கியம் காட்டிய தொழிலாளர்களும் நாட்டிற்கு திருப்பி அனுப்பிய நிகழ்வின் பிறகு தங்கள் விதியை நொந்தபடி வேலைக்கு திரும்பி விட்டார்கள்.

உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைத் தானே மேற்கொள்கின்றன, இதில் சௌதி மட்டும் விதிவிலக்காகிவிட முடியுமா? என்று பொதுமைப்படுத்த முடியாதபடி இதில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. சௌதி ஓஜரின் உரிமையாளர்களான ஹரிரி குடும்பத்தினரின் பினாமி நிறுவனம் தான் லிபனெட். ஒரு நாட்டின் ஆளும் வர்க்கமாக இருந்து நாட்டை சூறையாடுவதோடு அவர்கள் திருப்தியடையவில்லை. விதியோ, கடவுள் நம்பிக்கையோ அவர்கள் செயலில் குறுக்கிடவில்லை. ஏழை தொழிலாளியின் வயிற்றிலடிப்பதற்கும் வெறித்தனமாய் திட்டமிடுகிறார்கள். ஆனால், மறுபக்கம் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சௌதி ஓஜர் நிறுவனத்திற்காக வேலை செய்துவரும் வயதான ஒரு தொழிலாளி நரைத்துப் போன தன் தாடியை தடவிக் கொண்டே கூறுகிறார், “நாங்கள் தொழுது பிரார்த்திக்கிறோம், எங்களுக்கான பதிலை கடவுள் அவர்களிடம் வாங்கியே தீருவார்”

இது நம்பிக்கையா? இயலாமையா? இன்னும் எத்தனை ஆண்டுகள் குடும்பத்தைக் காணாது கடல் கடந்து வேலை செய்தாலும் வளமையை பெறமுடியாமல் தடுப்பது, வர்க்க உணர்வு கொள்ளாமல் இருப்பதும், துன்பங்களின் கண்ணீரை கடவுளின் மாயக்கையை எடுத்து துடைத்துக் கொள்ள நினைப்பதும் தான் என்பது அவருக்கு தெரியவில்லை. மத வேறுபாடுகளோ, நாட்டின் எல்லைக் கோடுகளோ சுரண்டுபவர்களிடம் எந்த பேதத்தையும் ஏற்படுத்துவதில்லை. அவர்கள் சுரண்டும் வர்க்கமாய் ஒன்றிணைந்து நிற்கிறார்கள். ஆனால் ஒன்றிணைய வேண்டிய வர்க்கம் முதுகில் உரைத்த பின்பும் பிரார்த்தனையோடு முடித்துக் கொள்வதா? முயற்சிகள் தொடர்கின்றன. பலனளிக்குமா? காத்திருப்போம்.

–    வினவு செய்தியாளர், சவுதியிலிருந்து….

  1. Non-muslims are not allowed to use even roads in Mecca. Also Islam allows the practice of slavery and sexual slavery (right hand possesses). Ploy gamy, forced conversion of women by marrying them or taking them as slaves and death penalty for offending islamic beliefs etc… All these actions of this evil religion is condemnable. Write a well balanced article on that soon….

    Today I heard that a man has been punished in Indonesia for being atheist. Such stupid laws in any country should be removed. That include law against killing of cows in India and blasphemy law in Pakistan.

  2. சவுதி ஓஜரில் மூன்று ஆண்டுகள் வேலை செய்து வந்தவன் என்ற முறையில் கூறுகின்றேன். இந்த கட்டுரையாளர் ஏதோ சித்தம் கலங்கியவர் என்று நினைக்கின்றேன்…. போகிற போக்கில் புழுதியை தன் தலை மேலேயே வாரி இறைத்து சென்று விட்டார்… வாழ்வு வினவு. நல்ல பதிவு! நன்றி வினவு!

    • கூகிளில் தேடிப்பார்த்தாலே ஓஜரில் தொழிலாளர் பிரச்சனை இருப்பதை அறிய முடியும். அதை நீங்கள் மறுத்தால் ஒன்று உங்களுக்கு அவர்கள் செய்த கொடுமையில் சித்தம் கலங்கியிருக்க வேண்டும் அல்லது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் அடிபணிந்து சலுகை பெற்ற கருங்காலிகளில் ஒருவராக நீங்கள் இருக்க வேண்டும்.

  3. நீங்கள் பொய் சொல்கிறீர்கள். உண்மையான இஸ்லாத்தை கடைபிடிக்கும் சவுதியில் இப்படி நடக்க வாய்ப்பே இல்லை.

    • அதெல்லாம் நடக்கும் . நான் இதற்கு முன்பு வேலை பார்த்த AFI கம்பெனிலே 2010ம் ஆண்டு பணியில் இருக்கும் போது இறந்து போன தமிழகத்தைச் சேர்ந்த பாண்டி என்கிற தொழிலாளிக்கு அவருக்குச் சேர வேண்டிய நியாயமான பணிக்கொடை (சர்வீஸ் பணம்),சம்பள பாக்கி , ஓவட் டைம் பணம் இதெல்லாம் கூட 2 வருட கடுமையான போராட்டத்துக்கு பிறகுதான் தொழிலாளிக் குடும்பத்துக்கு அனுப்பியிருக்காங்க.ஆனா இன்னமும் அந்தக் குடும்பத்துக்குக் கிடைக்கல. அப்புறம் எங்கே இருந்து நஷ்ட ஈடு கேட்கிறது? கடவுளுக்குப் ப்யப்படுகிறத சொல்லப்படுகிற ஒரு ஜோர்டானிய இஸ்லாமிய நிதி நிர்வாகி தான் இவ்வளவும் பண்றான்.இது போக வேலை பிடிக்கலைன்னு ராஜினாமா பண்ணிட்டுப் போனா எக்ஸிட் கொடுக்கிறது இல்லை , மாறாக எக்ஸிட் ரீ என்ட்ரி அடிச்சுக் கொடுக்கிறாங்க . அபோதானே வேற நிறுவனத்துக்கு வேலைக்காக மறுபடி சவுதிக்கு வரமுடியாது.

      • The Kingdom of Saudi Arabia was founded by Abdul-Aziz bin Saud (known for most of his career as Ibn Saud) in 1932, although the conquests which eventually led to the creation of the Kingdom began in 1902 when he captured Riyadh, the ancestral home of his family, the House of Saud, referred to in Arabic as the Al Saud. The Saudi Arabian government, which has been an absolute monarchy since its inception, refers to its system of government as being Islamic, though this is contested by many due to its strong basis in Salafism, a minority school of thought in Islam. The kingdom is sometimes called “The Land of the Two Holy Mosques” in reference to Al-Masjid al-Haram (in Mecca), and Al-Masjid al-Nabawi (in Medina), the two holiest places in Islam.

  4. சல்மான் ருச்தி வருகைக்கு தடை விதிக்க பட்டதே!இது பற்றி வினவு ஏன் எழுதல?

  5. எங்கடா இன்னும் இஸ்லாமியர்களை வம்புக்கு இழுக்கலையேன்னு பார்த்தேன்… அமைதியாக இருப்பவர்களை நோன்டுவதே உனக்கு வேலையா போச்சு ?
    கடந்த சில பதிவுகளாக நக்கீரன் மாமி, மோடி, சிவாச்சாரி என்று போட்டு தாக்கியாச்சு, பைபிளை திட்டி கிறித்தவர்களையும் கொதரியாச்சு, இது இஸ்லாமியர்களின் முறை.. தவுகீத் ஜமாத்தை தாக்கி எழுதிய பதிவில் வெள்ளமென திரண்டு வந்த இஸ்லாமியரின் எதிர்ப்பை பார்த்து கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள்… இப்போது மீண்டும் பார்ப்பனர்களையும், கிறித்தவர்களையும் சமாதானப் படுத்த இஸ்லாத்தை சீண்டுகிறார்கள்…

    ஒரு மதத்தை திட்டும்போது மற்ற மதத்தினர் குஷியாகி வரவேற்கின்றனர்… அதனால் மாற்றி மாற்றி மதங்களை பற்றிய விஷ பிரச்சார பதிவுகள் எழுதி கொண்டே இருப்பார்..
    இஸ்லாத்தை இழிவு படுத்தினாலும், இந்து மதத்தை சிறுமை படுத்தினாலும், கிறித்தவத்தை கொச்சை படுத்தினாலும் அவர்களின் நோக்கம் அனைத்து மதங்களும் சென்று சேரும் இடமான எல்லாம் வல்ல இறைவனை இழிவு படுத்துவதும், கொச்சை படுத்துவதும், சீரழிப்பதும் தான்…

    இன்றைக்கு இஸ்லாத்தை இழிவு படுத்தியதால் வரும் எதிர்ப்பை சமாளிக்க, இன்னும் சில நாட்களில் பார்ப்பனர்களின் இஸ்லாமிய வெறி என்று பொருள் பட தலைப்பிட்டு ஒரு பதிவை போட்டு இஸ்லாமியரை சமாதானப்படுத்தி விடலாம் என்று நினைக்கும் இந்த பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடியுங்கள் இறைவன் இருக்கிறான் என்ற நம்பும் நண்பர்கள்… இறைவனை நம்பாதவர்கள் மற்றவர்கள் நம்பிக்கையை புண் படுத்தாமல் இருங்கள் அது போதும்…

    • இப்ப கோத்து வுடுறது நீர்தான் ஓய். இஸ்லாத்த இங்க எங்கானும் இழிவுபடுத்தப்பட்டுள்ளதா?

      • மிக அருமையான கட்டுரை வினவுக்கு வாழ்த்துக்கள்.
        கரெக்டா சொன்னீங்க நண்பரே.இங்கு சிண்டு முடிக்கறதுக்குனே ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கின்றது.
        இதுகள் என்னவோ பெரிய பிளான் பண்ணிகிட்டிருக்குதுகள்.அப்படி என்னத்ததான் சாதிக்க போகுதோ இல்ல சாதி கலவரம் உண்டு பண்ணபோகுதோன்னு தெரியலை

  6. நாத்திக கம்யுனிஸ்ட் வினவு,
    இஸ்லாமியர்களின் புன்ணிய பூமியாம் சவுதியை பற்றியும்,பாதுகாவலர்கள் அரசர் அப்துல்லா&கோ பற்றி என்ன சொன்னாலும் உண்மையான இஸ்லாமியர்கள் நம்ப மாட்டார்கள்.

    இம்மாதிரி பொய் பிரச்சாரம் செய்ய யூதர்களிடம் இருந்து பணம் பெறுகிறீர்கள் என்பதற்கு ஆதாரம் தவுகீத் அண்ணனிடம் இருக்கிறது.இது குறித்து நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா?

    அப்போதும் இதை விட கேவலமாக‌ அப்போதைய காட்டரபிகள் முகமது மீது குற்றம் சாட்டினர்.அதை அழகிய முறையில் நபி மேற்கொண்ட விதம் எங்களுக்கும் தெரியும். அப்போது காட்டரபிகள் இஸ்லாமை ஏற்றதால் மிக மிக நல்ல அரபிகள் ஆகி விட்டனர்.100% நல்லவர்களை கொண்ட ஒரே இணையில்லா தேசம் சவுதியே.
    நாத்திகத்திற்கு மரண அடி கொடுக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் என்பதால் தானே விமர்சிக்கப் படுகிறது.அதே போல் இந்த பொய் பிரச்சாரங்களை இன்சா அல்லாஹ் தூள் தூள் ஆக்குவோம்!!!!!!!.
    உலகளாவிய ஒரே கிலாஃபா அமைப்போம்

    • //உலகளாவிய ஒரே கிலாஃபா அமைப்போம்//
      எனக்கு இது புரியவில்லை. தயவு செய்து விளக்கவும். கிலாஃபா என்றால் என்ன?

    • கொஞ்ச நாளா இந்த கோத்துவிடர பழக்கங்கள் தங்களைப்போன்ற ஆட்களிடம் இல்லாமல் இருந்தது ஆரம்பிச்சிட்டீங்களா நடத்துங்கள்.தங்களைப்போன்ற ஆட்களுக்கு நாத்திகர்களையும் பிடிக்காது முஸ்லிம்களையும் பிடிக்காது…ம்….நடத்துங்கள்…நடத்துங்கள்…
      /////இம்மாதிரி பொய் பிரச்சாரம் செய்ய யூதர்களிடம் இருந்து பணம் பெறுகிறீர்கள் என்பதற்கு ஆதாரம் தவுகீத் அண்ணனிடம் இருக்கிறது.இது குறித்து நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா?/////
      அப்படியா நானும் தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவன்தான்.அண்ணன் உங்களிடம் மட்டும் தனியாக கூறியுள்ளாரோ?
      ///அப்போதும் இதை விட கேவலமாக‌ அப்போதைய காட்டரபிகள் முகமது மீது குற்றம் சாட்டினர்.///நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை முகமது என்று சொல்லும்போதே தாங்கள் ஒரிஜினல் அக்மார்க் முஸ்லிம் என்பது தெரிகிறது.
      /////100% நல்லவர்களை கொண்ட ஒரே இணையில்லா தேசம் சவுதியே.//// சிரிப்பு தாங்கமுடியவில்லை வயிறு வலிக்கின்றது.ஐயா கோத்துவிடுபவரே எந்த நாட்டிலும் 100% நல்லவர்கள் இருக்க வாய்ப்பேயில்லை.

  7. இங்கு கருத்துத் தெரிவிக்கிற இஸ்லாமிய நண்பர்களின் போக்கு ஆச்சரியமளிக்கிறது. வளைகுடா நாடுகள் முழுக்கவே பல நிறுவனங்கள் தொழிலாளர் விரோதப் போக்கையே கடைபிடித்து வருகின்றன் . 1.அதிக பணிச்சுமை 2.கூடுதல் பணி நேரம் 3 . கூடுதல் பணிநேரத்துக்கான ஊதியம் இல்லாமை 4. முறையான, சுகாதாரமான தங்கும் விடுதி , உணவு ஆகியன வழங்குவதில்லை 5.விடுமுறை மறுப்பு 6. அவசரத் தேவைக்குக் கூட தாயகம் திரும்ப முடியாத நிலைமை.7.ஊதிய உயர்வு , போனஸ் இதெல்லாம் பல நிறுவனங்களில் கிடையவே கிடையாது 8. வேலையை ராஜினாமா செய்தால் கூட பணிக் கொடையைக் கொடுக்க இழுத்தடிப்பு , எக்ஸிட் அடித்துத் தராமல் எக்ஸிட் ரீ என்ட்ரி அடிப்பது இதுபோக இன்னும் எவ்வளவோ நடக்கிறது . வெகு சில சவுதி நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய , அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே தேவலை. ஆனால் இந்த அநியாயத்தைச் சுட்டிக்காட்டும் போது இஸ்லாத்தை சொல்லி ஏமாற்றுக்கிற நாடுகளின் நிர்வாகத்தை எண்ணி ஒரு இஸ்லாமியனாக வெட்கப்படவேண்டுமே ஒழிய “பொய்” என்றோ ” இல்லை” என்றோ சொல்லி தங்களைத் தாங்களே ஏன் ஏமாற்றிக்கொள்ள வேண்டும்.?

    • இங்கு கருத்துத் தெரிவிக்கிற இஸ்லாமிய நண்பர்களின் போக்கு ஆச்சரியமளிக்கிறது. வளைகுடா நாடுகள் முழுக்கவே பல நிறுவனங்கள் தொழிலாளர் விரோதப் போக்கையே கடைபிடித்து வருகிறது.

  8. @முஹம்மத் ஷஃபி பின் அப்துல் அஜீஸ்&Mohaideen Sha

    நான் முஸ்லிம் என்று கூறினேனா!!!!!!!.இப்படித்தானே ஹவுரிப்பிரியன்,ஜட்டிஜன்,கரி தோஸ்த்,டேஞ்சூர் உள்ளிட்ட … எல்லா சவுதிக்காரர்களும் சொல்ராக.
    ஏன் பெரும்பாலான் பிரச்சாரகர்கள் சவுதியில் இருந்தே எழுதுகிறார்கள்?

    ஏன் எதற்கெடுத்தாலும் பொய் சொல்லியாவது சவுதி புகழ் பாடுகிறார்கள்?

    இதற்கென்று சம்பளம் கொடுத்து செய்ய சொல்கிறார்களா?

    அதை விட்டுட்டு மானே தேனே போட்டு முகமதை சொல்லலைனு கண்டு பிடித்தாராம் .உங்களின் துப்பறியும் அறிவு புல்லறிக்கிறது!!!!!!!!!.

    மானே தேனே போட்டு சொல்லியிருந்தா நம்பி இருப்பார் போல இருக்கு.கொடுமைடா சாமி!
    சௌதி அரசன் குடும்பம் அமரிக்காவின் ஏஜென்ட், எண்ணெய் சுரணடலுக்கு .ஆதிக்கத்திற்கு வால் பிடிப்பவன்.இப்ப ஈரான் எண்ணெய் அளவை குறைத்தால் அதை நான் கொடுக்கிறேன் சரி செய்கிறேன் என்கிறது சவுதி அரசு.ஈரானை அழிக்க சவுதி உதவகிறானா இல்லையா என்பதை பொறுத்து இருந்து பாருங்கள்.
    இதை மறைக்க தாவா,மத பிரச்சாரம்னு ஏமாத்தரான்.அதை கொண்டு வந்து இங்கே விற்க பார்த்தால் நடக்காது!!!!!!!!!!

    • //////நாத்திக கம்யுனிஸ்ட் வினவு,
      இஸ்லாமியர்களின் புன்ணிய பூமியாம் சவுதியை பற்றியும்,பாதுகாவலர்கள் அரசர் அப்துல்லா&கோ பற்றி என்ன சொன்னாலும் உண்மையான இஸ்லாமியர்கள் நம்ப மாட்டார்கள்.

      இம்மாதிரி பொய் பிரச்சாரம் செய்ய யூதர்களிடம் இருந்து பணம் பெறுகிறீர்கள் என்பதற்கு ஆதாரம் தவுகீத் அண்ணனிடம் இருக்கிறது.இது குறித்து நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா?

      அப்போதும் இதை விட கேவலமாக‌ அப்போதைய காட்டரபிகள் முகமது மீது குற்றம் சாட்டினர்.அதை அழகிய முறையில் நபி மேற்கொண்ட விதம் எங்களுக்கும் தெரியும். அப்போது காட்டரபிகள் இஸ்லாமை ஏற்றதால் மிக மிக நல்ல அரபிகள் ஆகி விட்டனர்.100% நல்லவர்களை கொண்ட ஒரே இணையில்லா தேசம் சவுதியே.
      நாத்திகத்திற்கு மரண அடி கொடுக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் என்பதால் தானே விமர்சிக்கப் படுகிறது.அதே போல் இந்த பொய் பிரச்சாரங்களை இன்சா அல்லாஹ் தூள் தூள் ஆக்குவோம்!!!!!!!.
      உலகளாவிய ஒரே கிலாஃபா அமைப்போம்///////
      Mr.SAMURAI கருத்து என்கின்ற பெயரில் நீங்கள் ஏன் விஷத்தை கக்குகின்றீர்கள்.நீங்கள் எழுதிய கருத்துக்கும் பதிவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா? பிறகு ஏன் நீங்கள் இஸ்லாமியர்களை வம்புக்கு இழுக்கின்றீர்கள் இதனால் உங்களுக்கு உண்டான லாபம் என்ன?

      • சவுதியில் மட்டுமல்ல, எல்லா நாட்டிலும் பெரும்பான்மையான முதலாளிகள் இப்படித்தான் நடந்துக் கொள்கிறார்கள். அதற்கு ஏன் இந்த விஷமத் தலைப்பு? “தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் அல்லாவின் தேசம்!?” சவுதி முதலாளிகள் இப்படி நடந்து கொள்வது ஒரு பத்து இருபது ஆண்டுகளாகவே தெரிந்த சமாச்சாரம்தான். அவங்க ஒன்னும் உங்களை கடத்திக்கிட்டு போய் கொத்தடிமையா வச்சு வேலை வாங்கலியே? நீங்களாதானே ஏஜன்டுக்கு காசு குடுத்து விசா வாங்கி அங்கே போயிருக்கீங்க? தெரிஞ்சுக்கிட்டே ஏன் சார் அங்கே போய் மாட்டுனீங்க? நமக்குதான் சார் புத்தி வேணும். பேசாம வர்க்கப்போராட்டங்களை அனுமதிக்குற ஒரு நாட்டுக்கு போய் கும்பலோட கும்பலா கூச்சல் போட்டுட்டிருக்கலாம்ல? என்ன நாஞ்சொல்றது?

        • புனித தளம் (மக்கா) இருக்கும் சவூதி அல்லாவின் தேசம் இல்லைன்னு சொல்லுறீங்களா! மரைக்காயர்

          • இல்லேங்க. புனித தலங்கள் இருக்கும் சவுதி மட்டுமல்லாமல் அகில உலகமுமே அல்லாஹ்வின் தேசங்கள்தான் என்பது என் நம்பிக்கை. ஆனால் என் கேள்வி அதுவல்ல. சவுதி ஓஜர் என்ற ஒரு நிறுவனத்தில் நடக்கும் முறைகேடுகளுக்கு அல்லாவின் தேசம் என வினவு வர்ணித்திருக்கும் சவூதி அரேபியா என்ற நாடு எப்படி பொறுப்பாகும்?

            • //இல்லேங்க. புனித தலங்கள் இருக்கும் சவுதி மட்டுமல்லாமல் அகில உலகமுமே அல்லாஹ்வின் தேசங்கள்தான் என்பது என் நம்பிக்கை//

              பிறகென்ன மரைக்காயர், அகில உலகமே அல்லாவுடையது என்றான பிறகு அந்த ஓஜர் நிறுவனம் மட்டும் அல்லாவுக்கு சொந்தமில்லை என்றாகிவிடுமா!

              • கலை சார், என்னுடைய பின்னூட்டத்தை முழுசா படிக்கலையா நீங்க?

                //ஆனால் என் கேள்வி அதுவல்ல. சவுதி ஓஜர் என்ற ஒரு நிறுவனத்தில் நடக்கும் முறைகேடுகளுக்கு அல்லாவின் தேசம் என வினவு வர்ணித்திருக்கும் சவூதி அரேபியா என்ற நாடு எப்படி பொறுப்பாகும்?//

                இதுக்கு பதில் சொல்லுங்க சார்!

                • என்னங்க இது, சௌதி ஓஜர் நிறுவனம் சௌதி ஆளும் வர்க்கத்திற்கு சொந்தம் என்று கட்டுரை கூறுகிறது. மன்னர் குடும்பத்திற்கும் சௌதி என்ற நாட்டுக்கும் தொடர்பே இல்லை என்று கூற வருகிறீர்களா?

                  அல்லது, ஈரானும், துருக்கியும் அறிவியலில் முன்னேறுவதற்கு அல்லாதான் காரணம் என்று தமிழ் இஸ்லாமிய இணையப்பரப்பு சுற்றி சுழன்று கொண்டிருக்கும் போது, கெட்டவைகளுக்கு மட்டும் அல்லா காரணமாக மாட்டார் என்று உங்களுக்கு ஆதாரம் ஏதும் கிடைத்திருக்கிறதா?

                  • //என்னங்க இது, சௌதி ஓஜர் நிறுவனம் சௌதி ஆளும் வர்க்கத்திற்கு சொந்தம் என்று கட்டுரை கூறுகிறது. மன்னர் குடும்பத்திற்கும் சௌதி என்ற நாட்டுக்கும் தொடர்பே இல்லை என்று கூற வருகிறீர்களா?//

                    மிஸ்டர் எக்ஸுக்கும் அவரோட பக்கத்து வீட்டுக்காரருக்கும் ஏதோ சண்டை வந்து விட்டது. மிஸ்டர் எக்ஸை பளார்னு ஓங்கி அறைஞ்சுட்டார் பக்கத்து வீட்டுக்காரர்.

                    மிஸ்டர் எக்ஸ் உடனே போலிஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஒரு புகார் மனு கொடுத்தார்.

                    “மதிப்பிற்குரிய காவல்துறை அதிகாரி அவர்களுக்கு,

                    …இப்புடிக்கு இப்புடி…
                    …இன்னாருக்கு இன்னாரு…

                    எனவே என்னைக் கொடுமைப் படுத்திய மனித சமுதாயத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

                    இப்படிக்கு
                    மிஸ்டர் எக்ஸ்”

                    கடைசி வரியைப் படித்துவிட்டு குழம்பி விட்டார் இன்ஸ்பெக்டர். “சார், யார் நீங்க? என்ன பிரச்னை? உங்களுக்கு என்ன வேணும்?”

                    “நான் மிஸ்டர் எக்ஸ் சார். என் பக்கத்து வீட்டுக்காரருக்கும் எனக்கும் சண்டை வந்துடுச்சு சார். ‘பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்’னு நான் சொல்லிட்டிருக்கப்பவே என் கன்னத்தில ஓங்கி அறைஞ்சுட்டார் சார் அவர்”

                    “சரி.. அதனால..?”

                    “அதனால நீங்க மனித சமுதாயத்தின் மேல ஆக்‌ஷன் எடுக்கணும் சார்”

                    “அடிச்சது உங்க பக்கத்து வீட்டுக்காரர்.. இதுல மனித சமுதாயம் எங்கேருந்து வந்துச்சு?”

                    “பக்கத்து வீட்டுக்காரர் மனித சமுதாயத்தை சேர்ந்தவர்தான் சார். அதுமட்டுமல்ல, அவரோட அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா எல்லோருமே மனித சமுதாயம்தான் சார்! அதனால நீங்க மனித சமுதாயம் மேலதான் ஆக்க்ஷன் எடுக்கணும்”

                    “_______________________” அடுத்து அந்த இன்ஸ்பெக்டர் என்ன சொல்லியிருப்பார்ங்கறதுக்கு நீங்களே கோடிட்ட இடத்தை நிரப்பிக்குங்க.

                    //அல்லது, ஈரானும், துருக்கியும் அறிவியலில் முன்னேறுவதற்கு அல்லாதான் காரணம் என்று தமிழ் இஸ்லாமிய இணையப்பரப்பு சுற்றி சுழன்று கொண்டிருக்கும் போது, கெட்டவைகளுக்கு மட்டும் அல்லா காரணமாக மாட்டார் என்று உங்களுக்கு ஆதாரம் ஏதும் கிடைத்திருக்கிறதா? //

                    தர்க்க வாதங்களுக்கு பதில் சொல்லலாம். குதர்க்க வாதங்களுக்கு பதில் சொல்வது வீண் வேலை.

                    • ஒரு உதாரணம், புதுவையைச் சேர்ந்த ஏனாம் பகுதியில் அமைந்துள்ள ரீஜென்ஸி செராமிக் என்ற ஆலையில் ஊதிய உயர்வு கோரி கடந்த 3 மாதங்களாக கோரிக்கை விடுத்து, சிறுசிறு போராட்டங்கள் நடத்தினர். நிர்வாகமும் அரசும் அசைந்து கொடுக்காததினால் நேற்று ஆலைப் பணிகளை நடத்தவிடாமல் முடக்கினர். உடனடியாக அரசின் காவல்துறை தலையிட்டு வன்முறையை நிகழ்த்தியிருக்கிறது. 3 மாதமாக தொழிலாளர்கள் போராடியபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அரசு இப்போது மட்டும் ஏன் தலையிடுகிறது? தொழிலாளரின் நலனுக்காக வராத அரசு மூலதனத்திற்கு குந்தகம் என்றவுடன் ஓடோடி வருவதேன்? நிர்வாகம் கொடுமைப்படுத்தியது, தொழிலாளர்கள் பதில் தாக்குதல் நடத்தினார்கள், அது அந்நிறுவனத்தின் பிரச்சினை என்று அரசு சும்மா இருந்துவிடுவதுதானே! இதை இங்கு குறிப்பிடுவதன் காரணம், இது போன்ற உதாரணங்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன. தனது நாட்டில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் தவறிற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று ஒரு அரசு கூறினால் பின்வாயால் தான் சிரிப்பார்கள்.

                    • நண்பர் மரைக்காயர்,

                      உங்கள் கதை நன்றாக இருக்கிறது. ஆனால் பொருத்தமாக இருக்கிறதா? யாரோ இருவர் சண்டையிட்டுக் கொண்டால் அவர்கள் மனித சமூகத்தில் அங்கம் என்றாலும் மனித சமூகத்தின் அடையாளமாக அவர்களை கருத முடியாது. ஏனென்றால் மொத்த மனித சமூகத்தில் அவர்களின் பங்களிப்பு வெகு சொற்பமாகவே இருக்கும். ஆனால் சௌதி ஆளும் வர்க்கம் தான் சௌதி எனும் நாடு எந்த திசையில் செல்ல வேண்டும் என தீர்மானிக்கிறது. அந்தப்படியான ஆளும் வர்க்கத்திற்கு சொந்தமான நிறுவனந்த்தை அந்த நாட்டுடன் தொடர்புபடுத்துவதில் பிழை ஒன்றுமில்லை.

                      அடுத்து, எது குதர்க்கம்? உங்களுக்கு சாதகமானவை எல்லாம் தர்க்கம், பாதகமானவை எல்லாம் குதர்க்கமா? ஒரு நிறுவனத்தின் பிரச்சனைக்கு அல்லாவை இழுத்தது குதர்க்கம் என்றால்; ஒரு நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு அல்லாவை இழுப்பது தர்க்கமா? அதுவும், அவனே எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு என்று கூறிவிட்ட பிறகு. குதர்க்கம் என்று ஒதுக்காமல் பதில் கூறினாலல்லவா தெரியும், தர்க்கத்திற்கும் குதர்க்கத்திற்கும் நீங்கள் என்ன அளவுகோலை கொண்டிருக்கிறீர்கள் என்பது?

                  • தெய்வம் நின்று கொள்ளும் ;
                    கெட்டவைகளுக்கு சைத்தான் காரணம்.அத்துடன் கம்யுனிஸ்ட் களும் நாத்திகர்களும் காரணம்.
                    கடவுள் நம்பிக்கையின் பேரால் நடக்கும் தவறுகளைத்தான் பழிக்க வேண்டுமே தவிர ,கடவுள் இல்லவே இல்லை என்று ஆட்டம் போடக் கூடாது.

                    • \\கெட்டவைகளுக்கு சைத்தான் காரணம்.அத்துடன் கம்யுனிஸ்ட் களும் நாத்திகர்களும் காரணம்.\\

                      கம்யுனிஸ்ட்களும் நாத்திகர்களும் தான் அந்த சைத்தானோ 🙂

                    • //கெட்டவைகளுக்கு சைத்தான் காரணம்.//

                      இங்கு கெட்டது எது? தொழிலாளர்ளைக் கொடுமைப்படுத்துவது. சைத்தான் ஓஜர் நிறுவனம். சைத்தானை அடித்துத் துரத்தாமல் சவூதி வேடிக்கைப் பார்ப்பது ஏன்?

                • //கலை சார், என்னுடைய பின்னூட்டத்தை முழுசா படிக்கலையா நீங்க?//

                  மரைக்காயர்,

                  ஒரு நாட்டின் அரசு என்பது எதற்காக இருக்கிறது என்பதனை நீங்களே சொல்லிவிடுங்களேன்.

                  • என்ன சார் நீங்க, வினவு, சவுதி செய்தியாளர் போன்ற நிபுணர்களெல்லாம் இருக்குற இடத்துல என்னைப் போய் பாடம் நடத்தச் சொல்றீங்க? ஒரு நாட்டின் அரசு எதற்காக இருக்கிறது என்பதெல்லாம் பெரிய சப்ஜெக்ட் சார். சவுதிஓஜர் நிறுவன தொழிலாளர் பிரச்னை போன்ற விஷயங்களுக்கு யாரை எப்போது பொறுப்பாக்கலாம், இந்தக் கட்டுரைக்கு என்னமாதிரி தலைப்பிடலாம் என்பதை வேண்டுமானால் சொல்கிறேன்.

                    1. சவுதிஓஜர் நிறுவனத்தில் தொழிலாளர்களை கொடுமைப் படுத்துவது அந்த நிறுவனத்தின் ஃபோர்மேன்களும், சூபர்வைசர்களும், மேனேஜர்களும் என்றால், ‘தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் நிர்வாகம்’ என்று தலைப்பிடலாம்.

                    2. நிறுவனத்தின் உரிமையாளர்கள் வகுத்துத் தந்திருக்கும் விதிமுறைகளைத்தான் நிர்வாகம் செயல்படுத்துகிறது என்றால், ‘தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் சவுதிஓஜர் நிறுவனம்’ என்று தலைப்பிடலாம்.

                    3. நாட்டின் தொழிலாளர் நலச் சட்டங்களே தொழிலாளர்களுக்கு எதிராக இருக்கிறது என்றால், அதன்படிதான் நிறுவனம் தொழிலாளர்களை நடத்துகிறது என்றால், ‘தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் சவுதி அரேபிய அரசு’ என்று தலைப்பிடலாம்.

                    4. தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்தும் சட்டங்கள் குர்ஆனிலோ ஷரீயா சட்டங்களிலோ இருக்கின்றன என்றால், அதன்படிதான் நிறுவனம் தொழிலாளர்களை நடத்துகிறது என்றால், ‘தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் அல்லாஹ்வின் மார்க்கம்’ என்று தலைப்பிடலாம்.

                    இப்போ மறுபடி ஒருதடவை பதிவைப் படித்துப் பார்த்து அதற்கு பொருத்தமான தலைப்பு எது என்பதை நீங்களே முடிவு செய்யுங்களேன். எந்த தலைப்பை தேர்வு செய்தீர்கள் என்பதை மறக்காமல் ஒரு பின்னூட்டம் போட்டு தெரிவித்து விடுங்கள்.

                    • தொழிலாளர்களை ஓரளவு கொடுமைப்படுத்தும் சவுதி ஓஜர் நிறுவனம் என்ற தலைப்பே ஓரளவுக்கு உகந்ததாக இருக்கும்..

                    • மரைக்காயர் சார்,

                      //நாட்டின் தொழிலாளர் நலச் சட்டங்களே தொழிலாளர்களுக்கு எதிராக இருக்கிறது என்றால், அதன்படிதான் நிறுவனம் தொழிலாளர்களை நடத்துகிறது என்றால், ‘தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் சவுதி அரேபிய அரசு’ என்று தலைப்பிடலாம்.//

                      ஓஜர் நிறுவனம் தொழிலாளர்களை கொடுமைப்படுத்துகிறது என்பது உண்மையல்லாவா. பிறகு, சட்டத்தை மதிக்காத நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பதும் சவூதியின் தவறல்லவா!

    • சாமுராய் , பதட்டப்படாம தெளிவா நிதானமா சொல்லுங்க சார் . நீங்க முஸ்லீம்னு நான் எப்போ சொன்னேன் ????? நல்லா இன்னொரு முறை நிதானமா என்னோட பதிவை படிச்சுப்பாருங்க சார். நான் ஒண்ணும் சவுதியிலே இருந்து பிரச்சாரம் பண்ணலை பாஸ் . அனுபவித்த உண்மைகளை மட்டுமே பகிர்ந்து கொண்டேன்.மற்றபடி நீங்க சொன்ன எதுவுமே கட்டுரையோட தொடர்புடையதா தெரியலை பாஸ். இது போக உங்களுக்கு புல்லு வேற அரிக்குதுன்னு சொல்றீங்க . நல்ல டாக்டரா பாருங்க பாஸ்.

  9. புத்தரின் தேசமான சீனாவில் இருந்துவிட்டால் மட்டும் சுகபோகமாக வாழ்ந்து விடுவார்களா வினவு? தீவிரவாதிகளுக்கும் முதலாளிகளுக்கும் மதமில்லை. உலகெங்கும் சுரண்டல் சுகம் கண்டவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் சவுதியில் இருப்பதால் மட்டும் மதரீதியில் சாடுவது என்ன வகையான வியாதியோ தெரியவில்லை.

    ராமரின் தேசத்திற்கு திரும்பி வந்தால் வினவு கும்பலுடன் சேர்ந்து உண்டியல் குலுக்க வேண்டியதுதான்! பிரச்சினைகளை மதரீதியாகப் பார்க்காமல் நடுநிலையாக அணுகுவதற்கு வினவு முயற்சி செய்யலாமே!

  10. செம்புலி அய்யா,

    நீங்கள் யேசுவின் தேசத்திற்கு சென்றாலும் சரி. ராமரின் நாட்டிற்க்கு சென்றாலும் சரி, அல்லது அல்லாவின் தேசத்தில் இருந்தாலும் சரி. உழைக்கும் மக்களை எந்த கடவுளும் வந்து காப்பாற்ற மாட்டார். அவர்களாக ஒன்று திரண்டு போராடி தான் தங்கள் சுதந்திரத்தை பெற வேண்டும். அல்லா சொர்கத்திற்க்கு அனுப்புவார் என்ற தத்துவம் உலகின் பல நாடுகளில் உள்ள இசுலாமிய உழைக்கும் மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்கிறது, அதை அம்பலப‌டுத்துவது சரியானது தானே? அல்லாவை கும்மிடுகிற ஏழை உழைக்கும் இசுலாமியர்களை, அல்லாவை கும்மிடும் பணக்கார இசுலாமிய முதலாளிகள் சுரண்டாமலா இருக்கிறார்கள்?

    • //அல்லா சொர்கத்திற்க்கு அனுப்புவார் என்ற தத்துவம் உலகின் பல நாடுகளில் உள்ள இசுலாமிய உழைக்கும் மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்கிறது//
      நம்பியவர் யாரும் கெட்டதில்லை . அல்லாவின் மேல் அவர்களுக்கு நம்பிக்கை, உண்டியல் மேல் உங்களுக்கு நம்பிக்கை.. அவ்வுளவுதான்…

      //அல்லாவை கும்மிடுகிற ஏழை உழைக்கும் இசுலாமியர்களை, அல்லாவை கும்மிடும் பணக்கார இசுலாமிய முதலாளிகள் சுரண்டாமலா இருக்கிறார்கள்//
      இல்லை சுரண்டுவதில்லை… மாறாக இறை நம்பிக்கை உள்ளவர்கள் வறியவர்களுக்கு உதவி கொண்டு தான் இருக்கிறார்கள்…
      அவர்களை பணக்காரர்களாக படைத்தவனும் இறைவனே, ஏழைகளாக படைத்தவனும் இறைவனே, நக்சல்களை படைத்தவனும் இறைவனே, அது இறைவனின் படைப்பின் இரகசியம்… அவரவரின் பாவ மூட்டையின் பரிசளிப்பு… ஏழைகளுக்கும் உறக்கத்தில் இருக்கும் நிம்மதி பணக்காரனுக்கு இருக்காது… யார் உயர்ந்த படைப்பு என்பது புதிர் தான்…

      எனக்கு கூட எல்லாவற்றையும் படைத்த இந்த இறைவன், உண்டியலை ஏன் படைத்தான் என்பது புதிராகத்தான் இருக்கிறது..

      செம்புலி அவர்கள் சொல்லுவது போல பிரச்சினைகளை மதரீதியாகப் பார்க்காமல் நடுநிலையாக அணுகுவதற்கு வினவு முயற்சி செய்யலாமே!!

      • //உண்டியலை ஏன் படைத்தான் என்பது புதிராகத்தான் இருக்கிறது..//

        நீங்கள் எந்த உண்டியலை சொல்லுகிறீர்கள்? திருப்பதி உண்டியலையா?

        • இந்து கோயில் நகரா உண்டியல்களையும், கம்யுனிச மொபைல் உண்டியல்களையும், உண்டியல் ஊர்திகளையும்…

  11. // அல்லாவின் தேசம்! //
    thalaipe thavaru saudi’ku matum than allah’va?
    Muttal’tanamana katturai pakirntha vinavu’ku paratukal!!!
    Rss kumbalai veda ungal methu’than bayam varukirathu!!!

    • //thalaipe thavaru saudi’ku matum than allah’va?
      Muttal’tanamana katturai pakirntha vinavu’ku paratukal!!!
      Rss kumbalai veda ungal methu’than bayam varukirathu!!!//

      சே! எத்ததனை பேர அவைங்க கொன்னாலும் திருந்த மாட்றீங்களப்பா!

      சவூதி தான் இருக்கறதுலேயே கொஞ்சம் ஒரிஜனல் முஸ்லீம் நாடுன்னு நீங்கதான் சொல்லுறீங்க. பிறகு, அல்லாவின் தேசம்னு சொன்னா ஏன் கோவப்படுறீங்க?

      • @rapson
        appadiya thozharey!
        Enna seivathu saudi mattum than unga kannuku therikerathu!
        Quba,rasya and china ponra nadukalil muthalaligal tholilalikalai thalail vaithu thangukerargal appadithaney???
        Undiyal kooluka ungaluku ethavathu oru karanam vendum pola!!
        Enna thozha china’vil pothu makkaluku aarajagam ethum nadaipera villaiya!

        • //Enna seivathu saudi mattum than unga kannuku therikerathu!
          Quba,rasya and china ponra nadukalil muthalaligal tholilalikalai thalail vaithu thangukerargal appadithaney???
          Undiyal kooluka ungaluku ethavathu oru karanam vendum pola!!
          Enna thozha china’vil pothu makkaluku aarajagam ethum nadaipera villaiya!//

          எங்க கண்ணுக்கு அல்லாருந்தான் தெரியுராங்கோ உங்க கண்ணுக்கு இந்த பதிவு மட்டும்தான் தெரியுது போலருக்கு. வினவுல ஒரு ரவுண்டு போயிட்டு வாங்க அப்புறம் பேசிக்கறலாம்.

  12. தலைப்புதான் விசமத்தனமா இருக்கு? எல்லாநாட்டிலும் இந்த பிரச்னை இருக்கு.
    சொல்லவந்ததை சொன்னா ஒன்னும்பிரச்சனை இல்லை பாசிஸ்டுகள் மாதரியே ஆராம்பிக்குறது சரி இல்லை வினவு.

    • இந்த தலைப்பை மாற்றச்சொல்பவர்கள் ஒன்று நாத்தீகர்களாக இருக்கனும் இல்லேன்னா யூத-ஆர்.எஸ்.எஸ் அம்பிகளாக இருக்கனும்..

      இந்த உலகமே அல்லாவின் தேசம் என்று சொல்லும் முஸ்லிமாக மட்டும் இருக்க முடியாது 🙂

  13. தலைப்பை மாற்றுமாறு முஸ்லிம்கள்தான் சொல்கிறோம் அழகிய கட்டுரைக்கு ஏன் விஷம தலைப்பு இது ஒரு சமுதாயத்தை மட்டும் தாக்குவதுபோல் இருக்கின்றது. இல்லை ஹிட்ஸ் வாங்குவதற்க்காகவா?ஹிட்ஸ்தான் கட்டுரையாளரின் நோக்கமென்றால் அவர்கள் தலைப்பை திருத்தப்போவதில்லை.

  14. பூவாலே அம்பு செஞ்சி நோகாம வீசனுமாக்கும்?
    இந்து மதவெறி ஆர்.எஸ்.எஸ். என்று சொன்னாமட்டும் இனிக்குமாக்கும் !

  15. ஒவ்வாரு மாதமும் ஒரு மதத்தை கொச்சை படுத்தி செய்தி வெளிடுவதே இவர்களுக்கு வேலையை போச்சு !!!!!

    ஒரு கம்பெனிக்கும் மதத்துக்கும் என்ன சமந்தம் ???
    இது பார்பன வாதிகளை குளிர்வைகவா இந்த கட்டுரை ????
    வினவு உனக்கு இருக்கிற மறுயதையை நீயே கெடுத்து கொளுகிறாய் …..

    • இதை கேட்டா கோத்து உடுறேன்னு சொல்றாங்கப்பா.. எடுக்கவோ கோக்கவோ !!!

  16. ஒரிஜினல் அல்லாவின் தேசம் எங்கிருக்கு தெரியுமா? சொர்கத்தில. அதனால்தான் ஓஜர் தொழிலாளிகளை சீக்கிரமா சொர்கத்துக்கு அனுப்புர வேலையை செய்து. இதுக்குபோய் கொதிக்கலாமா? சஹீதான உடனே சொர்க்கம் கிடைக்கும் தெரியுமா!

  17. ///தலைப்புதான் விசமத்தனமா இருக்கு? எல்லாநாட்டிலும் இந்த பிரச்னை இருக்கு.
    சொல்லவந்ததை சொன்னா ஒன்னும்பிரச்சனை இல்லை பாசிஸ்டுகள் மாதரியே ஆராம்பிக்குறது சரி இல்லை வினவு.////
    தலைப்பு பதிவர்களை அதிகரிக்க செய்யவே ,வேறொன்றும் காரணம் அல்ல

    • ////தலைப்பு பதிவர்களை அதிகரிக்க செய்யவே ,வேறொன்றும் காரணம் அல்ல/////
      நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு இந்த தலைப்பு பதிவர்களை அதிகம் பெறுவதற்க்கல்ல‌ ஹிட்ஸ்களை அதிகம் பெற்று வினவுடைய‌ கல்லாவை நிறைப்பதற்குதான்.

      • முஹம்மது ஷஃபி பின் அப்துல் அஜீஸ்,

        முன்னாடி முஹமது ஷஃபியாக இருந்து பின்னாடி அப்துல் அஜீஸா மாறிட்டீங்களா! நீங்க சொல்றது வினவுக்கு சரிப்பட்டு வராது அண்ணே. ஏன்னா, இந்த 3 மதத்தை பற்றியும் விமர்சித்துதான் பதிவு போடுகிறார்கள். எப்படி நீங்க 3 பேரும் வினவு கல்லாவை ரொப்புவீங்க.

    • //எல்லாநாட்டிலும் இந்த பிரச்னை இருக்கு//.

      உலகமே அல்லாவின் தேசம்னு மரைக்காயர் சொல்லுறாரு. நீங்கள் சொல்லுவதையும் மரைக்காயர் சொல்லுவதையும் ஒப்பிட்டு பார்த்தாக்கூட, தலைப்பு சரிதான்

      • \\உலகமே அல்லாவின் தேசம்னு மரைக்காயர் சொல்லுறாரு, நீங்கள் சொல்லுவதையும் மரைக்காயர் சொல்லுவதையும் ஒப்பிட்டு பார்த்தாக்கூட, தலைப்பு சரிதான்\\
        என்ன ஒப்பீடோ தெரியல… சீனாவில் கம்யுனிச வெறியர்களால் புத்த துறவிகள் கொலை செய்யப்பட்டால் கூட “துறவிகளை கொடுமைபடுத்தும் அல்லாவின் தேசம்” என்று தலைப்பு வைப்பீர்களா ?

        • அண்ணே நீங்க ஓவரா ஆக்டிங் கொடுக்கறீங்க. மரைக்காயர் உலகமே அல்லாவின் தேசம்னு சொல்றாரு. அல்லாவோ ‘அவனின்றி ஒரு அணுவும் அசையாது’ அப்படின்னு தன்னைதானே மெச்சி ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்காரு. இப்போ சொல்லுங்க தலைப்பு வைக்கலாமா? வைக்கக்கூடாதா?

  18. //புதுவையைச் சேர்ந்த ஏனாம் பகுதியில் அமைந்துள்ள ரீஜென்ஸி செராமிக் என்ற ஆலையில் ஊதிய உயர்வு கோரி கடந்த 3 மாதங்களாக கோரிக்கை விடுத்து, சிறுசிறு போராட்டங்கள் நடத்தினர். நிர்வாகமும் அரசும் அசைந்து கொடுக்காததினால் நேற்று ஆலைப் பணிகளை நடத்தவிடாமல் முடக்கினர். உடனடியாக அரசின் காவல்துறை தலையிட்டு வன்முறையை நிகழ்த்தியிருக்கிறது. 3 மாதமாக தொழிலாளர்கள் போராடியபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அரசு இப்போது மட்டும் ஏன் தலையிடுகிறது?//

    பல விஷயங்களை ஒன்றாகப் போட்டு குழப்பிக் கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த வரையில் ரீஜென்சி செராமிக் ஒரு தனியார் நிறுவனம். அரசாங்கம் இதில் முதலீடு செய்திருப்பதாகத் தெரியவில்லை.

    ஊதிய உயர்வு கேட்பது தொழிலாளர்களின் உரிமை. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அந்த ஊதிய உயர்வை கொடுப்பதோ கொடுக்காமல் இருப்பதோ, அந்த நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்று. ‘நான் உங்கள் நிறுவனத்திற்காக இத்தனை மணி நேரம் வேலை செய்வேன். அதற்கு நீங்கள் இன்னின்ன ஊதியம், அலவன்ஸ், பெனிஃபிட்ஸ் தர வேண்டும்’ என்ற அடிப்படை ஒப்பந்தம் நிச்சயம் இருக்கும். அதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் இரு தரப்பும் ஒப்புக் கொண்டால்தான் முடியும்.

    இந்த ஒப்பந்தம் மீறப்படாத வரையில் அரசாங்கமோ நீதிமன்றமோ இதில் தலையிட வேண்டிய அவசியம் நேராது. ஏதோ ஒரு தரப்பு தாங்கள் ஒப்புக்கொண்டதை நிறைவேற்றவில்லை என்றால் இன்னொரு தரப்பு அரசாங்கத்தையோ காவல்துறையையோ நீதிமன்றத்தையோ அணுகி முறையிடலாம். அப்போது காவல்துறை நிச்சயம் தலையிடும்.

    நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் ஊதிய உயர்வு என்பது முந்தைய வேலை ஒப்பந்தத்தை திருத்தும் ஒரு கோரிக்கை என்பதாகத்தான் எனக்குத் தெரிகிறது. அப்படி அல்லாமல், ஒப்பந்தத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ஒரு உரிமையை நிறுவனம் தர மறுக்கிறது என்றால் தொழிலாளர்கள் முதலில் அரசாங்கத்தையோ நீதிமன்றத்தையோ அணுகியிருக்கலாமே? அப்படிச் செய்யாமல் தொழிலாளர்கள் ஆலைப் பணியை முடக்கியதால் நிர்வாகம் முந்திக்கொண்டு காவல்துறையை நாடியிருக்கலாம்.

    உரிமைகளுக்காக போராடுவதில் தவறொன்றுமில்லை. ஆனால் சட்டவரம்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதுதான் என் கருத்து.

    • தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தும்போது, அவற்றை அரசிற்கும் தெரியப்படுத்திய பிறகுதான், அவர்களின் அனுமதியுடன்தான் ஆர்ப்பாட்டம் போன்ற பலவகைப் போராட்டங்கள் நடத்துகின்றனர். ஆனால் ஆலையின் பணியை முடக்கும் வரையில் அரசு தலையிடுவதில்லை. அதன் பிறகுதான் தனது குண்டர்படையை தொழிலாளர்கள் மீது ஏவிவிடுகிறது. கவனிக்கவும், தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும் கூட அரசு நிர்வாகத்தை அணுகி விசாரிப்பதில்லை. ஆனால் முதலாளி சொடக்கிய உடன் அரசின் துறைகள் வந்துவிடும். இதுதான் எல்லா நாடுகளிலும் உள்ள நடைமுறை. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

      ஒரு நாட்டினிடைய அரசு வரையறுக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களை அந்த நாட்டில் அமைந்துள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதனை ஒரு நிர்வாகம் கடைபிடிக்கின்றதா என்பதனை கண்கானிப்பதும், தவறும் பட்சத்தில் அந்நிறுவனத்தின் மீது அரசு நடவடிக்கை எடுப்பதும் அரசினுடைய கடைமையாகும். பெரும்பான்மை மக்கள் பாட்டாளிகளாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் மக்கள் நல அரசாகத் தன்னை பிரகடப்படுத்திக்கொள்ளும் ஒரு அரசின் வேலை வேறு என்னவாகத்தான் இருக்கும்? இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஓஜர் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு அதைக் கண்டிக்க தவறிய சவூதி அரசே இதற்கு முழுப் பொறுப்பாகும். மேலும், சவூதியின் ஆளும் கும்பலும் இந்நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தலைப்பு சரிதான்

      • //ஒரு நாட்டினிடைய அரசு வரையறுக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களை அந்த நாட்டில் அமைந்துள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.//

        ஓக்கே.. இதை நானும் ஒத்துக்கிறேன்

        //இதனை ஒரு நிர்வாகம் கடைபிடிக்கின்றதா என்பதனை கண்கானிப்பதும்,//

        இது தவறு!!! ஒவ்வொரு நிறுவனமும் அரசாங்கச் சட்டங்கள் அனைத்தையும் பிசகாமல் கடைப்பிடிக்கிறார்களா என்று எந்த அரசாங்கத்தாலும் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது. அதை எப்படி செய்ய முடியும் என்பதை நீங்கள் முதலில் விளக்குங்கள்.

        //தவறும் பட்சத்தில் அந்நிறுவனத்தின் மீது அரசு நடவடிக்கை எடுப்பதும் அரசினுடைய கடைமையாகும்.//

        தவறிழைக்கிறார்கள் என்று தெரியவரும்போது அந்நிறுவனத்தின் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசினுடைய கடமை. இதையும் நான் ஒத்துக் கொள்கிறேன்.

        //ஓஜர் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு அதைக் கண்டிக்க தவறிய சவூதி அரசே இதற்கு முழுப் பொறுப்பாகும். மேலும், சவூதியின் ஆளும் கும்பலும் இந்நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தலைப்பு சரிதான்//

        வச்ச தலைப்பை நியாயப்படுத்துவதற்காக எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது? பாவம்.. நீங்க புடிச்ச முயலுக்கு மூணு கால்தான் போல.

  19. //ஓஜர் நிறுவனம் தொழிலாளர்களை கொடுமைப்படுத்துகிறது என்பது உண்மையல்லாவா. பிறகு, சட்டத்தை மதிக்காத நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பதும் சவூதியின் தவறல்லவா!//

    ஓஜர் நிறுவனம் தொழிலாளர்களை கொடுமைப்படுத்துகிறது என்று சொன்ன செய்தியாளர், நிறுவனத்தின் அந்த நடவடிக்கை சவுதி சட்டத்தை மீறிய செயலா என்பதை விளக்கவில்லை. அப்படி அது சட்டமீறலாக இருந்தால் தொழிலாளர்கள் அரசாங்கத்தை அணுகி முறையிடலாமே? அல்லது அட்லீஸ்ட் இந்தியத் தூதரகத்தையாவது அணுகலாமே? இந்தப் பிரச்னை நிறுவன நிர்வாகத்தில் உள்ள கோளாறு என்றால் அதற்கு நேரடியாக அரசாங்கத்தை பொறுப்பாக்குவது நியாயமில்லை!

    • //நிறுவனத்தின் அந்த நடவடிக்கை சவுதி சட்டத்தை மீறிய செயலா என்பதை விளக்கவில்லை.//

      அப்புடி போடு மரைக்காயரே, ஓஜரின் தொழிலாள விரோத போக்கு சட்டத்திற்கு உட்பட்டு இருந்தாலும் தலைப்பு சரிதான்.

  20. //ஆனால் சௌதி ஆளும் வர்க்கம் தான் சௌதி எனும் நாடு எந்த திசையில் செல்ல வேண்டும் என தீர்மானிக்கிறது. அந்தப்படியான ஆளும் வர்க்கத்திற்கு சொந்தமான நிறுவனந்த்தை அந்த நாட்டுடன் தொடர்புபடுத்துவதில் பிழை ஒன்றுமில்லை.//

    மேலே உங்கள் தோழர் கலைக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும். வச்ச தலைப்பை நியாயப்படுத்துவதற்காக எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது? பாவம்.. நீங்க புடிச்ச முயலுக்கு மூணு கால்தான் போல.

    //அடுத்து, எது குதர்க்கம்? உங்களுக்கு சாதகமானவை எல்லாம் தர்க்கம், பாதகமானவை எல்லாம் குதர்க்கமா? ஒரு நிறுவனத்தின் பிரச்சனைக்கு அல்லாவை இழுத்தது குதர்க்கம் என்றால்; ஒரு நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு அல்லாவை இழுப்பது தர்க்கமா? அதுவும், அவனே எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு என்று கூறிவிட்ட பிறகு. குதர்க்கம் என்று ஒதுக்காமல் பதில் கூறினாலல்லவா தெரியும், தர்க்கத்திற்கும் குதர்க்கத்திற்கும் நீங்கள் என்ன அளவுகோலை கொண்டிருக்கிறீர்கள் என்பது?//

    கட்டுரைக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத தலைப்பு.. அதை சுட்டிக்காட்டும்போது உரையாடலுக்கு கொஞ்சமும் பொருந்தாத வாதங்களை வலிந்து திணிப்பது.. இதையே குதர்க்கம் என்றேன்.

    “அவனே எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு என்று கூறிவிட்ட பிறகு.” – அப்புடிங்களா? எனக்கு தெரியலையே? அப்படி எங்கே சொல்லியிருக்கிறான் அல்லாஹ்?

  21. //ஒவ்வொரு நிறுவனமும் அரசாங்கச் சட்டங்கள் அனைத்தையும் பிசகாமல் கடைப்பிடிக்கிறார்களா என்று எந்த அரசாங்கத்தாலும் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது.//

    என்னய்யா இது! நீங்க கோருவதைப் பார்த்தா மோடி நல்லவளா ஆயிருவாறுப் போல இருக்கே!

  22. பல வாசகர்கள் பல முறை கோரியும் தலைப்பை மாற்ற மறுப்பது நீ என்ன சொல்லுறது நான் என்ன கேட்கிறது என்ற இறுமாப்பா? இதுதான் கம்யுனிசத்தின் சர்வாதிகாரமா?

Leave a Reply to manithan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க