privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாகாதல் எதிர்ப்பு: பாகிஸ்தானில் 'இந்து முன்னணி' ஆண்டியின் ரெய்டு!

காதல் எதிர்ப்பு: பாகிஸ்தானில் ‘இந்து முன்னணி’ ஆண்டியின் ரெய்டு!

-

காதலர் தினத்தில் பொது இடங்களில் இருக்கும் காதலர்களை துரத்தி அடாவடி செய்யும் வெறிநாய்கள் இந்திய நாட்டில் மட்டும்தான் உலாவுகின்றன என்று நினைக்க வேண்டாம். ஒரு பக்கம் மதரசாக்கள், மறுபக்கம் குண்டு வெடிப்புகள் என்று இஸ்லாமிய சொர்க்கம் ஏற்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தானில் இன்னும் சுவராஸ்யமான நிகழ்வுகள் காணக் கிடைக்கின்றன. பாக்கைச் சேர்ந்த சமா தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மாயா கான் என்பவரின் தலைமையில் பல ஆண்டிகள் படப்பிடிப்பு குழுவினருடன் பொது இடங்களுக்குப் போகிறார்கள். இணையாக உட்கார்ந்திருக்கும் காதலர்களை மோப்பம் பிடித்து தட்டிக் கேட்கிறார்கள். இவர்களுக்குப் பிடித்திருப்பது தொலைக்காட்சி ஊடக வெறி.

இந்த காணொளியை இதில் பார்க்கலாம்.

 

ரெய்டு ஆண்டி மாயா கான்
‘ரெய்டு’ ஆண்டி மாயா கான்

குழந்தைகளை நல்வழியில் வளர்ப்பது பற்றி விவாதித்துக் கொண்டே, கையில் மைக்குடன் கேமராக்கள் பின் தொடர சாலைகளில் சுற்றுகிறார்கள். எலி வேட்டையாடும் பரபரப்பை உருவாக்கியபடியே வேக வேகமாக நடக்கிறார்கள்.

ஆங்காங்கு  மறைந்து உட்கார்ந்திருக்கும் இளம் தம்பதியினர் இவர்களைப் பார்த்த பின் பதறி ஓடுகிறார்கள். அவர்களைத் துரத்தி துரத்தி கேள்வி கேட்க முயற்சிக்கிறார் மாயா கான். மூச்சிரைத்தாலும் ‘ஹலோ, ஹலோ, ஹலோ’ என்று நாயைப் போல குரைத்துக் கொண்டு காதலர்களை துரத்துகிறார். பிரைவசியை எதிர்பார்த்து பூங்காக்களுக்கு வந்திருக்கும் காதலர்கள் காமராவுடன் வரும் மாயா கானைப் பார்த்த உடன் அலறுகிறார்கள். பர்தா அணிந்த இளம்பெண்ணை நோக்கி ‘அஸ்லாமு அலைக்கும்’ என்று மாயா கான் கத்துகிறார்.

கடைசியில் உடன் வரும் ஆண்டிகளை பின்தங்கச் சொல்லி விட்டு தனியாகப் போய் ஒரு தம்பதியை பிடித்து விடுகிறார். மைக்கையும் கேமராவையும் அணைத்து விட்டதாக உறுதி கூறி விட்டு பேச்சு கொடுக்கிறார், ஆனால் பேச்சும் படமும் பதிவாகிக் கொண்டே இருக்கிறது. அவர்கள் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டவர்கள் என்று தெரிய வருகிறது. காமராவும் மைக்கும் இயங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்த இரண்டு பேரும் பயந்தபடியே எழுந்து போய் விடுகிறார்கள்.

அதே பூங்காவில் இருக்கும் ஹிஜாப் அணிந்த ஒரு பெண் காதலருடன் பொது இடத்துக்கு வரத் துணிந்த பெண்ணை எதிர்த்து ஆவேசமாக கத்துகிறார். ‘திருமணம் நிச்சயமானவர்கள் என்றால் அவரவர் வீட்டில் சந்திக்க வேண்டியதுதானே, பொது இடத்தில் பூங்காவில் வருவது தவறு. இதற்கு பல குடும்பங்களில் அனுமதி கிடையாது, குடும்பத்தினரின் நம்பிக்கையை பொய்ப்பிக்கிறீர்கள். இந்த மாதிரி இடத்துக்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் நிச்சயம் முறையான உறவு கொண்டவர்கள் இல்லை என்று தெரிகிறது’.

‘நான்கைந்து தம்பதிகள் இருந்தார்கள். எல்லோரையும் துரத்தி விட்டோம்!. நம்மைத் தவிர பூங்காவில் யாரும் இல்லை’ என்று ஒரு ஆண்டி வில்லத்தனமாக சிரிக்கிறார். கராச்சியின் எல்லா பூங்காக்களிலும் இன்று யாரும் வரத் துணிய மாட்டார்கள் என்று ஆண்டிமார்கள் எக்காளத்துடன் மார் தட்டுகிறார்கள்.

மாயாவின் புகழ்பாடும் ஜால்ராக்களுக்கு மத்தியில் அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு அங்கிள், பூங்காவில் வந்து உட்காரும் இளைஞர்களுக்கு எதிராக தனது புனித எண்ணங்களை ஆவேசமாக சொல்கிறார்.

இந்த நிகழ்ச்சியை எதிர்த்து வலைப்பதிவுகளிலும் டுவிட்டரிலும் வெளியான கருத்துக்களைத் தொடர்ந்து மாயா கான், சமா தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பு ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்படுகிறார். ஆனால், பாகிஸ்தானிய சமூகத்தின் எண்ணப் போக்கின் ஒரு குறுக்கு வெட்டுதான் மாயா கான். இளைஞர்கள் ஆணும் பெண்ணுமாக பூங்காக்களில் அமர்ந்து பொழுது போக்குவது என்பது நாகரீக சமூகங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிமை. அதைக் கூட பாகிஸ்தானிய இளைஞர்களுக்கு மறுக்கும் மதவாத பாசிசப் போக்கின் வெளிப்பாடுதான் மாயாகான்.

இந்த ஆண்டிகளுக்கு அடுத்தவர்களின் தனிப்பட்ட விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் கூச்சம் சிறிதளவும் இல்லாததோடு, அதை தொலைக்காட்சியில் காட்டி சம்பாதிக்கவும் தயக்கமில்லை.

இந்தியாவில் காதலர் தினத்தன்று இந்து முன்னணி, ஸ்ரீராம் சேனா கும்பல் பொது இடங்களுக்கு சென்று காதலர்களை வேட்டை நாய்களாக துரத்துவதின் பாகிஸ்தானிய கிளைதான் மாயாகான். அதெப்படி, மதவாதிகள் எல்லாரும் ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள்?

– செழியன்

தொடர்புடைய பதிவுகள்:

  1. மாயா என்ற பெயரைப் பார்த்தால் அவர் ஒரு ’பார்ப்பன பாசிஸ்டு’ ஆக இருக்கலாம், வினவு செய்திக்குழுவை பார்ப்பனியப் பாகிஸ்தானுக்கு அனுப்பி விசாரிக்கவும்…

  2. நாகரீக உலகத்தை சார்ந்த இளம்பெண்களும் ஆண்களும் பூங்காக்களிலும் ஆளில்லாத தியேட்டர்களிலும் பொழுது போக்கலாம் என்ற கருத்தை நானும் வரவேற்கிறேன். ஆனால் குண்டு வெடிப்புகள் தான் இஸ்லாம் காட்டும் என்று கூறுவதன் மூலம் பார்பன இஸ்லாமிய
    வெறுப்புக்கு நீங்களும் தப்ப வில்லை என்று தெரிகிறது.

    தினமலரில் பின்னூட்டமிடும் ஒரு வாசகனின் கருத்தை போல் இருக்கிறது.

    இஸ்லாம் குண்டு வெடிப்பை ஆதரிக்க வில்லை.மாற்றுப் பொருள் தரும் படியான அந்த வரியை நீக்கும் படி வினவை கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றி.

  3. மாயாகானிடம் என்ன இஸ்லாமிய அடையாளம் இருக்கிறது? நீங்கள் இந்தளவு இஸ்லாத்தின் மீது கால்புணர்வு கொள்வதற்கு?? இந்நிகழ்சிக்கு அவர்கள் மதச்சாயம் பூசவில்லை, நீங்கள் பூசாதீர்கள்!

  4. பாவம் வினவு …செழியன்…. தங்கை…யை தேடி மாயா… அலைந்து… திரிந்து… களைப்படைந்து விட்டார்… தண்ணி… கொடுங்கப்பா…

  5. இந்தியாவில் காதலர் தினத்தன்று இந்து முன்னணி, ஸ்ரீராம் சேனா கும்பல் பொது இடங்களுக்கு சென்று காதலர்களை வேட்டை நாய்களாக துரத்துவதின் பாகிஸ்தானிய கிளைதான் மாயாகான். அதெப்படி, மதவாதிகள் எல்லாரும் ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள்?

    காதலர்கள் பொது இடத்தில் அரை அம்மணமா இருதா.. எவனா இருந்தாலும் தொரத்துவான்… ஏன்? உன் பொண்ணு யெவன் கூடயாவது ஊர் மேய்ஜா சிரிப்பியலோ??? மானம் கெட்டவணே….

    • இந்தியன் அவர்களே! காதலர்கள் அத்துமீறுவதை கட்டுரை ஆதரிக்கவில்லை. ஊடகங்கள் தன் லாப வெறிக்காகவும், மதவாதிகள் தன் மத, சாதி வெறிக்காகவும் காதலர்களை அசிங்கப்படுத்துகிறார்கள். மாயா என்ன காதலர்களை ஒழுங்கு படுத்துவதற்க்கா துரத்தினார்?

  6. வினவு அவர்களே உம்முடைய வீட்டுபெண் இப்படி ஊர் சுற்றினால் நீ அவளை ஆதரிப்பாயா?
    இல்லை மகளே அவனுடன் பார்க்,சினிமா சென்று வா என காசு கொடுத்து அனுப்புவாயா?

  7. செழியன்,
    காதலர்கள் பூங்காக்களில் தனிமையாக அமர்ந்து பேசுவது உரிமை தான் நண்பரே. அதை அத்துமீறி அவர்கள் ப்ரைவெஸிக்குள் மூக்கை நீட்டுபவராக, வெறி நாயாக சித்தரிக்கும் இந்தக் கட்டுரை மேற்கத்தியப் பெண்ணியம், பெண் விடுதலை என்பதை அடிப்படையாகக் கொண்ட சிந்தனையின் வெளிப்பாடு.
    பூங்காக்களில் காதலர்கள் தனிமையாக உட்கார்வது இன்று நேற்றல்ல. நம் எம்ஜியார் காலத்திலிருந்தே பழக்கம். அப்போதெல்லாம் இல்லாத வெறுப்பு இன்று மட்டும் ஏன் இந்த இந்து வெறியர்களுக்கும், நீங்கள் இஸ்லாம் வெறியர் என்று சொல்லும் மாயா போன்றவர்களுக்கும் வந்தது என்று நீங்கள் ஏன் சிந்திக்கவில்லை ?

    சென்னையின், ஏன் தற்போது தமிழ்நாட்டின் மற்ற முக்கிய நகரங்களின் பார்க்குகளில் போய்ப்பாருங்கள். தைரியமிருந்தால் உங்கள் மனைவி, குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். பார்க்கில் படுக்கையறையில் உடலுறவுக்கு முன் செய்யும் காம விளையாட்டுக்களை காதலர்கள் பப்ளிக்காக செய்து கொண்டிருப்பதைப் பாருங்கள். கடற்கரையில் போய்ப் பாருங்கள். இந்த அத்துமீறல்களின் எதிரொலி தான் மாயா போன்றவர்களின் அத்துமீறலும். இதை வசதியாக மறந்து விட்டு பார்க்கில் தனியாக உட்கார்ந்து ‘பேசு’ம் காதலர்கள் என்று அவர்களை அப்பாவியாக்க வேண்டாம்.

    காதலர் தின எதிர்ப்பும் இந்த அடிப்படையிலேயே பார்க்கப் படவேண்டும் என்று நான் நினைக்கிறேன். நம் சமூகத்தில் காம உணர்வுகள் வெளிப்படையாக பொது இடத்தில் பலர் முன்பு தெரியும்படி செய்வது நாகரிகமாக இல்லை. மனித இனத்துக்கு அது நல்லதும் இல்லை. மேற்கத்திய நாகரிகம் தனி மனிதனின் இன்ப நுகர்வை பொது இடத்திலும் அனுமதிக்கும் அளவு தனிமனித நுகர்வு வெறியை வளர்ப்பதாக இருக்கிறது. அந்த குணத்தை மேற்கத்திய குணத்தை நம் நாட்டில் புகுத்துவதன் வழிகளில் ஒன்று தான் காதலர் தினக் கொண்டாட்டங்கள்.

    காதலை, காதலர்களை, காதலர் தினத்தை நாம் நமது கலாச்சார ரீதியாக உள்வாங்கி அதை கொண்டாடியிருந்தால் இந்து வெறியர்கள் இப்படி காதலர்களை அடித்து விளம்பரம் தேடிக்கொள்ளும் அவல நிலையும், இந்து வெறியர்களை எதிர்க்கிறேன் என்று நீங்கள் சேம் சைடு கோல் போடும் நிலையையும் தவிர்த்திருக்கலாம்.

    இன்றைய காதல், காதலர்களில் 90 சதவீதத்தினர் மேற்கத்திய பாணியில் டேட்டிங், போட்டிங், ரூம் பிக்ஸிங், என்ஜாயிங்… அப்புறம் கழன்று கொண்டு அடுத்த உடல் நுகர்வை நோக்கி நகரும் பாதையில் திரும்ப டேட்டிங்… என்று தான் வந்தவர்கள், வளர்பவர்கள். இவர்களுக்கான காதலர் தினம் ஒன்றும் சைவமாக இருக்கப் போவதில்லை.

    ‘அது அவர்கள் பெர்சனல் விஷயம் அதில் தலையிட நீ யார் ?’ என்று நீங்கள் மேற்கத்திய அறிவு ஜீவி போல கேட்பீர்களேயானால், நான் என் குழந்தைகள் எதை இந்த வயதில் பார்க்க வேண்டாம் என்று கருதுகிறேனோ அதை என் குழந்தைதகளுக்கு பார்க்கில் பலபேர் முன்னிலையில் நிகழ்த்திக் காட்டும் காதலர்களை இப்படித் தண்டிப்பதை அது பு.ஜ.மு வாக இல்லாத பட்சத்தில் ஆர்எஸ்எஸ்தான் உதவிக்கு வருமென்றால் அதை ஆதரிக்காவிட்டாலும் நான் கண்டிக்கப் போவதில்லைதான்.

    • திரு. அம்பேதன் நீங்கள் எதை எதிர்க்கிறீர்கள். பொத்தாம் பொதுவ்காக காதல் என்கின்ற பதத்தையே எதிர்கிறீகளா அல்லது காதல் என்கின்ற பெயரில் சில்மிஷத்தில் ஈடுபடும் நபர்களை மட்டும் எதிர்க்கிறீர்களா.

    • வணக்கம் அம்பேதன்,

      பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம், ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்கம் இவற்றை எதிர்ப்பதில் இந்துத்துவா பழமைவாதிகள், முஸ்லீம் பழமைவாதிகளும் முனைப்பாக இருக்கிறார்கள். அவர்களது நோக்கம், சமூகத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய ‘இந்து/இஸ்லாம் பொற்காலத்துக்கு’ சமூகத்தை திருப்பிக் கொண்டு போவது. இந்தியாவில் ஸ்ரீராம் சேனா ‘இந்திய பண்பாட்டை’ காப்பாற்றுவதாக அராஜகம் செய்வது, பாகிஸ்தானில் மாயா கான் முதலான அடிப்படைவாதிகள் ‘இஸ்லாமிய கலாச்சாரத்தை’ பாதுகாப்பதாக சர்க்கஸ் நடத்துவது இந்த வகையில் சேரும்.

      அறிவியல் கண்டுபிடிப்புகளையும் சமூக மாற்றங்களையும் அரை மனதோடுதான் ஏற்றுக் கொள்கிறார்கள் அத்தகைய பழமை வாதிகள்.

      நாம் அறிவியலையும், சமூக மாற்றங்களையும் வரவேற்க வேண்டும். அந்த மாற்றங்களை, முதலாளித்துவ பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக திரித்து பெரும்பான்மை மக்கள் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படுவதை எதிர்க்க வேண்டும். அறிவியலும் சமூக மாற்றமும் எப்போதோ நிலவிய ‘பொற்காலத்தை’ அழித்து விட்டன என்ற பொருமலின் அடிப்படையில் எதிர்க்கும் மத அடிப்படைவாதிகளைப் போல் இல்லாமல், அவற்றை பெரும்பான்மை மக்களின் நலனுக்கு பயன்படுத்துவதற்காக போராட வேண்டும்.

      ‘பெண்ணியம்’ என்ற பெயரில் உழைக்கும் மக்களின் போராட்டத்தை திசை திருப்புவதை ஏற்றுக் கொள்ளா விட்டாலும், மதங்கள் சொல்லும் ‘பொற்கால’ வரலாற்றில் பெண்கள் உரிமை மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டார்கள் என்பதை மறுக்க முடியாது.

      பொது இடங்களில் இளைஞர்கள் பொழுது கழிப்பதை கொச்சைப்படுத்தி எதிர்ப்பது பிற்போக்கு வாதம். ‘குழந்தைகள் கண்ணில் பட்டால் என்ன ஆகும்? உங்க வீட்டுப் பெண்கள் அப்படிப் போனால் என்ன சொல்வீர்கள்?’ என்பதெல்லாம் ஆணாதிக்க மனோபாவத்தின் எச்சங்கள். நவீன சமூகத்தில் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்ளாமல் சுய கட்டுப்பாடுடன் நடப்பதுதான் பெரும்பான்மை இளைஞர்களின் பண்பாடு. அதிலிருந்து தவறும் ஓரிருவரை சுட்டிக் காட்டி, அனைவரது சமூக உரிமைகளையும் பறிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

      மாயா கான், அல்லது ஸ்ரீராம் சேனா போன்றவர்களின் நடவடிக்கைகள் ஜனநாயக விரோதமானவை. அத்தகைய ஜனநாயக விரோத எண்ணங்கள் நம்மிடம் இருந்தால் அவற்றை மறுபரிசீலனை செய்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

      • சிவகுமார்,
        நான் மாயா போன்றவர்களின் செயலை அப்படியே ஆதரிக்கவில்லை. இந்துத்வா, இஸ்லாமிய அடிப்படை வாதம் போன்றவை தான் இன்று மேற்கத்திய நாகரிகத்தின் தாக்குதலுக்கு எதிராகக் குரல் கொடுப்பவையாக மாறி நிற்கின்றன.

        புஜமு, வினவு தோழர்களின் பெண்ணிய வரைமுறைகளில் எனக்கு கருத்து மாறுபாடு உள்ளது. உங்களது சமீபத்திய மகளிர் தின பதிவிலிருந்து கீழே..

        //சொந்த வர்க்கத்தை,
        மனைவியாய், மகளாய், சகோதரியாய்
        வேலைக்காரியாய்
        சுரண்டி சுகம் கண்டது போதும//

        மனைவி, மகள், சகோதரிகள் என்கிற உறவுப் பாத்திரங்கள் செய்யும் குடும்ப வேலைகளும் வேலைகள் தான் ஐயா. அவ்வேலைகளை அவர்கள் செய்யாவிட்டாலோ, சரியாக செய்யாவிட்டாலோ எதிர்கால சந்ததிகள் பாழாய் போகும்.
        வீட்டு வேலைகளை பெண்கள் செய்வதை சுரண்டல் என்று பார்ப்பதற்குப் பதில் அவை முக்கியமான குடும்பம் தொடர்பான வேலைகள் என்பதை சமூக விழிப்புணர்வாக்க முயன்றால் ஆண்கள் பெண்களை அடிமைகள் போல் நடத்துவதை எளிதில் மாற்றி சக தோழியாய் கருதச் செய்ய முடியும்.

        • வணக்கம் அம்பேதன்,

          மாயா கான் போன்றவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பழமைவாதத்தை நீங்கள் ஆதரிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியதற்கு நன்றி.

          //மனைவி, மகள், சகோதரிகள் என்கிற உறவுப் பாத்திரங்கள் செய்யும் குடும்ப வேலைகளும் வேலைகள் தான் ஐயா. அவ்வேலைகளை அவர்கள் செய்யாவிட்டாலோ, சரியாக செய்யாவிட்டாலோ எதிர்கால சந்ததிகள் பாழாய் போகும்.//

          ‘தாழ்த்தப்பட்ட சாதியினர் மலம் அள்ளும் வேலையை செய்யா விட்டால் ஊரே நாறிப் போகும்’ என்று அவர்கள் கவலைப் பட்டு அடிமைத்தனத்தை சுமக்க வேண்டும் என்று சொல்வீர்களா?

          //வீட்டு வேலைகளை பெண்கள் செய்வதை சுரண்டல் என்று பார்ப்பதற்குப் பதில் அவை முக்கியமான குடும்பம் தொடர்பான வேலைகள் என்பதை சமூக விழிப்புணர்வாக்க முயன்றால் ஆண்கள் பெண்களை அடிமைகள் போல் நடத்துவதை எளிதில் மாற்றி சக தோழியாய் கருதச் செய்ய முடியும்.//

          ‘சாதி ஒன்றும் தவறில்லை, சாதிகளுக்கு இடையே ஏற்றத் தாழ்வை ஒழித்து விட்டால் போதும்’ என்று பேசும் வருணாசிரம வாதிகள் போலவே உள்ளது இந்த வாதம்.

          ‘பெண்கள் வீட்டு வேலைகள் செய்வதை விரும்பி செய்கிறார்கள், எதிர்கால சந்ததிகள் நலம் பெற செய்கிறார்கள்’ என்று அறிவுறுத்துவது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு. எதிர்கால சந்ததிகளின் நலனுக்காக ஆண்கள் ஏன் வீட்டு வேலைகளை பொறுப்பெடுத்து செய்வதில்லை?

          பொறுப்புகள் அனைத்தையும் பெண்கள் மீது சுமத்தும் சமூக அமைப்பு மாற வேண்டும்.

          • இந்த மாதிரி கண்ணை மூடிக் கொண்டு இது பிற்போக்கு வாதம் என்று நீங்கள் சொல்வதற்கும், ‘வெறி நாய்கள்’ என்று கட்டுரையாளர் சொல்வதற்கும் பெரிய வித்தியாசமில்லை.

            பெண்கள் வீட்டு வேலை மட்டுமே செய்ய வேண்டும். அதை தலைவணங்கி ஏற்க வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால் அப்படி இருப்பது பாவச் செயலல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும். மேலும் இந்தக் காலத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து தங்களது குடும்பம், மற்றும் சந்ததியினரை உருவாக்க பெரிதும் ஆவல் கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

            ஆண்கள் பெண்களை அடிமைப் படுத்திய காலங்களில் நீங்கள் இப்படிப் பேசியது ஞாயமானது. ஏனென்றால் பெண் வேறு எந்த வேலையும் செய்யக் கூடாது என்று எல்லோரும் நிர்ப்பந்தித்த காலத்தில் அதை அறுத்தெறீி என்பது தான் அதற்கு சரியான எதிர் வாதம்.

            ஆனால் அதை இன்றைய நுகர்வு மய வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் வித்தியாசமின்றி ஏகாதிபத்திய கூலிகளாய், ஒருவருக்கொருவர் வேலையில் போட்டியாய் மாறிப் போன இந்தச் சூழலிலும் நீங்கள் அப்படியே பேசுவது சரியாக எனக்குப் படவில்லை.

            அப்புறம் உங்கள் இஷ்டம்.

  8. நாய் செய்வதை நாகரீகம் என்ற பெயரில் அரிப்பெடுத்த ஆணும் பெண்ணும் நடு ரோட்டில் செய்வதை என் குழந்தைகள் காண வேண்டும் என்று நீ விரும்பினால்,எனக்கு நீ தோழன் அல்ல பகைவன்.

    • அடடா பார்க் பீச் என்று எல்லா இடங்களிலும் ஒரே காம களியாட்டம் தான் போங்கள்.. ஆனால் உங்கள் குழந்தைகளை சினிமாவிடமும் டிவியிடமிருந்து எப்படி காப்பாற்ற போகிறீர்கள்? காதல் என்றலே கசமுச என்று முடிவெடுத்துவிட்டால் யார் என்ன செய்ய முடியும்?

  9. பீச்சில் மிக மிக கேவலமாய் நடந்து கொள்ளும் ஈன பிறவிகளை காதலர்கள் என்று சொல்பவன் மடையன்.அவர்களுக்கு என்று ஒரு தினம் வேறு. நாம் அதை கடுமையாக கண்டித்தால் தான் வளரும் சிறுவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள்.

  10. “அதெப்படி மதவாதிகள் எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்கிறாங்க?” சுயமா சிந்திச்சா இது போன்ற பிரச்சினை இருக்காதே. மத வியாதிக்காரர்கள் எல்லோரும் அடிப்படையில் ஒரே குட்டையில் மட்டைகள்தான். இந்த மட்டைகளில்தான் கொஞ்சம் வித்தியாசம்.

  11. // இந்த நிகழ்ச்சியை எதிர்த்து வலைப்பதிவுகளிலும் டுவிட்டரிலும் வெளியான கருத்துக்களைத் தொடர்ந்து மாயா கான், சமா தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பு ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்படுகிறார். //

    கணிசமான பார்வையாளர்கள் எதிர்க்கிறார்கள் என்று தெரிந்தவுடன் சமா தொலைக்காட்சி எடுத்த அடுத்த வியாபர முடிவு.!

  12. உங்களின் இந்த கருத்து இந்துக்களை எப்படியாவது திட்ட வேண்டும் என்ற நய வஞ்சகத்துடன் எழுதப்பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் நடக்கும் இந்த காட்டு மிராண்டி செயலுக்கு இந்துக்கள் தான் கிடைத்தர்களா? முஸ்லீம்களின் இந்த செயலுக்கு இந்துக்களின் மதத்தைக் குறிப்பிட்டு உங்களின் வக்கரப்புத்தியை காட்டி உள்ளீர்கள். முஸ்லீம்கள் என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்துல்லீர்கள். அந்த அளவிற்கு அவர்களிடம் பயம். தினசரி குண்டு வெடிப்பில் தவித்துக்கொண்டு இருக்கும் பாக்கிஸ்தான் உங்களின் இந்த உபதேசத்தால் “மகிழ்ச்சி” அடைவார்களா? உங்களின் இந்த கருத்து பரிதாபதாபகரமானது.

  13. பாகிஸ்தானில் நடக்கும் இந்த “காமத்தின” வேரியாட்டத்திகு முஸ்லிம்கள்தான் காரணம். இந்துக்கள் அல்ல! இதுகூட தெரியாமல் வலைப்பூ நடத்துவது நகைப்புக்குரியது. இஸ்லாமிய பணம் எப்படியெல்லாம் விளையாடுகிறது! நன்றாக சம்பாதித்து இந்த உலகத்தில் சொர்க்கத்தை அனுபவியுங்கள்!!!!!!! வாழ்த்துக்கள்!!!!!!

    • நட்டுராயன் தம்பி நடுவுல ஒரு லம்ப்ஸம் அமவன்ட கமிஷனா எடுத்துகிட்டு இப்படி பேசலாமா?

      • உங்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. நான்கு சுவருக்குள் நடக்கும் பேரங்கள் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லைதான்! கட்டுரைகளை அவ்வப்போது ஆய்வு செய்வீர்களானால் இந்த பேரங்கள் உங்களுக்கு தெரியவரும். வெறித்தனமாக செயல்படும் இஸ்லாமிய பயங்கர வாதத்தை தெரிந்துகொள்ளாமல் எழுதுகிறீர்கள்.

  14. even i agree with Mr.Natrayan. Vinavu, blaming hindu fanatics for what crimes they commit is one thing.. but blaming hindus for what muslims do in Pakistan is seriously “fake neutrality” as observed by Indian media which shows Modi’s mistakes in full limelight but hide his achievements which recently even a congress notice was forced to accept. If you don’t make a change in the title to say “muslim fanatics similar to hindu fanatics” or something of that sort, this will be the last day I’m visiting this site. Coming from a 3 year vinavu reader, I hope you’ll consider..

    • எவ்வளவு நாளைக்குத்தா நானும் வலிக்காத மாரியே நடிக்கிறது.

  15. Those who opposed this article comfortably forgot that they encourage their children to play dance for obscene film songs. They are happy with programs like maanada- mayilaada. If you start sex education in the school itself, the younger generation will be more matured. We can avoid many number of teenage pregnancies among school girls. Even with stringent rules you cannot monitor every moment of adolescent life. The best way is to educate them in the younger age.

  16. தலைப்பையும் உள்ளே இருக்கும் சரக்கையும் படித்த உடன் புரிந்துகொண்டேன் ஆசிரியரின் உயிர் பயத்தை ..

  17. சமூகத்தில் புரையோடி கொண்டிருக்கும் கலாசார சீரழிவை ஒருபக்கம் குறை கூறுவதும் மறுபக்கம் ஆதரிப்பதை தான் இப்பதிவு காட்டுகிறது.மேற்கத்திய கலாசாரம் அறவே எதிர்க்கும் வினவு போன்ற தளங்கள் காதலர் தின கொண்ட்டாட்டம் விசயத்தில் மாறுபடுவதை காணமுடிகிறது .பொதுவாக காதலர்களை துன்புறுத்துவது அல்லது அவர்களை கண்ணியக்குறைவாக நடத்தியதாக அந்த பதிவில் காணமுடியவில்லை .இங்கு இந்து முன்னணி வகேராகளுடன் ஒப்பிட்டு கூறுவதிலிருந்து யாரை குறை கூறவேண்டும் என்பது தெளிவாகிறது .காதலர்களை அணுகி அவர்களிடம் அன்பான வார்த்தைகளை பேசி அதனுடைய வீபரிததை எடுத்து சொல்லும் ஒரு கூட்டம் அங்கெ . இந்து முன்னணி ராமசேன அத்து மீறிதாக்கி அவர்களை கண்ணியக்குறைவாக நடத்திய கூட்டம் இங்கே
    பொதிகையான்

    • காதலர் தினத்தை ஆதரிக்கவில்லை காதலை ஆதரிக்கிறார்கள்..

Leave a Reply to சிக்ஸ்பேக் சிங்காரம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க