privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.க“மின்சாரம் தனியார்மயமானதே தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம்!”

“மின்சாரம் தனியார்மயமானதே தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம்!”

-

மின்சாரம் தனியார்மயமானதே தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம்

“மின்சாரம் தனியார்மயமானதே தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம்!”

தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் தொடர்பிரச்சார இயக்கம்.

மின்சாரம் தனியார்மயமானதே தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம்பேருந்துக் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு என அடுத்தடுத்து மக்கள் மீது தாக்குதலைத் தொடுத்துவிட்டு, போதாக்குறைக்கு தற்பொழுது மின்கட்டண உயர்வு என்ற இடியையும் மக்கள் மீது இறக்கியிருக்கிறது, பாசிச ஜெயா அரசு.

இந்த மின்கட்டண உயர்வென்பது,  டாடா, அம்பானி, அடானி, அப்போலோ போன்ற கார்ப்பரேட் மின் உற்பத்தி நிறுவனங்கள் மின்சாரத்துக்கு என்ன விலை கேட்கிறார்களோ, அதனை மக்களிடமிருந்து வசூலித்துக் கொடுப்பதற்கான ஏற்பாடே என்பதை விளக்கியும், “மின்சாரம் தனியார்மயமானதே, தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம். மின்வெட்டில்லா தமிழகம் வேண்டும்; ஆபத்தான அணுஉலை வேண்டாம்” என்ற முழக்கத்தினை முன்வைத்தும்,  ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் தொடர் பிரச்சார இயக்கங்களை நடத்தி வருகின்றன.

சென்னையில், 04.04.2012 அன்று ம.க.இ.க; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு. மற்றும் ம.உ.பா.மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் சைதை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  போக்குவரத்து நெரிசல் மிகுந்த பிரதான சாலையை மறித்தும், ஜெவின் கொடும்பாவியை எரித்தும் தோழர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

திருச்சியில்,  10.04.2012 அன்று, ம.க.இ.க; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் சேர்ந்து மேலசிந்தாமணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.  ஆர்ப்பாட்டத்தில், மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் மறுகாலனியத் தாக்குதலை அம்பலப்படுத்தி முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர்.

திருச்சி  துவாக்குடியில், 17.04.2012 அன்று பு.ஜ.தொ.மு. (தமிழ்நாடு) சார்பில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாத புதிய ஜனநாயகம் இதழில் மின்சாரம் தனியார்மயமாக்கம் குறித்து வெளியான கட்டுரைகளை விளக்கி அறைக்கூட்டமொன்றை நடத்தினர்.

ஓசூரில் 09.04.2012 அன்று பு.ஜ.தொ.மு. அமைப்பின் சார்பாக, தொழிலாளர்கள் நிறைந்த பகுதியான தர்கா பேருந்து நிறுத்தம் அருகே திரளான தொழிலாளர்களது பங்கேற்புடன் தெருமுனைக்கூட்டத்தை நடத்தினர்.

நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் சார்பில் 15.04.2012 அன்று  கோத்தகிரியில்  பொதுக்கூட்டம் மற்றும் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக்கூட்டத்தையும் இப்பகுதியெங்கும் நடத்திய தோழர்களது பிரச்சாரத்தையும் பகுதிவாழ் உழைக்கும் மக்கள் வரவேற்று ஆதரவளித்தனர்.

கரூரில், 09.04.2012 அன்று பு.மா.இ.மு.வின் சார்பில் உழவர் சந்தை அருகில், ம.க.இ.க. மையக் கலைக்குழுவினரின் புரட்சிகர கலைநிகழ்ச்சியுடன் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறுதொழில், பட்டறை, விசைத்தறிகள் நிறைந்த இப்பகுதியில், மின்சாரம் தனியார்மயமானதே மின்வெட்டிற்கான காரணம் என்பதை விளக்கி, இத்தனியார்மயத்தை ஒழித்துகட்ட நாம் ஓரணிசேர வேண்டுமென்று இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக சிறப்புரையாற்றிய தோழர்கள் அறைகூவல் விடுத்தனர்.

கடலூரில், 14.04.2012 அன்று பு.மா.இ.மு.வின் சார்பில் டவுன் ஹாலில் கருத்தரங்கம் நடைபெற்றது.  பு.ஜ.தொ.மு. வின் மாநிலப் பொதுச்செயலர் தோழர் சுப.தங்கராசு. சிறப்புரையாற்றினார்,

தருமபுரியில், 13.04.2012 அன்று வி.வி.மு. சார்பில் இராஜகோபால் பூங்கா அருகில் பொதுக்கூட்டம் மற்றும் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. போலீசின் ஒருமாத கால இழுத்தடிப்பால் நீதிமன்ற முறையீட்டுக்குப் பின்னரே இப்பொதுக்கூட்ட அனுமதியைப் பெற முடிந்தது. மின்வெட்டு, மின்சாரம் தனியார்மயமாக்கத்தின் விளைவுகளை பு.மா.இ.மு.வின் மாநில அமைப்பாளர் தோழர் த.கணேசன் அவர்களும்; முல்லைப்பெரியாறு அணையை மீட்க நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பு.ஜ.தொ.மு.வைச் சேர்ந்த தோழர் நாகராசு அவர்களும் சிறப்புரையாற்றினர்.

இந்த ஊர்கள் தவிர, இப்புரட்சிகர அமைப்புகள் செயல்படும் பகுதிகள் அனைத்திலும் பல்வேறு வடிவங்களில் பிரச்சார இயக்கத்தை தொடர்ந்து  மேற்கொண்டு, மறுகாலனியாக்கத் தாக்குதலுக்கு எதிராகப் போராட மக்களை அணிதிரட்டி வருகின்றன

_________________________________________

– புதிய ஜனநாயகம், மே-2012

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. தமிழக மின் தேவையில் எத்தனை சதம் தனியாரிடன் இருந்து வாங்கப்படுகிறது ? என்ன விலைக்கு ? விவரங்களுடன் நிருபிக்கவும். தனியார்களிடம் இருந்து 15 ரூ வரை வாங்கப்படுவதால், தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர அல்லது குறைந்த லாபம் தானா என்பதையும் தெளிவுபடுத்தவும். எனெனில் தனியார் மின் உற்பத்தி நிறுவங்களின் வருடாந்தர பாலன்ஸ் ஷீட்டுகளையும் கொண்டு நிருபிக்கவும்.

    30 ஆண்டுகளுக்கு முன்பு நிலவரம் எப்படி ? 70களின் மின் பற்றாக்குறை எப்படி இருந்தது ? அன்று தனியார்மயம் இல்லையே.

  2. புரட்சி தலைவர்,பொருளாதார மாமேதை, ஆன்மீக செம்மல், சோதிட பேரறிஞர், கைரேகை கவிஞர், மன்மோகன் சிங்ன் மாப்பிள்ளை, அம்பானியின் அன்பு தம்பி, மோடியின் ரசிகர், அண்ணன் அதியமான் என்ன சொல்றார்ன்ன…

    தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் எல்லாம் மகா யோக்கியர்கள், அவர்களால் மட்டுமே நாட்டில் ஒளி கிடைக்கிறது… அரசு மின் வாரியங்கள் எல்லாம் அவிஞ்சி போய் விட்டது… இவர்களை மொத்தமாக கொன்று விடலாம்… சோறு தின்பது, தூங்குவது, காலை கடன் கழிப்பது என எல்லாவற்றையும் தனியார் மயமாக்கினால் மட்டுமே எல்லோரும் சோறு திங்க முடியும், செரிக்கும், தூங்க முடியும், பல் விளக்க முடியும்,காலை கடன் கழிக்க முடியும்… இவை எல்லாம் இல்லாமல் அண்ணன் அண்ணன் அதியமானுக்கு சரியாக செரிக்க, நீர் கடுப்பு இல்லாமல் போக, தூங்க… அரசு துறையில் இருக்கும் அனைத்தையும் ஒழித்து விட வேண்டும் எனவும் அண்ணன் அதியமான் சார்பில் கேட்டு கொள்கிறேன்…

    10 ஆண்டுகளுக்கு லாபத்தில் இயங்கிய தமிழ் நாடு மின் வாரியம் இப்போது ஏன் நட்டம் அடைகிறது… என முதலாளிதுவ அழுகிய மூளைகளால் பார்க்க முடியாது…

    இப்போது இருப்பது போன்ற 10 மணி நேர மின் வெட்டு… முன்பு எப்போதும் இல்லை… 1989இல் திமுக ஆட்சியில் கே.என்.நேரு மின் துறை அமைச்சராக இருந்த போது 30-40 சதவீத மின் வெட்டு இருந்தது… அப்போது சொன்ன காரணம் நிலக்கரி பிரச்சனை… மற்றபடி ஜெயலலிதா ஆட்சியில் 1991-93இல் நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடந்தத போதும் மின் வாரியம் நட்டம் அடைய வில்லை… மின் வெட்டு இல்லை… கடைசியாக தமிழக அரசின் மின் திட்டம் தொடங்கிய 1994 சனவரியில் தொடங்கப்பட்ட பேசின் பாலம் மின் நிலையம்… பின்னர் எல்லாம் தனியார் மின் நிலையங்கள்தான்… அதன் பின்னர்தான் நட்டம்மும், மின் வெட்டும்… இதையெல்லாம் காண முடியாத ஜென்மங்கள்…திருந்த போவதே இல்லை…

    • //10 ஆண்டுகளுக்கு லாபத்தில் இயங்கிய தமிழ் நாடு மின் வாரியம் இப்போது ஏன் நட்டம் அடைகிறது…//

      எந்த பத்தாண்டுகள் ? ஆதாரத்துடன் பேசவும். எனக்கு தெரிந்து மின்வாரியம் லாபத்தில் நடந்தாக தெரியவில்லை. மேலும் நான் கேட்ட விபரங்களை, முக்கியமாக தனியாரிடம் இருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவு மற்றும் விகிதம் பற்றி ஒன்னும் பேசாமல், சும்மா பொத்தாம் பொதுவாக் உட வேண்டாம். ஊழல் பற்றி உம்மை விட எனக்கு அதிகம் தெரியும். சும்மா பெரிய புடுங்கியாட்ட பேச வேண்டாம்.

      // என முதலாளிதுவ அழுகிய மூளைகளால் பார்க்க முடியாது…//
      //

      உம்மை போன்ற இழிபிறவிகள் இணையத்தில் மட்டும் தான் இப்படி தனிமனித தாக்குதல் செய்வீக. யார் அழுகிய மூளை என்பதை வாசகர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.
      இந்த தளத்தில் உருப்படியாக, objective ஆக விவாதிப்பது மு

  3. அண்ணன் அதியமான்… நீண்ட காலமாக முதலாளிதுவ கனவில் இருப்பதால் 2000-01 நிதியாண்டு வரை லாபத்தில் இயங்கிய தமிழ் நாடு மின்சார வாரியம் பற்றி தெரிய வாய்ப்பில்லை…

    1 யூனிட் மின்சாரத்திற்கு 12-13 ரூபாய் கணக்கிட்டு தமிழ் நாடு மின் வாரியத்திடம் விற்கும் தனியார் கயவாளிகள் கூட மூடி கொண்டு இருக்கும் நிலையில் அண்ணன் அதியமான் வீம்பிற்காக தனியார் நிறுவன வரவு செலவு கணக்கு வாங்கி வர கேட்கிறார்… இந்த தனியார் நிறுவன திருட்டு கயவாளிகளை ஊடங்களில் மின் வாரிய பொறியாளர் சங்க தலைவர் அனைத்து ஊடங்களிலும் அம்பலபடுத்திய போதும்… பாவம் புரட்சி தலைவர் அதியமான்… அந்த முதலாளிகளுக்காக அழுகிறார்…

    அண்ணே… நான் உங்கள் பற்றி தனிபட்ட முறையில் எதுவும் சொல்ல வில்லையே? முதலாளிதுவம் மனித மூளைகளை அழுக வைத்திருக்கிறது என்றால்… நீங்கள் பொங்குவது ஏனோ? வீம்பிற்காக இங்குள்ளவர்களை திட்டுவதால் யாருக்கும் நட்டம் இல்லை? இப்படிப்பட்ட முதலாளிதுவ பரப்புரைகளை… முதலாளிதுவ தரகர்களாக இருக்கும் பார்ப்பன/நவீன பார்ப்பனர்களிடம் பேசினால்… நீங்கள் கதாநாயகனாக ஆட முடியும்… இங்கு வந்து… வீம்பிற்கு ஆப்பு வாங்கி செல்வதால் என்ன பயனோ?

  4. //1 யூனிட் மின்சாரத்திற்கு 12-13 ரூபாய் கணக்கிட்டு தமிழ் நாடு மின் வாரியத்திடம் விற்கும் தனியார் கயவாளிகள் கூட //

    ஆம். அந்த விலை included both fixed costs (capital costs) as well as operating costs, plus interest cost ,etc. அரசு துறை மின் உற்பத்தி நிலையங்களின் உண்மையான உற்பத்தி செலவை இதே பாணியில் கணக்கிட்டால் இன்னும் அதிகம் ஆகும். 13 ரூபாய்க்கு விற்க்கும் தனியார்களில் லாபம், எத்தனை சதம் ? 100 சதமா அல்லது என்ன? அதை தான் கேட்டேன். அரசு மின் நிலையங்களை அமைத்தால் ஊழல், cost and time over runs, over staffing, unaccountability, etc மிக அதிகமாக இருக்கும். அதனால் தான் பல விசியங்களில் இன்று தனியார் துறைக்கு அனுமதி. சாலை அமைத்தல் முன்பு அரசு மட்டும் தான் செய்தது. Public private partnership model இன்று. இல்லாவிட்டால் உலக தரம் வாய்ந்த toll roads இங்கு சாத்தியமில்லை. அரசு துறையில் வேலை எப்படி நடக்கிறது என்பதை பற்றிய அனுபவ அறிவு உமக்கு இல்லை.
    ஆயுனும் 50 வருட controlled and state planning இன் நீண்ட கால விளைவுகள் இன்றும் தொடர்வதால், ஊழல் இது போன்ற contracts இல் இன்றும் அதிகம்.

    ////அண்ணே… நான் உங்கள் பற்றி தனிபட்ட முறையில் எதுவும் சொல்ல வில்லையே? ////அப்படியா ? பிறகு ///புரட்சி தலைவர்,பொருளாதார மாமேதை, ஆன்மீக செம்மல், சோதிட பேரறிஞர், கைரேகை கவிஞர், மன்மோகன் சிங்ன் மாப்பிள்ளை, அம்பானியின் அன்பு தம்பி, மோடியின் ரசிகர், அண்ணன் /// இதெல்லாம் என்னவாம் ? ஏன் எம்மை பற்றி பேசவேண்டும் ? விசியத்த ’மட்டும்’ பேசினால் போதும். மேலும் மோடியில் குற்றங்களையும், இந்துதுவர்களின் வெறி செயல்களையும் நான் என்றும் ஆதரித்ததில்லை. ஆனாலும் எம்மை ஒரு இந்த்துவவாதி என்று பொய்யாக முத்திரை குத்த தொடர்ந்து முயல்வது இழி செயல். எத்தனை முறை சொல்லியும் இதை தொடரும் உம்மை எப்படி மன்னிப்பது ?

    • சாலைகளை அமைத்த தனியார்கள் சதுர அடிக்கு எவ்வளவு சராசரியாக வரிவசூல் செய்கிறார்கள் அதுவும் எத்தனை ஆண்டுக்கு. இடையில் அதனை உயர்த்த மாட்டார்களா. அப்படி உயர்த்தும்பட்சத்தில் 2ஜி ஊழலலெல்லாம் ஒன்றுமிலாது போய்விடுமே. அதி சார் கொஞ்சம் நியாயத்தின் பக்கம் இருந்து பேச முயற்சிக்கலாமே

  5. ///அரசு துறை மின் உற்பத்தி நிலையங்களின் உண்மையான உற்பத்தி செலவை இதே பாணியில் கணக்கிட்டால் இன்னும் அதிகம் ஆகும்.///

    இருக்கட்டுமே. அதனாலென்ன, நிறுவனங்கள் அரசின் கையில் இருக்கும்போதுதான் மக்களின் அத்தியாவசியத் தேவை, வாங்கும் சக்தி, மக்களின் நலன் இவையெல்லாம் கணக்கில் கொள்ளப்பட்டு ஒரு துறையின் நட்டத்தை மற்றொரு துறையின் மூலம் ஈடுகட்டிக்கொள்ளலாம். ஒரு துறையின் உபரி மீண்டும் மக்கள் சேவைக்கே திருப்பிவிடவும் ஏதுவாக இருக்கும். அதுவே தனியார் முதலாளிகளிடம் கையளித்தால் அவர்களால் அரசுத்துறைகள் போல் செயல்படுத்த முடியாது என்பதுதான் அனுபவம் நமக்கு உணர்த்துகிறது.

    • //இருக்கட்டுமே. அதனாலென்ன, ///

      அப்ப உற்பத்தி செலவு, மற்றும் வெட்டி செலவுகள், ஊழல்கள் மிக அதிகமாகி, நிறுவனமே படிப்படியாக திவாலாகி, மின்சார பற்றாக்குறை மிக அதிகம் ஆகும். அப்படி தான் பல பொதுதுறைகளில் நிலை.

      //ஒரு துறையின் உபரி மீண்டும் மக்கள் சேவைக்கே திருப்பிவிடவும் ஏதுவாக இருக்கும். அதுவே தனியார் முதலாளிகளிடம் கையளித்தால் அவர்களால் அரசுத்துறைகள் போல் செயல்படுத்த முடியாது என்பதுதான் அனுபவம் நமக்கு உணர்த்துகிறது.///

      இதெல்லாம் தவறான அனுமானங்கள். வளர்ந்த நாடுகள் மற்றும் புதிதாய் வளர்ந்த நாடுகளான தைவான், ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளின் வரலாறு இதை மறுக்கிறது. அங்கு அரசு துறை நிறுவனங்கள் இந்தியா போல் இல்லை. கடுமையான போட்டிகள் நிறைந்த தனியார்கள் தான். மின் உற்பத்தி, வினியோகம் போன்ற துறைகளிலும் தான். இந்தியாவை போல் பற்றாக்குறை, அதிக விலை மற்றும் ஊழல் அங்கு இல்லை. எப்படி சாத்தியமானது ?

      1990 வரை இங்கு விமான சேவை, தொலைபேசி மற்றும் தொலைகாட்சி சேவை துறைகளில் தனியார்களுக்கு அனுமதி இல்லை. இன்று தனியார்கள் கடும் போட்டிகள். நல்ல விளைவு. சேவைகள் மலிவாகி, அரசின் மோனோபாலி உடைதுள்ளது. உடனே 2 ஜி ஊழல் பற்றி பேசவேண்டாமே. அல்லது பி.எஸ்.என்.எல் நெட் ஒர்க்கின் அடிப்படை பற்றியும் சொல்வீர்கள். சரி அப்ப, தனியார்களை இன்று வரை இத்துறைகளில் அனுமதிகாமலே இருந்திருந்தால் இந்த மலிவான இணைய சேவை, இந்த வினவு தளம் சாத்தியாமியிருக்காது. 80கள்வரை இருந்த நிலை உங்களுக்கு தெரியாது.

      தூர்தர்சன் மட்டும் இருந்த காலங்களில் அரசின் அராஜம், ஆளும் கட்சிகளின் கைப்பாவையாக, தொலைகாட்சி இருந்த காலம் பற்றி தெரிந்து கொள்ள முயலவும். கார்ப்பரேட் மீடியா என்று இன்று சொல்பவர்கள், அன்றைய நிலை பற்றி தெரியாமல் பேசுகின்றனர். இன்று இணையம் மற்றும் நூற்றுக்கணக்கான தனியார் தொலைகாட்சி நிறுவன்ங்கள் மூலம் செய்திகள் தடையின்றி உடனடியாக மக்களை சென்றடைகின்றன். (அதில் எத்தனை அரசியல், சார்புனிலைகள் இருப்பினும், போட்டிகளினால் free choice in selection of media / channels, websites இன்று மிக அதிகம்).

    • Why ll any govt department try to do profitable work,which department’s profits ll account for another’s losses?

      What is the motivation for authorities to make a government department profitable?

      what do they get? peanut salaries.

  6. // Public private partnership model இன்று. இல்லாவிட்டால் உலக தரம் வாய்ந்த toll roads இங்கு சாத்தியமில்லை.///

    இத்தகைய சாலைகள் எங்கெங்கு போடப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றியும் பேசுங்கள். லாபம் ஈட்டப்பட முடியாத இடங்களில் எல்லாம் இது போன்ற சாலைகள் தனியாரினால் போடப்படுமா?

    • //லாபம் ஈட்டப்பட முடியாத இடங்களில் எல்லாம் இது போன்ற சாலைகள் தனியாரினால் போடப்படுமா?///

      போட மாட்டார்கள். அதற்க்காக முக்கிய சாலைகளில் தனியார்களை அனுமதிக்காமல் பழையபடி Highways departmentஏ தொடர்ந்தால் என்ன ஆகியிருக்கும். மேலும் நல்ல toll roads மூலம் வணிகம் மற்றும் போக்குவரத்து சுலபமாகி, மலிவாவதால், மொத்த பொருளாதாரம் வளர்ந்து, வரி வசூல் உயர்ந்து, அதை கொண்டு அரசு பிற சாலைகளை அமைப்பது எளிதாகும்.

  7. Why ll the government employees,engineers/project managers give their best when they can make much more money in private companies/gulf regions?

    generally the students with poor academic performance join government departments and why ll they be motivated to provide good service to people when they get peanuts?

    If people cannot pay the cost of roads/electricity,then they dont deserve roads/electricity?

    If a region has to be developed then we need investment there and good roads and electricity follows that.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க