privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்க அதிபர் தேர்தலும், தெற்கு வால்ஸ்ட்ரீட் போராட்டமும்!

அமெரிக்க அதிபர் தேர்தலும், தெற்கு வால்ஸ்ட்ரீட் போராட்டமும்!

-

செய்தி-91

செப்டம்பர் 3-ம் தேதி அமெரிக்க தொழிலாளர் தினத்தை முன்னிட்டும், ஓட்டுக் கேட்க வரும் அதிபர் ஒபாமாவை குறி வைத்தும் வடக்கு கேரலைனா மாநிலத்தில் ஆயிரக்கணக்கானோர் அரசியல் முழக்கங்களிட்டும், பொருளாதார கொள்கைகளை விமர்சித்தும், “அமெரிக்காவின் இரண்டு பெரிய கட்சிகளுமே பணக்காரர்களுக்கான ஆதரவு கட்சிகள்தான்” என்று உண்மையை வலியுறுத்தியும் பேரணி ஒன்றை நடத்தினார்கள்.

கரோலினா-ஊர்வலம்

அமெரிக்காவில் இது தேர்தல் காலம். மாற்றம் வேண்டும் என்று கூறி ஜார்ஜ் புஷ்ஷூக்குப் பிறகு பதவிக்கு வந்த ஒபாமாவின் முதல் நான்காண்டு பதவிக் காலம் முடியப் போகிறது. நவம்பர் 7-ம் தேதி நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் ஒபாமாவும், குடியரசுக் கட்சி சார்பில் மிட் ரோம்னியும் போட்டியிடுகிறார்கள்.

பொருளாதார அடிப்படையில் சார்லட் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்று. நியூயார்க் நகரத்துக்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நிதி மையமாகவும் தென் மாநிலங்களின்  நிதி மையமாகவும் சார்லட் விளங்குகிறது. ஆனால், தொழிலாளர்களுக்கு யூனியன் அமைக்கும் உரிமை இல்லாத மாநிலமாக வடக்கு கேரலைனா இருக்கிறது.

செப்டம்பர் 3 அமெரிக்க தொழிலாளர் தினத்தில் ஒபாமாவின் கட்சி தேர்தல் ஓட்டு சேகரிப்பிற்கான மாநாட்டை சார்லட்டில் நடத்தி திட்டமிட்டிருந்தது. செப்டம்பர் 2 அன்று  உழைக்கும் மக்கள் பலர் ஒன்று கூடி அரசியல் முழக்கங்களை எழுப்பியவாறு பேரணி ஒன்றை நடத்தினார்கள். பேரணி நடத்தப்பட்ட வழியில் பேங்க் ஆஃப் அமெரிக்காவின் தலைமை அலுவலகமும், ட்யுக் எனர்ஜிஸ் தலைமை அலுவலகமும் இருக்கின்றன.

தெற்கு வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் என்று அழைக்கப்படும் இந்த பேரணியில் அமெரிக்காவின் தென் மாநிலங்கள் பலவற்றிலிருந்தும் நூற்றுக் கணக்கான பேர் தமது குடும்பங்களுடன் கலந்து கொண்டனர். வீடுகளை இழந்தவர்கள், வேலை இழந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் பலர் பேரணியில் கலந்து கொண்டவர்களில் இருந்தார்கள்.

ஏன் வீதியில் இந்த பேரணி என்ற கேள்விக்கு?

“எங்களுக்கு வீடு இல்லை, அதிக வட்டியுடன் கடன் கட்டியும் வீட்டை பிடுங்கி விட்டார்கள். வேலை இல்லை. அரசு தெருவில் தள்ளி விட்டது,  நான் தெருவில் நிற்கிறேன்” என்கிறார் ஒருவர்.

“ஜனநாயகக் கட்சியும், குடியரசுக் கட்சியும் ஒன்று தான். அவர்கள் அமெரிக்காவில் உள்ள 1% பணக்காரர்களுக்குத் தான் வேலை செய்கிறார்கள். அமெரிக்காவின் 99% பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. ஒபாமாவும், புஷ்ஷும் ஒன்றுதான். புஷ் ஈராக்கில் ஆரம்பித்த போரை முடித்த ஒபாமா அங்கிருந்து இப்பொழுது பாகிஸ்தானுக்கு மாற்றியுள்ளார். அவ்வளவு தான் வித்தியாசம்” என்றார் இன்னொருவர்.

“வேலை கொடு”

“கல்விக் கட்டணத்தை குறை”

“தனியார்மயத்தை ஒழித்துக் கட்டு”

“விலைவாசியை கட்டுப்படுத்து”

“யூனியன் வேண்டும்”

“பாகிஸ்தானில் வீசும் குண்டுகளை நிறுத்து”

போன்ற கூர்மையான அரசியல் முழக்கங்களுடன் ‘முதலாளித்துவம் மனித குலத்திற்கும், இயற்கைக்கும் பேரெதிரி’ என்ற உண்மையை விளக்கிய கூட்டங்களும் நடந்தன.

“ஒரு பக்கம் வங்கிகள் மக்கள் பணத்தை மோசடி செய்ய, அரசோ வெளிநாடுகளில் அப்பாவி மக்கள் மீது குண்டுகள் வீசி வெறித்தனமாக கொலைகள் நடத்திக் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட்டுகள் நிலக்கரி, தண்ணீர் முதலான இயற்கை வளங்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள்” என்று இவர்கள் கூறுகிறார்கள்.

‘மக்கள் மனதில் இருக்கும் பயம் ஒழிய வேண்டும்’ என்பதே பேரணியின் முக்கிய நோக்கம் என்கிறார்கள் இவர்கள். ஆனால் அரசு தன் ஏவல்  படையான போலிசை வைத்து பொய் வழக்கு போடுவது கடும் கண்காணிப்பு வளையங்களுக்குள் வைப்பது என உளவியல் ரீதியாகவும் அவர்களை உடல் ரீதியாகவும் துன்புறுத்துகிறது.

முதலாளிகளை எதிர்த்து முதலாளிகளின் கருவறைக்குள்ளேயே ‘வர்க்கப் போர் இது’ என துணிந்து போரிட தயாராகி வரும் அமெரிக்கத் தொழிலாளர்களுடன் நாமும் இணைவோம்.

மேலும் படங்கள்

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. //“வேலை கொடு”

    “கல்விக் கட்டணத்தை குறை”

    “தனியார்மயத்தை ஒழித்துக் கட்டு”

    “விலைவாசியை கட்டுப்படுத்து”

    “யூனியன் வேண்டும்”

    “பாகிஸ்தானில் வீசும் குண்டுகளை நிறுத்து”//

    அடிச்சு விடு…உள்ளூர் போராட்டம்னாலே அடிச்சு விடுவ…இதுல அமேரிக்கா வேறயா?

  2. அது எப்புடி போஸ்டர் பத்தே படத்தோட கதை சொலுற ஆல விட மோசம் சார் நீங்க…
    இனிமே கோயபல்ஸ் என்று யாரும் உவமை சொல்ல தேவையில்லை பைய என சொல்லலாம் என உவகையுடன் சொல்லிகொள்கிறேன்..

  3. மேல இருக்கிற கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை? கழிசடை கழுக்குத்தான் தெரியுமா தொழிலாளி வர்க்க பிரச்சனை?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க