செய்தி -105

கூடங்குளம்-இடிந்தகரை-போராட்டம்இடிந்தகரை கூடங்குளம் கடற்கரையில் போலீசு நடத்திய தடியடித் தாக்குதலைக் கண்டித்து கூடங்குளத்தில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடங்குளம் நகரில் போராடி வருகின்றனர். இவர்களை ஒடுக்க வந்த போலீசு தற்போது துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். துப்பாக்கி சூட்டையும் மீறி மக்கள் போலீசை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிகிறது. தூத்துக்குடியில் பாசிச ஜெயா ஆட்சியின் கொடுர தாக்குதலைக் கண்டித்து சில பேருந்துகள் எரிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அதே போன்று தென்மாவட்டங்களில் உள்ள அனைத்து மீனவக் கிராமங்களிலும் பெரும் கலவரம் எழுந்திருக்கிறது. அடக்குமுறைக்கு அஞ்சாத மக்கள் சக்தி இந்த அணுமின்நிலையத்தை விரைவில் மூடப்போவது உறுதி.
______________________________


– வினவு செய்தியாளர்கள், கூடங்குளம்
___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: