privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்மாட்டுக்கறி தின்பவர்கள் மாவோயிஸ்டுகளாம்!

மாட்டுக்கறி தின்பவர்கள் மாவோயிஸ்டுகளாம்!

-

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி நடக்கவிருந்த உணவுத் திருவிழாவில் மாடு மற்றும் பன்றிக்கறியை பரிமாற புதன‌ன்று டெல்லி உயர்நீதி மன்றம் தடைவிதித்துள்ளது. இனி பல்கலைக்கழக வளாகத்தில் இவற்றை பரிமாறவும் சாப்பிடவும் தடை செய்ய வேண்டும் என நிர்வாகத்திடம் கூறப்பட்டுள்ளது.

உணவு உரிமைத் திருவிழா என்ற பெயரில் சில முற்போக்கு மாணவர்கள் வரும் 28 ஆம் தேதி ஒரு உணவுத் திருவிழாவுக்கு திட்டமிட்டுள்ளனர். அதில் மாடு மற்றும் பன்றிக்கறி பரிமாறப்படும் என்று ஏற்கெனவே அறிவித்தும் இருந்தனர். இதுபற்றி பாஜக வின் மாநில தலைவர் விஜேந்திர குப்தா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“2050 இல் மாவோயிசக் குழுக்கள் எல்லாம் இணைந்து ஆயுதம் மூலம் இந்தியாவில் ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டுள்ளார்கள். அப்படிப்பட்ட மாவோயிஸ்டுகள் டெல்லியில் உள்ள 9 மாவட்டங்களில் 7 இல் செல்வாக்கு பெற்றிருக்கின்றனர். இத்தகைய தேசவிரோத சக்திகளில் இணைந்துள்ள சில மாணவர்கள் இணைந்து உணவுத் திருவிழா என்ற பெயரில் பசுவை உணவாக பரிமாற உள்ளனர். இதனை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தடுத்து நிறுத்த வேண்டும். அத்துடன் அவர்களைக் கண்காணிக்கவும் வேண்டும். இல்லாவிடில் பின்விளைவுகள் மோசமாக இருக்கும். அசாம் போல இன்னொரு கலவரம் ஏற்படும்” என எச்சரித்துள்ளார்.

மாட்டுக்கறிஇந்நிலையில் உணவுத் திருவிழாவுக்கு தடைகோரி ஆர்.எஸ்.எஸ் சார்பு ராஷ்டிரிய கோரக்ஸா சேனா சார்பில் விமல் வத்வன் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில்  விழாவை அறிவித்த மாணவர்களுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்க வாய்ப்புள்ள 1994 ஆம் ஆண்டு டெல்லி விவசாய கால்நடைப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மற்ற மாணவர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் விதமாக இச்செயல் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். பொதுநல வழக்காக தொடுக்கப்பட்ட இம்மனுவில் மத்திய உள்துறை அமைச்சகமும் காவல்துறையும் இத்தகைய சமூக விரோத சக்திகளை குறிப்பாக தேசவிரோத மாவோயிஸ்டுகளை கண்காணித்து, விழாவை தடைசெய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

வ‌ழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏகே சிக்ரி மற்றும் நீதிபதி ராஜீவ் சகாய் அடங்கிய உயர்நீதி மன்ற பெஞ்ச் அரசு தரப்பையும் பல்கலைக்கழக தரப்பையும் விசாரிக்கையில் 17 ஆம் தேதியே தாங்கள் தடைசெய்து விட்டதாக பல்கலைக்கழகம் சொல்லி விட்டது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜீவ் மேஹரா சட்டப்படி தாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த மாணவர் பேரவைத் தேர்தலில் இத்திருவிழாவை ஏற்பாடு செய்த மாணவர்களில் ஒருவரான அபய்குமார் பேரவைத் தலைவர் தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு வந்திருந்தார். தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வந்துள்ள மாணவர்களில் பலரும் இவரை ஆதரித்துள்ளனர். பேரவைத் தேர்தலில் இத்திருவிழாவை முன்வைத்தே பிரச்சாரம் செய்து குறிப்பிடத்தக்க வாக்குகளையும் அவர் பெற்றுள்ளதுதான் சங்க பரிவாரங்களின் கலக்கத்திற்கு காரணம். அபயகுமாரைப் பொறுத்தவரை தாங்கள் ஒரு விவாதத்தை துவக்கி வைத்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது எனும் பார்ப்பனத் திமிர் வட இந்திய மாநிலங்களில் இன்னும் எத்தனை செல்வாக்கோடு உள்ளது என்பதை இந்தச் செய்தி காட்டுகிறது. அதே நேரம் ஜேஎன்யூ போன்ற பல்கலைக் கழக மாணவர்கள் இதை எதிர்த்து போராடுவதை நாம் வரவேற்க வேண்டும்.

    • கேரளாவில் இதைப் போய் சொன்னீர்கள் என்றால் உங்களை காமெடி பீசுன்னு சொல்லிருவாங்கண்ணே. அங்குள்ள இந்துக்களுக்கு பீப்புன்னா உசுரு.

    • இந்துக்களுக்கு தானே புனிதம்?

      மாட்டுகறியை உங்களை தின்ன சொல்லி வற்புறுத்தினால் நீங்கள் கோப படுவதில் அர்த்தம் இருக்கும், நாங்க தின்ன உங்களுக்கு என்ன?

  1. அலிகார் முஸ்லிம் பல்கலைக் களகத்தில் ஒரு உணவு திருவிழா நடத்தி பன்றி கறி போடச் சொல்லுங்க பார்ப்போம். எல்லா மதங்களும் மிருக வதையை எதிர்க்கின்றன. ஆனால் இந்துக்கள் எதிர்த்தால் மட்டும் வினவின் பார்வை மாருகிறது. ஓரு பசு மாட்டை வைத்து ஒரு ஏக்கர் நிலத்துக்கு தேவையான இயற்கை உரம் தயாரிக்கலாம். பசுக்கள் குறைந்ததால் நாம் செயற்கை உரத்தை நம்பி இருக்க வேண்டி உள்ளது.

    • இந்து என்று யாரைச் சொல்கிறார் சரவணன். இரண்டே சதவிகிதமிருக்கும் பார்ப்பான் மட்டும்தான் மாட்டுக்கறி சாப்பிடவில்லை. மீதமுள்ள இந்தியர்கள் அனைவரும் சாப்பிடுகிறார்கள். ஒரு பசு மாட்டை வைத்து தேவையான உரத்தை எப்போதும் தயாரித்துக்கொண்டே இருக்க முடியாது. உரத்திற்காக மட்டும் மாடு வளர்த்தினால் பாலாபிஷேகம் செய்யவும்கூட பால் கிடைக்காது. பசுமாட்டைப் பொருட்காட்சியில் போய்தான் பார்க்க முடியும். [

    • ம் ம் சரவனன் இன்னும் உஙகிட்ட எதிர்பார்கிரேன் இன்னிமெல் பல்குடிக்காதே….சோரு தினனாதெ உணவு தானியஙகல் இல்லாமல் பொஇடும்…யாரடா இந்து? நீ தமிழனாடா

    • venaamnu solravana yaaruda kattaayapaduthina?
      enumnu solravana thadukkaradhu than thappu.. idhu kooda puriyala.. indha madhiri ella govt velaila ukkanthu namma kaluththa arukkiranuga..

      pesa vanthuttan..

  2. வயதான பசுகளை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது இதில் புனிதம் புண்ணாக்கு எல்லாம் பார்க்க கூடாது. இந்த உயிரினம் ஏற்றது என்று மதம் சார்ந்து நம்புவது மடத்தனமானது. ஒவ்வாமை இருந்தால் ஹலால் உணவை கூட இசுலாமியனால் சாப்பிட இயலாது.

  3. கோதானம் செய்து விடுங்கள். கோசாலை எதுக்கு இருக்கிறது? அடிமாடுகளை பராமரிக்க ’அவாள்’கள் இருக்கிறார்கள். கர்நாடகாவிலும் கேரளாவிலும் தடை செய்யப்பட்ட பி.டி கத்திரிக்காயில் ஊட்டச்சத்து இல்லையா என்ன? தாய் தன்னுடைய மகளிடம் பால்குடிக்கச் சொன்னால் அவள் குண்டாகி விடுவோம் என்று மறுப்பதால்தான் குஜராத்தில் ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது. மாமிசம் சாப்பிடாததால் அல்ல என்பதை ஏன் மறுக்க நினைக்கிறீர்கள்?

  4. மாட்டுக்கறியை சாப்பிடுகிறவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.மாட்டை விடுங்க , மனிதனை நரபலி கொடுக்கிற இவனுங்க தொல்லை தாங்க முடியல.

  5. பார்பனத்திமிரைத் தவிர வேறு புனிதமும் இல்லை வெங்காயமும் இல்லை.

Leave a Reply to ப.அருணாசலம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க