privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற அமலா பால்!

அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற அமலா பால்!

-

அமலா-பால்-ஊழல்கூடிய விரைவில் அப்துல் கலாம் தலைமையில் நடிகை அமலா பாலுக்கு பாராட்டு விழா நடந்தால் ஆச்சர்யப்பட வேண்டாம். அதற்கான முழு தகுதியும் அவருக்கு இருக்கிறது. அதை நிரூபிப்பதற்காகவே ’5வது தூண்’ எனும் தன்னார்வக் குழுவுடன் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

கி.பி.2020-ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பது அப்துல் கலாமின் லட்சியம். இதற்காக செல்வந்தர்களின் வாரிசுகள் மட்டுமே படிக்கக் கூடிய பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகளை கனவு காணச் சொல்லி தொண்டைத் தண்ணீர் வற்ற பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நல்ல விஷயம் நடக்க வேண்டுமென்றால் ஒரு கெட்ட விஷயம் அகற்றப்பட வேண்டும். அதுதான் ஊழல் நிறைந்த இந்தியாவை சுத்தப்படுத்தும் வேலை.

கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக அறிக்கை மற்றும் பேட்டி அளிப்பதில் ஆரம்பித்து அம்பானி, விஜய் மல்லையாவுக்கு சாமரம் வீசுவது, அன்னிய முதலீடு – வால்மார்ட்டின் வருகையினால் ஆபத்தில்லை என்று உபதேசிப்பது வரை கலாமுக்கு எண்ணற்ற வேலைகள் இருக்கின்றன. இந்த தள்ளாத வயதில் இதற்கு மேல் அப்துல் கலாமால் பணியாற்ற முடியாது; இயலாது.

எனவே அவருக்கு கை கொடுக்கவும் ஊழலற்ற இந்தியாவை உருவாக்கவும் தன் உடல், பொருள், ஆவி என சகலத்தையும் அர்ப்பணிக்க அமலா பால் முன் வந்திருக்கிறார். இதற்காகவே ’5வது தூண் எனும் ’தன்னார்வத் தொண்டு நிறுவனம் மேற்கொள்ள இருக்கும் ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு திட்டத்துக்கு தூதுவராக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இதற்கான ஊதியத்தை அவர் கருப்பாக வாங்கினாரா, இல்லை வெள்ளையாக வாங்கினாரா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. முக அழகுக்காக அமெரிக்கா சென்று செலவிடும் நேரமும், வசதியும் கொண்ட அமலா பாலுக்கு ஊழலை ஒழிப்பதற்கான நேரமும், மனதும் இருப்பது ஆச்சரியமான ஒன்று.

ஆஸ்கர் விருது வாங்கியிருக்கும் இந்தியா, கிரிக்கெட்டில் உலகளவில் சாதனைகள் நிகழ்த்தியிருக்கும் இந்தியா, அனைத்து இயற்கை வளங்களும் நிறைந்திருக்கும் இந்தியா, ஏன் பின் தங்கியிருக்கிறது? காரணம் லஞ்சம், ஊழல். இது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். ஆனால் லஞ்சம் என்றால் என்ன ஊழல் என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாது. ஆனால், தெரிந்தும், தெரியாமலும் இருக்கும் இந்த சமாச்சாரங்களை எப்படி அகற்றுவது? அதற்கான வழியை அமலா பால், கண்டுபிடித்திருக்கிறார். சரிவர அவரால் இதை துல்லியமாக விளக்க முடியாததால் ’5வது தூணின்’ தலைவர் விஜய் ஆனந்த், ஊழலை ஒழிப்பதற்கான வழியை சொல்கிறார். இதை இந்தக் காணொளியில் காணலாம், கேட்கலாம்.

அதாவது லஞ்சம் தராமல் எதுவும் நடக்காது என்ற நிலையை மாற்ற இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஊர் எங்கும் குழுக்களை ஏற்படுத்த போகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ரேஷன் கார்ட், பாஸ்போர்ட், பட்டா ஆகியவற்றை வாங்க என்ன வழிமுறை, அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்பவே அவற்றை வாங்க போராடுவது. மீறி லஞ்சம் கேட்பவர்களை பொது மக்களிடம் அம்பலப்படுத்துவது… சுருக்கமாக சொல்வதெனில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மட்டுமே லஞ்சம் தாண்டவமாடுவதால், தனியார் நிறுவனங்களில் தேனாறும் பாலாறும் ஓடுவது போல் அரசு நிறுவனங்களை மாற்ற போராடுவோம் என அறைகூவல் விடுத்திருக்கிறார் அமலா பால்.

ரேஷன் கார்ட், பட்டா, பாஸ்போர்ட் என ’5வது தூண்’பட்டியலிடும் அனைத்தும் நடுத்தர வர்க்கத்துடன் தொடர்புடையவை. எப்படியாவது ’வாழ்க்கையில் முன்னேற’ வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கும் வர்க்கம் இதுதான். அரசு அலுவலகங்களில் காரியம் ஆக வேண்டுமென்றால் லஞ்சம் கொடுப்பதுதான் நடுத்தர வர்க்கத்திற்கு பிரச்சினை. அல்லது கெட்டுப் போன பிசாவுக்காக கொடுக்கப்பட்ட பணம் போராடி திருப்பி வாங்கினால் அது புரட்சி. மற்றபடி மருத்துவ பட்டத்திற்காக்க பல இலட்சங்களை தனியார் கல்வி முதலாளிகளிடம் கொடுத்தால் அது ஊழலில்லை. பென்ஷன் பணத்தை பங்குச் சந்தை சூதாட்டத்தில் முதலீடு செய்தால் அது நேர்மையானது.

மற்றபடி நாடறிந்த ஊழல்கள் அனைத்தும் தனியார் மயத்தின் விளைவு என்பதை நடுத்தர வர்க்கம் அறியாது. அறிந்தாலும் கவலைப்படாது. எனினும் இந்த மக்களுக்குள் ஏற்படும் குற்ற உணர்வுக்கு வடிகாலாக 5வது தூண் போன்ற நகைச்சுவைகள் அவ்வப்போது அரங்கேறும். அதனால்தான் ரொம்ப சீரியசாக வெறும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியாக லஞ்சம், ஊழலை ஒழித்து விடலாம் என்று பேசவும், நம்பவும் முடிகிறது.

அண்ணா ஹசாரே பின்னால் வீக் எண்ட் புரட்சியாளர்கள் திரண்டதும், ’சத்தியமேவ ஜெயதே’ என ஆமிர்கான் அருகில் உருகியதும், இப்போது அமலா பாலின் பின்னால் இருந்தபடி 5வது தூண் தொடை தட்டுவதும் ஒரே நாடகத்தின் பல காட்சிகள்தான்.

ஆனால் அமலா பால் அவர் நடிக்கும் படங்களை தயாரிக்கும் முதலாளிகள் வரவு செலவை கருப்பு, வெள்ளையாக வைத்திருப்பது குறித்தோ, இல்லை நட்சத்திரங்கள் தங்களது வருமானத்தை பகிரங்கமாக அறிவிக்காமல் மர்மமாக கருப்பில் மட்டும் வைத்திருப்பது குறித்தோ பேசினால் கொஞ்சம் பயனளிக்கும். பெரிய திமிங்கலங்களை விட்டு விட்டு திரும்பத் திரும்ப கலெக்டர் ஆபீஸ் பியூன் ஊழலைத்தான் எதிர்ப்பார்கள் என்றால் நமக்கு அழுகையே வந்து விடும்! என்ன சொல்கிறீர்கள்?

  1. அரசாங்கத்தில் பியூன் மட்டும்தான் லஞ்சம் வாங்கற்றான்னு யாரும் சொல்லலை. ஆனா எல்லா அரசுத்திட்டத்திலும் வழிச்சு நக்கிட்டு கடைக்கோடி மக்களுக்கு ஒண்ணுமில்லாம பண்றதில கெட்டி அரசு ஊழியர்கள். அதை சுட்டிக்காட்ட துப்பில்லாத வினவு அவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறது. மாசா மாசம் கொள்ளை கொள்ளையா சம்பளம் வாங்கிட்டு வேலை செய்யாம வட்டிக்கு விட்டு பிழைக்கிற ஆசிரியர்களைப் பற்றி எழுதாத வினவுக்கு லஞ்சம் எப்படி பிரச்னையா தெரியும். அமலா பால் இதைப் பற்றி பேசுவது பெரிதில்லை. அவரெல்லாம் பேசும்படியாய்ப்போன அரசு ஊழியரின் நாற்றம் பிடித்த நடவடிக்கைதான் பிரச்னை

  2. லைசன்ஸ், கோட்டா, பெர்மிட் முறைதான் ஊழலுக்கு ஊற்றுக்கண். தாராளமயம் அதை ஒழிக்கும். 2ஜி, கோல்கேட் ஆகியவற்றில்கூட விருப்ப உரிமைப்படி (அல்லது முதலில் வருபவருக்கு) லைசன்ஸ் என்று சொன்னதால்தான் ஊழல் நடந்தது. மீண்டும் லைசன்ஸ், கோட்டா, பெர்மிட் ராஜ்ஜியத்தைக் கொண்டுவந்தால் ஊழலும் தலைவிரித்தாடும், நாட்டு வளர்ச்சியும் அதல பாதாளத்துக்குப் போய்விடும். லிபரலைசேக்ஷன் வரும்முன்பு இந்தியா ஆண்டுக்கு 3 சதவீதம் மட்டுமே வளர்ந்தது. அதை உலகம் ‘ஹிந்து ரேட் ஆஃப் க்ரோத்’ என்று கேலியாகக் குறிப்பிட்டது. மீண்டும் அரசுமயம் என்ற அபத்தத்தை ஆட்சிக்கு வரும் வாய்ப்புள்ள எந்தக் கட்சியும் செய்யாது.

  3. இன்னொரு நச்சு விதை விதக்கப்பட்டுள்ளதை வினவு வினவியதற்கு வாழ்த்துக்கள். நிச்சயமாக இதன் பின்னணியில் இந்தியாவை இதுவரை ‘வல்லரசாகவே’ வைத்திருக்கும் அமரிக்க நிதி வழங்கும் நிறுவனங்கள் செயற்படும் என்பதை ஆதாரம் இல்லாமலே அடித்துச் சொல்லலாம்.

  4. யார் யாருக்கு அறிவுரை சொல்வது என்ற முறை இல்லை என்பது புரிகிறது. அமலாபாலும் அப்துல் கலாமும் கல்லூரித் தோழர்களா? ஊழலைப் பற்றிப் பரப்பரை, அறிவுரை சொல்லத் தேவையானவை – முடியைக் கண்டமாதிரி வெட்டிக் கொண்டு விட்டு விட்டுப் பேசும் திக்குவாய், எண்ணெயில்லா முடியைப் பறட்டையாக விட்டுக் கொண்டு இருப்பவர்களை ஏமாளி என நினைக்கும் மனநிலை போதும் என அப்துல்கலாமும் அமலாபாலும் சிந்தித்திருக்கிறார்கள் போலும்

  5. அன்புள்ள வினவு,

    நாம ஊழலை ஒழிப்போமா இல்லையா என்பது பிரச்சனையே இல்லை. ஆனால் நாட்டில் என்ன நடக்குதுன்னே தெரியாமல் இருப்பது மட்டுமே தலையாய பிரச்சனை. தமிழ் நாட்டைப்போன்ற ஒரு மாநிலத்தில் அதற்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த கேடு கேட்ட கேவலமான சினிமா. ஒரு ஐம்பது வருசமா இந்த நாட்டை ஆள்வது கூட சினிமா வழித்தோன்றல்கள் தான். வெறும் அர்த்தமில்லாத பொழுதுபோக்கை தவிர அதில் வேறொன்றும் இல்லை. இந்த சினிமா மீது இருந்த அதீத ஈடுபாட்டை உடைத்து நாம் சிந்திப்பதற்கும், கவலைப்படுவதற்கும், போராடுவதற்கும் ஆயிரம் விசயங்கள் இருக்கின்றன என்பதை எனக்கு உணர்த்தியதே ‘வினவு’ தான்.

    நான் ‘வினவு’க்கு வைக்கிற மிக தாழ்மையான வேண்டுகோள் இதுதான்…………

    தயவு செய்து சினிமா தொடர்பான சில்லறை செய்திகளை தவிர்க்கவும். ( எ.கா. அனுஸ்காவை நாய் கடிச்சது, திரிசாவுக்கு மாப்பிள்ளை பேசியிருப்பது, பவர் ஸ்டார் கைது , இன்னைக்கு அமலா பால் ……………). அதாவது இது போன்ற செய்திகள் வேறு ஏது வழியிலாவது எங்களை வந்து சேர்ந்து விடும். ‘வினவை’ த்தொடர்கிற ஒருவனது எண்ணமும் உங்களது கட்டுரையின் சாரத்தைப்போலவே இருக்கும்.
    பிறகு ஏன் உங்களது பொன்னான நேரத்தை இது போன்ற ‘Third rate stupids’ க்காக செலவிட வேண்டும்?

    சரி. நான் உங்களிடம் எதிர் பார்ப்பது என்ன?

    * 120 கோடி மக்களின் பிரதம மந்திரியை ‘நிலக்கரி திருடன்’ ன்னு விமர்சிக்கிற ஊழல் தொடர்பான விரிவான கட்டுரைகள்.

    * 6 கோடி மக்களின் முதலமைச்சரை, அவரை விட வயதானவர்களெல்லாம் ‘கண்டவுடன் காலில் விழும்’ எல்லையில்லா அதிகாரம் படைத்தவரை ‘வாய்தா ராணி’ ன்னு விளிக்கிற விரிவான அரசியல் தொடர்பான ‘அரசியல்’ இல்லாத காத்திரமான கட்டுரைகள்.
    ————- இவைகள் தான்.

    நன்றி.

  6. இந்தியன் படத்தை லேட்டா பார்த்துவிட்டு அமல பால் சொல்லுது.ஒரு வேலை கேமரவை பார்த்ததூம் சூட்டிங்னு நினைச்சு டைலாக் சொல்லிடுச்சோ?.அந்த படம் வந்த பிறகு தன் லஞ்சம் எப்படி வாங்கறதுனு எல்லாம் கத்துகிட்டாங்க.அமலா பால்.
    வி.ஆனந்த் சொல்லுகிற 4 பில்லருல 1 வது பில்லர் தான் சட்டம் எல்லாம் தெரிந்து பல லட்சம் கோடி ஊழல் பண்ணி இருக்குது.அதை தூக்கிட்டா போகுது.எதுக்கு புதுசா உருவக்கிகிட்டு.அதுக்கு முட்டு கொடுக்கவா? ஒரு வருடம் லஞ்சத்தை கண்டுபிடிச்சா ஒரு கோடி தான் சிக்கும்.ஊழலை கண்டுபிடிச்சா பல லட்சம் கோடி சிக்கும்.அப்புறம் பெரிய ஆல் தான்.
    குட்டையை மூடு என்று சொல்கிறோம் நாங்க. இவரு கொசு வலையை தூக்கிகிட்டு எகிளம்பிட்டரு.

  7. அமலாபாலும் விஜய் ஆனந்தும் நடித்த 10 நிமிட படம் பார்த்தேன் .சண்டைகாட்சிகள் இல்லை ஆனால் பாட்டு இருந்தது.இப்போது நான்கு தூண்கள் தேவை இல்லை என்று ஒரு தூணிலே கட்டி முடித்துவிடுகிறான் .தூணே இல்லாமல் கட்ட வழி தேடிக் கொண்டு இருக்கையில் இப்ப போயி 5 வது தூணை நாட்டப் போகிறார்களாம் .
    காந்தி,பெரியார் எல்லாம் ஞாபகப் படுத்துகிறார்..அவர்கள் காலமெல்லாம் சோத்துக்கு வழியில்லாத காலம் .இப்போது லட்சம் கோடி சொத்து வாங்கும் காலம் .காந்தி பெரியார் எல்லாம் வந்து மீண்டும் எலிக்கறி சாப்பிடவா?
    அம்பது ,நூறு ரூபா லஞ்சத்தை ஒழித்து ,இந்தியாவை வளமாக ஆக்கப் போகிறார்களாம்.
    ரெட்டி சகோதரர்கள் இரும்பு தாதுவை சுரண்டினார்களா?தங்கத்தை சுரண்டினார்களா?என்று இந்த 5 வது தூண்களுக்கு தெரியுமா?

    விஜய் ,அமலு எங்களுக்கு காந்தி பெரியார் வி,சுவாமி எல்லாம் வேண்டாம் ,ரெட்டி காரு ,கனிமொழி வழியை காட்ட முடியுமா?நாம் வளமாகினால் நாம் வாழும் இந்தியாவும் வளமாகிவிடும்

  8. அமலாபால் உங்களைப் போன்ற நடிகர்களால் தான் இந்த நாடு வளம் கேட்டு போச்சு

  9. ஆனந்திற்ற ஐந்தாவது பில்லர் என்ன ஆயரம் பிள்ளர்களை சொருவினாலும் இந்தியா வல்லரசு ஆகாது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க