privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்பிஞ்சுகளை குதறும் வெறியர்கள்...குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!

பிஞ்சுகளை குதறும் வெறியர்கள்…குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!

-

  • திண்டிவனம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த கால் ஊனமுற்ற பழனி, சத்யா தம்பதியினரின் மூன்று வயதுகூட நிரம்பாத மகள் லாவண்யா. மாலை நேரத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த லாவண்யாவை தாயார் அழைக்க பதிலில்லை. மின் தடையால் எங்கும் இருட்டு. பதட்டத்தில் தேடியபோது அருகாமைப் புதரில் பிறப்புறுப்பில் இரத்தம் வடியக் கிடந்த மகளைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைகின்றனர். போலீசு விசாரணையில் எதிர் வீட்டில் உள்ள பாண்டியன் எனும் 25 வயது இளைஞன் மனைவியைப் பிரிந்து வாழ்பவன் அந்தப் பிஞ்சுக் குழந்தையை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியது தெரியவந்தது.
  • தூக்கத்தில் திடீர் திடீரென்று விழித்துக்கொள்ளும் ஆறு வயதான நதியா வழக்கத்துக்கு மாறாக இரவில் சிறுநீர் கழிக்கத் தொடங்கினாள். அவளைக் குளிப்பாட்டும் போதுதான் பிறப்புறுப்பில் நகக்கீறல்கள் இருப்பதைக் கவனித்தாள் அவளது தாய். குழந்தையிடம் பேச்சுக்கொடுக்கும் போதுதான் எதிர் வீட்டிலிருக்கும் இளைஞன் சாக்லெட் கொடுத்து தன்னை ஏதோ செய்ததாகக் குழந்தை சொல்லித் தெரிய வந்தது.
  • போலியோவால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுச் சிறுமியின் முகம் திடீரென்று வீங்கி உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிகிச்சை அளித்த டாக்டர் அச்சிறுமியிடம் மெதுவாகப் பேச்சுக்கொடுத்தபோது பக்கத்து வீட்டு இளைஞன் அச்சிறுமியைத் தவறாகப் பயன்படுத்தி வந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.
  • தெருவில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது ரம்யாவை பலவந்தமாகத் தூக்கிச் சென்ற எதிர்வீட்டின் 45 வயதான சீனிவாசன் பலாத்காரம் செய்யும்போது கையும் களவுமாகப் பிடிபட்டான்.
  • கேக் தயாரிக்கும் பேக்கரி ஒன்றில் பயிற்சிக்காக வந்த கேட்டரிங் படிக்கும் கல்லூரி மாணவர்கள் ஆறு பேர், அங்கு விளையாட வரும் ஐந்து வயதுச் சிறுமியை தங்களது இச்சைக்குப் பல நாட்களாகப் பயன்படுத்திய விவரம் தெரியவந்தபோது அதிர்ச்சியில் உறைந்தது அச்சிறுமியின் குடும்பம்.
  • சென்னை மெட்ரிகுலேசன் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் ஒன்பது வயது மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கழிப்பறையில் வைத்து ஓராண்டாகப் பாலியல் வன்முறை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதே ஆசிரியரால் குதறப்பட்ட வேறு இரண்டு மாணவிகளும் புகார் கொடுத்தனர்.
  • நாகையில் அரசு உதவிபெறும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை 45 வயது ஆசிரியர் ஆய்வகத்தில் வைத்து பாலியல் வன்முறை செய்ததில் அம்மாணவி கருத்தரித்தாள்.
  • மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் நான்கு மாணவிகளை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்முறை செய்தது பொதுமக்களின் போராட்டத்திற்கு பின் தெரியவந்தது. இதற்குத் தண்டனையாக அவ்வாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
  • ஈரோடு ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஏழு வயது மாணவியைத் தவறாகப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. கோவை பள்ளியில் இதே போன்று வன்கொடுமைக்கு ஆளான மாணவி ஒருத்தி தற்கொலை செய்து கொண்டாள்.

•••

குழந்தைகள்-மீதான-பாலியல்-வன்முறைமுதல் சம்பவம் சென்ற மாதத்தில் நடந்தது. பின்னையவை சமீப காலங்களில் நடந்து பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. சிறார்களைப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கும் இத்தகைய சம்பவங்கள் எங்கோ மேலை நாடுகளில் மட்டும் நடக்கும் வக்கிரம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களின் மதிப்பீட்டை இவை மறுதலிக்கின்றன. பல்வேறு ஆய்வுகளும் புள்ளி விவரங்களும் இதையே வழிமொழிகின்றன.

பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறார்களின் உலகத் தொகையில் 19% பேர் இந்தியாவில் இருக்கின்றனர். இந்திய மக்கள் தொகையில் இவர்கள் மூன்றிலொரு பங்கு இருக்கின்றனர். 2007 ஆம் ஆண்டு இந்திய அரசின் குழந்தைகள் நலத்துறையானது குழந்தைகள் மீதான பல்வேறு வன்முறை குறித்து விரிவான கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. பதின்மூன்று மாநிலங்களில் 12,447 குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வில் 53% குழந்தைகள் ஏதோ ஒரு பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், 21.9% குழந்தைகள் மோசமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதில் இருபாலரும் ஏறக்குறைய சரிசமமாக உள்ளனர்.

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 7 இலட்சம் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றார்கள். விலைமாதர்களில் 15% பேர் பதினைந்து வயதுக்குட்பட்டவராவர். 2006இல் துளிர் எனும் அமைப்பு 2211 சென்னைக் குழந்தைகளிடம் ஆய்வு செய்ததில் 42% பேர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியில் சாக்ஷி எனும் தொண்டு நிறுவனம் செய்த ஆய்வில் 350 குழந்தைகளில் 63% பேர் குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்முறைக்குப் பலியானது தெரிய வந்தது.

இறைந்து கிடக்கும் இந்தப் புள்ளிவிவரங்கள் இந்திய சமூகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பது தவிர்க்க முடியாத அங்கமாகியிருப்பதை ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றன. குடும்ப அமைப்பு சிதைந்துவரும் மேலைநாடுகள் போலல்லாமல் இந்தியப் பண்பாட்டிற்கு அச்சாணியாகக் குடும்பங்கள் வலுவாக இருப்பதாக நம்பும் பழமைவிரும்பிகள் கூட இந்த உண்மையை அங்கீகரித்துதான் ஆக வேண்டும்.

செல்பேசிகளும், இருசக்கர வாகனங்களும், தொலைக்காட்சிகளும் மட்டுமே நாம் காணும் மாற்றங்கள் அல்ல. பண்பாடும் கூட மாறித்தான் வருகின்றது. பொருளாதாரத்தில் நாட்டின் முன்னேற்றமும், விவசாயிகளின் தற்கொலையும் ஒருங்கே நிகழ்வது போல பண்பாட்டில், குறிப்பாக பாலுறவில் காதலும் கலவியும் எதிரெதிர்த் துருவங்களாக மாறி வருகின்றன.

பத்திரிக்கைகளின் அரைநிர்வாணப் படங்களும், மழையில் நனைந்து அங்கங்களைக் காண்பிக்கும் ‘மானாட மயிலாட’ நடனமும் இன்று அதிர்ச்சியை ஏற்படுத்துவதில்லை. நேற்று குடும்பத்துடன் பார்க்கத் தகுதியற்றவையாகக் கருதப்பட்ட திரைப்படங்களெல்லாம் இன்று குடும்பத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டன. நேற்று ஆபாசமென ஒதுக்கப்பட்டவை இன்று கலாச்சாரத்தின் அங்கமாக மாறி விட்டன. பத்திரிக்கைகளில் மட்டுமே வந்த கள்ளஉறவுச் செய்திகள், இன்று இல்லத்தரசிகளின் மனதைக் கவரும் ‘தொடர்’களாகி விட்டன. தனது இன்பத்திற்காக எதையும் செய்யலாம் என்ற வக்கிரம் சமூக வாழ்வின் அனைத்து விழுமியங்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றது.

குழந்தைகள்-மீதான-பாலியல்-வன்முறைபார்த்து இரசிக்க வேண்டிய குழந்தைகளைப் பிய்த்துக் குதறும் காமவெறி இன்றைக்குத்தான் தோன்றியது என்று கூற முடியாது. இதன் அடிவேர் பார்ப்பனியத்தின் மூடுண்ட சமூகத்தில் இருக்கின்றது. சாதியத்தைத் தனது ஆன்மாவாக வரித்திருக்கும் சமூகம், ஆண் பெண் உறவையும் சீனப் பெருஞ்சுவரால் பிரித்திருக்கின்றது. சக மனிதனுடனேயே சாதிபார்த்து பழகும்போது காமத்திற்கு வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு பற்றிச் சொல்லத் தேவையில்லை. தேவதாசிகளையும், கோபுரங்களில் விதவிதமான கலவிச் சிற்பங்களையும் பார்வைக்கு வைத்திருக்கும் பண்டைய பாரதம், காமசூத்ராவை உலகிற்கு அளித்த பார்ப்பனியம், மேட்டுக்குடியினர் பாலியல் ருசிகளை அனுபவிப்பதற்கு மட்டும் வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

இந்திய மக்களுக்கு பார்ப்பனியத்தின் சாபத்தால் காதலே மறுக்கப்பட்டிருப்பதால், பாலியல் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. பாலுணர்வு எனும் இயற்கையான உணர்வு திருட்டுத்தனமான விசயமாகப் பார்க்கப்படுகின்றது. நடுத்தர வயதை எட்டிவிட்டால், காமத்தைக் குற்றமாகக் கருதி மறைத்துக் கொள்ளும் போலித்தனமும், காதலில் சுதந்திரமாக இணைவதற்கு சாத்தியங்கள் மறுக்கப்படுவதும் குறுக்கு வழிகளை நோக்கி மனத்தைத் தூண்டுகின்றன.

மணவாழ்க்கையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் கணவன் மனைவிக்கிடையிலான நேசம் பல காரணங்களால் குறையத் தொடங்கும்போது, சலிக்கத் தொடங்கும்போது, அவற்றுக்கான காரணங்களை ஆராய்ந்து யாரும் சீர்செய்து கொள்வதில்லை. பிரிவு என்பது அவ்வளவு சுலபமான ஒன்றாக இல்லை.

இதுதான் வாழ்க்கை என்று விதிக்கப்பட்டிருந்தாலும் மணவாழ்வில் கிடைக்காத இன்பத்தை, குறிப்பாக ஆண்கள் (சில சமயங்களில் பெண்களும்) மணவாழ்விற்கு வெளியே தேடுகின்றார்கள். இவையெதுவும் தற்செயலாக நிகழ்வதில்லை. ஆழ்மனத்தில் கனன்று கொண்டிருக்கும் ஆசை நிறைவேறுவதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. சந்தர்ப்பங்கள் அதற்கு உதவுகின்றன. கள்ள உறவின் தோற்றுவாய் இப்படித்தான் இருக்கின்றது.

இத்தகைய சூழ்நிலைக்கு ஆட்படுவோர் திருட்டுத்தனத்தில் மட்டுமே சுதந்திரத்தைக் காண்கிறார்கள். இவர்களுடைய வாழ்வின் மற்ற வேலைகளை முதலில் மெதுவாகவும், பின்னர் வெகுவேகமாகவும் அரிக்கும் கரையானாகக் காமம் மாறிவிடுகின்றது. சிந்தனையின் மையத்தையே கைப்பற்றிவிடும் இந்த வெறி மற்றெல்லாச் சிந்தனைகளையும் தடுமாற வைக்கின்றது. சமூக வாழ்க்கையில் ஊக்கத்துடன் ஈடுபட வேண்டிய மனிதனை நைந்துபோக வைக்கின்றது. காதலைத் துறந்து காமத்தை மட்டும் ஒரு விலங்குணர்ச்சி போல துய்ப்பதற்கு வாய்ப்பளிக்கும் விபச்சாரமும் கூட இத்தகைய நபர்களின் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவதில்லை.

அதனால்தான் கலவியில் புதிது என்ன? என்ற கேள்வி அடுத்து வருகின்றது. அந்தக்கால மன்னர்களும், ஜமீன்தார்களும், இந்தக்கால பணக்காரர்களும், முதலாளிகளும் எல்லையற்ற காமத்தில் திளைத்தாலும் திருப்தி கொள்வதில்லை. பாலுறவுச் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கும் மேலை நாடுகளிலிருந்து கோவாவின் கடற்கரைக்கும், இலங்கைக் கடற்கரைக்கும் இளஞ்சிறுவர்களைத் தேடி வெள்ளையர்கள் வருகிறார்கள்.

விபச்சாரமே குலத்தொழில் என்று விதிக்கப்பட்ட சில ஆந்திரக் கிராமங்களில் புதிதாகப் பருவமெய்தும் சிறுமிகளுக்குப் பொட்டுக்கட்டும் சடங்கும் அவர்களை ஏலமெடுக்கும் முறையும் இன்றும் தொடர்ந்து நடந்து வருகின்றன. மேட்டுக்குடி வர்க்கத்தின் காமக்களியாட்டம் ஆண்களுக்கு மட்டுமே உரியது என்ற காலமும் மாறி வருகின்றது.

குழந்தைகள்-மீதான-பாலியல்-வன்முறைஉலகமயமாக்கத்தால் பெருகியிருக்கும் பணக்கொழுப்பும், இணையத்தால் திறந்துவிடப்பட்டிருக்கும் இன்பவாயில்களும் இன்று பணக்காரப் பெண்களையும் வாடிக்கையாளர்களாக்கி விட்டன. இவர்களுக்குச் சேவை புரியும் ஆண் விபச்சாரிகளும் மாநகரங்களில் பெருத்து வருகின்றார்கள். மொத்தத்தில் உயர் வர்க்கத்தினர் இதற்கேற்ற மனநிலையையும், பணநிலையையும் ஒருங்கே பெற்றிருக்கின்றனர்.

இந்த வசதி இல்லாதவர்களுக்கு விரலுக்கேற்ற விபச்சாரம் இருக்கின்றது. என்றாலும் அதனைத் தேடிப்போவது அத்தனை சுலபமாய் நடப்பதில்லை. இரகசியம் காக்க முடியாத கள்ள உறவுகளோ கொலையில் முடிகின்றன. இத்தகைய சூழ்நிலையில்தான் ஒழுக்கக்கேடுகளை நியாயப்படுத்தும் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.

இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இந்திய ஆண்களும் பெண்களும் கட்டுப்பெட்டித்தனத்தைக் கைவிட்டு பாலியல் சுதந்திரம் பெற்று வருவதைக் கொண்டாடுகின்றன. கள்ள உறவுகளும், திருமணத்துக்கு முந்தைய உறவுகளும் பெருத்து வருவதாக அவர்கள் வெளியிடும் புள்ளி விவரங்கள், ‘இவையெல்லாம் சகஜம்தான் போலும்’ என்ற கருத்தை வாசகர்கள் மனதில் எளிதில் உருவாக்குகின்றன.

செல்போனில் புழங்கும் நீலப்படங்கள், பாலியல் குற்றங்களையே கவர்ச்சிகரமான அட்டைப்படக் கட்டுரைகளாக்கும் பத்திரிக்கைகள், அவற்றையே தமது கதைக்கருவாகக் கொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகிய அனைத்தும், எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுகின்றன. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர், தான் இழந்து விட்ட இன்பம் குறித்து உள்ளுக்குள் புழுங்கத் தொடங்குகின்றனர். புதிய அதிருப்தியாளர்கள் உருவாக்கப் படுகின்றனர்.

தனிநபரின் காமம் புடைப்பதற்கேற்ற கலாச்சாரச் சூழலும் மறுபுறம் அதைத் தடை செய்யும் சமூகக் கட்டுப்பாடுகளும் கோலோச்சும் வாழ்க்கையில், என்னதான் இருந்தாலும் எல்லோரும் எல்லை மீறி விடுவதில்லை. அல்லது மனத்தளவில் எல்லை மீறினாலும் செயலில் மீறாத வண்ணம் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றார்கள். சமூக விழுமியங்களின் அடிப்படையில் தனது சொந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் பலரும் போராடினாலும் இந்தப் போராட்டத்தில் தோல்வியுறுபவர்களும் இருக்கின்றார்கள்.

கீழே கிடக்கும் பணத்தை உரியவரிடம் சேர்ப்பதா, யாரும் பார்க்கவில்லை என்பதால் சட்டைப்பையில் வைத்துக் கொள்வதா என்று முடிவு செய்ய வேண்டிய தருணம் பலருக்கும் வருகின்றது. ஒருமுறை எல்லை மீறிவிட்டால், பிறகு வக்கிரம் இயல்பாக மாறிவிடுகின்றது. கடுகளவு குற்ற உணர்வுகூட இல்லாமல் அடக்கப்பட்ட காமத்தை இவர்கள் வெறியுடன் தீர்த்துக் கொள்கிறார்கள். இவர்களுக்குப் பிரச்சினையில்லாத தொல்லையில்லாத இலக்கு குழந்தைகள். வயதுவந்த பெண்ணை வல்லுறவுக்கு ஆளாக்குவதும், ஒரு சிறுமியை வல்லுறவு செய்வதும் ஒன்றல்ல. பிந்தையதைச் செய்வதற்கு மிகுந்த வன்மம் வேண்டும்.

பெண்களே வல்லுறவைத் தடுக்க முடியாமல் பலியாகிவிடும் நிலையில், குழந்தைகளோ அதைப்பற்றிய சுவடு கூடத் தெரியாமல், என்ன ஏது என்று அறியாமல் பலியாகிறார்கள். விபச்சாரமும், கள்ள உறவும் வாய்க்காத தருணங்களில் அண்டை வீடுகளில் இருக்கும் பெண் குழந்தையே ஒரு காமுகனுக்கு வெறியூட்டப் போதுமானதாக இருக்கின்றது. பொதுப்பால் என்று போற்றப்படும் ஒரு குழந்தையை இத்தகைய கயவர்கள் வளர்ந்த பெண்ணாக உருவகித்துக் கொள்கின்றார்கள். ஒரு இனிப்பு வாங்கிக் கொடுத்து விட்டு மறைவிடத்தில் வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்கின்றார்கள். சற்றே அறியும் பருவமென்றால் மிரட்டிப் பணிய வைக்கிறார்கள்.

பள்ளிகளில் ஆதிக்கம் செய்யும் ஆசிரியர்கள் இப்படித்தான் மாணவிகளை வேட்டையாடுகின்றனர். பெயிலாக்கி விடுவேன், கொன்று விடுவேன் என்று அந்த மாணவி மிரளும் வண்ணம் மான் வேட்டை நடைபெறுகின்றது. கற்பின் புனிதம் குறித்த கருத்து ஆதிக்கம் செய்யும் சமூகத்தில் ஒரு மாணவி தனக்கு நேர்ந்ததை வெளியிலோ வீட்டிலோ அவ்வளவு எளிதாகச் சொல்லுவதில்லை. விதி விலக்காய் வெளியே தெரியும் சம்பவங்களிலிருந்துதான் இந்த வக்கிரத்தை அறிய வருகின்றோம். முனைவர் படிப்புக்காக கைடு உதவியுடன் ஆய்வு செய்யும் கல்லூரிப் பெண்கள் கூட இந்தக் கயவர்களின் மிரட்டலுக்கு அடிபணிய நேரிடுகின்றது.

சிறுவர்களும், சிறுமிகளும் வயது வந்த எதிர்பாலினத்தவருடன் உறவு கொள்ளும் நீலப்படங்கள்தான் இன்றைய சிறப்பாம். இதைப் பார்த்துத்தான் பணக்காரத் தம்பதியினர் கிளர்ச்சி அடைகிறார்களாம். சிறார்களை வல்லுறவுக்கு ஆட்படுத்தும் போக்கு உழைக்கும் மக்களிடத்தில் இருப்பதை விட மேல்தட்டு நடுத்தர வர்க்கத்திடம்தான் அதிகம் நிலவுகிறதென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களிடம் குடும்ப உறவு பண உறவாகவும், பண்ட உறவாகவும் போலித்தனம் நிரம்பியதாகவும் இருப்பதால் இத்தகைய சீரழிவுகள் அதிகம் நடக்கின்றன.

குழந்தைகள்-மீதான-பாலியல்-வன்முறைகுழந்தைகளை வல்லுறவு கொள்ளும் மனிதர்கள் எவரும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கேடிகளல்ல. அந்தக் குழந்தையின் உறவினராகவோ, அண்டை வீட்டாராகவோ பொதுவாக நன்னடத்தையுடன் வாழ்பவர்கள்தான். இவர்கள்தான் இன்னொருபுறம் தமது கைகளுக்கு அருகாமையில் இருக்கும் பச்சிளம் குழந்தைகளை அவை அறியாவண்ணம் குதறுகின்றவர்களாகவும் இருக்கிறார்கள். தனது நன்னடத்தையைக் காப்பாற்றிவரும் அதே வேளையில் காம வக்கிரத்தைத் தீர்ப்பதற்கு இரகசியமான கருவிகளாகக் குழந்தைகளைப் பயன்படுத்துகின்றார்கள்.

ஒரு குழந்தையின் குழந்தைத் தன்மையை இரக்கமின்றி நசுக்கும் இந்தக் கயவர்கள் எவரும் மனநோயாளிகள் அல்ல. பிடிபடாத வரை இந்த வக்கிரத்தைத் தொடரலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தக் காரியத்தில் இறங்குகின்றார்கள். குழந்தைகளை வல்லுறவு செய்தல் ஒரு விபத்து போலவும் நடப்பதில்லை. அனைத்தும் திட்டமிட்டுதான் நடக்கின்றன.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு குழந்தை முழுமையான வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட வேண்டும் என்பதில்லை. பாலியல் வெறியுடன் ஒரு குழந்தையின் மீது கைகள் படரும் ஒவ்வொரு நிகழ்வும் வல்லுறவுதான். அந்த வகையில் பெரும்பான்மையான குழந்தைகள் இந்த அபாயத்தை சந்திக்கும் நிலையில்தான் இருக்கின்றார்கள். பருவம் வராத குழந்தைகளின் உணர்ச்சியைத் தூண்டி விடுதல், நீலப்படங்களைக் காண்பித்து உணர்வூட்டுதல் போன்றவற்றையும் இந்தக் கயவர்கள் செய்கின்றார்கள். உடலும், வயதும் முதிர்ந்த பின்னர் அறிய வேண்டிய பாலுறவை முன்பே அறிந்து கொண்டு அதற்கு பலியாகின்றார்கள் இந்தக் குழந்தைகள்.

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் சிறார்களுக்கு இது வன்முறையாக நடக்கின்றது. பெற்றோர் அக்கறையோ கண்காணிப்போ இல்லாமல் இணையத்தில் மூழ்கும் மாணவர்களோ பிஞ்சிலே வெம்பி விடுகின்றார்கள். தொலைக்காட்சியின் அத்தனை நிகழ்ச்சிகளும், விளம்பரங்களும் சிறுவர்களைப் பாலியலுக்கு அறிமுகம் செய்கின்றன.

பள்ளி ஆண்டுவிழாவில் குத்தாட்டங்களுக்கு நடனம் ஆடும் சிறுமி, தான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு வயதான பெண்ணின் விரகதாபத்தை அபிநயம் பிடித்துக் காட்டுகின்றாள்; அகமகிழ்கின்றார்கள் பெற்றோர்கள். அபிநயத்தில் ஆரம்பித்து அது அடுத்த கட்டத்திற்கு போவது இயல்பாக நடக்கின்றது.

பாலியல் கொடுமைகளுக்குள்ளாக்கப்படும் குழந்தைகள் அதைப் புரிந்து கொள்ளும் அறிவு வளர்ச்சியைப் பெறும்போது பெரும் மனவியல் சித்திரவதைகளுக்கு ஆளாகின்றார்கள். தனக்கு மிகப்பெரிய கொடுமை நடந்து விட்டதாகவும், தனது புனிதம் கெட்டுப்போனதாகவும், தான் கோழையென்றும், இன்னும் பலவிதமாகவும் அவர்கள் கருதிக் கொள்வதால், இத்தகைய குழந்தைகளை சிகிச்சை அளித்து மீளப்பெறுவது என்பது மிகவும் சிரமமானதாகி விடுகின்றது.

ஆசிரியர்கள் இழைக்கும் கொடுமைகளால் மாணவிகள் அடையும் மனச்சிதைவுக்கு எல்லையில்லை. எதிர்கால வாழ்வை விருப்பத்துடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளும் மனத் துணிவை இவர்கள் இழக்கிறார்கள். விசயம் வெளியே தெரியக்கூடாது என்று மறைக்கப்படுவதால் அது உள்ளுக்குள்ளேயே மனதை ரணமாக்குகின்றது.

பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்கு பல ஆலோசனைகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் முன்வைக்கப் படுகின்றன. குழந்தைகளின் மறைவுறுப்புக்களை யாரும் தொட அனுமதியாத வண்ணம் கற்றுக் கொடுப்பது, குழந்தைகளுடன் தேவையானவற்றை வெளிப்படையாகப் பேசுவது, அவர்களையும் அப்படிப் பேசவைப்பது, விடலைப் பருவத்தினருக்கு செக்ஸ் கல்வி, விளையாடும் குழந்தைகளை ஆசிரியர்களும் குடும்பத்தினரும் கண்காணிப்பது, மாணவிகள் படிக்கும் பள்ளிகளுக்கு பெண்களை மட்டும் ஆசிரியர்களாக நியமித்தல் என்று பல ஆலோசனைகள் பேசப்படுகின்றன.

குழந்தைகள்-மீதான-பாலியல்-வன்முறைஇவற்றையெல்லாம் செய்யலாம்தான். இவை தடுப்பு மருந்து மட்டுமே. நோயின் மூலத்தை அறிந்து அழிக்கும் சக்தி இந்த மருந்திடம் இல்லை. ஆம், குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கும் கயவர்களைத் திருத்துவதற்கு எந்த மருந்தும் அரசிடமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமும் இல்லை. சொல்லப்போனால் இந்த நோயை முற்றச்செய்யும் வேலையைத்தான் உலகமயமாக்கத்தின் பண்பாடு செய்து வருகின்றது. இயற்கையான காமம் செயற்கையாக உப்பவைக்கப்படும் இன்றைய சூழலில் இவை ஒவ்வொன்றையும் எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினமான காரியம்.

முக்கியமாக இந்த மனவிகாரம் உள்ளவர்கள் என எல்லோரையும் சொல்ல முடியாதுதான். அதே சமயம் இந்தக் கொடுமையைச் செய்யப் போகிறவர்கள் யார் என்பதையும் கண்டு பிடிக்க முடியாது. அது அந்தக் குழந்தையின் மாமாவாகவோ, சித்தப்பாவாகவோ, ஆசிரியனாகவோ, அண்டை வீட்டு இளைஞனாகவோ இருக்கலாம்.

நான்கு சுவர்களுக்குள் நமது குடும்பத்தின் நலனை மட்டும் பேணிக் கொள்ளலாம் என்றுதான் பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தெருவில் இறங்காமலா இருந்துவிட முடியும்? ஒழுக்கக் கேட்டையும் வக்கிரத்தையும் தோற்றுவிக்கும் சமூகச் சூழலுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் மட்டும்தான் அவற்றை எதிர்த்து நிற்க முடியும். அந்தக் கிருமிகளிடமிருந்து நம்மையே தற்காத்துக் கொள்ளவும் முடியும்.

_________________________________

புதிய கலாச்சாரம், அக்டோபர் 2008
_________________________________

  1. // இந்திய மக்களுக்கு பார்ப்பனியத்தின் சாபத்தால் காதலே மறுக்கப்பட்டிருப்பதால், பாலியல் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. பாலுணர்வு எனும் இயற்கையான உணர்வு திருட்டுத்தனமான விசயமாகப் பார்க்கப்படுகின்றது. நடுத்தர வயதை எட்டிவிட்டால், காமத்தைக் குற்றமாகக் கருதி மறைத்துக் கொள்ளும் போலித்தனமும், காதலில் சுதந்திரமாக இணைவதற்கு சாத்தியங்கள் மறுக்கப்படுவதும் குறுக்கு வழிகளை நோக்கி மனத்தைத் தூண்டுகின்றன. //

    மனைவியை பிரிந்திருந்ததால் எதிர் வீட்டுக் குழந்தையை குதறியவனிலிருந்து, சில கேட்டரிங் மாணவர்கள், ஆசிரியர்கள் வரை நடத்திய வக்கிர வெறியாட்டத்தை ’குறுக்கு வழிகள்’ என்றும், பார்ப்பனியத்தின் சாபம் என்று பிதற்றி வைத்திருக்கிறார் கட்டுரை ஆசிரியர்.. மேற்படி ‘அப்பாவிகள்’ குறுக்கு வழியில் போக வேண்டுமென்றால் குழந்தைகள்தான் கிடைத்தார்களா..

    • பார்ப்பனீயத்தின் சாபமற்ற அமெரிக்காவில் ஏன் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நடக்கின்றன? உடனே, அது முதலாளித்துவத்தால் விளைவதாக பதில் வரும். ரஷ்யா, சீனா இரண்டு இடத்தில் தான் எல்லாரும் நல்லவர்கள் போலும். சங்க இலக்கியங்களில் தலைவனும், தலைவியும் மறைவாக சந்தித்தாக வருகிறதே. “அலர்” பற்றி அத்தனை பாடல்கள். பாலைத்திணை பாடல்கள் என்ன கூறுகின்றன? எனவே, சங்க அகத்துறை நூல்களை பார்ப்பனீய நூல்கள் எனலாமா?

      இந்தக் கட்டுரையில் வெறுப்பரசியலை வலுவில் திணித்துள்ளீர்கள். எல்லாரும் சேர்ந்து எதிர்க்க வேண்டிய ஒரு விஷயம். அது பற்றிய கட்டுரைக்கு எதிரான மறுமொழி எழுதும் இந்த சூழலை நினைத்து வெறுப்பாக இருக்கிறது.

      • வெங்கடேசன்,
        எல்லோரும் சேர்ந்து எதிர்க்க வேண்டிய ஒரு விசயம் என்று நீங்கள் குறிப்பிடும் வரியில் உள்ள எல்லோரிடத்தில்தான் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை செய்யக்கூடியவர்களும் இருக்கிறார்கள். அவர்களை தோற்றுவித்து இயக்கக்கூடிய சமூக கண்ணோட்டத்தைத்தான் இந்தக் கட்டுரை பேசுகிறது. மறுப்பதாக இருந்தால் காரணங்களையும், தீர்வையும், அடிப்படையையும் நீங்கள் எழுதிவிட்டு கட்டுரை குறித்து வெறுப்படையலாமே?

        • இதென்ன புது கதை? வினவு நேரடியாக களத்தில் வந்து விட்டது! என்னைப் போன்ற அரைகுறைகளை இத்தளத்தை விட்டு விரட்டுவதற்காகவா 🙂

          ஒரு குற்றம் புரியும் சிலரை மற்ற எல்லாரும் சேர்ந்து எதிர்ப்பது என்ற பொருளில் “எல்லாரும்” என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். இந்தக் குற்றத்தை ஆதரித்து யாரும் பேச மாட்டார்கள் என்ற பொருளில். உங்கள் முக்கியக் கேள்வி இந்த சொல்லாடலை பற்றி அல்ல என்ற நம்பிக்கையில் என் வெறுப்பு குறித்து மட்டும் மேலே எழுதுகிறேன்.

          என் வெறுப்பு இரண்டு வகைகளில் வருகிறது. ஒன்று சமீபத்தில் பல வினவு கட்டுரைகளை ஒரு சேர படித்த போது விளைந்தது. இரண்டாவது இக்கட்டுரை தொடர்பானது. முதல் வகையைப் பார்ப்போம்.

          சூத்திரன், பறையன் என்பதைப் போன்றே பார்ப்பனன் என்பதும் இன்றைய சூழலில் ஒரு இழி சொல்லாக உள்ளது. பார்ப்பனன் என யாரைக் குறிப்பிடலாம்? பார்ப்பன ஜாதியில் பிறந்துவிட்ட ஒருவனை இந்த இழிசொல் கொண்டு அழைப்பது தவறு. சூத்திரன், பறையன் என பிறப்பால் ஒருவனை அழைப்பதற்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை. பின்பு யாரை அழைக்கலாம்? பார்ப்பனீயம் செய்பவனை இப்படி திட்டலாம். “பார்ப்பனீயம்” என்பதை பல கூறுகளாக வினவு காண்கிறது. இதன் முக்கியக் கூறாக சாதி, தீண்டாமை என்பதை எடுத்துக் கொள்ளலாம். வினவு என்ன செய்கிறது? ஜெயலலிதா, சோ, குருமூர்த்தி, சு சுவாமி என பார்ப்பன ஜாதியில் பிறந்தோரின் பார்ப்பனீயத்தை விமர்சிக்கும் போது மட்டுமே இந்த அடைமொழியை பயன்படுத்துகிறது. அதே போன்றே விகடன், தினமணி, தினமலர் என பார்ப்பன ஜாதியில் பிறந்தோரால் (இன்றும் அப்படித்தானா என எனக்கு நிச்சயமாக தெரியவில்லை) நிர்வகிக்கப்படும் ஊடகங்களை விமர்சிக்கும்போதும் இந்த அடைமொழியை வினவு பயன் படுத்துகிறது. ஆனால், முத்துராமலிங்கத் தேவர், டாக்டர் ராமதாஸ், காடுவெட்டி குரு, சீமான் ஆகியோரின் ஜாதி வெறி பற்றிய கட்டுரைகளில் “பார்ப்பான்” என்ற வார்த்தை இல்லை. இவர்களுக்கு இந்த அடைமொழி தரவில்லை. உதாரணமாக “சீமான் என்ற பார்ப்பான்” என்ற சொல்லாடல் இல்லை. ஆக பார்ப்பன ஜாதியில் பிறந்தோர்க்கு மட்டுமே இந்த இழிசொல் என்றால் இச்சாதியில் பிறந்துவிட்ட என்னையும் சேர்த்து திட்டுகிறீர்கள் என்ற உணர்வு வருகிறது. எனவே, “பார்ப்பனீயம்” என்னும்போது என்னையும் குறிப்பதாக உணர்கிறேன். பார்ப்பனன் என்ற சொல்லை ஜாதி பார்க்கும் அனைவருக்கும் பொதுவில் வைப்போம்.

          இரண்டாவதாக இக்கட்டுரைக்கு குறிப்பாக வருவோம்.

          // இந்திய மக்களுக்கு பார்ப்பனியத்தின் சாபத்தால் காதலே மறுக்கப்பட்டிருப்பதால்

          நீங்கள் தமிழ்நாட்டு குற்றங்கள் பற்றி கூறியதால் தமிழ் நாட்டை பற்றி பேசுவோம். பார்ப்பனீயத்தை பார்ப்பன ஜாதியில் பிறந்தோர் உருவாக்கி தமிழ்நாட்டில் திணித்தார்கள் என கொள்வோம். இது எப்போது நிகழ்ந்தது? சங்க இலக்கியப் பாடல்களில் தலைவனும், தலைவியும் திருட்டுத்தனமாக சந்தித்த பாடல்கள் உள்ளன. “ஊர் அலர்” பற்றிய குறிப்பு உள்ளது. பாலைத்திணை பாடல்கள் உடன்போக்கு பற்றி பேசுகின்றன. கற்பு, களவு என இரண்டு உள்ளன. ஆக சங்க காலத்திலேயே காதல் மறுப்பு இருந்ததாக கொள்ளலாமா? அப்படியானால் மேற்சொன்ன பார்ப்பனீய திணிப்பு இதற்கு முன்னால் நடந்திருக்க வேண்டும். இதை திணிப்பு என கொண்டால், திணிப்புக்கு முந்தைய சமூகத்தில் காதல் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? “பார்பனீயத்தின் சாபத்தால் காதல் மறுக்கப்பட்டது” என்பதே ஆராய்ச்சிக்கு உரிய ஒரு கூற்று. இந்தக் கூற்று உண்மையா, பொய்யா என எனக்கு தெரியவில்லை. இதை நீங்களும் நிறுவாமல், வேறு ஒரு ஆராய்ச்சி கட்டுரைக்கு சுட்டி தராமல், பொத்தாம் பொதுவாக காதல் மறுக்கப் பட்டதற்கு பார்ப்பனீயம காரணம் என கூறுவதை எதிர்க்கிறேன். இது சமூகத்தின் எல்லா பிரச்சனைகளுக்கும் பார்ப்பனீயத்தை காரணம் காட்டுவதாக உள்ளது. அது எனக்கு வெறுப்பை தருகிறது.

          இந்தப் பிரச்சனைக்கான காரணம் என்ன, தீர்வு என்ன என எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. நீங்கள் கூறும் கருத்து ஏற்கத் தக்கதாகவே உள்ளது. ஒரு பக்கத்தில் ஊடகங்கள் பாலியல் உணர்வுகளை தூண்டி விடுவது, மறுபக்கத்தில் இயற்கையாக எழும் காதல் உணர்வுக்கு தடை விதிப்பது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். அதே சமயம், பல கோடி பேருக்கு இதே சூழ்நிலை நிலவும் போது மிகச் சிலர் மட்டுமே ஏன் வன்முறையை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதும் ஒரு கேள்வி. காதல் மறுக்கப் படாத மேற்க்கத்திய நாடுகளில் ஏன் பாலியல் வன்முறை நடக்கிறது என்பதும் கருத்தில் கொள்ளப் பட வேண்டும்.

            • இரண்டாவது கட்டுரை வேறொரு விவாதத்தின் இடையில் எழுதப்பட்டதாக தெரிகிறது. எனவே முழுதும் புரியவில்லை. முதல் கட்டுரை நான் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் பதில் அளிப்பதாக உள்ளது. நன்றி. ஆனால் இந்த வக்கிரங்கள் அனைத்துக்கும் ஆதிமூல காரணம் பார்ப்பனீயமே என்ற கூற்றை ஏற்க முடியவில்லை. மேட்டுக்குடி வர்க்கம், நில உடமை, ஒருத்திக்கு ஒருவன், குடும்ப அமைப்பு என்பனவெல்லாம் உலகெங்கும் தோன்றியுள்ளன. பார்ப்பனீயம் இல்லாவிட்டாலும் இங்கும் தோன்றியிருக்கும். அப்படி இங்கும் நிகழ்ந்தபோது அதற்கு பார்ப்பனீயம் தூபம் போட்டது என்பது என் எண்ணம். தமிழகத்தில் கோவில்கள் சங்க காலத்திற்கு பிறகு கட்டப்பட்டவை. ஆனால், சங்க காலத்திலேயே பரத்தையர் இருந்துள்ளனர். கோவில்களுக்கு வெளியில் இருந்த விபச்சாரத்தை கோவிலோடு இணைத்தது பார்ப்பனீயம்.

              மேலே கூறியவை வரலாறு சம்பத்தப் பட்ட என் அனுமானங்கள். அவை போகட்டும். இந்தக் கட்டுரைக்கு நான் எழுதிய மறுமொழி பற்றி நேற்று இரவு நெடுநேரம் சிந்தித்ததில் ஒரு தெளிவு கிடைத்தது. கட்டுரை பற்றிய என் வெறுப்புக்கு காரணம் நான் கூறியவை அல்ல. வெறுப்பின் மூல காரணம் உள்ளத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஜாதிப் பற்று. “ஜாதிகள் இல்லையடி பாப்பா” என பாடினாலும், என் நண்பர்களின் ஜாதி என்ன என எனக்குத் தெரியாவிட்டாலும் அந்த பற்று ஒரு மூலையில் இருக்கிறது. அடுத்தவன் வீட்டு கூரையில் வீசி எரியாமல் கையில் இருக்கும் தீப்பந்தம்! (நன்றி: கோவி கண்ணன்). இது இல்லாவிட்டால் “பார்ப்பனீயம் தான் தமிழ் சமூகத்தில் காதல் அழியக் காரணாமா?” என்ற வரலாற்றுக் கேள்வி பற்றி அமைதியான விவாதம் நடத்தி இருப்பேன். அல்லது வேறு வேலையைப் பார்க்கப் போயிருப்பேன். வெறுப்பு கொண்டிருக்க மாட்டேன். தீப்பந்தத்தை அணைக்க வேண்டும். முயற்சி செய்வேன்.

    • அம்பி,
      கட்டுரை பல்வேறு தகவல்களையும், சமூக அடிப்படைகளையும் விரிவாக பேசுவதை நீங்கள் எளிமைப்படுத்தி சுருக்கி முத்திரை குத்துகிறீர்கள். பரவாயில்லை, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு என்ன காரணம் என்பதை நீங்கள் சொல்லுங்கள், அதை சொல்லி விட்டு கட்டுரை அபத்தமானது என்று முயலலாமே?

      • வினவு,

        நான் முத்திரை குத்தவில்லை.. கட்டுரை பல்வேறு தகவல்களையும், சமூக அடிப்படைகளையும் விரிவாகப் பேசுகிறது என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.. கட்டுரையின் ஏற்க முடியாத பகுதிகள் சிலவற்றை விமர்சிப்பது முழு கட்டுரையையும் நிராகரிப்பதாகாது..

        எந்த வழியிலும் இச்சையைத் தீர்த்துக் கொள்வது என்ற மிருகவெறியை மனித மனங்களில் இடம்பெறாமல் விலக்கி பண்படுத்தும் முயற்சியில் மதங்களும், கலை இலக்கியங்களும் விடாமல் ஒவ்வோர் வழியில் போராடிக்கொண்டிருக்கின்றன.. இதில் ஓரளவில் வெற்றியும் பெற்றதால்தான், அடுத்த கட்டமான – சுயநலமிக்க சில மனிதர்களின் மனங்களில் தோன்றும் – லாபவெறியை (எந்த வடிவில் இருந்தாலும்) நீக்கும் முறைகள், சமூக அமைப்பைப் பற்றி பேசமுடிகிறது..

        ஆனால் இதுவரை பெற்ற வெற்றிகளை அழித்து மீண்டும் மனிதனை மிருகமாக்கும் புதிய அபாயம் கட்டுப்பாடற்ற நுகர்வுக் கலாசரத்தின் மூலம், பாலியல் சுதந்திரம் என்பது போன்ற முகமூடிகளை அணிந்து, நுழைந்திருக்கிறது.. மனித வக்கிரங்களை எதிர்க்க வேண்டிய ஒரு சமுதாயம் எந்த அளவுக்கு இந்த கட்டுப்பாடற்ற நுகர்வுக் கலாசாரத்தில் முழ்குகிறதோ அந்த அளவுக்கு அதை ஊக்குவிக்கும் கும்பலுக்கு லாபமீட்டும் வாசல்கள் திறக்கின்றன.. இதைக் கண்டித்து எதிர்க்க வேண்டிய சக்திகளின் கவனம் தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் போதெல்லாம் அதைச் சுட்டிக் காட்டி விமர்சிப்பதில் தவறேதும் தோன்றவில்லை..

        • மதங்கள்…..?
          கற்பு – விபச்சாரம், தேவதாசி முறை, பொட்டுக் கட்டும் சடங்கு, குழந்தை திருமணம், விதவை, பர்தா, பலதார மணமுறை, பாதிரியார்களின் செக்ஸ் ஊழல், நித்தியானந்தா, ………..?
          மிருகவெறியை மனித மனங்களில் இடம்பெறாமல் எந்த மதம் எந்த நாட்டில் என்ன வெற்றியைப் பெற்றிருக்கின்றன?

          • I wonder how vinvau talks about supporting a beef diet and control over emotions.

            Last time,vinavu said Shankara mutt people are impotent and they mask it under self control,now vinavu tries to say religions support testosterone rage.

            I wonder how somebody can contradict oneself time and again consistently.

            • சுப்பிரமணி என்ற கரிகுமார், இது போன்ற உங்கள் உளரல்களையெல்லாம் வினவு எழுதியதாக அல்வா குடுக்க வேண்டாம், நீங்கள் எங்கேயாவது தமிழ் பொந்து தளத்தில் படித்து விட்டு வந்து இங்கே பூகட்ட வேண்டாம்

                • அப்ப vinavu said Shankara mutt people are impotent இதை எங்க எழுதியிருக்காங்கன்னு லிங்கு குடுங்க

                  • I have to search and i only remember.The dialogue was this, In working class people if somebody is impotent they just treat it as a part of life but if it happens with a religious guy,they make him a saint.

                    i dont have to lie,my views and details are always consistent.

                    it is upto you.

                    • வினவு எழுதியதாக சொன்னதையே அடுத்தடுத்த பின்னூட்டங்களில் இப்படி முரண்பாடா எழுதறீங்க, நல்ல தமாசு! ஒன்னும் அவசரமில்ல சார், நிதானமா தேடிப்பாருங்க – அப்பயம் கிடைக்காது ஏன்னா அப்படி எழுதியிருந்தாதானே கிடைக்க 🙂

          • // கற்பு – விபச்சாரம், தேவதாசி முறை, பொட்டுக் கட்டும் சடங்கு, குழந்தை திருமணம், விதவை, பர்தா, பலதார மணமுறை, பாதிரியார்களின் செக்ஸ் ஊழல், நித்தியானந்தா, ………..? //

            குழந்தைத் திருமணம் முடித்தவுடன் பெண்ணும், மாப்பிள்ளையும் மணவாழ்க்கைக்குத் தகுந்த வயது வரும்வரை விளையாடப் போய்விடுவார்கள்.. தேவதாசி முறை, பொட்டுக்கட்டுதல் போன்றவை இடைக் காலத்தில் சமூகத்தில் தோன்றி இப்போது தடைசெய்யப்பட்டவை.. தற்காலத்தில் குழந்தைகளின் மீதான வன்முறைக்கும் மேற்படி வழக்கங்களுக்கும் ஏதேனும் தொடர்பிருப்பாதாகக் கற்பனை செய்து கொண்டாலும் கூட இவை மூன்றுமே பொது வழக்கில் இல்லாத இக்காலத்தில் ஏன் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை நடக்கிறது என்றால் பார்ப்பனீயத்தின் சாபம் என்று கூறி பாவிகளுக்கு விமோசனம் அளிக்கக் கூடாது.. இந்தப் பாவிகள் விடயத்தில் மதம் தோற்றுவிட்டது..

            லிஸ்டில் உள்ள பிற வழக்கங்கள் இந்து மதத்தில் பரிந்துரைக்கப் படாதவை.. இருந்தாலும் கட்டாயம் சொல்லித்தான் ஆகவேண்டுமென்றால் :

            பர்தா வன்முறையா இல்லையா என்று நான் கருத்து கூற முடியாது, அதை அணியும் பெண்கள்தான் கூறமுடியும்..

            பாதிரியார்களின் செக்ஸ் ஊழல், நித்தியானந்தா லீலைகள் முதலானவை ’நரகத்திலும்’ ஆன்மீக சேவையாற்றத் தயாராயிருப்பவர்களின் தனிப்பட்ட பாலியல் குற்றங்கள்.. அதற்காக இம்மையிலேயே தண்டனை கொடுக்கக் கூடாது என்றும் மதம் கூறவில்லை…

            // மிருகவெறியை மனித மனங்களில் இடம்பெறாமல் எந்த மதம் எந்த நாட்டில் என்ன வெற்றியைப் பெற்றிருக்கின்றன? //

            எப்போதோ ஒன்றை ஒன்று அடித்துச் செத்துப் போயிருக்கவேண்டிய மனித சமூகத்தை ஜனநாயகம் வரை பத்திரமாகக் கொண்டுவந்து சேர்த்ததில் மதத்தின் பங்கு பணியும் குறிப்பிடத்தக்கது..

            தோள் மேல் உட்கார்ந்திருக்கும் மகனுக்கு தந்தையின் வழுக்கைதான் தெரியும்… அதனால்தான் மதம் ஓரளவிற்குத்தான் வெற்றியடைந்திருப்பதாகக் கூறினேன்..

            • //எப்போதோ ஒன்றை ஒன்று அடித்துச் செத்துப் போயிருக்கவேண்டிய மனித சமூகத்தை ஜனநாயகம் வரை பத்திரமாகக் கொண்டுவந்து சேர்த்ததில் மதத்தின் பங்கு பணியும் குறிப்பிடத்தக்கது..//

              ஹா ஹா..ஹா.. அம்பி 2012ன் சிறந்த நகைச்சுவைக்காக இதை பரிந்துரை செய்யலாமா?

                • அவருக்கும் மனிதக் காதல் கசந்து விட்டது போலும். விதவிதமான கோணங்களில் மரம், செடி, கொடிகளுடன் காதல் செய்ய முடியுமா என முயன்று கொண்டிருக்கிறார். (http://jayadevdas.blogspot.com/2012/11/not-allowed.html) ஆனால், அப்படி நினைப்பது நமது தவறான பார்வையால்தானாம், கருத்துமுதல்வாதியல்லாவா அவர்.

                  • மரத்தை மரமாகவே பார்க்கவேண்டும் என்ற நேர்பார்வையின் அவசியத்தை உணர்த்த நவீன உத்திகளை கையாள்கிறார்.. என்ன இருந்தாலும் அவர் ஒரு ஞானியல்லவா…

  2. /// மனைவியை பிரிந்திருந்ததால் எதிர் வீட்டுக் குழந்தையை குதறியவனிலிருந்து, சில கேட்டரிங் மாணவர்கள், ஆசிரியர்கள் வரை நடத்திய வக்கிர வெறியாட்டத்தை ’குறுக்கு வழிகள்’ என்றும், பார்ப்பனியத்தின் சாபம் என்று பிதற்றி வைத்திருக்கிறார் கட்டுரை ஆசிரியர். ///

    பொட்டு கட்டுதல் எனும் மூடத்தனத்துக்கும், முட்டாள் ஆணாதிக்கத்துக்கு அடியிட்டதும் பார்ப்பனியமே என்பது உலகறிந்த உண்மை.

  3. மிக அவசியமான கட்டுரை……a must read article for everyone.

    //
    ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு குழந்தை முழுமையான வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட வேண்டும் என்பதில்லை. பாலியல் வெறியுடன் ஒரு குழந்தையின் மீது கைகள் படரும் ஒவ்வொரு நிகழ்வும் வல்லுறவுதான்.

    //
    நன்றி வினவு தோழர்களே…..

  4. எதுக்கெடுத்தாலும் பார்பனியம், போலி கம்யூனிஸ்ட்டு, தொழிலாளர் வர்க்கம்றதே வினவுக்கு வேலயா போச்சு… .. இப்ப ஜெயில்ல இருக்குரவண், கேஸ் பெண்டிங் இருக்குரவனுல கீழ் ஜாதிக்காரன் எவ்வளவு பேரு, மேல் ஜாதிக்காரன் எவ்வளவு பேருன்னு பார்ப்போமா? தில் இருந்தா கணக்க எடுத்தப்புரம் ஒரு கட்டுரை எழுது, பார்ப்போம்..

    • இப்ப ஜெயில்ல இருக்குரவண், கேஸ் பெண்டிங் இருக்குரவனுல கீழ் ஜாதிக்காரன் எவ்வளவு பேரு, மேல் ஜாதிக்காரன் எவ்வளவு பேருன்னு பார்ப்போமா?//

      எல்லோருக்கும் சமமான நீதி கிடைக்கும்போது இந்த மாதிரி கேள்வியைக் கேட்கலாம் கொழுப்பெடுத்த இந்தியன் அவர்களே..

  5. //இந்தக் கட்டுரையில் வெறுப்பரசியலை வலுவில் திணித்துள்ளீர்கள். எல்லாரும் சேர்ந்து எதிர்க்க வேண்டிய ஒரு விஷயம். அது பற்றிய கட்டுரைக்கு எதிரான மறுமொழி எழுதும் இந்த சூழலை நினைத்து வெறுப்பாக இருக்கிறது.
    //

  6. இந்த சமூக அருவெருபுக்கு எதை காரணியாக சொல்வது? அழுகி அசிங்கமாகி போன குடும்ப உறவுகளா? இல்லை எளிதில் கிடைத்துவிட்ட பொருளாதார வன்மையா? கலவி, காமம் மட்டுமே வாழ்க்கை என்று கற்பிக்கும் சினிமாவா? இல்லத்தில் அன்றாடும் நடக்கும் கலவி (காமம்) அரசியல் போராட்டமா? இருவர் இனைந்து வாழ்வதை அனுமதிக்காத(கணவன் மனைவி) கேடு கெட்ட அவர்கள் பெற்றோரா? ஒழுக்க வாழ்வை கடைபிடிப்பவனை ஒம்போது என்று தூற்றும் மானம் கெட்ட பொம்பளைகளஆ? இந்த காரணிகளை இங்கு பின்னூட்டமிடும் யாராவது மறுக்க முடியுமா? இவையெல்லாம் தெரிந்தே ஏன் நடிக்கிறீர்கள்? இந்த அளவுக்கு சமூக சூழல் அசிங்கமாகி இருக்கிறது.இந்த சமுதாயத்தை உணர வைக்க கூட முடியாது. குழந்தைகளை நாம் பாதுகாக்க நாமே அவர்களுக்கு நண்பர்களாக இருப்பது தான் தீர்வாக அமையும்

  7. விட்டால் மனிதருக்கு வாயுத்தொல்லை வருவது கூட பார்ப்பனீயத்தால் தான் என்பீர்கள் போல இருக்கிறது…

    இத்தகைய கொடுன்ச்செயல்கள் பார்ப்பனியமில்லாத கீழை / மேலைநாடுகளிலும் நடக்கின்றன…எதற்கெடுத்தாலும் பார்ப்பனீயம் என்று பாட்டு பாடாதீர்கள்…

  8. இப்படிப்பட்ட ஒரு வெறிநாயை கோவையில் என்கவுன்டர் செய்த காவலர்களை சாடிய தளம்தானே இது?

  9. ///மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் நான்கு மாணவிகளை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்முறை செய்தது பொதுமக்களின் போராட்டத்திற்கு பின் தெரியவந்தது. இதற்குத் தண்டனையாக அவ்வாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்///

    இதுக்குதான் எல்லோரும் அரசாங்க வேலைக்கு ஆசைப்படுறானா…??
    தப்பு செய்தா தண்டனை இல்ல்…வெறும் இடமாற்றமே..?? சூப்பர் தேசம் நம் சுதந்திர தேசம்!

  10. Andrada nihalvuhalaha marividamal irukka enna seiya vendum?
    We need to change
    Mobile Internet Culture,
    Mobile Vedio files culture,
    Media TRB Ratting Culture,
    Movie songs culture,

    These are all disturbing human internal sexual behaviors. once it will exposed sexual abuses

    We request our government
    Please do strict activities against the above cultures.

Leave a Reply to மாடு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க