privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்அகதி முகாம்கள் : கியூ பிரிவு போலீசாரை கைது செய் !

அகதி முகாம்கள் : கியூ பிரிவு போலீசாரை கைது செய் !

-

ழத்தமிழ் அகதிகளில் எண்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அகதி முகாம் எனும் பெயரில் அடைக்கப்பட்டுள்ளனர். எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் எந்த நேரமும் போலீசு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் போலீசாரின் பொய் வழக்குகளுக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் 29.04.2013 அன்று செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்த சசிகரன் என்ற ஈழத் தமிழர் கியூ பிரிவு போலீசின் சித்திரவதை காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சசிகரனை சித்திரவதை செய்து தற்கொலைக்குத் தூண்டிய கியூ பிரிவு போலீசாரை கைது செய்!
சிறப்பு அகதிமுகாம் எனும் சித்திரவதைக் கூடாரத்தை இழுத்து மூடு!
ஈழத் தமிழ் அகதிகள் அனைவரையும் விடுதலை செய்!

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 30.04.2013 அன்று சென்னை பனகல் மளிகை அருகில் காலை 11 மணிக்கு

செங்கல்பட்டு அகதிமுகாமில் ஈழத்தமிழர் சசிதரனை தற்கொலைக்குத் தூண்டிய கியூ பிரிவு போலீசாரை கைது செய்! சிறையிலடை!
செங்கல்பட்டு முகாம் என்பது சிறப்பு அகதிமுகாமல்ல! சித்திரவதை கூடாரமே !

இழுத்துமூடு ! இழுத்துமூடு !
ஈழத்தமிழ் அகதிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் சிறப்பு அகதிமுகாம் எனும் சித்திரவதை கூடாரங்களை
இழுத்து மூடு இழுத்துமூடு !

என்ற முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னைக் கிளை செயலர் தோழர் கார்த்திகேயன் “ஈழத்தமிழ் அகதிகள் கைதிகளாக அடைத்து சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதன் தொடர்ச்சியாகவே சசிதரன் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இக்குற்றத்துடன் தொடபுடைய கியூ பிரிவு போலீசை கைது செய்ய வேண்டும், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அனைத்து ஈழத்தமிழ் அகதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். அதையொட்டி நாளை தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பேரணி முற்றுகை நடத்தவுள்ளோம் ” என்று கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களை போலீசு கைது செய்து மண்டபத்தில் அடைத்துள்ளது.

அருகில் உள்ள வியாபாரிகள் பொதுமக்கள் இப்பிரச்சினைக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி