privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காசூரிய மின்சக்தியிலும் சுயசார்பை அழிக்கும் அமெரிக்கா !

சூரிய மின்சக்தியிலும் சுயசார்பை அழிக்கும் அமெரிக்கா !

-

புவி வெப்பமடைதலைத் தடுப்பதற்கு, மரபு சாராத, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளங்களின் மூலம், தூய்மையான மின்சாரம் தயாரிக்கப்பட வேண்டும் என்று சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதில் முன்னணியில் உள்ள ஏகாதிபத்தியங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன. தூய்மையான மின்சாரம் என்ற பெயரில்தான் அமெரிக்கா தனது காலாவதியான அணு உலைகளை நம் தலையில் கட்ட முயற்சிக்கிறது.

அணு மின்சக்தியில் மட்டுமின்றி, சூரிய ஒளி மின்திட்டங்களிலும் சுயசார்பு நிலையை எட்டவிடாமல், காலாவதியான தங்களது தொழில் நுட்பத்தைத்தான் இந்தியா வாங்க வேண்டும் என அமெரிக்க அரசு நிர்ப்பந்தித்து வருகிறது. உள்நாட்டு சூரிய மின் கருவித் தயாரிப்பாளர்களுக்கு இந்திய அரசு முன்னுரிமை அளிப்பதாகவும், இது காட் ஒப்பந்தத்துக்கு எதிரானது என்றும் கூறி, இந்தியாவுக்கு எதிராக உலக வர்த்தகக் கழகத்தில் அமெரிக்க அரசு வழக்கும் தொடுத்திருக்கிறது.

சநாந்த் மின்சக்தி நிலையம்
குஜராத்தில் சர்தார் சரோவர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சநாந்த் கால்வாயின் மேல்பகுதியில் அமெரிக்க நிதியுதவியோடு அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தி நிலையம்.

2022-ஆம் ஆண்டிற்குள் 22 ஆயிரம் மெகாவாட் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்பது மத்திய அரசு நிர்ணயித்திருக்கும் இலக்கு. கடந்த 6 மாதங்களில், ஐந்து மாநிலங்களில் மட்டும் 6 ஆயிரம் மெகாவாட் அளவிற்குப் புதிய சூரிய ஒளி மின்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழக அரசு மட்டும் மூன்றே ஆண்டுகளில் 3 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செயப் போவதாக அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் அறிவிக்கப்படுகின்ற இந்த சூரிய மின்சக்தித் திட்டங்கள் சுயசார்பானவையா என்றால், இல்லை. ஜவஹர்லால் நேரு தேசிய சூரியசக்தி மின்சாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் நிறுவப்பட்டிருக்கும் சூரிய மின்சக்தி நிலையங்களில் 60 சதவீத நிலையங்கள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கருவிகளை நம்பியே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, சூரிய மின்சக்தி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மாநிலம் என்று கூறப்படும் குஜராத் முழுவதும் அமெரிக்க இறக்குமதியை நம்பியே இருக்கிறது. குறிப்பாக ஆசியாவிலேயே மிகப் பெரியதென்று கூறப்படும் 600 மெகாவாட் சூரிய ஒளிப் பூங்காவை சன் எடிசன் என்ற அமெரிக்க நிறுவனம்தான் குஜராத்தில் நிறுவி இயக்குகிறது.

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் போட்டோ வோல்டாயிக் சோலார் செல்களில் இரண்டு வகை; உண்டு. ஒன்று, கிரிஸ்டலைன் செல்கள்; இரண்டாவது வகை, தின்-பிலிம் செல்கள். கிரிஸ்டலைன் செல்கள் எனப்படுவதே நவீன தொழில் நுட்பம். இதில் உலகிலேயே சீனா முன்னிலை வகிக்கிறது. தின்-பிலிம் என்பது உற்பத்தி திறன் குறைந்த தொழில்நுட்பம்; அதன் ஆயுளும் குறைவு. அமெரிக்க கம்பெனிகள் இதையே உற்பத்தி செய்கின்றன.

சூரிய மின்சக்தி திட்டத்தின் முதல் கட்டத்தை 2011-இல் அறிவித்த மத்திய அரசு, கிரிஸ்டலைன் செல்களை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்திருந்தது. இந்தக் கட்டுப்பாடு சீன இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. தின்-பிலிம் செல்கள் என்ற அமெரிக்க தொழில்நுட்பத்தின் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. அமெரிக்க இறக்குமதிக்கு வழிசெய்யும் வகையில் அது பற்றி வேண்டுமென்றே குறிப்பிடாமல் விடப்பட்டிருந்தது.

இத்தகைய சாதகமான நிலைமையிலும்கூட, சீனத் தயாரிப்புகளையும், இந்திய சூரிய ஒளி மின்கருவிகளையும் நேருக்கு நேர் போட்டியில் சந்திக்கும் ஆற்றல் அமெரிக்க முதலாளிகளுக்கு இல்லை. இதற்காக அமெரிக்காவின் எக்ஸ்போர்ட்-இம்போர்ட் வங்கி மற்றும் ஓவர்சீஸ் பிரைவேட் இன்வெஸ்ட்மென்ட் வங்கி ஆகிய இரண்டு வங்கிகளையும் அமெரிக்க அரசு களமிறக்கியது.

அமெரிக்கத் தயாரிப்புகளை வாங்குபவர்களுக்கு 3% ஆண்டு வட்டியில் முழுத்தொகையும் கடனாகத் தரப்படுவதுடன், கடனைத் திருப்பிச் செலுத்தும் தவணைக்காலமும் 18 ஆண்டுகள் என்று கூறி மின் கருவிகள் வாங்குவோர் அனைவரையும் அமெரிக்க நிறுவனங்கள் கவர்ந்திழுத்தன. அதே நேரத்தில் இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட சோலார் செல்களை வாங்குவற்கான கடனுக்கு இந்திய வங்கிகள் விதிக்கும் வட்டியோ 14% ஆக இருந்தது. தவணைக்காலமும் குறைவு.

மேற்படி அமெரிக்க வங்கிகளால் மட்டும் எப்படி இத்தனை குறைந்த வட்டிக்குக் கடன் தர இயலுகிறது என்று துருவி ஆராய்ந்த அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் என்ற தில்லியைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனம், அமெரிக்காவின் கீழ்த்தரமான மோசடியை வெளிக்கொணர்ந்துள்ளது.

13-solar-3இவ்விரு வங்கிகளும் தங்களுடைய சொந்தப் பணத்தைக் கடனாகக் கொடுக்கவில்லை, மாறாக, ஐ.நா.வின் ‘பாஸ்ட்-பார்வர்டு’ நிதியை இதற்காக இந்த வங்கிகள் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் நடந்த ஐ.நா.வின் உலக தட்பவெட்ப மாற்றங்கள் குறித்த உச்சி மாநாடு, 2011-12 ஆண்டுகளில் ஏழை நாடுகளில் மாற்று எரிசக்தித் துறையின் வளர்ச்சிக்காகச் செலவிட 3 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்களை ஒதுக்கியது.

இந்த நிதியையே தங்களது வங்கியின் கடன்கள் என்ற பெயரில் வழங்கியது மட்டுமன்றி, கடன் வேண்டுமென்றால், குறிப்பிட்ட சில அமெரிக்க நிறுவனங்களின் சோலார் செல்களை வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தி, காலாவதியான அமெரிக்கத் தொழில்நுட்பத்தை இந்திய வாடிக்கையாளர்களின் தலையில் கட்டியதுடன், ஏழை நாடுகளின் மாற்று எரிசக்தி வளர்ச்சிக்காக என்ற பெயரில் ஒதுக்கப்பட்ட நிதியை அமெரிக்க கம்பெனிகள் திருடித் தின்றிருக்கின்றன.

தற்போது இந்த உண்மைகள் எல்லாம் வெளியே வந்து சந்தி சிரித்து விட்டன. சூரிய சக்தி மின்கருவிகளைத் தயாரிக்கும் பெல் நிறுவனம், டாடா உள்ளிட்ட தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களால் அமெரிக்காவின் போட்டியைச் சமாளிக்க முடியவில்லை. பலர் முற்றிலுமாகவே தமது தொழிலை இழுத்து மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதால் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். இதன் காரணமாகத் தேசிய சூரிய மின்சக்தித் திட்டத்தின் இரண்டாவது கட்ட அறிவிப்பை 2012-இல் வெளியிட்ட போது, தின்-பிலிம் செல் தொழில்நுட்பத்துக்கும் சேர்த்துக் கட்டுப்பாட்டை அறிவித்தது இந்திய அரசு.

இந்தியாவைப் போன்றே கனடா, பிரான்ஸ், மலேசியா, துருக்கி போன்ற நாடுகள் சோலார் செல் இறக்குமதிக்குப் பல்வேறு தடைகளைப் போட்டுள்ளன. அவ்வளவு ஏன், சீனா தனது நாட்டு சோலார் உற்பத்தியாளர்களுக்கு அதிகமாக மானியம் வழங்குகிறது என்று கூறி சீன இறக்குமதிகள் மீது கடுமையாக வரி விதித்திருக்கிறது, அமெரிக்கா.

இருப்பினும், இந்திய அரசு தனது உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஒரு தலைப்பட்சமான முடிவை எடுத்திருப்பதாகவும், இச்செயல் காட் ஒப்பந்த விதிகளை மீறுகிறது என்றும் கூறி உலக வர்த்தகக் கழகத்தில் இந்தியாவிற்கு எதிரானதொரு வழக்கை தொடுத்திருக்கிறது, அமெரிக்கா.

சூரிய மின்சக்தி என்பது எதிர்காலத்தின் மிக முக்கியமான ஆற்றல் மூலம். இத்தொழில் நுட்பத்தில் மேலாண்மை செலுத்த வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் இது தொடர்பான ஆராய்ச்சிக்குப் பல்லாயிரம் கோடிகளை ஏற்கெனவே செலவிட்டிருக்கின்றன. இருப்பினும், இத்துறையில் சமீபத்தில் நுழைந்த சீனா, கிரிஸ்டலைன் செல்களின் உலகச் சந்தையில் மேலாண்மை பெற்று விட்டது.

சீனாவுடன் இந்தத் துறையில் போட்டியிட்டு வெல்ல முடியாத அமெரிக்கா, ஏகாதிபத்தியத்துக்கே உரிய முறையில் கையை முறுக்கிக் காரியம் சாதிக்க முனைந்திருக்கிறது. அதுதான் உலக வர்த்தகக் கழகத்தில் அமெரிக்கா தொடுத்திருக்கும் வழக்கு. இந்திய அரசு இதற்கு எதிராக ஒருபுறம் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவிக்கும் சூரிய மின் உற்பத்தி திட்டங்கள் மத்திய அரசின் கொள்கை அறிவிப்பின் படி, பெல் போன்ற உள்நாட்டு நிறுவனங்களுக்குத் தரப்படுவதில்லை. அவற்றை வழக்கம் போல அமெரிக்க நிறுவனங்கள்தான் கைப்பற்றி வருகின்றன. தாமிரவருணித் தண்ணீரை புட்டியில் பிடித்துத் தருவதற்கே “கோக்” கின் தொழில்நுட்பம் தேவைப்படும்போது, சூரிய வெப்பத்தை மின்சாரமாக்கித் தருவதற்கு அமெரிக்க தொழில்நுட்பம் தேவைப்படுவதில் வியப்பென்ன இருக்கிறது?

– தனபால்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________

  1. கேக்கறவன் கேனப்பயலா இருந்தா கேப்பயில நெய் வடியுதும்பீங்களே.. thin film பழைய டெக்னாலஜியா?? அதோட efficiency கம்மியா?? ‘எந்த காலேஜ்ல ராமன் சிவில் இஞ்சினியரிங் படிச்சான்?’ கணக்கா ‘எந்த காலேஜ்ல solar technolgy படிச்சீங்க???’ இந்த சுட்டிய க்ளிக்குங்க.. உண்மை தெரியும்.. http://electronicdesign.com/power-sources/what-s-difference-between-thin-film-and-crystalline-silicon-solar-panels

  2. அமெரிக்காகாரனே சொல்லுற மாதிரி இப்போ most commonly used technolgy even in US is crystalline. Thin film is the newer version. உங்க லாஜிக் படி பழைய டெக்னாலஜிய நம்ம தலையில கட்டணும்னா cryatalline cells தாண் குடுத்துறுக்கணும். ஏதோ சீனால இருக்குங்கறதுனால அது advanced technolgy ஆகிடுமா? போற போக்க பாத்தா நாளைக்கே இப்புடி ஒரு பதிவு போடுவீங்க போல – அமெரிக்காகாரன் மலம் கப்பு அடிக்கும்.. சீனாக்காரன் மலம் வாசனை அடிக்கும்னு 😀

  3. நன்றி மனிதன் அவர்களே.

    Crystalline-Silicon Solar Panels:
    1.முந்திய தொழில் நுற்பம்
    2.பரவலாக உபயோகத்தில் உள்ளது
    3.சீன முதல்கொண்டு அநேக நாடுகள் தயாரிக்கின்றன.
    4.எடை அதிகம்
    5.விலை அதிகம்
    6.உறுதியானது
    7.மின் உற்பத்தி ஆற்றல் அதிகம்.
    Thin-Film Solar Panels:
    1.நவீன தொழில் நுற்பம்
    2.அமெரிக்காவை சார்ந்து இருக்கா வேண்டும்.
    3.பரவலாக உபயோகத்தில் இல்லை-புதிது
    4.எடை குறைவு
    5.விலை குறைவு
    6.உறுதியற்றது
    7.மின் உற்பத்தி ஆற்றல் குறைவு.

    இரண்டையும் ஒப்பிட்டு நோக்கும் போது:
    Crystalline-Silicon Solar Panels-வணிக மின் உற்பத்தி முறைக்கு ஏற்றது.
    Thin-Film Solar Panels-சொந்த உபயோகத்துக்கு ஏற்றது.

    குஜராத்தில் வணிக மின் உற்பத்திக்கு வாங்கினால் Crystalline-Silicon Solar Panels வாங்கவேண்டும். விலை குறைவாக தரும் சீனாவிடம் இருந்து வாங்க வேண்டும்.

    ஆனால் அரசியல் காரணங்களால் அமெரிக்காவிடம் இருந்து Thin-Film Solar Panels வாங்கப்பட்டுள்ளது.

    மோடி, ஈழத்தில் சீன ஊடுருவல், அமெரிக்க கம்பனிகளின் நேர்மையற்ற வியாபார உத்தி இதெல்லாம் சேர்ந்து அமெரிக்க Thin-Film Solar Panels விற்பனை ஆகி உள்ளது. ஊழல் இருக்குமா என்றால் சாத்தியக்கூறு குறைவே-ஏன் என்றால் சீனாவும் கையூட்டு கொடுப்பதில் கில்லாடி. செல் பேசி தொழில் நுற்ப விற்பனையில் கையூட்டு கொடுத்தே ஐரோப்பிய நாடுகளின் வியாபாரத்தை சீனா காலி செய்து விட்டது.இந்தியாவில் சீனாவின் கருவிகள் தான் உள்ளது. கையூட்டு நிறைய. அதை விட ஆபத்து வேவுபார்க்கும் விஷயம்.

    உலக சந்தையில் பொருளை விற்கும் போது, எல்லா நாடுகளும் நேர்மையின்றியே நடந்து கொள்கின்றன. சீனாவும் விதிவிலக்கில்லை. Good Manufacturing Practice படி பார்த்தால் சீன பொருள்களை யாரும் வாங்க மாட்டார்கள்.

    எனவே மனிதன் அவர்களே, எல்லோர் மலமும் கப்பு அடிக்கும். நம்முடையது கொஞ்சம் கம்மியாக.

  4. மிக அவசரமாக கட்டுரை எழுதப்பட்டுள்ளது. எழுதப்படும் பொருளுக்கு பொருத்தமான ஆய்வு செய்யப்படவில்லை. புதிய ஜனநாயகத்தின் நீண்ட நாள் வாசகன், அதன் அரசியலுக்கு முழு ஆதரவாளன் நான். முதல்முறையாக புஜ கட்டுரை மோசமாக சறுக்கியுள்ளது வருத்தமளிக்கிறது

    பொதுவாகவே இந்தியாவின் சுயசார்பை ஒழிக்க அமெரிக்க முயல்கிறது. சூரிய மின் சக்தி துறையிலும் இது நடக்கிறது. உதாரணம், இந்திய தயாரிப்பான சூரிய மின் உற்பத்தி கருவிகளுக்கு மட்டுமே மத்திய மாநில அரசு மானியங்கள் வழங்கப்படும் என்ற அரசின் திட்டத்தை அமெரிக்கா சர்வதேச அரங்குகளில் எதிர்த்து வருவது. இது சார்ந்த அமெரிக்காவின் உள்ளடி அரசியல் என்னவென்பதை கட்டுரை கிட்டே கூட நெருங்கவில்லை. தின் ப்லிம் பற்றிய மிக தவறான ட்கொழில்நுட்ப கண்ணோட்டத்தை அமெரிக்க பற்றிய மிக்ச் சரியான அரசியல் கண்ணோட்டத்திற்கு கட்டுரை பொருத்த முயன்று தோற்றுள்ளது.

    tamil typing is hanging my system so more details in simple english.

    Crystaline are old and proven technology
    Thin Film are new and future/promising technology

    About Suitablity for Small Scale and Large Scale:
    Crystaline are more suitable for Small scale applications than Thin Film.

    Reason: Vmpp of Crstaline is 12V/24V range per Panel which is easier to match Vmpp/Voc(open circuit and Maximum power point voltages) of Inverter-battery setup.

    Thin Film will have Vmpp in the range of 48V/97V etc. This makes them need more electronics to use these panels in below 3 KW systems.

    Crystaline produce More current than thin film so transmission loss will be more if it is used for Bigger power stations (mega watt).

    Thin Film Voltage rating is more hence String connections, Power loss is less compared to Crystaline – suitable for Large scale. one disadvantage of Thin Film is: it needs more Space than crystalline to produce same power(this also has one advantage over Crystaline).

    About Efficiency:

    our general understanding of Efficiency and efficiency used in Solar panels are different. Efficiency in Solar panel denotes percentage of electricity converted from Sun that is received in per Sq Meter of the Panel. Commercially available crystaline panel have efficiency of 15 to 18% (Meaning if 100 units of electricity fells in one sq meter of a panel then the panel will convert 18 of that in to electricity for our use). Commercialy available Thin Film efficiency is 11 to 14%.

    But efficiency is not the one decides which panel is good and future proof.

    Reasons:
    1/ Thin Film needs 1.5 times more space than crystaline panel to produce the same power. Efficiency here is Space issue.

    2/ Space issue also not a problem if we compare one year power production of Thin Film and Crystaline. Thin Film produces atleast 30% more power than crystaline in a year. This compensates the need for extra space to thin film.
    Reasons:
    a/ Thin Film works well under shadow. Its high temperature performance is excellent whereas Crystaline performes bad under High temprature (for india like hot countries Thin Film is more suitable).
    b/ Weather stability and related degradation is low in thin film. Durability is guranteed (only thin film companies are giving 10 years product warranty).
    c/ If Thin film works 8 to 7 hours during day time, Crystaline works 6 to 5 hours. All these makes yearly production Thin Film more than Crystaline.

    Other points:
    1/ Thin film is pollution free (japan and Germany). Their cost of production is very less. so they are the true green technology (crystaline needs 7 to 10 years to pay back the power and pollution spent on manufacturing it whereas Thin Film pays back in 3 Years and pollution free).

    2/ India’s Vikram Poly Crystaline panels are world’s 4th most efficient panels(very few aware this).

    3/ There is almost no Indian made panels (exception may be tata and Mocer bere). All are importing Crystaline from China, USA , Europe and assempling here. To be precise there is no Indigenous Solar technology available (like in wind energy). So the politics of america is not happening in between Crystaline Vs Thin film (as the Article tries to show). In that aspect American big shots are Crystaline manufacturers(GE put on hold its biggest ever Thin film factory due to bad market condition for Thin Film). First solar is the only one exception in Thin Film who is competing against big shots of Crystaline companies in America.

    4/ In solar technology like in other area China is dominating and in India also it is China that has major share hold of Crystaline Import. Obvious America is angry against this. But for Us it is of not much difference.

    5/ Thin Film panel Technology leaders are Germany, Japan not America.

    I am personnaly in favor of Thin Films as the only disadvantage is efficiency which will increase as more research is going on. Even there are Indian manufacturers doing research and Manufacturing Thin Film as it is independent Compared to Crystaline (crystaline has dependancy to import crystals from China, USA etc).

  5. Boss, China is the first Enemy of India, I could understand that you the Complete supporter and Spy of China. India voda saapata saptukitu china vuku Jalra adikara neeyum, unnoda Website um.

    Shiva

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க