privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விபள்ளிகளின் இறைவழிபாட்டை எதிர்த்துப் போராடும் சஞ்செய் சால்வே !

பள்ளிகளின் இறைவழிபாட்டை எதிர்த்துப் போராடும் சஞ்செய் சால்வே !

-

காராஷ்டிர மாநிலம் நாசிக் நகரத்தில் இருக்கிறது சாவித்திரி பாய் பூலே சீனியர் செகண்டரி பள்ளி. இங்கு ஆங்கில உதவி ஆசிரியராக பணியாற்றுகிறார் சஞ்சய் சால்வே (வயது 41). அவரது பள்ளியில் நடக்கும் இந்து மத வழிபாட்டில் கைகூப்பி நிற்காத காரணத்துக்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு 2009 முதல் அவருக்கு பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. உடன் வேலை பார்த்த பிற ஆசிரியர்களும் இந்த பிரச்சினைக்கு பிறகு அவருடனான உறவைத் துண்டித்துக் கொண்டனர்.

சஞ்செய் சால்வே
சஞ்செய் சால்வே

இதனைத் தொடர்ந்து அரசிடம் நிதி உதவி பெற்று நடத்தப்படும் கல்வி நிலையங்களில் திணிக்கப்படும் மத வழிபாடுகளை எதிர்த்து நீதிமன்றம், உயர்கல்வி அதிகாரிகள் என பலரிடமும் தொடர்ந்து 6 ஆண்டுகளாக போராடி வருகிறார் சஞ்செய் சால்வே. சமீபத்தில் கொல்லப்பட்ட பகுத்தறிவாளர் தபோல்கரும் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் என்பது வாசகர்கள் அறிந்ததே.

சுமார் 1,600 மாணவ மாணவிகள் படிக்கும் நாசிக் நகரப் பள்ளியில் நடக்கும் காலை நேர மத வழிபாட்டில் புறங்கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காரணத்துக்காக, அதனை ஒழுங்கீன நடவடிக்கை என ஜூன் 2007-ல் பிரச்சினையை கிளப்புகிறது பள்ளி நிர்வாகம். ” நாத்திகனான நான் கடவுளை எப்படி கைகூப்பி தொழ முடியும் ?” என்று கேள்வியெழுப்புகிறார் சால்வே. தலைமையாசிரியர் மதூக்கர் பச்சாவ் இதற்கு எழுத்துப்பூர்வ விளக்கம் கேட்கிறார். “நான் ஒரு நாத்திகன். நான் நம்பாத ஒரு மத வழிபாட்டிலும் கலந்துகொள்ள இயலாது. கலந்துகொள்ள வலியுறுத்துவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது” என்று பதிலளிக்கிறார் சால்வே.

“இந்த ஒழுங்கீனத்தை நாங்கள் கவனிக்க தவறியிருந்தால் மற்றவர்களிடமும் இது பரவியிருக்கும். இந்த ஒழுங்கீன நடவடிக்கையின் பேரில் அவரது வேலைகளில் திருப்தியில்லை என முடிவு செய்தோம். எனவே அவருக்கு ஊதிய உயர்வு மறுக்கப்பட்டது” என்று கூறுகிறார் தலைமையாசிரியர். 2008-09-ம் ஆண்டுக்கான பணி ரகசிய குறிப்பேட்டில் அவரது வேலையில் திருப்தியில்லை என பள்ளி நிர்வாகம் குறிப்பிட்டு விடவே, பதவி உயர்வும், ஊதிய உயர்வும் அவருக்கு தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது.

பல முறை அரசு அதிகாரிகளிடம் இதுபற்றி முறையிட்டும் அவருக்கு நீதி கிடைக்கவில்லை. 2010-ல் மகாராஷ்டிர மாநில உயர்நீதி மன்றம் சால்வேயின் புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு நாசிக் மாவட்ட கல்வியதிகாரிகளுக்கு உத்திரவிட்டது. அவர்களும் இரண்டாண்டுகளாக பல்வேறு முறைகளில் பள்ளி நிர்வாகத்திடம் சொல்லிப் பார்த்தார்கள். நிர்வாகமோ கண்டு கொள்ளவேயில்லை. அவர்கள் அனுப்பிய வக்கீல் நோட்டீசையும் கண்டு கொள்ளவில்லை. அரசின் நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவோம் என்ற அவர்களது மிரட்டலை எல்லாம் பள்ளி நிர்வாகம் சட்டை பண்ணவேயில்லை. ஆனால் கல்வித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் மிரட்டலுடன் மாத்திரம் நிறுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் மீண்டும் உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளார் சஞ்சய் சால்வே. பிரிவு 45(9) குறிப்பிடுவது போல பள்ளிகள் தேசிய கீதம் தவிர்த்து பிற வழிபாட்டு பாடல்களை பாடக் கூடாது என வலியுறுத்துகிறார். “சால்வே என்னிடம் அனுமதி கேட்டிருந்தால் நானே வழிபாட்டில் கலந்து கொள்வதில் இருந்து விடுப்பு தந்திருப்பேனே” என்கிறார் தலைமையாசிரியர். “இதற்காகவெல்லாம் ஏன் அனுமதி வாங்க வேண்டும். கடைசி வரை போராடுவேன். பணம் மட்டுமல்ல, என்னுடைய சுயமும் இதில் அடங்கியுள்ளது” என்கிறார் சால்வே.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பள்ளிக் கல்வியை கூட முடிக்காத பெற்றோரின் மகனாகப் பிறந்த சஞ்சய் சால்வே 1996 முதல் இந்தப் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். புத்தரின் கருத்துக்களில் நம்பிக்கையுடைய சால்வே “பள்ளி மாணவர்களிடம் இன்னமும் தேசிய கீதம் தான் மதிக்கத்தக்கதாக திகழ்கிறது” என்றும் குறிப்பிடுகிறார். இந்து மத பிரார்த்தனையை தவிர்த்துவிட்டு தேசிய கீதத்தை மட்டுமே பாடவேண்டும்  என்று இவர் முன்வைத்திருப்பதால் மராட்டிய சங்பரிவார கும்பல்கள் எரிச்சலடைந்திருப்பது அதிசயமல்ல. சில உறவினர்கள் வழக்கை திரும்ப பெறுமாறு வலியுறுத்தினாலும், வீட்டில் உள்ளவர்கள் ஆதரவாகத்தான் இருக்கிறார்கள். கடந்த மாதம் பகுத்தறிவாளரும், சமூக போராளியுமான தபோல்கர் படுகொலை செய்யப்பட்ட பிறகு உறவினர்கள் இவரை எச்சரித்த வண்ணமே உள்ளனர்.

19-ம் நூற்றாண்டு மராட்டியத்தில் புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதியும், முதல் ஆசிரியையுமான சாவித்திரி பாய் பூலேவின் பெயரில் அமைந்த இப்பள்ளியில் இச்சம்பவம் நடந்திருப்பது ஒரு முரண் தான். கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரின் திடலில் அல்லேலுயா கூட்டங்கள் வீரமணியால் அனுமதிக்கப்படுவதைப் போலத்தான் இதுவும். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த சாவித்திரிபாய் பூலேவின் கணவர் புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ் பூலே ஆவார்.

ஜோதிராவ் பூலே
ஜோதிராவ் பூலே

திருமணத்திற்கு பிறகுதான் படிக்க ஆரம்பித்த சாவித்திரியை பள்ளி சென்று விட்டு வரும் வழியில் பிற ஆதிக்க சாதியினர் கல்லால் அடிப்பார்களாம். கேவலமாக திட்டுவார்களாம். இதையெல்லாம் சகித்துக் கொண்டுதான் படித்து முடித்து பெண் கல்விக்கு தனியாக பள்ளிகளெல்லாம் ஆரம்பித்தார் சாவித்திரி. கிணறுகளில் தண்ணீர் சேந்த அனுமதிக்கப்படாத அக்காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனியாக கிணறு வெட்டினர் இத்தம்பதிகள். ஆணாதிக்க எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, பெண் கல்வி, விதவை மறுமணம் என 19ம் நூற்றாண்டின் மராட்டிய மாநில சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னணியாளர்களாக இத்தம்பதியினர் விளங்கினர். 1860களில் ‘உயர்’சாதி விதவைப் பெண்களுக்கு மொட்டையடிக்க மாட்டோம் என்ற இயக்கத்தை நாவிதர்கள் சங்கம் மூலமாக பம்பாய் மற்றும் புனே நகரங்களில் நடத்திக் காட்டியவர்கள். இப்பேர்ப்பட்ட சமூக சீர்திருத்தவாதிகளின் பெயரில் அமைந்த பள்ளியில்தான் சஞ்செய் சால்வே எனும் தாழ்த்தப்பட்டவருக்கு மதத்தின் பெயரில் ஒரு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

பார்ப்பனியத்திற்கு எதிராக பூலே விழிப்புணர்வு ஊட்டிய சூத்திர சாதிகள் இன்று இந்துமதவெறியின் செல்வாக்கில் உள்ளன என்பதற்கு இந்த மாநில கல்வித்துறை மற்றும் பள்ளிகள் மூலம் புரிந்து கொள்ளலாம்.

வரும் 6-ம் தேதி உயர்நீதி மன்றத்தில் இவரது வழக்கு விசாரணைக்கு வருகிறது. சால்வே முன்வைத்துள்ள அரசியலமைப்பு சட்டம் 28(3) ஆனது, கல்வி நிறுவனங்களில் நடக்கும் மத விழாக்களில் எவரையும் கலந்துகொள்ள சொல்லி கட்டாயப்படுத்த கூடாது என்றும், சிறுவர் எனில் பெற்றோரின் சம்மதம் அவசியம் என்றும் கூறுகிறது.

பெரும்பாலான இந்திய மொழிகளின் பாடப் புத்தகங்களில் கூட மதரீதியான பாடல்கள் பல இடம்பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக இந்து மதம் சார்ந்த பாடங்கள்தான் அதிக அளவில் இருக்கின்றன. அதே நேரத்தில் அந்த பாடப் புத்தகங்களில் நாத்திகம் பற்றிய சிறு குறிப்பு கூட இருப்பதில்லை. பாஜக ஆட்சியில் பாடநூல்களை தயாரிக்கையில் வரலாற்றையே திரிக்குமளவுக்கு மாறி இருந்தது. பல்கலைக்கழகத்திலேயே பார்ப்பனப் புரட்டான ஜோசியத்தை பாடத் திட்டமாக கொண்டு வந்தவர்கள்தான் இந்துமதவெறியர்கள்.

ஆரோக்கியமான கல்விக் கூடங்களில், பாடப் புத்தகங்களில் மதரீதியான பாடங்களை, பாடல்களை புறக்கணிக்கக் கோருவது தான் சரியானது. அதுதான் மதச்சார்பற்ற கல்விக்கு அடிப்படை. அதற்கு வெறும் சட்டப் போராட்டத்தின் மூலம் மட்டுமே தீர்வு காண முடியாது. ஏனெனில் இந்துமத வெறியர்கள் சட்டம், பாராளுமன்றத்தை கால் தூசுக்கு கூட மதிப்பதில்லை. சஞ்செய் சால்வேயின் போராட்டத்தை ஆதரிப்போம். இந்துமதவெறியை கருவறுப்போம்.

மேலும் படிக்க

  1. Also, there are Christian schools which are funded by government. They should also refrain from prayers, reading/teaching Bible etc. During school hours all schools (whether they are public funded or private) should not teach/involve children in any sort of religious activities including yoga, meditation, bajans, prayers, reading Bible/Koran/Gita or singing religious songs. If they want, only after school hours, in privatly funded schools, only with written permission from parents they can conduct religious activites. That too should not interfere in the child’s education (only 10 to 20 minutes)

  2. //சமீபத்தில் கொல்லப்பட்ட பகுத்தறிவாளர் தபோல்கரும் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் என்பது வாசகர்கள் அறிந்ததே//

    அதென்னப்பா இந்து மதத்தை எதிர்த்தா பகுத்தறிவாளர் காலேஜில சீட்டு கிடைத்துவிடும் போலவே…

  3. தமிழகத்தின் கிறித்துவப் பள்ளிகளில் கிறித்துவ போதனை இந்து மாணவர்களிடம் வலிந்து செய்யப்படுகிறது. கட்டாயமாக அவர்களைப் பள்ளி நிர்வாகம் தேவாலயங்களுக்கு அழைத்துச் சென்று தொழச் செய்கிறது. பள்ளி வளாகத்துக்குள்ளேயே இயேசு கிறித்துவின் சிலைகளைப் பெரிதாக நிறுவி வைக்கிறது. நாத்திகர்களாகிய நானும் என் மனைவியும் என் மகளைத் தெளிவான நாத்திகப் பார்வையில் வளர்த்து வருகிறோம். ஆனால் அவள் படிக்கும் கிறித்துவப் பள்ளியில் அளவுக்கு அதிகமாக கிறித்துவப் பிரார்த்தனைகளைத் திணிக்கிறார்கள். காலை பள்ளித் திடலில் பிரார்த்தனை, காலை வகுப்பறை சென்றதும் பிரார்த்தனை, மதியம் உணவு பிரார்த்தனை, மாலை பள்ளி முடியும் போது பிரார்த்தனை. நாள் முழுதும் இயேசு பஜனைதான். ஆனால் இதெல்லாம் திராவிடக் கட்சிகளுக்கும் உங்களுக்கும் தெரிவதில்லையே, ஏன்? இந்து, கிறித்துவம், இசுலாம், பவுத்தம் எதுவானலும் பள்ளிகள் மதத் திணிப்பு கூடாது எனத்தானே நீங்கள் கூற வேண்டும். இந்து மதத்தை மட்டும் தேர்ந்தெடுத்து தாக்குவது ஏன்?

    • sir, I am a Christian. But I always oppose these type of religious teachings in school. whatever may be the religion, it is wrong. I suggest you to file a case about the school. it is everyone’s tax money which the government is paying to the teachers as salary. so no religion has place in any school. there is no need for us to wait for communists or DK to take action.

  4. இந்த பிரார்த்தனை விவகாரம்,பள்ளிகளோடு நிற்பதில்லை,தொழிற்சாலைகள்,அரசு

    நிறுவனங்கள்,அரசு விழாக்கள்,அரசு திட்டங்கள் அடிக்கல் நாட்டல்,முதலிய அனத்து

    இடங்களிலும் தொடர்கிறது. மேலும் இதில் நாட்டமில்லாதவர்கள்,எதிர்பவர்கள் இவர்களை

    தனிமைப்படுத்துகிறார்கள்,தொல்லைதருகிறார்கள்.

    ”வரும் 6-ம் தேதி உயர்நீதி மன்றத்தில் இவரது வழக்கு விசாரணைக்கு வருகிறது. சால்வே

    முன்வைத்துள்ள அரசியலமைப்பு சட்டம் 28(3) ஆனது, கல்வி நிறுவனங்களில் நடக்கும் மத

    விழாக்களில் எவரையும் கலந்துகொள்ள சொல்லி கட்டாயப்படுத்த கூடாது என்றும், சிறுவர்

    எனில் பெற்றோரின் சம்மதம் அவசியம் என்றும் கூறுகிறது.”

    எனவே, சால்வே தொடுத்துள்ள வழக்கு வெற்றி பெறுவது ஒருபுறம் அவசியம்

    இருந்தாலும்,மக்கள் தெருவில் இறங்கி போராடாமல் முடியாது. போராட்டம் இல்லை எனில்

    வாழ்க்கை இல்லை.எனவே, ”போராடு வெற்றி பெறு”.

  5. // there is no need for us to wait for communists or DK to take action.//

    DK action..?! It is already there.. :

    // கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரின் திடலில் அல்லேலுயா கூட்டங்கள் வீரமணியால் அனுமதிக்கப்படுவதைப் போலத்தான் இதுவும். //

  6. // 1860களில் ‘உயர்’சாதி விதவைப் பெண்களுக்கு மொட்டையடிக்க மாட்டோம் என்ற இயக்கத்தை நாவிதர்கள் சங்கம் மூலமாக பம்பாய் மற்றும் புனே நகரங்களில் நடத்திக் காட்டியவர்கள். //

    உயர்சாதி இளம்விதவைகளுக்காகவும் சாதீய ஒடுக்குமுறைக்கு அஞ்சாமல் 19ம் நூற்றாண்டிலேயே போராடிய இவர்கள் நவீன இந்தியாவின் சிற்பிகள்..

    • Ambi,do you know that brahmins were benefited most by the movement of Periyar and others for encouraging remarriage by widows and against child marriage.Nowadays the number of young widows in brahmin community has come down.

  7. இந்தியாவில் மதசார்பின்மை என்பதே கேலிக்கூத்தான ஒன்றாக உள்ளது. அரசும் அரசாங்கமும் மதங்களை விட்டு விலகி இருப்பதையே மதசார்பின்மை எனலாம்.இந்த நாட்டிலோ தலைகீழாக உள்ளது.அரசு அலுவலகங்கள்,கல்வி நிறுவனங்கள் [அவை தனியார் நடத்துவனவே ஆனாலும்] அனைத்திலும் மத வழிபாடு தடை செய்யப்பட வேண்டும்.பல்வேறு மதங்களை பின்பற்றுவோர் மற்றும் கடவுள் மறுப்பாளர்களின் குழந்தைகள் அனைவரையும் ஒரு சேர குறிப்பிட்ட ஒரு மத வழிபாட்டை மட்டும் செய்ய சொல்வது நெறியற்ற செயல்.அது ஒரு மதவெறி நடவடிக்கையே ஆகும்.

    • so, we can eat pork in Saudi? why you need separate Islamic law in India instead of following the common law? Why you violate children’s rights by permenatly modifying their body (circumcision, ear piercing etc) in childhood without their consent?

      • என்னங்க இது.. திப்பு என்னவோ நீங்க சொல்றதயெல்லாம் மசூதிக்குள்ள உட்கார்ந்துக்கிட்டு பண்ற மாதிரியே சொல்றீங்க?

      • இந்து மத சகோதரர்கள் காது குத்தி கொள்வதும் இசுலாமியர்கள் ”சுன்னத்” செய்து கொள்வதும் சரியா தவறா என்ற வாதங்கள் ஒரு புறம் இருக்கட்டும்.அவர்கள் யாரும் பக்கத்து வீட்டு குழந்தைக்கு இதை செய்து விடவில்லை.ஆனால் பள்ளிகளில் பல்வேறு சமயங்களை சேர்ந்த மாணவர்களை,கடவுள் மறுப்பாளர்களின் குழந்தைகளை உங்கள் மத வழிபாட்டை செய்ய சொல்வது எப்படி நியாயமாகும்.இதற்கும் பன்றி கறிக்கும் என்ன தொடர்பு உள்ளது.அதுவும் சவுதியில் என்று வேறு கேள்வி.உங்கள் கனிவான கவனத்திற்கு ஒரு தகவல்.நான் ஒன்றும் சவூதி மன்னர் இல்லை.அதே போல் முசுலிம்கள் தங்களுடைய தனி நபர் சட்டங்களை தங்களுக்குள் கடைப் பிடிக்கிறார்கள்.வேறு சமூகத்தவரை கடைபிடிக்க சொல்லவில்லை.நீங்கள் ஏன் உங்கள் மத வழிபாட்டை மற்றவர்கள் செய்ய சொல்கிறீர்கள்.இதைதான் மதவெறி என்கிறேன்.

    • The minority have to give way to the whims of the majority,in most countries you dont get even this much freedom.

      As i repeat the minority should rememebr that they are after all,just a minority and nothing more.

      Nobody stops you from emigrating.

      Funny thing is this is the same Tipu who aggressively defended the wolf howling from loudspeakers now gets sensitive because of this.

      Azaan ll be the first thing to go if we want to disconnect public spheres from religious influence.

      I hope this time,Tipu wont give excuses like Toilet,different language,good morning,yoga etc etc.

      • \\The minority have to give way to the whims of the majority,in most countries you dont get even this much freedom.
        As i repeat the minority should rememebr that they are after all,just a minority and nothing more.

        Nobody stops you from emigrating.//

        இந்த மத வெறி ______டன் பேசி பயனில்லை.

  8. சால்வேயின் வாதம் வினோதமாக உள்ளது- தான் நம்பாத ஒரு மத வழிபாட்டைஉடைய பள்ளியில் பனியை ஏன் ஏற்றுகொள்ள்வேன்டூம்? தான நம்பும் வழிபாட்டைஉடைய பள்ளியில் சேர்ந்து அல்லவா நாத்திகம் பேச வேன்டும்.

          • Don’t do such time pass talk,

            A Hindu/Buddhist/Sikh constitutional republic is the only place where there ll be true secularism and trust me,if you had a chance to emigrate you would have done so already.

            Yours words dont smell of any common sense.

            • You talk about hinduism?
              the great religion which banned basic rights of eating beef?
              You talk about buddhism?
              the religion which is demolishing mosques in Sri Lanka?
              You talk about Shikism?
              the great people who want to violate even army uniform and security protocol by carrying knife?

              // trust me,if you had a chance to emigrate you would have done so already.//

              not once or twice. I have declined chance to migrate to US and Germany 6 times. And I know you won’t believe. I am saying this because I don’t think those nations are any better!

              • what basic rights of eating beef?

                Don’t give me your liberal fascism here,you cant wish to be a caveman.

                You commit the same mistake of screwing people saying my relative opinion is better than yours,

                If 80% of the people don’t want to eat beef,beef wont be eaten,simple as that.

                The points you mentioned are singular,irrelevant details and don’t do justice to the argument.

                • Hari.. Majority people’s wish can be satisfied only in certain things like electing government etc where no other better option is available… For an example if majority of INDIAN people believe that WORLD is FLAT becos vishnu rolled in like a Mat can we change science syllabus to support that ??… If the majority christains of the WORLD say all the other religions(including HINDUISM) in the world have to be made unlaefull can we do tat also ???

                • கரி. மாட்டுக்கறி அதுவும் பசு மாட்டுக்கறி மிகவும் சுவையாக இருக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. சாப்பிட்டுப் பாருங்களேன். பசு மாட்டை அறுக்கும் போது பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்துள்ளேன். கேரளாவில் ஒரு முறை நண்பர் வீட்டருகில் நடந்தது. கூரான கத்தியை வைத்து கழுத்தில் ஆழமாக ஒரே கிழி. 10 வினாடிகளில் உயிர் போய் விடும். காலை கொஞ்சம் உதைக்கும், பார்க்கப் பாவமாக இருந்தது. அதைப் பார்த்தால் முடியுமா. கறி தின்பதற்கு வேண்டுமே. ஏன் சொல்கிறேன் என்றால் வலியில்லாத உயிர்போக்கு அது. அதனால் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சாப்பிடலாம் வாருங்கள். (அந்த மாட்டின் கறியும் சுவையாக இருந்ததை சொல்லவும் வேண்டுமோ?)

      • அய்யா @இஸ்பீட் அவர்களே-நான் மகாராஷ்டிர மாநிலத்தில் 30 வருடஙகளாக உள்ளேன் – பதிவை கவனமாக படிக்கும்படி வேன்டுகிரேன். மகாராஷ்டிர மாநிலத்தில் அரசிடம் நிதி உதவி பெற்று நடத்தப்படும் கல்வி நிலையங்களில் உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அல்ல- தனியார் நிர்வாகத்தால் அமர்த்தபட்டு அரசு சம்பள விகிதம் பெருகின்ரனர்-

        • I am against religion in educational institute. If you run hotel, you are free to serve food. But not alcohol. Like wise, if you run a clothes store, you can sell any dress, but nor tiger skin. Similarly, in schools, they can’t teach religion. Though I am a Christian, I also oppose Christian pryaers in schools. Private schools should also take religious classes after taking written consent from parents/guardians and the person (if major). That too should happen after school hours.

          Not even single rupee of Government money should be used to support any sort of religious activities like hajj, Jerusalem tour, Manasarovar tour. No nonsense like boomi pooja should be performed by government. Government officies should not have photos/idols/icons/symbols of any religion. Government buses should not be subjected to ayutha pooja celebrations.

  9. What is the big deal with religion in Schools,I have been to a christian convent as well as an arya samaj school.

    Both had clear religious practices but it seemed to have changed nothing.

    My parents told me about Hinduism,school about Christianity,books and exposure about atheism/agnosticism.

    I choose whatever suits me,whats wrong with that?

    Why are the god-deniers/defeaters so bothered and insecure,your reactions are the same as what theistic parents feel when the kid gets exposed to agnostic/atheistic teachings.

    If your point of view is strong,it ll survive,if not get together and start a trust to have atheistic liberal schools.

    • First, why govenrment funded schools try to impose their religion on others? you are the one who is offended by Christians preaching in public places. But now you are saying that it is fine to do so in schools funded by govenrment. Many Hindu friends of mine don’t like Christian prayers in Catholic schools. I also know some Muslim friends who were offended by yoga classes in a much secular school (that school is run by a irreligious trust). So the point is whatever may be your opinion, don’t force it on others. Especially when you are using govenrment fund!

      • I am offended because they are aggressive,not because they do so.

        Like i said,i dont see this as a big problem,schools are a big way to promote religion.

        Like i said,mr.salve here should ask himself to be excused from the act,not trying to ban people from doing what they like.

        Again i repeat,85% Hindus wont give up their right to run their country as they wish to,few pseudos may agree with you but that’s about it.

        Muslims friends are offended by yoga classes,ask yourself to be excused from it.

        Dont do the suryanamaskar,big deal.

  10. The right guaranteed in the constitution is for all religions to be at peace with each other and not step onto each other’s shoes,the people run the government which again manages the will of the people,and here the proportion that wills one thing supersedes that which doesn’t.

    This is normal justice,happens everywhere.

    If you want to stop this,first ask the government to get out of Hindu temples and their wealth,if christians and muslims can independently manage the wealth of their religious institutions,then why not Hindus.

    If that’s not happening,then the government ll always be a proxy for Hindus as is a normal case.

  11. //If you want to stop this,first ask the government to get out of Hindu temples and their wealth,if christians and muslims can independently manage the wealth of their religious institutions,then why not Hindus.//

    I support this. Our tax money should not be wasted in managing hindu temples. Let hindus manage it themselves and fight over the rights themselves.

    Also please stop all religious references like boomi poojai etc by government. Our money is not for your cerimonies.

    remove all religious poems as memory poem in Tamil/English books.

  12. இது என்ன தமிழ் தளமா இல்லை ஆங்கில தளமா? தமிழுக்கு மாறுங்கள் திரு.அரிகுமார் / ஹிஸ்ஃபீட் அவர்களே!

  13. அப்ப இனிமே கிருஸ்துவ பள்ளிகளிலும், இஸ்லாமியக்கல்லூரியிலும் கூட இதையெல்லாம் தடை செய்ய வினவும் போராடும் என நம்பித்தொலைவோம்… 😀

  14. அய்யா @இஸ்பீட் அவர்களே-நான் மகாராஷ்டிர மாநிலத்தில் 30 வருடஙகளாக உள்ளேன் – பதிவை கவனமாக படிக்கும்படி வேன்டுகிரேன். மகாராஷ்டிர மாநிலத்தில் அரசிடம் நிதி உதவி பெற்று நடத்தப்படும் கல்வி நிலையங்களில் உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அல்ல- தனியார் நிர்வாகத்தால் அமர்த்தபட்டு அரசு சம்பள விகிதம் பெருகின்ரனர்-
    அது சரி – செக்குல்ரான நீஙகள் நாட்டை விட்டு எங்கே போவீர் ? இன்டியா தவிர அனைத்துநாடுகளும் மதசார்புள்ளவை- ஆஙகிலம் பேசும் உஙகளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை

Leave a Reply to @HisFeet பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க