privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாவங்கதேசம் : இசுலாமிய மதவெறியர் அப்துல் காதர் மொல்லா தூக்கிலடப்பட்டார் !

வங்கதேசம் : இசுலாமிய மதவெறியர் அப்துல் காதர் மொல்லா தூக்கிலடப்பட்டார் !

-

தவெறியும், மனிதர்கள் மீதான வெறுப்பும் சிந்தனையில் ஊறிய கிரிமினல்கள் எந்த எல்லைக்கும் போகத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் மீர்பூரின் கசாப்புக் கடைக்காரன் எனப்படும் அப்துல் காதர் மொல்லா. இந்து மத வெறிக் கும்பல்கள் குஜராத்தில் 2002-ம் ஆண்டு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை கொலை செய்தன, கூட்டம் கூட்டமாக அப்பாவி மக்களை குழியில் தள்ளி பெட்ரோல் ஊற்றி தீக்கிரையாக்கின, ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை அங்க அங்கமாக வெட்டிக் கொன்றன. இந்த மத வெறிக் கும்பல்களுக்கு சிறிதும் சளைக்காத ஒரு கும்பல் அதற்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய துணைக்கண்டத்தின் மறு முனையில் வங்க தேசத்தில் தனது வெறியாட்டத்தை நடத்தியது.

அப்துல் காதர் மொல்லா
அப்துல் காதர் மொல்லா

பாகிஸ்தானின் மாநிலமாக இருந்த அன்றைய கிழக்கு பாகிஸ்தானில், 1970-இல் நடந்த தேர்தலில் வங்கதேசத்துக்குக் கூடுதல் தன்னாட்சி உரிமை வேண்டுமென்ற மக்களின் கோரிக்கையை முன்வைத்துப் போட்டியிட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான அவாமி லீக் மிக அதிக இடங்களைக் கைப்பற்றியது. இப்பெரும்பான்மையைக் கொண்டு முஜிபுர் ரஹ்மான் ஒட்டுமொத்த (கிழக்கு, மேற்கு) பாகிஸ்தானுக்கும் பிரதமராகும் நிலை ஏற்பட்டது. இதை மேற்கு பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்துப் பரவின. பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளர்கள் வங்கதேச மக்கள் மீதும் அவாமி லீக் கட்சியினர் மீதும் மிகக்கொடிய இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்டனர்.

மதவெறிக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர்கள் ஒரு முஸ்லீம் தேசத்தை பிளப்பது இஸ்லாமுக்கு எதிரானது என்று பாகிஸ்தானிலிருந்து பிரிந்து போகும் வங்க தேச மக்களின்  போராட்டத்தை எதிர்த்தனர். தமது மாணவர்-இளைஞர் அமைப்புகளைக் கொண்டு ரசாக்கர்கள் எனப்படும் இரகசிய குண்டர்படைகளையும், அல்-பதார் எனும் கொலைக் குழுக்களைக் கட்டியமைத்து முன்னணியாளர்களையும் அறிவுத் துறையினரையும் கோரமாகக் கொன்றொழித்தனர். 1 கோடிக்கும் அதிகமான அகதிகள் இந்தியாவுக்குள் வந்தனர். 30 லட்சம் வங்க தேச மக்கள் கொல்லப்பட்டனர்.

வங்கதேசத்தின் ஃபரீத்பூரில் உள்ள அமீராபாத் கிராமத்தில் 1948-ம் ஆண்டு பிறந்த அப்துல் காதர் முல்லா, 1966-ம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் கல்லூரி கிளைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து டாக்கா பல்கலைக் கழகத்தில் மேல்நிலை பட்டப் படிப்பு படிக்கும் போதும் கல்லூரிக் கிளையின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். 1971 போராட்டத்தின் போது டாக்காவின் மீர்பூர் பகுதியில் படுகொலைகளை மொல்லா தலைமை வகித்து நடத்தினார். வங்க தேசத்துக்கு ஆதரவான ஒரு கவிஞரை தலையை வெட்டிக் கொன்றது, 11 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆக்கியது, 344 பேரை சுட்டுக் கொன்றது என்று இவரது கொலைச் செயல்களின் பட்டியல் நீள்கின்றன. இவை அனைத்தும், இஸ்லாமிய ஆட்சியை பாதுகாப்போம் என்ற அறைகூவலின் கீழ் நடத்தப்பட்டன.

இந்தியாவின் இராணுவத் தலையீட்டைத் தொடர்ந்து வங்க தேசம் பாகிஸ்தானிலிருந்து விடுதலை செய்யப்பட்டு தனி நாடாக அறிவிக்கப்பட்டது.

அடுத்தடுத்து வந்த ராணுவ, இஸ்லாமிய மத வெறி ஆட்சியாளர்களின் கீழ் தனது குற்றங்களுக்கு வழக்கை சந்திக்காமலும், தண்டனையிலிருந்து தப்பித்தும் 40 ஆண்டுகளாக ஜமாத் கட்சியின் தலைவராக உலா வந்தார் மொல்லா.

அப்துல் காதர் மொல்லா
நீதிமன்றத்தில் அப்துல் காதர் மொல்லா

2008 தேர்தலில் 1971 போர்க்குற்றங்களை விசாரித்து குற்றவாளிகளை தண்டிப்பதாக வாக்களித்து ஆட்சிக்கு வந்த அவாமி லீக் கட்சி 2010-ம் ஆண்டு  பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நீதிமன்றத்தை ஏற்படுத்தியது. மொல்லாவின் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு 2013 பிப்ரவரி மாதம் அவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மரண தண்டனையை தவிர்த்ததே தன்னுடைய சாதனை போல வெற்றிச் சின்னத்தை விரல்களில் காட்டிக் கொண்டு நீதிமன்றத்திலிருந்து வெளி வந்தார் முல்லா. அதைத் தொடர்ந்து  போர்க் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும், பயங்கரவாத மதவெறிக் கட்சியான ஜமாத் இ இஸ்லாமியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. டாக்காவின் ஷாபாக் சதுக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மேல் முறையீட்டில் வங்க தேச உச்சநீதி மன்றம், முல்லாவின் போர்க் குற்றங்களை உறுதி செய்து, அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை தூக்குத் தண்டனையாக உயர்த்தி தீர்ப்பளித்தது.

முல்லா நேற்று 12-ம் தேதி இரவு 10 மணி அளவில் தூக்கிலிடப்பட்டார். அவர் கொல்லப்படுவதற்கு முன்னர் அவரது குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.

டாக்காவில் நூற்றுக் கணக்கான மக்கள் கூடி மீர்பூரின் கசாப்புக் கடைக்காரன் மொல்லாவிற்கு வழங்கப்பட்ட தண்டனையை வரவேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜமாத்-இ-இஸ்லாமி மொல்லா கொல்லப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

வங்கதேசத்தின் பெரும்பான்மை இஸ்லாமிய மக்களின் இடைவிடாத போராட்டங்கள் இஸ்லாமின் பெயரால் அப்பாவி மக்களை கொன்று குவித்த கொலையாளிக்கு தண்டனை வழங்கியிருக்கின்றன. அது போன்று இலங்கையின் இனப் படுகொலையாளிகள் ராஜபக்சே கும்பலும், குஜராத்தில் முஸ்லீம் மக்களை படுகொலை செய்த நரேந்திர மோடி கும்பலும் மொல்லா சந்தித்த முடிவுக்கு கொண்டு போகப்படுவதை உழைக்கும் மக்களின் போராட்டங்களே சாதிக்க முடியும்.

மேலும் படிக்க