privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஉயர்நீதிமன்றத்தில் தமிழ் – வழக்குரைஞர் போராட்டம்

உயர்நீதிமன்றத்தில் தமிழ் – வழக்குரைஞர் போராட்டம்

-

யர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கக் கோரி மதுரை கிளை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களின் போராட்டம் நான்காவது நாளாக தீவிரமடைந்து வருகிறது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் என்கிற வழக்குரைஞர்களின் கோரிக்கையை ஏற்று 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டசபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டிய தமிழக அரசின் தீர்மானத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது. உச்சநீதிமன்றமோ வட்டார மொழிகளை எல்லாம் வழக்கு மொழியாக்க முடியாது என்று கூறி தீர்மானத்தை அங்கீகரிக்க மறுத்தது. தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியதோடு சரி, அதன் பிறகு தமிழை வழக்கு மொழியாக்க எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அதையடுத்து தமிழகத்தில் இக்கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்தன, 2010-ம் ஆண்டு முதல் இக்கோரிக்கைக்கான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

2010ம் ஆண்டு மதுரையிலும் சென்னையிலும் நடந்த போராட்டங்களின் விளைவாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் தமிழ் மொழியில் வழக்கை நடத்திக்கொள்ளலாம் என்று வாய்மொழியாக உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடியதற்காக நீதிபதி ஒரு வழக்குரைஞரின் வழக்கை தள்ளுபடி செய்து விட்டார். எனவே மீண்டும் போராட்டம் தீவிரமடைந்தது.

தாய்மொழியில் வழக்காடுவது இந்தியாவில் எங்கும் நடக்காத அதிசயம் அல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து-348 (2) இன்படி இந்தி பேசும் மாநிலங்களிலுள்ள பல உயர்நீதிமன்றங்களில் இந்தி மொழியில் தான் வழக்காடப்படுகின்றது. தாய்மொழியின் பெயரால் இந்தி மொழிக்கு கிடைத்திருக்கும் உரிமை மற்ற மொழிகளுக்கு மறுக்கப்படுவது அநீதியல்லவா?

தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வளாகத்தில் வழக்குரைஞர்கள் பகத்சிங், எழிலரசு இருவரும், தமிழக அரசின் சட்டசபை தீர்மானத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கவும், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மாற்றவும், கீழமை நீதிமன்றங்களில் ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்க வலியுறுத்தும் உயர்நீதிமன்ற சுற்றறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முதல் இவர்களோடு வழக்குரைஞர் மாரிமுத்தும் தன்னை இணைந்து கொண்டார்.

போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களும், தமிழகத்தின் பிற மாவட்டத்திலுள்ள வழக்குரைஞர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று மதுரை கிளை முன்பாக வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை என்கிற பெயர்ப்பலகையில் உள்ள மெட்ராஸ் என்கிற வார்த்தையை மறைத்து தமிழ்நாடு என்று எழுதி தொங்கவிட்டனர்.

ஆலயங்களில் தமிழை விடமறுக்கிறது பார்ப்பனிய கும்பல், நீதிமன்றத்தில் தமிழை விட மறுக்கிறது உச்சிக்குடுமி மன்றமும், மத்திய அரசும். இந்து, இந்தி, இந்தியா என்று இந்திய மக்களை பண்பாட்டு ரீதியாக ஒடுக்கும் பார்ப்பனிய இந்து தேசியத்தின் ஆதிக்கத்தினாலேயே இந்தியும் காலனியாக்கத்தின் எச்சமான ஆங்கிலமும் திணிக்கப்படுகின்றனது. ஆளும் வர்க்கத்திற்கெதிராக தாய்மொழியை வழக்கு மொழியாக்கு என்கிற வழக்குரைஞர்களின் ஜனநாயக கோரிக்கையை தமிழ் மக்கள் மட்டுமல்ல அனைத்து தேசிய இனத்தை சேர்ந்த உழைக்கும் மக்களும் ஆதரிக்க வேண்டும். எல்லா தேசிய இனங்களின் தாய் மொழிகளும் அவற்றுக்குரிய மாநிலங்களின் நீதி, நிர்வாக துறைகளில் ஆட்சி செலுத்த வேண்டும்.

  1. திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் இந்தி திணிப்பு!
    திருவாரூரில் அமைந்திருக்கும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் (Central University of Tamil Nadu) கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதோ இல்லையோ இந்தியை திணிக்கும் வேலை மட்டும் ஜரூராக நடந்து வருகிறது. இப்பல்கலைக்கழக இணைய தளத்தின் ஆங்கில பதிப்பில் கூட இந்தி திணிப்பு காணப்படுகிறது. பேராசிரியர்களின் கல்வி தகுதி மற்றும் இன்ன பிற நடவடிக்கைகள் யாவும் ஆங்கிலத்தில் இருப்பதை விட இந்தியில் தான் பிரதானமாக உள்ளன. இந்த இணைய தளத்தின் இந்தி பதிப்பிலோ அனைத்தும் இந்தி தான். சொல்லி வைத்தது மாதிரி மருந்துக்கும் தமிழ் கிடையாது!. பல்கலைக்கழக இலச்சினையிலும் இந்தி மட்டுமே! தமிழே கிடையாது!. இணைய தளத்திலேயே இந்த லட்சணம் என்றால் பல்கலைக்கழகத்தின் உள்ளே என்ன லட்சணமோ! இது தான் தமிழ் நாட்டுக்கான மத்திய பல்கலைக்கழகமாம்! அதுவும் தமிழுக்காக தண்டவாளத்தில் தலை வைத்ததாக பீற்றிக்கொள்ளும் கல்லக்குடி கொண்டானின் சொந்த தொகுதியிலேயே இந்த நிலை!. கேவலம்! கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தின் (Central University of Karnataka) இணைய தளத்தில் கன்னடம் இருக்கிறது. இலச்சினையிலும் இந்தியோடு கன்னடம் இருக்கிறது. பல்கலைக்கழக கீதமும் கன்னடத்திலேயே எழுதப்பட்டுள்ளதாக கேள்வி. பஞ்சாப், கேரளம் போன்ற மாநிலங்களின் மத்திய பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் ஆங்கில மற்றும் இந்தி பதிப்புகள் தனித்தனியாக தெளிவாக உள்ளன. ஆங்கில பதிப்பில் இந்தி திணிப்பு இல்லை. தமிழகத்தில் அரசியல் கட்சியினரும் தமிழ் உணர்வாளர்களும் உறங்கிக்கொண்டிருப்பதால் இந்த திணிப்பு போலும்!. இதை யாராவது கண்டு கொள்வார்களா?

  2. ​தமிழ் தேசம், தமிழ் பற்றாளர் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
    தமிழுக்கு இழைக்கப்பட்ட அநிதிக்கு எதிராக போராட வேண்டும்.

  3. தமிழ்நாட்டிலேயே உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட முடியாதா? அப்படியானால் நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. கோயில்களில் தமிழ் இல்லை. கல்லூரிகளில் தமிழ் இல்லை, இந்த லட்சணத்தில் சில தமிழ்நாட்டுத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்களைப் பார்த்து நீங்கள் நாடற்றவர்கள், எங்களுக்கென மாநிலம் இருக்கிறது என்று பீற்றிக் கொள்வதைப் பார்க்க சிரிப்புத் தான் வருகிறது. இலங்கையில் பாராளுமன்றத்திலும் தமிழில் பேசலாம், நீதிமன்றங்களிலும் தமிழில் வாதாடலாம், பாலர் வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம் வரை தமிழில் கல்வி கற்கலாம். வடக்கிலும், கிழக்கிலும் அரச நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் கூட தமிழுக்குத் தான் முதலிடம். இலங்கை முழுவதும் அரச நிறுவனங்களின் அறிவிப்புகள், பத்திரங்கள், அறிக்கைகள் அனைத்திலும் தமிழ் இருக்கும். எல்லாவற்றையும் விட நாங்கள் இலங்கையின் எந்த மூலையிலுமுள்ள கோயில்களில் தேவாரம் பாடலாம், ஆடலாம், கூப்பாடு போடலாம், யாருக்கும் அதை எதிர்க்கத் துணிச்சல் வராது. தமிழ்நாட்டில் தமிழின் நிலையை பார்க்கும் போது உண்மையில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தான் தமது மொழியையும், கலாச்சாரத்தையும் காக்க தனிநாடு கேட்டுப் போராடியவர்களே தவிர ஈழத்தமிழர்கள் அல்ல என்ற எண்ணம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. 🙂

    • **உண்மையில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தான் தமது மொழியையும், கலாச்சாரத்தையும் காக்க தனிநாடு கேட்டுப் போராட வேண்டியவர்களே தவிர ஈழத்தமிழர்கள் அல்ல என்ற எண்ணம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது

    • நல்ல சுவையான வாதம்.

      உண்மையில் நான் பல முறை இலங்கைத் தமிழர்கள் தமிழ் நாட்டுத் தமிழர்களை விட அதிகம் தமிழில் பற்றும் ஈடுபாடும் உள்ளவர்களோ என்று நினைப்பதுண்டு.

Leave a Reply to Periyasamy பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க