privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதேசியப் பஞ்சாலைக் கழகத் தேர்தல் - பு.ஜ.தொ.மு பிரச்சாரம்

தேசியப் பஞ்சாலைக் கழகத் தேர்தல் – பு.ஜ.தொ.மு பிரச்சாரம்

-

ஒளி வரும் பாதையாக தொழிற்சங்கத் தேர்தல் தொடங்கிவிட்டது புஜதொமுவின் அதிரடிப் பிரச்சாரம்.

ளவாணிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக களவாணிகளால் நடத்தப்படும்  போலி ஜனநாயகத் தேர்தலில் வாக்குரிமையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்று இந்த முதலாளித்துவ பிரச்சாரகர்கள் அவ்வப்போது உதார் விடுவதை நாம் அறிவோம். ஆனால், அந்த வாக்குரிமை ஒரு ஆயுதமல்ல கழிப்பறையின் காகிதம்தான் என்பது ஏற்கனவே நிரூபணமான விசயம்.

ஆனால், தொழிலாளி வர்க்கம் தனக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக தொழிலாளிகளின் கண்காணிப்பில் நடத்தப்படும் தொழிற்சங்கப் பிரதிநிதித்துவத் தேர்தலில் வாக்குரிமையும் ஒரு ஆயுதமாகப் பயன்பட முடியும் என்பதை இப்போதே  காட்டத் துவங்கி விட்டது, மார்ச் 20-ம் தேதி நடைபெறவிருக்கும் தேசியப் பஞ்சாலைக் கழகத்தின் தென்மண்டலத்திற்கான தொழிற்சங்கப் பிரதிநிதித்துவத் தேர்தல்.

தொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொழிலாளர்களால் நடத்தப்படும் கோவை மண்டலப் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்திற்கு வாக்களியுங்கள் என புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது.

10/13/2014 அன்று இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கு அருகிலுள்ள கமுதக்குடியில் இயங்கும் பயோனீயர் ஆலை முன்பாக, அப்போதுதான் விடிந்து கொண்டிருக்கின்ற அந்த அதிகாலை ஆறரை மணிப் பொழுதில் தொழிலாளி வர்க்கத்திற்கான விடுதலையை விடிய வைக்கும் முழக்கங்களோடு பிரச்சாரம் தொடங்கியது. புஜதொமு தோழர் நாகராசன் தலைமை வகிக்க, சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் விளவை ராமசாமி பேசிய கோவை மண்டலச் சங்கத்தின் செயல்பாடுகள் : திமுக தொமுசவின் துரோகத்தனத்தை அம்பலப்படுத்திய சிறப்புரைக்கிடையே மக்கள் கலை இலக்கியக் கழக மைய கலைக் குழுவினரின் பாடல்கள் பாட பிரச்சாரம் நிறைவடைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

ன்றே மதியம் மூன்று மணிக்கு சிவகங்கை மாவட்டம், சிவகங்கைக்கு அருகிலுள்ள காளையார்கோவிலில் இயங்கும் காளீஸ்வரா மில் (பி) யூனிட் ஆலை முன்பாக அடுத்த பிரச்சாரம் தொடங்கியது.

ஒருவாரத்திற்கு முன்பு பிரச்சாரத்திற்கான ஒலிபெருக்கி அனுமதி கோரி போலீசிடம் விண்ணப்பிக்கப்பட்டு, அனைத்துத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் போலீஸ் ஸ்டேசனில் கூட்டி வைத்து ஒருவருக்கும் இடையூறு இல்லாத வகையில் நாட்கள் திட்டமிடப்பட்டிருந்தன. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் தேர்தல் கமிசன் அனைத்து அனுமதிகளையும் ரத்து செய்துவிட்டதாகக் கூறியது போலீசு. இதை ஏற்றுக்கொண்ட அனைத்துத் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் போலீசு சொன்னவாறே கையெழுத்துப் போட்டுவிட்டு அனுமதி மறுப்பு ஆணையை வாங்கிக் கொண்டன. இதில் சி.ஐ.டி.யு முன்னணியில் நின்றது. ஆனால் புஜதொமுவின் இணைப்புச் சங்கமான கோவை மண்டலப் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் மட்டும் அதை வாங்க மறுத்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த போலீசு இரவு பதினொன்றரை மணிக்கு ஆலைத் தொழிலாளியாக உள்ள தோழரின் கிராமத்திலிருக்கும் வீட்டிற்குப் போய் வழக்கம்போல தனது ரவுடித்தனத்தைக் காட்டி ஆபாசமாகப் பேசி, அநாகரீகமாக நடந்து கொண்டு அனுமதி மறுப்பிற்கான ஆணையை வீட்டுக்கதவில் ஒட்டியதோடு, ஒலிபெருக்கி உரிமையாளரையும் மிரட்டி தடை செய்தது. அதோடு ஆலையின் முன்புறமாக வைக்கப்படிருந்த டிஜிட்டல் பேனரையும் கிழித்துவிட்டு கம்புகளைக் கீழே தள்ளி விட்டிருந்தது.

ஆனாலும், மதியம் மூன்று மணிக்கு திட்டமிட்டபடி ஆனால், ஒலிபெருக்கியில்லாமல் பிரச்சாரம் தொடங்கியது. கமுதக்குடியில் நடைபெற்றதைப் போன்றே இங்கும் கலைக்குழுவின் பாடல்களோடு தோழர்கள் உரையாற்ற இடையில் வந்தது போலீசு. உரையாற்றியதும் பேசிக்கொள்ளலாம் என்று தோழர்கள் அதைப் போகச் சொன்னார்கள். வீடியோ எடுத்தார்கள். கிளம்பிப் போய்விட்டார்கள். அதன் பிறகு போலீசு வரவில்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

அம்மா சங்கம் (அண்ணா தொழிற்சங்கப் பேரவை) ஒரு ஓட்டுக்கு ஒரு குத்துவிளக்கு என்றும், அய்யா சங்கம் (தொழிலாளர் முன்னேற்ற சங்கம்) ஒரு ஓட்டுக்கு 1,500 என்றும் (திருமங்கலம் ஃபார்முலா) செய்தியைக் கசிய விட்டிருக்கிறது. ஏ.ஐ.டி.யு.சி யும், சி.ஐ.டி.யு வும் பாராளுமன்றத் தேர்தலில் பரிதாபமாக நின்று கொண்டிருக்கிற அதனுடைய கட்சிகளான சி.பி.ஐ மற்றும் சி.பி.எம் மைப் போன்றே இங்கேயும் நிற்கின்றன. இல்லையில்லை அலைகின்றன.

இந்தத் தேர்தலைக் கொண்டுவந்தது முதல் சமீபத்தில் போராடிப் பெறப்பட்ட 1,650 ருபாய் சம்பள உயர்வும் 8 மாத சம்பளப் பின்பாக்கியும் பெற்றுத் தந்தது வரையிலான வெற்றிகரமான நிகழ்ச்சிகளுக்கு காரணமாகயிருக்கும் போராட்டங்களைப் பற்றியும் சிரமங்களைப் பற்றியும் ஓட்டுக்கட்சித் தொழிற்சங்கங்களின் துரோகங்களைப் பற்றியும் இன்னும் தொழிலாளி வர்க்கத்திடம் பேசுவதற்கு புஜதொமுவிற்கு ஏராளமான விசயங்கள் உள்ளன. ஆனால், இது எதுவும் இல்லாத பிற சங்கங்கள் போலித்தேர்தல்களில் செய்வதைப்போலவே இங்கும் எவ்வளவு கொடுத்தாலும் என ஓட்டுக்களை விலை பேசுகின்றன. காரணம், இந்தத் தேர்தலில் ஓட்டுக்களை வாங்காவிட்டால் இனி ஒரு தொழிலாளியும் தம்மை மயிரளவும் மதிக்க மாட்டான் என்பதை உணர்ந்திருக்கின்றன, அதனால் பயந்துபோயிருக்கின்றன. நிர்வாகமும்கூட புஜதொமு வெற்றி பெறாமலிருந்தால் கிடைக்கும் ஆதாயங்களை மனதில் கொண்டு போலிகளையே மறைமுகமாக ஆதரிப்பதோடு, இந்தத் தேர்தல் மீதே எரிச்சல்படுகிறது.

ஆக தொழிலாளியின் வாக்குரிமையைக் கண்டு நிர்வாகமும் போலித்தொழிற்சங்கங்களும் பயப்படுகின்றன. தொழிலாளிகள் இதைப் பயன்படுத்தி போலிகளை விரட்ட வேண்டியது மட்டும்தான் இனி பாக்கி. என்.டி.சி மில் தொழிலாளர்கள் கட்டாயம் அதைச் செய்வார்கள், காரணம் அவர்கள் தங்களுக்கான சங்கம் எது என்பதை ஏற்கனவே புரிந்துகொண்டு விட்டார்கள்.

பு.ஜ. செய்தியாளர்.