privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்உலகம் தோன்றியது எப்படி – விண்வெளி பயணம் போகலாமா ?

உலகம் தோன்றியது எப்படி – விண்வெளி பயணம் போகலாமா ?

-

முன்னுரை 

அறிவியலை ஆய்ந்தும், சோசலிசத்தை விரும்பியும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு காரணமான புகழ் பெற்ற அறிவியலாளர் ஐன்ஸ்டீன் பிறந்த தினமன்று இந்த அறிவியல் அறிமுக கட்டுரை மற்றும் வீடியோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஐன்ஸ்டீன்
ஐன்ஸ்டீன்

மனித சமூகம், பண்பாட்டையும், நாகரீகத்தையும் தனது கூட்டுழைப்பால் அடைந்திருந்த காலம் தொட்டு இன்று வரையிலும் உள்ள தலையாய கேள்வி இந்த உலகம், எப்படி ஏன் யாரால் தோன்றியது? இக்கேள்விகளுக்கான விடையை பிரமிப்பூட்டும் விதத்தில் இன்று அறிவியல் விளக்கி நிரூபித்திருந்தாலும் இங்கே மதங்கள் அழிந்து விடவில்லை. மக்களை ஏற்றத் தாழ்வாக பிரித்திருக்கும் வர்க்க சமூகம் இருக்கும் வரையிலும் மதங்கள் அறிவியிலின் ஒளியை தடை செய்து கொண்டுதான் இருக்கும்.

மதங்கள் அனைத்தும் அறியாமையையும், கேள்விக்கிடமற்ற அடிமைத்தனத்தையும் வைத்து மக்களின் அறிவுத் தேடலை தடை செய்கின்றன. இதன் பொருட்டே இம்மதவாதிகள் பல நூறு குதர்க்கங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இணையம் வந்த பிறகு டார்வின் பொய், ஐன்ஸ்டீன் தோல்வி என்று தமது முட்டாள்தனங்களுக்கு தைரியமாக பெருமை கொள்கிறார்கள்.

உழைக்கும் மக்களை மத ரீதியாக பிரித்து வைப்பதன் மூலம் ஆதாயத்தை அடையும்  முதலாளித்துவம், தன் பிடியிலிருக்கும் அறிவியலை வைத்துக் கொண்டு மதங்களின் முட்டாள்தனத்தை அகற்றுவதற்கு முயல்வதில்லை. இதைத் தாண்டி ஒரு சாதாரண மனிதனுக்கு நமது பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பதை புரிய வைப்பதும், மனித சமூகமும் அது வாழும் பூமியும் முதலாளிகளுக்கு சொந்தமல்ல, மக்களுக்கு சொந்தமானது என்று தெளிய வைப்பதும் வேறு வேறு அல்ல.

இந்த ஆவணப்படம் நமது பூமி, சூரியக் குடும்பம், பால்வெளி மண்டலம், பேரண்டம் அனைத்தும் எப்படி தோன்றின, எந்த நிகழ்ச்சிப் போக்கிலிருந்து இந்த மாற்றங்கள் நடக்கின்றன, இவற்றின் முரண்பாடுகள் என்ன, இவற்றுக்கு தோற்றம்-அழிவு உண்டா, அற்பமான துகள்களும், தூசுகளும், வாயுக்களும் ஒரு வரலாற்றுக் காலத்தை படைக்கும் மேன்மையை எப்படி பெற்றன, நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் விண்மீன்களில் நடைபெற்ற அணுக்கரு கூட்டிணைவால் உருவாக்கப்பட்டவை என்பது உண்மையா, இந்த பிரபஞ்சத்தை படைத்த மூலப்பொருட்கள் என்ன, நமது பூமி, சூரியக் குடும்பத்தின் தோற்றம், பெருவெடிப்பு குறித்து ஆதாரங்களுடன் அறிய முடியுமா என் ஏராளமான கேள்விகளுக்கு விடையளிக்கின்றது.

எனினும் மார்க்சியத்தின் இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை கற்றுத் தேர்ந்தவர்களுக்கு இந்தப் படம் மற்றவர்களை விட நன்கு பயன்படும். இயற்கையின் இயக்கவியல் இந்த உலகத்தின் தோற்றத்தில் எப்படி இயங்கியிருக்கிறது என்பதை காட்சி ரீதியாகவும், கருத்து ரீதியாகவும் புரிந்து கொள்வதற்கு இது உதவும்.

இயக்கம்தான், இயற்கையை சுருள் வட்டப் பாதை முன்னேற்றத்தில் இயங்க வைக்கிறது என்பதும் போராட்டமே, மனித குல நாகரீகத்தை மேம்படுத்தும் அச்சாணியாக இருக்கிறது என்பதும் தொடர்பற்றவை அல்ல. இதைத்தான் இந்தப் படத்திலிருந்து அறிவியலோடு சேர்ந்து நாம் அறிய வேண்டிய சமூகப் பார்வை.

இந்தப் படத்தை இத்தகைய தத்துவப் பார்வை விளக்கங்களுடன்தான் எழுத வேண்டும் என்று திட்டமிட்டாலும் நேரப் பிரச்சினை காரணமாக நடக்கவில்லை. என்றாலும் படத்தினை பார்த்து புரிந்து கொள்ளும் அளவுக்கு உரையாடலின் சாரத்தை தமிழில் கொண்டு வந்திருக்கிறோம். தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கும், தமிழோ, ஆங்கிலமோ தெரிந்தாலும் அறிவியல் தெரியாதவர்களுக்கும் இந்த கட்டுரை பயன்படும். கட்டுரையைப் படித்து விட்டு படத்தை பாருங்கள்!

பிரபஞ்ச ரகசியத்தை தெரிந்து கொண்ட மகிழ்ச்சியை அடையுங்கள்!

–    வினவு

நாம் ஒவ்வொரு முறை வானை நோக்கும் போதும், நமது பூமி, சூரியன் மற்றும் இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது, தோன்றியதிலிருந்து எப்போதும் இதே நிலையில் இருந்து கொண்டிருக்கிறதா, எப்படி இயங்குகிறது என்ற கேள்விகளுடன் வியப்புடனே நோக்குகிறோம். இக்கேள்விகளுக்கு விடைதர முயற்சிக்கிறது, நேசனல் ஜியாக்ரபியின் “பிரபஞ்சத்தின் விளிம்பை நோக்கிய பயணம்” என்ற ஆவணப்படம்.

ஒளியை விட அதிகமான வேகத்தில் செல்லும் இப்பயணம் கற்பனை தான் எனினும் அறிவியலில் இது வரை அறியப்பட்ட உண்மைகள், ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாடுகள், சோதனைகளால் உறுதி செய்யப்பட்ட விதிகளினடிப்படையில், ஹப்பிள் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட படங்களுடன், கணினியின் வரைகலை தொழில்நுட்பமும் கைகோர்த்ததில் இப்பயணம் சாத்தியமாகியிருக்கிறது.

இப்பயணத்தின் முதலடி சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நீல் ஆம்ஸ்ட்ராங் தனது காலடித்தடங்களை வைத்த நிலவில் ஆரம்பமாகிறது. நிலவில் வளிமண்டலம் இல்லாததால் பல பத்தாண்டுகளாக அழியாதிருக்கும் ஆம்ஸ்ட்ராங்கின் காலடித்தடங்களை கடந்து பாய்ச்சலில் செல்லும் பயணம் 4.2 கோடி கிலோமீட்டர்களில் பண்டைய கிரேக்கர்களின் காதல் தேவதையான வீனஸை (வெள்ளி நட்சத்திரம்) அடைகிறது.

நிலவு
பயணத்தின் முதலடி சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நீல் ஆம்ஸ்ட்ராங் தனது காலடித்தடங்களை வைத்த நிலவில் ஆரம்பமாகிறது

தினமும் நமது நாட்களை காலை வரவேற்று, மாலையில் விடை கொடுக்கும் வெள்ளி கோளானது மனிதர்கள் வாழ தகுதியற்றதாக, வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு மிகுந்ததாக, அதாவது சீற்றம் மிகுந்ததாக காணப்படுகிறது. அதைக் கடந்தால் 9.1 கோடி கிலோமீட்டர்களில் முற்றிலும் இரும்பினாலான சிறிய கோளான புதனையும் (மெர்க்குரி) அதை சுற்றி வந்து கொண்டிருக்கும் மெசஞ்சர் (messenger) விண்கலத்தையும் நாம் காண்கிறோம்.

பின்னர் பயணத்தில் 15 கோடி கிலோமீட்டர்களில் நமது நட்சத்திரமான சூரியனை அடைகிறோம். சூரியன் நமது புவியைப் போலவோ மற்ற கோள்களைப் போலவோ திடநிலையில் இல்லை. அது ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் மைய ஈர்ப்புவிசையால் ஒன்றிணைந்து பதிமூன்று லட்சம் பூமிகளை உள்ளடக்கி விடுமளவு பெரிதாக பிரமாண்டமான பந்தாக இருக்கிறது. ஈர்ப்புவிசை கொடுக்கும் அழுத்தம் காரணமாக மையக்கருவில் இருக்கும் ஹைட்ரஜன் வாயு மிக அதிக அழுத்தமும் அதனால் அதிக வெப்பமும் அடைவதால் அங்கு பூமியிலிருக்கும் மொத்த அணு உலைகளையும், அணு ஆயுதங்களையும் ஒரே நேரத்தில் வெடிக்க செய்வதை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமான ஆற்றலுடன் அணுக்கரு பிணைப்பு நடைபெறுகிறது. அணு வினை ஒளியையும் வெப்ப ஆற்றலையும்  வெளியிடுவதுடன் வாயுக்களை வெளிநோக்கித் தள்ளுகிறது. அதே வேளை மைய ஈர்ப்புவிசை வாயுக்களை உள்ளிழுக்கிறது. இவ்விரு எதிர் விசைகளின் சமநிலையில் சூரியன் மாபெரும் எரியும் வாயுக்கோளமாக இருக்கிறது. இந்த கணத்தில் சூரியன் தனது இயக்கத்‌தை நிறுத்திக்கொண்டால் அதை நாம் அறிய 8 நிமிடங்கள் ஆகும்.

மையக்கருவின் வெப்பநிலை 1.5 கோடி டிகிரி செல்சியசும், மேற்பரப்பின் வெப்பநிலை சுமார் 5,700 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் இந்நட்சத்திரம் புவியில் உயிர்களின், ஆற்றலின், ஒளியின் மூலாதாரமாக இருக்கிற அதே வேளை நமது பூமியிலிருக்கும் அனைத்து உயிர்களையும் அழித்துவிடுமளவு அதிக ஆற்றலுள்ள, அயனியாக்கப்பட்ட வாயுக்கள்(பிளாஸ்மா) அடங்கிய மிகப்பரந்த சூரியக்கதிர் அலைகளை வெளியிடுகிறது. ஆனால் நமது பூமியின் காந்தப்புலம் நம்மை இப்பேரழிவிலிருந்து தடுத்துக் காப்பாற்றுகிறது.

அடுத்து நாம் ஒரு வால் நட்சத்திரத்தை பார்க்கிறோம். வால் நட்சத்திரங்கள், உறைந்த வாயுக்கள், பாறை மற்றும் தூசியை உள்ளடக்கிய அண்ட பனிக்கட்டிகளாகும். இவற்றில்உயிர் வாழ்வதற்கு தகுந்த சூழ்நிலை இல்லையெனினும், இவை தன்னகத்தே நம் பூமியில் உயிர்கள் உருவாவதற்கு அடிப்படை தேவையான தண்ணீர் மற்றும் கரிம சேர்மங்களை கொண்டிருக்கின்றன. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இதைப் போல் ஒரு வால் நட்சத்திரம் பூமியில் மோதி அங்கு தண்ணீர் மற்றும் கரிம சேர்மங்களை விட்டு சென்ற நிகழ்வு இங்கு உயிர்கள் உருவாக காரணமாக இருந்திருக்கலாம். அதே போல முன்னர் பூமியில் ஒரு வால் நட்சத்திரம் மோதியதால் தான் டைனோசர் இனமே அழிந்து போனது. அவ்வகையில் இவை படைக்கும் சக்தியாகவும், மீப்பெரும் அழிவு சக்தியாகவும் இருக்கின்றன.

இவ்வாறாக ஒவ்வொரு பொருளுக்குள்ளும் நிகழ்ச்சிப் போக்குக்குள்ளும் இடையறாமல் நடக்கும் எதிர்மறைகளின் போராட்டம், ஒற்றுமையால் தான் இப்பிரபஞ்சம் முழுவதுமே இயங்குகிறது.

செவ்வாய்
செவ்வாய் கிரகம் சற்றேறக்குறைய பூமியை ஒத்திருந்தாலும், அதன் பிரமாண்டமான புழுதிப்படலம், எரிமலைகள், பள்ளத்தாக்குகள் நாம் புவியில் கண்டது எதையும் ஒத்திராதது.

சூரியக் குடும்பத்தின் மையமான சூரியனிலிருந்து திரும்பி பயணித்தால் 22.7 கோடி கிலோ மீட்டர்களில், (அதாவது பூமியிலிருந்து சுமார் 7.5 கோடி கிலோமீட்டர்கள்) நாம் பார்க்கும் செவ்வாய் கிரகம் சற்றேறக்குறைய பூமியை ஒத்திருந்தாலும், அதன் பிரமாண்டமான புழுதிப்படலம், எரிமலைகள், பள்ளத்தாக்குகள் நாம் புவியில் கண்டது எதையும் ஒத்திராதது.

செவ்வாயை கடந்து சென்றால் எரிகற்கள் எனப்படும் சிறு விண்கற்கள் மண்டலத்தை கடக்கிறோம். இவற்றில் சில நூற்றுகணக்கான மைல்கள் நீள-அகலம் கொண்டவையாகும். சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இதே மாதிரியான விண்கற்கள் ஈர்ப்புவிசையால் ஒன்றிணைந்து தான் பூமியை, நிலவை போல் கோள்களாகியிருக்கக் கூடும். எனில் இப்போது இவை தமக்கிடையிலான ஈர்ப்பு விசையால் ஒன்றிணையாமல் தடுத்து வைத்திருப்பது எது?

அது நமது சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய கோளும் சூரியனிலிருந்து 77.8 கோடி கிலோமீட்டர் தொலைவிலிருப்பதுமான வியாழனாகும். இதில் 1,321 பூமிகளை உள்ளடக்கி விடலாம். பூமியின் அளவை விட மூன்று மடங்கும் பல நூற்றாண்டுகளாக நீடித்திருப்பதுமான செம்புயலில் ஏற்படும் இடி-மின்னல்கள் நம் பூமியில் ஏற்படுவதை விட 10,000 மடங்கிற்கும், அதிக சக்தியுடையதாகும். சற்று திரும்பினால் வியாழனின் நிலவுகளை- அதில் பனிபடர்ந்த யுரோபாவையும் – நாம் காண்கிறோம்.

அங்கிருந்து பாய்ச்சலில் முன்னேறினால் 142 கோடி கிலோமீட்டர்களில் சனிக்கோளை அடைந்து அதன் அற்புதமான வளையங்களை அவை எப்படி உருவாகின என நாம் வியந்து கொண்டிருக்கும் போது சனியின் துணைக்கோளான (நிலவான) டைட்டனை நோக்கி நம் பார்வை தொடர்கிறது. டைட்டனில் நமது புவியிலுள்ள பருவநிலை போலவே மழை, மின்னல் ஏற்படுவதுடன் நமக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் தேவைப்படும் பெட்ரோலியம், மீத்தேன் படலம் இருக்கிறது.

அதன் பின் 287 கோடி கிலோமீட்டர்களில் நமது சூரியக் குடும்பத்திலேயே அதிகமான அச்சு சாய்வுடன் இருக்கும் பெரிய வாயுக் கோளமான யுரேனசை கடந்து செல்கிறோம். தொடர்ச்சியாக யுரேனசைப் போலவே இருக்கும் நெப்டியூனையும் அதன் நிலவான டிரைட்டனையும் கடக்கிறோம்.

விண்கற்கள்
எரிகற்கள் எனப்படும் சிறு விண்கற்கள் மண்டலத்தை கடக்கிறோம்

பின்னர் 590 கோடி கிலோமீட்டர்களில் தொலைதூர பனிக்கோள் (இப்போது கோள் இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது) புளூட்டோவைக் காண்கிறோம். இது சூரியனை சுற்றிவர 248 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. நமது சூரியக் குடும்பம் இத்துடன் முடிந்து விட்டதா? இன்னும் நமது சூரியனை சுற்றிவரும் கோள்கள், விண்கற்கள் இருக்கின்றனவா?

இப்போது நாம் 1977-ம் ஆண்டு பூமியிலிருந்து விண்ணில் ஏவப்பட்ட வோயேஜர் விண்கலத்தை காண்கிறோம். இது தற்போது சூரியக் குடும்பத்தை தாண்டி நட்சத்திரங்களுக்கிடையிலான வெளியில் தனது பயணத்தை தொடர்கிறது.

அதையடுத்து தொலை தூர சிறு கோள் ஒன்று சூரியனை சுற்றுகிறது. சேத்னா (sedna) எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கோள் சூரியனிலிருந்து சுமார் 930 கோடி மைல்கள் தொலைவில் இருப்பதுடன் சுற்றிவர 10,000 ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொள்கிறது.

நமது சூரியன் எப்படி தோன்றியது, இப்படியே நீடித்திருக்குமா? அழிந்தால் அதன் பின் என்னவாகும், நமது பூமியின் நிலை என்னவாகும், என்பவற்றை அறிய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.

இப்போது நம் குடும்பத்திலிருக்கும் அனைத்து கோள்களையும் சந்தித்து விடை பெற்றுக்கொண்டு, நமது வீட்டிலிருந்து வெளியில் காலடி எடுத்து வைக்கிறோம். தொடரும் நமது பயணம் நட்சத்திரங்களுக்கிடையிலான வெளியை அடைகிறது. இங்கு நமது சூரியனைப் போல கோடிக்கணக்கான விண்மீன்கள் இருக்கின்றன. இவற்றில் உயிரினங்கள் வாழ்கின்றனவா?

இப்பிரபஞ்சம் எல்லையில்லா சாத்தியங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

அடுத்து சுமார் 45 லட்சம் கோடி கிலோமீட்டர்கள் (4.5 ஒளிஆண்டுகள்) தொலைவில் இருக்கும் நமது அண்டை நட்சத்திர மண்டலமான ஆல்பா சென்சூரி என்ற நட்சத்திர மண்டலத்தை காண்கிறோம். இது மூன்று விண்மீன்கள் அடங்கிய அமைப்பாகும். மூன்று நட்சத்திரங்களும் ஈர்ப்புவிசையால் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன.

இந்த தொலைவுக்குபின் நீளத்தின் அளவைகளான கிலோமீட்டரும், மைல்களும் மீச்சிறு அளவாகி பொருளற்றதாகி விடுகிறது. இதன்பின் தொலைவை அளக்க ஒளிஆண்டு என்ற வேறு அளவை பயன்படுத்தவேண்டும். ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள் பயணிக்கும் ஒளி, ஓராண்டில் கடக்கும் 9.46 லட்சம் கோடி கிலோமீட்டர் தொலைவே ஒரு ஒளியாண்டு எனப்படுகிறது.

நமது பயணம் 10.5 ஒளிஆண்டுகளை அடையும் போது எப்சிலோன் எரிடனி என்ற இளம் நட்சத்திர மண்டலத்தை காண்கிறோம். இந்நட்சத்திரத்தின் தூசியும், பனியும் கலந்த பிரமிக்கத்தக்க வளையங்களில் கோள்கள் இன்னும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இதைப் போன்ற செயல்முறையால்தான் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நமது சூரியக் குடும்பம் உருவானது.

வால் நட்சத்திர மோதல்
வால் நட்சத்திர மோதல்

மேலும் பயணிக்கும் போது 20.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் நமது சூரியனை ஒத்த வயதுடைய கிலீஸ்-581 (Gliese581) என்ற நட்சத்திரத்தை காண்கிறோம். இந்த நட்சத்திர மண்டலத்தில் ஏறக்குறைய நமது பூமிக்கும் சூரியனுக்குமிடையிலான அதே தூரத்தில் ஒரு கோள் இருக்கக் காண்கிறோம். இக்கோள் உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கான சூழ்நிலைகளை பெற்றிருக்கலாம், இங்கு உயிரினங்களும் இருக்கலாம். அவை தமது தொலைக்காட்சிகளை இயக்கி நாம் பூமியில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளை இப்போது இங்கு பார்த்துக் கொண்டிருக்கலாம்.

நாம் இதுவரை பார்த்ததிலேயே அதிக பிரகாசமான வானில் மிகப்பிரகாசமான  விண்மீன்களில் 9-ம் இடத்தில் இருக்கும் திருவாதிரை நட்சத்திரத்தை (betelgeuse star) பார்க்கிறோம். ஆனால் இது நட்சத்திரம் அல்ல, நட்சத்திரத்தின் அடுத்த நிலை, இந்நிலை பெரும் சிகப்பு அசுரன் (Red SuperGiant) எனப்படுகிறது. இது நமது சூரியனை விட 600 மடங்கு பெரியது. இன்றிலிருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்குள் இவ்விண்மீன் வெடித்து சிதறிவிடும்.

1344 ஒளியாண்டுகள் தொலைவில் நாம் ஒரு விண்மீன் தொழிற்சாலையை காண்கிறோம். ஓரியன் இருண்ட மேகத்திரள், அதன் ஆழத்தினுள் ஒரு ஒளித்துளி அதைச் சுற்றியுள்ள வாயுக்களை உள்ளிழுத்து அழுத்தி வெப்பமடைய செய்கிறது. இந்த வெப்பமும் அழுத்தமும் அணுவினையை தூண்டுவதற்கு போதுமானதாக இருக்கிறது. ஒரு நட்சத்திரம் பிரசவிக்கிறது. ஓரியன் நெபுலா – இங்குதான் நமது சூரியனைப் போல் சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கான விண்மீன்கள் உருவாகி கொண்டிருக்கின்றன- பிறக்கின்றன.

ஒளிரும் வாயுக்கூட்டம்
ஒளிரும் வாயுக் கூட்டத்தை – நிறமுகிழை- கடந்து செல்கிறோம்.

இப்போது ஒளிரும் வாயுக் கூட்டத்தை – நிறமுகிழை- கடந்து செல்கிறோம். பிரபஞ்சத்தின் மூலப் பொருட்களான ஹைட்ரஜனும், ஹீலியமும் பச்சை, ஊதா நிறங்களிலும், உயிர்கள் தோன்ற, உயிர் வாழ அடிப்படையான ஆக்சிஜனும், நைட்ரஜனும் சிவப்பு, நீல நிறங்களில் காட்சியளிக்கின்றன. கோள்களும், அவற்றில் உயிரினங்களும் தோன்ற விண்மீன்கள் தமது நிலையை மறுத்து வெடித்து சிதற வேண்டும். நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் விண்மீன்களில் நடைபெற்ற அணுக்கரு கூட்டிணைவால் உருவாக்கப்பட்டவை. அந்தவகையில் நம்முடைய குடும்ப கிளை இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. விண்மீன்கள் தான் நம்முடைய மூதாதையர்.

இந்நிற முகிழ்களின் நடுவில்-வெள்ளை குள்ளன் (White Dwarf) ஒருவன் இருக்கிறான். இதில் ஒரு தேக்கரண்டி அளவு நமது பூமியில் ஒரு டன் எடை இருக்குமளவு அடர்த்தி மிகுந்ததாகும்.

சூரியனைப் போலுள்ள நட்சத்திரங்களில் மையக்கருவில் உள்ள எரிபொருளான ஹைட்ரஜன் அனைத்தும் ஹீலியமாக மாற்றப்பட்டு தீர்ந்த பின் மேல் அடுக்கில் உள்ள ஹைட்ரஜனில் அணுப் பிணைப்பு வினை நடைபெறத் துவங்கும். இப்போது அது அளவில் 100 மடங்குக்கும் மேல் விரிவடைந்து அது தனது நட்சத்திர நிலையிலிருந்து மாறி சிவப்பு அசுரன் நிலைக்கு செல்கிறது. எரிபொருளின் அளவில் ஏற்படும் மாற்றங்கள் விண்மீனின் பண்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இன்றிலிருந்து சுமார் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு பின் நமது சூரியன் தற்போது இருக்கும் அளவை விட 100 மடங்கு பெரிதாகி பூமியை விழுங்கி செவ்வசுரன் நிலையை அடையும். அப்போது வியாழனின் நிலவு அல்லது சனிக்கோளின் நிலவு உயிரினங்கள் வாழ்வதற்கான சூழ்நிலையை வந்தடையக் கூடும்.

கருந்துளை
கருந்துளை

நட்சத்திரத்தின் மேற்பரப்பில் இருக்கும் ஹைட்ரஜனும் தீர்ந்து மொத்தமும் ஹீலியமான பின் ஹீலியம் அணுக்கரு பிணைப்பிற்கு உள்ளாகி கார்பனாக மாறத்துவங்கும். காலப்போக்கில் எல்லா ஹீலியம்  எரி பொருளும் தீர்ந்த பின்னர் படிப்படியாக குளிர ஆரம்பிக்கும் போது செவ்வசுரன் நிலையை மறுத்து வெள்ளைக் குள்ளன் நிலையைப் பெறுகிறது. சூரியனை ஒத்த மற்றும் அதைவிட குறைவான நிறையுள்ள விண்மீன்கள் இந்நிலையைப் பெறுகின்றன. இன்றிலிருந்து சுமார் 600 கோடி ஆண்டுகளுக்கு பின் நமது சூரியனும் வெள்ளைக் குள்ளன் நிலையை வந்தடையும். அப்போது சூரியக் குடும்பத்தின் கோள்கள் அனைத்தையும் சூரியன் விழுங்கியிருக்கும்.

சூரியனை விட  மூன்றிலிருந்து ஐந்து மடங்கு நிறையுள்ள விண்மீன்களில் ஹீலியம் எரிபொருளும் தீர்ந்து கார்பன் ஆன பின் மேலும் அணுப்பிணைப்பு நடக்க அதன் நிறையும் – ஈர்ப்பு விசையும் போதுமானதாக இருப்பதால் தொடர்ந்து அணுப்பிணைப்பு நடந்து அதிக நிறையுள்ள தனிமங்கள் உருவாகின்றன. இந்நிலை பெரும் சிகப்பு அசுரன் (Red Super Giant) எனப்படுகிறது. நாம் சற்று முன்பு பார்த்த திருவாதிரை நட்சத்திரம் பெரும் சிவப்பு அசுரன் நிலையில் தானிருக்கிறது.

இச்செயல் முறையால் தொடர்ந்து நிறை அதிகரித்துக் கொண்டே செல்வதால் ஒரு கட்டத்தில் ஈர்ப்பு விசை அதிகரிக்கிறது. அதனால் அது தன் சொந்த எடையை தாங்க முடியாமல் வெடித்து சிதறும். இது சூப்பர் நோவா எனப்படுகிறது. நம் சூரியக் குடும்பம் முழுவதுமே இதைப்போல் ஒரு சூப்பர் நோவா வெடித்து சிதறி வெளியிட்ட வாயுக்கள், துகள்களிலிருந்து தான் தோன்றியது.

வெடித்து சிதறும் நட்சத்திரத்தின் மையக் கருவில் உள்ள அணுத் துகள்கள் ஒன்றிணைந்து அடர்த்தியான நியூட்ரான்களாகின்றன. இது நியூட்ரான் நட்சத்திரம் எனப்படுகிறது. இதில் இருக்கும் துகள்களின் அடர்த்தி மிக மிக அதிகம். இதில் ஒரு தேக்கரண்டி, நமது பூமியில் ஒரு லட்சம் டன் எடையிருக்கும். இங்கு நாம் பல்சார் (Pulsar) என்ற ஒரு வகை நியூட்ரான் நட்சத்திரத்தை பார்க்கிறோம். இது நமது பூமியின் காந்தப்புலத்தை விட பல்லாயிரம் மடங்கு அதிகமான காந்தப்புலத்தையும், ரேடியோ மின்காந்த அலைகளையும் வெளியிடுகிறது.

விண்மீன் தொழிற்சாலைகள்
லட்சக் கணக்கான விண்மீன்கள்

விண்மீன்களின் அளவில் இருக்கும் வேறுபாடும் அதன் அடுத்த நிலைப் பண்பை தீர்மானிக்கிறது. நட்சத்திரம் சூரியனை விட ஐந்து மடங்கிற்கு அதிக நிறையுடன் இருக்கும் பட்சத்தில் இந்நியூட்ரான் நட்சத்திரங்களின் அளவும் நிறையும் அதிகமாக இருக்கும் அதனால் அதன் மையம் மேலும் மேலும் சுருங்குகிறது. அதன் அடர்த்தியும் ஈர்ப்பு விசையும் மிக மிக அதிகரித்து வேறு நிலையை அடைகிறது. இந்நிலை கருந்துளை (Black Hole) எனப்படுகிறது.

இவ்வாறு விண்மீன்களில் அளவில் இருக்கும் வேறுபாடும், அவற்றின் அடுத்த நிலைப் பண்பையும் நிகழ்ச்சிப் போக்கையும் தீர்மானிக்கிறது.

இப்பிரபஞ்சத்தில் அனைத்து பொருட்களுமே ஒளியை பிரதிபலிக்கின்றன. அப்பிரதிபலிப்பையே நாம் கண்ணால் காண்கிறோம். இக்கருந்துளையின் ஈர்ப்புவிசை ஒளியின் துகளையும் வெளியிடாமல் ஈர்த்து விடுமென்பதால், இதைக் காண இயலாது. இதன் ஈர்ப்பிலிருந்து விண்மீன்கள் உட்பட எதுவும் தப்பிச்செல்ல முடியாது. இதில் ஒரு குண்டுமணியளவு பூமியில் ஒரு கோடி டன் எடையிருக்கும்.

நாம் இப்போது நமது விண்மீன் திரளான பால்வெளியைப் பார்க்கிறோம். இதன் நடுவில் மிகப் பிரமாண்டமான மீப்பெரும் கருந்துளை இருக்கிறது. அதை சுற்றி தான் நம் சூரியன் உள்ளிட்ட எண்ணிலடங்கா நட்சத்திரங்களும், பல சிறு கருந்துளைகளும், நியூட்ரான் நட்சத்திரங்களும், பிறவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  பால்வெளியில் 1000-லிருந்து 4000 விண்மீன்கள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

நாம் இப்போது 25 லட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் நாம் நமது அண்டை விண்மீந்திரளான அன்ட்ரோமெடாவை (Andromeda) காண்கிறோம். இங்கிருந்து பூமியை பார்த்தால் குரங்கிலிருந்து பரிணமித்த நமது மூதாதையர்கள் ஆப்பிரிக்க நிலத்தில் நடப்பதை காண முடியும்.

குவாசார்
இந்த அண்டத்தின் மிக சக்தி வாய்ந்த குவாசார் –  100 கோடி சூரியன்களின் நிறையுடையது

இப்போது இரண்டு விண்மீன் திரள்கள் மோதிக்கொண்டு அளப்பரிய ஆற்றலை வெளியிடுகிண்றன. விண்மீன் திரள்கள் அழிகின்றன. ஆனால் அதன் இயக்கம் நின்றுவிடுவதில்லை. புதிய திரள்கள் புதிய வடிவத்தில், புதிய நட்சத்திரங்களுடன் மீண்டும் பிறக்கிறது. பிறப்பு-இறப்பு, படைப்பு-அழிவும் கொண்ட முடிவில்லா சுழற்சியே பிரபஞ்சம் முழுவதையும் பிணைக்கும் இழையாக இருக்கிறது. இதைப்போல் கோடிக்கணக்கான விண்மீன் திரள்கள் நமது பிரபஞ்சத்தில் இருக்கின்றன.

நமது பயணம் மேலும் தொடர்கிறது. 200 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் கோடிக் கணக்கான சூரியன்களின் நிறையைக் கொண்ட மீமீப்பெரும் கருந்துளையைக் காண்கிறோம். அது அதைச் சுற்றியுள்ள  நட்சத்திரங்களை பிய்த்து உள்ளிழுத்து விழுங்குகிறது. மொத்த விண்மீன் திரளையும் இது விழுங்கி விடக்கூடும்.

அண்ட பெருவெடிப்பு
அண்டத்தின் எல்லை – 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அண்ட பெருவெடிப்பு

இப்போது 1400 கோடி ஒளியாண்டுகள் தொலைவிலிருக்கிறோம். இப்போது திரும்பி பார்த்தால் சுமார் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த பெருவெடிப்பை காணமுடியும். இப்பெருவெடிப்பிலிருந்து தான் மீச்சிறு கோளத்தில் அளப்பறிய அழுத்ததுடன் இருந்த அளப்பறிய ஆற்றல் வெடித்து கிளம்பியது. அதிலிருந்து தான் நமது இடம், காலம், வெளி, பிரபஞ்சம் அனைத்தும் தோன்றின. இது வரை பிரபஞ்சம் முழுவதிலும், பொருள் ஆற்றலாக மாறுவதை கண்ட நாம் இங்கு ஆற்றல் பொருளாக மாறுவதை காண்கிறோம்.

பெருவெடிப்பின் ஒளி அண்டம் முழுமையும் இன்றும் விரிந்து பரவிக் கொண்டிருக்கிறது. பூமியில் அதை நாம் தொலைக்காட்சி இரைச்சலாக பார்க்கிறோம். நமது பயணத்தில் கண்ட கோள்கள், விண்மீன்கள், விண்மீன் திரள்கள் முதலான அனைத்து அற்புதங்களும், பெருவெடிப்பிலிருந்து சிதறி பயணிக்கும் துகள்கள்தான். இப்போதுதான் நாம் நினைத்ததை விட எவ்வளவு சிறியவர்கள், பலவீனமானவர்கள் என்று புரிந்து கொள்கிறோம். ஆனால், இந்த பயணத்தின் ஊடாக நாம் இந்த அண்டத்தின் அற்புதங்களை அனுபவித்தோம். அந்த சாதனையை கொண்டாடுவோம்.

–    மார்ட்டின்

(நன்றி: நேஷனல் ஜியாகிரபிக்)

  1. //அண்டத்தின் எல்லை//

    அதற்கும் அப்பால் என்ன இருக்கிறது? வெறும் வெற்றிடமா? அந்த வெற்றிடத்திற்கு எல்லையே இருக்க வாய்ப்பில்லையே?

    சிந்திக்க சிந்திக்க குலையே நடுங்கிவிடுகிறது. We are infinitely so small.

    • It is an interesting question.
      What they say is space should not be looked separately.
      Space and time always bound together. Universe should be visualized like space time fabric.
      And this space time fabric bends and creates a sphere.That means if you travel to find the end of universe, you go back to same position like Megallon did.

      It is weird to think space bends but it as proved with the deflection of light during solar eclipse.

      I want you to watch below video to understand how gravity was visualized and explained by Einstein

        • What is time ?? My understanding is its an imaginary concept created by us to measure changes seen by us… Example considering human life as a chemical reaction lasting for some 60 to 80 years.. we measure our existence by seconds minutes etc with respect to our planets movement… I may be wrong… Does some thing called TIME also exists like the way SPACE ???

          • Time is a concept and not physical thing. For this concept to manifest we need physical thing to start with. The property of any physical thing is it will constantly undergo changes. The fundamental change is electron jumping from one orbit to another and in the process releases energy. Time is the measurement between the 1st state and the 2nd state. Initially the time is based on solar cycle (the time taken by earth to complete 1 round around the sun). Now it is based on Cesium atom changing state.

          • It is a confusing concept . Now the definition of measuring time is based on atoms. And these atomic clocks speeds and slows based on the gravity OR the speed at which you travel. Since everything is made of atom,and that includes human, if you go to Jupiter, your life will be little longer since jupiter’s gravity slows atomic clock. Our body clock should be ticking using the same atomic clock, not based on the earth rotation thus our death will take longer with respect to earths time.

            So as per earthlings the person on Jupiter,would have lived 100years + 10days. But as per Jupiter’s clock the person had lived 100 years.

            Since this clock is affected by speed, if you travel at the speed of light, the clock will be dead slow and your body will not age. That means when you complete your 10days at the speed of light, earthlings would have completed 100 years.

            Still confusing . think of a fly in the train.
            Train is running at the speed of 100km/hr. that does not mean, fly in the train is flying at the speed of 100km/hr + 5 km/hr. The fly is inside another system.

            If you try to measure the speed of the fly from the station, you will say, it flies at 105 km/hr.
            If you enter the train and measure the speed it is just 5km/hr.

            Similarly when you travel at the speed of light, you will be in different system where your time is just 10days and for the earthlings it would be 100days

            Google started a separate project to tweak this body clock for cheating death.

    • காலம் வெளியுடன் பினைந்து இருப்பதாக கூறுதல் நமது கற்பனையாக கூட இருக்கலாம்.வெளி வளையக்கூடியதுதான்.

  2. இங்குள்ள இடி மின்னலை விட பன்மடங்கு பலம் வாய்ந்தவை என்பதைப் படிக்கும் போது தண்ணீர் அங்குள்ளதா?என்ற கேள்விக்கு விடை தேவைப்படுகிறதே?
    அருமையான கட்டுரை இது நன்றி.

  3. மிகவும் பயனுள்ள, நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள். This kind of subject is more to my liking than the negative, attacking articles. இந்த அண்டசராசரம் மொத்தமும் பூமியை போல ஒரு மாபெரும் கோள வடிவமாக இருக்ககூடும் என்றே தோன்றுகிறது. ஆகவே, நாம் பூமியை விட்டு வெகு தொலைவில் சென்றால் மீண்டும் பூமிக்கே திரும்பும் வாய்ப்பும் இருக்கிறது. நல்ல பயனுள்ள கட்டுரை.

  4. //”ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள் பயணிக்கும் ஒளி, ஓராண்டில் கடக்கும் 9.46 லட்சம் கிலோமீட்டர் தொலைவே ஒரு ஒளியாண்டு எனப்படுகிறது….”//

    ஒளி ஓராண்டில் கடக்கும் தொலைவு 9.46 லட்சம் “கோடி” கிலோமீட்டர்…இந்த விபரம் இங்கு “9.46 லட்சம் கி.மீ” என்று கொடுக்கப்பட்டிருக்கிறது…அதாவது “கோடி” விடுபட்டுள்ளது என்று நினைக்கிறேன். சரிபார்த்துத் திருத்தவும்.

  5. அழகான அற்புதமான கட்டுரை, செலவே இல்லாமல் அத்துணை கோள்களுக்கும் அழைத்து சென்று, எங்களை தொலைத்து விடாமல் திரும்பவும் பூமியில் கொண்டு வந்து விட்டு விட்டதுக்கு கட்டுரையாளருக்கு நன்றி!!!

    ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு உலோகமும், வாயுவும் தனிமமும் அதிகப்படியாக இருக்கின்றது ஆனால் நாம் வாழும் பூமியில் அத்துனையும் சரிசமாக வைத்து வாழும் அத்தனை உயிர்களும் உணவில் ஆரம்பித்து வாழும் நிலைக்கு தகுந்தார்போல் அமைத்து வைத்தது எது?

    ஜமால் முகம்மது

    • //நாம் வாழும் பூமியில் அத்துனையும் சரிசமாக வைத்து வாழும் அத்தனை உயிர்களும் உணவில் ஆரம்பித்து வாழும் நிலைக்கு தகுந்தார்போல் அமைத்து வைத்தது எது?//

      Then who placed that எது ?

        • Man, I studied thermo dynamics and it was my favorite. But still I could not understand this entropy.
          I want to understand enropy , entholpy in layman terms.
          Oh boy, I have to go a long way….

          • I am explaining here simply…

            Since thermodynamics often deals with heat and work…

            So scientists are in need of measuring it..
            So work done could be measured by this formulae.

            Work done
            =pressure * volume
            [Pressure and volume are properties]

            Similarly when measuring heat
            =temperature * unknown

            Such unknown parameter is named as entropy..
            Further x is (=heat/temperature)
            confirmed as property.
            By
            Calculating it’s value in cyclic integral (cyclic integral of any property must be zero)

            So entropy is another property like temperature… Also it is affected by heat.
            By adding we increase systemic temperature and systemic entropy simultaneously.
            —————–
            Entropy simply mean it is a measure probability of increasing expansion of all systems.
            ————————
            Further such expansion is used in all thermodynamic systems…

            For further discussion my website: pico technology.org

    • இதுல என்ன பாய் சந்தேகம். அல்லாவே தான் …குன் ன்ணுணு சொன்னாரு ஆயிடுச்சு.

    • //நாம் வாழும் பூமியில் அத்துனையும் சரிசமாக வைத்து வாழும் அத்தனை உயிர்களும் உணவில் ஆரம்பித்து வாழும் நிலைக்கு தகுந்தார்போல் அமைத்து வைத்தது எது?//

      Nothing. Instead, think like this. No one adjusted the earth in a way that is required for a human/animal to live. Instead, human/animal evolved and started to live in a place where everything in mixed/adjusted in a proper way.

    • Good question.

      What created all the elements we needed was a super nova.
      How the right proposition?
      1. It took time to get everything right.
      (Earths age is 4.5 billion years. If that is the case, why it took god so much time to create species )

      2. randomness. If you have not played basketball ,but you start throwing the ball , and if you through the ball billion billion billion times, you may get it right.
      ( If God is powerful, and created everything, why he struggled to create one earth? )

      Why only earth?
      Science doesnt believe, only earth can sustain life. Kepler already started searching for earth like planets

    • இதே போல வாழ தகுந்த கிரகம் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது.

  6. மதங்களின் நிலைப்படை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனசிந்தனைடோ! எழுதப்பட்ட கற்பனை கட்டுரை என்று படிக்கும் பொது அறிந்து கொள்ள முடிகிறது.அறிவியல் அறிவு எல்லாவற்றுக்கு தீர்வு சொல்ல முடியாது.உதரணமாக அறிவியல் அறிவினை பயன்படுத்தி மனிதனால் தான் வசிக்கும் பூமிக்குள் உள்ளே ஓரளவுக்கு மேல் தான் செல்ல முடியும், பூமியின் அடிபாகதிற்கு செல்ல முடியாத நிலையிலையே அறிவியலின் நிலை உள்ளது. இந்த நிலையில் முழு உலகையும் தானே உருவானது என்பது அபத்தமான அறிவியல் சிந்தனையாகத்தான் பார்க்க முடிகிறது.

    • அறிவியல் சித்தாந்தங்களின் முன்னோடிகளில் பல முகமதிய சகோதரர்கள் உள்ளனர் என்பதைக்காட்டிலும் அவர்களே ஆரம்பம் என்றும் சொல்லலாம்.ஆனால் இன்றோ….. என்ன செய்ய 100 குதிரைத்திறன் கொண்ட நமது மூளை தூங்கும் போது நாம் இப்படித்தானே கேள்விகளைக் கேட்டுகொண்டே இருப்போம்.ஆடையின்றி அம்மணமாகத் திரிந்த நாம்,சில சிந்தனையாளர்களால்தான் இந்த நிலையை அடைந்தோம் என்பதைநினைவில் வைப்போம்.இதோடு மனித அறிவு நின்று விடப் போவதும் இல்லை.

    • //அறிவியல் அறிவினை பயன்படுத்தி மனிதனால்///

      மத நம்பிக்கைகளை பயன்படுத்தி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது !

      பல தலைமுறைகளாக ஒரு வேலையும் செய்யாது தூங்கி எழும் சோம்பேறிகள், மலையில் கல் உடைக்கும் உழைப்பாளிகளைப் பார்த்து ‘என்ன பெருசா செஞ்சுட்டீங்க? இவ்வளவு நாளா இத்தினியூண்டு மலையத்தானே உடைக்க முடிஞ்சுது, முழு மலையும் இன்னும் இருக்குல்ல’ என்று சொன்னால் எப்படி? 🙂

      அறிவியல் அறிவினை பயன்படுத்த மாட்டேன், மத நம்பிக்கையை மட்டும் தான் நம்புவேன் பயன்படுத்துவேன் என்று சொல்வதாக இருந்தால் இன்று யாராலும் வாழவே முடியாது. என்ன தற்கொலை செய்து கொள்ள தயாரா?

    • //அடுத்து நாம் ஒரு வால் நட்சத்திரத்தை பார்க்கிறோம். வால் நட்சத்திரங்கள், உறைந்த வாயுக்கள், பாறை மற்றும் தூசியை உள்ளடக்கிய அண்ட பனிக்கட்டிகளாகும். இவற்றில்உயிர் வாழ்வதற்கு தகுந்த சூழ்நிலை இல்லையெனினும், இவை தன்னகத்தே நம் பூமியில் உயிர்கள் உருவாவதற்கு அடிப்படை தேவையான தண்ணீர் மற்றும் கரிம சேர்மங்களை கொண்டிருக்கின்றன. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இதைப் போல் ஒரு வால் நட்சத்திரம் பூமியில் மோதி அங்கு தண்ணீர் மற்றும் கரிம சேர்மங்களை விட்டு சென்றது இங்கு உயிர்கள் உருவாக காரணமாக இருந்திருக்கலாம். அதே போல முன்னர் பூமியில் இதைப் போல் ஒரு வால் நட்சத்திரம் மோதியதால் தான் டைனோசர் இனமே அழிந்து போனது. அவ்வகையில் இவை படைக்கும் சக்தியாகவும், மீப்பெரும் அழிவு சக்தியாகவும் இருக்கின்றன//

      No No as Mr.shahulhameed said all the above are non sense.. Some Jins are standing in the space and throwing stones to drive away evil forces (as we throw stones at stray dogs in our streets).. This is the actual SCIENCE.. He He

    • ஆமாம் பாய், என்னா கற்பனை பாருங்க. “அல்லா குன் என்று சொன்னதும் இந்த உலகம் தோன்றியது.அல்லாஹ் வானத்தை கூரையாக படைத்தான்.சூரியனையும் ,நிலாவையும் வெளிச்சத்திற்காக படைத்தான். நட்சத்திரங்களை அலங்கார விளக்குகளாக படைத்தான்.எரியும் நட்சத்திரங்களை கொண்டு சைத்தானை விரட்டுகிறான். ” இப்படி ஆதாரத்தோட உண்மைய எழுதாம கற்பனை கதையெல்லாம் எழுதுறாங்க.

      • பிரம்மா தான் எல்லாவற்றையும் படைச்சான்னு சொல்றதையும், நாலு வர்ணங்களையும் நானே படைச்சேன்னு சொல்ற கிருஷ்ணனை பத்தியும் பேசுங்க பாஸ்.

  7. கால் வெளி அடர்த்தி மிக்க பொருள்களால் வளைக்கப்பட கூடியது என்று 100வருடங்களுக்கு முன் ஒருவரால் சிந்திக்க முடிந்ததே ஆச்சரியத்திலும் ஆச்சரியம்..ஐன்ச்டைன்னா சும்மாவா..

  8. Space is everywhere …but time is an illusion that is created due to events like bigbang expansion…there is no 4th dimension…we are not special things as now call ourselves as living things…just complex chemical reactions…

  9. சாகுல் அமீது அவர்களே, அறிவியலின் அறிவினை பயன்படுத்தி மனிதனால் தான் வசிக்கும் பூமிக்குள் உள்ளே ஓரளவு தான் செல்ல முடியும், பூமியின் அடிபாகத்திற்கு செல்ல முடியாத நிலையிலேயே அறிவியலின் நிலை உள்ளது என்று கூறுகிறீர்கள். சரி. அப்போது உங்கள் ஆன்மீகம் மூலம் பூமியின் அடிபாகத்திற்கு சென்று என்ன இருக்கிறதென்று அறிந்து வந்து இந்த அறிவியலாளர்களுக்கு நீங்கள் உதவலாமே 🙂 இல்லை உங்கள் மத நூல்களை கொண்டு (வேண்டுமென்றால் அனைத்து மதவாதிகளையும் சேர்த்துக்கொண்டு பைபிள், கீதை போன்ற மறைகளை கொண்டு) தற்கால அறிவியல் கேள்விகள் அனைத்திற்கும் விடை தேடி கண்டு பிடியுங்களேன். 🙂 இன்னும் எத்தனை காலம் தான் கி.பி.6௦௦ லேயே இருக்க போறீங்க, கொஞ்சம் 21ஆம் நூற்றாண்டுக்கு வாருங்களேன். மதத்தினை நன்னெறி வளர்க்கவும், ஒழுக்கமாக இருக்கவும், மனித குல அமைதி ஏற்படவும் பயன்படுத்துங்கள், அறிவியலை அதனோடு சேர்த்து குழப்ப வேண்டாம். ஏன் என்ற கேள்வி கேட்க கூடாதென்று மதம் சொல்கிறதென்றால் அந்த மதம் மனித மனம் விசாலமாக யோசிப்பதை தடுக்கிரதென்று அர்த்தம். ஏன் என்ற கேள்வி தான் அறிவியல் வளர்ச்சிக்கு மூலதனம். கண்மூடித்தனமாக அனைத்தையும் நம்பாமல் அனைத்தையும் பகுத்து அறிந்து ஆராய்ந்து யோசித்து பின் நம்புங்களேன்.

  10. We have just recently broken the Protons and Neutrons and found some sub atomic micro particles like quarks, leptons, muons, mesons, neutrinos, etc. As of now, Quarks are the smallest measurable particles which can only be viewed as a point or dot. As technology improves and if we are able to zoom further and find out what is inside the quark, we can get better ideas and solutions to many mysteries. Exciting days ahead in Science and Technology! Humans!! Just wait, We are on the verge of finding something really really important in mankind history and it is bound to happen sooner than later. I am sure, in our life time, this will happen. There are some inventions/discoveries which changed the history of man kind. Eg: Creating fire with Rocks and bamboos, Invention of the Wheel, Invention of Steam engine, Invention of Electricity, Breaking of Atom, Electronics, and now recently, the Hadron Collider Tunnel’s findings. The Next big thing in science is about to rise from the Horizon soon.

  11. அப்பாடா ! ஊழல், அவலம், கொடுமை, மோசடி, அதிகார துஷ்பிரயோகம் இவைகளையே வினவில் படித்து நொந்து நூலாகிப்போன போன எங்களுக்கு இந்த கட்டுரை ஒரு ரிலாக்ஸை கொடுத்தது எனலாம். எவ்வளவு படித்தாலும் அலுக்காதது பிரமிப்பானது,நிறைய மர்மங்களை உள்ளடக்கியது வானவியலாகும் (Astronomy) , !!

    • இதில் பிரச்சனை என்னவென்றால் அறிவியலை மட்டும்தான் நாம் ஆக்க வேண்டும்.கொடுமை,மோசடி,அவலம் போன்றவைகள் அழிக்கப்படவேண்டும்.ஆகையால் நொந்து நூலாகவேண்டாம்.அழிப்பதை அழித்து,ஆக்குவதை உருவாக்க முயற்சி செய்வோம்.

  12. அறிவியல் என்பது என்ன?

    மனிதன் தன்னை தானே அறிந்து கொள்வது தான் மிகப்பெரிய அறிவியலாக இருக்க முடியும்!…..?

    மிகப்பெரிய மேதைகள் அவர்களின் கண்டுபிடிப்புகள் எல்லாம் எவரும் சொந்தமாக உரிமை கோரிய முடியாது. எப்படி பார்த்தாலும் அவர்களின் முன்னோர்களின் பங்களிப்பு நிறையவே இருக்கும்.

    கணிதஅறிவின் சூத்திரத்தை வடிவமைத்தவர் அயன்ரையின் அல்ல. அவர்களின் முன்னோர்கள். அவர்களின் உழைப்பு இல்லை என்றால் அயன்ரையினே இல்லை. அதாவது தொடர்சியாக வருகிற கூட்டுஉழைப்பு தான் ஒரு வெற்றியின் ரகசியமாக இருக்கிறது.

    இதுவே மனிதவாழ்வின் மிகப்பெரிய ரகசியமும் பகிரங்கப் படுத்த வேண்டியதும் ஆகும்.

    குகைகளில் குளிர்களில் பயந்து ஒதுங்கி வாழ்ந்து வானந்திரத்தில் அலைந்த திரிந்தவர்களின் வாழ்வின் சேகரிப்புகளே இன்று நாகரீகமாக வெளிவந்திருக்கிறது. இதற்கு எந்த ஒரு தனிமனிதனும் உரிமை கோரமுடியாது.

    இது ஒட்டுமொத்த மனிதஉழைப்பின் வடிவம்.இந்த உழைப்பு இல்லையேல் பிரபஞ்சதைப் பற்றிய அறிவும் பூயியம்.

    உழைப்புதான் செல்வத்தை படைக்கிறது என்கிற வார்த்தை ஒரு சில தீர்கதரிசிகளின் வாய்யில் இருந்து உதிர்ந்த சொல் அல்ல.
    ஒட்டுமொத்த மனித வரலாற்றையும் ஆய்வுசெய்து வந்த இறுதி முடிவே அது. இதை இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

    பத்தொன்பதாம் நுற்றாண்டின் பிற்காலப்பகுதியில் மாக்ஸியத்தின் ஒருபாதியாக வீற்றிருந்த பி.ஏங்கல்ஸ் என்ன சொல்லுகிறார்….?

    பருபொருள் ஒரு நிரந்தர வட்டத்தில் அசைந்து செல்கிறது.அது முழுமையான வட்டம் ஆவதற்கு பிடிக்கும் காலத்தை அளக்க நமது பூவுலக ஆண்டு ஒரு போதுமான அளவு கோல் அல்ல:இந்த வட்டத்தில் உயிரும் உணர்வும் செயல்படுகிற இடைவெளி எப்படி குறுகலாக வரையறையப் பட்டிருக்கிறதோ அதைப்போலவே மிகச் சிகரமாக வளர்ச்சிக்கும் ஆகும் காலம் உயிர்ப்புள்ள காலம் குறுகலாக வரையறையப்பட்டுள்ளது.

    இதைவிட இயற்கையைப்பற்றியும் தங்களைப்பற்றியும் சுய உணர்வுள்ள ஜீவிகளின் வாழ்வுக்கான காலமும் குறுகலாக வரையறுக்கப் பட்டுள்ளது; இந்த வட்டத்தில் பருப்பொருளினுடைய குறிப்பிட்ட வரம்புள்ள ஒவ்வொரு நிலைநிற்பு உருவம்- அது சூரியன் அல்லது ஒளி முகிலான வாயிவுயாகினும்; ஒரு தனிப்பட்ட விலங்கோ அல்லது மிருக இனமோ ஆகினும் -இரசாயின சேர்க்கை அல்லது சிதைவோ ஆகினும் சரி சமமான அளவில் தற்காலிகமானது.இதில் எதுவும் நிரந்தரத் தன்மை கொண்ட தல்ல.

    ஆனால் சாஸ்வதமாக இயங்கியும் வருகிற பருப்பொருள்களும் எந்த நியதிக்குட்பட்டு அது மாறியும் இயங்கியும் வருகிறதோ அதுவும் சாஸ்துவமானவை.இருந்த போதிலும் காலத்திலும் இடவெளியிலும் இந்த சுழல்வட்டம் எவ்வளவு இரக்கமின்றி எத்தனை தடவை முழுமை பெற்றாலும் எத்தனை கோடி சூரியன்களும் பூமிகளும் தோன்றி மறைந்தாலும் ஒரு சூரியமண்டத்தில் ஒரே ஒரு கோளில் உயிர்ராசிகள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் உருவாக எவ்வளவு காலம் ஆனாலும் சிந்திக்கும் மூளையுள்ள விலங்குகள் தோன்றுவதற்கு முன்பு எத்தனையோ உயிர்ராசிகள் தோன்றி மறைந்தாலும் அவை தங்கள் வாழ்வுக்குப் பொருத்தமான சூழ்நிலைகளை ஒரு குறுகிய காலத்திற்கு பெற்று பின்னர் சற்று ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டாலும்- ஒன்று மட்டும் நிச்சியம்;பருப்பொருள் தனது எல்லா உருமாற்றங்களிலும் நிரந்தரமானது ஒன்றாகவே உள்ளது.அது தனது எந்த குணம்சம்தையும் இழப்பதில்லை;ஆகவே மேலும் அது பூமியில் எந்த எந்த உறுதியான நியதியின்படி தனது சிகரம் போன்ற படைப்பான சிந்திக்கும் மனத்தை அழித்துவிடுகிறதோ-அதே நியதியின்படி வேறு எங்காவது ஏதாவது ஒரு காலத்தில் மறுபடியும் உற்பத்தி செய்து தீரவேண்டும்.

    1875-1876 இல் பி.ஏங்கல்ஸ்சினால் எடுதப்பட்டவை.
    “இயற்கையின் இயக்க இயலுக்கு ஒரு முன்னுரை” என்னும் கட்டுரையில்.

  13. அருமையான கட்டுரை,

    ஆனால் உங்கள் கட்டுரை கடவுளின் இடத்தை காலி செய்கின்றதா?

    அல்லது அந்த படைப்பாளனை உறுதி செய்கின்றதா?.நான் உங்களைக் கூட்டிக் கொன்டு ஆக்ரா சென்று தாஜ் மகால் காண்பிக்கின்றேன். அதன் அழகைக் கண்டு வியக்கிறீர்கள். பாம்பன் கூட்டி வந்து கப்பல்-இரயில் போக்குவரத்துக்கான பாலத்தை கான்பிக்கிறேன். அதனைக்கண்டு வியக்கிறீர்கள். பிரான்சு சென்று ஈபில் கோபுரத்தைக் காண்பிக்கின்றேன். அதனைக் கண்டு பிரமிப்பு அடைகிறீர்கள். பிறகு உங்களிடம் கூருகிறேன், இவை எல்லாம் ஒரு வெடிப்புக்குப் பின் அதுவாகவே உருவாகியது என்று. இது போல் தான் உள்ளது உஙகள் கருத்து.

      • நல்ல கேள்வி நாகராஜ், ரபீக் அவர்களே: பெருவெடிப்பின் பின்னர் சூரியன் உள்ளிட்ட ஏனைய நட்சத்திரங்கள், பூமி உள்ளிட்ட பல கோடி கிரகங்கள் உருவாகின என்பதை தம்மால் ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றால் கடவுள் என்ற பரம்பொருள் எப்படி உருவானதென்று தங்களால் சொல்ல முடியுமா?

  14. சிறப்பான வீடியோ, விளக்கமும் நன்றாக இருந்தது.

    அறிவியலின் வளர்ச்சியை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. ஆனால் இன்றளவும் கடவுள் பேர் சொல்லி ஏமாத்துக்காரர்கள் இருப்பது வருத்தமாக தான் இருக்கிறது.

    //உங்கள் கட்டுரை கடவுளின் இடத்தை காலி செய்கின்றதா?

    அல்லது அந்த படைப்பாளனை உறுதி செய்கின்றதா? //

    இந்த அறிவியல் குறும்படத்தில் இருந்துக்கூட உங்களால் (முட்டாள்த்தனமாக) கடவுளுக்கு ஆதாரத்தை தேட முயற்சிக்க முடிகின்றதை போல நீங்கள் கூறும் அந்த கடவுளை கேள்விக்கு உள்ளாக்குக்கி பாருங்கள், அப்பதான் உங்களுக்கு அறிவியலே புரிந்து கொள்ள முடியும். சும்மா இந்த LKG பசங்க கேட்கற மாதிரி கேட்டுக்கிட்டு இருக்காதீங்க.

  15. நண்பர்களே,

    முட்டாள்தனம் என்பது எது?

    ஒரு அதிசயமான பொருள் நம் கண் முன்னால் இருக்கிறது என்றால், அதை செய்தவன் யார் என்று தெரியவில்லை. ஆனால் எவனோ ஒருவன் அதை செய்திருக்க வேண்டும் என்று சொல்வது முட்டாள்தனமா? அல்லது அது அதாகவே உருவாகியது என்று சொல்வது முட்டாள்தனமா? சற்று பகுத்தறிவோடு சிந்தியுங்கள்.

    சிவகாசிப் பட்டாசு வெடித்தேன். அது வெடித்து 7 வண்ணங்களில் வந்தது. அந்த 7 வண்ணங்களும் தனித்தனியே வெடித்து வெவ்வேறு வண்ணங்களாக வந்து ஒரு மலர் போல காட்சி அளித்தது. அந்த வெடியை ஒருவன் அது போன்று வடிவமைத்து உள்ளான் என்று நான் கூறினால் இது முட்டாள்தனம், அது அதுவாகவே இது போன்று ஆகிக் கொண்டது என்று நீங்கள் கூறுகிறீர்கள். இதில் எது முட்டாள் தனம்?

    அறிவியல் பூர்வம் என்று சொல்லி அறிவற்ற பூர்வமான கோட்பாடுகளை கூறுகிறீர்கள். எங்குமே அறிவியல், படைப்பாளன் இல்லை என்று சான்று பகர முடியவில்லை. இதில் நீங்கள் கூறுவது இருக்கட்டும். புவி ஈர்ப்பு விசையைக் கண்டறிந்த சர் ஐசக் நீயூட்டன் என்ற விஞ்ஞானியைப் பற்றி தெரியுமா. பிறப்பிலே அவர் கிறிஸ்துவர். ஆனால் அவருக்கு முக்கடவுள் தத்துவம், தந்தை கடவுள், மகன் கடவுள் என்று நம்பிக்கை இல்லை. ஆனால் இந்த பிரபஞ்சம் என்பது படைப்பாளன் இல்லாமல் இல்லை என்பதில் ஆனித்தரமாக இருந்தார். ஆனால் அந்த விஞ்ஞானிக்கு புரிந்தது உங்களுக்கு முட்டாள் தனமாக உள்ளது.

    இதில் அறிவு பூர்வமான கேள்வி ஒன்று, எல்லாவற்றையும் படைத்த இறைவனை யார் படைத்தது? இது உண்மையிலேயே ஒரு அறிவு பூர்வமான கேள்விதான்.

    இதற்கும் அறிவியல் பதில் சொல்லி உள்ளது. (இதற்கு கொஞ்சம் கணித அறிவும் அறிவியல் அறிவும் இருக்க வேண்டும்). உங்களைப் படைத்தவரை படைத்தவரை படைத்தவரை …..படைத்தவர் இறைவன் என்றால் அந்த இறைவனைப்படைத்தது யார்? இறைவனைப் படைத்தவர் ஒருவர் இருப்பாரேயானால், இறைவனைப் படைத்தவனைப் படைத்தவர், அவரைப்படைத்தவர் , அவரைப்படைத்தவர்….இது போன்று இன்fஇனிடெ ப்ரொசெச்ச் நடக்க வேண்டும். அது இன்fஇனிடெ ப்ரொசெச்ச் இல்லை என்பதற்கு ஆதாரம் நீங்கள் fஇனிடெ ஆக இப்போது உயிருடன் இருப்பது. ஆக இறைவனுக்கு இலக்கணமே, யாராலும் படைக்க முடியாத படைப்பாளி என்று அறிவியல்தான் கூருகிறது. மன்னிக்கவும், இன்fஇனிட்ய் என்றால் என்ன என்று தெரிந்தால் தான் இதைப்புரிந்து கொள்ள முடியும்.

    ஆகவே எதற்கெடுத்தாலும் அறிவியல் என்று கூறும் நீங்கள், உன்மையிலேயே அறிவியல் என்ன கூறுகிறது என்று சற்று ஆராய்ச்சி செய்யவும்.

    நான் எதுவும் மனது புன்படும்படி சொல்லியிருந்தால் மன்னிக்கவும். அதை உங்கள் பதிலிலும் எதிர்பார்த்து….

    …ரபிக்

    • முடிவிலி(infinity) என்பதையும் விளக்க முடியும்

      இப்பொது ஒரு லென்சை எடுத்து ஒரு பொருளை 2F இல் வைத்தால் அதன் பிம்பம் F க்கும் 2F க்கும் நடுவில் இருக்கும் அதெ போல் 2F க்கும் F க்கும் இடையில் அந்த பொருள் இருந்தால் அதன் பிம்பம் 2Fக்கு பின் இருக்கும் அதே போல் F இல் இருந்தால் அதன் பிம்பம் தொலைவில் இருக்கும் (infinity) அதே பொருள் தொலைவில்(infinity) இருந்தால் பிம்பம் F இல் இருக்கும்.2Fஐ கடந்து ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு பின் அந்த பொருளை எங்கு வைத்தாலும் அதன் பிம்பம் F இல் தான் இருக்கும்.

    • நான் ஒரு கட்டுரையால் படித்தேன் ஒருவன் நாத்திகனிடம் வாதிடும்போது அவன் பலவகையீல் கடவுள் irukirar என்று நிரூபிக்க முயற்சி செய்வான் அனால் நாத்திக கேள்விகளுக்கு ஒரு கட்டத்தில் பதில்கூறமுடியாமல் போகும்போது அவனுடைய மத கடவுளை விட்டு அவன்படைப்பாளன் என்ற ஒரு பொதுவான பெயரை வைத்து வாதம் செய்யமுற்சிக்கிறான் காரணம் அவன் கடவுள் மதக்கடவுளை நான் மதக்கடவுளை விட்டு அவன்படைப்பாளன் என்ற ஒரு பொதுவான பெயரை வைத்து வாதம் செய்யமுற்சிக்கிறான் காரணம் அவன் கடவுள் மறுப்பை ஏற்று koகொள்கிறான் அப்படியிருக்கிறது உங்கள்வாதம் நண்பர் ரபீக் அவர்களே

  16. ஐயா ரபீக் அவர்களே, அறிவியல்வாதிகள் மதவாதிகள் போல அடம் பிடிப்பவர்கள் அல்ல. உங்களிடம் சான்று இருந்தால் கொடுங்கள் ஆராய்சிக்குப் பிறகு ஏற்றுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. புறந்தள்ளவும் வாய்ப்பிருக்கிறது. இதுதான் உண்மை என்று என்னிடம் ஒருவர் சொன்னார், அவரிடம் இன்னொருவர் சொன்னார், அவரிடம் வேரொருவர் சொன்னார் என்று அடுக்கிக் கொண்டே போவதை அறிவியல் என்றுமே ஏற்றுக் கொள்ளாது. ஒன்றை சொல்லி விட்டு எந்த ஆராய்சியும் இல்லாமல் எற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்க முடியாது. இல்லையென்றால் ஆளாளுக்கு ஒன்றை சொல்லிவிட்டு முடிந்தால் இல்லை என்று நிரூபியுங்கள் என்று சவால் விடுவார்கள்.நான் கூடத்தான் சொல்லுவேன், கண்ணுக்கு தெரியாத யானை என் வீட்டில் இருக்கிறது , முடிந்தால் இல்லையென்று நிரூபியுங்கள் என்று. ஏன் இத்தனை மதங்கள் இருக்கிறது என்று தெரிகிறதா ? எல்லாருமே எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தாந்தான் சரி என்கிறார்கள் . எது சரியானது என்று முடிவு செய்ய ஆதாரம் வேண்டும்.நம்பிக்கை மட்டுமே போதாது. நீங்கள் சொல்லும் பட்டாசு கதை அரத பழையது. பட்டாசை ஒருவன் படைத்தானானால், பட்டாசு செய்தவனையும் ஒருவன் படைத்திருக்க வேண்டும் என்பதுதானே உங்களது லாஜிக் ? இதற்கு எதிர் லாஜிக்கும் இருக்கிறது. பட்டாசு செய்தவன் ஒரு நாள் மறிப்பானானால், பட்டாசு செய்தவனை படைத்தவனும் ஒரு நாள் மரித்துத்தானே ஆக வேண்டும். இப்படியே மாற்றி மாற்றி உவமைகளையும் உவமானங்களையும் சொல்லிக் கொண்டே போகலாம். இதுவெல்லாம் பேச வேண்டுமானால் நன்றாக இருக்கும். நிரூபணம் ஆகாது. சுருக்கமாக சொல்லப் போனால், ஆதாரம் இருந்தால் கொடுங்கள், விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆராய்ச்சி செய்து முடிவை சொல்கிறோம். ஆராய்ச்சியின் முடிவை ஏற்றுக் கொள்ள நீங்கள் தயாரா ?

  17. இந்த அண்டம் எப்படி உருவானது என்று வேதம் என்ன கூறுகிறது என்றும் பாருங்கள்.
    http://en.wikipedia.org/wiki/Nasadiya_Sukta

    Nasadiya Sukta
    नासदासींनॊसदासीत्तदानीं नासीद्रजॊ नॊ व्यॊमापरॊ यत् ।
    किमावरीव: कुहकस्यशर्मन्नभ: किमासीद्गहनं गभीरम् ॥१॥

    Then even nothingness was not, nor existence,
    There was no air then, nor the heavens beyond it.
    What covered it? Where was it? In whose keeping
    Was there then cosmic water, in depths unfathomed?

    न मृत्युरासीदमृतं न तर्हि न रात्र्या।आन्ह।आसीत् प्रकॆत: ।
    आनीदवातं स्वधया तदॆकं तस्माद्धान्यन्नपर: किंचनास ॥२॥

    Then there was neither death nor immortality
    nor was there then the torch of night and day.
    The One breathed windlessly and self-sustaining.
    There was that One then, and there was no other.

    तम।आअसीत्तमसा गूह्ळमग्रॆ प्रकॆतं सलिलं सर्वमा।इदम् ।
    तुच्छॆनाभ्वपिहितं यदासीत्तपसस्तन्महिना जायतैकम् ॥३॥

    At first there was only darkness wrapped in darkness.
    All this was only unillumined water.
    That One which came to be, enclosed in nothing,
    arose at last, born of the power of heat.

    कामस्तदग्रॆ समवर्तताधि मनसॊ रॆत: प्रथमं यदासीत् ।
    सतॊबन्धुमसति निरविन्दन्हृदि प्रतीष्या कवयॊ मनीषा ॥४॥

    In the beginning desire descended on it –
    that was the primal seed, born of the mind.
    The sages who have searched their hearts with wisdom
    know that which is is kin to that which is not.

    तिरश्चीनॊ विततॊ रश्मीरॆषामध: स्विदासी ३ दुपरिस्विदासीत् ।
    रॆतॊधा।आसन्महिमान् ।आसन्त्स्वधा ।आवस्तात् प्रयति: परस्तात् ॥५॥

    And they have stretched their cord across the void,
    and know what was above, and what below.
    Seminal powers made fertile mighty forces.
    Below was strength, and over it was impulse.

    कॊ ।आद्धा वॆद क‌।इह प्रवॊचत् कुत ।आअजाता कुत ।इयं विसृष्टि: ।
    अर्वाग्दॆवा ।आस्य विसर्जनॆनाथाकॊ वॆद यत ।आबभूव ॥६॥

    But, after all, who knows, and who can say
    Whence it all came, and how creation happened?
    the gods themselves are later than creation,
    so who knows truly whence it has arisen?

    इयं विसृष्टिर्यत ।आबभूव यदि वा दधॆ यदि वा न ।
    यॊ ।आस्याध्यक्ष: परमॆ व्यॊमन्त्सॊ आंग वॆद यदि वा न वॆद ॥७॥

    Whence all creation had its origin,
    he, whether he fashioned it or whether he did not,
    he, who surveys it all from highest heaven,
    he knows – or maybe even he does not know.

    http://en.wikipedia.org/wiki/Hindu_cosmology

    • இந்த வேத வாக்கியங்களில் ஏதாவது தெளிவாக இருக்கிறதா…அறிவியல் ஆதாரங்களுடன் ,பல ஆராய்ச்சிகள் செய்து கண்டறிவதும் , கற்ப்பனை வேத புத்தகங்களும் எப்படி ஒன்றாகும்.
      அறிவியல் கருத்துக்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால், அறிவியல் நூலில் தேடு .மத புத்தகத்தில் அறிவியலை தேடுவது மலத்தில் அரிசி பொருக்குவதற்க்கு ஒப்பாகும். – Thandhai Periyaar

        • Kishorekumaru,arikumaru….
          மொதல்ல அறிவியல் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டு பேசவும். இவளோ விளக்கங்களை தெளிவாக அறிவியல் கொடுக்கும் போதும், நான் புராண வேத குப்பைல இருக்க மலத்துல தான் அறிவியல் அரிசி இருக்கா என்று தேடுவேன் என்றால் தேடிக்கோங்கப்பா …

          • what clarity did u get from these theories?

            ashvin,

            seriously,do u even know what u r talking about?

            go see what einstein said about the vedas and the information hidden in them,i know this is vinavu,nothing meaningful is ever discussed here but seriously.

            before u talk,just analyze what every word u mention mean and whether u really know that?

            I am an Engineering professor myself and capable of independent thought,i dont lick periyar’s feet or a white man’s.

            • //I am an Engineering professor myself// எப்படி அரிசி பொறுக்கறதுங்கரதிலையா .

              // am an Engineering professor myself and capable of independent thought,i dont lick periyar’s feet or a white man’s.//
              நான் புராண வேத குப்பைல இருக்க மலத்துல தான் அறிவியல் அரிசி இருக்கா என்று தேடுவேன் என்றால் தேடிக்கங்க

      • @ அஷ்வின்: இப்படி தான் இவர்கள் வேதங்கள், மறைகள் ஓதியது, குரான் கூறியது, நாஸ்டர்டாமஸ் சொன்னது என்று சில குறிப்பு (Cryptic) வாக்கியங்களுக்கு இவர்கள் புது வியாக்கியானம் கொடுத்து, எல்லா தற்கால அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், தற்கால நிகழ்வுகள் பற்றியும் எங்கள் வேதங்கள், மதங்கள் அப்போதே சொல்லி விட்டன என்று பம்மாத்து விடுகிறார்கள். என்ன செய்வது.

        அஷ்வின், ஒரு சிறிய விண்ணப்பம்: உங்களுக்கும் சரி, வினவில் எழுதும் மற்ற நண்பர்களுக்கும் ஒரு சிறிய வேண்டுகோள். தங்களது கருத்துக்களை ஆணித்தரமாக கூறுங்கள், தவறில்லை, அதனுடன் அருவருப்பான வார்த்தைகளை ஏன் உபபோகப்படுத்துகிறீர்கள்?

        இனிய உளவாக இன்னாத கூறல், கனியிருப்ப காய் கவர்ந்தற்று. தாங்கள் சொல்ல வந்த கருத்துக்களை நல்ல வார்த்தைகளின் மூலமே சொல்லலாமே. வேகமாக விவாதியுங்கள், விவேகமாக விவாதியுங்கள், அருவருப்பான வார்த்தைகள் ஏன்?

      • நண்பரே ashvin உங்களின் அணைத்து பதிலையும் பார்த்தேன் மிக சிறப்பு நண்பர் ரபீக் கு பதில்கொடுத்த விதம் அருமை

  18. நாத்திகர்களை பொருத்துவரை அமெரிக்கன் கண்டுபிடித்தது, அமெரிக்க கோட்பாடுகள் மட்டுமே உண்மை, இந்திய கோட்பாடுகள் அனைத்தும் பொய்.

    • அமெரிக்கன் கண்டுபிடிச்சா மட்டுமில்ல இந்தியன் கண்டுபிடிச்சாலும் அறிவியல் தான். ஆனா,கற்பனை கதையை, மத புத்தக உளரல்களை எல்லாம் அறிவியலாக ஒத்து கொள்ள முடியாது.

    • @ கிசோர் குமார்: அமெரிக்க கோட்பாடாக இருந்தாலும் இந்திய கோட்பாடாக இருந்தாலும் அறிவியல் ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டால் நாங்கள் ஏற்றுக்கொள்ளவே செய்வோம். நாத்திகம் என்ற வார்த்தை தமிழில் இல்லை. வேண்டுமென்றால் எங்களை பகுத்தறிவாளர்கள் என்று அழையுங்கள்.

    • இந்த ஒரு பொய்யை இன்னும் எதனை காலம் சொல்லபோறிங்க, இந்திய தத்துவ வரலாற்றில் நாத்திக கருத்துகள் தான் அதிகம், அணைத்து ஆத்திக கருத்துகளையும் அப்பொழுதே அடித்து வீழ்த்தி விட்டார்கள் நமது பொருள் முதல் வாதிகள், ஆனால் என்ன இவைகளை பள்ளி பாட புத்தகங்களில் காண முடியாது.

  19. இந்த அண்டம் உருவாகவும் இல்லை ஆலிவதும் இல்லை, அது எப்போதுமே என்றென்றும் இருக்கிறது அதன் தன்மை மட்டும் மாறி கொண்டே இருக்கும் என்று “Modern Science” சொல்கிறது.அதேதான் ஹிந்து வேதமும் சொல்கிறது. “Cyclic Universe Model” இதைதான் அறிவியல் ஆயிவாளர்கள் பரவலாக ஏற்றுக்கொண்டது, இது ஹிந்து வேததில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குறிபிடபட்டுள்ளது,இதை நான் ஒண்ணும் கடவுள் தந்தது என்று கூறவில்லை, அந்த காலத்தில் ஏதோ ஒரு தோலில்நுட்ப்பம் பயன்படுதி இதை கண்டுபிடித்து எழுதியுள்ளனர். நான் கொடுத்த wikipedia link பார்க்கவும். நாங்கள் பயன்படுத்தும் அறிவியல் முறை மட்டுமே உண்மை மற்றவை அனைத்தும் போயி என்று இந்த மேற்குலகில் கூறுவார்கள், அதை மட்டும்தான் நாத்திகர்களும் நம்புவார்கள்.

  20. இன்றுவரை வேப்பமரத்தின் மருத்துவ குறுப்புகள் பற்றி இந்தியர்களுக்கு மட்டுமே அதிகமாக தெரியும்.நம்மாள்வார் ஜெர்மன் சென்று வேப்பங்குச்சி வைத்து வாதாடி வெப்பமரத்தில் இருந்து தேயாரிக்கபடும் பொருட்களுக்கான காப்புரிமை இந்தியாவிற்கு வாங்கி கொடுத்தார்.நம்மாள்வாரும் நாத்திகர்த்தான்.

  21. சரி ஐய்யா,அப்போது ஹிந்து மதத்து புராணங்கள் மற்றும் வேதங்களில் ஒரு சதவிகிதம் குட உண்மையில்லை அனைத்தும் பொய் என்கிறீர்களா?.

    • //சரி ஐய்யா,அப்போது ஹிந்து மதத்து புராணங்கள் மற்றும் வேதங்களில் ஒரு சதவிகிதம் குட உண்மையில்லை அனைத்தும் பொய் என்கிறீர்களா?.//
      தல ,ஒரே ஒரு விசயத்த புரிஞ்சிக்கோங்க. மதம் என்பது கூட மனித அறிவின் தேடலில் ,தெரியாத கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்க முடியாதபோது உருவானது தான். சில விசயங்களில் உண்மை இருக்கலாம் . அறிவியல் என்றாலே மேற்கத்திய என்று நினைக்க காரணம்,அவர்களின் பங்கு அதிகமாக இருப்பது தான். நாம் புராணத்துல அறிவியல தேடுனோம், நாம தாயுமானவர் சொன்னாரு, திருமூலறு சொன்னாரு, ஆதியும் அண்தமும் என்றாரு, சிதம்பர ரகசியம் னாரு என்று ஆதாரமில்லாத ஆய்விகள் செய்ய முடியாத புத்தகங்களில் அறிவியலை தேடுகிறோம். அவர்கள் , கடுமையான தொடர் ஆராய்ச்சிகளின் பயனாக கண்டுபிடித்தனர், எல்லோருக்கும் அறிவித்தனர். குறிப்பாக சொல்லும் தெளிவற்ற புரியாத மத புத்தகத்தில் இருப்பது அறிவியலா, இல்லை பலரின் ஆராய்ச்சியின் பலனாக கிடைத்த ஆராய கூடிய ,சோதித்து அறிய கூடிய உண்மைகள் அறிவியலா ?

        • Please give me some Hindu text which are proved scientifically(If u meant RSS by “proper source” sorry we don’t accept) by some reputed scientific institution… We r ready to accept if valid proof is given…Don’t say a story like.. Two foxes where circling a tree.. And say the foxes are electrons and the tree is the nucleus so HINDU text has science…

          • Jenil,

            All these are theories.Please understand that your so called reputed scientific organization even with a Hubble’s telescope also merely pays lip service to theories.

            These are not proven in any lab,nor is there any time machine travel to go back and verify them.It would be of great help if u actually try to have an independent opinion instead of playing this game.

            • //All these are theories.Please understand that your so called reputed scientific organization even with a Hubble’s telescope also merely pays lip service to theories.
              //

              Everything starts as a theory MR. Harikumar… Eienstien’s theory of Time Dilation took 100 years to be practically observed… So wat we have to look does the theory has a scientific basis… Einstien proved it mathematically time dilation happens… We got the actual obnservation long after his time… But the point is his claim is based on scientific facts…

              How did the BIG BANG THEORY came into existemce.. It didnt come because some idiot had enough food and enough banyan leaves to write wat ever he wanted… And after 1000 years ppl like u claim it a ANCIENT INVENTION said in clues… Coming to the story of BIG BANG…

              Wen scientists observing lights from distant stars.. They found that the light takes more time to reach and also fades along with time.. so they proposed that the universe is expanding and it started from a single point… Also now most of the latest observations support this theory to be valid… still if someone comes up with a new theory which has more scientific evidence that will takes the place of BIG BANG… This is how SCIENCE works…. http://en.wikipedia.org/wiki/Big_Bang (please read the first [assage carefully)

              • That’s all fine but someone came up with the theory first before testing it practically,u don’t go and test something randomly,u go with a hunch n intuition.

                so who came up with that?

                • It is not all the time that some one should start form theory. for examples quantum mechanics was formed to explain some of the experimental findings which a cannot be explained by the classical theory. Electromagnetic theory also formed to explain the experimental findings. Even Einstein formed relativity to explain the explain the transformation of light. (It won’t follow the Galilean transformation)

                  Even if you go with intuition science won’t work. because the scientific methodology is not hold by any authority. It seeks proof, thats why modern scientific methodology(after Galileo) are better to understand the nature. even you can disprove it, if it is not working for you.

                  But your vedas are written with a intuition. that’s why you people are still supporting a 2000 year old use less work which made to exploit the society for few.

                  • Nice answer except the last paragraph.

                    Why should the vedas negate science?

                    if u r talking for the dalits,i agree but that was also a political punishment but regardless they have reasons to be angry.

                    Intuition is fundamental,science just verifies the intuition.

                    U confuse the vedas & Manusmriti and i doubt if people know the second also clearly.

                    • முதலில் வேதங்களையும் அறிவியலையும் நீங்கள் எப்படி ஒப்பிட முடியும் ?
                      வேதத்தில் என்ன அறிவியல் பூர்வமான விசயங்கள் இருக்கிறது?

                      நான் என்னுடைய பின்னூட்டத்தில் கூறியதை (27) படித்து பாருங்கள்

                      வேதத்தை எழுதியவருடைய புரிதல் 3000 வருடம் முன்னால் உள்ள சமூகத்தினுடையது. எப்படி அரிஸ்டாட்டில் 2000 வருடங்களுக்கு முன்னால் தன்னுடைய காலகட்டத்தில் சமுகத்தை புரிந்து வைத்திருந்தாரோ அது போன்றது. இவர்கள் கூறியது அறிவியல் அல்ல அது வெறும் கூற்று. இந்த வழிமுறையை வைத்து ஒரு விசயத்தை விளங்கிக்கொள்ள முடியாது.

                      நீங்கள் கூறும் இந்த “Intuition is fundamental” என்பது கருத்து முதல்வாதக் கண்னோட்டம்(Idealistic) என்பதாகும்.இதை தான் மார்க்சியம் அறிவியல் அற்றது என்று கூறுகிறது.

                      you are getting intuition from the surroundings only. so the matter only influence your thought which reflects as intuition.

                      if intuition does every thing then answer why theory of relativity should come after Newton’s law and Maxwell’s Electromagnetic theory. why Experimental science should develop during 15th century. why nobodies intuition thought about it for long time?

                      //science just verifies the intuition//

                      Science is a methodology. using this you can try to understand the things around you. if you want you can test your intuitions with science.
                      (சமீபத்தில் உள்ளுணர்வாள் உந்த பட்டு மோடிக்கே சவால் விட்ட தங்க சாமியார் போல)

                      //U confuse the vedas & Manusmriti and i doubt if people know the second also clearly.//

                      அம்பேத்கார், பெரியார் மற்றும் பலர் வேதத்தை பற்றியும், மனுசாஸ்திரத்தை பற்றியும் பல புத்தகங்கள் எளிய மக்களுக்கு புரியும் படி எழுதி இருக்கின்றனர். அதற்கு வேண்டுமானால் நன்கு புரிந்த நீங்கள் முதலில் பதில் கூறுங்கள்.

                      குறிப்பு: அம்பேத்கார் மனுசாஸ்திரத்தை படித்து, அதனுடைய நோக்கம் புரிந்ததால் தான் எரித்தார்.

        • மொதல்ல அறிவியல் என்றால் என்ன வென்று தெரிந்து கொண்டு வாங்க, சும்மா இங்க இருக்கவங்க நேரத்தை வீணடிக்காதங்க.

  22. கிசோர் குமார் அவர்களே, இந்து மத புராணங்கள் மற்றும் வேதங்களில் எத்தனை சதவீதம் உண்மை உள்ளது என்று நீங்கள் தான் கூற வேண்டும். பாற்கடல் உள்ளே விஷ்ணு படுத்திருப்பது, விஷ்ணுவின் வயிற்றில் இருந்து ஐந்து தலையுடன் பிரம்மா உருவானது, பிரம்மனின் ஐந்தாவது தலையை சிவன் கில்லி எரிந்தது பிரம்மன் நான்முகனான கதை, வராக அவதாரம் எடுத்த விஷ்ணு பூமியை கடலுக்கடியில் இருந்து மீட்டு வந்தது, பூமாதேவியை வராக அவதாரத்திலிருந்த விஷ்ணு புணர்ந்தது, பாற்கடலிலிருந்து அமுதம் எடுத்த கதை, விஷ்ணு பெண் அவதாரமெடுத்து அசுரர்களை ஏமாற்றி அமுத கலசத்தை திருடியது, இராகு என்ற அரக்கன் தேவர்கள் வரிசையில் அமர்ந்து அமுதத்தை விழுங்க யத்தனித்தது. சூரியன் மற்றும் சந்திரன் கண் காட்டியதில் விஷ்ணு இராகுவை கண்டறிந்து அமுதை விழுங்கிக்கொண்டிருக்கும்போதே அவனது தலையை கொய்ததால் தலை வேறு உடல் வேறாக (இராகு மற்றும் கேது கிரகமாக மாறியது. சூரியன் மற்றும் சந்திர கிரகணம் சமயத்தில் இந்த இராகு அவர்களை விழுங்கி, வெட்டுபட்ட கழுத்து வழியே அவர்களை மீண்டும் வெளியேற்றுவது, விஷ்ணுவின் மோகினி வடிவத்தில் மயங்கி சிவன் விஷ்ணுவுடன் புணர்ந்து ஐயப்பன் என்ற குழந்தையை பெற்றெடுத்தது, சிவன் தன் தலையில் இன்னொரு துணைவியான கங்கையை வைத்திருப்பது, அதே கங்கையை மகாபாரதத்தில் சாந்தனு மன்னன் மணந்தது, கசன் என்ற தேவனை தெரியாமல் உண்டு விழுங்கிய பிரகஸ்பதியின் வயிற்றை பிளந்து கசன் மீண்டும் உயிர் பெற்று எழுந்து பிரகஸ்பதியின் உயிரையும் எழுப்பி காப்பாற்றியது, பத்து தலை இராவணன், சிவனின் கயிலாய மலையையே தூக்கிய இராவணன், பேசும் வானரங்களாக அனுமன், சுக்ரீவன், மயில் மேல் உட்கார்ந்து கொண்டு உலக உருண்டையை சுற்றி வந்த முருகன், இந்த கதைகளில் எத்தனை சதவீத உண்மையை நாங்கள் நம்புவது? பின்குறிப்பு: நம்மாள்வாரின் இயற்கை விவசாயத்திற்கு நாங்கள் எதிரி அல்ல, வேப்ப மரம், மஞ்சள், இவற்றின் மருத்துவ குணங்களை நாங்கள் அறியாதவர்களும் அல்ல. உண்மைக்கு புறம்பான புராண கதைகளை தான் நாங்கள் நம்ப மறுக்கிறோம்.

  23. பிக் பேங் தியரி பற்றி ஒரு சில கட்டுரைகளும், ஒரு எளிய புத்தகமும் படித்து மண்டை காய்ந்தபின் எனக்கு கிடைத்த ‘புரிதலை’ இங்கே போட்டு வைக்கிறேன். ராமன் இந்த வகையில் சில கருத்துக்களை ஏற்கனவே சொல்லி உள்ளார்.

    பிக் பேங் நடக்கும் முன் என்ன இருந்தது என்பது அர்த்தமற்ற கேள்வி, ஏனெனெனில் காலம் என்பதே பிக் பேங் போது தான் தொடங்கியது என்கிறார்கள். ஆதியில் வெளி (space) என்பது சுருங்கி இருந்தது, அதில் ஆற்றல் (energy) இருந்தது. பிக் பேங் சமயத்தில் வெளி அதி வேகமாக விரியத் தொடங்கியது. பிறகு ஆற்றல் சில வகை அணுத்துகல்களாக மாறி விட்டது. எப்படி எனில் ஆற்றல் என்பதும், அணுத்துகள்கள் போன்ற பொருள் (மேட்டர்) என்பதும் ஒன்றுக் கொன்று மாற்றிக் கொள்ளக் கூடியவை. இது வரை சொன்னது சுத்தமாக எனக்கு புரியவில்லை. எப்படியோ அணுத்துகள்கள் உருவான பின் பின்னர் அவற்றில் இருந்து இன்று காணப்படும் இரும்பு, ஆக்சிஜன் என அனைத்து தனிமங்களும் உருவாகின. இந்த இரண்டாவது விஷயம் ஓரளவு புரிந்தது. எல்லாம் சரி. அந்த ஆற்றல் எங்கிருந்து வந்தது? விடை கண்டுபிடிக்கப் படவில்லை. எனது புரிதலின் படி பிக் பேங் தியரி அண்டத்தின் (universe) பரிணாம வளர்ச்சி அல்லது வரலாற்றை பற்றி பேசுகிறது; அது எப்படி வந்தது என்பது பற்றி பேசவில்லை. Big bang theory talks about the evolution of the universe, but it does not tell us as to how the universe came into existence.

    மேலே சொன்ன வகை விளக்கங்கள் அடங்கிய இரண்டு மாதிரி சுட்டிகள் கீழே. ஹார்வர்ட் மற்றும் நாசா தளங்களில் இருந்து சுட்டவை:

    http://www.cfa.harvard.edu/seuforum/questions/

    மேலே உள்ள சுட்டியில் இருந்து ஒரு கேள்வி பதில்.

    ******
    Was the Big Bang the origin of the universe?

    It is a common misconception that the Big Bang was the origin of the universe. In reality, the Big Bang scenario is completely silent about how the universe came into existence in the first place. In fact, the closer we look to time “zero,” the less certain we are about what actually happened, because our current description of physical laws do not yet apply to such extremes of nature.

    நாசா சுட்டி :

    http://imagine.gsfc.nasa.gov/docs/ask_astro/answers/090710.html

    ————————————————————–

    இந்த கட்டுரை என்னை கவரவில்லை. “உலகம் தோன்றியது எப்படி” என தலைப்பு வைத்த பின், அன்ட்ரமேடா, நெப்டியூன் என பேசிக் கொண்டிருந்தால் எப்படி! Planck era, space-time curvature, singularity என்ற ரீதியில் இருக்க வேண்டாமா. “இந்திய வரலாறு” என பேசத் தொடங்கியபின், எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் 1933 இல் கொருக்குப்பேட்டை ராமசாமி அவர்களால் கட்டப்பட்டது என லோக்கல் மேட்டரா பேசுவது?

    —————————————————-

    கடைசியாக, இந்த அறிவியல் விஷயங்கள் மிகுந்த ஆர்வத்தை தூண்டினாலும், பொய்யோ, பிதற்றலோ, புராணக் குப்பையோ, “அண்டமும் தானாய் நின்றவெம் பெருமான் அரங்கமா நகரமர்ந்தானே” என்பது என்னளவில் மன அமைதி தருகிறது. எனினும், இந்த வாக்கியத்தின் பொருள் என்ன என்பதும் புரியவில்லை என்பதையும் சொல்ல வேண்டும்!

    • Science also has some singularities now… May be such singularities may be cleared in future….

      Anything that cannot be explained scientifically or mathematically is singularity…..விளக்கமுடியாதவைகள்

      I think science now go in the direction of wave physics… Not in the direction of particle physics…

  24. மதங்கள் வேறு வேறாக இருப்பினும், மதத்தின் குறிக்கோளும், மதவாதிகளின் அனுகுமுறையும் ஒரே மாதிரி தான் இருக்கிறது என்பது மேலே இட்ட பின்னூட்டங்களில் இருந்து தெரிகிறது.

    பொதுவாக மதப் பிரச்சனைகளில் அடித்துக் கொள்ளும் இந்துத்துவாதிக்களும், இஸ்லாமியர்களும், இந்த உலகம் தோன்றிய விசயத்தில் அறிவியல் ரீதியிலான விவாதத்தை ஒன்றாக சேர்ந்து ஏற்க மறுக்கின்றனர் (எந்த கடவுள் படைத்தான் என்று பிறகு பார்த்துக் கொள்வோம் முதலில் இந்த அறிவியல் ரீதியான வாதத்தை எதிர்க்க வேண்டும் என்பது தான் இங்கே இவர்களின் குறிக்கோள்)

    கடவுள் உலகத்தை படைக்கவில்லை என்பதை ஒத்துக் கொள்வது ஒருபுரம் இருக்கட்டும். மதவாதிகள் யாரும் புனிதமாக கருதும் தங்கள் மத புத்தகத்தை “கடவுள் எழுதவில்லை” என்பதையே இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை. இவர்களிடம் அறிவியல் பூர்வமாக சிந்திக்க வேண்டி எதிப்பார்பது ரொம்பவே அதிகம் தான்.

    ஒரு எடுத்துக்காட்டுக்கு, அறிவியல் கடவுளால் இந்த பிரபஞ்சம் உருவாக வில்லை என்று நிறூபித்தால்கூட, இந்த மதவாதிகள் என்ன ஒப்புக்கொள்ளவா போகிறார்கள் ?

    இவர்கள் அறிவியல்பூர்வமாக மட்டும் அல்ல சராசரி மனித அறிவின் வளர்ச்சி அடிப்படையில் கூட சிந்திக்கவில்லை.மனித அறிவு காலம் காலமாக மேம்பட்டு கொண்டுதான் வருகிறது. அதனுடைய வளர்ச்சி இந்த சமுக வளர்ச்சியோடு தொடர்புடையது.

    தற்போது இருக்கும் மனிதனை விட 2000 அல்லது 1000 வருடங்களுக்கு முன்னால் இருக்கும் மனிதனின் அறிவியல் அறிவும் அவனுக்கு சமூகத்தை பற்றிய புரிதலும் மிகக் குறைவு தான். ஆனால் இவர்கள் கூறும் வேதங்களும், குரான்களும் அந்த கால(அறிவியல் வளர்ச்சி இல்லாத) கட்டங்களில் உள்ள மனித அறிவின் அடிப்படியில் எழுதப்பட்டவை. அதை தற்போது இருக்கும் மனித அறிவின் அறிவியல் கண்டுபிடிப்போடு ஒப்பிட்டு பார்பது முதலில் முட்டாள் தனமானமாகும்.கூற்றுக்கும், அறிவியல் ரீதியாக அனுகுமுறைக்கும், பாரிய வேறு பாடு இருக்கிறது.

    அறிவியலுக்கும் இவ்வகையான மாற்றங்கள் பொருந்தும். நியூட்டனுக்கு முன்னால் ஐன்ஸ்டீன் பிறந்திருந்தாலும் அவரால் Theory of Relativity கண்டுபிடித்திருக்க முடியாது. இது மார்க்சியத்துக்குகும் பொருந்தும். மார்க்ஸும் ஏங்கல்ஸும் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தின் அடிப்படையில் தான் அதன் கோட்பாடுகளை நிறுவினர். ஆனால் அவர்கள் அறிவியல் பூர்வமான வழிமுறைகளில் சமுதாயத்தை விளக்கினர் (இந்த அறிவியல் வழிமுறைகள் தான் மத அடிப்படையிலான தத்துவத்திற்கும், மார்க்சிய தத்துவத்திற்கும் உள்ள ஒருவகயான வேறுபாடு ஆகும்). ஆகையால் அதில் நடைமுறை மாற்றங்கள் இருப்பினும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர் (கம்யூனிஸ்டு கட்சி அறிக்கயே இதற்கு எ.கா). லெனின் அவருடைய காலத்திற்கும் சமுதாயத்திற்கும் ஏற்றவாறு மார்க்சியத்தை தகவமத்தார். அது போல்தான் மாவோவும்.

    ஆக அறிவியல் ரீதியாக சிந்திப்பவர்கள் காலத்தினால் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் மதவாதிகலோ பல வருடங்களுக்கு முன் கூறிய அறிவியலற்ற கருத்துக்களை அப்படியே இன்னும் ஏற்று கொண்டு கூப்பாடு போடுகின்றனர். இவர்கள் கூறுவது போல் பார்த்தால் 2000 வருடங்களுக்கு முந்தைய மனிதன் சிறந்த அறிவாளி என்றும், தற்போது இருப்பவர்கள் எல்லாம் முட்டாள் (இந்த மதவாதிகள் உட்பட) என்றும் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

    மதவாதிகள் எவ்வளவு பின்னோக்கி இழுத்தாலும் சமுகம் முன்னோக்கி தான் செல்லும்.

  25. // பிக் பேங் நடக்கும் முன் என்ன இருந்தது என்பது அர்த்தமற்ற கேள்வி, ஏனெனெனில் காலம் என்பதே பிக் பேங் போது தான் தொடங்கியது என்கிறார்கள். ஆதியில் வெளி (space) என்பது சுருங்கி இருந்தது, அதில் ஆற்றல் (energy) இருந்தது. பிக் பேங் சமயத்தில் வெளி அதி வேகமாக விரியத் தொடங்கியது. //

    முப்பரிமாண வெளியும், காலமும் அடங்கிய நாமறிந்த பிரபஞ்ச கால-வெளி பிக் பேங் என்னும் பெருவெடிப்புக்கு முன் இல்லை என்று கூறலாம்தான்.. ஆனால் பெருவெடிப்புக்கு முன் நிறையுடன் கூடிய ஆற்றல் ஒரு புள்ளியில் இருந்தது என்றால் எந்த பரிமாணத்தில் ’இருந்தது’ என்ற கேள்வி வருகிறது.. இந்த கேள்வியை பெருவெடிப்பை ஆராயும் அறிவியலிடமே விட்டுவிடுவதுதான் நல்லது.. இல்லாவிட்டால் ஆளுக்கொரு கடவுளை உருவாக்கி , அக்கடவுளரின் உலகில் மேற்படி புள்ளி மகிழ்சியாக இருந்து வந்தது என்று ஆளாளுக்கு ஆரம்பித்துவிடுவார்கள்.. நீங்கள் கூறுவது போல் நமது நம்பிக்கையை நம்முடனே வைத்துக் கொள்வதுதான் நல்லது..

    • அம்பி,
      எனக்கு சுத்தமாக புரியாத விஷயங்கள் இவை. இருந்தாலும், இணைய விவாத விதி 303-A கீழ், தெரியாத விஷயம் பற்றி பேச முற்படுகிறேன் 🙂 உங்களுக்கும், மற்ற வாசகர்களுக்கும் இவை ஏற்கனவே மேலதிகம் புரிந்திருக்கலாம்.

      அனைத்து ஆற்றலும் ஒரு புள்ளியில் இருந்தது என்றால், அந்த புள்ளி எங்கிருந்தது என்ற கேள்வி வருகிறது. ஆனால், அது அப்படி அல்ல என்கிறார்கள். அண்டம் (universe) என சொல்லும்போது பொருள் (matter), ஆற்றல் (energy) என்பவை வெளி (space) என்பதில் இருப்பதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. இம்மூன்றும், காலமும் (time) எல்லாம் சேர்ந்ததுதான் அண்டம். இந்த மொத்த அண்டமும் ஒரு புள்ளியாக இருந்தது. உதாரணமாக, ஒரு கடல், அதில் மீன்கள், கப்பல்கள் உள்ளன. இதை அண்டம் என கொள்வோம். இம்மொத்தமும் ஒரு புள்ளியாக இருந்தது. இதற்கு வெளியே என ஒன்றும் கிடையாது. ஏனென்னில் space என்பதே ஒரு புள்ளியாகத்தான் இருந்தது. big bang நடந்த போது space இல் மற்ற பொருள்கள் விரிந்ததாக அர்த்தம் இல்லை. space என்பதே விரிந்தது. அவ்வளவுதான். ஒரு புள்ளியாக இருந்த கடல் பெரிதாக விரிந்தது! அதன் காரணமாக அதில் இருந்த மீன்கள் நகரத் தொடங்கின. தூரத்தில் உள்ள ஒரு galaxy நகர்கிறது என்றால், அது இரண்டு விதங்களில் நிகழ்கிறது. அந்த galaxy space இல் நகர்வது என்பது ஒன்று. ஒரு கப்பல் ஒரு தீவை விட்டு மற்றொரு தீவிற்கு நகர்வது போல. அடுத்து, space என்பதே விரிகிறது. கடலே விரியுமாப்போலே! இப்படிப்பட்ட விரிவு தொடங்கிய நிகழ்வே big bang. அன்று தொடங்கிய விரிவு இன்று வரை நிற்கவில்லை. அந்த அண்டப் புள்ளியானது சும்மா இருந்திருக்கலாமே, என் விரிவடைய வேண்டும் என்றால் அதற்கு இன்றைய அறிவியலுக்கு பதில் தெரியாது!

      // அக்கடவுளரின் உலகில் மேற்படி புள்ளி மகிழ்சியாக இருந்து வந்தது //

      அறிவியல் தொப்பி அணிந்து பார்க்கும் போது இந்த கூற்றை நான் ஏற்கவில்லை. ஆனால், இந்த கூற்றானது இன்றைய அறிவியல் ஞானத்துக்கு முரணானது அல்ல. The statement above has absolutely no scientific evidence. However, the statement is not inconsistent with any scientific observations that has been made so far. எனது புரிதல் இது.

      // நீங்கள் கூறுவது போல் நமது நம்பிக்கையை நம்முடனே வைத்துக் கொள்வதுதான் நல்லது.. //

      இதை முற்றாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வந்தடைந்துள்ளேன். தற்சமயம் எனது மதம் என்பது உண்மையை கூறுகிறது என்றல்லாமல், அது ஒரு பயன்பாடுச் சாதனம் என்ற அளவிலேயே அதிகம் காண்கிறேன். காலை குளித்தவுடன் பத்து திவ்யப் பிரபந்த பாசுரம் ஓதுவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. அந்த பாசுரங்கள் உண்மையை கூறுகின்றனவா என்பது வேறு விஷயம்.

      • // big bang நடந்த போது space இல் மற்ற பொருள்கள் விரிந்ததாக அர்த்தம் இல்லை. space என்பதே விரிந்தது. அவ்வளவுதான். //

        space என்ற வெளி ஒரு entity அல்ல.. 3 பரிமாணங்கள் பெருவெடிப்பில் ஸ்தூலமாகி ‘வெளி’ ஆனது என்றும் கொள்ளலாம்.. கால-வெளி என்ற 3+1 பரிமாணங்களை மட்டும்தான் நம் அவதானிப்புக்குள்ளாக்க இயலும்.. இதர பரிமாணங்கள் இல்லை என்றும் நிறுவ இயலாது..

  26. ஹிந்து புராணங்களில் நிரய இட்டுக்கடிய வசனங்கள் இருக்கிறது. அது கவிதை போல் எழுதப்பட்டிருக்கும்.”My love never dies till the sun sets in the east” இப்படிபட்ட வாக்கியம் நிராய ஆங்கில கவிதைகளில் நாம் பார்க்க முடியும். இதே போல் அவர்கள் அறிவியலயும் ஒரு கவிதை வடிவிலே எழுதி வைத்துள்ளனர்.

  27. http://www.cs.ucdavis.edu/~vemuri/EngPopsci/How_old_are_we.htm இந்த வலைதளத்தில் இருக்கும் செய்தி இந்துக்களின் கால அளவுகோளை பற்றி சொல்கிறது. இதை படித்தால் ஓரளவு ஹிந்து வேடங்களில் இருக்கும் அறிவியல் நுட்பம் உங்களுக்கு புரியும்,இல்லை இதை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன் என்று இதை ஒதுக்கிவிட்டாலும் பரவாயில்லை.இந்த வலைதளத்திர்க்கும் சங்க பரிவார்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

  28. நானும் சொல்கிறேன். அறிவியல் என்பது நம்மை நாமே சமாதானபப்டுத்திக்கொள்ள கொண்டுவந்த ஒரு கதையேயன்று வேரொன்றும் இல்லை. யோசித்துப்பாருங்கள், இந்த BIG BANG THEORY உண்மை என்றால், நியூட்டனின் முதலாம் விதி பொய் (நீங்கலே நன்றாக யோசித்திப்பருங்கள் புரியும்). இதே போல் ஒவ்வொரு கோட்பாடுகளிலும்/விதியிலும் குறைகள் உண்டு.
    அதாவது நான் சொல்ல வருவது, எதுவும் உண்மையல்ல (particularly அறிவியல் & ஆண்மீகம்), எல்லாம் மயை.

    • சர்புதீன் சிறந்த நகைச்சுவை செய்கிறீர்கள் bigbang ￰உண்மை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது

Leave a Reply to லோகு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க