privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஇந்தி திணிப்பு : இந்து பாசிசம் ஆரம்பம்

இந்தி திணிப்பு : இந்து பாசிசம் ஆரம்பம்

-

இந்தி திணிப்புநாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது வாலைக் குழைத்துக் கொண்டு – தின்னத்தானே போகும். தமிழருவி, புரட்சிப்புயல், கேப்டன், மருத்துவர் அய்யா உள்ளிட்ட பல விளக்குமாருகள் சேர்ந்து, பாஜக வை சுத்தப்படுத்தி, சிங்காரித்து பதவியில் அமர வைத்தன. உட்கார்ந்தவுடனேயே அது தனது புத்தியைக் காட்டத் தொடங்கி விட்டது.

போர்ஜரி சர்டிபிகேட் புகழ், அன்னை சீதாதேவி, ஸ்மிருதி இரானி அம்மையார், “வேதம் மற்றும் உபநிடதங்களை பள்ளிப்பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார். அடுத்து வந்திருக்கிறது இந்தி திணிப்பு.

இந்து-இந்தி-இந்தியா என்ற தனது கொள்கையை திணிப்பதில் பார்ப்பன பாசிச கும்பலுக்கு உள்ள வெறித்தனத்தைப் பற்றி புதிதாக விளக்கத் தேவையில்லை. வாய்ப்பு கிடைத்தவுடனே அவற்றை சாத்தியமான வழிகளில் எல்லாம் திணிப்பதுதான் பார்ப்பன இந்துத்துவா சக்திகளின் நடைமுறை. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்தித் திணிப்பை பிற பெரும்பான்மை இந்தி பேசாதவர்கள் மீது துவங்கி உள்ளனர். வெளியுறவுத் துறையில் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைத் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பு ஏற்கெனவே வந்திருந்தது.

தற்போது கடந்த மே 27 ஆம் தேதி பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், வெளியுறவுத் துறை உள்ளிட்ட எல்லா அமைச்சகங்களின் அதிகாரிகள் துவங்கி அலுவலர்கள் வரை சமூக வலைத்தளங்களில் அனைத்தையும் இந்தியில் எழுத வேண்டும் என்று  உள்துறை அமைச்சகத்திலிருந்து உத்திரவிட்டிருக்கின்றனர். அடுத்து வெளியான ஒரு சுற்றறிக்கையில் இப்படி கறாராகப் பின்பற்றும் முன்னணியான ஊழியர்களுக்கு பரிசுத் தொகையையும் உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

உடனடியாக கருணாநிதி இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ”ஒருவரது விருப்பத்திற்கு மாறாக அவர் மீது அரசாணை மூலம் இந்தி மொழியைத் திணிக்கும் செயலின் ஆரம்பம்தான் இது” என்று அதில் குறிப்பிட்டிருந்தார். ”1938ல் இந்தியை கட்டாய பாடமாக்கிய போதும், 1965ல் இந்தி ஆட்சி மொழிச்சட்டம் நடைமுறைக்கு வருமென்று அறிவித்த போதும் ஏற்பட்ட பேரெழுச்சிகளையும், கிளர்ச்சியையும் வரலாறு விரிவாக பதிவு செய்திருக்கிறது.” ”மொழிப் போர்க்களங்கள் இன்னும் உலர்ந்து போகவில்லை” எனக் காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

”எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் சமமாகப் பாவிக்க வேண்டும். அனைத்தையுமே மத்திய ஆட்சி மொழிகளாக மாற்ற வேண்டும். இந்திக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பதன் மூலம், இந்தி பேசாத இந்திய மக்களிடையே பேதங்களைப் புகுத்தி, அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கிடும் முயற்சியின் முதற்கட்டமே இது” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் கருணாநிதி.

தமிழகம் மட்டுமின்றி பரூக் அப்துல்லா, மாயாவதி, ஒடிசாவில் பிஜூ ஜனதா தள் எனப் பலரும் தங்களது எதிர்ப்பை இம்மொழித்திணிப்புக்கெதிராக பதிவு செய்துள்ளனர். பல இடங்களிலும் இதற்கு எதிர்ப்புகள் பெருகவே, வேறு வழியில்லாத ஜெயலலிதாவும் மோடிக்கு ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக தொடருவதற்கு 1963ல் மத்திய அரசால் தரப்பட்ட உறுதிமொழியை நினைவுபடுத்தி, உத்திரவை வாபசு பெறும்படி கடிதம் எழுதியிருக்கிறார்.

கருணாநிதியின் அறிக்கைக்கு யோக்கியமாக பதில் சொல்ல வக்கில்லாத காவி கிரிமினல்கள் தங்களது வழக்கமான வார்த்தை பித்தலாட்டத்தில் இறங்கி விட்டனர். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், மத்திய உள்துறை அமைச்சர் தனது ட்விட்டரில் ”அமைச்சகம் நாட்டின் எல்லா மொழிகளையும் முன்னேற்றப் பாடுபடும்” என்று உறுதியளிக்கிறார். இந்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறோம் என்று சமாளிக்கிறார்கள்.

தமிழ் இந்து நாளேடோ, ”மொழிப் போர்க்களங்கள் இன்னும் உலர்ந்து போய் விடவில்லை” என்ற வாக்கியத்தை மேற்கோள் காட்டி, கருணாநிதியை கிண்டல் செய்யும் சாக்கில் தமிழகத்தின் மொழிப் போராட்டத்தை கிண்டல் பண்ணியிருக்கிறது. தமிழ், தமிழினம், தமிழிசை, தமிழ் வழிபாடு, தமிழ் ஆட்சிமொழி என்று சொன்னவுடனேயே பார்ப்பனக் குஞ்சுகளின் செவியில் அது நராசராமான வார்த்தைகளாகத்தான் ஒலிக்கும் என்பதற்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு.

1938ல் தாளமுத்து நடராசன் துவங்கி, 1965ல் சின்னச்சாமி என்ற திமுக தொண்டன் துவங்கி ஏறக்குறைய 70க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்தி ஆட்சிமொழிக்கெதிராக தீக்குளித்துப் போராடிய தமிழகம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டது. அந்த மரபின் தொடர்ச்சிதான், தமிழ் இசைக்கான போராட்டம், ஆலயத்தில் தமிழ் வழிபாட்டுக்கான போராட்டம், தில்லையில் தேவாரம் பாடும் போராட்டம், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கான போராட்டம் ஆகிய அனைத்தும். தமிழ் மக்களின் இந்தப் போராட்டங்கள் அனைத்திற்கும் அன்று முதல் இன்று வரை பார்ப்பனக் கும்பல் எதிரியாகத்தான் இருந்து வந்திருக்கிறது.

தற்போது ஆட்சியதிகாரத்தில் பார்ப்பன பாசிசம் அமர்ந்து விட்டது. இல்லை, தமிழருவி, வைகோ, ராமதாசு, விஜயகாந்த் போன்ற தமிழின விரோதிகள் மோடிக்கு பல்லக்குத் தூக்கி பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள். குடியைக் கெடுத்த இந்தக் கோடரிக் காம்புகள் இப்போது இந்தி திணிப்புக்கு எதிராக கண்டன அறிக்கை விடுகிறார்கள். இந்த அறிக்கை பிரிவினைக்கு வித்திடும் என்று எச்சரிக்கை விடுகிறார் கோமாளி வைகோ. குறைந்த பட்சம் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து மதிமுகவின் பிரிவினையை வைகோ அறிவிக்கட்டும். தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபை நாசமாக்கும் விதத்தில் பாரதிய ஜனதாவுக்கு காவடி எடுத்த இந்த துரோகிகளை தமிழ் மக்கள் அடையாளம் காண வேண்டும்.

இந்து-இந்தியா என்ற இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவதும் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடுவதும் வேறு வேறல்ல. மோடியின் பார்ப்பன பாசிச ஆட்சிக்கு எதிரான முதல் குரல் தமிழகத்திலிருந்து எழும்பட்டும்.

  1. தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபை நாசமாக்கும் விதத்தில் பாரதிய ஜனதாவுக்கு காவடி எடுத்த இந்த துரோகிகளை தமிழ் மக்கள் அடையாளம் காண முடியாத படிக்குத்தான் தமிழகத்தில் டாஸ்மாக்கும் காவிப்புழுதியோடு சேர்ந்து கண்ணை மறைக்குதே………

  2. அவ்வளவு தான் இனிமே தமிழ் மக்கள் அனைவரும் இந்தி கிளாசுக்கு போகனும் போல….

  3. மோடி பொருளாதார வளர்ச்சியை பார்ப்பது தான்நல்லது. தேவையில்லாத பிரச்சினைகளை ராஜ்னாத் சிங் இழுத்துப் போடுவதை மோடி தடை செய்ய வேண்டும்.

  4. இந்தியை திணிக்க நினைக்கும் காவிக் கயமை தனம் மீண்டும் தொடங்கி விட்டது. மத்திய அரசின் இந்த உத்தரவு இந்தியா முழுமைக்குமாக, என்று கூறப்பட்டாலும். அதன் உள்நோக்கம் தமிழ்நாட்டை இந்திய தேசிய நீரோட்டத்தில்(இந்து-இந்தி-இந்தியா) இணைக்க வேண்டும் என்பது தான். ஏனைய இந்திய மொழிகளை போன்று அல்லாமல் பார்பனிய சமஸ்க்ருத மயமாக்கலை 2000 ஆண்டுகளாக எதிர்த்து நிற்கும் ஒரே மொழி தமிழ் மட்டுமே. மற்றைய தென் இந்திய மொழிகளை போன்று செத்த பாஷையால் இன்று வரை தமிழை உட்செரிக்க முடியவில்லை.

    வடக்கே இருக்கும் வல்லூறுகள் தேசிய மொழி என்கிற மோசடியான சொற்பயன்பாட்டை கொண்டு இந்தியை இங்கு திணிக்க தொடங்கிய பொது, தெற்க்கே இங்கிருக்கும் பார்பனர்களும், பார்பன அடி பொடிகளும் வடமொழியின் சொற்களை வலிந்து திணித்து மணி பிரவாளம் என்கிற புது நடையை உருவாக்கி தமிழை சிதைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர். இரண்டு முயற்சிகளுமே அப்போது தமிழ் மாணவர்கள் மற்றும் திராவிட இயக்கங்களின் தொடர் போராட்டங்களால் விரட்டி அடிக்கப்பட்டன. இப்போது மீண்டும் இந்தியை திணிக்கும் முயற்சி நைச்சியமாக மோடி அரசால் முன்னெடுக்கப் படுகிறது. அதற்க்கு ஏற்றார் போல் இங்கிருக்கும் பா.ஜ.க கும்பல் மக்களிடம் இந்தியை திணிக்க நரித்தனமான பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர். “இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட திராவிட கட்சி தலைவர்களின் வாரிசுகள் அனைவரும் இந்தியை கற்று அதனால் நன்மையையும் அடைந்துள்ளனர், திராவிட இயக்கத்தின் விஷமத்தால் பல தலைமுறைகளாக இங்கிருக்கும் அப்பாவி தமிழர்கள் தான் இந்தி மொழி தெரியாமல் மற்ற மாநில மக்களுடன் அந்நிய பட்டு விட்டதாக மக்களிடம் தவறான பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். இதற்க்கு மக்களும் ஓரளவு பலியாகிறார்கள் என்பதும் உண்மை தான். ஒரு மொழியை விரும்பி கற்பதற்கும், வலிந்து திணிப்பதற்குமான வேறுபாடு கூட இன்று பலருக்கும் தெரிவதில்லை.

    இந்த நிலை நீடித்தால், இந்தியை புகுத்துவதில் பா.ஜ.க அரசு வெற்றி பெற்றால் ஒரு நாள் நிச்சயம் சமர்க்ருததையும் வலிந்து திணிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஏனென்றால் வடமொழியை இந்தியாவின் கடைகோடி வரை கொண்டு சேர்க்க வேண்டும் என்பது பா.ஜ.க வின் மறைமுக திட்டத்தில் ஒன்று. அதுக்கான ஒரு சோதனை ஓட்டம் தான் இந்த இந்தி திணிப்பு. எந்த ஒரு சமரசமும் இன்றி காவிகளின் இந்த முயற்சி முறியடிக்க பட வேண்டும்

  5. //தமிழருவி, வைகோ, ராமதாசு, விஜயகாந்த் போன்ற தமிழின விரோதிகள் மோடிக்கு பல்லக்குத் தூக்கி பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள்//
    மிக தவறு. இவர்களால் மோடி வெட்ரி பெரவில்லை.

  6. தொலைக் காட்சி உரையாடல்களில் பேட்டிகளில் ராகவன்,இல.கணேசன் போன்ற இந்த காவி நாதாரிகள் பேசும் தமிழ் இருக்கிறதே….. ‘ஷொல்வது,பேஷுவது’ என கொய்யால அப்படியே ஒன்னு பல்லு மேல போடணும்னு ஆத்திரம் வரும்

    • 1980, 1990 களில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் முழுக்க முழுக்க அவா, இவா, பேஷ்,ஷொல்வது,பேஷுவது போன்ற பார்ப்பன மொழியிலேயே அனைத்து நாடகங்களும் நடக்கும். பேட்டிகளிலும் சரளமாக அந்த மொழியிலேயே பேசுவார்கள். 9 மணிக்கு மேல் முழுக்க முழுக்க இந்தி தான். பிறகு இந்தி நாடகங்களை மொழிபெயர்ப்பு என்ற பெயரில் தமிழை படுகொலை செய்வார்கள். கொடுமைடா சாமி. பாஜக ஆட்சி நம்மை மீண்டும் அந்த இருண்டகாலத்திற்கு அழைத்து சென்று விடும் போல இருக்கிறது.

    • KT Raghavan speaks excellent Tamil,Ela Ganesan doesnt but nothing against KT Raghavan.

      Please ask 99% tamils to pronounce Zh correctly and also stop using S sound for Ch,Tamils words should be pronounced with Ch and not S.

      • Yes, in the 1980s, the doordarshan tamil readers used to say sennai maanagaram, sennai makkal, etc instead of using Chennai.

    • ஷொல்வது,பேஷுவது அப்படி பேசும் போது பல்லு மேல போடணும்னு தோணுது சரிதான்… ஆனா நம்மாளுங்கஇ தமில் தமில்நாடு தமிலர்கள் புகல்ச்சி ன்னு பேசும் எனக்கு அந்தச் சொல் மேல போடணும்னு தோணுதே….

      • நம்மவர்கள் வல்லினம் மெல்லினம் வித்தியாசமோ ழகர,லகர வேறுபாடோ புரியாமல் பேசுவது சில வேளைகளில் எழுதுவது அறியாமை.தமிழ் மொழியின் தனிச்சிறப்பான இந்த உச்சரிப்பை சரியான, எளிமையான வழியில் பயிற்றுவிக்கப்படாதது தான் இதன் பின்னுள்ள அவலம். இப்படி பேசுகிறவர்களின் அறியாமை வேறு. பா ஜ க வினர் ஒரே சுருதியில் இப்படி ஷொல்வது,பேஷுவது என திட்டமிட்டு அதனை சிதைப்பது வேறு

    • பேஷா செய்யுங்கோ…
      “அவாள்” சந்தோசப் படுவாள்….
      இனிமேல் விபூதி,திருச்சூர்ணம் தயாரிக்கும் கம்பனிகளுக்கு ” சப்சிடி” தரப் போராளாம்!

  7. http://organiser.org/Encyc/2013/4/6/427338.aspx

    Sanskrit and the Devanagari script, in addition to the mother tongue and its script, will one day in the future, be Hindustan’s link language. In the Agenda for Change, the youth must be afforded the opportunity to learn Sanskrit as an alternative to Hindi.

    The scripts of all Indian languages are derived or evolved from Brahmi script. Hence, in the Agenda there has to be a commitment to re-throne Sanskrit with Devanagari script as virat Hindustan’s link language, and which is to be achieved through Hindi in a compulsory 3-language formula of mother tongue, Hindi, and English in all schools with a steady Sanskritisation of Hindi’s vocabulary till Sanskritised Hindi becomes indistinguishable from Sanskrit and thus replaced by the latter.

    மும்மொழி கொள்கையை கொண்டுவர வேண்டுமாம்.

    இந்தியை கட்டாயமான மொழியாக ஆக்க வேண்டுமாம்.

    ஆங்கிலத்தையும் தாய்மொழியையும் சேர்த்துக் கொள்ளலாமாம்.

    அதற்கு பின்னர் இந்தியை சிறிது சிறிதாக சமஸ்கிரித வார்த்தைகளால் மாற்றி ,

    மொத்தமாக சமஸ்க்ரிதத்தை மொழியாக்க வேண்டுமாம்.

    # இதையும் உங்கள் பதிவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  8. மத்திய அரசாங்கத்தின் ஆட்சி மொழிக்கொள்கையால் இந்தி பேசாத மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மத்திய அரசு தேர்வுகள் மற்றும் மத்திய அரசின் வேலைவாய்ப்புக்கள் ஆகியன இந்தி பேசும் மாநிலங்களை மையப்படுத்தியே செயல்பட்டு வருவதால் இந்தி பேசும் மக்களே ஏனையோரை விட எளிதாக இவற்றில் வெற்றி அடைய முடிகிறது. தமிழ்நாடு போன்ற விளிம்பு நிலை மாநிலங்களை சேர்ந்த இந்தி பேசாத மக்களுக்கு மத்திய அரசின் தேர்வுகளும் வேலைவாய்ப்புக்களும் நாளுக்கு நாள் கடினமாகவும் அந்நியமாகவும் ஆகி வருகின்றன. இனிமேல் நிலைமை இன்னும் மோசமடையும். அப்படியே கடின முயற்சி செய்து வெற்றி அடைந்தாலும் சுயகவுரவத்தோடு பணி செய்யும் சூழல் கிடையாது.
    இந்த பிரச்சினைக்காக தமிழகத்தின் மூலை முடுக்குகளில் நின்று கொண்டு கூவுவதினாலும் கண்டன அறிக்கை வெளியிடுவதினாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. இந்தி பேசாத மற்ற மாநிலங்களை சேர்ந்த மொழி உணர்வும் மாநில உணர்வும் கொண்ட அரசியல் மற்றும் கலாச்சார அமைப்பினர், அறிஞர்கள் ஆகியோருடன் தொடர்பு கொண்டு பாதிப்புகளை விளக்கி ஆதரவு திரட்டி பல மாநிலங்களிலும் போராட்டம் நடத்த வேண்டும்.
    மேலும் இந்தியா என்பது பிரிட்டிஷார் உருவாக்கிய ஒரு அமைப்பு. தெற்காசிய பிராந்தியத்துக்கு வெள்ளையர்கள் வந்திருக்கவில்லையென்றால் இந்தியா என்னும் நாடே இப்போது இருந்திருக்காது. ஒட்டுமொத்த இந்திய துணைக்கண்டமும் இஸ்லாமிய மயமாகி இருக்கும். இந்தி என்னும் ஒரு மொழி உருவாகியிருந்திருக்குமா என்பதே சந்தேகம். இந்திய துணைக்கண்டத்தை விட்டு வெளியேறும் போது இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களின் பிரச்சினை மற்றும் நலனை கருதி இரண்டு நாடுகளை பிரிட்டிஷார் உருவாக்கிவிட்டு போனார்கள். ஆனால் இந்தியாவில் இந்தி பேசாத தமிழர்கள் போன்ற மக்களுக்கு இந்தி ஆதிக்கவாதிகளால் பிரச்சினை வரும் என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆகையால் பல்வேறு சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து இந்தியா என்னும் நாட்டையும் அது சார்ந்த அமைப்புக்களையும் உருவாக்கியவர்கள் என்ற வகையில் பிரிட்டிஷ் அரசுக்கு தார்மீக கடமை இருக்கிறது. அது என்னவெனில் தாங்கள் தங்கள் வசதிக்காக உருவாக்கிய இந்திய நாட்டில் தலையிட்டு இந்தி பேசாத மக்களின் நலனை காப்பாற்றுவது தான். இந்த விஷயத்தில் தலையிடுவதற்கு சகலவிதமான உரிமைகளும் பிரிட்டிஷ் அரசுக்கு இருக்கிறது. ஆகையால் தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சியினர், பிரிட்டன் தூதரகத்தின் முன்னர் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மனு அளிப்பது ஆகியவற்றை நடத்தி பிரிட்டிஷ் அரசை இந்த விஷயத்தில் தலையிட செய்ய வேண்டும். இதே போன்ற நடவடிக்கைகளை அமெரிக்க, கனடிய மற்றும் ஆஸ்திரேலிய தூதரகங்களின் முன்னரும் மேற்கொண்டு இந்நாடுகளின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் (இந்நாடுகள் எல்லாம் ஆங்கிலத்தை தான் பயன்படுத்துகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது). இவற்றை எல்லாம் செய்யாமல் தமிழ்நாட்டுக்குள்ளேயே போராட்டம், ஆர்ப்பாட்டம், கண்டன அறிக்கைகளை வெளியிடுவது என்று கிணற்று தவளைகளை போல் இருந்தால் ஒன்றும் நடக்காது. மத்திய அரசில் இருக்கும் ஆதிக்கவாதிகள் தொடர்ந்து இந்தி ஆதிக்கத்தை வலுப்படுத்தி இந்தி பேசாத மக்களை மறைமுகமாக நசுக்கி காலப்போக்கில் அழித்துவிடுவார்கள்.

  9. “ஆங்கிலம் அந்நிய பாஷை, ஹிந்தி தேச பாஷை! ஆங்கிலத்தை ஏற்பது அடிமை மோகம்!” பிறகு எதற்கடா உங்களுக்கு ஐ.ஐ.டி களும், அண்ணா பல்கலைகளும்? என ஹிந்திக்கு பல்லக்குத் தூக்கும் அம்பிகளைப் பார்த்துக் கேட்கத் தோன்றுகிறது. இங்கெல்லாம் தாய்மொழிக்கல்வி வேண்டும் என கேட்பார்களா?

    ஹிந்திக்கு பல்லக்குத் தூக்கும் இவாளெல்லாம் ஆங்கிலம் படித்துவிட்டு கனடாவிலும் கலிபோர்னியாவிலும் செட்டில் ஆகலாம். ஆனால் ஹிந்தி படித்த வட இந்தியர்கள் தமிழக வீதிகளில் சுண்டல் விற்க வேண்டும். என்னய்யா நியாயம் இது? ஹிந்தி படித்தும் வாழ வழியற்ற வட இந்தியனுக்கு அவனது சொந்த மண்ணில் வாழ முதலில் வழி காட்டட்டும். ஹிந்தி படித்தால் தமிழன் முன்னேறுறலாம் என்பது பற்றி பிறகு பேசலாம்.

  10. வலைதளங்களில் நமது ஆந்திர/தெலுங்கானா நண்பர்களுடன் பலமுறை இந்தி மொழி பற்றி விவாதித்திருக்கிறேன். என்னமோ இந்தி மொழி தான் தேசிய மொழி என்று இல்லாத ஒன்றை நம்மிடம் இருப்பது போல இந்த நண்பர்கள் திணிக்கின்றனர். இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல, அல்ல, அல்ல. வடக்கே பெரும்பான்மையோர் பேசுவதாலேயே இந்தியை தேசிய மொழியாக்கினால் பின்னர் நாம் மயிலுக்கு பதில் காக்கையை தான் தேசிய பறவையாக அறிவிக்க வேண்டும். அது தானே பெரும்பான்மையில் அதிகம். புலிக்கு பதில் பன்றியை தேசிய மிருகமாக அறிவிக்க வேண்டும்.

    ஹைதராபாத் சென்றீர்களானால் எவரும் தெலுங்கில் பேசுவதில்லை. இந்தி பற்றும் உருதுவில் தான் பேசுகிறார்கள். ஆங்கிலத்திலோ அல்லது தெலுங்கிலோ நாம் கேட்கும் கேள்விக்கு ஹைதராபாத்காரர்கள் இந்தி/உருதுவில் தான் பதலளிக்கிரார்கள்.

    பெங்களூரில் முழுக்க முழுக்க வட இந்தியர்களின் ஆதிக்கம் பெருகி பல அலுவலகங்களில் இந்தியில் உரையாடி வருகின்றனர். கன்னட மொழி தேய்ந்து இந்தி ஆதிக்கம் பெங்களூரில் பெருகி வருவதாக எனது கன்னட நண்பர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். வட இந்திய கலாச்சாரமே அங்கு பெருகி வருவதாக அவர்கள் புலம்புகின்றனர்.

    தமிழகத்தில் நிலைமை வேறு விதம். இந்தியின் ஆதிக்கம் இல்லையென்றாலும் ஆங்கிலத்தில் பேசுவது தான் மேதாவித்தனம் என்ற 1950 காலத்திய மோகம் இன்றும் மக்களிடம் உள்ளது.
    தாய்மொழியில் நாம் சிந்திக்க தயங்குகிற வேளையில் நமது தாய்மொழி தோல்வியடைகிறது. தமிழில் இல்லாத மொழி வளமா, வார்த்தை வளமா, நம் வினவு நண்பர் யுனிவர்பட்டி போன்றவர்கள் நன்றாக தமிழில் தட்டச்சு செய்ய தெரிந்தும் மீண்டும் மீண்டும் ஆங்கிலத்திலேயே பதிவிடுகிறார்கள்.

    முதலில் வட இந்தியர்கள் இந்தியை உருதுவிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ளட்டும்.
    மும்பாய், டெல்லியில் பேசும் இந்தி இப்போது 90 சதவீதம் உருது தான்.

    என்னமோ இந்தி தெரியாவிட்டால் நல்ல வேலை கிடைக்காது, நல்ல வாழ்வு கிடைக்காது, இத்தனை நாட்கள் அதனை இழந்து விட்டோம் என்று சில அம்பி நண்பர்கள் வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்தி பேசுபவர்களின் வாழ்வாதாரம் தமிழர்களை விட உயர்ந்துள்ளதா என்ன? ஏன் வடமாநில கட்டிட தொழிலாளிகள், உழைப்பாளிகள் தென்னகங்களை தேடி வருகின்றனர்?

    இந்தியை விரும்பி படிப்பவர்கள் படித்து கொள்ளட்டும், ஆராதித்து கொள்ளட்டும், அவர்கள் குழந்தைகளை இந்தி மீடியத்தில் படித்து கொள்ள அனுப்பட்டும், எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் எங்கள் மீது இந்தியை திணிக்க முயல வேண்டாம்.

    மோடியின் முதல் கோணல், முற்றும் கோணலாக ஆகப்போகிறது.

    • Speaking Hindi in Capitals or big cities does not mean the entire state lost it’s mother tongue.
      In India most of the population lives in villages and small towns.

      In Karnataka if we cross Banglore and enter interior towns, small cities and villages you can’t see Hindi. Same is the case with Andra with crossing Hyderabad where we can’t see Hindi or Urudu.

      The language policy of our constitution is correct and concerns about all 22 recognized languages. Modi’s Govt starting their Hindutva agenda. That’s all.

    • நண்பர் க.கை அவர்களுக்கு,

      மொழி குறித்த பிரச்சனையில் யதார்த்தமான கருத்தக்களை சிறப்பாக வைத்திருக்கீறிர்கள். ஆனால் பதிவிற்கு சற்று அப்பாற்பட்டு உங்களிடம் ஒரு கருத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

      “மோடியின் முதல் கோணல், முற்றும் கோணலாக ஆகப்போகிறது.” என்றும் “பாஜக ஆட்சி நம்மை மீண்டும் அந்த இருண்டகாலத்திற்கு அழைத்து சென்று விடும் போல இருக்கிறது” என்றும் நடைமுறை யதார்தத்தில் வந்தடைகிறபொழுது தேர்தல்-பிணத்திற்கு பேன்பார்த்து ஆவதென்ன? என்ற பதிவின் உள்ளடக்கத்தை தற்பொழுது எப்படி மதிப்பிடுகிறீர்கள்? அப்பொழுது நாம் விவாதித்த பொழுது கருத்துக்களை தான் முன்வைத்தோம். இப்பொழுது நமக்கு தரவுகள் இருக்கின்றன. அதனால் வினவினேன்.

      • நண்பர் தென்றல் அவர்களே,

        இப்பொழுதும் என் கருத்தினில் மாற்றம் இல்லை. மக்கள் மேல் அக்கறை உள்ளவர் ஆளுகையில் அது எப்படிப்பட்ட ஆட்சியாக இருந்தாலும், ஜனநாயகமாக இருந்தாலும், கம்மியுனிசமாகட்டும், சர்வாதிகாரமாக இருந்தாலும், மன்னராட்சியாக இருந்தாலும் சரி, அது மக்களுக்கு நன்மை பயக்கும். அதே சமயம் மேற்கண்ட ஆட்சிமுறைகளில் ஜனநாயக ஆட்சிமுறையில் மட்டுமே தவறு செய்யும் ஆட்சியாளர்களை தூக்கியெறியும் சக்தி, ஓட்டுரிமை, மக்களிடம் உள்ளது.

        மோடி தவறு செய்தால் மோடியையும் பாஜகவையும் தூக்கியெறிய மக்கள் தயங்க மாட்டார்கள். இதற்கு வரலாறு உள்ளது. அதே சமயம் ஒரு உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம், கம்மியுனிசம் என்ற போர்வையில் மோடி போன்ற ஒருவருக்கு சர்வ வல்லமையுடன் பதவி சக்தி கொடுத்து பதவியில் ஏற்றி விட்டால் அவர்களை இறக்கி விட முடியுமா?

        இடிப்பாரிலா ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடுவான்.
        தவறு செய்தால் ஆட்சியில் இருந்து தூக்கி விடுவார்கள் என்ற பயம் இருக்கும்வரை ஆள்பவர்கள் எச்சரிக்கையுடன் ஆள்வார்கள். எல்லையற்ற அதிகாரம், ஏன் என்று கேட்க முடியாத சர்வாதிகாரம் கொண்டிருந்தால் அவர்களை நாம் ஒன்றுமே செய்ய இயலாது.

        கம்மியுனிசத்தின் ஆணிவேராகிய அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உரிமை, மக்கள் பாதுகாப்பு ஆகியவற்றோடு நான் என்றும் ஒத்து போகிறேன். மக்களின் ஜனநாயக உரிமைகள் பேனப்ப்படும்போது எனக்கு கம்மியுநிசத்தின் மேல் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் கம்மியுனிசம் என்ற பெயரில் ஆட்சி அதிகாரம் ஒரு சிறு குழுவிடம் மட்டும் பகிர்ந்தளிக்கப்படுவதை நான் எதிர்க்கிறேன். ஜனநாயக இழையில் நெய்யப்பட்ட கம்மியுனிச ஆடையை தரிக்கவே நான் விரும்புகிறேன்.

        மக்கள் நலனை தேர்தல் முறையிலும் கூட அடைய முடியும் என்பதே என்னுடைய கருத்து.
        அதற்கு நல்லவர்கள், நேர்மையானவர்கள், தேர்தல் களத்தில் இறங்க வேண்டும்.
        உடனே வெற்றி கிடைக்காது தான். ஆனால் முயன்றால் படிப்படியாக மக்களின் இதயத்தில் இடம் பிடித்து மக்கள் நலன் பேணும் ஆட்சியை அமைக்க முடியும்.

        • தோழர் தென்றல்,

          நாம்,இந்த விவாதத்தை , இந்த கட்டுரையின் பேசுபொருளை விட்டு வெளியில் செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதே நேரம் தாங்கள் , நண்பர் கற்றது கையலவிடம் வைத்தக் கேள்வி சரியானது தான் என்றாலும், நண்பரைப் போன்ற , இந்த நடப்புத் தேர்தல் முறையில் நம்பிக்கை இழக்காதவர்களுக்கு, கொடுக்கப்பட்ட கால அவகாசம் குறைவு தான் என்பது என் கருத்து.

        • நண்பர் க.கை அவர்களுக்கு,

          தங்கள் கருத்திற்கு நான் அந்த குறிப்பிட்ட பதிவில் என் கருத்துக்களை வைக்கிறேன். நன்றி. மக்கள் இன்னும் இதைவிட யதார்த்தமாக புரிந்துகொள்கிறார்கள். அதை நினைவுபடுத்தவே இதை முன்வைத்தேன். இந்தக் கேள்வியை எப்பொழுதும் நாம் பரிசீலிப்போமேயானால் அதற்கு சில வலிமைகள் உண்டு. மேற்கொண்டு தோழர் சிவப்பு சொல்வதைப் போல இங்கு இப்பதிவின் பேசுபொருளோடு விவாதிக்கலாம். நன்றி

    • நண்பர் கற்றது கையளவு,

      தமிழ்நாட்டில் உள்ள அறிவாளிகளில் சிலர், தமிழையும்,கருனாதியையும், திராவிடக் கட்சிகளையும் கோர்த்து விடுகின்றனர். கருணாநிதியையும், திராவிட அரசிலையும் எதிர்ப்பதாக கூறிக் கொண்டு,தமிழையும் சேர்த்து எதிர்கிறார்கள்.

      என்னுடன் பணிபுரியும் ஒரு சில தெலுங்கு நண்பர்கள் கூட இப்படி தான், “இந்தி நமது தேசிய பாஷை. அது மட்டுமில்லாமல் பெரும்பான்மையான மக்கள் இந்தி தான் பேசுகிறார்கள் என்றும அமெரிக்க,சீனா, ஜப்பானைப பாருங்கள் ஒரு மொழி மட்டும் இருப்பதால் அவ்வளவு முன்னேறுகிறார்கள” என்று கூறினார்கள்.

      அந்த நாடுகள் முன்னேறுவதற்கு காரணம் அவர்களின் தாய்மொழிவழிக் கல்வி என்பது அந்த அறிவாளிகளுக்கு(!) தெரியாமல் போகக் காரணம் என்ன?

      அதில் ஒருவர் இன்னும் ஒருபடி மேலே சென்று, சமஸ்கிருதம் , ஆங்கிலத்தை விட கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என்றும் , கணிப் பொறியை அவர்கள் கண்டுபிடித்ததால் தான் ஆங்கிலம் பயன்பாட்டில் உள்ளது என்றார். மக்கள் தொடர்பில்,அவர்களின் சமூகப் பயன்பாட்டில் இல்லாத ஒரு செத்த மொழியான வடமொழியை அச்சுக்கு ஏற்ற முயலும் குறுக்குவழி தான் இது.

      ஒரு மென்பொருள் வல்லுனராக இருக்கும் ஒருவரிடம் இந்தக் குருட்டுத்தனமான கருத்துமுதல்வாத சிந்தனையை விதைத்தது யார்? இந்து-இந்தி-இந்தியா என்ற தேசிய வெறியை யார் ஊட்டுகிறார்களோ அவர்களே.

      நன்றி.

      • சமஸ்கிருதத்தின் தாக்கம் அதிகமிருப்பதாலும் முகலாய மற்றும் நிஜாம் ஆட்சியின் கீழ் இருந்ததாலும் தெலுங்கு நண்பர்களுக்கு இந்தி, உருதுவில் பேசுவது இயல்பாக போனது. மேலும் இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று அவர்களது எண்ணங்களில் மிக ஆழமாக பதிந்துள்ளது. பல வருட காங்கிரஸ் ஆட்சியின் விளைவோ என்னவோ. நல்லவேளை தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை 67 இல் இருந்தே விரட்டி விட்டோம். இல்லையென்றால் நாமும் தமிழை மறந்து இந்தியில் அளவலாவிக்கொண்டிருப்போம்.

    • நன்றி வெங்கடேசன் !

      நானும் தினமும் டார்வின் பதிவிற்கான மறுமொழிகளை எதிர்பார்த்து வருகிறேன்.

      வினவு தோழர்கள் கவனித்து சரி செய்யவும்.

  11. மோடி ஆட்சியின் இந்த இந்தி தினிப்பு என்பது இந்து-இந்தி-இந்தியா என்ற இந்துத்துவா கொள்கை பா.ஜ .க வின் அஜண்டாவில் உள்ள ஒன்று தான்.இதை மூடி மறைத்து மோடியை வியபாரம் செய்த பிழைப்பு வாத பத்திரிக்கைகளும்,ஊடகங்களும் இப்போது வாயை திறக்குமா?(திறக்க வேண்டும்.)இல்லை எலும்பு தூக்கிய நாயை போல மறைந்து நிற்க்குமா?.
    மக்களின் அறிவை மழுங்கடிக்க மோடியின் அணியில் முன்னால் நின்று முழங்கிய குறிப்பாக தமிழ்நாட்டு மூடர்கள் பதில் சொல்ல வேண்டும்.
    ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்து தாய் மொழியை காப்பாற்றி வந்த நமது நாட்டு மரபை இன்று இந்தியிடம் அடிமயாக்க துடிக்கும் அடிவருடிகள் பதில் சொல்ல வேண்டும்.

    • தமிழில் பெயரை எழுதும்போது கூட ஆங்கில எழுத்துக்களை பெயரின் முதலெழுத்துக்களாக பயன்படுத்தும் “எம்.இ.” பாலா போன்ற_____ முதலில் திருந்தவேண்டும். நேற்று வந்த ஆங்கிலத்தைத் தவிர்த்துத் தனித்தமிழில் பின்னூட்டமிடமுடியாத நீங்களெல்லாம் மற்றவர்களைக் குறைசொல்வது நகைப்பிற்குரியது.

      • வினவின் மட்டுறுத்துனர் தான்தோன்றித்தனமாக தணிக்கை செய்வதையே வழமையாய் கொண்டுள்ளார் என்பதை பலமுறை நிரூபித்து வருகிறார். மூலப் பின்னூட்டத்தில் இருக்கும் சொல் பதில் பின்னூட்டத்தில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. என்னே ஒரு முற்போக்கு!

  12. தொடர் வண்டி தூரமாகிப் போனது. கையில் இருந்த பணம்கூட சீழ் பிடித்ததால் வீங்கிப் போனதாம். குடுகுடுப்பைக்காரன் கோட்டைக்குப் போனவுடன் ஒரே வாரத்தில் எல்லாம் தலைகீழாய் மாறிப்போனதால் இது பற்றி மக்கள் எதுவும் பேசக்கூடாது என்பதால் மக்களின் பாஷைக்கே பூட்டு போட்டு விட்டானாம் குடுகுடுப்பைக்காரன். இனி அவன் பேசும் பாஷைதான மக்கள் பாஷையாம். நீங்கள் “ஹை! ஹை!” என்றால் அவன் “ஹி! ஹி!” என இளித்துவிட்டு “பை! பை!” தான் காட்டுவான்.

    குடுகுடுப்பைக்காரனைவிட பூம்பூம் மாட்டுக்காரனே மேல்!
    http://hooraan.blogspot.com/2014/06/blog-post_21.html

Leave a Reply to M.Manickam பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க