privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திவேதாரண்யத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு பிரச்சாரம்

வேதாரண்யத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு பிரச்சாரம்

-

காவிரி டெல்டாடெல்டா என்றால் காற்றில் அசைந்தாடும் பசுமையான நெற்கதிர்களின் வயல்வெளிகள், அழகிய அலையாத்தி காடுகள், பம்ப் செட், கண்மாய்கள், கால்வாய்கள், பறவை சரணாலயங்கள், காவிரியில் துள்ளி குதிக்கும் மீன் வளங்கள், கோடியக்காட்டின் மான்வளங்கள், மருத்துவ குணமுள்ள ஏராளமான மலர்கள், செடிகள் நிறைந்து அவை மக்களுடன் இணைந்த இயற்கை சமவெளியாக இருந்த பகுதி இனி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட் டின் வேட்டைக் காடாக மாற போகிறது. தஞ்சைக்கு காவிரி தண்ணீர் வந்தால் மாயவரத்தில் மடை திறக்கும். இம்மண்ணை பசுமைப்புரட்சி திட்டம் வந்து பாழாக்கியது என்றால், மீத்தேன் திட்டம் வந்து பாலைவனமாக்க போகிறது.

ரசாயன மணல் குன்றுகள், ரசாயன கலவை நீர் தொட்டிகள், ரசாயன நீர் நிறைந்த கிணறுகள், அதன் மீது உலோக கோபுரங்கள், அதி வேகமாக அங்கும் இங்கும் அலையும் ராட்சச டேங்கர் லாரியின் இரைச்சல்கள், புகை படிந்து பச்சை இலை மறைந்து கரிய நிறம் பூசிக்கொண்ட மரங்கள், செடிகள், இரு போகமாவது விளைந்த வயல்களில் கடல் நீரை விட 5 மடங்கு உப்பு தன்மை கொண்ட ரசாயன கழிவு நீர் தேக்கங்கள் – இப்படிப் பட்ட டெல்டாவை பார்க்க நமக்கு சம்மதமா?

வறண்ட காவிரிகாலம் காலமாய், பல தலைமுறையாய் தமிழகத்திற்கு உணவளித்து வந்த காவிரித்தாயின் வயிற்றை பிளந்து கருப்பையை அபகரித்து கொள்ள, நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் ஓட்டு போடாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் இதர அதிகாரிகள் கொண்ட அரசு , கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி நம்மையும், நம் சந்ததியினரையும் காவு கொடுக்க துணிந்து விட்டது. இதை அனுமதித்து நாடோடிகளாக, அகதிகளாக அலைய போகிறோமா?எதிர்த்து போராட போகிறோமா?

விவசாயத்தையும் விவசாயிகளையும் முன்னேற்ற எந்த திட்டமும் சட்டமும் போடாத இந்த அரசும் அதிகாரிகளும், 50 லட்சம் விவசாயிகளை விவசாயத்தை விட்டே விரட்டுவதற்கு காவிரியை சதித்தனமாக நிறுத்தி, பெரும் பணக்கார முதலாளிகள் லாபம் சம்பாதிக்க மீத்தேன் எடுப்பதற்கும், பழுப்பு நிலக்கரி எடுப்பதற்கும், கொள்ளை லாபம் அடிப்பதற்கும் இப்படிப்பட்ட திட்டங்களை அனுமதிக்கிறார்கள் என்றால் இந்த அரசும் அதிகாரிகளும் யாருக்காக செயல்படுகிறார்கள் என்பது இன்னும் நமக்கு விளங்கவில்லையா? இவர்களுக்கு ஓட்டு ஒரு கேடா?

  • வெண்மணிஇது நம்முடைய மண். 1860-ல் சாயக் கம்பெனிகளுக்கு ”அவுரிச் செடியை” பயிரிடச் சொன்ன வெள்ளை நாய்களுக்கு எதிராக சமர் புரிந்த மண்.
  • ஆம்பலாபட்டு ஆறுமுகம், களப்பாள் குப்பு, தனுஷ்கோடி, வாட்டாகுடி இரணியன் என பல வர்க்கப் போராட்ட வீரர்களை தன்னுள் தாங்கி சுமந்து நிற்கும் மண்.
  • வெண்மணியில் நெல் மணிக்காக 44 வர்க்க போராளிகளின் தியாகத்தால் சிவந்து நிற்கும் மண்.

இந்த போராட்ட வரலாற்றை கொண்ட நாம்

காவிரி டெல்டா விவசாயிகளையும், விவசாய குடும்பங்களையும் அழிக்க துடிக்கும் மீத்தேன் திட்டத்தினை முறியடிப்போம்

கொள்ளைக்கார GEECL நிறுவனத்தையும் அதற்கு துணை போகும் ஓட்டுக் கட்சிகளையும், கார்ப்பரேட் கொள்ளையை சட்ட பூர்வமாக்கும் தனியார் மயத்தை ஒழித்து கட்டுவோம் என்ற முழக்கத்தின் கீழ்

வேதாரண்யம் ஆர்ப்பாட்டம்டெல்டா மாவட்டத்தின் தஞ்சை, திருவாரூர், நாகை பகுதிகளில் இயங்கி வரும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக்குழு மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம், தெரு முனைக்கூட்டம், பேருந்து பிரச்சாரம், கிராமம் தோறும் வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வேதாரண்யம் பகுதியில் விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பாக 13.06.2014 அன்று வேதை நகர மேல வீதி பெரியார் சிலை அருகிலும், காரியாபட்டினம் சாலை சந்திப்பிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

வி.வி.மு தோழர் ஏகலைவன் தலைமையேற்க, வி.வி.மு வின் வேதாரண்யம் வட்டார பொறுப்பாளர் தனியரசு மற்றும் தோழர் கிருஷ்ணமூர்த்தி, பு.மா.இ.மு வை சேர்ந்த தோழர் பொரியார்தாசன் கண்டன உரையாற்றினர்.

தெருமுனைக் கூட்டம்

மீத்தேன் திட்டத்திற்கு எதிராகவும், தனியார் மய கொள்கைக்கு எதிராகவும் முழக்கமிடப்பட்டது.

தகவல்

பு.ஜ செய்தியாளர்
வேதாரண்யம்