privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ஏழாம் ஆண்டில் வினவு !

-

“சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.” – குறள் (647)

2008-ம் ஆண்டு ஜூலை 18-ம் நாள் வினவு தளம் ஒரு தனிநபர் வலைப்பூவாய் துவங்கியது. ஆறாண்டுகளுக்கு பிறகு அந்த பூச்செடி ஒரு பெரும் கூட்டுறவு பூந்தோட்ட பண்ணையாக வளர்ந்து பூத்துக் குலுங்குகிறது. துவங்கிய நாளின் முந்தைய நாள் மாலை என்ன பெயர் வைக்கலாம் என்று சில தோழர்கள் ஆளுக்கொரு தமிழ் இலக்கிய நூல்களை புரட்டிக் கொண்டிருந்த போது இந்த குறளை விவாதித்தது நினைவுக்கு வருகிறது. இன்று ஏழாம் ஆண்டு துவக்கத்தில் அந்தக் குறளின் பொருளை இன்னும் விரிவாக விளங்கிக் கொண்டோம் என்று சொல்லலாமா?

டி.பி.ஐ முற்றுகை
சென்னை பள்ளிக் கல்வி இயக்குனரகம், புமாஇமு முற்றுகையில் ஒரு இளம் தோழர்.

தான் கண்டடைந்த முடிவுகளை எதிரியும் ஏற்கும் வண்ணம் அஞ்சாமல் பேராற்றலுடன் எடுத்துரைப்பவனை எவராலும் வெல்ல முடியாது என்பது இந்தக் குறளின் பொருள்.

புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் பத்திரிகைகளை எமது தோழர்கள் பேருந்து, ரயில்களில் தனியாக நின்று கொண்டு பிரச்சாரம் செய்து விற்பனை செய்யும் போது மக்கள் வரவேற்பதோ, இல்லை ஒரு பிரமிப்புடன் பார்ப்பதோ இந்தக் குறளுக்கு பொருந்தி வரும் என்றார் ஒரு தோழர். உண்மைதான்.

இதழ் விற்பனைக்கு போகும் தோழர்கள் ஓரிருவர் கொண்ட அணியாக தனியாகத்தான் போகின்றனர். வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் கிடையாது. அதிமுக, ஆர்.எஸ்.எஸ் அடாவடி துவங்கி பல்வேறு அரசியல் கருத்து மாறுபாடுகள், எதிர்ப்புகளுக்கு மத்தியில் எமது பத்திரிகைகளை போராடி விற்பது ஒரு சவால். ஒருக்கால் சண்டை சச்சரவு வரும் போது கூடியிருக்கும் மக்களின் துணை கொண்டே அதை எதிர் கொள்ள வேண்டும். ஃபோனைப் போட்டு ஆளனுப்பு எனும் ‘பாதுகாப்பு’ நடைமுறைகளெல்லாம் இங்கே கிடையாது. அல்லது சாத்தியமில்லை சரியுமில்லை. அநேகமாக எல்லா தோழர்களும் இந்த எதிர் நீச்சலில் போராடி பயிற்சி பெறுவர். குறிப்பிட்ட காலத்தில் மறுகரையை அடையும் ஆற்றல் பெறும் போது அவரால் ஏனைய பணிகள் எதையும் முனைப்புடனும், போராட்ட உறுதியுடனும் செய்ய முடியும்.

எதிரெதிர் அரசியல் கருத்துக்களால் சூழப்பட்ட மக்களிடையே நீந்துவது ஒரு கலை. குறிப்பிட்ட காலத்தில் தனியாக நீந்தும் ஒருவர், தோழமைக் கரங்கள் பலவற்றை பெறும் போது மட்டுமே அந்த நீச்சல், சமூகத்தின் உயிர் காக்கும் நோக்கத்தை நிறைவேற்றும் தன்மை பெறுகிறது. சிலர் இப்படிக் கருதிக் கொள்கிறார்கள் “உங்களுக்கு இருபெரும் பத்திரிகைகள் இருக்கின்றன, தமிழகம் முழுவதும் வரவேற்பு பெற்ற கலைக்குழு உள்ளது, பிரபலமான இணைய தளமெல்லாம் வைத்திருக்கையில் பிரச்சாரம் சுலபம்தானே?”.

ஆனால் இவையெல்லாம் ஏதோ எங்களுக்கு மட்டும் ‘இறைவன்’ அருளியதா என்ன? அல்லது எங்களது முன்னோர்கள் இதற்கான ஏற்பாடுகளை உயில் எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்களா? அவ்வளவு வசதியா எங்களுக்கிருக்கிறது?

ரசியப் புரட்சியோ, சீனப்புரட்சியோ இல்லை நக்சல்பாரி எழுச்சியோ நால்வகைப் படைகளுடன், நால்வகை ஜனநாயகத் தூண்களின் ஏற்பாட்டுடன் நடக்கவில்லை. சரியாகச் சொன்னால் பூஜ்ஜியத்திலிருந்தே எதிர்ப்பை ஆரம்பித்தன. அதுதான் விதிக்கப்பட்ட யதார்த்தம். அந்த விதியை உடைத்து பூஜ்ஜியத்தின் முன் மக்களை அணிசேர்த்து எண்ணிக்கையில் விரிந்து ஆரம்பத்தில் படிப்படியாகவும் இடையில் சீறியும் இறுதியில் புரட்சி எனும் அதிகாரம் பறிக்கப்படுகிறது. நிலையான இராணுவத்தை நிலைகுலைய வைக்கவே கொரில்லா யுத்தம். ஆளும் வர்க்க ஊடகங்களை எதிர் கொள்ள துண்டுப் பிரசுரம். கலை விற்பன்னர்களின் வலையிலிருந்து மக்களை மீட்க தெருவோரத்தில் பறை. கார்ப்பரேட் தொலைக்காட்சிகளின் கருத்துருவாக்கத்தை கட்டுடைக்க மக்களிடையே நேரடியாக விற்கப்படும் பத்திரிகைகள். இணையத்தில் வினவு.

appleநவீன ஆர்க்கெஸ்ட்ராவுடன், முதல் வரிசைக் கலைஞர்களுடன், ஆஸ்கார் விருது வாங்கிய ஒரு இசையமைப்பாளரின் ‘வந்தே மாதரத்தை’ எதிர் கொள்ள என்ன செய்வது? ஆதிக்க சாதிகளின் ஊரில் கூட்ட அழைப்பிற்கும், மரண அறிவித்தலுக்கும் தண்டோரா போடும் சேரிமகனின் பறையே போதும்! இனி அது அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும் மக்களின் பறை. “வெட்டரிவாளை எடடா, ரத்தம் கொதிக்குதடா, இந்த சட்டமும் சர்க்காரும் தடுத்தால் வெட்டி எறிந்திடடா” என்ற பாடலை கூடியிருக்கும் மக்களிடையே போர்க்குணத்துடன் பாடும் போது எதிர்கால சமூகப் பேரிசையின் நாதத்தை சிறு துளியாவது உணர்த்த முடியாதா என்ன?

ஒரு கம்யூனைப் போன்று எளிய முறையில் கூட்டு வாழ்க்கை வாழும் எமது கலைக்குழுத் தோழர்கள் இப்படித்தான் தமிழகமெங்கும் புரட்சியின் இசையை வெறும் பறையால் பாடி வருகின்றனர். தோழர்களோ, தொடர்புகளோ இல்லாத கிராமங்கள் பலவற்றுக்கும் அவர்கள் செல்கிறார்கள். கையிலிருக்கும் பறை, நெஞ்சிலிருக்கும் கோபத்தை அரசியல் பார்வையுடன் பாடுகிறார்கள், பேசுகிறார்கள். அதுவே அறியாத ஊர்களில் தொடர்புகளை தருகின்றது. தங்குமிடம், உணவு கொடுத்து மக்கள் ஆதரிக்கிறார்கள்.

கன்னியாகுமரி கடலோர கிராமங்களா, ஆர்.எஸ்.எஸ் அச்சுறுத்தும் நாகர்கோவில் பேருந்து நிலையமா, வைகுண்டராஜன் அடியாட்படை நிரம்பிய தூத்துக்குடி மணற்திட்டு கிராமங்களா, ஆதிக்க சாதிவெறி ஆத்திரத்துடன் காத்திருக்கும் ஊர்களா, இல்லை கருத்துரிமைக்கு சமாதி கட்டிவிட்டு அடக்குமுறையுடன் ஆட்டம் போடும் கோவை, தருமபுரி மாவட்டங்களா அனைத்திலும் எண்ணிறந்த தோழர்கள் தங்கி எப்போதும் பிரச்சாரம் செய்கின்றனர்.

அடிதடி, கைது, சிறை இல்லாமல் இந்த போராட்டம் சாத்தியமில்லை. வினவில் ஆண்டு விழாவிற்காக எழுதும் இந்நேரம் மதுரைச் சிறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் தோழர் ஒருவர் காலையில் அளிக்கப்படும் பருப்பில்லா சுத்தமான வெண் பொங்கலை அருந்தி முடித்திருப்பார். வர்க்கப் போராட்டத்தின் உறுதி சிறையிலும் தொடர்கிறது. கரூரிலே ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த ரவுடி கும்பலை எதிர்த்து போராடியதில் தோழர் செல்வராசு உயிரிழந்தார். தஞ்சையிலே சாராய ரவுடியை எதிர்த்து நின்றமைக்காக ஒரு தோழர் உயிரிழந்திருக்கிறார். இன்னும் பல தோழர்கள் அப்படி தியாகம் செய்தும், வாழ்க்கையை இழந்தும் இந்த போராட்டப்பாதையை செந்நீரால் கழுவிக் கொண்டே இருக்கிறார்கள். புரட்சி நிறைவேறும் வரை இது முடிவற்ற பயணம். தொடர் தியாகங்களை கேட்கும் பலிதானம்.

தாது மணல் கொள்ளை
தாது மணல் கொள்ளைக்கு எதிரான தூத்துக்குடி போராட்டத்தில் மற்றுமொரு இளம் தோழர்.

கடந்த வெள்ளிக்கிழமைதான் கடலூர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் ஒரு மாணவனின் மர்மமான மரணத்தை தட்டிக் கேட்ட ‘குற்றத்திற்காக’ காவல் துறையால் கடுமையாக தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலென்ன்? இறந்து போன அந்த மாணவனுக்கு நீதி கேட்டு சிறையிலும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். சிறையில் வேறு போராட்ட முறைகள் சாத்தியமில்லை.

ஒரு போலீசின் அடாவடியை எதிர்த்த ‘குற்றத்திற்காக’ சென்னை புமாஇமு-வின் இளந் தோழர்கள் சிறை சென்றிருக்கிறார்கள். ஜேப்பியார் கல்லூரியில் சங்கம் கட்டி தொழிலாளிகளின் சுயமரியாதைக்காக போராடிய தோழர் வெற்றிவேல் செழியன் வழக்கு போட்டு எதிர்த்தமைக்காக சிறை செல்ல வேண்டியிருக்கிறது. இன்னும் பல தோழர்கள் அப்படி நடைமுறை போராட்டத்திற்காக வருடத்தின் சில நாட்களையாவது கம்பிகளுக்கு பின்னே கழிக்க வேண்டியிருக்கிறது. ஆண்டுகள் பலவானாலும் வழக்குகளுக்காக வாய்தாவின் பெயரில் அலைக்கழிய வேண்டியிருக்கிறது.

அரசியல் வாழ்வில் மட்டுமல்ல சொந்த வாழ்க்கையிலும் இதன் பாதிப்பை எதிர் கொள்ள வேண்டும். வேலையிழப்பு, பொருளாதார பிரச்சினைகள், குடும்பத்தினர் எதிர்ப்பு அனைத்தும் ஒரு சேர படையெடுக்கும். எனினும் உழைக்கும் வர்க்கத்தின் இழப்பிற்கு அஞ்சா உறுதியுடன் தோழர்கள் அதை சந்தித்து வெல்கிறார்கள்.

இந்த போராட்டத்தை எப்படி வெல்வது என்பது ஒரு தேர்ந்த உயர்கல்வி படிப்பின் தெளிவான பாடத்திட்டம் போன்றதல்ல. ஆராய்ச்சி மாணவர்களுக்கு முதலாளித்துவ கல்வியின் தேர்ச்சியுடன் வழிகாட்ட முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்கள் இருக்கிறார்கள். மனித குலம் சேகரித்து பாதுகாக்கும் துறைசார் அறிவுத்துறையின் பிரம்மாண்ட நூலகம் அவர்களுக்கிருக்கிறது. அவர்களை முனைப்புடன் இயங்க வைக்க எதிர்கால கார்ப்பரேட் கனவு இல்ல வாழ்க்கை காத்திருக்கிறது.

எங்களுக்கோ மார்க்சியத்தை கற்றுக்கொடுத்து, மக்களிடையே நீந்த பயிற்சி அளித்து வழிகாட்டவும், எப்போதும் துணையோடும் தோழமையோடும் போராட்ட வலியை பகிர்ந்து கொள்ளவும், மருந்து போடவும், தவறுகளை திருத்துவதற்கும் அனுபவமிக்க தோழர்கள் இருக்கிறார்கள், மார்க்சிய லெனினிய தத்துவத்தில் புடம்போடப்பட்ட புரட்சிகர அமைப்பு இருக்கிறது. எனினும் இங்கே இழப்புக்களை எதிர் கொண்டு தொடர்ந்து சாகும் வரை ஒரு கம்யூனிஸ்ட்டாக நீடிப்பது என்பதற்கு ஒரு தனிமனிதனாகவும் இறுதிவரை போரட வேண்டியிருக்கிறது. அது ஒவ்வொரு தோழரும் தனது புரட்சிப் பயணம் குறித்து எழுதிக் கடக்கும் ஒரு கவிதை போலவும் சொல்லலாம். கலைகளில் இசை சூக்குமமானது என்றால் புரட்சியின் இசையோ சூக்குமங்களின் தலைவன்.

சென்னை சேத்துப்பட்டில் ஒரு தோழர், அங்கே ஆதிக்கம் செய்து தற்போது அடங்கியிருக்கும் ரவுடி தங்கையாவை எதிர் கொண்டு போராடிய வழக்கின் வாய்தாவிற்காக பத்தாண்டுகளுக்கும் மேலாக சென்று வருகிறார். வாய்தாவுக்காக விடுப்பு எடுத்தாக வேண்டும். அமைப்பு வேலைகளுக்காகவும் அவ்வப்போது விடுப்பு எடுத்தாக வேண்டும். இதற்காக அவரை பணியலமர்த்தியிருக்கும் முதலாளியோடு வரும் பிரச்சினையை எப்படி எதிர் கொள்வது?

மாவோ
குழந்தைகளுடன் மாவோ

ஒரு தோழர் எலக்ட்ரிசியனாக மாத வேலை பார்த்தவர், வேலைகளுக்காக விடுமுறை போடவேண்டி வருகிறது என்று அதைத் துறந்து தினக்கூலியாக சென்று வருகிறார். இயக்க வேலைகள் வந்தால் வேலைக்கு விடுமுறை. வருமானத்திற்கும் விடுமுறை. வேலூர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் பணியாற்றும் ஒருதோழர் சுமை தூக்கும் தொழிலாளி. அமைப்பு வேலைகளுக்காக ஒரு ஷிப்ட்டு தூக்கியவர், விடுமுறை எடுத்து கொண்டு இயக்க பணியாற்ற வேண்டும் என்பதற்காக சமயத்தில் இரண்டு ஷிப்ட்டுகளும் தூக்குகிறார். தஞ்சை மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் பணியாற்றும் தோழர் ஒருவர் செருப்பு தைக்கும் தொழிலாளி. அவரது குடும்பம்தான் லாவணிக் கலைஞர் டேப் காதரை பராமரித்து வருகிறது.

அதே நேரம், போராட்டப் பாதையிலே சோர்வுற்று தளர்வுற்று விலகலாமா என்று விரக்தியுறும் தருணங்கள் கண்டிப்பாக வரும். ஒரு வகையில் நாங்களெல்லாம் “வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் வந்த சாவுக்கிராக்கிகள்”தான். ‘தலையில் நாங்களே தண்ணீர் தெளித்துக் கொண்டவர்கள்தான்’. அப்படி ஒரு சிலர் தடுக்கி விழும் போதெல்லாம் கம்யூனிசத்தை கட்டோடு சொந்த லாபம் கருதி வெறுக்கும் இரவல் சிந்தனை அறிஞர் பெருமக்கள் பேருவுகை கொள்கிறார்கள். “நான் அப்பவே சொன்னேன், கேட்டாயா?” என்று ஓடி வருகிறார்கள். எதற்கு? தூக்கிவிடுவதற்கா? இல்லை துரத்தி விடுவதற்கா?

இங்கே தூக்கிவிடுதல் தன்னிலிருக்கும் காரியவாதத்தினை பரப்புவதும், துரத்திவிடுதல் போராடும் சக்திகளின் உயிர்த்துடிப்பை அணைப்பதுமாய் வினையாற்றுகிறது. ஆனால் கம்யூனிஸ்டுகள் தமது தியாகத்தை கணக்கில் கொள்ளாதது போலவே, தோல்விகளையும் அவை எண்ணிக்கையில் அதிகமிருந்தாலும் கண்டு துவண்டு விடுவதில்லை. விழுந்து கீழே பார்க்கும் போது சுயநலம் காத்திருந்து பழிவாங்குவது போலவே சற்று முயற்சி செய்து கடினமாக இருந்தாலும் கொஞ்சம் மேலே பார்த்தால் தோள் கொடுக்க வரும் தோழமைக் கரங்களைப் பற்றி காயத்தை வடியச் செய்து பயணத்தை தொடரலாம், தொடர்கிறோம். இதற்கு மேல் சூக்குமமான புரட்சியின் பெருங்கவிதையை, மனித குலத்தின் மாபெரும் சிம்பொனி இசையை எப்படி விளக்குவது? தெரியவில்லை.

லெனின்
விவசாயிகளுடன் லெனின்

சொலல்வல்லனுக்கு சோர்வு கிடையாது. சொல் வல்லாண்மை இழக்கும் போது காத்திருக்கும் சோர்வு முதலை வாயாய் இறுக்கமாக கவ்விக் கொள்கிறது. ஆனால் சொல் வலிமை என்பதே இத்தகைய போராட்டத்தினூடாகவே பிறக்கிறதே அன்றி அது குறிப்பிட்ட காலத்தில் பட்டப்படிப்பு முடித்து பெறும் சான்றிதழ் அல்ல. ஒரு மனிதன் வாழ்ந்து கொண்டிருப்பது போலவே இறந்தும் கொண்டிருக்கிறான் என்றால் அது உயிரியல் இயக்கத்தின் இயங்கியலை விளக்குவது போலவே கம்யூனிஸ்டு என்ற பதமே எதிர்மறையான புறநிலையை எதிர்கொண்டு அகநிலையை செதுக்கும் ஒரு போராட்டக் கலை. அந்தக் கலையின் விளைவே புரட்சி.

இது நடப்பு நுகர்வு கலாச்சார வாழ்வில் தன்னை பறிகொடுத்த மனங்களுக்கு, ஏதோ வாழ்க்கையில் ஏராளமானவற்றை இழந்து விடுவோமோ என்றொரு பதற்றத்தை தோற்றுவிக்கலாம். இல்லை, இதுதான் இந்த உலகிலேயே மாபெரும் மகிழ்ச்சிக்குரியது. அதனால்தான் “போராட்டமே மகிழ்ச்சி” என்றார் பேராசான் மார்க்ஸ். ஒரு கம்யூனிஸ்டாக வாழ்ந்து பார்க்காத வரை இந்த பெரு மகிழ்ச்சியின் சிறு துளியைக் கூட வேறு எவரும் பருகிவிட முடியாது. இதை ஒரு மதவாதியின் மூடுண்ட, கற்பிக்கப்பட்ட நம்பிக்கையின் மகிழ்ச்சியாகவோ அல்லது ஒரு ஆன்மீகவாதியின் புறத்தை மறுக்கும் சுயத்தின் கற்பிக்கப்பட்ட யோகநிலையாகவோ புரிந்து கொள்ளக் கூடாது. கம்யூனிஸ்டின் மகிழ்ச்சி தன்னை தீர்மானித்து இயக்கும் சமூகத்தை புரிந்து கொண்டு சமூக மனிதனில் தன்னைக் காணும் தனிமனிதனின் பண்பட்ட நிலையோடு தொடர்புடையது. அதன் உணர்ச்சி புரட்சியின் பாதையால் பெருகுகிறது. அதன் உறவை சுட்டும் சொல் தோழமை.

அந்த புரட்சியின் பாதையில் தோழர்களை சேர்ப்பதற்கே நாங்கள் பாடுபடுகிறோம். அவர்களை சூழ்ந்து கொண்டிருக்கும் ஆளும் வர்க்க அமைப்புக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறோம். அதில் எங்கும் எப்போதும் சொல்லிலும் செயலிலும் சமரசம் செய்துகொள்வதில்லை. அதே நேரம் அதை மக்கள் ஏற்க வேண்டுமென்பதையும் மறப்பதில்லை. இரண்டும் வேறு வேறு அல்ல.

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஈரோடு நகரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் “ஆயுதந் தாங்கிய புரட்சியின் மூலம் இந்த அரசமைப்பு தூக்கி எறியப்படவேண்டும்” என்று பேசியதால் தோழர்கள் மருதையன், காலஞ்சென்ற தோழர் சீனிவாசன் உள்ளிட்டு சில தோழர்கள் மீது தேசத் துரோக சட்டப்பிரிவில் வழக்கு தொடுக்கப்பட்டது. தோழர்கள் வாய்தா வாய்தாவாக சென்று கொண்டிருந்தனர். “இந்த சமூக அமைப்பை மாற்றி மக்களின் ஆயுதந் தாங்கிய புரட்சி மூலமே அரசு அதிகாரத்தை கைப்பற்ற முடியும்” என்பது கம்யூனிஸ்டுகளின் பாலபாடம். ‘அப்படி பேசவில்லை என்று நீதிமன்றத்தில் கூறுங்கள்’ என்றார் நமது தோழர்களின் வழக்கறிஞர். இவ்வளவுக்கும் அவர் பொதுவுடமை சார்ந்த, இன்றும் ஆதரிக்கும் ஒரு முன்னுதாரணமான சமூகநேயமிக்க வழக்கறிஞர்தான். அப்படி பேசியிருந்தால் வழக்கு விரைவில் முடிந்திருக்கும்தான். ஆனால் அது சரியா? இல்லையென்றால் வேறு வழி? கண் முன்னே உங்களது இளமை, வாழ்வில் துணையேற்று உடன் வரும் துணைவி, கால்களை பாசத்துடன் கட்டிப்பிடிக்கும் மகள்…. என்ன செய்வீர்கள்?

டி.பி.ஐ முற்றுகை
பள்ளிக் கல்வி இயக்குனரக முற்றுகை புமாஇமு போராட்டத்தில் போலீசால் இழுக்கப்படும் தோழர்.

எனினும் தோழர்கள் வழக்கறிஞரிடம் சற்று தயக்கத்துடன், ”அப்படி பேச முடியாது, இது எங்களது அடிப்படைக் கொள்கை, அந்த அடிப்படையிலேயே வழக்கை எதிர்கொள்வோம், வேறு வழியில்லை” என்றார்கள். சட்டத்தை ஆழமாக அறிந்த அந்த வழக்கறிஞர் தோழரும், அதை ஏற்றுக் கொண்டார். காரணம் அந்த விழுமியத்தின் உண்மையை வலிமையை அவரும் அறிந்தவர்தானே! அதே நேரம் தோழர்களை விடுவிக்கவும் வேண்டும். இப்போது சொல் வன்மை தோழர்களிடமிருந்து வழக்கறிஞர் தோழரிடமும் சென்றது.

“துப்பாக்கி குழாயிலிருந்து அதிகாரம் பிறக்கிறது” என்று சொன்ன மாவோ மற்றும் “ஆளும் வர்க்க அரசை தூக்கி எறிய வேண்டும்” என்று சொன்ன மார்க்சிய ஆசான்களின் நூல்கள் இந்த நாட்டில் தடை செய்யப்படாத போது அந்த கொள்கைகளை பேசுவது மட்டும் எப்படி குற்றமாகும் என்று வாதிட்டார் வழக்கறிஞர். பிறகென்ன சட்டம் தடுமாறி வேறு வழியின்றி தோழர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது. அதே நேரம் இந்த பேச்சு செயலுக்கு வரும் போது வழக்கு போடவேண்டிய தேவை அரசுக்கு இருக்காது.

அதே போல கருவறை நுழைவு போராட்டத்தில் திருவரங்கம் அரங்கநாதனை தொட்டு எழுப்பிய தோழர்கள் மீதும் சில ஆண்டுகள் வழக்கு நடைபெற்றது. சட்டப்படி கருவறையில் மற்றவர் நுழைவது குற்றமே. இதை பேசியிருந்தால் கூட, கருத்துரிமை என்று வாதிடலாம். மாறாக நடைமுறையில் சட்டமே மீறப்பட்டுவிட்டது. என்றாலும் நீதிமன்ற மேடைகளில் தோழர்கள் அனைவரும், “நுழைவது குற்றம் என்றால் அதை மகிழ்ச்சியுடன் செய்தோம்” என்றே முழங்கினார்கள். தண்டனை நிச்சயம் என்றாலும் இறுதித் தீர்ப்பு வரும் ஒரு மாதத்திற்கு முன்னே திருச்சி மாவட்டம் முழுவதும் தோழர்கள் பிரச்சாரத் தீயை பரப்பினர்.

இந்த சமூக சூழலை நீதிமன்ற நீதியரசர்களும் கவனித்துத்தானே ஆக வேண்டும். உச்சநீதிமன்றம் போல சு சாமிகள் செல்வாக்கு செலுத்த இது ஒன்றும் புதுதில்லியல்லவே. பெரியாரின் சுயமரியாதை மண்ணில் நடக்கும் போராட்டம். இறுதியில் நீதிமன்றம் என்னன்னவோ விளக்கம் கொடுத்து தோழர்களை விடுதலை செய்தது. என்றாலும் சட்டமும், நீதிமன்றமும் ஒரு சில தருணங்கள் தவிர்த்துப் பார்த்தால் நம்மை தண்டிக்கவே காத்து நிற்கும். அதன் வெளிப்பாடுதான் இங்கே எமது தோழர்கள் சிறையில் இருப்பது போலவே இந்தியாவெங்கும் ஒடுக்கப்படும் மக்களும் போராடும் இயக்கங்களின் போராளிகளும் சிறைகளில் முடக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் அதே நீதிமன்றங்களை வரம்பிற்குட்பட்டாவது மக்கள் போராட்டத்தால் நிர்ப்பந்திக்கவும் முடியும். உங்களுக்கு தேவை சொல் வன்மையும், சோர்வின்மையும்.

வர்க்க போராட்டம்இளவரசன் மரணத்தின் போது, “ஏனய்யா பாமகவை குறிப்பாக அடையாளம் காட்ட பயப்படுகிறீர்கள்” என்று கேட்ட போது “எப்படியும் இளவரசனை நீங்களும் காப்பாற்ற முடியவில்லையே, அதற்கு குற்ற உணர்வு கொள்ளுங்கள்” என்று ஒரு அறிஞர் தன்னைக் காத்துக் கொள்ளும் பொருட்டு குற்றத்தை எம்மிடம் திருப்பினார். அதாவது இளவரசனுக்கு 24 x7 தனியார் பாதுகாப்போ இல்லை இயக்கங்களின் பாதுகாப்போ கொடுத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாமாம். எனில் ஈழத்தின் சிங்களப்படையிடமிருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு நாம் ஒரு தமிழ்ப்படையை அனுப்ப வேண்டும். பாலஸ்தீன மக்களை காப்பாற்றுவதற்கு உலகப்படையை அனுப்ப வேண்டும் என்றாகிறது.

அப்படி ஒரு நிலைமை இல்லாத போது, சாத்தியமில்லாத போது என்ன செய்வது என்று முடங்குவதை விட என்ன செய்ய முடியும் அல்லது என்ன செய்திருக்க வேண்டும் என்பதல்லவா முக்கியம். தாழ்த்தப்பட்ட மக்கள் இந்தியாவெங்கும் சிறுமான்மையாகத்தான் வாழ்கிறார்கள். பெரும்பான்மை ஆதிக்கசாதி மக்களிடம் தொடர் போராட்டம் நடத்தாமல் நீங்கள் என்னதான் செக்யூரிட்டி போட்டாலும் அது சாத்தியமில்லை. உழைக்கும் வன்னியர்களிடமிருந்து பாமவை, வன்னியர் சங்கத்தை பிரிக்கும் வேலை முழுமையடைந்தால்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முழு பாதுகாப்பு. அதை விடுத்து பாமக என்றால் பயம் பயம் என்று ஓடினால் அதுதான் தலித் மக்களுக்கு ஆபத்து.

தமிழகத்திலேயே ஆதிக்க சாதிவெறி கோலேச்சும் ஊர்களில், மாவட்டங்களில் அதை நேருக்கு நேர் எதிர் கொண்டு பிரச்சாரம் செய்வது எங்களது தோழர்கள் மட்டும்தான். அப்படித்தான் இளவரசன் பிரச்சினையில் வட தமிழகம் முழுவதும் வன்னிய மக்கள் வாழும் ஊர்களில் தோழர்கள் பிரச்சாரம் செய்தார்கள். இங்கும் தேன்தடவிய பழத்தை விழுங்கும் நயமாக இது நடக்கவில்லை. பல இடங்களில் மூர்க்கமான கருத்து மோதல். ஆதரவாக இருந்தவர்களில் ஒரு சிலர் கூட கோவித்துக் கொண்டு அமைதியானார்கள். சில இடங்களில் தோழர்களை தாக்க வன்னியர் சங்கம் திட்டம் போட்டது. இறுதியில் எது வென்றது?

பல ஊர்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் வன்னிய மக்களே குறிப்பிட்ட அளவில் கலந்து கொண்டார்கள். இறுதியில் எந்த சாதி மறுப்பு மணத்திற்காக தலித் மக்களின் ஊர்களை எரித்தார்களோ அதே தருமபுரியில் அதே சாதிகளைக் கொண்டு ஊரறிய திருமணத்தை நடத்தி கொண்டாடவில்லையா? பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு, பாதுகாப்பான முறைகளில், பாதுகாப்பான வார்த்தைகளில் அரசியல் பேசும் நண்பர்கள் தமது சுயகவுரவத்தை களைந்துவிட்டு இதை பரிசீலித்துப் பார்க்க வேண்டும் என்று தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

‘இந்த உலகை ஒரு சதவீதம் கொண்ட மனிதர்கள்தான் வழிநடத்த வேண்டும்’ என்று முதலாளித்துவ உலகம் சொல்கிறது. ‘அந்த ஒரு சதவீத எண்ணிக்கையைக் கொண்ட அறிஞர்களின் உள்ளொளி சிந்தனை திறத்தால்தான் இந்த உலகம் புரட்டிப் போடப்படுகிறது’ என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறுகிறார். அமெரிக்காவில் “நாங்கள்தான் 99%, 1% நபர்களுக்கான முதலாளித்துவ உலகை தகர்ப்போம்” என்று வால்வீதி போராட்டத்தில் மக்கள் முழங்கினார்கள். இங்கோ “கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே” என்ற முழக்கத்தைக் கொண்ட மகஇகவில் செருப்பு தைக்கும் தொழிலாளி, சுமை தூக்கும் தொழிலாளி, தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள் அன்றாடம் வீதிகள் தோறும் முழங்கியோ பாடியோ, பேசியோ வருகின்றனர்.

மார்க்ஸ் - எங்கெல்ஸ்ஜெயமோகனது உலகில் கோவை வட்டார கொங்கு தமிழ் கௌரவ சீமான்களும், என்ஆர்ஐ அம்பி கனவான்களும் கொலுப்பொம்மைகளாய் மணம் வீச, இங்கோ அடித்தட்டு மக்களும், தொழிலாளிகளும் நாற்றமெடுக்கும் இந்த சமூக அமைப்பை புதைக்க வேண்டுமென்ற தீரத்துடன் வேர்க்க விறுவிறுக்க, காயம் பரபரக்க துடிக்கின்றனர். ஆனால் இந்த தோழர்களைத்தான் அவர் சீனாவில் காசுபெற்று இயங்கிவரும் கூலிப்படை என்று எழுதி சுய இன்பம் அடைந்து கொள்கிறார். இதை அவருக்கு ஒரு உயர் போலீசு அதிகாரி கூறினாராம். ஆதாரமாய் சீனத்தலைவருடன் மோடி கைகுலுக்கும் புகைப்படத்தையும் கூறலாம்.

மோடி வருகை குறித்து நாங்கள் நடத்திய கூட்டங்கள் முதல் இணைய பிரச்சாரம் வரை பெரும்பான்மையாக கலந்து கொண்ட மக்கள் திரளில் “இந்துக்கள்தான்” அதிகம். இணையத்தில் நாங்கள் கோரிய மோடி எதிர்ப்பு பிரச்சார இயக்கத்திற்கு அதிகம் நன்கொடை வழங்கியவர்களிலும் “இந்துக்களே” அதிகம். இதை இசுலாமிய மதவாதத்தில் சிக்கியிருக்கும் அப்பாவிகள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

எனினும் டிஎன்டிஜே காமடி டைம் கட்டுரை மூலமாக பல இசுலாமிய நண்பர்கள் உணர்வுப்பூர்வமாகவும், அரசியல் ரீதியிலும் எம்மை ஆதரித்தார்கள். அதை தனியே விரிவாக எழுதுகிறோம். இவர்கள் அனைவரும் ஏதோ நாங்கள் இந்துமதவெறியை எதிர்க்கிறோம் என்பதால் மட்டும் ஆதரிக்கவில்லை. ஒருவேளை அது துவக்கமாக இருக்கலாம். முக்கியமாக முதலாளித்துவத்திற்கு மாற்று கம்யூனிசமே என்று பாரிய அளவில் வினவு கட்டுரைகளை படித்து முடிவெடுத்திருக்கிறார்கள். வளைகுடாவில் பணியாற்றும் நண்பர்கள் சிலர் விரைவில் தமிழகம் வந்து எம்முடன் களப்பணியாற்றுகிறோம் என்றே உணர்வு பொங்க உறுதி கூறியிருக்கிறார்கள். இந்த ஏழாம் ஆண்டில் இதை விட மகிழ்ச்சிக்குறியது எது? வினவு படிக்க கூடாது என்று என்னதான் டிஎன்டிஜே உத்திரவு போட்டாலும் அது நிறைவேறாது. மக்கள் விடுதலையையும், மார்க்சியத்தையும் எந்த பிற்போக்கு சக்தியும் வெல்ல முடியாது. இது உணர்வும் உணர்ச்சியும் கலந்த மாபெரும் சமூக அறிவியல்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
– குறள் 645

இந்த சொல்லை வெல்ல வேறு சொல் இல்லை என்பதால் அதை நாங்கள் மார்க்சியம் என்கிறோம். போராட்டமாய் தொடர்கிறோம். வினவாய் உங்களை சந்திக்கிறோம்.

இது வினவின் ஏழாம் ஆண்டு. வாருங்கள் கரம் கோர்ப்போம்!

நன்கொடை தாருங்கள்

வாசகர்கள், பதிவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்தும்!

  1. வாழ்த்துக்கள் தோழர்களே!
    நள்ளிரவில் வினவு பக்கத்தில் பூக்களாக விழுவதுபோல தெரிந்தது, பிறகு நின்றுவிட்டது எதற்காக தோழர்கள் இப்படி போடவேண்டும், எனக்குத்தான் ஏதோ பிரம்மை போல என நினைத்துகொண்டேன். இபோதுதான் வினவுக்கு இது 7ஆம் ஆண்டு என தெரிகின்றது.
    திறந்த வெளி தமிழ் மார்க்சிய பள்ளிக்கு வாழ்த்துக்கள்.

    இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

    • வாழ்த்துக்களோடு உற்சாகப்படுத்தும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

  2. வினவின் போராட்ட பாதையில், என்னுடைய வாழ்த்துக்களும் சேரட்டும்!

    *****

    பதிவைப் படித்ததும், சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது. வினவின் வாசகர்களுக்காக பகிர்கிறேன்.

    ****
    இரவு 9 மணி. அந்த அறையில் சிறுசிறு பிரசுரங்கள் ஆங்காங்கு இருந்தன. பகுதி பிரச்சனையை விளக்கி, எழுதப்பட்ட தட்டி போர்டுகளும் ஓரத்தில் சாத்தி வைக்கப்பட்டிருந்தன. மார்க்சிய ஆசான்களின் புத்தகங்கள் செல்ப்பில் சீராக‌ அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

    அந்த அறையின் மூலையில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு காத்திருந்தன. பசை காய்ச்சி, சூடாக ஒரு வாளியில் தயாராக இருந்தது. மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து, முழக்கங்கள் சுவரொட்டியில் இருந்தன. தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் அந்த பகுதியில் விடிகாலைக்குள் அனைத்தும் ஒட்டப்பட வேண்டும்.புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் அறிவிக்கப்படாத அலுவலகமாக அந்த அறை இயங்கி கொண்டு இருந்தது.

    இருவர் ஒட்டுவதாக இருந்தது. ஒருவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லை. என்ன செய்வது? யாரை அழைக்கலாம்? யோசித்ததில் அகமதுவின் நினைவு வந்தது. உணர்வுபூர்வமானவர். சமீபத்தில் தான் அமைப்புக்கு அறிமுகமானவர். அவரைச் சந்தித்து, பேசி அவரை அழைத்து சென்றார் பாண்டி.

    ****

    நடுநிசி 3 மணி. எவ்வளவு விரைவாக ஒட்டியும் இன்னும் சில சுவரொட்டிகள் மீதமிருந்தன. நாய்களின் குரைப்பு சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன. அப்பொழுது அந்த பகுதியில் சுற்றி வந்த ஒரு போலீஸ் ஜீப் அவர்கள் அருகில் வந்து நின்றது. “ஓ! நீங்க தான் இந்த போஸ்டரை ஒட்டுகிட்டு வருகிறார்களா!” என சொல்லியபடியே, ‘அரசை எதிர்த்து ஆவேசமான வார்த்தைகள் இருந்ததாக” இருவரையும் கைது செய்தார்கள்.

    ****

    கைது செய்யப்பட்ட தகவல் சம்பந்தபட்ட பகுதி பொறுப்பாளருக்கு வந்தது. முதலில் இரண்டு பேர்களுடைய வீட்டிற்கும் தெரியப்படுத்த வேண்டும். பாண்டி வீட்டில் தெரியப்படுத்திவிடலாம். ஏற்கனவே சிலமுறை சிறை சென்றவர். அகமது வீட்டில் தெரியப்படுத்துவது தான் பிரச்சனை. அகமதுவை அழைத்து செல்கிறேன் என முன்பே தெரியப்படுத்தியிருந்தால், “வேண்டாம்” என முன்பே தவிர்த்திருக்கலாம். இப்பொழுது நிலைமை கைமீறிவிட்டது.

    அகமது காதல் திருமணம் முடித்தவர். பெண் இந்துமதத்தைச் சேர்ந்தவர். இரு வீட்டாருமே இவர்களின் காதலை ஏற்கவில்லை. இருவரும் உறுதியோடு இருந்தார்கள். தோழர்கள், நண்பர்கள் உதவியுடன் தான் திருமணமே நடைபெற்றது.

    இப்பொழுது அகமதுவின் மனைவி நிறைமாத கர்ப்பிணி. அடுத்தவாரம் பிரசவம் என நாள் குறித்திருந்தார்கள். ஆனால், இன்றைக்கும் இரு வீட்டாரும் கோபம் தணிந்து பேசவில்லை. ஆகையால், துணைக்கு யாருமில்லை.

    இந்த இக்கட்டான சூழ்நிலையில் போய் “கணவர் கைது” என்ற விசயத்தை சொல்வது, மிகவும் மன உளைச்சலுக்குரிய விசயம். வேறு வழியில்லை. சொல்லியே ஆக வேண்டும்.

    ஒரு பெண் தோழரையும் உடன் அழைத்து கொண்டு, தோழர் வீட்டிற்கு போனார்.

    *****

    அகமதுவின் மனைவியிடம் தயங்கி தயங்கி ஆரம்பித்தார்.

    “நேற்றிரவு சுவரொட்டி ஒட்டப்போன தோழரோடு, உங்க கணவரை போலீஸ் கைது செய்துவிட்டது” என்றார்.

    அதிர்ச்சி ஆகாமல் “கொண்டு போன எல்லா போஸ்டரையும் ஒட்டிட்டாங்களா?” எனக் கேட்டார்.

    தோழர் அதிர்ச்சியடைந்துவிட்டார். அழுவார்கள் அல்லது திட்டுவார்கள். எப்படி ஆறுதல்படுத்துவது என நினைத்து போனவரிடம், இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவே இல்லை. சுதாரித்து “ஒட்டி முடிக்கும் பொழுது கைது செய்திருக்கிறார்கள்” என்றார்.

    “இரண்டு நாள்ல வந்துருவாங்கல்ல! நீங்களெல்லாம் இருக்கீங்கள்ல! எனக்கு ஒண்ணும் பயமில்லைங்க!” என்றார்.

    உடனிருந்த பெண் தோழர் கேட்டார். “உங்க பெயர் என்ன?”

    “மதி” என்றார்.

    தைரியம் சொல்ல போனவர்கள், உற்சாகம் பெற்று வெளியே வந்தார்கள்.

    http://nondhakumar.blogspot.in/2011/07/6.html

    • பொருத்தமான அனுபவத்தை பதிவு செய்தமைக்கு நன்றி! வாய்ப்பிருக்கும் பட்சத்தில் விவாதங்களிலும் பங்கு கொள்ளுங்கள்!

    • வாழ்த்துக்கள் வினவு. பணி சுமை காரணமாக விவாதங்களில் அதிகம் பங்கேற்க முடிவதில்லை. நம் பயணம் தொடரட்டும்.

  3. ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வினவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள், உங்கள் செயல் மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்,

    • உங்களைப் போன்ற நண்பர்களை வினவு தளம் அழைத்து வந்திருப்பதில் மகிழ்ச்சி, ஆதரவிற்கு நன்றி!

  4. வலி மிகுந்த பாதை…ஆனால்,தமிழக மக்களில் பலர் எனக்கென்ன போச்சு
    என்ற தொனியில் இருக்கும் போது….இதைவிட வேறு வலி உள்ளதா?

    • மக்கள் எப்போதும் நேர்மறையில் நமது கருத்துக்களை வரவேற்க வேண்டுமென்பதில்லை. அது ஏற்றத்தாழ்வாகவும் இருக்கும். தொடர் போராட்டத்தின் மூலம் அதில் நாம் மாற்றத்தை கொண்டு வர முடியும்! வினவு படிப்போரும் பலர் அப்படி வந்திருக்கலாம் அல்லவா?

  5. //இந்த சொல்லை வெல்ல வேறு சொல் இல்லை என்பதால் அதை நாங்கள் மார்க்சியம் என்கிறோம்//

    எத்தனையோ உணர்வெழுச்சியை உண்டாக்கும் வார்த்தைகள். மொத்தப் பதிவும் சொல்ல வந்த செய்தியை ஒரு கவிதை போல் இந்த ஒற்றை வரி சொல்கிறது.

    வாழ்த்துக்கள் நண்பர்களே. தொடரட்டும் உங்கள் பணி…!

    • நன்றி மன்னாரு, அந்த சொல்லின் வலிமையை உணர்த்த வைக்க வாய்ப்பிருக்கும் போது விவாதங்களிலும் பங்களிப்பு செய்யுங்கள்!

    • நன்றி சீனூ, இந்த ஏழு ஆண்டுகளில் உங்களிடம் என்ன ‘மாற்றம்’ நடந்திருக்கிறது என்று சோர்ந்து போகாமல் வருவதற்கு கூடுதல் நன்றி. அதுதான் மாற்றமோ 🙂

  6. எனது அரசியல் பார்வையை மாற்றியதில் வினவின் பங்கும்,சவுக்கு தளத்தின் பங்கும் மிக மிக அதிகம்.வெறுமனே ஜூனியர் விகடன் மட்டுமே படித்து அரசியல் தெரிந்து கொண்டு இருந்த நான் ,சமரசம் செய்யாத காத்திரமான கட்டுரைகளை வினவில் படித்த போது அதிர்ந்துதான் போனேன்.தொடக்கத்தில் வினவின் பல கட்டுரைகளை உள்வாங்கிகொள்வதே கடினமாக இருந்தது.தொடர் வாசிப்பில் கட்டுரைகள் வசப்பட தொடங்கின.வினவு பணியை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.எங்களின் ஆதரவு அதற்க்கு என்றும் உண்டு

    • நன்றி ராஜா, புதிய நண்பர்களையும் அழைத்து வாருங்கள், கட்டுரைகள் குறித்த குறிப்பான கேள்விகள், விமரிசனங்களையும் அவ்வப்போது அறியத்தாருங்கள்!

  7. வினவு வலைதளத்திற்கு
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    நிறைய நாள் நான் வினவு கட்டுரைகளை படித்திருக்கிறேன். கருத்து சொல்ல வேண்டும் என்று நினைத்ததுண்டு. ஏதோ காரணங்களால் முடியவில்லை. இன்று தான் முதன்முறையாக கருத்தை பதிவு செய்கிறேன். இந்த கட்டுரையை படித்துவிட்டு என்னால் என் உணர்வை உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

    சொலன்வல்லன் சோர்விலன் …… குறள் அனுபவத்தை தொகுத்து வழங்கியது எதிரியாக இருந்தாலும்கூட உண்மையை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.

    தோழர்களின் சிறை அனுபவங்கள், இளம் தோழர்கள் போராட்டத்தில் பங்களிப்பு இதை படிக்கும் அனைவரையும் ஆச்சரியத்திற்குட்படுத்தும். கரைப்பார் கரைத்தால் கல்நெஞ்சும் கரையும்.

    புரட்சிப்பாதையை நோக்கி பயணிக்க, பணியாற்ற, களத்தில் இறங்க தைரியமும், நீங்கள் கூறிய மார்க்சியமும் பற்றிய விழிப்புணர்வும் தேவை.

    மீண்டும் ஒருமுறை வினவிற்கு எனது வாழ்த்துக்கள்.!

    • நன்றி நண்பரே, உங்களைப் போன்ற மவுனப்பெரும்பான்மையினர் என்ன நினைக்கிறார்கள் என்று இப்படி தெரிவித்தால் மட்டுமே அறிய முடியும். விவாதங்களிலும் பங்கேறுங்கள்!

  8. அரசியல் ரீதியான கேள்விகளுக்கு எப்படி பதிலளிப்பது என்பது முதல் அவதூறுகளை எதிர்கொண்டு அம்பலப்படுத்துவரை எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது வினவு தளம். வாழ்த்துக்கள் வினவு…….

    • நன்றி கருப்பன், நீங்கள் கற்றதையும் புதிய வாசகருக்கு கற்றுக்கொடுக்கும் வண்ணம் விவாதங்களில் பங்களியுங்கள்!

  9. ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வினவிற்கு வாழ்த்துக்கள்!

    உங்களுடைய கருத்துகளுக்கும் தத்துவங்களுக்கும் எதிர் கருத்து கொண்டவன் என்றாலும் உங்களுடைய உழைப்பைப் பாராட்டுகிறேன். தொடர்ச்சியாக பதிவுகள் வந்து கொண்டே இருப்ப்பதிலும் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல பதிவுகளின் ஓட்டத்திலும் பலரின் அயராத பங்கு தெரிகிறது.

    என்னுடைய வருத்தம் இத்தனை உழைப்பும் சரியான திசையில் செலுத்தப் பட்டால் சமுதாயத்திற்கு இன்னும் பலன் நிறைய கிடைக்கும் என்பதுதான்.

    மறுபடியும் எனது வாழ்த்துக்கள்

    • நன்றி மணவை சிவா, உங்களைப் போன்ற அறிஞர் பெருமக்கள் இருப்பதால்தான் எங்கள் உழைப்பு சரியான ‘திசையில்’ செலுத்தப்படாத விசயம் தெரிகிறது! பரஸ்பரம் சரியான திசைக்கு போராடுவோம்!

  10. \\பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு, பாதுகாப்பான முறைகளில், பாதுகாப்பான வார்த்தைகளில் அரசியல் பேசும் நண்பர்கள் தமது சுயகவுரவத்தை களைந்துவிட்டு இதை பரிசீலித்துப் பார்க்க வேண்டும் என்று தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.\\\

    முற்றிலும் உண்மை…தோழர்களை தவிர, ஏனையோர் (நான் உட்பட) ஒரு பாதுகாப்பான முறையில்தான், அரசையோ, சமூக சீரழிவுகளை விமர்சனம் செய்து, தன்னளவில் பெருமையோ, ஆதங்கமோ பட்டு கொள்கிறோம்…இது, இந்த நிலையை எவ்விதத்திலும் மற்ற போவதில்லை என்று தெரிந்தும், தன்னையும் , தன்னை சார்ந்தவர்களைய்ம் பாதுகாத்து கொள்வதில் கவனமாய் இருந்து, சமூக மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள்…கதாநாயக வழிபாட்டில் மூழ்கி திளைக்கும் எங்களிடையே, உண்மையான நோக்கத்தோடு போராடும் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்…

    • நன்றி பாலாஜி ராஜசேகர், உங்கள் வாழ்த்து கூட ஒருவகையில் கதாநாயக வழிபாடு போல இருக்கும் அபாயம் உள்ளது, நீங்களும் பங்கேற்காதவரை 🙂

  11. வினவுக்கும், இந்த முயற்சியை முன்னெடுத்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். வினவின் கருத்துக்கள் எல்லாவற்றிலும் எனக்கு உடன்பாடு இல்லாத போதிலும், அவர்களின் பதிவுகளும், கருத்துகளும், தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என்பது மட்டும் உண்மை. வெறுமனே தமிழ்நாட்டுக்குள் நடைபெறும் விடயங்களை மட்டுமல்லாது, உலகத் தமிழர்களைப் பாதிக்கும், அவர்கள் சம்பந்தமான விடயங்களையும் வெளிப்படையாகப் பேசவேண்டும், விமர்சிக்க வேண்டும், அதனால் உலகத்தமிழர்களையும் வினவின் பக்கம் ஈர்க்கலாம். நன்றி.

    • நன்றி வியாசன், உலகத்தமிழர்களை பாதிக்கும் பிரச்சினை என்று எதனை கூறுகிறீர்கள்? ஈழம்,மலேசியா,சிங்கப்பூர் தமிழ் மக்களைப்பற்றியா? ஆலோசனைகளை கணக்கில் கொள்கிறோம்.

  12. ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வினவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்… உழைக்கும் மக்களை போன்றே, சிறுப்பான்மை மக்களுக்கும் என்று துணையாக இருப்பது, இருக்க போவது கண்டிப்பாக புரட்சிகர அமைப்புகள் தான். அதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. வினவிடம் எனக்கு ஒரு சிறு விண்ணப்பம் இருக்கிறது, தங்களின் மதம் சார்ந்த விமர்சன கட்டுரைகளில் ஒரு பாரபட்சம் இருக்க வேண்டாமே. மதம் என்பது வெறியூட்டும் ஒரு அபின் என்று மார்க்ஸ் கூறினார், அனால், எந்த மதம் என்று கூறாமல் சென்றதால் தங்களுக்கு இந்த குழப்பமோ என்று என்ன தோன்றுகிறது.

    தாங்கள் இசுலாம் மதம்சார்ந்து விமர்சிக்கும் போது ஒரு விதமான மென்மையாகவும், இதுவே இந்து, கிறித்துவ மதங்கள் என்று வரும் பொழுது கடும் வன்மையான போக்கு இருக்கிறது. இசுலாம் என்றால் செல்லமாக தட்டுவதும், இதுவே இந்து மதம் என்றால் தூக்கி போட்டு 4 மிதி மிதிப்பதுமாக இருக்கிறது. ஆகவே இனி வரும் காலங்களில் அனைத்து மதங்களையும் எந்த பாரபட்சமும் பார்க்காமல், எவ்வித சமரசமும் இன்றி சமமமாக விமர்சிக்க வேண்டும் என்பதே அந்த கோரிக்கை. மற்றபடி தாங்கள் மேன் மேலும் வளர்ந்து தங்களின் உன்னத லட்சியமான “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை” வென்றெடுக்க என் வாழ்த்துக்கள்.

    • நன்றி மேரி, இனி எல்லாரையும் தூக்கி போட்டு 4 என்ன 8 கூட மிதிக்கலாம், அப்பவும் நீங்கள் சமத்துவம் உணர முடியுமா என்பது ஐயமே 🙂

  13. இன்றோடு வினவு பிறந்து 7 வருடங்கள் ஆகிறது. நான் பிறந்து இருபது சொச்சம் வருடங்கள் ஆகிறது. வினவு மென்மேலும் வளரவேண்டும்.

    • நானும் வினவும் ஒரே நாளில் பிறந்தோம். வினாவுக்கு நான் ஜூனியர். ஆனால் வினவு எனக்கு பலவற்றை கற்றுகொடுத்துள்ளது. நன்றியுடன் வாழ்த்துக்கள் வினவு.

      • நன்றி விஜயபாஸ்கர், அபூர்வமாக மட்டும் கருத்துரைப்பதற்கு காரணம் சீனியர் என்பது இப்போதுதான் புரிகிறது 🙂

      • நன்றி சரவணன், தொடர்ந்து விவாதங்களில் பங்கு பெறுவதற்கு வாழ்த்துக்கள்!

        • முருக்கு சரவணன் , பார்பன மேட்டின்னை என்று வினவு என்ன தான் பட்டங்கள் கொடுத்தாலும் , வினவை விட்டு நான் ஓட மாட்டேம் இல்ல ? எதற்கும் அஞ்சா சிங்கம் இல்ல இந்த சரவணன் ! 🙂

  14. // அந்த ஒரு சதவீத எண்ணிக்கையைக் கொண்ட அறிஞர்களின் உள்ளொளி சிந்தனை திறத்தால்தான் இந்த உலகம் புரட்டிப் போடப்படுகிறது. //

    99%, 1% இரண்டும் தேவை. இரண்டும் முரண்பட்டு தனித்தியங்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்.

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் வினவு.

    • நன்றி வெங்கடேசன், உங்களிடம் இதுவரை 1%தான் போராடியிருக்கிறோம், 99% காத்திருக்கிறது 🙂

    • நன்றி நண்பரே, விருப்பம் இருக்கும் பட்சத்தில் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்!

  15. வினவிற்கு புரட்சிகர வாழ்த்துக்கள் !!!. கோடி அடிக்காமல் கூட ஓட்டி இருக்கின்றோம். வினவு படிக்காமல் இருந்ததில்லை. எந்த பிரச்சனை என்றாலும், அதில் சரியான மார்க்சிய பார்வை எது என்பதற்கு புரட்டிப் பார்க்கும் ஒரு அகராதியாய் வினவு திகழ்கின்றது.

    வாழ்த்துக்கள் !!!!

      • திரைகடலோடியும் பஞ்சம் பிழைப்பதால், உங்களால் என்னை பார்க்கமுடியவில்லை.

  16. ஒரு தாயை போல
    அடிமை வர்க்கத்தை அரவணைப்பதிலும்
    அன்பு செலுத்துவதிலும்
    அழகானவள் நீ (வினவு),

    ஆளும்வர்க்கத்தின் சுரண்டலை
    வேரோடு பிடுங்கி எடுத்து
    அடிமைவர்க்கத்தின் ஆசைக்கு
    உரமாக்க வேண்டும் வேண்டும் ,

    பகுத்தறிவில் சிறந்தவள் நீ
    சித்தாந்தத்தில் உயர்ந்தவள் நீ
    எத்தனை முறை வீழ்ந்தாலும்
    அத்தனைவும் அனுபவங்களாய்
    வீரத்தளும்புகளாய்
    முற்போக்கு சிந்தனையோடு
    முன்னேறிச் செல்ல வேண்டும் வேண்டும்

    தவறுகளை திருத்தும் தந்தையாய்
    பிற்போக்குச் சிந்தனைகளை
    பிழை என்று கருத வைத்தமைக்கு நன்றி

    பகுத்தறிவோடு பேசுகையில்
    புரியாத கருத்துகளை கண்டதும்
    பச்சிளங் குழந்தையாய் தவிப்பேன்
    நாட்பட நாட்பட
    நானும் உன்னோடு நகர்ந்து
    இப்போது சித்தாந்த சிந்தனையோடு
    உழைக்கும் மக்களுக்கான போராட்டத்தில்
    உன்னோடு ஓடிவர ஆரம்பித்து விட்டேன் ,,

    ஒரு உழைப்பாளியை போல
    நீ விதைத்த
    விடுதலை வார்த்தை விதைகளெல்லாம்
    எனக்குள் இப்போது
    ஆலமரமாய் வளர்ந்து விட்டது
    அடிமைக்காக போராட தூண்டும்
    அவைகளெல்லாம்
    ஆளும்வர்க்கத்தை நொடிக்கொருமுறை
    பழித்து பழித்து சலித்து விட்டது ,
    இனி பாட்டாளிகளை
    ஒன்றிணைப்பதை தவிர வேறு வழியில்லை ,,,

    முரண்பாடுகள் இருக்க வேண்டும்
    அது முற்போக்கு சிந்தனைக்காக
    விடாமுயற்சி இருக்க வேண்டும்
    அது சுரண்டலை ஒழிப்பதற்காக
    கருத்து சுந்தந்திரம் இருக்க வேண்டும்
    அது கள்வர்களை கண்டறிவதற்காக
    என்று எனக்கு பாடம் கற்பித்து
    அதன்படி வாழவைப்பதும் நீதான் ,,

    சாதி மத சிந்தனையோடு
    தன்னலமாய் வளர்த்த
    பெற்றோர்களை விட
    பொதுநலமாய் வளர்த்து
    என்னை பொக்கிசமாக்கியதில்
    உன்னுடைய பங்கு அதிகம்

    உழைக்கும் மக்களுக்காக
    ஓங்கிய உன் கரங்கள்
    ஊதாரிகளை அடக்கி ஒடுக்கவே
    ஓய்வெடுக்க வேண்டுமென்றால்
    பாட்டாளியின் மடியில்
    படுத்துறங்குவாயே தவிர
    பாசிச கொள்கைகாரர்களுடன் அல்ல ,

    அரசியல் கருத்துக்களால்
    ஆளும்வர்க்கத்தை உரசிப்பார்த்து
    அதன் போலியை அடித்து நொறுக்கி ,
    அடிமைகளான உழைக்கும் மக்களை
    ஒன்றிணைத்து
    அவர்களின் உரிமைக்காக போராட
    எங்களை தூண்டும்
    மார்க்சிய தூணும் நீதான் ,

    கிசுகிசுக்களை படித்து (குங்குமம் , தட்ஸ்தமிழ் , குமுதம் …..)
    கீழ்த்தரமாய் சுயநலமான
    என் சிந்தனைகளை
    வெட்டி எரிந்து
    சமூகத்தோடு ஒட்டி வாழ்ந்து
    சமத்துவச் சிகரமாய்
    என்னைச் சீரமைத்ததும் நீதான் ,

    இரக்கமில்லா முதலாளியின் கையில்
    இயற்கையெல்லாம் அடிமையாய்
    அதையெல்லாம் அழித்து
    அதிகார வர்க்கத்தின் துணையோடு
    தன்னை ஆளும்வர்க்கமாய்
    மாற்றிக்கொண்டிருக்கும் உண்மையை
    எனக்கு எடுத்துரைத்ததும் நீதான் ,

    நானும் ஒரு காதலனாய்
    சமூகத்தை காதலிக்கிறேன் இப்போது
    நீயும் ஒரு ஆசிரியராய்
    நடைமுறைச் சம்பவங்களோடு
    முதலாளியின் சுரண்டலை
    தொழிலாளர்களின் போராட்டத்தோடு
    எனக்கு விவரித்து எடுத்துரைக்கிறாய் ,,

    வினவின் சோசிலிச கனவு நிறைவேற வாழ்த்துக்கள் ,,,

    தொடரட்டும் உன் பணி ,,,

    இதன் முன்னேற்றத்துக்கு பாடுபடும்
    அனைத்து உழைப்பாளிகளுக்கும்
    என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ,,

  17. பொதுவாக எந்த நிகழ்வானாலும் செய்தியானாலும் ,நான் முதலில் தேடுவது வினவில் தான். காரணம், நேர்மையாக ஒரு பிரச்சனையை அணுகும் விதம் மற்றும் உண்மையை ஆராய்ந்து எழுதப்படும் செய்திகள்.

    புரியாத சில நிகழ்வுகளில், “அது குறித்து வினவில் எழுதி இருக்காங்க, அருமையான கட்டுரை” என்று நண்பர்கள், சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வது இப்போது சாதாரணமாக பார்க்க முடிகிறது.

    தோழர்களின் பணி சிறக்கட்டும், வாழ்த்துக்கள் வினவு தோழர்கள் !

  18. எங்கள் கையில் இருக்கும் கருத்து வெட்டரிவாள் வினவு, சதி பலவும் சூழ்ந்து சமர்புரியும் வேளையிலும் இந்த வளர்ச்சி பெருமிதமான உற்சாகத்தை அளிக்கிறது!
    புதிய ஜனநாயகப் புரட்சிப் பாதையில் வினவுதலத்தின் பனி அசாதாரணமானது. கலப்போராட்டத்தையும் கருத்துநிலை விவாதங்களையும் ஒருங்கிணைக்கும் பாலமாக, சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகள், கலை இலக்கியப் படைப்புகள் என எல்லாவற்றையும் பற்றிய பாட்டாளி வர்க்கப் பார்வையைக் கூறும் மக்களின் விடுதலைக்கான ஆயுதமாக வினவு உள்ளது என்பதை நமது எதிரிகளும் கூட மறுக்க முடியாது! இந்திய நக்செல்பரி அமைப்புகளும் இடதுசாரி இயக்கங்களும் முன்னெப்போதும் இல்லாத அளவில் அகநிலை மற்றும் புறநிலைப் பின்னடைவுகளைச் சந்தித்து வரும் சூழலில், வினவு மேலும் வளர்ந்து இந்திய மா.லே. அமைப்புகளுக்கு வழிகாட்டும் ஊடகமாக வளரவேண்டும், அதற்கான சொல்வன்மையும் சோர்வின்மையும் நமது தோழர்களிடம் உண்டு!
    வினவு ஆங்கிலத்தில் தனித்ததொரு தளமாக மலரவேண்டும்,
    மேலும் அதிகத் தோழர்களை இந்தக் கருத்துப் போரில் பங்கேற்கப் பயிற்றுவிக்க சிறப்பு வழிமுறைகளை உருவாக்க வேண்டும்,
    வாசகர்களின் கருத்தைக் கவரும் முறையிலான புதிய வடிவங்களில் அரசியல் கருத்துக்களைக் கொண்டுசெல்ல வேண்டும்.

    புரட்சிகர வாழ்த்துக்கள் அன்புத் தோழர்களே!

    By the way, Please provide the web-stats about the number of articles, comments, views, shares and so on… (நமது தோழர்களின் உழைப்பைப் புள்ளி விபரமாகத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லாமல் இருக்குமா?)

    • நன்றி நண்பரே, நீங்கள் கேட்டிருக்கும் புள்ளிவிவரங்களை தனியாக எழுத திட்டமிட்டிருக்கிறோம்.

  19. வினவில் கேள்வி பதில் பகுதி ஆரம்பிக்கலாமே !

    வாசகர் கேள்வி இல்லாவிட்டாலும் கருணாநிதியைப் போல தானே கேள்வி கேட்டு பதில் அளிக்கலாம்.

    முதல் கேள்வி என்னுடையதாக இருக்கட்டும்.

    புரட்சி புரட்சி என்று கூறும் நீங்கள் ஜார்கண்ட் ஒரிசா போன்ற இடங்களில் பரவியுள்ள மாவோயிஸ்ட்களை, அவர்களுடைய வழி முறைகளை ஆதரிக்கிறீர்களா? _____________________

    • என் கேள்வி இரண்டாவது :

      முன்னேற்றம் முன்னேற்றம் என்று கூறிக்கொண்டு ,இந்தியாவின் இயற்கை வளங்களை [ஜார்கண்ட் ஒரிசா போன்ற இடங்களில்] சுரண்டும் corporate company கலுக்கு எதிராகா ஜார்கண்ட் ஒரிசா போன்ற இடங்களில் மாவோயிஸ்ட்கள் அரசியல் வழிகாட்டுதலில் நடக்கும் மக்கள் போராட்டங்கள் சரிதானே வினவு ?

      • இயற்கை வளங்களை மனித உபயோகத்திற்குக் யாரோ ஒருவர் கொண்டு வர வேண்டும். கார்ப்பரேட் சுரண்டக் கூடாதென்றால் – சாரி தோண்டக் கூடாதென்றால் – யார் தோண்டுவது ? மோடியோ மன்மோகனோ அரசாங்கம் செய்தாலும் தப்பு. கம்பெனிகள் செய்தாலும் தப்பு. பேசாமல் மாவோயிஸ்டுகளிடம் இந்த வேலையை ஒப்படைத்து விட்டு விடுவோமா?

  20. இணைய ஆயுதம்
    வினவுக்கு
    வாழ்த்துக்கள்!!

    வினவின் கருத்துக்களை
    பகிர்ந்துகொள்ளும் தருணத்தில்
    ரஜினி ரசிகன்
    ‘அப்படியா’ என்று
    புருவம் உயர்த்துகிறான்.

    வினவின் கருத்துக்களை
    பகிர்ந்துகொள்ளும் வேளையில்
    கரைவேட்டிகள்
    பொறாமை கொண்டு
    பார்க்கிறர்கள்.

    தனியார் மயக் கல்வியை
    தவறாமல் உரைக்கும்போது
    பெற்றோர்கள்
    பதறுகிறார்கள்.

    மாணவர்கள்
    புதிய வடிவில்
    சிந்தனை செய்கிறார்கள்.

    பணப்பேய்களுக்கு
    பேதி பிடுங்குகிறது.

    மதவாதிகள்
    மிரளுகிரார்கள்.

    கருவரைக் கதவுகள்கூட
    சடாரென்று
    மூடப்படுகின்றன.

    வினவு வாசகன்
    எனச் சொல்லும்
    வேளையில்
    குமுத வாசகன்
    பெருமூச்செறிகிறான்.

    வினவு.
    நீ விதை.
    நாங்கள்
    முளைக்கிறோம்.
    முள்ளாக இருக்க வேண்டிய இடத்தில்
    முள்ளாக.

    கல்லாக இருக்க வேண்டிய இடத்தில்
    கல்லாக.

    சொல்லக இருக்க வேண்டிய இடத்தில்
    சொல்லாக.

    அடிக்கவேண்டிய இடத்தில்
    ஆயுதமாக.

    நன்றி வினவு.
    உன் விதைப்புக்கு நன்றி.
    இதோ
    நாங்கள்
    முளைத்துக்கொண்டே இருக்கிறோம்!

    • நன்றி புதிய பாமரன்!விதைப்பெல்லாம் சரிதான், விளைச்சல் அமோகமென்று சொல்ல முடியுமா? 🙂

  21. Dear Vinavu,

    It is one of the biggest milestone. I truly agree, you have opened my blind eyes many times towards various issues. Appreciate that.

    You are critizing various religious organisations and how it plays major role in keeping ignorence in people. Also, You are too harsh on Hindu Organisation than other religious organisation. Sometimes, I felt you are one sided, Example about Kashmiri Pandit issues. I expect little more nutralized views from you.

    I respect and salute your home work and enjoyed sarcasim towards various issues. Thanks for your wonderful contribution towards Society.

    Sankar V

    • நன்றி சங்கர், பார்வை குறித்த உங்கள் பார்வையுடன் உரையாடி விரிந்த பார்வையை அளிக்க முயல்கிறோம்.

  22. இந்த கட்டுரையில் குறிக்கப்பட்டுள்ள ஜெயமோகனின் சீன நிதி குறித்த புகாருக்கு வினவில் பின்னுட்டமிடும் சுகதேவ் எதிர்வினையாற்றி இருந்தார்.அவருக்கு பதில் கூறும் ஜெயமோகனின் சாரைபாம்பின் பத்தி என்ற கட்டுரையில் ம.க.இ.க ஆபத்தற்ற சாரைபாம்பு மேலும் சாரைபாம்பு இருக்கும் இடத்தில் வேறு விச பாம்புகளும் வராது.எனவேதான் இந்திய உளவுதுறை அவர்களை விட்டுவைத்துள்ளது என விளக்கியுள்ளார்.

    இந்திய அரசுக்கு ஒரு வகையில் உதவி செய்கின்ற ஆபத்தில்லாத சாரை பாம்புக்கு சீனா ஏன் நிதி உதவி செய்ய வேண்டும்?

    இதிலிருந்தே தெரிகிறது அவரின் குற்றச்சாட்டு வெறும் அவதூறு என்று.

    வினவுக்கு வாழ்த்துக்கள்!

    • நன்றி ராம், ஜெயமோகனது அவதூறுகள் இப்படி ‘ஆழமாக’ ஆராய்ச்சி செய்து புரிவதற்கு தகுதி கொண்டவை அல்ல.

      • சீனா விடம் காசு வாங்கியது யாரு ?

        “பயங்கரவாதத்தை எதிர்க்கவும் உள்நாட்டு பாதுகாப்புக்கு எதிரான அபாயங்களை எதிர்கொள்ளவும் நாம் சீனாவுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த நாட்டுடனான நம் எதிர்ப்பு நம் படைகளை வடக்கே கட்டிப் போட்டு தெற்கே சமுத்திரத்தை நோக்கி நம் பார்வையை செல்லவிடாமல் செய்துவிட்டது. அங்கே தான் நம் நாடு பலவீனமாக இருக்கிறது. எனவே சீனாவுடனான நம் உறவுகளை மேம்படுத்துவதே நம் ஆக முக்கிய கவனிப்பை பெறும் விஷயமாக இருக்கவேண்டும். எனவே பழைய சரவ்தேச உடன்படிக்கைகளை எல்லாம் பற்றி கவலைப்படாமல் நம் பாதுகாப்பை மட்டும் கணக்கில் கொண்டு நாம் நாம் சீன-இந்திய எல்லை பிரச்சனையை பரஸ்பர சலுகைகள் மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் முடிக்க வேண்டும். இத்தகைய நெகிழ்ச்சித் தன்மைதான் சீன-இந்திய உறவில் யதார்த்த அணுகுமுறையாக இருக்க முடியும். சீனாவின் நிலைபாடுகள் எல்லை பிரச்சனையில் ஆதாரமில்லாதவையாக இருக்கலாம். ஆனால் நமது எல்லையை நாம் வரையறை செய்திருப்பது போலியான பிரிட்டிஷ் தாஸ்தாவேஜுக்களின் அடிப்படையில்தான். எனவே இருநாடுகளும் வரலாற்றின் கைதிகளாக இருக்கக் கூடாது,. …நெகிழ்ச்சித்தன்மையே சீன உறவுகளில் அடிநாதமாக அமையவேண்டும்.” (பக்கம் 104, Hindus Under Siege: The Way Out ஹர் ஆனந்த் பப்ளிகேஷன்ஸ் 2005)”

        இது யார் கருத்து என்பதை வினவு வாசகர்கள் ஊகம் செய்ய முடிகீன்றதா?

  23. வினவுக்கு,

    எனது தோழமையான வாழ்த்துக்கள்.
    வினவுவோம், சேர்ந்து வினை செய்வோம்.

    நன்றி.

  24. ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வினவுக்கு புரட்சிகரந்வாழ்த்துக்கள், தங்கள் பணி தொடரட்டும்…

  25. இலக்கியக் கொள்கையாக 1970களில் உருவான வாசகர் வினை கோட்பாடு (Reader Response Theory) தமிழ் இலக்கிய உலகு இன்னமும் ஏற்க தயங்கும் ஒன்று. பரந்துபட்ட வாசகர்களிடம் பிரதி செல்வது மற்றும் வாசிக்கப்படுவது குறித்த அச்சம் இங்கு நிலவுகிறது. எஸ். ராமகிருஷ்ணன் ஒரு முறை இந்த அச்சத்தை நாசூக்காக வெளிப்படுத்தினார். தமிழ் சிறுபத்திரிக்கை உலகில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் மற்றும் எழுதக் காத்துக் கொண்டிருப்பவர்கள் என்று இரண்டு வகையினர் தான் இருக்கிறார்களாம்; வாசகர் என்று எவரும் இல்லையாம். எஸ். ராவின் அண்ணன் ஜெயமோகனோ தனது பின்னூட்டப்பெட்டியை வாசகர்கள் நெருங்க இயலாமல் நிரந்தரமாகப் பூட்டியே வைத்துள்ளார்.

    வாசகர் வினை கோட்பாட்டில் ஒரு சராசரி வாசகர் முக்கியத்துவம் பெறுகிறார். அவர் வாசகர் என்ற நிலையை கடந்து இணைப் படைப்பாளியாகிறார். வினவின் வாசகர்கள் இந்த நோக்கில் இணைப் படைப்பாளிகள். வினவு சாதித்தவற்றில் ஒன்றாக இதனையும் நான் கருதுகிறேன். ஒரு வசதிக்காக மட்டுமே படைப்பாளி என்ற பதத்தை பயன்படுத்தினேன். தமிழில் பெரும்பான்மையோரை கீழ்நிலைப்படுத்தும் படைப்பாளி என்ற சொல்லாட்சி ஆங்கிலத்தில் இல்லை. எழுத்தாளர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். யார் படைப்பாளி? லக்ஷ்மி மணிவண்ணன் போன்ற பப்பாளிகள் கூட தங்களை படைப்பாளிகள் என்று போட்டு நம்மை வேறுபடுத்துகிறார்கள். உண்மையான படைப்பாளிகள் இந்த உலகில் கம்யூனிஸ்ட்கள் தான்.

    பார்ப்பனியமும் வேதாந்தமும் ஒரு பக்கம் நிற்க மார்க்சியமும், பெரியாரியமும் மறுபக்கம் நின்று போரிட வினவு, ஆதிபகை ஒன்றின் வரலாற்று தொடர்ச்சி. மோடியின் வெற்றியால் சற்று காயம் அடைந்தது உண்மை தான். எனினும் மோடியின் இந்த வெற்றி முடிவல்ல. ஆம்! போர் இன்னும் முடியவில்லை. The Battle may have been lost; But the War is not over.

  26. இணையத்தில் பயனற்ற எத்தனையோ தளங்கள் தமிழில் இருக்க வினவு போன்ற ஒரு தளம் இத்தனை வெற்றிகரமாய்த் தன்னுடைய முத்திரையைப் பதித்துக்கொண்டிருப்பது மகிழ்வுக்குரியது. பிறர் கைவைக்கத் தயங்கும் எத்தனையோ துறைகளைப் பற்றி சிறிதும் அச்சம் என்பதே இல்லாமல் அக்கிரமங்களையும் அயோக்கியத்தனங்களையும் தட்டிக்கேட்கும் துணிச்சல் வினவுக்கு இருக்கிறது. அதுமட்டுமின்றி போலிகளைத் தோலுரித்துக்காட்டுவதிலும் சிறிதுகூடத் தயங்காத ஒரு தளம் வினவு. எனக்கு வினவின் எல்லாக் கருத்துக்களுடனும் உடன்பாடு இல்லையென்ற போதிலும் நான் பெரிதும் விரும்பும், பெரிதும் மதிக்கும் ஒரு தளம் வினவு என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

  27. வினவு தளம் தைரியமாக எல்லா அரசியல் சம்பவங்களையும் விமர்சிப்பது பாராட்டுக்குறியது 7 ஆண்டுகளில் உங்களின் எழுத்து மற்றும் சமுக பணிகளில் நானும் ஒருவனாக பங்கு கொள்ள இயாலமைக்கும் உங்களின் செயல்களுக்கு உதவி செய்ய முடியாத சூழ்நிலையில் இருப்பதையும் நினைத்து வருந்துகிறேன் அனாலும் நீங்கள் இசுலாம் மீதும் இசுலாமியர்கள் மீதும் கம்மூனிசத்தை மீறி பாசம் வைத்து இருக்கிறீகளோ என்னும் அய்யம் எனக்கு உண்டு இசுலாம் மதத்தை விமர்சிக்கும் போது சகோதரனை விமர்சிப்பது போலவும் மற்ற மதங்களை விமர்சிக்கும் போது எதிரியை விமர்சிப்பதுவும் போல உள்ளது மற்றபடி வினவு தளத்தின் கட்டுரைகள் சமுக மாற்றத்திற்க்கானது என்பதில் எள்ளவும் அய்யமில்லை வினவுன் பணீ தொடர வாழ்த்துக்கள்………..

  28. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கட்டிலில் ஏறிய பிறகு அதன் செயல்பாடுகளையும் அதற்காக மூர்க்கத்தோடு வாதாடும் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் மற்றும் பார்ப்பனர்களின் திமிரான பேச்சுகளையும் பார்க்கும் போது தற்போது தமிழகத்திற்கு ஓராயிரம் பெரியார்கள் தேவை என்பதை நாம் முதலில் புரிந்து கொள்வதோடு அதற்காக களப்பணியாற்றுவது ஒரு கடமையாக நம்மீது சுமத்தப்பட்டுள்ளது.

    உழைக்கும் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தோடு பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தையும் மிகத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டி தருணம் இது. கடந்த 6 ஆண்டுகளில் வினவைப் படித்துவிட்டு இனியும் வினையாற்றாமல் இருப்பது வினவை ஏமாற்றுவதோடு மட்டுமன்றி நட்டாற்றில் தவிக்கும் மக்களை வேடிக்கை பார்க்கும் குற்றத்திற்கும் ஆளானவர்களாகி விடுவோம்.

    இனி வினவோடு இணைவோம்!

    களப்பணி ஒன்றுதான் கட்டமைப்பையே மாற்றியமைக்கும்.

    வாழ்த்துகளுடன்!

    ஊரான்

    • மனிதனை மனிதன் அடிமைப் படுத்துவது, ஏமாற்றுவது என்பது உயிர் தொடங்கிய காலத்திலிருந்து நடந்து வருவது. அவ்வாறு செய்பவர்கள் மிகச் சிறுபான்மையினரே. பெரும்பாலானாவர்கள் நமக்கு என்ன வந்தது என்று போவதால் அந்த சிறு சதவீததினர் தாங்கள் நினைப்பதை சாதித்துக் கொள்கிறார்கள்.

      இன்று வர்க்கப் போராட்டம் என்று சொல்பவர்கள் எங்கு குறிப்பிடத்தக்க வெற்றி பெருகிறார்களோ அங்கே முதலாளித்துவ ரஷ்யாவில் என்ன நடக்கிறது? புடினும் அவரது அடிப்பொடி மெட்வடேவும் மாற்றி மாற்றி பதினாறு வருடங்கள் உடும்புப் பிடியாக பிடித்துக் கொன்டிருக்கிறார்கள்.வினவைப் போல யாராவது ஒருவர் அதை எதிர்த்து அங்கே பேசி விட முடியுமா? எதிர்த்துப் பேச, பாட நினைத்தவர்கள் சர்ச்சில் பாட வேண்டியிருந்தது.(புஸ்ஸி ரயட்ஸ்) அவர்களையும் பெண்கள் என்று பார்க்காமல் சிறையில் அடைத்தார் முதலாளித்துவ ரசியாவின் தலைவர். நீங்கள் ஏற்காத வட கொரியாவில் என்ன நடக்கிறது? அவ்வளவு தூரம் போவானேன்? பக்கத்தில் இருக்கும் நீங்கள் அழைக்கும் போலி கம்யூனிஸ்டுகளால் ஆளப்படும் கேரளாவில் இந்தியாவிலேயே அதிக பட்ச கூலி கொடுக்கப் படுகிறது. அங்கே அந்த உழைக்கும் தோழர்கள், தொழிற்சங்ககள் தொழில் துறையை எந்த நிலையில் வைத்திருக்கிறார்கள் ? உண்மையில் இன்று கேரளாவில் அதிகமாக பிஹார் நேபாளத் தொழிலாளிகள்தான்.அவர்களுக்கு சம நியாயமும் நீதியும் கிடைக்கிறதா?

      ஒரு பொதுவான வாக்கு உண்டு. நீங்கள் பிறந்த இடத்திலிருந்து 20-25 மைல் தூரத்துக்குள் என்ன விளைகிறதோ அதுதான் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவு.அது போல எந்தக் கால கட்டத்திலேயோ எந்த தட்ப வெப்ப நிலையிலோ, எந்த சமுதாயத்திலோ ஒத்து வந்த சமூகத் தத்துவங்கள் நமது நாட்டுக்கு நமது கலாசாரத்துக்கு ஒத்து வரவே வராது. அந்த நாட்டிலேயே ஒரு நூற்றாண்டு கூட அந்தத் தத்துவங்கள் நிலைக்க வில்லை என்பது வேறு விஷயம்.

      • “எந்த சமுதாயத்திலோ ஒத்து வந்த சமூகத் தத்துவங்கள் நமது நாட்டுக்கு நமது கலாசாரத்துக்கு ஒத்து வரவே வராது.” என்று சொல்கிற மணவை சிவா என்னவென்றே தெரியாத இந்திரலோகம், பரலோக ராஜ்ஜியம் மற்றும் சுவனபத சமூகங்களைக் சுட்டிக்காட்டி மனிதனை ஆள்கிற மதக் கலாச்சாரம் மனிதர்களுக்கு ஒத்து வருமா என்பதற்கு பதில் சொல்வாரா?

        கலிபோர்னியாவில் கபாலபதிபிராணயாமம் சொல்லித் தருகிற இந்துக்கலாச்சாரம் மணவைசிவாவிற்கு நமது கலாச்சாரம் என்றால் உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்றுசொல்கிற பாட்டாளிவர்க்க தத்துவம் நமக்கும் மட்டுமல்ல அனைத்து நாட்டு பாட்டாளிகளுக்கும் ஜீவ ஆதாரமாக இருக்கிறது என்பதற்கு பதில் கூறுவாரா?

        “நீங்கள் பிறந்த இடத்திலிருந்து 20-25 மைல் தூரத்துக்குள் என்ன விளைகிறதோ அதுதான் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவு.” மார்க்சும் எங்கெல்சும் பாட்டாளிகளை சுட்டிக்காட்டுகிறார்கள் என்றால் மணவை சிவாவிற்கு இந்த வார்த்தை வாய்தவறி வந்ததா என்று தெரியவில்லை!

        20மைல் தூரம் எவ்வளவு பெரிய தொகை????????? சொகுசாக வாழ்கிறவர்களின் இதயத்தை நனைப்பதற்கே பாட்டாளிகள் சிந்துகிற இரத்தம் தான் காரணம் என்றால் சிவா சொல்கிற மைல் கணக்கு மயிரளவிற்குத்தான் என்பது என் புரிதல்.

        • “அந்த நாட்டிலேயே ஒரு நூற்றாண்டு கூட அந்தத் தத்துவங்கள் நிலைக்க வில்லை என்பது வேறு விஷயம்.”

          என்னுடைய இந்த வாக்கியத்திற்கு பதில் காணோமே!

          “சொகுசாக வாழ்கிறவர்களின் இதயத்தை நனைப்பதற்கே பாட்டாளிகள் சிந்துகிற இரத்தம் தான் காரணம் என்றால்….”

          இன்று ரஷ்யாவிலும் சீனாவிலும் வடகொரியாவிலும் — லும் முதலாளிகள்தான் ஆள்கிறார்களா? அங்கே சமத்துவம் நிலவுகிறதா?

          • இப்ப பதில் சொல்லுவோம். தத்துவங்கள் நிலைக்கவில்லை என்பதற்கும் நிலைத்திருக்கின்றன என்பதற்கும் தங்கள் பார்வை என்ன? வர்க்கபோராட்டம் மார்க்சும் எங்கெல்சும் முதன்மையாக சுட்டுகிற தத்துவம். அது சமூகம் இதுவரை கண்ட எல்லா உற்பத்திமுறைகளிலும் நிலவுகிறது. புதினின் ரஷ்யாவிலும் ஒபாமாவின் வால்வீதியுலும் இன்றுவரை அதுதான் நீள்கிறது. ஆனால் உங்களுக்கு கம்யுனிசம் என்பது சீமாட்டி கட்பீசில் அரை மீட்டர் துணிவாங்குவதைப் போல ஸ்டாக் இருக்கா இல்லையா என்று கேட்கீறிர்கள். முதலாளித்துவத்திற்கே இன்று ஸ்டாக் கிடையாது என்று மணவை சிவாவிற்கு தெரியுமா என்று தெரியவில்லை!

            நம்மைபோன்ற எந்த மூன்றாம் உலக நாடுகளுக்கும் உள்நாட்டு உற்பத்தி கிடையாது, அமெரிக்காவிற்கும் கிடையாது. டெட்ராய்ட் நகரமே சூதாடி தோற்கப்பட்டிருக்கிறது, எண்ணெய்க்கு அல்லா நாடுகள், சந்தைக்கு இந்தியா என்று கோவணத்தை அவிழ்த்துபோட்டு ஆடுகிற பொழுது தாங்கள் பேஸ்மண்ட் பத்திபேசுவது புதினின் ஒபாமாவின் மானத்தை வெகுவாக புண்படுத்தும்.

            அடிமை உடமை சமூகத்திலும், நிலப்புரத்துவ சமூகத்திலும், முதலாளித்துவ சமூகத்திலும் சோசலிச சமூகத்திலும் வர்க்கப்போராட்டங்கள் நடைபெறுகின்றன என்பதைப் புரிவதற்கு மணவை சிவா மார்க்சிஸ்ட் சிவாவாக இருக்க வேண்டியது இல்லை. இது இரண்டாவது தத்துவம். தத்துவம் மேசை சிந்தனைகளின் விளைவுகள் அல்ல என்று பூர்ஷாவாக்களின் நெற்றிப்பொட்டில் அடித்துச் சொன்னதே மார்க்சியம் தான். தத்துவம் பாட்டாளிகளிடத்தில் கண்டு கொள்ளப்படுகிறது. நம்மைபோன்று கம்ப்யூட்டரில் பின்னூட்டம் போடுகிறவர்களிடம் இருந்து அல்ல!

            அரசு என்ற ஒன்று இருக்கிறது என்றால் அது எப்படி இயங்குகிறது என்று கவனியுங்கள். வடகொரியா, சீனா, ரஷியா இதுவெல்லாம் கம்யுனிச நாடுகள் அல்ல. ஒரு சோசலிச நாடு தன் சொந்த நாட்டு பாட்டாளிகளின் மற்றும் பிற நாட்டு பாட்டாளிகளின் சர்வாதிகாரத்திற்கு பாடுபடுகின்றன துணைபுரிகின்றன. ஆனால் இன்றைய சீனாவைப்பாருங்கள். அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக சித்தப்பாவாக நடந்துகொள்கிறது. உங்களுக்கு சொல்லிக் கொடுப்பவர்கள் வர்க்கப்போராட்டம் பற்றி சொல்லித்தராமல் சீனா கம்யுனிச நாடு அமெரிக்க ஜனநாயக நாடு இந்தியா ஜனநாயக நாடு என்று சொல்லித்தருகிறார்கள்.

            அமெரிக்கா விழி பிதுங்கி நிற்பதைப்பார்த்தால் முதலாளித்துவ நாடா என்று தெரியவில்லை. சீனாக்காரன் வெள்ளைபேப்பரில் அமெரிக்கா கிட்ட கைனாட்டு வாங்கி கொண்டு கக்கத்தில் வைத்துகொண்டு அலைகிறான். சீனாவில் பில்லியனர்கள் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிகம். இந்தியா இப்ப வரைக்கு ஒரு மார்கெட். ஒரு மார்கெட்டுக்கு எதுக்கு தேசிய கொடி? என்று இப்பவரை புரியவில்லை.

            அப்படியானால் வினவு போன்ற புரட்சிகர அமைப்புகள் பேசுகிற பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றால் என்ன? புதிய ஜனநாயகப் புரட்சி என்றால் என்ன? பிற நாட்டில் அமெரிக்காவில் சீனாவில் ரஷ்யாவில் வடகொரியாவில் இந்தியாவில் பாட்டாளி வர்க்க அமைப்புகள் எவ்விதம் அரசை எதிர்த்து போராடுகின்றன? அவை எப்படி மார்க்சிய-லெனிய கோட்பாடுகளை நடைமுறை எதார்தத்தில் நிரூபித்துக்காட்டுகின்றன? என்ற விதத்தில் என்றைக்காவது சிந்தித்து இருக்கீறிர்களா?

            பிறகு தத்துவங்கள் நிலைக்கவில்லை என்று எந்த அர்தத்தில் சொல்கீறிர்கள் சிவா? காசநோய் கிருமிகள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே தான் நிலைத்திருக்கின்றன. அப்படியானால் எலும்புருக்கி தத்துவமா? கலாச்சாரமா?

  29. இன்னும் நிறைய புரட்சிகரமான கட்டுரைகள் எதிர்பார்கிறோம். வினவுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.

  30. வினவுக்கு வாழ்த்துகள் ! சமூக அக்கறையுடன் எவ்வித தயக்கங்களும் இன்றி நீங்கள் எழுதி வருவது குறித்து மகிழ்ச்சி. எண்ணிறந்த படிநிலைகளைக் கொண்ட இந்த சமூகத்தில் சமநிலை உருவாக உங்களைப் போன்ற களப்பணியாளர்களின் பணி அவசியம். அதே நேரம் தானம் செய்தவன் கொலை செய்வது போல சில நல்ல காரியங்களுக்கு துணை நிற்கும் நீங்கள் அடிப்படையற்ற, ஒரு தவறை இன்னும் எத்தனை காலம் செய்யப் போகிறீர்கள்? பார்ப்பனர்/பிராமணர் என்ற ஒரு சாதியை நீங்கள் இந்த ஏழு ஆண்டுகளில் அவதூறும், அவமானமும் செய்தது போல கருத்துலகில் வேறெந்த சாதியும் அவமானப்படுத்தப்பட்டதில்லை. தலித் களை அவமானப்படுத்தியதை காரணமாக்கி இந்த காரியத்தை நீங்கள் செய்வீர்களானால் அந்தத் தவறுக்கும் , நீங்கள் செய்து கொண்டிருக்கும் தவறுக்கும் என்ன வித்தியாசம்? பார்ப்பனர்களை __________________________ ….. என்றெல்லாம் பலவாறாக வரும் பின்னூட்டங்களை அனுமதிக்கும் உங்கள் “கருத்து சுதந்திரம்” வேறெந்த மதம் குறித்து வரும் இப்படிப்பட்ட பின்னூட்டங்களை அனுமதிக்குமா?
    ஓயாத வசை, கண்மறைக்கும் ஆத்திரம் , அனைத்திலும் பிராமணச் சாதியைக் கண்டுபிடிக்கும் ஆய்வு …… மெய்யான சமத்துவம் பேசிய எவரும் ஒரு குறிப்பிட்ட சாதியை இவ்வளவு வன்மத்துடன் இத்தனை அவமானம் செய்ததில்லை. விளக்கம் கொடுக்க வர்க்க பாடம் நடத்துவீர்கள். ஆனால் வர்க்கத்தில் சாதியை இணைப்பீர்கள். ஒரு தவறு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடக்க ஒரு குறிப்பிட்ட சாதியே காரணம் என்ற சமூக அறிவியல் அடிப்படையே இல்லாத ஒரு குற்றச்சாட்டை இன்னும் எத்தனை நாட்களுக்கு தூக்கி சுமக்கப் போகிறீர்கள் தோழர்களே?

    சாதி அடிப்படையில் ஒருவர் அவமானப்படுத்தப்படக் கூடாது என்பது உங்கள் நிலை என்றால் அது பார்ப்பனர்களுக்குப் பொருந்தாதா? வினவு வாசகர்களே ! உங்கள் மனசாட்சி முன் இக்கேள்வியை வைக்கிறேன். இந்த 7 வருடங்களில் இங்கு பார்ப்பனர்கள் கேவலப்படுத்தப்பட்டது போல வேறெந்த சாதியாவது கேவலப்படுத்தப்பட்டிருந்தால் ….. தவறுகளை சுட்டிக்காட்டி நீதிக்குப் போராடுவது வேறு. தவறுகளைக் காரணமாக்கிக் கொண்டு காழ்ப்பை கக்குவது வேறு.

    வினவு பதிவிலேயே பாருங்கள் ….. இந்துகளுக்கு எதிரான கட்டுரைக்கு இந்துக்களே பெரும்பான்மையாக ஆதரவு தந்தார்கள். ஆனால் Tண்TJ குறித்த கட்டுரைக்கு இஸ்லாமிய “நண்பர்கள் ” ஆதரவு தெரிவித்தார்கள். எதிர் தரப்பும் மனிதர்களே , அவர்களின் விடுதலைக்கும் சேர்த்துதான் போராட்டம் எனும் அளவில் கூட உங்களது சமத்துவம் இல்லையா? இன்று வேறெவரையும் விட அதிகமாய் சாதி பேசுவது உங்கள் தளம்தான். நீங்கள் பேசும் விதத்தில் வேறெவரையும் விட பார்ப்பனர்கள் உங்களுக்குத்தான் அதிகமும் தேவை. அந்த சாதியையும் ஒழித்து விட்டால் , பாவம், நீங்கள் வேறெந்த சாதியை ஒவ்வொரு சமூக சிக்கலுக்கும் காரணமாக்க முடியும்? தன்னளவில் தவறு செய்யும் ஒவ்வொருவரும் தம் குற்றத்தை மறைக்க கைகாட்டும் , ஒளிந்து கொள்ளும் கவசமான “பார்ப்பனியம்” என்ற உளுத்த கருத்தை நீங்களும் உயர்த்தி பிடித்தால் இன்னும் அதிகப் பேர் தவறு செய்ய நிழல் தந்ததாகி விடாதா?

    பார்ப்பனர்கள் மேல் வினவு பொழிந்த வசைமாரியை (அதில் 10ல் 1) வேறெந்த சாதி மீதும் வேறெவராவது சொன்னால் வினவின் சமத்துவ மீசை துடித்தெழுமே …..ஒரு சார்பாய் வசை பொழியும் வினவு அதற்கிணையாக சமத்துவம் பேசுவது எவ்வளவு நகைமுரண் ……. எனது இப்பதிவிற்கு பதிலாக சிந்தனையை விட சீண்டும் வசைகள் தாம் அதிகமும் வரும் என அறிவேன். ஆனால் இன்னும் வினவு போன்றோரின் தேவை இந்த சமூகத்திற்கு உண்டு என்பதிலும் உறுதியுடன்தான் இருக்கிறேன். பாதிக்கப்பட்டவன் பார்ப்பனன் என்றாலும் போராட வினவுக்கு தடைகள் இருக்காது என்ற நம்பிக்கையில் இந்த கருத்தை முன்வைக்கிறேன்.

    அன்புடன்,

    king C Caretaker

    • நல்லவன் எனும் பெயரில் வரும் அன்பரே வணக்கம் ,பார்ப்பனீயம் என்பதை நீங்கள் பிராமனர்களை திட்டுவதாக தவறாக புரிந்து கொள்ளுகிறீர்கள் பார்ப்பணீயம் என்பது சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொண்ட அனைவரையும் குறிக்கும் ஒரு பொது அடை மொழியாகவே வினவு தளத்தினர் பயன்படுத்துகிறார்கள் ஒரு ஆதிதிராவிட சமுகத்தை சேர்ந்த தம்பி தான் அருந்ததிய சமுகத்தை விட உயர்ந்தவன் என்று எண்ணினால் அவனும் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்ட பார்ப்பனனே ஆகும் ஒரு பள்ளர் இனத்தை சேர்ந்த தம்பி தன்னை விட ஆதிதிராவிடன் தாழ்ந்தவன் என்று நினைத்தாலும் அவனும் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்ட பார்ப்பனனே அனால் பிறப்பால் ஒரு பிராமணன் ஏற்றத்தாழ்வுகளை வெறுத்து நானும் மற்றவர்களைப்போல ஒரு சாதாரன உழைக்கும் வர்க்கத்தை சார்ந்தவன் என்று என்னுவான் எனில் அவனும் கம்மூனிஸ்டே எனவே பார்ப்பனியம் என்பது சாதி சார்ந்த்தது அல்ல கொள்கை சார்ந்தது இப்போழுது முடிவு உங்கள் கையில் நீங்கள் யாரை ஆதரிக்க போகிறீர்கள் சாதிய ஏற்றத்தாழ்வுகளை போதிக்கும் பார்ப்பணியத்தையா இல்லை கம்மூனிசத்தையா
      ஆனாலும் வினவின் கருத்துகளில் எனக்கு கொஞ்சம் நெருடல் உண்டு ஏனென்றால் இந்து மதம் முற்றிலுமான பார்ப்பணிய மதம் இல்லை இந்து மதம் என்பது பல வழிபாட்டுக்குழுக்களைக் கொண்டது ஒவ்வொறு தனி மனிதனும் தனக்கு பிடித்த கடவுளை வணங்குகிறான் அந்த கடவுள் கிராம தேவதையாகவோ இல்லை தங்களின் முன்னோறாகவே இருக்க கூடும் இதை பார்ப்பன இந்து மததுடன் இனைக்க கூடாது இந்து மதத்தை சார்ந்தவர்கள் எல்லாம் பார்ப்பணீய அடிமைகள் என்று சொல்லுவதும் தவறானது ஆனாலும் இந்து மதத்தயும் கிறிஸ்தவத்தையும் விமர்சிக்கும் அளவு இசுலாம் எனும் மதத்தை விமர்சிப்பதில் வினவுக்கு பயம் அல்லது தயக்கம் இருக்கிறது என்பதை வினவு தளத்தினை படித்த போது தெரிந்து கொண்டென் நன்றியுடன் ஜோசப்….

      • P.Joseph பார்ப்பனியத்தை பற்றி மிக சரியாக சொன்னிர்கள்.

        நாட்டார் தெய்வங்களுக்கு கெடா வெட்டு செய்வதை ஜெ அரசு சட்டம் மூலம் தடை செய்த போது அதற்கு எதிராக கெடா வெட்டியவர்கள் இந்த கம்யுனிஸ்டுகள்.

        இசுலாம் மதத்தை விமர்சிப்பதில் வினவுக்கு பயம் அல்லது தயக்கம் இருக்கிறது என்ற உங்கள் கருத்து நகைப்புக்கு உரியது. இஸ்லாமிய அடிபடைவாதிகளுடன் வினவு கருத்தியல் தளத்தில் நடத்தும் யுத்தம், இஸ்லாமிய அடிபடைவாதிகளை இஸ்லாமிய மக்களிடம் இருந்து தனிமை படுத்தும் என்பது உண்மை தானே ?

      • அன்புள்ள ஜோசப்,

        உங்கள் கருத்துக்கு நன்றி. ஆனால் மீண்டும் அதே பல்லவி .. பார்பனீயம் வேறு, பார்ப்பனர்கள் வேறு….. வெறுக்கத்தக்க , மோசமான, குறுகலான எண்ணப்போக்குக்கு ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரை அடைமொழியாக்கி, அதையும் பொதுத் தளத்தில் பரப்பி , மூர்க்கத்துடன் மீள, மீள அதையே செய்வதுதான் “கம்முனிச” புரட்சி என்று நினைத்தால் என்ன செய்வது?
        இது போலவே உலகம் முழுதும் பயங்கரவாதம் செய்யும் குழுக்கள் பெரும்பான்மையும் இஸ்லாம் மதத்தை சார்ந்தவை; ஆகவே இனி பயங்கரவாதம் என்பதற்கு பதிலாக “இஸ்லாமியம்” என்று எவராவது சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா? அப்படி ஒரு அபத்தத்தை நீங்கள் பார்ப்பனீயத்துக்கு செய்வீர்கள். ஆனால் வேறெவருக்கும் இதில் 100ல் ஒரு பங்கு செய்யப்பட்டால் “சமத்துவ, புரட்சி,போலி சனநாயகம் ” பேசி முழங்குவீர்கள் .

        வேறெந்த தளத்தையும் விட வினவுதான் தன எதிர் தரப்பு மீது ஆத்திரமூட்டும் வசைச் சொற்களை அடைமொழியாகப் பயன்படுத்தி கட்டுரைகளை எழுதிக் குவிக்கிறது. ஆகவே இன்றிலிருந்து எதிர்தரப்பு வசை பாடப்படுவதற்கு “வினவியம்” என்று சொல் புழங்க ஆரம்பித்தால் ஒப்புக் கொள்வீர்களா?

        போப்பாண்டவரின் கூற்றுப்படி பாலியல் தொடர்பு (சிறார்கள் & சுயபால் ) கொண்ட பாதிரிகள் 2% மாவது இருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் அவர்களால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆகவே இனி தேவாலய பாலியல் பிறழ் குற்றங்களைக் குறிப்பிட “பாதிரியாரியம்” என்ற சொல்லாடலை உருவாக்கி உலகுக்கு அளிக்கலாமா?

        இன்று தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான கலவரங்களில் நேரடியாக ஈடுபடும் பிற சாதியினரை “ஆதிக்க சாதி” என்று முட்டாக்கு போடும் வினவு தேவரியம், ரெட்டியம், வன்னியரியம், என்றெல்லாம் சொல்லாடல்களை கையாள்கிறதா? கேட்டால் அப்படி “ஆதிக்க சாதி” தவறு செய்வதற்கு காரணமே பார்ப்பனர்கள்தான் என்ற “சமூக வரலாற்று அறிவியல்” பாடம் நடத்துவது. ஆக இனி ஒருவன் குற்றம் செய்தால் அவன் தாய், தந்தையைத்தான் பிடித்து சிறையில் இட வேண்டும்.

        பின்னூட்டத்தில் பார்ப்பனர்கள் குறித்து தளத்தில் வந்த வசைகளை நான் குறிப்பிட்டால் அதை வினவு “———–” கோடு போட்டு மூடும். ஆனால் அந்த வசைகள் தளத்தில் வெளியிடப்பட்டவையே. எது போலி சனநாயகம்?

        “சங்கராச்சாரி ” என்ற பார்ப்பான் – இப்படித்தான் கட்டுரைகளில் சங்கர மடத் தலைவரை வினவு சொல்கிறது. ஆனால் தருமபுரி கலவரம் போன்ற கட்டுரைகளில் ராமதாஸ் என்ற வன்னியன், டி .ஆர்.பாலு என்ற தேவன், சிதம்பரம் என்ற செட்டியன் என்றெல்லாமா குறிப்பிடுகிறது? கேட்டால் என்ன சொல்லப்போகிறீர்கள்? கட்டுரையில் அவர்களை தோலுரித்திருக்கிறோம் என்பீர்கள். ஆனால் இதே அளவுகோலை தவறு செய்யும் பார்ப்பனர்களுக்கு வைக்க மாட்டீர்கள்.

        நண்பரே! தவறுகளை சரி செய்யப் போராடுவது என்பது மற்றொரு தவறை திருப்பி செய்வது அல்ல. பார்ப்பன எதிர்ப்பை மூலதனமாக்கி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கங்கள் கடந்த 60 ஆண்டுகளில் செய்ததென்ன ? அவர்களது ஆக்டோபுஸ் பிடி உங்கள் மீது இறுகுவதை உணராமல் இருக்க உங்களுக்கு தரப்பட்ட மயக்க மருந்துதான் “பார்ப்பன , ஆரிய சதி” போன்ற கருத்துகள். அதே வலையில் வினவு ம் சென்று விழ வேண்டுமா என்பதே கேள்வி.

        இந்த கருத்தையும் வெளியிட்டால் நான் வினவின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை வீணில்லை என்று பொருள்.

        அன்புடன்,
        King C . Caretaker

        • தங்களை சிறந்த கருத்தாளராக தெரிவு செய்கிறேன்.

          பாராட்டுகள்!.தொடர்ந்து வரவும்.

          • தென்றல்,

            நல்லவன் அவ்ர்களீன் கருத்துகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் மஒ [mao] அவர்களுக்கு அவரை ஆதரிக்கும் தென்றல் அவர்கள் தான் வினவுக்கு வந்து பதில் அளீக்க வேண்டும்.

            • பதில் வைப்போம் சரவணன். ஜோசப்பின் பதில்களை கவனித்து வருகிறேன்.சிறப்பாக இருக்கிறது. வினவின் பதிவுகளை உள்வாங்குகிற ஜோசப் பார்ப்பனீயத்தை பற்றி விளக்குவது வினவின் வெற்றியே. பார்ப்பனீயத்தை விளக்க நீங்களும் ஒரு முயற்சி செய்யுங்கள் சரவணன். வாழ்த்துப்பகுதியும் விவாதக் களமாக இருப்பது மகிழ்ச்சியே. இருந்தாலும் சகவாசகராக பிற வாசகர்களின் வாதத்தை முழுவதும் அறிந்துகொள்ளலாம் என்று கருதுகிறேன்.

        • தோழர் உங்களிம் கருத்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது ஆனாலும் அனைத்து சாதிய ஏற்ற தாழ்வுகளுக்கும் காரானமாய் இருப்பது பார்ப்பணிய இந்து மதமே என்பது உண்மையே நீங்கள் வெரும் பெயர் மாற்றத்தை மட்டுமே விரும்புகிறீர்களா இல்லை சமூக மாற்றத்தை விரும்புகிறீர்களா சமுக மாற்றத்தை விரும்பினால் வெரும் பெயர் உங்களை என்ன செய்து விட முடியும் ஏனென்றால் பார்ப்பனியய இந்து மதத்தை வெறுக்கிற பார்ப்பணர்களும் இருக்கிறார்கள் பார்ப்பனிய இந்து மதத்தில் தனக்கு விடுதலை ஏற்ப்படும் என்று நினைக்கிற தாழ்த்தப்பட்டவர்களு இருக்கிறார்கள் முன்னவர்களின் ஆதர்வோட்டும் பின்னவரகளை எதிர்த்தும் பேச வேண்டிய நிலமை வரும் போது வெறும் பெயரில் என்ன இருக்கிறது….

          • அன்பு ஜோசப்,

            கருத்துகளுக்கு மதிப்பளித்து தரமாக பேசுவதற்கு நன்றி.

            பெயரில் என்ன இருக்கிறது ….என்ற கேள்வி சாதாரணமல்ல. இன்று வரை காந்தி பயன்படுத்தினார் என்ற ஒரே காரணத்துக்காக “ஹரிஜன்” என்ற வார்த்தையை வினவு அல்லது பிற புரட்சியாளர்கள் ஏற்றுக் கொண்டார்களா? அந்த வார்த்தை பார்ப்பன ஆதிக்கத்தைக் காட்டும் வார்த்தை . அதால் சுட்டப்படுவது அவமானம் என்பதுதானே இன்றைய நாள் வரை தலித் புரட்சி இயக்கங்களின் ஆரம்ப பாடம்.

            பாட்டாளி என்ற பதம் பிரிவற்ற ஒரே நிலை உள்ளவரை குறிக்கிறது. உழைப்பாளர் என்பது ஒரே வர்க்கத்தை சுட்டுகிறது. அதில் சாதி, மதம், இனம் பேதமில்லை என்று சொல்லும்போது “பாட்டாளி, உழைப்பாளர், சமத்துவம்” போன்ற பெயர்கள் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றன?
            அந்த அளவேதான் எதிர்த்தரப்புக்கும் பெயரிடுவது. வெறும் சாதிப் பெயரை எதற்கு பயன்படுத்துகிறீர்கள்? நீங்கள் காலமெல்லாம் எதிர்த்து போராட வேண்டிய சமூக, அரசியல் அதிகார குவி மையங்களை எதிர்த்து. அப்படியானால் உங்கள் எதிர்த்தரப்புக்கு நீங்கள் இட வேண்டிய பெயரும் அந்த விரிவான பொருளைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் மிகக் குறைந்த சமூக அறிவியல் புரிதலோடு ஒரு சாதியின்/மதத்தின் பெயரை எதிர்தரப்புக்கு வைக்கிறீர்கள். உங்கள் சித்தாந்தப்படியே உழைக்கும் மக்களுக்கு கற்பிப்பதே முதல் பணி . அதன் வழியே புரட்சிக்கு தூண்டுவது. ஆனால் சமூக-அறிவியல் புரிதல் குறைவாக உள்ள மக்களிடையே “பார்ப்பனீயம்” என்ற ஒரு வார்த்தைக்குப் பின்னால் 8 பக்க அளவிலான புரிதல் உள்ளது ; அதை சுருக்கி ஒரு சாதிப் பெயரை மையமாக்கினோம் என்று சொல்வீர்களா? எந்த சக்தி அதிகாரக் குவிப்பை செய்தாலும் அதை தடுக்கும் சித்தாந்தத்தை கற்பிக்க வேண்டிய நீங்கள், அல்லது கற்பிப்பதாக சொல்லும் நீங்கள் , அந்தப் பொருளை தராத வெறும் சாதிய வெறுப்பைத் தூண்டக் கூடிய ஒரு பெயரை இடுவீர்கள் . கேட்டால் பெயரில் என்ன இருக்கிறது என்பீர்கள் .

            நண்பரே! பெயரில்தான் ஒன்றுமில்லையே …. ஏன் கொஞ்ச நாட்களுக்கு தலித்களை வினவு ஹரிஜன் என்று அழைக்கக்கூடாது? தருமபுரி, விழுப்புரம் தலித் தாக்குதலை “வன்னியரியம்” என்று சொல்லக்கூடாது? சிறார் பாலியல் தவறுகள், சிறார் பணியாளர்கள் , சங்கர மடத்தில் ஓடித் திரியும் குடுமி-பூணூல் அம்பிகள் ஆகிய விஷயங்களில் பொங்கி எழுந்து மீசை துடிக்கும் வினவு தமது போராட்டத்தின் போது 5 வயது , 6 வயது சிறார் கையில் செங்கொடி கொடுத்து “இதோ! இளம் போராளி” என்று பாராட்டி படம் இடும் வகையிலான முரண்களை குறிக்க ———–போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது?பிறர் விவாதத்தைத் தொடராது போனால் எள்ளி நகையாடும் பின்னூட்டங்கள், இஸ்லாமிய இயக்கங்கள் கெடு விதித்து விவாதத்திற்கு அழைத்த விவரத்தை அப்படியே அந்தரத்தில் விட்ட வினவு தளத்தின் “போலி வீரத்தை” ஏன் இனி “வினவு வீரம்” என்று பெயரிடக் கூடாது? பெயரில்தான் ஒன்றுமில்லையே.

            மெய்யாகவே சொல்வதென்றால் விரிவான தளத்தில் செயல்பட வேண்டிய இடம் “பார்ப்பன எதிர்ப்பு” என்று குறுக்கப்படுவது பெரும் சரிவுக்கு வழிவகுக்கும். திராவிட இயக்கங்களே சாட்சி. வலுவான எதிரியை காணாதது போல கண்மூடி திரும்பி வலுவற்ற, ஏற்கனவே அடிபட்டு குற்றுயிராய் கிடக்கும் ஒருவன் மீது பாய்ந்து தாக்குவதுதான் வீரமா? இதுதான் புரட்சி என்றால் அது கேப்பையில் வடியும் நெய்தான்.

            அன்புடன்,
            King C. Caretaker

        • பார்ப்பனர்-பார்ப்பனியம் குறித்து ஏற்கனவே வினவில் விவாதிக்கப்பட்டிருக்கிறது..

          பார்ப்பனியம் – ஒரு விவாதம்!
          https://www.vinavu.com/2009/11/19/parpaniyam-rv-genotype/

          பார்ப்பனர்கள் மோடியை ஆதரிப்பது ஏன் ? : டி.எம்.கிருஷ்ணா
          https://www.vinavu.com/2014/05/12/why-brahmins-support-modi/

          பார்ப்பனியமும் முதலாளித்துவமும் சேர்ந்தியங்குவது எப்படி?
          https://www.vinavu.com/2011/05/12/brahmanism-capitalism/

          ம.க.இ.க வெளியீடு:
          ஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!
          http://puthagapiriyan.blogspot.in/2007/06/blog-post_4989.html

          அம்பேத்கர் பார்ப்பனியம் பற்றி:
          http://mooknaayak.freeblogforum.com/t151-brahmanism-according-to-dr-br-ambedkar-by-nikhil-sablania
          http://www.ambedkar.org/bamcef/journal/june01/objective.html

      • // இசுலாம் எனும் மதத்தை விமர்சிப்பதில் வினவுக்கு பயம் அல்லது தயக்கம் இருக்கிறது என்பதை வினவு தளத்தினை படித்த போது தெரிந்து கொண்டென் நன்றியுடன் ஜோசப் //

        இது உண்மையெனில் TNTJ என்ற இஸ்லாமிய மதவெறி இயக்கம் வினவைத் தங்கள் பரம எதிரியாகக் கருவது ஏன்?

        இஸ்லாமிய மதவெறியை விமர்சிக்கும் பல கட்டுரைகள் வினவில் உள்ளன. அதிகமாக இந்துத்துவம், இந்துமதவெறி குறித்து கட்டுரைகள் வருவதற்கான காரணம், இந்திய மக்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாத்தை விட இந்து மதம் அதிகத் தாக்கம் செலுத்துகின்றது என்பதுதான். மேலும் சமூக, அரசியல் வாழ்வில் இந்திய முஸ்லீம்கள் பலவாறு ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாம் என்பது இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மதம்.

        ம.க.இ.க-வினவு பாகிஸ்தானிலோ அல்லது வேறு ஏதாவது இஸ்லாமிய நாட்டிலோ இருந்தால், அங்கு இஸ்லாமிய மதத்தையும், இஸ்லாமிய மதவெறியையும் அதிகமாக அம்பலப்படுத்துவார்கள்.

        இதுகுறித்து வினவே பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது.

  31. Dear Vinavu
    Congrats for the Vinavu team for the glorious seventh year.
    Let your in depth analysis and a neutral perspective continue and flourish in the coming years!!
    Truly, Vinavu has achieved a mile stone in shaping a political ,historical and cultural view among a particular section of the bloggers and general readers of the politics in the cyberspace .
    (some of the greatest examples of finest journalism by vinavu are Devyani Khobragade issue,
    article regarding Maheswari murder near TCS campus at ECR,Moulivakkam 11 storey building collapse etc etc)
    But still a lot of space has left opened to be filled.
    I request Vinavu to look in to the below matters .

    1, Articles regarding current lyricst(s) ( a realistic example : Vairamuthu)
    2, finest books reviews on periodical basis
    3, a section of short crispy articles not exceeding 5 to 7 lines on day to day affairs
    4, articles regarding a scientific approach in education curriculum
    5, articles that scientifically opposing the stupidity of capitalism and imperialism .
    (example : prices of the commodity and services in capitalism is not derived from the manufacturing cost , but only from the greed and artificial demand created in the market )
    6, there are lot of current affairs that hit the ordinary citizen of the country like housing loans,toll roads,ecological damage,psychological attacks and brain washing by main stream media ,internet shopping throwing out the traditional jobs,every day death of children and adults due to govt officials negligence in EB,Roads,etc,why a japan govt need to fund a kanchipuram school to buy table and chair,lack of self respect and self esteem etc etc.)

    a whole lot to be done to cover the entire spectrum of events which can really help to all.
    my opinion is Now vinavu is mainly read by intelligent community , but it has to reach out to all the section of the people .
    regards
    GV

  32. வாழ்த்துக்கள்…

    உங்களோடு 99 சதவிகிதம் ஒத்துப்போகாத கருத்துக்களை கொண்டிருந்தாலும் எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் பொதுப்புத்தியிலிருந்து சற்று மாற்றி யோசிக்க வைத்தவை உங்களுடைய இணையதளமே….

    மாற்றுக் கருத்துக்களையும் மகிழ்வோடு ஏற்று அதை கடை பரப்ப தளம் அமைத்துக் கொடுக்கும் என் இந்திய ஜனநாயகத்தில் நீங்களும் இணைந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதால் இந்த 7 ம் ஆண்டு மகிழ்வான தருணத்தில் உங்களுடன் இணைந்து நானும் மகிழ்கிறேன்.

  33. வாழ்த்துக்கள் வினவு!

    தங்களது பணி மேன்மேலும் வெற்றிகரமாக தொடர வாழ்த்துகிறேன்.

    ஆக்கபூர்வமாக செயலாற்றுங்கள். அரசாங்க எதிர்ப்பு தேர்தல் எதிர்ப்பு என்ற தளத்தில் மட்டும் இருக்காமல் தங்களது பணி மக்கள் நற்பணியில் ஈடுபட்டால் மேலும் மகிழ்வேன்.

    மத விவகாரங்களில் சாதி விவகாரங்களில் அதிகம் ஈடுபடாமல் நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் வழிகளை பற்றி யோசித்தால் நன்றாக இருக்கும். எல்லா சாதிகளிலும், எல்லா மதங்களிலும் எல்லா மொழியினரிடமும் எல்லா இனத்தவரிடமும் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள், இரண்டும் இணைந்தவர்களும் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த இடைப்பட்டவர்கள் தான் நாட்டில் 99 சதவீதம் இருக்கிறார்கள். அதனால் மாற்றம் என்ற ஒன்று வர வேண்டும் என்றால் அது இந்த இடைப்பட்ட மனிதர்களை நல்வழிபடுத்துவதில் தான் உள்ளது.

    வினாவில் பின்னூட்டம் இடும் நண்பர்களுக்கும் மேற்கூறியவற்றை எனது தாழ்மையான வேண்டுகோளாக விடுக்கிறேன்.

  34. புரட்சிகர வரலாற்றில் ‘வினவு’வை அறிமுகபடுத்திய எமது தோழர்களுக்கு நன்றி …

    பழைய மூட நம்பிக்கைகளை விட்டோழித்து அனைவரையும் புரட்சிகர பயணத்தில் வினவு தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்…

  35. வினவு!

    ” இந்த சமூக அறிவியல் கல்வி என்பது ஒரு செங்குத்தான வழுக்குப் பாதையில் ஏறுவதற்கு ஒப்பாகும்.இதற்கு தயாராக இல்லதவர்கள் விலகிவிடுங்கள்” -ஏங்கல்ஸ்

    “THE MOST PROFOUND MUSIC IS MERELY A SOUND FOR UNMUSICAL EARS ”- MARX

    என்ற சிந்தனையுடன் தொடரும் உனது பயணத்தில் மகிழ்கிறேன் இந்நாளில்.வாழ்த்துக்கள்!

  36. தோழர்களுடன் இணைந்து பணியாற்றிய காலத்தின் சுவடுகளை நினையும் போதெல்லாம் இப்போதும் என்னுள் ஒருவித உற்சாகமும், ஆனந்தமும் உருவாகும். அமைப்பின் வளர்ச்சிக்கு வினவின் பிரம்மாண்டமான பங்களிப்பிற்கு வாழ்த்துக்கள்.

  37. கடந்த 30 ஆண்டுகளாக புதிய ஜனநாயகம் ,புதிய கலாச்சாரம் இதழ்களை வாங்கி படித்துவருகிறேன்.அவைகளை தொகுத்தும் வைத்திருக்கிறேன்.முதலாளித்துவ பத்திரிக்கைகள் அரசின் காகித கோட்டா ,விளம்பரங்கள் என சர்க்குலேசன் குறைவாக இருந்தாலும் கூட தொடர்ந்து வெளிவர இயலும்.ஆனால் எவ்வித விளம்பரமும் இல்லாமல் அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு தடையின்றி வெற்றிகரமாக இதழ்களை வெளிக்கொணர்வது சாமான்ய வேலை அல்ல.ஒவ்வொரு இதழும் வெளியாகும் போதும் அது தாயின் பிரசவ வேதனை போன்றதாகவே இருக்கும்.அதற்கு தோழர்களின் மகத்தான உழைப்பும்,பங்களிப்புமே காரணமாகும். அத்தகைய திறன்மிகு தோழர்களின் உழைப்பில் மலர்ந்த வினவுக்கு ஏழாம் ஆண்டு! வினவின் வெற்றி குழுமத்தை வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.

  38. தெருச்சண்டைகள் எல்லாம் அரசியல் ஆகிவிடாது.மனிதக் கண்டு பிடிப்புகள்கள் எல்லாம் அறிவியலும் ஆகிவிடாது.

    மாக்ஸியம் அறிவியலில் உயர்ந்து நிற்பதால் நாம் பல தோல்விகளை கண்டும் அதன் இடிபாடுகளிலும் இருந்து ஒருபுதிய மனிதன் நிச்சயம் உருவாகுவான் என்ற நம்பிக்கையில் களைப்பு தெரியாமல் நடந்து வருகிறோம்.

    இயற்கையின் உன்னதபடைப்பே!மனிதன்.இந்த மனிதன் வாழ்ந்துவளர்ந்து வந்தகாலத்தில் தான் அவன் கடவுளையும்-மதத்தையும் படைத்தான்.இதில் பிரிவினை பேதம் அடையாளம் எல்லாம் பொருளாதார உறவுகளால் ஏற்பட்டவை.ஆனாபடியால் தான் “அரசியல் என்பது பொருளாதார அடித்தளத்தில் கட்டப்படுகிறது” என்பதை ஆணித்தரமாக சொல்லக்கூடியதாக இருந்தது.

    முதலாளித்துவம் தன் கர்ப்பத்திலேயே புரட்சிக் குழந்தையை சுமத்துவருகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இது பிறக்கப் போவதை யாராலும் தடுத்துவிட முடியாது.

    எமது பணி-வினவின் பணி திடகாரத்திரமான ஆரோக்கியமான குழந்தையை எதிர்பார்ப்பதே!அந்த ரீதியில் ஏழாம்ஆண்டு நிறைவில் எமக்கு கிடைத்த அறிவுச்செல்வதில் ஒரு வாசகத்தை மிகுந்த பக்தியுடன் வினவின் காலடியில் சமர்ப்பிக்கிறேன்.

    “நான் பயன்படுத்தியிருப்பது பொருளாதார தத்துவஞானிகள் இதுவரை பயன்படுத்தாதுமான ஆய்வுமுறையின் காரணமாக எனது புத்தகத்தின் தொடக்க அத்தியாங்களை படிப்பதற்கு கொஞ்சம் சிரமம் ஏற்படும்.ஆகவே தொடங்கியவுடன் இறுதி முடிவுக்கு வர ஆசைப்படுகிற பிரஞ்சு வாசகர்கள் தங்களை உடனடியாக அலட்டுகின்ற உடனடி பிரச்சனைகளை அடிப்படைத் தத்தவங்களுடன் பொருந்தும் அவசரத்தில் நம்பிக்கை இழந்து தொடர்ந்து வரக்கூடிய அத்தியாங்களுக்குப் போகாமல் இருந்து விடுவார்களோ என்று சந்தேகப்படுகிறேன்.
    என்னால் தவிர்கமுடியாத நிலை இது.ஆகவே உண்மையை கண்டறிய வேண்டும் என்று விரும்புகிற வாசகர்களுக்கு இது பற்றி எச்சரித்து அவர்களை தயார் செய்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய என்னால் முடியாது.அறிவியலுக்கு முன் எந்த ராஜயபாதையும் இல்லை. அறிவியலின் செங்குத்தான பாதையில் களைப்புக்கு அஞ்சாமல் ஏறுகிறவர்கள் மட்டுமே அதன் ஒளிமயமான சிகரத்தை சென்றடைய முடியும்”.

    (மூலதனத்தின் முன்னுரையில் இருந்து)

  39. வினவு தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள், சமூக வலைதளங்களில் உள்ளதுபோல் எளிமையான விருப்பம் அல்லது விரும்பவில்லை, பொத்தான்களை ஒவ்வொருவரின் பின்னூட்டத்தின் கீழும் இனைத்தால் பின்னூட்டம் இடுபவர்தம் இடுகை விரும்பத்தக்கதாக படிப்போருக்கு தோன்றினால் ஆதரிக்கவோ அல்லது முரண்படுவதை தெரிவிக்கவோ வசதிப்படும். ஒருவேளை பின்னூட்டம் செய்ய இயலாவிட்டாலும் முன்னளிக்கப்பட்ட பின்னூட்டத்தின் கருத்தை ஆதரிப்பதாக இருந்தால் இந்த ஆதரிக்கிறேன் பொத்தானை அழுத்தி ஆதரவு தெரிவிக்கலாம். எளிமையாக TUMBLER தளத்தில் உள்ளதுபோல் குறியீட்டு வடிவங்களை கூட பயன்படுத்தலாம். இதனால் பின்னூட்டம் இடுபவர்தம் கருத்துக்கான ஆதரவு அல்லது முரண்பாட்டை அறிய முடியும்.

  40. வினவு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    தோழர்களின் தியாகங்களை நினைவு கூறும் இந்நேரத்தில், “நமது பண்பாட்டு துறைச் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் இல்லை” என ம.இ.க. வின் எட்டாவது மாநாட்டில் கூறப்பட்ட சுயவிமர்சனத்தையும் கவனத்தில் கொள்ளுமாறு அனைத்து தோழர்களையும் கேட்டுகொள்கிறேன்.

Leave a Reply to aashni பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க