privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்தொழிலாளர் சட்டம்: பண்ணையடிமைக் காலம் திரும்புகிறது!

தொழிலாளர் சட்டம்: பண்ணையடிமைக் காலம் திரும்புகிறது!

-

தேவையான பொழுது வேலைக்கு வைத்துக் கொண்டு, தேவையில்லையென்றால் தூக்கியெறிகின்ற அமர்த்து – துரத்து (Hire & Fire) என்கிற கொள்கை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. எனினும், தற்போது இருக்கிற சட்டங்கள், தொழிலாளர்களுக்கு வழங்குகின்ற உரிமைகளின் காரணமாக, முதலாளிகள் தொழிலே நடத்த முடியாத வண்ணம் விழிபிதுங்கித் தவிப்பது போலவும், இச்சட்டங்களையெல்லாம் ஒழித்தால்தான் உள்நாட்டு முதலாளிகளும் அந்நிய முதலீட்டாளர்களும் நமது நாட்டில் தொழில் தொடங்குவார்களென்றும், வேலைவாய்ப்பு பெருகுமென்றும், தொழிலாளர்களின் ஊதிய விகிதங்கள் அதிகமாக இருப்பதால்தான் இந்தியப் பொருட்கள் சர்வதேச சந்தையில் போட்டி போட முடிவதில்லை என்றும் பல பொய்களை முதலாளி வர்க்கமும், அவர்கள் கையில் இருக்கும் ஊடகங்களும் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றன.

தொழிலாளர் நலச்சட்டம்உண்மை நிலைமை என்ன? அவுட்சோர்சிங் என்ற பெயரில், ஒரு ஆலையில் வேலை செய்யும் ஆகப்பெரும்பான்மையான தொழிலாளிகளுக்கும் அந்த ஆலை நிர்வாகத்துக்கும் தொடர்பில்லை என்று ஆக்கி, அவர்களை தனித்தனி காண்டிராக்டர்களின் கீழ் வேலை செய்யும் கூலிகளாக்குவதை 2001-ல் வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு அங்கீகரித்திருக்கிறது. பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவதை ஆட்சேபிக்கும் உரிமை அங்கு பணியாற்றும் தொழிலாளிகளுக்கு இல்லை என்று வேறொரு தீர்ப்பு கூறியிருக்கிறது. உலகமயமாக்கத்துக்கு ஏற்பத்தான் அரசியல் சட்டத்துக்கு நீதிமன்றம் விளக்கம் கூறமுடியும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. அது மட்டுமல்ல, நாடு முழுதும் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் எதிலும் தொழிலாளர் சட்டங்கள் செல்லுபடி ஆகாதென்று அரசே ஒப்பந்தம் போட்டிருக்கிறது. தொழிலாளர் நலத்துறையோ முதலாளிகள் நலத்துறையாகத்தான் எல்லா இடங்களிலும் செயல்படுகிறது. இதுதான் நிலைமை.

அசோசெம் என்கின்ற இந்திய முதலாளிகள் சங்கம், இந்திய தொழில்துறை முழுவதும் நடத்திய தனது ஆய்வின் முடிவுகளை பிப் 5, 2014-ல் வெளியிட்டுள்ளது. 2013-ல் மட்டும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 25% குறைந்திருப்பதாகவும் கூறும் அவ்வறிக்கை, துறை வாரியாக ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பட்டியலிடுகிறது. தொலைதொடர்புத் துறையில் 60%, ஆட்டோமொபைல் துறையில் 56%, கல்வித்துறையில் 54%, உற்பத்தித் துறையில் 52%, நுகர்பொருள் விற்பனைத் துறையில் 51%, ஐ.டி துறையில் 42%, ஓட்டல்கள் மற்றும் போக்குவரத்துத் துறையில் 35%, மருத்துவத்துறையில் 32% – என ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு துறையிலும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இலாபகரமான பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பெரும் தொழில் நிறுவனங்களிலேயே ஒப்பந்தக்காரர்கள் மூலம் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்றும், நிரந்தரத் தொழிலாளர்கள் செய்யும் அதேவேலையை மிகக்குறைவான ஊதியத்துக்கு இவர்கள் செய்கிறார்கள் என்றும் கூறுகிறது அவ்வறிக்கை. மேலும் தொழிலாளர் என்ற வரையறைக்குள் அடங்காத மருத்துவர், பொறியாளர், அறிவியல் ஆய்வாளர்கள், ஆடிட்டர்கள், வணிக மேலாளர்கள் போன்றோரும் கூட ஒப்பந்தக்காரர்களின் சம்பளப்பட்டியலில் கூலிகளாக வேலை செய்கிறார்கள் என்றும் இவ்வறிக்கையை வெளியிட்ட அசோசெம்மின் பொதுச்செயலர் டி.எஸ். ராவத் கூறியிருக்கிறார்.

“இந்த புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. பெரும்பான்மையான தனியார் நிறுவனங்கள் தொழிலாளர் சட்டங்களை மீறுகின்றன. நிரந்தர ஊழியர் செய்கின்ற அதே வேலையைச் செய்யும் ஒப்பந்தத் தொழிலாளிக்கு, மூன்றில் ஒரு பங்கு ஊதியமே தரப்படுகிறது. மேலும், கிராசுவிட்டி, பி.எஃப், மருத்துவ – கல்விச் சலுகைகள் போன்றவை மறுக்கப்படுகின்றன. இந்த நிலைமை தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, தொழில்துறை வளர்ச்சிக்கே மிகவும் தீங்கானது” என்றும் கூறியிருக்கிறார் ராவத். முதலாளிகள் சங்கத்தின் ஆய்வு கூறும் புள்ளிவிவரங்களே இப்படி இருக்கும்போது, உண்மை நிலை எப்படி இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

நோக்கியா போராட்டம்
விருப்ப ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நிரந்தரத் தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்த நோக்கியாவின் சதியைக் கண்டித்து, அவ்வாலைத் தொழிலாளர்கள் சென்னை – சேப்பாக்கத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

இருப்பினும், தொழிலாளர் சட்டங்களை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் தந்திரமாக இறங்கியிருக்கிறது மோடி அரசு. தொழில்தகராறு சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், தொழிற்பயிற்சி சட்டம் ஆகிய மத்திய சட்டங்களைத் திருத்தவிருப்பதாக ராஜஸ்தான் பா.ஜ.க. அரசு அறிவித்திருக்கிறது. “300 தொழிலாளர்கள் வரை ஆட்குறைப்பு செய்வதற்கு அரசு அனுமதி தேவையில்லை; தொழிலாளர்களில் 30% பேர் உறுப்பினராக இருந்தால் மட்டும்தான் ஒரு தொழிற்சங்கம் பிரதிநிதித்துவம் பெறும்” – என்பன போன்ற திருத்தங்கள் அங்கே மேற்கொள்ளப்படுகின்றன.

அரசமைப்புச் சட்டத்தின்படி தொழிலாளர் நலம் என்பது பொதுப்பட்டியலில் இருப்பதால், இச்சட்டத்திற்கு மோடி அரசு ‘குடியரசு’ தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தந்துவிடும். முதலீட்டாளர்களைக் கவர வேண்டுமென்றால், மற்ற மாநிலங்களும் ராஜஸ்தானுடன் போட்டி போட்டுக் கொண்டு இத்தகைய சட்டத்திருத்தங்களை செய்யும். இதன் போக்கிலேயே தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்துவிடலாம் என்பது மோடி அரசின் திட்டமெனத் தெரிகிறது. ஆயத்த ஆடை முதலான துறைகளில் இரவு நேரப் பணிகளில் பெண்களை வேலை வாங்குவதை அனுமதிப்பது, தொழிலாளர்களை ஓவர்டைம் செய்யச் சொல்வதற்கு இருக்கும் கட்டுப்பாட்டை தளர்த்துவது, தொழிலாளர் துறை அதிகாரிகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற சட்டத்திருத்தங்களை மத்திய அரசு செய்யவிருப்பதாக நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார் தொழிலாளர் துறை இணை அமைச்சர் விஷ்ணு தியோசாய். தொழில் முனைவோரின் கால்களில் பூட்டப்பட்டிருக்கும் காலாவதியாகிப் போன காலனிய கால தொழிலாளர் சட்டங்கள் என்ற தளையை மோடி அகற்றப் போகிறார் என்றும், இதன் விளைவாக அடுத்த 20 ஆண்டுகளில் 20 கோடி வேலை வாய்ப்புகள் பெருகப் போகின்றன என்றும் அளந்து விடுகின்றன கார்ப்பரேட் ஊடகங்கள்.

நோக்கியா சென்னையில் வழங்கிய வேலைவாய்ப்பின் யோக்கியதை நம் கண்முன்னே தெரிகிறது. 650 கோடி ரூபாய் மூலதனம் போட்டு, அதைப்போல பத்து மடங்கு சலுகைகளைப் பெற்று, 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து, கொள்ளை லாபமீட்டிய நோக்கியா, 23,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது. வரியைக் கட்டு என்றவுடன் 8000 பேர் வேலை செய்த இடத்தில் இப்போது வெறும் 850 பேர்தான் வேலை செய்கிறார்கள்.

காங்கிரசு அரசு வரி கேட்காமலிருந்தால் நோக்கியா தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்று கூச்சமே இல்லாமல் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி. முதலாளியிடம் சம்பளம் கேட்காமல் இருந்தால் தொழிலாளர்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்படாது என்று அடுத்தபடியாக ஒரு மத்திய அமைச்சர் பேசக்கூடும்.

– அன்பு
______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
______________________________

  1. முதலாளியிடம் சம்பளம் கேட்காமல் இருந்தால் தொழிலாளர்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்படாது என்று அடுத்தபடியாக ஒரு மத்திய அமைச்சர் பேசக்கூடும்.

    Good one.

    Cant change anything.Everywhere its contract.

  2. பல வெளிநாடுகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் தின ஊதியம் நிரந்தரத் தொழிலளர்களை விட அதிகமாக இருக்கிறது;அவர்களது தினசரி உற்பத்தி இலக்கும் அதைப் போலவே அறுதியிட்டு தொழிலாளார்களால் ஒத்துக் கொள்ளப் படுகிறது. இந்த முறையைப் பரிட்சார்த்தமாகவாவது நடைமுறைப் படுத்திப் பார்க்கலாம்.

    • I agree with you in some cases but for the blue color and labor level jobs this may not work. The trick in hiring contract workers in foreign countries like US is to avoid the benefits. The contract workers cannot be part of Medical, Bonus or any other benefits from the companies. High level contract employees may be paid more, however in low level the hourly pay is not good. Particularly countries like India due to lack/corrupted labor law enforcement only the contract companies will be benefited not the labor/employee.

  3. தொழிலாளர் சட்டங்கள் மிக நல்ல எண்ணத்துடன் கொண்டுவரப்பட்டவையே. அவை தம் பணியைச் செவ்வனே ஆற்றின: தொழிற்சங்கங்களும் தம் பங்களிப்பை வைத்தன. ஓய்வு வைப்பு நிதி (provident fund ) முதலியன வந்தன. ஆனால் ஒரு கட்டத்தில் தொழிற் சங்கங்கள் வன்முறையை அதிகம் நம்பி தொழிலாளிகள் பட்டினி கிடந்து சாகலாம்; ஆனால் எங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது (பம்பாய் துணி ஆலைகள் தத்தா சமந்த் தலைமையில் நடந்த நீஈண்ட வேலை நிறுத்தம் உதாரணமே. கல்கத்தாவில் மூடப்பட்ட பல தொழிற் சாலைகள் கதைகள் சொல்லும்.
    நான் ஆலை முதலாளிகளின் கைக்கூலி என்று ஜல்லி அடிக்க வேண்டாம் மனம் வெதும்பியே இதை எழுதுகிறேன்.
    சங்கங்களின் கொட்டம் அளவு மீறியதால் இயற்கையின் சுழற்சியில் தொழில் நடக்க வேண்டும் என்றால் ஒப்பந்த ஊதியக்காரர்கள் என்று ஆயிற்று. சென்னையிலும், இப்போது பல மாநகராட்சிகளிலும் துப்புரவு செய்யும் ஊழியர் அரசு ஊழியர் அல்லர். அவர்களுக்கு ஓய்வு ஊதியம் கிடையாது. இப்படி ஆனது என்? சிந்தன்களும் உமாநாத்துக்களும் பதில் சொல்ல வேண்டும். அரசும் அரசு நிறுவனங்களும் ஒப்பந்த ஊதியம் என்று கிளம்பினால் தனியார் ஏன் செய்ய மாட்டார்கள்? ஆகவே தான் தொழிலாளர் சட்டங்களில் ஓரளவு மாற்றங்கள் கொண்டு வந்தால் தான் தொழில்கள் நடக்க முடியும் என்று நிலை வந்து விட்டதாக மீடியா சொல்கிறது. தொழிற்சங்கங்கள் தம் நிலையைக் கொஞ்சம் கூட மாற்றிக்கொண்டதாக தெரியவில்லை. காலத்தின் கட்டாயம் என்று உணர்ந்து செஞ்சட்டை சங்கங்கள் தம் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாவிட்டால் இன்னும் பல மாற்றங்கள் வரும். வரவேண்டும்.

    • Thumbi,

      தாங்கள் மனம் வெதும்பியதற்கு காரணம் என்ன?

      இன்னும் எது போன்ற மாற்றங்கள் வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

      மாநகராட்சிகள் நகராட்சிகள் பெரிய ஸ்லம்களாக (Slums) மாறி விட்டன என்பதை கவனித்தீர்களா?

      நன்றி.

    • Will Thumbi support the amendments to be brought by Rajasthan Govt like 1)retrenchment of labors upto 300 does not require permission from state govt and(2)any union will have representative character only when it has 30%of the workforce as it”s members?According to a survey undertaken by Assochem in Feb,2014,the contract labor has increased by 39% and regular employment came down by 25% in the year 2013 itself.Even in the profitable multinationals the contract labors are the maximum.The contract labor is given one-third salary and denied PF,Gratuity and medical and educational facilities for their wards.Please read Pudhiya Jananayagam Aug issue for more details.Why labor unions should change their stand?

  4. Thumbi,

    செஞ்சட்டை சங்கங்கள் தம் அணுகுமுறையை எது போன்று மாற்றிக் கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருக்கின்றனவா?

    நன்றி.

  5. ஏன் மனம் வெதும்புகிறேன்? தொழிலாளர் நலன் என்ற பெயரில் உரிமைகளைப் பேசிய சங்கங்கள் கடமையைப் பற்றி பேசவில்லை; தொழில் நடாத்த முடியாத அளவுக்குப் போனபோது தொழில்கள் நசிந்தன. அல்லது வேறு பிராந்தியத்திற்கு மாற்றப்பட்டன. கல்கத்தாவிலிருந்து இந்தூருக்கு, முதலியன; விளைவு: கல்கத்தாவில் வேலையின்மை; தொழில் வளர்ச்சி இல்லாததால் அரசுக்கு வரி வருமானம் இல்லை.(மே . வங்க அரசு திவால் ) பல தொழில்கள் தொடங்கப்படவே இல்லை; வேறு நாடுகளுக்கு போய் விட்டன. சீனாவில் தொழிற் சங்கங்கள் இல்லை. அந்த தொழிலாளர்களுக்கு உரிமைகள் இல்லை; பல தொழிற்சாலைகளில் பகல் உணவு மட்டும் தான் சம்பளம். நான் சொல்வது ஒன்று தான்: தொழிலாளர் உரிமைகள்/கடமைகள் சமமாக இருந்தால் தொழில் பெருகும். இல்லாவிடில், ஒப்பந்த ஊதியம் முதலிய குறுக்கு வழிகள் முளைக்கும்; வளரும்; நீண்ட கால விளைவுகளைப் பார்த்தால் தொழிலாளர்களுக்கு நஷ்டமே. அதனால் வெதும்புகிறேன்.

  6. தொழில் சங்கங்கள் எவ்வாறு மாற வேண்டும்?

    சுதந்திரம் கிடைத்ததிலிருந்து இன்று வரை Organised செக்டரில் மட்டும் சங்கங்கள் தொழிலாளர் உரிமைகளைப் பாது காத்தன; சம்பளம்/ஊதியம் பணவீக்கத்தை விட அதிக அளவில் உயர்ந்து விட்டது; ஆனால் Non -organised செக்டாரில் ஊதியம் மிக மிக மோசமாக இருக்கிறது. உதாரணமாக அரசு அலுவலகத்தில் கார் ஒட்டி ரூபாய் இருபத்தைந்து ஆயிரம் வாங்குகிறார் என்று நினைக்கிறேன்; ஆனால் கால் டாக்ஸி ஓட்டுனர் பதினைந்து ஆயிரம் பெற்றால் அதிகம். லாரி கம்பனி மேலாளர் பல பொறுப்புக்களுடன் முப்பதாயிரம் வாங்கும் போது பெரிய கம்பனிகளில் வேலை செய்பவர் ஒரு லட்சம் பெறுவார். முதலாளித்துவ கட்சிகள் ஒன்றும் செய்ய வில்லை தான்; ஆனால் கம்யூனிஸ்டு கட்சிகளும் non -organised செக்டாரில் பணி புரிபவர்களை கை கழுவி விட்டன. அவர்கள் இப்போது மக்கள் தொகையில் தொண்ணூறு சதவீதம். இன்னொன்று: தொழிலாளர் நலத்தை முன்னிறுத்தி பேசும் பொது தொழிலே நடக்க விடாமல் செய்வது சுவரின் நிலையைப் பற்றி கவனிக்காமல் ஓவியத்தை வரையும் உரிமைகள் பற்றி பேசி சுவர் இடிந்து விழுவது போல் இருக்கிறது. my blog: makaranthapezhai.blogspot.com

  7. முதலாளிக்கு சமூக அக்கறை இல்லையே ஒழிய! பத்துபேருக்கு நுறுபேர்ருக்கு ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்க வேண்டுமென்று நிறையவே ஆசையிருக்கிறது…

    எமக்கு சுகந்திரம் கிடைத்து அறுபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. பிரிட்டீஸ்காலனிவாதிகளிடம் வாங்கி இந்திய தேசிய முதலாளிகளிடம் கையளித்த காந்திக்காக காத்து நிற்கிறோம்…

    சுவர்யிருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அப்படி தான் நம்மை பாடசாலையிலே கல்வியை மண்டையில் செலுத்தி வெளியிலே தள்ளிவிட்டிருக்கிறார்கள். இசக்குபிசக்காக முதலாளியோடு மோதினால் உன்னை பிடிச்சு வெளியாலை விட்டுவார்கள். அப்புறம் வயிற்க்கு தவிலடிக்க வேண்டியது தான்……முதலாளித்துவ அமைப்பு முறையே ஒரு உழுத்து போன சுவர்தான் இதை அலவாங்கு-ஆயுதம் கொண்டு இடிக்க தேவையில்லை இந்தியதொழிலாளவர்கத்த்தின் ஐக்கியம் மட்டுமே தேவை என்னும் நிலையில் அதை சந்தேகப்பட்டு;சந்தேகப்பட்டு மிகுதிகாலத்தையும் ஓட்டிவிடுவோம்.

    “மலிவான உற்பத்திப்பொருள் சீனபெரும் சுவரையும் உடைக்கும்” என்கிற கருத்தை நாம் நம்பமாட்டோம்!. அமெரிக்கா-ஐரோப்பாவில் உள்ள ராஷ்சத நிறுவனங்கள் எல்லாம் ஏன்? மெக்ஸிக்கோ பிரேஸ்சில் சீனா இந்தியாவுக்கு கடைசி இருபது வருடங்களில் படையெடுத்து வந்தன என்பதை எண்ணிப் பார்ப்பது என்பது…பல தொழிலாளவர்க்கப் போரட்டங்களை கண்ட ஐரோப்பா அமெரிக்காவை விட பழைமையில் ஊறிய இந்தியர்களான நமக்கு கொஞ்சம் சிரமாகவே உள்ளது.

    இரண்டாம் உலகப்போர் ஏன் ஏற்பட்டது என்றால் அடோல்ப் கிட்லர் என்ற துஷ்டமனிதன் ஜேர்மனியில் ஆட்சிக்கு வந்ததால் தான் என்று வாத்தியார் வகுப்பில் பாடமெடுத்தார். அவனை தவிர்த்திருந்தால் அறுபது மில்லியன் மக்களையும் கோடிக்கணக்கிலும் அளவிடமுடியாத சொத்துகளையும் தவிர்த்திருக்க முடியும் என்கிற கருத்தியலே பள்ளிபாடம்.

    இதை மிஞ்சி தொழிலாளர்கள் முதலாளித்துவம் நிறுவனங்களின் அது வகித்த பாத்திரங்கள் பற்றி கதைத்தால் உரையாடினால் விவாதித்தால் அது கம்யூனிஸ்ட்காரன்-கட்சிக்காரன் செய்கிற கீழ்தரமான வேலையாகி விடும்.

    ஆகமொத்ததிலை தாத்தாவின் காணிவழக்காடத்தான் கால்மாக்ஸ் அவர்கள் முதலாம் அகிலத்தை ஸ்தாபித்தார்.அப்படியே இரண்டாம் மூன்றாம் நான்காம் அகிலமென வந்து நிற்கிறோம்.
    இது இருக்கிறதா? இல்லையா?? சர்வதேச தொழிலாளவர்கத்கத்திற்கு 12.08.2014-ல் என்ன செய்தியை சொன்னார்கள் என்பது பற்றியும் நாம் அக்கறை படுவதில்லை.

    எமக்கு வசதியானதைத்தான் நாம் செய்வோம். அடக்கியொடுக்பட்ட மக்களை தொழிலாளவர்கத்தில் இருந்து பிரித்தெடுத்து “தலித்” ஆக்குவதில் ஒரு சுகம்.

    பிறகு தலித்துகளை பிராமணியத்தில் மோதவிடுவதில் இன்னொரு சுகம்.

    எத்தனை மொழிவளங்களை அறிந்து கொள்ளுகிறோமோ அத்தனை அறிவும் எம்மை வந்துசேரும் என்பதை தவிர்த்து தமிழனை ஆகஉச்சிக்கி ஏற்றி குப்பற தள்ளி வீழ்த்துவதில் தனிச்சுகம்.

    • mao,

      ஏற்கனவே முடி கொட்டும் பிரச்சனை முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துவருவதாக சொல்கிறார்கள்.. கொஞ்சம் தயவு பண்ணி என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை தெளிவாக சொல்லக்கூடாதா?

      • ஆணி,அந்த மனிதமனம் ஒருமிக்காததால் பல தொடர்பற்றகருத்துகளையும் தொடர்சியாக பேசும் செயல் இது. இக் கட்டுரைக்கு தொடர்பாக பேச வரும் அந்த மனிதமனம், வேறு சில கட்டுரைகளையும் பற்றி சிந்திப்பதால், அதை பற்றிய கருத்துகளுடன் இக் கட்டுரைக்கு உரிய கருத்துகளுடன் கோர்த்து பேச முயலும். இச் செயலை செய்ய முயலும் அந்த மனிதமனம் தன் ஆழ் மன விரக்திகளையும் வெளிபடுத்தும். ( அந்த மனிதமனதின் கடைசிஇரு வரிகளை காண்க ). ருத்ரன் ஐயாவின் புத்தகங்களை படித்திர்கள் என்றால் இந்த மனிதமனம் பற்றி ஆராய்சி செய்வதும் , அதனை புரிந்து கொள்வதும் எளிதாகும். மேலும் மனித மூளையை வெகுவாக பாதிக்கும் போதை பழக்கம் ,வயது முதுமை காரணமாக கூட இத்தகைய தொடர்பற்ற பேச்சுக்கள் மனிதமனங்களில் இருந்து எழ சாத்தியம் உள்ளது. இத்தகைய மனதை (ஒரு கருத்திலிருந்து வேறு கருத்துக்கு வழுக்கி செய்வதால்) banana mind [வாழைபழ மனம் ] என்று மனதத்துவநூற்கள் கூறுகின்றன. ஒரே கருத்தை விடாமல் மீண்டும் மீண்டும் பேசும் மனதிற்கு மனதத்துவநூற்கள் வைத்துல்ள பெயர் என்ன? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

        • டயானா அவர்களுக்கு,

          மாவோ அவர்களின் பின்னூட்டங்களைப் பற்றிய தங்களது பார்வை தனிநபர் தாக்குதலாக இருக்கின்றன.

          நிதர்சனத்தில் மாவோவிற்கு சொல்வளமும் கருத்துச் செறிவும் நிறைய உண்டு. அவருடைய வாதங்கள் முதலாளித்துவத்தின் மீது கூரிய விமர்சனங்களை வைத்திருக்கின்றன. பாட்டாளிகளின் ஐக்கியத்தைக் முன்வைக்கிற மாவோவால் பார்ப்பனியத்தை விமர்சிப்பதில் ஒருபக்கச் சார்பும் தயக்கமும் சமரசமும் உண்டு. இவைகள் மாவோ அவர்களின் விவாத வடிவம் என்று கருதுகிறேன்.

          தொடர்பற்ற கருத்துக்கள் என்று கருதுவதற்கு காரணம் அவரது மொழி நடையில் பெரும்பாலும் எழுவாய், பயனிலை இருக்காது. இன்னார் இன்னாரை நோக்கி உரை நிகழ்த்துவது என்பதாக இருக்காது. சந்தேக மொழிவடிவத்தை மாற்றி நேரடியாக தன் வாதத்தை வாசிப்பவருக்கு எதிரே நிறுத்தினால் அவரது வாதங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் தரப்பு புரிதல்.

          • திரு தென்றல் ,

            அந்த மனதின் கருத்துக்களில் சொல்வளமும் கருத்துச் செறிவும் நிறைய உண்டு என்பது நிதர்சனமெனில், கீழ் உள்ள அந்த மனக்கருத்துடன் விடுபட்ட தமிழிலக்கண எழுவாய், பயனிலை சொற்களை சேர்த்து பொருள் படும்படி மாற்றியெழுதிக்காட்டுங்கள் பார்ப்போம.

            “சுவர்யிருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அப்படி தான் நம்மை பாடசாலையிலே கல்வியை மண்டையில் செலுத்தி வெளியிலே தள்ளிவிட்டிருக்கிறார்கள். இசக்குபிசக்காக முதலாளியோடு மோதினால் உன்னை பிடிச்சு வெளியாலை விட்டுவார்கள். அப்புறம் வயிற்க்கு தவிலடிக்க வேண்டியது தான்……முதலாளித்துவ அமைப்பு முறையே ஒரு உழுத்து போன சுவர்தான் இதை அலவாங்கு-ஆயுதம் கொண்டு இடிக்க தேவையில்லை இந்தியதொழிலாளவர்கத்த்தின் ஐக்கியம் மட்டுமே தேவை என்னும் நிலையில் அதை சந்தேகப்பட்டு;சந்தேகப்பட்டு மிகுதிகாலத்தையும் ஓட்டிவிடுவோம்.”

            “ஆகமொத்ததிலை தாத்தாவின் காணிவழக்காடத்தான் கால்மாக்ஸ் அவர்கள் முதலாம் அகிலத்தை ஸ்தாபித்தார்.அப்படியே இரண்டாம் மூன்றாம் நான்காம் அகிலமென வந்து நிற்கிறோம். இது இருக்கிறதா? இல்லையா?? சர்வதேச தொழிலாளவர்கத்கத்திற்கு 12.08.2014-ல் என்ன செய்தியை சொன்னார்கள் என்பது பற்றியும் நாம் அக்கறை படுவதில்லை.”

            • Dayanaa,
              You have to read a lot to understand what he tries to say. Based on your comment, you just started reading “Das capital”, you have long way to go.

              Instead of trying to criticize his comment, Ask yourself why I am not able to understand what he is trying to say. Lot of context and history involved and it is not possible to write everything in small comment.

              Come back to the same comment after three years, you will understand.

              my 2 cents

            • முதல் பத்திக்கான விளக்கவுரை, என் புரிதலின் படி.

              சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அது போல முதலாளிகள் என்ற சுவர் இருந்தால்தான் வேலையும், சோறும் கிடைக்கும். அவர்களோடு எசகுபிசகாக மோதினால், வெளியே துரத்திவிடுவார்கள். பின்னர் சாப்பாட்டுக்கு வழியின்றி, காலி வயிற்றில் தவில் அடிக்க வேண்டி வரும். இக்கருத்து சமூகத்தின் பொதுப்புத்தியில் பதிய வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்களில் கூட இதை மண்டைக்குள் திணித்து அனுப்பி வைக்கிறார்கள்.

              இக்கருத்து சரியல்ல. முதலாளிகள் என்ற சுவர் இடிக்கப்படவேண்டும். அதற்கு ‘அலவாங்கு’ போன்ற ஆயுதங்கள் தேவை இல்லை. தொழிலாளி வர்கத்தின் ஒற்றுமையான போராட்டம் என்ற ஆயுதம் மட்டும் போதும். ஆனால், இது மட்டும் போதுமா என சந்தேகப்பட்டே காலம் கழிக்கிறோம். எஞ்சிய காலமும் இவ்வாறே வீணாகும்.

              ——————————

              இரண்டாம் பத்தியில் மார்க்ஸ் குறிப்பிட்ட ‘முதலாம் அகிலம்’ என்பதை ஒட்டி ஒரு கருத்து சொல்கிறார். எனக்கு இது பற்றிய அறிவு இல்லாததால் பத்தி புரியவில்லை.

              • திரு வெங்கடேசன், திரு மார்க்ஸ் எழுதிய மூலதனம் Tiru MAO எழுதும் வியாக்கானத்தை விட மிக எளிமையாகவும் ,பயனுள்ளதாகவும் உள்ளது. உங்களின் தோராயமான விளக்கயுரைக்கு நன்றி

        • தோழமையுணர்வுடன் டயானா அவர்களுக்கு!

          என் முகத்தை காட்டுகிற கண்ணாடி அழகாக காட்டவில்லை என்பதற்காக கண்ணாடியை உடைக்கலாமா? அந்த விதமான முட்டாள்தனமான வேலைத்தான் உங்கள் பின்னோட்டம் பிரதி பலிக்கிறது?

          ஆணிக்கு மயிர்கொட்டு பிரச்சனைக்கு வழிவகை சொல்லி இருந்தால் உங்களுக்கு ஒரு தகுதி கிடைத்திருக்கும். முதாலித்துவ கல்வியை கற்றுவிட்டு வேலைதேடி அலைகிற உங்களுக்கு..அதாவது கேட்டகேள்விக்கு பதில் எழுதிய உங்களுக்கு மனிதனின் வர்க்கபோராட்ட வரலாறு தெரிந்திருக்க நியாயம் இல்லை. புள்ளிக்கு கல்விகற்றவர்களுக்கு நேரமும் இருந்திருக்க மாட்டாது என்பது இன்றைய விதி.

          உங்களுக்கு இந்த இடத்தில் அரசியல் கற்பிக்க நான் வரவில்லை.எனக்கு எம்மை போன்றவர்களுக்கு அரசியல் என்று சொல்லி மனோதத்துவ ரீதியில் அறிவுரை கூறுவதை தவிர்க வேண்டும் என எச்சரிக்கை செய்கிறேன்.

          எட்டுபிள்ளை பெத்தவளுக்கு ஒரு பிள்ளை பெத்தவள் பிள்ளை பெறுவது இப்படிதான் என முக்கிக்காட்டினாளாம்.அப்படித் தான் இருக்கிறது உங்கள் நிலமை.

          கட்டுரையின் தலையங்கமே! “தொழிலாளர் சட்டம்: பண்ணை அடிமைகாலம் திரும்புகிறது” என்பது தான். இதில் தொழிலாளர்களை பற்றி அவர்களை அடக்கியாளுகிற முதலாளி-முதலாளிவர்கத்தை பற்றி கதைக்காமல் வேறு எதைப்பற்றியாம் கதைப்பது?- நீங்கள் எதை பற்றி கதைக்க வேண்டுமென எதிர் பார்க்கிறீர்கள்?

          ஆணி நீங்கள் உங்களை போன்றவர்கள் மண்டையில் குப்பையை நிறைப்கொண்டு இந்த உலகத்தை பார்க்கிறீர்கள். உண்மையை பொய்யாக்க முயலுகிறீர்கள். தொழிலாளவர்கத்தை கதைப்பதை காட்டிலும் தன்னைதானே பித்திக்கொள்ள முயலுகிறீர்கள். இது அரசியல் கருத்தல்ல..களவாணித்தனம்.

          எழுதப்பட்டது தமிழில் எங்கேயாவது ஒருவசனத்தையோ சொல்லையோ தொழிலாளவர்க்கம் சார்ந்தது இல்லையென நிரூபிக்க முடியுமா? உங்களால்; முடியாது.

          இன்றைய உலகத்தின் அரசியல்வாதியோ நடிகனோ ரசிகர்மன்றம் வைத்திருப்பனோ நான் அல்ல.119 கோடி பாட்டாளிகளில் நானும் ஒருவன்.வரும் காலத்தில் அவர்களும் அவர்களை போன்றவர்களும் எதிர்நோக்கும் ஆபத்துகள் பெரிதாகவே எமக்கு தெரிகிறது. இதை உறுதியான போராட்டம் இல்லாமல் எதிர்கொள்ளவே முடியாது.இதற்கு கடந்த காலத்தில் மனிதநாரீகம் தந்த தத்துவங்கள் மிகமிக அவசியமானது.

          இதில் மொழிப்போராட்டம் மதப்போராட்ம் இனப்போராட்டம் சாதிப்போராட்டம் எல்லாவற்றையும் இந்தியமுதலாளித்துவத்ற்கு எதிரான போராட்டமாக மாற்றவேண்டும்.இது தான் தத்துவத்தின் வலிமை.அதை நோக்கி தான் நாம் செல்ல வேண்டும்.

          வினவு வாசகர் கருதியே இதை உங்களுக்கு என எழுதியுள்ளேன்
          உங்களுக்கான பதிலை அடக்கமாகவும் பண்பாகவும் ஆவேசமில்லாமலும் மிககுறுகிய எழுத்தில் திருராமன் அவர்கள் தந்துவிட்டார்.

          • திரு mao ,

            mao : “””””என் முகத்தை காட்டுகிற கண்ணாடி அழகாக காட்டவில்லை என்பதற்காக கண்ணாடியை உடைக்கலாமா? அந்த விதமான முட்டாள்தனமான வேலைத்தான் உங்கள் பின்னோட்டம் பிரதி பலிக்கிறது?””””

            பதில்: இத்தனை நாட்கள் ஒழுங்காக காட்டாத கண்ணடி இன்று இந்த உங்கள் பதிலில் மட்டும் உங்கள் முகத்தை ஒழுங்காக காட்டும் மர்மம் என்ன ?

            mao : “””””ஆணிக்கு மயிர்கொட்டு பிரச்சனைக்கு வழிவகை சொல்லி இருந்தால் உங்களுக்கு ஒரு தகுதி கிடைத்திருக்கும். முதாலித்துவ கல்வியை கற்றுவிட்டு வேலைதேடி அலைகிற உங்களுக்கு..அதாவது கேட்டகேள்விக்கு பதில் எழுதிய உங்களுக்கு மனிதனின் வர்க்கபோராட்ட வரலாறு தெரிந்திருக்க நியாயம் இல்லை. புள்ளிக்கு கல்விகற்றவர்களுக்கு நேரமும் இருந்திருக்க மாட்டாது என்பது இன்றைய விதி””””

            பதில்: லெனின் ,மார்க்ஸ் ,மஒ என்று எல்லாருமே முதாலித்துவ கல்வியை கற்றுவிட்டு தொழிலாளர் வர்கத்துக்கு சேவை செய்தது மறந்தது ஏன் ?

            mao : “””””உங்களுக்கு இந்த இடத்தில் அரசியல் கற்பிக்க நான் வரவில்லை.எனக்கு எம்மை போன்றவர்களுக்கு அரசியல் என்று சொல்லி மனோதத்துவ ரீதியில் அறிவுரை கூறுவதை தவிர்க வேண்டும் என எச்சரிக்கை செய்கிறேன்.”””””

            பதில்:குறள் 642:ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
            காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
            மு.வ உரை:
            ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.

            குறள் 644:

            திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
            பொருளும் அதனினூஉங்கு இல்.

            மு.வ உரை:

            சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும், அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.

            mao :””””எட்டுபிள்ளை பெத்தவளுக்கு ஒரு பிள்ளை பெத்தவள் பிள்ளை பெறுவது இப்படிதான் என முக்கிக்காட்டினாளாம்.அப்படித் தான் இருக்கிறது உங்கள் நிலமை.””””

            பதில்:எட்டுபிள்ளை பெத்த மஒ[mao ] எல்லாத்தையும் ஒழுங்கா வளத்து இருந்தா ஒத்த புள்ள டயானா கேள்வி கேட்பது ஏனென்றால் , சுதந்திரம் பெற்று இத்துனை ஆண்டு ஆகியும் எட்டுபிள்ளை பெத்த மஒ[mao ] கம்முநிசத்துக்கு இந்தியாவை கொண்டு செல்ல என்ன சாதிச்சிங்க ?

            mao :”””””கட்டுரையின் தலையங்கமே! “தொழிலாளர் சட்டம்: பண்ணை அடிமைகாலம் திரும்புகிறது” என்பது தான். இதில் தொழிலாளர்களை பற்றி அவர்களை அடக்கியாளுகிற முதலாளி-முதலாளிவர்கத்தை பற்றி கதைக்காமல் வேறு எதைப்பற்றியாம் கதைப்பது?- நீங்கள் எதை பற்றி கதைக்க வேண்டுமென எதிர் பார்க்கிறீர்கள்?ஆணி நீங்கள் உங்களை போன்றவர்கள் மண்டையில் குப்பையை நிறைப்கொண்டு இந்த உலகத்தை பார்க்கிறீர்கள். உண்மையை பொய்யாக்க முயலுகிறீர்கள். தொழிலாளவர்கத்தை கதைப்பதை காட்டிலும் தன்னைதானே பித்திக்கொள்ள முயலுகிறீர்கள். இது அரசியல் கருத்தல்ல..களவாணித்தனம்.எழுதப்பட்டது தமிழில் எங்கேயாவது ஒருவசனத்தையோ சொல்லையோ தொழிலாளவர்க்கம் சார்ந்தது இல்லையென நிரூபிக்க முடியுமா? உங்களால்; முடியாது. “””””

            பதில்:குறள் 648: விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
            சொல்லுதல் வல்லார்ப் பெறின்

            மு.வ உரை:

            கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனியாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.

            mao :””””””இதில் மொழிப்போராட்டம் மதப்போராட்ம் இனப்போராட்டம் சாதிப்போராட்டம் எல்லாவற்றையும் இந்தியமுதலாளித்துவத்ற்கு எதிரான போராட்டமாக மாற்றவேண்டும்.இது தான் தத்துவத்தின் வலிமை.அதை நோக்கி தான் நாம் செல்ல வேண்டும்.”””””

            பதில்: நீங்கள்[mao] காட்டும் செத்த மொழி சமஸ்கிருதம் மீதான மொழி பற்று , பார்பனியம் சாதி மீதான பாசம் , பார்பன ஹிந்து மதம் மீதான வெறிக்கு எல்லாம் வினவு தளத்தில் நீங்கள் எழுதிய பதில்கள் மூலம் ஆதாரம் காட்டவா mao ?

            • திரும்பவும் குப்பை கொட்ட துவங்கியிருக்கிறீர்கள் அம்மணி!

              திருவள்ளுவர் சொன்ன “அறம்” எதுவென்று கேள்விக் குறியாக்கப்பட்டபட்டுள்ள காலம் இது.ஆகக் குறைந்தது நிலப்புரத்துவத்தை எப்படி பலாத்காரமாக முதலாளித்துவம் வீழ்த்தி அந்த இடத்தில் அமர்ந்து கொண்டது என்பதையாவது அறிந்து கொள்ளுங்கள்.

              அதிலிருந்து எப்படி புதிய தொழிலாளவர்க்கம் உதித்தெழுந்தது என்பதை மார்க்ஸ் தெளிவாக விபரித்திருக்கிறார். இதை அறிவதற்கு அறுபது பக்க கம்யூனிஸ்கட்சி அறிகையே போதும்.

              அதுகூடா உங்கள் மண்டையில் ஏறுமா? என்பதும் எனக்கு சந்தேகமே!

              • மூடர்முன்னே பாடல் மொழிந்தால் அறிவரோ
                ஆடெடுத்த தென்புலியூர் அம்பலவா – ஆடகப்பொன்
                செந்திருவைப் போலணங்கைச் சிங்காரித் தென்னபயன்
                அந்தகனே நாயகனா னால்.

            • டயானா மேடம்,
              வாத பாணி, கோட் ஸ்டைல், கருத்து பொழிவு அல்லாவற்றையும் சீர் இருத்தி பாத்தால் இது நம்ம அண்ணன், சரவணன் எனும் செந்தில்குமரன்தான் ………இது மாரியாத்தா சத்தியமா அரசமரசத்தடி சோசியர் சொன்ன உறுதியான சேதி. அண்ணே இது உங்களுக்கு மூணாவது அவதாரமாண்ணே!

              • ‘வாழைப்பழ மனம்’ என்று டயானா சொல்வதைப் பார்த்தால் அவர் நமது சரவணனாகத்தான் இருக்கக்கூடும் என்று தெரிகிறது தோழர் வெற்றிவேல்.

                முன்னொருமுறை நமது அன்பர் மாவோ அவர்கள் வாழைப்பழ காமெடியை சரவணினிடம் நினைவுறுத்தியிருந்தார். டயானாவும் இப்பொழுது அதை இறுகப்பற்றுகிறார்.

                இதுமற்றும் உண்மையாக இருக்கும்பட்சத்தில் எத்துணை டிவிஸ்டுகள்! வினவுக்காரவுக ஆறுவருசம் எப்படி தான் இணையத்தில் கடந்தார்களோ!!

                மிடியல!!!

                • திரு தென்றல் ,தமிழிலக்கண எழுவாய், பயனிலை சொற்களை சேர்க்காமல், அதிமேதாவி போன்று தன்னை நினைத்துக்கொண்டு, மார்க்ஸ்க்கு இணையாக எழுதுவதாக நினைக்கும் ஒரு மனிதரை[mr mao], ஆகாயத்தில் இருந்து மண்ணுக்கு கொண்டுவந்த சாதனை என்னை மட்டும் தான் சேரும். நீங்கலோ அல்லது திரு சரவணனோ அல்லது வேறு யாருமோ இதற்கு உரிமை கோரமுடியாது. நேற்று முதல் திரு MAO அவர்களின் பதில்களை பாருங்கள். மொழி நடையில் நல்ல மாற்றம் தெரிகின்றதா இல்லையா ? எளிமையாக இருக்கிறதா இல்லையா ?

                • திரு தென்றல் , செந்தில் ,கவுண்டமணி செய்யும் வாழைப்பழ நையாண்டியை விட நீங்கள் கூறும் இந்த துப்பறியும் நையாண்டி மிக்க அருமையாக உள்ளது. உங்களின் இந்த புதுமையான துப்பறியும் நையாண்டி முறை வெற்றி பெற உங்களுக்கு எனது வாழ்த்து.

              • திரு வெற்றிவேல்,

                உங்கள் பதில்களில் உள்ள கிண்டல்,கருத்துசெறிவு, வாத பாணி, கோடிங் ஸ்டைல், கருத்து பொழிவு எல்லாம் எனக்கு மிகவும் விருப்பம் உடையவை என்பதற்க்காக அவற்றை நானும் பின்தொடர்ந்தால் , நான் உங்கள் அருகாமையில் தான் வர முடியுமே தவிர, நானே திரு வெற்றிவேல் ஆக முடியாதல்லவா ?

          • உயர்திரு மாவோ,

            //ஆணி நீங்கள் உங்களை போன்றவர்கள் மண்டையில் குப்பையை நிறைப்கொண்டு இந்த உலகத்தை பார்க்கிறீர்கள். உண்மையை பொய்யாக்க முயலுகிறீர்கள்.//

            நீங்கள் உங்கள் அரசியலை மக்களுக்கு புரியும் வண்ணம் எளிமையாக விளக்குங்கள் என்று தான் கேட்கிறேன். நான் கேட்ட வடிவத்தில் பிரச்சனை இருக்கிறது என்பதை உணர்கிறேன், அது என்னுடைய தவறுதான் அதற்காக மன்னிப்பு கோருகிறேன். நீங்கள் எழுதியது புரியும் வடிவத்தில் இல்லை என்பதையே சொல்ல வந்தேன்.

            என் மண்டையில் குப்பை இருப்பதால் தான் முடி கொட்டுகிறது என்பதாகவே இருக்கட்டும். அந்த குப்பையை அகற்ற உங்கள் கருத்து உதவவில்லை என்று தான் குறைபட்டுக்கொள்கிறேன்.

            //உங்களுக்கு இந்த இடத்தில் அரசியல் கற்பிக்க நான் வரவில்லை//

            தலைவர் மாவோவின் பெயரை வைத்துக்கொண்டு கற்பித்தலையும் கற்றுக்கொள்வதையும் நிராகரிக்கிறீர்களே, நியாயமா?

            நாம் விவாதிக்கும் கருத்து பலருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக இருந்தால் மட்டுமே பலரை சென்றடையும். நம் கருத்து முதலில் குழப்பமின்றி இருந்தாலொழிய மூளையில் (மண்டையில்) இருந்து முதலாளி வர்க்க குப்பைகளை அகற்ற முடியாது..

            • திரு ஆணி!

              உங்கள் இந்த பின்னோட்டம் ஒரு ஆணித்தரமான கருத்தாகவே எனக்கு படுகிறது. அடுத்ததாக என்னிடம் எந்தவிதமான மன்னிப்பும் கேட்டவேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை.உங்களுக்கு என்னால் முடிந்தவரைக்கும் பதில் தந்திருப்பேன் அதில் வேறு நபர் குறுக்கிட்டதால் வழி திசை திரும்பி விட்டது.

              நான் இங்கு அதாவது வினவு இணையத்தளத்தில் கதைப்பது வர்க்கப்போராட்டம் அது வந்த பாதை ஏன் பல போராட்டங்கள் தோல்வியுற்றது உதாரணமாக ரஷ்சிய சீனா புரட்சிகள் என்பது பற்றியே.

              வர்க்கப்போராட்டத்திற்கு என்றுமே ஒருயினமே குலமோ சாதியோ குறிப்பாக பிராமணீய சமூகமோ குறிக்கிடுவதில்லை. வர்க்கப்போராட்டத்தை திசை திருப்ப முயல்கிற குட்டிமுதலாளித்துவ சிந்தனையாளர்களோயோ நடந்தேறுகிறது.

              நாளாந்தம் நடைபெறகிற முதலாளித்துவ கட்டமைப்புபினால் ஏற்பட்ட சுரண்டல்-ஏமாற்று மோசடியால் இந்தியாவில் உள்ள எல்லா சமூகங்களிலிருந்தும் புரட்சியை நோக்கி உந்த தள்ள பட்டுகொண்டிருக்கிறார்கள்.இதற்கு ஒரு சமூகத்தையோ இனத்தையோ குற்றம் சாட்டுவது அறிவிலித்தனம்.

              உதாரணத்திற்கு பிராமணிய கோட்பாடுகள்தான் இந்தியாவை கெடுத்ததாக இருந்தால் ஆபிரிக்காவை லத்தீன்அமெரிக்காவையும் கெடுத்தவர் யாரோ? அது மட்டுமல்ல இவர்களின் நிலைகே இன்று ஐரோப்பிய-அமெரிக்க பாட்டாளி வர்க்கமும் வந்துள்ளது.ஆக மொத்ததில் உலகப்பாட்டாளி வர்க்கம் ஒரு உலகப் புரட்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

              ஆகவே இனிமேலும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்க முடியாது.

              அடுத்து உங்களின் கேள்விகளில் அடுத்த ஒன்று.புரியும் படியாக சொல்லுங்கள் என்பதே!

              ஆங்கிலம் ஜேர்மன் பிரான்ஸ் மொழிகள் எந்த விதத்திலும் குறைந்தவைகள் அல்ல. இருந்தும் உயர்கல்வி கற்பவர்கள் செத்துபோன மொழியான லத்தீனையும் கற்றுக் கொள்ள வேண்டிய தேவை சட்டம் இருக்கிறது.இதிலிருந்து தெரியவில்லையா நாம் எவ்வளவு பிற்காலத்தில் சஞ்சரித்து கொண்டிருக்றோம் என்று. ஆகவே புரியும் படியாக சொல்லுங்கள் என்றால் அது என்ன? இதை விட வேறு பாஷையை தற் சமயம் இல்லை என்பதே அர்த்தம்.

              இறுதியாக மாவோ என்றால் அது ஏன்? சீனத்தலைவர் மாசேதுங்காக இருக்கவேண்டும். என் அப்பன் அப்பனின் அப்பன் பெயயரின் முதல் பெயரை குறிக்கி போட்டிருக்கலாம் தானே!

              நான் மதிப்பு வைத்திருக்கிற உலகத்தவைர்களில் மாசேதுங்கும் ஒருவர். இறுதிவரை தனக்கு தேவையானதை தானே செய்தார் தன்கிழிந்த உடுப்பை தானே தைத்தார் என்பதில் தான்.

              அந்த காலத்தில் எப்படியோ? இந்தகாலத்தில் பலவகைப்பட்ட விமர்னங்களை தாங்கி நிற்கிறது சீனம்.

              • திரு மாவோ,

                Mr Mao:உதாரணத்திற்கு பிராமணிய கோட்பாடுகள்தான் இந்தியாவை கெடுத்ததாக இருந்தால் ஆபிரிக்காவை லத்தீன்அமெரிக்காவையும் கெடுத்தவர் யாரோ? அது மட்டுமல்ல இவர்களின் நிலைகே இன்று ஐரோப்பிய-அமெரிக்க பாட்டாளி வர்க்கமும் வந்துள்ளது.ஆக மொத்ததில் உலகப்பாட்டாளி வர்க்கம் ஒரு உலகப் புரட்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

                என் பதில்: உங்கள் மனகுதிரையை நன்றாக ஓட்டுங்கள். 20% இந்திய மக்களை SC என்றும் ST என்றும் வகைபிரித்து வைத்து அவர்களை சேரிகளிலும், மலைகளிலும் தனிமை படுத்தி வைக்கும் சூழ்ச்சியை யார் படைத்தது?. முதலாளித்துவமா அல்லது பார்பன பாசிசமா ? முதலாளித்துவம் கடந்த 250 ஆண்டுகளின் வரலாற்றுப்போக்கு என்னும் போது, அதற்கு முன்பே மனுதர்ம அடிபடையில் பிரம்மன் தலை முதல் கால் வரை மக்களை பிறப்பித்து வைத்தது யாரோ ?முதலாளித்துவமா அல்லது பார்பன பாசிசமா ?

                • @Dayanaa

                  //முன்பே மனுதர்ம அடிபடையில் பிரம்மன் தலை முதல் கால் வரை மக்களை பிறப்பித்து வைத்தது யாரோ//

                  Which landlord doesn’t want a slave working in his farm? Which business man doesnt like a slave for moving his goods? Which household doesnt want a person cleaning the cloths and street for free? Which individual doesnt want to be treated like a King by a fellow human?

                  People wanted a story to rule and exploit others. Brahmins gave the fitting story to fulfill these wishes of the society and as an added bonus liberated the common man from the sins of exploiting fellow human. Needless to say it would have been an instant success.

                  Everybody involved in exploiting, just scapegoating Brahmans will be of no use.

                  And without the monetary benefit land owning communities would not have implemented those words by Brahmins and this the Capitalist nature mao wants to explain-

              • Mao,

                ரசிய, சீன புரட்சிகள் தோற்கவில்லை. முதலாளித்துவ மீட்சியால் பின்னடைவை சந்தித்துள்ளன.

                //உதாரணத்திற்கு பிராமணிய கோட்பாடுகள்தான் இந்தியாவை கெடுத்ததாக இருந்தால் ஆபிரிக்காவை லத்தீன்அமெரிக்காவையும் கெடுத்தவர் யாரோ?//

                நிலவி வரும் சமூக அமைப்பு (இதுவரை நிலவி வந்த சமூக அமைப்பு அனைத்தும்) வர்க்க படிநிலை சமூகம். உலகில் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது இடத்துக்கு இடம் மாறுபடும், மாறுபடுகிறது.

                //வர்க்கப்போராட்டத்திற்கு என்றுமே ஒருயினமே குலமோ சாதியோ குறிப்பாக பிராமணீய சமூகமோ குறிக்கிடுவதில்லை.//

                எனில் ரசியா, சீனாவிற்கு முன்னாலேயே இந்தியாவில் வர்க்கப் போராட்டம் தீவிரமடைந்து புரட்சி ஏற்பட்டிருக்க வேண்டுமே? ஏன் ஏற்படவில்லை? ஐரோப்பிய நாடுகளுக்கு முன்னால் இந்தியாவில் முதலாளித்துவ புரட்சி நடக்கவில்லையையே அது ஏன்? ஐரோப்பியர்கள் தான் இந்தியாவில் முதலாளித்துவ உற்பத்தியை அறிமுகப்படுத்தினர் – இல்லை என்கிறீர்களா?

                சமூக அமைப்பில் வர்க்கங்கள், அவற்றின் வர்க்கப்படி நிலையின் தன்மைகேற்பவும், சமூக முன்னேற்றத்தில் அதன் பாத்திரத்தை கொண்டும் தான் மதிப்பிட வேண்டும். அந்தவகையில்
                ஒருகுறிப்பிட்ட சமூக அமைப்பிலேயே பகை சக்திகளும், நட்பு சக்திகளும் இருக்கின்றன.

                இங்கு சாதிக்கும் வர்க்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லையா? இந்திய சமூக அமைப்பில் சாதி என்பதே வர்க்க ஒடுக்குமுறையின் ஒரு வடிவமாக தான் இருக்கிறது. அதற்கு பார்ப்பனீயம் சித்தாந்த அடிப்படையை கொடுக்கிறது.

                மேலும், பார்ப்பனர்கள் என்ற குறிப்பிட்ட சாதியினரை இங்கு யாரும் குற்றம் சுமத்தவில்லை. பார்ப்பனீய சித்தாந்தத்தை, அதை பின்பற்றுகிறவர் எந்த சாதியை சேர்ந்தவராயினும் அவர்களை தான் சமூக முன்னேற்றத்தை தடுக்கிறார்கள் என்கிறோம்.

                இல்லை, பார்ப்பனீய சித்தாந்தம் சமூக முன்னேற்றத்தை தடுக்கவில்லை என்று வாதிடுவீர்களேயானால், தகுந்த சான்றாதாரங்களுடன் உங்கள் கருத்தை முன்வைக்க வேண்டும்.

                • திரு ஆணி,இந்தியாவில் புதியசனநாயகம் பின்பு சோசியலிசம் பின்பு கம்யுனிசம் என்று நம் இந்திய சமுகம் முன்னேற தடையாக இருந்தது யார் தெரியுமா ? இந்தியாவில் ஹைதராபாத் நிஜாமுக்கு எதிராக தோன்றிய “மக்கள் யுத்தத்தை” கரு அறுத்தது யார் தெரியுமா? ஆம் , mr mao போன்ற “பார்ப்பனியத்தை” இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் முதன்மை படுத்திய டாங்கே போன்ற போலியான கம்யூனிஸ்ட்டுகள் தான்.

                  //சீனாவிற்கு முன்னாலேயே இந்தியாவில் வர்க்கப் போராட்டம் தீவிரமடைந்து புரட்சி ஏற்பட்டிருக்க வேண்டுமே? ஏன் ஏற்படவில்லை? ஐரோப்பிய நாடுகளுக்கு முன்னால் இந்தியாவில் முதலாளித்துவ புரட்சி நடக்கவில்லையையே அது ஏன்? ஐரோப்பியர்கள் தான் இந்தியாவில் முதலாளித்துவ உற்பத்தியை அறிமுகப்படுத்தினர் – இல்லை என்கிறீர்களா?//

                • Correction :
                  //இதுவரை நிலவி வந்த சமூக அமைப்பு அனைத்தும்//
                  புராதன பொதுவுடமை சமூகம் தவிர்த்து நிலவி வந்த சமூக அமைப்பு அனைத்தும்

              • Mao,

                கருத்துக்களை புரியும் படி சொல்லுங்கள் என்றதற்கு எதற்காக ஆங்கிலம், ஜெர்மன், பிரான்ஸ் பின்னர் லத்தீன் என்று புலம்புகிறீர்கள்?

                உங்கள் கருத்துக்களை முரணின்றி தெளிவாக சொல்ல முடியுமா, முடியாதா?

                //செத்துபோன மொழியான லத்தீனையும் கற்றுக் கொள்ள வேண்டிய தேவை சட்டம் இருக்கிறது.//

                இது எங்கே இருக்கிறது? ஐரோப்பாவிலா? இங்கு இதைப் பற்றி பேச வேண்டிய தேவை என்ன?
                ஒரு வேளை சமஸ்கிருத திணிப்பை ஆதரிப்பதற்க்காக இதை சொல்கிறீர்களா?

                சரி தான்! உலகப்புரட்சி வந்து கொண்டிருக்கிறது, பார்ப்பனர்கள் தலமை தாங்கி அதை நடத்தப்போகிறார்கள், மண்டையில் குப்பையை வைத்துள்ள குட்டிமுதலாளிகள் அதை கெடுக்கிறார்கள் – என்று சொல்ல வருகிறீர்களோ?

                உங்கள் பின்னூட்டங்களுக்கு அருஞ்சொற் பொருள் அளித்த வேறு எவராவது வந்து தான் விளக்க வேண்டுமா?

                • திரு ஆணி,பிரான்சுகாரர்கள் அவர்கள் நாட்டில் இருந்து கடல் மார்க்கமாக சென்றால் 20km தொலையில் உள்ள ஆங்கிலேயரின் இங்கிலீஷ் மொழியை கூட கற்காத அளவுக்கு தம் மொழி[பிரன்சு] பற்றாளர்கள். லத்தீன் என்ற மொழி சம்ஸ்கிருதத்தை போன்றே ஐரோப்பாவில் செத்த மொழியாக இருக்கும் போது , அதனை கற்பதற்கு தமிழ்நாட்டில் இருந்து கொடிபிடித்து கோசம் போடும்,வேசம் போடும் திரு mao யாறேன்று தெரியவில்லையா உங்களுக்கு?

                  திரு ஆணி, அவர்[mr mao] கருத்தில் ஏதும் முரண் இல்லை. லத்தீன் என்ற மொழியை ஐரோப்பியர்கள் கட்டாயம் படிப்பதாக தன் அளவில் தவறான கருத்துடைய mr mao, அது போன்றே செத்த மொழியாகிய சம்ஸ்கிருதத்தை இந்தியாவிலும் முதன்மைபடுத்தி அனைவரையும் படிக்கச்சொல்கின்றார் என்பது உங்களுக்கு புரியவில்லையா ?

                  திரு ஆணி, சமதர்மம் பேசும் அதே mr mao வாய், “பார்பனிய பாசிசத்தை”[நன்றி வினவு] முழுங்கி மறைத்துக்கொண்டு வினவில் நட[ன]மாடுவது, மார்சியம் மீது நம்பிக்கையுடன் அதை கற்போருக்கு அவநம்பிக்கை அளிக்க mr mao செய்யும் சூது என்பது உங்களுக்கு விளங்கவில்லையா ?

            • திரு ஆணி, என் பதில் மூலம், [ feedback 7.1.1 August 13, 2014 at 7:07 pm]அன்று கொடுக்கபட்ட மனதத்துவ சிகிச்சை மூலம் மட்டுமே, திரு mao அவர்கள் நல்மனம் பெற்று, மொழி நடையில் நல்ல மாற்றம் செய்து , எளிமையாக மற்றவருக்கும் புரியும் படி நேற்று முதல் பதில் அளிக்கின்றார் நினைவில் நிறுத்துங்கள்.வேதாளம் மீண்டும் முருங்க மரம் ஏறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை.

              • Dayana,

                //என் பதில் மூலம்….என்பதை நினைவில் நிறுத்துங்கள்//
                ம்.. சரி தான். ஆனால் எதற்கு இந்த சுய தம்பட்டம்? அல்லது நீங்கள் இதன் மூலம் எனக்கு என்ன சொல்ல வருகிறீர்கள்?

                • திரு ஆணி, வேதாளம் மீண்டும் முருங்க மரம் ஏறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை என்று சொல்லவருகின்றேன்.

              • அடுத்த அவதாரமும் எடுக்க வேண்டிய நிலைவரும்

                கவனிச்சு நிதானமாக எழுதுங்க அண்ணாச்சி.

                இதை விளங்குவதற்கு சிக்கல் இருக்காது என நினைக்கிறேன்.

                • திரு மாவோ, உங்கள் உடைய தெளிவான இவ்உரையாடலுக்கு மிக்க நன்றி.!!!

                  இது போன்றே எளிய தமிழில் அனைவருக்கு

                  புரியும் படி எழுதுங்கள்.!!!

                  ஆமாம் mr mao,

                  அடுத்த அவதாரமும் எடுக்க வேண்டிய நிலை ஏன் உங்களுக்கு வரும்?

                  எந்த அண்ணாச்சி ஏன் கவனமாக,நிதானமாக எழுதவேண்டும் ?

  8. Thumbi,

    //தொழில் சங்கங்கள்//

    ஒழுங்குபட்ட தொழில்களின் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை தக்க வைத்துக் கொள்ள சங்கமாக திரள்வது போராடுவது என்பது ஒன்று. உதிரி தொழில்களின் தொழிலாளர்கள் தங்களுக்கு உரிமைகளை வென்றெடுப்பதில் முன்னவர்கள் உதவுவது என்பது வேறொன்று. முன்னவர்கள் பின்னவர்களுக்காக ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்காக முன்னவர்களும் தங்கள் உரிமைகளை இழந்து வருவதை நியாயப்படுத்தும் உங்கள் கருத்து அசிங்கமாக இருக்கிறது. தங்களின் ஒவியம் சுவர் என்ற ஒப்புமையும் சம்பந்தமில்லாதது.

    //நீண்ட கால விளைவுகளைப் பார்த்தால் தொழிலாளர்களுக்கு நஷ்டமே.//

    நீங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டவர் போல் பேசிவிட்டு இப்போது நீண்ட கால விளைவுகளைப் பற்றி பேசுகிறீர்கள். நீங்கள் மனம் வெதும்புவதற்கு கூறும் காரணம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இருக்கின்றன. ஒரு சில இடத்தில் தான் நீண்டகால வேலை நிறுத்தம் வருகிறது. இதற்கு தொழிலாளர்களை மட்டும் குறை சொல்வது ஒருதலைப் பட்சமானது. சங்கங்களின் தொழிலாளர்களின் கடமைகளில் என்ன குறை கண்டீர்கள். அரசு திவால் என்பதெல்லாம் மோசடிகள். ஒப்பந்த ஊதியம் முதலிய குறுக்கு வழிகள் முளைக்கட்டும். தெருக்களும் நீர்நிலைகளும் சாக்கடைகளாகி விட்டன. இனி காற்று தான் பாக்கி. அண்ணல் அம்பேத்தகர் சபித்ததைப் போல நம்மிடையே விசக்காற்று பரவும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

  9. UNIVERBYDDY:
    இரண்டு விஷயங்களைத் தொட்டிருக்கிறேன். உண்மை தான்.
    1. தொழிலாளர் நலம் என்ற பெயரில் அவர்களின் உரிமையை பாதுகாக்கக் கிளம்பி அவர்களை அதிகம் வளர்த்து விட்டது; ஆகவே தொழில் துவாங்குவதே வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளியது. கேரளாவில் அத்திமாரி போன்றவை, அரசு, அரசு நிறுவனங்களும், பெரிய தொழில்களும் யூனியனுக்கு பயந்த நிலை. இதன் பாதிப்புக்கள்.
    2. சங்கங்களுக்கு பயந்து ஒப்பந்த ஊதியம் என்று துவங்கி மிகக் குறைந்த ஊதியம் கொடுத்து முதலாளிகள் தப்பித்துக் கொள்கிறார்கள். பல மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆசிரியைகளுக்கு ஊதியம் பத்தாயிரத்திற்கு கீழ்; அரசு பள்ளியில் இருபது ஆயிரம். இவர்களின் நலத்தை கம்யூனிஸ்டு கட்சிகள் கையில் எடுக்கவில்லை;

    • Thumbi,

      //தொழிலாளர் நலம் என்ற பெயரில் அவர்களின் உரிமையை பாதுகாக்கக் கிளம்பி அவர்களை அதிகம் வளர்த்து விட்டது;//
      //தொழில் துவாங்குவதே வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளியது//

      இவை அருவருப்பான கருத்துக்கள்.

      அப்படியென்ன வளர்ந்துவிட்டார்கள். அப்படியே வளர்ந்தாலும் அதில் என்ன தவறு?
      அப்புறம், தொழிலாளர்களுக்கு வேலைக் கொடுக்கத்தான் தொழில் துவங்குகிறார்களா?

      //மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆசிரியைகளுக்கு ஊதியம் பத்தாயிரத்திற்கு கீழ்//

      மக்கள் ஓட்டுப் போடாத கம்யூனிஸ்ட் கட்சிகளால் என்ன செய்ய முடியும். சங்கங்களும் சரியில்லை என்கிறீர்கள். அரசு பள்ளிகளின் ஆசிரிய சங்கங்கள் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்காக உங்கள் வரைமுறைக்குள் என்ன செய்யமுடியும் என்று சொல்லுங்கள்.

      உங்கள் கருத்துக்கள் எவ்வளவு முரண்பாடுகளுடன் இருக்கின்றன என்பதை உணர முயற்சி செய்யுங்கள்.

  10. வடிவேலு ஒரு படத்துல பல கெட்டப்ல வருவாரு,ஆனா அவருதான்னு எல்லாரும் கண்டுபிடிச்சுருவாங்க.காரணம் கொண்டைய மறைக்காம விட்ருவாரு.நான் இதை பொதுவா சொன்னேன்.

  11. “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்”. நான் சொன்ன சுவர் தொழிற்சாலை. முதலாளியை சுவர் என்று குறிப்பிடவில்லை.

    நிரந்தர ஊழியரை சேர்த்துக்கொள்ளாமல், ஒப்பந்த ஊழியர்களை வைத்துக் கொண்டு வேலை வாங்குவது சரியல்ல என்று தான் சொல்லுகிறேன். ஆனால் நிரந்தர ஊழியர்களிடம் வேலை வாங்க முடியாமல் யூனியன்கள் செய்தன என்பதால் தான் முதலாளிகள்/நிர்வாகிகள் ஒப்பந்த ஊழியர்களை நாட வேண்டி வந்து என்று குற்றக்ம் சாட்டுகிறேன்.

    ஒரு சிறிய உதாரணம்: ஒரு பெரிய வங்கியின் தலைமை அலுவலகத்தில் அழகுக்காக நீரூற்று ஒன்று நிறுவினார்கள்; மாலை ஐந்தரை மணிக்கு திறப்பு; எல்லோரும் கை தட்டினார்கள்; தேநீர் வழங்கப்பட்டது; ஏழு மணி ஆயிற்று; நீர் சுற்றுவதை நிறுத்தவேண்டும்; மறு நாள் காலை மீண்டும் ஆன் செய்ய வேண்டும் என்று நினைத்து, சுற்று முற்றும் பார்த்தால் மின் பணியாளர் இல்லை; சுற்றி இருந்த அனைவரும் அதை off செய்வதற்கு தமக்கு தெரியாது; அவர் தான் வர வேண்டும் என்றனர்; மின் தொழிலாளர் வீட்டில் இருந்து வரவழைக்கப்பட்டார்; வரப் போக ஆட்டோவுக்கு, மற்றும் ஓவர்டைம் கொடுத்தால் வருவேன் என்று சொல்லி வந்தார்; மறு நாளில் இருந்து அவர் பணிக்கு வரும் நேரங்களில் ஆன் செய்யப்படும்; அவர் விடுமுறை என்றால் நீரூற்று இல்லை. வேறு ஒரு பணியாளரும், ப்யூனோ, செக்யூரிட்டி அலுவலர்களோ அந்த சுவிட்ச் போட அணைக்க மறுத்துவிட்டனர். இதே இடத்தில் ஒப்பந்த ஊழியராக இருந்தால் நீர் ஊற்றுவதும், ஆன் ஆப் செய்வதும் ஒன்பதிலிருந்து ஆறு மணி வரை என்று வந்திருப்பார்.
    அதே போல், மின் நகல்கள் எடுப்பவர் பத்து நகல்களைக் கூட விநியோகம் செய்ய மாட்டார்; அதற்கு வேறு ஒருவர் வேண்டும். மின் நகல் எடுப்பவர் விநியோகம் செய்யமாட்டார். இவர் அந்த பணியைச் செய்ய மாட்டார் என்று குரல் கொடுத்தது யூனியன்.

    இவ்வாறு பல நிலைகளில் நிரந்தர ஊழியர் மூவர் வேண்டும் என்ற இடங்களில் ஒப்பந்த ஊழியர் ஒருவரை வைத்து பணி முடிந்து விடும். . இது போல் இன்னும் நூறு உதாரணங்கள் நினைவுக்கு வரும்.

    ஆகவே தான் சொல்கிறேன், யூனியன்கள் தொழிலாளர்களின் நலத்தை பேணுவதற்காகத் துவங்கி ஒரு கட்டத்தில் அராஜகம் செய்யத் துவங்கியதால் ஒப்பந்த ஊழியர்களை கொண்டுவராவிட்டால் பணி நடக்காது என்ற நிலை வந்தது.

    • தும்பி,

      //அழகுக்காக நீரூற்று//

      நான் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன். இந்த நீரூற்று தேவையற்ற ஒன்று. அதற்காக ஒரு மோட்டர், மின்சக்தி, etc. இவையெல்லாம் கூடுதல் தேவைகள். நமது இயற்கையின் சுமைகளை கூட்டும் தேவைகள்.
      அப்புறம், அந்த நீரூற்று சிலரின் மூடநம்பிக்கையினால் எழுந்த தேவையினால் நிருவப்பட்டதாகக் கூட இருக்கலாம். மேலும் அது எத்தனை நாளுக்கு பார்ப்பவர்களின் கண்களில் அழகாக இருக்கும்?

      மின் தொழிலாளர் வீட்டிற்கு போன் போட்ட போது அதை OFF செய்யும் பொத்தான் எங்கே இருக்கிறதென்று கேட்டு அதை அணைத்திருந்தாலே போதும். ஆனால் அது நடக்கவில்லை யெனும் போது சுற்றி இருந்த அனைவரின் தரத்தைப் பற்றித் தான் நாம் பேசவேண்டும். அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அது ‘பெரிய வங்கியின் தலைமை அலுவலகம்’ வேறு. நமது நாட்டில் ‘பெரிய இடங்கள்’ இப்படித்தான் இருக்கின்றன என்பது பொதுவானது தான் என்றாலும் இது எல்லை மீறியதாக இருக்கிறது.

      Electrician விடுப்பில் உள்ளபோது, ப்யூனோ, செக்யூரிட்டி அலுவலர்களோ மட்டும் ஏன் அதை ON/OFF செய்ய வேண்டும்? அந்த அழகை விரும்பியவர்கள் யார் வேண்டுமானாலும் அதை செய்யலாமே? அப்படி அவர்கள் செய்ய முன் வராததால் அங்கே வேலை செய்த எல்லோரையும் தூக்கிவிட்டு ஒப்பந்த உழியர்களை போட்டிருந்தால் நீங்கள் சொல்லும் ஒப்பந்த உழியர்களுக்கான நியாயத்தை நான் ஏற்றுக்கொண்டிருப்பேன்.

      //நிரந்தர ஊழியர் மூவர் வேண்டும்//

      போஸ்ட்டை சரியாக வரையரை செய்யாததினால் வந்த விளைவு இது. மின் நகல்கள் எடுப்பவர் நகல்களை விநியோகம் செய்யக் கிளம்பிவிட்டால் அவரில்லாத சமயத்தில் நகலெடுக்க வருபவர்கள் என்ன நினைப்பார்கள். இது போன்ற உதிரி வேலைகளை செய்ய ஒரு சிலரை அமர்த்தினாலே இது போன்ற ஆயிரம் பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். எண்ணங்களின் வறுமை தான் நம் நாட்டின் சாபக்கேடு.

      • //
        இந்த நீரூற்று தேவையற்ற ஒன்று//

        அது விவாதப் பொருள் அல்ல.

        //Electrician விடுப்பில் உள்ளபோது, ப்யூனோ, செக்யூரிட்டி அலுவலர்களோ மட்டும் ஏன் அதை ON/OFF செய்ய வேண்டும்? அந்த அழகை விரும்பியவர்கள் யார் வேண்டுமானாலும் அதை செய்யலாமே//

        அதாவது அந்த வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி அந்த சுவிட்சை போட/அணைக்க வேண்டும். அல்லது ஒரு அதிகாரி செய்ய வேண்டும். பணியாளர் ஒருவரும் செய்ய மாட்டார்கள்; தங்கள் பணிக்கு அமர்த்தும் ஆணையில் அது இல்லை என்று மறுத்துவிடுவார்.

        //நமது நாட்டில் ‘பெரிய இடங்கள்’ இப்படித்தான் இருக்கின்றன என்பது பொதுவானது தான் என்றாலும் இது எல்லை மீறியதாக இருக்கிறது.//
        எல்லை மீறல் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி. இது போல் எல்லை மீறல்கள் ஒன்றா இரண்டா? அநேகம்.

        • தும்பி,

          //அது விவாதப் பொருள் அல்ல.//

          அந்த ஊற்றை அமைப்பதற்கு முன் அது தேவையா இல்லையா அதனால் பயனடைவது யார் அதனை பராமரிப்பதற்கான கூடுதல் வேலையை யாரெல்லாம் பகிரந்து கொள்வது என்பதை விவாதப்படுத்தியிருந்தால் உங்களின் முந்தய பின்னூட்டத்திற்கு தேவையே எழுந்திருக்காது. ஒரு பொதுத்தேவையில்லாத ஒன்றை ஒரு சிலர் கூடி செய்துவிட்டு அதை வைத்து மற்றவர்களின் ஆழம் பார்த்து விட்டு இப்பொழுது அது விவாதப் பொருளில்லை என்று கூறுவது நன்றாகயில்லை.

          //ஒரு அதிகாரி செய்ய வேண்டும். பணியாளர் ஒருவரும் செய்ய மாட்டார்கள்//

          எல்லோரும் பணியாளர்கள் என்று சொல்லாமல் இங்கே அதிகாரி பணியாளர் என்று பிரித்துப் பார்க்க வேண்டிய தேவையென்ன? அழகுக்காக வைக்கப்பட்ட ஊற்றை ON/OFF செய்வதில் அதிகாரி என்ன பணியாளர் என்ன. ப்யூன் அல்லது காவலாளி தான் அதை செய்ய வேண்டும் என்பது எந்த விதத்தில் சரி. ப்யூன்களும் காவலாளிகளுமா அதை கேட்டார்கள்? ரிசப்ஷநிஸ்ட் செய்யலாமே. மற்ற பணியாளர்களும் செய்யலாமே. ப்யூன் அல்லது காவலாளி தான் அதை செய்ய வேண்டும் என்றால் அதை அவர்கள் மறுத்ததே சரி.

          //எல்லை மீறல் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி//.

          நீங்கள் எதிர்மறையாக புரிந்து கொண்டீர்கள். நமது நாட்டில் ‘பெரிய இடங்களில்’ பொதுவாக உள்ள ‘common sense’ பற்றாக்குறையைத்தான் /‘பெரிய இடங்கள்’ இப்படித்தான் இருக்கின்றன / என்று கூறினேன். போனிலேயே எலெக்ட்ரீசியனிடம் அந்த ஊற்றை நிறுத்துவது எப்படியென்று கேட்டு அதை செய்யவதற்குக்கூட ‘அங்கே இருந்தவர்களுக்கு’ தோன்றவில்லையே என்பதைத்தான் அந்த ‘பெரிய வங்கி’யின் நிலை இன்னும் அளவு கடந்ததாக இருக்கிறதே என்று வியந்தேன்.

  12. Today”s Dinamani carried the press conference news of R.C.Bhargava,CEO of Maruthi Suzuki.He employs 6500 people as contract labor out of 19000 and another 1100 are under the category of apprentices in the Manezar unit.His verbatim press statement is furnished below with my comments within brackets.
    “We select both permanent as well as the contract workers with the same qualifications and other criteria.Both are provided with identical training.”(But the contract worker with one-third salary and no PF/ESI/Medical Aid facilities.Rajasthan Govt wanted that contract worker should not claim permanent employment till 240 days by amending present limit of 90 days)
    “When there is slackening in the working of the unit,or loss,the persons who joined very recently will lose their jobs.There is no partiality in this matter.”(Partiality was already shown when he is in employment)
    “At the same time,when there is increase in demand,the person who lost the job would be taken back.When a permanent worker retires or leaves his job,only a contract worker fills the vacancy”(So you are taking back the retrenched worker?Is it true?Or this fact is only for the consumption of the press reporters?What is so great in filling the vacancy by contract worker?It is beneficial to you also?)
    “Our country should have practical and flexible labor laws”(Already moves are made in Rajasthan.Whether existing laws are enforced strictly?)
    “At the time of retrenchment,the retrenched workers should be provided with a portion of wages to assist them”(Who prevents him from doing so?)
    “There will not be full scale production round the year.If all the work force is of permanent category,they will not have work when the sales go down”(It is hypothetical.Whether such conditions happened earlier?Then what work your production planners are doing?)
    “Hence,a certain percentage of workers should remain as contract workers.Our laws should be flexible on this matter”(contract workers should remain casual labor eternally?)
    “For multi various reasons when the lockout is declared,why we should get the permission of the govt?If a unit can not be run,there should be a provision to provide compensation to workers and to shut the unit”(Under your multi various reasons,will mis-management,squandering of resources like Mallya are included? Who will decide “fair”compensation?According to you,you want to leave the workers in lurch without any body questioning you)
    It is stated that Maruthi does not engage workers on daily wage basis from 2012.

  13. நன்றி திரு .சூரியன் அவர்களுக்கு.

    ஒப்பந்தத் தொழிலாளர்களை அடிமை போல நடத்தி சரியான ஊதியமும், நிரந்தர நீண்ட கால வசதிகள் ஓய்வூதியம் போன்றவை தருவதில்லை என்று நானும் சொல்லியுள்ளேன். பதிவும் சொல்கிறது. என் புகார்கள் இரண்டு: 1. நிரந்தர ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் மிக அதிகமாக வித்தியாசம் இருப்பதால் முதலாளிகள் ஒப்பந்த ஊதியத்தை நாடுகிறார்கள்; நிரந்தர ஊழியர்களுக்கு யூனியன் அளவுக்கு மீறிய சுதந்திரத்தையும்,கடமையைச் செய்யாவிட்டாலும் பணி உண்டு என்ற அளவுக்கு ஏற்றிவிட்டது ஒரு காரணம் என்று சொல்கிறேன். மாருதி கம்பெனி சட்டத்தை மீறி நிரந்தர தொழிலாளர்களுக்கும் நீதி கிடைக்கச் செய்வதில்லை என்று சூரியன் சுட்டிக்காட்டி உள்ளார். சட்டத்தை மீறும்போது தொழிலாளர் நல அலுவல்களர்களுக்கு கையூட்டு கொடுத்து சரிகட்டி அநியாயம் புரிவது கண்கூடு.(அந்த அரசு ஊழியர்களையும் காப்பாற்றுவது அவர்கள் யூனியன் தான்). என் அழுகையே ஒப்பந்த ஊழியர்களின் நலம் காக்க யூனியன்கள் , அரசியல் கட்சிகள் (கம்யூனிஸ்டுகள் உள்பட முயலவில்லை என்பது தான். 2. நிரந்தர ஊழியர், ஒப்பந்த ஊழியர் இரண்டுக்கும் இடையே உள்ள செலவின வேறுபாட்டைக் வேண்டும். ஒரு புது சட்டவிதி உருவாகட்டும். ஒரு புது முயற்சி தேவை. இந்த அரசு செய்ய முயலும் என்று நம்புவோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க