privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கோடீசுவரக் கொள்ளையர்கள் !

கோடீசுவரக் கொள்ளையர்கள் !

-

முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல், திலிப் சாங்வி, அஸிம் பிரேம்ஜி, பலோன்ஜி ஷபர்ஜி மிஸ்திரி: கோடீசுவரக் கொள்ளையர்கள்!

1990-களில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு தரகு முதலாளிகள்தான் உலகின் மிகப் பெரும் கோடீசுவரர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். இப்பொழுது அந்த எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள ‘வளர்ச்சி’ 46. அன்று 32 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்த அக்கோடீசுவர முதலாளிகளின் சொத்து மதிப்பு, இன்று 17,630 கோடி டாலர்களாக விசுவரூபம் எடுத்திருக்கிறது. இந்த 46 கோடீசுவர முதலாளிகளுள் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, ஆர்சிலர் ஸ்டீல் நிறுவனத்தின் பங்குதாரர் லட்சுமி மிட்டல், சன் ஃபார்மா அதிபர் திலிப் சாங்வி, விப்ரோ நிறுவன அதிபர் அஸிம் பிரேம்ஜி, டாடா சன்ஸ் நிறுவனப் பங்குதாரர் பலோன்ஜி ஷபர்ஜி மிஸ்திரி ஆகிய ஐந்து பெரும் தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு மட்டும் 5,23,897 கோடி ரூபாயாகும். இந்தியாவைச் சேர்ந்த பெரும் கோடீசுவரர்களின் மொத்த சொத்து மதிப்பில் சரிபாதி இந்த ஐந்து தரகு முதலாளிகளிடம் குவிந்திருப்பதாக (8,550 கோடி அமெரிக்க டாலர்கள்) வெல்த் எக்ஸ் என்ற நிறுவனம் குறிப்பிடுகிறது.

10-poorஏறத்தாழ 110 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில், வெறும் 5 பேர் அடைந்திருக்கும் ‘வளர்ச்சி’ மலைக்கத்தக்கதாக இருக்கும்பொழுது கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கையோ பேரழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

  • இந்தியாவின் மொத்த மக்கட்தொகையில் ஏறத்தாழ 50 சதவீதம் பேர் (64 கோடி பேர்) வறுமையின் நிழலில் வாழ்கின்றனர்.
  • இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 5,000 குழந்தைகள் சத்தான உணவு கிடைக்காமல், நோய் தாக்குண்டு இறந்து போகின்றனர். உலகின் மொத்தமுள்ள நோஞ்சான் குழந்தைகளுள் 46 சதவீதக் குழந்தைகள் இந்தியக் குழந்தைகளாகும்.
  • கொடிய பட்டினியால் தாக்குண்டுள்ள 79 நாடுகளில் இந்தியா 65-ஆவது இடத்தில் இருக்கிறது.
  • இந்திய விவசாயிகளுள் 49 சதவீத விவசாயக் குடும்பங்கள் கடன் பிடியில் சிக்குண்டு உள்ளன. இந்தக் குடும்பங்களின் சராசரி கடன் சுமை தலா 25,891 ரூபாய். கடந்த இருபது ஆண்டுகளில் கடனை அடைக்க வழியின்றித் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 2,70,490.
  • தனியார்மயத்திற்குப் பிறகு, இந்தியாவைச் சேர்ந்த தரகு முதலாளித்துவ நிறுவனங்களின் அதிபர்கள், அதிகாரிகளின் ஆண்டு வருமானம் 30,000 மடங்கு அதிகரித்திருக்கும்பொழுது, இந்தியத் தொழிலாளர்களின் கூலி 22 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. அதேபொழுதில், தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் – அதாவது தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்பட்டு சுரண்டப்படும் வேகம் 84 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

இவை போன்ற மலைக்கும் மடுவிற்குமான ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த புள்ளிவிவரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தப் புள்ளிவிவரங்களைக் கூர்ந்து கவனித்தால் ஒரு விசயம் நிச்சயம் புலப்படும். கோடிக்கணக்கான விவசாயிகளின், தொழிலாளர்களின், பிற உழைக்கும் மக்களின் உழைப்பைக் கொடூரமாகச் சுரண்டி, வாழ்வாதாரங்களை அவர்களிடமிருந்து பிடுங்கி, சமூக அடுக்கின் உச்சியில் இருக்கும் மேட்டுக்குடி கும்பலிடம் கொண்டுபோய் சேர்த்ததன் விளைவாகத்தான் 5 பெரும் தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு 5,23,897 கோடி ரூபாயாக வீங்கிப் போயிருக்கிறது.

இந்த நிலையில்தான், புதிதாகப் பதவியேற்றுள்ள மோடி அரசு ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கு மானியங்களை ஒழிக்க வேண்டுமென்றும், தொழிலாளர் நலச் சட்டத்தையும் புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தையும் திருத்த வேண்டுமென்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் சொத்து வரி உள்ளிட்டவற்றை அறவே நீக்க வேண்டுமென்றும் கூறி வருகிறது. மோடி அரசின் இந்த வளர்ச்சிப் பாதை இந்திய உழைக்கும் மக்களுக்குப் பேரழிவுப் பாதையேயாகும்.
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________

  1. என்ன முதலாளித்துவ ஆதரவாளர் அதியமானை சில நாட்க்களாக காணவில்லை. ஒருவேளை அவர் செய்துவரும் வியாபாரத்துக்கு போட்டியா பெரும் முதலாளி யாராவது போட்டியாக வந்துவிட்டாரா என்று தெரியவில்லை

  2. சில நாட்களாக அல்ல, பல காலமாக ஆளை இங்கு காணவில்லை தான் !! (இப்ப முகநூலில் மட்டும் தான் ‘விவாதிக்கிறேன்’). சரி, இந்த ‘பதிவு’ போல முன்பு வெளியான ஒரு பதிவுக்கு ஒரே பதில், இந்த பழைய பதிவு (2007) தான் :

    http://swaminomics.org/towards-egalitarianism-of-opportunity/
    Towards egalitarianism of opportunity

    The rise of ever more billionaires causes much anguish at growing inequalities. Forbes magazine says that India has produced 14 additional billionaires in the last year, taking its total to 36. This is more than the 24 billionaires in Japan, Asia’s richest country. The Left Front will gleefully declare that globalisation has made the rich richer and the poor poorer.

    I too find it depressing that a billion people round the world remain mired in poverty. But I cheer those self-made men and women, from families of modest means, who have nevertheless clawed their way to the top of the wealth ladder through sheer talent, perseverance and guts. Forbes reports that no less than 60% of the world’s billionaires are self-made. This is not a sign of the rich getting richer. It is egalitarianism by other means. This is not socialist egalitarianism which seeks equality of outcome for all. But it is a step toward liberal egalitarianism, which seeks equality of opportunity.

    We are seeing an explosion of billionaires in countries that traditionally had none, and from families of modest means. No longer is wealth limited to a handful of ultra-rich white families. The talented are now overtaking old wealth, both within their own countries and in the world.

    Most striking is the weak showing of old wealth among the Indian billionaires. Of the big business families in 1947, the only ones in the latest Forbes list are Kumar Birla, Indu Jain (of Bennet Coleman and Co) and Pallonji Mistry. Of the business houses that became big names by the 1970s, the Forbes list includes Adi Godrej, Vijay Mallya, Rahul Bajaj and Keshub Mahindra. The 1980s saw the rise of the Ambanis, Ruias, Venugopal Dhoot and Baba Kalyani of Bharat Forge. Others in the Forbes list blossomed only after economic liberalization in the 1990s.

    Socialists will deplore the rise of so many billionaires in the midst of widespread poverty. But amiri hatao does not lead to garibi hatao, as Indira Gandhi demonstrated in the 1970s. I say that 14 new billionaires is not enough. I would like to see a million new billionaires, based entirely on talent. That will be egalitarianism of opportunity.

  3. ///தனியார்மயத்திற்குப் பிறகு, இந்தியாவைச் சேர்ந்த தரகு முதலாளித்துவ நிறுவனங்களின் அதிபர்கள், அதிகாரிகளின் ஆண்டு வருமானம் 30,000 மடங்கு அதிகரித்திருக்கும்பொழுது, இந்தியத் தொழிலாளர்களின் கூலி 22 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. அதேபொழுதில், தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் – அதாவது தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்பட்டு சுரண்டப்படும் வேகம் 84 சதவீதம் அதிகரித்திருக்கிறது.////

    இதை ஆதாரத்துடன் நிருபிக்கவும். முதலாவது தகவல் உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இரண்டாவது, மூன்றாவது தகவல்களை நம்பவில்லை. இது போன்ற பொய் தகவல்கள், மிகைபடுத்துதல்கள்,out of context arguments,அதிகம் இங்கு இருப்பதால் தான் வினவு தளத்தை சீரியசா எடுத்து கொள்பவர்களின் விகிதம் குறைகிறது. தாரளமயமாக்கலுக்கு பின் இந்தியாவில் வறுமை , வேலையின்மை வேகமாக குறைந்து வருகிறது என்ற ‘உண்மையை’ இங்கு விவாதித்து தீராத. real wages have increased much faster than inflation. அமைப்புசாரா தொழிலாளர்களின் விகிதம் தான் என்றும் இந்தியாவில் மிக அதிகம். இதை கணக்கில் கொள்ளாமல் இஸ்டத்துக்கு பேசுவர்களிடம் ஏன் வீணாக ‘விவாதித்து’…….. எனவே.

    • நீங்கள் முதலாளி என்றாலும் , முதலாளித்துவ ஆதரவாளர் என்றாலும் அதில் தவறு இல்லை அதியமான். இந்தியாவில் முதலாளித்துவம் வளராமல் போனால் ,ஆப்ரிக்கவின் இன்றைய நைஜர்,நேற்றைய ருவாண்டா நாடுகளை போல இந்தியாவும் இருண்டு போய் உள் இனவாத,மத மோதலில் இறங்கி சிராழிந்து போகுமல்லவா ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க