privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்காஷ்மீருக்கு உதவினால் ஆர்.எஸ்.எஸ் அடித்து நொறுக்கும்

காஷ்மீருக்கு உதவினால் ஆர்.எஸ்.எஸ் அடித்து நொறுக்கும்

-

த்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைனில் இருக்கிறது உலகின் பழமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான விக்ரம் பல்கலைக்கழகம். அதன் தற்போதைய துணை வேந்தராக இருக்கும் ஜவஹர் லால் கவுல் கடந்த திங்களன்று (14/09/2014) விஷ்வ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தள குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார். துணை வேந்தரது அலுவலகத்தையும் துவம்சமாக்கியுள்ளனர், காவி பயங்கரவாதிகள். இதன் விளைவாக மாரடைப்புக்குள்ளான ஜவஹர் லால் கவுலை தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று காப்பாற்றியுள்ளார்கள் பல்கலைக்கழக ஊழியர்கள்.

இந்து மதவெறியர்களால் அடித்து நொறுக்கப்பட்ட அலுவலகம்.
இந்து மதவெறியர்களால் அடித்து நொறுக்கப்பட்ட அலுவலகம்.

விக்ரம் பல்கலைக்கழகத்தில் பயிலும் காஷ்மீரின் பேய் மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுமாறு பேராசிரியர்களையும், ஊழியர்களையும், மாணவர்களையும் ஜவகர் லால் கவுல் கேட்டுக்கொண்டது தான் விஷ்வ இந்து பரிசத்தை துணை வேந்தருக்கு எதிராக வன்முறையில் இறங்க தூண்டியிருக்கிறது.  அங்கே தங்கிப் படிக்கும் காஷ்மீர் மாணவர்களுக்கு மத்தியப் பிரதேச அரசு கல்வி மற்றும் விடுதி கட்டணத்தை வசூலிக்க வேண்டாம் என்றும் அவர் கோரியிருந்தார். இந்த பல்கலையில் மட்டும் மொத்தம் 100 காஷ்மீர் மாணவர்கள் பயில்கின்றனர்.

துணை வேந்தருக்கு எதிராக ஆவேசம் காட்டிய இந்துத்துவ வானரங்கள், ‘உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு மற்றும் குஜராத் பூகம்பம் போன்றவற்றின் போது ஏன் ஜவகர்லால் கவுல் வாய் திறக்கவில்லை’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதன் பொருள் என்ன? இந்த இரண்டும் ‘இந்துக்களின்’ சோகமாம். காஷ்மீர் வெள்ளப் பெருக்கு மட்டும் முசுலீமின் சோகமாம். அட முட்டாள்களா, அப்படி எனில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று எதற்கு வாதிடுகிறீர்கள்? ஒரு இயற்கைப் பேரிடரிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமென்று சொல்வது குற்றமா?

தங்களை இவ்வளவு தெளிவாக அடையாளம் காட்டிய பின்னரும் இந்த குற்றவாளிகளை முதலில் தப்பவிட்டு இப்போது இருவரை கைது செய்திருக்கிறது,  பாரதிய ஜனதா ஆளும் மாநிலத்தின் போலீஸ்.

இதுபற்றி துணை வேந்தர் பேரா. ஜவகர்லால் குறிப்பிடுகையில் தன்னை பாதிக்கப்பட்ட மாணவர்கள் நேரில் சந்தித்து தங்கள் துயரை விளக்கி உதவ வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையிலேயே தான் இதர மாணவர்களை காஷ்மீர் மாணவர்களுக்கு நேசக்கரம் நீட்ட கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஜவஹர்லால் கவுல் தாக்கப்பட்டது இந்த குறிப்பிட்ட பிரச்சினையில் ஆத்திரமடைந்த காவிகளின் வெறிச்செயல் என்று தனித்து கருதக்கூடிய ஒன்றல்ல. ம.பியில் பயிலும் காஷ்மீர் மாணவர்களுக்கு திட்டமிட்ட ரீதியில் தொடர்ச்சியான இன்னல்களை அளித்து வந்துள்ளது ஆர்.எஸ்.எஸின் ஏ.பி.வி.பி. சொந்த மாநிலத்தில் படிக்க இயலாத காஷ்மீர் இளைஞர்கள் உயர்கல்வி கற்க இந்தியாவின் பிற மாநிலங்களையே அதிகம் சார்ந்து இருக்கின்றனர்.

காவி வெறியர்களின் வன்முறை வெறியாட்டம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

2011-ல் காஷ்மீரிகள் தொடர்பாக ஒரு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தது ம.பி. அரசு. அதில், புலம்பெயர் காஷ்மீரிகள் மற்றும் காஷ்மீர் மாணவர்களுக்கு என்று வழங்கப்பட்டிருந்த கல்வி உரிமையை சற்றே மாற்றி புலம்பெயர் காஷ்மீரிகளுக்கு மட்டும் என்று கொண்டு வந்தது. அதன் படி காஷ்மீர் பண்டிட்கள் மட்டுமே சலுகை பெற முடியும் என்ற நிலையை மத்திய பிரதேச பா.ஜ.க அரசு உருவாக்கியது. இது மட்டுமல்லாமல், ம.பியில் பயிலும் காஷ்மீர் மாணவர்களின் எண்ணிக்கையை கையில் வைத்துக் கொண்டு வெறியை கிளப்பி வருகிறது, ஏ.பி.வி.பி.

பேராசிரியர் கவுல்
பேராசிரியர் கவுல்

மத்திய பிரதேசத்தில் பேராசிரியர்கள் தாக்கப்படுவதும் இது முதல்முறை அல்ல. 2006-ம் ஆண்டு ஹெச்.எஸ் சபர்வால் எனும் கல்லூரி ஆசிரியர் ஏ.பி.வி.பியால் அடித்தே கொல்லப்பட்டார். 2011-ம் வருடம் தாக்குர் என்ற பேராசியர் கொடூரமாக தாக்கப்பட்டு பின்னர் ஒரு வாரம் கழித்து உயிரிழந்தார். 2007-ல் ஒரு ஆசிரியர் தனது மூன்று மகள்களின் கண்ணெதிரே கடுமையாக தாக்கப்பட்டார்.

இவை போக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை ஆதரித்தார்கள் என்று வட இந்தியாவில் பயிலும் பல காஷ்மீர் மாணவர்கள் பல்கலை நிர்வாகங்கள் மூலமாகவே துரத்தப்பட்டிருக்கின்றனர். இது குறித்து வினவில் முன்னர் விரிவாக வெளியிட்டிருக்கிறோம்.

தற்போது இயற்கை பேரிடர் நிவாரணத்திற்கு உதவுவதே குற்றமென்று ஆக்கப்பட்டிருக்கிறது. ஆபத்திலிருக்கும் மனிதர்களுக்கு உதவுவது ஒரு அடிப்படையான மானிடப் பண்பு. சங்க வானரக் கூட்டத்திற்கு அதுவே வெறுப்பதற்கான அடிப்படை கூறு. இந்துத்துவத்தின் கட்டமைப்பே இத்தகைய மானிட விரோத வெறுப்புணர்வால்தான் கட்டப்பட்டிருக்கிறது.

ஒரு பல்கலைக் கழகத்திலேயே இப்படி நடக்குமென்றால் காஷ்மீரில் இந்தியா ராணுவத்தால் என்னென்ன நடந்திருக்குமென்று கற்பனை செய்து பாருங்கள்!

  1. காஷ்மீருக்கு உதவினால் ஆர்.எஸ்.எஸ் அடித்து நொறுக்கும்

    அப்படி பாத்த முதல மோடியை அடிக்கானும் அவர்தன் பல அயிரம் கோடியை (வாய்யால்) கொடுத்து உதவினார் (100 கார்ல 1000000000000000 பெயரை காப்பத்திய சுப்பர் ஸ்டார்

  2. காஷ்மீர் மக்கள் ராணுவத்தைப் பற்றிய தங்கள் கருத்தை வெகுவாக மாற்றிக் கொண்டு விட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ராணுவம் உணவு மற்றும் தண்ணீர் வினியோகத்தில் தங்கள் குடும்பத்திற்கு இரண்டாம் இடம் கொடுத்ததாகவும் தெரிகிறது.

    • காலாவதியான தண்ணீர் மற்றும் பிஸ்கட் பொட்டலங்கள் (expiry date 2008) வழங்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

  3. //பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை ஆதரித்தார்கள் என்று வட இந்தியாவில் பயிலும் பல காஷ்மீர் மாணவர்கள் பல்கலை நிர்வாகங்கள் மூலமாகவே துரத்தப்பட்டிருக்கின்றனர்//

    அப்புறம் இந்த நாட்டுல இருந்து கொண்டு, இந்த நாட்டு அரசாங்கம் தரும் சலுகைகளை பயன்படுத்திக் காெண்டு எதிரிநாட்டுக்கு ஆதரவாக இருந்தால் துரத்தாமல் என்ன செய்வார்கள். இவர்களாவது பரவாயில்லை துரத்திவிட்டார்கள் இதேபோல் கம்யூனிச சீனாவில் திபெத்துக்கு ஆதரவாக யாராவது புரட்சி செய்திருந்தால், அந்த புரட்சியாளர்கள் சீன அரசாங்கத்தால் புதைக்கப்பட்டிருப்பார்கள்.

    • கார்த்தி,

      முதலில் உங்களை போன்ற படித்தவர்களே பாமரத்தனமாக பேசினால் , பின்பு பாமரர்களுக்கு எந்தவகையான விளக்கத்தை சொல்லி புரியவைக்கமுடியும்.
      முதலில் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு அதனை விளையாட்டாக பார்க்கும் மனப்பான்மை இல்லாமல் எஅதோ இந்தியாவுக்கும் மற்றைய நாடுகளுக்குமான போராக பார்க்க வேண்டிய கட்டாயம் எதற்கு வந்தது? மேலும் நிச்சயமாக நல்ல விளையாடும் எந்த ஒரு அணிக்கும் அல்லது ஒரு தனி நபருக்கும் அதற்க்கான பரிசாக பாராட்டுக்களை வாழ்த்துக்களை தெரிவிப்பதில் கூட சம்பந்தப்பட்ட அணி அல்லது அணிவீரர் எந்தனாட்டை சேர்ந்தவர் என்று பார்க்கவேண்டும் என்ற சிந்தனை உடையவரா நீங்கள்?
      அப்படியான ஒரு சிந்தனை அனைத்து மக்களிடமும் ஊடுரவ ஆரம்பித்தால் பின்பு சாதனையாலார்களின் வாழ்வில் வேதனைதான் மிஞ்சும். ஏனனில் சாதனை படைக்கும் ஒவ்வொரு ஆட்டக்காரர்களுக்கும் கிடைக்கக்கூடிய முதல் அங்கீகாரமே பார்வையாளர்களால் கவ்ரவிக்கப்படுவதுதான் , இதில் போய் நாட்டுப்பற்று தேசப்பற்று என்ற நோக்கில் நாம் சிந்திக்கவேண்டியது இல்லை. இன்று உலக அரங்கில் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் என்றால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் அதற்க்கு காரணம் அவரின் தனிப்பட்ட விளையாட்டு திறன் தான். அதுபோன்றே தோனியை சமிபத்தில் பெரும்பான்மையானருக்கு பிடிக்கக்காரணம் டீமை(டீம்) கேப்டன் என்ற முறையில் வெற்றிப்பாதைக்கு எடுத்துச்செல்வதுதான்.எனவே அந்தந்த வீரர்களின் , அணிகளின் சாதனையை வாழ்த்துவதில் புகல்வதில் என்ன குற்றத்தை நாம் கற்பிக்க முடியும் தோழரே?

  4. பதிவிற்கு நன்றி!
    பிராமணன் மட்டுமே இந்தியன் என்றால், எனக்கு நீ தலைவன் இல்லை என்று சொல்ல யார் தயாராக இருக்கிறார்கள்?
    அவன் காலை தொட்டு அதன் தடத்திலேயே வாழ்க்கை நடத்தும் நமக்கு இது தான் நடக்கும்…
    காஷ்மீர் முதல் கருவாடு வரை அவனுக்கு துர்நாற்றம் தான்….
    கோச்சடையன் படத்தில் வரும் அடிமைகளை முன் நிறுத்தி புரியும் போர் உத்தி தான் இங்கும் நடக்கிறது…
    நாமெல்லாம் அவனுக்கு அரண்……
    அவனின் ஆட்டம் எப்படி முடிவுக்கு வரும்…..?

  5. //முதலில் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு…………..//

    சாதாரண விளையாட்டு அல்ல ! கோடி கோடியாய் சூதாட்ட பணம் புழங்கும் விளையாட்டு! இதில் தேசபக்தி பசப்பல் வேறு! பாகிச்தானுடன் இவர்கள் ஆடலாமாம், ஆனால் பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடினால் பாராட்டக்கூடாதாம்! கிரிகெட்டை ஒரு கும்பல் ஆக்கிரமித்து, பங்களாக்கள், கார்கள் என்று பரிசும் வரிச்சலுகையும் அனுபவிக்க, இன்னொரு புறம் ஆல் இன்டிய ரேடியோ புகழ் கும்பல் மட்டுமே பதம பட்டங்களை குவிக்கிறது! பணத்துக்காக ஆடும் இந்த தேவரடியாரன்னவர்களுக்கு பதம ஷ்ரீ எதற்கு, பாராளுமன்ற பதவி எதற்கு? அந்தக்காலத்தில், அரசவை முக்கியஸ்தர்களை மகிழ்விக்க ஆஸ்தான கலைஞர்கள் அமர்த்தப்பட்டனர்! இப்போதைய கலை மாமணி, பத்மஷ்ரீ, பூஷண பட்டங்கள் என்ன மக்கட்சேவைக்கு தருகிரார்கள்? ஒரு வேளை ரகஸ்ய சேவை ஏதேனும் செய்துவருகிரார்களா? பிழைப்பு வாதிகளே பக்தியைபற்றி பேசுகிறார்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க