privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயா குற்றவாளியில்லை – துக்ளக் சோ தீர்ப்பு !

ஜெயா குற்றவாளியில்லை – துக்ளக் சோ தீர்ப்பு !

-

தீர்ப்பு இவ்வளவு கடுமையாக இருக்குமென்று சோ எதிர்பார்க்கவில்லையாம். ஆனால் இந்த எதிர்பார்ப்பு திமுகவிடம் ஏன் இருந்தது? சந்தேகப்படும் அவர், எல் டிபிள் யூ முறையீட்டில் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு கொடுக்கும் போது, அரசியலில் போயஸ் தோட்டத்து ராணிக்கு கொடுக்கப்படவில்லை என்றால் அதில் ஏதோ சூழ்ச்சி இருக்குமென்கிறார். முக்கியமாக சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் ஜெயா என்பது அவரது நம்பிக்கை மட்டுமல்ல, மற்றவர் நம்பியாக வேண்டிய ஆணை!

கோடிகளை சம்பளமாக வாங்கிய சட்டம் படித்த மேதைகள் உதவியால் வாய்தா மேல் வாய்தாவாக 18 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கை ஏதோ ஜெயா தரப்பு உண்மைக்கும், திமுக தரப்பு பொய்மைக்குமான நீதிப் போராட்டம் என்று சித்தரிக்கிறார் சோ. வெண்மணி படுகொலை வழக்கில் “கோபால கிருஷ்ண நாயடு போன்ற மேன்மக்கள் குற்றம் இழைத்திருக்மாட்டார்கள்” என்று சாட்சியை பார்க்காமல், ஆதிக்க சாதி ‘கௌரவ’மாக பார்த்த நீதிபதிகளின் நாட்டில் குன்ஹா எனும் நீதிபதி இப்படி தீர்ப்பளித்திருப்பது சோவாலேயே நம்ப முடியவில்லை.

ஆனால் திமுக மட்டும் இப்படி ஒரு தீர்ப்பு வரும் என்று உறுதியாக எதிர்பார்த்திருந்தது எப்படி என ஒரு ஆழ்ந்த சந்தேகம் சோவிடம் இருந்தாலும் எச்சரிக்கையாக பேசுகிறார்.

Jaya With-Cho“தங்கள் முன் வைக்கப்பட்ட ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்திருந்தாலும், அந்த ஆதாரங்கள், சாட்சியங்கள், வாதங்கள் அடிப்படையில் தீர்ப்பு இப்படி மட்டும்தான் அமையும் என்று சொல்லிவிட முடியாது. அதே ஆதாரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பு வந்திருக்க முடியும். அப்படி ஒரு தீர்ப்பு வருவதற்குப் போதுமான ஆதாரங்கள் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டதாக வழக்கின் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.”

தினமணி வைத்தியின் “கடவுளுக்கே சோதனையா” வாதங்களை விட சோவின் சாதுர்யமான சட்ட நுணுக்க பேச்சைக் கவனிக்க வேண்டும். அதாவது சாட்சிகள் வாதங்கள் அடிப்படையில் தீர்ப்பு அளிப்பதாக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூற முடியும் என்று அடித்துச் சொல்கிறார் சோ. இது சரியா, தவறா என்ற விவரங்களுக்குள் அவர் போகவில்லை.

ஒரு வேளை கணக்கு காண்பிக்கப்படாத சொத்து, அதுவும் வருமான வரித்துறையிடம் அளிக்கப்பட்டது, அல்லது மன்னார் குடி கும்பலால் நடந்த தவறு, அதற்கும் ஜெயாவிற்கும் தொடர்பில்லை என்றெல்லாம் இந்த சட்ட நுணுக்கத்தின் பின்னே இருந்தாலும், தீர்ப்பு அவர் நினைத்த மாதிரி ஏன் அமையவில்லை?

தீர்ப்பு இப்படித்தான் வருமென்று திமுக நினைப்பதிலேயே ஏதோ பெரும் சதி நடந்திருப்பதாக சோ சொல்கிறார். ஆனால் அதற்கு மேல் விவரித்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும் என்று நிறுத்திக் கொள்கிறார். ஏன், திரைமறைவு ஒப்பந்தங்கள் மூலம் நீதிபதி விலை போய்விட்டார், அதை நிறைவேற்றும் அளவு திமுகவிடம் பெரும் பணம் இருக்கிறது என்று சொல்ல வேண்டியதுதானே?

சட்டப்படியும் தவறு, சதிப்படியும் தவறு என்று  கூறிவிட்டு, நீதிமன்ற அவமதிப்பு என்று நல்லபிள்ளை போல நடிப்பது ஏன்? அங்கேதான் கவனிக்க வேண்டும், மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் லேடி ஆட்சி, கர்நாடகத்தில் கூட ஜெயாவின் மல்லையா உள்ளிட்டோரின் ஆசி பெற்ற காங்கிரசு ஆட்சிதான் நடக்கிறது. திமுகவோ அரசியல் செல்வாக்கிழந்து பலவீனமாக துவண்டு போயிருக்கிறது.

இந்நிலையில் கருணாநிதி நீதித்துறையை வளைத்து விட்டார் என்று சொல்வதோ, இல்லை மோடி, காங்கிரசு ஆட்சிகள் பணிந்து விட்டதாக அளப்பதோ அதிமுகவின் அடிமட்ட தொண்டர் வேண்டுமானால் பேசலாம். சோ பேசினால் சிக்கிக் கொள்வார். அதாவது சொந்த செலவில் அவர் ஆராதிக்கும் மோடி ஆட்சியை அவரே விமரிசிக்க வேண்டியதாகிவிடும்.

ஆகவேதான் (மோடி ஆசியுடன்) மேல் முறையீட்டில் தீர்ப்பே ரத்தாகிவிடும் என்று வாதிடும் சோ, அதற்கு ஆதாரமாக ஜெயா தொடர்பான ஏனைய வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பு ரத்தாகியிருப்பதை எடுத்துக் கூறுகிறார். அவாளுக்கான நலனென்று வரும் போது தர்க்கம் பயங்கரமாக உருவெடுக்கிறது.

சட்டத்தின் முடிவு இதுவென்றால் அரசியலில் ஜெயாவுக்கு எந்த குறையும் வராது என்று சத்தியமடிக்கிறார். திமுகவின் 2ஜி விவகாரத்தை பார்த்து மக்கள் ஜெயா மீது மிகுந்த அனுதாபம் கொண்டிருக்கின்றனர் என்றும் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்.

இருப்பினும் ஓ. பன்னீர் செல்வத்தின் அரசு அவர் ஆசீர்வதிக்கும் அம்முவின் அரசு போல இருக்காது என்று சிறு சந்தேகம் மனதில் தொக்கி நிற்கிறது. அதனால், திமுகவின் மீது மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பினை கணக்கில் கொண்டு புதிய அரசு ஜெயா வழிகாட்டுதலில் ஒழுங்காக நடந்தால் கருணாநிதி, ஸ்டாலினுக்கு செல்வாக்கு வரவே வராது என்று உபதேசிக்கிறார்.

இல்லையென்றால் என்ன நடக்கும்? அப்போதும் கூட ஜெயலலிதாவின் பின்னடைவை விட தமிழக அரசியல் எதிர்காலம் சோதனைக்குள்ளாகிவிடும் என்று கவலைப்படுகிறார். அதாவது ஜெயா குற்றவாளி என்று தண்டனை பெற்று வரும் அரசியல் சூழலால் திமுக வளர்ந்து விட்டால் அதுதான் சோதனையாம்.

மருமகள் உடைத்தால் மண்குடம் பொன்குடமாகும் சங்கதியேல்லாம் அழுகை டிவி சீரியல்களில்தான் வரவேண்டுமென்பதில்லை. அறிஞர் சோவின் அட்வைசில் கூட வரலாம்.

cho-with-jayaஜெயாவுக்காக இடுப்பை ஒடித்து வணங்கும் அடிமை அமைச்சர் கூட்டம் போலல்லாமல் சோ போன்ற சாணக்கியர்கள் மண்டையை உடைக்காமலேயே சட்ட நுணுக்கங்களை நேர்மறை ஒழுக்கங்களாக மாற்றுவதற்கு சளைக்காமல் முயல்கிறார்கள்.

“தண்டனை பெற்றால் உடனடி பதவி இழப்பு என்ற விதிமுறை சட்டத்தில் இல்லை; சுப்ரீம் கோர்ட்டின் விளக்கம் இந்த நிலையைத் தோற்றுவித்திருக்கிறது;….” என்று ஜெயாவின் பதவி இழப்புக்கு ஒரு லா பாயிண்டை கீழே எடுத்து வைக்கிறார் சோ.

“…இந்த மாதிரி குழப்பங்களைத் தவிர்ப்பதற்காகத்தான், எம்.பி.க்கள் அல்லது எம்.எல்.ஏ.க்களுக்கு, அப்பீல் செய்வதற்காக மூன்று மாத அவகாசத்தை மக்கள் பிரிதிநிதித்துவச் சட்டத்தின் 8-ஆவது பிரிவின், ஒரு உட்பிரிவு அளிக்கிறது. அது செல்லுபடியாகாது என்ற சப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, குழப்பத்திற்கும், சிக்கல்களுக்கும் வழி வகுக்கக் கூடியது” என்று 14 மாதங்களுக்கு முன்னர், 24.07.2014 தேதியிட்ட துக்ளக் தலையங்கத்தில் எழுதியதை இப்போது நினைவு கூர்கிறார் சோ.

வழக்கமாக “அன்றே சொன்னேன் இன்று பலித்தது” என்று பெருமை பேசும் பாணியில் கூறப்பட்டிருந்தாலும் இதை கொஞ்சம் சீர்தூக்கி பார்த்தால் சோ நமக்கு மொட்டை அடிக்க முயல்வது நன்கு புரியும்.

96-ம் ஆண்டில் போடப்பட்ட வழக்கு 2013 வாக்கில் முடிவை நோக்கி நெருங்குகிறது. ஒருக்கால் அம்முவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் என்ன செய்வது என்று அய்யர் பரிதவிக்கிறார். அப்போது பார்த்து உச்சநீதிமன்றத்தின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8-வது பிரிவின் ஒரு உட்பிரிவு செல்லுபடியாகாது என்ற தீர்ப்பு வருகிறது.

உடனே பரப்பன அக்ரஹாரத்தின் தீர்ப்பு தரும் விளைவுகள் சோவின் மண்டையினுள் இறங்கி எச்சரிக்கையாக லா பாயிண்டை எடுத்து முன்வைக்கிறது. ஆக உச்சநீதிமன்றத்தில் அந்த குழப்பம்தான் இன்று ஜெயாவின் பதவியை பறித்திருக்கிறது என்று மதியூக்த்துடன் அவர் கண்டுபிடித்திருக்கிறார்.

ஆனாலும் மானங்கெட்டு பேசுவதெல்லாம் மதியூகம் என்று நம்பும் கூட்டம் இருக்கும் போது மொட்டை சோவிடம் இல்லை, அவரை நம்புவர்களிடம் இருக்கிறது என்றே நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்!

  1. Good Article,

    But why Vinavu is wasting time on Cho, who is just a castist writer. Only Brahmins buy and read Thuglak, Don’t give publicity to this stupid writer.

    We always talk about ‘Film actors becoming politicians’… But its more horrible if a ‘Film actors becomes a journalist’.

    This former cinema comedian is spitting garbage in the name of journalism(Thuglak), And few stupids are reading it.

    • A lot more stupids indeed. Even neutral people are first attracted towards thuglak for its sarcastic satiristic humour and then get systematically brain washed and hoodwinked to the point where they start believing that Thuglak is neutral! Some of my friends argue this way – Thuglak makes satire of both DMK and ADMK and hence they are neutral. But I used to reply that the degree varies. For DMK and Karunanidhi, the writing in Thuglak will be scything sword, against a sworn enemy. But for Jaya, it is just a mild push. Nothing more than that. At the same time, Thuglak still make fun of the ADMK slave ministers. Just to show that he is neutral.

      I have seen many of my brahmin friends who never take the pain to go to the voting booth, but systematically influence all his friends in the group against DMK and slightly favouring Jaya. If at all they oppose ADMK, it will be against Sasikala and co and very rarely against Jaya.

  2. சிரிப்பு நடிகர் சோ தன்னை பத்திரிக்கையாளர்,அரசியல் விமர்சகர் ,சட்ட மேதை என்றெல்லாம் தன்னிலை படுத்திக் கொள்ள கூடியவர்.இதையெல்லாம் தாண்டி ஜெயாவின் ராஜகுரு என்பதிலும்,தேர்தல் நேரங்களில் இன உணர்வோடு கூட்டணி அமைத்துக் கொடுத்து தரகராக செயல்பட்டதும் தமிழகம் கண்ட உண்மை. ஆனால் இவர் தாம் வகித்த எந்த பொறுப்பையும் சரிவர செய்ததில்லை.திரைப்படங்களில் ஒரு சிரிப்புநடிகராக மக்களை சிரிக்க வைத்தோ,சிரிப்பின் ஊடாக நல்ல கருத்துக்களையோ விவேக் ,வடிவேலு அளவுக்கு கூட விதைத்ததில்லை.மாறாக முட்டைக்கண் உதவியுடன் கோமாளி சேட்டைகள் செய்வதும்,தனது இன உணர்வை வெளிக்காட்டி மற்றவர்களை இழிவுபடுத்தி காமெடி செய்வது இவரின் இயல்பு.. தமிழகத்தில் வட இந்திய வங்கிக்கொள்ளையர்கள் ஜெயாவின் காவல் துறையால் என் கவுண்ட்டர் செய்து கொல்லப்பட்ட போது மனித உரிமை அமைப்புகள் கண்டித்தன.அப்போது சுட்டு கொல்லப்பட்டவர்கள் என்ன தியாகிகளா ?என்றார் சோ. அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரித்து தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தாதவர். ஆனால் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அமைக்கப்பட்ட ஒரு சிறப்பு நீதிமன்றம் பதியப்பட்ட குற்ற சாட்டுகளின் அடிப்படையில் ஜெயாவின் அதிகார பலத்தினால் போடப்பட்ட முட்டுக்கட்டைகளை உடைத்து எறிந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தீர்ப்பினை அளித்துள்ளது. ஆவணங்களின் அடிப்படையில் 1136 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பினை நீதிமன்றம் அளித்துள்ளது. சோவும் ஒரு வழக்கறிஞர் என்பதால் தீர்ப்பினை எதிர்த்து ராம்ஜெத்மலானிக்கு பதிலாக ஆஜராகி ஊழல் ஒழிப்புச்சட்டத்தின் படி தண்டனை வழங்கியது செல்லாது,மனுதர்மப்படி உடனே விடுதலை செய்து வெளியில் கொண்டுவரலாம்.சசி கூட்டத்திற்கு மனு தர்மம் பொருந்தாது.ஏற்கனவே டான்சி வழக்கில் முன்மாதிரியாக மனசாட்சிப்படி பரிகாரம் தேடிக்கொள்ளச் சொல்லி குற்றவாளியிடமே கும்பிட்டு விழுந்த கதையை எடுத்துவைக்கலாம்.அதைவிட்டுவிட்டு நீதிபதிகளுக்கு சந்தர்ப்ப சாட்ச்சியங்களின் அடிப்படையில் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு எந்த மாதிரியான தீர்ப்பு வழங்கவேண்டும் என வகுப்பெடுப்பது சட்டத்தை அவமதிக்கும் செயல்.சட்டப்படியான விடுதலை குன் கா அவர்களால் நிருபிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ள குற்றங்களை சட்ட ரீதியாக எதிர்கொண்டு உடைத்துவிட்டு வெளியே வருவதில் எந்த தடையும் இல்லை.சட்டம் படித்த நீதிபதிகளை வெறும் துக்ளக் மட்டும் படிப்பவர்களாக சோ கருதுவது எப்படி சரியாகும்?

  3. நீதிபதிகளை விலைக்கு வாங்கியதில் புரோக்கராக செயல்பட்டது, பணம் பட்டுவாடா செய்யக் காரணமாக இருந்தது, அதை கவனித்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது என்று இன்னும் பல விசயங்களுக்கு காரணமாக இருந்தவனுக்கு என்ன தண்டனை?

  4. பார்பன கூட்டம் படை எடுத்து

    மகுடியுதி, பாம்பாட்டி

    ஜெவையும் , சோவையும்

    சிராட்டி பாராட்டி

    பதிகம் பாட படை திரண்டு

    பின்னால் வருகின்றது பாரீர் !

    • ஜெ தப்பு செஞ்சரா?
      7.10.2014 வக்கீல் வண்டு முருகன்& டீம் நேரில் ஆஜாராகி
      ப்பாப்பார அக்கிரகாரத்தில் சுழன்று சுழன்று பழைய சைக்கில்/ ,பன்னு/பலாப்பழம் திருடிய
      நீதி தேவதைகளுக்கு வாதாடும்போது தெரியவரும்….
      அதுவரை.
      சைலன்ஸ் யுவர் ஆனர்….

  5. சோ நேர்மையற்ற தலையங்கம் எழுதி உள்ளார். பகை, கடன், நெருப்பு போன்றவற்றை மிச்சம் வைக்காமல் முற்றிலும் அழித்து விட வேண்டும் என்றொரு பழம் பாடலை மேற்கோள் காட்டி, அதே போல திமுகவையும் பூண்டோடு ஒழிக்க வேண்டும் என்று சொல்லி வருபவர். அப்படி இருந்தும், 1996 தேர்தலில் அம்மா மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்று சொல்லி, திமுக-தமாகா கூட்டணியை ஆதரித்து எழுதினர். அம்மா ஆட்சி மீண்டும் வருவதற்கு பதிலாக, பூண்டோடு அழிய வேண்டிய திமுகவே மேல் என்றால், ஜெயாவின் முதல் ஆட்சிக்காலத்தில் எவ்வளவு ஊழல் நடந்ததாக இவர் கருதி இருக்க வேண்டும். எனில், அதற்கான தண்டனை அனுபவிக்க வேண்டாமா? அப்படி ஒரு தண்டனை வழங்கப் பட்டு இருக்கும் போது, அதை வரவேற்காமல் சட்ட நுணுக்கம் பேசிக் கொண்டு இருக்கிறார். சோவின் சுய முரண்பாடு கூச வைக்கிறது.

  6. சோ ஒரு அப்பட்டமான சமூக விரோதி. அவர் சொன்னதையெல்லாம் விமர்சித்து அரைவேக்காடையெல்லாம் பெரியாளா ஆக்கிடாதிங்க…

  7. தண்டனை பெற்றால் உடனடி பதவி இழப்பு என்பது சட்டத்தில் இல்லை.உச்சநீதி மன்றத்தின் விளக்கம் என லா பாயிண்ட்டை எடுத்து வைக்கும் சோ கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு தண்டிக்கப்பட்டு பதவி இழந்த போதும் ,திமுகவின் செல்வகணபதி சுடுகாட்டு கூரை வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்த போதும் எடுத்து வைக்கவில்லை.என்னே அவாளின் நியாயம்!

  8. Jayalalitha may be a Brahmin. But she is corrupt. Karunadhi may be a non Brahmin. But he is corrupt. Cho can’t be by any standards an intellectual but a powerbroker. We should not forget that if corrupt karunadhi wants an alliance with BJP he will not hesistate to seek the help of Brahmin power broker Cho. Let me state categorically. in this wretched country corrupt politicians have succeeded in making all institutions of governance corrupt and servile. Corruption knows no caste, no gender, no religion , no region, no ethnicity no nothing. Like sex it is a great leveller. unfortunately in this wretched filmy tamilnadu two corrupt political parties DMK and ADMK take turn in looting the state and deceiving the servile hero worshipping people. There is a definite need for cultural revolution in this wretched cinema obsessed servile people of the state. Patronage and freebies will not help the people. What is wrong with the state which gave birth to self respect and rational movements?

  9. மனுசாத்திரத்தை சரி அது இன்று மிக தேவை என்று பிணாத்தும் இவர்களை போன்றோரின் எழுத்துகளை முற்றலுமாக புறக்கணீக்கவேண்டும். ஆளீல்லாத கடையில் எத்தனை நாள் டீ ஆத்துவார் இந்த பொறம்போக்கு புரோக்கர்,

  10. சோ..!
    ———
    https://www.facebook.com/PothumadaSaamy/posts/367660436713272
    சோவைக் குறித்து எல்லோரும் சொல்லும் ஒரு குறை அவர் ஒரு பார்ப்பனர் என்பதுவே..
    அதைத்தாண்டி அவரிடம் என்ன குறை கண்டீர்கள் என்று கேள்வி கேட்டால் அதற்கு விடை எவரிடமும் இருக்காது.
    அவர் ஒரு அரசியல் புரோக்கர்..சரிதான்..அதனால் அவர் அடைந்த பலன் என்ன? ஆதாயம் என்ன? பணம் சம்பாதித்துவிட்டாரா?
    அதிகாரத்திற்கு வந்தாரா..அல்லது தன் செல்வாக்கைப் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்துவிட்டாரா..
    ம்..அவர் ஏன் ஜெயலலிதாவிற்கு வக்காலத்து வாங்குகிறார்? ஜாதி உணர்வில்தானே..?
    ஓ அப்படியா..அப்படியென்றால் 1991 முதல் 1996 முடிய நடந்த ஜெயலலிதா ஆட்சியை அதிகம் எதிர்த்தவர்கள் யார்? இரண்டு பேர்தான். ஒருவர் சுப்பிரமணியம் சுவாமி..இன்னொருவர் சோ..
    ஆனால் அதற்கான பலனை அனுபவித்தது கலைஞர். அதுதானே உண்மை? தமிழ்மாநிலக் காங்கிரஸை உருவாக்கி..ரஜினியை அதற்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்க வைத்து..அதிமுக ஆட்சியை விரட்டியது சோ..தானே? ஏன் அன்றைக்கு ஜெயலலிதா ஜாதி மாறியிருந்ததா? அல்லது அன்றைக்கு கலைஞர் பிராமண ஜாதிக்கு மாறியிருந்தாரா?
    இன்றைக்கு நாமெல்லாரும் தூக்கிப்பிடிக்கும் காமராஜரை அன்றைக்கு உயரத் தூக்கிப்பிடித்தது..சோ..மட்டும்தான். அன்றைக்கு காங்கிரஸே காமராஜரைத் தூக்கி எறிந்துவிட்டதே.. காமராஜர் தோற்கடிக்கப்பட்டதற்கு வருத்தப்பட்டது சோ மட்டும்தானே. திமுக அன்றைக்கு காமராஜரை எள்ளி நகையாடியது. தமிழர்கள் எள்ளி நகையாடினார்கள். ஆனால் இன்றைக்கு வெட்கமேயில்லாமல் காமராஜர் இறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது புகழை நாம் பாடிக்கொண்டிருக்கின்றோம்.
    விடுதலைப்புலிகளைக் குறித்து எம்.ஜி.ஆர் காலத்திலேயே தீர்க்கதரிசனமாய் சொன்ன ஒரே மனிதர் சோ..மட்டும் தான்.. அவர்களால் தான் இலங்கைத் தமிழர்களுக்கு அழிவு ஏற்படும் என்று.
    அதன்படியே இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் எல்லோரும் விடுதலைப்புலிகளாலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். மீனம்பாக்க விமான நிலையத்திலேயே வைத்து இலங்கைத் தமிழ் தலைவர்களை வேட்டையாடினர். அதன்பிறகுதான் எம்.ஜி.ஆர் விழித்துக்கொண்டார். தேவாரத்திற்கு அதிகாரம் கொடுத்து விடுதலைப்புலிகளை தமிழகத்திலிருந்து விரட்டி ஒடுக்கினார்.
    பின்னர் கலைஞர் ஆட்சியில் தரைவிரித்து ஆடினர். தமிழர்களுக்கு தனி மாநிலம் கொடுத்து ஒரு உடன்படிக்கையைக் கொண்டு வந்து சிங்கள அரசை ராஜீவ்காந்தி அடிபணிய வைத்தார். ஆனால் விடுதலைப்புலிகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாமல் அதற்கு உடன்பட மறுத்தனர். இந்தியாவிலிருந்து படை அனுப்பிவைக்கப்பட்டது.வரதராஜப் பெருமாள் முதல் இலங்கைத் தமிழக முதல்வரானார்.பதிலுக்கு ராஜீவ்காந்தியை நமது நாட்டிற்கே வந்து கொலை செய்தனர். இந்தியாவின் ஆதரவு தமிழகத்தின் ஒட்டுமொத்த ஆதரவும் விடுதலைப்புலிகளுக்கு பறிபோனது. கடைசியில் விடுதலைப்புலிகளின் தவறான அணுகுமுறைகளினாலேயே ஒட்டுமொத்த இலங்கைத் தமிழினமும் அழிந்தது.
    இதை 1980களிலேயே சொன்னவர் சோ ஒருவர்தான்.
    திமுகவை கடுமையாக எதிர்க்கிறார். அதில் தவறென்ன?
    அவரது விமர்சனங்களுக்கு பதில் என்ன? அவர் பார்ப்பனர் என்பதா?
    விடுதலைப்புலிகளை..தீவிரவாதத்தை..தமிழ்த் தீவிரவாதத்தை அவர் எதிர்க்கிறார். அதிலும் அவர் தவறென்ன?
    தேசீய அரசியலிலும் பெரும் பங்கு வகிக்கிறார்..
    இந்திராகாந்திக்கு மாற்றாக ஒரு அரசாங்கத்தைக் கொண்டு வர உதவினார். காரணம்..இந்திராகாந்தி காமராஜரை உதாசீதனப்படுத்தினார்..அதிகார மமதை கொண்டார்..அந்த ஆட்சி தூக்கி எறியப்பட்ட பிறகு தான் இந்திராகாந்தி நிதானத்திற்கு வந்தார்.
    1996ல் ஜெயலலிதா ஆட்சியிலிருந்து எறியப்பட்ட பிறகுதான் அவரும் பெருமளவிற்கு நிதானத்திற்கு வந்திருக்கிறார்.
    அந்தணர் என்போர் யார் என்று சோ..விடத்திலே துக்ளக் பத்திரிக்கையில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.
    அவர் பதில்..” மனு தர்மத்தின்படி மனிதர்களுள் 4 ஜாதிகள் உண்டு. அவர்கள்,1.சத்ரியர்கள்..(அரசர்கள்), 2.அந்தணர்கள்(அரசர்களுக்கு ஆலோசனை சொல்லுபவர்கள்),3.சூத்திரர்கள்(அரசர்களின் உத்தரவை செயல்படுத்துபவர்கள்) மற்றும் 4.வைசியர்கள்(அந்த 3 பேருக்கும் தேவையான பொருட்களைக் கண்டறிந்து கொண்டுவந்து விற்பனை செய்யும் வியாபாரிகள்). ஆனால் இன்றைக்கு யாரும் சத்ரியர்கள் அல்ல..அந்தணர்கள் அல்ல..சூத்திரர்களும் அல்ல..எல்லோரும் ஒரே ஜாதி..அது வியாபாரிகள் என்ற வைசியர்களே” இப்படி ஒரு பதிலைத் துணிகரமாய் சொல்வதற்கு ஒரு பார்ப்பானுக்கு துணிவு இருக்கிறதே..வேறு யாருக்கு அப்படி ஒரு நேர்மை இருக்கிறது?
    ஒரே நேரத்தில் கலைஞரையும் தன் வீட்டிற்கு அழைக்க முடிகிறது..ஜெயலலிதாவையும் அழைக்க முடிகிறது. அததான் சோ..வின் நேர்மை.
    (என்னால்எல்லாம் மற்றவர்களைப் போல் சோ இறந்து 40 அண்டுகளுக்குப் பிறகு புகழ்ந்து பாடிக் கொண்டிருக்க விருப்பம் இல்லை.அவர் உயிரோடு இருக்கும் போதே பாராட்டிவிடுகின்றேன். அதுதான் நான் கற்றதற்கு அடையாளம்..!)
    https://www.facebook.com/PothumadaSaamy/posts/367660436713272

    • நேர்மை.. ஹ்ம்ம்..சரி..
      ஜெ யின் கம்பனிகளில் டைரக்டராக பதவி வகித்தது பற்றி என்ன சொல்ல போகிறீர்கள்..

    • 91 TO 95 காலங்களில் சோபோன்ற பூநூல்கள் போயஸ்கார்டன் பக்கம் வரவே முடியாது. அப்பாேது மன்னார்குடி கும்பல்களின் கைத்தான் ஓங்கியிருந்து என்பதையும் அந்த கோபத்தின் வெளிபாடுத்தான் அன்றைய சோவின் அரசியல் என்பதும் அந்த காலத்தில் பிறந்த குழந்தைக்கு கூட தெரியும், ஆனால் உனக்கு தெரியவில்லையே உமா சங்கரா…..

      • I wish I could say this a nice try; but certainly not.
        I think you don’t understand Cho; I don’t blame you.
        Even in the last few years of Jaya rule, Cho has written his objections / pointed Jaya’s mistakes whenever needed (Example: when she tried to release Rajiv killers free for silly reasons). Cho didn’t support freebies provided by Jaya. Cho didn’t agree with Jaya’s opinion on Sri lanka issue too. When Jaya govt arrested Shankaracharya, he expressed his fury.
        Remember Karunanidhi attended Cho’s son’s wedding at this age; he usually doesn’t take part in any weddings these days….
        Cho is the most genuine political commentator / analyst you can ever find in our country. Though he’s close to many prominent politicians, he never exploited his friendship for his personal benefits. He was probably only Press Editor who had the courage to stand up against Indira Gandhi; he criticized her many decisions but supported her stand on Sri lanka.

        • உமாஷ்ங்கர்! முழு பூசணியை சோற்றில் மறைப்பது என்று கேள்விபட்டிருக்கிறீர்களா?

          காலில் விழுந்து ஆசி வாங்கிய அம்முவிற்கு எதற்காக கடிதம் எழுதினார்? ஆணையிட்டிருக்கலாமே!
          ராஜிவ் கொலை வழக்கில் விசாரணையே போலியானது,நீதி வழங்கிய முறை அதைவிட கேலியானது என்று அனைத்து ஊடகங்களும் அறிவரே! விசாரணை அதிகாரியே தவறு என்னுடயது என்று ஒப்புக்கொண்டாரே! பின்னரும் அவர்களே சதி செய்து, அவர்களே கொன்றார்கள் என்று வழக்கை முடித்தது, தானும், ஜெயாவும், சு சாமியும் தப்பிக்கத்தானே!

          திருடனே, திருடன் திருடன் என்று கூட்டத்துக்கு முன்னால் ஓடுவது முதல் முறையல்லவே!

          சோ இலவசங்களை என்றுமே ஆதரித்தில்லையா? அன்னதானம் என்ற பெயரில் கொவில்களில் பார்பன பந்தியை ஆதரிக்கவில்லையா? எம் ஜி யாரின் சத்துண்வு திட்டம் விரிவு படுத்தபடாமல் , இந்து கோவில்களில் மட்டும் அன்னதானமாக செயல்படுத்தியபோது எதிர்த்தாரா?

          சங்கராசாரி கைது செய்யப்பட்டபோது எதிர்த்தார் தான், ஆனால் சுந்தராமன் கொலைக்கும், அவர் எழுப்பிய குற்றசாட்டுகளுக்கும் யார் பதிலளிப்பது?

          இப்போது அவர் கொலை கேசில் விடுதலை அடைந்ததும், அரசு மேல் முறையீடு செய்யாமல் இருப்பது ஏன்? சுன்டரராமன் கொலை வழக்கு மீண்டும் முதலிலிருந்து துவக்கப்படுமா?

          புதுவைநீதிபதியுடன் தொலைபேசியைல் பேரம் பேசியது உண்மையா, பொய்யா என்ற வழக்கு இன்னும் நிலுவையில் தானே உள்ளது!

        • கருணானிதி சோவை சென்று பார்த்ததும், சோ கருணானிதியை கடந்த காலங்களில் பார்த்திருப்பதும் முதன் முறை அல்ல! நீங்களே ஒப்பு கொண்டபடி அவர் ஒரு அரசியல் புரோக்கர்! அவ்வளவுதான் ! அவரின் கருத்துக்களும்,நோக்கங்களும் இந்துத்வா, பார்பன ஆதிக்க கருத்துக்கள் தான்! உண்மையில் நேர்மையானவர் என்றால் ஈழத்தமிழரின் அழிவை தடுக்க குரல் கொடுத்திருக்க வேண்டும்!

        • உமாசங்கர்,

          என்னமோ கொலைக் குற்றச் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ததை போல அங்கலாய்த்து கொள்கிறீர்களே. அவர்களை விடுதலை செய்ய இயலாது என்று பாசிச ஜெவிற்கு தெரியாதா? இல்லை அந்த கோமாளி சோவிற்கு தான் தெரியாதா. எல்லாம் தெரிந்தும் ஏனிந்த நாடகம்? எல்லாம் ஓட்டுப் பொறுக்க தான் அய்யா. இதுல வேற அவரு இவர கண்டிச்சாராம். நல்லா கண்டிச்சாரு போங்க.

          அப்புறம் அந்த பொறுக்கி சங்கராச்சாரியாரைக் கைது செய்ததற்கு கோபத்தை காட்டினாராம். நல்ல காமிச்சாரு. இதுக்குப் பேரு தான் மொள்ளமாரித்தனம். ஜெவைக் கைது பண்ணா சட்டத்தின் ஓட்டைகளை கண்டுபிடிப்பது, பொம்பள பொறுக்கி சங்கராச்சாரியாரைக் கைது பண்ணா கோபத்தைக் காண்பிப்பதும் என்ன ஒரு அயோக்கியத்தனம்.

          அப்புறம் கருணாநிதி, சோ குடும்ப திருமண விழாவிற்கு சென்றாராம். இந்த ஆளு(கலைஞர்ர்ர்ர்ர்ர் ) தான் கொஞ்சம் கூட மானம் மருவாதி இல்லாம பாப்பான் காலையே புடிச்சிட்டு இருந்தா, அதுக்கு நாங்க இன்னா பண்றது. அப்புறம் சோ ஏதோ மிடாஸ் ங்குற கம்பெனில ஏதோ பெரியப் பொறுப்புள இருந்தாராம். ஏதோ கேள்விப்பட்ட தகவல். நண்பர்கள் யாரவது இதப் பற்றி தெரிந்திருந்தா பகிரவும்.

          இதெல்லாம் காமிச்சு சோவை ஒரு நடுநிலையாளன நீங்க காமிசீங்கன்னா…… உங்களை நெனச்சா எனக்கு பரிதாபமா இருக்கு.

    • முன் ஒரு காலத்தில் சோ ஒரு சொசயலிஸ்ட், சுப்ரமணிய சாமி ஒரு ஆனந்த் மார்கி.
      காலம் சோவை சுருக்கி (முசொலினியைப் போல) சொசயலிஸ்ட் பாசிஸ்டாக மாரி இந்தியாவின் ஹிட்லரின் பக்தராக மாரினார்.
      துக்ளக் ஹிட்லராக மாரின கதையில் சுப்ரமணிய சாமி நாரதராக வந்தது மொடியின் தர்ம கர்த்தாவிர்க்கே சோதனையாகி விட்டது.
      தலைகனம் பிடித்த சுப்ரமணிய சாமியை மந்திரியாக்கவில்லை என்றால் சாமியாடிக்கொண்டுதான் இருப்பார்.
      மொடி சொவுக்காக ஜெத்மாலனியை அரக்கன் சுப்ரமணிய சாமியை அடக்கி மஹிஷாசுரனை வெற்றி கண்டு அரியாசனையில் அம்மனை ப்ரதிஷ்டம் செய்ய முயர்ச்சிப்பார்.
      இது கலி காலம், த்ரேதாயுகம் அல்ல, என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது.
      அம்மன் பத்ர காளியாக மாரினால் தர்ம கர்த்தாவிர்க்குதான் சோதனை.
      நீங்க எல்லாரும் ஈசியா உண்மைய சொல்லிட்டு பொயிடுவீங்க படரவனுக்குதானெ தெரியும் அவஸ்தை…

      • சோ எப்போது சோஷியலிஸ்ட் ஆனார்? இந்தியாவின் முதல் ஊஷல் தியாகி, அன்னிய கம்பனிகளின் இந்திய ஏஜென்ட்,நேரு குடும்பத்தின் ஊழல் வழிகாட்டி மறைந்த டி டி கே யின் சம்பனிகளின் ‘லீகல் அட்வைசராகவும்’, தமிழக சாராய சாம்ராஜ்யத்தின் ஆலோசகர், பங்குதாரர்! உண்மையில் தமிழ்னாட்டு பார்பன அரசியலிலும், சைட் பை சைட், சினிமா கோமாளியாகவும் பிரபலமடைந்தவர்! எப்போதுமே சோசலியத்திற்கு எதிரி! எமெர்ஜன்சி காலத்தில், ஆனந்தவிகடன் குழுமத்திலிருந்து ‘துக்ளக்’ வெளியிட்டு, படித்த பாமரர்களை வளைத்து போட்டார்! சில காலம் ‘அம்முவின்’ கதையை கூட வெளியிட்டார்! எம் ஜி யாருக்கு பிறகு கருணானிதி அலையை கணித்த மற்ற பார்ப்பனர்களை போல இவரும் பூச்செண்டுடன் சென்றார்! தி முக சீண்டவில்லை என்பதால், ஆரியப்பணியை செவ்வனே செய்து வருகிரார், திராவிடரை அழிக்க! மனித உரிமை சட்டம் வந்த போதே எதிர்த்த தீர்க்கதரிசி! கோமாளியானாலும், காரியத்தில் கண்ணாயிருப்பவர்!

        மற்றபடி உங்கள் சோ ஸு-சாமி கதை சூப்பெர்!

    • ///அதுதான் நான் கற்றதற்கு அடையாளம்..///

      படிக்க படிக்க சிப்பு சிப்பா வருது… என்னத்தை தான் கற்றீரோ…..இன்னும் கற்க வேண்டியது ஏராளம் உள்ளது.

      சுனா சாமிக்கும் சோவுக்கும் இருக்கும் ஒரே நோக்கம் தமிழ் நாட்டில் திராவிட கட்சிகளின் ஆட்சியை ஒழித்து பார்ப்பன ஆட்சியை கொண்டு வருவதே…அதை நோக்கியே காய்கள் நகர்த்தப்பட்டு வருகிறது…நடந்த மற்றும் நடக்கும் நிகழ்வுகளை உற்று நோக்குங்கள் உண்மை புரியும்…

    • உமாஷங்கர்! உங்கள்நன்றிக்கடன் பாக்கியிருந்ததா? தீர்த்துவிட்டீர்கள்!

      //ஆனால் இன்றைக்கு யாரும் சத்ரியர்கள் அல்ல..அந்தணர்கள் அல்ல..சூத்திரர்களும் அல்ல..எல்லோரும் ஒரே ஜாதி..அது வியாபாரிகள் என்ற வைசியர்களே” இப்படி ஒரு பதிலைத் துணிகரமாய் சொல்வதற்கு ஒரு பார்ப்பானுக்கு துணிவு இருக்கிறதே..வேறு யாருக்கு அப்படி ஒரு நேர்மை இருக்கிறது?//

      ஆனந்தமார்கிகள் அதை எப்போதோ செய்து விட்டார்கள் அய்யா! அடுத்து “அவர் ஒரு அரசியல் புரோக்கர்..சரிதான்..”. இத்துடன் விட்டிருக்கலாம்! அத்ற்கு மேலும் உங்கள் நன்றி உணர்வு,நகைச்சுவை உணர்வாக பொங்கி, நொந்துபோன தமிழக மக்களை சிரிக்க வைத்துவிட்டீர்கள்!

      // 1991 முதல் 1996 முடிய நடந்த ஜெயலலிதா ஆட்சியை அதிகம் எதிர்த்தவர்கள் யார்? இரண்டு பேர்தான். ஒருவர் சுப்பிரமணியம் சுவாமி..இன்னொருவர் சோ..//
      அரசியல் புரோக்கர் எதற்காக எதிர்ப்பார்! அரசியல்நோக்கோடுதான், ஆதாயத்திற்கு தானெ!
      //ஆனால் அதற்கான பலனை அனுபவித்தது கலைஞர்// அன்று சீரணி அரங்கில் சீந்துவாரின்றி உட் கார்ந்திருந்தாரே! ஒருவர்கூட இந்த புரொக்கர் தான் காரணம் என்று பேசவில்லையே!
      //அதிமுக ஆட்சியை விரட்டியது சோ..தானே? //

      நல்ல ஜோக்! இப்போதுநான் கேதிறேன்; அன்றைக்கு கலைஞர் பிராமண ஜாதிக்கு மாறியிருந்தாரா? பசையுள்ள இடத்தில் ஒட்டிகொண்டு, பசை தீரும்போது முன்னதாக கழட்டிகொள்வது, புரொக்கர்களின் (பிராமணர்களின்) வழக்கம்தானே!

      //இன்றைக்கு நாமெல்லாரும் தூக்கிப்பிடிக்கும் காமராஜரை அன்றைக்கு உயரத் தூக்கிப்பிடித்தது..சோ..மட்டும்தான். அன்றைக்கு காங்கிரஸே காமராஜரைத் தூக்கி எறிந்துவிட்டதே.. காமராஜர் தோற்கடிக்கப்பட்டதற்கு வருத்தப்பட்டது சோ மட்டும்தானே. //

      காமராஜரை ஆதரித்து தமிழகத்தில் காலூன்றநினைத்தது ராஜாஜி! உண்மையில் இவர் காமராஜருக்காக வருத்தப்பட்டாரா அல்லது திராவிட கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டதே என்று வருத்தப்பட்டாரா?

      காமாராஜரை விலக்கி இவர்களது புரவலர், இந்தியாவின் முதல் ஊழல் அரசியல்வாதி, டி டி கே யை அழைத்து கொடியேற்றி துவக்கப்பட்ட இந்திரா காங்கிரசின் ஊழல் வளர்ச்சி எல்லோருக்கும் தெரிந்தது தானே! இவர் எமெர்ஜென்சியை எதிர்த்தது அகில இந்திய பார்பன அரசியலின் பிளான் “B” !

      வாஜ்பாய் உட்பட ஆர் எஸ் எஸ் தலைவர்கள், எமெர்ஜென்சியை ஆதரித்து இந்திராவின் கரத்தை வலுப்படுத்தி, பிற பார்பனர் அல்லாத தலைவர்களை சூறையாடியது தனி கதை!

      //ஆனால் இன்றைக்கு வெட்கமேயில்லாமல் காமராஜர் இறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது புகழை நாம் பாடிக்கொண்டிருக்கின்றோம்.//

      அன்றைக்கும் வெட்கமேயில்லாமல் காமராஜர் காலில் விழாத குறையாக, அவர் புகழ் பாடியது இவாளின் ஆதர்ச தலைவர் ராஜாஜி அல்லவா? ஆனால் கனவு பலிக்கவில்லை!

      //கடைசியில் விடுதலைப்புலிகளின் தவறான அணுகுமுறைகளினாலேயே ஒட்டுமொத்த இலங்கைத் தமிழினமும் அழிந்தது.//

      ஆமாம், பிந்த்ரன் வாலேயை போல, இங்குள்ள பார்பன சக்திகளால் உருவக்கப்பட்டு, உபயொகம் முடிந்தபின் அழிக்கப்பட்டனர் ! தமிழக அரசர்களின் வரலாறும் அதுதான், பார்ப்பன அரசியலும் அதுதானே!

      கலைஞருக்கு அன்றே புரிந்தது! இவர்தான் காரணமென்பது இப்போதுதன் தெரிகிறது!

      //தேசீய அரசியலிலும் பெரும் பங்கு வகிக்கிறார்..//
      எந்த தேசீயம்? இந்தூ தேசீயமா? பார்பன புரோக்கர்களின் வேலையே அதுதானே!

      //அந்தணர் என்போர் யார் என்று சோ..விடத்திலே துக்ளக் பத்திரிக்கையில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.
      அவர் பதில்..” மனு தர்மத்தின்படி மனிதர்களுள் 4 ஜாதிகள் உண்டு. அவர்கள்,1.சத்ரியர்கள்..(அரசர்கள்), 2.அந்தணர்கள்(அரசர்களுக்கு ஆலோசனை சொல்லுபவர்கள்),3.சூத்திரர்கள்(அரசர்களின் உத்தரவை செயல்படுத்துபவர்கள்) மற்றும் 4.வைசியர்கள்(அந்த 3 பேருக்கும் தேவையான பொருட்களைக் கண்டறிந்து கொண்டுவந்து விற்பனை செய்யும் வியாபாரிகள்). ஆனால் இன்றைக்கு யாரும் சத்ரியர்கள் அல்ல..அந்தணர்கள் அல்ல..சூத்திரர்களும் அல்ல..எல்லோரும் ஒரே ஜாதி..அது வியாபாரிகள் என்ற வைசியர்களே” இப்படி ஒரு பதிலைத் துணிகரமாய் சொல்வதற்கு ஒரு பார்ப்பானுக்கு துணிவு இருக்கிறதே..வேறு யாருக்கு அப்படி ஒரு நேர்மை இருக்கிறது?.//

      ஆகா! என்னநேர்மை! என்ன துணிவு! இப்படிப்பட்டவர் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க ஏன் முனையவில்லை? தில்லை தீட்சதர் வழக்கில் இந்த துணிவு எங்கே போனது? இந்த பார்பன பம்மாத்து புளித்து போன ஒன்று!

      //1996ல் ஜெயலலிதா ஆட்சியிலிருந்து எறியப்பட்ட பிறகுதான் அவரும் பெருமளவிற்கு நிதானத்திற்கு வந்திருக்கிறார்.//

      பார்பன வெறி மிகுந்து நானும் பாப்பாத்திதான் என்று முழங்கி ஆதி பராசக்தியானது அப்போதிலிருந்து தான்! அடப்பாவி! அம்மாவை உசுப்பேத்தி கவிழ்த்தது இவர்தானா!

      //ஒரே நேரத்தில் கலைஞரையும் தன் வீட்டிற்கு அழைக்க முடிகிறது..ஜெயலலிதாவையும் அழைக்க முடிகிறது. அததான் சோ..வின் நேர்மை..//

      என்னே இவர் நெர்மை! அய்யாவை கவிழ்த்தற்காக அம்மாவும் , அம்மாவை கவிழ்த்தற்காக அய்யாவும் சென்றார்களோ! புரொக்கர்களுக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு?
      ம்ம்ம்! அம்மா வெளியில் வரட்டும்! சு சாமிக்கு நெர்ந்தது தெரியுமா?

      (என்னாலெல்லாம் மற்றவர்களைப் போல் சோ இறந்து 40 அண்டுகளுக்குப் பிறகு புகழ்ந்து பாடிக் கொண்டிருக்க விருப்பம் இல்லை.அவர் உயிரோடு இருக்கும் போதே பாராட்டிவிடுகின்றேன். அதுதான் நான் கற்றதற்கு அடையாளம்..!)

      உங்கள் நன்றிக்கடன் தீர்ந்ததா அய்யா? முகனூலிலும் பதிவு செய்து விட்டீர்களா! பேஷ்! பேஷ்!!!!!!!!

    • அன்றைய அதிமுக ஆட்சியை தமிழ்நாடே எதிர்த்தது . ஜெயலலிதாவால் கூட ஜெயிக்கமுடியவில்லை. இந்த சூழ்நிலையில் நடுநிலை என்று சொல்லிக்கொள்ளும் சோ அப்போதைய அதிமுக விற்கு ஆதரவு தெரிவித்து இருந்தால் இந்த கோமாளியை பார்த்து துக்ளக் ரசிகர்களே சிரித்திருப்பார்கள். மற்றும் சசிகலா என்ற கள்ளர் இனப்பெண்ணின் ஆதிக்கத்தில் இருந்த ஜெயாவிற்கு பாடமாக எதிர்த்தார். இதை அவர் செய்த பெரிய நடுநிலை சாதனையாக சிலாகித்து சொல்றீங்க. அவர் செயும் (தரகர்) சேவைக்கு பதவி, பணம் என்று ஏதாவது அனுபவித்து தொலைந்தால் கூட சகித்து கொள்ளலாம். அவர்(தரகர்) சேவைக்கு பலனாக ஆதிக்க சாதி மேன்மையை அல்லவா எதிர்பார்க்கிறார். அவர் எதிர்பார்க்கும் இந்த பலனுக்கு எத்தனை மக்கள் தன்மானத்தை இழந்து, பொருளாதரத்தை, சுக போகங்களை, நிம்மதியை இழக்க வேண்டிவரும் ?

  11. சமிபத்திய ரஜினியின் அரசியல் ஆசை மற்றும் தமிழ் நாட்டில் பிஜேபியின் எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஏதோ ஒரு அரசியல் பூதம் காய்நகர்த்துகிறது.
    பூதம்….?

  12. ராஜகுரு (எ) திவசப் பார்ப்பான் எப்போதுமே அவன் வேலயயை “செய்து” கொண்டுதான் உள்ளனர்…நாம்தான் அதிகபட்ச குறட்டையுடன் உறங்குகிறோம்

  13. //நேர்மை குறித்து வினவு பேசுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது..!!//
    ஏனய்யா ச்ரிதர்! காப்பி ரைட் வாங்கி வைத்திரிக்கிறீர்களோ? கொஞ்சம் விளக்குங்களேன்!

  14. இந்த மாதிரிமுட்டாள்,சாதி வெறி பிடித்தக்வன்,கோமாளி,எடுபிடி,தன்னைத் தானே அறிவாளி என நினைப்பவன்,காட்டு மிராண்டி இவனுக்கெல்லாம் வினவில் இடம் ஒதுக்காதீர்கள். அவன் சமுதாயத்திற்கு எதிரானவன்.அவன் கருத்துக்கள் எதுவும் உபயோகமற்றவை.அறிவாளியாக காட்டிக் கொள்ளும் கடைந்தெடுத்த முட்டாள்.எந்த தொழிலும் சரி வர கை கூடாதவன்.(சினிமா அரசியல் வக் கில் பத்ரிகை).

Leave a Reply to vinoth பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க