சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயாவிற்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த பெங்களுர் நீதிபதி  ஜான் மைக்கேல் டி குன்கா கூறியவை . . .

”ஊழல் சமூக முன்னேற்றத்தை அழிக்கிறது. தகுதியற்ற ஆசைகளை வளர்க்கிறது. மனசாட்சியை கொல்கிறது. மனித நாகரீகத்தை குலைக்கிறது. உயர் பதவியில் இருப்பவர்களின் தவறுகள் மீது கனிவோ இரக்கமோ காட்டினால் அது ஒட்டு மொத்த சமூக வாழ்க்கைக்கும் கேடாக முடியும்.”

இதை சுவரொட்டி முழக்கங்களாகவும், பிரசுரமாகவும் விநியோகித்து தீர்ப்பை ஆதரித்து விருத்தாசலத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விருத்தாசலம் நீதிமன்றம் முன்பாக  நடந்த ஆர்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

ஊழலுக்கு எதிராக வழங்கப்பட்ட நீதிபதி குன்காவின் தீர்ப்பை அனைவரும் ஆதரிக்க வேண்டும். அதிகார பலத்திற்கு அஞ்சாமல், அடிபணியாமல் நீதியை நிலைநாட்டுடிய நீதிபதி குன்காவை பாராட்டுகிறோம். ஊழலை ஆதரித்து நடைபெறும் போராட்டங்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் வாதிகள் அனைவரையும் சிறைக்கு அனுப்ப அனைத்து மக்களும் குரல் கொடுக்க வேண்டு்ம்

என்பதை விளக்கி முழக்கமிட்டு நடத்திய வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

சிறிது நேரத்தில் அ.தி.மு.க வழக்கறிஞர்கள் அதே இடத்தில் அவசரமாக கூடி கலைஞரை கண்டித்து போட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பத்திரிக்கை செய்தி

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயாவுக்கு வழங்கபட்ட நீதிமன்ற தீர்ப்பை பொது மக்கள் அனைவரும் வரவேற்க வேண்டும்.

முதலமைச்சர் பொறுப்பில் உள்ளவர் பல ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு முறைகேடாக  சொத்து சேர்ப்பது சரி என்றால் கீழே பணி புரியும் அதிகாரிகள், அமைச்சர்கள், அ.தி.மு.க கட்சி பிரமுகர்கள் ஊழல் செய்வது சரி என மக்களே ஏற்கும் நிர்ப்பந்தம், சூழ்நிலை உருவாகும்.இதை அனுமதிக்க கூடாது.

பெங்களுர் நீதிபதி குன்காவின் நேர்மையை, துணிச்சலை, நீதியை நிலை நிறுத்தி சட்டத்தின் மீது, நீதிமன்றத்தின் மீது மதிப்பை, நம்பிக்கையை ஏற்படுத்தியதற்காக அனைத்து மக்களும் பாராட்டுவதுடன் அதை பின்பற்ற வேண்டும்.

கடையடைப்பு,பேருந்து நிறுத்தம்,பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, ஆம்னி பஸ் நிறுத்தம்,என பல தரப்பினரையும் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் அச்சுறுத்தி போராட சொல்கிறார்கள். இதற்கு தமிழக அரசும் காவல் துறையும் துணை நிற்கிறது. நீதிமன்றத்தால் தண்டிக்கபட்ட ஜெயாவுக்காக கோவில்களில் அறநிலையத்துறையே சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்து நடத்துகிறது.

இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகளை மனித உரிமை பாது காப்பு மையம் வன்மையாக கண்டிக்கிறது.

உழைக்கும் மக்கள், நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள், அதி.மு.க.வின் தமிழக அரசின், இத்தகைய செயல்களுக்கு அச்சபட்டு ஒதுங்கி நிற்ககூடாது.

ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதிமன்றத்தில் தண்டிக்கபட்டு சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதில் அனைவரும் ஓரணியில் நின்று ஊழலை முழுமையாக இந்த மண்ணிலிருந்து ஒழித்துகட்ட போராட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

virudhachalam-hrpc-protest-against-admk 3

 

virudhachalam-hrpc-protest-against-admk 2

virudhachalam-hrpc-protest-against-admk 1

இவண்,
வழக்கறிஞர் ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்
மனித உரிமை பாதுகாப்பு மையம்
தொடர்புக்கு 9443260164