privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்நடுத்தர வர்க்கத்தை காவு வாங்கும் ரியல் எஸ்டேட்

நடுத்தர வர்க்கத்தை காவு வாங்கும் ரியல் எஸ்டேட்

-

மீபத்தில் பணி நிமித்தமாக சென்னை வந்திருந்த பழைய நண்பன் பாலுவைக் காணச் சென்றிருந்தேன். அவன் கல்லூரிக் காலத்திலிருந்தே கடுமையான சந்தேகவாதி. யாரையும் அத்தனை சுலபத்தில் நம்பக் கூடியவன் இல்லை. அதிலும் காசு விசயத்தில் படு உசார். பேச்சுவாக்கில் தான் பெங்களூருவில் வீடு வாங்க அலைந்த கதையைச் சொல்லிக் கொண்டிருந்தான்.

ரியல் எஸ்டேட்
நிலத்தோட ரிக்கார்ட்டெல்லாம் நோண்டிப் பாத்தா ஒவ்வொரு சொத்துலயும் டிசைன் டிசைனா வில்லங்கத்தை கூட்டி வச்சிருக்கானுங்க

இவனும் இவன் மனைவியுமாக வேலை செய்து கொஞ்சம் கொஞ்சமாக சுமார் ஐம்பது லட்சம் சேர்த்துள்ளனர். வாடகையாக பெரும் தொகையை மாதா மாதம் அழ வேண்டியிருக்கிறதே என்பதை யோசித்து தனி வீடு ஒன்றை கட்டலாம் என்று முடிவு செய்துள்ளனர். கையில் இருப்பது போக தேவைப்பட்டால் வீட்டுக் கடன் வாங்கிக் கொள்வது, வாடகையாக கொடுப்பதை கடன் தவணையாக கொடுத்து விட்டால் பத்து வருடத்தில் கடன் பிடியில் இருந்து வெளியேறி விடலாம் என்று தீர்மானித்து நிலம் தேடத் துவங்கியுள்ளனர்.

சுமார் ஓராண்டு காலம் தினமும் சாயந்திரம் அலுவலகம் முடிந்ததும் கணவனும் மனைவியுமாக நில வேட்டைக்கான நகர்வலத்தை நடத்தியிருக்கிறார்கள். பெங்களூர் நகரத்தின் உள்ளே சந்து பொந்து இண்டு இடுக்குகள் அனைத்திலும் புகுந்து புறப்பட்டு அலசி ஆராய்ந்து பீராய்ந்ததில் நண்பன் பாதி சோர்ந்து போயிருக்கிறான். ஏன் என்று கேட்டேன்.

“டேய்… பாதி பெங்களூரு, ரெட்டிங்க கைல தாண்டா இருக்கு. அவனுங்க காட்டின நிலத்தோட ரிக்கார்ட்டெல்லாம் நோண்டிப் பாத்தா ஒவ்வொரு சொத்துலயும் டிசைன் டிசைனா வில்லங்கத்தை கூட்டி வச்சிருக்கானுங்க. அண்ணன் தம்பிக்கு பவர் குடுத்துருக்கான், தம்பி வித்துட்டு கம்பிய நீட்டிட்டான். அண்ணன் கோர்ட்ல ஸ்டே வாங்கிட்டு புதுசா நம்ப கிட்ட வந்து நீ வாங்கிக்கன்னு நிக்கிறான்… இது மாதிரி ஒவ்வொன்னுலயும் ஒரு பிரச்சினை. பத்தாததுக்கு அம்புட்டு பேரும் பி.ஜே.பில அவனைத் தெரியும், இவனைத் தெரியும் நீ ஒன்னும் பயப்படாதேங்கறான்… அதைக் கேட்டாலே பீதியாகுது”

நகரத்துக்குள்ளே தேடுவதை வேறு வழியின்றி நிறுத்திக் கொண்டு நகரத்திற்கு சற்று வெளியே தேட முடிவு செய்து ரியல் எஸ்டேட் நிறுவனங்களை அணுகியிருக்கிறார்கள். அவர்களோ பெங்களூருவுக்கு ரொம்ப பக்கம் என்று சொல்லி மைசூருக்கும், சிக்க திருப்பதிக்கும், ஓசூருக்கும் இடையே அல்லாட விட்டிருக்கிறார்கள் (அங்கேயுமா!?). ஒரு வழியாக பெங்களூருவுக்கு ஓரளவுக்கு நெருக்கமாக ஒரு இடத்தை ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று காட்டியிருக்கிறது.

”சரி அதையாவது வாங்கினியா இல்லையா?”

”அட நீ வேற… என்னைக் கூட்டிப் போன ஏஜெண்டு, பாஸ் இந்த பத்து ப்ளாட் மட்டும் தான் புக்காகாமெ இருக்கு. அதுவும் நீங்க ஆறு மாசமா பேசிட்டு இருக்கறதாலெ ப்ளாக் பண்ணி வச்சிருக்கேன். சீக்கிரம் புக் பண்ணிடுங்க அப்படின்னு சொன்னான். எனக்கு லேசா டவுட் வந்திச்சி… நம்ப சீனி இருக்கான்லே அவனை தனியா விட்டு அதே ரியல் எஸ்டேட் காரன் கிட்டே புதுசா என்கொயர் பன்றாப்ல பேசிப் பார்க்கச் சொன்னேன். அவனைக் கூட்டிப் போய், இன்னொரு பத்து ப்ளாட்டை காட்டி இது மட்டும் தான் இருக்குன்னு சொல்லிருக்கான்.. என்னோட டவுட் கன்பார்ம் ஆயிடிச்சி”

”சரி என்ன தாண்டா செய்தே?”

”அவந்தான் புத்திசாலியா.. எங்கப்புச்சி மட்டும் எனக்கு பன்னிப் பாலையா ஊட்டி வளத்தா.. நான் அடுத்து நம்ம சேகரையும், பிரகாசையும் செட்டப் பண்ணி தனித்தனியா அனுப்பிப் பார்த்தேன். கடேசில பாத்தா ங்கொய்யாலெ அவங்கிட்ட ஒரு சைட்டு கூட விக்கலை.. அதுக்கே ஏகப்பட்ட பில்டப் குடுத்து ஊர்பட்ட வெலை சொல்லிட்டு இருந்திருக்கான். போடான்னு வந்திட்டேன்”

“அப்ப வீடு கட்ற ப்ளானு?”

சென்னை ரியல் எஸ்டேட்“அடப்போடா.. நீ வேற கடுப்பை கிளப்பிட்டு… பாடுபட்டு சேத்த காசை சும்மா வைக்க வேண்டாமேன்னு தமிழ்நாட்டுல தேடிப் பாத்தேன். சும்மா ஒரு இன்வெஸ்ட்மெண்டா இருக்கட்டுமேன்னு தான். கர்நாடகா ரெட்டி திருடன்னா இவனுக ஜெகத்திருடனுகளா இருக்கானுக. இங்க வாங்கிப் போடுங்க ஒரே வருசத்துல நீங்க கோடீசுவரன்னு சொல்லி ஒரு இடத்தை காட்டுனானுக. இந்தப்பக்கம் அம்பது கிலோமீட்டருக்கு மனுச நடமாட்டமே இல்ல அந்தப்பக்கம் அம்பது கிலோமிட்டருக்கு நடமாட்டமே இல்ல. அந்தாளு கிட்ட, ‘ஏங்க இங்க வாங்கிப் போட்டுட்டு தனியா வந்தா எனக்கே வழி தெரியாதுங்களேன்னு கேட்டேன்.. அது பிரச்சினையில்லை சார் கூகுள் மேப்ல நம்ப சைட்டு சூப்பரா தெரியுங்கறான்”

சென்னையை சுற்றியுள்ள சில பகுதிகளில் ரவுண்டு அடித்து தற்போது ஓய்ந்துள்ளான்.

”எல்லா பேரும் விக்க ரெடியா இருக்கானுங்க. ஆனா, வாங்க ஆளு சிக்க மாட்டேங்கறான். நம்மள மாதிரி ஒன்னு ரெண்டு பேரு வெளம்பரத்த பாத்துட்டு ஜொள்ளு விட்டுட்டு போனோம்னு வைய்யி… அப்டியே கூப்டு சந்தனத்தை பூசி மாலைய போடு குனிய வச்சிடுறானுங்க. ஏமாந்தோம்னா காசுக்கு கோயிந்தா தான்” என்றான்

நண்பனிடம் பேசியதில் ஒன்று புரிந்தது. “ஒரு இன்வெஸ்ட்மென்டாக இருக்கட்டுமே” என்று வாங்கிப் போட்ட யாருமே மேற்படி ’முதலீடு’ எனப்படுவதன் அர்த்தம் என்ன, அது எப்போது, எப்படி, எவ்வளவுக்கு வளரும் என்பதையெல்லாம் ஊடக மற்றும் ரியல் எஸ்டேட் முதலாளிகளின் ஊதிப்பெருக்கப்பட்ட மதிப்பீடுகளோடு கணக்கு போடுகின்றனர். ஏதோ நல்லது நடக்குமென்ற நம்பிக்கையும், கொஞ்சம் பணமும் இருந்தால் ஏமாறுவதற்கு இவர்களும் ஏமாற்றுவதற்கு அவர்களும் தயார்.

நண்பனிடம் பேசிவிட்டு கிளம்பினேன்.

பின்னர் வேறு வேலைகளுக்கு இடையில் நேரம் கிடைத்த போது ரியல் எஸ்டேட் முதலீட்டைப் பற்றி விவரம் தெரிந்தவர்களிடம் விசாரித்தேன்.

ரியல் எஸ்டேட் வீழ்ச்சிஅமெரிக்காவை குப்புறத்தள்ளிக் கவிழ்த்துப் போட்ட ரியல் எஸ்டேட் பூதம் தற்போது இந்தியாவிலும் தலைதூக்கத் துவங்கியிருக்கிறது. கோடிக்கணக்கானவர்கள் வசிக்கும், கோடிக்கணக்கானவர்கள் தினசரி வந்து செல்லும் இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் இன்றைய தேதியில் சுமார் ஐந்து லட்சம் அபார்ட்மெண்ட் வீடுகள் வாங்க ஆளில்லாமல் ஈயாடித்துக் கொண்டிருக்கிறார்கள். கோவாவில் புதிதாக கட்டப்பட்ட சுமார் 1.2 லட்சம் வீடுகள் வெறுமனே பூட்டிக்கிடப்பதாக மாநில முதல்வரே புலம்பியிருக்கிறார்.

தமிழகத்திற்கான ரியல் எஸ்டேட் முதலீடு வருடாந்திரம் 75% அளவுக்கு குறைந்து வருவதாக தெரிவிக்கிறது அசோசெம். 2011-12 கால கட்டத்தில் ரூ 13,600 கோடியாக இருந்த கட்டுமானத்துறை முதலீடு ஒரே ஆண்டில் தலைகீழ் வீழ்ச்சியை சந்தித்து 2012-13 காலகட்டத்தில் வெறும் ரூ 3,300 கோடியாக சுருங்கியுள்ளது. பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அவ்வப் போது பணச் சந்தையில் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து நுழைப்பதானது பண மதிப்பை குறையச் செய்து பொருட்களின் விலைகளை தொடர்ச்சியாக அதிகரித்து வந்திருக்கிறது.

நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிகரித்த ரூபாய் நோட்டுப் புழக்கத்தை பயன்படுத்திக் கொண்ட ரியல் எஸ்டேட் முதலைகள், அவற்றை ’முதலீடுகளாக’ ஈர்க்கத் துவங்கினர். இந்தப் போக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாகவே இருந்தாலும், கடந்த ஏழாண்டுகளில் தீவிரத்தன்மையை அடைந்துள்ளது. இதன் விளைவாக இந்திய வங்கிகள் தனிநபர்களுக்கு வழங்கிய கடன்களில் சரிபாதி அளவு ரியல் எஸ்டேட் முதலீடாக மாறியிருக்கிறது. இந்தியாவின் முதல் பத்து வங்கிகள் வழங்கியுள்ள வீட்டுக்கடன்களின் மதிப்பு மட்டும் சுமார் 9000 கோடி டாலர் (ரூபாய் ஐந்து லட்சத்து நாற்பதாயிரம் கோடி). இது தவிர ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கிய கார்ப்பரேட் கடன்களின் அளவும் மதிப்பும் நம்மிடம் இல்லை.

ரியல் எஸ்டேட் குமிழி வெடிப்புஇத்தனை கோடிகளும் வெறும் காகித மதிப்பு கொண்ட நிலங்களில் பாய்ந்துள்ளது என்பதே கவனிக்க வேண்டியது. ஆக முதல் ஓரிரண்டு சுழற்சிகளில் ஊகங்கள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் ‘முதலீட்டை’ இலக்காக கொண்டு கைமாறிய நிலங்கள் தற்போது வாங்குவார் இன்றி காத்தாடிக் கொண்டிருக்கிறது. சர்வதேச நாணய நிதியம் கடந்த மாதம் வெளியிட்ட தகவல் ஒன்றின் படி இந்தியாவின் ரியல் எஸ்டேட் மதிப்புகள் சுமார் 9.1 சதவீதம் குறைந்துள்ளது. 52 நாடுகளின் ரியல் எஸ்டேட் சந்தைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்ததாக ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது.

நடுத்தர வர்க்க மக்களின் ஆரம்பகட்ட உற்சாகத்தை மேலும் வளர்த்தெடுக்கலாம் என்ற பேராசையில் பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் கொட்டி வீட்டு மனைத் திட்டங்களைப் போட்டு வைத்துள்ள ரியல் எஸ்டேட் முதலைகள் தற்போது ஏமாந்த நுகர்வோரை விஜய், வசந்த், தமிழன் மற்றும் உள்ளூர் டி.வி சேனல்களில் டில்லி கணேசை முன்னிறுத்தி ஆள்பிடிக்க அலைந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் அளிக்கும் “ஆஃபர்களின்” பொருள் – வாங்க ஆள் வரவில்லை என்பது தான்.

இந்த எளிய உண்மை மெல்ல மெல்ல மக்களிடையே பரவி ஏற்கனவே சரிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த ரியல் எஸ்டேட் குமிழியின் மேல் குண்டூசியைப் பாய்ச்ச தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

–    தமிழரசன்.

மேலும் வாசிக்க :

  1. //பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அவ்வப் போது பணச் சந்தையில் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து நுழைப்பதானது பண மதிப்பை குறையச் செய்து பொருட்களின் விலைகளை தொடர்ச்சியாக அதிகரித்து வந்திருக்கிறது.// Marxian Economics??

  2. இந்தியன் அவர்கள் நிறைய பதிவுகளில் முதல் ஆளாக வந்து கமென்ட் போடுகிறார் எதிர்ப்பாகவும் கொச்சையாகவும் பேசினாலும் வினவின் பதிவுகளை முதல் ஆளாக வந்து படிப்பதால் எதிற்ப்பையும் மீறி வினவின் மீது எதோ ஈர்ப்பு இருப்பதாகவே நினைக்கிறேன் ,அல்லது வினவே இது போன்ற எதிர்ப்பு கமென்ட் போட்டு தன் தலையில் தானே குட்டிக்கொள்கிறதா,ஒரே குழப்பமாக இருக்கிறதே உன்மையில் இந்தியன் என்பவர் இருந்தால் பதில் சொல்லுவாரா….

    • I think “Indian” is making fun of the mistake made by the author . To control the inflation , govt will try to limit the flow of currency by increasing the interest rate. In the broader context , it doesnt matter since the author’s goal is to warn the real estate buyers

      This real estate mafia wants to steal middle class wealth and they have been asking RBI to reduce the interest rate.

      மதிய தர வர்க்கத்திற்கு , பணம் என்றால் என்ன , பண வீக்கம் என்றால் என்ன முதலீடு என்றால் என்ன என்று எந்த விதமான அறிவும் பள்ளியில் போதிக்க படுவது இல்லை .

      100 ரூபாய் பொருள் ஒரு வருடம் கழித்து 110 ரூபாய் .
      பணவீக்கம் பத்து சதம் என்றால் , 110 ரூபாய்க்கு விற்றவர் லாபம் 0

      ஆனால் மதிய தர வர்க்கம் இதை பிரமாதமான லாபமாக பார்க்கிறது . வீடு வ்ரிபனையாளர்கள் மக்களை அவ்வாறு பார்க்க பழக்கி இருகிறார்கள் .

        • Real estate Price is not based on the price required to build, it is based on the affordability of the common man and demand.

          Affordability of the common man depends on interest rate.

          And when more people are made to beleive they can afford the loan by lowering interest rate, there will be more buyers in the market and that increases demand as well.It is a positive loop.

          Economist want the interest rate low, because that will increase the business borrowing and will increase the business activity.But without bringing down the inflation, just bringing down the interest rate will bring down the value of currency.

          if value of currency goes down , that will increase the price of oil and again inflation will raise. Thats is why Raghuram Rajan is adamant on high interest rate

  3. Dear Mr. Joseph,

    //எதிர்ப்பாகவும் கொச்சையாகவும் பேசினாலும் // Could be a different Indian. Definitely not me. //வினவின் மீது எதோ ஈர்ப்பு இருப்பதாகவே நினைக்கிறேன் // I always look for opposing views to improve myself.

    Apologies for writing in English. Will try to post in Tamil next time.

  4. //I think “Indian” is making fun of the mistake made by the author . To control the inflation , govt will try to limit the flow of currency by increasing the interest rate. In the broader context // Exactly Mr. Raman.//it doesnt matter since the author’s goal is to warn the real estate buyers// It does matter because that is not the way capitalist economy functions. Factual errors should be avoided when you are criticizing others.

  5. இதை தான் நான் வேறு ஒரு பதிப்பில வேறு விததில் சொல்லி இருந்தென். நாம் இன்னும் அமெரிக்கா பாணியில் உற்பத்தி பொருளாதாரதை நம்பாமல் சந்தை பொருளாதாரத்தை நம்பி கொண்டு இருந்தால் நக்கி கொண்டு போக வேன்டியது தான். விவசாய உற்பத்தியையும் அதன் பொருளாதாரயும் புறக்கணிதிற்கள் அல்லவா? நமது பொருளாதார மேதைகள் அனைவரும் உண்மையில் பொருளாதார கோமாளிகள.
    கோட்டர் கோவிந்து

  6. தமிழரசனின் கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது. இந்தியனும் இராமனும் கட்டுரையை படிக்காமலேயே தங்களது பின்னூட்டங்களில் கதை அளந்திருக்கிறார்கள்.

    அதைப் பற்றிய சில விமர்சனங்கள். டாலர் ஆதிக்கத்தைக் கணக்கில் எடுக்காமலேயே பணவீக்கம் மற்றும் பணவாட்டத்தை பற்றி அளந்துவிடுகிறார்கள் இராமனும் இந்தியனும்.

    வளரும் நாடுகள் டாலரை வெளிச்சந்தையில் வாங்கி உள்நாட்டில் சுற்றுக்குவிடுகின்றன. இச்செயலே உற்பத்தி சாராத ஒன்று. ஏனெனில் அமெரிக்க டாலரும் உற்பத்தி சாராத ஒன்று. டாலர் ரிசர்வ் நாணயமாக இருப்பதால் அமெரிக்கா தன் பாட்டுக்கு பாட்டுபுக்கு அச்சடிப்பது போல டாலரை சகட்டு மேனிக்கு அடித்துவிடுகிற பொழுது அதனால் பலன் பெறுகிறவர்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிற நாடுகளே. அமெரிக்காவில் தங்கத்திற்கு நிகரான டாலர் என்கிற பிரட்டன் உட்ஸ் விதியும் பொருளாதார மந்தத்தின் காரணமாகவே கைவிடப்பட்டன. கறாராகச் சொல்வதென்றால் டாலர் என்பது வெறும் பேப்பர் மட்டுமே. இதனால் அமெரிக்காவில் தான் விற்கிற பொருளுக்கு உற்பத்தி சாராத வெறும் பேப்பரை மட்டுமே வாங்கிக்கொண்டு போகின்றன வளரும் நாடுகள். இப்பொழுது இந்த அளவு டாலரை தன் சொந்த நாட்டில் அப்படியே இறக்கிவிட்டால் அது குமிழிப் பொருளாதாரத்தில்தான் முடியும். ரியல் எஸ்டேட், வங்கிகள், காப்பீடு போன்ற துறைகள் உற்பத்தி சாராத டாலர் வரத்தால் உள்நாட்டில் விலையேற்றம் தாறுமாறாக போனதற்கு ஜப்பானை எடுத்துக்காட்ட இயலும். ஆக டாலர் ஆதிக்கம் இருக்கிற எல்லா வளரும் நாடுகளே இந்நிலைமையைச் சமாளிக்க இரண்டு விசயங்களைக் கையாளுகின்றன.

    முதல் முறையில் வெளிச்சந்தையில் டாலரை விலைக்கு வாங்கி அதற்கு ஈடான பண மதிப்பை உள்நாட்டில் சுற்றுக்கு விடுவது. வெளிச்சந்தையில் டாலரை வாங்குவது என்றால் என்ன? முன்னொரு காலத்தில் ஒரு நாடு வைத்திருக்கிற அந்நியச் செலவாணி அந்நாட்டின் பொருளாதாரத்தைப் பறைசாற்றுவதாக இருந்தது. ஆனால் இன்று அப்படி அல்ல. இந்தியப் பங்குச்சந்தைக் குறீயிட்டு எண் இருபதாயிரம் என்று போனாலும் கூட, அதாவது டாலர் வரத்து அதிகமாக இருந்தாலும் கூட, இந்தியா உட்பட பல நாடுகள் டாலரை வெளிச்சந்தையில் வாங்குகின்றன. இதன் முதன்மையான நோக்கம் முன்னரே மேலே விளக்கியுள்ளபடி, உற்பத்தி சாராத டாலரை அமெரிக்கா சகட்டுமேனிக்கு அச்சிடுகிற பொழுது அது அமெரிக்காவை மட்டுமள்ள அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்த நாடுகளையும் குமிழியில் தள்ளும். இதன் காரணமாகவே அந்நியச் செலவாணி கையிருப்பு இருந்தும் பல நாடுகள் டாலரை வெளிச்சந்தையில் வாங்குகின்றன. இச்செயலைச் சரிகட்டும் பொருட்டே பணம் ரிசர்வ் வங்கியால் அச்சடித்துவிடப்படுகிறது.
    இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில் பணவீக்கத்தை உருவாக்கவே செய்யும். ஆனால் இதன் மொத்த அசவுகரியங்களும் மக்கள் தான் சுமக்கிறார்கள். மக்களின் வரிப்பண மூலம் தான் ரிசர்வங்கிகளை பணம் அடிக்கவைக்கிறது. ஆனால் இந்தியன் சிறிதும் வெட்கமின்றி இது மார்க்சிய பொருளாதாரமா என்று கேட்கிறார்?

    பதில் என்ன? முதலாளிகளின் ஊகபேர வணிகத்தை சரிகட்டும் பொருட்டு பெரியண்ணனின் அர்த்தமற்ற டாலர் ஆதிக்கத்திற்காக ஒரு நாட்டுமக்கள் முழுவதும் அதன் சுமையை ஏற்கிறார்கள் என்றால் இது மார்க்சிய பொருளதாரமா என்ற கேள்வி எத்துணை அயோக்கித்தனமானது என்பதை வாசகர்களின் பார்வைக்கு விட்டுவிடுகிறேன். இது ஒரு பதில்.

    பணம் அச்சடித்து விடுவது என்றில்லை நாட்டுமக்களின் சேமிப்பும் அவிழ்த்துவிடப்படுகின்றன. நாம் வங்கிகளில் சேமிக்கிற பணம் a, B, C என்ற டெபாசிட்டுகளாக வகைப்படுத்தப்பட்டு சந்தையில் சூதாட அனுமதிக்கப்படுகின்றன. இதைப் பற்றியும் இவர்கள் வாய்திறக்கவில்லை. ஓய்வுதிய திட்டமும் அப்படிப்பட்டது தான் என்ற காரணத்தால் தான் அரசு வழங்கும் ஓய்வூதியத்திட்டத்தில் சேராதீர்கள் என்று வெளிப்படையாக அரசாங்க ஊழியர்களிடம் அறிவிக்கிறார்கள் பொருளியியல் நிபுணர்கள். இதுவும் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்திய ரூபாயை ஒரு சேர நீர்த்துப்போகச் செய்வதும் இழப்புகளை மக்கள் தலையில் கட்டுவதையும் மத்தியதரவர்க்கம் கவலையோடா பார்க்கப்போகிறது? இவர்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவும் இயலாது!

    இது ஒருபுறம் இருக்க பணம் அடித்து உள்நாட்டில் விடுவது பண மதிப்பை குறையச்செய்யும் என்பது உண்மை தான். அதை வலியுறுத்துகிற இராமன் பிறிதொரு பின்னூட்டத்தில் இவ்விதம் எழுதுகிறார்; “if value of currency goes down , that will increase the price of oil and again inflation will raise. Thats is why Raghuram Rajan is adamant on high interest rate” ஆனால் தன்னுடைய முதல் பின்னூட்டத்தில் இராமன் விளக்கும் பொழுது அவருடைய பதில் இவ்விதமாக இருக்கிறது “I think “Indian” is making fun of the mistake made by the author . To control the inflation , govt will try to limit the flow of currency by increasing the interest rate.”

    மேற்கூறிய விளக்கத்தின் படி கட்டுரையாளரின் தவறு என்று இங்கு எதுவும் இல்லை. மாறாக பணம் அச்சடித்து வெளியிடப்பட்டது பணவீக்கத்தை குறைப்பதற்கு பதிலாக பணவீக்கத்தை கொண்டுவரவே செய்தது என்பதுதான் தான் காரணம். வளரும் நாடுகளின் பிரேத்யேக அம்சமாக இந்நிலைமை இருப்பதற்கு காரணம் டாலரின் ஏகபோகமே! ஆனால் இராமனோ இந்தியனோ தங்கள் வசதிக்கு ஏற்ப டாலரின் ஆதிக்கத்தையும் முதலாளிகளின் ஊகபேர சுரண்டலையும் திட்டமிட்டு மறைக்கிறார்கள்.

    மத்தியதரவர்க்கத்திற்கு பணவீக்கம் என்றால் என்னவென்று தெரியாது என்று கவலைப்படும் இராமன் ரியல் எஸ்டேட் சந்தை குமிழிப்பொருளாதாரத்தைச் சேர்ந்தது என்ற எளிய உண்மை கூட தெரியாமல் இருக்கிறார். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போன்று இரகுராம் இராஜன் வீட்டுக்கடன் வட்டிவிகிதத்தைக் குறைக்கவில்லை என்கிறார். இது உண்மை என்றாலும் ரியல் எஸ்டேட் கொள்ளைக்கு வட்டிவிகிதம் காரணம் என்பது அப்பட்டமான பொய்யாகும். ஏனெனில் இதே பதினைந்து ஆண்டுகால இடைவெளியில் ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்காமல் பார்த்துக்கொண்டது. இது இரண்டாவது வேலை. தரகுமுதலாளி வர்க்க நலன்களுக்காக ரூபாயின் மதிப்பு சரிய வைக்கப்பட்டிருக்கிறது.

    எடுத்துக்காட்டாக இந்தியப்பொருளாதாரம் 8% என்று சொல்வதற்கு முன்பான பத்து ஆண்டுகளில் டாலரின் மதிப்பு 45 ரூபாய்தான். ஆனால் பொருளாதார வளர்ச்சி என்று சொன்ன காலத்தில் ரூபாயின் மதிப்பு சந்தி சரித்தது. பொருளாதாரம் உயர்ந்தால் ரூபாய் மதிப்பு அதிகரிக்க வேண்டும் இல்லையா? ஆனால் ஏன் சரிந்தது? மோடி புகழ் மேக் இன் இண்டியாவில் ரூபாயின் மதிப்பு 1/62 டாலராக இருக்கிறது. இதற்கு காரணம் சொல்ல முடியாதவர்கள் வீட்டுக்கடன் விகிதம் அதிகமாக இருப்பதே ரியல் எஸ்டேட் வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்வது பித்தலாட்டமின்றி வேறல்ல.

    மாறாக இதையே எளிய முறையில் விளக்கலாம். கட்டுரையாளரின் நண்பர் 50இலட்சம் கையில் வைத்திருந்த்தும் பிளாட்டு கிடைக்கவில்லை. இது இரண்டு உண்மைகளை உணர்த்துகிறது. ஒன்று ஊதிப்பெருக்கப்பட்ட ரியல் எஸ்டேட் பொருளாதாரம். அதே சமயம் 50 இலட்சம் எல்லாம் ஒரு மயிராக கருத முடியாது என்று சொல்கிற பணவீக்கம். இதை இரண்டிற்குமே காரணம் சொல்லாமல் வட்டிவிகிதம் என்று காரணம் சொல்வது நியாயமா? இதில் இண்டியன் வைக்கிற வாதம் முதலாளித்துவ பொருளாதாரம் இப்படி இயங்காதாம். தவறுகள் திருத்தப்படவேண்டுமாம்.

    விசயம் தெரியாது இவர்களுக்கு தெரியாது என்பது இங்கு பிரச்சனையில்லை. ஆனால் கட்டுரையாளர் எழுப்புகிற மையமான பிரச்சனைகளை இனம் காணாது மட்டுமின்றி சரியான தகவலையும் தவறு என்று வாதிடுகின்றனர் என்றால் இவர்களின் முதாலளித்துவ பாசம் விளங்கக் கூடியதுதான். ஆனால் கம்யுனிச வெறுப்பிற்கு எது நதி மூலம் ரிசி மூலம்?

    • //வளரும் நாடுகள் டாலரை வெளிச்சந்தையில் வாங்கி உள்நாட்டில் சுற்றுக்குவிடுகின்றன//

      உள் நாட்டில் டாலருக்கு என்ன வேலை ? ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி மட்டும் தான் அதன் ஒரே பணி

      //அச்சடிப்பது போல டாலரை சகட்டு மேனிக்கு அடித்துவிடுகிற பொழுது அதனால் பலன் பெறுகிறவர்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிற நாடுகளே.//

      எப்படி ? சகட்டு மேனிக்கு அடித்தால் டாலரின் மதிப்பு குறையும் , மதிப்பு குறைந்த டாலரை பெறுவதால் ஏற்றுமதியாளர் எப்படி பயன் பெறுவார் ?

      //அமெரிக்காவில் தான் விற்கிற பொருளுக்கு உற்பத்தி சாராத வெறும் பேப்பரை மட்டுமே வாங்கிக்கொண்டு போகின்றன வளரும் நாடுகள்//

      வளரும் நாடுகள் மட்டும் தங்கத்திற்கு இணையான பேப்பரா வைத்து இருகின்றன ?

      //ரியல் எஸ்டேட், வங்கிகள், காப்பீடு போன்ற துறைகள் உற்பத்தி சாராத டாலர் வரத்தால் உள்நாட்டில் விலையேற்றம் தாறுமாறாக போனதற்கு ஜப்பானை எடுத்துக்காட்ட இயலும்//

      டாலரை விட பெரிய பிரிண்டிங் மசினே வைத்து அடிக்கிறார்கள் . QE என்கின்றதை முதலில் பயன்படுத்தியதே அவர்கள் தான்

      //முதல் முறையில் வெளிச்சந்தையில் டாலரை விலைக்கு வாங்கி அதற்கு ஈடான பண மதிப்பை உள்நாட்டில் சுற்றுக்கு விடுவது//

      தவறு. அரசாங்கம் இதை செய்வது இல்லை . ஆனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பணம் செலுத்தும் பொது மட்டும் இதே ஏற்படும்.

      //வெளிச்சந்தையில் டாலரை வாங்குவது என்றால் என்ன? //
      ஏற்றுமதி செய்தால் டாலர் வரும் . செய்ய வேண்டியது தானே

      //உற்பத்தி சாராத டாலரை அமெரிக்கா சகட்டுமேனிக்கு அச்சிடுகிற பொழுது அது அமெரிக்காவை மட்டுமள்ள அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்த நாடுகளையும் குமிழியில் தள்ளும்//

      வெளிநாட்டு வாழ் மக்கள் இந்திய பங்கு சந்தையில் வாங்கும் போதும் இது ஏற்படும்

      //இதன் காரணமாகவே அந்நியச் செலவாணி கையிருப்பு இருந்தும் பல நாடுகள் டாலரை வெளிச்சந்தையில் வாங்குகின்றன. இச்செயலைச் சரிகட்டும் பொருட்டே பணம் ரிசர்வ் வங்கியால் அச்சடித்துவிடப்படுகிறது.//

      தவறு

      //மக்களின் வரிப்பண மூலம் தான் ரிசர்வங்கிகளை பணம் அடிக்கவைக்கிறது//

      தவறு

      //பொருட்டு பெரியண்ணனின் அர்த்தமற்ற டாலர் ஆதிக்கத்திற்காக ஒரு நாட்டுமக்கள் முழுவதும் அதன் சுமையை ஏற்கிறார்கள் //

      அமெரிக்காவை நம்பாமல் வேற யாரை நம்புவது. ரசியா வாங்கிய கடனை கட்ட முடியாமல் திவாலான நாடு . சீனா அமெரிக்காவிற்கு, அமெரிக்கர்கள் சொன்னபடி செய்து ஏற்றுமதி செய்து வாழும் நாடு. பிரச்சினை எல்லோருக்கும் தெரிந்ததுதான் தீர்வு வேண்டுமே.

      //ஒரு நாட்டுமக்கள் முழுவதும் அதன் சுமையை ஏற்கிறார்கள் என்றால் இது மார்க்சிய பொருளதாரமா என்ற கேள்வி எத்துணை அயோக்கித்தனமானது //
      பிரச்சினைதான் ஆனால் மக்கள் கையில் பணம் புழங்குகிறது விரும்பியதை செய்கிறான் . மார்க்சிய பொருளாதாரம் சிறப்பானதாக இருந்து இருந்தால் சீனா , ரசியாவேல்ல்லாம் முன்னுதாரணமாக இருந்து மக்களுக்கு வலி காட்டிய்ருக்கலாமே

      //ஓய்வுதிய திட்டமும் அப்படிப்பட்டது /

      நிலையான வரும்படி தரும் உதிரவாத்தம் கேட்பதற்கு நன்றாக இருக்கலாம் . ஆனால் அப்படி உலகில் இல்லை. நிலையற்ற அமைப்புதான் உலகு

      //இராமனோ இந்தியனோ தங்கள் வசதிக்கு ஏற்ப டாலரின் ஆதிக்கத்தையும் முதலாளிகளின் ஊகபேர சுரண்டலையும் திட்டமிட்டு மறைக்கிறார்கள்//

      டாலரின் ஆதிக்கம் செலுத்த மாற்று வழி இல்லை என்பதுதான்.

      //தரகுமுதலாளி வர்க்க நலன்களுக்காக ரூபாயின் மதிப்பு சரிய வைக்கப்பட்டிருக்கிறது. /

      கவிதை எழுதினால் , கல்லூரிகள் கட்டினால் என்ன ஏற்றுமதி செய்ய முடியும் ? வேறு வழி இல்லை . இல்லை “villege ” என்கிறன நிதே சியாமளன் படம் தான் நினைவுக்கு வருகிறது. க்யூபா நார்த் கொரியா போல அமேரிக்கா போச்சாண்டி காட்டி மக்களை ஒடுக்கி விவசாயமும் கஞ்சியும் குடிக்கலாம் .

      //இந்தியப்பொருளாதாரம் 8% என்று சொல்வதற்கு முன்பான பத்து ஆண்டுகளில் டாலரின் மதிப்பு 45 ரூபாய்தான். ஆனால் பொருளாதார வளர்ச்சி என்று சொன்ன காலத்தில் ரூபாயின் மதிப்பு சந்தி சரித்தது. பொருளாதாரம் உயர்ந்தால் ரூபாய் மதிப்பு அதிகரிக்க வேண்டும் இல்லையா? ஆனால் ஏன் சரிந்தது?//

      கடன் வாங்கி வளர்ச்சி . செல்வத்தை கணக்கு எடுக்கும் போது பக்கத்துக்கு வீட்டுக்காரன் கொடுத்த தங்க நகையையும் சேர்த்து கணக்கு போட்டு வளர்ச்சி என்றால் என்ன செய்வது ?

      //ஒன்று ஊதிப்பெருக்கப்பட்ட ரியல் எஸ்டேட் பொருளாதாரம்.//

      மக்களின் பேராசை

      //அதே சமயம் 50 இலட்சம் எல்லாம் ஒரு மயிராக கருத முடியாது என்று சொல்கிற பணவீக்கம். இதை இரண்டிற்குமே காரணம் சொல்லாமல் வட்டிவிகிதம் என்று காரணம் சொல்வது நியாயமா//

      பணவீக்கம் வட்டி விகிதம் இரண்டிற்கும் தொடர்பு உண்டு. பண அச்சடிப்பது , பக்கத்துக்கு வீட்டுக்காரன் பணத்தை சொந்த பணமாக நினைப்பது , கருப்பு பணம் என மற்ற காரணிகளோடு அதுவும் ஒரு காரணி

      //இவர்களின் முதாலளித்துவ பாசம் விளங்கக் கூடியதுதான். ஆனால் கம்யுனிச வெறுப்பிற்கு எது நதி மூலம் ரிசி மூலம்//

      கம்யூனிசம் வந்தால் பாலரும் தேனாறும் ஓடாது . நல்ல வீடு வேண்டும் என்று ஐம்பது லட்சத்தை வைத்து கொண்டு அரசாங்க அதிகாரியிடம் கெஞ்சி கொண்டு இருக்க வேண்டும். அப்போ அவன் நம்ம சாதிகாரனா என்று வேறு பார்த்து லிங்கு கனேக்சோன் எல்லாம் பிடித்து தொங்க வேண்டும் . கற்பனையில் கவிதை பாடாமல் ஒரு தடவை கியூபா பொய் பாருங்களேன் ? நேத்து கூட முப்பது பேர் யுயர் போனாலும் பரவாயில்லை என்று காற்று தோணியில் கியூபாவில் இருந்து தப்பி அமேரிக்கா கரையோரம் காணமல் போனார்கள் ..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க