privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாஏழை கிறித்தவ பெண்களை கொன்ற பாக் இசுலாமிய மதவெறி !

ஏழை கிறித்தவ பெண்களை கொன்ற பாக் இசுலாமிய மதவெறி !

-

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஒரு கணவன் — மனைவி இணை குரானின் சில பக்கங்களை எரித்தனர் என்று குற்றம் சுமத்தப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டு உள்ளனர். முல்லா ஒருவர் மசூதியின் ஒலிபரப்பிகள் வழியே அந்த கணவன் — மனைவிக்கு எதிராக மக்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டுள்ளார். ஷாபாஷ் மசீஹ் மற்றும் ஷாமா பிபி என்ற பெயர் கொண்ட அவர்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள். அடித்தட்டு மக்கள் பிரிவை சேர்ந்த அவர்கள் செங்கல் சூளை ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கொல்லப்பட்ட செங்கல் சூளை.
கொல்லப்பட்ட செங்கல் சூளை.

கணவருடைய தந்தையின் இறப்பை தொடர்ந்து தேவையற்றதாக தான் கருதிய சில காகிதக் கட்டுகளை ஷாமா எரித்துள்ளார். அதில் ‘எரிந்த’ குரானின் சில பக்கங்களை கண்ட அண்டை வீட்டார் ஒருவர் புகார் கொடுத்தது இந்த கொடூர சம்பவத்துக்கு மூலமாக இருந்துள்ளது. தங்களுக்கு ஆபத்து சூழ்ந்து இருப்பதை உள்ளுணர்ந்தனர் ஷாபாஷும் ஷாமாவும்.

தங்கள் முதலாளி முகமது யூசுஃப் குஜ்ஜாரிடம் சென்று வேறிடம் தாங்கள் செல்ல இருப்பதை கூறிய போது அவர் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் அனுமதிக்க முடியும் என்றுள்ளார். பிறகு இருவரையும் வெளியே விடாமல் செங்கல் சூளையிலேயே இரண்டு நாட்கள் அடைத்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் குரானை எரித்த ஷாமாவின் ‘பாவம்’ ஊர் முழுவதும் பரவியது. முல்லா ஒருவரின் தூண்டுதலின் படி நூறு பேருக்கு மேல் அங்கு திரண்டு வந்து அவர்களை அடித்து, உதைத்து பிறகு கால்களை உடைத்து, செங்கல் சூளையில் எரிந்து கொண்டிருந்த தீயில் வீசியெறிந்துள்ளனர். அவர்களுக்கு பிறந்த நான்கு குழந்தைகள் தற்போது அநாதையாகி உள்ளன.

ஷாபாஷையும், ஷாமாவையும் எரித்துக் கொன்றதன் பின்னணியில் தாலிபான் வகை பயங்கரவாத அமைப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய மதவாதக் கருத்தியலுக்கு பலியான ஒரு சமூகப் பகுதியின் நடவடிக்கையாக இது இருக்கிறது. மதவாதிகள் எந்த மதமாக இருந்தாலும், எந்த நாடாக இருந்தாலும் அவர்கள் நடவடிக்கையில் பேதம் இருப்பதில்லை என்பதை இந்த சம்பவம் முகத்தில் அறைந்து சொல்கிறது. பாகிஸ்தானின் சட்ட விதிகளில் தெய்வநிந்தனை (blasphemy) என்பது மரணதண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றம் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. மதவாதிகளோ அந்த சட்டம் கூட தேவையில்லை என்று அப்பாபாவிகளுக்கு தாமதியாமல் தண்டனை வழங்குகிறார்கள். அந்த வகையில் பாகிஸ்தானின் தெய்வநிந்தனை சட்டம் இஸ்லாமிய மதவாதிகளுக்கு மிகுந்த கடன்பட்டிருக்கிறது.

இதே மாகாணத்தின் இட்டான் வாலி என்ற கிராமத்தில் 2007-ம் வருடம் தண்ணீர் பகிர்ந்து கொள்வதில் அசியா பீபிக்கும் ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு வாய்த் தகராறு ஏற்பட்டது. அந்த முஸ்லிம் பெண்மணி நபிகள் நாயகத்தை அசியா பீபி தூற்றினார் என்று புகார் தொடுக்க அவருக்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது. அசியா பீபி குடும்பம் அந்த கிராமத்தின் ஒரே கிறிஸ்தவக் குடும்பம் என்ற காரணத்தால் அவருக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்க அந்தக் கிராமத்திலிருந்து எவரும் முன்வரவில்லை.

அப்போது அந்த கிறிஸ்தவ பெண்மணிக்கு ஆதரவாக ஒரு குரல் பாகிஸ்தானின் முஸ்லிம் பெரும்பான்மை சமூகத்திலிருந்து எழுந்தது. பாகிஸ்தானின் தெய்வநிந்தனை சட்டத்தை திருத்த வேண்டும் என்று ஒலித்த அந்த குரலுக்கு உரியவர் பஞ்சாப் மாகாண கவர்னர் சல்மான் தஸீர். 2011-ம் வருடம் மெய்க்காப்பாளர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் 26 குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தது.

சல்மான் தஸீருக்கு முன்னதாக தெய்வநிந்தனை சட்டம் கூடாது என்று சொன்ன பாகிஸ்தானின் சிறுபான்மை துறை அமைச்சர் ஷாபாஸ் பற்றி என்பவரும் கொல்லப்பட்டார். இதில் மிகக் கொடுமை என்னவென்றால் அசியா பீபியின் முறையீட்டை விசாரித்த லாகூர் உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பை வழங்கியது. தனது தீர்ப்பில் அசியா பீபியின் மரணதண்டனையை உறுதி செய்தது. மரணத்துடன் போராட அந்த ஏழைக் குடும்பத்தை மேலும் நிர்ப்பந்தித்துள்ளது பாகிஸ்தான் நீதி அமைப்பு. மனித உரிமை ஆர்வலர்களின் ஆதரவுடன் உச்சநீதிமன்றம் சென்றுள்ளார், அசியா பீபி.

ஆவேசமடையும் முஸ்லிம்கள்
ஆவேசமடையும் முஸ்லிம்கள்

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களின் தொகை இரண்டு சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. சிறுபான்மை சமூகம் என்றழைப்பதற்குரிய நிலையை எய்தாத ஒரு நுண்ணிய சிறுபான்மை பிரிவு என்ற நிலையில் இருக்கிறார்கள். மேலும் மேலும் தேய்ந்து வரும் இந்திய பார்சிக்களுடன் ஒப்பிடத்தக்க அளவில் தான் கிறிஸ்தவர்கள் பாகிஸ்தானில் இருக்கின்றனர்.பாகிஸ்தானில் முதல் கிறிஸ்தவ தேவாலயத்தை லாகூரில் கட்ட அக்பர் அனுமதி வழங்கினார். எனினும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஆங்கிலேய காலனியாக்கத்துடன் தான் முழுமை பெற்றது.

இந்தியா — பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்துக்களும், சீக்கியர்களும் பெருமளவுக்கு பாகிஸ்தானிலிருந்து வெளியேறிய போது பார்சிக்களும், கிறிஸ்தவர்களும் பாகிஸ்தானிலேயே தங்கினர். அவர்கள் இரண்டு தரப்பிலுமே சிறுபான்மையினராக கருதப்படுகின்ற வாய்ப்பே உள்ள நிலையில் புலம்பெயர்வை தவிர்த்தனர். மேலும் பாகிஸ்தான் அனைத்து மதங்களை பின்பற்றுவோருக்கும் சம உரிமையும், வழிபாட்டு உரிமையும் அளிக்கும் என்ற ஜின்னாவின் பிரகடனத்தை ஆறுதலாக பார்த்தார்கள்.

இந்த இரண்டு சமூகமும் தமது பலவீனமான சமூக இருப்பு காரணமாக தீங்கற்ற சமூகங்களாகவே கருதப்பட்டு வந்தன. பாப்ஸி சித்வாவின் ஐஸ் கேண்டி மேன் (Ice-candy Man) நாவல் இந்த இரு சிறுபான்மை சமூகமும் வதந்திகள் பேயாக உலவிய பிரிவினை காலகட்டத்தில் மக்களுக்கு உயிர்ச் சேதம் நேராமல் உதவியதை அழகுற படம் பிடித்திருக்கும். முல்லாக்கள் ஆதிக்கத்தில் இருந்து பாகிஸ்தானின் முஸ்லிம் பெரும்பான்மை சமூகம் விடுபட்டால்தான் அங்கே உண்மையான ஜனநாயகத்திற்கான போராட்டம் மலரும். அதுவரை கிறித்தவர்கள் மட்டுமல்ல முசுலீம் உழைக்கும் மக்களும் வெறு வேறு காரணங்களால் ஒடுக்கப்படுவர்.  சமூகப் பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்ப மதம் பயன்படுவது பாகிஸ்தானிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

– சம்புகன்

மேலும் படிக்க

  1. //முல்லாக்கள் ஆதிக்கத்தில் இருந்து பாகிஸ்தானின் முஸ்லிம் பெரும்பான்மை சமூகம் விடுபட்டால்தான் அங்கே உண்மையான ஜனநாயகத்திற்கான போராட்டம் மலரும். அதுவரை கிறித்தவர்கள் மட்டுமல்ல முசுலீம் உழைக்கும் மக்களும் வெறு வேறு காரணங்களால் ஒடுக்கப்படுவர்.//

    1. இதே மாதிரி இந்துக்கள் கொல்லப்பட்ட போது முதலைக் கண்ணீர் கூட விடவில்லை வினவு.

    2. நீங்கள் குறிப்பிட்ட முல்லாகள் எதனை சாட்சியா வைத்து, எதனை ஆதாரமாகக் கொண்டு இத்தகைய கொலைகளை செய்கிறார்கள் என்று கூட வினவு யோசிக்கவில்லை அல்லது யோசிப்பதற்கு கூட யோசிக்கவில்லை. ஆனால், பொதுவாக முல்லாக்களை மட்டுமே குற்றம் சாட்டுகிறது.

    என்ன ஒரு மனிதநேயம்…!!!

  2. பாகிஸ்தான் குடிமக்களும் மற்றும் பிரதமரும் அஜ்மீர் தர்காவிற்க்கு வந்து அஞ்சலி செலுத்துவதால், தெய்வ நிந்தனை சட்டத்த்தின் பிரகாரம் அவர்கள் தான் முதலில் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டியவர்கள்.

    குரானை எரித்தால் தெய்வ நிந்தனை என்றால், 5 லட்சம் ரூபாய் குடுத்தால் தெய்வ நிந்தனை இல்லாமலாகி விடுமா??

    5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதன் மூலம், தெய்வ நிந்தனை (!?) செய்தவர் தப்பிச் செல்ல உதவி செய்ய நினைத்தவருக்குள்ள தண்டனை என்ன??

  3. முஸ்லீம் மதவெறியர்கள்தான் இந்த கிருஸ்துவ தம்பதிகளை கொன்றார்களா அல்லது இந்து மதவெறியர்கள்தான் இந்தியாவிலிருந்து அங்குபோய் அந்த தம்பதியர்களை கொன்று அங்கு மதபகையை உண்டாக்கினார்களா என்று சரியாக தெரியவில்லை!!!! அனேகமாக இந்துக்களின் கைதான் இருக்கும் இதனை வினவு சரியாக விசாரித்து பக்கம் பக்கமாக எழுதவேண்டும்!!! இனிவரும் நாட்களில் எங்கு எது நடந்தாலும் இதனை பயன்படுத்தி “இந்து மதவெறி” யின் ஆட்டம்தான் இது என்று விடாமல் எழுதலாம்!!!!!!!

  4. காட்டு மிராண்டித்தனமான / மனித தன்மையற்ற செயல் இது. வன்மையாக கண்டிக்கத் தக்கது. முதலில் அவர்கள் தான் எரித்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் அட்லீஸ்ட் பிரச்சினையை ஆட்சியாளர்கள் / காவல்துறையினரிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு தண்டனை கொடுக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. மனிதனை மனிதனாக பாருங்கடா மூட முல்லாக்களா / முட்டாள்களா.
    முதல்ல இஸ்லாத்திலே மனிதனுக்கு மனிதன் அடிமையே இல்லை. முஹம்மது நபி அடிமைகளை விடுவிக்க எடுத்த முயற்சிகளை அவர்களுடைய வரலாறு சொல்லுகிறது.
    பிறிதொரு பத்திரிக்கையில் சம்பள கொடுக்கும் பிரச்சினையில் தகராறு வந்ததாக சொல்கிறது. ஒழுங்கா இஸ்லாம் சொல்லும்படி வியர்வை உலருமுன்னே வேலை செய்தோர் கூலியை கொடுத்தால் இந்த பிரச்சினை வந்திருக்குமா.
    முதல்ல இஸ்லாம் சொல்லும் படி வாழப்பாருங்கடா.

  5. நபி வழியை பின்பற்றிய இந்த மூமீன் களை பாகிஸ்தான் போலிஸும் நீதி மன்றமும் பாராட்டுமா இல்லை தண்டனை குடுக்குமா தண்டனை குடுத்தால் அது காபிர்த்தனம் ஆகி விடுமே ,யா அல்லா பாகிஸ்தான் நபி வழியை பின்பற்ற வேண்டும் என்று தூ..ஆ செய்கிறேன்…

  6. here muslims who quote from your so called messenger mohammed should realise that the people committed this atrocity are more knowledgeable in his words than you. Practically submission to islamic teachings leads to this kind of murders…First be human think beyond your compiled book

    • இந்துத்துவவம் மட்டும் அல்ல அமெரிக்க ஏகாதியபத்தியத்தையும் என்பதையும் கவனிக்க வேண்டும் சரவ்

    • Read the last line and it is given that this type of incident is happening in pakistatin whereas it happen every time in some other places. (read India). leopards cannot change their spots.

      • மூட்டைப்பூச்சி என்று யாரை சொல்லுகிறார் பாகிஸ்தானிலுல்ல மாற்று மதத்தவரையா அப்பிடிப்பாத்தாலும் அவர்கள் கொழுத்தியதே முட்டைப்பூச்சிகளைத்தான் என்று பொருள் வருகிறது மூட்டைப்பூச்சிக்காக வீட்டைக்கொழுத்தும் மூடர்களாக முஸ்லீம் தீவிரவாதிகள் இருப்பதுதான் உன்மையான நபி வழி…

  7. previously I visited Pakistan many occasions. It is not surprise News for me …I not hearing such inhumane news first time ….

    this people Not Muslims.. they are bloody animals & just bearing Muslim Names and
    this people simply disgracing Islam

  8. IF THEY WANT, THEY CAN KILL ANY NUMBER OF HINDUS AND VINAVU ALSO WILL SUPPORT THEM HOLEHEAREDLY, BECAUSE VINAVU BELIEVES SËCULARISM.”BUT IAM NOT BELIEVING THIS ARTICLE.
    PAKISTHAN IA SAFE PLACE FOR MINORITIES. STATISTICS MAY TELL THE TRUTH.

  9. கல்வியறிவு குறைவுதான் இதற்கு காரணம் படிப்பறிவில்லாத மக்களை பேச்சுத்திறமையுடைய ஒருவர் மதத்தின் பெயரால் எப்படியும் மூளைச்சலவை செய்யலாம் அப்படி செய்யப்பட்டவர்களை என்னவேண்டுமானாலும் எந்த காரியம் வேண்டுமானாலும் செய்யவைக்கலாம். இப்படியெல்லாம் இருக்குமா ? உண்மையா பொய்யா என்று யோசிக்கும் அறிவு கூட மழுங்கிவிடும். இந்தியாவில் படித்தவர்களையே மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்.

  10. http://tamil.oneindia.com/news/international/afghan-court-sentences-4-death-killing-woman-accused-burning-quran-226275.html
    http://www.dinamani.com/world/2015/05/07/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-/article2801047.ece

    அந்த கொலையை இசுலாமிய மதவெறி என்று தலைப்பில் செய்தி வெளியிட்ட வினவு, இஸ்லாமிய ஷரியத் சட்டதைகொண்டு அந்த பெண்ணை கொலை செய்த நான்கு பேருக்கு மரணதண்டனை அளிக்க தீர்பளித்திருக்கும் ஆப்கான் அரசின் செயலை இசுலாமியர்களின் நேர்மை என்று செய்தியாக போட்டு வினவு கட்டுரை எழுதுமா???? (ஒரு முஸ்லீம் கைதானால் முஸ்லீம் தீவிரவாதி கைது என்று தலைப்புச்செய்தியில் போட்டுவிட்டு அவர் நிரபராதி என்று விடுதலையானவுடன் சிறு பெட்டிசெய்தியில்கூட போடாத தினமனி, தினமலர், தினதந்தி போன்ற பத்திரிக்கைகளுக்கும் வினவுக்கும் இஸ்லாமியர்கள் விஷயத்தில் ஒரே ஊடக தர்மமோ என்று நினைக்கதோன்றுகிறது.)

Leave a Reply to suresh பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க