privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 19/11/2014

ஒரு வரிச் செய்திகள் – 19/11/2014

-

செய்தி: மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், “இந்திய பிரதமர் மோடி எனது சகோதரர் போன்றவர். அவரது தேர்தல் வெற்றி எனக்கு வியப்பளிக்கிறது. அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

நீதி: இனி ஆஸ்திரேலியாவில் எத்தனை முசுலீம் மக்கள் தலை உருளப் போகிறதோ!
________

செய்தி: “தருமபுரி அரசு மருத்துவமனையில் 2014-ம் ஆண்டின்படி இதுவரை 4,143 குழந்தைகள் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டன. அதில் 10.7% அதாவது 445 குழந்தைகள் மட்டுமே இறந்துள்ளன.” – கீதாலட்சுமி, தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர்.

நீதி: 4000 குழந்தைகளில் 400 இறந்து போனதெல்லாம் ஒரு மேட்டரா என்கிறார் கீதாலட்சுமி.
_________

செய்தி: “கீழே விழுந்த கிளையல்ல நாங்கள், ஆலம் விதை” – ஜி.கே.வாசன்.

நீதி: ஓலமெல்லாம் ஆலமென ரீல் விடுவது காலத்தின் கோலம்!
________

செய்தி: வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா புதருக்குள் மறைந்திருந்த வித்யா என்ற பெண் புலி நேற்று கூண்டில் சிக்கியது. இதன் மூலம் நான்கு நாட்கள் நிலவிய பீதி நீங்கியது.

நீதி: அம்பானி, அதானி, மல்லையா போன்ற பெருச்சாளிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் நாட்டில் இந்த வித்யா புலியால் என்னய்யா பீதி?
________

செய்தி: ஆவின்பால் கலப்பட வழக்கில் வைத்தியநாதன் உட்பட 19 பேர் மீதும், தலைமறைவாயிருக்கும் அவரது மனைவி ரேவதி, பால் தரக்கட்டுப்பாட்டாளர் அப்துல் ரகீம் உட்பட நால்வர் மீதும் சிபிசிஐடி போலிசாரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதி: தலைமறைவாயிருக்கும் நால்வரை பிடிக்காத போலீசு, கலப்பட கொள்ளையில் பகிரங்கமாக மறைந்திருக்கும் உண்மையை எப்படி கண்டுபிடிக்கும்?
_________

செய்தி: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரட்டை குண்டு வைத்தவர்கள் மேற்கு வங்கத்தில் இந்திய எல்லையில் பதுங்கியிருப்பதை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

நீதி: குஜராத் மாநிலத்தில் 2002-ம் ஆண்டு 2000த்திற்கும் மேற்பட்ட முசுலீம் மக்களை கொன்றவர்கள் தலைநகர் புதுதில்லியில் பகிரங்கமாக உலா வருவதை இந்த புலனாய்வு புலிகள் ஏன் கண்டு பிடிக்கவில்லை?
________
செய்தி: தருமபுரி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 5 குழந்தைகள் பலியானதைத் தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 6 நாட்களில் எட்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

நீதி: எந்த மருத்துவமனையானாலும் ஏழை உயிருக்கு மதிப்பில்லை. அரசின் அலட்சியத்திற்கும் குறைவில்லை.
________

செய்தி: குழந்தைகள் தொடர்பலி விவகாரத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி, மவுனம் காப்பது தொகுதி மக்கள் மத்தியில் விமரிசனத்தை உருவாக்கியுள்ளது.

நீதி: இளவரசன் மரணத்திற்கு காட்டிய மவுனம் போல இளவரசனது வர்க்கத்திற்கும் காட்டுகிறார் அன்புமணி, இதில் என்னய்யா விமரிசனம்?
________

செய்தி: குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி நானாவதி ஆணையம், தனது இறுதி அறிக்கையை முதல்வர் ஆனந்திபென் படேலிடம் வழங்கியது. 2000-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இறுதி அறிக்கையை அரசிடம் கொடுத்த நீதிபதி நானாவதி அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்களைத் தெரிவிக்க மறுத்து விட்டார்.

நீதி: இனி என்ன? 2002-ம் ஆண்டு குஜராத்தில் கலவரமே நடக்கவில்லை என்று பாடத்திட்டத்தில் வரலாறு மாற்றி எழுதப்படும். கொலைகாரனிடமே குற்றம் குறித்த விசாரணையை சமர்ப்பித்தால் அதில் குற்றம் ஏது, நீதி ஏது?
________

செய்தி: முத்கல் கமிட்டியால் ஐபிஎல் சூதாட்ட குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள என்.சீனிவாசனுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியல் ஆதரவு தெரிவித்துள்ளது.

நீதி: சீனிவாசன் தன்னைத்தானே ஆதரித்துக் கொண்டதை நாகரீகமாக சொல்கிறார்களாம்!
________

செய்தி: காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் வாசனின் புதிய கட்சிக்கு செல்வதைத் தடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.

நீதி: ஆளில்லாத டாடா சுமோவிலிருந்து 50 பேர் தொலைந்து போனாதாக சொன்னால் உங்கள் சொந்த ஊரே நம்பாது, மிஸ்டர் ஈவிகேஎஸ்!
________

செய்தி: சிதம்பரத்தில் மருமகனை கூலிப்படை வைத்து கொலை செய்ய முயன்றதாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

நீதி: இலவசமாக சுட்டுத் தள்ளுவதற்கு காக்கி படை இருக்கும் போது காசு செலவாகும் கூலிப்படை எதற்கு சப்-இன்ஸ்பெக்டர்?
________

செய்தி: அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான கிரிமினல் சாமியார் ராம்பாலின் ஆசிரமத்தின் முன் போலீசாருக்கும், சாமியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயம் அடைந்த தாயும், அவரது 5 வயது குழந்தையும் பலியாகி உள்ளனர். மேலும், 4 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

நீதி: மக்களுக்காக போராடும் மாவோயிஸ்டுகளை ஒழிக்க விமானப்படையையே இறக்கிய அரசு, ஒரு கிரிமினல் சாமியாரை கைது செய்ய வக்கற்று போனது ஏன்? காவிகளின் ஆட்சியில் காவி சாமியார்கள் கொலையே செய்யலாம்!
________

செய்தி: வீடிழந்த குடும்பத்தினருக்கான தேசிய மையம் என்ற அமைப்பு அமெரிக்கா முழுவதிலும் சர்வே நடத்தி 2012-2013-ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை வெளியிட்டது. அதில் கடந்த ஆண்டு 2.5 மில்லியன் குழந்தைகள், குடும்ப வன்முறை உள்ளிட்ட காரணங்களால் அனாதையாக விடப்படுவதாகவும், நாட்டில் வறுமை 8 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், 30 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை வீடின்றி தவித்து வருவதாக தெரிவித்துள்ளது.

நீதி: ஈராக், ஆப்கான், ஈரான், சிரியா என்று மனித குலத்தை அழிப்பதற்கு அளப்பரிய சேவை செய்யும் அமெரிக்கா சொந்த மக்களை மட்டும் விட்டுவிடுமா என்ன?
_______

செய்தி: பிஜி சென்றுள்ள பிரதமர் நரேந்திரேமாடி, “’முன்னாள் பிரதமர் இந்திராவின் பிறந்த நாளை முன்னிட்டு, நாட்டு மக்கள் அவரை நினைவுகூர்ந்து வரும் வேளையில், நானும் அவர்களுடன் இணைந்து அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்,” என்று டுவிட்டரில் தனது அஞ்சலியை வெளியிட்டுள்ளார்.

நீதி: பாசிச இந்திராவை காளி, துர்கை என்று உருகி உருகி சிறையில் இருந்து ஜால்ரா போட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் தேவரஸ் பாரம்பரியத்தின் படி இந்த அஞ்சலி தவறல்ல!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க