privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்க அநீதி மன்றத்தை எதிர்த்து கருப்பின மக்களின் போர் !

அமெரிக்க அநீதி மன்றத்தை எதிர்த்து கருப்பின மக்களின் போர் !

-

ferguson1மெரிக்காவின் மிசௌரி மாநிலத்திற்குட்பட்ட செயிண்ட் லூயிஸ் பகுதியில் அமைந்திருக்கும் பெர்குசன் நகரம் போராட்டத் தீயினால் பற்றி எரிகிறது. கருப்பின இளைஞர் மைக்கேல் பிரவுனை கடந்த ஆகஸ்டில் அநியாயமாக சுட்டுக் கொன்ற வெள்ளையினக் காவலர் டேரன் வில்சன் மீது குற்றம் பதிவு செய்ய அவசியமில்லை என்றும், அவர் தற்காப்புக்காகவே சுட்டுக் கொன்றார் என்றும் பெருநகர நீதிமன்றத்தின் நடுவர்கள் தந்த தீர்ப்பளித்த்தே இதற்கு காரணம். கருப்பின மக்கள் மட்டுமின்றி ஜனநாயக சக்திகளும் பெர்குசன் தவிர கலிபோர்னியா, சிகாகோ, வாஷிங்டன் என தங்களது போராட்டத்தை நீட்டித்து மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

தீர்ப்பு வெளியான நவம்பர் 23 முதல் பல்வேறு இடங்களில் நடந்துள்ள போராட்டங்களில் ஏராளமான கட்டிடங்கள் மட்டுமின்றி காவல்துறை வாகனங்களும் சேதமுற்றுள்ளன. ஏறக்குறைய 34 மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் பேரணிகளை மக்கள் தொடர்ந்து நடத்தி இருக்கின்றனர். வாஷிங்டனில் உள்ள காவல்துறை தலைமையகத்தின் முன்புறம் தரையில் படுத்தும், நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஆயிரம் முறை சுற்றி வந்தும் போராட்டம் அமைதி வழியிலும் நடைபெற்று வருகிறது.

தீர்ப்பு வெளியானவுடன் பெர்குசன் நகர காவல்நிலையத்தை முற்றுகையிட்ட கருப்பின மக்கள் போலீசார் மீது கல்வீசித் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வகையில் தமது எதிர்ப்பை தெரிவித்தனர். இதுவரை 400 பேரை போலீசார் கலவரத்தில் ஈடுபட்டதாக சொல்லி கைது செய்துள்ளனர். மக்களை வேவு பார்க்க ஆளில்லா விமானங்களை அரசு பயன்படுத்தி வருகிறது. பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் போராடும் மக்களை கண்ணீர் புகை குண்டுகளால் தடுத்து நிறுத்த முடியாத போலீசார், எதிர்தரப்பில் இருந்து உண்மையான குண்டுகள் தங்களை தாக்குவதாக புரளி கிளப்பி வருகின்றனர்.

நீதி கேட்டு போராடும் மக்கள்
நவம்பர் 26 அன்று நடைபெற்ற போராட்டம்

மக்களை அமைதி காக்குமாறு அதிபர் ஒபாமா கோருகிறார். நீதிபதிகளின் தீர்ப்பினால் தாங்கள் ஏமாற்றமடைந்தாலும் போராடும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மைக்கேல் பிரவுணின் குடும்பத்தினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் அவரது மரணத்தின் போது நடந்த போராட்டத்திற்கு போலீசின் எதிர்வினை ஊடகங்களை கிழித்து தொங்க விட்டதை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த மக்கள் இப்போது தங்களது நீண்ட நாள் கோபத்தை ஓரளவு தீர்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தான் உண்மை.

ஏழை குடும்பத்தில் பிறந்த மைக்கேல் பிரவுண் பதின்ம வயதின் இறுதியில் இருப்பவர். பள்ளியிறுதி முடித்த அவன் ஒரு ஏசி மெக்கானிக்காக பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார். சம்பவம் நடந்த ஆகஸ்டு 9 அன்று தன் பாட்டி வீட்டுக்கு நண்பன் டோரியன் ஜான்சனுடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். நடந்து போய்க் கொண்டிருந்த அவர்களை வேகமாக போகுமாறு வழிமறித்த காவலர் டேரன் வில்சன் எச்சரித்தார். தாங்கள் போகுமிடம் அருகில் இருப்பதால் விரைவில் போய் விடுவோம் என்கிறார் ப்ரவுண்.

தன்னுடன் வாதம் புரியும் ஒரு எளிய கருப்பின இளைஞனுக்கு ‘கொஞ்சம் திமிர்’ இருப்பதாக கருதும் வில்சன் காரின் முன் ஜன்னல் வழியாக பிடித்திழுக்க முயல்கிறார். அவரிடமிருந்து தப்ப முயன்ற பிரவுணை பத்தடி தூரத்திற்குள் ஆறு ரவுண்டுகள் பிஸ்டலால் சுட்டுக் கொல்கிறார். தன்னிடம் ஆயுதம் ஏதுமில்லை என கைகளை உயர்த்திக் காட்டிய பிறகும் சுட்ட நான்கு ரவுண்டுகள் இதில் அடக்கம்.

கருப்பின மக்கள் ஓரளவு அடர்த்தியாக வசிக்கும் கெட்டோ என்ற சேரிப் பகுதியில் வசிக்கும் பெரும்பான்மை ஏழைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு போன்றவை மறுக்கப்பட்டுத்தான் வருகிறது. இங்கு கூ க்ளஸ் கிளான் போன்ற நியோ நாசிகள் கருப்பின வெறுப்பை தைரியமாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதும் வாடிக்கை . கலிபோர்னியா பகுதியே 1862 உள்நாட்டுப் போரில் அடிமை முறைக்கு ஆதரவாக இருந்த நிலபிரபுக்களின் பூமிதான். கணிசமாக இங்கு வசிக்கும் வெள்ளையர்கள் பழைய ரோமன் கத்தோலிக்க பிரிவினை சேர்ந்தவர்களாக இருப்பதும் இதற்கு பொருத்தமாகவே இருக்கிறது. அதனால் தான் இங்கே ஜார்ஜ் புஷ் போன்ற பாசிசக் கோமாளிகளுக்கு கணிசமான ஆதரவு இருந்து வந்தது.

இந்த அதிர்ச்சியும், ஆத்திரமும் அப்பகுதி மக்களின் சமூக கோபங்களை உடனடியாக கிளறி விட போதுமானதாக இருந்தது. இப்போது வந்துள்ள தீர்ப்போ முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி என்பதால் மக்களின் கோபம் வீதிக்கு வந்திருக்கிறது. கூடவே பல்வேறு ஜனநாயக சக்திகளும் வந்திருப்பதால் அமெரிக்க ஆளும் வர்க்கம் செய்வதறியாமல் திகைக்கிறது.

பரமக்குடியானாலும், தாமிரபரணியானாலும், மைக்கேல் பிரவுண் ஆனாலும் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களை சுட்டுக்கொல்லும் போது மாத்திரம் தற்காப்பு என்ற சொல் அதிகார வர்க்கத்திற்கு கேடயமாக வந்து நிற்கிறது.

அவர்களுக்கு மக்களின் தாக்குதல் எனும் நடவடிக்கையே அந்த தற்காப்பின் மோசடியை உடைத்தெரியும்.

போலி என்கவுண்டருக்கு பதில் இத்தகைய போர்க்குணமிக்க போராட்டங்களே!

வீடியோ

மேலும் படிக்க