privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபேருந்து தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம் !

பேருந்து தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம் !

-

பேருந்து தொழிலாளர்கள் போராட்டம் வெல்க!

striking-worker

திய உயர்வு மற்றும் தமது 28 பிற கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கோரி போக்குவரத்துத் துறை ஊழியர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விட்டதாக அலறுகின்றன ஊடகங்கள். ஜெயலலிதா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து பேருந்துகளை எரிப்பது, போக்குவரத்தை முடங்கச் செய்வது என்று அ.தி.மு.க குண்டர்கள் போட்ட ஆட்டத்தை செல்லமாக சுட்டிக் காட்டிய ஊடகங்கள், போக்குவரத்துத் துறை தொழிலாளர்களை வில்லன்கள் போலச் சித்தரிக்கின்றனர்.

உண்மையில் இந்த வேலைநிறுத்தம், ஜெயா தலைமையிலும், இப்போது அவரது பினாமியின் தலைமையிலும் நடக்கும் அரசின் திமிரினால் ஏற்பட்ட பிரச்சனையின் விளைவே.

2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கான தொழிற்சங்க தேர்தலில் அப்போதைய ஆளும் கட்சியான தி.மு.கவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் பெரும்பான்மை வாக்குகளை பெற்று அங்கீகாரத்தை வென்றது. அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அரசாணைப்படி 2015 அக்டோபர் வரை தொ.மு.ச போக்குவரத்துத் துறை ஊழியர்கள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தும் ஒரே பிரதிநிதியாக அங்கீகரிக்கப்பட்டது. ‘ஆளும் கட்சிக்கு (அப்போதைய) தண்டனிடுவதே புத்திசாலித்தனம்’ என்ற தொழிலாளர்களின் பிழைப்புவாதத்தின் விளைவாக இருந்தாலும், அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையின்படி முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கம் தொ.மு.ச.

ஆனால், ஜெயாவின் அ.தி.மு.க அரசு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்த மறுத்து வருகிறது. 2011-ம் ஆண்டிலேயே அ.தி.மு.கவின் அண்ணா தொழிற்சங்க பேரவை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்துக்கு ஒரே பிரதிநிதி அந்தஸ்து கொடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் மீதான இடைக்கால உத்தரவில், உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் முடிவின்படி அங்கீகரிக்கப்பட்ட சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தத் தடையில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், 2011-ல் தி.மு.க ஆட்சியில் போடப்பட்டு கடந்த ஆகஸ்ட் 31-ல் காலாவதியான ஊதிய ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்த மறுத்து வருகிறது, தமிழக அரசு. ஊழியர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு மறுக்கப்பட்டு வருகிறது. இதற்கு முழுக் காரணம் அ.தி.மு.க அரசின் மற்றும் ஜெயாவின் தனிப்பட்ட ஓட்டுப் பொறுக்கும் வஞ்சம் மட்டுமே.

15 மாதங்களுக்கு முன்பிருந்தே இது தொடர்பாக மனு கொடுத்து முறையிட்டு வந்திருக்கின்றன தொழிற்சங்கங்கள். டிசம்பர் 4 அன்றே வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அரசுக்கு அறிவிப்பு கொடுத்திருக்கின்றன. அதன் பிறகும் இந்த வழக்கமான நிர்வாக நடைமுறையை உடனடியாக நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்திய ஜெயா அரசே இந்த பிரச்சனைக்கு முழுப் பொறுப்பு.

bosses-vs-workersபேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என்ற  கோரிக்கையை மட்டும் முன் வைத்து இந்த போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றன, தொழிற்சங்கங்கள்.

“எமது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. 15 மாதங்களுக்கு முன்பிருந்தே நாங்கள் மனு கொடுத்து வலியுறுத்தி வரும் ஊதிய உயர்வு முதலான கோரிக்கைகள் குறித்து எங்களுடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றுதான் கோருகிறோம். வழக்கமான நடைமுறைப்படி, அக்டோபர் மாதம் 1-ம் தேதி வழங்கப்படும் சம்பளத்திலிருந்தே ஊதிய உயர்வு வழங்கபட்டிருக்க வேண்டும்” என்கின்றனர் தொழிற்சங்கத்தினர்.

பினாமி ஜெயா அரசு, அங்கீகரிக்கப்பட்ட  தொழிலாளர் முற்போக்கு சங்கத்தையும், பிற தொழிற்சங்கங்களையும் அழைத்ததும் இந்தப் போராட்டம் முடிவுக்கு வரும். ஆனால், அதைச் செய்யாமல், தி.மு.க தொழிற்சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு போடுமாறு கேட்கிறார் பினாமி முதல்வர் பன்னீர்செல்வம். அப்படிப்பட்ட மனு தேவையில்லை என்றும் அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்துவதில் தமக்கு எந்த மறுப்பும் இல்லை என்று கூறுகிறது தி.மு.க.வின் தொழிற்சங்கம்.

நூற்றுக் கணக்கில் தொழிலாளர்களை கைது செய்வது, அ.தி.மு.க குண்டர்களை வைத்து பேருந்துகளை சேதப்படுத்துவது, அதி.மு.க சங்கத்தைச் சேர்ந்த ஒரு சில ஊழியர்களை வைத்து பேருந்துகளை இயக்கி தொழிலாளர்களின் ஒற்றுமையை குலைக்க முயற்சிப்பது, மக்கள் மத்தியில் அவதூறு பிரச்சாரம் செய்வது என்று கீழ்த்தரமான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகின்றது, ஜெயாவின் அரசு. இதற்கு துணை போகின்றன ஊடகங்கள்.

ndlf-bus-strike

இவற்றை முறியடித்து, போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம்.

ஜெயலலிதாவின் பினாமி அரசே!

  • பேருந்து தொழிலாளர்களை கைது செய்வதை உடனே நிறுத்து!
  • தொழிற்சங்க ஜனநாயக உரிமையை பறிக்காதே!

உழைக்கும் மக்களே!

  • போராடும் பேருந்து தொழிலாளர்களுக்கு துணை நிற்போம்!
  • குற்றவாளி ஜெயலலிதாவுக்காக நான்கு நாட்கள் பேருந்து நிறுத்தத்தை அங்கீகரித்த ஊடகங்கள் தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கு எதிராக செயல்படுவதை இனம் காண்போம்

பேருந்து தொழிலாளர்களே!

  • ஊதிய உயர்வுக்கான போராட்டம் மட்டும் தீர்வு அல்ல
  • தனியார்மய மறுகாலனி ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்தில் ஒன்றிணைவோம்

தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளியிட்ட துண்டுப் பிரசுரம்:

bus-strike-pala-stand

  1. பொதுமக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கும் வகையில் எந்த வேலைநிறுத்தமும் அனுமதிக்கமுடியாது.அது எவர் செய்தாலும் ஒரே அளவுகோல்தான்.எந்தவொரு போராட்டமும் பொதுமக்களை பாதிக்காமல் இருப்பதே நல்லது.

    • நமது முனோர்கள் இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகிதான் நீங்கள் இந்த அளவுக்கு முதலாளித்துவ பிடியில் இருந்து விடுபட்டுள்ளீர்கள்

    • பொது மக்களின் அன்றாட வாழ்விற்க்கு பாதிப்பு ஏற்ப்படுவது அர்சின் கோமாளித்தனத்தால்தான் நிச்சயமாக தொழிழாலர்கள் இல்லை ஊதிய உயர்வு நியாமான கோரிக்கைதானே ஏன் இழுத்தடிக்கனும் பெரும்பாலான தொழிலாளர்கள்( கண்டக்டர் டிரைவர் போன்றவர்கள் )எவ்வளவு அதிகமாக உழைத்தாலும் நிருவாகம் நட்ட கணக்குதான் காமிக்குதுனு சொல்லுறாங்க இது என்னமோ நிருவாகத்த தனியாருக்கு குடுக்க கொஞ்சம் கொஞ்சமா அரசு முயற்ச்சி செய்யுர மாறி தெரியுது பாக்கலாம் நிழல்முதல்வர் அலைஸ் மக்கள் முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலும் டம்மி முதல்வர் சீரோ பன்னீர் செல்லவத்தின் செயல்பாடு என்னனுதான்…..

  2. தொழிலாளர்களின் பிழைப்புவாதத்தின்

    -தொழிலாலர்களை கொச்சைபடுத்தாதீர்கள்

  3. பாவம் நடத்துனர்கள் மற்றும் ஒட்டுனர்கள். அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கினால் தப்பில்லை. ஊழல் இன்றி ஊர்தியில் உழைக்கும் தொழிலாளர்கள்.அரசு உழைப்புக்கு உரிய ஊதியத்தை கொடுத்துவிட்டு உழைக்காமல் கொள்ளை அடிக்கும் வழிகளை தடுக்க வேண்டும்.

  4. வேலைநியமனமுறைகேடு,மட்டமான பராமரிப்பு,உதிரி பாகங்கள் கொள்முதலில் கொள்ளை,அதிகார வர்க்கத்தின் ஆசி பெற்றவர்களின் அட்டகாசம், பொது மக்களின் அவதி இவை எவற்றுக்கும் குரல் கொடுக்காத தொழிலாளர்கள், ஊதிய உயர்வுக்காக மட்டும் போராடுவது அசிங்கமே.

  5. பொது மக்களின் அன்றாட வாழ்விற்க்கு பாதிப்பு ஏற்படுவது அர்சின் கோமாளித்தனத்தால்தான் நிச்சயமாக தொழிழாலர்கள் இல்லை ஊதிய உயர்வு நியாமான கோரிக்கைதானே ஏன் இழுத்தடிக்கனும் பெரும்பாலான தொழிலாளர்கள்( கண்டக்டர் டிரைவர் போன்றவர்கள் )எவ்வளவு அதிகமாக உழைத்தாலும் நிருவாகம் நட்ட கணக்குதான் காமிக்குதுனு சொல்லுறாங்க இது என்னமோ நிருவாகத்த தனியாருக்கு குடுக்க கொஞ்சம் கொஞ்சமா அரசு முயற்ச்சி செய்யுர மாறி தெரியுது பாக்கலாம் நிழல்முதல்வர் அலைஸ் மக்கள் முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலும் டம்மி முதல்வர் சீரோ பன்னீர் செல்லவத்தின் செயல்பாடு என்னனுதான்…..

Leave a Reply to thittha பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க