privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்40 வயதுக்கு மேல் ஐ.டி துறையில் வேலை இல்லை - பங்கஜ்

40 வயதுக்கு மேல் ஐ.டி துறையில் வேலை இல்லை – பங்கஜ்

-

ங்கஜ், வயது 40, மும்பையைச் சேர்ந்தவர். ஐ.டி துறை ஊழியர்களுக்கான தொழிற்சங்கம் அமைப்பது பற்றிய பிரச்சாரத்தின் போது அவரை சந்தித்தோம். முதலில் நம்மிடம் பேச தயங்கியவர் பிறகு தனது ஆதங்கங்களை கொட்டித் தீர்த்தார்..

jobloss“நான் அமெரிக்காவில் ஹவாய், புளோரிடா, கனடா என வட அமெரிக்கா முழுவதும் 12 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளேன். எச்1பி விசா காலாவதி ஆனதால் 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா திரும்பினேன். ஒரு நடுத்தர அளவு கம்பெனியில் 2 ஆண்டுகள் வேலை செய்தேன். அதன் பிறகு அதே கட்டிடத்தில் இருந்த சிறு நிறுவனத்திற்கு மாற முனைந்த போது எல்லா ஃபார்மாலிட்டியும் முடிந்த பிறகு எச்.ஆர் ஒரு கலந்துரையாடலின் போது முந்தைய மட்டத்திலேயே இங்கும் பணிபுரிய முடியுமா எனக் கேட்டார்.

இரண்டு மாத கால நோட்டீசு காலத்திற்கு மத்தியில் முந்தைய நிறுவனம் என்னைப் பற்றிய எதிர்மறை தகவல்களை கொடுத்திருக்கிறது என யூகித்தேன். அதற்குள் நான் முந்தைய வேலையையும் ராஜினாமா செய்து விட்டேன். இப்போது ஒன்றரை ஆண்டுகளாக வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்.

நிறுவனங்கள் தமக்குள் ஒரு தொழில்முறை வலைப்பின்னலைக் கொண்டுள்ளன. தொழிலில் தமக்குள் சில ஒத்துப்போகும் வேலைப்பாணியை பெற்றிருக்கின்றனர். நான் திரும்ப வேலைக்கு முயற்சித்த போது எங்கும் வேலை கிடைக்கவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். நவுக்ரி, டைம்ஸ் ஜாப், மான்ஸ்டர், ஷைன் போன்ற இணைய தளங்களில் இருந்து அவ்வப்போது வேலைக்கான அழைப்புகள் வரும். சில சுற்றுக்கள் நேர்முகம் கூட முடிந்து விடும். கடைசியில் வாய்ப்பில்லை என சொல்வார்கள். இதெல்லாம் எனது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் தான் சொல்கிறேன்.

இந்திய தகவல் தொழில்நுட்ப துறை சந்தையில் நிறைய ஓட்டைகள் உள்ளன. ஆனால் நமக்கு மூடப்பட்டு தெரியும் அவை நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் இருப்பதுதான் உண்மை. எனது பதினான்கு ஆண்டு கால தகவல்தொழில்நுட்பத் துறை வேலையில் ஊடாக சொந்த அனுபவத்தில் கற்றறிந்த பாடம் இது. எனது ஆர்.டி சேமிப்பு பணத்தில்தான் குடும்பத்தை நடத்தி வருகிறேன்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் ஒரு ஐ.டி நிறுவனம் நினைத்தால் உங்களது சொந்த ஈமெயிலுக்கு வரும் தகவல்களைக் கூட அட்சரம் பிசகாமல் கண்காணிக்க முடியும். நவுக்ரி, மான்ஸ்டர் போன்ற வேலை வாய்ப்பு தளங்களில் இருந்து வரும் இணைய கடிதங்களையும் கண்காணிக்க முடியும். இதுவும் சொந்த அனுபவத்தில் இருந்துதான் கூறுகிறேன்.

ஐடி துறையில் இருப்பதாலேயே நாம் ஒயிட் காலர் கூலிகள் என்ற உண்மை இல்லாமல் போய் விடாது. ஐ.டி நிறுவனங்கள் மிகவும் இளமைத் துடிப்பான ஊழியர்களை எதிர்பார்க்கிறது. என்னைப் போல நாற்பதுகளை தொட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தத் துறையில் தொடர்வது மிகவும் கடினமானது. வேலைக்கான சந்தை நாற்பதைத் தொடுபவர்களுக்கு பாதகமாக உள்ளது. இங்கே மற்ற தொழிலாளிக்கும் ஐடி வெள்ளைக் காலர் தொழிலாளிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கூடுதலாக, ஐடி துறையில் எல்லாமே அரசியல்தான். சொல்லப் போனால் 80 சதவீதம் அரசியல்தான்.

நீங்க கணினி அறிவியலில் முதுகலையோ அல்லது பி.எச் டியே படித்திருந்தாலும் இதுதான் நிலைமை. இல்லையெனில் நீங்கள் நிர்வாகத் தரப்பு ஊழியராக தாவிச் சென்றிருந்தால் தப்பிக்க முடியும். இன்னமும் கோடிங் அடித்துக் கொண்டிருந்தால் தப்பிக்க முடியாது. இப்போது வரும் இளைஞர்களுக்கு இப்படி தப்பிக்கத்தான் நான் வழி சொல்லுவேன். அப்படிச் செல்பவர்கள் தப்பித்து பிழைத்துக் கொள்ள முடியும்.

முப்பதுகளில் இருப்பவர்கள் நாற்பதுகளை விட நன்றாக கோடு எழுதுவார்கள். வேகமாக எல்லாவற்றையும் கிரகித்துக் கொள்வார்கள் என்பது தான் நிர்வாகத் தரப்பின் நியாயங்கள். அவர்கள் லைஃபை பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள்.

தொழில்முறை வலைப்பின்னலுடன் செயல்படும் இந்நிறுவனங்களைப் பற்றி போலீஸ் எஸ்.பி, சிபிஐ என்று புகார் கொடுத்தும் எந்த பலனுமில்லை. நாஸ்காம் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். பிக்கி பற்றி எனக்கு ஏதும் தெரியாது. ஒரு திறமையான ஊழியரை நிறுவனமும், வேலை தேடுவதற்காக இருக்கும் நிறுவனமும் நினைத்தால் வெளியேற விடாமல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு எனது சொந்த அனுபவமே சான்று.

நீங்க டிசிஎஸ் இண்டர்வியூ போகலாம், இன்போசிஸ் போகலாம். அவ்வளவு ஏன் ஆஃபர் லெட்டரே கூட வாங்கலாம். ஆனால் வேலைக்கு போக முடியாது. எல்லா இடத்திலும் ஊழல் மலிந்துள்ளது. அரசாங்கம் சட்டங்களை வலுவாக்கினால் இதனை தடுக்க முடியும். முக்கியமாக வயதையோ, திருமணமானவரா என்ற விபரத்தையோ நிறுவனங்கள் கேட்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.”

____________________

ஆனால், மோடி அரசு இருக்கும் சட்டங்களை நீர்க்கச் செய்யும் வேலையை செய்து கொண்டிருக்கிறது என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

இவரது தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து தற்போது இறந்து விட்டார். எல்லா படிப்பிலும் டிஸ்டிங்சனில் பாஸான் இவர் எம்.எஸ் படிப்பிலும் அமெரிக்காவில் 90 சதவீத மதிப்பெண்களுடன் தேர்வானவர் என்பது முக்கியமானது. இப்படி திறமைசாலிகளான மாணவர்களைப் பொறுக்கியெடுத்து அவர்களது உழைப்பை, இளமையை உறிஞ்சி கரும்புச் சக்கையைப் போல வெளியே தள்ளுகின்றன கார்ப்பரேட் நிறுவனங்கள்.

அவருக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவனுக்கு 9 வயது இருக்கும். வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த அவனிடம் ‘உங்க அப்பா என்ன செய்கிறார்?’ என்று கேட்ட போது “அவர் எப்பவும் சோகமாக இருக்கிறார். வேலை தேடுகிறார்” என்று சொன்னான். வீடு எளிமையாக இருந்தது. புத்தகங்கள் தான் அதிக இடத்தை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது.

மனைவி அருகில் உள்ள ஒரு பள்ளிக்கு இந்தி ஆசிரியையாக சென்று வருகிறார். அவரது குழந்தைகள் அங்குதான் படிக்கின்றனர்.

சக்கையாக பிழியப்பட்டு தூக்கியெறியப்பட்டதை பிறரிடம் இவர் பகிர்ந்து கொண்டால் யாருமே இதனைக் கண்டு கொள்ளாமல் அதனை ஒரு வயதானவனின் புலம்பலாக கடந்து செல்வதை வேதனையோடு குறிப்பிட்டார். ‘’இன்று எனக்கு, நாளை உங்களுக்கு’’ என அத்தகைய பிழியப்படும் இளைஞர்களை அவர் தொடர்ந்து எச்சரித்தபடியே இருப்பதாகவும் குறிப்பிட்டார். “After 40 you are nothing” அவர்களிடம் கூறுவாராம். பெரும்பாலும் முப்பது வயதுகளில் இருக்கும் சீனியர் அனலிஸ்ட், சீனியர் புரோகிராமர்களிடம் சொல்வாராம்.

யூனியன் ஆரம்பித்தால் வேலை போய் விடுமா, வேறு வேலை கிடைக்காதா என்ற கேள்விகள் அவரிடமும் வந்தன என்பதுதான் ஆச்சரியம். தனியாக கார்ப்பரேட் விதிகளின்படி உழைத்தும் அவரது வேலை போனதோடு, வேறு வேலை கிடைப்பதும் தடுக்கப்பட்டு வருகிறது என்பதை விளக்கியவுடன் அதனை ஏற்றுக் கொண்டார்.

கண்ணீரை மீறி மன அழுத்தம் அவரிடம் இருப்பதை அவரது மூத்த மகனால் புரிந்துகொள்ள முடிகிறது என்பதும், அது வயதுக்கு மீறிய அனுபவமாக அவனுக்கு இருப்பதையும் பார்த்தால் எதார்த்தம் சுடுகிறது.

——————–

Join us…….

https://www.facebook.com/VinavuCombatsLayoff

Phone : 90031 98576

TCS Siruseri Gate Meeting – Telugu

TCS Siruseri Gate Meeting – Comrade Mukundan – Malayalam

TCS Siruseri Gate Meeting – Advocate Indira

  1. வினவும், அது ஆதரிக்க்கும் தலித் நக்சல்பாரி கூட்டத்திற்க்கும், ஜ.டி. துறைக்கும் ஏணி வெச்சா கூட எட்டாத தூரம்… இவர்களின் கும்பலில் படித்தவன் எவனும் மெட்டாஸை விட்டு வெளியே பொழைக்க போயிருக்க மாட்டான்.. இவனுங்க கும்பல் இருபது வருஷம் சம்பாதிப்பதை, ஜ.டி. துறையில் ஒருத்தன் வெறும் இரண்டு வருடத்தில் சம்பாதிப்பான்… ஏதோ வேலை போய் விட்டால் ஜ.டி. துறையில் எல்லோரும் “தூக்கில்” தொங்கிவிட தயாராக இருப்பது போல ஒரு _________தனத்தை வினவு கும்பல் செய்து கொண்டிருக்கிறது… மறுமொழியை கூட வெளியிட தைரியம் இல்லாத பேடிகள் “போராட்டத்தை” பற்றி பேசுவது, இன்னொரு __________தனம்!!!!

    • ///வினவும், அது ஆதரிக்க்கும் தலித் நக்சல்பாரி கூட்டத்திற்க்கும், ஜ.டி. துறைக்கும் ஏணி வெச்சா கூட எட்டாத தூரம்…//
      இந்தியன் மாமாவுக்கும் மனிதத் தன்மைக்கும் கூடத் தான் எட்டாத தூரம் .. அதுக்கெல்லாம் யாராச்சும் ஃபீல் பண்றாங்களா பாஸ் ?.

      ////இவனுங்க கும்பல் இருபது வருஷம் சம்பாதிப்பதை, ஜ.டி. துறையில் ஒருத்தன் வெறும் இரண்டு வருடத்தில் சம்பாதிப்பான்… ஏதோ வேலை போய் விட்டால் ஜ.டி. துறையில் எல்லோரும் “தூக்கில்” தொங்கிவிட தயாராக இருப்பது போல ஒரு _________தனத்தை வினவு கும்பல் செய்து கொண்டிருக்கிறது…///

      2008 ரிசசன் அப்போ நீங்க பொறுக்கவே இல்லையா பாஸ் ?.. சாரி .. பொறக்கவே இல்லையா பாஸ் ?.
      // மறுமொழியை கூட வெளியிட தைரியம் இல்லாத பேடிகள் “போராட்டத்தை” பற்றி பேசுவது, இன்னொரு __________தனம்!!!! ///

      யப்பா … மாமாவுக்கு எப்புடி மீச துடிக்குதுண்ணு பாருங்க .. தைரியசாலி இந்தியன் புலி ஐயா, எனக்கு ஒரு டவுட்டு.. தாங்கள் கொட்டை எடுத்த புலியா ?.. எடுக்காத புலியா ?.

  2. எதார்த்தம் சுடத்தான் செய்யும் . ITES துறை மட்டும் அல்ல பல்வேறு துறைகளிலும் cost cutting செய்வதன் மூலம் லாப வெறியை நோக்கிய corporateகளின் பயணத்தில் அடிபடுவதும் ,இன்னும் அடிபட போவதும் 40 வயதை ஒட்டியவர்கள் தான் என்பது நிதர்சனம். வேலை இழப்பதால் ஏற்படும் பொருளாதார சிக்கலையும் , மன சிக்கலையும் ஆய்வு செய்து புத்தகம் எழுதினால் அடுத்த செனனை புத்தக திருவிழாவில் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என உணருகின்றேன்.corporateகளுக்கு எதிரான தொழில் சங்க ரீதியான போராட்டமே நிரந்தர தீர்வு என்றாலும் வேறு வேலை தேடும் விடயத்தில் வெற்றி பெரும் வரை பொருளாதார சிக்கலையும் , மன சிக்கலையும் எப்படி எதிர் கொள்வது ?

    [1] தொழில் செய்ய வாருங்கள் இந்தியாவுக்கு என்று வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை அழைக்கும் மோடிக்கு சவால் விடுவது போல ஆபிரிக்க நாடுகளுக்கு குறிப்பாக ருவாண்டா போன்ற வளர்ச்சி பாதையில் செல்லும் நாடுகளுக்கு கணினி பயிற்றுனர் ,கணினி கல்லூரி ஆசிரியர் போன்ற வேலைகளுக்கு செல்வதன் மூலம் மாதம் $1,500 [ Rs 80,000]வரை சம்பாரிக்கலாம். [எத்தியோபியா ,நைஜீரியா போன்ற நாடுகள் உள்நாட்டு போர் காரணமாக் வாழ்வதற்கே தகுதி அற்றவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் ]

    [2] BE ,ME வரை படித்தவர்கள் இந்தியாவிலேயே தொழில் நுட்ப கல்லுரிகளில் பேராசிரியர் வேலைக்கு சேரலாம் .

    [3] soft skill trainer வேலைக்கு மாதம் Rs 20,000க்கு சென்னையிலேயே கூட வேலைக்கு சேரலாம் .

    [4]ODBC ,COM ,DCOM Oracal ERP ,java Struts .C#, .Net …. etc இதனை எல்லாம் மறந்து விட்டு ரிலாஸ்ஆக சிறு முதலிட்டில் சிறு வியாபாரம் செய்யலாம். [Ex Tea stall ]

    மேலும் idea வேண்டும் என்றால் sunjava6@yahoo.com என்ற email முகவரியை தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகள் இலவசமாக வழங்கபடும். [ எவ்வித லாப நோக்கமும் அல்லாத ஆறுதல் முயற்சி ]

    முதலில் sun micro system கதையை சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கி படிங்க …, நம்பிக்கை கிடைக்கும். Monopoly Microsoft நிறுவனத்தை அவர்கள் technical ஆக வென்ற கதை நமக்கு நம்பிக்கை அளிக்கும் !

    • தமிழ் .. உங்கள் கருத்துகளுக்கு வலு சேர்க்க இதோ ..
      ஒரு பொன்மொழி ..

      ” இந்திய இளைஞர்களே !!! .. அட உங்களத் தானுங்க .. நீங்க வேலை தேடுபவர்களாக இருக்கக் கூடாது .. வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்”

      – அரசியல் கோமாளி அப்துல் கலாம்.

      • sarvadesan, காசுபணம் சம்பாரிப்பது மட்டுமே வாழ்வு என்று நினைத்து ,Testosterone போன்ற ஹார்மோன்களை உடலில் இழந்து, இனபெருக்க வேலைபாட்டில் சுணக்கம் அடையும் மாந்தர்களுக்கு எழுதப்பட்ட பின்னுட்டம் அது . 10 ஆண்டுகளுக்கு மேல் ITES ல் வேலை செய்து இப்போது வேலை இழக்கும் போது 10லச்சம் கூடவா சம்பாரித்து இருக்க மாட்டார்கள் ? நேர்மையாக கூறுவது என்றால் வேலை இழப்பவர்கள் மூச்சி விட்டு தன்னை ரிலாக்ஸ் செய்து கொண்டு அக வாழ்விலும் மகிழ்வுற வேண்டிய தருணம் இது. அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள் பற்றி எல்லாம் நினைக்க கூட தேவை இல்லாத ஒரு வேறுபட்ட நேரம் இப்போது தான் அவர்களுக்கு அமைந்து உள்ளது ! இழக்கும் வேலைக்காக சங்கமாக இணைந்து போராடுவது என்பது அவர்களை socialize செய்யும் என்பதை அறியாதவனும் அல்ல நான். அதே சமயத்தில் மனிதன் உழைக்க பிறந்தவன் என்ற கூற்றை நிருபிக்க அவர்கள் மாற்று வேலைக்கு முயலவேண்டியதன் அவசியத்தையும் ,வழிகளையும் நான் கூறும் போது உங்களுக்கு ஏன் தவறாக தெரிகின்றது ! உறுதியாக கூறுகின்றேன் :

        மனிதன் இயற்கையில் தனியானவன் கிடையாது. சமுகமயம் ஆக்கப்பட்டவன். IT துறை சார் ஊழியர்கள் வேலை இழக்கும் போது அடையும் மன நெருக்கடி , எழுத்தாளர் பெருமாள் முருகன் இன்று உணரும் தனிமை இதற்கு எல்லாம் மூல காரணம் இன்றைய நாகரிக மனிதர்கள் தம்மை தனிமை படுத்திக்கொண்டு தீவுகளாக வாழ்வது தான் . Let them socialize !

        நக்கல் நையாண்டி தனமாக எனக்கு பின்னுட்டம் அளிப்பதை தயவு செய்து நிறுத்திகொள்ளுங்கள் ! உங்கள் நலனுக்காக தான் கூறுகின்றேன்

  3. ஜ.டி. துறையில் மட்டுமின்றி, எல்லா துறைகளிலும், லாப,நஷ்ட கணக்கில் தான் ஆட்கள் சேர்ப்பது, விலக்குவது நடக்கும்… இதில் போராடி ஒன்றும் ஆகப்போவது இல்லை… போராட்டத்தினால் யாருக்காவது வேலை திரும்ப கிடைத்ததா??? இல்லை மற்ற கம்பெனிகள் ஆட் குறைட்பை நிறுத்தி விட்டதா?? நஷ்டத்திலும் “போனஸ்” கேட்டு போராடி, போராடி தான் இன்று எல்லா தொழிலாளிகலும் மாசக்கடைசியில் சோத்துக்கு _____________ காயுரானுங்க… முதலில் தொழில் முன்னேற்றம், அப்புறம் தனி மனித முன்னேற்றம், அதற்கப்புறம் தான் சமுதாய முன்னேற்றம்… இது தான் வளர்ந்த, மற்றும் வளரும் நாடுகளின் பாதை… முதலில் வினவும் அதன் தோழர்களும் துறை சார்ந்த வல்லுனர்களிடமிருந்து கருத்து கேட்டு, அதனை ஆராய்ந்து ( செசொன்ட் ஒபினிஒன் ) பின்னர் போராட முன்வர வேண்டும், இல்லேனா இப்படி தான் எல்லாம் டுபாகூர் போராடமாக இருக்கும்…. இதற்கு முன்னர் “நோக்கியோ” கம்பெனி முன் போராடினீர்கள், இப்ப கம்பெனியை “இழுத்து” மூடிட்டான், அங்கே வேலை செய்தவன் எல்லா “நக்கிட்டு” இருக்கானுங்க, ஆனா வினவு, அதன் தோழர்களும் அடுத்த “போராட்டத்திற்கு” வீரமாக கிளம்பி விட்டார்கள்.. இது முற்றிலும் அடுத்தவன் “தாலி” அறுக்கும் வேலைதான்.

    • ////ஜ.டி. துறையில் மட்டுமின்றி, எல்லா துறைகளிலும், லாப,நஷ்ட கணக்கில் தான் ஆட்கள் சேர்ப்பது, விலக்குவது நடக்கும்… இதில் போராடி ஒன்றும் ஆகப்போவது இல்லை… போராட்டத்தினால் யாருக்காவது வேலை திரும்ப கிடைத்ததா??? இல்லை மற்ற கம்பெனிகள் ஆட் குறைட்பை நிறுத்தி விட்டதா??/////

      — சூப்பரப்பு … சூப்பரு .. எலே எல்லாரும் விசில் அடிங்கலே …

      ////நஷ்டத்திலும் “போனஸ்” கேட்டு போராடி, போராடி தான் இன்று எல்லா தொழிலாளிகலும் மாசக்கடைசியில் சோத்துக்கு _____________ காயுரானுங்க… முதலில் தொழில் முன்னேற்றம், அப்புறம் தனி மனித முன்னேற்றம், அதற்கப்புறம் தான் சமுதாய முன்னேற்றம்… இது தான் வளர்ந்த, மற்றும் வளரும் நாடுகளின் பாதை… ////

      – தத்துவம்னு சொல்றதா ?.. இல்லை கவிதைனு சொல்றதா ?.அடுத்த அப்துல்கலாம் நீங்க தான் பாஸ் ..

      ///முதலில் வினவும் அதன் தோழர்களும் துறை சார்ந்த வல்லுனர்களிடமிருந்து கருத்து கேட்டு, அதனை ஆராய்ந்து ( செசொன்ட் ஒபினிஒன் ) பின்னர் போராட முன்வர வேண்டும், இல்லேனா இப்படி தான் எல்லாம் டுபாகூர் போராடமாக இருக்கும்…. ////

      அந்த தொற சார்ந்த வல்லுனர் தொறமாருக பேர கொஞ்சம் சொல்லுங்க பாஸ் ..

      ////இதற்கு முன்னர் “நோக்கியோ” கம்பெனி முன் போராடினீர்கள், இப்ப கம்பெனியை “இழுத்து” மூடிட்டான், அங்கே வேலை செய்தவன் எல்லா “நக்கிட்டு” இருக்கானுங்க, ஆனா வினவு, அதன் தோழர்களும் அடுத்த “போராட்டத்திற்கு” வீரமாக கிளம்பி விட்டார்கள்./////

      உங்கள மாதிரி மாமாமாருங்க மோடிக்கும் , டாட்டாவுக்கும் _________ நக்கிட்டு இருக்கும் போது, ஏகாதிபத்தியங்களின் வன்புணர்வுக்கு ____________ காட்டிட்டு இருக்கும் போது, தொழிலாளர்கள் நிலை இப்படித் தான் இருக்கும். மாத்தனும்னா என்ன பண்றது ?.. மோடி மாமா முதல் இந்தியன் மாமா வரை எல்லாருக்கும் டவுசர கழட்டி விட்டு, _________ பழுக்க விடுற அன்னைக்கு எல்லாம் சரி ஆகிடும்.. இந்தியன் மாமாவுக்கு எல்லாம் ”தெளிவாகிடும்”..

      பாத்து மாமா .. ________ பத்திரம்..

      ’பின்’ குறிப்பு :
      மாமா என்பதை வெறும் மாமா என்ற அடிப்படையில் புரிந்து கொள்ளாமல், நாட்டை கூட்டிக் கொடுக்கும் மாமா என்று புரிந்து கொண்டால் அதற்கு சர்வதேசன் பொறுப்பல்ல ..

  4. போராட்டத்தின் மகிழ்ச்சி, நக்கிப் பிழைக்கும் ஈனப் பிறவிகளுக்கு எப்போதும் புரிவதில்லை.

    வினவின் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள். வீதிகளில் நடக்கும் உரிமைக்கான மக்களின் போராட்டங்களை வெறுப்போடு பார்க்கும் நிலையில் இருந்து ஐடி துறை ஊழியர்களுக்கு போராட்டத்தின் அவசியத்தை உணர்த்திய டாட்டா,விப்ரோ கும்பலுக்கு நன்றி ..

  5. இங்கிலாந்தில் தொழில்புரட்சி உண்டாகி உற்பத்தி இயந்திரமயமாகி உற்பத்தி பலமடங்கு அதிகரித்தது. அதை ஏற்றுமதி செய்ய சந்தை தேவைப்பட்டதால் இந்தியாவில் தொழில்புரட்சி ஏற்படாமல் அவன் பார்த்துகொண்டான். சுதந்திரம் அடைந்தும் நாம் தொழில்வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் லைசன்ஸ் பெர்மிட் ராஜ்ஜியம் உருவாக்கி பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் தொழில் செய்தால் போதும் என்று நேரு நினைத்துவிட்டார். எனவே மக்களுக்கு தொழில் நுட்ப அறிவே வளராமல் எல்லாரும் அரசாங்கத்தில் கிளார்க் வேலை கிடைத்து நிலையான சம்பளமும் பென்ஷனும் வாங்கி பழகிவிட்டோம்.எனவேதான் இந்த வேலையிழப்பு பெரிதாக தெரிகிறது. அமெரிக்க போன்ற தனியார் தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளில் இந்த வேலை நீக்கங்கள் சகஜம்தானே. அவர்கள் இப்படியா புலம்ம்புகிரார்கள்? வேலைகள் நிரந்தரமில்லை என்ற நிலை வந்தால்தான் சொந்த தொழில் செய்யும் ஆர்வம் கிளம்பும். தொழில்முனைவோர்(enterpreneur ) அதிகரிப்பர். நாடு செழிப்படையும். சுதந்திரம் பெற்றவுடன் தனியார்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து ஊக்க்குவித்திருந்தால் நாடே தொழில் மயமாகியிருக்கும். ஆரம்பத்தில் வேலை நீக்கங்கள் சகஜமாக இருந்திருந்தாலும் பின்னர் ஆட்பற்றாக்குறை ஏற்பட்டு நல்ல ஊதியம் கிடைத்திருக்கும். நேரு கம்யூனிச சோஷியலிச சித்தாங்களை நம்பியதால் நாம் அரசு வேலை என்ற சொகுசு வாழ்க்கைக்கு அடிமைப்பட்டுவிட்டோம். இன்று ஒரு கம்பனியில் வேலை போனவுடன் குய்யோ முறையோ என்று கதறுகிறோம். நாடு தனியார்மயமாக்கப்பட்டு அந்நிய முதலீடுகள் வந்து மேலும் பல தொழில்கள் வந்தால்தான் இப்படிப்பட்ட ஆட்குறைப்புகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வரும். அது வரை பொறுத்திருக்க வேண்டியதுதான்.

  6. //மெரிக்க போன்ற தனியார் தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளில் இந்த வேலை நீக்கங்கள் சகஜம்தானே.//

    yes. but they have protection and support.

    Most of the time companies will provide atleast one year salary for those who have completed 10 years.
    And after that govt will pay unemployment insurance.
    After 65 they are paid social security

    What do you have now?

  7. //…உண்மையைச் சொல்ல வேண்டுமானால் ஒரு ஐ.டி நிறுவனம் நினைத்தால் உங்களது சொந்த ஈமெயிலுக்கு வரும் தகவல்களைக் கூட அட்சரம் பிசகாமல் கண்காணிக்க முடியும்

    மெயில்களை மட்டுமல்ல அலைபேசி அழைப்புகளையும் ஒட்டு கேட்கின்றனர் என என் அனுபவத்திலிருந்து அடித்துச் சொல்வேன். அதற்கும் மேல் எந்த பணியாளாரையும் ஒட்டுக் கேட்கும் தொழில்நுட்பங்கள் நிறைய பெரிய நிறவனங்களில் இருக்கிறதென்பது பலருக்கும் தெரியாது. உணவு இடைவேளையின் போது கம்பெனிக்கு வெளியில் உங்கள் நண்பருடன் உரையாடுவதைக் கூட கேட்க முடியும்.

    பணியாளர்களை வேவு பார்க்கும் IT நிறுவனங்கள்
    http://tamilcpu.blogspot.com/2015/02/blog-post.html

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க