டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐ.பி.எம்., இன்டெல் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஐ.டி.ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றன. பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரை வேலை அனுபவம் கொண்ட ஊழியர்கள் குப்பைகளைப் போல தூக்கி எறியப்படுகின்றனர்; அவர்களது எதிர்காலம் அச்சத்தால் உறைந்துள்ளது. இந்த ஆட்குறைப்பு அல்லது கார்ப்பரேட்களின் வார்த்தையில் ‘மறு சமநிலைப்படுத்தல்’ சட்டவிரோதமானது; நெறியற்றது.
இந்த சட்டவிரோத நடவடிக்கையை நியாயப்படுத்த, ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் முன்பு எந்த நியாயமுமின்றி அவர்கள் மீது ‘திறன் குறைந்த ஊழியர்’ என்ற முத்திரையை குத்துகின்றனர். பல நேரங்களில் பதவி விலகல் கடிதங்களை தருமாறு ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அனுபவம் மிக்க ஊழியர்களை நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களை நியமித்து, லாபத்தை அதிகரிப்பதே கார்ப்பரேட்டுகளின் ஒரே நோக்கம்.
இதன் விளைவாக ஐ.டி. துறை ஊழியர்களின் பணி வாழ்க்கை 30 வயதுகளிலேயே முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. ஐ.டி.ஊழியர்களின் குடும்பங்களும் குழந்தைகளும் இந்த பெருமளவு ஆட்குறைப்பு உருவாக்கும் கோர விளைவுகளை எதிர்கொண்டாக வேண்டும்.
டிசிஎஸ்சுக்கும் மற்ற ஐ.டி. நிறுவனங்களுக்கும் தமது பேராசைக்கு சமூகம் கொடுக்கின்ற விலை பற்றி துளியும் அக்கறை இல்லை. ஐ.டி. துறையில் தொழிற்சங்கம் இல்லை என்பதை சாதகமாக்கிக் கொண்டு ஊழியர்களின் வாழ்வைப் பற்றி எந்த அக்கறையுமின்றி தமது திட்டங்களை அமல்படுத்துகின்றனர்.
நிர்வாகம் நிர்ப்பந்தம் கொடுத்தால் கூட விலகல் கடிதம் கொடுக்க வேண்டாம் என்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி ஊழியர் பிரிவு கேட்டுக் கொள்கிறது. ஐ.டி. துறையில் தொழிற்சங்கம் உருவாக்கும் முயற்சியில் அனைவரும் இணையும்படி கோருகிறோம். இத்தகைய பணிநீக்க நடவடிக்கைகளை எதிர்த்து நிற்க முடியும் என்று உறுதியளிக்கிறோம். எமது வழக்கறிஞர்கள் அணி இந்த வழக்குகளை எடுத்து நீதிமன்றங்களில் போராடும்.
பு.ஜ.தொ.முவின் ஐ.டி. ஊழியர் பிரிவு, தொழிற்சங்கம் உருவாக்கிட ஐ.டி. நிறுவன ஊழியர்களை அணிதிரட்டி வருகின்றது. டி சி எஸ் உட்பட பல்வேறு நிறுவன ஊழியர்கள் மத்தியில் இந்த முயற்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பிரசுரங்கள் ஐ.டி. காரிடாரில் விநியோகிக்கப்பட்டுள்ளன. பிரசுர வினியோகத்தின் போது ஐ.டி ஊழியர்கள் பெருமளவு ஆர்வம் காட்டியுள்ளார்கள்.
பு.ஜ.தொ.மு உறுப்பினர்களான நூற்றுக்கணக்கான ஆலைத் தொழிலாளர்கள் இப்பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்; தொழிலாளர் வர்க்கத்தில் நிலவுவதாக சொல்லப்படும் ‘நீல சட்டை – வெள்ளைச் சட்டை பிரிவு’ தகர்த்தெறிந்துள்ளனர்.
வெகு விரைவில் தொழிற்சங்கம் உருவாவதை சென்னை ஐ.டி. காரிடார் கண்ணுறப் போகிறது. கார்ப்பரேட் காட்டு தர்பாரின் சட்டங்களை எதிர்த்து போராடும் ஐ.டி. ஊழியர்களின் போர்க்குணமிக்க முழக்கங்கள் கார்ப்பரேட்டுகளின் காதுகளை எட்டப் போகின்றன.
Log off your silence! Log into NDLF-IT Wing!!
IT companies like Tata Consultancy Services, IBM, Intel etc are laying off thousands of their employees. Those who have put up 10 to 15 years of service, are thrown out unceremoniously, and their future looks bleak. This down sizing or re balancing as they call it, is illegal and unethical.
To justify this illegal act, they unjustly stamp their employees as under performers before terminating their services. In many other cases employees are putting down their papers under duress. Their sole motive is profit maximization by employing less paid employees in place of experienced professionals. This effectively means that working lives of I.T professionals come to an end in their 30s.
Their families and children would have to face the disastrous consequences of this massive layoff. TCS and other I.T companies do not care about the social cost of their greed. They are taking advantage of the absence of employees union in this sector to push through their designs, without any regard to lives of their employees.
We, NDLF, call upon IT employees not to put in their papers even when threatened by management. We call upon all of them to join us in our effort to organize a trade union in this sector. We assure them that we can resist this layoff. We have a team of lawyers who could fight their cases in the courts.
The IT employees wing of our union, is organizing employees of IT companies to form unions. The response we got from employees of various I.T companies including TCS, is very positive. More than 10,000 leaflets have been distributed in the I.T corridor, and the interest shown by employees is very encouraging.
Hundreds of industrial workers, who are members of our union are involved in this campaign, bringing down the so called blue collar-white collar divide amongst the working class. The I.T Corridor in Chennai will soon witness the emergence of trade union, and corporates would soon hear the militant voices of I.T workers, who will challenge rules of the corporate jungle raj.
Log off your silence! Log into NDLF-IT Wing!!
கற்பகவிநாயகம்
அமைப்பாளர்,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, ஐடி பிரிவு
அப்ரைசல் கூடாது
வேலை நீக்கம் கூடாது
இது போன்ற சோசியலிச சித்தாந்தங்கள் கேட்கவே இனிமையாக இருக்கிறது.
இந்த சித்தாந்தம் தரத்தை மேம்படுத்தும் என்பதில் யாருக்கேனும் ஐயம் உள்ளதா ?
Raman the International Labour Law Expert can offer his suggestions to end the problem.The IT employees who were thrown out were not chanting socialist slogans when they were serving.They toiled and their blood was sucked.The HR officers of TCS could not give any credible reasons for the lay off of these employees.During their service,transparent policies were not followed.At least,while terminating their service,they are certainly entitled to know the reasons.Recruiting enmass and throwing enmass is nothing but jungle law.I have observed Raman”s reactions whenever this type of atrocities are committed by capitalists.It seems Raman has a sadist pleasure in enjoying the sufferings of fellow human beings.
ராமன் அவர்களே,
அப்ரைசல், ஊக்கத்தொகை போன்றவை ஒரு நிறுவனத்துக்கு தேவை தான். ஆனால் டிசிஎஸ் ஒட்டுமொத்தமாக ஆயிரக்கணக்கானவர்களை வீட்டுக்கு அனுப்பி அவர்களுக்கு பதில் கல்லூரி மாணவர்களை குறைந்த சம்பளத்திற்கு சேர்த்தது பிசினஸ் என்ற ரீதியில் இலாபமாக இருந்தாலும், மனிதாபிமான ரீதியில் தவறு.
வெளிநாடுகளில் வேலை இல்லாதவர்களுக்கு அரசு உதவி என்றொரு Safety Net உள்ளது.
சில காலம் வேலை இல்லாமல் இருந்தாலும் வெளிநாடுகளில் பெரிய அளவு பாதிப்பு ஏற்படாது.
நம் நாட்டில் வேலையை விட்டு தூக்கினால் அவ்வளவு எளிதாக உடனே வேலை கிடைக்காது. முக்கியமாக இப்போதைய காலகட்டத்தில்.
டிசிஎஸ் இத்தனை பணியாளர்களை ஒட்டுமொத்தமாக தூக்கியதும் அதே சமயம் இந்த வருடத்தில் அதிக இலாபம் சம்பாதித்த கம்பெனி என்று பெயரேடுத்ததும் தொழிலாளர்களின் மேல் அவர்களது அக்கறை எவ்வளவு என்று தெள்ளதெளிவாக காட்டுகிறது.
அப்ரைசல் கூடாது என்று போஸ்டர் அச்சடித்து இருப்பதை தான் விமர்சித்து உள்ளேன் . நம் வாழ்வின் உரிமையை கேட்பதை விட சுகங்கள் கேட்கிறோம் என்னும்போது , அதையே தான் TCS உம செய்கிறது .TCS ஐ குறை கூறும் தகுதி அங்கேயே போய்விடுகிறது
//அப்ரைசல் கூடாது
வேலை நீக்கம் கூடாது
இது போன்ற சோசியலிச சித்தாந்தங்கள் கேட்கவே இனிமையாக இருக்கிறது.
இந்த சித்தாந்தம் தரத்தை மேம்படுத்தும் என்பதில் யாருக்கேனும் ஐயம் உள்ளதா ?
//
இதில் என்ன விமர்சனம் வைத்துள்ளீர்கள்?
வஞ்சபுகழ்ச்சி 🙂
இதுவல்லவோ சிறந்த விமர்சனம். 🙂
அண்ணே, தாங்கள் க.கை க்கு சொன்னது அதில் அப்பரைசல் கூடாதுன்னு சொன்னத மட்டுந்தேன். அடுத்தப் பாதி இருக்குல, வேலை நீக்கம் கூடாதுன்னு. அதை உட்டுடீங்களே.
சரி,டி.சி.எஸ் வேலை நீக்கம் பண்றாங்களே இது எதனடிப்படையில் என்று ஏதாவது உங்களுக்கு தெரியுமா? நீங்க இப்போ எந்த நாட்டுல இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? அப்புறம் டிசிஎஸ் லியா வேலை பாக்குறீங்க?