privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காடில்லி தேர்தலும் தேவாலய தாக்குதல்களும்

டில்லி தேர்தலும் தேவாலய தாக்குதல்களும்

-

கிறித்தவ தேவாலயங்கள் கடந்த இரண்டு மாத காலத்தில் ஐந்தாவது முறையாக  டில்லியில் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன.

புனித அல்போன்ஸா தேவாலயத்துக்குள் திங்கள் கிழமை அதிகாலையில் நுழைந்து தேவாலயத்தின் கூடாரத்தை churchஉடைத்து இருக்கிறார்கள். பின்னர் பாதிரியாரின் அங்கி மற்றும் திருவிருந்து பாத்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் பிரவேசித்து அவற்றை சேதப்படுத்தி இருக்கிறார்கள். இந்த சம்பவத்துக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக காட்டிக் கொள்ள ‘கொள்ளை முயற்சி’ வழக்கை போலீஸ் போட்டிருக்கிறது. ஆனால், தேவாலாயத்தில் இருந்த விலை உயர்ந்த பொருட்களும், காணிக்கை பணமும் கொள்ளை அடிக்கப்படவில்லை. கிறித்தவர்கள் புனிதமாக கருதும் குறியீடுகள் மட்டுமே கவனமாக சேதப்படுத்தப்பட்டுள்ளன.

பிப்ரவரி 7-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் டில்லி மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி முகத்தில் இருக்கின்றது. தனது போலி பிம்பம் சிதைந்து இருப்பதை கண்ட மோடி, மக்களை ஏய்க்கும் எண்ணத்தை மட்டும் மாற்றிக் கொள்ளவே இல்லை. அதன் படி கிரண் பேடியை களமிறக்கினார். மோடியின் நிழலில் ஒதுங்குவதால் தனக்கு பெண் மோடி அங்கீகாரம் கிடைக்கும் என்று நினைத்து கிரண் பேடியும் கிறங்கினார். எந்த மாய்மாலத்துக்கும் மசிய டில்லி மக்கள் தயாராக இல்லை என்பதை உணர்ந்த இந்துத்துவா கும்பல், டில்லி மக்களின் நிகழ்ச்சி நிரலை மாற்ற முயற்சிக்கிறது.

டில்லியில் வெற்றி பெறுவது மோடியின் கவுரவ பிரச்சினையாக மாறியிருக்கிறது. அதே நேரம், பன்னாட்டு கார்ப்பரேட்களின் வளர்ச்சி கொள்கைக்கு மதவெறி நடவடிக்கைகள் பயன் தராது என்று ஒபாமா அறிவுறுத்தி விட்டு போனதால் எரிச்சலில் இருக்கிறது பா.ஜ.க. அதே நேரம் இந்த எரிச்சலை புலம்பலாக மட்டும் வெளிப்படுத்தும் வண்ணம் அமெரிக்க அடிமைத்தனம் உறுதியாக இருக்கிறது.

உள்நாட்டு கார்ப்பரேட்களான அதானியும், அம்பானியும் இந்து மதவெறி நடவடிக்கைகள் மூலம் விளையும் இந்து தேசியம் தமது தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்று உணர்ந்திருக்கின்றனர். ஆனால், எசமானன் ஒபாமாவின் அன்பான எச்சரிக்கையையும் மீற முடியாது. ஏற்கனவே இந்துமதவெறி மற்றும் தொழில் வளர்ச்சி எனும் அலங்காரத்தையும் நிலைமைக்கேற்ப, இடத்திற்கேற்ப இவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அமெரிக்கா காறித்துப்பிய எச்சிலையும் ஏற்றுக் கொண்டு இந்துமதவெறியை தொடர்வது எனும் இந்த முரண்பாடு அவர்களே எதிர்பார்க்காத ஒன்று. இவ்வளவிற்கும் மோடி கும்பல் ஒபாமாவை குளிப்பாட்டிய கதைகள் இன்னும் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் உலக ஆண்டைக்கு மோடி எனும் நபர் உள்ளூர் அடியாள் மட்டும்தான்.

இந்த கையறு நிலைமையை கடக்க ஊடகக் கவனத்தை பெரிய அளவுக்கு ஈர்க்காமல் அடர்த்தி குறைந்த இந்து மதவெறித் தாக்குதலின் எண்ணிக்கையை அதிகரித்து உள்ளார்கள் இந்து மதவெறியர்கள். கிழக்கு டில்லியின் திரிலோக்புரியில் உழைக்கும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தொடங்கிய இந்துத்துவ வன்முறை தெற்கு டில்லியின் புனித அல்போன்ஸா தேவாலயத் தாக்குதல் வரை தொடர்ந்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள், புனித அல்போன்ஸா தேவாலயம் அமைந்திருக்கும் வசந்த் குஞ்ச் பகுதியில் அதிகரித்து இருக்கின்றன. மேலும் இந்த தேவாலாயத்தில் அங்கத்தினர்களாக இருக்கும் ஐம்பது சதவீத மக்கள் ஏழைகள். அவர்கள் ஆர்.எஸ்.எஸின் ‘கர் வாப்சி’ என்ற மத மாற்ற மோசடிக்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

இதற்கு முன்னர் மேற்கு டில்லியின் விகாஸ் புரியில் ஒரு தேவாலயம் ஜனவரி 15-ம் தேதி தாக்கப்பட்டது. இதற்கும் சற்று முன்பாக ஒரு தேவாலயத்திற்கு வைக்கப்பட்ட தீயில் குழந்தை ஏசுவின் தொட்டில் கருகியது. மேற்கு டில்லியின் ரோகினி என்னுமிடத்தில் இந்த தேவாலயம் அமைந்திருக்கிறது.

மாலை ஆராதனை நடந்து கொண்டிருந்த பாத்திமா ஃபொரேன் தேவாலயத்தின் சாளரங்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் கல்வீசி நொறுக்கப்பட்டன. இந்த தேவாலயம் தெற்கு டில்லியின் ஜசோலா பகுதியில் அமைந்திருக்கிறது.

புனித செபாஸ்தியான் ஆலயம் தீ வைத்து வைத்து எரிக்கப்பட்டதில் அதன் உட்பிரகாரம் முழுக்க எரிந்து சாம்பலானது. இது பற்றிய பதிவு அப்போது வினவில் வெளிவந்தது. முதலில் மின்கசிவு காரணமாக எரிந்ததாக இச்சம்பவத்தை சோடிக்க முயன்றது போலீஸ். இப்போது அது தீவைப்பு என்று உறுதியாகி உள்ளது. தேர்தல் நடக்கவிருக்கும் டில்லியில் மட்டுமே பதிவான இந்து மதவெறித் தாக்குதல்கள் இவை என்பது முக்கியமானது. நாடெங்கும் நூற்றுக்கணக்கில் தாழ் நிலை வன்முறை நடவடிக்கைகளை சிறுபான்மை மதப்பிரிவு மக்கள் மேல் திணித்துள்ளார்கள், இந்து மத வெறியர்கள்.

மக்களின் மீட்சிக்கு ஆம் ஆத்மி கட்சியை ஒரு பிரிவு கார்ப்பரேட் ஊடகங்கள் முன்னிறுத்துகின்றன. ‘மத்தியில் மோடி; மாநிலத்திற்கு அரவிந்த் கேஜ்ரிவால்’ என்று மோடி — அர்விந்த கேஜ்ரிவால் இணையை கற்பனை செய்கின்றனஅந்த ஊடகங்கள். பா.ஜ.க.வின் இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராக சிறு மூச்சை கூட வெளியிட மறுக்கிறார் அன்னா ஹசாரேவின் சீடரும் ஃபோர்டு பவுண்டேஷனின் தயாரிப்புமான கேஜ்ரிவால்.

ஊரெல்லாம் வெற்றி பெற்றாலும் டில்லியில் வெற்றிபெறவில்லை என்றால் மோடிக்கு அது பெருந்துயரமாக இருக்கும். மோடியை டெக்னிக்கலாக மட்டும் எதிர்க்கும் ஆம் ஆத்மி ஒரு போதும் இந்துமதவெறியை எதிர்க்கப் போவதில்லை. இந்த பங்காளிகளின் ஊடலில் சிறுபான்மை மக்கள் பரிதவிக்கிறார்கள்.

இந்துமதவெறியை வீழ்த்த நாம் சொந்த பலத்தில் உழைக்கும் மக்களைத் திரட்டி போராட வேண்டும். பாரத மாதாவை அமெரிக்காவிற்கு விற்பனை செய்திருக்கும் பாஜக-வை ஒபமா செல்லமாகத்தான் கண்டிப்பார். தண்டிப்பது நம் கையில்தான்.

–  சம்புகன்.

இது தொடர்பான செய்திகள்