privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஷெல் நிறுவனத்தை எதிர்த்து அமெரிக்காவில் வேலை நிறுத்தம்

ஷெல் நிறுவனத்தை எதிர்த்து அமெரிக்காவில் வேலை நிறுத்தம்

-

against shell 3ந்தியாவில் இருக்கும் “ஷெல்” நிறுவன பங்குகளில் பெட்ரோல் போட்டிருக்கிறீர்களா? மற்ற பங்குகளை விட இங்கே பணியாளர் மரியாதையாக வணக்கம் சொல்வார், பயன்படுத்தும் விதமாக புகார் பதிவேடுகள் – எண்கள், பெட்ரோல் தரத்தை உறுதிப்படுத்தும் சோதனைகள், சக்கரங்களுக்கு காற்று அடைக்கும் போது டிப்ஸ் வாங்க மறுக்கும் ஊழியர்கள், என்று புதிய அனுபவமாக இருந்திருக்குமே?

இந்த பளபளப்பின் உண்மை நிலை என்ன?

அமெரிக்காவின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் வேதிப்பொருள் நிறுவனங்களின் தொழிலாளிகள் பிப்ரவரி 1 ஞாயிறு முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். ஊதிய உயர்வு மற்றும் பணிப்பாதுகாப்பு குறித்த கோரிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் மறுத்து விட்டதால், இந்த வேலை நிறுத்தம். முதலில் அமெரிக்காவின் நான்கு மாநிலங்களின் 9 தொழிற்சாலைகளில் இந்த போராட்டம் துவங்கியிருக்கிறது.

34 வருடங்களுக்குப் பிறகு (1980-ம் ஆண்டுக்கு பிறகு) அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு துறையில் நடக்கும் வேலை நிறுத்தம் இது. இந்த தொழிலாளிகளை அணிதிரட்டியிருக்கும் யுனைட்டட் ஸ்டீல் வோர்க்கர்ஸ் யூனியன் எனும் தொழிற்சங்கம் அமெரிக்காவின் முதன்மையான எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான “ஷெல்”லிடம் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை ஒட்டி வேலை நிறுத்தம், அறிவித்திருக்கிறது.

மூன்று ஆண்டுக்கு போடப்பட்ட தொழிலாளர்- நிறுவன ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பிறகு கடந்த ஜனவரி 21-ம் தேதி முதல் பேச்சு வார்த்தை நடந்தது. மேற்கண்ட தொழிற்சங்கத்தின் அங்கமான எண்ணெய் சுத்திகரிப்பு பிரிவின் தலைவராக இருக்கும் கேரி பீவர்ஸ், “தொழிலாளிகளுக்கும் நிறுவனத்திற்கும் ஒரு சேர நன்மை தரத்தக்க ஒப்பந்தத்தை முன்மொழிந்தாலும் ஷெல் நிறுவனம் மறுத்து விட்டது” என்று தெரிவித்திருக்கிறார்.

எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளிகள் ஓவர் டைம், ஆள் பற்றாக்குறை, அடிக்கடி நடக்கும் விபத்துக்கள், ஆபத்தான வேலை நிலைமை குறித்து புகார் தெரிவித்தார்கள். இந்த துறைதான் உலகிலேயே அதிக வருமானம் உடைய துறை என்றாலும் மேற்கண்ட கோரிக்கைகளை ஏற்க இந்நிறுவனங்கள் மறுப்பதாக தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.

இத்துறையில் 65 சுத்திகரிப்பு நிலையங்களில் தொழிலாளர்களை வைத்திருக்கும் இந்த தொழிற்சங்கம் ஒட்டு மொத்தமாக வேலை நிறுத்தம் செய்தால் அமெரிக்காவின் 64% எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்படும். பிப்ரவரி 7 முதல் இன்டியானா மற்றும் ஓகியோவில் இருக்கும் பிபி எனும் நிறுவனத்தின் 1000 தொழிலாளிகளும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

தொழிலாளிகளுக்கு மட்டுமல்ல சுற்றியிருக்கும் குடியிருப்பு பகுதிகளையும் பாதிக்க கூடிய ஆபத்தான தொழில் நிலைமையைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் இப்படி பேச்சு வார்த்தையை புறந்தள்ளுவது ஏன்?

against shell 2உலகிலேயே அடக்கவிலை மலிவாகவும், விற்கும் விலை அபரிதமாகவும் இருக்கும் பொருள் இதுதான். இதிலும் ஆதிக்கம் செலுத்தும் ஷெல் நிறுவனம்தான் உலக அளவில் இத்தொழிலை கட்டுப்படுத்தும் சக்திகளில் குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்காண்டு அதிக இலாபம் சுருட்டியும் ஏன் இப்படி தொழிலாளிகளின் வயிற்றில் அடிக்கிறார்கள்?

விற்கும் விலையில் மட்டுமல்ல, உற்பத்தியிலும் இப்படி சுருட்டினால்தான் இலாபம் அள்ள முடியும். மற்ற துறைகளைப் போல ஆபத்து நிறைந்த இத்தொழிலில் அதிகம் பேர் சேர விரும்ப மாட்டார்கள். அப்படி சேர்பவர்களுக்கு சட்டப்படியோ இல்லை தார்மீக நெறிப்படியோ போதிய பாதுகாப்பு செய்தால் தமது இலாப விகிதம் குறையும் என்பது ஷெல் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கவலை.

வேலை செய்யும் தொழிலாளியோ எந்நேரமும் விபத்து எனும் காத்திருக்கும் எமனின் கருணையோடு வேலை செய்ய வேண்டும். பணி நேரம் போக கூடுதம் நேரமும் செய்ய வேண்டும். ஆனால் ஊதியம் உயராது, பாதுகாப்பும் கூடுதல் கிடையாது. அமெரிக்காவிலேயே இதுதான் நிலைமை எனும் போது இவர்களின் சுரண்டல் மற்ற ஏழை நாடுகளில் எப்படி இருக்கும்?

வளைகுடா அரசியலை சாக்கிட்டு இதே எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்த்தி உலக மக்களைக் கொள்ளையடிக்கிறார்கள். அப்படி விலை உயர முடியாத போது தொழிலாளியை கசக்கி பிழியும் இத்தகைய ஏற்பாடுகளால் இலாபம் குறையாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

ஷெல்லுக்கு பின்னே இருப்பது தரம், சேவை, நம்பிக்கை என்று இனியும் ஏமாறலமா? முக்கிய ஊடகங்களில் இது குறித்த செய்திகள் வரவில்லை, வராது என்பதைப் பார்த்தால் இந்த ஏமாற்றுதலின் வீரியத்தை புரிந்து கொள்ளலாம்.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க