privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககுடிதண்ணீர் ஊழல் - சாராயக் கடை எதிர்த்து வி.வி.மு போராட்டங்கள்

குடிதண்ணீர் ஊழல் – சாராயக் கடை எதிர்த்து வி.வி.மு போராட்டங்கள்

-

உசிலம்பட்டியில் குடிநீர் வினியோக ஊழலை எதிர்த்து வி.வி.மு ஆர்ப்பாட்டம்

அரசு நிர்ணய கட்டணத்தில் குடிநீர் இணைப்பு வழங்கு!
குடிநீர் இணைப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்காதே!

என்ற முழக்கத்துடன் உசிலம்பட்டி நகராட்சியைக் கண்டித்து விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் திடீர் ஆர்ப்பாட்டமும் நகராட்சி முற்றுகையும் நடைபெற்றது.

உசிலை நகராட்சி ஊழல்
உசிலை நகர் மன்ற தலைவர் பஞ்சம்மாளின் எழுதப்படாத ஆணை!

உசிலை நகர் மன்ற தலைவர் பஞ்சம்மாளின் எழுதப்படாத ஆணை!

குடிநீர் இணைப்புக்கு ரூ 3,500 கொடுக்கும் மனுவை குப்பையில் போடு!
ரூ 30,000 கொடுப்பவர்களுக்கு இணைப்பு கொடு!
இதை அமுல்படுத்தும் கவுன்சிலர்களுக்கு கமிசன் கொடு!

ஊழல்வாதிகளை ஒழித்துக் கட்டுவோம்! இலவச குடிநீர் வழங்குவோம்!
நகராட்சி நிர்வாக ஒழுங்குமுறை மக்கள் கமிட்டி அமைப்போம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் புதிதாக 500 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. இந்த இணைப்புகளுக்காக பதிவு செய்து காத்திருப்போருக்கு அரசு நிர்ணயக் கட்டணம் ரூ 3,500 ஆகும்.

ஆனால், நகராட்சி நிர்வாகம் சுமார் ரூ 30,000 வரை கேட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களிடம் அரசு நிர்ணய கட்டணத்தை வாங்க மறுத்து வந்தது.

இதைக் கண்டித்து கடந்த 27.01.2015 அன்று வி.வி.மு சார்பில் தோழர்கள் போஸ் மற்றும் ரவி தலைமையில் உசிலம்பட்டி நகராட்சி முற்றுகை நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம் பணிந்து, அரசு நிர்ணய கட்டணத்தில் புதிய குடிநீர் இணைப்பு தருவதாக நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரத்தினவேல் விண்ணப்பங்களை பெற்றார்.

உசிலை நகராட்சி ஊழல்
நகராட்சி அலுவலக முற்றுகை – பத்திரிகை செய்தி

அதைத் தொடர்ந்து மறுநாள் மக்கள் பணம் செலுத்த சென்றபோது, “அதிகாரி இல்லை, நாளை வாருங்கள்” என்று இழுத்தடித்தது நகராட்சி. எனவே, 02-02-2015 அன்று நகராட்சியைக் கண்டித்து

உசிலை நகராட்சி ஊழல்
நகராட்சி முற்றுகை – பத்திரிகை செய்தி

நகர்மன்ற தலைவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பஞ்சம்மாளின் ஆட்டமும், பொதுமக்களின் போராட்டமும்” என்ற தலைப்பில் வி.வி.மு சார்பில் உசிலம்பட்டியில் உள்ள 24 வார்டுகளிலும் சுவரொட்டி ஒட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அன்று காலை நகராட்சியை முற்றுகையிட்டு நமது தோழர்கள் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க ஒன்றிய செயலாளர் இ.சுதந்திரம், அ.தி.முக கவுன்சிலர் உக்கிரபாண்டி, வி.சி. கட்சி தென்னரசு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பு.ஜ. செய்தியாளர்
உசிலம்பட்டி

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் சாராயக் கடையை எதிர்த்து வி.வி.மு ஆர்ப்பாட்டம்

  • லோயர் கேம்பில் சாராயக்கடையை  திறக்காதே …. குடும்பத்தின் நிம்மதி கெடுக்காதே….
  • தனியார் சாரயாக்கடை திறப்புக்கு எதிராக போராடிவரும் தேனி மாவட்ட விவிமு செயலாளர் தோழர் மோகன் மீது வழக்கை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.
சாராயக் கடை எதிர்த்து வி.வி.மு போராட்டம்
லோயர் கேம்பில் சாராயக்கடையை திறக்காதே …. குடும்பத்தின் நிம்மதி கெடுக்காதே….

தேனி மாவட்டம் லோயர் கேம்ப் காலனிப் பகுதி உழைக்கும் மக்கள்அதிகம் உள்ள பகுதி . அது மட்டுமல்ல கேரள தமிழக எல்லைப் பகுதி.

இங்கு கூடலூரைச் சேர்ந்த பொம்முராஜ் சாராயக்கடை திறக்க விளை நிலத்தில் கட்டிடம் கட்டி வருகின்றான். இதை அறிந்த அப்பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணித் தோழர்கள் விசாரித்த போது அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என சொல்லி விட்டார்கள். அப்பகுதி மக்களின் கையெழுத்தோடு நகராட்சி மன்ற உறுப்பினர், ஆணையர், நகர்மன்றதலைவர், வட்டாட்சியர், வருவாய்த்துறை , மாவட்ட ஆட்சியர், முதல்வர், மக்கள் முதல்வர் என எல்லாத்தரப்புக்கும் மனு அனுப்பியும் எந்த பயனும் இல்லை.

அதைத்தொடர்ந்து விவிமு அமைப்பினர் சுவரொட்டி இயக்கத்தை நடத்தினார்கள். அதனால், பொதுமக்கள் மத்தியில் அம்பலமாகிப்போனவர்கள், நகராட்சி ஆணையாளரின் மூலம் அப்பகுதி விவிமு அமைப்பு பொறுப்பாளர் தோழர் மோகன் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள்.

சாராயக் கடை எதிர்த்து வி.வி.மு போராட்டம்
தோழர் மோகன் உரை

இதைக் கண்டித்து கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

அந்த ஆர்ப்பாட்டத்தில்  நூற்றுக்கணக்கான தோழர்களும் லோயர் கேம்ப் பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டார்கள். தோழர். மோகன் தனது தலைமை உரையில், “கேரளத்தில் வாரம் சில நாட்கள் சாராயக்கடைகளை மூட அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தநாட்களில் எல்லை ஓரமாக உள்ள லோயர் கேம்ப்பில் மலையாளிகள் வந்து சாராயக்கடையை பயன்படுத்துவார்கள். இதை நோக்கமாகவைத்த்த்தான் இந்தகடைக்கு தமிழக  அரசு அனுமதிக்கிறது. ஆனால் தமிழக, கேரள மக்களின் தேவையற்ற பிரச்சனைக்குத்தான் இது வழிவகுக்கும். உழைக்கும் மக்கள் வாழும் இந்தப்பகுதியில் இது வரை சாராயக்கடை இல்லை, இப்போது பலகுடும்பங்களை கெடுக்க இந்த கடை பயன்படும். எனவே இந்த சாராயக்கடைக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம்” என்றார்.

சாராயக் கடை எதிர்த்து வி.வி.மு போராட்டம்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள்

இந்த சாராயக்கடைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்  மதுரை மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலாளர் தோழர் லயோனல் அந்தோனிராஜ் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது, “சாராயக்கடைக்கு எதிராக மக்களோடு நின்று போராடும் தோழர் மோகன் மீது நகராட்சி ஆணையாளர் வழக்கு தொடுத்துள்ளார். இப்படி மிரட்டுவதால் பின்வாங்கும் அமைப்பு நாங்கள் அல்ல. இந்தக் கடையை எப்படியும் திறந்தாக வேண்டும் என்ற முனைப்போடு அரசு அதிகாரிகளே செயல்படுகின்றார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டு, போராடுகின்ற தோழர்களுக்கு துணையாக துணிந்து எதிர் கொள்ள வேண்டும்” என்றார்.

சாராயக் கடை எதிர்த்து வி.வி.மு போராட்டம்
தோழர் லயனல் அந்தோணிராஜ்

செய்தி
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தேனி மாவட்டம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க