privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்காவில் முசுலீம்களை கொல்வது பயங்கரவாதமல்ல

அமெரிக்காவில் முசுலீம்களை கொல்வது பயங்கரவாதமல்ல

-

north carolina shooting (1)
கொல்லப்பட்ட Shaddy Barakat, 23, his wife, Yusor Mohammad Abu-Salha, 21, and her sister, Razan Mohammad Abu-Salha, 19.

மெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில், சிரியாவை பூர்வகுடியாக கொண்ட மூன்று அமெரிக்க முசுலீம்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 23 வயது தே ஷாடி பராகத், அவரது மனைவி யூசர் மொகமத் அபு சல்ஹா, யூசரின் சகோதரி ராசான் மொகமத் அபு சல்ஹா மூவரும், தலையை துளைத்த இரக்கமற்ற தோட்டாக்களால் மரித்தனர். கொலையாளியின் பெயர் கிரெய் ஸ்டீபன் ஹிக்ஸ், வயது 46, வெள்ளையின அமெரிக்கர்.

கொலை செய்த Craig Stephen Hicks
கொலை செய்த Craig Stephen Hicks

வடக்கு கரோலினா பல்கலைக் கழக நகரமான சாப்பல் ஹில்லில், 10.02.2014 செவ்வாய் மாலையன்று இந்த பயங்கரம் நடந்திருக்கிறது. கொலையாளியும், கொல்லப்பட்டவர்களும் அண்டை வீட்டுக்காரர்கள். ஆகவே “இது ஏற்கனவே இருந்த கார் நிறுத்த ‘பார்க்கிங்’ பிரச்சினை” என்று போலிசு முதல் தகவலாக தெரிவித்து விட்டது.

கார்ப்பரேட் ஊடகங்களும் இதை வழிமொழிந்து மற்றுமொரு குற்றச் செய்தியாக மூலையில் போட்டு கடந்து போக நினைத்தன. ஆனால் சமூக வலைத்தள நண்பர்கள் அதை கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கின்றனர். #MuslimLivesMatter #ChapelHillShooting எனும் ஹேஷ் டேக் மூலம் இந்த அநீதி குறித்த பல்வேறு செய்திகள் வெளியே வந்திருக்கின்றன.

அதன் பிறகே இந்த சம்பவத்தில் மத வெறுப்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரிப்பதாக போலீசு தெரிவித்திருக்கிறது. இறப்பதற்கு முன்னர் “யூதர்களைக் கொல்வோம், பாலஸ்தீனர்களைக் கொல்வோம் என்று சொல்வது எதையும் தீர்க்காது” என மத நல்லிணக்கம் வேண்டி தே பாரகத் டிவிட்டரில் கடைசியாக எழுதியிருந்தார். இந்தக் கருத்து முற்றிலும் நிறைவேறும் வரை அவரைப் போன்றவர்கள் உயிரை பறிகொடுக்கத்தான் வேண்டும் போலும்?

இஸ்லாம் மீதான வெறுப்பிற்கும் மற்ற மதங்களின் மீதான வெறுப்பிற்கும் பாரிய வேறுபாடு உண்டு. மற்ற மதங்களை பொதுவான நாத்திக பார்வையில் பார்க்கும் ‘முற்போக்கு’கள் கூட இசுலாம் என்றால் அந்த வெறுப்பில் அறிவியல் பார்வையைக் கழித்து விட்டு துவேசத்தை இட்டு நிரப்பிக் கொள்வர். காரணம் உலகமெங்கும் மேற்குலக ஊடகங்களால் அப்படித்தான் பொதுப்புத்தி இங்கே கட்டியமைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே ஒரு முசுலீமை தாடி, லுங்கி, புர்கா, தீவிரமான மதவாதி என்று ஆரம்பித்து இயல்பிலேயே வெறியர்கள், கொலைகாரர்கள், காட்டுமிராண்டிகள் என்று அந்த கற்பிதம் ஆழமான வெறுப்பின் வேரை வளர்த்துக் கொண்டிருக்கிறது.

north carolina shooting 10பாரிசில் நடந்த சார்லி ஹெப்டோ மீதான படுகொலை, நைஜீரியாவில் போகோ ஹாரம் கடத்தல், பாரசீகத்தில் ஐ.எஸ்-சின் நரபலிகள் என்று ‘ஆழ்ந்த மனித நேயத்துடன்’ பேசிய இதே உலகு, வடக்கு கரோலினா பயங்கரத்தை பேசவில்லை.

ஒரு விசயத்தில் என்ன நடந்தது என்பதை இணையத்தில் செல்வாக்கு மிக்க ஆளும் வர்க்க ஊடக நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட இணைப்புகளைக் கொண்டு விதண்டாவாதம் செய்பவர்களுக்கு அதிலும் முசுலீம்களை வெறுப்பவர்களுக்கு ‘ஆதாரம்’ கிடைக்காமலா போய்விடும்?

இது வெறுமனே ‘கார் பாரக்கிங்’ பிரச்சினை, இதற்கு மத முலாம் பூசக்கூடாது என்று அந்த ஆதாரக்காரர்கள் வாதிடலாம். கூடுதலாக கொலை செய்த ஹிக்ஸ் ஒரு நாத்திகர் என்பதை நாமே முதலில் சொல்லிவிடுவோம். மதங்களை விமரிசித்து அவர் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பதிவுகளை போட்டு வந்தார் என்றும் அதை எளிமைப்படுத்தி வாதிடலாம். இங்கே நாத்திகர் என்பதற்கு என்ன பொருள்?

north carolina shooting (8)“இசுலாம்ஃபோபியா”வும் கிறித்தவ பெரும்பான்மையும் உள்ள நாட்டில் நாத்திகம் என்பது அதிகாரத்தில் உள்ள மதத்தை அம்பலப்படுத்துவதையும், சிறுபான்மையாக உள்ள மதத்தினரின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதையும் செய்ய வேண்டும். அனைவரையும் ஒரு சேர விமரிசிப்பது என்பது சரி என்றாலும் அதற்கும் இடம் காலம் பொருள் உண்டு.

ஹிக்ஸ் வெறுமனே கார் பார்க்கிங் பிரச்சினைக்காக கொலை செய்தார் என்றால் அது இன்னும் மோசம். கார் கண்டுபிடித்த ஆண்டுகளை விட அல்லாவை கண்டுபிடித்த காலம் அதிகமல்லவா, அதற்கு அதிகம் உணர்ச்சி உண்டு என்று வாதிடலாமா? காரின் உணர்ச்சியை விட கடவுளின் உணர்ச்சி பலம் வாய்ந்தது என்று ஒரு மதவாதி சொன்னால் நுகர்வு கலாச்சார மதவாதிகள் என்ன சொல்வார்கள்?

இதுதான் பிரச்சினை என்றால் அதிலும் இனவாதமும், முசுலீம் வெறுப்பும் இணைந்தே இருக்கின்றது. அமெரிக்காவில் இருக்கும் நாகரீக கனவான்கள் ஏழை நாடுகளின் மக்களை வெறுமனே மதம் சார்ந்து மட்டும் வெறுப்பதில்லை. நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டிகள் என்றே அடிப்படையில் கருதுகிறார்கள். இதே கார் பார்க்கிங் பிரச்சினையில் வேறு ஒரு அமெரிக்க வெள்ளையர் முசுலீம் வீட்டுக்காரர் இடத்தில் இருந்தால் இப்படி துப்பாக்கி வெடிக்காது. ஒரு வேளை வெடித்த துப்பாக்கிகளும் அமெரிக்காவின் முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் போட்டி போறாமை நிறைந்த தனிநபர்வாதம் காரணமாகவே சக அமெரிக்கர்களை கொன்றிருக்கின்றன.

அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசிக்கும் மூன்றாம் உலக நாட்டு மக்களில் படிப்பு, மாத சம்பள வேலை என்று கொஞ்சம் வசதியாக வாழும் பலர் உண்மையில் வெள்ளையின கனவான்களிடம் பெயர் வாங்கும் விருப்பமும் நடைமுறையும் கொண்டவர்கள்தான். இருப்பினும் இவர்களை சீமான்களின் உலகத்தில் ஏற்றுக் கொள்வதற்கு சராசரியான அமெரிக்கர்கள் தயக்குவார்கள். அப்துல் கலாமே ஆனாலும், ஷாருக்கானே வந்தாலும் அமெரிக்க அதிகாரிகள் முழுவதும் அவிழ்த்துப்பார்த்து சோதித்தே அனுப்புகிறார்கள். இதற்கு அரசியல், வர்க்க பார்வையைத் தாண்டி கலாச்சாரம், பழக்க வழக்கம் என்ற காரணங்களும் இருக்கின்றன.

ஆகவே புர்கா போட்ட சிரிய அமெரிக்கர்கள் வெள்ளையின அமெரிக்கர்களின் உள்ளத்தில் நுழைவது கடினம். நாத்திகரான ஹிக்ஸ் இவர்களை வெறுப்பது மேற்கண்ட கலாச்சார காரணங்களையும் உள்ளடக்கித்தான். ஆகவே “இவர்களுக்கு நாகரீக உலகில் வாழத்தெரியாது, பல்கலையில் கூட புர்கா போட்டு தமது தனித்துவத்தை நிலைநாட்டுவார்கள், ஒரு காரை கூட அண்டை வீட்டுக்காரருக்கு இடையூறு செய்யாமல் நிறுத்த தெரியாது” என்றெல்லாம் ஹிக்ஸ் மனதில் இயல்பாகவே தலையெடுத்திருக்கும்.

north carolina shooting (2)இது ஏதோ ஒரு சில வெள்ளையின வெறியர்களின் நிலை மட்டுமா? கனவான்களின் ஊடகங்களான சிஎன்என் மற்றும் ஃபாக்ஸ் நியூஸுக்கு, பாரிஸ் தாக்குதல் மட்டும் பயங்கரவாதம். வடக்கு கரோலினா தாக்குதலோ ஒரு பெட்டி கிரைம். இந்த மனநிலையின் கொதிப்புதான் ஹிக்ஸ் போன்றோரின் பயங்கரங்கம். ஒரு முசுலீம் மூன்று நாத்திகர்களை கொல்வதும், ஒரு கிறித்தவ நாத்திகர் மூன்று முசுலீம்களை கொல்வதும் இதே ஊடகங்களுக்கு வேறாகத் தெரிகின்றன.

கொன்றவன் முசுலீம் என்றால் அவனை பயங்கரவாதி என்று அழைக்கும் உதடுகள் அதே பயங்கரத்தை ஒரு வெள்ளை கிறித்தவன் செய்தால் அவனை வெறும் மனிதன் என்று உச்சரிக்கின்றன. இது உதடுகளின் பிரச்சினையா இல்லை வெறுப்பில் விளைந்த உள்ளத்தின் காழ்ப்புணர்வா?

போலீசும், ஊடகங்களும் இதை கார் பார்க்கிங் பிரச்சினையாக முன்வைத்தாலும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் இதை மறுத்திருக்கின்றனர். கொல்லப்பட்ட பெண்களின் தந்தையான டாக்டர் முகமது அபு சல்ஹா, “இது கார் பார்க்கிங் பிரச்சியினை அல்ல. இதற்கு முன்னரே அந்த மனிதன் எனது மகள்கள், மருமகனை துப்பாக்கியால் பலமுறை மிரட்டியிருக்கிறான். அவனோடு இணக்கமாக வாழமுடியாது என்றாலும் இந்த அளவுக்கு அவன் போவான் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை” என்கிறார். மகள்களில் ஒருவர் அவனை வெறுப்போடு அலையும் அண்டை வீட்டுக்காரன் என்று ஒரு வாரம் முன்னர் சொன்னதாகவும் கூறியிருக்கிறார். அந்த வெறுப்பு அவர்கள் முசுலீம் என்பதாலும், புர்கா தோற்றத்தினாலும் உருவாகிய ஒன்று என்றும் அதெ மகள் கூறியிருக்கிறார்.

கொல்லப்பட்ட தே பராகத்தின் மூத்த சகோதரி சுசானி பராகத் இந்த கொலையை வெறுப்பினால் செய்யப்பட்ட ஒன்றா என்று புலனாய்வு செய்யுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஹிக்சின் மனைவி கரேன், இந்த கொலை இஸ்லாம்ஃபோபியாவால் நடக்கவில்லை என்று மறுத்திருக்கிறார். ஆனால் வெறுமனே கார் பார்க்கிங் பிரச்சினைக்காக ஒரு துப்பாக்கியை எடுத்து மூன்று தலைகளை துளைத்து கொல்லுமளவு வன்மம் ஒரு மனிதனிடம் உருவானது ஏன் என்று அவர் விளக்குவாரா?

north carolina shooting 11இல்லை கடந்த காலங்களில் அம்மையாரின் கணவர் துப்பாக்கி பெல்ட்டை காண்பித்து அந்த பெண்களை மிரட்டியதெல்லாம் சாதாரணமான ஒன்று என்று கருதுவாரா? கொல்லப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கும் இவர், கொலையாளி குறித்தும் அதே அனுதாபத்தை கொண்டிருப்பது சரியா?

கரேனும், அரசு வழக்கறிஞரும் ஹிக்சின் மன நல நோய் ஒரு காரணம் என்று கூறியிருக்கின்றனர். எனில் அதே மனநலக் குன்றல் சொந்த குடும்பத்தினரையோ இல்லை வேறு எவரையோ குறி வைக்காமல் குறிப்பிட்ட மதத்தை சார்ந்த அண்டை வீட்டுக்காரர்களை கொன்றொழித்தது ஏன்?

பராகத்தும் அவரது மனைவியும் வடக்கு கரோலினா பல்கலையில் பல் மருத்துவத்தில் பயின்று வரும் மாணவர்கள். சென்ற டிசம்பரில்தான் மணமுடித்திருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்குள் அவர்களது மணவாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. தே பராகத் அங்கே சிரியா மக்களுக்கும், வீடற்ற அமெரிக்கர்களுக்கும் உதவி செய்யும் தன்னார்வல வேலைகளை செய்து வந்தார்.

வீடற்றவர்களின் புன்னகை என்ற அந்த ஹேஷ் டேக்கை போட்டு எழுதியவரின் புன்னகையை மேற்கத்திய சமூகம் உருவாக்கிய பயங்கரம் அழித்துவிட்டது.

“நாங்களும் சார்லிதான்” என்று இசுரேல் உள்ளிட்ட மேற்கத்திய ‘காந்திகள்’ ஊர்வலம் நடத்தியது போல வடக்கு கரோலினாவுக்காக “நாங்களும் முசுலீம்தான், நாங்களும் புர்கா அணிவோம்” என்று தலைவர்களை விடுங்கள் யாரேனும் வார்டு கவுன்சிலர்களாவது அணி திரள்வார்களா?

சார்லி ஹெப்டோ குறித்த வினவின் கட்டுரையை மறுக்கும் நண்பர்கள், அந்த பிரெஞ்சு பத்திரிகையை ஒரு முற்போக்கு பத்திரிகை என்று மல்லுக்கட்டி வாதாடினார்கள். அதே போல இங்கும் ஹியூஸ் ஒரு நாத்திகவாதி, இது வெறும் கார் பார்க்கிங் பிரச்சினை என்று வாதிடுவார்களா?

கொலை செய்த ஹிக்சின் மனைவி கரேன்.
கொலை செய்த ஹிக்சின் மனைவி கரேன்.

மேற்கத்திய நாட்டில் வாழும் முற்போக்கு என்பது அங்குள்ள சிறுபான்மை மக்களின் நலன்களோடு இணைந்தது. அனைத்தையும் ஒரே தட்டில் பார்க்கும் முற்போக்கு உண்மையில் பிற்போக்கான ஒன்றே. ஏனெனில் அங்கே வாழும் வெள்ளை நிறவெறிக்கு அரசியல், பொருளாதார, வரலாற்று அடிப்படை உண்டு. அதாவது இந்த இனவெறிக்கு அதிகாரம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.

ஆனால் அதே பாரிசில் அல்லாவின் ராஜ்ஜியத்திற்காக ஒரு முல்லா பேசினால் அது ஒரு லூசின் உளறலாக மட்டுமே பார்க்க வேண்டும். அந்தப் பிதற்றலுக்கு சமூக நடப்பில் மதிப்பில்லை. மேலாக மேற்கத்திய நாடுகள் அனைத்தும் இதெ முல்லாக்களை ஆதரித்து ஷேக்குகளை ஆள வைத்து வளைகுடா நாடுகளில் ஜனநாயகத்தை கொன்றொழித்தவர்கள்.

ஆகவே மேற்கத்திய நாடுகளில் நடக்கும் இசுலாமிய பயங்கரவாதமும், வல்லரசு நாடுகளின் பயங்கரவாதமும் அடிப்படையில் ஒரே தன்மை கொண்டவை அல்ல. முன்னது பின்னது உருவாக்கிய விளைவு மட்டுமே. இந்தியாவில் இந்துமதவெறியர்களை தட்டிக் கேட்க முடியாது எனும் நிலைமை அதிகரிப்பதற்கேற்ப இங்கே இசுலாமிய இளைஞர்கள் தீவிரவாதத்தின் பக்கம் போவதை அதிகப்படுத்தும். ஆதலால் நோயை தீர்க்காமல் வலியை மட்டும் நிறுத்த முடியாது.

வடக்கு கரோலினாவில் இதுவரை முசுலீம் மக்களை எதிர்த்து எந்த மத துவேசமும் இல்லை என்று அமெரிக்க அரசு வழக்கறிஞர் கூறுகிறார். இது காமராசர் காலத்தில் சாதிக் கலவரம் இல்லை எனும் கூற்றுக்கு ஒப்பானது. காமராசர் காலத்தில் ஆதிக்க சாதியினர் வைத்த சட்டங்களை மீறாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்தே ஆகவேண்டும். பிறகு 90களில் இந்த சார்பு நிலை கொஞ்சம் மாறியதும் அடிமைத்தனத்தை எதிர்த்து அதே மக்கள் போராடுகிறார்கள். விளைவு ‘கலவரங்கள்’. ஆகவே அமைதி என்பதன் பொருள் ஆதிக்கமோ இல்லை வெறுப்புணர்வோ இல்லை என்றாகிவிடாது. அதை எதிர்த்துக் கேட்கும் குரல் இல்லை என்பதால் இந்த அமைதி ஆள்வோர் போட்ட அடக்குமுறையின் அமைதி.

டிசம்பர் 2014-ல் திருமணம். பிப்ரவரி 2015-ல் மரணம்
டிசம்பர் 2014-ல் திருமணம். பிப்ரவரி 2015-ல் மரணம்

அதே அமைதிதான் வடக்கு கரோலினா பயங்கரவாதத்தை வெறும் குற்ற நடவடிக்கையாக கடந்து போக வைக்கிறது. எல்லா வெள்ளையர்களும் இனவெறியர்கள் அல்ல. ஆனால் எல்லா வெள்ளையர்களும் ஒரு இனவெறி, மதவெறி நடவடிக்கையை கண்டிக்காமல் அமைதி காத்தால் அதை அமைதி முலாம் பூசிய பயங்கரவாதம் என்று அழைக்கலாமா?

எல்லா முசுலீம்களும் பயங்கரவாதிகளல்ல, ஆனால் எல்லா பயங்கரவாதிளும் முசுலீம்கள்தான் என்று பழமொழி உருவாக்கி விளம்பரம் செய்த நெஞ்சங்கள் மேற்கண்ட் புதுமொழியையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

வடக்கு கரோலினா படுகொலையை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விசாரிக்காமல் நீதி கூறமுடியாது என்று இறுதியாக ஒரு சப்பைக் கட்டு கட்டப்படலாம். நல்லது. எனில் சிஎன்என், ஃபாக்ஸ் நியூஸ் தலைமை தாங்கும் மேலாதிக்க கனவான்கள் ஆரம்பத்திலேயே இதை கார் பார்க்கிங் பிரச்சினையாக அறுதியிட்டு கூற காரணம் என்ன?

ஒருவேளை இருமதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமான இந்த பயங்கரத்தை வெறுமனே பெட்டி கிரைமாக மாற்றிவிட்டார்களோ?

அப்படியும் சில கருத்துக் கந்தசாமிகளும், கருத்து காயத்ரிக்களும் வாதிடலாம்.

இதற்கு ஏன் இவ்வளவு சிரமப் படவேண்டும். எல்லா பயங்கரவாதிகளும் முசுலீம்கள் என்பதால் எல்லா முசுலீம்களையும் அழித்து விட்டால் பயங்கரவாதமே இருக்காதே?

பாசிசத்தின் மொழி அழித்தொழிப்புதான், அமைதியல்ல!

தே பராகத்தின் கடைசி டிவிட்டுகளில் ஒன்று
தே பராகத்தின் கடைசி டிவிட்டுகளில் ஒன்று

– வேல்ராசன்.

செய்தி, படங்கள் நன்றி: rt.com

  1. அய்யா சாமிகளா உங்கள மேரி ஒரு கும்பல இப்பதான் பாக்குரேன். இசுலாமிய தீவிரவாதிகள் அடிப்படைவாதிகள் கூட இப்பிடி சிந்திச்சு எழுதுவானுகளா தெரியல. பெரும்பாலும் மத அடிப்படைவாதிகளுக்கு இவ்வளவு அறிவெல்லாம் கிடையாதுன்றது வேற விசயம் அப்பப்ப அமெரிக்காவுல துப்பாக்கி சூடுநடந்து மாணவரகள் ,மற்றவர்கள் பலியான போது கலாச்சார சிரழிவு மனனோய் முதலாளித்துவம்,நுகர்வு கலாச்சாரமுனு எழுதி பக்கத்த நிறப்புன வினவு ஆளுக இப்ப 3 முஸிலிம் செத்த உடனே அது மதவெறிதான அப்பிடினு எந்த ஆதாரமும் இல்லாம அடிச்சு சொல்லுது கொன்னவன் நாத்திகனா இருந்தாலும் கிறிஸ்துவ மத வெறி லைட்டா இருந்துச்சு அப்பிடினு ஜெயிலுக்கு போன கொலைகாரன பகுப்பாய்வு செய்யுது இங்கன இருந்துக்கிட்டே யெப்பா நீங்க கம்மூனிஸ்ட்டுனு உங்கள நீங்களே சொல்லிக்க உங்களுக்கு கூச்சமா இல்லையா இதுக்கு நெஞ்ச நிமித்தி நான் டின்டிஜேதான் ,இசிஸ் ஆதரவாளர்தான் அப்பினு சொல்லிட்டு போங்க பாஸி(ட்)களா, யா அல்லா இத தட்டிக்கேக்க யாருமே இல்லையா …டாடி எனக்கு ஒரு டவுட்டு கம்மூனிஸம்னா என்னப்பா அதுடா மகனே எங்க கொலை நடந்தாலும் அதுல மத வெறிய தூண்டி விட்டு பரப்பனும் அனா அது இசுலாமியர்க்கு மட்டும் ஆதரவா இருக்கனும் என்ன பிரிஞ்சுதா….

    • முதலில் திவிரவதியை உருவக்குபவன் கிருத்துவன் முதல் பெரிய திவிரவாதி கிருத்துவா அமெரிக்கா
      அப்பாவிகள் கெள்ளபட்டல் கண்டிக்க வேண்டும் அது இந்து,முஸ்லிம்,கிறுத்துவர் என பாகுபடு இருக்க கூடாது கம்யுனிஸ்டை குறை செல்ல கிறுத்துவா காவி உங்களுக்கு தகுதி இல்லை ஜோசப்

  2. பி கு _ அமெரிக்காவுல முஸிலிம கொன்னா அது பயங்கரவாதம் இல்லைனு எந்த அமெரிக்காரனும் சொல்லவில்லை அனா இசுலாமிய தீவிரவாதிகள் யாரைக்கொண்டாலும் அது பயங்கரவாதம் இலலினு நீங்க சொல்லுறீக இதுல யாரு பாஸிஸ்ட்டுனு படிக்கிற மக்கள் தான் முடிவு செய்யனும்…

    • அமெரிக்கா மட்டும் இல்ல எல்ல மதவெறி பிடித்த ______ தன் மத நபர் கொல்ல பட்டால் இப்படிதன் செல்வன் மற்றவன் அடித்தல் மிதவாதி திருப்பி முஸ்லிம் அடித்தால் அவன் திவிராவாதி நல்ல இருக்கு உங்க கிருத்துவா வெறி

  3. ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். இந்த கொலைகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    இந்த கொலைகளை Charlie Hebdo பத்திரிக்கையாளர்களின் கொலைகளுடன் சம்பந்தபடுத்தவது சரியானது அல்ல. Charlie Hebdo விவகாரத்திற்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. பரவலாக அறியப்பட்டிருக்கிறது. இந்த கரோலினா விவகாரத்திற்கு அப்படிப்பட்ட வரலாறு இல்லை என்று தான் நான் நினைக்கிறேன்.

    முகமதிய நாடுகளில் மற்றவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை வைத்துப் பார்க்கும் போது மற்ற நாடுகளில் முகமதியர்கள் நடத்தப்படுவது மேன்மையானதாகவே தெரிகிறது. பாகிஸ்தானில் ஒரு முகமதிய கும்பல் ஒரு கிருத்தவ தம்பதியை செங்கல் சூளையில் குற்றுயிருடன் எரித்துக் கொன்றதை இந்த வெள்ளையின வெறியனின் தனி மனித செயலுடன் ஒப்பிட முடியுமா. கரோலினா கொலைகள் ஒரு Freak incident என்று சொல்லலாம். ஆனால் Charlie Hebdo பத்திரிக்கையாளர்களின் கொலைகளை அப்படி சொல்லவே முடியாது.

  4. கட்டுரை மிக அபத்தமாகவும் பக்க சார்பாகவும் இருக்கின்றது…..

    கோபம் வந்தால் துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொள்ளும் நிகழ்ச்சிப் போக்கு அமெரிக்காவில் சர்வ சாதரணமாக நடக்கும் ஒன்றுத் தான். இதே 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஒரு திரைஅரங்கில் batman திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த 12க்கும் மேற்ப்பட்ட அப்பாவி பொது மக்களை James Holmes என்கிற ஒருவன் சுட்டு கொன்ற கோர சம்பவத்தை மறந்து விடக் கூடாது. அவனுடைய மன நிலை சரி இல்லாததே காரணம் என்று போலிசாரால் கூறப் பட்டது. அது போன்றதொரு case ஆகவும் இருக்கலாம்.

    //வடக்கு கரோலினாவில் இதுவரை முசுலீம் மக்களை எதிர்த்து எந்த மத துவேசமும் இல்லை என்று அமெரிக்க அரசு வழக்கறிஞர் கூறுகிறார். இது காமராசர் காலத்தில் சாதிக் கலவரம் இல்லை எனும் கூற்றுக்கு ஒப்பானது.//

    சரி 2001 WTO தகர்ப்புக்கு பிறகோ அல்லது அதற்க்கு முன்போ வடக்கு கரோலீனாவில் இசுலாமியர்களுக்கு எதிராக எத்தனை படுக்கொலைகள் நடந்த இருக்கிறது என்பதனை ஆதாரத்தோடு இங்கு கூறலாமே.

    //கரேனும், அரசு வழக்கறிஞரும் ஹிக்சின் மன நல நோய் ஒரு காரணம் என்று கூறியிருக்கின்றனர். எனில் அதே மனநலக் குன்றல் சொந்த குடும்பத்தினரையோ இல்லை வேறு எவரையோ குறி வைக்காமல் குறிப்பிட்ட மதத்தை சார்ந்த அண்டை வீட்டுக்காரர்களை கொன்றொழித்தது ஏன்?//

    Very Simple … காரணம் அவரின் மனபிறழ்ச்சி அல்லது மனசிதைவு நோய் அவரின் வீட்டார்க்கு தெரிந்து இருப்பதால் அவரை கோபப் படுத்தாத வகையில் அவரிடம் அனுசரித்து போய் இருப்பார்கள். மன நல மருத்துவர்கள் கூறுவதும் அதைத் தானே. இதை அண்டை வீட்டாரிடமும் எதிர்ப்பார்க்க முடியுமா.

    ஆக பிரச்சனையின் மூலம் என்னென்பது தெரியாமல் கட்டுரை எழுதுவதோ அல்லது கருத்துக் கூறுவதோ முட்டாள் தனமான ஒன்று. போக போக உண்மை தெரியும்.

    • கருத்துக்கள் நன்று . உங்கள் கருத்துகளை மேலும் விவரிக்க முயலுகிறேன் .

      கொலை செய்வதற்கான மன நிலை மனிதனின் மூளையில் தானே உருவாகின்றது.கடவுள் நம்பிக்கை அற்றவரான கிரெய் ஸ்டீபன் ஹிக்ஸ் இஸ்லாமிய மக்களை கொலை செய்து உள்ள நிகழ்வின் காரணம் அவரின் கிருஸ்துவ மத வெறி அல்லது கிருஸ்துவ மத பயங்கரவாதம் என்று எல்லாம் வினவு நினைப்பது போன்று இந்த படுகொலை நிகழ்வை எளிமை படுத்த முடியாது. ஹிக்ஸ்ன் மனம் சார்ந்த பிரச்சனைகள் , கொலை செய்யபட்ட இஸ்லாமிய மக்களுடனான கார் நிறுத்துதல் தொடர்பான முன்விரோதம் ,அல்லது வெள்ளையரின் நிறவெறி ஆகியவை காரணமாக இருக்கலாமே தவிர கொல்லபட்டவர்கள் இஸ்லாமிய மக்கள் என்பதால் ,கொன்றவர் பிறப்பால் கிருஸ்துவர் பின்பு கடவுள் மறுப்பாளர் என்பதால் இதனை மதம் சார்ந்த பயங்கர வாதமாக கருத தேவை இல்லை. மேலும் கொலையாளி ஹிக்ஸ் எந்த மதவெறி அமைப்பையும் சார்ந்தவர் இல்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அவர் சமுக வலை தளத்தில் பதித்த அஞ்சல்களில் அவர் கூறும் கருத்துகள் சமமாக கிருஸ்துவ ,இஸ்லாமிய மதங்களை தாக்குகிறன என்ற கருத்தின் அடிப்படையில் அவர் கொலை செய்தமைக்கான உளவியலை ஆராயவேண்டுமே தவிர அவர் பிறப்பால் கிருஸ்துவர் ,கொல்லபட்டவர்கள் பிறப்பால் இஸ்லாமியர் என்ற அடிப்படையில் எழுதுவது வினவுக்கும் அதன் மத ஒற்றுமை கொள்கைகளுக்கும் எதிரானதாகவே அமையும்

  5. Terror மற்றும் Terrorize என்ற வார்த்தைகளிருந்து Terrorism என்ற வார்த்தை வருகிறது. Terrorism என்ற வார்த்தைக்கு பயங்கரவாதம் என்ற வார்த்தை சரியான பொருளைக் கொடுக்கவில்லை.

    Charlie Hebdo பத்திரிக்கையாளர்களின் கொலைகள் கார்ட்டூன் போன்று எந்த வகையிலும் முகமது அவமதிக்கப்படக்கூடாது என்பதற்காக செய்யப்பட்டது. இதற்கு Terrorize என்று வார்த்தையை பயன்படுத்தமுடியும். இன்று உலகின் 99 சதவீத பத்திரிக்கைகள் முகமது கார்ட்டூன் போடப்போவதில்லை.

    கரோலினா கொலைகள் இதுபோன்ற எந்த குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல் செய்யப்பட்டது என்பது தெளிவு. ஏனென்றால் முகமதியர்கள் மற்ற அமேரிக்காவில் வசிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் இது செய்யப்பட்டிருக்கிறது அல்லது அது போன்று ஏதாவது என்றால் அது நடக்கப்போவதில்லை. எனவே இதற்கு Terrorize என்று வார்த்தையை பயன்படுத்தமுடியாது.

  6. ஒருவருடத்தில் சராசரி 157000 பேர் வெவ்வேறு காரணங்களுக்காக அமெரிக்காவில் கொல்லப்படுகிறார்கள். இந்த மூன்று முஸ்லீம்கள் கொல்லப்பட்ட அதே நாளில் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் வேறு, வெவ்வேறின மக்களும் கொல்லப்பட்டனர். ஒவ்வொரு நாளும் கொல்லப்டுகின்றனர். ஆனால் வினவைப் பொறுத்த வரையில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டால் மட்டும் தான் அது பயங்கரவாதம். யாரைத் திருப்திப்படுத்த இந்த பம்மாத்துக் கட்டுரைகள் என்பது கடவுளுக்குத் தான் தெரியும். இவ்வளவுக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஒரு ஜோர்தானிய முஸ்லீமை கூண்டில் அடைத்து உயிரோடு எரித்து வெறியாட்டம் போட்ட, அந்தப் பயங்கரவாதத்தைப் பற்றி வினவு மூச்சு விடவேயில்லை. இந்த ரேட்டில் போனால், வினவின் கட்டுரைகளை வெறும் உளறல்கள் என்று நினைத்து யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.

  7. Four Horsemen என்ற ஆவணப்படத்தில் நோர்ம் சாம்ஸ்கி பின்வருமாறு கூறுகிறார்.
    ” நாம் (அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள்) அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) செய்பவை பயங்கரவாதமாக கருதப்படுவதில்லை.
    மாறாக, அவர்கள் (முஸ்லிம்கள்) எமக்கு (அமெரிக்கர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும்) எதிராக செய்பவைதாம் பயங்கரவாதமாக கருதப்படுகிறது” என்று கூறுகிறார். நீங்களே இந்த ஆவணத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

    https://www.youtube.com/watch?v=5fbvquHSPJU

    இராசேந்திரன்

  8. Imagine the victims were Non-Muslims (like few sikhs died in accidental hate crime earlier); do you think Vinavu would have written such article?

    Vinavu always writes about “Hindu Fundamentalists”. I don’t support them either. But we need to look into the dimension while comparing them with Islam Fundamentalist violence. Based on the past violent incidents, Islam Fundamentalist violence will be million times cruel than other religion based violence. This has been the case for centuries.

    FYI – In the last few years, majority of the Islam terror victims are Muslims world-wide.

  9. Absolutely a stupid article.

    >>இதே கார் பார்க்கிங் பிரச்சினையில் வேறு ஒரு அமெரிக்க வெள்ளையர் முசுலீம் வீட்டுக்காரர் இடத்தில் இருந்தால் இப்படி துப்பாக்கி வெடிக்காது. So all shootings in US are based on Race.

    Can’t even understand what this rant is all about

    ஹிக்ஸ் வெறுமனே கார் பார்க்கிங் பிரச்சினைக்காக கொலை செய்தார் என்றால் அது இன்னும் மோசம். கார் கண்டுபிடித்த ஆண்டுகளை விட அல்லாவை கண்டுபிடித்த காலம் அதிகமல்லவா, அதற்கு அதிகம் உணர்ச்சி உண்டு என்று வாதிடலாமா? காரின் உணர்ச்சியை விட கடவுளின் உணர்ச்சி பலம் வாய்ந்தது என்று ஒரு மதவாதி சொன்னால் நுகர்வு கலாச்சார மதவாதிகள் என்ன சொல்வார்கள்?

    “இசுலாம்ஃபோபியா”வும் கிறித்தவ பெரும்பான்மையும் உள்ள நாட்டில் நாத்திகம் என்பது அதிகாரத்தில் உள்ள மதத்தை அம்பலப்படுத்துவதையும், சிறுபான்மையாக உள்ள மதத்தினரின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதையும் செய்ய வேண்டும். அனைவரையும் ஒரு சேர விமரிசிப்பது என்பது சரி என்றாலும் அதற்கும் இடம் காலம் பொருள் உண்டு

    Can you be clear on how this applies to criticising Muslim and a Non-muslim ?

    Cannot agree more with this comment
    “இந்த ரேட்டில் போனால், வினவின் கட்டுரைகளை வெறும் உளறல்கள் என்று நினைத்து யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.”

  10. இந்த கட்டுரையில் ஒரு சில இடங்களில் சில பிரச்சனைகள் உள்ளன. அமெரிக்காவில் மன பாதிப்பு கொண்டவர் சுட்டு கொலைகள் செய்வது நிரம்ப நடந்துள்ளது. சிறிது காலத்துக்கு முன்பு பட்சிளம் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் புகுந்து ஒருவன் தாக்குதல் நடத்தினான். இதில் வினவு இந்த அளவுக்கு ஆழமாக ‘அலசும்’ அளவுக்கு இப்போது ஆதாரமும் இல்லை. இதற்கு முன்பு இவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியது தான் இவர் வெறுப்பின் அடையாளம் என்றால், American Public Gun Carrying பற்றி படிக்கவும். ஒரு சில மக்கள் எங்கும், எப்போதும் துப்பாக்கி தூக்கி கொண்டு அலைவார்கள். இது ரபப்ளிக்கன் கட்சி ஆளும் மாகாணங்களில் ரொம்ப சாதாரணம். குழந்தைகள் வரும் உணவு கூடங்களுக்குள் கூட துப்பாக்கி எடுத்து வருபவர் இருகின்றனர்.

    இதில் கொல்லப்பட்டவர் பக்கத்து வீட்டுக்காரன், முன் பிரச்சனை இருந்துள்ளது, அவர் இஸ்லாமிய வெறுப்பர் இல்லை என்ற விசயங்களை கொண்டு பார்த்தால் ஒரு கிறுக்கனின் கிறுக்குத்தனம் என்றே தோன்றுகிறது. இதை போல கிறுக்கர்கள் அமெரிக்காவில் கொஞ்சம் அதிகம்.

    கூடுதலாக பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவை திட்டமிட்டு செய்யபடுபவை. இந்த சம்பவம், நியூட்டன் பள்ளி சூடு போன்றவை சித்தம் கலங்கியவன் செய்யும் கணநேர உணர்ச்சி தவறுகள். அதற்காக இந்த கொலைகளுக்கு நியாயம் கற்பிக்கிறேன் என்று என்ன வேண்டாம். இப்போது இது உணர்ச்சி வசத்தில் செய்யப்பட்டதாக தெரிகிறதே தவிர திட்டமிடப்பட்ட இஸ்லாமிய வெறியாக தெரியவில்லை.உண்மைகள் தெரியும் முன் முடிவுகள் எடுக்க வேண்டாம் என வேண்டி கேட்டு கொள்கிறேன்.

  11. அது எப்படிப்பா உங்களுக்கு இத்தனை தூரம் உள்ள அமெரிக்காவில் நடப்பது தெரிகிறது? ஆனால் பாகிஸ்தானில் எத்தனை எத்தனை ஹிந்துக்கள், கிருத்துவர்கள் மதத்தின் பெயரால் கொல்லப்பட்டனர்? அதெல்லாம் தெரியவில்லை !!!

    • //பாகிஸ்தானிலுள்ள வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்கவாவின் புகழ்பெற்ற பெஷாவர் நகரின் வார்ஸாக் சாலையில் அமைந்திருக்கிறது ராணுவ பொதுப்பள்ளி ஒன்று. ஏறக்குறைய 800 மாணவர்கள் பயிலும் உயர்நிலைப் பள்ளி அது. அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

      செவ்வாய்க்கிழமை (16-12-2014) காலை 10.30 மணிக்கு பள்ளியின் முதலாவது வாயிலில் துணை ராணுவப் படையினரைப் போல உடையணிந்த தெஹ்ரிக் இ தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 6 தற்கொலைப் படையினர் நுழைந்தனர். அவர்கள் நடத்திய குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஏறக்குறைய 132 பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட 160 பேர் இதுவரை இறந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் மூன்று நாள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

      பள்ளி என்றோ குழந்தைகள் என்றோ கூட பாராமல் இந்த பயங்கர படுபாதகச் செயலை செய்திருக்கின்றனர். ஒரு மனிதனுக்குள்ளே உள்ளார்ந்த இயல்பாய் இருக்கும் சக மனிதன் குறித்த நேசம் இங்கே துளியளவு கூட இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த பயங்கர நிகழ்வு. அதே நேரத்தில் உலகில் இது முதல்முறையாகவும் நடக்கவில்லை……..

      (மேலும்)

      தாலிபான்கள் பாகிஸ்தானில் மட்டுமா ?

  12. Libya vil Christiangalai Thalai thundithu Kolluvathu Bayangaravadham Illai
    Iraqil Kurdish Makkalai Kolluvadhu Bayangaravadham illai
    Bangladeshil Hindukkalai Kolluvadhu Bayangaravadham Illai
    Pakistanil Kozhandaigalai Kolluvadhil Bayangaravadham illai

    Aga Mothathil Muslimgal ethu Pannalum Bayangaravadham Kidayathu

    Pakistan sambhavam patri Vinavu Kudukkum link தாலிபான்கள் பாகிஸ்தானில் மட்டுமா ?

    Ithu talibanai kandika villai, Mathavan panran Taliban panna kuthama…..Ellarum thirundhattum apparama Taliban thirunduvan

  13. There is a news for vinavu to celebrate. ISIS killed a group of christian people.
    One more news for vinavu to enjoy. One hindu was attacked by Americam cops.
    In Tamilnaadu also one army man killed his wife’s family members. They might be hindus only. I am happy to see Vinavu openly supporing ISIS, LET IM and other similar organisations. It is honest decision.

  14. வினவு மட்டும் அல்ல. இந்தியாவை பொறுத்தவரை மதச்சார்பின்மை என்பது ஜிகாத்தை பல தடவை மறைமுகமாக, சில தடவை நேரடியாக ஆதரிப்பது தான்.
    வினவின் பயத்தை புரிந்துகொள்ள முடிகிறது. ஒருவேளை நேர்மையாக எழுதினால் பிரான்ஸ் பத்திரைக்கு எற்பட்ட கதிதான் தனக்கும் நடக்கும் என்று நன்றாக தெரியும்
    அதனால் ஏதாவது சில சமயம் சும்மா கடமைக்காக இஸ்லாமை விமர்சிப்பதோடு சரி. மற்றபடி வகாபி மதவெறியர்களின் புனித பிம்பங்களாகிய முகமது நபி, திருகுரான், ஹத்தீஸ் பற்றியெல்லாம் எழுதினால் தட்டச்சு செய்யவதற்கு கை இருக்காது. (உதாரணம்: கேரள கிருஸ்தவ பேராசிரியர்)

  15. எனக்கு தெரிந்து ஐசிஸ் பற்றி வினவில் ஒரே ஒரு கட்டுரை தான் வந்துள்ளது. அதுவும், ஐசிஸ் ஒரு அமெரிக்க அடியாள் என்று நிரூபிக்க மட்டும். இப்ப மட்டும் பக்கம் பக்கமா எழுதுவீங்க.

    அமெரிக்க எதிர்ப்பு மட்டும் தான் உங்கள் கண்ணுக்கு தெரியும் போல…

  16. நம்ம ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பண்ணாத ஆலிங்கனமா.. உருவாத புடவையா? ஏன் அரியும், அரணும் சேர்ந்து அரிகரசுதன் அய்யப்பன்னு ஒரு புரொடக்ட்டே இருக்கு.. எக்ஸ்ட்ரீம்லி ஹிந்துமதமே ஒரு செக்ஸ்ட்ரீம்லிடா! நம்ப படைப்புக் கடவுள் ப்ரம்மா… ரெடிமேடா சரஸ்வதியை படைச்சு அவளை தானே பெண்டாண்டுட்டன்! இன்னும் எவ்ளவோ இருக்கு!… இதாண்டா ஒரிஜினல் ஹிந்துமதம்… ஹிந்து மதத்தின் இந்தத் தர்மங்களை கட்டிப்புடிச்சு காப்பாத்தறவன்தான் ஒரிஜினல் ஹிந்து சாமியார்! இத வுட்டுட்டு ஒழுக்கமா இருக்கணும், நேர்மையா இருக்கணும்னு, எவனாவது சொன்னா அவன்தாண்டா டூப்பு! அவ போலிச்சாமியார்! புரியறதா… தசரதனுக்கு பொம்மனாட்டி அறுபதினாயிரம், மகாபாரதத்துல அஞ்சு பேருக்கு ஒருத்தி.. போறுமா? இன்னும் வண்ட வண்டையா சொல்லலாம், தொண்டை காயறது, டேய் ஜலம் கொண்டாடா! அசமஞ்சம் இப்பவாவது புரியறதா.. இதான் ஹிந்துமதம், இதான் ஹிந்து தர்மம்… இத ஒழுங்கா கடைபிடிக்கிறவாதான் ஒரிஜினல் சாமியார்.. இதாண்டா மேட்டரே! சும்மா கேனத்தனமா உளறாம ஆக வேண்டியதப் பாரு ////////இப்பிலாம் மட்ட ரகமா( உண்மையா இருந்தாலும் )இந்துநம்பிக்கையதாக்குற வினவு மத்தமதம்னுவந்தா பம்முறதுஏன்?

Leave a Reply to kumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க