privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்பா.ஜ.க. – அகாலிதளம் கூட்டு கொள்கையற்ற வெத்து வேட்டு

பா.ஜ.க. – அகாலிதளம் கூட்டு கொள்கையற்ற வெத்து வேட்டு

-

ன்றைய போலி ஜனநாயகத்தில் ஓட்டுப் பொறுக்கும் கட்சிகள் யாருக்கும் கொள்கைகள் இல்லை. எப்படி அதிகாரத்துக்கு வருவது, என்ன தரகு வேலை பார்ப்பது, எவ்வளவு சம்பாதிப்பது என்ற கணக்குகள் மட்டுமே கூட்டணிகளை தீர்மானிக்கின்றன. இப்போது,  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு காஷ்மீரின் சுயாட்சிக்கு போராடுவதாக சொல்லிக் கொள்ளும் மக்கள் ஜனநாயகக் கட்சி காஷ்மீர் மக்களின் போராட்டத்தையே அங்கீகரிக்க மறுக்கும் பா.ஜ.கவுடன் பேரம் பேசி வருகிறது.

இத்தகைய அப்பட்டமான, பிழைப்புவாத கூட்டணிகளின் முன்னோடிகளில் ஒன்று பா.ஜ.க – அகாலி தளம் கூட்டணி. 1997-ம் ஆண்டு ‘கொள்கை’ ரீதியில் எதிரெதிரான பா.ஜ.கவும் பஞ்சாபின் அகாலி தளமும் அமைத்த கூட்டணி அந்த ஆண்டு நடந்த மாநில சட்ட மன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. அது குறித்து புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரை இது.

இப்போதும் இந்த இரு கட்சிகளும் தமது சுயநல அரசியல் நோக்கங்களை முன் வைத்து  அம்மாநில மக்களின் நலன்களை பலி கொடுப்பதை இந்த மாதம் (பிப்ரவரி 2015) புதிய ஜனநாயகத்தில் வெளியான கட்டுரை அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஞ்சாபில் மதவெறி பயங்கரவாதத்தைக் கிளறிவிட்டதில் காங்கிரசின் பங்கு முதன்மையானது. இதை வசதியாக மறைத்துவிட்டு, அமைதியின் காவலர்களாக, சமாதானத் தூதர்களாக ஓட்டுப் பொறுக்கப் பார்த்தது காங்கிரசு. ஆனால் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் மக்கள் காங்கிரசுக்கு மரண அடி கொடுத்துள்ளனர்.

மோடி - பாதல்
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி, அகாலி தள் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் அவரது மகன் சுக்பீர் சிங் பாதல்

எதிர்முகாமான அகாலித்ளம் – பா.ஜ.க கூட்டணி 5-ல் 4 பங்கு தொகுதிகளைக் கைப்பற்றி, மிருக மெஜாரிட்டியுடன் கூட்டணி ஆட்சியமைத்துள்ளது. இந்து சீக்கிய ஒற்றுமையை முதன்மையாக்கிப் பிரச்சாரம் செய்து வெற்றியும் பெற்றுவிட்டனர்.

ஆனால் இக்கூட்டணி முழுக்க முழுக்க சந்தர்ப்பவாதமானது என்பதற்கு இவர்களின் பத்திரிகைப் பேட்டிகளே சாட்சி. கொள்கை அடிப்படையில் எதிர் எதிர் துருவங்களான இரு கட்சி கூட்டணி பற்றி அகாலிதளம் தலைவர் பாதலிடம் பத்திரிகையாளர் கேட்டபோது “மத்தியில் 13 கட்சி கூட்டணி உள்ளது. இனிமேல் கூட்டணி ஆட்சிக்குதான் எதிர்காலம்” என்றார். பா.ஜ.க.வோ “மத்தியில் எதிர் எதிர் கொள்கைகள் கொண்ட கூட்டணி ஆட்சி நீடிக்காது” என்கிறது. பின்னர் பஞ்சாபில் மட்டும் நீடிக்கும் என்பது அக்கட்சிக்கே வெளிச்சம்.

இந்தக் கூட்டணியிலுள்ள இரு கட்சிகளும் அனைத்திலும் வேறுபடுகின்றனர். அகாலிகளின் அடிப்படையான ‘அனந்தபூர்’ சாகிப் தீர்மானத்தை பா.ஜ.க. ஏற்கவில்லை. பா.ஜ.க.வின் இந்தி –இந்து- இந்துஸ்தானை அகாலிதளம் நிராகரிக்கிறது.

1984 சீக்கியர் படுகொலையை வாஜ்பாய் கண்டித்தார். ஆனால் அதற்குக் காரணமான ‘நீல நட்சத்திர நடவடிக்கை’யை முழுமையாக ஆதரித்தவர்தான் வாஜ்பாய்.

1987 -ல் மதவாத அடிப்படையில் சீக்கியர்கள் ஒன்று கூடும் ‘சர்பட்கல்சா’ நிகழ்ச்சியில் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையை ஆதரித்தவர் பிரகாஷ்சிங் பாதல். அதற்கு சற்று முன்புதான் இந்திய அரசியல் சட்டத்தின் சில பக்கங்களைக் கிழித்தெறிந்தார்.

இவற்றைக் கடுமையாக எதிர்க்கும் பா.ஜ.க. இன்று பாதலின் அகாலி கட்சியின் கூட்டாளி.

இக்கூட்டணி போலிசாரின் நரவேட்டையாடல் மீது விசாரணைக் கமிசன் வைக்கும் என வாக்குறுதியளித்துள்ளது. ஆனால் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான எம்.எல்.ஏ. லட்சுமிகாந்த சாவ்லா கொலை வெறியன் கே.பி.எஸ்.கில்லுக்குப் புகழாரம் சூட்டிகிறார்.

தவிர நதிநீர்ப் பங்கீடு, சண்டிகர் உட்பட பஞ்சாபி பேசும் பகுதிகளை பஞ்சாபுடன் இணைப்பது போன்ற பிரச்சினைகளிலும் இவ்விரு கட்சிகளும் முரண்படுகின்றன.

இதற்கு முந்தைய 1969 அகாலி ஜனசங்கம் பேசும் பகுதிகளை பஞ்சாபுடன் இணைப்பது போன்ற பிரச்சினைகளிலும் இவ்விரு கட்சிகளும் முரண்படுகின்றன.

கட்காரி - பாதல்
சுக்பீர் சிங் பாதலுடன் பேரம் பேச வந்திருக்கும் மகாராஷ்டிர புரோக்கர் பா.ஜ.க.வின் நிதின் கட்காரி

இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணி நீடிப்பதென்பது பஞ்சாப் மக்களின் உரிமைகள் குழி தோண்டிப் புதைக்கப்படுவதன் மீது தான் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

கன்ஷிராமின் பகுஜன் சமாஜ் கட்சியும், எஸ்.எஸ்.மானின் அகாலி கட்சியும் இன்னொரு சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்தன. இவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கின்றிப் புறக்கணிக்கப்பட்டு, மொத்தமே 2 இடங்களைக் கைப்பற்றினர்.

இந்த பஞ்சாப் தேர்தலில், சி.பி.ஜ, சி.பி.எம். கட்சிகளின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது. பஞ்சாபில் பல தொண்டர்களைப் பலி கொடுத்து, ‘தேச’ ஒற்றுமைக்குப் போராடியதாக மார்தட்டிய இந்த இருபோலி கம்யூனிஸ்டுகளிடையே ஒத்த கருத்தின்றிப் படுதோல்வியடைந்துள்ளனர்.

கன்ஷிராமுடன் கூட்டணி முறிந்ததும் இந்த இரு கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணிக்கு முயன்றது காங்கிரசு. சி.பி.ஐ. யின் மாநிலத் தலைமை மத அடிப்படைவாதத்தை முறியடிக்க காங்கிரசுடன் கூட்டு எனக் கொள்கை முலாமிட்டது. மத்தியத் தலைமை இதை நிராகரித்தது. ஜனதா தளம், முலாயமின் சமாஜ்வாதி கட்சி, சி.பி.ஐ, சி.பி.எம். என மூன்றாவது முன்னணி கண்டது. ஆனால் சி.பி.ஐ.யின் மாநிலத் தலைமையோ காங்கிரசுடன் மறைமுக உடன்படிக்கை கண்டு, காங்கிரசின் வெற்றிக்கு உழைத்தது. தற்போது சி.பி.ஐ இரு தொகுதிகளில் வெற்றி பெற, பிற கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை.

தனது முழுத் தோல்விக்கும் சி.பி.ஐயே காரணம் எனப் பழியை சி.பி.ஐ மீது சுமத்துகிறது சி.பி.எம் கட்சி.

மதவெறி பயங்கரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரசு பயங்கரவாதத்தை வரிந்து கட்டி ஆதரித்ததாலேயே மக்கள் இப்போலி கம்யூனிஸ்டுகளைப் புறக்கணித்துள்ளனர்.

அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என நம்பி அகாலி தளம் கட்சிக்கு ஓட்டளித்துள்ளனர். தவிர காங்கிரசுக்குள்ளேயிருந்த போட்டியும், குழிபறிப்பும் அகாலி –பா.ஜ.க.கூட்டணி வெற்றி பெற முக்கிய காரணங்கள்.

புதிய ஜனநாயகம், மார்ச் 1997

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க