privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்உயரும் மின்கட்டணம் - பொறியாளர் காந்தியின் விளக்கம்

உயரும் மின்கட்டணம் – பொறியாளர் காந்தியின் விளக்கம்

-

டந்த 2013-14-ம் நிதி ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நட்டம் ரூ 13,985 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது, முந்தைய நிதி ஆண்டோடு ஒப்பிடுகையில் ரூ 2,305 கோடி அதிகம். மேலும், மின்வாரியத்தின் மொத்தக் கடன் ரூ 74,113 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது மாநிலத்தின் மொத்தக் கடன் சுமையில் சரி பாதி.

மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை கருத்தரங்கில் காந்தி
கோப்புப் படம்

இது தொடர்பாக, பொறியாளர் காந்தி அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் ஏறத்தாழ ரூ 16,000 கோடி அளவிற்கு மின்கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதிலும், மின்வாரியத்தின் நட்டம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறதே, இதற்கு என்ன காரணம்?

2012-13, 14 ம் ஆண்டுகளில் முறையே ரூ 7,874 கோடி, ரூ 937 கோடி மற்றும் ரூ 4,225 அளவுக்கு கட்டண உயர்வு வந்துள்ளது. ஒரே காரணம் தனியார் மின்சாரம் மட்டுமே.

1997-98-ல் வெறும் 99.8 கோடி யூனிட் ஆக இருந்த தனியார் கொள்முதல் (அதுவும் காற்றாலை போன்ற மின்சாரமே கொள்முதல் செய்யப்பட்டது) 2007-08-ல் 2392 கோடி யூனிட் என அதிகரித்திருக்கிறது. இன்று மொத்தத் தேவையில் 30.35 சதம்வரை உயர்ந்து தவிர்க்க முடியாத அளவுக்கு வளர்ந்துவிட்டது.

அரசு மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்திச்செலவு யூனிட் ரூ 3 என்றளவில் இருந்தாலும் தனியாரின் உற்பத்தி விலை ரூ 5.50-லிருந்து ரூ 14.00 வரை வேறுபடுகிறது. 30.35 சத பங்கு தனியார் கொள்முதலும் அதிக விலையும், மின் வாரியத்தின் நட்டத்தை கூட்டிக் கொண்டே செல்கின்றது.

தனியார் மின்சாரம்
30.35 சத பங்கு தனியார் கொள்முதலும் அதிக விலையும், மின் வாரியத்தின் நட்டத்தை கூட்டிக் கொண்டே செல்கின்றது.

எஸ்.டி.சி.எம்.எஸ் எலெக்ட்ரிக் நிறுவனம், அபான் பவன் நிறுவனம், பென்னா எலெக்ட்ரிசிடி ஆகிய தனியார் நிறுவனங்கள் யூனிட் ஒன்று ரூ 5 விலையில் மின்சாரத்தை வழங்கிவரும் நிலையில் , ஜி.எம்.ஆர் பவர் கார்ப்பரேஷன், சாமல்பட்டி பவர் கார்ப்பரேஷன், பிள்ளை பெருமாள் நல்லூர் பவர் கார்ப்பரேஷன், மதுரை பவர் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ 14 வரை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுவதன் பின்னணி என்ன?

அபான் பவன், பென்னா ஆகியவை எரிக்காற்றையும், எஸ்.டி.சி.எம்.எஸ். பழுப்பு நிலக்கரியையும் எரிபொருளாய் கொண்டவை. மற்ற நான்கு நிறுவனங்களும் எச்.எப்.ஓ. (ஹெவி ஃபர்னஸ் ஆயில்) என்ற நீர்ம எரிபொருள் அதாவது டீசல் போன்றவற்றை எரிபொருளாகக் கொண்டவை. அவற்றின் விலை கடுமையானதுதான்.

தற்பொழுது சந்தித்து வரும் மின்பற்றாக்குறை எவ்வளவு? இதனை அரசே தனது சொந்த முறையில் பூர்த்தி செய்து கொள்ள முடியாதா?

கோடைக் காலத்தில் தோராயமாக 2,000 மெகாவாட் பற்றாக்குறை உள்ளது. புதிய உற்பத்திக்காக கட்டுமானத்தில் இருந்தவற்றை குறைந்தபட்சம் 2012-ல் கொண்டுவந்திருந்தால் அந்த ஆண்டு முதல் மின்வெட்டைத் தவிர்த்திருக்கலாம். புதிய நிலையங்கள் துவங்குவதிலும் தேவையில்லாமல் மூன்றாண்டுகள் வீணடிக்கப்பட்டன. துவங்கிய புதிய நிலையங்கள் முழு உற்பத்தியின்றி, பழுதடைந்து பகுதித்திறனாக முடங்கியுள்ளன. (மேட்டூர் 200 மெகாவாட், வட சென்னை 600 மெகாவாட், வல்லூர் 500 மெகாவாட், வழுதூர் 100 மெகாவாட்)

powerதி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்பதாலேயேதான், பல மின்திட்டங்கள் முடக்கப்பட்டிருக்கிறதா? இல்லை, இது தனியார் நிறுவனங்களுக்கு சாதகமான நடவடிக்கையா?

தனியார் மின்சாரக் கொள்முதல் என்பது கொள்ளை லாபம் தரும் ஊழல் வழி. இதனை யாரும் தவிர்க்கமாட்டார்கள். (2400 கோடி யூனிட்  கொள்முதலில் ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் கமிசன் கூட நல்ல இலாபம்தான்)

மின்வாரிய நட்டம், ஆண்டுதோறும் எதிர்கொள்ளும் மின்கட்டண உயர்விலிருந்து மீள, தாங்கள் முன்வைக்கும் மாற்றுத்திட்டம் (அ) ஆலோசனை என்ன?

அ) அடிப்படையில் மின்சாரம் சேவைப்பொருளாக மீண்டும் கொள்ளப்பட்டு அரசே அளிக்க வேண்டும்.
ஆ) இடை மானியம், சமுதாய நோக்கில் தொடர வேண்டும்.
இ) புதிய உற்பத்தி முழுவதும், அரசுத்துறையில் இருக்க வேண்டும்.
ஈ) மின்சாரம், உணவுக்கு அடுத்த அடிப்படை வளம். இதில் எல்லா குடிமக்களுக்கும் பங்களிக்கப்படுவதே ஜனநாயக கடமை.
உ) அடிப்படையில் ”சந்தைப் பொருளாதாரம்” மாற்றப்பட வேண்டும்.

– நேர்காணல்: இளங்கதிர்