privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமேக்கேதாட்டு அணை கட்ட தடை போடு - பட்டுக்கோட்டை ஆர்ப்பாட்டம்

மேக்கேதாட்டு அணை கட்ட தடை போடு – பட்டுக்கோட்டை ஆர்ப்பாட்டம்

-

“மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கியதை நீக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”

திருவாரூர் மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மீத்தேன் எதிர்ப்புத் திட்டப் போராட்டக் குழு மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில்

  • கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு மற்றும் ராசிமணல் பகுதிகளில் புதிய அணைகள் கட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பும், உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ள நிலையில் புதிய அணை கட்ட நித ஒதுக்கியிருக்கும் சட்ட விரோதச் செயலை கண்டித்தும்
  • மத்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு கர்நாடகத்தின் நிதிநிலை அறிக்கையில் இருந்து மேக்கேதாட்டு அணைக்கான நிதி ஒதுக்கும் பகுதியை நீக்கச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும்
  • 5 கோடி தமிழக மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், ஒரு கோடி காவிரி டெல்டா பகுதி மக்களின் உணவு மற்றும் வேலை வாய்ப்புக்கு ஆதாரமாகவும் விளங்கும் காவிரி ஆற்றிற்கு பேராபத்து விளவிக்கக் கூடிய சூழலில் தமிழக முதல்வர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இந்தப் பேராபத்தைத் தடுக்க ஒருமித்த தீர்வைக் கண்டறிந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும்
  • நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும்

20-03-2015 அன்று காலை 10.30 மணி அளவில் பட்டுக்கோட்டை தலைமை தபால்நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

பட்டுக்கோட்டை தபால்நிலைய முற்றுகை போராட்டம்முற்றுகை போராட்டத்தை ம.க.இ.க மாநில இணைப் பொதுச்செயலர் தோழர் காளியப்பன் துவக்கி வைத்து உரையாற்றினார்.

பட்டுக்கோட்டை தபால்நிலைய முற்றுகை போராட்டம்
ம.க.இ.க மாநில இணைப் பொதுச்செயலர் தோழர் காளியப்பன் துவக்கி வைத்து உரையாற்றினார்.

தோழர்களை தடுத்து நிறுத்திய போலீசை மீறி தபால் நிலையத்தை முற்றுகையிட முன்னேறிய தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

pattukottai-post-office-siege-3

pattukottai-post-office-siege-4

தகவல்

விவசாயிகள் விடுதலை முன்னணி, தமிழ்நாடு
திருவாரூர் மாவட்டம்
பேசி : 9442889041

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க