privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்மோதிப் பார்க்கும் CRP நிர்வாகத்திற்கு அஞ்சுவார்களா தொழிலாளிகள் ?

மோதிப் பார்க்கும் CRP நிர்வாகத்திற்கு அஞ்சுவார்களா தொழிலாளிகள் ?

-

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் அமைந்துள்ளது சி.ஆர்.பி (CRP) தொழிற்சாலை. டை-கேஸ்டிங் உற்பத்தி செய்யும் இந்த ஆலையில் 39 நிரந்த தொழிலாளிகள் பணிபுரிகின்றனர். நிர்வாகத்தின் அடக்குமுறைக்கெதிராக போராடிய தொழிலாளிகள் 2014 துவக்கத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். தனது விசுவாச சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தில் இருந்து விலகியதாலும், பு.ஜ.தொ.மு.-வில் தங்களை இணைத்துக் கொண்டதாலும் எரிச்சலடைந்த நிர்வாகம் இன்றுவரை சங்கத்தை அங்கீகரிக்கவில்லை.

சி.ஆர்.பி தொழிலாளர் வேலைநிறுத்தம்
பணத்தைக் காட்டி பணியவைக்க முடியாது என்று உணர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார், நிர்வாக இயக்குநர் குமார் சந்திரசேகர்.

சென்று சேர்ந்த இடம் ஐ.என்.டி.யு.சி (INTUC)-யாகவோ, பி.எம்.எஸ் (BMS)-ஆகவோ இல்லை வேறு ஏதேனும் பிழைப்புவாத, சமரசவாத சங்கங்களாகவோ இருந்திருந்தால் நிர்வாகம் நிம்மதியடைந்திருக்கும். நாட்டுப்பற்று கொண்ட நக்சல்பாரிகளின் சங்கத்தில் இணைந்ததால் பணத்தைக் காட்டி பணியவைக்க முடியாது என்று உணர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார், நிர்வாக இயக்குநர் குமார் சந்திரசேகர்.

பு.ஜ.தொ.மு.-வில் இணைந்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக 8 பேருக்கு இடம் மாற்றம் (டிரான்ஸ்பர்), 5 பேர் மீது பொய்வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பி பணியிடை நீக்கம் (சஸ்பென்ஷன்), உள்ளே பணிபுரியும் தொழிலாளர்களை ஆபாசமாக பேசுவது, கண்காணிப்பது, என தனது அடக்குமுறையை வரைமுறையின்றி தொடர்ந்து வருகிறது நிர்வாகம். தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளை கேட்காமல், தொழிலாளர் உதவி ஆணையரின் அறிவுரையை ஏற்க மறுத்து, பணபலத்தால் தன் அதிகாரத்தை நிறுவத் துடிக்கிறது நிர்வாகம்.

சி.ஆர்.பி தொழிலாளர் வேலைநிறுத்தம்
8 பேருக்கு இடம் மாற்றம் (டிரான்ஸ்பர்), 5 பேர் மீது பொய்வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பி பணியிடை நீக்கம் (சஸ்பென்ஷன்), உள்ளே பணிபுரியும் தொழிலாளர்களை ஆபாசமாக பேசுவது, கண்காணிப்பது, என தனது அடக்குமுறையை வரைமுறையின்றி தொடர்ந்து வருகிறது நிர்வாகம்.

வேண்டுமென்றே தொழிலாளர்களை தூண்டுவது, எந்தக் காரணமுமின்றி தொழிலாளர்களை ஆலைவாயிலில் நிற்க வைப்பது, சிறுநீர் கழிக்கச் சென்றாலும் பின்னால் வந்து உளவு பார்ப்பது என தனக்கே உரிய பாணியில் தொழிலாளிகளை சித்திரவதை செய்து வருகிறார் எச்.ஆர் (HR) அதிகாரி கரண்.

கோவை பிரிக்கால் ராய் ஜார்ஜ் உள்ளிட்டு பல ஆலைகளில் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் என்ற போர்வையில் வலம் வந்த துரோகிகளுக்கு தொழிலாளர்கள் கொடுத்த பதிலடியை கரணுக்கு நினைவூட்டும் விதமாக சுவரொட்டிகள் பகுதியில் பரவலாக ஒட்டப்பட்டன. முதலாளியின் ஏவல்நாயாக செயல்படும் எச்.ஆர் அதிகாரி கரணை அம்பலப்படுத்தி ஒட்டிய சுவரொட்டிகளில் தொழிலாளிகள் திட்டி எழுதியுள்ளனர். கிஞ்சித்தும் மானமற்ற இந்த ஈனப்பிறவி தன் முதலாளிக்கு இன்னமும் வாலாட்டி வருவதோடு, தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க, இயன்றதனைத்தையும் செய்து வருகிறது.

சி.ஆர்.பி தொழிலாளர் வேலைநிறுத்தம்
முதலாளியின் ஏவல்நாயாக செயல்படும் எச்.ஆர் அதிகாரி கரணை அம்பலப்படுத்தி ஒட்டிய சுவரொட்டிகளில் தொழிலாளிகள் திட்டி எழுதியுள்ளனர்.

தொழிலாளர் துறையில் தொழிற்தாவா, தொழிற்சாலை ஆய்வாளரிடம் புகார், மாவட்ட ஆட்சியரிடம் மனு, உள்ளாட்சி அமைப்புகளிடம் மனு அனைத்தும் சடங்கு சம்பிரதாயங்களாக முடிந்தன. சங்கம் துவங்கிய காலம் முதலாக, கும்மிடிபூண்டி காவல் ஆய்வாளர் திரு சேகர், அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கும் மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள் இவர்களைத் தவிர வேறு ஒருவரும் இதுவரை நம்மிடம் பேசவில்லை. இவர்கள் பேசுவதும் கூட, ‘மேலிட பிரஷர்’ என்ற காரணத்தையே ‘திருமந்திரம்’ போல திரும்பத் திரும்பக் கூறுகின்றனர். காவல் ஆய்வாளர் திரு சேகர் நிர்வாகத்துக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார் என்று இவர்களின் மேலிடத்துக்கு நாம் மனு கொடுத்தும் இதுவரை திரு சேகர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொழிலாளர் உதவி ஆணையருக்கு சமரசம் செய்வதைத் தவிர உத்தரவிடும் அதிகாரம் இல்லை.

தொழிலாளர் ஆய்வாளருக்கு நிர்வாகத்தை தண்டிக்கும் அதிகாரம் இல்லை.

மாவட்ட ஆட்சியருக்கு மனு வாங்குவதைத் தவிர வேறு வேலையில்லை.

போராடுபவர்களை ஒடுக்குவதைத் தவிர நியாயம் கேட்க போலீசுக்கு அதிகாரமில்லை.

சி.ஆர்.பி தொழிலாளர் வேலைநிறுத்தம்
தொழிலாளர் ஆய்வாளருக்கு நிர்வாகத்தை தண்டிக்கும் அதிகாரம் இல்லை. மாவட்ட ஆட்சியருக்கு மனு வாங்குவதைத் தவிர வேறு வேலையில்லை. போராடுபவர்களை ஒடுக்குவதைத் தவிர நியாயம் கேட்க போலீசுக்கு அதிகாரமில்லை.

அனைத்து ‘இல்லை’-க்கும் சூத்திரதாரி திருவாளர் மோடிக்கு முதலாளிகளுக்கு சேவை செய்வதை தவிர வேறு வேலையில்லை.

ஆகவே தொழிலாளர்களாகிய நமக்கு இதை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. தொழிலாளி வர்க்கத்தின் உச்சபட்ச ஆயுதமாகிய வேலை நிறுத்தப் போராட்டத்தை கையிலெடுத்து போராடிக் கொண்டிருக்கிறோம்.

தொழிலாளர்கள் மார்ச் 24 அன்று வேலை நிறுத்தம் தொடங்கிய பிறகு காலை 11 மணி அளவில் தொழிற்சாலை ஆய்வாளர் திரு வேணுகோபால் வந்து தகவல்களை சேகரித்துக் கொண்டு சென்றார். நிர்வாகத்தின் ஒவ்வொரு தொழிலாளர் விரோத, தொழிற்சங்க விரோத நடவடிக்கையையும் தொழிலாளர்கள் பட்டியலிட்டு கூறும் போது, இடையே “ஐயையோ, அப்படியா” என்று ஒவ்வொன்றையும் இப்போதுதான் புதிதாகக் கேட்பதைப் போல கேட்டுக் கொண்டிருக்கிறார். கேட்டுக் கொண்டு உள்ளே நிர்வாகத்திடம் சென்று பேசுவார். பின்னர் என்ன நடக்கும் என்பதை நாமறிவோம். ஆலமரத்து நாட்டாமை கடைசி சீனில் விசில் அடித்துக் கொண்டே வரும் போலீசு என்று நாம் அறிந்த தமிழ் சினிமா காட்சிகளைப் போல அனைத்தும் பிசிறின்றி நிறைவேறும். போராட்டக் களத்தில் உரமேறிய தொழிலாளர் வர்க்கத்தின் முன் துரோகங்கள் தவிடுபொடியாகும்.

உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே!

  • போராடும் தொழிலாளர்களுக்கு தோள் கொடுப்போம்
  • சி.ஆர்.பி தொழிலாளர் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம்.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டம் –  9444213318